இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
Padma Awards – one of the highest civilian Awards of the country, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri. The Awards are given in various disciplines / fields of activities, viz.- art, social work, public affairs, science and engineering, trade and industry, medicine, literature and education, sports, civil service, etc. ‘Padma Vibhushan’ is awarded for exceptional and distinguished service; ‘Padma Bhushan’ for distinguished service of high order and ‘Padma Shri’ for distinguished service in any field. The awards are announced on the occasion of Republic Day every year.
These Awards are conferred by the President of India at ceremonial functions which are held at Rashtrapati Bhawan usually around March / April every year. For the year 2025, the President has approved conferment of 139 Padma Awards including 1 duo case (in a duo case, the Award is counted as one) as per list below. The list comprises 7 Padma Vibhushan, 19 Padma Bhushan and 113 Padma Shri Awards. 23 of the awardees are women and the list also includes 10 persons from the category of Foreigners / NRI / PIO / OCI and 13 Posthumous awardees.
Padma Vibhushan (7)
SN Name Field State 1 Shri Duvvur Nageshwar Reddy Medicine Telangana 2 Justice (Retd.) Shri Jagdish Singh Khehar Public Affairs Chandigarh 3 Smt. Kumudini Rajnikant Lakhia Art Gujarat 4 Shri Lakshminarayana Subramaniam Art Karnataka 5 Shri M. T. Vasudevan Nair (Posthumous) Literature and Education Kerala 6 Shri Osamu Suzuki (Posthumous) Trade and Industry Japan 7 Smt. Sharda Sinha (Posthumous) Art Bihar
Padma Bhushan (19)
SN Name Field State 8 Shri A Surya Prakash Literature and Education Karnataka 9 Shri Anant Nag Art Karnataka 10 Shri Bibek Debroy Literature and Education NCT Delhi 11 Shri Jatin Goswami Art Assam 12 Shri Jose Chacko Periappuram Medicine Kerala 13 Shri Kailash Nath Dikshit Others NCT Delhi 14 Shri Manohar Joshi Public Affairs Maharashtra 15 Shri Nalli Kuppuswami Chetti Trade and Industry Tamil Nadu 16 Shri Nandamuri Art Andhra Pradesh 17 Shri P R Sreejesh Sports Kerala 18 Shri Pankaj Patel Trade and Industry Gujarat 19 Shri Pankaj Udhas Art Maharashtra 20 Shri Ram Literature and Education Uttar Pradesh 21 Sadhvi Social Work Uttar Pradesh 22 Shri Art Tamil Nadu 23 Shri Shekhar Kapur Art Maharashtra 24 Ms. Shobana Chandrakumar Art Tamil Nadu 25 Shri Sushil Kumar Modi Public Affairs Bihar 26 Shri Vinod Dham Science and United States
Padma Shri (113)
SN Name Field State 126 Shri Surinder Kumar Vasal Science and Engineering Delhi 127 Shri Swami Pradiptananda (Kartik Maharaj) Others – Spiritualism West Bengal 128 Shri Syed Ainul Hasan Literature and Education Uttar Pradesh 129 Shri Tejendra Narayan Majumdar Art West Bengal 130 Smt. Thiyam Suryamukhi Devi Art Manipur 131 Shri Tushar Durgeshbhai Shukla Literature and Education Gujarat 132 Shri Vadiraj Raghawendracharya Panchamukhi Literature and Education Andhra Pradesh 133 Shri Vasudeo Kamath Art Maharashtra 134 Shri Velu Aasaan Art Tamil Nadu 135 Shri Venkappa Ambaji Sugatekar Art Karnataka 136 Shri Vijay Nityanand Surishwar Ji Maharaj Others – Spiritualism Bihar 137 Smt. Vijayalakshmi Deshamane Medicine Karnataka 138 Shri Vilas Dangre Medicine Maharashtra 139 Shri Vinayak Lohani Social Work West Bengal
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று, குடியரசுத் திருநாள் உரை நிகழ்த்தினார். அதில், தமிழகத்தைப் பற்றிய பல்வேறு கவலைகளை வெளியிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் எதிர்காலம் சார்ந்து அவர் வெளியிட்ட கவலைகள் பெரும் கவனத்துக்கு உரியவை.
ஆளுநரின் முழுமையான உரை:
தமிழ்நாட்டின் எனதருமை சகோதர சகோதரிகளே, வணக்கம். பாரதக் குடியரசு தன்னுடைய நிறைவான பயணத்தின்75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த மங்கலமானதருணத்தில் நான் என்னுடைய மனம் கனிந்தவாழ்த்துக்களையும், நல்விருப்பங்களையும் உங்களுக்குத்தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுடைய உழைப்பாலும், உதிரத்தாலும், வியர்வையாலும்நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த அனைத்து உயிர்த்தியாகிகள், சுதந்திரப் போராளிகள் ஆகியோரை நான் ஆழ்மன நன்றியோடுநினைத்துப் பார்க்கிறேன். பாபா சாஹேப் அம்பேத்கருக்கும், அரசியல் சாசன சபையின் மாண்புமிகு உறுப்பினர்களுக்கும் என்மனம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்து, அவர்களை மட்டற்றநன்றியுணர்வோடு சிந்திக்கிறேன்; ஒரு வளைந்து கொடுக்கும்தன்மையுடைய, எதிர்கால நோக்கு கொண்டதொரு அரசியலமைப்புச் சட்டத்தை இவர்கள் நமக்களித்தமையால்தான், நமது ஜனநாயகம் பாதுகாப்பாகவும், உயிர்ப்புடையதாகவும் இருக்கிறது. இந்த 75 ஆண்டுகளிலே, நமது அண்டைப்புற நாடுகள் உட்பட, உலகின் பல்வேறுநாடுகளில் ஒன்றன் பின் ஒன்றாக ஜனநாயகம் நிலைகுலைவதைநாம் பார்த்திருக்கிறோம்; ஆனாலும் கூட, நமது ஜனநாயகம்மேலும் பலமுடையதாகவும், முதிர்ச்சியுடையதாகவும்காலப்போக்கில் வளர்ந்து வந்திருக்கிறது. ஜனநாயக உணர்வுநமது மக்களிடம் ஊறிப்போயிருக்கிறது. பாரதம் தான் ஜனநாயகத்தின் தாய்நாடு. காஞ்சிபுரம் மாவட்டத்தின்உத்திரமேரூரில் உள்ள ஓராயிரம் ஆண்டுக்காலக் கல்வெட்டுகள்இதற்குச் சான்றாக விளங்குகின்றன.
இந்த நாளன்று, நான் மிகுந்த மரியாதையோடு, அகஸ்தியமுனியின் பூமியான, தமிழ்நாட்டின் புண்ணிய பூமிக்கு என்தலைவணங்குகிறேன். இந்த மண்தான், பாரதம் என்றஎண்ணத்திற்கு உரமிட்டு, பல்லாயிரம் ஆண்டுகளாய்அடையாளப்படுத்தி, அதன் அமைவு நோக்கத்தில் வழிகாட்டியது. இந்த மண்ணின் சான்றோர் கூட்டமான தெய்வீகப் புலவர்கள், புனிதர்களும் சித்தர்களுமான -திருவள்ளுவர், திருமூலர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், நாயன்மார்கள், ஆழ்வார்களும்; மேலும் பல்லவர்கள், பாண்டியர்கள், மகத்தானசோழர்கள் போன்ற அரசர்களும், ஆன்மீகப் பெரியோரும், சமூகசீர்திருத்தவாதிகளுமான ஸ்ரீ ராமானுஜாச்சாரியார், வள்ளலார், அய்யாவைகுந்தர், ஸ்வாமி ஸஹஜாநந்தர்போன்றோரும், கர்நாடக இசை மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரியும், மாபெரும்சுதந்திரப் போராட்டத் தியாகியான வ.உ.சிதம்பரம்பிள்ளைபோன்றோரும், மகத்தான புரட்சிக்கவியான சுப்பிரமணிய பாரதிபோன்றோரெல்லாம் மிக மேன்மைமிக்க ஆன்மீக, இலக்கிய, கலாச்சார மற்றும் நாகரீகத்தின் மரபினை, நமதுபெருஞ்சொத்தாக விட்டுச் சென்றிருக்கிறார்கள், இது ஒவ்வொருஇந்தியரின் இதயத்தையும் பெருமிதத்தால் விம்மச் செய்கிறது.
நமது தேசத்தின் ஆன்மா, காலனியாதிக்கஆட்சியாளர்களால் கருணையே இல்லாமல் காலில் போட்டுமிதிக்கப்பட்ட போது, இதே புண்ணிய பூமியான தமிழ் பூமிதான், சுவாமி விவேகானந்தருக்கு தேசிய விழிப்புணர்வைஏற்படுத்தியது. பாரதத்தின் ஆன்மீக, கலாச்சார மற்றும்நாகரீகத்தின் மேன்மைமிக்க மரபு குறித்த ஞானத்தை, 1893 ஆம்ஆண்டு சிகாகோவிலே உலகிற்கு அளிக்க, அவருக்குள்விழிப்பையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியது. இந்தஅறைகூவல் தான் நமது மக்களிடம் விழிப்பினைஏற்படுத்தியதோடு, விடுதலையை நோக்கிய நமது தேசியசுதந்திர இயக்கத்திற்கு ஆற்றல் கூட்டியது.
