Home Blog Page 126

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

hindu
ohm

காஷ்மீரில் இந்துக்கள் மீதான பயங்கரவாதிகள் தாக்குதல், தேசத்தின் துக்க நாள் என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

நேற்று காஷ்மீர் மாநிலத்தில் இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் இந்திய இராணுவ உடையில் வந்து அப்பாவி சுற்றுலா பயணிகள் 27 பேரை ஈவிரக்கமின்றி படுகொலை செய்துள்ளனர்.

அதிலும் கொடுமையானது அவர்களின் மதத்தை கேட்டு, உடைகளை களைந்து உடல் உறுப்புகளை பார்த்து உறுதி செய்த பிறகு கொன்றுள்ளனர். மனைவி கண் முன்பே கணவனை கொன்றுள்ளனர். மனைவி தன்னையும் கொன்று விடுங்கள் என கூறியதற்கு, இதனை இந்திய பிரதமர் மோடிக்கு தெரிவிக்க வேண்டும் ஆகவே கொல்லாமல் விடுவதாக பயங்கவாதிகள் கூறியுள்ளனர்.

இந்த கொலை பாதக சம்பவம் ஒட்டுமொத்த இந்திய நாட்டையும் உலுக்கியுள்ளது. மத பயங்கரவாதம் எத்தகைய அபாயகரமானது என உலகத்திற்கு உணர்த்தியுள்ளது.

மதத்தின் பெயரால் நடக்கும் பயங்கரவாதம் மனிதகுல விரோதம் மனித தன்மை அற்றது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீரில் தொடர்ந்து பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. பயங்கரவாதத்தை ஒடுக்க முடியாமல் இருந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது அந்த மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 சலுகை. அதனை நீக்கி மாநிலத்தை மூன்று பிரிவாக பிரித்து குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு தான் காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கொட்டம் ஒடுக்கப்பட்டது. அங்கு அமைதி திரும்பியது. காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியுடன் அமைதியுடன் வாழ ஆரம்பித்தனர்.

மேலும் அங்கு விவசாயம், சுற்றுலா மூலம் மக்கள் வளர்ச்சியின் அவசியத்தை உணரத் தொடங்கினர். மேலும் பாரதம் முழுவதிலிருந்தும், உலக மக்களும் காஷ்மீருக்கு சுற்றுலா வரத் துவங்கினர். இதனை பொறுக்க முடியாத பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்த கோழைத்தனமான மத பயங்கரவாத கொடூரத்தை நடத்தியுள்ளனர்.

நமது நாட்டின் துரதிருஷ்டம் மக்கள் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து முழுவதுமாக அச்சமின்றி வெளிவரும் முன்னரே தேர்தலை நடத்த நீதிமன்றம் தலையிட்டது. எதிர்க்கட்சிகளும் அங்கு அமைதி திரும்பும் முன் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்த ஆரம்பித்தன.

குடியரசு தலைவர் ஆட்சி இன்னும் கொஞ்ச நாட்கள் நீடித்து இருந்தால் இத்தகைய கொடூரம் நடந்து இருக்காது. ஆனால் எல்லாவற்றையும் அரசியலாக்கும் போக்குதான் இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு உதவுவதாக அமைகிறது என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

காஷ்மீர் மக்கள் இப்போது பயங்கரவாதத்திற்கு எதிராக போராட ஆரம்பித்துள்ளனர். உண்மையில் இது நல்ல துவக்கம் என்றாலும் கண் எதிரே பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை பார்த்து மீண்டும் அந்த மக்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்பது நமது கவலை.

பாரதத்தின் காஷ்மீர் எல்லை பகுதியான புல்வாமாவில் இராணுவ உடையில் வந்து இராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததுபோல இப்போதும் பயங்கரவாதிகளை ஒட்டுமொத்தமாக ஒழிக்க இராணுவத்திற்கு இந்தியர்கள் ஒவ்வொருவரும் துணை நிற்போம்.

இப்போது தருகின்ற பதிலடி இனி எந்த காலத்திலும் பயங்கரவாதிகள் இந்திய மண்ணில் எந்த பயங்கர செயலையும் செய்ய அஞ்சும் அளவு இருக்க வேண்டும்.

உலக நாடுகள் அனைத்தும் கூட இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தை ஒழிக்க பாரததத்திற்கு துணை நிற்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளின் இரக்கமற்ற கொடிய தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களின் ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறோம்.

நாம் நமது உறவினர்களை இழந்துள்ளோம். எனவே அருகில் உள்ள கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

IPL 2025: டெல்லி அணியின் திரில்‌ வெற்றி

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025

டெல்லி திரில் வெற்றி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (209/8, மிட்சல் மார்ஷ் 72, நிக்கோலஸ் பூரன் 75, டேவிட் மில்லர் 27, மிட்சல் ஸ்டார்க் 3/42, குல்தீப் யாதவ் 2/20, விப்ராஜ் நிகம் மற்றும் முகெஷ் குமார் தலா ஒரு விக்கட்) டெல்லி கேபிடல்ஸ் அணி (19.3 ஓவர்களில் ஒன்பது விக்கட் இழப்பிற்கு 211 ரன், அஷுத்தோஷ் ஷர்மா ஆட்டமிழக்கமல் 66, விப்ராஜ் நிகம் 39, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 34, அக்சர் படேல் 22, ஷர்துல் தாகூர், மணிமஆறன் சித்தார்த், திவேஷ் ரதி, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கட்டுகள்) ஒரு விக்கட்டு வித்தியாசத்தில் வென்றது.

இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. பூவா தலையா வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. லக்னோ அணியின் அணித்தலைவர், ரிஷப் பந்த், தான் ஒருவேளை டாஸ் ஜெயித்திருந்தால் மட்டையாடியிருப்பேன் என்று சொன்னர்.

எனவே டெல்லி அணி, லக்னோ அணியை மட்டையாடச் சொன்னது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று.

அந்த அணியின் முதல் மூன்று வீரர்கள் எய்டன் மர்க்ரம் (13 பந்துகளில் 15 ரன்), மிட்சல் மார்ஷ் (36 பந்துகளில் 72 ரன், 6 ஃபோர், 6 சிக்சர்), நிக்கோலஸ் பூரன் (30 பந்துகளில் 75 ரன், 6 ஃபோர், 7 சிக்சர்) என அதிரடியாக விளையாடி, 15ஆவது ஓவரில் பூரன் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 169ஆக் இருந்தது.

13ஆவது ஓவரை ஸ்டப்ஸ் வீச வந்தபோது நிக்கோலஸ் பூரன் (0,6,6,6,6,4) நாலு சிக்சர், ஒரு போர் அடித்து தூல் கிளப்பினார்.

