Home Blog Page 136

பொங்கல் வெளியீடாக நாளை வெளியாகும் ‘மெட்ராஸ்காரன்’!

madraskaaran - 2026

“மெட்ராஸ்காரன்”  திரைப்படம், பொங்கல் பண்டிகை வெளியீடாக, ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகிறது!!

SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஷ்  தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ளது “மெட்ராஸ்காரன்” திரைப்படம்.

இந்தப் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டுப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

முன்னதாக இப்படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் சிங்கிள் பாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று  டிரெய்லரை வெளியிட்டனர்.

 பத்திரிக்கை, ஊடக,  நண்பர்கள்  முன்னிலையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு, படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்…

தயாரிப்பாளர் B.ஜெகதீஷ் பேசியதாவது..
ஒரு படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்குவது பத்திரிக்கையாளர்கள் தான், உங்களுக்கு நன்றி. டீசரை வெளியிட்டுத் தந்த எஸ் டி ஆருக்கும், டிரெய்லரை வெளியிட்டுத் தந்த விஜய் சேதுபதி அவர்களுக்கும் நன்றி. அடுத்ததாக விடாமுயற்சி டீமுக்கும் அஜித் சாருக்கும் நன்றி. அவர்களால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது. இந்தப்படத்தை ஆரம்பித்த போது பொங்கல் மாதிரி பண்டிகையில் வெளியிட வேண்டும் என நினைத்தோம், அது நடந்துள்ளது. இது பொங்கல் பண்டிகைக்கு ஏற்ற படம். காதல், ஆக்சன் என எல்லாம் அம்சங்களும் இப்படத்தில் உள்ளது. இந்தப்படத்தோடு பத்து படங்கள் பொங்கலுக்கு வருகிறது. வரட்டும் கண்டிப்பாக மெட்ராஸ்காரன் உங்களுக்குப் பிடிக்கும். என்னுடன் என் டீம் துணை நிற்பார்கள். அனைவருக்கும் நன்றி.

எடிட்டர் வசந்த் பேசியதாவது…
மெட்ராஸ்காரன் என் முதல் படம், இந்த வாய்பைத் தந்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.
இந்த திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வருகிறது அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசியதாவது…
இறுதியாக ஜனவரி 10 ஆம் தேதி மெட்ராஸ்காரன் திரைப்படம் பொங்கலுக்கு வருகிறது. தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கு வாழ்த்துக்கள். அவர் மிகச்சிறந்த தயாரிப்பாளர், மிகச் சிறந்த மனிதர். திரைத்துறைக்குத் தேவையான தயாரிப்பாளர். இந்த திரைப்படத்திற்கு,  எத்தனை தடைகள் வந்தாலும்,  விட்டுவிடாமல் தயாரித்துள்ளார்.  எனக்கு இந்த திரைப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இந்தப்படத்தில் மிக நல்ல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஷேன்  நிகம் வெல்கம் டு தமிழ் சினிமா, வாழ்த்துக்கள்.  நிஹாரிகாவுக்கும் வாழ்த்துக்கள். கலையரசன் மிகச் சிறந்த கோ ஸ்டார்,  அவருக்கும் வாழ்த்துக்கள். ஜனவரி இந்த பொங்கலுக்கு மெட்ராஸ்காரன்  படத்தைப் பார்த்து எல்லோரும் ஆதரவு தாருங்கள். இயக்குநர் வாலி மோகன் தாஸுக்கு வாழ்த்துக்கள். இந்த திரைப்படம் உங்களுக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும்.  அனைவருக்கும் நன்றி.

நடிகை நிஹாரிகா பேசியதாவது…
எங்களது திரைப்படம் இறுதியாக இந்தப் பொங்கலுக்கு வெளியாகிறது.  நான் நிறையப் பேருக்கு நன்றி சொல்ல வேண்டும்,  முதலில் தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கு நன்றி. அவர் பல தடைகளைத் தாண்டி, இந்த திரைப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு தயாரிப்பாளராக, ஒரு படத்தைத் தயாரிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது, எனக்கு தெரியும். இந்த நிலைக்கு இந்த படத்தைக் கொண்டு வந்ததே வெற்றியின் முதல் படி தான். ஒரு மிகச் சிறந்த திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறீர்கள்.  இதில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களும் தங்களது முழு உழைப்பைத் தந்திருக்கிறார்கள். எடிட்டர் வசந்த் மிக அட்டகாசமாகப் படத்தைத் தொகுத்து இருக்கிறார். இசையமைப்பாளர் சாம் சி எஸ்,  உங்களின் மிகத் தீவிர ரசிகை நான், மிக அற்புதமான இசையைத் தந்து இருக்கிறீர்கள். காதல் சடுகுடு  பாட்டைத் தந்த சரிகமா நிறுவனத்திற்கு நன்றி. என்னுடன் இணைந்து நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் வாலி மோகன்தாஸ், இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி. மெட்ராஸ்காரன் திரைப்படம் கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும், உங்களை மகிழ்விக்கும். இப்படத்தில் கலையரசன் , ஷேன்  நிகம் இருவருக்கும் கொடுக்கும் அன்பை, எனக்கும் தாருங்கள். அனைவருக்கும் நன்றி.