நண்பர்களே, தமிழின் ஆன்மீக, கலாச்சார மற்றும் மொழிபாரம்பரியம் தான் நமது தேசத்தின் பெருமிதம். நாம்பெருமைப்பட உலகத்தாரோடு இவற்றைப் பகிர்ந்துகொள்கிறோம். மலேசியாவின் மலேயா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில்திருவள்ளுவர் இருக்கைகள், இலங்கையிலும், சிங்கப்பூரிலும்திருவள்ளுவர் மையங்கள், பிரான்சின் செர்ஜியில் திருவள்ளுவர்உருவச்சிலை, ஃபிஜியின் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள்நியமனம் என உலகம் நெடுக, தமிழின் மகோன்னதத்தைப்பரப்பும் வகையில் பல்வேறு நகரங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் திருவள்ளுவர் மையங்களையும், இருக்கைகளையும் ஏற்படுத்துவதில் மாண்புமிகு பாரத பிரதமர்திரு. நரேந்திர மோடி அவர்கள் முன்னெடுப்புக்களைமேற்கொண்டு வருகிறார். பனாரஸ் ஹிந்துபல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி இருக்கையும், குவாஹாத்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டயப்படிப்பு போன்றநடவடிக்கைகளும், தமிழின் புகழினை நாடெங்கிலும் பரப்பிவருகின்றன. பிரிட்டிஷாரிடமிருந்து அதிகாரமாற்றத்தின்கலாச்சாரச் சின்னமாக விளங்கிய, இந்த மண்ணின் புனிதமானசெங்கோல், பாரதத்தின் புதிய நாடாளுமன்றத்தில் முழுகண்ணியத்தோடும், கௌரவத்தோடும் நிறுவப்பட்ட வேளையில், நாடு முழுவதும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் உணர்ந்தது. கடந்த மூன்றாண்டுகளின் வருடாந்தர விழாவான காசி தமிழ்சங்கமம், பாரதத்தின் ஆன்மீக-புவியீர்ப்பு மையமான காசியோடுதமிழ் மக்களுக்கு இருந்து வரும் பல்லாயிரம் ஆண்டுக்காலபழமைவாய்ந்த கலாச்சாரத் தொடர்பிற்கு, புத்துணர்ச்சிஅளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
நண்பர்களே, இது பாரத தேசத்தின் பொற்காலம். இதுஅதன் மறுமலர்ச்சியுகம். பத்தாண்டுகளுக்கு முன்னர், பலவீனமான ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்கியநாம், இன்று உலகின் 5-ஆவது மிகப்பெரியபொருளாதாரங்களில் ஒன்றாக ஆகியிருப்பதோடு, விரைவில்உலகின் 3-ஆவது மிகப்பெரிய பொருளாதாரங்களில்ஒன்றாகவும் ஆக இருக்கிறோம். உலகின் மிகவேகமாக வளரும்பொருளாதாரமாக நாம் இருக்கிறோம். நெடுநாட்கள்புரையோடிப் போன ஏமாற்றம், மனமுறிவு, அவநம்பிக்கைபோன்ற உணர்வுகளை விட்டொழித்து, அற்புதமானபடைப்புத்திறன், நூதனங்கள் இயற்றல், துணிவாண்மை ஆகியவற்றால் நாம் உலகைப் பிரகாசப்படுத்திவருகிறோம். நமது நாட்டின் 25 கோடிக்கும் மேற்பட்ட நமதுமக்கள் ஏழ்மையிலிருந்து, பத்தாண்டுகள் என்றசாதனைக்காலத்தில் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
இன்று நமதுஇளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோர் தன்னம்பிக்கையோடும், வினைத் திட்பத்தோடும் செயல்படுகிறார்கள். மனிதத்துணிவு, விண்வெளி, இணையவெளி, ஆழ்கடல் ஆய்வு, துளிமம் மற்றும் மீநுண்தொழில்நுட்பங்கள், நீடித்த தொழில்நுட்பங்கள், எண்ணியல்பொதுக்கட்டமைப்பு, பொதுநலத் திட்டங்களின் செயலாக்கம், பிணக்குத்தீர்வு, அமைதி போன்ற அனைத்துத் துறைகளிலும்பாரதத்தின் இருப்பு முழக்கமிடுகிறது. உலகின் தயாரிப்புத்துறை மையமாக பாரதம் வேகமாக உருவெடுத்து வருகிறது. அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பினைபாரதத்திற்கு இடம்மாற்றி வருகின்றன. உலகத்தரம் வாய்ந்தஉட்கட்டமைப்புகளான சாலைகள், துறைமுகங்கள், விமானநிலையங்கள் போன்றவற்றை நாம் கட்டமைத்துவருகிறோம். ஆய்வுகள்-புதுமைகள் இயற்றலில் நாம் மகத்தானவீச்சை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். பாதுகாப்புத்தளவாடத் துறையில் நாம் தற்சார்பை நோக்கி முன்னேறிவருகிறோம். உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப்சூழலமைப்புகளில் ஒன்றாக நாம் விளங்கி வருகிறோம். ஒவ்வொரு முக்கியமான துறையிலும் நமது தேசியகுறிக்கோளான தற்சார்பை எட்டுதல் என்பதை நோக்கி நாம்தன்னம்பிக்கையோடு உழைத்து வருகிறோம்.
நண்பர்களே, மனிதர்களை மையப்படுத்தி, சமச்சீரான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் நமது மாதிரியானது, பிராந்திய மற்றும் உட்பிராந்திய வளர்ச்சி இடைவெளிகளைஇட்டு நிரப்பி வருகிறது. நெடுங்காலம் விடுபட்டுப் போன, நமதுமுன்னேறும் பேரவா கொண்ட மாவட்டங்கள், முன்னேறியமாவட்டங்களுக்கு இணையாக வேகமாக வளர்ந்து வருகின்றன. சமச்சீர் வளர்ச்சியை மேலும் பரவலாக்க, முன்னேறும் பேரவாகொண்ட வட்டாரங்களுக்கும், பஞ்சாயத்துக்களுக்கும், இந்தமாதிரி நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தொலைவானஊரகப்பகுதிகளில் வசிக்கின்ற, வாய்ப்புகள் குறைவான நமதுசகோதர சகோதரிகளுக்கும் சமச்சீர் நிலையையும், கண்ணியத்தையும் இது கொண்டு சேர்க்கிறது.
போட்டித்தன்மை வாய்ந்த நமது வாக்கு அரசியலிலிருந்துபெரும்பாலும் விடுபட்டுப்போகும் மிகச்சிறிய சமூகங்களையும், நமது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிமாதிரிஅரவணைக்கிறது. நாடெங்கிலும் சிதறிக்கிடக்கும், குறிப்பாக பலவீனமான பழங்குடிக் குழுக்களைச் சேர்ந்த நமதுசகோதர சகோதரிகள், வளர்ச்சியின் ஆதாயங்களைப் பெறமுடியாமல் இதுவரை இருந்தார்கள் என்பது கவலையளிக்கும்விஷயம். நமது மாநிலத்திலும் கூட, இப்படிப்பட்ட சுமார் 10 இலட்சம் பேர் இருக்கிறார்கள். ஜவ்வாது மலைகள், கல்வராயன்மலைகள், நீலகிரி மலைகள் மற்றும் இதர இடங்களில்இருப்போரின் பரிதாபமான நிலையை நான் பார்த்திருக்கிறேன். இவர்களில் பல்லாயிரக்கணக்கானோரிடம் தங்கள் இருப்பைநிரூபிக்கும் அடிப்படை ஆவணங்கள் கூட இல்லை. மற்றவர்களுக்கு இணையாக இந்தக் குறிப்பிட்ட பலவீனமானபழங்குடியின மக்களை உயர்த்தி, அவர்களின் கண்ணியத்தைமீட்டெடுத்து, அவர்களின் அவலநிலையிலிருந்து மீட்கும்பணியை முதன்மையானதாக ஆக்கும் வகையில், போதுமானநிதியாதாரங்களை ஒதுக்கி, பிரதம மந்திரி ஜன்–மன்திட்டத்தைப் பிரதமர் மோடி அவர்கள்அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
நண்பர்களே, நமது மக்களின் தொழில் முனைவு காரணமாக, நமது மாநிலம் சிறு-குறு-நுண் தொழில்கள் துறையில் முன்னணிமாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. ஜவுளி, தோல், வாகனங்கள், பொறியியல் பாகங்கள், மருந்தியல் துறைகளில்நமது மாநிலம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. விவசாயத் துறையில் நவீன அறிவியல் மற்றும்தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, நமது விவசாயிகள் விரைவாகத்தங்களைத் தகவமைத்துக் கொண்டார்கள். விவசாயத்துறையில் இணைந்து, தங்களுடைய நூதனமான எண்ணங்கள், தொழில் முனைவு காரணமாக அதில் மாற்றங்களை ஏற்படுத்தும்நமது இளைஞர்களுக்கு, நான் என் பாராட்டுக்களைத்தெரிவித்துக் கொள்கிறேன். சிறுதானிய வேளாண்மை, இயற்கை விவசாயம் ஆகியவற்றில் அதிக எண்ணிக்கையில்விவசாயிகள் ஈடுபடத் தொடங்கியிருப்பதும், அவர்கள்வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லியைத் தவிர்த்துவருவதும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
நண்பர்களே, குறிப்பாக ஊரகப்பகுதி மற்றும் புறநகர்பின்புலத்திலிருந்து வரும் நமது தாய்மார்களும், சகோதரிகளும்மிகுந்த வினைத்திட்பத்தோடு இருக்கிறார்கள். தமிழ்நாட்டின்சுமார் ஒண்ணரை இலட்சம் கோடி முத்ரா கடன் பயனாளிகளில், கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையினர் பெண்கள் தாம். ஊரகமாவட்டங்களுக்கு நான் சென்றிருந்த சிலவேளைகளில், அவர்களில் ஒரு சிலரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக்கிடைத்தது. அவர்களுடைய உற்சாகம், துணிவாண்மை, நூதனங்களை உருவாக்கும் மனம் ஆகியவற்றால் நான் பெரிதும்கவரப்பட்டிருக்கிறேன். ஊரகப்பகுதி மற்றும் புறநகர்ப்பகுதிகளைச் சேர்ந்த, வினைத்திட்பம் உடைய நமதுதாய்மார்களும், சகோதரிகளும், நமது தேசத்திலும், பொருளாதாரத்திலும் மாற்ற மேற்படுத்தி வரும் அமைதியானபுரட்சியாளர்கள் என்பதை ஆணித்தரமாக உரைக்கும்நம்பிக்கையை இவர்கள் எனக்கு அளிக்கிறார்கள்.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் தங்களுடையவியக்கத்தக்க செயல்பாடுகள் வாயிலாக, நமது மாநிலத்திற்கும், தேசத்திற்கும் பெருமை சேர்த்த நமது விளையாட்டுவீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் நான் என் நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
தனிப்பட்ட ரீதியாகவும், குழுவாகவும் இணைந்து, மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள், ஏழைகள், ஆதரவற்றவர்கள் போன்றோருக்கு, மிகத்தேவையானகவனிப்பும், ஆதரவும் அளித்துவரும் கணக்கேயில்லாதபோற்றப்படாத நாயகர்களுக்கு, நான் என் நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, 2047-ஆம் ஆண்டுக்குள்ளாக, முழுமையாகவளர்ச்சியடைந்த, தற்சார்புடையதாக, நமது நாட்டைஆக்குவோம் என்ற மனமார்ந்த உறுதிமொழியை நாம்ஏற்றிருக்கிறோம். இதுவே நமது முன்னோர்களின் கனவாகஇருந்தது. தங்கள் உயிராலும், உதிரத்தாலும், அந்நியஆட்சியிலிருந்து நமக்குச் சுதந்திரம் பெற்றுத்தந்த எண்ணற்றஉயிர்த்தியாகிகளின் கனவாகவும் இருந்தது. இதுவேவ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியின் கனவாகவும் இருந்தது. இந்த தேசியக் குறிக்கோளில் எந்த சமரசமும் கிடையாது. இதை நிறைவேற்றிக் காட்டுவது நம் அனைவரின்குறிக்கோளாகும்.
இந்த தேசியக் குறிக்கோளில், நமது மாநிலமானதமிழ்நாட்டிற்கு ஒரு பெரிய பங்களிப்பு இருக்கிறது. இதன்வளமான திறமைகள்-திறன்களைக் காணும் போது, இதனால்நமது தேசத்தின் வளர்ச்சியின் இயந்திரமாக இருக்க முடியும். இப்படிச் செய்ய வேண்டுமென்றால், நமது மாநிலம் அதன்உச்சபட்ச திறமைக்கேற்ப மேம்பட வேண்டும். ஆனால் இதுநடப்பது போலத் தெரியவில்லை. முக்கியமான குறியீடுகளின்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, நமதுமாநிலம் சரிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
இளைஞர்கள் தாம் நமது மிக மதிப்பு வாய்ந்த சொத்துக்கள். இவர்கள் தாம் நமது எதிர்காலம். தமிழ்நாடு வளரவேண்டுமென்று சொன்னால், மிகச் சிறப்பான கல்வியும், திறன்களும் நமது இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டும். மொத்த-சேர்க்கை-விகிதத்தில், தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருப்பது மிகுந்த நிறைவை அளிக்கிறது.
ஆனால் குறிப்பாக, பள்ளிகளில் மாணவர்களின்கற்றல்-வெளிப்பாடு என்று காணும் போது, இது கடைத்தட்டில்இருக்கும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. நமதுஅரசுப்பள்ளிகளில் இருக்கும் கற்றல் நிலை தொடர்பாக, கடந்தசில ஆண்டுகளின் கல்வி அறிக்கைகளின் வருடாந்தர நிலை, மிகவும் கவலையளிக்கும் ஓர் உண்மையை வெளிப்படுத்துகிறது. நமது அரசுப்பள்ளிகளில் இருக்கும் சுமார் 75 சதவீதம்மாணவர்களால், இரண்டாம் வகுப்புப் பாடப்புத்தகங்களைக்கூட, சரிவரப் படிக்க இயலவில்லை என்பதோடு, 11 முதல் 99 வரையிலான இரண்டு இலக்க எண்களைக் கூட, அவர்களால்அடையாளம் காண முடிவதில்லை.
