ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!
மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!
மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியை முடித்து மதுரை வந்து தில்லி செல்லும் நிலையில், மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஐந்து அடுக்கு பாதுகாப்பு, ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
மதுரை மாரகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில், விமான நிலைய வெளி வளாகம், சோதனை சாவடி, மண்டேலா நகர், பெருங்குடி வலையன்குளம், மற்றும் சுற்றுச்சாலை சுற்றுப்பகுதிகளில் 2000 போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் மூன்று அடுக்குகளாக ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை விமான நிலையத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் போலீசார் எட்டடுக்கு துகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி வருகை ஒட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக டிரோன்கள் பறக்க மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் தடை விதிக்கப் பட்டுள்ளது. பிரதமர் மோடி மதுரை வருகை ஒட்டி மதுரை மாநகர் பகுதிகளில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாள் நிகழ்ச்சியாக பிரதமர் மோடி தாய்லாந்து இந்தோனேசியா இலங்கை பயணங்களை முடித்து நாளை மறுநாள் ராமேஸ்வரம் வந்து பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார். அதனை முன்னிட்டு, தமிழக முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை நண்பகல் 3.40 மணிக்கு மதுரைக்கு ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி விமானப்படை விமான தளத்தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையும் வருகிறார். மதுரை விமான நிலையத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் சந்திக்கின்றனர் இதற்காக 15 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் மதுரை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய ஓடுதளம் விமான நிலைய உள் வளாகம் மற்றும் வெளி வளாகம் இடங்களில் ஐந்து எழுத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் நான்கு துணை ஆணையர்கள் 10 உதவி ஆணையர்கள் 60 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமான நிலைய வளாகம் மற்றும் சோதனை சாவடி விமான நிலைய நுழைவாயில் ரிங் ரோடு பெருங்குடி வளையங்குளம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமரின் பாதுகாப்பு பணிக்காக நெல்லை கன்னியாகுமரி தென்காசி தேனி விருதுநகர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் இரவு நேர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
விமான நிலைய நுழைவாயில் இருந்து உள்வளாகம் செல்லும் பயணிகள் வாகனம் மற்றும் இதர வாகனங்கள் போலீஸ்காரின் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது ஓப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் விமான நிலைய உள் வளாகத்திற்குள் செல்ல தடைபாதுகாப்பு காரணங்களுக்காக செய்யப்பட்டுள்ளது.
மதுரை வரும் பிரதமரை வரவேற்க தமிழக அமைச்சர்கள் மற்றும் பாஜக பிரமுகர்கள் அதிமுகவின் முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுடன் சந்திக்க 15 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து விமானப்படை சிறப்பு விமானம் மூலம் மாலை 4:00 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
கருணாநிதியால் திமுக-விலிருந்து வெளியேற்றப் பட்ட எம். ஜி. ஆர், திமுக-வுக்குப் போட்டியாக ஆரம்பித்த கட்சி, அதிமுக. அந்த இரு தலைவர்களும் இன்று இல்லை. ஆனால் அந்த இரண்டு கட்சிகளும் ஒரே இயல்பு கொண்டவை. ஒரு கட்சியில் ஹிந்து விரோதப் பேச்சு இருக்கும், அராஜகப் போக்கும் காணப்படும். இன்னொரு கட்சியில் அவை இருக்காது. மற்றபடி, தங்கள் நலன்களை நன்றாகக் கவனித்துக் கொண்டு மக்கள் நலனுக்கு எதிராக ஆட்சி செய்யும் தலைவர்கள்தான் இரண்டு கட்சிகளிலும் இருக்கிறார்கள்.
1967 தேர்தலில் திமுக-வால் மாநிலத்தில் வீழ்த்தப்பட்ட காங்கிரஸ் சென்ற பல வருடங்களாகத் திமுக-வின் காலடியில் கிடக்கிறது, திமுக-வை எதிர்த்து மறுபடியும் ஆட்சியில் அமரக் காங்கிரஸ் முனையவில்லை. திமுக, அதிமுக இரண்டு கட்சிகள் மட்டும் மாறி மாறித் தமிழகத்தில் 1967-லிருந்து ஆட்சி செய்கின்றன.
தமிழகத்திற்கு நல்லாட்சி கிடைக்க, இப்போது நடக்கவேண்டிய முதல் காரியம் இது. அதாவது, ஆட்சியில் இருக்கும் திமுக கூட்டணியை 2026 சட்டசபைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். அது முடியாவிட்டால், அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மிகக் குறைந்த உறுப்பினர் எண்ணிக்கையில் மட்டும் ஜெயிக்கும் வகையில் எதிரணியின் உறுப்பினர் எண்ணிக்கை உயரவேண்டும். அதன் மூலம், திமுக-வுக்கு எதிரான மக்கள் சக்தி திரண்டு வருகிறது என்கிற செய்தியை திமுக-வுக்கு உரத்துச் சொல்லி, 2031 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி தோற்கடிக்கப் பட்டு, பாஜக முக்கிய அங்கம் வகிக்கும் ஒரு கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும்.
வருகின்ற 2026 சட்டசபைத் தேர்தலில், திமுக-வுக்கு வலுவான எதிர்ப்பை எந்தக் கட்சியின் தலைவர் மக்களிடையே காண்பிக்க முடியும்? சீமான் அவர் பாணியில் திமுக-வை எதிர்க்கிறார், விஜய்யும் அவர் பாணியில் எதிர்க்கிறார். ஆனால் இந்த இருவரும் தமிழகத்தில் நல்லாட்சி தருவதற்கான போக்கும் தகுதியும் கொண்டவர்கள் அல்ல. இந்த இரு தலைவர்களும் பாஜக-வின் தேசிய சிந்தனை துளியும் இல்லாதவர்கள். இந்த இருவரும் பாஜக-வுடன் ஒரு கூட்டணியில் இணைந்து திமுக-வை எதிர்க்க முன் வருவது சந்தேகம்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, திமுக-வை எதிர்க்கும் முக்கியக் கட்சியாக இருக்கிறது. ஆனால், சீமானுக்கோ விஜய்க்கோ உள்ள தனிப்பட்ட வாக்காளர் பின்புலம் பழனிசாமிக்கு இல்லை, அவர் கட்சியில் மற்ற தலைவர்களுக்கும் கிடையாது. இருந்தாலும் எம்.ஜி.ஆர் பிரபலப் படுத்திய இரட்டை இலை சின்னம் இன்றும் அதிமுக-வின் கணிசமான வாக்கு வங்கிக்குக் காரணமாக இருக்கிறது – அது குறைந்து வந்தாலும்.