நடிகர் கலையரசன் பேசியதாவது…
மெட்ராஸ் என் சொந்த ஊர், எப்போதுமே எனக்கு மெட்ராஸ் பிடிக்கும். மெட்ராஸ்காரன் திரைப்படத்தில் ஒரு பங்காக நானும் இருப்பது, மகிழ்ச்சி. நடிகர் ஷேன் நிகம் வெல்கம் டு தமிழ் சினிமா.  தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கு வாழ்த்துக்கள். மிகச்சிறந்த படத்தைத் தந்துள்ளீர்கள், ஒரு படத்தைத் தயாரிப்பதை விட, அதை ரிலீஸ் செய்வது மிகவும் கஷ்டம். இன்றைய நிலைமையில், தியேட்டர் ஓடிடி  என பிசினஸ் பார்ப்பது, திரையரங்குக்குத் திரைப்படத்தைக் கொண்டு வருவது, மிகப் பெரிய படங்களுக்கே சிக்கலாக உள்ளது, அந்த வகையில் இந்த படத்திற்கு டிரெய்லருக்கு ஒரு விழா, டீசருக்கு ஒரு விழா, என மிக சிறப்பாக விளம்பரப்படுத்தி வரும் தயாரிப்பாளருக்கு நன்றிகள். என்னிடம் சிலர் என்ன தயாரிப்பாளர் நிறையப் பணம் வைத்திருக்கிறாரா? என்று கேட்டனர். இல்லை  நல்ல மனது வைத்திருக்கிறார் என்று சொன்னேன். என்னுடன் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. எல்லோருமே மிகச் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் பிரசன்னா மிகச் சிறந்த ஒளிப்பதிவைத் தந்துள்ளார். என்னுடைய அடுத்த படத்திற்கும் சாம் சி எஸ் தான்  இசையமைப்பாளர். சாம் சி எஸ்  இசை எப்போதும் நம்முடைய நடிப்பை  அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும், அவருக்கு என் நன்றி. இந்த படத்தில் என் கதாபாத்திரமே மிக வித்தியாசமாக இருந்தது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது, கண்டிப்பாக மெட்ராஸ்காரன் உங்களை மகிழ்விக்கும் படைப்பாக இருக்கும். இந்த பொங்கலுக்கு நிறையத் திரைப்படங்கள் வருகிறது, ஒரு பெரிய படம் வரவில்லை என்றவுடன் இத்தனை திரைப்படங்கள் வருவது, நல்ல விஷயம் தான், ஆனால் இது நார்மலாகவே நடந்தால் நன்றாக இருக்கும். ஒரு பண்டிகையின் போது, முன்பெல்லாம் பல திரைப்படங்கள் வெளியாகும் நிலை இருந்தது, அந்த நிலை மீண்டும் வரவேண்டும். அனைவருக்கும் நன்றி

இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது…
இப்படத்திற்காக நிறையப் பேருக்கு நன்றி சொல்ல வேண்டும்.  இப்படத்தை மக்களிடம் எடுத்துச் சென்றதிற்காக பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் ஜெகதீஷ், இப்படத்தை டீசரில் ஆரம்பித்து, சிங்கிள், டிரெய்லர் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விழா எடுத்து, இப்படத்தை மிகச் சிறப்பாக எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார் அவருக்கு என் நன்றிகள். அடுத்ததாக ஐஸ்வர்யா தத்தா, அவர் எனது  நெருங்கிய நண்பர், இந்த படம் அவரால் தான் துவங்கியது, அவருக்கு என் நன்றிகள். ஷேன் நிகம் என்னை நம்பி இந்த படத்திற்குள் வந்ததற்கு நன்றி. நிஹாரிகா உங்களுக்கு ஒரு முறை தான், கதை சொன்னேன், என்னை நம்பி வந்ததற்கு நன்றி. கலையரசன் அண்ணன் உடன் நிறைய உரையாடினேன், மிகச் சிறந்த மனிதர் அவருக்கு என் நன்றிகள். நடிகர் கருணாஸ் என் வாழ்க்கையிலும் அவர் மிக முக்கியமான நபர், இந்தப் படத்தில் மிக சீரியஸ் ரொல் அதை மிக அழகாகச் செய்து தந்தார்.  இந்தப் படத்திற்காக என்னுடன் உழைத்த அனைத்து படக்குழுவினருக்கும் நன்றிகள்.  கண்டிப்பாக இந்த படம் உங்களை மகிழ்விக்கும் நன்றி.

நடிகர் ஷேன் நிகம் பேசியதாவது…
நான் ரொம்ப லக்கி, மலையாளத்தில் கூட எனக்கு இப்படிச் சிறப்பான அறிமுகம் கிடைக்கவில்லை. தமிழில் ஒரு மிகச் சிறப்பான திரைப்படம் கிடைத்திருக்கிறது. தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கு நன்றி. அவர் இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்து வருகிறார்.  என்னை இந்த கதாபாத்திரத்திற்கு யோசித்த இயக்குநர் வாலி மோகன் தாஸுக்கு நன்றி. என்னுடன் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி.  நடிகர் கலையரசன் மிக இயல்பானவர். பார்த்தவுடன் மச்சான் என அழைத்து, மிக இயல்பாகப் பழகுவார். அவ்வளவு எளிமையானவர். ஒளிப்பதிவாளர் பிரசன்னா மிகச் சிறந்த ஒளிப்பதிவு தந்துள்ளார்.   இவரை விட  வெகு வேகமாக வேலை செய்யும் ஒளிப்பதிவாளரை நான் சந்தித்ததே இல்லை. எடிட்டர் வசந்த் மிக அற்புதமாகப் படத்தை எடிட் செய்துள்ளார். இசையமைப்பாளர் சாம் சி எஸ் அட்டகாசமான இசையைத் தந்துள்ளார். இப்படத்தில் அனைத்து கலைஞர்களும் மிகச் சிறப்பான உழைப்பைத் தந்து இருக்கிறார்கள். நிஹாரிகா மிகச்சிறந்த கோ ஸ்டார் அவருக்கு நன்றி.  ஐஸ்வர்யா தத்தா மிகவும் அப்பாவி,  இவ்வளவு இன்னொசன்ஸாக ஒருத்தரை நான் பார்த்ததில்லை, மனதில் பட்டதைப் பேசுவார். அவருக்கு இந்தப்படம் திருப்புமுனையாக இருக்கும்.  இந்த படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி

மலையாளத்தில்  புகழ்பெற்ற நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் நாயகனாக  அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை நிஹாரிகா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் கலையரசன், ஐஸ்வர்யா தத்தா முக்கிய பாத்திரங்களில்  இணைந்து நடித்துள்ளனர்.

ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்குக் கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். ரங்கோலி படப்புகழ், இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையைப் புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாகப் படைத்துள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் சி எஸ். இசையமைக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள இப்படம் இந்த பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக, வரும் 2025 ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

ஆளுநர் ரவி செய்தது சரியா?

governor ravi in ayya vaikundar function - 2026

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும், ஆளுனரின் வழி காட்டதலுக்கு ஏற்ப அரசு நடப்பதைப் போன்ற தோற்றத்திற்காக, ஆளுனர் உரை வாசிக்கப்படும் முறை உருவாக்கப்பட்டது. ஆனால், ஆளுனரின் எதிர்ப்பைப் பெற்று அரசு தொடர்வதே இப்போது மரபாகி விட்டது.

ஆளுனர் உரை என் பதற்கு பதில் அரசின் உரை என்று இருந்து விட்டால், அதில் என்ன எழுதியிருந்தாலும் அவருக்கு கவலை இருந்திருக்காது. அவர் பெயரிலான உரையில், அவர் விரும்பாதவற்றையும், எதிர்க்கின்றவற்றையும் தொகுத்து அவர் வாயாலேயே வாசிக்கச் செய்வதை எந்த கவர்னர்தான் விரும்புவார்? மனசாட்சி உள்ளவருக்கு அது தண்டனை போலாகி விடாதா?

