இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
*ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 6வது ஆண்டு திருப்பாவை முற்றோதுதல் மாநாடு ஆயிரக்கணக்கான பெண்கள் சீர்வரிசை வழங்கி வழிபாடு*
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கோதை நாச்சியார் தொண்டர் குழுமம் சார்பில் 6-வது ஆண்டு திருப்பாவை முற்றோதுதல் மாநாடு மற்றும் முப்பதும் தப்பாமே சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24-வது பீடாதிபதி ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், கொங்கு மண்டலம் ஸ்ரீ நாராயண ராமானுஜ ஜீயர் ஆகியோர் மங்களாசாசனம் செய்தனர்.
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். .
ஆண்டாள் கோயில் ஆடிப்பூர கொட்டகையில் முப்பதும் தப்பாமே சீர்வரிசை ஊர்வலத்தை ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், ஸ்ரீ நாராயண ராமானுஜ ஜீயர், அமைச்சர் நமச்சிவாயம், ஆர்.ஆர் மருத்துவமனை ராம்சிங் போஸ் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் பட்டுப்புடவை, பழங்கள், மஞ்சள், துளசி, பூ, வளையல் உள்ளிட்ட தங்கள் விரும்பிய பொருட்களை சீர்வரிசை தட்டில் வைத்து, திருப்பாவை பாடல்கள் பாடியவாறு நான்கு ரத வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று ஆண்டாள் சந்நிதியில் சமர்ப்பித்தனர்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று மனதின் குரலில், 2025ஆம் ஆண்டு…… இதோ வந்தே விட்டது, வாயிற்கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறது. 2025ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 75ஆம் ஆண்டு நிறைவடைய இருக்கின்றது. நம்மனைவருக்கும் இது மிகவும் கௌரவம்மிகு தருணமாகும். நமது அரசியலமைப்புச்சட்ட பிதாமகர்கள் நம்மிடத்தில் ஒப்படைத்திருக்கும் அரசியல்சட்டம், காலத்தின் அனைத்துக் காலகட்டங்களிலும் வெற்றிகரமாக வழிகாட்டியிருக்கிறது. அரசியல் சட்டமானது நம்மனைவருக்கும் பாதை துலக்கும் ஒளிவிளக்காய், வழிகாட்டியாய் விளங்குகிறது. பாரத நாட்டின் அரசியல் சட்டம் காரணமாகவே இன்றிருக்கும் இடத்தில் நான் இருக்கிறேன், உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டும் நவம்பர் மாதம் 26ஆம் தேதியன்று அரசியல்சட்ட தினம் தொடங்கி ஓராண்டுக்காலம் வரை நடைபெறக்கூடிய செயல்பாடுகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. தேசத்தின் குடிமக்களை அரசியல் சட்டத்தின் மரபோடு இணைக்க வேண்டி, constitution75.com என்ற பெயரில் ஒரு சிறப்பான இணையத்தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டத்தின் முன்மொழிவினை வாசிக்கும் வகையில் உங்களுடைய காணொளியை இதிலே தரவேற்றம் செய்யலாம். பல்வேறு மொழிகளில் அரசியல்சட்டத்தை வாசிக்கலாம், அரசியல் சட்டம் தொடர்பான வினாக்களை எழுப்பலாம். மனதின் குரலின் நேயர்கள் தொடங்கி, பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், கல்லூரிப்படிப்பு படிக்கும் இளைஞர்கள் ஆகியோரிடம் நான் விடுக்கும் வேண்டுகோள் – இந்த இணையத்தளத்தை அணுகுங்கள், இதோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்பதே.
நண்பர்களே, அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா நடைபெற இருக்கிறது. இந்த வேளையில், அங்கே சங்கமத்தின் கரையில் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன. சில நாட்கள் முன்பாக நான் பிரயாக்ராஜ் சென்றிருந்த வேளையில், ஹெலிகாப்டர் மூலமாக மொத்த கும்பமேளாவும் நடைபெறவுள்ள இடத்தையும் பார்வையிட்ட போது மனதில் பெரும் நிறைவு உண்டானது. என்னவொரு விசாலம்!! என்னவொரு அழகு!! எத்தனை பிரும்மாண்டம்!! அடேயப்பா!!
நண்பர்களே, மகாகும்பமேளாவின் விசேஷம் இதன் விசாலமான தன்மை மட்டுமல்ல; மாறாக இதன் சிறப்பே இதன் பன்முகத்தன்மையில் தான் அடங்கியிருக்கிறது. இந்த ஏற்பாட்டிலே கோடிக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சங்கமிக்கிறார்கள். இலட்சக்கணக்கான புனிதர்கள், ஆயிரக்கணக்கான பாரம்பரியங்கள், பல்லாயிரம் சம்பிரதாயங்கள், பல்வேறு பிரிவுகள் என அனைவரும் இந்த ஏற்பாட்டின் அங்கமாக ஆகின்றார்கள். எங்கும் எந்த வேறுபாடும் காணப்படாது, பெரியவர்-சிறியோர் என்று ஒன்றும் கிடையாது. வேற்றுமையில் ஒற்றுமையின் இந்தக் காட்சியை உலகில் வேறு எங்குமே காண இயலாது. ஆகையால் தான் நமது கும்பமேளா என்பது ஒற்றுமையின் மகாகும்பமேளாவாகவும் திகழ்கிறது. இந்த முறை வரும் மகாகும்பமேளாவும் கூட ஒற்றுமையின் மகாகும்ப மேளாவின் மந்திரத்திற்கு சக்தியூட்டும். நாம் கும்பமேளாவில் பங்கேற்றுத் திரும்பும் போது, ஒற்றுமையின் இந்த உறுதிப்பாட்டை மனதில் ஏந்தி வீடு வருவோம். சமுதாயத்தில் பிரிவினை மற்றும் வெறுப்புணர்வுக்கு முடிவுகட்டும் உறுதிப்பாட்டையும் ஏற்போம். சொற்களில் இதை வடிக்க வேண்டும் என்று சொன்னால்……
மகாகும்பமளிக்கும் செய்தி, நாட்டில் ஒற்றுமை மலரட்டும்.
மகாகும்பமளிக்கும் செய்தி, நாட்டில் ஒற்றுமை மலரட்டும்.
இதை வேறுவகையில் கூற வேண்டுமென்றால்…..
கங்கையின் இடைவிடாப் பெருக்கு, நமது சமூகம் பிளவுபடக்கூடாது.
கங்கையின் இடைவிடாப் பெருக்கு, நமது சமூகம் பிளவுபடக்கூடாது.
நண்பர்களே, இந்த முறை பிரயாக்ராஜில் உள்நாட்டிலிருந்தும், அயல்நாடுகளிருந்தும் பக்தர்கள் டிஜிட்டல் வழிமுறையில் மகாகும்பமேளாவைக் காண இருக்கிறார்கள். டிஜிட்டல்முறை வழிகாட்டல் வாயிலாக பல்வேறு படித்துறைகள், ஆலயங்கள், புனிதர்களின் மடங்கள் வரை சென்றடைய பாதை துலக்கிக் காட்டப்படும். இதே வழிகாட்டும் முறையே வாகன நிறுத்துமிடத்திற்கு நீங்கள் செல்வதற்கும் உதவிகரமாக இருக்கும். முதன்முறையாக கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு chatbot, உரையாடல் பயன்படுத்தப்படும். இந்த செயற்கை நுண்ணறிவு chatbot வாயிலாக, கும்பமேளாவோடு தொடர்புடைய அனைத்துவிதமான தகவல்களும் 11 இந்திய மொழிகளில் பெற முடியும். இந்த chatbot வாயிலாக, தட்டச்சு செய்தோ, குரல்வழி பேசியோ, யாராலும் எந்தவொரு உதவியையும் கோர முடியும். செயற்கை நுண்ணறிவால் இயங்கும் காமிராக்கள் மொத்த திருவிழாப்பகுதியையும் கண்காணித்துவரும். கும்பமேளா நெரிசலில் யாராவது தங்களுடைய சொந்தங்களைப் பிரிய நேர்ந்தால், இந்தக் கேமிராக்கள் மூலமாக அவர்களைத் தேடிப் பிடிக்கவும் உதவிகள் கிடைக்கும். திருவிழா நடைபெறும் எந்த ஒரு பகுதியிலும் தொலைந்தவர்களை டிஜிட்டல்வழியே கண்டுபிடிக்கும் மையத்தின் வசதியும் பக்தர்களுக்கு கிடைக்கும். அரசு அங்கீகாரம் பெற்ற சுற்றுலாத் திட்டங்கள், தங்குவசதிகள், இல்லங்களில் தங்குவசதிகள் ஆகியன பற்றியும் பக்தர்களுக்கு செல்பேசி வாயிலாக தகவல்கள் அளிக்கப்படும். நீங்களும் கும்பமேளா செல்லுங்கள், இந்த வசதிகளை அனுபவியுங்கள், அப்புறம் ஒரு விஷயம்….. #ஏக்தா கா மகாகும்ப் என்பதில் உங்களுடைய சுயபுகைப்படத்தையும் மறக்காமல் தரவேற்றம் செய்யுங்கள்.
நண்பர்களே, மனதின் குரல் அதாவது மன் கீ பாத் MKBயில் இப்போது KTB பற்றி….. மிக மூத்தோர் இருக்கிறார்களே, அவர்களில் பலருக்கு KTB பற்றித் தெரிந்திருக்கும். ஆனால் சின்னக் குழந்தைகளிடம் வினவிப் பாருங்கள், அவர்கள் மத்தியிலோ KTB சூப்பர்ஹிட் என்றே சொல்லலாம். அதாவது, க்ருஷ், த்ருஷ், பால்டிபாய் ஆகியோர். உங்களுக்கு ஒரு வேளை தெரிந்திருக்கலாம், குழந்தைகளின் விருப்பமான அனிமேஷன் தொடரின் பெயர் தான்KTB – பாரதத்தில் நாம், இப்போது இதன் இரண்டாவது தொடரும் வந்து விட்டது. இந்த மூன்று அனிமேஷன் பாத்திரங்களும் நமக்கும் பாரதநாட்டின் அதிகம் அறியப்படாத, அதிகம் பேசப்படாத சுதந்திரப் போராட்ட நாயகர்கள்-வீராங்கனைகள் பற்றித் தெரிவிக்கும். தற்போது தான் இதன் இரண்டாவது தொடர் மிகவும் சிறப்பான பொலிவோடு கோவாவில் நடந்த இந்தியாவின் சர்வதேச திரைப்படத் திருவிழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மிகவும் அருமையான விஷயம் என்னவென்றால் இந்தத் தொடரானது பாரத நாட்டின் பல மொழிகளில் மட்டுமல்ல, அயல்நாட்டு மொழிகளிலும் கூட ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதை தூர்தர்ஷனோடு கூடவே இன்னபிற ஓடிடி தளங்களிலும் கண்டுகளிக்க முடியும்.