அதன் பிறகு வந்த வீரர்களால் இவர்களைப்போல ஆட முடியவில்லை. டேவிட் மில்லர் (19 பந்துகளில் 27 ரன்) மட்டும் ஏதோ சொல்லும்படி ஆடினார். மற்றவர்கள் சொற்ப ரன் களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் லக்னோ அணி 20 ஓவர்களில் எட்டு விக்கட்டுகள் இழப்பிற்கு 209 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

210 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த டெல்லி அணி இரண்டு ஓவர்கள் முடிவதற்குள் மூன்று விக்கட்டுகளை இழந்தது. ஜேக் ஃப்ரேசர் மெகர்க் (1 ரன்), அபிஷேக் போரல் (பூஜ்யம் ரன்) சமீர் ரிஸ்வி (4 ரன்) என மூவரும் விரைவில் ஆட்டமிழந்தனர்.

ட்யூபிளேசிஸ் (18 பந்துகளில் 29 ரன்) மற்றும் அக்சர் படேல் (11 பந்துகளில் 22 ரன்) இருவரும் டெல்லி அணிக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் ஆடினர். 12ஆவது ஓவரில் 102 ரன் மட்டுமே எடுத்திருந்த டெல்லி அணி, அதன் பின்னர் கியரை மாற்றி வேகமாக ரன் எடுக்கத் தொடங்கியது.

ஓவர் 13இல் 15 ரன், 14இல் 17 ரன், 15இல் 15 ரன், 16இல் 20 ரன், (17இல் 3 ரன்), 18இல் 17 ரன், 19இல் 16 ரன், 20இல் 7 ரன் என மொத்தம் 109 ரன் களை கடைசி 7 ஓவர்களில் டெல்லி அணி எடுத்தது.

ஸ்டப்ஸ் (22 ரன்), அஷுத்தோஷ் ஷர்மா (31 பந்துகளில் 66 ரன், 5 ஃபோர், 5 சிக்சர்) விப்ராஜ் நிகம் (15 பந்துகளில் 39 ரன்) எடுத்தனர். இதனால் 19.3 ஓவர்களில் டெல்லி அணி 9 விக்கட் இழப்பிற்கு 211 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது

டெல்லி அணியின் மட்டையாளர், அஷுத்தோஷ் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதில் சுற்றுலா பயணியர் 26 பேர் உயிரிழப்பு!

kashmir bahalkam terrorist attack - 2026

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித் தனமாக சுட்டதில் சுற்றுலா பயணியர் 26 பேர் உயிரிழப்பு!

பஹல்காம் (காஷ்மீர்) பகுதியில் 27 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 12 பேர் தீவிரமாக காயமடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு, அடையாள அட்டை காட்டுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர், அவர்கள் கால்சட்டை அகற்றுமாறு கூறி, முஸ்லிம்கள் அல்ல என்று உறுதி செய்யச் சொல்லப்பட்டது. அதற்குப் பிறகே அவர்கள் உயிர் பறிக்கப்பட்டது.

காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமின் பைசாராம் பகுதியில் சுற்றுலா பயணிகள் குழுமியிருந்த போது, இன்று மதியம் 2:30 மணி அளவில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் இருவர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது. 

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கும் லஷ்கர் இ தொய்பாவின் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.  இந்தச் சம்பவத்தில் வெளிநாட்டினர் இருவர் உட்பட 26க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பயத்தில் அலறியடித்து ஓடினர். காயமடைந்தவர்களைக் கண்டு, உறவினர்கள் கதறி அழுதனர். காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் உடனடி சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

தகவல் அறிந்து ராணுவத்தினரும் பாதுகாப்பு படையினரும் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்திய இஸ்லாமிய பயங்கரவாதிகளை ராணுவத்தினர் தேடி வருகின்றனர்.

இத்தாக்குதல் சம்பவம் குறித்து அறிந்ததும், சௌதி அரேபியாவில் இருக்கும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவலையும் நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக எடுக்குமாறும், அமித் ஷாவை சம்பவ இடத்தைப் பார்வையிடுமாறும் கேட்டுக் கொண்டார்.

பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அமித் ஷா உயர்மட்டக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் உள்துறைச் செயலாளர், புலனாய்வுப் பிரிவு மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். டி.ஜி.பி., உட்பட ஜம்மு-காஷ்மீர் அதிகாரிகள், காணொளி வழியில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பிரதமருடன் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக ஸ்ரீநகர் கிளம்பி சென்றார். அங்கு அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 

இந்நிலையில், இந்த இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இது ஒரு கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயலாகும். இது கண்டனத்துக்குரியது. சுற்றுலா பயணிகளை தாக்குவது என்பது கொடூரமானது. மன்னிக்க முடியாதது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.

பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இந்தக் கொடூர செயல்களுக்கு பின்னால் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் தப்பிக்க முடியாது. இந்த மோசமான திட்டம் வெற்றி பெறாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தீர்மானம் அசைக்க முடியாதது. அது இன்னும் வலிமையாகி உள்ளது.. என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது சௌதி சுற்று பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு நாடு திரும்புவதாகவும், இன்றிரவு இரண்டு மணிக்கு தில்லி திரும்புவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மக்கள் உடல்நலத்துடன் விளையாடி, ஹிந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தும் அமைச்சர் நேரு!

kadeswara subramaniam hindu munnani - 2026

திருச்சி மக்கள் உடல்நிலை பாதிப்பிலும் திமுகவின் இந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துவதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது…

திருச்சியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குடிநீரில் கழிவுநீர் கலந்து இருந்ததால் இந்த பாதிப்பு என்று பத்திரிகை செய்திகள் தெரிவித்தன. பல நகரங்களில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்சினை எப்போதும் எழுந்து வருபவைதான்.

சமீபகாலமாக பெரும்பாலன மக்கள் நகராட்சி குடிநீரை சமைக்க பயன்படுத்துவதற்கு பதிலாக கேன் தண்ணீரை விலைக்கு வாங்கிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.

இந்தப் பிரச்சினை குறித்து 21.4.25 ல் சட்டசபையில் பதிலளித்த அமைச்சர் திரு‌. கே.என். நேரு குடிநீரில் பிரச்சினை இல்லை என்றும் திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் கோவிலில் அளித்த அன்னதான உணவு, இலவசமாக தரப்பட்ட குளிர்பானங்கள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என பதில் அளித்துள்ளார். இத்தகைய கருத்தை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

இத்தகைய பதில் திமுகவின் இந்து விரோத போக்கையே காட்டுகிறது. எந்த முகாந்திரமும் இல்லாமல் இந்துக்கள் புண்ணியமாகக் கருதி, தூய்மையாக செய்து, இலவசமாக அளிக்கும் அன்னதானம் பற்றி அவதூறு பரப்புவது திமுகவின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

சில மாதங்களுக்கு முன்பாக அன்னதானம் செய்ய உணவு கட்டுப்பாட்டு துறையின் தரச் சான்று பெற வேண்டும் என்று கூறியது திமுக அரசு. மேலும் திருவண்ணாமலை உட்பட பல இடங்களில் அன்னதானம் செய்வதை தடுக்கும் நடவடிக்கையிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மேலும் ஒவ்வொரு கோவில்களிலும் பிரசாதக்கடை, ஸ்வீட் ஸ்டால் நடத்தப்படுகிறது. அதற்கு உணவு கட்டுப்பாட்டுத் துறை லைசென்ஸ் மற்றும் பரிசோதனை நடத்தப்படுகிறதா?