அதிலும், சில நாட்களுக்கு முன் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற வெட்கக்கேடான சம்பவம் மக்கள் மனதிலிருந்து இன்னும் மறையாத நிலையில், அச்சம்பவத்தை மறைத்து , எல்லாம் ஒழுங்காக நடைபெற்று வருகிறது என்பது போன்ற உரையை எப்படி அவர் வாசிக்க முடியும்? இன்றைய நிலையில், திமுகவின் கூட்டணிக் கட்சிகளே கூட அத்தகைய உரையை ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகம்.

சென்ற ஆண்டாவது ஓரிரு வரிகளைத் திருத்திப் படித்தார். இந்த ஆண்டு மொத்தத்தையுமே மாற்ற வேண்டும் போலிருக்கிறதே என்று நினைத்திருப்பார் என்னவோ!

திராவிடம் என்பதே ஒரு வேஷம் என்று வெளியே பேசி வருபவர், சட்டசபையில் மட்டும் திராவிட மாடல் , திராவிட மாடல் என்று எத்தனை முறை போலியாகப் பேசுவார்?

அதனால்தான், இதை எப்படித் தவிர்ப்பது என்ற சிந்தனையில் இருந்த கவர்னர் , தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற மரபை பின்பற்றாததையே காரணமாகக் காட்டி , உரையை வாசிக்காமல் தப்பித்து விட்டார் (என்பது அடியேனின் யூகம்).

பெண்களை தலை குனிய வைக்கும் ஒரு சம்பவத்திற்கு முட்டு கொடுக்க விரும்பாத கவர்னர் , தர்மசங்கடத்தைத் தவிர்ப்பதற்காகவே வெளியேறியுள்ளார் . உண்மையாக நடக்க விரும்பும் ஒரு கவர்னர் இப்படித்தான் செயல்படுவார்.

தவறில்லை.

  • துக்ளக் ‘சத்யா’

ஏன் தமிழ்த்தாய் வாழ்த்து?

இந்திய தேசத்தின் ஒரு பகுதி தமிழகம்! எல்லா மதத்தினரும், எல்லா மொழி பேசுபவர்களும் வாழும் மாநிலம் தமிழகம்.

ஒவ்வொரு மதத்தைப் பின்பற்று பவர்களும் அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் வழிபடுகிறார்கள். ஒரு மதத்தினர் பின்பற்றும் வழிபாட்டு முறையைப் போன்று பிற மதத்தினரையும் பின்பற்றும் படி கூற முடியாது!

அதுபோன்று, எல்லா மொழிகளையும் பேசும் ‌மக்கள் வாழும் தமிழகத்தில், அரசு விழாக்களில் ஏன் ஒரு மொழியின் புகழைப் பாட வேண்டும்?

மனோன்மணியம் எழுதிய சுந்தரனார் அவர்கள், தமிழின் சிறப்பைப் பற்றி, தனது நூலில் எழுதி இருக்கிறார். இதைத் தமிழைப் படிப்பவர்களுக்கு படிக்கும் இடத்தில் சொல்லிக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். ஏன் அவர் இப்படி எழுதி இருக்கிறார் என்பதை தமிழை நன்கு கற்பவர்கள் தாங்களாகவே புரிந்து கொள்ள அது ஏதுவாக இருக்கும்!

இந்தத் தமிழ்த் தாய் வாழ்த்தில், சுந்தரனார் அவர்கள் எழுதிய வரிகளில் சில நீக்கப் பட்டுள்ளன என்று எழுந்துள்ள குற்றச்சாட்டும் இங்கு குறிப்பிடத் தக்கது! அவை ஏன் நீக்கப்பட்டுள்ளன? என்ற கேள்வியும் இங்கு எழுகிறது!

தமிழ் மொழியின் சிறப்புக்களில் முதன்மை பெற்று நிற்பது அதில் நிறைந்து காணப்படும் தெய்வீகம்! இந்த தெய்வீகப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவை மாணவர்களுக்கு முறையாகக் கற்பிக்கப் படுகின்றனவா?

கணிசமாக தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, இந்தி ஆகிய மொழிகளைத் தாய் மொழிகளாகக் கொண்டு மக்கள் வாழும் தமிழகத்தில், அரசு விழாக்களில் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடவேண்டும்? அவரவர் தாய் மொழி மீது அவரவருக்கு பற்றுதல் இருக்கும் அல்லவா?

இப்படிப் பாடுவதை அனைவரும் மனதார விரும்புவார்களா?

இது, அனைவரும் முறையாக விவாதித்து எடுத்த முடிவுதானா?

எல்லோருக்கும் பொதுவான தேசியகீதம் என்ற ஒன்று இருக்கும் போது, இந்தத் தேசிய கீதம் இந்தியா முழுவதும் மக்களால் ஏற்கப்பட்டு ஒலிக்கும் ஒன்றாக இருக்கும் போது, அரசு விழாவில் இந்தத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு என்ன கட்டாயம்?

உலகில் எங்கும், ஒரு மொழியைப் புகழ்ந்து பாடல் பாடி அரசு விழா எடுப்பதாகத் தெரியவில்லை!

எல்லா தரப்பு மக்களும் வாழும் மாநிலத்தில், தேசத்தின் ஒற்றுமை குறித்தப் பாடலை மட்டுமே பாடுவது நல்லது! அப்படி எனில் எல்லோர் மத்தியிலும் தேச ஒற்றுமை வளரும்! அதுதான் இன்று நம் நாட்டிற்கு மிக மிக முக்கியமான ஒன்று!

இதில், மக்கள் தங்கள் தங்கள் கருத்துக்களைத் தெளிவாகப் பதிவிட வேண்டிய நேரம் இது!

தமிழக கவர்னர் அவர்கள், தேசிய கீதத்தின் முக்கியத்துவத்தை தமிழக அரசுக்குச் சுட்டிக் காட்டியதில் நியாயம் இருக்கிறது!

இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகு சேர்க்கிறது!

அவர் கவர்னர் என்ற முறையில் தனது கடமையைச் சரியாகச் செய்துள்ளார்!

  • S.இரத்தின சுவாமி.