நண்பர்களே, நமது அனிமேஷன் படங்களின், வாடிக்கையான படங்களின், டிவி தொடர்களின் பிரபலத்தன்மை பாரத நாட்டின் படைப்புத் திறன் துறையிடம் இருக்கும் திறமைகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இந்தத் துறையானது தேசத்தின் முன்னேற்றத்திற்கு மட்டும் பெரும் பங்களிப்பு அளிக்கவில்லை, மாறாக நமது பொருளாதாரத்தையும் கூட புதிய சிகரங்களுக்கு இட்டுச் செல்கிறது. நமது திரைப்படம் மற்றும் கேளிக்கைத் துறை மிகவும் விசாலமானது. தேசத்தின் பல மொழிகளிலும் திரைப்படங்கள் தயாராகின்றன, படைப்புத்திறன்மிக்க உள்ளடக்கம் உருவாக்கப்படுகிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வுக்கு வலுவூட்டுவதன் காரணத்தால் நான்நமது திரைப்பட மற்றும் கேளிக்கைத் தொழில்துறைக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, 2024ஆம் ஆண்டிலே நாம் திரைத்துறையின் பல மகத்தான நபர்களின் 100ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடினோம். இந்த நபர்கள் பாரதநாட்டுத் திரைத்துறையை உலகளாவிய வகையில் அடையாளப்படுத்தினார்கள். ராஜ் கபூர் அவர்களின் படங்கள் வாயிலாக உலகம் பாரத நாட்டின் soft power மென்மையான சக்தியை இனம் கண்டு கொண்டது. ரஃபி ஐயாவின் குரலில் இருந்த மாயாஜாலம், அனைவரின் இதயங்களையும் தொட்டுவருட வல்லது. அவருடைய குரல் அலாதியானது. பக்திப்பாடல்களாக இருந்தாலும் சரி, காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, துயரம்-வலி நிறைந்த பாடல்களாக இருந்தாலும் சரி, அனைத்து உணர்வுகளையும் அவர் தனது குரலில் உயிர்ப்படையச் செய்து விடுவார். ஒரு கலைஞன் என்ற முறையில் பார்க்கும் போது, இன்றும் கூட இளைய தலைமுறையினர் அவருடைய பாடல்களை அதே பேரார்வத்தோடு கேட்கிறார்கள் என்பதிலிருந்தே அவருடைய மாட்சிமையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது, காலத்தைக் கடந்த கலைக்கான அடையாளம் இது தானே. அக்கினேனி நாகேஷ்வர் ராவ் காரு, தெலுகு திரைப்படத்துறையை புதிய உயரங்களுக்கு இட்டுச் சென்றவர். அவருடைய படங்கள் பாரதநாட்டுப் பாரம்பரியங்களையும், நன்மதிப்புக்களையும் மிகச் சிறப்பாகப் படம்பிடித்துக் காட்டுவன. தபன் சின்ஹா அவர்களின் படங்கள், சமூகத்திற்கு ஒரு புதிய பார்வையை அளித்தன. அவருடைய படங்களில் சமூக விழிப்புணர்வு மற்றும் தேசத்தின் ஒற்றுமை தொடர்பான செய்தி எப்போதும் இருக்கும். நமது ஒட்டுமொத்தத் திரைப்படத்துறைக்கும் இந்த மாமனிதர்களின் வாழ்க்கை கருத்தூக்கம் அளிப்பது.
நண்பர்களே, நான் மேலும் ஒரு சந்தோஷமான செய்தியை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன். பாரதநாட்டின் படைப்புத்திறனை உலகின் முன்பாக வைக்க ஒரு மிகப்பெரிய சந்தர்ப்பம் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு நமது தேசத்தில் முதன்முறையாக உலக ஒலிஒளி கேளிக்கை உச்சிமாநாடு அதாவது வேவ்ஸ் உச்சிமாநாடு நடைபெறவிருக்கிறது. நீங்கள் அனைவரும் தாவோஸ் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; அங்கே உலகின் பொருளாதாரவுலகின் ஜாம்பவான்கள் ஒன்று கூடுவார்கள். இதைப் போலவே வேவ்ஸ் உச்சிமாநாட்டிலே உலகெங்கிலுமிருந்தும் ஊடகங்களும், திரைத்துறையின் ஜாம்பவான்களும், படைப்புலகத்தினரும் பாரத நாட்டிற்கு வருவார்கள். இந்த உச்சிமாநாடு, பாரத நாடு உலகம் தழுவிய உள்ளடக்க உருவாக்க மையமாக ஆகும் திசையில் ஒரு மகத்துவம் வாய்ந்த அடியெடுப்பாகும். இந்த உச்சிமாநாட்டின் தயாரிப்பு முஸ்தீபுகளிலே நமது தேசத்தின் இளம் படைப்பாளிகள் முழு உற்சாகத்தோடு இணைந்து பணியாற்றி வருகிறார்கள் என்று என்னிடம் கூறப்பட்டிருக்கிறது. நாம் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற திசையை நோக்கி முன்னேறும் வேளையில் நமது படைப்பாற்றல் பொருளாதாரமும் ஒரு புதிய ஆற்றலைக் கொண்டுவந்து சேர்க்கிறது. நான் பாரத நாட்டின் மொத்த கேளிக்கை மற்றும் படைப்பாற்றல் துறையிடமும் என்ன வேண்டிக் கொள்கிறேன் என்றால், நீங்கள் இளம் படைப்பாளியோ, புகழ்மிக்க கலைஞரோ, பாலிவுட்டோடு இணைந்தவரோ அல்லது பிராந்திய திரைத்துறையைச் சேர்ந்தவரோ, தொலைக்காட்சித் துறையின் தொழில்வல்லுநரோ அல்லது அனிமேஷன் வல்லுநரோ, கேமிங்கோடு தொடர்புடையவரோ கேளிக்கைத் தொழில்நுட்பத் துறையில் கண்டுபிடிப்பாளரோ…. நீங்கள் அனைவரும் வேவ்ஸ் உச்சிமாநாட்டில் பங்கு பெறுங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, பாரதநாட்டுக் கலாச்சாரம் பொழியும் ஒளியானது இன்று எப்படி உலகின் அனைத்து மூலைகளுக்கும் பரவி வருகிறது என்பதை நீங்கள் அனைவரும் நன்கறிவீர்கள். மூன்று கண்டங்களின் முயற்சிகளைப் பற்றி இன்று நான் உங்களிடம் பரிமாறிக் கொள்ள இருக்கிறேன், இவை நமது கலாச்சார மரபின் உலகளாவிய பரவலின் சான்றுகளாக இருக்கின்றன. இவையனைத்தும் ஒன்றுக்கொன்று பல கி.மீ. தொலைவால் வேறுபட்டவை. ஆனால் பாரத நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், நமது கலாச்சாரத்தைக் கற்றுக் கொள்ளவும் அவர்களிடம் இருக்கும் தாகம் ஒன்று போலவே இருக்கிறது.
நண்பர்களே, ஓவியங்களின் உலகம் எத்தனை வண்ணமயமாக இருக்குமோ, அந்த அளவுக்கு அழகாக இருக்கும். தொலைக்காட்சி வாயிலாக உங்களில் யாரெல்லாம் மனதின் குரலோடு இணைந்து வருகிறீர்களோ, சில ஓவியங்களை தொலைக்காட்சியில் உங்களால் காண முடியும். இந்தச் சித்திரங்களில் நமது தெய்வங்கள், நடனக்கலைகள் மற்றும் மாமனிதர்களைக் கண்டு உங்கள் உள்ளங்கள் உவப்பெய்தும். இவற்றிலே பாரதநாட்டில் இருக்கும் உயிரினங்கள் தொடங்கி நிறைய விஷயங்களை உங்களால் காணமுடியும். இவற்றில் தாஜ்மஹலின் ஒரு அற்புதமான ஓவியமும் அடங்கும், இதை 13 வயதேயான ஒரு குட்டிப் பெண் வரைந்திருக்கிறாள். இந்த மாற்றுத்திறனாளிக் குழந்தை தனதுவாயால் இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறாள் என்பதறிந்தால் நீங்கள் திகைத்துப் போவீர்கள். மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த ஓவியங்களை வரைந்தவர்கள் பாரத நாட்டினர் அல்ல, எகிப்து தேசத்தைச் சேர்ந்த மாணவர்கள். சில வாரங்கள் முன்பு எகிப்து நாட்டில் சுமார் 23,000 மாணவர்கள் ஒரு ஓவியப் போட்டியில் பங்கெடுத்தார்கள். அங்கே அவர்கள் பாரத நாட்டின் கலாச்சாரம் மற்றும் இந்த இருநாடுகளின் சரித்திரப்பூர்வமான தொடர்புகளை வெளிப்படுத்தும் வகையிலான ஓவியங்களை வரைந்திருந்தார்கள். நான் இந்தப் போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து இளைஞர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் படைப்பாற்றலை எத்தனைப் பாராட்டினாலும் தகும்.
நண்பர்களே, தென்னமெரிக்காவின் ஒரு தேசம் பராகுவே. அங்கேயிருக்கும் பாரதநாட்டவரின் எண்ணிக்கை ஓராயிரத்தை மிகாது. பராகுவேயில் ஒரு அற்புதமான முயற்சி நடைபெற்று வருகிறது. அங்கே பாரதநாட்டு தூதரகத்தில் எரிகா ஹ்யூபர் என்பவர் இலவசமாக ஆயுர்வேத ஆலோசனை அளிக்கிறார். ஆயுர்வேத ஆலோசனை பெற, அந்நாட்டவர் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். எரிகா ஹ்யுபர் பொறியியல் படிப்பு படித்திருந்தாலும் கூட, அவருடைய மனம் ஆயுர்வேதத்திலேயே நிலை கொள்கிறது. அவர் ஆயுர்வேதம் தொடர்பான படிப்புக்களை மேற்கொண்டார், காலப்போக்கில் இதில் வல்லுநராகவும் ஆகி விட்டார்.
நண்பர்களே, உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ்மொழி, இந்தியர்கள் அனைவருக்கும் இது பெருமை சேர்க்கும் விஷயமாகும். உலகெங்கிலும் இருக்கும் நாடுகளில் இதைக் கற்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாத இறுதியில், ஃபிஜியில் பாரத அரசின் உதவியோடு தமிழ் பயில்விக்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளில், ஃபிஜியில் தமிழில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழ் பயிற்றுவிப்பது என்பது இதுவே முதல் முறை. இன்று ஃபிஜியின் மாணவர்கள் தமிழ்மொழியையும், சம்ஸ்கிருதத்தையும் கற்றுக் கொள்ள நிறைய ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது எனக்கு உவப்பைத் தருகிறது.
நண்பர்களே, இந்த விஷயங்கள், இந்தச் சம்பவங்கள், வெறும் வெற்றிக்கதைகள் அல்ல. இவை நமது கலாச்சார மரபின் காதைகளும் கூட. இந்த எடுத்துக்காட்டுகள் நம் உள்ளங்களைப் பெருமிதத்தால் நிரப்பி விடுகின்றன. கலை முதல் ஆயுர்வேதம், மொழி, இசை என அனைத்தும் பாரதத்திடம் கொட்டிக் கிடக்கிறது, இதுவே உலகை மயக்குகிறது.
