Home Blog Page 127

IPL 2025: பெங்களூருவை சாய்த்த குஜராத் அணி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – பெங்களூரு vs குஜராத் – பெங்களூரு – 02.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை (169/8, லியம் லிவிங்க்ஸ்டோன் 54, ஜிதேஷ் ஷர்மா 33, டிம் டேவிட் 32, பில் சால்ட் 14, ரஜத் படிதர் 12, சிராஜ் 3/19, சாய் கிஷோர் 2/22, அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் ஷர்மா தலா ஒரு விக்கட்) குஜராத் டைடன்ஸ் அணி (17.5 ஓவரில் 170/2, ஜாஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 73, சாய் சுதர்ஷன் 49, ரூதர்ஃபோர்டு ஆட்டமிழக்காமல் 30,  ஷுப்மன் கில் 14, புவனேஷ் குமார் 1/14, ஹேசல்வுட் 1/23) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே முதலில் மட்டையாட வந்த பெங்களூரு அணியின் முதல் நான்கு மட்டையாளர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். பில் சால்ட் (14 ரன்), விராட் கோலி (7 ரன்), தேவதத் படிக்கல் (4 ரன்), ரஜத் படிதர் (12 ரன்) ஆகிய நால்வரும் 6.2 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர், லியம் லிவிங்க்ஸ்டோன் (50 பந்துகளில் 54 ரன், 1 ஃபோர், 5 சிக்சர்) மற்றும் ஜிதேஷ் ஷர்மா (21 பந்துகளில் 33 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), கடைசியாக டிம் டேவிட் (18 பந்துகளில் 32 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) ஆகியொர் சிறப்பாக ஆடியதால் மோசமான நிலையில் இருந்த பெங்களூர்உ அணியின் ஸ்கோர் 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 169 என முடிந்தது.  

          170 என்ற இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய குஜராத் அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் அணித்தலைவர் ஷுப்மன் கில் (14 பந்துகளில் 14 ரன்) மட்டும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தவிர மற்ற ஆட்டக்காரர்களான சாய் சுதர்ஷன் (36 பந்துகளில் 49 ரன்), ஜாஸ் பட்லர் (39 பந்துகளில் 73 ரன், 5 ஃபோர், 6 சிக்சர்) ஷிஃபான் ரூதர்ஃபோர்டு (18 பந்துகளில் 30 ரன், 1 ஃபொர், 3 சிக்சர்) ஆகியோர் மிகப் பிரமாதமாக ஆடி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டி அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தனர்.

குஜராத் அணியின் வேகப் பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

விருதுநகரில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து!

fire accident in virudhunagar - 2026

விருதுநகரில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து-20 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதம்! தீவிபத்து குறித்து அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.

விருதுநகர் மேலத்தெரு பேட்டையில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 200க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன.

இந்த குடியிருப்பு பகுதியில் அதிகாலையில் ஒரு வீட்டீல் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அந்த தீ அருகிலிருந்த வீடுகளுக்கும் பரவி பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் அப்பகுதியில் அடுத்தடுத்து இருந்த குடிசை வீடுகள் உள்ளிட்ட 20 வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமானது. தீ விபத்து ஏற்பட்ட உடன் குடியிருப்புகளில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்து வீட்டை விட்டு வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது

இருப்பினும் குடியிருப்புகளில் உள்ளே எவரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்தனர்.

சபரிமலை; பங்குனி உத்திரம் ஆராட்டு விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

sabarimala panguni uthiram - 2026

பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷுவுக்காக சபரிமலை நடை செவ்வாய் மாலை திறக்கப்பட்டு இன்று ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்து நெய்யபிஷேகம் செய்தனர்.

உலகப் புகழ் பெற்ற சுவாமியாக விளங்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி அருண் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மாலை 6:30 மணிக்கு சன்னிதானம் முன்புறமுள்ள மண்டபத்தில் கொடி பட்டத்துக்கான பூஜைகளை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் நடத்தினார். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் மஹா கணபதி ஹோமம் அபிஷேகம், நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. காலை 9:45 முதல் 10:45 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.