இந்தச் சூழ்நிலையில், பாஜக-வின் திமுக எதிர்ப்புக்கும் மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. அதற்குக் காரணம் பாஜக என்ற கட்சி ஸ்தாபனம் அல்ல. மோடி, அமித் ஷா போன்ற கட்சியின் தேசியத் தலைவர்களும் காரணம் அல்ல. அண்ணாமலை தமிழக பாஜக-வின் மாநிலத் தலைவர் ஆவதற்கு முன்பிருந்த மாநிலத் தலைவர்களோ, அல்லது கட்சியின் பிற மூத்த தலைவர்களோ காரணம் அல்ல.
யார் மீதும் குறை சொல்லாமல் ஒரு உண்மையை நாம் அறியலாம். அதாவது, அண்ணாமலை கட்சியின் மாநிலத் தலைவர் ஆன பின்பு அவருடைய பேச்சினால், செயலினால், துணிவினால், மன உறுதியினால், அர்ப்பணிப்பால், தலைமைப் பண்பினால், வார்த்தைகளால் எளிதில் விளக்க முடியாத அவரது அம்சத்தால், அவர் இன்று தமிழகத்தில் திமுக-வின் முக்கிய எதிர்ப்பு முகமாக – அதாவது, பிரதானமாகத் திமுக-வை எதிர்க்கும் ஒரு குரலாக – பார்க்கப் படுகிறார். திமுக-வே அப்படி நினைக்கும். அதை வைத்து பாஜக தமிழகத்தில் ஒரு சக்தி மிக்க தேர்தல் கூட்டணியை உருவாக்க வேண்டும். அதை பாஜக முனைகிறது.
இப்படி இருக்கையில், 2026 தேர்தல் சமயத்தில் அண்ணாமலை பாஜக-வின் மாநிலத் தலைவராக இல்லாமல் போகலாம், ஒரு கட்சிக் கோட்பாட்டினால் – அல்லது ஒரு அரசியல் யுக்தியாக – அவர் இப்போது மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப் படலாம் என்ற பேச்சு பரவலாக எழுகிறது. அது நடந்தால் என்ன ஆகும்? பாஜக-வின் திமுக எதிர்ப்பானது முனை மழுங்கும்.
திமுக, மிக ஆக்ரோஷமாகப் பந்து வீசும் கிரிக்கெட் பவுலர்கள் மாதிரி. அவர்களைத் திறமையாக எதிர் கொண்டு, வரும் பந்துகளை ஃபோர், சிக்சர் என்று திறமையாக அடித்து விளையாடி பவுலர்களைச் சோர்வடையச் செய்யும் ஒரு பேட்ஸ்மேன் எதிரிலுள்ள பாஜக அணிக்குத் தேவை. அதை அண்ணாமலை செய்ய முடியும் என்றால் அவரை ஆடுகளத்தில் இருக்கச் செய்வது நல்லது. நமது அணியில் மற்றவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக, அல்லது வேறு காரணத்திற்காக, அண்ணாமலையை இந்த மேட்சில் ஆடுகளத்துக்கு அனுப்பாமல் இருப்பது நமக்கு வெற்றி தருமா?
மற்ற பேட்ஸ்மேன்களால் மூர்க்கமான பவுலர்கள் வீசும் பந்துகளை ஆட்டமிழக்காமல் அடித்து ஆட முடியாது, அவ்வப்போது ஒன்று, இரண்டு ரன்கள் மட்டும் எடுக்க முடியும், மற்ற எல்லாப் பந்துகளையும் டொக்கு டொக்கு என்று ஆடுவார்கள் என்றால் அவர்களால் பெரிய பயன் உண்டா?
தமிழகத்தில் பாஜக-வின் மூத்த தலைவர்கள் பலரையும் தாண்டி, கட்சிக்கே புதியவரான அண்ணாமலையை எதற்காகக் கட்சியின் தேசியத் தலைமை 2021-ம் ஆண்டு தமிழகத்தின் மாநிலத் தலைவர் ஆக்கியது? ஏனென்றால், தமிழகத்தின் திராவிட அரசியல் களம் வினோதமானது, கொடுமையானது. மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக-வை அண்ணாமலையால் மற்ற பாஜக தலைவர்களை விடப் பலமாக எதிர்க்க முடியும், அதற்கான குணாதிசயங்கள் அவரிடம் தெரிகின்றன, என்ற கணிப்பில், எதிர்பார்ப்பில். அந்தக் கணிப்பை, அந்த எதிர்பார்ப்பை, அவர் 2021 ஜூலை மாதத்திலிருந்து நிரூபித்து வருகிறார். அப்படியானால் 2026 சட்டசபைத் தேர்தல் வருவதற்கு முன் அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப் பட்டால், அது கட்சிக்கு நன்மை செய்யுமா?
பாஜக என்ற அதிசயக் கட்சியும், மோடி என்ற அற்புதத் தலைவரும், தமிழகத்தில் திமுக-வுக்கு எதிராக மக்களைத் திருப்ப முடியவில்லை. அண்ணாமலையால் அது சிறிதளவாவது முடிந்திருக்கிறது. இப்போது அவரை மாநிலத் தலைவர் பதவியலிருந்து நீக்கினால், கட்சியின் மகிமையும் மோடியின் நற்பெயரும் தமிழக பாஜக-வைத் தூக்கி நிறுத்தாதே? அவர் மாநிலத் தலைவராக இல்லாவிட்டால், அவரால் பாஜக-வுக்கு ஈர்க்கப்பட்ட வாக்காளர்கள் 2026-ல் பாஜக-வுக்கு வாக்களிப்பார்களா என்பதும் ஒரு கேள்வி.
‘அண்ணாமலை மாநிலத் தலைவராக இல்லாவிட்டாலும் அவர் தனது மாநிலப் பணிகளைத் தொடர்ந்து செய்வார், அதில் பாதகம் ஏற்படாது’ என்று எண்ணினால் அதில் சாரமில்லை.
அண்ணாமலை மாநிலத் தலைவராகத் தொடராவிட்டால், முன் போல் அவரால் பத்திரிகையாளர் சந்திப்புகளை அடிக்கடி நடத்த முடியுமா? புதிய தலைவரைத் தவிர்த்து அவரே திமுக-வுக்குப் பதிலடிகள் கொடுத்துக் கொண்டே இருக்க முடியுமா? அண்ணாமலை மாநிலத் தலைவராக இல்லாவிட்டாலும் அது முடியும், முன் போல் அவர் அதே வெளிச்சத்தில் இருப்பார் என்றால், புதிய மாநிலத் தலைவர் எதற்கு?