நண்பர்களே, குளிர்காலத்தில் நாடெங்கிலும் விளையாட்டு மற்றும் உடலுறுதி தொடர்பாக பல செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் உடலுறுதியைத் தங்களுடைய தினசரி வாடிக்கையாக்கி வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. கஷ்மீரில் பனிச்சறுக்கு முதல் குஜராத்தில் காற்றாடிவிடுதல் வரை அனைத்து இடங்களிலும் விளையாட்டுக்களின் உற்சாகத்தைக் காண முடிகிறது. #SundayOnCycle மற்றும் #CyclingTuesday போன்ற இயக்கங்கள் சைக்கிள்விடுதலுக்கு ஊக்கமளித்து வருகின்றன.
நண்பர்களே, இப்போது நான் உங்களோடு ஒரு வித்தியாசமான விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், இது நமது தேசத்தில் ஏற்பட்டும்வரும் மாற்றங்கள் மற்றும் இளைய நண்பர்களின் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அடையாளப்படுத்துகிறது. நமது பஸ்தர் பகுதியில் ஒரு வித்தியாசமான ஒலிம்பிக் போட்டி தொடங்கப்பட்டிருப்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆமாம்….. முதன்முறையாக பஸ்தர் ஒலிம்பிக்ஸ் வாயிலாக பஸ்தரில் ஒரு புதிய புரட்சி பிறப்பெடுத்து வருகிறது. என்னைப் பொறுத்தமட்டில் மிக சந்தோஷமான விஷயம் என்னவென்றால், பஸ்தர் ஒலிம்பிக்ஸ் என்ற கனவு மெய்ப்பட்டிருக்கிறது என்பது தான். ஒருகாலத்தில் மாவோவாதிகளின் பயங்கரவாதம் பாதிக்கப்பட்ட பகுதியாக இருந்த பகுதியில் இது நடக்கிறது என்பது உங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம். பஸ்தர் ஒலிம்பிக்ஸின் சின்னம், வன் பைன்ஸா ஔர் பஹாடி மைனா, அதாவது காட்டெருமையும், மலைப்பகுதி மைனாவும். இதிலே பஸ்தரின் நிறைவான கலாச்சாரம் பளிச்சிடுவதைக் காண முடிகிறது. இந்த பஸ்தர் விளையாட்டு மகாகும்பமேளாவின் மூல மந்திரம் என்ன தெரியுமா?
கர்ஸாய் தா பஸ்தர் பர்ஸாயே தா பஸ்தர்
அதாவது, விளையாடும் பஸ்தர் – வெல்லும் பஸ்தர்.
முதன்முறையாக பஸ்தர் ஒலிம்பிக்ஸில் 7 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்துஅறுபத்து ஐயாயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். இது வெறும் எண்ணிக்கையல்ல. இது நமது இளைய சமூகத்தின் உறுதிப்பாட்டின் கௌரவக்காதை. தடகளப் போட்டிகள், கயிறு இழுத்தல், பூப்பந்தாட்டம், கால்பந்தாட்டம், ஹாக்கி, பளுதூக்குதல், கராட்டே, கபடி, கோகோ, கைப்பந்தாட்டம் என அனைத்து விளையாட்டுக்களிலும் நமது இளைஞர்கள் தங்களுடைய திறன்கள்-திறமைகளை வெளிப்படுத்தினார்கள். காரி கஷ்யப் அவர்களின் கதை எனக்கு மிகவும் உத்வேகம் அளித்தது. ஒரு சின்னஞ்சிறிய கிராமத்திலிருந்து வரும் காரி அவர்கள் அம்பு எய்தல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். “பஸ்தர் ஒலிம்பிக்ஸ் போட்டியானது எங்களுக்கு விளையாட்டு மைதானத்தை மட்டுமல்ல, வாழ்க்கையில் முன்னேற ஒரு சந்தர்ப்பத்தை அளித்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார் இவர். சுக்மாவைச் சேர்ந்த பாயல் கவாசி அவர்களின் கூற்று ஒன்றும் குறைந்த ஊக்கத்தை அளிக்கவில்லை. ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பாயல், “ஒழுக்கம் மற்றும் கடும் உழைப்பு வாயிலாக யாராலும் எதையும் சாதிக்க முடியும்” என்றார் இவர். சுக்மாவின் தோர்நாபாலைச் சேர்ந்த புனேம் ஸன்னா அவர்களின் கதை, புதிய பாரதத்துக்கே உத்வேகம் அளிப்பதாகும். ஒரு காலத்தில் நக்ஸல் தாக்கத்தால் கவரப்பட்ட புனேம் அவர்கள் இன்று சக்கர நாற்காலியில் விரைந்து பதக்கங்களை வென்று வருகிறார். இவருடைய சாகஸமும், தன்னம்பிக்கையும், அனைவருக்கும் கருத்தூக்கம் அளிக்க வல்லவை. கோடாகாவின் அம்பெறிதல் போட்டியாளரான ரஞ்ஜூ ஸோரி அவர்கள், பஸ்தரின் இளைஞர்களின் சின்னமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நெடுந்தலைவுகளில் இருக்கும் இளைஞர்களை தேசிய அளவில் கொண்டு சேர்க்கும் சந்தர்ப்பத்தை பஸ்தர் ஒலிம்பிக்ஸ் அளித்து வருகிறது என்று கருதுகிறார்.
நண்பர்களே, பஸ்தர் ஒலிம்பிக்ஸ் என்பது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி மட்டுமல்ல. இங்கே வளர்ச்சி மற்றும் விளையாட்டுக்களின் சங்கமம் நடக்கிறது. இங்கே நமது இளைஞர்களின் திறமைகள் ஒளி உமிழ்கின்றன, ஒரு புதிய பாரதத்தை அவர்கள் படைக்கிறார்கள். நான் உங்கள் அனைவரிடத்திலும் வேண்டிக் கொள்கிறேன் –
உங்கள் பகுதிகளில் இப்படிப்பட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஊக்கம் தாருங்கள்.
#खेलेगा भारत – जीतेगा भारत என்பதிலே உங்களுடைய பகுதிகளில் விளையாட்டுத் திறமைகளைப் பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
விளையாட்டில் திறமைகள் உள்ளவர்கள் வட்டாரத்தில் இருந்தால் அவர்கள் முன்னேற வாய்ப்பளியுங்கள்.
நினைவில் கொள்ளுங்கள், விளையாட்டுக்கள் நமது உடல் வளர்ச்சியை மட்டுமல்லாமல், ஆரோக்கியமான மனநிலையையும் ஏற்படுத்தி, சமூகத்தின் இணைப்புக்களை-உறவுகளை மேலும் வலுவாக்க வல்லது. ஆகையால் விளையாடுங்கள், நன்றாக விளையாடுங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, பாரதத்தின் இருபெரும் சாதனைகள் இன்று உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. இதைக் கேட்டு நீங்கள் பெருமைப்படுவீர்கள். இந்த இருபெரும் வெற்றிகளும் ஆரோக்கியத் துறையில் கிடைத்திருக்கின்றன. முதல் சாதனை என்னவென்றால், அது மலேரியாவுடனான போராட்டத்தில். மலேரியா என்ற நோய் 4000 ஆண்டுகளாக மனித சமூகத்திற்கே ஒரு பெரும் சவாலாக இருந்து வருகிறது. சுதந்திரமடைந்த காலகட்டத்தில், இது நமது மிகப்பெரிய சுகாதாரச் சவால்களில் ஒன்றாக இருந்தது. ஒரு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான குழந்தைகளின் உயிர்குடிக்கும் அனைத்துத் தொற்றுநோய்களில் மலேரியாவுக்கு மூன்றாவது இடம். இன்று, நாட்டுமக்களை அனைவரும் இந்தச் சவாலை தீவிரத்தோடு எதிர்கொண்டார்கள், முன்னேற்றமும் கண்டார்கள் என்பதைப் பகிர்ந்து கொள்வதில் எனக்கு பேருவகை ஏற்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை என்ன கூறுகிறது தெரியுமா? பாரத நாட்டில் 2015ஆம் ஆண்டு தொடங்கி 2023ஆம் ஆண்டிற்குள்ளாக மலேரியா பாதிப்பு விஷயங்கள் மற்றும் இதனால் ஏற்படும் இறப்புக்களில் 80 சதவீத வீழ்ச்சி காணப்பட்டிருக்கிறது. இது ஒன்றும் சிறிய சாதனையே அல்ல. மேலும் மிகவும் மகிழ்ச்சிதரும் செய்தி என்னவென்றால் இந்த வெற்றி, நாட்டுமக்கள் அனைவரின் பங்களிப்புக் காரணமாகவே கிடைத்திருக்கிறது. பாரத நாட்டின் அனைத்து இடங்களிலும், அனைத்து மாவட்டங்களிலும் அனைவரும் இந்த இயக்கத்தில் பங்கெடுத்தார்கள். அஸாமின் ஜோர்ஹாட்டில் தேயிலைத் தோட்டங்களில் நான்காண்டுகள் முன்புவரை மக்களின் கவலைக்குக் காரணமாக மலேரியா இருந்துவந்தது. ஆனால் இதை வேரடி மண்ணோடு கெல்லி எறிய தேயிலைத் தோட்டத்தில் வசிப்பவர்கள் ஒன்று திரண்ட போது, இதில் கணிசமான அளவுக்கு வெற்றியை ஈட்ட முடிந்தது. தங்களுடைய இந்த முயற்சியில் அவர்கள் தொழில்நுட்பத்தோடு கூட, சமூக ஊடகங்களையும் முழுமையாகப் பயன்படுத்தினார்கள். இதைப் போலவே ஹரியாணாவின் குருக்ஷேத்திரம் மாவட்டவாசிகளும் கூட மலேரியாவைக் கட்டுப்படுத்த மிக நேர்த்தியான மாதிரி ஒன்றினை முன்வைத்தார்கள். இங்கே மலேரியாவைக் கண்காணிப்பதில் மக்களின் பங்களிப்பு கணிசமாக வெற்றி பெற்றிருக்கிறது. தெருமுனை நாடகங்கள், வானொலி ஆகியவை வாயிலாக செய்திகள் ஓங்கி ஒலிக்கப்பட்டன, இதன் காரணமாக கொசுக்களின் இனப்பெருக்கம் குறைய கணிசமாக உதவியது. நாடெங்கிலும் இப்படிப்பட்ட முயற்சிகளால் தான் நம்மால் மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தை முன்னேற்ற முடிந்தது.
