ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை: 15 உயிர்கள் பலியான பிறகும் மக்களைக் காக்க அரசுக்கு மனம் வரவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ள மருத்துவர் ராமதாஸ் இதற்காக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற தனியார் நிறுவன மேலாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 15 லட்சத்திற்கும் கூடுதலான பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கிருஷ்ணமூர்த்தியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனியார் நிறுவன மேலாளரான கிருஷ்ணமூர்த்தி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார். தமது குடும்பத்தினருக்கு தெரியாமல் ஆன்லைனில் சூதாடி ரூ.15 லட்சத்தை இழந்த அவர், கடுமையான குற்ற உணர்விலும், மன உளைச்சலிலும் தவித்திருக்கிறார்; மன உளைச்சல் ஒரு கட்டத்தில் தாங்க முடியாத நிலைக்கு சென்றதால் தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் சூதாட்டம் ஒவ்வொருவரையும் எப்படியெல்லாம் அடிமையாக்கி அழிக்கும் என்பதற்கு அங்கமுத்து தான் மோசமான எடுத்துக்காட்டு
ஆன்லைன் சூதாட்டம் எளிதில் அழிக்க முடியாத பெரும் தீங்கு ஆகும். நிலத்தில் வெட்ட வெட்ட முளைக்கும் களைகளைப் போல, ஆன்லைன் சூதாட்டமும் தடை செய்ய, தடை செய்ய சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி மீண்டும், மீண்டும் முளைத்துக் கொண்டிருக்கிறது. பா.ம.க. நடத்திய தொடர் போராட்டங்களின் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் இரு முறை தடை செய்யப்பட்டது. ஆனாலும், அந்தத் தடையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதன் காரணமாகவே ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்திருக்கிறது.
தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு கடந்த 9 மாதங்களில் மொத்தம் 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஒரு மாத இடைவெளிக்குள்ளாக இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் தற்கொலைகள் அதிகரிப்பதை தடுக்க முடியாது.
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான். ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு 9 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை. , உச்சநீதிமன்றம் கோடை விடுமுறைக்குப் பிறகு திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் கூட, ஆன்லைன் சூதாட்டத் தடை வழக்கை விசாரணைக்கு கொண்டு வரவோ, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவோ எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.
தமிழக அரசின் அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது? தமிழ்நாட்டு மக்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அக்கறை இருந்தால், இந்த விவகாரத்தில் இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், சரியான காரணங்களை முன்வைத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இந்திய நாடே தயாராகி வருகிறது. சுதந்திர தின கொண்டாடத்தில் அனைவரின் நெஞ்சங்களிலும் தவறாமல் இடம் பிடிப்பது மூவர்ண தேசிய கொடி என்றால் அது மிகையல்ல.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அச்சகத்தில், சுதந்திர தின கொண்டாடத்திற்கு தேவையான தேசிய கொடிகள் அச்சடிக்கும் பணிகளும், தயாரான கொடிகள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிவகாசி அச்சகத்தில் துணியிலான தேசிய கொடிகள், வார்னீஸ் பேப்பர், பளபளக்கும் ஆர்ட் பேப்பர், அட்டை உள்ளிட்டவைகளில் தேசிய கொடிகள் தயாராகி வருகின்றன. சட்டையில் குத்தும் வகையில் பேப்பர் தேசிய கொடிகளும், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் முகப்புகளில் பொருத்தும் வகையிலான அட்டையால் தயாரிக்கப்படும் தேசிய கொடிகள் அதிகளவில் தயாராகி வருகின்றன.
மேலும் இந்தியா வரை படத்துடன் கூடிய தேசிய கொடிகள், தேசத்தந்தை மகாத்மா காந்தி உருவத்துடன் கூடிய தேசிய கொடிகள், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால்நேரு உருவத்துடன் கூடிய தேசிய கொடிகள் அழகிய வடிவங்களுடன், கண்ணை கவரும் டைகட்டிங் வடிவத்துடன் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், தொப்பி வடிவில் தலையில் மாட்டிக்கொள்ளும் வகையில் தேசிய கொடிகள், கைகளில் மாட்டிக் கொள்ளும் வகையிலான தேசிய கொடிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.