அதுவே கோவில் விழாக்களில் வேற்று மதத்தினர் குளிர்பானங்கள் வழங்குகின்றனர். ஆனால் அதனை மத நல்லிணக்கம் என விளம்பரப் படுத்தி பாராட்டுகிறது இதே அரசு.

சமீபத்தில் பிரபல ஓட்டல் ஒன்றில் பிரியாணி சாப்பிட்ட பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து விசாரிக்கச்சென்ற உணவு கட்டுப்பாட்டு அதிகாரி பாதியிலேயே ஏதோ காரணத்தால் திரும்பினார் என்று செய்தி வெளிவந்து பரபரப்பானது. இதனை குறித்து சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பிய இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் திரு.ஜெகன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தது காவல்துறை.

ஆனால் எந்த முகாந்திரமும் இல்லாமல் அமைச்சர் திரு.கே.என். நேரு, கோவில் அன்னதானத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறை இவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்பது மக்கள் கேள்வியாக இருக்கிறது.

கோவிலுக்கு வந்தவர்களுக்கு அங்கு தரப்பட்ட உணவை சாப்பிட்டவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டனர் என்பதை எதன் அடிப்படையில் அமைச்சர் தெரிவித்தார்?

அதே சமயம் நகராட்சி குடிநீர் நிறுத்தப்பட்டு லாரிகளில் குடிநீர் வழங்குவதாக கூறுகிறார் அமைச்சர். அப்படி குடிநீரில் கழிவுநீர் கலப்பு இல்லை என்றால் அதனை ஏன் நிறுத்த வேண்டும்? அரசின் அலட்சியத்தை மறைக்க இந்த நடவடிக்கையா?

அமைச்சர் திரு.கே.என். நேரு தெய்வ நம்பிக்கை உடையவர். அவர் இவ்வாறு தரம் தாழ்ந்து பேசியதை கண்டிக்கிறோம். மக்கள் பாதிக்கப்பட்டதற்குக் காரணம் அவர் வெக்காளியம்மன் கோவிலில் அளித்த அன்னதான உணவாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டதை வாபஸ் வாங்கி, சட்டசபை குறிப்பில் இருந்து நீக்குவதற்கு சபாநாயகரிடம் முறையிட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

ப்ளீஸ்… கூட்டத்துல இதையெல்லாம் பேசுங்களேன்! – தென்காசி எம்.பி.க்கு ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் கோரிக்கைகள்!

railway news - 2026
#image_title

மைசூர் – தூத்துக்குடி தினசரி விரைவு ரயில் மதுரை வரும் நேரம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வரும் 24.4.25 வியாழன் அன்று, மதுரையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர், மதுரை கோட்டத்தின் கீழ் வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்தவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில், விருதுநகர் – தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை பொது மேலாளரிடம் வைக்க வேண்டும் என்று விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்ட ரயில் பயணிகளின் சார்பில், செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார்.

அதில், “தினசரி இயங்கும் மைசூர் – தூத்துக்குடி விரைவு ரயில், மதுரை ரயில் நிலையத்துக்கு காலை 07.35 க்கு வந்து 07.40க்கு புறப்பட்டுச் செல்கிறது.
ஆனால் தினசரி இயங்கும் மதுரை – செங்கோட்டை முன்பதிவில்லா ரயில் இந்த மைசூர் – தூத்துக்குடி விரைவு ரயில் மதுரைக்கு வரும் முன்பாகவே காலை 07.20 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்று விடுகிறது.

இதனால் மைசூர் – தூத்துக்குடி ரயிலில் மதுரை வந்து இணைப்பு ரயிலைப் பிடிக்க வரும் திருத்தங்கல் முதல் செங்கோட்டை வரை ( வழி சிவகாசி – ராஜபாளையம் – தென்காசி) செல்ல உள்ள பயணிகள் இணைப்பு ரயில் வசதி உடனே கிடைக்காமல் மதுரை ரயில் நிலையத்தில் 4 மணி நேரம் காத்துக் கிடக்கும் சூழ்நிலை தற்போது உள்ளது. ஏனெனில் இவர்களுக்கு தமது ஊர்களுக்கு செல்ல மதுரையிலிருந்து இயக்கப்படும் அடுத்த ரயில் காலை 11.35 க்கு புறப்படும் மதுரை – குருவாயூர் ரயில்தான்.

எனவே தெற்கு ரயில்வே அதிகாரிகள் தென் மேற்கு ரயில்வே அதிகாரிகளுடன் கலந்து பேசி ஆவன செய்து மைசூர் – தூத்துக்குடி விரைவு ரயில் காலை 07.00 மணிக்கு மதுரை வந்தடையத் தேவையான உடனடி நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம். – என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும், செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் எல்.எம். முரளி, செயலர் கே.ஹெச். கிருஷ்ணன், துணைத் தலைவர் ராஜேந்திர ராவ், இணை செயலர் எம்.செந்தில் ஆறுமுகம், பொருளாளர் எஸ். சுந்தரம், பிஆர்ஓ ராமன், எஸ். லிவிங்ஸ்டன் சாமுவேல், வி.மகேந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டு, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஶ்ரீகுமாருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…

தெற்கு ரயில்வே பொது மேலாளர் 24.04.25 அன்று மதுரையில் மதுரை கோட்டத்தின் கீழ் வரும் நாடளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்த இருக்கிற கலந்தாய்வு கூட்டத்தில் தாங்கள் எங்கள் சங்கத்தின் கீழ்காணும் கோரிக்கைகளை பொது மேலாளரிடம் எடுத்துரைத்து ஆவன செய்ய பரிந்துரைக்க வேண்டுகிறோம்.

