இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ரயில் எண்: 07175/07176 செகந்திராபாத் – கொல்லம் – செகந்திராபாத் சிறப்பு எக்ஸ்பிரஸ் 2025 ஜனவரி 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை, ராஜபாளையம் செங்கோட்டை, புனலூர் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதுபோல் தாம்பரம் திருவனந்தபுரம் ரயில் வழி ராஜபாளையம் செங்கோட்டை கொல்லம் ஜனவரி 31வரையும் திருவனந்தபுரம் தாம்பரம் ரயில் பிப்ரவரி 2வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
ரயில் எண். : 07175/07176 செகண்டராபாத் – கொல்லம் – செகண்டராபாத் சிறப்பு ரயில் சேவை 2025 ஜனவரி 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென்காசி வழியாக செகந்திராபாத் – கொல்லம் இடையே சிறப்பு ரயில் நல்கொண்டா , குண்டூர் , தெனாலி ,ஒங்கோல் , ரேணிகுண்டா , காட்பாடி ,திருவண்ணாமலை , விழுப்புரம் , திருச்சி , திண்டுக்கல், மதுரை ,விருதுநகர், தென்காசி , செங்கோட்டை , புனலூர் வழியாக இயக்குகிறது
செகந்திராபாத் – கொல்லம் – வியாழன்
கொல்லம் – செகந்திராபாத் தற்போது முன்பதிவு தொடங்கி காத்திருப்பு பட்டியலில் உள்ளது.
நீங்கள் செகந்திராபாத், ஹைதராபாத், திருப்பதி (ரேணிகுண்டா), திருவண்ணாமலை போன்ற பல்வேறு இடங்களுக்குச் செல்ல விரும்பினால், கூடிய விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்.
செகண்டராபாத் – கொல்லம் (வியாழன்தோறும்)
செகந்திராபாத் : இரவு 08:00 மணி புனலூர் : இரவு 11:40 மணி கொல்லம் : காலை 01:30 மணி
கொல்லம் – செகண்டராபாத் (ஒவ்வொரு சனிக்கிழமையும்)
கொல்லம் : காலை 05:00 மணி புனலூர் : காலை 06:15 மணி செகந்திராபாத் : 01:30 PM
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ள சேவையாகும்.*தென்காசி வழியாக செகந்திராபாத் – கொல்லம் இடையே செல்லும் சிறப்பு ரயிலுக்கு சிவகாசி ராஜபாளையம் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோல் தாம்பரம் திருவனந்தபுரம் ரயில் வழி ராஜபாளையம் செங்கோட்டை கொல்லம் ஜனவரி 31வரையும் திருவனந்தபுரம் தாம்பரம் ரயில் பிப்ரவரி 2வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
கடை மற்றும் வணிக நிறுவன வாடகை ஜிஎஸ்டி சம்பந்தமாக உண்மைத் தன்மையை மறைத்து வியாபாரிகளை அச்சுறுத்தும், போராடத் தூண்டும் வணிகர் சங்கங்களை கண்டிக்கிறோம் என்று, இந்து வியாபாரிகள் நல சங்க மாநிலத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
மத்திய அரசுக்கு எதிரான சிந்தனையை வியாபாரிகள் மத்தியில் ஏற்படுத்தும் சில அமைப்புகளும், திமுகவின் விசுவாசிகளும் ஜிஎஸ்டி சம்பந்தமாக உண்மை நிலையை மறைத்து வியாபாரிகளை தூண்டி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
உண்மை நிலையை கடைக்காரர்களுக்கு கொண்டு செல்வது இந்து வியாபாரிகள் நல சங்கத்தின் தலையாய கடமை என்பதால் நாங்கள் விளக்கம் கூறுகிறோம்.
வீட்டு வாடகைக்கு ஜிஸ்டி கிடையாது, தொழில் வருமானம் சம்மந்தப்பட்ட கட்டிடங்களின் வாடகைக்கு மட்டுமே ஜிஸ்டி உண்டு. அதிலும் வருமானம் ஈட்டும் கட்டிட உரிமையாளர் வருமானம், வருடத்திற்கு 20 இலட்சத்திற்கு மேல் சென்றால் மட்டுமே ஜிஸ்டி வரம்பிற்குள் அந்த கட்டிட வாடகை வரும். அதனை விடுத்து, அந்த கட்டிட உரிமையளருடைய மொத்த வருமானம் 20 இலட்சத்திற்குள் இருக்கும் பட்சத்தில், வாடகை மீதான ஜிஸ்டி பற்றிய கவலை தேவையில்லை.
ஒருவேளை வாடகைக்கு குடியிருப்பவர் ஜிஸ்டியில் பதிவு செய்திருப்பவராக இருந்தும், அவருடைய வருமானம் 20 இலட்சத்திற்கு குறைவாக இருந்து (அதே சமயத்தில் கட்டிட உரிமையாளரின் வருட வருமானம் 20 இலட்சத்திற்கு குறைவானதாக இருந்தால்) வாடகை மீதான ஜிஸ்டி பற்றிய கவலையே தேவையில்லை. பல சிறு தொழில் மற்றும் குறுந்தொழில் செய்வோர் இந்த தகுதியில் வந்துவிடுவர்.
வாடகைக்கு இருப்பவர் மற்றும் கட்டிட உரிமையாளர் இருவரின் வருமானமும் 20 இலட்சத்தினை தாண்டும் பட்சத்தில், வாடகை மீதான 18% ஜிஸ்டி கட்டிட வேண்டும். அதுவும் வியாபாரிகளை பாதிக்காத வகையில் ஐடிசி முறையில் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இந்த விஷயத்தை எந்த கட்சியினரும், சங்கங்களும் கடைக்காரரிடம் கூறுவது கிடையாது.
வாடகைக்கு இருப்பவரின் வருமானம் 20 இலட்சத்திற்கு குறைவாகவும், கட்டிட உரிமையளரின் வருமானம் 20 இலட்சத்திற்கு அதிகமாகவும் இருந்தால் மட்டுமே வாடகைக்கு குடியிருப்பவருக்கு பிரச்சனை ஏற்படும், ஏனெனில் வாடகை மீதான 18% ஜிஸ்டி செலுத்த வேண்டியதிருக்கும், செலுத்திய பின்னர் அதனை குடியிருப்பவரால் திரும்ப பெற இயலாது (ஆனால் இவ்வகையான விஷயங்கள் மிகக் குறைவுதான்).
ஆனால் இந்த விஷயமானது தொழில் செய்யும் அனைவர் மத்தியிலும் ஒரு பயத்தினை ஏற்படுத்தும்படியாக பரப்பப்படுகிறது. உண்மையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள GST பெரும்பாலானோர்களைப் பாதிக்காது.