தேசிய கொடிகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் அச்சக உரிமையாளர் காசிராஜன் கூறும்போது… “எங்களது அச்சகத்தில் பல்வேறு வகைகளிலான அச்சு பணிகள் நடந்து வருகின்றன. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய கொடிகள் தயாரிக்கும் பணிகளையும் செய்து வருகிறோம். ஆரம்பத்தில் தமிழகத்தில் உள்ள பிரபலமான பள்ளிகள், கல்லூரிகளில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக தேசிய கொடிகளை மொத்தமாக ஆர்டர்கள் கொடுத்து வாங்கினார்கள்.
பொது மக்கள் பயன் படுத்துவதற்காக ஸ்டேசனரி கடைகளில் பல வடிவங்களிலான தேசிய கொடிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. படிப்படியாக தமிழகம் முழுவதும் சுதந்திர தினமன்று தேசிய கொடியை சட்டைகளில் குத்திக் கொள்ளும் உற்சாகம் தொடங்கியது.
இது தமிழகத்தை தாண்டி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் பரவியது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் கடைகளில் விற்பனை செய்வதற்கான தேசிய கொடிகள் ஆர்டர்கள் அதிகளவில் கிடைத்தது.
ஒரு முறை எங்களது நிறுவனத்தில் தேசிய கொடிகள் வாங்குபவர்கள் பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு நாடு தயாராகி வரும் நிலையில், தேசிய கொடிக்கான ஆர்டர்களும் எதிர்பார்த்த அளவில் சிறப்பாக உள்ளது.
பேப்பர் கொடி மற்றும் அட்டையால் தயாரிக்கப்படும் கொடிகளின் விலை கடந்த ஆண்டை விட சற்று கூடுதலாக இருக்கும். ஆனால் இந்த சின்ன விலையேற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
கடந்த இரண்டு மாதங்களாக தேசிய கொடிகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது எடுக்கப்பட்ட ஆர்டர்களுக்கு கொடிகள் அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன” என்று கூறினார்.
திருவனந்தபுரத்திலிருந்து தாம்பரம், ராமேஸ்வரம், கோயமுத்தூருக்கு கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் வழியாக தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று கேரளா மற்றும் தென்மாவட்ட வர்த்தகர்கள் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்திய அளவில் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் கோவில் பக்தர்கள் அதிக அளவில் சென்று பார்வையிடும் புனித யாத்திரை தலங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு மாத அமாவாசை விடுமுறை தினங்களில் ஆண்டு திருவிழா காலங்களில், இங்கு திருவனந்தபுரம் கொல்லம் கோட்டயம் பகுதிகளில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய பரிகாரம் செய்ய அதிகளவில் வருகின்றனர்.
அவர்கள் நலன் கருதி திருவனந்தபுரம் ராமேஸ்வரம் தினசரி ரயில் இயக்க வேண்டும்.மேலும் கேரளா தமிழ்நாடு தென்காசி திருநெல்வேலி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் கோவை பெங்களூர் சென்னை நகரங்களில் சுற்றி உள்ள பகுதிகளில் அதிகளவில் படிக்கின்றனர். பலர் இங்கு வேலை செய்து வருகின்றனர்.முந்திரி காப்பி தேயிலை மற்றும் இதர பொருட்கள் வாங்க தொழில் நிமித்தமாக வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
அவர்கள் நலன் கருதி திருவனந்தபுரம் கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் மதுரை வழியாக தாம்பரம் கோயம்புத்தூர் பெங்களூர்க்கு தினசரி ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
பொதுவாக திருவனந்தபுரம் கொல்லம் மாவட்டங்களில் அதிக அளவில் ஆன்மிக சுற்றுலா தலங்கள் உள்ளன. மேலும் செங்கோட்டையிலிருந்து புனலூர் வரை உள்ள மலை வழிப் பாதையில் ரயில் பயணம் செய்வதில் சுற்றுலா குற்றாலம் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தென்காசி, கொட்டாரக்கரை, கொல்லம், வர்க்கலா போன்ற ஆன்மீக தலங்கள் இப்பகுதியில் உள்ளன. மேலும் ராஜபாளையம் மிகப்பெரிய வர்த்தக தலமாக விளங்குகிறது. இங்கு காட்டன் நூல் மற்றும் ஆயத்த ஆடைகள் அதிக அளவில் உற்பத்தி ஆகின்றன. அதை வாங்கிச் செல்வதற்கு கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து ஏராளமான வர்த்தகர்கள் தினமும் ராஜபாளையத்திற்கு வருகின்றனர்.