இன்னொன்று. ‘2026 சட்டசபைத் தேர்தலின் போது அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்து அந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி தோற்றால், அது அண்ணாமலைக்குப் பின்னடைவாகும். அதனால் இப்போது அண்ணாமலையை வேறு கட்சிப் பணியில் அல்லது மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு, 2031 தமிழக சட்டசபைத் தேர்தல் நேரத்தில் அவரை மீண்டும் தமிழக மாநிலத் தலைவர் ஆக்கலாம்’ என்ற ஒரு யோசனையும் காற்றில் வருகிறது.
அண்ணாமலை நல்ல பேட்ஸ்மேன் என்று தெரிந்தும், மூர்க்கமாகப் பந்து வீசும் எதிர் அணி விளையாடும் இந்த மேட்சில் அவரை இறக்காமல், அடுத்த மேட்சுக்கு அவர் வரட்டும் என்பது ஒரு யுக்தியாகுமா?
நமக்குத் தெரிந்தது இது. கிரிக்கெட்டில் ஏதாவது திருப்பம் வருமா, அல்லது ஒன்றும் வராதா, என்று தெரியாது. நாம் என்ன செய்யலாம்? மேட்ச் பார்க்கலாம். செய்வோம்.
Author: R. Veera Raghavan -Advocate, Chennai veera.rvr@gmail.com https://rvr-india.blogspot.com
அரசின் பெருமைக்காக கோவில் கும்பாபிஷேகத்தை அரைகுறையாக செய்வதை இந்து முன்னணி கண்டிக்கிறது… என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை:
தென்காசி, காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோவில் திருப்பணிகள் முழுவதுமாக முடியாத நிலையில் அவசரகதியில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டதற்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல கோவில்களில் திருப்பணிகள் முறையாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அரைகுறையாக பணிகள் செய்ததால் கும்பாபிஷேகத்திற்குப் பிறகு பல கோவில்கள் பழுதடைந்ததைப் பார்க்கிறோம்.
குறிப்பாக உலகப் புகழ் பெற்ற பழனி முருகன் கோவிலில் இதே போன்ற பிரச்சினை ஏற்பட்டது. இந்து முன்னணி அதனைக் கண்டித்தது. சமீபத்தில் நடைபெற்ற பல கோவில் கும்பாபிஷேகங்களில் இதே பிரச்சினை தலை தூக்கியது.
சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திலும் பிரச்சினை தலைதூக்கியது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். கோவில் திருப்பணி என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்வது ஆகும். எனவே பழம்பெரும் கோவில்களில் அதற்கு ஏற்ப திருப்பணிகள் செவ்வனே செய்யப்பட வேண்டும்.
பக்தர்கள் காணிக்கையை அள்ளித் தருகிறார்கள். அப்படி இருந்தும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர், அரசியல்வாதிகள் அதனை சுருட்டி ஊழல் செய்வதில் தங்களது திறமையைக் காட்டுகிறார்கள்.
தென்காசி விஸ்வநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக செலவுத்திட்டமாக ஒரு கோடியே 67 லட்சத்து ஐம்பதாயிரம் (1,67,50,000) ரூபாய் என அறிவித்திருக்கிறார்கள். இதில் பூமாலை ரூ15 லட்சம், குப்பை அள்ள சம்பளம் 2.5 லட்சம், சிவாச்சியார், உபயதாரர் சாப்பாடு 3 லட்சம் (அன்னதானம் தனி) என இஷ்டத்திற்கு கணக்கு காட்டுகிறார்கள்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் பணியில் அலட்சியத்தை சுட்டிக் காட்டிய நபரை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. அங்கு 300 கோடியில் கட்டப்பட்டு வரும் மண்டபம் அதன் தடுப்புச்சாரத்தை நீக்கியவுடன் விழுந்து விட்டது.
இத்தகைய செயல்பாடுகள் வெளிப்பட்ட போதும் அரசோ, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவோ, அதிகாரிகளோ சிறிதும் வெட்கமின்றி அமைதி காக்கின்றனர். கும்பாபிஷேகம் தடை படுவது வேதனையானது. ஆனால் முறையான திருப்பணி முடிக்காமல் கும்பாபிஷேகம் செய்வது அநியாயமாகும்.
எனவே தமிழக முதல்வர் இத்தனை ஆயிரம் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது என்று தற்பெருமை பேசுவதை விடுத்து, கோவில்களில் உரிய காலத்தில் முறையான திருப்பணிகள் நடைபெறுவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் திட்டமிட்ட படி ஏப்.7ம் தேதி திங்கள் அன்று நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகம் நடத்த நேற்று தடை விதித்திருந்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, இன்று மீண்டும் விசாரணை செய்து தடையை நீக்கிக் கொண்டது. இதை அடுத்து கும்பாபிஷேகம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
தென்காசியில் உள்ள புகழ்பெற்ற கோயிலான ஸ்ரீ காசிவிஸ்வநாதர் உலகம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஏப்.7ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் கும்பாபிஷேகப் பணிகளில் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகள் மற்றும் நிறைவுபெறாத மராமத்துப் பணிகள் ஆகியவற்றைக் காரணம் காட்டி, திருப்பணி வேலைகள் நிறைவு பெற்ற பின்னரே கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்று தென்காசி ரயில் நகரைச் சேர்ந்த நம்பிராஜன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது…
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் 14-ம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. இதற்காக புண்ணிய தலமான காசியில் இருந்து புனித நீர் வரவழைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்திய தொல்லியல்துறை மேற்பார்வையில் இந்த கோவில் உள்ளது.
இந்தநிலையில் கோவிலின் செயல் அலுவலரின் வாய்மொழி உத்தரவின் பேரில் கோவில் பகுதியில் இருந்து 100 டிராக்டர்களில் மண் அள்ளப்பட்டது. இதனால் கோவிலின் கட்டிடம் உறுதியிழந்து உள்ளது. காசி விஸ்வநாதர் கோவிலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2023-ம் ஆண்டு ஆலோசனை நடத்தப்பட்டு, கோவிலை மறுசீரமைப்பு செய்வதற்காக அரசு நிதி ஒதுக்கியது. ஆனால் அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை.
குறிப்பாக, கோவிலின் தூண்களை சீரமைக்கவில்லை. ராஜகோபுரத்தில் மழைநீர் கசிவு சரிசெய்யப்படவில்லை. இதனால் பழமையான கோவிலை இழக்கும் நிலையும், பக்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையும் உள்ளது.