ஆனால் ஜிஸ்டிக்குள் வராத வாடகைக்கு குடியிருப்பவர், ஜிஸ்டிக்குள் இருக்கின்ற பில்டிங் ஓனர் என்ற நிலையில்தான் வாடகைக்கு குடியிருப்பவருக்கு பிரச்சனைகளைத் தரவல்லது. இதற்கும் சரியான தீர்வினை மத்திய மாநில அரசு கொண்டுவரவேண்டும்.
மற்றபடி வழக்கமாக மத்திய அரசின் மீது பரப்பப்படும் பெரும் பொய்கள் போலவே, இவ்விஷயமும் உள்ளது. இதில் மாநில அரசுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. இதுவரை தமிழகத்தை ஆளும் திமுக அரசு ஜிஎஸ்டி கூட்டத்தில் கடைக்காரர்களுக்கு 18% ஜிஎஸ்டி வரியை எதிர்க்கவில்லை. அதனை மறைத்து மத்திய அரசை மட்டும் குற்றம் கூறி மத்திய அரசுக்கு எதிரான சிந்தனையை கடைக்காரர்கள் மத்தியில் உருவாக்க திமுகவின் அனுதாபிகள் முழுமூச்சாக செயல்படுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை போன்றது.
எனவே ஜிஎஸ்டி சம்பந்தமாக முழுமையாக தெரிந்தும் கூட வியாபாரிகளை தூண்டி குளிர் காய நினைப்பவர்களை இந்து வியாபாரிகள் நல சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
வியாபாரிகள் தாங்கள் உண்மையாகவே ஜிஎஸ்டி கட்டுவதால் பாதிக்கப்படுகிறோமா? என்று சிந்தித்து செயல்படுதல் நல்லது.
திருக்கார்த்திகை தீபத் திருவிழா தமிழர்களின் மிகப் பழைய திருவிழா என்பதற்கும், அத்திருநாள் திருவண்ணாமலை திருத்தலத்திலே மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்பதற்கும் சங்க இலக்கியமான அகநானூற்றிலேயே சான்று உள்ளது.
புலவர் நக்கீரர் பாடிய அகநானூற்றின் 141-ஆவது பாடலிலே இதுகுறித்து என்ன கூறியிருக்கிறது தெரியுமா?
இதன் பொருள்: “மழை பெய்யாத பருவத்திலே, பரந்து விரிந்த வானத்திலே, முயல் குட்டி போன்ற நிழல் தென்படுகின்ற முழுமையான சந்திரன் தோன்றுகின்ற பௌர்ணமி தினத்திலே, அறுமீன் எனப்படும் ஆறு நட்சத்திரக் கூட்டமான கார்த்திகை நட்சத்திரம் சேருகின்ற இருள் நீங்கிய நாளிலே, தெருக்களிலே வீடுகள்தோறும் அருகருகே விளக்குகளை ஏற்றிவைத்து, மாலைகளைத் தொங்கவிட்டு, பழமையான வெற்றி பொருந்திய தொன்மை வாய்ந்த ஊரிலே நடைபெறுகின்ற விழாவைச் சிறப்பாகக் கொண்டாட நீங்கள் உங்கள் சுற்றத்தாரோடு வாருங்கள்” என்று ஒரு பெண் தனது தோழிகளிடம் கூறுகிறாள்.
அவ்வகையிலே, இருள் அகன்று தெருவெங்கும் ஜெகஜ்ஜோதியாக விளக்குகள் எரிகின்ற திருநாள்தான் திருக்கார்த்திகை தீபத் திருவிழா. அது கொண்டாடப்பட்டும் பழம்பெரும் வெற்றி பொருந்திய நகரம் திருவண்ணாமலை திருத்தலம்.
கார்த்திகை மாதத்தில் இல்லங்கள் தோறும் இருளை அகலச் செய்யும் அகல் விளக்குகளை ஏற்றிவைத்துக் கொண்டாடுவது வழக்கம். இதனை அகநானூறு, நற்றிணை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் சிறப்பாகப் பாடியுள்ளன. புலவனாகவும் இருந்த பாண்டிய மன்னன் பெருங்கடுங்கோ, பாலைத் திணையில் பாடுவதில் வல்லவன். ஆகையால் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்றும் அழைக்கப்பட்டான்.
அந்த அரசப் புலவன் அகநானூற்றுப் பாடல் ஒன்றில், கார்த்திகை விளக்குகளை இலவ மரத்தில் பூக்கும் பூக்களுக்கு உவமையாகக் கூறியுள்ளான். “பெருவிழா விளக்கம்போல, பலஉடன் இலைஇல மலர்ந்த இலவமொடு” என்பன அப்பாடல் வரிகள்.
மிகப் பெரிய விழாவான திருக்கார்த்திகையின்போது ஏற்றப்படும் வரிசையான விளக்குகளைப்போல, இலைகளே இல்லாத இலவ மரத்திலே வரிசையாகப் பல பூக்கள் பூத்திருந்தனவாம்.
இதேபோல் நற்றிணையில் இதே புலவன் பாடியுள்ள மற்றொரு பாடல், “அறுமீன் பயந்த அறம்செய் திங்கள், செல்சுடர் நெடுங்கொடி போல, பல்பூங் கோங்கம் அணிந்த காடே” என்று கூறுகிறது.
“ஆறு விண்மீன்கள் அடங்கிய கார்த்திகை நட்சத்திரத்தின் பெயர் கொண்ட அறம் புரிவதற்கு ஏற்ற புனித மாதத்தில், ஒரு நீண்ட கொடியைப் போன்று சுடர் விடும் விளக்குகள் வரிசையாக ஏற்றிவைக்கப்படுவதைப் போல, வரிசையாகப் பல பூக்கள் மலர்ந்திருக்கும் கோங்க மரங்கள் நிறைந்த காடு” என்பது இதன் பொருள்.
இவ்வாறு சங்க இலக்கியங்களில் பெருவிழா என்றும் போற்றப்படுகிறது திருக்கார்த்திகைத் திருவிழா.