புதிய கொடி பட்டம் சபரிமலையில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில் திருஉற்சவத்தின் கொடியேற்ற விழாவிற்கு கொடிபட்டம்
கொல்லம் சக்திகுளங்கரா ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று புறப்பட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தி அருண் நம்பூதிரியிடம் வழங்கப்பட்டு பூஜைகள் செய்து இன்று தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். வியாழன் முதல் ஒன்பதாம் நாள் விழாவான ஏப்.10 வரை மதியம் உற்ஸவ பலி நடைபெறும். ஏப்.10 இரவு சரங்குத்தியில் பள்ளி வேட்டையும், ஏப். 11மதியம் பம்பையில் ஆராட்டும் நடைபெறும். அன்று இரவு கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும்.

ஏப். 12 முதல் சித்திரை விசு பூஜைகள் நடைபெறும். ஏப். 14 – காலையில் சித்திரை விஷுவையொட்டி கனி காணும் நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்குதலும் நடைபெறுகிறது. ஏப்.18 வரை பூஜைகள் நடைபெற்று அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கேரளா அரசு திருவாங்கூர் தேவசம் போர்டு செய்துள்ளதுகேரளாவின் முக்கிய நகரங்களில் இருந்து பம்பைக்கு ஏப்ரல் 18 வரை தினசரி சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் பக்தர்கள் வாகனங்கள் பம்பை வரை அனுமதிக்கப்படும்.

பக்தர்களுக்கு பம்பை மற்றும் சபரிமலையில் திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் இலவச அன்னதானம் வழங்கப்படும். தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் குடிநீர் வசதிகள் உட்பட அடிப்படை வசதிகள் அனைத்தும் பக்தர்களுக்கு தேவசம் போர்டு சார்பில் செய்து தரப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் கோவிலில் ஏப்.7 முதல் மூலஸ்தான பகுதியில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை!

thirupparankundram thai poosam - 2026

திருப்பரங்குன்றம் கோவிலில் ஜூலை 14-ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடப்பதை முன்னிட்டு, வரும் ஏழாம் தேதி முதல் மூலஸ்தானம் பகுதியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம், சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆனி 30 ஆம் நாள் (ஜூலை 14 ஆம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி கோயில் ஆலய ராஜகோபுரம் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, திருக்கோயில் மூலஸ்தானத்தில் உள்ள தாய்பாறையில் செதுக்கப்பட்டுள்ள மூல விக்கிரகங்களுக்கு. கல்கம் அதாவது கடுசக்கரை சாத்தும்பணி, மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் மராமத்து பணி மற்றும் திருப்பணிகள் நடைபெற உள்ளது.

இந்தத் திருப்பணிகள் செய்ய வசதியாக, பங்குனி மாதம் 26 ஆம் நாள் ஏப்ரல் 9 ஆம் தேதி மூலாலய பாலஸ்தாபனம் செய்யப்படவுள்ளது. மூலாலய பாலஸ்தாபனத்தை முன்னிட்டு, திருக்கோயில் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம். சண்முகர் சண்முகர் சன்னதி ஆகிய மண்டபகங்களிலுள்ள உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் கலாகர்ஷணம் செய்யப்பட்டு, சன்னதியில் பக்தர்கள் தரிசனம் செய்ய தற்காலிக மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டு அனைத்து தெய்வங்ககளின் தாருபிம்பத்திற்கு (மூலவர் அத்தி மரச்சிற்பங்கள்) மூலஸ்தானத்தில் நடைபெறுவது போல் அனைத்து பூஜைகளும் வழிபாடுகளும் வழக்கம் போல், ஆகம விதிப்படி நடைபெறும் என, இத்திருக்கோயில் ஸ்தானிக பட்டர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மூலஸ்தான பாலாலயத்தை முன்னிட்டு வருகின்ற 7 ஆம் தேதி மாலை 6.00 மணி முதல் பாலாலய யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு ஜூலை 14-ஆம் தேதி திருக்குடமுழுக்கு பணிகள் முடியும் வரை திருக்கோயில் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகிய இடங்களில் மராமத்து மற்றும் திருப்பணிகள் நடைபெற உள்ளதால், திருக்கோயில் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்கள் வழிபாட்டிற்கு ஏதுவாக சண்முகர் சன்னதி தற்காலிக மூலஸ்தானம் ஏற்பாடு செய்யப்பட்டு, ஆகம விதிப்படி பாலாலயம் செய்யப்பட்டு கலாகர்ஷணம் செய்யப்பட்ட மூல விக்கிரகங்களின் தாருபிம்பங்கள் (மூலவர் அத்தி மரச்சிற்பங்கள்) மூலவராக பாவிக்கப்பட்டு தினந்தோறும் மூலஸ்தானத்தில் நடைபெறுவது போல் அனைத்து பூஜைகளும் வழிபாடுகளும் வழக்கம் போல் ஆகம் விதிப்படி நடைபெற உள்ளது.