கோவிலை புனரமைக்க ஒதுக்கிய நிதி முறைகேடு செய்யப்பட்டது விசாரணையில் உறுதியாகி உள்ளது. இதற்கிடையே வருகிற 7-ந்தேதி அங்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன. புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கும் வரை கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனர் நியமிக்க வேண்டும். அரசு நிதியை மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். – இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நேற்று நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு விசாரணை செய்தது. அப்போது, புனரமைப்புப் பணிகளை ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனர், ஐ.ஐ.டி. குழுவினரை நியமித்தும், அதுவரை கும்பாபிஷேகம் நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜரானார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான டி எஸ் ஆர். வேங்கட ரமணாவும் இந்த வழக்கில் ஆஜரானார்.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு விட்டன. கோவில் புனரமைப்புக்கான நிதி முறையாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. கும்பாபிஷேகத்துக்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளன. எனவே இதில் ஆய்வு செய்ய தேவையில்லை. குடமுழுக்கு முடிந்த பின்னர் ஐ.ஐ.டி. குழுவினரை கொண்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யலாம். கும்பாபிஷேகத்துக்கான கணபதி ஹோமம் முடிந்த பின்னர் குடமுழுக்கை நிறுத்துவது ஏற்கத்தக்கதல்ல. எனவே கும்பாபிஷேகத்துக்கு விதித்த தடையை நீக்க வேண்டும்” என கோரினார்.
இதை அடுத்து, நீதிபதிகள், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டனர். மேலும், ஐஐடி குழு அறிக்கையும் வழக்கறிஞர் குழு அறிக்கையும் சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பித்தனர்.
வக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று மாநிலங்களவையில் நீண்ட விவாதத்திற்கு பின் நிறைவேறியது. மாநிலங்களவையில் நடந்த வாக்கெடுப்பில் 128 உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க, வக்ப் திருத்த மசோதா நிறைவேறியது. இரு அவைகளிலும் நிறைவேறிய நிலையில் மசோதா இறுதி வடிவத்துக்கு குடியரசுத் தலைவரிடம் அனுப்பப்படும்.
முஸ்லிம்களின் சமூக நலத் திட்டங்களுக்காக முஸ்லிம்கள் எழுதி வைக்கும் சொத்துகளை நிர்வகிக்க வக்ப் வாரியம் அமைக்கப்பட்டது. இதற்கென காங்கிரஸ் அரசால் ஏற்படுத்தப்பட்ட வக்ப் வாரிய சட்டத்தில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் சில திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது.
வக்ப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் ஏப்.2 புதன்கிழமை நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் இந்த திருத்த மசோதாவை ஏற்கவில்லை. எனவே மசோதா தாக்கல் ஆனபோது இரு தரப்பு உறுப்பினர்களும் விவாதம் நடத்தினர். விவாதம் நள்ளிரவு வரை நீண்டது. பின்னர் விவாதத்தின் நிறைவில் மசோதா மீதான வாக்கெடுப்பு நடந்ததில், மசோதாவுக்கு ஆதரவாக 288 எம்பி.,க்களும், மசோதாவை எதிர்த்து 232 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதை அடுத்து மசோதா மக்களவையில் நிறைவேறியது.
தொடர்ந்து ஏப்.3 வியாழன் நேற்று மாநிலங்களவையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மாநிலங்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அதன் மீது 13 மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் நடைபெற்று நள்ளிரவு விவாதம் நிறைவடைந்தது. பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 128 உறுப்பினர்களும், எதிராக 88 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதை அடுத்து மசோதா நிறைவேறியது.
மாநிலங்களவையில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 236. பெரும்பான்மைக்கு 119 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. தற்போது ஆளும் பாஜக., கூட்டணிக்கு 125 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இவர்களில் பாஜ., 98; ஜேடியூ 4; அஜித்பவார் – என்சிபி 3; தெலுங்குதேசம் 2 ஆகியோர் அடக்கம். அதுபோல், காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணிக்கு மாநிலங்களவையில் 88 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது.
எனினும், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 128 உறுப்பினர்களும், எதிராக 95 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இண்டி கூட்டணியில் இடம்பெறாத எதிர்க்கட்சிகளான பி.ஆர்.எஸ்., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் வக்ப் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன. எனினும், மாநிலங்களவையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சி உறுப்பினர்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க கட்சித் தலைமையால் அனுமதிக்கப்பட்டனர். எனவே ஆதரவு எதிர்ப்பு வாக்குகள் இருதரப்புக்கும் அதிகரித்தன.
இந்த மசோதா வாக்கெடுப்பில், பாமக., கலந்து கொள்ளாமல் வெளியேறியது. மசோதாவை எதிர்த்து திமுக., அதிமுக., வாக்களித்தன. ஆதரவாக தமிழ் மாநில காங்கிரஸ் வாக்களித்தது.
மக்களின் உரிமையைப் பாதுகாக்கும்!
‘இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்ப் திருத்த சட்ட மசோதா, மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்றும், வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும்’ என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் வக்ப் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப் பட்டிருப்பது வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். நாட்டின் சமூக பொருளாதார நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் வக்பு மசோதா ஒரு திருப்பு முனை. பல தசாப்தங்களாக, வக்ப் அமைப்பு வெளிப்படைத்தன்மையுடன் இல்லாமல் இருந்தது. வக்ப் திருத்த சட்ட மசோதா மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்திற்கும் முன்னுரிமை அளிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதன் மூலம் நாம் இரக்கமுள்ள, வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க முடியும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நன்றி தெரிவித்த திருச்செந்துறை மக்கள்
இதனிடையே, வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியதை தொடர்ந்து திருச்சி மாவட்டம் திருச்செந்துறை மக்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். வக்ப் சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட முழு கிராமமாக திருச்செந்துறை இருந்ததும், 1400 ஆண்டுகள் பழைமையான திருச்செந்துறை கோயில் மற்றும் சுற்றியுள்ள நிலங்களை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடியதும் தேசிய அளவில் எதிரொலித்தது. நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னையும் மசோதா விவாதத்தின் போது மேற்கோளிட்டுக் காட்டப்பட்டது.
கடந்த சில நாட்களாகத் தமிழக பாஜக ஆதரவாளர்களுக்குச் சோர்வு தரும் ஒரு தகவல் ஊடகங்களில், வாட்ஸ் அப்பில், விறுவிறுவென்று உலா வருகிறது, விவாதிக்கப் படுகிறது. அதன் இரண்டு அம்சங்கள் இவை:
1) பாஜக தலைவர் அண்ணாமலை, மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அந்தப் பதவியில் வேறொருவர் நியமிக்கப்பட இருக்கிறார்.