(I) கீழ்க்காணும் புதிய ரயில்களை இயக்குதல் மற்றும் தேவைப்படும் இதர ரயில் சேவைகள்

(1) தினசரி காலையிலும் மாலையிலும் முன்பதிவில்லா திருநெல்வேலி – திருவனந்தபுரம் & திருவனந்தபுரம் – திருநெல்வேலி ரயில்கள் வழி அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி பாவூர்சத்திரம் தென்காசி செங்கோட்டை புனலூர் கொல்லம்.
(2)இதே போல தினசரி முன்பதிவில்லா ரயில்கள் மதுரை – திருவனந்தபுரம் & திருவனந்தபுரம் – மதுரை வழி விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் தென்காசி செங்கோட்டை புனலூர் கொல்லம்.
செங்கோட்டை கோயம்புத்தூர்& கோயம்புத்தூர் செங்கோட்டை வழி பழனி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் தென்காசி
(3)தற்போது வாரம் மூன்று நாட்கள் ஓடிக்கோண்டிருக்கும் செங்கோட்டை தாம்பரம் சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் செங்கோட்டை தாம்பரம் எக்ஸ்பிரஸ் வழி திருநெல்வேலி ஆகியவற்றை தினசரி ரயில்களாக்க வேண்டும்.
(4) திருவனந்தபுரம் / கொல்லம் இவற்றிலிருந்து செங்கோட்டை வழியாகவோ அல்லது திருநெல்வேலியில் இருந்து அம்பை பாவூர்சத்திரம் தென்காசி வழியாகவோ கீழ்கண்ட ஊர்களுக்கு விரைவு ரயில்கள் உடனடியாக தேவை.
a)மும்பாய்
b)டெல்லி
c)மைசூர் / பெங்களூர்
d)மங்களூர்
e)வாரணாசி
f)ஹைதராபாத் வழி திருப்பதி 5)செங்கோட்டையில் இருந்து தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் மதுரை திருச்சி விருத்தாசலம் விழுப்புரம் வழியாக
சென்னைக்கு அம்ருத பாரத் ரயில்கள் விடவேண்டும்
6)தென்காசி -விருதுநகர் வழித்தடத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கலாம் என ரயில் சோதனை ஓட்ட ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதால் தென்காசியிலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.
7)2018ல் சில நாட்களே ஓடி பிறகு நிறுத்தப்பட்ட செங்கோட்டை – தாம்பரம் பகல் நேர முன்பதிவில்லா அந்தியோதயா ரயில்களை மீண்டும் இயக்க ஆவன செய்ய வேண்டும்.
8)தற்போது வாரம் ஒருமுறை ஓடும் தாம்பரம் திருவனந்தபுரம் வடக்கு விரைவு ஏசி ரயில்களில் சாதாரண பயணிகளின் வசதிக்காக மூன்று முன்பதிவில்லா பெட்டிகளும் மூன்று சாதாரண இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளும் உடனடியாக இணைக்கப்பட வேண்டும். மேலும் இந்த ரயிலை வாரம் இரு முறை இயக்க வேண்டும்.
9)தற்போது இயங்காமல் உள்ள திருநெல்வேலி தாம்பரம் வாராந்திர ரயில் வழி தென்காசி ராஜபாளையம் சிவகாசி மீண்டும் இயக்கிட விரைந்து ஆவன செய்ய வேண்டும்.
10)தற்போது புனலூரோடு நிற்கும் ரயில்களை தென்காசி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.குறிப்பாக கன்னியாகுமரி – புனலூர் ரயிலை தென்காசி வரை உடனடியாக நீட்டிக்க வேண்டும்.
11) கீழ்கண்ட முன்பதிவில்லா ரயில்கள் ஒவ்வொன்றிலும் நான்கு பொது பெட்டிகளும் மகளிருக்கான ஒரு பொது பெட்டியும் இணைக்க ஆணையிட வேண்டும்.
அ) செங்கோட்டை ஈரோடு செங்கோட்டை ரயில்கள்.
ஆ) செங்கோட்டை மயிலாடுதுறை செங்கோட்டை ரயில்கள்.
இ) செங்கோட்டை திருநெல்வேலி செங்கோட்டை ரயில்கள்.
ஈ) செங்கோட்டை மதுரை செங்கோட்டை ரயில்கள்.
12) பாலக்காடு தூத்துக்குடி பாலக்காடு பாலருவி விரைவு ரயில்களில் இரண்டு மூன்றடுக்கு ஏசி பெட்டிகளும் ஒரு ஈரடுக்கு ஏசி பெட்டியும் இணைக்க வேண்டும்.

(II)நிறுத்தங்கள் தேவை கோரிக்கை

1) சென்னை – செங்கோட்டை 12661 செங்கோட்டை —சென்னை 12662 பொதிகை அதிவேக ரயில்கள் தென் மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்களின் வசதிக்காக நிரந்தரமாக மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும்.
(2) சென்னை – கொல்லம் 16101 கொல்லம் – சென்னை 16102 விரைவு ரயில்கள் பாம்பகோவில்சந்தை , திருத்தங்கல் ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும.

III ) புதிய ரயில் நிலையங்கள் அமைத்தல்

செங்கோட்டை – ராஜபாளயம் ரயில் பாதையில் முன்பு மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கி பிறகு மூடப்பட்ட சோழபுரம், கரிவலம்வந்தநல்லூர், நயினாரகரம் ரயில் நிலையங்களை மீண்டும் அமைக்க வேண்டும்.இது நடந்தால் இப்பாதையில் ரயில்களின் கால தாமதம் தவிர்க்கப்படும.

(IV)இதர கோரிக்கைகள்

1) செங்கோட்டையில் தற்போது 3 நடைமேடைகளே உள்ளன. மேலும் இரண்டு நடைமேடைகள் அமைக்க வேண்டும்.
2) செங்கோட்டை – தென்காசி மற்றும் தென்காசி – விருதுநகர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும்
3) செங்கோட்டையில் பிட்லைன் அமைக்க வேண்டும். இதை அமைத்தால் மட்டுமே தமிழ்நாட்டின் தென்மாவட்ட மக்களின் வசதிக்காக மதுரையோடு நின்று விடும் தொலைதூர ரயில்களை செங்கோட்டை வரை நீட்டிக்க இயலும்.
4) பகவதிபுரம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டிகளுக்கான தண்ணீர் மற்றும் இதரவசதிகள் நடைமேடைகள் அமைக்கப்பட்டு பொதிகை,சிலம்பு, தாம்பரம் ரயில்கள் இவை செங்கோட்டை வந்து சேர்ந்த பிறகு பகவதிபுரம் செல்ல வேண்டும். மீண்டும் மாலையில் செங்கோட்டைக்கு வர வேண்டும்.
5) செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளின் நலனுக்காக எக்ஸ்பிரஸ் ரயில்களின் பெட்டிகள் நிற்கும் இடத்தை , ரயில்களின் பெயர் மற்றும் நம்பர் இவற்றுடன் காட்டுகிற எலக்ட்ரானிக் போர்டுகளை அனைத்து நடைமேடைகளிலும் உடனடியாக அமைத்து தர வேண்டும்.
6)தென்காசி – திருநெல்வேலி பாதையிலும் செங்கோட்டை கொல்லம் பாதையிலும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடைகளின் உயரம் கூட்டப்பட்டு 24 ரயில் பெட்டிகள் நின்றிடும் வண்ணம் நடைமேடைகளின் நீளத்தையும் அதிகரிக்க விரைந்து ஆவன செய்ய வேண்டும்.