தென்காசி மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை – ஒரே நாளில் 1345 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவு.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களான அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம், குண்டாறு நீர்த்தேக்கம், கருப்பாநதி நீர்த்தேக்கம், கடனாநிதி நீர்த்தேக்கம், ராமாநதி நீர்த்தேக்கம் உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களிலும் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், நீர்நிலைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ராமாநதி அணையானது தற்போது தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பும் தருவாயில் உள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 650 கன அடிக்கு மேல் நீரானது வெளியேற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கையானது அந்த பகுதியில் உள்ள மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலிபெருக்கிகள் வாயிலாக ராமநதி ஆற்றுப்படுகை கரையோரம் வசித்து வரும் மக்களுக்கு தற்போது விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை சுமார் 1,345 மில்லி மீட்டருக்கு மேலாக வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தென்காசி சுற்றுவட்டார பகுதியில் அதிகபட்சமாக 215 மில்லி மீட்டர் மழைப்பொழிவும், ராமநதி அணைப்பகுதியில் 198 மில்லி மீட்டர் மழைப்பொழிவும், குண்டாறு அணைப்பகுதியில் 160 மில்லி மீட்டர் மழைப்பொழியும், செங்கோட்டை சுற்று வட்டார பகுதியில் 170 மில்லி மீட்டர் மழைப்பொழிவும், ஆய்க்குடி சுற்றுவட்டார பகுதியில் 147 மில்லி மீட்டர் மழைப்பொழிவும், சங்கரன் கோவில் சுற்றுவட்டார பகுதியில் 132 மில்லிமீட்டர் மழை பொழிவும் என ஒட்டுமொத்தமாக அதிகாலை 4.30 மணி வரை மாவட்டத்தில் 1,345 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவகாசியில் தயாராகியுள்ள ‘2025’ம் ஆண்டு தினசரி காலண்டர்… தமிழகத்தின் ‘234’ சட்டமன்ற தொகுதிகளின் முக்கிய விவரங்களையும், ‘க்யூஆர் கோர்டு’ மூலம் அறியலாம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வரும் ‘2025’ம் ஆண்டிற்கான தினசரி காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சிவகாசியில் தயாராகும் தினசரி காலண்டர்களில் ஒவ்வொரு ஆண்டும் புதிய வகைகள் அறிமுகப்படுத்தப்படுவதால் காலண்டர்களுக்கான எதிர்பார்ப்பும், வரவேற்பும் அதிகமாக உள்ளது.
வழக்கமான காலண்டர்களுடன் மினி காலண்டர், மெகா காலண்டர், கடிகாரத்துடன் கூடிய காலண்டர், மாத காலண்டருடன் கூடிய தினசரி காலண்டர், பெட் பாய்ல்ஸ் காலண்டர், டை கட்டிங் காலண்டர் என 300க்கும் மேற்பட்ட ரகங்களில் தினசரி காலண்டர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வரும் புத்தாண்டின் புதிய வரவாக, சிவகாசியில் தயாராகியுள்ள தினசரி காலண்டரில் ஒவ்வொரு நாள் தாளிலும் ஒரு ‘க்யூஆர் கோர்டு’ அச்சிடப்பட்டுள்ளது.
இந்த க்யூஆர் கோர்டை ஸ்கேன் செய்து பார்த்தால் அதில் ஒரு ஊரின் முக்கிய இடங்கள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா இடங்கள், முக்கிய தொழில்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் தெரிந்து கொள்ளலாம். முதன் முதலாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய இடம் என, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளின் முக்கியமான விவரங்கள் இந்த க்யூஆர் கோர்டு மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த புதுரக தினசரி காலண்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இது குறித்து காலண்டர் தயாரிப்பாளர் கற்பகா ஜெய்சங்கர் கூறும் போது, சிவகாசியில் தயாராகும் காலண்டர்கள் தரமானதாகவும், புதுமையாகவும் இருப்பதால் இதற்கான வரவேற்பு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு புதுப்புது வகைகளில் காலண்டர்களை கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையில் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது ரகங்களில் காலண்டர்கள் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு க்யூஆர் கோர்டு அச்சிட்ட காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளின் முக்கிய இடங்கள், வரலாற்று தகவல்கள், ஆன்மீக ஸ்தலங்கள், முக்கிய தொழில்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
எங்களின் இந்த புதிய முயற்சிக்கு, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
2024ஆம் ஆண்டிற்கான செஸ் உலகச் சாம்பியன்ஷிப்போட்டியில் இந்தியாவின், தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்அவர்களை வென்று பட்டம் பெற்றார்.
டி. குகேஷ் அல்லது தொம்மராஜு குகேஷ்(Dommaraju Gukesh) 2006ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் நாள் பிறந்தவர். இவர் ஓர் இந்தியசதுரங்க கிராண்ட் மாஸ்டர் ஆவார். குகேஷ் சென்னையில் பிறந்தார். இவரது குடும்பத்தினர்ஆந்திரப் பிரதேசம், கோதாவரி வடிநிலப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். தந்தை ரஜனிகாந்த்ஒரு காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்; தாயார் பத்மா ஒரு நுண்ணுயிரியலாளர்ஆவார். குகேஷ் தனது ஏழு வயதில் சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொண்டார். சென்னை மேல் அயனம்பாக்கத்தில்உள்ள வேலம்மாள் வித்தியாலயத்தில் படித்தவர்.
குகேஷ் 2015ஆம் ஆண்டு 9 வயதிற்கு உட்பட்டோருக்கானஆசியப் பள்ளிகளின் சதுரங்க வாகைப் போட்டியில் வென்றார், 2018இல் 12 அகவைக்குட்பட்டோருக்கானஉலக இளையோர் சதுரங்க வாகையை வென்றார். அத்துடன் 2018 ஆசிய இளையோர் வாகைப் போட்டிகளில்,12 வயதிற்குட்பட்டோருக்கான தனிநபர் மின்வல்லு, விரைவுவல்லு, தனிநபர் மரபு வல்லு வடிவங்களில்(U-12 team rapid and blitz,and the U-12 individual classical formats)ஐந்து தங்கப் பதக்கங்களையும் வென்றார். மார்ச் 2018இல் 34-ஆவது கேப்பல்-லா-கிராண்டேதிறந்த சுற்று பன்னாட்டுப் பேராதன் பட்டத்திற்கான தேவைகளை நிறைவு செய்தார்.
குகேஷ் 2019 சனவரி 15 அன்று 12 ஆண்டுகள்,7 மாதங்கள், 17 நாட்களில் வரலாற்றில் இரண்டாவது இளைய சதுரங்கப் பேராதன் (கிராண்ட் மாஸ்டர்)ஆனார். 2021 சூனில், யூலியசு பேயர் சேலஞ்சர்சு (Julius Baer Challengers ChessTour, Gelfand Challenge) சுற்றில், 19 இல் 14 புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்றார்.2022ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், குகேஷ் 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியை 8/8என்ற நேர்த்தியான மதிப்பெண்களுடன் தொடங்கினார், 8-ஆவது போட்டியில் இந்தியா-2 அணியைதரவரிசையில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவைத் தோற்கடிக்க உதவினார். குகேஷ் 11 க்கு9 மதிப்பெண்களுடன் முடித்து, முதலாவது பலகையில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
செப்டெம்பர் 2022இல், குகேஷ் முதற்தடவையாக2700 என்ற தரவுப்புள்ளியைத் (2726) தாண்டி, வெய் யி, அலிரெசா பிரூஜா ஆகியோருக்குப்பிறகு 2700 தரவுப்புள்ளியைக் கடந்த மூன்றாவது இளைய வீரராக ஆனார். அக்டோபர் 2022 இல்,ஏம்செஸ் விரைவு வல்லுப் போட்டியில் உலக வாகையாளரான மாக்னசு மேக்னஸ் கார்ல்சனைவீழ்த்திய இளைய வீரர் ஆனார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள்விறு விறுப்பாக சிங்கப்பூரில் நடைபெற்றன. இந்த போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர்குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின் இருவரும் விளையாடி வந்தனர். இந்த போட்டியில் யார் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைவெல்லப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்து கொண்டே சென்ற நிலையில், தமிழக வீரர்குகேஷ் வெற்றிபெற்றுள்ளார்.