நண்பர்களே, நம்முடைய மனவுறுதிப்பாடு மற்றும் விழிப்புணர்வு காரணமாக நம்மால் எந்த அளவுக்கு சாதிக்க முடியும் என்பதற்கான இரண்டாவது எடுத்துக்காட்டுத் தான் புற்றுநோயோடு போர். உலகின் பிரபலமான மருத்துவ சஞ்சிகையான Lancetஇன் ஆய்வு, உள்ளபடியே நம்பிக்கை அளிக்கவல்லது. இந்த சஞ்சிகைப்படி இப்போது பாரதத்தில், சரியான காலத்தில் புற்றுநோய்க்கான சிகிச்சையைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு கணிசமாக அதிகரித்து விட்டது. குறித்த காலத்தில் என்றால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை 30 நாட்களுக்கு உள்ளாகத் தொடங்குவது என்பது தான். மேலும் இதில் பெரிய பங்களிப்பை அளித்துவருவது ஆயுஷ்மான் பாரத் திட்டம் தான். இந்தத் திட்டத்தின் காரணமாக, புற்றுநோயாளிகளில் 90 சதவீதம் பேரால், குறித்த காலத்தில் சிகிச்சையை மேற்கொள்ள முடிகிறது. இது எப்படி நடந்தது என்றால், முன்பெல்லாம் பணத்தட்டுப்பாடு காரணமாக ஏழை நோயாளிகளால் புற்றுநோய்ப் பரிசோதனையில், சிகிச்சை மேற்கொள்ளத் தயக்கம் காட்டினார்கள். இப்போதோ ஆயுஷ்மான் பாரத் திட்டம் அவர்களுக்கு வரப்பிரசாதமாக ஆகியிருக்கிறது. இப்போது அவர்கள் முன்வந்து சிகிச்சை மேற்கொள்ள வருகிறார்கள். ஆயுஷ்மான் பாரதம் திட்டம் புற்றுநோய் சிகிச்சையில் ஏற்படும் பணப்பற்றாக்குறை என்ற பிரச்சனையைக் கணிசமாகக் குறைத்திருக்கிறது. மேலும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இன்றைய காலத்தில், புற்றுநோய்க்கான சிகிச்சை தொடர்பாக மக்கள் முன்பை விட அதிக விழிப்புணர்வோடு இருக்கிறார்கள் என்பது தான். இந்தச் சாதனைக்கான பாராட்டுக்கள் நமது உடல்பராமரிப்பு முறை, மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், குடிமக்களான சகோதர சகோதரிகள் அனைவருக்கும் சொந்தமானது. அனைவரின் முயற்சியால் மட்டுமே புற்றுநோயை முறியடிக்கும் உறுதிப்பாடு மேலும் பலப்பட்டிருக்கிறது. விழிப்புணர்வை உண்டாக்குவதில் தங்களுடைய முதன்மையான பங்களிப்பை அளித்த அனைவருக்கும் கூட இந்த வெற்றிக்கான பாராட்டுக்கள் சேரும்.
புற்றுநோயோடுடனான போராட்டத்தில் ஒரே மந்திரம் – விழிப்புணர்வு, செயல்பாடு, உத்திரவாதம். விழிப்புணர்வு அதாவது புற்றுநோய் மற்றும் அதன் அறிகுறிகள் தொடர்பான விழிப்புணர்வு, செயல்பாடு அதாவது காலத்தில் ஆய்வு மற்றும் சிகிச்சை, உத்திரவாதம் அதாவது நோயாளிகளுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கை. வாருங்கள், நாமனைவரும் இணைந்து, புற்றுநோய்க்கு எதிரான இந்தப் போரை இன்னும் விரைவாக முன்னெடுத்துச் செல்வோம், அதிக அளவு நோயாளிகளுக்கு உதவுவோம்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, ஒடிஷாவின் காலாஹாண்டியின் ஒரு முயற்சி குறித்து இன்று நான் உங்களோடு பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன், குறைந்த நீரில் குறைந்த ஆதாரங்களைத் தாண்டி, எப்படி ஒரு புதிய வெற்றிக்கதை எழுதப்படுகிறது என்பது தான் இது. இது தான் காலாஹாண்டியின் காய்கறிப் புரட்சி. இந்த இடத்திலிருந்து, ஒரு காலத்தில் விவசாயிகள் வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்; ஆனால் இங்கே இன்றோ, காலாஹாண்டியின் கோலாமுண்டா தொகுதியே கூட காய்கறி மையமாக ஆகி வருகிறது. எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்? இதன் தொடக்கம் வெறும் பத்து விவசாயிகளின் ஒரு சின்ன சமூகத்தில் நடந்தது. இந்தச் சமூகம் இணைந்து, FPO உற்பத்தியாளர் விவசாயிகள் அமைப்பு ஒன்றை நிறுவினார்கள், விவசாயத்தின் நவீன உத்திகளைப் பயன்படுத்தி இன்று இவர்களின் இந்த உற்பத்தியாளர் விவசாயிகள் அமைப்பு, கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்து வருகிறது. இன்று 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த அமைப்போடு இணைந்திருக்கிறார்கள், இதிலே 45 பெண் விவசாயிகளும் அடங்குவார்கள். இவர்கள் இணைந்து 200 ஏக்கரில் தக்காளி சாகுபடியை மேற்கொண்டு வருகிறார்கள், 150 ஏக்கர்பரப்பில் பாகற்காயை சாகுபடி செய்கிறார்கள். இந்த அமைப்பின் ஆண்டுவருவாயும் கூட ஒண்ணரை கோடியையும் தாண்டி விட்டது. இன்று காலாஹாண்டியின் காய்கறிகள், ஒடிஷாவின் பல்வேறு மாவட்டங்களில் மட்டுமல்ல, மேலும் பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. அடுத்து அந்தப்பகுதி விவசாயிகள் இப்போது உருளை, வெங்காயம் ஆகியவற்றை விளைவிக்கும் புதிய உத்திகளைக் கற்கத் தொடங்கி விட்டார்கள்.
நண்பர்களே, காலாஹாண்டியின் இந்த வெற்றி நமக்கெல்லாம் உறுதிப்பாட்டின் சக்தி மற்றும் சமூகமாக இணைந்துபுரியும் முயற்சியால் சாதிக்கக்கூடியவற்றை விளக்குகிறது. இப்போது நான் உங்களிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் –
உங்களுடைய பகுதியில் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பை ஊக்கப்படுத்துங்கள்.
விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்புக்களோடு இணையுங்கள், அவற்றைப் பலப்படுத்துங்கள்.
நினைவில் கொள்ளுங்கள், ஒரு சிறிய தொடக்கம் கூட பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மனவுறுதியும், கூட்டுமுயற்சியும் மட்டுமே போதுமானது.
நண்பர்களே, இன்றைய மனதின் குரலில் எப்படி நமது பாரதம் பன்முகத்தன்மையில் ஒற்றுமையோடு முன்னேறி வருகிறது என்பதைக் கண்டோம். அது விளையாட்டு மைதானமாகட்டும், அறிவியல் களமாகட்டும், உடல்நலம் அல்லது கல்வித் துறையாகட்டும் – அனைத்துத் துறைகளிலும் பாரதம் புதிய சிகரங்களைத் தொட்டு வருகிறது. நாம் ஓர் குடும்பத்தவரைப் போல இணைந்து, அனைத்துச் சவால்களையும் எதிர்கொண்டு, புதிய வெற்றிகளை ஈட்டியிருக்கிறோம். 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மனதின் குரலின் 116 பகுதிகளைக் காணும் போது, தேசத்தின் சமூகசக்தியின் ஒரு உயிர்ப்புடைய ஆவணமாக மனதின் குரல் ஆகியிருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது. நீங்கள் அனைவரும்தான் இந்த நிகழ்ச்சியை ஏற்றுக்கொண்டு, உங்களுடையதாக ஆக்கிக் கொண்டீர்கள். ஒவ்வொரு மாதமும் நீங்கள் உங்களுடைய கருத்துக்களையும், சிந்தனைகளையும், முயற்சிகளையும் பகிர்ந்து கொண்டீர்கள். ஒரு சமயம் ஒரு இளம் படைப்பாளியின் கருத்து நம்மைக் கவர்ந்தது, இன்னொரு சமயத்தில் ஒரு பெண் குழந்தையின் சாதனைகள் நம்மைப் பெருமைப்படச் செய்தன. உங்களனைவரின் பங்களிப்புதான் தேசத்தின் மூலாமூலைகளெங்கும் இருக்கும் ஆக்கப்பூர்வமான சக்தியை ஒருங்கிணைக்கிறது. மனதின் குரல் இந்த ஆக்கப்பூர்வமான ஆற்றலை மிகப்படுத்தும் அல்லது மிகுவிக்கும் மேடையாக ஆகியிருக்கிறது. இப்போது 2025 கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது. வரும் ஆண்டில் மனதின் குரல் வாயிலாக நாம் மேலும் உத்வேகம் அளிக்கும் முயற்சிகளைப் பரிமாறிக் கொள்வோம். நாட்டுமக்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனையும், புதுமைகள் கண்டுபிடிக்கும் உணர்வும் நம் நாட்டை மாபெரும் உயரங்களுக்குக் கொண்டு போகும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. நீங்கள் உங்களுக்கருகே இருக்கும் தனித்தன்மை வாய்ந்த முயற்சிகளை #Mannkibaat என்பதில் பகிர்ந்து வாருங்கள். அடுத்த மாதம் மனதின் குரலில் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கும் என்பதை நான் நன்கறிவேன். உங்கள் அனைவருக்கும் 2025ஆம் ஆண்டுக்கான பலப்பல நல்வாழ்த்துக்கள். உடல்நலத்தோடு இருங்கள், சந்தோஷமாக இருங்கள், உடலுறுதி இந்தியா இயக்கத்தில் நீங்களனைவரும் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள், நீங்களும் உடலுறுதியோடு இருங்கள். வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றம் காணுங்கள். பலப்பல நன்றிகள்.
பிப்ரவரி 21, 1948 அன்று, வரைவுக் குழு இந்திய அரசியலமைப்பு வரைவை அரசியலமைப்புச் சபையின் தலைவரிடம் சமர்ப்பித்தது. நான்கு மாதங்களுக்கு முன்னர், பேரவையின் அரசியலமைப்பு ஆலோசகர் பி.என். ராவ் என்பவரால் தயாரிக்கப்பட்ட வரைவு அரசியலமைப்புச் சட்டத்தை குழு பெற்றது. இந்த வரைவு அரசியலமைப்பின் குறிப்பிட்ட பகுதிகள் மீது அரசியலமைப்பு விதிகளை வரைவதற்கு பணிக்கப்பட்ட பல்வேறு குழுக்களின் அறிக்கைகள் மீது சட்டமன்றம் எடுத்த முடிவுகளை பிரதிபலிக்கிறது. வரைவுக் குழு, அக்டோபர் 1947 மற்றும் பிப்ரவரி 1948 க்கு இடையில், ராவ் அளித்த அரசியல் சட்ட வரைவை ஆய்வு செய்து, மாற்றியமைத்து, 1948ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவு, 1948ஐ உருவாக்கியது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் வரைவுக்குழுவில் டாக்டர் பாபா சாகப் அம்பேத்கர் தலைவராக இருந்தார். அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், என். கோபாலசாமி ஐயங்கார், கே.எம். முன்ஷி, முகம்மத் சாதுல்லா, தேவிபிரசாத் கைத்தான், பி.எல். மில்லர் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.