இரண்டு இலக்ககூட்டல்-கழித்தல்களைக் கூட அவர்களால் செய்ய முடியவில்லை. அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் பொருளாதாரரீதியாக பின்தங்கிய ஏழைகள் படிப்பதால், அரசுப்பள்ளிகளில்கற்றலில் ஏற்பட்டிருக்கும் இந்த செங்குத்தான சரிவு, ஏழைகளின் எதிர்காலத்தை மேலும் ஆபத்துக்குள்ளாக்குவதோடு, நீண்டகால சமூக மற்றும் பொருளாதார அநீதி அவர்களுக்குஇழைக்கப்படுவதை இது மேலும் அதிகப்படுத்தும்.
நண்பர்களே, உயர்கல்வியைப் பொறுத்தமட்டிலும் கூட, நிலைமை சிறப்பாக இல்லை. நமது 20 மாநிலபல்கலைக்கழகங்களில், சுமார் 25 இலட்சம் மாணவர்கள்சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
பெரும்பாலானபல்கலைக்கழகங்களில் நிதிப்பற்றாக்குறை நிலவுகிறது. அவைமோசமான நிதிநெருக்கடியைச் சந்தித்து வருகின்றன, ஆசிரியர்களுக்கு ஊதியத்தைக் கூட அவற்றால் அளிக்கமுடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே, மாநிலஅரசிடமிருந்து அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டியநிதிப்பங்கீடு கிடைக்கப் பெறவில்லை. இதன் விளைவாக, பலபல்கலைக்கழகங்கள், 50 சதவீதத்திற்கும் குறைவானஆசிரியர்களின் எண்ணிக்கையோடு செயல்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் சேர்க்கைக்குத் தேவையான நிதிபல்கலைக்கழகங்களிடம் இல்லை.
நமது தேசத்தின்பெருமிதமாக விளங்கிய மதராஸ் பல்கலைக்கழகத்தில், 66 சதவீத ஆசிரியர் பதவிகள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. அரசாங்க நிதி, தொடர்ந்து கிடைக்காத காரணத்தால், சிலபல்கலைக்கழகங்கள் தங்களுடைய வருமானவரிஅறிக்கைகளில், தங்களை மாநில அரசுசாராபல்கலைக்கழகங்களாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன. பத்து பல்கலைக்கழகங்கள் பல ஆண்டுகளாகவேபதிவாளர்களும், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்களும் இல்லாமல்இருக்கின்றன. அவை தற்காலிக அடிப்படையில் இயங்கிவருகின்றன.
பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி முறை எந்தஅளவுக்குத் தீவிரமாக அழிக்கப்பட்டு விட்டது என்றால், அவற்றைபல்கலைக்கழக மாமன்றக்குழு அல்ல, மாநில தலைமைச்செயலகமே அவற்றை நிர்வாகம் செய்கின்றன. பல்கலைக்கழகக் கல்விக்குழுவின் ஆளுமையின் கீழ்சட்டபூர்வமான வகையிலே வரக்கூடிய பாடத்திட்டத்தைஅமைக்கும் குழு விஷயத்தில், மாநில அரசின் உயர்கல்விக் குழுதயாரித்தளிக்கும் தரம் தாழ்ந்த பாடத்திட்டத்தையே பின்பற்றவேண்டிய கட்டாயத்தில் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. நேர்மையான, அப்பழுக்கற்ற பல்கலைக்கழக அதிகாரிகள், பொய்யான, புனையப்பட்ட வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு, காவல்துறையின் அவமானகரமான உளைச்சலுக்குஆட்படுத்தப்படுகிறார்கள். துணைவேந்தர்கள் இல்லாமை, பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தின் நேரடிக்கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருகிறது; ஏனென்றால், உயர்கல்வித் துறையின் செயலர் அப்போது நடைமுறையில் துணைவேந்தராகிறார். ஏற்கமுடியாத, அற்பமானகாரணங்களுக்காக, துணைவேந்தர்கள் நியமனத்தை நடக்கஇயலாமல் செய்வது என்பது, பின்வாயில் வழியேபல்கலைக்கழகத்தின் தன்னாட்சி அதிகாரத்தைச் சிதைக்கும்தவறான வழியாகும். இதனால் நிகர விளைவு கல்வித்தரத்தில்ஏற்பட்டிருக்கும் செங்குத்து வீழ்ச்சி.
இத்தகைய வீழ்ச்சி காரணமாக, மேலும் மேலும் பலபட்டதாரிகளுக்கு வேலைகிடைக்காமை; ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானோர் பணிக்கமர்த்த முடியா நிலையில் உள்ளார்கள். ஆய்வுகளின்பொதுவான தர நிலைகள் மிகத் தாழ்ந்த நிலையில்இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் நமது பல்கலைக்கழகங்கள்உருவாக்கும் 6,000-த்திற்கும் மேற்பட்ட முனைவர்களில், 5 சதவீதம் பேரால் கூட, தேசியத் தகுதித்தேர்வு-NET, அல்லதுஇளநிலை ஆய்வு மாணவர் நிலை-JRF-க்கான குறைந்தபட்சஆய்வுத்தரத்திற்குத் தேர்ச்சி பெற முடியவில்லை. பல மில்லியன்மாணவர்களின் எதிர்காலம் அபாயத்தில் இருக்கிறது.
நண்பர்களே, கல்வி நிறுவன வளாகங்களைச் சுற்றி நிலவும்சட்டவிரோதமான போதைப்பொருள் அச்சுறுத்தல் தீவிரமானகவலையை அளிக்கிறது. சர்வதேச போதைப்பொருள்கூட்டமைப்புகளோடு தொடர்புடைய, சக்திவாய்ந்தபோதைப்பொருள் கும்பல்கள் நமது மாநிலத்தில் இயங்கிவருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இளைஞர்களுக்கு போதைப்பொருள் விற்கும் போது, அடிமட்டத்தில் இந்தக்குற்றங்களில் ஈடுபடுவோர், சிலவேளைகளில் அமலாக்கப்பிரிவுகளால் பிடிக்கப்பட்டாலும், போதைப்பொருள் கூட்டமைப்புக்களை இயக்கி வரும் பெரும்புள்ளிகள்தொடப்படுவதில்லை. போதைப்பொருள் கூட்டமைப்புக்களின் முக்கியப்புள்ளிகள் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படவில்லைஎன்று சொன்னால், பெருகி வரும் போதைப்பொருள் அபாயம், நமது எதிர்காலச் சந்ததிகளை அழித்துவிடும்.
நண்பர்களே, நமது தாழ்த்தப்பட்ட சகோதரசகோதரிகளுக்கு எதிரான, மனிதாபிமானமே இல்லாமல்இழைக்கப்படும் சமூகப்பாகுபாடுகள் பற்றிய செய்திகளை, ஒவ்வொரு நாளும் நாம் படிக்கும் போது, நமது இதயம் குன்றி, தலை அவமானத்தால் தாழ்ந்து போகிறது. தங்கள்காலணிகளை அணிந்து கொண்டு கிராமத் தெருக்களில் நடக்கஅவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை, பொது இடங்களில்அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இந்தப் பாகுபாட்டிற்குஎதிராக, அவர்களில் யாரேனும் தட்டிக்கேட்டால், அவர்கள்கொடூரமாகத் தாக்கப்படுகிறார்கள், அவர்கள் மீது சிறுநீர்கழிக்கப்படுகிறது, சிலவேளைகளில் அவர்கள் கொலையும்செய்யப்படுகிறார்கள். பள்ளி வகுப்பறைகளில் தாழ்த்தப்பட்டமாணவர்கள் தனிப்படுத்தப்படுகிறார்கள்; தாழ்த்தப்பட்ட மாணவர்யாரேனும் கல்வியில் சிறப்பாகச் செயல்பட்டால், அவர்தாக்கப்படுகிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்டசமூகத்தைச் சேர்ந்த ஒரு பஞ்சாயத்துத் தலைவர் செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை என்பதோடு, அதிகார பூர்வமானகூட்டங்களில் அவர் நாற்காலியில் அமரக்கூட அனுமதிக்கப்படுவதில்லை.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானகுற்றங்கள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிரானபாலியல் தாக்குதல்கள், தமிழ்நாட்டில் சீராக அதிகரித்துவருகின்றன. ஒருபுறம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவன்கொடுமைகள் அதிகரித்து வரும் வேளையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கவும்படுகிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்களில் குற்றத்தீர்ப்பு, தேசிய சராசரியில் பாதியளவே இருக்கிறது.
2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில், மிகப்பெரிய கள்ளச்சாராய பெருந்துயர்கள், மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சுமார் 100 மனிதர்கள்இறந்தார்கள், பலநூறு குடும்பங்கள் கள்ளச்சாராயத்தால் நிலைகுலைந்து போயின.
ஏழை மக்களின் மரணத்திலும், அழிவிலும் இலாபம் அடையும் கள்ளச்சாராயத்தின்பெருமுதலைகள் சுதந்திரமாக இருக்கும் அதேவேளையில், கீழ்மட்டத்தில் இருக்கும் கையாட்கள் சிலர் மட்டுமே கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். தங்களுடைய வாழ்க்கையையேசமூகநீதியை நிலைநிறுத்த அர்ப்பணித்த இரட்டைமலைசீனிவாசன் அவர்கள், எம்.சி. ராஜா அவர்களைப் போன்றதாழ்த்தப்பட்ட சமூகத்தின் மாபெரும் தலைவர்கள் பற்றிப்பெருமிதம் கொள்ளும் மாநிலத்தில், தாழ்த்தப்பட்ட மக்களின்மீது இத்தகைய கொடுமைகள் நடக்கின்றன.
நண்பர்களே, சில ஆண்டுகள் முன்புவரை, தனியார்முதலீட்டாளர்களால் மிகவும் விரும்பப்பட்ட மாநிலமாக நமதுமாநிலம் இருந்தது. ஆனால் இன்று முதலீட்டாளர்கள்தமிழ்நாட்டை விடுத்து மற்ற மாநிலங்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். 2021-22 ஆம் நிதியாண்டில், மாநிலங்களிலேயே அந்நிய நேரடி முதலீட்டை அதிக அளவில்ஈர்த்த 4-ஆவது மாநிலமாக தமிழ்நாடு இருந்ததோடு, 3 பில்லியன்அமெரிக்க டாலர்கள் அளவு முதலீட்டைப் பெற்றது. 2023-24 ஆம்ஆண்டில் நமது மாநிலம் 6-ஆவது நிலைக்கு வீழ்ச்சிகண்டதோடு, 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவேமுதலீட்டைப் பெற்றது.
அதேவேளையில், கர்நாடகம் 6.5 பில்லியன் டாலர் அளவும், குஜராத் 7.3 பில்லியன் டாலர் அளவும், மஹாராஷ்டிரம் 15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவும்முதலீடுகளை ஈர்த்தன. தெலங்காணாவும், ஹரியாணாவும் ஒருகாலத்தில் நமக்கு அடுத்த நிலையில் இருந்தார்கள்; ஆனால் இப்போது அவர்கள் நம்மைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறி விட்டார்கள். குறைந்து வரும் தனியார் முதலீடுகள், தொழில்கள் மற்றும் சேவைத்துறைகளின் வேகத்தைக் குறைத்திருக்கிறது. இது மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும், வேலைவாய்ப்பிற்கும் பாதகமான விளைவுகளை உண்டாக்கும். முதலீட்டாளர்களை அச்சுறுத்தும் காரணங்களை நாம் அகற்றியாக வேண்டும்.