அது போல் சிவகாசி விருதுநகர் போன்றவையும் மிக முக்கிய வர்த்தக நகரங்களாக உள்ளன. மதுரை மிகப்பெரிய ஆன்மீக சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் கூடலழகர் பெருமாள் கோவில் அழகர் கோவில் போன்ற பழமையான வரலாற்று சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களை பார்வையிடவும் திருமலை நாயக்கர் மஹால் போன்ற சுற்றுலாத் தலங்களை பார்க்கவும் கேரளா கர்நாடக பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.
மேலும் பழனி, குற்றாலம், செங்கோட்டை போன்ற முக்கிய இடங்கள் இந்த வழித்தடத்தில் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவை, பெங்களூரு, சென்னை பகுதிகளில் அதிக அளவில் படிக்கின்றனர். இவர்களுக்கு போக்குவரத்திற்கு போதிய வசதிகள் இல்லாததால் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் நலன் கருதி திருவனந்தபுரத்திலிருந்து தாம்பரம் கோயம்புத்தூர் பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு நேரடி ரயில் வசதி ஏற்படுத்தித் தருவது மிக அவசியம்.
தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திருவனந்தபுரம் கொல்லம் எம்பி.,க்கள் கோரிக்கையை கேரள மக்கள் சார்பில் ரயில்வே வாரியத்திடமும் ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவிடமும் வலியுறுத்தி வருகின்றனர். இதுபோல் தமிழக எம்பி.,க்களும் புதிய ரயில் இப்பகுதிகளில் இயக்க வலியுறுத்துவது மிக அவசியமாகும்.
ரசாயன பாட்டில் உடைந்து மாணவிகள் மயக்கம் அடைந்ததால் அரசு பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை எஸ்ஆர்எம்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் அறையில் திடீரென ரசாயன பாட்டில் ஒன்று உடைந்து பத்துக்கு மேற்பட்ட மாணவிகள் மயக்கம் அடைந்தனர்.இதை அடுத்து, மயக்கமடைந்த மாணவிகள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செங்கோட்டை அறம்வளா்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா. செங்கோட்டை அறம்வளா்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி திருககோவிலில் ஆடிப்பூரம் வளைகாப்பு உத்ஸவ நிகழ்ச்சி நடைபெற்றது இந்த விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருவது வழக்கம். அதே போல இந்தாண்டிக்கான வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நாளான காலை 10 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு அபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அறம்வளா்த்தநாயகி அம்பாள் திருக்கோவில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னா் அம்பாளுக்கு பல்லாயிரக்கணக்கான வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வண்ண மின்னொளியில் குலசேகரநாதசுவாமி ஜொலித்த வண்ணம் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த திருநாளில் திருமணமான பெண்கள் மாங்கல்யம் நிலைக்க வேண்டியும், அம்மன் வளையல் அணிந்து தாய்மை கோலம் பூண்டுள்ள நன்னாளில் பெண்கள் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு ஆடிப்பூரத் திருநாளை திருமணமான பெண்கள் விசேஷமாக வழிபட்டு வருகின்றனர். மாலை 5 மணிக்கு ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசைகள் மேளதாளங்களுடன் எடுத்து வரப்பட்டது. 6 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் வளைகாப்பு உத்ஸவ நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர். முடிவில் அருள் பிரசாதத்துடன் பெண்களுக்கு சட்டை துணியுடன் வளையல்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மணடகபடிதாரர்கள் சாமில் உரிமையாளர் சுப்பிரமணியன் சிறப்பாக செய்திருந்தனர்.