அரசு மதுபானக் கடைகளில் முதல்வர் படம்; பாஜக., கோரிக்கை!

madurai bjp petition - 2026

தமிழக அரசு கூட்டுறவு மருந்துக் கடைகளிலும் நியாய விலைக் கடைகளிலும் முதல்வர் படம் இடம்பெறுவது போல், அரசு மதுபானக் கடைகளிலும் முதல்வர் படம் இடம்பெற வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர்.

மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகத்திலும், குறிப்பாக அரசு கூட்டுறவு மருந்து கடைகள், அரசு நடத்துகின்ற நியாய விலைக் கடைகளிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. அதேபோல், அரசு நடத்துகின்ற மதுபானக் கடைகளிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் இடம் பெற வேண்டும் என்று கூறி, பாஜக மாவட்ட நிர்வாகி சரவணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அதில், மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தோராயமாக 318 அரசு மதுபானக் கடைகளை பாதியாகக் குறைக்க வேண்டும், மேலும் அரசு அனைத்து மதுபானக் கடைகளும் மூடினாலும் வரவேற்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போஸ்டருக்கு பேர் போன மதுரையிலே… அண்ணாமலைக்கு ஒரு போஸ்டர்!

madurai annamalai poster - 2026

பாஜக தொண்டர்கள் உற்சாகம்! பொதுமக்கள் வரவேற்பு! மீண்டும் தமிழக பாஜக தலைவராக “அண்ணாமலை”. – என்ற வாசகத்துடன் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜக தேசிய தலைமை சார்பில் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை, அந்தந்த மாநிலத்தின் தலைவராக ஒருவரை நியமனம் செய்து பாஜக தலைமை குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பாஜக தேசிய தலைவர் தலைமையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்றாண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் தேர்ந்தெடுக்கும் பணி ஆனது தேசிய தலைமையால் ஆலோசனை செய்யப்பட்டு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், மதுரை பாஜக நிர்வாகிகள் சிலர் (அண்ணாமலையின் ஆதரவாளர்கள்) பிரேக்கிங் நியூஸ் “பாஜக தொண்டர்கள் உற்சாகம் பொதுமக்கள் வரவேற்பு”. என்றும் *மீண்டும் தமிழக பாஜக தலைவராக K.அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். வழி முழுவதும் தொண்டர்கள் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு என்று மதுரை மாநகர் முழுவதும் பாஜக நிர்வாகிகளால் ஒட்டப்பட்ட போஸ்டர் பாஜக நிர்வாகிகள் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு மாநில செயலாளராக இருக்கக்கூடிய செந்தில்குமார் மற்றும் விஷ்ணு பிரசன்னா ஆகிய இருவரும் சார்பில் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்
மற்ற பாஜக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கணக்கெடுப்பில் பாரபட்சம்: அய்யனார்குளம் விவசாயிகள் அதிகாரிகள் மீது புகார்!

madurai ayyanarkulam farmers - 2026
#image_title

சோழவந்தான் : மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம், அய்யனார் குளம் பகுதியில் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்க முயற்சிப்பதாக அதிகாரிகள் மீது புகார் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே அய்யனார்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த புயல் மழை காரணமாக அறுவடைக்கு முன்பே வயல்களில் சாய்ந்ததால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு 40 ஆயிரம் செலவு செய்த நிலையில் பத்தாயிரம் கிடைப்பது சிரமம் என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர் .

வருவாய்த்துறையினர் முறையாக கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அய்யனார் குளம் பகுதியை சேர்ந்த விவசாயி சிவனேசன் கூறுகையில் எனது வயல் ஐந்துக்கும் மேற்பட்ட ஏக்கர் மற்றும் அய்யனார் குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆர் சுரேஷ் ரவி தவம் செல்லதுரை தவமணி மஞ்சுளா மொக்க மாயன் தனிக்கொடி கரிகாலன் போஸ் சுரேஷ் ஜெயபால் காந்தி லதா மலையான் காசி மகன் சுப்பர் தங்கமணி முத்தன் சின்ன குறவக்குடி ஜெயம் தங்க பாண்டி முத்தையா உள்ளிட்ட விவசாயிகள் நடவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு முன்பே பெய்த கன மழை புயல் காரணமாக வயலில் சாய்ந்து பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது

ஏக்கருக்கு 40 ஆயிரம் செலவு செய்த நிலையில் 10 ஆயிரம் கிடைப்பது சிரமமாக உள்ளது. மேலும் வட்டிக்கு பணம் வாங்கியும் நகைகளை அடகு வைத்தும் செலவு செய்த பணத்தை எப்படி எடுப்பது என்று தெரியாமல் இருக்கிறோம். ஆனால் நஷ்டம் அடைந்த விவசாயிகளை கணக்கெடுக்க வந்த அதிகாரிகள் ஒரு சிலரிடம் மட்டும் டாக்குமெண்ட்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

பாதிக்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் வாங்காமல் கணக்கெடுப்பு முடிந்து விட்டதாக தகவல் கூறி விட்டு சென்றுள்ளனர் இது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல் ஆகையால், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளின் டாக்குமெண்ட்களை வாங்கி உரிய நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் மேலும் வருவாய்த்துறையினர் அய்யனார் குளம் பகுதியில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளின் வயல்களையும் பார்வையிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் .

இவ்வாறு கூறுகின்றனர் மேலும், விவசாயிகள் கூறுகையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை அதிகாரிகள் புறக்கணிக்கும் பட்சத்தில் பாதிப்புக்குள்ளான அனைத்து விவசாயிகளும் நெற்கதிர்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

விவசாயிகள் நலன் கருதி அய்யனார்குளம் மற்றும் சின்ன குறவகுடி பகுதிகளில் சேதம் அடைந்த நெற்கதிர்களுக்கு உரிய நிவாரணங்களை சம்பந்தப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அரசிடமிருந்து பெற்று தர வேண்டும் என விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பசும்பாலுக்கு பணம் உயர்த்திக் கோரி ஆர்ப்பாட்டம்

madurai cow milk producers meet - 2026
#image_title

உசிலம்பட்டி: பொங்கலுக்கு போனஸ், பசும்பாலுக்கு 10 ரூபாய் உயர்த்த கோரி கறவை மாடுகளுடன் உசிலம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக ஒவ்வொரு ஆண்டு தோறும் பால் உற்பத்தி விலையை உயர்த்த கோரிக்கை, 50 சதவீத மானிய விலையில் தீவணங்கள், பொங்கலுக்கு போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் பால் உற்பத்தியாளர்கள் மையத்தில் பால் உற்பத்தி விலையை 10 ரூபாய் உயர்த்த கோரியும், கால்நடை தீவணத்திற்கு 50% மாணியம் வழங்க கோரியும், பொங்கல் போனஸ் பெற வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இலவசமாக பால் வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் , ஒவ்வொரு ஆண்டும் போராடியே பால் விலையை உயர்த்தும் நிலை இல்லாது, ஒவ்வொரு ஆண்டின் உற்பத்தி மற்றும் தீவணங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப கனிமாக பால் விலையை அரசே உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் பால் உற்பத்தி விலையை உயர்த்த கோரி தொடர்ந்து பால் நிறுத்த போராட்டம், கறவை மாடுகளுடன் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர.

டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் பேரணி!

madurai farmers protest against tungsten - 2026
#image_title

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்தாயித்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நரசிங்கம்பட்டியில் இருந்து வாகன பேரணியாக புறப்பட்டு மதுரை தல்லாக்குளத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் முற்றுகையிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்து, இன்று நரசிங்கம்பட்டியில் இருந்து பேரணியாகச் சென்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நடைப்பயணம் ஆகவும் புறப்பட்டுச் சென்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூர் முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக நேற்று கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நரசிங்கம்பட்டி பெருமாள் கோவிலில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக நடைப்பயண பேரணியாக மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக விவசாயிகள் அறிவிப்பு செய்து இருந்தனர்.

இந்நிலையில் நடைபயண பேரணிக்கு அனுமதி மறுத்த போலீசார் தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மட்டும் அனுமதி வழங்கினர்.

அனுமதியைத் தொடர்ந்து அரிட்டாபட்டி அ.வல்லாளப்பட்டி, கல்லம்பட்டி, மாங்குளம், கிடாரிப்பட்டி, வெள்ளலூர், உறங்கான்பட்டி, அம்பலகாரன்பட்டி உள்ளிட்ட மேலூர் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நரசிங்கம்பட்டியில் ஒன்று கூடி அங்கிருந்து வாகன அணிவகுப்பு நடத்தி தல்லாகுளத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பாக கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்றனர்.

விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மேலூர் நகர் பகுதி வெள்ளலூர்நாடு கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, கீழவளவு உள்ளிட்ட மேலூர் தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் வணிகர் சங்கங்கள், தினசரி காய்கறி மார்க்கெட் சங்கம், நகை கடை வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கத்தினரும் கடைகளை அடைத்து அவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அவர்கள் நான்கு வழிச்சாலை வழியாக வாகன பேரணியாக வந்து ஒத்தக்கடை மாட்டுத்தாவணி நீதிமன்றம் வழியாக தமுக்கம் மைதானம் வந்து தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்துக்கு செல்லக்கூடாது என போலீஸார் தடுப்புகளை வைத்திருந்தனர். அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புகளை அகற்றிவிட்டுச் செல்ல முயன்றபோது, போலீசாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேரணி நிறைவடைந்ததை முன்னிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

முன்னதாக, போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொள்ளக்கூடாது என மாநகர வடக்கு துணை ஆணையர் அனிதா காவல்துறையினருக்கு வலியுறுத்தியிருந்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் மேலூர் ,நரசிங்கம்பட்டி கொட்டாம்பட்டி ,சிட்டம்பட்டி, டோல்கேட் ,ஒத்தக்கடை மாட்டுத்தாவணி ,அவுட் போஸ்ட் தல்லாகுளம் ,காந்தி அருங்காட்சியகம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்தனர்.

விவசாயிகளின் பேரணி காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெகுநேரம் காத்திருந்து பயணிகள் செல்ல வேண்டியிருந்தது. இதனால் மதுரை திருச்சி சாலையில் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

தில்லி சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்பு; ஈரோடு கிழக்கு தொகுதிக்கும்!

election voting - 2026

தில்லி சட்டமன்றம்

தில்லியில் பிப்ரவரி 5ம் தேதி, 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல்.
வேட்பு மனு தாக்கல் தொடக்கம் 10.012.25
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் 17.01.2025
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 18.01.2025
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் 20.01.2025
தேர்தல் நாள் 05.02.2025
வாக்கு எண்ணிக்கை 08.02.2025

ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் அறிவிப்பு.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை.
வேட்புமனுதாக்கல் தாக்கல் செய்ய வரும் 17ம் தேதி கடைசி நாள்.
இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 20ம் தேதி வெளியாகும்.

தில்லி சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கு மையங்கள் அமைக்கப்படும். 85 வயதை கடந்த வாக்காளர்கள் வீட்டில் இருந்து வாக்களிக்க முடியும். வருகிற 10-ந்தேதி மனுதாக்கல் தொடங்கும். 17-ந்தேதி வேட்புனு தாக்கல் செய்ய கடைசி நாள். வேட்புமனு மீதான பரிசீலனை 18-ந்தேதி நடைபறும். வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 20-ந்தேதியாகும். வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ந் தேதி நடைபெறும்.

முன்னதாக, இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கு மேல் என்பதை விரைவில் எட்டுவோம். வாக்களிப்பதிலும், பெண்களின் பங்கேற்பிலும் புதிய சாதனைகளை படைத்துள்ளோம்.

நான் அறிவிக்கும் கடைசி தேர்தல் தேதி இதுவாகும் தில்லியில் 83.5 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 71.7 பெண் வாக்காளரக்ள் உள்ளனர். மற்றவர்கள் 1261 பேர் உள்ளனர். குறிப்பிட்ட குழுக்களை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் தவறான சேர்த்தல்கள் அல்லது நீக்கங்கள் குறித்து வதந்திகள் பரப்பப் படுகின்றன. வாக்காளர் பட்டியல் முற்றிலும் வெளிப்படையானது. வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் அல்லது சேர்த்தல் முறையாகப் பின்பற்றப்பட்டது. எந்தவிதமான மோசடிக்கும் இடமில்லை.

ஜனநாயகத்தில் உள்ளார்ந்த கேள்வி கேட்கும் உரிமை உள்ளது. அனைத்து சந்தேகங்களையும் நீக்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை. தேர்தல் நடத்தப்படுவதில் 70 நடைமுறைகள் உள்ளன.

2020 பீகார் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த தேர்தல்களில் 15 வெவ்வேறு கட்சிகள் தனிப்பெரும் கட்சிகளாக உருவெடுத்துள்ளன. படிவம் 7 இல்லாமல் வாக்காளர் பெயர் நீக்கம் செய்யப்படாது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் ஒவ்வொரு கட்டத்திலும் முழு வெளிப்பாடு மற்றும் ஆட்சேபனை தெரிவிக்க அரசியல் கட்டுகள் ஈடுபடுகின்றனர்.