2) வரப்போகும் இந்த மாற்றத்துக்கான காரணம், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி. அதாவது, அண்மையில் பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்தபோது, ‘2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக-வும் பாஜக-வும் கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் அண்ணாமலையை பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அகற்ற வேண்டும், என்னோடு இணக்கம் கொள்ளும் வேறு ஒருவரை அந்த இடத்தில் அமர்த்த வேண்டும்’ என்று கேட்டாராம். அதிமுக-வுடன் கூட்டணி இல்லாமல் திமுக-வைத் தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்று நினைத்த அமித் ஷாவும் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாராம்.
பாஜக-வின் தேசியத் தலைமையிலிருந்து இந்த மாறுதல், அதன் காரண காரியம், பற்றி அதிகாரபூர்வமாக ஒரு செய்தியும் வரவில்லை.
நிதானமாக யோசித்தால் இந்தச் செய்தியை, ஊடகத்தில் இது விரிவாகப் பரவுவதை, நாம் எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?
2024 லோக் சபா தேர்தலுக்காக, பாஜக-வுடன் தேர்தல் கூட்டணி வைக்க அதிமுக-வுக்கு அவசியமில்லை என்று கருதினார் பழனிசாமி. பாஜக-வுடன் முன்பிருந்த கூட்டணி தொடர்ந்தால் சிறுபான்மையினர் ஓட்டுகளை அதிமுக இழக்கும், அந்த இழப்பை பாஜக-வுடனான கூட்டணி ஈடு செய்யாது என்றும் அப்போது அவர் நினைத்தார். அது போக, பாஜக-வுடன் தேர்தல் கூட்டணி தொடர்ந்தால் மக்கள் செல்வாக்கு உயர்ந்து வரும் பாஜக தலைவர் அண்ணாமலையால், அரசியலில் தனக்குள்ள மதிப்பு இன்னும் குறையும், அதிமுக-வுக்குள் தன் செல்வாக்கு குறையும் என்று தனக்காகவும் கவலைப் பட்டார் பழனிசாமி. இதனால் 2024 லோக் சபா தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக-வை விலக்கினார் பழனிசாமி. அதனால் இரண்டு கட்சிகளும் அந்தத் தேர்தலில் இழப்பைச் சந்தித்தன.
இப்போது காட்சி மாறுகிறது. வரப்போகும் 2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக, மீண்டும் பாஜக-அதிமுக கூட்டணி அமைப்பது பற்றிப் பேச பழனிசாமியை எது அமித் ஷாவிடம் கூட்டிச் சென்றது?
கடந்த மூன்றே முக்கால் வருடங்களில் அண்ணாமலை தனது அசாத்தியத் துணிவால், திறமையால், சாதுர்யத்தால், அர்ப்பணிப்பால், தமிழகத்தில் பாஜக வுக்குச் சேர்த்து வைத்திருக்கும் மக்கள் ஆதரவு தான் – அது தொடர்ந்து அதிகரிப்பதுதான் – பழனிசாமியைப் பாஜக பக்கம் இழுக்கிறது.
முன்பு பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிப் போவதற்கு முக்கிய காரணமாக எந்த அண்ணாமலை கருதப்பட்டாரோ, அதே அண்ணாமலையால் தமிழக பாஜக பெற்றிருக்கும் கூடுதலான மக்கள் சக்தி, அதிமுக-வை பாஜக பக்கம் இழுக்கிறது. அந்த இரு கட்சிகள் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டால் அதிமுக-வுக்கும் நிச்சயப் பலன் உண்டு, முன்பு அதிமுக விலகிப் போனதால் தவறவிட்ட அந்தப் பலன் 2026-ல் அதிமுக-வுக்கும் கிடைக்கட்டும் என்று பழனிசாமி இப்போது நினைக்கிறார்.
ஆனால் ஒன்று. ‘போவேன், வருவேன்’ என்று போக்குக் காட்டும் பழனிசாமி கேட்டதால், அரசியலில் கூர்மதியும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட அமித் ஷா – மோடியின் வலது கரமாக விளங்கும் ஒரு பாஜக தலைவர் – மக்கள் அபிமானம் பெற்ற துடிப்பான இளம் தலைவன் ஒருவனைத் தன் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து ஒதுக்கி வைப்பாரா? அப்படி நடந்தால் அது கட்சியின் பல எதிர்காலத் தலைவர்களையும் பாதித்து பின்னாளில் அவர்களையும் கட்சிப் பணியில் சுணங்க வைக்கும் என்று அமித் ஷா நினைப்பாரே?
அண்ணாமலை பதவி விலகிய பிறகு பாஜக-வுடன் அதிமுக கூட்டணி அமைத்துவிட்டு, மீண்டும் பழனிசாமி அந்தக் கூட்டணிக்கு டாடா காட்டிவிட்டுப் போனால் பழனிசாமிக்காக தமிழக பாஜக இழந்த இளம் தலைவர்களை மீண்டும் பெற முடியாது என்ற பிரக்ஞை பாஜக-வின் தலைமைக்கு இருக்கத் தானே செய்யும்?
இதையெல்லாம் மற்றவர்கள் சொல்லி மோடிக்கும் அமித் ஷாவுக்கும் தெரிய வேண்டியதில்லை. சாதாரண மக்கள் மனங்களை அறியும் அந்த இரு தலைவர்கள், கட்சியின் அடுத்த அடுத்த நிலைத் தலைவர்களின் எண்ணங்கள் பற்றியும் நன்கு அறிவார்கள்.
சரி, பிறகு யார் எதற்காக அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப் படுவார் என்ற தவறான தகவலைக் கசிய விட்டிருப்பார்கள்? ஊடகத்தில் பலமாகப் பரவச் செய்திருப்பார்கள்?
தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிக்கு அண்ணாமலை நாளொரு தொல்லையும் பொழுதொரு குடைச்சலும் அரசியல் ரீதியாகக் கொடுத்து வருகிறாரோ, அந்தக் கட்சியால் சொகுசாக வாழ்கிறவர்கள் செய்த காரியமாகத்தான் இது இருக்க வேண்டும். அவர்கள் ஏன் இதைச் செய்ய வேண்டும்?