நண்பர்களே, ஒரு சமூகத்தில் நடக்கும் தற்கொலைகள் தாம்அதன் சமூக மற்றும் பொருளாதாரத் துயரின் அளவுகோல். நாட்டிலேயே மிக அதிக தற்கொலை வீதம் உடைய மாநிலமாகதமிழ்நாடு இருக்கிறது. ஒரு இலட்சம் மக்கள் தொகைக்குசராசரி 12 தற்கொலைகள் என்பது தேசிய சராசரி. நமதுமாநிலமான தமிழ்நாட்டிலோ, ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு26-க்கும் மேற்பட்ட தற்கொலைகள் என்ற நிலை இருக்கிறது. இது தேசிய சராசரியை விட இருமடங்கிற்கும் அதிகமானது.
நமது மாநிலத்தில் சுமார் 20,000 பேர்கள் ஒவ்வொரு ஆண்டும்தற்கொலை செய்து கொள்கிறார்கள். தமிழ்நாடு தான் இந்தியாவின் தற்கொலைத் தலைநகரம் என்கிறார்கள் தரவு ஆய்வாளர்கள். பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள், ஏழைகள். தீவிரமான சமூக மற்றும் பொருளாதாரத் துயர் நிறைந்த சூழல், வளர்ச்சிக்கும் நீதிக்கும்எதிரானது. இதில் விரிவான உடனடி இடையீடுதேவைப்படுகிறது.
நண்பர்களே, தேசிய புலனாய்வு முகமை-NIA எனும்தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்மத்திய முகமை, நமது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்செயல்பட்டு வரும் தீவிரவாத வலையமைப்புக்களின் அலகுகளையும், இரகசியமாகச் செயல்படும் தீவிரவாதிகளையும் அவ்வப்போது கண்டுபிடித்து செயலிழக்கச் செய்து வருகிறது.
இவற்றில் சில தீவிரவாத அலகுகள், ஆஃப்கனிஸ்தான், மத்தியகிழக்கு மற்றும் மேற்காசிய நாடுகளில் இயங்கி வரும் சர்வதேச தீவிரவாத வலையமைப்புக்களோடு தொடர்பு கொண்டவை.
தேசிய பாதுகாப்பு பற்றிய மிகமிகத் தீவிரமான கவலையைஅளிக்கும் விஷயம் இது. இது நமது சமூக நல்லிணக்கத்தைசீர்குலைத்து, நமது பொருளாதாரத்தைக் கடுமையாகத்தகர்க்கக்கூடிய திறன் கொண்டது. மக்கள் விழிப்போடு இருக்கவேண்டும், அமலாக்க முகமைகள் தீவிரத்தோடு அவர்களைக்களையெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
நண்பர்களே, 2047-லே வளர்ச்சியடைந்த பாரதமாக ஆகும்பாதையில் நமது தேசம் தன்னம்பிக்கையோடு பயணிக்கும்வேளையிலே, உள்நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் சரி, சிலசுயநலமிகளும், எதிரிசக்திகளும் நமது முன்னேற்றத்தின்வேகத்தைக் குலைக்க முயற்சி செய்து வருகிறார்கள். இனம், சமயம், மொழி, சாதிகளின் பெயரால் நமது சமுதாயத்தைப் பிளவுபடுத்தி, அதைச் சிதைக்க முயற்சி செய்கிறார்கள். தவறான, எதிர்மறை கூற்றுகள் வாயிலாக, நமது மக்களின்நெஞ்சுரத்தை பலவீனப்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள். நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதும், அரசியல்சட்டபூர்வமாக நிறுவப்பட்ட அமைப்புகளின் மீதும், நமதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் பொய்யான கருத்துரைகளைப் பரப்பி வருகிறார்கள். இத்தகைய தேசவிரோதக் கூறுகளுக்கு எதிராக, விழிப்போடு இருக்கவேண்டும் என்று உங்கள் அனைவரிடமும் நான்வலியுறுத்துகிறேன்.
நண்பர்களே, பாரதத்தின் அரசியல் சட்டம்ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் ஆன வேளையை நாம்கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இது ஓராண்டுக்காலக்கொண்டாட்டம். இதில் அனைவரும் சுறுசுறுப்போடு பங்கெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். நமது கனவுகள், நமது சிந்தனைகள், நமது இலக்குகள்அனைத்துமே நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கின்றன. நமது உரிமைகளும், கடமைகளும் அரசியலமைப்புச் சட்டத்தில்இருக்கின்றன.
நாம் சென்று சேருமிடமும், திசைகளும் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கின்றன. ஒவ்வொரு இந்தியருக்கும், அனைத்திலும் மிகமிகப் புனிதமானபுத்தகமாகும் இது. இது இந்திய மக்களாகிய நம்அனைவருக்கும் சொந்தம். இதை நாம் மீட்டெடுப்போம், உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும் நாம் கொண்டாடுவோம்.
மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நான் எனதுவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று- தமிழக முதல்வர் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன், செய்தியாளர்களிடம் பேசும் போது கூறினார்.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 60 நாட்களாக மேலூர் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அரிட்டாபட்டி சென்ற பாஜக தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு நிச்சயமாக டங்ஸ்டன் திட்டத்தை கொண்டு வராது என உறுதி அளித்து இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை விவசாயிகள் ஏழு பேர் கொண்ட 11 பேர் குழுவினர் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் தலைமையில் மத்திய சுரங்கத் துறைஅமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசினர்.
இதனைத் தொடர்ந்து, டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நேற்று அறிவிப்பு வெளியிட்டார் . இது மேலூர் பகுதி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த 21ம் தேதி டெல்லி சென்ற விவசாயிகள் இன்று காலை விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு மேலூர், அரிட்டா பட்டி வள்ளாலபட்டி, கிடாரி பட்டி, கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் மதுரை விமான நிலைத்தில் வரவேற்பு அளித்தனர் .
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் டங்ஸ்டன்பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கிறது.மத்திய அமைச்சர் மூலமாக டங்ஸ்டன் சுரங்கத்திற்கு கொடுத்த அனுமதி ஏலம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இந்த முடிவுக்கு அனைவரும் வரவேற்பு தெரிகின்றனர். எந்தெந்த மாநிலங்களில் கனிம வளங்கள் உள்ளது என நாடு முழுவதும் ஜியாலஜிகல் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
டங்ஸ்டன் அரியவகை தாது பொருள். அதை தற்போது வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்து வருகிறோம் தமிழ்நாட்டில் இருப்பதால்தான் தமிழக அரசிடம் பேசி ஏலம் விட தயாரான போது மாநில அரசு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. விவசாயிகளுடன் கலந் து ஆலோசித்தபோதுதான் இங்கிருக்கும் பாதிப்புகள் எங்களுக்கு தெரியவந்தது. மக்கள் தெரிவித்த கருத்துக்களை அமைச்சர் ஏற்றுக் கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த அரசு இருக்கும். இதற்காக மோடியிடம் பேசி டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தார்
மத்திய அமைச்சர். டங்ஸ்டன் போராட்டத்தை திசை திருப்ப முயன்றும் பொது மக்கள் உறுதியுடன் போராடினர்.
டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ததை தொடர்ந்து டெல்லி சென்ற விவசாயிகள் கிஷன் ரெட்டிக்கு அரிட்டாபட்டி வர விவசாயிகள் அழைப்பு விடுத்ததாகவும் அவரும் வருவதாக ஒத்துக் கொண்டுள்ளாதாக தெரிவித்தார்.
இதற்காக பாடுபட்ட அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோருக்கும் எல்லா வற்றிற்கும் காரணமான பிரதமர் மோடிக்கும் நன்றிதெரிவித்தார்.
தமிழக அரசின் நடவடிக்கையால்தான் மோடி அரசு பணிந்து திட்டத்தை ரத்து செய்துவிட்டதுஎன, தமிழக முதல்வர் தெரிவித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு ?
ராம.சீனிவாசன் இந்த விவகாரத்தை நான் அரசியலாக பார்க்கவில்லை , அதற்காக அனைத்து கட்சியினருமே போராடி உள்ளனர். ஆனால் இந்த விஷயத்தை அரசியலாக இப்போது பேச விரும்பவில்லை. அதற்காக தனியாக நான் பதில் கூறுகிறேன் என்றார்.
தொடர்ந்து, திட்டத்தை அறிவித்தவர்களே வெற்றியாக கொண்டாடுவது தான் அரசியல் என கனிமொழி எம்பி கூறியது குறித்த கேள்விக்கு
ஆயிரம் பேர் ஆயிரம் பேசியிருக்கலாம் அவர்களுக்கு ஆதரவாக இருப்பது போல் நடித்து இருக்கலாம் .ஆனால் உண்மையிலேயே விவசாயிகளுக்காக உடனிருந்து மக்கள்கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தது பிரதமர் மோடி தான் என தெரிவித்த ராம சீனிவாசன் , டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.
வள்ளால பட்டி மகாமுனி டங்ஸ்டன் போராட்ட குழு பேட்டி:
மேலூர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக மக்கள் கவலையோடு இருந்தார்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தது.மதுரை நோக்கி மிகப்பெரிய நடைபயணம் மேற்கொண்டு இருந்தோம்.இந்தப் போராட்டத்தின் விளைவாக மிகப்பெரிய வெற்றி பரிசு கிடைத்திருக்கிறது.எங்கள் கிராமத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை டங்ஸ்டன் திட்டம் கிராமத்திற்கு வராது என உறுதி அளித்தார்.அதை ஏற்றுக் கொண்டு மத்திய அமைச்சர் டெல்லி சென்று அவரிடம் மேலும் விவகாரம் பற்றி தெரிவித்தோம் .
கேட்ட அமைச்சர் தொடர்பாக பிரதமரிடம் பேசிவிட்டு செல்வதாக கூறினார்.
நாங்கள் முடிவு தெரியாமல் இருந்து செல்ல மாட்டோம் என கூறினோம் அதை ஏற்றுக் கொண்டு அடுத்த அடுத்த நாள் டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்யப்பட்ட ஆணையை எங்களிடம் .இத்திட்டத்தை ரத்து செய்தால் பிரதமர் மோடிக்கும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் பாஜக நிர்வாகிகள் அனைவருக்கும் கிராமத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம் ….
ஆனந்த் அம்பலகாரர் டங்ஸ்டன் போராட்ட குழு பேட்டி :
சுரங்கம் தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினோம்.அமைச்சர் மூர்த்தி எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தார்.
அதேபோல், பாஜக தலைவர் அண்ணாமலையும் உறுதி கொடுத்தார்.இந்த போராட்டம் இந்தியாவிற்கு நம்பிக்கை தரக்கூடிய ஒரு போராட்டம், பாஜக தலைவர் சொன்னது போல் டெல்லி சென்றுமத்திய அமைச்சரிடம் பேசி இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளனர். திட்டம் ரத்து செய்யப்பட்டது. மிக்க மகிழ்ச்சி. திட்டத்தை ரத்து செய்த அனைவருக்கும்நன்றி தெரிவிப்பதாக கூறினர்.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ததை தொடர்ந்து தற்செயலாக சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த ஓ.ப. ரவீந்திரநாத் குமார் அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மகாலட்சுமி பெண்கள் எழுச்சி இயக்கம் மேலூர்.
நவம்பர் மாதம் ஏழாம் தேதி ஜங்ஷன் தொடர்பாக தகவல் தெரிந்ததும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டோம் அவர்கள் எனக்கு முழுமையாக தெரியவில்லை என கூறினார்கள் அடுத்தடுத்து டென்ஷன் நிலம் எடுப்பு தொடர்பாக அறிவிப்புகள் வெளியானது அதனைத் தொடர்ந்து விவசாயிகள் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தொடர் போராட்டம் நடத்தினோம் அதில் மேலூர் முதல்மதுரை மத்திய தபால் அலுவலகம் வரை நடைபயண போராட்டம் நடத்தினோம்.