வரைவுச் சட்டம் 315 சட்டப்பிரிவுகள், சுமார் பதினெட்டு ‘பாகங்கள்’ மற்றும் எட்டு ‘அட்டவணைகள்’ கொண்டதாக ஒழுங்கமைக்கப்பட்டது. ஒரு அரசியல் அமைப்புச் சட்டத்தில் என்ன இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்களோ அத்தகைய அம்சங்களான அரசாங்கத்தின் கட்டமைப்பு, மத்திய-மாநில உறவுகள் மற்றும் குடிமக்களின் உரிமைகள் போன்ற அனைத்தையும் இது கொண்டிருந்தது. வரைவு பி.என்.ராவின் வரைவில் இருந்து கணிசமாக விலகிச் சென்ற இடங்களிலோ அல்லது சில விதிகளில் சர்ச்சை அல்லது தெளிவின்மை இருந்தாலோ, வரைவுக் குழு அடிக்குறிப்புகளையும் சுருக்கமான விளக்கங்களையும் ஆவணத்தில் வைத்தது.
இந்த வரைவுச் சட்டம் பொதுவில் வைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் முதல் வரைபடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது சட்டமன்ற உறுப்பினர்கள், மாகாண அரசுகள், மத்திய அமைச்சகங்கள், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் மற்றும் பொதுமக்களுக்கு கருத்து மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கான அழைப்போடு பரவலாக விநியோகிக்கப்பட்டது. மார்ச் மற்றும் அக்டோபர் 1948இல், வரைவுக் குழு தனக்குக் கிடைத்த கருத்துகளை மதிப்பாய்வு செய்து முடிவுகளை எடுத்தது மற்றும் திருத்தங்களைத் தயாரித்தது.
4 நவம்பர் 1948 அன்று, அரசியல் சட்ட வரைவுக் குழுவின் தலைவரான பாபா சாகிப் அம்பேத்கர், அரசியல் சட்ட நிர்ணய சபையில் வரைவை முறையாக அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு உறுப்பினருக்கும் வரைவுக் குழு பரிந்துரைத்த கருத்துகள் மற்றும் பரிந்துரைகளின் திருத்தங்களின் தொகுப்புடன் ஒரு நகல் கொடுக்கப்பட்டது. அம்பேத்கர் தனது உரையில் வரைவின் மேலோட்டப் பார்வையை அளித்து, அதைச் சுற்றி எழுந்த சில சர்ச்சைகளையும் எடுத்துரைத்தார். வரைவுக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆரம்ப எதிர்வினைகள் கலவையாக இருந்தன. சிலர் பாராட்டினாலும், சிலர் ஏமாற்றம் தெரிவித்தனர். எடுத்துக்காட்டாக, பஞ்சாயத்து ராஜ் கொள்கைகளின் அடிப்படையில் வரைவு, இந்தியாவின் நிர்வாக மற்றும் அரசியல் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்று உறுப்பினர்கள் தங்கள் திருப்தியின்மையைத் தெரிவித்தார்கள்.
நவம்பர் 15, 1948 அன்று, சட்ட வரைவின் அனைத்து விதிகளையும் ஒவ்வொன்றாக விவாதத்திற்கு அரசியல் சட்ட நிர்ணய சபை எடுத்துக்கொண்டது. சட்டசபை மற்றும் வரைவுக் குழுவின் தனிப்பட்ட உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பல திருத்தங்களை இது பரிசீலித்து, ஆலோசித்து, முடிவுகளை எடுத்தது. இந்த செயல்முறை 17 அக்டோபர் 1949 வரை நீடித்தது, அதன் பிறகு வரைவுக் குழு அரசியல் சட்ட நிர்ணய சபையின் முடிவுகளின் அடிப்படையில் வரைவைத் திருத்தியது மற்றும் 14 நவம்பர் 1949 அன்று இரண்டாவது பதிப்பை உருவாக்கியது, அது மற்றொரு வாசிப்புக்காக சட்டமன்றத்தில் வைக்கப்பட்டது.
அரசியலமைப்புச் சட்ட வரைவு (திருத்தப்பட்ட பதிப்பு உட்பட) மீதான பேரவையின் விவாதங்கள், அரசியலமைப்புச் சபை விவாதங்கள் மற்றும் ஒட்டுமொத்த அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறையின் பெரும்பகுதியை உருவாக்கியது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்: அரசியலமைப்புச் சபையின் 165 அமர்வுகளில், 114 இந்த வரைவை விவாதித்தது. அரசியலமைப்பு வரைவு இறுதியாக 26 நவம்பர் 1949 அன்று இந்திய அரசியலமைப்பாக அரசியலமைப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
யார் இந்த பி.என். ராவ்?
சர் பெனகல் நர்சிங் ராவ் (26 பிப்ரவரி 1887 – 30 நவம்பர் 1953) ஓர் இந்திய அரசு ஊழியர், நீதிபதி, இராஜதந்திரி மற்றும் அரசியல் சட்ட நிர்ணய சபையின் அரசியலமைப்பு ஆலோசகராக இருந்தவர். இவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வரைவதில் முக்கிய பங்கு வகித்ததற்காக அறியப்பட்டவர். 1950 முதல் 1952 வரை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் பிரதிநிதியாகவும் இருந்தார்.
அவரது காலத்தின் முதன்மையான இந்திய சட்ட வல்லுநர்களில் ஒருவரான ராவ் 1947இல் பர்மா மற்றும் 1950இல் இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்க உதவினார். அவர் இந்திய அரசியலமைப்புச் சபையின் அரசியலமைப்பு ஆலோசகராக இருந்தார். அவர் 1950 முதல் 1952 வரை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்தார், மேலும் ஜூன் 1950இல் தென் கொரியாவிற்கு ஆயுத உதவியை பரிந்துரைத்தபோது அதன் தலைவராகப் பணியாற்றினார். பின்னர் அவர் கொரியப் போருக்குப் பிந்தைய போர் நிறுத்த ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையில் உறுப்பினராக இருந்தார்.
மெட்ராஸ் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற ராவ், 1910இல் இந்திய சிவில் சேவையில் நுழைந்தார். இவர் முழு இந்திய சட்டக் குறியீட்டையும் (Indian Statutory Code, 1935-37) திருத்தினார். அதன் பிறகு, 1938இல் நைட் (Knight title) பட்டம் பெற்றார் மற்றும் 1939இல் கல்கத்தாவில் உள்ள வங்காள உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்திய சட்டம் பற்றிய அவரது எழுத்துக்களில் அரசியலமைப்பு முன்னுதாரணங்கள் மற்றும் இந்தியாவில் மனித உரிமைகள் பற்றிய கட்டுரைகள் உள்ளன. அவர் ஜம்மு-காஷ்மீர் மாநில அமைச்சராக குறுகிய காலம் (1944-45) பணியாற்றினார். பிப்ரவரி 1952 முதல் அவர் இறக்கும் வரை, ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தார். நீதிமன்றத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, அவர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கான வேட்பாளராகக் கருதப்பட்டார். சர் பி.என். ராவின் சகோதரர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் பெனகல் ராமா ராவ் மற்றும் பத்திரிகையாளர் மற்றும் அரசியல்வாதியான பி. சிவராவ் இருவரும் ஆவர்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
பி.என். ராவ் 1887ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் போது நன்கு படித்த மற்றும் வளமான இந்து சரஸ்வதி பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பெனகல் ராகவேந்திர ராவ் ஒரு சிறந்த மருத்துவர். ராவ் மங்களூரில் உள்ள கனரா உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார், முழு மெட்ராஸ் பிரசிடென்சி மாணவர்களில் அவர் முதலிடம் பிடித்தார். அவர் ஆங்கிலம், இயற்பியல் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மூன்று துறைகளிலும் 1905இல் பட்டம் பெற்றார், மேலும் 1906இல் கணிதத்தில் கூடுதல் முதலிடம் பெற்றார். அவர் உதவித்தொகை பெற்று, அவர் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரிக்குச் சென்றார், மேலும் 1909இல் தனது டிரிபோஸை (மூன்று பாடங்களில் டிகிரி பெறுதல்) எடுத்துக்கொண்டார்.
அதிகாரத்துவ மற்றும் நீதித்துறை வாழ்க்கை
பி.என். ராவ் 1909ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று வங்காளத்திற்குப் பணியமர்த்தப்பட்ட பிறகு பிரிட்டிஷ் இந்தியாவுக்குத் திரும்பினார். நிர்வாகத் தரப்பில் சிறப்பாகச் செயல்பட்ட அவர், 1909இல் நீதித்துறைக்குச் சென்றார், மேலும் கிழக்கு வங்காளத்தில் பல மாவட்டங்களில் நீதிபதியாகப் பணியாற்றினார். 1925ஆம் ஆண்டில், அஸ்ஸாம் அரசாங்கத்தால், மாகாண சபையின் செயலாளராகவும், அரசாங்கத்தின் சட்ட நினைவூட்டுபவராகவும் அவருக்கு இரட்டை பதவி வழங்கப்பட்டது. அவர் இந்தப் பதவியில் சுமார் எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். இந்தக் கடமைகளுக்கு மேலதிகமாக, 1928-29ல் சைமன் கமிஷனின் இந்திய சுற்றுப்பயணத்திற்கான நிதி உதவிக்கான வரைவு அறிக்கை தயார் செய்தல் மற்றும் லண்டனில் உள்ள நாடாளுமன்றத்தின் கூட்டுத் தேர்வுக் குழுவின் முன் தங்கள் தரப்பை முன்வைத்தல் போன்ற கூடுதல் பணிகளை அவர் அவ்வப்போது நிறைவேற்றினார். 1933இல் மூன்றாவது வட்ட மேசை மாநாட்டிற்காக அவர் சர் ஜான் கெருடன் இணைந்து இந்தியாவில் உள்ள மாகாண சட்டமன்றங்கள் எவ்வாறு சிறப்பாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்பதற்கான குறிப்பையும் தயாரித்தார்.
1935இல் இந்தியாவுக்குத் திரும்பியதும், ராவ் இந்திய அரசாங்கத்தின் சீர்திருத்த அலுவலகத்துடன் இணைந்து, இந்திய அரசாங்கச் சட்டம், 1935-ஐத் தயாரிப்பதில் பணியாற்றினார். இந்தத் திட்டத்தின் முடிவில், இந்தியாவின் மத்திய நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியான சர் மாரிஸ் க்வயர், அவர் ஃபெடரல் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியாக பணியாற்றுவதற்குத் தகுதியான ஐந்து வருட அனுபவத்தைப் பெற வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதன்பிறகு அவர் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார், ஆனால் இந்திய அரசாங்கத்தால் அவருக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு கூடுதல் திட்டங்களால் அவரது பதவிக்காலம் தடைபட்டது – அவர் முதலில் இந்தியாவில் ரயில்வேயில் ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான விசாரணை நீதிமன்றத்திற்கு தலைமை தாங்கினார். அதன்பிறகு இந்து சட்டம் தொடர்பான சீர்திருத்தங்களில் பணிபுரியும் ஒரு கமிஷனுடன் சில காலம் பணிபுரிந்தார். 1942இல் சிந்து நீர் ஆணையத்தின் தலைவராகவும் அவர் மீண்டும் நியமிக்கப்பட்டார். அச்சமயத்தில் அவர் நதிக்கரை உரிமைகள் பற்றிய அறிக்கையை சமர்ப்பித்தார்.