எனவே, பக்தர்கள் சண்முகர் சன்னதியில் உள்ள மூலஸ்தானத்தில் வழிபாடு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. திருப்பணிகள் நடைபெறுவதற்கு ஏதுவாக இதற்கு முன்னர் நடைபெற்ற கும்பாபிஷேக திருப்பணிகளிலும் இதே போன்ற நடைமுறைகள் மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகம விதிகளுக்கு உட்பட்டு கடைபிடிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட்டிப்பார்களா..?!

annamalai in trichy meeting - 2026

அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நீடிப்பாரா?

ஒரு அளவுக்கு மேல் மற்ற ஒருவர் எப்படிச் செயல்படுவார் என்பதை நமது அன்றாட வாழ்வில் கூட நாம் நூறு சதவிகிதம் சரியாகச் சொல்ல முடியாது. நாம் நாம்தான், அடுத்தவர் அடுத்தவர்தான்.

அரசியல் உலகில், ஒரு கட்சித் தலைவர் எடுக்கும் முடிவுகளைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை, நம் போன்ற பொது மக்களைப் பொறுத்தவரை, இன்னும் அதிகமாக இருக்கும்.

அடுத்தவர் முடிவைப் பற்றிய இந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக, யாரும் அதைப் பற்றி எந்த ஹேஷ்யமும் துணிந்து செய்யலாம். அதுவும் வேலையும் பொறுப்பும் இல்லாதவர்கள், பற்ற வைப்பவர்கள், கற்பனாவாதிகள், காக்கா, குருவி, கழுகு பட்சிகள் போன்றோர் குஷியாக ஒன்று செய்யலாம். அதாவது, பழனிசாமியுடனும் அண்ணாமலையுடனும் அமித் ஷா பேசும்போது காற்றோடு காற்றாகக் கலந்து யார் கண்ணிலும் படாமல் அவர்களுக்கு நடுவில் மிதந்தபடி அவர்களின் உரையாடல்களைக் குறித்துக் கொண்டு அவர்களின் முகபாவங்களையும் மனதில் பதித்து வைத்த மாதிரி, செய்திகள் உலவ விடலாம்.

அமித் ஷா என்ற மூன்றாம் மனிதர் அந்தக் கற்பனாவாதிகள் எழுதுகிற முடிவைத் தானே – மோடியைத் தவிர யாரிடமும் சொல்லாமல் – எடுக்கலாம். அமித் ஷா அப்படி ஒரு முடிவை – அதாவது, அண்ணாமலை பாஜக தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவது மாதிரியான முடிவை – தானாக, முன்கூட்டி வெளி உலகிற்குத் தன் முடிவைக் கசியவிடாமல், எடுத்துப் பின்னர் அறிவித்தால், “பார்த்தீர்களா, நாங்கள் முன்னமே இதைக் கரெக்டாக சொல்லிவிட்டோம்!” என்று ஹேஷ்ய எழுத்தாளர்கள் தம்மைத் தாமே மெச்சிக் கொள்ளலாம்.