இதனைத் தொடர்ந்து, மக்களின் பல்வேறு அழுத்தங்களுக்கு ஒன்றிய அரசு செவி சாய்த்து போராட்ட குழுவினர் விவசாய பிரதிநிதிகள் அடங்கிய குழு டெல்லி சென்று தற்போது டங்ஸ்டன் திட்டம் ரத்து என அறிவிப்பு வெளியானது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.
கம்யூனிஸ்ட்கள் எங்களால்தான் இந்த வெற்றி கிடைத்தது என்கிறார்கள். திமுக வழக்கம் போல் அவர்களால்தான் ஒன்றிய அரசு பணிந்தது என்கிறார்கள். எதிர்த் தரப்பில் இருக்கும் அனைவருமே தமது வெற்றி என்று முழங்குகிறார்கள்.
இது வழக்கமாக நடப்பதுதான். ந்யூட்ரினோ, மீத்தேன், எட்டு வழிச்சாலை என ஆரம்பித்து மத்திய அரசின் பெரும்பாலான திட்டங்களை தனீ நாடான தமிழ் நாட்டுக்கு வேண்டாம் என்று சொல்லி போராடி வென்று காட்டியிருக்கிறார்கள். எனவே அவர்கள் இன்னொரு வெற்றி என்று கொண்டாடத்தான் செய்வார்கள்.
இதில் புதியதொரு மாற்றமாக தமிழக பாஜகவும் இதைத் தனது வெற்றி என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறது. இதிலும் வழக்கம்போல் இது அண்ணாமலையின் வெற்றி என்று சிலரும் நரேந்திர மோதியின் வெற்றி என்று சிலரும் வடக்கு தெற்காக நின்றுகொண்டு நூதன முறையில் கொண்டாடுகிறார்கள்.
யாருக்குமே இந்தத் திட்டம் வருவது பிடிக்கவில்லையென்றால் யார்தான் இதை கொண்டுவர விரும்பினார்கள்?
எல்லாருமே வெற்றி பெற்றுவிட்டால் தோற்றது யார்..?
நிபுணர்கள் குழு ஆராய்ந்துதான் இந்தத் திட்டத்தை மத்திய அரசிடம் சமர்ப்பித்திருப்பார்கள். சம்பந்தப்பட்ட அமைச்சகம் இதில் மக்களுக்கு இருக்கும் நன்மை, அரசுக்குக் கிடைக்கும் நற்பெயர், கட்சிக்குக் கிடைக்கும் மைலேஜ் இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்துத்தான் அடுத்தகட்டப்பணிகளை முன்னெடுத்திருப்பார்கள். இப்போது ஏன் அதை முடக்கியதே பெரும் வெற்றி என்று சொல்கிறார்கள்.
திமுககூட முதலில் ஒத்துழைத்ததாகத் தெரிகிறது. அவர்கள் அப்படித்தான். அவர்கள் கூட்டணியில் இருந்தபோது கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் மத்தியில் ஆட்சி பறிபோனதும் எதிர்க்க ஆரம்பித்தார்கள்.
பொதுவாகவே மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களையும் அதை எதிர்த்து நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்களையும் பார்த்தால் ஒரு பேட்டர்ன் புரியவரும்.
காங்கிரஸ் கூட்டணியினர் தமது ஆட்சி காலத்தில் தாம் முன்னெடுத்த நீட் தேர்வு, ஜி.எஸ்.டி., சி.ஏ.ஏ., அந்நிய நிதி முதலீடு, அதானி அம்பானிக்கு ஆதரவு என அதே வழியில் பாஜக செல்லும்போதும் அதை கண்மூடித்தனமாக எதிர்த்துவருகிறார்கள். எதனால் இப்படி என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றுமே புரியாது.
சில காலம் எதிர்த்தபின் அடங்கிவிடுவார்கள். இதையும் தனியாக யோசித்துப் பார்த்தால் புரியாது. பாஜகவின் வெற்றியாகக் கூட சிலர் இதைச் சொல்வதுண்டு. ஆதார் கார்ட் எதிர்ப்பு, நீட் தேர்வு, சி.ஏ.ஏ., எதிர்ப்பு என எல்லாம் பிசுபிசுத்துப் போனதை வைத்துப் பார்த்தால் பாஜக ராஜ தந்திரமாக போராட்டங்களை நடக்கவிட்டு அவர்களைக் களைத்துப் போகவைத்து வெற்றி பெற்றதாகத் தோன்றும்.
ஆனால் காங்கிரஸ் கூட்டணி ஒரு திட்டத்தை முன்னெடுத்து, ஆட்சி பறிபோனபின் எதிர்த்து, சிறிது காலத்தில் அடங்கிப் போனது என்ற இந்தத் தொடர் நிகழ்வுகளை ஒன்றுகூட்டிப் பார்த்தால் புரியாத பல விஷயங்கள் புரியவரும்.
அதாவது ஒரு திட்டத்தை அதில் கிடைக்கும் கமிஷன் தொடங்கி பல காரணங்களால் காங்கிரஸ் கொண்டுவர விரும்புகிறது. ஆட்சி பறிபோகிறது. திட்டங்களின் பலன் தனக்குக் கிடைக்காமல் போவதை வைத்து எதிர்க்க ஆரம்பிக்கிறது.
கமிஷன் போகிறது என்று சொல்லி எதிர்ப்பது கெளரவமாக இருக்காது. எனவே அந்தத் திட்டத்தில் யார் பாதிக்கப்படுவாரோ அவருக்கு உதவும் போர்வையில் களத்தில் கலகத்தைத் தூண்டுகிறது.
பாஜக ஆட்சியில் இருந்தாலும் அந்த திட்டத்தின் காண்ட்ராக்ட் மற்றும் முழு கட்டுப்பாடும் தன் ஆட்களுக்குக் கிடைக்கும் வரையில் அறப்போர் நிகழ்த்துகிறது. திரைமறைவில் பேரம் ஆரம்பிக்கிறது. பாஜகவும் திட்டம் அமலானால் போதும் என்று காங்கிரஸ் சொல்லும் ஆட்களிடம் திட்டத்தை ஒப்படைத்துவிடுகிறது.
பாஜகவுக்குத் திட்டத்தைக் கொண்டுவந்த பெருமை; காங்கிரஸ் கூட்டணிக்கு அந்தத் திட்டம் தன் கட்டுப்பாட்டில் அமலாகும் வாய்ப்பு. தன் ஆட்களுக்கு அதை மடை மாற்றித் தர முடிந்த வசதி இவையே போதுமானதாக இருக்கிறது. அப்பறம் கொஞ்ச காலம் இந்திய, இந்து தர்ம, பாஜக எதிர்ப்பை அணையாமல் கிளறிவிட்ட பலனும் இருக்கிறது.
ஆதார் கார்ட் விஷயத்தில் அண்டை நாடுகளில் இருந்து ஊடுருபவர்களுக்கெல்லாம் போலியாக தயாரித்துக் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்ததும் அமைதியாகிவிட்டார்கள்.
நீட் தேர்வுக்குப் பின்னரும் காசு வாங்கிக் கொண்டு மருத்துவ சீட் கொடுக்கும் வழியை உருவாக்கிக் கொண்டதும் ஒப்புக்கு திவசம் கொண்டாடிவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள்.
ஆக, நாட்டில் மத்திய அரசு கொண்டுவரப்படும் திட்டங்கள், அதைத் தொடர்ந்து எழும் எதிர்க்கட்சியின் போராட்டங்கள், சில திரை மறைவு பேரங்களுக்குப் பின் இரு தரப்பும் வெற்றி பெற்று தமது முகாமுக்குத் திரும்பிக் கொள்கிறார்கள்.
தேசத்தையும் தர்மத்தையும் எதிர்ப்பதற்கு மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை அமலாக்கும் காண்ட்ராக்ட் மூலமே எதிரிகளுக்குக் காசு கிடைத்துவிடுகிறது.
இது ஒருபக்கமென்றால் இதில் பெரிதும் தோற்பது பாஜக கட்சியினரே. ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டால் அதன் மூலம் கட்சியினருக்கு நன்மைகள் கிடைக்கவேண்டும். ஊழல், லஞ்சம் என்ற வழியில் அல்ல. எந்தவொரு திட்டமும் கோடிக்கணக்கான முதலீட்டில் செய்யப்படும். நேர்மையாக அதைச் செய்து கொடுக்கும் பலருக்கு நியாயமாகவே வாழ்வாதாரம் பெருகும்.
நூலகத்துக்கு 10 கோடி ஒதுக்கி ஒரு திட்டம் கொண்டுவந்தால் கட்சியைச் சேர்ந்த நாலைந்து பேருக்காவது அந்தத் திட்டத்தை நடத்தும் பொறுப்பை ஒப்படைத்தால் அது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழிவகுக்கும். அதில் அவர்கள் எந்த ஊழலும் செய்யாமலே சம்பளமாகவே நல்ல தொகையை சம்பாதித்துக்கொள்ள முடியும். வாழ்நாள் முழுவதும் கொள்கைப் பிடிப்புடன் விசுவாசமாகக் களமாடிக் கொண்டிருக்க முடியும்.
பாஜக கொண்டுவரும் திட்டங்கள் எல்லாமே எதிர் கட்சிகளால் எதிர்க்கப்பட்டு அதை அமல்படுத்தும் பொறுப்பு, காண்ட்ராக்ட் எல்லாம் எதிரிகளுக்கே சென்று சேர்ந்தால் பாஜகவினர்தான் நடுத்தெருவில் நிற்கவேண்டியிருக்கும். பாஜக இந்தப் பொறுப்பை நேரடியாக காங்கிரஸ் கூட்டணிக்காரருக்குக் கொடுக்காது. ஆனால், பாஜகவில் சேர்ந்துகொண்டு காங்கிரஸுக்கு வேலைபார்க்கும் நபர்களுக்குக் கொடுக்கிறார்கள்.
எளிய உதாரணம் தேர்தல் கால கூட்டணி. திடீரென்று எதிர் முகாமில் இருந்து சிலர் இங்கு வருவார்கள் புதிதாக சிலர் கூட்டணியில் சேருவார்கள். தேர்தலுக்கான பணம் முழுவதும் பாஜக அவர்களுக்குக் கொடுக்கும். நம்மவர்கள் தியாகம், நாட்டுப்பற்று, அவல், பொரி என்று அரும்பாடுபடவேண்டும். தேர்தல் முடிந்ததும் அவர்கள் அடங்கிப் போய்விடுவார்கள். நாம் பொரி உருண்டையை மறுபடியும் உருட்ட ஆரம்பிக்கவேண்டும்.
ஊடகங்களுக்கென்று கணிசமான தொகை வந்துகொண்டே இருக்கிறதாம். எங்கு போகிறது என்றுதான் தெரியவில்லை. அம்பானி தொலைகாட்சியிலேயே ஏ கார்ப்பரேட்டே… ஏ பாயச அரசே என்று தகர உண்டியல்கள் குலுங்குகின்றன.
தியாகம், தேசம், தர்மம், பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய் என்று பல தத்துவங்கள் மிகவும் நல்லவைதான். நம் அம்பறாத்தூளியில் இந்த அம்புகள் ஏராளம் உண்டு என்றாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அதுவே பெரும் சுமையாக கனக்க ஆரம்பித்துவிடும். ஆயுதமே சுமையாகிவிட்டால் போர் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.
எதிரிகள் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டாலும் பரவாயில்லை. கட்சியினருக்கு நன்மை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. திட்டங்கள் அமலானால் போதும் என்ற இந்த தாராள அணுகுமுறை நிச்சயம் சரியில்லை. ஏனென்றால் திமுக போன்ற அரசும் தொழிற்சங்கங்களாலும் இடதுசாரிகளாலும் பீடிக்கப்பட்ட அதிகாரவர்க்கமெல்லாம் மத்திய அரசின் திட்டங்களை இந்து விரோதிகளுக்கே மடைமாற்றிவருகின்றன.