அவரது சிறப்பான பணிகள் அவரை, 1934 புத்தாண்டு விருதுகள் பட்டியலில் இந்தியப் பேரரசின் துணை (CIE- Companion of the Order of the Indian Empire) என்ற விருதுப் பட்டியலில் இடம் பெற வைத்தது. 1938இல் நைட்ஹூட் பட்டத்தையும் பெற்றுத்தந்தது. ராவ் 1944இல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார், பின்னர் ஜம்மு மற்றும் காஷ்மீர் சமஸ்தானத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டார். 1945ஆம் ஆண்டில் அவர் இந்தப் பதவியை ராஜினாமா செய்தார், அப்போதைய காஷ்மீர் மகாராஜாவுடனான கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, தனது ராஜினாமா கடிதத்தில் எழுதினார், “…வெளிப்புற மற்றும் சில அடிப்படை விஷயங்களை நாம் கண்ணால் பார்க்கவில்லை என்பதை நான் சில காலமாக உணர்ந்தேன். உள் கொள்கை, இது பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகளுக்கு இட்டுச் செல்கிறது அதை ஏற்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும்.”
காஷ்மீர் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ராவ் இந்திய அரசாங்கத்தின் சீர்திருத்த அலுவலகத்தில் தற்காலிக பதவியில் பணியாற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார், அதை அவர் செய்தார். அவருக்கு கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதி பதவியும் வழங்கப்பட்டது; அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார், சீர்திருத்த அலுவலகத்தில் தங்கி அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி பிரச்சினைகளில் பணியாற்ற விரும்பினார். அதன் விளைவாக அவர் கவர்னர் ஜெனரல் அலுவலகத்தில் செயலாளராக நியமிக்கப்பட்டார், அரசியலமைப்பு சீர்திருத்தங்களில் பணிபுரிந்தார், அவர் 1946இல் அரசியலமைப்புச் சபையின் அரசியலமைப்பு ஆலோசகராக ஆனார்.
அரசியல் சட்ட நிர்ணய சபை வரைவு அரசியல் சட்ட வரைவை விவாதித்துக் கொண்டிருந்தபோது, ஹைதராபாத் நிஜாம் மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு இடையேயான சர்ச்சையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தலையிட முடியுமா என்ற கேள்விக்கான சுருக்கத்தை தயாரிப்பதிலும் ராவ் பணியாற்றினார், மேலும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு தூதுக்குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். ஐ.நா சபையில் இந்த விஷயத்தைப் பற்றியும் அணு ஆற்றலின் அமைதியான பயன்பாடுகள் பற்றியும் விவாதம் நடந்தது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் பங்கு
பி.என். ராவ் 1946இல் இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் அரசியலமைப்புச் சபைக்கு அரசியலமைப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அரசியலமைப்பின் ஜனநாயக கட்டமைப்பின் பொதுவான கட்டமைப்பிற்கு அவர் பொறுப்பேற்றார் மற்றும் அதன் ஆரம்ப வரைவை பிப்ரவரி 1948இல் தயாரித்தார். இந்த வரைவு விவாதிக்கப்பட்டு, திருத்தப்பட்டு இறுதியாக 26 நவம்பர் 1949 அன்று இந்திய அரசியல் சட்ட நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் இந்திய அரசியலமைப்பின் முன்னோடி என்றும் அழைக்கப்படுகிறார்.
1946ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான தனது ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, ராவ் அமெரிக்கா, கனடா, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றார், அங்கு அவர் நீதிபதிகள், அறிஞர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அரசியலமைப்புச் சட்டம் குறித்து தனிப்பட்ட ஆலோசனைகளை நடத்தினார். மற்றவற்றுடன், அவர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பெலிக்ஸ் ஃபிராங்க்ஃபர்டர்– ஐச் சந்தித்தார், அவர் இந்திய அரசியலமைப்பில் ‘தகுந்த செயல்முறை’ என்ற ஷரத்தை சேர்ப்பதற்கு எதிராக பிரபலமாக அவருக்கு அறிவுரை வழங்கினார், ஏனெனில் அது நீதித்துறையின் மீது ‘தவறான சுமையை’ சுமத்துகிறது.
அரசியல் சட்ட நிர்ணய சபையின் தீர்மானம், 29 ஆகஸ்டு 1947இல், பாபா சாகப் அம்பேத்கரின் தலைமையில் வரைவுக் குழுவை அமைத்தது, “அரசியலமைப்பு ஆலோசகர் தயாரித்த அரசியலமைப்பின் வரைவை ஆராய்ந்து, முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக அது அமைக்கப்படுவதாக அறிவித்தது. சட்டமன்றத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்டு, அதனுடன் தொடர்புடைய அல்லது அத்தகைய அரசியலமைப்பில் வழங்கப்பட வேண்டிய அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கி, குழுவால் திருத்தப்பட்ட வரைவு சட்டமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்; அப்போது அது அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் நிகழ்த்தப்பட்ட உரைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.” அரசியலமைப்பு ஆலோசகரால் தயாரிக்கப்பட்ட வரைவு அக்டோபர் 1947இல் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வரைவோடு, அரசியலமைப்புச் சபையால் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களின் முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டன. வரைவுக் குழுவின் முதல் வரைவு பிப்ரவரி 1948இல் வெளியிடப்பட்டது. வரைவை விவாதிக்கவும் திருத்தங்களை முன்மொழியவும் இந்திய மக்களுக்கு எட்டு மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. பொதுமக்களின் கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில், வரைவுக் குழு இரண்டாவது வரைவைத் தயாரித்தது, அது அக்டோபர் 1948 இல் வெளியிடப்பட்டது. அரசியலமைப்பின் இறுதி வரைவு 4 நவம்பர் 1948 அன்று அம்பேத்கரால் அறிமுகப்படுத்தப்பட்டது (முதல் வாசிப்பு). இரண்டாவது வாசிப்பு ஒவ்வொரு உட்பிரிவினைப் படிப்பதன் மூலம் பரிசீலனை செய்யப்பட்டது. இதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆனது. மூன்று வரைவுகள் மற்றும் மூன்று வாசிப்புகளுக்குப் பிறகு, அரசியலமைப்பு 26 நவம்பர் 1949 அன்று நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அம்பேத்கர் 25 நவம்பர் 1949 அன்று அரசியல் நிர்ணய சபையில் தனது இறுதி உரையில் கூறினார்:
“எனக்கு கொடுக்கப்பட்ட பாராட்டுக்கள் உண்மையில் எனக்குச் சொந்தமானது அல்ல. இது ஓரளவு வரைவுக் குழுவின் பரிசீலனைக்காக அரசியலமைப்பின் தோராயமான வரைவைத் தயாரித்த அரசியல் நிர்ணய சபையின் அரசியலமைப்பு ஆலோசகர் சர் பி.என். ராவ் அவர்களுக்குச் சொந்தமானது”.
பர்மாவின் அரசியலமைப்பை உருவாக்குவதில் பங்கு
மியான்மர் அல்லது பர்மாவின் ஆரம்பகால அரசியலமைப்பை உருவாக்கவும் ராவ் உதவினார். அவர் பர்மாவின் பிரதம மந்திரி யு ஆங் சான்-ஐ 1946 டிசம்பரில் புது டெல்லியில் சந்தித்தார், அவர் பர்மாவின் அரசியலமைப்பை உருவாக்க உதவுமாறு அழைத்தார். பர்மாவின் அரசியலமைப்பு ஆலோசகர் ஏப்ரல் 1947இல் புது தில்லிக்கு அனுப்பப்பட்டார், அங்கு அவர்கள் ஒன்றாக இணைந்து ஆராய்ச்சிப் பொருட்களைச் சேகரித்தனர் மற்றும் ஒரு வரைவுக் குழுவால் மாற்றங்களுக்காக ரங்கூனுக்கு எடுத்துச் செல்லப்பட்ட முதல் வரைவைத் தயாரித்தனர். அரசியலமைப்பு 24 செப்டம்பர் 1947இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ராவ் ரங்கூனுக்கு (இப்போது யாங்கூன்) அரசியலமைப்பின் இறுதி வரைவு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படுவதைக் காணச் சென்றார்.
வெளிநாடுகளில் பணி
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதியாக ராவ் பணியாற்றினார். 1949 முதல் 1952 வரை ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்படும் வரை ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்தார். அவர் ஜூன் 1950இல் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றினார்.
சர்வதேச நீதி மன்றம்
1951ஆம் ஆண்டின் இறுதியில் சர்வதேச நீதிமன்றத்திற்குத் தேர்தலில் நிற்க வெளிவிவகார அமைச்சினால் ராவ் அழைக்கப்பட்டார், மேலும் 1952இல் அங்கே பணியாற்றத் தொடங்கினார். 1953இல் சூரிச்சில் சிகிச்சை பெற்றபோது உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இறப்பு மற்றும் அவருக்குச் செலுத்தப்பட்ட மரியாதை
ராவ் 30 நவம்பர் 1953 அன்று சூரிச்சில் குடல் புற்றுநோயால் இறந்தார். இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் அவரது மரணம் குறித்துப் பேசினார் மற்றும் அவையில் சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 1988ஆம் ஆண்டு, அவரது பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி, அரசு. பி.என். ராவ் அவர்களைக் கவுரவிக்கும் வகையில் இந்தியாவின் தபால்தலை வெளியிடப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளே கோவில் பொக்கிஷங்களை திருடுவதற்கு துணை போவதா? என்று, இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:
தம்பிரான் தோழர் என போற்றப்படுபவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். சமய குரவர்கள் நால்வரில் ஒருவர் அவர். அவர் பிறந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் தலமாகும். அந்த ஊரில் உள்ள அருள்மிகு பக்த ஜனேஸ்வரர் திருக்கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அங்கு சுந்தரர் காலத்து பொருட்கள், செப்பேடுகள் மற்றும் கும்பாபிஷேகத்தில் உபயோகப்படுத்திய பொருட்கள், திருத்தேர் பாகங்கள் எல்லாவற்றையும் ஓர் அறையில் வைத்து உள்ளனர்.
இதனை உளுந்தூர்பேட்டை மாம்பாக்கம் பழனிவேல் பழைய பொருட்கள் வாங்கும் காயிலான் கடையில் விற்றதை பார்த்த கிராம மக்கள் பொக்கிஷங்களை எடைக்கு போட்டவரை விரட்டி பிடித்ததில், இது இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் துணையுடன் நடந்த திருட்டு என தெரிய வந்துள்ளது.
அந்த சமயம் அங்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மதீனா அவர்கள், வாகனத்தை சிறைப்பிடித்து அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக காவல்துறையில் புகாரளிப்பேன் என்று பொதுமக்களை மிரட்டியுள்ளார். மேலும் தனது சாதியை கூறி அவமானப்படுத்தியதாகக் கூறி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உள்ளே தள்ளி விடுவேன் என்றும் பேசி திருட்டை கண்டுபிடித்த மக்களை பயமுறுத்தும் தொனியில் பேசியுள்ளார்.
திருட்டு சம்பந்தமாக ஊர் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி சார்பில் காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறை நடவடிக்கை எடுத்தனர். இதனை மறைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மதீனா தங்களுக்குத் தெரியாமல் கோவில் பொருட்கள் திருடு போனதாக புகார் தெரிவித்துள்ளார்.