இது ஒரு முக்கியமான கோரிக்கை! எளிதாக நிறைவேற்றக் கூடியது தான்.
காலையில் பொதிகை அதிவேக விரைவு ரயில் வண்டி எண் 12661 சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு வரும்போது தென்காசிக்கு காலை 06.50 மணிக்கு வந்து விடுகிறது . ஆனால் எல்லா நாட்களும் அதை தென்காசியில் செங்கோட்டை மயிலாடுதுறை ரயில் வரும் வரை 20 நிமிடம் வரை நிறுத்தி வைக்கிறார்கள்.. இதனால் பொதிகை ரயிலில் செங்கோட்டைக்கு வருகின்ற பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் .
அதனால் பொதிகை எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வந்த பின்பு செங்கோட்டை மயிலாடுதுறை வண்டி புறப்பட்டால் சரியாக இருக்கும்.. பொதிகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகும் அதை 20 நிமிடம் தென்காசியில் நிறுத்தி வைப்பது சரியாகாது… ஆதலால் பொதிகை ரயில் செங்கோட்டைக்கு வந்தவுடன் செங்கோட்டை – மயிலாடுதுறை வண்டி புறப்பட வேண்டும்.

IPL 2025: அனைத்திலும் ஜொலித்த குஜராத் அணி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – குஜராத் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா – 21.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

குஜராத் டைடன்ஸ் அணி (198/3, ஷுப்மன் கில் 90, சாய் சுதர்ஷன் 52, ஜாச் பட்லர் ஆட்டமிழக்கமல் 41, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, ஆண்ட்ரூ ரசல் தலா ஒரு விக்கட்) கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை (159/8, அஜிங்க்யா ரஹானே 50, ரகுவன்ஷி ஆட்டமிழக்காமல் 27, ரசல் 21, சுனி நரேன் 17, ரிங்கு சிங் 17, பிரசித் கிருஷ்ணா 2/25, ரஷித் கான் 2/25, சிராஜ், இஷாந்த் ஷர்மா, வாஷிங்க்டன் சுந்தர், சாய் கிஷோர் தலா ஒரு விக்கட்) 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாட வந்த குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (36 பந்துகளில் 52 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ஷுப்மன் கில் (55 பந்துகளில் 90 ரன், 10 ஃபோர், 3 சிக்சர் ஒரு மிக அருமையான தொடக்கம் தந்தனர்.

மூன்றாவதகக் களமிறங்கிய ஜாஸ் பட்லர் (23 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 41 ரன், 8 ஃபோர்) இன்னிங்க்ஸ் இறுதி வரை விளையாடினார். ராகுல் திவாத்தியா (பூஜ்யம் ரன்) இன்று சோபிக்கவில்லை. ஷாருக் கான் ( 5 பந்துகளில் 11 ரன்) கடைசி ஓவரில் ஒரு சிக்சர் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 198 ரன் எடுத்தது.

          199 ரன் என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அஜிங்க்யா ரஹானே (36 பந்துகளில் 50 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி (13 பந்துகளில் 27 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) இருவர் மட்டுமே சிறப்பாக ஆடினர். மற்றாவர்களால் அதிரடியாக ஆட்டமுடியவில்லை.

அவர்களின் நன்கு விளையாடக்கூடிய மட்டையாளர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் (1 ரன்) (டி காக் இன்று விலையாடவில்லை), சுனில் நரேன் (13 பந்துகளில் 17 ரன்), வெங்கடேஷ் ஐயர் (14 பந்துகளில் 17 ரன்), ரசல் (15 பந்துகளில் 21 ரன்), ரமந்தீப் சிங் (1 ரன்), மொயின் அலி (பூஜ்யம் ரன்) ஆகியோர் இன்று அவர்களது வழக்கமான ஆட்டத்தை ஆடமுடியவில்லை. இதனால் கொல்கொத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 159 ரன் எடுத்து 39 ரன் களில் தோல்வியைத் தழுவியது.

          குஜராத் அணியின் அணித்தலைவர், இன்று 90 ரன் எடுத்த ஷுப்மன் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அமைச்சர் பொன்முடியை கைது செய்யக் கோரி மனு!

protest in madurai to remove ponmudi - 2026

பெண்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பெண்களைப் பற்றி தரக்குறைவாகவும், இரு பெரும் ஹிந்து சமயங்களான வைணவ, சைவ சமயங்களை கொச்சைப்படுத்தி இழிவாகவும் பேசிய தமிழக அமைச்சர் பொன்முடியைக் கைது செய்ய வலியூறுத்தி, தமிழக ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இன்னொரு நிகழ்ச்சியாக, திமுக அமைச்சர் பொன்மொடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி, அதிமுக மகளிரணி சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றார்.

திமுகவின் வனத்துறை அமைச்சராக இருந்து வரும் பொன்முடி அண்மையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில், விலைமாதர்களை சைவம் வைணவம் ஆகியவற்றோடு ஒப்பிட்டு பேசிய பேச்சு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் தமிழக முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மகளிர் அமைப்பினர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடியை, திமுகவின் துணை பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அமைச்சர் பொன் முடியை கட்சி பொறுப்பில் இருந்து நீக்குவது ஏற்புடையதல்ல,
அவரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக மகளிர் அணி சார்பாக முன்னாள் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை செல்லூர் 60 ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில், அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 –இரண்டு ஆட்டங்கள்- 20.04.2025

ரோஹித், கோலி அதிரடி ஆட்டம்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பஞ்சாப் vs பெங்களூரு

பஞ்சாப் கிங்க்ஸ் அணியை (157/6, பிரப்சிம்ரன் சிங் 33, ஷஷாங்க் சிங் 31, ஜோஷ் இங்கிஷ் 29, மார்கோ ஜேன்சன் 25, பிரியான்ஷ் ஆர்யா 22, க்ருணால் பாண்ட்யா 2/25, சுயேஷ் ஷர்மா 2/26, ஷெப்பர்ட் 1/18) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (18.5 ஓவர்களில் 159/3, விராட் கோலி ஆட்டமிழக்காமல் 73, தேவதத் படிக்கல் 61, அர்ஷதீப் சிங், ஹர்பிரீத் ப்ரார், சாஹல் தலா ஒரு விக்கட்) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த பஞ்சாப் அணியின் முதல் நான்கு மட்டையாளர்களில் மூவர் சிறப்பாக ஆடினர். ஷ்ரேயாஸ் ஐயர் (6 ரன்) இன்றும் சரியாக ஆடவில்லை.

பிரியான்ஷ் ஆர்யா (15 பந்துகளில் 22 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), பிரப்சிம்ரன் சிங் (17 பந்துகளில் 33 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), ஜோஷ் இங்கிலிஷ் (17 பந்துகளில் 29 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். பொதுவாக பஞ்சாப் அணியின் மட்டையாளர்கள் புவனேஷ் குமார், க்ருணால் பாண்ட்யா, சுயேஷ் ஷர்மா ஆகியோரின் பந்துவீச்சில் ரன் அடிக்க முடியாமல் தடுமாறினர்.