பாஜக ஆதரவாளர்கள் சோர்வடைந்து, அந்தக் கட்சியின் தேசியத் தலைமையின் மீது பிடிப்பிழந்து, “சீச்சீ! என்ன கட்சி இது!” என்று அவர்கள் நினைக்கட்டும் என்பது பாஜக-வைத் தீவிரமாக வெறுக்கும் ஒரு கட்சியின் கணக்காக இருக்கும். அதோடு, நடப்பதைப் பார்த்து அண்ணாமலையும் வெறுப்படைந்து பதவி விலகலாம் என்பதும் அந்தக் கட்சியின் நப்பாசையாக இருக்கும். ஆனால் அமித் ஷாவும் அண்ணாமலையும் பனங்காட்டு நரிகள்.
இரண்டு விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று, தமிழகத்தில் திமுக-வை வீழ்த்த, திமுக பாணி அரசியலைக் கட்டுக்குள் வைக்க, பாஜக தீவிரமாகச் செயல்படுகிறது. அது நடந்தேற, போகிற போக்கில் பாஜக தன்னை அதிமுக-வுடன் அரசியலில் சமன் செய்துகொள்ள வேண்டும், காலப் போக்கில் அதிமுக-வை முந்தவும் வேண்டும். அப்படி இருக்கையில் அதிமுக சொல்கிற படி தமிழகத்தில் பாஜக தனது தலைவரையும் மாற்றும் என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.
இன்னொன்று. தமிழகத்தில் அண்ணாமலை சேர்த்து வைத்திருக்கும் மக்கள் செல்வாக்கின் முக்கிய காரணம் இது. அதாவது, தீய சக்தியான திமுக-வை அண்ணாமலை நேர்மையாக, விடாப்பிடியாக எதிர்க்கிறார், அம்பலப் படுத்துகிறார். அண்ணாமலையை ஆதரிக்கும் மக்கள் அந்த எதிர்ப்பைப் பிரதானமாக வரவேற்கிறார்கள், என்பது அந்தக் காரணம். அனைவரையும் விட பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இது தெரியும். பிறகு ஏன் அந்த இருவரும் அண்ணாமலையை மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து 2026 தேர்தலுக்கு முன் விடுவிக்க நினைக்க வேண்டும்?
‘எல்லாம் சரி. அண்ணாமலை தமிழகத் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப் படுவார் என்பது தவறான தகவலானால், அதை அமித் ஷா உடனே மறுத்து அறிக்கை வெளியிடலாமே, அவர் ஏன் அதைச் செய்யவில்லை?’ என்று சிலர் கேட்கலாம்.
பாஜக-வுக்கு எதிரான கட்சிகள், அதுவும் தமிழகத்தில் உள்ள ஒரு முக்கியக் கட்சி, பாஜக-வின் தேசியத் தலைமை தனது உள்கட்சி விவகாரங்களில் ஏதோ முடிவு எடுத்திருக்கிறது, அதை செயல்படுத்தப் போகிறது, என்று ஒரு தவறான தகவலை ஊடகத்தில் பரவ விட்டால், அதை பாஜக மறுத்து அறிக்கை விட அவசியம் இல்லை. பாஜக அப்படிச் செய்ய ஆரம்பித்தால், விஷமத் தனமான எதிர்க் கட்சிகள் பாஜக தேசியத் தலைமை பற்றிப் புதிய புதிய தவறான தகவல்களை அவ்வப்போது ஊடகத்தில் பரப்பும். ஒவ்வொரு முறையும் பாஜக அவற்றை மறுத்துக் கொண்டிருக்க முடியாது. காலப் போக்கில் மக்கள் எது உண்மை என்று புரிந்து கொள்வார்கள்.
அமித் ஷா – பழனிசாமி – அண்ணாமலை பற்றிய இந்தப் பொய்ச் செய்தியை உருவாக்கியவர்கள், பாஜக-வுக்கு ஒரு நன்மை செய்திருக்கிறார்கள். இந்தப் பொய்ச் செய்தி பரவியதால், அண்ணாமலையின் எண்ணற்ற ஆதரவாளர்கள் அவர்மீது மாறாத அபிமானம் உடையவர்கள் என்பது அவர்கள் பலவாறாக வெளிப்படுத்திய கவலையின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. அது பாஜக-வின் தேசியத் தலைமைக்கும் தெரிய வந்திருக்கும். ஒரு சிறந்த மாநிலத் தலைவரை உருவாக்கிய திருப்தியும் ஊர்ஜிதமும் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் மீண்டும் கிடைத்திருக்கும்.
சரிதானே?
Author: R. Veera Raghavan – Advocate, Chennai veera.rvr@gmail.com https://rvr-india.blogspot.com
ஐ.பி.எல் 2025 – கொல்கொத்தா vs ஹைதராபாத் – கொல்கொத்தா – 03.04.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி (200/6, வெங்கடேஷ் ஐயர் 60, அங்கிரிஷ் ரகுவன்ஷி 50, அஜிங்க்யா ரஹானே 38, ரிங்கு சிங் 32, ஷமி, கம்மின்ஸ், சீஷன் அன்சாரி, ஹர்ஷல் படேல், மெண்டிஸ் தலா ஒரு விக்கட்) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை (16.4 ஓவர்களில் 120, ஹென்றி கிளாசன் 33, மெண்டிஸ் 27, நிதீஷ் குமார் ரெட்டி 19, பாட் கம்மின்ஸ் 14, வைபவ் அரோரா 3/29, வருண் சக்ரவர்த்தி 3/22, ஆண்ட்ரு ரசல் 2/21, ஹர்ஷித் ராணா, சுனில் நரேன் தலா ஒரு விக்கட்) 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே முதலில் மட்டையாட வந்த கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர்கள் க்விண்டன் டி காக் (1 ரன்) மற்றும் சுனில் நரேன் (7 ரன்) இருவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
அதன் பின்னர் ஆடவந்த அஜிங்க்யா ரஹானே (27 பந்துகளில் 38 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்), அங்கிரிஷ் ரகுவன்ஷி (32 பந்துகளில் 50 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்), வெங்கடேஷ் ஐயர் (29 பந்துகளில் 60 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்), ரிங்கு சிங் (17 பந்துகளில் 32 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) ஆகிய நால்வரும் ஆகியோர் சிறப்பாக ஆடியதால் 20 ஓவர் முடிவில் கொல்கொத்தா அணி 6 விக்கட் இழப்பிற்கு 200 எடுத்தது.
201 என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் நான்கு வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோர் அடித்தனர். பிறர் ஒற்றை இலக்க ஸ்கோரை தாண்டவில்லை. ட்ராவிஸ் ஹெட் (4 ரன்), அபிஷேக ஷர்மா (2 ரன்), இஷான் கிஷன் (2 ரன்), அனிகேத் வர்மா (6 ரன்), ஹர்ஷல் படேல் (3 ரன்), சிம்ரஜீத் சிங் (பூஜ்யம் ரன்), ஷமி (ஆட்டமிழக்காமல் 2 ரன்) ஆகியோர் ஒற்றை இலக்க ரன் எடுத்தனர்.