ஒருவேளை, கற்பனாவாதிகள் எழுதியபடி ஒன்றும் நடக்கவில்லையா, அவர்கள் இன்னொரு திருப்பத்தை உடனே உண்டுபண்ணலாம். “கடைசி நேரத்தில் மோடி குறுக்கிட்டு அமித் ஷாவின் முடிவை மாற்றி விட்டார்!” என்று கற்பனாவாதிகள் ஒரு போடு போடலாம் – அதை நம்பவும் தமிழகத்தில் நிறைய மனிதர்கள் உண்டு!

நாம் இப்போது சரியாக செய்யத் தக்கது ஒன்றுதான். அரசியல் உலகில் என்ன நடக்கிறது, என்ன ஆகப் போகிறது, என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இப்போதைக்கு அவ்வளவுதான் நம்மால் செய்ய முடியும்.

ஆர். வி. ஆர்

IPL 2025: பஞ்சாப் அணி அபார வெற்றி

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – லக்னோ vs பஞ்சாப் – லக்னோ – 01.04.2025

பஞ்சாப் அணி அபார வெற்றி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (171/7, நிக்கோலஸ் பூரன் 44, ஆயுஷ் பதோனி 41, எய்டன் மர்க்ரம் 28, அப்துல் சமத் 27, டேவிட் மில்லர் 19, அர்ஷதீப் சிங் 3/43, ஃபெர்கூசன், மேக்ஸ்வெல், ஜேன்சன், சாஹல் தலா ஒரு விக்கட்) பஞ்சாப் கிங்க்ஸ் அணி (16.2 ஓவரில் 177/2, ப்ரப்சிம்ரன் சிங் 69, ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 52, நெஹல் வதேரா ஆட்டமிழக்காமல் 43, திக்வேஷ் ரதி 2/30) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. லக்னோ அணியின் தொடக்க வீரர் மிட்சல் மார்ஷ் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவரோடு களமிறங்கிய எய்டன் மர்க்ரம் (18 பந்துகளில் 28 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் மூன்றாவதாகக் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் (30 பந்துகளில் 44 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினர். ரிஷப் பந்த் (2 ரன்) இன்று சரியாக விளையாடவில்லை.

ஆயுஷ் பதோனி (33 பந்துகளில் 41 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), டேவிட் மில்லர் (18 பந்துகளில் 19 ரன்), அப்துல் சமத் (12 பந்துகளில் 27 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) ஆகியொரும் சிறப்பாக ஆடினர். இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது..

          172 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ப்ரியன்ஷ் ஆர்யா (9 பந்துகளில் 8 ரன்) எடுத்து ஆட்டமிழந்தார். அவரோடு களமிறங்கிய ப்ரப் சிம்ரன் சிங் (34 பந்துகளில் 69 ரன், 9 ஃபோர், 3 சிக்சர்) அடித்தார்.

அவரோடு இணைந்து விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் (30 பந்துகளில் 52 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) அவருக்குப் பின் வந்த நெஹல் வதேரா (25 பந்துகளில் 43 ரன், 3ஃபோர், 4 சிக்சர்) ஆகியோரின் அதிரடியாக ஆடியதால் பஞ்சாப் அணி 16.2 ஓவர்களிலேயே இரண்டு விக்கட் இழப்பிற்கு 177 ரன் எடுத்து 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  

          பஞ்சாப் அணியின் மட்டையாளர் ப்ரப் சிம்ரன் சிங்  ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

IPL 2025: மும்பை அணியின் முதல் வெற்றி

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – கொல்கொத்தா vs மும்பை – மும்பை – 31.03.2025