எனவே எந்தத் திட்டமாக இருந்தாலும் பாஜகவினராலேயே இந்துத்துவராலேயே அது மக்களுக்குச் சென்று சேரவேண்டும். நாம் எந்த நல்லதையும் பெருமைக்காகச் செய்யவேண்டாம். ஆனால் தேச பக்தியும் தெய்விக நம்பிக்கையும் கொண்டவர்களுக்கு அது சென்று சேர்கிறதா என்பதை உறுதிப்படுத்தியாகவேண்டும்.
இந்த டங்க்ஸ்டன் விவகாரத்தில் புதுமையாக திட்டத்தையே அனைவரும் முடக்கிவிட்டார்கள். தமிழக பாஜக இந்த வெற்றியைத் தனது சட்டமன்றத் தேர்தலுக்குப் பயன்படுத்திக்கொள்ளக்கூடச் செய்யும்போலிருக்கிறது. பாருங்கள் நாங்களும் நரேந்திர மோதிக்கு எதிரானவர்கள்தான். திமுகவுக்குத் தரும் வாக்கில் கொஞ்சத்தை எங்களுக்கும்கொடுங்கள் என்று கேட்பார்கள் போலிருக்கிறது.
ஏதோ டங்க்ஸ்டன் நிபுணர்கள் தாமாகவே ஒரு திட்டம் கொண்டுவந்துவிட்டதாகவும் மத்திய பாஜகவும் மாநில பாஜகவுமே சேர்ந்து அதை போட்டி போட்டுக் கொண்டு முடக்குவதெல்லாம் நன்றாக இல்லை.
தமிழகத்தில் எல்லா கட்சிகளும் எதிர்க்கும்போது தமிழக பாஜக மட்டும் ஆதரிப்பதால் தனிமைப்பட்டுபோகிறோம் என்பது உண்மையே. ஆனால் நாமும் சேர்ந்து எதிர்த்தால் மத்திய பாஜக மேலும் தனிமைப்படும்.
அது நிலைமையை மேலும் மோசமாக்கும்.
ஏதேனும் திட்டத்தை இனிமேல் கொண்டுவருவதாக இருந்தால் மாநிலக் கிளைகள் ஆதரிக்குமா என்பதையும் கேட்டுவிட்டுக் கொண்டுவருவது நல்லது. மத்திய மாநில அரசுகளுக்கிடையே மட்டுமல்ல; நாட்டின் கட்சிகளுக்கிடையே மட்டுமல்ல; ஒரு தேசியக் கட்சியின் கிளைகளுக்குள்ளேயே பரஸ்பர உரையாடல், ஜனநாயகம், கூட்டுறவு எல்லாம் மிகவும் அவசியம். மாநிலக் கிளை ஒரு திட்டம் வேண்டாம் என்று சொன்னால் அதை மத்திய கிளை/அரசு ஆரம்பத்திலேயே பரிசீலனை செய்துகொள்ளவேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலானாலும் சட்ட மன்றத் தேர்தலானாலும் பிராந்திய கட்சியினர்தானே வாக்கு கேட்டு மக்களைச் சந்தித்தாகவேண்டியிருக்கும்.
அந்தக் கள பிரதிநிதிகளின் குரலுக்கு முதலிலேயே மதிப்பு கிடைக்கவேண்டும்.
இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன் இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள், பாஜக.,வினர், ஹிந்து உணர்வாளர்கள் பலர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக பாஜக., சட்டமன்றத் தலைவரும் நெல்லை தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் திருப்பரங்குன்றம் வந்திருந்தனர்.
இது குறித்து நயினார் நாகேந்திரன் கூறியபோது…
1931ல் திருப்பரங்குன்றம் மலை தொடர்பில் பிரிட்டிஷ் நீதிமன்றம் தீர்ப்பளித்த போது, மலை முழுவதும் முருகன் கோயிலுக்குச் சொந்தமானது என தீர்ப்பளித்துள்ளது. 1994ல் உயர் நீதிமன்றத்திலும் அதே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர் நமக்குக் கற்றுக் கொடுத்தது கடவுள் வழிபாடு. அதை விட்டுக் கொடுக்கவோ மாற்றவோ முடியாது.
அப்துல் சமது, எம்.எல்.ஏ., நவாஸ்கனி எம்.பி., ஆகியோர் திருப்பரங்குன்றம் வந்து மலையில் ஆய்வு செய்துள்ளனர். இது ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும். நான் கூட இங்கே வந்திருக்க மாட்டேன், அப்துல் சமதும் நவாஸ் கனியும் வந்ததால் நாங்களும் வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அப்துல் சமதும் நவாஸ் கனியும் திருப்பரங்குன்றம் வந்ததை, சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் செயலாகத்தான் நான் பார்க்கிறேன். மலை மேல் முன்பு அசைவம் சமைத்தது கிடையவே கிடையாது. புதிய பழக்கத்தை ஏற்படுத்த வேண்டாம். இதற்கு முன்பு என்ன பழக்கம் இருந்ததோ அதைக் கடைபிடிப்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவர்கள், இது எங்கள் மலை, எங்களுக்குச் சொந்தம். இப்பழக்கத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்று சொல்வது சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும்” என்றார்.
இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் கூறியபோது…
“திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மேலும் மலையில் குரங்குகள் அதிகம் உள்ளன. அவற்றுக்குப் போதுமான உணவு கிடைக்காததால் பக்தர்கள் கொண்டு வரும் உணவுப் பொருள்களை பறிக்கின்றன. அவைகளுக்கும் உணவளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.
இதனிடையே,, திருப்பரங்குன்றம் முழுவதும் முருகப்பெருமானுக்கு தான் சொந்தம்” என ஹிந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,
திருப்பரங்குன்றம் முழுவதும் முருகப் பெருமானுக்குத் தான் சொந்தம். சுல்தான் ஆட்சியில் அடக்கம் செய்ததை வைத்துக் கொண்டு எஸ்டிபிஐ., உள்ளிட்ட அமைப்புகள் மதக் கலவரத்தைத் துாண்டும் வகையில் செயல்படுகின்றன. அமைச்சர் சேகர்பாபு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கருத்து தெரிவித்திருக்க வேண்டும். தி.மு.க.,வில் இருக்கும் ஹிந்துக்கள் யோசிக்க வேண்டும். இரும்புக் காலத்திற்கு முன்பே எங்கள் முருகப்பெருமான் வந்து விட்டார். வள்ளலாரையும், வள்ளுவரையும் தி.மு.க., ஆக்கிரமிக்க நினைக்கிறது… என்று கூறினார்.
ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.
இவை தவிர, ஸ்த்ரீ தர்மம் பற்றிப் பெரியவா கூறிய கருத்துகளைப் பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும் என்ற தனி நூலாகவும் அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும், ரா. கணபதி அண்ணாவால் தொகுக்கப்பட்டு இதுவரை தெய்வத்தின் குரல் ஏழு பகுதிகளில் வெளியாகாத சில பகுதிகளும் உண்டு. தற்போது இவை ஒழுங்குபடுத்தப்பட்டு ஆசார்ய ஸ்வாமிகள் அருளுரை (தெய்வத்தின் குரல் எட்டாம் பகுதி) என்ற நூல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இந்த ஒன்பது நூல்களில் இருந்து ஒருசில கருத்துகளை மட்டும் தேர்ந்தெடுத்து தினசரி பெரியவா தியானம் என்ற புதிய நூல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மகா பெரியவா கூறியுள்ள 366 கருத்துகள் தரப்பட்டுள்ளன. இவை ஒரு நாளுக்கு ஒரு கருத்து என்ற விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை என்று இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தினத்துக்கும் இரண்டு பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இடது பக்கத்தில் மகா பெரியவா படமும், வலது பக்கத்தில் மகா பெரியவா கருத்து ஒன்றும் தரப்பட்டுள்ளன.
மகா பெரியவாளின் மொழிநடை எளிமையாக்கப்பட்டு, தற்காலத் தமிழ் நடையில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தற்கால இளைஞர்களும் இந்த நூலை எளிதாக வாசித்துப் புரிந்துகொள்ள முடியும்.
அதேநேரத்தில், முதியவர்களும் இந்த நூலை ஆர்வத்துடன் பயன்படுத்துவார்கள் என்பதால் பெரிய எழுத்துரு (14 பாயின்ட்) பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நூல் அன்பர்களின் தினசரிப் பயன்பாட்டுக்கானது என்பதால் மிகத் தரமான காகிதமும் (100 ஜிஎஸ்எம் மேப்லித்தோ), ஹார்ட் பைண்டிங்-உம் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நூல் சில அன்பர்கள் அளித்த நிதி உதவியின் துணை கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனால், ரூபாய் 500 மதிப்புள்ள இந்த நூல் ரூபாய் 100 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது நாங்கள் 2000 பிரதிகள் மட்டுமே அச்சிட்டுள்ளோம். இவற்றில் பொது ஸ்தாபனங்கள், நிதி உதவி செய்த அன்பர்கள் என்ற வகையில் 400 பிரதிகள் எங்களது தேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மீதி 1600 பிரதிகள் விற்பனைக்குத் தயாராக உள்ளன.
மேலும், நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்ற நூலையும் வெளியிட்டுள்ளோம். இது தெய்வத்தின் குரலைத் தொகுத்த ரா. கணபதி அண்ணாவைப் பற்றிய சில நினைவுகள் அடங்கியது.
இதுவும் சில அன்பர்கள் அளித்த நிதி உதவியுடன் வெளியிடப்படுகிறது. எனவே, ரூபாய் 250 மதிப்புள்ள இந்த நூல் ரூபாய் 100 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நூல் ஆயிரம் பிரதிகள் மட்டுமே அச்சிட்டிருக்கிறோம். பொது ஸ்தாபனத் தேவைகளுக்காக 250 பிரதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதி 750 பிரதிகள் மட்டுமே விற்பனைக்குத் தயாராக உள்ளன.
மிக முக்கியமான தகவல்கள்
கொரியர் செலவு விவரம்
தினசரி பெரியவா தியானம் நூலின் விலை ரூபாய் 100/- கொரியர் செலவு (சென்னை) ரூபாய் 60/- (தமிழ்நாட்டின் இதர பகுதிகள்) ரூபாய் 110/- ஆக, மொத்தச் செலவு (சென்னை) ரூபாய் 160/- (தமிழ்நாட்டின் இதர பகுதிகள்) ரூபாய் 210/-
நந்தவனத்தில் ஓர் ஆண்டி நூலின் விலை ரூபாய் 100/- கொரியர் செலவு (சென்னை) ரூபாய் 40/- தமிழ்நாட்டின் இதர பகுதிகள் ரூபாய் 60/- ஆக, மொத்தச் செலவு (சென்னை) ரூபாய் 140/- (தமிழ்நாட்டின் இதர பகுதிகள்) ரூபாய் 160/-
வெளி மாநிலங்கள் ஒவ்வொன்றுக்கும் கொரியர் செலவு மாறும். எனவே, கொரியரில் அனுப்புவதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம்.
ரெஜிஸ்டர்ட் பார்ஸல் (போஸ்ட் ஆஃபீஸ்) செலவு விவரம்
தினசரி பெரியவா தியானம் நூலின் விலை ரூபாய் 100/- தபால் செலவு (இந்தியா முழுவதும்) ரூபாய் 70/- ஆக, மொத்தச் செலவு (இந்தியா முழுவதும்) ரூபாய் 170/-
நந்தவனத்தில் ஓர் ஆண்டி நூலின் விலை ரூபாய் 100/- தபால் செலவு (இந்தியா முழுவதும்) ரூபாய் 50/- ஆக, மொத்தச் செலவு (இந்தியா முழுவதும்) ரூபாய் 150/-
இரண்டு நூல்களும் வேறு வேறு சைஸ் இருப்பதால் இரண்டையும் சேர்த்து பேக் பண்ண முடியாது. எனவே, இரண்டுக்கும் சேர்த்துத் தபால் செலவு 120 ரூபாய் என்பது தவிர்க்க முடியாதது.