வாக்குப்பதிவு நாளுக்கு 7-8 நாட்களுக்கு முன்புதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன, வேட்பாளர்களுக்கு அவர்களின் முகவர்கள் மூலம் ஒவ்வொரு செயல்முறையின்போதும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்று நீதிமன்றங்கள் 42 சந்தர்ப்பங்களில் தீர்ப்பளித்துள்ளன, மோசடி குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை.

வாக்காளர் வாக்குப்பதிவு தரவை மாற்றுவது சாத்தியமற்றது, மாலை 5 மணிக்குப் பிறகு வாக்குப்பதிவு அதிகரிப்பது குறித்து தவறான கருத்து பரப்பப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் மதிப்பை குறைக்க நினைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. வெளிப்படுத்தல் எங்கள் முக்கிய தூண், விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் தரவுத்தொகுப்புகள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கின்றன.

வாக்கு இயந்திரம் குறித்து கேள்வி எழுப்புவது தேர்தலை தடம்புரள வைக்கும். ஏராளமான தரவுகள் சரிபார்க்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.

காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் ராஜீவ் குமார் இன்று அறிவித்தார் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறும்.

இடைத்தேர்தலுக்காக வருகிற 10-ம் தேதி மனுதாக்கல் தொடங்கும். 17-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். வேட்புமனு மீதான பரிசீலனை 18-ம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 20-ம் தேதி எனவும் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதைத் தொடர்ந்து, ஈரோடு மாநராட்சி அலுவலகத்தில் மேயர், துணை மேயர் அறைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அரசியல் தலைவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மறைக்கப்பட்டன.

அண்ணாமலையின் சாட்டையடி மந்திரம்!

annamalai sattaiyadi - 2026

— ஆர். வி. ஆர்

தமிழகத்தில் நிகழ்ந்த ஒரு கேடான சம்பவத்தில் ஒரு எதிர்க் கட்சித் தலைவராகத் தன் வேதனையை, தன் இயலாமையை, வெளிப்படுத்த பாஜக-வின் அண்ணாமலை ஒரு காரியம் செய்தார். அதாவது, மேல்சட்டை அணியாத உடம்பும் நெற்றியில் திருநீறுமாய்த் தனது வீட்டின் முன் நின்று, பலர் முன்னிலையில் தனது மேல் உடம்பை எட்டு முறை தானே சாட்டையால் சுழட்டி அடித்துக் கொண்டார்.

காரணம் இது. சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு மாணவி தன் ஆண் நண்பருடன் தனியாக இருந்த சமயம், ஒரு 37-வயது அயோக்கியன் வந்து அந்த ஆண் நண்பரை விரட்டி அனுப்பி அந்தப் பெண்ணுக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்தான். பின்னர் போலீஸில் அந்தப் பெண் செய்த புகாரைத் தொடர்ந்து, போலீஸ் எப். ஐ. ஆர் எழுதியது.

எப். ஐ. ஆரில் அந்தப் பெண்ணின் போன் நம்பர், அப்பா பெயர், ஊர் எல்லாம் குறிக்கப்பட்டு, தவறாக நடந்தது அந்தப் பெண்தான் என்பது போல் விவரங்கள் குயுக்தியாக எழுதப் பட்டு – அந்த வில்லத்தன எப். ஐ. ஆர் வெளி உலகுக்குத் தெரியத் திட்டமிட்ட மாதிரி – சட்டத்திற்குப் புறம்பாக அந்த எப். ஐ. ஆர் சமூக வலைத்தளங்களில் கசிந்தது.

ஒரு அயோக்கியனின் குற்றத்தைச் சுட்டிக் காட்டுவதை விடவும், பாதிக்கப்பட்ட பெண்ணை இன்னும் மானம் கெடவைத்து அதை ஊர் அறியச் செய்ய முனைந்தது அந்த எப். ஐ. ஆர் – இம்மாதிரி பாதிக்கப்படும் எந்தப் பெண்ணும் இனி அடங்கி ஒதுங்கிப் போகவேண்டும் என்று எச்சரிக்கும் விதமாக.

பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ஒரு அயோக்கியனும் போலீஸ் துறையும் அவரவர் வழியில் அந்தப் பெண்ணுக்கு இழைத்த அக்கிரமத்தையும் அநீதியையும் கடுமையாகச் சாடினார். தான் இதில் ஒன்றுமே செய்ய இயலாத தமிழக அரசியல் சூழலில் தனது மன வேதனையை ஊருக்கு உணர்த்த, மறுநாள் தன்னைத் தானே ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொள்ளப் போவதாக அறிவித்தார். அதோடு, திமுக ஆட்சியிலிருந்து இறக்கப்படும் வரை இனி காலணி அணிய மாட்டேன் என்றும் அறிவித்தார்.

சொன்னபடி அண்ணாமலை சாட்டையடி நடத்திக் கொண்டார், இரண்டு முறை கூடுதலாக.

அண்ணாமலையின் சாட்டையடி மந்திரம் பல மக்களின் தலையைப் பிடித்து பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலத்தைப் பார்க்க வைக்கிறது. தமிழக அரசின் மேல், அதை நடத்தும் திமுக-வின் மேல், அர்த்தமுள்ள கோபம் கொள்ள வைக்கிறது.

அண்ணாமலையின் நீண்ட வார்த்தைக் கண்டனங்களை விட, அவரது ஒரு நிமிடச் சாட்டையடி வைபவம் மூன்று பலன்களைத் தரும். ஒன்று: அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த அவலத்தை ஒரு செய்தியாக மட்டும் கவனித்துப் போகும் பொதுமக்கள் பலரையும் உலுக்கி, ‘ஏய் திமுக அரசே! உனது நிர்வாகத்தில் ஏன் இதுபோன்ற பாதகங்கள் அடிக்கடி நிகழ்கின்றன?’ என்று உள்ளூறச் சீற வைக்கும். இரண்டு: அதிகமான பாஜக-வினரை அண்ணாமலையின் அர்ப்பணிப்பையும் மதிப்பையும் உணரச் செய்து அவர் மீதான மானசீக மரியாதையைக் கூட்டும். மூன்று: முதல் இரண்டும் சேர்ந்து பாஜக-வின் அரசியல் சக்தியைத் தமிழகத்தில் இன்னும் வலுப்படுத்தும், அக்கட்சிக்கான மக்கள் ஆதரவை அதிகப் படுத்தும்.