மும்பை அணியின் முதல் வெற்றி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கொல்கொத்த நைட் ரைடர்ஸ் அணியை (16.2 ஓவரில் 116, அங்க்ரிஷ் ரகுவன்ஷி 26, ரமந்தீப் சிங் 22, மனீஷ் பாண்டே 19, ரிங்கு சிங் 17, அஷ்வினி குமார் 4/24, தீபக் சாஹர் 2/19, ட்ரெண்ட் போல்ட், ஹார்திக் பாண்ட்யா, விக்னேஷ் புதூர், மிட்சல் சாண்ட்னர் தலா ஒரு விக்கட்) மும்பை இந்தியன்ஸ் அணி (12.5 ஓவரில் 121/2, ரியான் ரிக்கிள்டன் 62, சூர்யகுமார் யாதவ் 27, ரோஹித் ஷர்மா 13, வில் ஜேக்ஸ் 16, ஆண்ட்ரே ரசல் 2/35) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஏராளமான அதிரடி மட்டையாளர்களைக் கொண்ட கொல்கொத்தா அணி மும்பை அணியின் பந்துவீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் தடுமாறியது. மும்பை அணிக்காக நேற்று முதன் முறை களமிறங்கிய அஷ்வின் குமார், 3 ஓவர்கள் வீசி, 24 ரன் கள் கொடுத்து 4 விக்கட்டுகள் சாய்த்தார்.

கொல்கொத்தா அணியில் நாலு வீரர்கள் மட்டும் இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர். மற்றவர்களான கிவிண்டன் டி காக் (1 ரன்), சுனில் நரேன் (பூஜ்யம் ரன்), வெங்கடேஷ் ஐயர் (3 ரன்), ஆண்ட்ரூ ரசல் (5 ரன்), ஹர்ஷித் ராணா (4 ரன்), ஸ்பென்சர் ஜான்சன் (1 ரன்) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் குஜராத் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 116 ரன் மட்டுமே எடுத்தது.

          117 ரன் என்ற எளிய வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த மும்பை அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா (12 பந்துகளில் 13 ரன்) எடுத்து ஆட்டமிழந்தார். இவர் தொடக்கத்தில் அணியில் இடம்பெறவில்லை. பின்னர் இம்பாக்ட் பிளேயராக மட்டையாட வந்தார். அவரோடு களமிறங்கிய ரியன் ரிக்கிள்டன் (41 பந்துகளில் 62 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்), அவருக்குப் பின் வந்த வில் ஜேக்ஸ் (17 பந்துகளில் 16 ரன்) மற்றும் சூர்யகுமார் யாதவ் (9 பந்துகளில் 27 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோரின் அதிரடியாக ஆடியதால் மும்பை அணி 12.5 ஓவர்களிலேயே இரண்டு விக்கட் இழப்பிற்கு 121 ரன் எடுத்து 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  

          பேட்டிங் பவுலிங் இரண்டிலும் எந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் எனத் தெரியாமல் மும்பை அணி தடுமாறுகிறது. ரோஹித் ஷர்மா ஃபார்மில் இல்லை. பும்ரா இல்லாத குறை பந்துவீச்சில் தெரிகிறது.

          அணியின் வேகப் பந்துவீச்சாளர் அஷ்வின் குமார்  ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த கொல்லம் – சென்னை ரயில் நேரத்தை மாத்த மாட்டீங்களா?

railway news - 2026
#image_title

கொல்லம் – சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் குருவாயூர் – மதுரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொல்லத்திலிருந்து, செங்கோட்டை – ராஜபாளையம் – விருதுநகர் வழியாக மதுரைக்கு மிகக் குறைந்த நேர இடைவெளியுடன் இயக்கப்படுவதை நேரம் மாற்றி, இரு ரயில்களையும் இரண்டு மணி நேர இடைவெளியில் இயக்கினால், கொல்லம், தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகள் பெரிதும் பயன்டைவர்.

இதன் காரணமாக, கொல்லம் – செங்கோட்டை ரயில் பாதையில், இரண்டு ரயில் சேவைகள் கொண்டிருப்பதன் பலனை பயணிகள் முழுமையாகப் பெறுவர். மேலும் கொல்லம் சென்னை எக்ஸ்பிரஸ் கொல்லத்திலிருந்து மிக விரைவாகப் புறப்பட்டு சென்னைக்கு மிக விரைவாக வந்து சேரும். விடுமுறைக்கு வீட்டிற்கு வருபவர்களுக்கு இது சிறிதும் உதவாத ஒரு அட்டவணை.