மேட்டூர் ட்ராவல்ஸ் செலவு விவரம் : 20 பிரதிகளுக்கு மேல் வாங்கும் வெளியூர் அன்பர்களுக்கு மேட்டூர் ட்ராவல்ஸ் மூலம் அனுப்பலாம். ஒரு பார்ஸல் செலவு ரூபாய் 300/- (மேட்டூர் ட்ராவல்ஸ் சர்வீஸ் இருக்கும் ஊர்களுக்கு மட்டுமே அனுப்ப முடியும். இதர ட்ராவல்ஸ் மூலம் அனுப்ப இயலாது.)
நேரில் வருவோருக்கு : நேரில் வந்து வாங்குவோருக்கு இத்தகைய கூடுதல் செலவுகள் இல்லை. அடக்க விலைக்கே வாங்கிக் கொள்ளலாம்.
மிக மிக முக்கியமான குறிப்பு : அலுவலக நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
தொலைபேசியில் தொடர்பு கொண்ட பின்னர் மட்டுமே பணம் அனுப்பவும் அல்லது நேரில் வரவும்.
தொடர்பு முகவரி வேத ப்ரகாசனம் இரண்டாவது மாடி 64, மதுரை சாமி மடம் தெரு (சொந்தம் ப்ரின்டர்ஸ் & பப்ளிஷர்ஸ் மாடியில்) (செம்பியம் தீயணைப்பு நிலையம் அருகில்) பெரம்பூர், சென்னை – 11 வாட்ஸ்அப்: 7550113406 / 9445309852 ஈமெயில்: vedaprakaasanam@gmail.com / purnavani@gmail.com
அன்பர்கள் கவனத்திற்கு,
பெரியவா பக்தர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துக்காக மட்டுமே இந்த நூல்களை நாங்கள் வெளியிட்டுள்ளோம். தினசரி பெரியவா தியானம் புத்தகத்தின் எடை சுமார் 1 கிலோ. நந்தவனத்தில் ஓர் ஆண்டி நூலின் எடை 300 கிராம். மேலும், தற்போது புக் போஸ்ட் வசதி கிடையாது. இந்த இரு காரணங்களால் தபால் செலவு நிறைய ஆகிறது.
நாங்கள் பலரிடம் பண உதவியைப் பெற்றுக்கொண்டு மிகக் குறைந்த விலையில் நூல்களை வெளியிட்டும் வாசகர்கள் தேவையில்லாமல் அதிகச் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, நாங்கள் பக்தியுடன்தான் இந்த நூல்களை வெளியிட்டிருக்கிறோம் என்றாலும், ஒவ்வொரு பிரதியாக பேக்கிங் பண்ணித் தபாலில் அனுப்புமளவு எங்களிடம் பணியாளர்கள் இல்லை.
இருந்தாலும், நாங்கள் அனுப்புவதற்குத் தயாராகவே இருக்கிறோம். அதேநேரத்தில், எங்கள் சிரமங்களைப் புரிந்துகொண்டு எங்களுடன் ஒத்துழைக்குமாறு அனைவரையும் பணிவுடன் வேண்டுகிறோம்.
பல அன்பர்கள் ஒருங்கிணைந்து அனைவர் சார்பாகவும் ஓரிருவர் மட்டும் எங்கள் அலுவலகத்துக்கு நேரில் வந்து பிரதிகளைப் பெற்றுக்கொள்வது எங்களுக்கும் வேலை குறைவு. வாசகர்களுக்கும் தபால் செலவு மிச்சம். அதேபோல, வெளியூர் அன்பர்கள் பலர் இணைந்து மேட்டூர் ட்ராவல்ஸ் வழியாகப் பிரதிகள் பெற்றுக்கொள்ள முயற்சிக்கலாம். ஆன்மிக ஸ்தாபனங்கள் தங்களது உறுப்பினர்கள் சார்பில் 20-30 பிரதிகள் வாங்கிக்கொள்ளலாம்.
பிரதிகள் பலரைச் சென்றடைய வேண்டும். அச்சிட்டுள்ள பிரதிகளும் குறைவு. எனவே, ஒரு குடும்பத்துக்கு ஓரிரு பிரதிகள் மட்டும் போதும். இதர அன்பர்களின் தேவையைக் கருத்தில் கொள்வது நலம்.
முதலில் வருவோருக்கே முன்னுரிமை. விருப்பம் உள்ள அன்பர்கள் தொடர்பு கொள்ளவும்.
அடியேன் தீபம் இதழாசிரியராக இருந்தபோது, 2015ல் பழக்கமானவர் ஹைதராபாத்தில் வசித்து வரும் திருமதி ராஜி ரகுநாதன். தஞ்சைத் தமிழர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகத் திறன் வாய்ந்தவர். சிறுகதை, கட்டுரை, செய்திக் கட்டுரை என (தெலுகு மொழியில் இருந்து தமிழுக்கு) மொழிபெயர்ப்புத் தளத்தில் சிறப்பாக இயங்கி வருகிறார்.
நம் தினசரி இணையத்துக்கு ரிஷிபீடம் எனும் இதழில் இருந்து கட்டுரைகள், தலையங்கங்களை மொழி பெயர்த்து அனுப்பிய போது, ஆச்சரியமாகவும் மகிழ்வாகவும் இருந்தது. பாரதத்தின் பாரம்பரிய மணம் கமழும் தெளிவான, தீர்க்கமான, தைரியமான கருத்துகளுடன் அமைந்திருந்த கட்டுரைகள் அவை. எழுதியவர் சாமவேதம் சண்முக சர்மா என்று குறிப்பிட்டு அனுப்பிய போதுதான், அவர் குறித்து தெரிந்து கொள்ளும் ஆவலில் தேடத் தொடங்கினேன். மிகச் சிறந்த தேச பக்தர். அது ஒன்றே போதும் நம் மனம் ஈடுபாடு கொள்ள!
பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா – வாக்தேவியின் வரபுத்திரர், சமன்வய சரஸ்வதி போன்ற பல விருதுகளைப் பெற்றவர். தேச பக்தியையும் தெய்வ பக்தியையும் வளர்க்க 1999ல் ‘ருஷிபீடம் பாரத மானச பத்திரிக்கை’ என்ற பெயரில் மாத இதழைத் தொடங்கி, நடத்தி வருகிறார். இவரின் உபந்யாசங்கள் பாரத தேசம் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் நிறைவாக நடந்து வருகிறது. மகாபாரதம், சுந்தரகாண்டம், லலிதா சஹஸ்ரநாமம், ராமாயணம் என, பாரதத்தின் இதிகாச, புராணங்களுடன், அத்தனை பக்தி இலக்கியங்களும் பக்தர்களின் வரலாறுகளும் இவரின் உபந்யாசங்களில் பரிமளிக்கிறது!
இவரின் சொற்பொழிவுகளை ஆதாரமாகக் கொண்டு வெளிநாடுவாழ் பக்தர்கள் ஐந்து முதல் பதினெட்டு வயது வரை உள்ள குழந்தைகளிடம் பாரதப் பண்பாட்டையும் நல்லொழுக்கத்தையும் பேணும் விதமாக ‘துருவ ஞானம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, சிறப்பாக நடத்தி வருகிறார்கள். சிவ ஞானம், குரு ஞானம் ஆகிய அமைப்புகள் மூலம், இளைய தலைமுறைக்கு பாரத பண்பாட்டை பதியவைத்து வருகிறார்.
ருஷிபீடம் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் கோசாலைகள் அமைத்து பசுக்களை பராமரித்து வருவது, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வது, சிறந்த மாணவர்களுக்கு பரிசளித்து உற்சாகப்படுத்துவது, வேத பண்டிதர்களுக்கும் கலைஞர்களுக்கும் ஆண்டு தோறும் விழா எடுத்து கௌரவிப்பது, சிதிலமடைந்த கோவில்களை புனரமைத்து, தூப தீப நைவேத்தியத்திற்கு வசதி செய்வது என நம் பாரம்பரியத் தளத்தில் இயங்கி வருபவர்.
இதன் காரணத்தால், இவருடைய கட்டுரைகள் தமிழ்த் தளத்தில் தொடர்ந்து நம் தளம் வழியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. நிற்க!
மூன்று மாதங்களுக்கு முன், இவருடைய சம்ஸ்க்ருத கவிதை / பாடல்களின் தமிழாக்கத் தொகுப்பை (தெலுகு -> தமிழ்) அனுப்பி, இதை நூலாக்கித் தர முடியுமா என்று கேட்டார் நூலின் மொழிபெயர்ப்பாளரான திருமதி ராஜி ரகுநாதன். உடனே சரி என்றேன். காரணம் – சம்ஸ்க்ருதம் – தமிழ்.
பல்வேறு பணிகளுக்கும் இடையே இதை நூல் வடிவாக்கி, சம்ஸ்க்ருத பாடல்களின் பிழைகள் சரிபார்த்து, தமிழில் ஆர்வமுள்ள அனைவரும் படிக்கும் வகையில் வடிவமைத்து, அட்டையும் தயார் செய்து அனுப்பி வைத்தேன். ‘சிவபதம் – நடராஜ கீர்த்தனைகள்’ சம்ஸ்க்ருதம் – தமிழ் – தமிழில் விளக்கம் என இந்நூல் அச்சாகி வந்துள்ளது.
இந்த நூலின் வெளியீட்டு விழா சிதம்பரத்தில் கடந்த ஜன.20ம் தேதி, சிதம்பரம் தீட்சிதர் பெருமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் இந்தப் பிரதிகள் அங்கிருந்தோர் அனைவருக்கும் விலையில்லா வெளியீடாக அன்புடன் வழங்கப்பட்டுள்ளது.
ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!
ஆறுபடையில் முதல் படைவீடான திருப்பரங்குன்ற மலையைக் காத்திட பிப்ரவரி 4 அன்று மாபெரும் அறப் போராட்டம் நடைபெறும் என்று, இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கை:
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றாகும். இந்தத் திருத்தலம் இருக்கும் மலையானது அகநானூற்றில் முருகன் குன்றம் என்று அழைக்கப்படுகிறது.மேலும் திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, மதுரைக் காஞ்சி, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் இதன் சிறப்பைப் பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் தமிழ் மன்னர்கள் ஆட்சியில் இருந்து இன்றைய ஆட்சியாளர்கள் வரை நிர்வாக ரீதியான ஆவணங்களும் இது முருகன் வீற்றிருக்கும் புனித மலை என்பதற்கான ஆவணங்களும் பல உள்ளன.
திருப்பரங்குன்றம் மலை யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சனை வந்த பொழுது அந்த திருப்பரங்குன்றம் மலை முழுவதுமே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குச் சொந்தமானது என லண்டன் பிரிவியூ கவுன்சில் நீதிமன்ற தீர்ப்பு கூறியுள்ளது. அந்த தீர்ப்பு இன்றும் இருந்து வருகிறது.
1996 ஆம் வருடம் சென்னை உயர்நீதிமன்றமும் குன்றில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதன் பின்னரும் கூட இந்து சமய அறநிலையத்துறை, தீபத் தூனில் தீபம் ஏற்றாமல் மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றி வருகிறது. தீபத்தூணில் தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென இந்து முன்னணியும் இந்துக்களும் பலமுறை போராட்டம் நடத்தியும் அரசு அனுமதி அளிக்காமல் தடுத்து வருகிறது.