தனது சாட்டையடி மந்திரத்தால் அண்ணாமலை ஏற்படுத்திய முதல் பலனை, அதாவது மக்கள் பலரையும் தட்டி எழுப்பியதை, பா.ஜ.க–விலேயே அனைவரும் உடனே உணர்வார்கள். அதன் விளைவுதான் இரண்டாவது பலனும், அதாவது கட்சிக்குள் அண்ணாமலை மீதான அபிமானம் மற்றும் மரியாதை உயர்வது.

தன் பங்கிற்கு இப்போது சென்னை உயர்நீதி மன்றமும் பாதிக்கப்பட்ட பெண் விஷயத்தில் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரித்து, மூன்று பெண் ஐ. பி. எஸ் அதிகாரிகள் கொண்ட ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து அதனிடம் குற்ற விசாரணையை ஒப்படைத்திருக்கிறது. தவிர, எப். ஐ. ஆர் கசிந்ததால் பாதிப்படைந்த பெண்ணுக்கு இடைக்கால இழப்பீடாகத் தமிழக அரசு இருபத்து ஐந்து லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டிருக்கிறது.

சரி, அண்ணாமலையின் சாட்டையடி மந்திரத்திற்கு ஏன் அந்த மூன்று பலன்கள் கிடைக்கின்றன – குறிப்பாக, மக்கள் பலரின் மனதை உலுக்கி எழுப்பிய பலன்?

பாரத மக்கள், அதுவும் தமிழக மக்கள், சிந்தனையை விட உணர்ச்சிகளால் அதிகம் வழி நடத்தப் படுகிறவர்கள். இதைச் சில அரசியல் தலைவர்கள் முன்பே உணர்ந்தார்கள். அவர்கள் தமது கட்சிக் காரர்களை “உடன் பிறப்பே”, “ரத்தத்தின் ரத்தமே” என்று அழைத்த உடனேயே கட்சித் தொண்டர்கள் பலரும் அந்த உணர்ச்சிமிக்க வார்த்தைகளில் கட்டுண்டு அப்படி அழைத்த தலைவரிடம் மாறாத அபிமானம் வைத்தார்கள்.

உணர்ச்சி மிகுந்த நம் மக்கள் தமக்குத் தெரிந்த ஒருவர், அதுவும் தாம் பாசம் வைத்திருக்கும் அல்லது மதிக்கும் ஒருவர், தன்னை வருத்திக் கொண்டால், தாங்களும் வருந்துவர், அந்த மற்றவருக்காகக் கவலைப் படுவர். பல வீடுகளில் “நான் சாப்பிடமாட்டேன் போ” என்று ஒருவர் சொன்னால், மற்றவர் முன்னவருக்காகச் சற்று இறங்கி வரலாம். சுதந்திரப் போராட்ட காலத்தில் மஹாத்மா காந்தியின் உண்ணா விரதங்கள் இவ்வாறு மக்களை அவர் கண்ணோட்டத்தின் பால், அவர் போராட்டத்தின் பால், ஈர்த்து அவருக்கு வலு சேர்த்தன.

ஆனால் ஒன்று. எல்லாத் தலைவர்களும் தம்மை வருத்திக் கொள்வதால், மக்களும் கவலை கொண்டு அந்தத் தலைவர்கள் மீது இரக்கம் காட்ட மாட்டார்கள், அந்தத் தலைவர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள். அந்தத் தாக்கத்தை மக்களிடம் ஒரு தலைவன் ஏற்படுத்த விரும்பினால், முதலில் அதற்கான தார்மீக சக்தி அந்தத் தலைவனிடம் இருக்க வேண்டும். அந்தத் தலைவனும் ஒரு முக்கியமான, தன்னலமற்ற, பொதுநலன் கொண்ட ஒரு பிரச்சனைக்காக மட்டும் தன்னை வருத்தி மக்களை ஈர்க்க முனைவான். அதனால்தான் மக்களும் ஈர்க்கப் படுவார்கள்.

அண்ணாமலை அப்படியான தலைவர். மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு என்பதாக அவர் கையில் எடுத்த பொதுப் பிரச்சனையும் முக்கியமானது. ஆகையால் அவரது சாட்டையடி மந்திரம் ஒரு ஆரம்ப நிலை வெற்றியை உடனே கொடுத்திருக்கிறது.

நினைத்துப் பாருங்கள். திமுக எதிர்க் கட்சியாக இருந்து, எந்தக் காரணத்திற்காகவும் அப்போதைய அரசை எதிர்த்துத் திமுக-வின் இளவரசர் உதயநிதி ஸ்டாலின் தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டால், அவர்மீது பரிதாபம் கொண்டு யார் வருந்துவார்கள்? அப்போது அவர் யாரைத் தன்பக்கம் புதிதாக அல்லது வலுவாக ஈர்ப்பார்? அவருடைய கூத்தைப் பார்த்து அவரது கட்சிக்காரர்களே சிரிப்பார்களே!

அண்ணாமலையின் சாட்டையடி மந்திரம் இனி எக்காலமும் வேலை செய்யாமல் போவதற்கு, ஆளும் திமுக ஏதாவது செய்ய வழி உண்டா? உண்டு. என்னவென்றால்:

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீராக நிலவச் செய்ய வேண்டும், பொதுவெளியில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும், குவாரிகளில் கல் மணல் திருடு போகக் கூடாது, போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டும், ஹோட்டல்களில் பிரியாணி சாப்பிட்ட பலவான்களுக்கு, பில் பணத்தைக் கேட்டால் முஷ்டியைத் தூக்கும் தைரியம் வரக் கூடாது, செந்தில் பாலாஜிகளை அரசு போற்றக் கூடாது, ………. சரி, போதும். நடக்கவே முடியாத விஷயங்கள் பற்றி எதற்கு வெட்டிக் கற்பனை?

ஒருவரின் சாட்டையடி ஏற்படுத்திய தார்மீக அதிர்வுகள்

நீதி மன்ற உத்தரவுகளிலும் அண்ணாமலையின் சாட்டையடி சூட்சுமமாகத் தாக்கம் செய்திருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த எண்ணம் நீதிபதிகளின் சட்டப் பொறுப்பை, நியாய உணர்வை, குறைத்து மதிப்பிடுவதல்ல. அண்ணாமலையின் செயலில் உள்ள தார்மீக அதிர்வுகளை மனசாட்சி உள்ளவர்கள் உள்வாங்காமல் இருக்க முடியாது என்பதற்காக இதைச் சொல்கிறேன். அத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்தும் தார்மீக பர்சனாலிட்டியை அவர் சொல்லாலும் செயலாலும் ஏற்கனவே அடைந்து விட்டதால் இந்தப் பலன்கள் கிடைக்கின்றன.