கேரளாவின் வடக்கு முனையிலிருந்து திருவனந்தபுரத்திற்குச் செல்லும் இரண்டு வந்தே பாரத் ரயில்களுக்கு கொல்லம் புனலூர் வழித்தடத்திலிருந்து இணைப்பு ரயில்கள் கிடைக்காது.

இந்த மூன்று பிரச்சனைகளுக்கும் தீர்வு, கொல்லத்திலிருந்து கொல்லம் சென்னை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தை பிற்பகல் 2 மணி அல்லது அதற்குப் பிறகு என நிர்ணயிப்பதாகும். அந்த வழியில், வந்தேபாரத்திற்கு வருபவர்களுக்கு ஒரு இணைப்பு ரயிலும் கிடைக்கும், மேலும் இரண்டு ரயில்களுக்கும் இடையே சுமார் இரண்டு மணி நேர இடைவெளியும் இருக்கும்.

சென்னை எழும்பூருக்குள் அகால நேரத்தில் நுழையாமல், அதிகாலை 5 மணிக்கு நுழைந்து பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்தலாம்.

கொல்லம் – செங்கோட்டை பாதை வழியாக நீண்ட தூர ரயில்களை பின்வரும் முறையில் கொண்டு வருவது அவசியம் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

1.சூரத்- திருநெல்வேலி (பனவேல், கொங்கன், ஆலப்புழா வழியாக) வாராந்திரம்

2.கொல்லம் – செகந்திராபாத் (செங்கோட்டை விருதுநகர் விழுப்புரம், ரேணிகுண்டா, குண்டூர் வழியாக) வாரம் இருமுறை ரயில் இயக்க வேண்டும்.

3.திருவனந்தபுரம் வடக்கு – தாம்பரம் ஏசி ரயிலை வாரம் முழுவதும் இயக்கப்படும் வழக்கமான ரயிலாக மாற்றம் வேண்டும்

4.கொல்லம் – சென்னை எக்ஸ்பிரஸ் கொல்லம் புறப்பாடு சென்னை வருகை நேர மறுசீரமைக்க வேண்டும்.

5.திருவனந்தபுரம் வடக்கு – ஹூப்பள்ளி செங்கோட்டை மதுரை கரூர் வழியாக, பெங்களூர் SMVT) வார இருமுறை.

6.திருவனந்தபுரம் வடக்கு – மேட்டுப்பாளையம் செங்கோட்டை, பழனி, கோயம்புத்தூர் வழியாக இயக்க வேண்டும்

7.எர்ணாகுளம் – கோட்டயம் வழியாக வேளாங்கண்ணி தினசரி ரயில்

8.எர்ணாகுளம் – புதுச்சேரி வாரமிருமுறை கோட்டயம் செங்கோட்டை விருதுநகர் வழியாகவும்,

9.எர்ணாகுளம் – ஆலப்புழா கொல்லம் செங்கோட்டை விருதுநகர் வழியாக ராமேஸ்வரம் வாரம் மும்முறை யும்

10.திருவனந்தபுரம் வடக்கு – காச்சிகுடா செங்கோட்டை, கரூர், ஓசூர், யெலஹங்கா, கர்னூல் வழியாகவும் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

சபரிமலையில் பங்குனி உத்திரம் திருவிழா கோலாகல தொடக்கம்!

பங்குனி உத்திரம் ஆராட்டு விழாவிற்காக, சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் இன்று நடை திறக்கப்பட்டு, ஐயனின் திருநடையில் மேல்சாந்தி நெய்தீபம் ஏற்றிவைத்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

புகழ் பெற்ற சபரிமலை நடை திறக்கப்பட்ட நிலையில், 19 நாட்கள் தரிசனத்திற்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.

புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, இன்று (ஏப்ரல் 1ம் தேதி) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதையடுத்து நாளை புதன்கிழமை ஏப்ரல் 2ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கி ஏப்ரல் 11ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.