நெஹல் வதேரா (5 ரன்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (1 ரன்) விரைவில் ஆட்டமிழந்தனர். ஷஷாங்க் சிங் (33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ரன், 1 ஃபோர்), மார்கோ ஜேன்சன் (20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 25 ரன்) இறுதியில் வேகமாக ரன் சேர்க்க முயன்றனர். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கட் இழப்பிற்கு 157 ரன் எடுத்தது.

          157 ரன் என்ற எளிய வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் (1 ரன்) முதல் ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரரான விராட் கோலி (54 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 73 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் தேவதத் படிக்கல் (35 பந்துகளில் 61 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பாக ஆடினர்.

படிக்கல் இன்று அதிரடியாக ஆடினார்; கோலி அவருக்குப் பக்கபலமாக நின்றார். படிக்கல் ஆட்டமிழந்த பின்னர் ரஜத் படிதர் (12 ரன்), அவருக்குப் பின்னர் ஜிதேஷ் ஷர்மா (ஆட்டமிழக்காமல் 11 ரன்) இருவரும் கோலியுடன் இணைந்து வீளையாடி, அணியை 18.5 ஓவர்களில் மூன்று விக்கட் இழப்பிற்கு 159 ரன் எடுக்க வைத்து வெற்றியைத் தேடித்தந்தனர்.

          ஆட்டநாயகனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டார். 

சென்னை vs மும்பை

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (176/5, ரவீந்தர் ஜதேஜா 53, ஷிவம் துபே 50, ஆயுஷ் மஹத்ரே 32, ஷேக் ரஷீத் 19, பும்ரா 2/25, தீபக் சாஹார், அஷ்வினி குமார், சாண்ட்னர் தலா ஒரு விக்கட்) மும்பை இந்தியன்ஸ் அணி (15.4 ஓவர்களில் 177/1, ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 76, சூர்யகுமார் யாதவ் 68, ரியன் ரிக்கிள்டன் 24, ரவீந்தர் ஜதேஜா 1/28) 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாடக் களமிறங்கிய சென்னை அணியில் இன்று முதல் முறையாகக் களமிறங்கிய ஆயுஷ் மஹத்ரே (15 பந்துகளில் 32 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ஷிவம் துபே (32 பந்துகளில் 50 ரன், 2 ஃபோர், 4 சிக்சர்) தவிர பிற மட்டையாளர்கள் எவராலும் மும்பை அணியின் பந்துவீச்சில் அதிரடியாக ஆடமுடியவில்லை.

அதிக ரன் குவித்த ரவீந்தர் ஜதேஜா (35 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 53 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) வேகமாக ரன் குவிக்க முடியவில்லை. தொடக்க வீரர்கள் ஷேக் ரஷீத் (20 பந்துகளில் 19 ரன்), ரச்சின் ரவீந்த்ரா (9 பந்துகளில் 5 ரன்) மற்றும் பிற வீரர்களான எம்.எஸ். தோனி (6 பந்துகளில் 4 ரன்), ஓவர்டன் (3 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 4 ரன்) ஆகியோர் மும்பை பந்துவீச்சாளர்களை அதிரடியாக அடித்து ஆட்டமுடியவில்லை. இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 176 ரன் எடுத்தது.

          177 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த மும்பை அணியில் ரோஹித் ஷர்மா (45 பந்துகளில் 76 ரன், 4 ஃபோர், 6 சிக்சர்) இம்பாக்ட் பிளேயராக, தொடக்கவீரராகக் களமிறங்கினார்.

அவர் முதலில் ரியன் ரிக்கிள்டன் (19 பந்துகளில் 24 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) உடனும் பின்னர் சூர்யகுமார் யாதவ் (30 பந்துகளில் 68 ரன், 6 ஃபோர், 5 சிக்சர்) உடனும் இணைந்து ஆடி 15.4 ஓவர்களில் அணிக்கு ஒரு விக்கட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்து, வெற்றியைத் தேடித்தந்தார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி பிளேஆஃப் சுற்றுக்குச் செல்வதற்கான வாய்ப்பைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. சென்னை அணி இனி பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லவியலாது.

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

image 1 - 2026

20.04.2025 இரவு வரை நடந்த ஆட்டங்களுக்குப்பின்னர் புள்ளிகள் பட்டியல்

அணிமேட்ச்வெற்றிதோல்விபுள்ளிநெட் ரன் ரேட்
குஜராத்752100.984
டெல்லி752100.589
பெங்களூரு853100.177
பஞ்சாப்853100.065
லக்னோ853100.088
மும்பை84480.483
கொல்கொத்தா73460.547
ராஜஸ்தான்8264-0.633
ஹைதராபாத்7254-1.217
சென்னை8264-1.392

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

amitsha in chennai with nda leaders - 2026

அதிமுக-பாஜக கூட்டணி
2026 வரை நிலைக்குமா?
பாஜக அவசரப்பட்டு விட்டதா?

— ஆர். வி. ஆர்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, போன வாரம் சென்னை வந்து அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார். முடிவில், 2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக அதிமுக-பாஜக கட்சிகளிடையே கூட்டணி அமைந்தது என்று அறிவித்தார். அப்போது பழனிசாமியும் அருகில் அமர்ந்திருந்தார்.

பழனிசாமியின் ஒரு சமீபத்திய பேச்சால் அதிமுக-பாஜக கூட்டணியில், குறிப்பாக பாஜக பக்கம், அதிர்வலைகள் தென்படுகின்றன. இப்போது பல பாஜக ஆதரவாளர்கள் மனதில் எழக்கூடிய கேள்விகள் இவை. 2026 தேர்தல் வரை இந்தக் கூட்டணி நிலைக்குமா? அதிமுக-வை நம்பி பாஜக கூட்டணி அமைத்தது சரிதானா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

இதற்கான விடைகளை நாம் பல கோணங்களில் தேட வேண்டும்.

அதிமுக-வோ பாஜக-வோ 2026 தேர்தலில் திமுக கூட்டணியை வெல்ல முயற்சிக்க, அவைகளுக்கு ஒரு வலுவான கூட்டணி அவசியம். ஆகையால் அவை திமுக-வை எதிர்க்கப் போகும் ஒரு கூட்டணியைத் தங்களுக்குள் அமைத்திருக்கின்றன. இந்தக் கூட்டணியில் இன்னும் சில கட்சிகளைச் சேர்க்க வேண்டும்.

பழனிசாமியின் தற்போதைய அறிவிப்பு, செய்தியாளர்களிடையே அவர் பேசியபோது வெளிவந்தது. அவர் சொன்னது: ‘அதிமுக-பாஜக கட்சிகள் 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் கூட்டணியாக வெற்றி பெற்றால், புதிய மாநில அரசில் பாஜக பங்கு பெறாது, அதிமுக மட்டும் தனித்து ஆட்சி அமைக்கும்’. அமித் ஷாவும் அப்படிப் புரிந்து கூட்டணியை அறிவித்தார் என்றும் பேசியிருக்கிறார் பழனிசாமி. ஆனால் பத்திரிகைச் செய்திகள் அந்த ரீதியில் இல்லை.