14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் சாம்பியன்ஷிப்போட்டியில் முதல் சுற்று போட்டியில் டிங்கும் மூன்றாவது சுற்று போட்டியில் குகேஷூம்வெற்றி பெற்றனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற 4ஆவது சுற்றிலிருந்து 10ஆவது சுற்று வரைசமநிலையிலேயே முடிவடைந்தது. இதனையடுத்து, 11ஆவது சுற்று வரும் போது மூளைக்கு அதிகமாக வேலை கொடுத்து சிறப்பாக விளையாடியகுகேஷ் வெற்றிபெற்றார்.
அதனை தொடர்ந்து அடுத்த சுற்றான 12-வது சுற்றிலும்வெற்றிபெற்றார். அதன்பின் நேற்று நடைபெற்ற 13ஆவது சுற்றில் இருவரும் தலா 6.5 என்ற புள்ளியைபெற்றுக்கொண்ட நிலையில், 13ஆவது சுற்றுமே சமநிலையில் தான் முடிந்தது. எனவே, இருவரும்சமநிலையான புள்ளிகளை பெற்றுள்ள காரணத்தால் 14ஆவது சுற்றில் வெற்றிபெறுபவர் தான் வெற்றியாளர்எனவும் நேற்று கூறப்பட்டது.
இந்த நிலையில், 14ஆவது சுற்றில் போட்டி தொடங்கி2 மணி நேரம் முடிவடைந்த நிலையில் இந்த சுற்றும் டிராவை நோக்கி சென்று கொண்டிருந்த காரணத்தால் நாளை டை பிரேக்கர் முறைப்படி சுற்றுநடைபெறவுள்ளது எனவும் சொல்லப்பட்டது. இந்த சூழலில். 14ஆவது சுற்றில் டிங்லீரெனை வீழ்த்திதமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். மிகவும் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்பட்டத்தை வென்றார் என்கிற சாதனையும் அவர் படைத்துள்ளார்.
ஆட்டம் நடைபெற்றபோது குகேஷ் விரைவாக காய்களைநகர்த்தியதால் அவரிடம் நிறைய நேரம் இருந்தது. கடைசி நேரத்தில் டிங் லீ ஒரு தவறு செய்தார்.குகேஷ் அதனைப் பயன்படுத்தி வெற்றி பெற்றார். ஆட்டம் முடிந்ததும் குகேஷ் ஆனந்தத்தில்கண்ணீர் விட்டது மனதைத் தொடும் அளவில் இருந்தது. அதன் பின்னர் தன்னுடைய வழக்கம்போலகாய்களை போர்டில் முறைப்படி அடுக்கிவிட்டு குகேஷ் எழுந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் குளிர்காலம் தொடங்க உள்ளதை முன்னிட்டு பெருமாளுக்கு போர்வை சாற்றும் வைபவம். ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்) சன்னதியில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு இன்று காலை 108 போர்வை சாற்றும் வைபவம் நடைப்பெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம், ஶ்ரீவைகுண்டம் வைணவ திருத்தலங்களில் கார்த்திகை மாத கைசிக ஏகாதசி அன்று குளிர்காலம் தொடங்க உள்ளதை முன்னிட்டு பெருமாள் மாற்றும் ஆழ்வார்களுக்கு 108 போர்வை சாற்றப்பட்டு கைசிக புராணம் வாசிக்கப்படும்.
அதன்படி இந்த ஆண்டு கைசிக ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரிய பெருமாள் சன்னதிதி முன் உள்ள பகல் பத்து மண்டபம் எனப்படும் கோபாலாவிசால மண்டபத்தில் ஶ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள்,ஆண்டாள் ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரியாழ்வார் மற்றும் 12 ஆழ்வார்கள் எழுந்தருளினர்.
கைசிக ஏகாதசி அன்று மட்டும் கருடாழ்வார் சன்னதியிலிருந்து புறப்பாடாகி பகல் பத்து மண்டபம் எழுந்தருளுவார். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அதிகாலை 4 மணி முதல் ஆண்டாள், ரெங்கமன்னார், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள், ஆழ்வார்கள், ஆச்சாரியர்களுக்கு 108 போர்வை சாற்றும் வைபவம் நடைபெற்றது.
இதில் அரையர் சேவை, கைசிகபுராணம் வாசிக்கப்பட்டது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
உத்யம ராகவந்யாய: அல்லது உத்யோக ராகவந்யாய: உத்யமம் – விடா முயற்சி; ராகவ: – ரகு வம்சத்தில் பிறந்த ஸ்ரீ ராமன்.
ஸ்ரீராமச்சந்திரனுக்கு ரிஷிகளும் தேவர்களும் மட்டுமல்ல, குரங்குகளும், அணில்களும் கூட உதவி செய்தன. ராம காரியத்திற்காக ஜடாயு என்ற பறவை உயிரைத் தியாகம் செய்தது. ஸ்ரீராமர் முனிவர்களுக்கு அபயமளித்தார். வானரர்களுக்கு உயர்ந்த நிலையை வழங்கினார். இந்த நியாயம், ராமனுக்கு உதவி செய்த இயற்கை. ராவணனுக்கு ஏன் உதவவில்லை என்ற கேள்வியை எழுப்புகிறது.
நேர்மையான வழியில் நடப்பவருக்கு பறவைகளும் விலங்குகளும் கூட உதவுகின்றன. அதர்ம வழியில் நடப்பவர்களை சொந்த உறவினரும் விட்டுப் பிரிவர்.
பொருள் – நியாய வழியில் நடப்பவருக்கு விலங்குகளும் பறவைகளும் கூட (திர்யக் ஜந்துக்களும்) உதவும். தீய வழியில் பயணிப்பவரை சகோதரர்களும் விட்டு விலகுவார்கள்.