பட்டபகலில் வாகனத்தை கொண்டு வந்து கோவிலில் அறையை திறந்து திருடியதாக புகார் கொடுக்கிறார் என்றால் எத்தகைய நாடகம் இது. இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகும்.
கோவிலின் கட்டுப்பாட்டில் இருந்த அறையில் வைக்கப்பட்ட பொருட்களை எடுக்க பரிக்கல் கிராமத்தை சேர்ந்த லோகேஷ் என்பவருக்கு யார் அனுமதி கொடுத்தது என்பது குறித்து காவல்துறை உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் சுந்தரர் காலத்து செப்பேடுகள், பொருட்கள் விலை மதிப்பற்ற கால பொக்கிஷங்கள் அவை. இதனை காயாலன் கடையில் போடுவது என்பது திட்டமிட்டு கடத்துவதற்கு சமம். மேலும் சுந்தரர் வரலாற்றை அழிக்கும் நாத்திக அரசின் நயவஞ்சகமாக இருக்குமோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. கோவில் கும்பாபிஷேகம் என்பதே கோவிலின் விலையுயர்ந்த பொருட்களை சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை களவாடி அழிக்கதானோ என பல சிவனடியார்கள் கேள்வி எழுப்பிவரும் நிலையில் இந்த திருட்டு சம்பவமானது மக்களையும் சந்தேகப்பட வைத்துள்ளது.
இந்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி மதீனா மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்பே உள்ளன. அவரது அரசியல் செல்வாக்கால் அவரது உயர் அதிகாரிகளையே பந்தாடியவர் இவர் என்றும் கூறப்படுகிறது.
மதீனா அவர்கள் இதற்கு முன்பு பரிக்கல் கிராமத்து பெருமாள் கோவிலில் அதிகாரியாக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது மதீனா கும்பாபிஷேக நன்கொடை பெறுவதற்கு தனியார் வங்கியில் தனியாக கணக்கு துவக்கி மோசடி செய்ததாகவும் புகார் எழுந்தது. அதனை விசாரிக்க வந்த மேலதிகாரியை மேலிடத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி மாற்றலாக செய்தார் என்றும் கூறப்படுகிறது. இவரது கட்டுப்பாட்டில் 19 கோவில்கள் உள்ளன. அவற்றிலும் பல மோசடிகள் நடைபெறுவதாக பக்தர்கள் பேசி வருகின்றனர்.
இவற்றை எல்லாம் கண்டித்து, அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாவலூரில் பொதுமக்கள், பக்தர்கள், சிவனடியார்கள் இந்து முன்னணி தலைமையில் கண்களை, வாயை கருப்பு துணி அணிந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
இனியும் அரசு விழித்துக் கொள்ளாமல் மெத்தனமாக செயல்படக் கூடாது. தமிழக அரசும் காவல்துறையும் கோவிலின் பொக்கிஷமான செப்பேடுகள், அந்த காலத்து பொருட்கள் திருடி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு துணைபோகும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீதும் தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாத்தூர் அருகே செவல்பட்டியில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து-தொழிலாளர்கள் உடனே வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி 30, என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை செவல்பட்டி கிராமத்தில் இயங்கி வருகிறது.
சென்னை உரிமம் பெற்று இயங்கி வரும் இந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று மதியம் உணவு இடைவெளிக்கு பின்னர் வழக்கம் போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு ரசாயன மூலப்பொருள் சேமித்து வைக்கப்பட்ட குடோனில் ரசாயன வேதியியல் மாற்றம் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் உள்ள மூன்று அறைகள் தரைமட்டமானது. ரசாயன பொருட்கள் வெடித்த உடனே பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உடனே வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் ஆலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வாகனங்கள் சேதமடைந்தன.
3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்லம்-செகந்திராபாத் சிறப்புவண்டி(07176) நேர & வழித்தட மாற்றப்பட்டுள்ளது.
திண்டுக்கல் திருச்சி வழித்தடத்தில் நடைபெறும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகளால் கொல்லம்-செகந்திராபாத் சிறப்புவண்டி(07176) கீழ்கண்ட மாற்றங்களுடன் இயக்கப்படும்.
21.12.24/சனிக்கிழமை கொல்லத்திலிருந்து 05.00 மணிக்குப் பதிலாக 1மணி நேரம் தாமதமாக 06.00 மணிக்குக் கிளம்பும்.
04.01.25/சனி: கொல்லத்திலிருந்து 05.00 மணிக்குப் பதிலாக 2மணி நேரம் தாமதமாக 07.00 மணிக்குக் கிளம்பும். வழியில் 65 நிமிட தாமதமும் அடங்கும்.
11.01.25/சனிக்கிழமை கொல்லத்திலிருந்து சரியான நேரத்தில் 05.00 மணிக்குக் கிளம்பி மாற்று வழித்தடமான மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியே இயக்கப்படும். மதுரை, திண்டுக்கல் செல்லாது.
செகந்திராபாத்-கொல்லம் சிறப்புவண்டி(07175) வழக்கம் போல் இயங்கும் என்பதை பயணிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்தியா – ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட் – காபா மைதானம், பிரிஸ்பேன் – முதல் நான்கு நாள்கள்
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
ஆஸ்திரேலிய அணி (முதல் இன்னிங்க்ஸ் 117.1 ஓவரில் 445 ரன், ட்ராவிஸ் ஹெட் 152, ஸ்டீவன் ஸ்மித் 101, அலக்ஸ் கேரி 70, பும்ரா 6/76, சிராஜ் 2/97, ஆகாஷ் தீப் 1/95) இந்திய அணி (முதல் இன்னிக்ஸ் 74.5 ஓவர்களில் 252/9, கே.எல். ராகுல் 84, ரவீந்தர் ஜதேஜா 77, ஆகாஷ் தீப் ஆட்டமிழக்காமல் 27, பேட் கம்மின்ஸ் 4/80, மிட்சல் ஸ்டார்க் 3/83, ஹேசல் வுட் 1/22, நாதன் லியான் 1/54)
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இரண்டு போட்டிகளின் முடிவில் சமநிலையில் இருக்கிறது. இரண்டு அணிகளும் தலா ஒரு டெஸ்டில் வென்றிருக்கின்றன. அந்த நிலையில் மூன்றாவது போட்டி பிரிஸ்பேன், காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித் 101, டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் எடுத்த உதவியுடன் 445 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 4, கில் 1, விராட் கோலி 3, ரிஷப் பண்ட் 9, கேப்டன் ரோஹித் 10 ரன்களில் அவுட்டாகி மெகா ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதனால் 74-5 என திணறிய இந்திய அணிக்கு ஒரு புறம் கே.எல். ராகுல் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த ஜடேஜாவுடன் சேர்ந்து 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் கடுமையாக போராடி 84 ரன்கள் குவித்து அவுட்டானார்.
அதற்கடுத்ததாக வந்த நிதிஷ் ரெட்டி போராடி 16 (16) ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் மறுபுறம் தம்முடைய பங்கிற்கு நங்கூரமாக விளையாடிய ஜடேஜா அரை சதமடித்தார். ஆனால் முக்கிய நேரத்தில் 77 ரன்களில் அவர் அவுட்டானதால் 1 விக்கெட்டை மட்டுமே வைத்திருந்த இந்தியா ஃபாலோ ஆன் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒருவேளை அப்படி நடந்தால் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்திப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். ஏனெனில் காபா பிட்ச்சில் ஐந்தாவது நாள் பேட்டிங் செய்வது மிகவும் கடினம் என்பதுடன் இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்த்து ரசிகர்கள் வேதனையில் உள்ளார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜஸ்ப்ரித் பும்ரா – ஆகாஷ் தீப் ஆகியோர் மிகவும் தில்லாக பேட்டிங் செய்து ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்தனர்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய அந்த ஜோடியில் ஆகாஷ் தீப் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 27* (31 பந்துகள்), பும்ரா 1 சிக்ஸருடன் 10* (27 பந்துகள்) ரன்கள் எடுத்து 39* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஃபாலோ ஆனை தவிர்த்து இந்தியாவின் மானத்தை காப்பாற்றினார்கள். அதை கம்பீர் ரோகித், கோலி உள்ளிட்ட இந்திய அணியினர் உடைமாற்றும் அறை அருகில் இருந்து கொண்டாடினார்கள். இறுதியில் நிறைவுக்கு வந்த நான்காவது நாள் முடிவில் 252-9 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இன்னும் 193 ரன்கள் பின்தங்கியுள்ளது. தற்போதைய நிலையில் இந்தியா குறைந்தபட்சம் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்துள்ளது.
முதல் நான்கு நாள்களிலும் மழையால் ஆட்டம் தடைப்பட்டது. ஐந்தாவது நாளில் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. அப்படியே மழை வழி விட்டாலும் இந்திய பேட்ஸ்மேன்களும் தங்களது தவறை உணர்ந்து விளையாடி தோல்வியை தவிர்க்க பிரகாச வாய்ப்புள்ளது. அப்படி தோல்வியை தவிர்த்தால் கடைசி 2 போட்டிகளில் நன்றாக விளையாடும் பட்சத்தில் இந்தத் தொடரையே இந்தியா வெல்வதற்கும் வாய்ப்பு உருவாகும்.
கேரளத்தின் மருத்துவக் கழிவுகள், உணவு இறைச்சிக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, அதிக விளைச்சல் இருக்கும் பொள்ளாச்சி போன்ற பகுதிகளிலும், தென் தமிழகத்தின் நெல்லை தென்காசி மாவட்டங்களிலும் எல்லையோரப் பகுதிகளில் லாரி லாரியாக கழிவுகளைக் கொண்டு வந்து கேரளம் கொட்டிவிட்டுச் செல்வது வாடிக்கையாக இருக்கிறது.
இந்நிலையில், கேரளத்தின் மருத்துவக் கழிவுகள் தென்தமிழகத்தில் கொட்டப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய பாஜக., தலைவர் அண்ணாமலை, இது தொடர்பில் இனி நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், கேரளத்தில் சென்று தமிழகத்தின் கழிவுகளைக் கொட்டுவோம் என்று பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் பதிவு செய்த கருத்து…
காவிரி நீர் உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை தனது கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள், கேரள மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை, கேரள கம்யூனிஸ்ட் அரசின் குப்பைக் கிடங்காக மாற்றவும் அனுமதித்திருக்கிறார்.
கேரள கம்யூனிஸ்ட் அரசுடன் திமுக அரசு உறவாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், கேரள மாநிலத்தின் பயோமெடிக்கல், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சிக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக நமது தென்மாவட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. தினம் தினம் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் இந்தக் கழிவுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய சோதனைச் சாவடிகள், வெறும் வசூல் மையங்களாக மட்டுமே மாறிவிட்டன.
ஒருபுறம் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்துக்குச் சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் திமுக அரசு, மறுபுறம் தமிழகத்தை குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்திக்கொள்ள சுதந்திரமான அனுமதி அளித்துள்ளது. அதிகாரிகளிடமும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் பலமுறை புகார் அளித்தும், இதனைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. முழுக்க முழுக்க திமுக அரசுக்குத் தெரிந்தே இவை நடைபெறுகின்றன.