பழனிசாமியின் அறிவிப்பை பாஜக ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருக்க முடியாது. இது பற்றிய கேள்விக்குப் பதில் சொன்ன பாஜக-வின் புதிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “மாநில ஆட்சியில் அதிமுக-வோடு பாஜக-வும் பங்கு கொள்வது பற்றி அமித் ஷாவும் அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் உரிய நேரத்தில் கலந்து பேசி முடிவெடுப்பார்கள்” என்று பழனிசாமியின் கருத்தை ஏற்காமலும் மறுக்காமலும் நாசூக்காகப் பேசினார்.

அதிமுக தலைவர் பழனிசாமி, அவரது கட்சியினரால் போற்றப் படுபவரல்ல. தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு உடையவர் அல்ல. தலைமைப் பண்புகள் கொண்டவரும் அல்ல. அதிமுக-வுக்காக எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பிரபலப் படுத்திய இரட்டை இலை சின்னத்தைக் கொண்ட அந்தக் கட்சிக்கு, சந்தர்ப்ப வசத்தால் தலைவராகி இருப்பவர்.

பாஜக என்ற கட்சியோ, அதன் தமிழகப் பிரிவோ, அதிமுக மாதிரியான கட்சி அல்ல. தமிழக பாஜக-வின் தலைவர்கள், பாட்டன் சொத்தில் சுகிக்கும் வம்சா வழிகள் அல்ல. அவர்கள் அனைவரும் தேசாபிமானத்துடன் துடிப்பாகச் செயல்பட்டுத் தமிழகத்தில் நேர்மையான ஆட்சியும் திறமையான நிர்வாகமும் நிலவவேண்டும் என்று விரும்புகிறவர்கள்.

இத்தகைய தமிழக பாஜக, அதிமுக-வோடு கூட்டணி அமைத்து என்ன செய்யவேண்டும் என்று பழனிசாமி நினைக்கிறார்? அதிமுக-வை ஆட்சியில் அமர்த்திப் பழனிசாமி முதலமைச்சராகத் தேவையான சில எம்.எல்.ஏ-க்களைக் கூட்டணிக்கு நிரந்தரக் காணிக்கையாக்கி பாஜக ஓரமாக அமர்ந்திருக்க வேண்டுமா?

அண்ணாமலை பாஜக-வின் மாநிலத் தலைவராகத் தொடராமல் இருப்பதற்கு பழனிசாமியின் விருப்பமும் ஒரு காரணமாக இருக்கும் என்ற சந்தேகம் பாஜக அதரவாளர்களிடையே உண்டு – அமித் ஷா இதை லாவகமாகக் கையாளக்கிறார் என்பது வேறு விஷயம். இதுபோக, அதிமுக-பாஜக கூட்டணி 2026 சட்டசபைத் தேர்தலில் வென்றாலும், மாநில ஆட்சியில் பாஜக பங்கு கொள்ளாமல் வைக்கப் படும் என்றால், அது அண்ணாமலை அபிமானிகளுக்கு இரட்டை இடியாக வரும், அதை பாஜக ஏற்பதும் எளிதல்ல. இதைப் பழனிசாமி உணரவில்லையா?

அதிமுக மட்டும் தனியாக மாநில ஆட்சியில் அமர்ந்து, யாரும் பார்க்காமல் என்ன செய்ய விரும்புகிறது? புரிகிறது, புரியாமலும் இருக்கிறது.

இன்னொன்று. 2026 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும் அதிமுக-வுக்குத் தனி மெஜாரிட்டி இல்லை, பாஜக எம்.எல்.ஏ-க்களும் ஆதரவு கொடுத்தால் தான் ஆட்சிக்கு மெஜாரிட்டி உண்டு என்றானால், அப்போதும் பாஜக-வை ஆட்சியில் சேர்க்க விரும்பாதா அதிமுக? இல்லை, பாஜக-வுக்கு அந்த அளவு எம்.எல்.ஏ-க்கள் எப்படியும் கிடைக்க முடியாத படி அந்தக் கட்சிக்கு மிகக் குறைந்த தொகுதிகளை ஒதுக்க அதிமுக எண்ணுகிறதா? பழனிசாமியின் அறிவிப்புக்குப் பின்னால் தெளிவான முதிர்ச்சியான சிந்தனை இல்லை.

இதுதான் இப்போதைய நிலை. ஆனால் என்ன இருந்தாலும், பாஜக ஆதரவாளர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தங்களுக்குள் அவர்கள் அதிமுக-வைப் பற்றியும், அதன் பேராசைகள் மற்றும் தந்திரங்கள் பற்றியும் வெளிப்படையாகப் பேசலாம். அவை அனைத்தும் பாஜக தலைவர்கள் நொடியில் அறிந்தது தான். ஆனால் மோடி, அமித் ஷா போன்ற தலைவர்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசக் கூடாது, பேசவும் மாட்டார்கள்.

மோடியும் அமித் ஷாவும் தாங்கள் கொண்ட உயர்ந்த இலக்கு, ஆகவேண்டிய காரியம், அதில் தான் குறியாக இருப்பார்கள். அவர்கள் வெளியில் பேசுவது தேவையான அளவு மட்டும்தான் இருக்கும். ஆகையால் பாஜக ஆதரவாளர்கள் அவர்களின் மதியூகத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

எப்படியான மனிதர்களை சமாளித்தவர்கள், வென்றவர்கள், மோடியும் அமித் ஷாவும்? காங்கிரஸ் கட்சியின் சோனியா குடும்பம், ஷரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி, நிதிஷ் குமார், பரூக் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி, சந்திரபாபு நாயுடு மற்றும் கேஜ்ரிவால். மோடிக்கும் அமித் ஷாவுக்கும் பழனிசாமியை அரசியல் ரீதியாக எங்கு விட்டு எங்கு பிடிக்கவேண்டும் என்று பல கணக்குகள் இருக்கும்.

திமுக-வை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும் என்பது பாஜக-வின் பிரதான இலக்கு. இதற்காக, முதலில் அதிமுக-வுடன் கூட்டணியைப் பேசி முடித்துவிட்டு பாஜக காத்திருக்கும். பின்னர் நாள் ஆக ஆகப் பழனிசாமி கூட்டணிக்கு ஒவ்வாத பேச்சுக்களைப் பேசி முரண்டு பிடித்தால் – யார் கண்டது, நடிகர் விஜய்யிடமிருந்து பழனிசாமிக்கு எப்போது என்ன ஒப்புதல் வருகிறதோ! – அதிமுக கூட்டணியிலிருந்து வேறு வழி இல்லாமல் பாஜக அப்போது விலகலாம். ஆனால் பாஜக இப்போது அதிமுக-விடமிருந்து விலகி நின்று, தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதிமுக-வுடன் கூட்டணி பற்றிப் பேச ஆரம்பிக்க முடியாது. ஆகையால் அதிமுக-வுடன் முதலில் கூட்டணியை அமைத்து வைப்பது பாஜக-வுக்கு அவசியம் – நன்றாகப் போனால் அதைத் தொடரலாம்.