Author: R Veera Raghavan, Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

IND Vs Aus Test: ஐந்தாவது நாளுக்குக் காத்திருப்பு

aus vs india - 2026
#image_title

இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட்-மெல்பர்ன்-டிசம்பர் 26 முதல் 29 வரை

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸ் (122.4 ஓவர்களில் 474 ரன், ஸ்டீவன் ஸ்மித் 140, லபுசேன் 72, சாம் கொன்ஸ்டாஸ் 60, உஸ்மான் க்வாஜா 57, பாட் கம்மின்ஸ் 49, பும்ரா 4/99, ஜதேஜா 3/78, ஆகாஷ் தீப் 2/94, சுந்தர் 1/49) இரண்டாவது இன்னிங்க்ஸ் (82 ஓவர்களில் 228/9, லபுசேன் 70, பாட் கம்மின்ஸ் 41, பும்ரா 4/56, சிராஜ் 3/66, ஜதேஜா 1/33) இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் (119.3 ஓவர்களில் 369 ரன், நிதீஷ் குமார் ரெட்டி 114, வாஷிங்க்டன் சுந்தர் 50, விராட் கோலி 36, ரிஷப் பந்த் 24, கே.எல். ராகுல் 24, பாட் கம்மின்ஸ் 3/89, ஸ்காட் போலண்ட் 3/57, நாதன் லியான் 3/96). ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்னும் ஐந்தாம் நாள் ஆட்டம் மீதமுள்ளது.

          இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தில் ஐந்தாவது நாளுக்குள் நுழைய இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு ஸ்மித் 140 ரன்கள் எடுக்க அந்த அணி 474 ரன்கள் குவித்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிக்கு நிதீஷ் குமார் ரெட்டி 114 ரன்கள் குவித்தார்.

பும்ராவின் மேஜிக் பந்துவீச்சு

          இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாட வந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணிக்கு இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் முகமது சிராஜ் இருவரும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்தார்கள். இருவரும் சேர்ந்து ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 91 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகள் என்ற நிலைக்குத் தள்ளினார்கள். ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கான்ஸ்டாஸ் 8, கவாஜா 21, ஸ்மித் 13, ஹெட் 1, மிட்சல் மார்ஸ் 0, அலெக்ஸ் கேரி 2 என வரிசையாக வெளியேற ஆஸ்திரேலியா அணி பெரிய நெருக்கடியில் சிக்கியது. இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங் டே டெஸ்டில் வெல்வதற்கான வாய்ப்புகள் உருவானது.

லபுசேன் கம்மின்ஸ் இருவரின் நல்ல ஆட்டம்

          ஆஸ்திரேலிய அணிக்கு கடினமான நேரத்தில் மூன்றாவது இடத்தில் வந்த லபுசேன் சிறப்பாக விளையாடி 70 ரன்கள் எடுத்தார். இவருடன் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து விளையாடிய கேப்டன் கம்மின்ஸ் 41 ரன்கள் எடுத்தார். இன்னொரு முனையில் கடைசி விக்கெட்டுக்கு பிரச்சனையை தந்த லயன் ஆட்டம் இழக்காமல் 41 ரன்கள் எடுத்திருக்கிறார். அவருடன் போலன்ட் 10 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.

          இவர்கள் இருவரும் கடைசி விக்கட்டுக்கு 110 பந்துகள் சந்தித்து ஆட்டம் இழக்காமல் 55 ரன் பாட்னர்ஷிப் அமைத்திருக்கிறார்கள். இன்றைய நான்காவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் 333 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இந்திய அணி தங்களுக்கு கிடைத்த இரண்டு வாய்ப்பை பந்துவீச்சில் தவறவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பும்ரா 4, சிராஜ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.

ரோஹித் ஷர்மா

          இந்தப் போட்டியிலும் ரோஹித் ஷர்மா பேட்டிங்கில் சொதப்பினார்; சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஃபீல்டிலும் பந்து வீச்சு, ஃபீலிடிங்க் அமைப்பு ஆகியவற்றில் தவறுகள் செய்தார். அடுத்த ஆட்டத்தில் அவர் இருப்பாரா என்பது சந்தேகத்தில் உள்ளது. இந்த ஆட்டத்திலேயே விராட் கோலி ஃபீல்டிங்கை மாற்றியமைத்ததை பல முறை பார்க்க முடிந்தது.

நிதீஷ் குமார் ரெட்டி

          நிதீஷ் குமார் ரெட்டியினால் அணியின் சமத்தன்மை கெடுகின்றது என சஞ்சய் மஞ்ச்ரேகர் இந்த டெஸ்ட் தொடங்குவதற்கு முன்னர் கூறினார். ஆனால் நிதீஷும் சுந்தரும் ஒரு டெஸ்ட் மேட்சை எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு மற்றவர்களுக்குப் பாடம் எடுத்தனர். நிதீஷ் சதம் அடிப்பதற்கு முன்னர் சுந்தர் ஆட்டமிழந்துவிட்டார். அந்த ஓவரில் மூன்று பந்துகள் மீதமிருந்தன. அந்த மூன்று பந்துகளையும் சிராஜ் தடுத்து ஆடியது ஆட்டத்தின் டென்ஷன் மிகுந்த மூன்று பந்துகள். அடுத்த ஓவரில் நிதீஷ் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

ஆட்டம் என்ன ஆகும்?

          தற்போதைய நிலையில் ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் முன்னிலையில் உள்ளது. நாளை அவர்கள் இன்னமும் 17 ரன்கள் சேர்ப்பார்கள் என நம்புவோம். அப்பொது 350 ரன் கள் என்பது வெற்றி இலக்கு. டெஸ்டில் ஒருநாளில் (அவர்கள் ஆடியது போக மீதமுள்ள நேரத்தில்) 350 ரன் அடிப்பது என்பது மிகக் கடினம். அதுவும் இந்திய மட்டையாளர்களின் ஃபார்மை வைத்துப் பார்க்கும் போது ட்ரா செய்வதே கடினம்.

          ஒரு அருமையான் ஐந்தாம் நாள் ஆட்டம் காத்திருக்கிறது.