பாகிஸ்தானின் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் வியாழக்கிழமை ஸ்டேட் டி பிரான்ஸில் நடந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக்கின் இறுதிப் போட்டியில் 92.97 மீட்டர் தூரம் எறிந்து ஒலிம்பிக் சாதனையை முறியடித்து உலகையே திகைக்க வைத்தார். நடப்பு சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
நீரஜ் சோப்ராவின் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி ஒரு ஃபவுலுடன் தொடங்கியது; அவர் ஈட்டையை எறிந்த பிறகு தடுமாறினார், இதனால் அவரது கால் கோட்டைத் தாண்டியது. மனம் தளராமல், அவரது இரண்டாவது வீசுதல் மூலம் 89.45 மீட்டருக்கு வீசினார். இதனால் நதீமின் சாதனையை முறியடித்த 92.97 மீட்டருக்குப் பின்னால் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
அவரது மூன்றாவது முயற்சி 75 மீட்டர் தூரம் எறிந்து ஏமாற்றம் அளித்தது. நான்காவது வீசுதல் அவரது ஆரம்ப முயற்சியை பிரதிபலித்தது, நீரஜ் வீழ்ந்தார் மற்றும் ஈட்டி 80 மீட்டரைக் கடக்கவில்லை. ஐந்தாவது வீசுதல் சிறப்பாக இல்லை; அவர் கால் இடறியது. அவரது உடல் கோட்டைக் கடந்தது, அவரது மூன்றாவது முறைகேட்டைக் (ஃபவுல்) குறித்தது.
2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 90.57 மீட்டர் தூரம் எறிந்த நார்வேயின் ஆன்ட்ரியாஸ் தோர்கில்ட்செனின் முந்தைய சாதனையை நதீமின் நம்பமுடியாத சாதனை முறியடித்தது.
2023 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற அர்ஷத், 2022இல் பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 90.18 மீட்டர் தூரத்தைத் தாண்டி தங்கம் வென்றார். இறுதிப் போட்டியை ஒரு தவறுடன் தொடங்கிய போதிலும், அர்ஷத் தனது சாதனையை முறியடிக்கும் இரண்டாவது முயற்சியின் மூலம் வெற்றியைத் தொடங்கினார் மற்றும் மூன்றாவது எறிதலுடன் 88.72 மீட்டர்களை தனது முன்னிலையை உறுதிப்படுத்தினார்.
நதீமின் எறிதல் புதிய ஒலிம்பிக் சாதனையைப் படைத்தது மட்டுமல்லாமல், ஒலிம்பிக் வரலாற்றில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 90 மீட்டர் ஓட்டத்தைத் தாண்டிய நான்காவது தடகள வீரர் என்ற பெருமையையும் பெற்றார். ஒலிம்பிக்கில் 90 மீட்டருக்கு அப்பால் எறிந்த நட்சத்திரங்கள்: 2000: ஜான் ஜெலெஸ்னி, செக்கியா – 90.17 மீ; 2008: ஆண்ட்ரியாஸ் தோர்கில்ட்சென், நார்வே – 90.57 மீ; 2016: தாமஸ் ரோஹ்லர், ஜெர்மனி – 90.30 மீ
ஆண்கள் ஹாக்கியில் வெண்கலப்பதக்கம்
நேற்று பரபரப்பான வெண்கலப் பதக்கப் போட்டியில், ஹர்மன்ப்ரீத் சிங்கின் இரண்டு பெனால்டி கார்னர் கோல்களால் ஸ்டேட் யவ்ஸ்-டு-மனோயர் மைதானத்தில் ஆடவர் ஹாக்கியில் ஸ்பெயினுக்கு எதிராக இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி, இந்தியாவின் இரண்டாவது தொடர்ச்சியான ஒலிம்பிக் வெண்கலத்தை உறுதி செய்தது. இது 1968 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளில் அவர்கள் தொடர்ச்சியாகப் பதக்கங்களைப் பெற்றதில் இருந்து 52 ஆண்டுகளில் சாதிக்கப்படாத சாதனையாகும்.