இது போக, தேர்தலுக்கு முன்போ பின்போ அதிமுக-வில் அதிருப்தி கொண்ட அக் அக்கட்சியின் தலைவர்கள் அதிமுக-வைப் பிளக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரம் பழனிசாமியும் பாஜக-விடம் முரண்டு பிடித்து முறைத்துக் கொண்டிருந்தால், அதிமுக-வில் ஏற்படும் பிளவும் பாஜக-விற்கு அனுகூலம் என்றால், அப்போது பாஜக அந்தத் திசையிலும் பார்க்கலாம். இது போன்ற மாற்று வாய்ப்புகள் பாஜக பக்கத்திலிருந்து அதிமுக-வுக்குக் கிடைக்காது.

அதிமுக-வுடனான தேர்தல் கூட்டணியைப் பாஜக தொடர்ந்து நிர்வகிப்பது ஒரு செஸ் ஆட்டம் மாதிரி. நாம் வியக்கும் பாஜக செஸ் வீரர் அந்த விளையாட்டில் கில்லி என்றால், அவர் மீது நம்பிக்கை வைத்து நாம் அவரது ஆட்டத்தைக் கடைசி வரை அமைதியாகப் பார்க்க வேண்டும்.

நாம் போற்றும் செஸ் வீரர் இந்த ஆட்டத்தின் முடிவில் பெரிய வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, அவரிடம் சாம்பியனுக்கான ஆட்டத் திறமையும் துடிப்பும் யுக்தியும் இருக்கிறது. இன்றோ நாளையோ, ஒருநாள் அவர் எப்படியும் அபாரமாக வென்று வருவார். அவருக்குக் கை தட்டுவோம்!

Author: R. Veera Raghavan, Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 –இரண்டு ஆட்டங்கள்- 19.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

டெல்லி கேபிடல்ஸ் அணியை (203/8, அக்சர் படேல் 39, அஷுதோஷ் ஷர்மா 37, கருண் நாயர் 31, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 31, அபிஷேக் போரல் 18, பிரசித் கிருஷ்ணா 4/41, முகம்மது சிராஜ், அர்ஷத் கான், இஷாந்த் ஷர்மா, சாய் கிஷோர் தலா ஒரு விக்கட்) குஜராத் டைடன்ஸ் அணி (19.2 ஓவர்களில் 204/3, ஜாஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 97, ரூதர்ஃபோர்டு 43, சாய் சுதர்ஷன் 36, ராகுல் திவாத்தியா ஆட்டமிழக்காமல் 11, முகேஷ் குமார், குல்தீப் ஷர்மா தலா ஒரு விக்கட்) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாட வந்த டெல்லி அணியின் தொடக்க வீரர் அபிஷேக் போரல் (9 பந்துகளில் 18 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தபோதும் அதிரடியாக விளையாடினார்.

மற்றொரு தொடக்க வீரர் கருண் நாயர் (18 பந்துகளில் 31 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) கே.எல். ராகுல் (14 பந்துகளில் 28 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) உடன் இணைந்து விளையாடி ஐந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வந்த அக்சர் படேல் (32 பந்துகளில் 39 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (21 பந்துகளில் 31 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), அஷுதோஷ் ஷர்மா (19 பந்துகளில் 37 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இதனால் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி எட்டு விக்கட் இழப்பிற்கு 203 ரன் எடுத்தது.

          20 ஓவர்களில் 204 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக விளையாட வந்த குஜராத் அணியின் தொடக்க வீரரும் அணியின் அணித்தலைவருமான ஷுப்மன் கில் (7 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரர், தமிழக வீரர் சாய் சுதர்ஷன் (21 பந்துகளில் 36 ரன்) எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மூன்றாவதாகக் களமிறங்கிய ஜாஸ் பட்லர் (54 பந்துகளில் 97 ரன், 11 ஃபோர், 4 சிக்சர்) இன்று அற்புதமாக ஆடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவரோடு இணைந்து ஆடிய ரூதர்ஃபோர்டு (34 பந்துகளில் 43 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ராகுல் திவாத்தியா (3 பந்துகளில் 11 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் குஜராத் அணிக்கு 19.2 ஓவர்களில் வெற்றியைத் தேடிதந்தனர்.

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

லக்னோ vs ராஜஸ்தான்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி (180/5, எய்டன் மர்கரம் 66, ஆயுஷ் பதோனி 50, அப்துல் சமத் 30, ஹசரங்கா 2/31, ஆர்ச்சர், சந்தீப் ஷர்மா, துஷார் தேஷ்பாண்டே தலா ஒரு விக்கட்) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (178/5, யசஷ்வீ ஜெய்ஸ்வால் 74, ரியன் பராக் 39, வைபவ் சூர்யவன்ஷி 34, ஆவேஷ் கான் 3/37, ஷர்துல் தாகூர் 1/34, எய்டன் மர்கரம் 1/18) 2 ரன் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. ஆனால் அந்த அணியின் தொடக்க வீரர் மிட்சல் மார்ஷ் (4 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான எய்டன் மர்க்ரம் (45 பந்துகளில் 66 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) நிக்கோலஸ் பூரன் (11 ரன்), ரிஷப் பந்த் (3 ரன்) மற்றும் ஆயுஷ் பதோனி (34 பந்துகளில் 50 ரன், 5 ஃபோர் 1 சிக்சர்) நன்றாக ஆடினார். கடைசி ஓவரில் நாலு சிக்சர் அடித்து, அப்துல் சமத் (10 பந்துகளில் 30 ரன்) அணியின் ஸ்கோரை, 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 180 ரன் என உயர்த்தினார்.

          181 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் இன்று சஞ்சு சாம்சன் ஆடவில்லை. தொடக்க வீரர்கள் யசஸ்வீ ஜெய்ஸ்வால் (52 பந்துகளில் 74 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்), இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (20 பந்துகளில் 34 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) ராஜஸ்தான் அணிக்கு நல்ல தொடக்கம் தந்தனர்.

நிதீஷ் ராணா (8 ரன்) இன்று சரியாக ஆடவில்லை. ரியான் பராக் (26 பந்துகளில் 39 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), துருவ் ஜுரல் (ஆட்டமிழக்காமல் 6 ரன்), ஷிம்ரோன் ஹெட்மயர் (12 ரன்), ஷுபம் துபே (ஆட்டமிழக்காமல் 3 ரன்) ஆகியோர் வெற்றி இலக்கை எட்ட முயற்சி செய்தும் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணியால் 178 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

          14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி இன்று ராஜஸ்தான் அணிக்காக முதன் முறையாக ஆடி 34 ரன் எடுத்தது சிறப்பானது. லக்னோ அணியின் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.