ராமனின் வலிமையையும் சாமர்த்தியத்தையும் கண்டு அஞ்சி விலங்குகள் அவருக்கு உதவி புரிந்தனவா? இல்லை. அவருடைய நல்ல சுவாவத்தால் அவர் மீது ஏற்பட்ட கௌரவம், பக்தி ஆகியவற்றால் அது சாத்தியமாற்று. அதுதான் ‘உத்யோக ராகவ’ நியாயத்தில் இருக்கும் நியாயம்.
ராவணனுக்கு அவ்வாறு யாரும் உதவி புரியவில்லை. அனைவரும் அசுர ராஜனுக்கு உபதேசம் செய்தார்கள். தாத்தா, மனைவி, சகோதரன், பிள்ளைகள் இவ்வாறு பலர் ராவணாசுரனை எச்சரித்தார்கள். ஆனாலும் பலனில்லாமல் போனது. அரச ஆணை என்பதால் விருப்பமின்றியே போரில் பங்கு கொண்டார்கள். சகோதரனான விபீஷணன், ராவணனை விட்டுப் பிரிந்து சென்று ராகவனின் பக்கம் சென்று சேர்ந்தான். அதுவே ‘உத்யோக ராகவ நியாயம்’. சுயநலவாதிகளிடம் கொள்ளும் அச்சத்தால் யாரேனும் உதவலாம். ராவணனுக்கும் ராகவனுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் அதுவே. தார்மிக வாழ்க்கை வாழ்பவருக்கு அவ்வாறு பாதுகாப்பு கிடைக்கும் என்பது இந்த நியாயம் உரைக்கும் நீதி.
அன்னை வைத்த கூர்மையான சோதனை – சுவாமி வேவேகானந்தர், தேச யாத்திரைக்குக் கிளம்பியபோது, அன்னை சாரதா தேவியை தரிசனம் செய்து கொண்டார். தன் பயணம் குறித்துத் தெரிவித்தார். ‘எனக்கு ஒரு கத்தி கொண்டு வந்து கொடு, மகனே’ என்றார் அன்னை சாரதா தேவி. சுவாமி விவேகானந்தர், கத்தி எடுத்து வந்து அன்னையிடம் அளித்த முறையைப் பொறுத்து சீடனின் மன நிலையைச் சோதித்து, ஆசி வழங்கினார் அன்னை. “உனக்கு தெய்வம் துணையிருந்து உதவும். சமுதாயம் உன்னோடு இருக்கும். எல்லா தடைகளையும் தாண்டி, முன்னே செல்வாய். இதற்குக் காரணம், உனக்கு சமுதாயத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பற்ற அன்பே” என்றார். அன்னையின் கையில் கத்தியைக் கொடுத்த போது, கூர்மையான பகுதி தன்னைப் பார்த்து இருக்குமாறும். பிடி உள்ள பகுதியை அன்னையில் கைகளில் கொடுத்த சுவாமி விவேகானந்தரின் மனதை விளக்கி சாரதாம்பா இவ்விதம் கூறினார்.
‘விக்கிரமாதித்ய சரித்ரம்’ என்ற நூலில் உள்ள இந்த சுலோகம், சத்துவ குணம் உள்ளவருக்கு தெய்வத்தின் உதவியும் அதிர்ஷ்டமும் சேர்ந்து கிடைக்கும் என்று கூறுகிறது.
பொருள் – விடாமுயற்றி (உத்யமம்), சாஹசம், மனோ தைரியம், நல்ல குணம், உடல் வலிமை, வீரம் என்ற ஆறு குணங்கள் உள்ளவருக்கு கடவுளின் அருள் கிடைக்கும்.
மனித முயற்சி (புருஷ ப்ரயத்னம்) என்ற தவத்தால் மட்டுமே தெய்வத்தை தரிசனம் செய்து கொள்ள முடியும். அதற்குத் துணையாக அறிவுக் கூர்மையும், உடல் வலிமையும் இருக்க வேண்டும் என்பது இந்த சுலோகத்தின் கருத்து.
மேற்சொன்ன குணங்கள் எல்லாம் நிரம்பிய சத்ரபதி சிவாஜிக்கு மாதா பவானி துணையாக நின்று வாளைப் பரிசளித்தாள். சத்ரபதி சிவாஜி வெறும் இருநூறு படைவீரர்களோடு ஷாயிஸ்தகானின் படை முகாமிற்குள் நுழைந்து அவனுடைய கூடாரத்தைக் கிழித்துக் கொண்டு உள்ளே சென்றது அவர் செய்த சாகசம். அவனை உறக்கத்திலிருந்து எழுப்பி, எதிர்கொண்டது வீரம். தர்மத்தை நிலைநாட்டுவதற்காக சாகசத்தையும் வீரத்தையும் காட்டியவருக்கு வெற்றியை அருளினாள் தேவி.
சுயநலம் இன்றி பிறர் நலனுக்காக உழைப்பவருக்கும், இனிய சுபாவம் உள்ளவருக்கும், அனைவரிடமும் இயல்பான பாசம் கொண்ட ஆளுமை உடையவருக்கும் அனைத்திலும் வெற்றியே கிடைக்கும். இந்த நியாயத்தின் உட்பொருள் இதுவே.
சுவாமி விவேகானந்தரிடம் இருந்த உயர்ந்த குணங்களின் காரணமாக உலக அளவில் பலர் அவருக்கு உதவி புரிந்தார்கள். நோக்கம் சிறந்ததாக இருந்து, இனிமையாகப் பேசும் சக்தியும் இருப்பவருக்கு சமுதாயம் உதவி புரியத் தயங்குவதில்லை. தனி மனிதருக்கு மட்டுமின்றி, அமைப்புகளுக்கும் நாடுகளுக்கும் கூட இந்த சூத்திரம் பொருந்தும்.