இந்நிலையில் அந்த இடத்தின் மீது எந்த உரிமையும் இல்லாத இஸ்லாமிய அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும் அந்த மலையில் உள்ள தர்காவில் ஆடு வெட்டி கந்தூரி செய்வோம் என திட்டமிட்டு மதக் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு திருப்பரங்குன்ற மலைக்கு அத்துமீறி சென்றார்கள்.
கோவிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி பொதுமக்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டி அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டார்கள்.
மணப்பாறை திமுக MLA அப்துல் சமது மற்றும் ராமநாதபுரம் திமுக MP ஆகியோர் திருப்பரங்குன்றத்திற்கு ஆய்வு செய்வதாகச் சொல்லி சென்றுள்ளனர். இது அப்துல் சமதுவின் தொகுதி இல்லை. அதே போல் நவாஸ்கனி அவர்களின் தொகுதியும் இல்லை. அவர்கள் அமைச்சர்களாகவும் இல்லை. அதுமட்டுமல்லாது பயங்கரவாத அமைப்பினரை உடன் அழைத்து சென்றுள்ளனர். இது திட்டமிட்ட சதி என்பது அப்பட்டமாக தெரிகிறது.
இருவரும் திமுக தலைமையின் வழிகாட்டலில் தான் சென்றுள்ளனர் என்பது காவல்துறை அதிகாரிகள் அவர்களை தடுக்காமல், அனுமதி அளித்ததிலிருந்து அறிய முடிகிறது.
இதில் MP நவாஸ் கனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய முருகன் கோவில் முன்பாக அமர்ந்து அசைவ உணவை சாப்பிட்டுள்ளார். இதன் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அந்த புனிதமான மலை மீது காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. அத்தகைய புனிதத்தை கெடுக்க துணிந்துள்ளார் திமுக கூட்டணியின் எம்.பி. நவாஸ் கனி.
மேலும் சமீபத்தில் எஸ்டிபிஐ கட்சியின் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள முஸ்லிம் சமாதியை வைத்து திருப்பரங்குன்றம் மலையை முழுவதுமாக கையகப்படுத்திட வேண்டும் என்றும் இதன்மூலம் தமிழகம் முழுவதும் பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்று பேசியதாக தகவல்கள் தெரிய வருகிறது.
இஸ்லாம் மதத்தின் படி சமாதி கட்டுவது, தர்கா வழிபாடு தடை செய்யப்பட்டது. அது இஸ்லாமிய மத விரோதம் ஆகும். அப்படி இருக்கையில் இது திட்டமிட்டு மதக்கலவரத்தை தூண்டுகிற செயல் தான் என்று முருக பக்தர்கள் எண்ணுகிறார்கள். இவை எதையுமே தடுக்காமல் திராவிட மாடல் அரசு கள்ள மௌனம் சாதித்து வருகிறது.
திட்டமிட்டு திருப்பரங்குன்றம் முதல் படைவீட்டில் மதக் கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் இஸ்லாமிய அமைப்புகளை கண்டித்தும் தமிழக அரசு இஸ்லாமிய அமைப்புகளின் சதியை முறியடிக்க வலியுறுத்தியும் இந்து முன்னணி மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பிப்ரவரி 4ம் தேதி நடத்த இருக்கிறது.
இதில் தமிழக ஆன்மீக அன்பர்கள், உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதில் தமிழக ஆன்மீக அன்பர்கள், முருக பக்தர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இச்செய்தியினை ஒவ்வொரு முருக பக்தருக்கும், தெய்வத்தின் மீது நம்பிக்கை உடைய அனைவருக்கும் பகிருவோம், தெரியப்படுத்துவோம்
அறுபடை வீடுகளுக்கு செல்லும் முருக பக்தர்களின் பாதயாத்திரை குழுக்களில் பகிருவோம். பிப்ரவரி 4ஆம் தேதி கந்தனின் மலையை காக்க ஒன்று சேர்ந்து போராட இந்து முன்னணி அறைகூவல் விடுகிறது.
இந்தியா இங்கிலாந்து முதல் டி-20 ஆட்டம்- கொல்கொத்தா-22 ஜனவரி 2025
போட்டியை வெற்றியுடன் இந்திய அணி தொடங்கியது
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இங்கிலாந்து அணியை (20 ஓவர்களில் 132 ரன், ஜாஸ் பட்லர் 68, ஹாரி ப்ரூக் 17, வருண் சக்கரவர்த்தி 3/23, அர்ஷதீப் சிங், ஹார்திக் பாண்ட்யா, அக்சர் படேல் தலா 2 விக்கட்) இந்திய அணி (12.5 ஓவர்களில் 133/3, அபிஷேக் ஷர்மா 79, சஞ்சு சாம்சன் 26, திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 19, ஹார்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 3, ஆர்ச்சர் 2/21, அதில் ரஷீத் 1/27) ஏழு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையா வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இந்திய அணியில் சஞ்சு சாம்சன் விக்கட் கீப்பராக இடம்பெறுவதால், துருவ் ஜுரல் விளையாடவில்லை; முகம்மது ஷமி, வாஷிங்க்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா ஆகியோரும் விளையாடவில்லை. அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகிய மட்டையாளர்கள்; ஹார்திக் பாண்ட்யா, நிதீஷ் ராணா இருவரும் பந்துவீசும் ஆல்ரவுண்டர்கள்; ரிங்கு சிங் இறுதியில் அடித்து ஆடும் ஒரு ஆட்டக்காரர்; அர்ஷதீப் வேகப்பந்து வீச்சாளர்; வருண், அக்சர், பிஷ்னோய் மூவரும் சுழல் பந்து வீச்சாளர்கள்.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் (பூஜ்யம் ரன்) மற்றும் பென் டக்கட் (4 ரன்) இருவரும் அர்ஷதீப் பந்து வீச்சில் மூன்று ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஜாஸ் பட்லர் (44 பந்துகளில் 68 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்) ஹாரி ப்ரூக் (14 பந்துகளில் 17 ரன்) இருவரும் வேகமாகவே ரன் சேர்த்தனர். எட்டாவடு ஓவரில் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஹாரி ப்ரூக்கும் லியன் லிவிங்க்ஸ்டோனும் ஆட்டமிழந்தனர். ஆட்டம் இந்திய அணியின் கைகளில் வந்தது. அதன் பின்னர் இந்திய அணிக்கு ஏறுமுகம்ந்தான். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 132 ரன் எடுத்திருந்தது.
133 என்ற எளிய இலக்கை அடைய இந்திய அணி அதிக கஷ்டப்படவில்லை. தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் ஐந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தபோதும் 20 பந்துகளில் 26 ரன் அடித்து அணியை நல்ல நிலைக்குக் கொண்டுவந்தார். அதன்பின்னர் அபிஷேக ஷர்மா (34 பந்துகளில் 79 ரன், 5 ஃபோர், 8 சிக்சர்) அதிரடியாக ஆடினார். திலக் வர்மா (16 பந்துகளில் 19 ரன்) அவருக்குத் துணை நின்றார். 12.5 ஓவரில் 133 ரன் அடித்து இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. ஐந்து ஆட்டங்கள் கொண்ட தொடரை வெற்றியுடன் தொடங்கி 1-0 என்ற நிலையில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
அடுத்த ஆட்டம் சென்னையில் 25ஆம் தேதி நடைபெற உள்ளது,
தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக MLA அப்துல் சமது ஆய்வு குறித்து இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என்று, அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
முருக பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலையை வைத்து முஸ்லிம்கள் மதக்கலவரத்தை தூண்டிட ஆளும் திமுக கட்சி சதி செய்கிறது என இந்து முன்னணி பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறது. மணப்பாறை தொகுதி திமுக எம்எல்ஏ அப்துல் சமது, எஸ்டிபிஐ கட்சியின் பொறுப்பாளர்களுடன் திருப்பரங்குன்றத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளார்.
இது அப்துல் சமதுவின் தொகுதி இல்லை. அவர் அமைச்சரும் இல்லை. அதுமட்டுமல்லாது பயங்கரவாத அமைப்பினரை உடன் அழைத்து வந்துள்ளார். இது திட்டமிட்ட சதி என்பது அப்பட்டமாக தெரிந்தும் காவல்துறை அதிகாரிகள் அவர்களை அனுமதித்துள்ளனர்.
சமீபத்தில் எஸ்டிபிஐ கட்சியின் பொறுப்பாளர்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள முஸ்லிம் சமாதியை வைத்து திருப்பரங்குன்றம் மலையை முழுவதுமாக கையகப்படுத்திட வேண்டும் என்றும் இதன்மூலம் தமிழகம் முழுவதும் பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்று பேசியதாக தகவல்கள் தெரிகிறது.
இவர்களின் மனநிலை இவர்களின் சதிச் செயலை வெளிப்படுத்துகிறது. திருப்பரங்குன்றம் மலை முருகனின் மலை என்பதற்கு தமிழ் இலக்கியங்களில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. மேலும் தமிழ் மன்னர்கள் ஆட்சியில் இருந்து இன்றைய ஆட்சியாளர்கள் வரை நிர்வாக ரீதியான ஆவணங்களும் இது முருகன் வீற்றிருக்கும் புனித மலை என்பதற்கான ஆவணங்களும் பல உள்ளன.
மேலும் லண்டன் நீதிமன்றம் முதல் சென்னை உயர்நீதிமன்றம் வரை அது முருகனின் மலை என்று உறுதி கூறியுள்ளன. மேலும் அம்மலைமீது கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இத்தகைய சமாதி கட்டும் சதிச் செயல்களை, கோவில்களை ஆக்கிரமிக்க முகலாயர் காலத்தில் இருந்தே செய்யப்பட்ட உத்தி என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன. உதாரணமாக எட்டுக்குடி முருகன் கோவில் தான் ஏர்வாடி தர்காவாக மாற்றப்பட்டது என்பது வரலாறு.
அதுபோல கர்நாடகாவில் உள்ள ஶ்ரீ ரங்கபட்டினம் ரங்கநாதர் கோவிலின் உள்ளேயே முஸ்லிம் சடலம் புதைக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் இஸ்லாம் மதத்தின் படி சமாதி கட்டுவது, தர்கா வழிபாடு தடை செய்யப்பட்டது. அது இஸ்லாமிய மத விரோதம் ஆகும்.
அப்படி இருக்கையில் இது மதக்கலவரத்தை தூண்டுகிற செயல் தானே. புனிதமான மலை மீது முஸ்லிம்கள்சட்டவிரோதமாக உள்ள முஸ்லிம் சமாதியில் வழிபட சபாநாயகர் அப்பாவு அவர்களிடம் அப்துல் சமது மனு அளித்தார். அப்போதே முதல்வர் தலையிட்டு கண்டித்திருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் அமைப்புகளின் ஒவ்வொரு அமைப்பும் போட்டி போட்டு கொண்டு இதனை பிரச்சினையாக்க முயல்கின்றன என்பது வெளிப்படையாக தெரிந்தும் தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது.
தமிழகத்தில் மத கலவரத்தை தூண்டும் செயலுக்கு தமிழக ஆளும் கட்சி துணைபோகிறது.முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை அதற்கு உரிய முக்கியத்துவத்தை ஏற்படுத்தவில்லை.
அதுபோல மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றம் பகுதியின் மேம்பாட்டிற்கு உரிய நிதியை அளித்து மேம்படுத்த வேண்டும்.எனவே இத்தகைய போக்கு ஒட்டுமொத்த முருக பக்தர்களை அவமதிக்கும் செயல். ஒருபுறம் உலக முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் நாடகம் நடத்திய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக அரசு உடனடியாக இந்த சதி செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும் இதனை திமுக தொடர நினைத்தால் உலகம் முழுவதிலும் இருக்கும் முருக பக்தர்கள் மற்றும் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தை ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டத்தை இந்து முன்னணி முன்னெடுக்கும் என்பதை இந்து முன்னணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.