உடனடியாக, கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதைத் திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இனியும் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், வரும் 2025 ஜனவரி முதல் வாரத்தில், பொதுமக்களைத் திரட்டி, இந்த உயிரியல் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று, கேரளாவில் கொண்டு கொட்டுவோம். முதல் லாரியில் நானும் செல்வேன் என்பதைத் திமுக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.
கேரள கேன்சர் சிகிச்சை கழிவுகள் திருநெல்வேலியில் மூடை மூடையாக கொட்டப்படுகிறது. தமிழகம் என்ன கேரளத்தின் குப்பைத் தொட்டியா? மக்களின் நலனில் அக்கறை இல்லாத தமிழக அரசுக்கு இந்துமுன்னணி கண்டனம் என்று குறிப்பிட்டு, இந்துமுன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையத்தின் மருத்துவக் கழிவுகள் மற்றும் தனியார் மருத்துவமனையின் கழிவுகள் திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி தாலுகா நடுக்கல்லூர் கிராமத்தில் உள்ள குளத்தில் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டுள்ள செய்தி நாளிதழ்களில் வெளியாகியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
கொட்டப்பட்டுள்ள கழிவுகள் உயிர்க்கொல்லி நோயான கேன்சர் மருத்துவ சிகிச்சையினுடைய மருத்துவ கழிவுகள் என்பது நெல்லை மாவட்ட மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மக்கள் பயன்பாட்டில் உள்ள குளத்தில் இத்தகைய கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் திருநெல்வேலி மாவட்ட மக்களின் மக்களுக்கு தொற்று நோய்க்கிருமிகள் பரவி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த குளத்தில் நீர் அருந்தும் கால்நடைகளுக்கும் இது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் .
தமிழக கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள் எல்லாம் கடந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநெல்வேலியில் கேரள கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளாவில் இருந்து அனைத்து விதமான கழிவுகளும் திருநெல்வேலி தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் கொட்டப்பட்டு கேரள மாநிலத்தின் கழிவறையாகவும் குப்பைக் கிடங்காகவும் தமிழக தென் மாவட்டங்கள் மாறி உள்ளது.
கேரளாவில் உள்ள மிருகக் கழிவுகளும் மின்னணு கழிவுகளும் பல்வேறு விதமான மருத்துவக் கழிவுகளும் நெல்லை தென்காசி குமரி மாவட்டங்களில் கொண்டு வரப்பட்டு கொட்டப்படுகிறது. இப்போது உயிர்கொல்லி நோயான கேன்சர் மருத்துவ சிகிச்சை கழிவுகளும் கொட்டப்பட்டிருப்தால் கொரானா போன்ற தொற்று நோய் ஏதும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமானது நெல்லை மாவட்ட மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
நெல்லை தென்காசி மாவட்டத்தில் உள்ள மணல் மற்றும் கல் போன்ற கனிம வளங்கள் அரிசி போன்ற உணவுப் பொருட்கள் எல்லாம் கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. அங்குள்ள குப்பைகள் இங்கே வந்து கொட்டப்படுகிறது இதனை தடுக்க வேண்டிய தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தென் மாவட்ட மக்கள் மீது தமிழக அரசு எந்த அளவிற்கு மெத்தனப் போக்கோடு செயல்படுகிறது என்பதை காட்டுகிறது
கேரளாவில் சென்று ஈவேராவுக்கு வைக்கம் விழா எடுத்து அரசியல் நடத்துவதில் தான் திராவிட மாடல் அரசு முனைப்பு காட்டுகிறதே தவிர மக்களின் உயிரை காப்பாற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை
தென் தமிழக மக்களின் உயிர் பாதுகாப்பு சுகாதாரம் குறித்து தமிழக அரசுக்கோ நெல்லை தென்காசி மாவட்ட நிர்வாகத்திற்கும் எந்த கவலையும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.
தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்டுகள் , தமிழக மக்கள் உயிரோடு விளையாடும் கேரள கம்யூனிச அரசை எதிர்த்து போராட்டம் நடத்தாமல் வாய் மூடி வேடிக்கை பார்த்து அரசியல் செய்யும் மக்கள் விரோத போக்கையும் இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது
கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது ஓரிரு சம்பவங்கள் மூலமாக சொல்லப்படுவது அல்ல தொடர்ந்து கேரள மாநிலத்தின் கழிவுகள் தென் மாவட்டங்களில் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
தமிழக எல்லையில் சோதனை சாவடிகளில் இந்த கழிவு வாகனங்கள் எப்படி அனுமதிக்கப்படுகிறது என்பது சோதனை சாவடிகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குரியாக்கி உள்ளது. இது போன்ற கழிவுகளை கொண்டு வந்து இங்கே கொட்டும் நபர்கள் மீதும் அதன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதும் தமிழகத்தில் எந்த கடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை அதன் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி தென்காசி மாவட்ட ஆட்சியரின் ஆட்சியர் கலெக்டர்களின் மெத்தனப் போக்கினால் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது
இனியாவது தமிழக அரசு தென் மாவட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டு தென் தமிழகத்தை கேரளாவின் குப்பை கிடங்காக மாற்றி வரும் கேரள அரசு நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அத்தகைய வாகனங்களை பறிமுதல் செய்து அழித்து தென் மாவட்ட மக்களின் உயிரை பாதுகாக்க கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது
இனியும் இதுபோன்று ஒரு நிகழ்வு ஏற்பட்டால் தென் மாவட்ட மக்களை ஒன்று திரட்டி இந்துமுன்னணி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறது
தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை இலஞ்சி இடையேயான கி.மீ 99/4 இரயில்வே மேம்பாலம் மற்றும் அணுகுசாலை அமைக்கும் பணிகள் (கடவு எண்.503) 18.12.2024 முதல் தொடங்க உள்ளதால் இரயில்வே கேட் மூடப்படவுள்ளது.
கொல்லம் – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் குத்துக்கல்வலசை-இலஞ்சி போக்குவரத்து மாற்று வழி தடத்தில் மாற்றி விடப்பட உள்ளது மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தகவல் தெரிவித்துள்ளார்.
கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் குத்துக்கல்வலசை இலஞ்சி இடையேயான கி.மீ 99/4 இரயில்வே மேம்பாலம் மற்றும் அணுகுசாலை அமைக்கும் பணிகள் (கடவு எண்.503) 18.122024 முதல் தொடங்க உள்ளதால் இரயில்வே கேட் மூடப்படவுள்ளது. எனவே கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் குத்துக்கல்வலசை-இலஞ்சி – போக்குவரத்தை பின் வருமாறு மாற்றி வழி தடத்தில் மாற்றி விடப்பட உள்ளது.
எனவே, கனரக வாகனங்கள் அனைத்தும் இலத்துார் விலக்கிலிருந்து கணக்குப்பிள்ளை வழியாக செங்கோட்டையும் மற்றும் செங்கோட்டை ஆர்ச்சிலிருந்து கணக்கப்பிள்ளைவலசை, இலத்தூர் விலக்கு வழியாக மதுரை சாலையை அடையலாம். இலகுரக வாகனங்கள் அனைத்தும் செங்கோட்டை ஆர்ச்சிலிருந்து 2/8 கி.மீ பிரிந்து செல்லும் வேதம்புதூர் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது…
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் தனுர் மாதம் எனப்படும் மார்கழி மாதப்பிறப்பு இன்று அதிகாலை 03.30 மணிக்கு நடைபெற்றதை முன்னிட்டு இன்று ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
108 வைணவ ஸ்தலங்களில் முக்கியமான ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா மற்றும் மார்கழி மாத விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாள் மானிடப் பெண்ணாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தது ஸ்ரீ ரங்கநாதருக்கு பூமாலை சூட்டி பின் பாமாலை பாடி அரங்கனை அடைந்தார்.
அரங்கனை அடைய 30 நாட்கள் மார்கழி மாதம் நோன்பிருந்து திருப்பாவை பாடிய ஆண்டாள் நோன்பு நோற்ற காலமான இந்த மார்கழி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
அதனடிப்படையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு மார்கழி மாத முதல் நாள் பிறப்பையொட்டி ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக குரடு மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்கம்ன்னாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து 30 திருப்பாவைகள் தங்க இழைகளால் நெய்யப்பட்ட புடவை ஸ்ரீ ஆண்டாளுக்கு சாட்றப்பட்டது.
திருமணமாகாத கன்னிப் பெண்கள் ஸ்ரீஆண்டாள் நோன்பு நோற்ற இந்த மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி ஸ்ரீ ஆண்டாளை தரிசனம் செய்தால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம் என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் ஸ்ரீ ஆண்டாளுக்கு 30 நாட்களும் திருப்பாவை பாடல்களே பாடப்பட்டு பூஜைகள் நடைபெறும்
இன்று ஒரு நாள் மட்டுமே மார்கழி மாதம் முதல் நாள் பிறப்பை ஒட்டி கொரடு மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள்,ரெங்க மன்னார் சுவாமிகள் முன்னிலையில் திருப்பாவைகள் பாடப்படும் மார்கழி மாதம் மீதமுள்ள மற்ற நாட்களில் மூலஸ்தானம் எனப்படும் கருவறையில் வைத்து திருப்பாவைகள் பாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் தனுர் மாதம் எனப்படும் மார்கழி மாதப்பிறப்பு இன்று அதிகாலை 03.30 மணிக்கு நடைபெற்றதை முன்னிட்டு இன்று ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.108 வைணவ ஸ்தலங்களில் முக்கியமான ஸ்தனமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா மற்றும் மார்கழி மாத விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாள் மானிடப் பெண்ணாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தது ஸ்ரீ ரங்கநாதருக்கு பூமாலை சூட்டி பின் பாமாலை பாடி அரங்கனை அடைந்தார். அரங்கனை அடைய 30 நாட்கள் மார்கழி மாதம் நோன்பிருந்து திருப்பாவை பாடிய ஆண்டாள் நோன்பு நோற்ற காலமான இந்த மார்கழி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
அதனடிப்படையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு மார்கழி மாத முதல் நாள் பிறப்பையொட்டி ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக குரடு மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்கம்ன்னாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து 30 திருப்பாவைகள் தங்க இழைகளால் நெய்யப்பட்ட புடவை ஸ்ரீ ஆண்டாளுக்கு சாட்றப்பட்டது. திருமணமாகாத கன்னிப் பெண்கள் ஸ்ரீஆண்டாள் நோன்பு நோற்ற இந்த மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி ஸ்ரீ ஆண்டாளை தரிசனம் செய்தால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம் என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று முதல் ஸ்ரீ ஆண்டாளுக்கு 30 நாட்களும் திருப்பாவை பாடல்களே பாடப்பட்டு பூஜைகள் நடைபெறும் இன்று ஒரு நாள் மட்டுமே மார்கழி மாதம் முதல் நாள் பிறப்பை ஒட்டி கொரடு மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள்,ரெங்க மன்னார் சுவாமிகள் முன்னிலையில் திருப்பாவைகள் பாடப்படும் மார்கழி மாதம் மீதமுள்ள மற்ற நாட்களில் மூலஸ்தானம் எனப்படும் கருவறையில் வைத்து திருப்பாவைகள் பாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.