தேசத்தை மிகச் சிறந்த மேன்மையான நிலைக்கு எடுத்துச் செல்வதற்காக உழைக்கும் ‘ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம்’ (RSS) பல இடையூறுகளைத் தாண்டி, நூறு ஆண்டுகளாக விடாமுயற்சியோடு (உத்யமம்) புரிந்துவரும் சேவையில் பலர் தம் நேரத்தை ஒதுக்கி பங்களிக்கிறார்கள் அல்லவா? ஆயிரக்கணக்கானவர் தம் வாழ்க்கையை அர்ப்பணித்துப் பணிபுரிவது ‘உத்யம ராகவ நியாயத்திற்கு’ எடுத்துக் காட்டு. சமுதாயத்தின் மீது இயல்பான அன்பும், தேசத்தின் மீது இணையற்ற பக்தியும் உள்ளவருக்கு, ‘நான், நான்’ (அஹமஹம்) என்று உதவி புரிவதற்குப் பலர் வந்து சேருவார்கள். ‘உத்யம ராகவ நியாத்திற்கு’ இது போல் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
துணை முதல்வராக இருந்து கொண்டு தமிழகத்தின் தொன்மையை, வரலாற்றைக் கூட அறியாத உதயநிதி ஸ்டாலின்- அறிவார்ந்து கருத்து சொல்லாதது அநாகரீகம் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் சேத்துபட்டு மெட்ராஸ் கிறிஸ்டியன் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அங்கு பேசும்போது கிறித்தவர்கள் பங்களிப்பால் தான் சமூகநீதி தமிழகத்தில் வாழ்கிறது என்றும், மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றி குலக் கல்வியை ஏற்படுத்த மத்திய அரசு விஸ்வகர்மா திட்டத்தை அமல்படுத்தி உள்ளது எனவும் பேசியுள்ளார். இது அப்பட்டமான பொய், புரட்டு மற்றும் அநாகரிகமான பேச்சு. இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
ஆங்கிலேயன் வருவதற்கு முன் தமிழகத்தில் எத்தனை பள்ளி கூடங்கள் இருந்தது. அதில் அனைத்து சமூகத்தின் மாணவர்களுக்கும் பாகுபாடின்றி கல்வி கற்றுத்தரப்பட்டது என்பது குறித்து காந்திஜியின் சீடர் திரு.தரம்பால் அவர்கள் ஆங்கிலேயன் திரட்டி வைத்த தகவல்களை கொண்டு ஒரு பெரிய புத்தகமே எழுதியுள்ளார். அது தமிழிலும் கிழக்கு பதிப்பகம் சார்பில் வெளிவந்துள்ளது. அந்த நூலின் பெயர் அழகிய மரம் என்பதாகும். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் திமுகவினரும் அந்த புத்தகத்தை படித்து பார்க்க வேண்டும்.
மகாகவி பாரதியார் “கல்வியில் சிறந்த தமிழ் நாடு” என பெருமையாக பாடியுள்ளார். ஆனால் திமுகவினரோ பிரிட்டிஷ் ஆங்கிலேய வெள்ளைக்கார கிறித்துவர்கள் தான் எழுதப்படிக்க சொல்லி தந்தார்கள் எனக் கூறி தமிழனுக்கு இழிவை தேடி தருகின்றனர்.
கல்வியின் பெயரால் மதத்தை திணித்த சாதனையை தான் கிறித்துவ கல்வி நிலையங்கள் செய்து வந்துள்ளன என பகிரங்கமாக கூற முடியும். சாதியையும், திராவிட ஆரிய இனவாதம் எனவும் மக்களை திட்டமிட்டு பிரித்தாளும் சூழ்ச்சியை செய்தது பிரிட்டிஷ் ஆங்கிலேயே கிறித்துவர்கள். ஆங்கிலேயனின் அடிவருடிகளாக ஆட்சி அதிகார சுகத்திற்கு விலை போனது திமுகவின் முந்தைய தலைமுறையான நீதிக்கட்சி என்பது வரலாறு.
விஸ்வகர்மா என்பது படைப்பின் திறமையை குறிப்பது. ஆனால் திமுகவினரோ தொழில் நுட்ப வளர்ச்சிக்கு மத்திய அரசு வழங்கும் விஸ்வகர்மா திட்டத்தை குலக்கல்வி என இகழ்ந்து அப்பட்டமாக புரட்டு பேசுகிறார்கள். தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு திராவிட ஆட்சியாளர்கள் எதிரானவர்கள் என்பதை தமிழர்கள் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் விஸ்வகர்மா எனும் தொழில்நுட்ப சமுதாயத்தின் பங்களிப்பு மகத்தானது. மேலும் தமிழக வளர்ச்சிக்கு தங்கம், செம்பு போன்ற பல்வகையான தொழில்நுட்ப, கைவினை கலைகளுக்கு இந்த சமூகத்தினர் மிகப் பெரிய பங்களித்துள்ளனர். மேலும் விஸ்வகர்மா என்றால் உலகைப் படைப்பவர் என்றும் அர்த்தம். இதையெல்லாம் உணராமல் திமுகவினர் விஸ்வகர்மா பெயரில் ஒரு திட்டம் இருப்பதாலேய அதை எதிர்ப்பது என்பது அந்த விஸ்வகர்மா திட்டத்தையும், அந்த சமூகத்தினரயையும் இழிவு படுத்தும் நோக்கம் தான் என்று மக்கள் சந்தேகிக்கிறார்கள்.
தமிழகம் ஆன்மிக பூமி. இந்த ஆன்மிக பூமியை தரிசிக்க பல மாநிலத்தவர்களும் வெளிநாட்டவர்களும் வரும்போது நமது தமிழர்களின் கைவினை பொருளுக்கான பெருமை உலகம் முழுவதும் சென்று சேரும். அதற்கு விஸ்வகர்மா திட்டம் தமிழர்கள் கைவினை கலைஞர்கள் வளப்படுத்தும்.
ஆனால் தாத்தா, மகன், பேரன் என அரசியல் குலத் தொழில் செய்யும் திமுகவும் அதன் தலைவர் குடும்பமும் விஸ்வகர்மா திட்டத்தை குலக்கல்வி என ஏளனம் செய்வதுதான் வேடிக்கையானது.
தமிழர்கள் இன்னமும் ஏமாளிகளாக இருப்பார்கள் என்று திமுக தலைவர்கள் கனவு காண வேண்டாம். மொழி, இனம், சாதி, மாநிலம் என பேசிப்பேசி இந்துக்களை பிரிப்பதும், கிறித்தவ முஸ்லிம்களுக்கு அடிபணிந்து அவர்களை உயர்த்தி அரசியல் செய்து பிழைக்கலாம் என்பதும் இனி நடக்காது.
இதே திமுக அரசு மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை கலைஞர் கைவினை திட்டம் என்று கூறுகிறது. அதேபோல தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர் ஆக்குவதற்கான நவீன கழிவுநீர் அகற்றும் வாகனம் வழங்கும் திட்டம் என்று கூறுகிறது. இவையெல்லாம் குலதொழிலாக ஊக்கப்படுவதாகக் கருதினால் எவ்வளவு முட்டாள்தனம்?
“பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றும் கூறிய உயர்ந்த எண்ணத்தை கொண்ட பெருங்குடிகள் தமிழர்களாகிய இந்துக்கள்.
பெண்கள் படித்தால் தீட்டு என்று சொல்லியிருந்தால் அவ்வையார், காக்கைப்பாடினியார், நக்கண்ணையார், வெள்ளி வீதியார், நப்பசலையார், வெண்ணிக் குயத்தியார், மதுரை ஒலைக்கடையத்தார், காவற்பெண்டு, ஆதிமந்தி முதலான பெண்கள் போற்றப்பட்டிருக்க முடியுமா?