திருவிழா நாட்களில் தினமும் சபரிமலை ஐயப்பனுக்கு பகலில் உற்ஸவ பலி பூஜை, உற்ஸவ பலி தரிசனம் நடைபெறும். இரவு ஸ்ரீ பூதபலி பூஜை நடைபெறும். முக்கிய நிகழ்வாக ஒன்பதாம் திருநாள் அன்று ஐயப்பன் பள்ளி வீட்டை, பத்தாவது திருநாள் அன்று ஐயப்பன் பிறந்தநாளில் பங்குனி உத்திர ஆராட்டு விழா பம்பை நதிக்கரையில் நடைபெறும்.

முக்கிய விழாவான சித்திரை விஷூத் திருவிழா ஏப்ரல் 10ம் தேதி முதல் தொடங்குகிறது. ஏப்ரல் 14ம் தேதி சித்திரை விஷூ திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழ் மாதத்தின் சித்திரை, மலையாள மாதத்தின் இடவம் மாதங்களின் மாதாந்திர பூஜை ஏப்ரல் 14ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை நடக்கிறது.

இதையொட்டி, ஏப்ரல் 11ம் தேதி பங்குனி உத்திர சிறப்பு பூஜையும், ஐயப்பனுக்கு பம்பையில் ஆராட்டும், ஏப்ரல் 14ம் தேதி பூஜையும் நடக்கிறது. இந்த பூஜைகளுக்காக, இன்று (ஏப்ரல் 1ம் தேதி) தொடங்கி ஏப்ரல் 19ம் தேதி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும். இதற்காக தரிசன முன்பதிவு தொடங்கியுள்ளது.

பக்தர்கள், https://sabarimalaonline.org/ என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் டோர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் தற்போது பங்குனி உத்திர திருவிழாவுக்கு நடை திறந்தது முதல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. பம்பை நதியிலும் ஓரளவு தண்ணீர் வருகிறது. கடந்த சில நாட்களாக சபரிமலை வனப்பகுதியில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கடும் வெயில் 100 டிகிரிக்கு மேல் வாட்டி எடுத்தது. மரங்களின் இலைகள் எல்லாம் உதிர்ந்து, பசுமையான வனம் கருகிய வனமாக காட்சி அளித்து வருகிறது. இந்த மழையில் பசுமை மீண்டும் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

தற்போது கேரளாவில் இலையுதிர் காலம் என்பதால் வனப்பகுதியில் உள்ள அடர்ந்த மரங்களில் இலைகள் எல்லாம் உதிர்ந்து, கருகிய வனமாகக் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணத் திருவிழா ஏப்.3ல் தொடக்கம்!

andal srivilliputhur

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண விழாவையொட்டி பந்தல் உள் அலங்காரப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. விழாவுக்கான கொடியேற்றம் ஏப்.3ம் தேதியும், திருக்கல்யாணம் ஏப்.11ம் தேதியும் நடக்கிறது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீ வில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெறும். இதன்படி, இந்தாண்டு திருக்கல்யாண வைபவம் வரும் ஏப்.11ம் தேதி நடைபெறுகிறது.

இதற்காக ஏப்.3ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. இதையொட்டி கோயில் முன்புறம் உள்ள ஆடிப்பூரக் கொட்டகையில் பந்தல் உள் அலங்காரப் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இப்பணியில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோயில் திருக்கல்யாண ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

பங்குனி மாதம் 20ம் தேதி (03.04.2025) துவஜாரோஹணம் (கொடியேற்றம்) முதல் சித்திரை மாதம் 02ம் தேதி (15.04.2025) புஷ்பயாகம் வரை நடைபெறும் விழாவில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து செல்வர்.

திருக்கல்யாண சேவையான 11.04.2025 வெள்ளிக்கிழமை காலை 7.05 மணிக்கு செப்புத்தேரோட்டம் (கோரதம்) மாலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெறும். சித்திரை மாதம் 02ம் தேதி (15.04.2025) புஷ்பயாகம் நடைபெறும்.