இரட்டை இலக்க ரன் எடுத்தவர்கள் நிதீஷ் குமார் ரெட்டி (19 ரன்), கமிந்து மெண்டிஸ் (27 ரன்), ஹென்றி கிளாசன் (33 ரன்), பாட் கம்மின்ஸ் (14 ரன்) ஆகியோர் ஆவர். கொல்கொத்தா அணிக்கு இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய வைபவ் அரோரா 29 ரன் கொடுத்து 3 விக்கட் எடுத்தார். வருண் சக்ரவர்த்தியும் 3 விக்கட் எடுத்தார். சுழல்பந்து வீச்சாளர்கள் மூவரும் விக்கட் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 120 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
கொல்கொத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர் வைபவ் அரோரா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
கச்சத்தீவை தாரை வார்த்து யார், தேர்தல் காலம் என்பதால் அதை மீட்டெடுப்பது என்ற பெயரில் நாடகம் நடத்துவது யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் என்று உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடிய 16 பேரை சுட்டுக் கொன்றதன் 105 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெருங்காமநல்லூரில் உள்ள மணிமண்டபம், நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, பி.கே.மூக்கையாத் தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலான நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயக்குமார். வி.பி.சிங் முதல்வராக இருந்த போது மத்திய அமைச்சரவையில் இருந்தது திமுக., தேவகவுடா பிரதமராக இருந்த போது மத்திய அமைச்சரவையில் இருந்தது திமுக., மன்மோகன்சிங் அமைச்சரவையில், வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தது திமுக.,
ஏறத்தாழ 17 ஆண்டுகள் 6 முதல் 7 பிரதமர்கள் ஆட்சியில் இருந்த போது அமைச்சரவையில் பங்கேற்ற திமுக., மத்திய அமைச்சரவையில் இருக்கும் போது கச்சத்தீவு மீட்பு குறித்து வாய் திறக்காமல் அன்று எப்படி 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவு குறித்த ஒப்பந்தம் போடும் போது மௌனம் காத்து உரிமையை விட்டுக் கொடுத்துள்ளது.
இது இந்திய தேசத்தின் ஒரு அங்கம்., கச்சத்தீவை தாரை வார்த்ததை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் தான் நியாயம் கிடைக்கும் என்ற அடிப்படையில், அதிமுக பொதுச்செயலாளராக இருந்த போது கச்சத்தீவை மீட்க 2008 ல் வழக்கு தொடுத்து 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி மலர்ந்த பின் வருவாய்த்துறையையும் வாதியாக சேர்த்தார்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
ஏனென்றால், காவேரியில் சட்ட போராட்டம் நடத்தி தான் உரிமையை அம்மா அரசு பெற்று தந்தது., முல்லை பெரியாறில் 152 அடி உயர்த்தலாம் என்று சட்ட போராட்டம் நடத்தி தான் பெற்று கொடுத்தது, டெல்டா மாவட்டத்தில் மீத்தேன், ஈத்தேன் – க்கு தனிச் சட்டம் இயற்றி டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
அதே போல, மத்தியில் உள்ள அரசு பாராமுகமாக இருப்பதால் நீதிமன்றத்திற்கு சென்று உரிய பலனை பெற முடியும் என்ற அடிப்படையில் தான் சென்றார்கள், இந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கு குறித்து எந்த முன்னெடுப்பும் எடுக்காமல் அவர்களின் அபிடவிட்-யை கூட அம்மா முதல்வராக இருக்கும் போது எடுத்து சொல்லியுள்ளார்கள்., மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதை தான் நாங்களும் சொல்கிறோம் என்று அன்றைய முதல்வர் சொல்லியிருக்கிறார் இதெல்லாம் வரலாறு யாரும் மறைக்க முடியாது.
தாரை வார்த்து யார், தேர்தல் காலம் என்பதால் அதை மீட்டெடுப்பது என்ற பெயரில் நாடகம் நடத்துவது யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் என பேசினார்.
சபரிமலையில் 10 நாள் நடக்கும் பங்குனி உத்திர திருவிழா செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் இன்று முதல் ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் மதியம் உச்ச பூஜைக்கு முன்னோடியாக நடைபெறும் உற்சவபலி பூஜை துவங்கியுள்ளது.
திடிரென பெய்துவரும் மழையால் பம்பை நதியில் தண்ணீர் அதிகம் வருவதால் பக்தர்கள் கோடை வெயில் காலத்தில் இதமான குளியல் போட்டு மலையேற்றம் செல்கின்றனர்.
பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை திங்கட்கிழமை மாலை திறக்கப்பட்டது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. செவ்வாய் அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் வழக்கமான பூஜைகள் தொடங்கியது.
காலை 9:00 மணிக்கு பிம்ப சுத்தி பூஜைகளை தொடர்ந்து கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் கொடி பட்டத்திற்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு சிறப்பு பூஜைகள் நடத்தினார்.
தொடர்ந்து கொடி பட்டம் கோயிலை சுற்றி வலம் வந்து கொடிமரம் அருகே கொண்டுவரப்பட்டது. அங்கு பூஜைகளுக்கு பின்னர் 10:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர்.
இன்று முதல் ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் மதியம் உச்ச பூஜைக்கு முன்னோடியாக உற்சவபலி நடைபெறுகிறது. ஏப். 10- இரவு அத்தாழ பூஜைக்கு பின்னர் சுவாமி பள்ளி வேட்டைக்காக சரங்குத்தியில் எழுந்தருளுவார்.
ஏப். 11 காலை நடை திறந்த பின்னர் உஷ பூஜை நிறைவு பெற்றதும் யானை மீது சுவாமி பம்பைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மதியம் ஒரு மணிக்கு இங்கு சுவாமிக்கு ஆராட்டு நடைபெறும்.அதன் பின்னர் மதியம் 2:00 மணிக்கு பம்பை கணபதி கோயில் வளாகத்தில் ஆராட்டு தரிசனம் முடித்து சுவாமி சன்னிதானத்துக்கு திரும்பவந்ததும் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.
தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் ஏப்.14 சித்திரை விஷு பூஜைகளுக்காக நடை திறந்திருக்கும். ஏப்.18 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
சபரிமலை வனப்பகுதியில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு நாட்களாக திடிரென பெய்துவரும் மழையால் பம்பை நதியில் தண்ணீர் அதிகம் வருவதால் பக்தர்கள் கோடை வெயில் காலத்தில் இதமான குளியல் போட்டு மலையேற்றம் செல்கின்றனர். வடசேரிக்கரை நதி மற்றும் எருமேலி மணிமாலா நதியிலும் தண்ணீர் வருகிறது.
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதித்து, நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதித்துள்ள நீதிமன்றம், புனரமைப்புப் பணிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் கமிஷனர் மற்றும் ஐ.ஐ.டி., நிபுணர் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் 650 ஆண்டுகள் பழைமையானது. மாமன்னர் பராக்கிரம பாண்டியரால் கட்டப்பட்டது. இங்கே பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வடக்கே காசியில் உள்ள ஆலயம் அன்னியர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி சிதிலமடைந்த போது, தெற்கே சிவாலயம் எழுப்பும்படி மன்னருக்கு சிவ பெருமானே கனவில் வந்து சொன்னதால், பராக்கிரம பாண்டியன் இந்தக் கோயிலைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது. எனவே இது வடக்கே உள்ள காசி தலத்துக்கு இணையான பெருமை வாய்ந்தது. இத்தகைய சிறப்புமிக்க இத்தலத்தில் சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஏப்.7ம் தேதி காலை 9 மணிக்கு மேல் காசி விஸ்வநாத சுவாமி கோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தன பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்க திட்டமிட்டு, பணிகள் இன்று காலை தொடங்கின.
இந்தக் கோயிலில் ஒரு சிறப்பு வாய்ந்த கல்வெட்டு உண்டு. அது மன்னர் பராக்கிரம பாண்டியரே அமைத்தது. அதில், இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கால வெள்ளத்தில் சிதிலமுற்று ஏதேனும் ஒரு கல் விழுந்தாலும், அதை மீண்டும் எடுத்து வைத்து சரி செய்து கோயிலை பராமரிப்பவரின் பாதங்களில் இப்போதே நான் விழுந்து வணங்குகிறேன் என்று எதிர்கால நிகழ்வைக் கருத்தில் கொண்டு மன்னர் கல்வெட்டில் பாடல் இயற்றி வைத்துள்ளார்.
அத்தகைய பெருமை வாய்ந்த திருக்கோயிலில், மராமத்துப் பணிகள் முறையாக மேற்கொள்ளாமல் கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்து ஏற்பாடுகள் நடப்பதாக இந்து இயக்கங்கள் புகார் தெரிவித்து வந்தன. மேலும், கும்பாபிஷேகத்தை ஒட்டி கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் நிதி முறைகேடு பெருமளவில் நடந்துள்ளதாகவும் கூறி நடவடிக்கை எடுக்குமாறு இந்து இயக்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில் தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஏப்.7ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. நிபுணர் குழு பரிந்துரைப்படி புனரமைப்பு பணி நடைபெறவில்லை. செயல் அலுவலர் தன்னிச்சையாக பணியை மேற்கொள்கிறார். கோவில் வளாகத்திலிருந்து அனுமதியின்றி தோண்டி அள்ளிய மணலை தனியாருக்கு விற்பனை செய்துள்ளனர். இதிலிருந்து கிடைக்க வேண்டிய வருமானத்தை கோயில் கணக்கில் வரவு வைக்கவில்லை. மணல் அள்ளியதால் கோவில் சுவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜகோபுரத்தில் மழைநீர் கசிவை சரி செய்யவில்லை. வண்ணம் மட்டுமே பூசப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வேலை முழுமையடையவில்லை. சுவாமிகள் புறப்பாடு வாகனங்களை சீரமைக்கவில்லை. தேர் திருப்பணி துவங்கவில்லை. அன்னதானக்கூடம் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது.
புனரமைப்பு பணி முழுமையடையும் வரை கும்பாபிஷேகம் நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். புனரமைப்பு பணியை ஆய்வு செய்ய வழக்கறிஞர் கமிஷனரை நியமித்து உத்தரவிட வேண்டும் என்று, கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. அப்போது அறநிலையத் துறை தரப்பு,’புனரமைப்பு பணி 100 சதவீதம் முடிந்து விட்டது,’ என தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கை இன்றைய தினம் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இன்றுதான் காலையில் கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குவதாக இருந்தது குறிப்பிடத் தக்கது. எனினும் இன்று காலை திட்டமிட்டபடி, கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின.
இதனிடையே இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. வழக்கறிஞர் கமிஷனர் மற்றும் ஐ.ஐ.டி.,நிபுணர் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,’ என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தத் தீர்ப்பை வரவேற்றும் வருத்தம் தெரிவித்தும் தென்காசிப் பகுதியில் பொதுமக்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். காரணம், திருநெல்வேலி, சங்கரன்கோயில் ஆகிய தலங்களில் இதுபோன்று அறைகுறையாக திருப்பணிகளைச் செய்துவிட்டு, பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கும்பாபிஷேகங்களைச் செய்தது அறநிலையத்துறை. இதில் பல்வேறு முறைகேடுகள் இருந்ததாக குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், பக்தர் ஒருவர் தெரிவித்த கருத்து…
போராடி பெற்ற தீர்ப்புக்கு வாழ்த்துகள். பலருக்கு இது வருத்தம் தரும் தீர்ப்பாக இருக்கலாம், ஆனால் சரியான தீர்ப்பு. தற்போது வழக்கறிஞர் கமிஷனர் மற்றும் ஐஐடி குழுவினர் ஆய்வுக்குப் பின்னர் தான் குடமுழுக்கு என்று கூறுவது ஆறுதல்.
செய்யும் திருப்பணிகளுக்கான பரிகாரம் தான் குடமுழுக்கு , திருப்பணிகள் நடைபெறாமல் கும்பாபிஷேகம் செய்வது, அதற்கு திருப்பணி செலவை விட அதிகச் செலவைக் கூட்டுவது போன்றவற்றை கட்டுப்படுத்தும் முதல் படி இதாக இருக்க வேண்டும். நியாயமாக பக்தர்கள் கொண்டாட வேண்டும் இதனை.
நெல்லையில் இவர்கள் எந்தத் திருப்பணிகளையும் (இன்று வரையிலும்) செய்யாமல் ஆறு மாதத்தில் வெள்ளையடித்து செய்த கும்பாபிஷேகத்தின் கெடு பலன்களை கோவிலும் ஊரும் அனுபவித்து வருவதை நினைவு கூற விரும்புகிறேன். எல்லாம் சிவன் செயல் – என்று குறிப்பிட்டார்.