எனவே வரலாறு தெரியாமல் திமுகவினர் கிறித்தவ மிஷனரிகளை பாராட்டி தமிழனுக்கு முட்டாள் பட்டம் கட்டுவதை உதயநிதி ஸ்டாலின் அவர்களும், திமுக வினரும் நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விஸ்வகர்மா எனும் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசை இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்
‘சனாதன தர்மம் பெண்களால்தான் நிலைத்திருக்கிறது’ என்றார் சுவாமி விவேகானந்தர். அது உண்மை. அந்நியர் ஆட்சியில், மேல்நாட்டாரின் ஆடம்பரம், நடை உடை, வேலை, வியாபாரம் ஆகியவற்றின் தாக்கத்தால் கலாசாரத்தையும் சம்பிரதாயங்களையும் கட்டுப்பாடுகளையும் மிகப் பெருமளவு விட்டுவிட்ட ஆண்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், பெண்கள் குடும்பத் தலைவியாகவும், தாயாகவும் பாரத ஆடை அணிகளோடு சம்பிரதாயத்தைக் கடைப்பிடித்தும், நினைவுபடுத்தியும் வந்தார்கள். அதன் மூலம் பாரம்பர்யம் அண்மைக்காலம் வரை இல்லங்களில் நிலைபெற்றது. சிறிது சிறிதாக இந்த வகைமுறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
கல்வி முறைகள் மாறிவிட்டன. குழந்தைகள் வீட்டில் இருப்பதை விட பள்ளி, கல்லூரி, ஹாஸ்டல்களில் செலவிடும் நேரம் அதிகரித்து வருகிறது. வீட்டின் தாக்கத்தை விட வெளி உலகின் தாக்கமே அதிகமாக உள்ளது. ஆடை அணியும் விதமும் மாறிவிட்டது. காலச்சாரத்தின் மீதும் சம்பிரதாயங்களின் மீதும், அலட்சியமும், புரிதலின்மையும், உதாசீனமும் அதிகமாகியுள்ளது. அதுமட்டுமின்றி, அவர்கள் காட்டும் ‘ஏளனம்’ வருத்தத்தை அளிக்கிறது. இது இளம் பெண்களிடமும் இளைஞர்களிடமும் சமமாகவே காணப்பட்டாலும், இளைஞர்களிடம் மேலும் அதிகமாகக் காணப்படுகிறது. சொந்த மதத்தோடு தொடர்பில்லாமல் வளரும் ஹிந்து இளைஞர்களைத் தம் மதத்திற்குள் இழுத்துக் கொள்ளும் வியூகங்களோடு பிற மதங்கள் செயலாற்றுகின்றன. ஸ்வதர்மத்தைப் பற்றிய அறிவோ, அதன் மீது கௌரவமோ இல்லாத ஹிந்து இளைய சமுதாயத்திடம் பிற மதமே உயர்ந்தது என்ற எண்ணத்தை எளிதாக ஏற்படுத்தி, தம் மதத்தைச் சேர்ந்த இளைஞர்களோடு காதலில் இறக்கி மதம் மாற்றுவது சர்வ சாதாரணமாகி விட்டது.
உண்மையில், இவர்கள் மாறிய பிற மதத்தில் பெண்களுக்கு கௌரவம் கிடையாது. ஒரு ஆண் பல பெண்களை மணம் செய்து கொள்ளலாம். எத்தனை பேரை வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம். அவர்களுடைய சித்தாந்தத்தில் பெண்கள் வெறும் போகப் பொருள் மட்டுமே. ஆனாலும் மயக்கும் பேச்சுகள் என்ற வலையில் சிக்கி, அந்த மதத்திற்கு மாறி, கொடுமையை அனுபவிக்கிறார்கள். மற்றும் சிலர் இஷ்டம் வந்தாற்போல் மது போன்ற போதை பழக்கங்களுக்கு அடிமையாகி, தாம்பத்தியத்தின் மதிப்பு, குடும்ப உறவுகளின் மரியாதை போன்றவற்றின் மேல் வெறுப்பு கொள்கிறார்கள்.
ஆனால் பிற மதங்களில் சிறு வயதிலிருந்தே தம் மத கல்விக் கூடங்களின் மூலம் பிள்ளைகள் இருபாலாருக்கும், தம் மத நம்பிக்கைகளின் மேல் திடமான தொடர்பை ஏற்படுத்தித் தருகிறார்கள். ஆனால், ஹிந்து குடும்பங்கள், பிள்ளைகளை சனாதன தர்மத்திலிருந்து தொலைவாக, எதுவும் கற்றுத் தராமல் வளர்க்கிறார்கள். படிப்பு, ராங்க், அதிக வருமானம் தரும் கேரியர் ஆகியவற்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் பெற்றோர், மீதி விஷயங்களைப் பற்றி கண்டுகொள்வதில்லை.
அதற்குத் துணையாக சயின்ஸ், லாஜிக், என்று நம் சம்பிரதாயங்களை கேள்விகேட்டு கிண்டல் செய்யும் வழிமுறை ஹிந்து குடும்பங்களில் மட்டுமே அதிகம். மதம் என்றால் ‘நம்பிக்கை’. சயின்சுக்கும் நம்பிக்கைக்கும் இடையில் அழுத்தமான கோடு உண்டு. ‘நம்பிக்கை’ ஏற்படுத்தும் பாசம், உணர்ச்சி, தாக்கம் போன்றவற்றை சயின்ஸ் ஏற்படுத்தாது. இரண்டையும் தனித்தனியாகப் பிரித்து பிற மதத்தவர் வாழப் பழகியது போல, ஹிந்துக்கள் தம் பிள்ளைகளை வாழப் பழக்கவில்லை.
பிறழ்வாக மாற்றி எழுதிய வரலாற்றுப் பாடங்களில், அற்புதமான ஹைந்தவ வரலாறு, கலாசாரம் போன்றவை தென்படுவதில்லை. தீய அபிப்பிராயங்களே எழுதப்பட்டு ஹிந்து மதம் மீது அகௌரவத்தை எற்படுத்துகின்றன. சுமார் நூறாண்டு காலமாக இந்தத் தவறான வரலாற்றுப் பாடங்கள் தெரிவிக்கும் அபிப்பிராயங்களே உண்மை என்று செல்லுபடியாகி வருகிறது.
உலக மேதாவிகளில் பலரிடம் தாக்கம் ஏற்படுத்திய ஹிந்து தர்மத்தின் வேத விஞ்ஞானம், ஜோதிடம், யோக சாஸ்திரம், ஆயுர்வேதம், உபாசனகளுக்கான மந்திரம், தந்திரம் ஆகிய விஞ்ஞானங்கள், போன்றவை பற்றி பெரியவர்களுக்கும் தெரிவதில்லை. பிள்ளைகளுக்கும் தெரியச் செய்வதில்லை. தொடர்பே விட்டுப் போனது. இளைய தலைமுறைக்குத் தம் உயர்ந்த பாரம்பரியச் செல்வத்தின் மீதும், ஸ்வதர்மத்தின் மீதும் நல்லெண்ணமோ, அன்போ இல்லாமல் போனது. எல்லோரிடமும் இல்லாவிட்டாலும், அதிக சதவிகிதம் ஹிந்துக்களிடம் இருக்கும் நிதரிசனம் இதுதான்.
‘கேரளா ஸ்டோரி’ போன்ற திரைப்படங்களும், சமூக வலைதளங்களில் பல செய்திகளும் வந்தபடி இருந்தாலும் ஹிந்து குடும்பங்களுக்கு சுரணை எதுவும் இருப்பதில்லை. பங்களாதேஷ், மேற்கு வங்காளம், காஷ்மீர், கேரளா போன்ற இடங்களில் ஹிந்து பெண்களின் மீது கொடூரமான வன்முறைகளும், ஹிந்து குடும்பங்களின் மீது தாக்குதல்களும் நடந்தாலும், எதுவுமே நடக்காதது போல வாழ்கிறார்கள்.
இவ்வாறு, குடும்ப சம்பிரதாயங்களின் மீதும், பூர்வீகர்களின் வரலாறு மீதும், பாரம்பர்யத்தின் மீதும் கௌரவம் இன்றி, பிற மத நட்பின் தாக்கத்தால் அவர்கள் பக்கம் சாயும் இளைஞர்களுக்கு, குடும்பத்தினர், புத்தி கூற இயலாமல் போகின்றனர்.
அவற்றை ஈடுகட்ட சில தன்னார்வ தர்ம பிரச்சார ஹிந்து அமைப்புகள் முன்வந்துள்ளன.
கேரளாவில், ‘ஆர்ஷவித்யா சமாஜம்’ என்ற அமைப்பைச் சேர்ந்த, சனாதன தர்மம் குறித்த அறிவிறசிறந்த கல்வியறிஞர்களும், இளைய தலைமுறையினரும் மிகுந்த முயற்சி செய்து வருகின்றனர். தவறான வழியில் சென்று, பயங்கரமான பிற மதத்திற்குள் சென்று அவதியுறுபவர்களை மீண்டும் சொந்த மதத்திற்கு வரவழைத்து, சனாதன தர்மம் பற்றிய புரிதலை ஏற்படுத்தி வருகிறார்கள். பிற மத போதனைகளின் காரணமாகத் தம் மதத்தின் மீது தவறான புரிதலும், தீய அபிப்பிராயமும் ஏற்படுத்திக் கொண்ட பிள்ளைகளின் கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கூறி, மீண்டும் அவர்களைக் கொண்டே சனாதன தர்மத்தின் உயர்வை பரப்பச் செய்வதில் இந்த நல்ல அமைப்புகள் வெற்றி கண்டுள்ளன.
ஆனால் அரசியல்வாதிகளின் விதிமீறலாலும், பதவி மோகத்தாலும், மதமாற்றத்தில் ஈடுபடும் மதங்களின் அட்டூழியங்கள் அளவுக்கு அதிகமாகி வருகின்றன. அவற்றின் மூலம் ஹிந்து தர்ம அமைப்புகளின் நடைமுறைக்கும் இடையூறு ஏற்படும் அபாயங்கள் உள்ளன. ஆனால், சுய அழிவுக்குத் தயாராகிவிட்ட ஹிந்துக்களுக்கு, எறும்பு கடித்த அளவு சொரணை கூட இருப்பதில்லை.
இந்தப் பின்னணியில், ஒவ்வொரு பெற்றோரும், அதிலும் பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் நண்பர்கள் யார் யார் என்பதை கவனிக்கக் வேண்டும். சிறு வயதிலேயே ஸ்வதர்ம அனுஷ்டானத்தையும், அவற்றின் விழுமியங்களையும் கற்றுத் தர வேண்டும். அவற்றுக்காக மேற்சொன்ன நல்ல அமைப்புகளின் உதவியை நாடலாம். அவற்றை ஊக்குவித்தல் வேண்டும். ‘ஆர்ஷவித்யா சமாஜம்’ செய்து வரும் சேவைகளை அடையாளம் கண்டு, சமீபத்தில் சிருங்கேரி சங்கர பீடாதிபதிகள் அதிக அளவு நன்கொடை வழங்கி ஆசீர்வதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதே போல் சில காட்சி ஊடகங்களும், இன்ஃபினிட்டி பவுண்டேஷன் போன்ற அமைப்புகளும் மிகுந்த முயற்சி எடுத்து வருகின்றன. அவற்றின் கருத்துக்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்கும்படி பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.
ஒரு வருத்தமான விஷயம்…
வைதிகமான, ஸ்மார்த்த குடும்பங்களில், ஆண்களுக்கு வேதமும் ஸ்மார்த்த வித்யையும் கற்றுத் தந்தாலும், பெண் குழந்தைகளை மட்டும் நம் காலாசாரத்திலிருந்து தொலைவாக, நவீன முறையில், நம் பரம்பரையின் மீது கௌரவம் இல்லாமல் வளர்க்கின்றனர். அதனால், வைதிக குடும்பத்து இளைஞர்களைக் கண்டால், இந்தப் பெண்களுக்கு பரிகாசமும் ஏளனமும் ஏற்படுகிறது. அதனால், சிறந்த வருமானம் இருந்தபோதிலும் பல வேத ஸ்மார்த்த அறிஞர்களான இளைஞர்கள், திருமணமாகாதவர்களாக இருக்கிறார்கள்.
பெற்றோர் தம் பெண் பிள்ளைகளுக்கு எந்தப் படிப்பு படிக்க வைத்தாலும், சம்பிரதாய விழுமியங்களைச் சொல்லிக் கொடுத்து, வைதிகத் தொழிலில் இருப்பவர்களிடம் கௌரவம் ஏற்படுத்தினால் இந்த விபரீத சூழ்நிலை மாறும்.
சனாதன தர்மத்தோடு தொடர்பை அறுத்துக் கொண்டால், கடுமையான எதிர்காலத்தைச் சந்திக்க வேண்டி வரும். மார்க்குகளும், ராங்குகளும், வருமானங்களும் அவற்றை சரி செய்ய இயலாது. இந்த உண்மையை ஹிந்து பெற்றோர் அடையாளம் காண வேண்டும்.
(தலையங்கம், ருஷிபீடம், ஆன்மீக மாத இதழ், டிசம்பர் 2024)