இந்திய அணிக்காக தனது இறுதிப் போட்டியில் விளையாடும் மூத்த கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், குறிப்பாக ஸ்பெயின் கேப்டன் மார்க் மிரல்லஸின் பெனால்டி கார்னர்களை அசாதாரணமாகத் தடுத்தார். இறுதி விசில் அடிக்க, இந்திய வீரர்கள் ஸ்ரீஜேஷைச் சூழ்ந்துகொண்டு, அவரது அற்புதமான வாழ்க்கையைக் கொண்டாடி, 36 வயதில் அவருக்குப் பொருத்தமான பிரியாவிடை அளித்தனர்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் -வருடம் 1933 – அன்று சுதேசமித்திரன் பத்திரிகையில் எழுதிய அந்தக் கால தமிழ் நடையில் சுவாரஸ்யமான தகவல்கள் …
சுதேச மித்திரன்- 10 டிசம்பர் – 1933
இந்த வருஷ திருவண்ணாமலை கார்த்திகை உற்சவம் மிக அதி விமரிசையாக நடைபெற்றது.
வெளியூர் ஜனங்கள் முப்பதாயிரமென்று ரயில்வே கணக்கால் தெரிகிறது. இவ்வாண்டிலும் அவ்வளவுக்குக் குறையாதென்றே கூறலாம்.
கால்நடையாக வந்திருக்கிற ஜனங்கள் முப்பதாயிரத்துக்கு மேலிருக்கும். நாட்டுக்கோட்டை ஆண் பெண் மக்கள் சுமார் ஆயிரம் பேருக்கு மேலிருக்கலாம்.
பக்தியுள்ள போலீஸ் அதிகாரிகள்
முனிசிபாலிடியாரால் கூடிய வரை ஊர் பாதுகாக்கப் படுகிறது. ஆங்காங்கே முக்கியமாகக் கூட்டம் நெருக்கும் இடங்களில் போலீசார் நின்று செளகரியம் செய்து வருகின்றனர்.
போலீஸ் அதிகாரிகள் தெய்வ பக்தியுடை யவராகவும், நேர்மையாகவும், சாந்தமாகவும் நடந்து கொள்வதாலும் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியேற் பட்டிருக்கிறது.
ரயில் வசதி மிகவும் குறைவு. கழிபட்ட வண்டிகளில் கணக்கற்ற ஜனங்களை ஏற்றிக் கொண்டு வந்து தள்ளினர்.
விழுப்புரத்தில் இருந்தும் காட்பாடி யிலிருந்தும் விடப் படும் வண்டிகளின் நிலைமை எழுதுந் தரத்தன்று.
சுமார் பதினைந்துக்கு மேற்பட்ட கோஷ்டிகள் சுவாமிக்குப் பின் வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
காலை விழாவில் வருபவர் இரவில் வருவதில்லை. இரவில் வருபவர் காலை விழாவில் ஓய்வெடுத்துக் கொள்கின்றனர். எல்லாக் கோஷ்டிகளிலும் கேட்பவர்கட்குக் குறைவில்லை.
உணவும் மடங்களும்
“சோறு மணக்கும் மடங்களெலாம்” என்று முற்காலப் பெரியார் ஒருவர் கூறிய தமிழ்வாக்கு ஈண்டு கண் கூடாகும்.
மடங்கள் தோறும் சோறிடப்படுகிறது. இங்கு வருகிற எந்த ஜாதியாருக்கும் உபசாரத்தோடு சாப்பாடு கொடுக்கப் படுகிறது.
பிராமண குலத்தவரில் ஆண் பெண் ஆகிய இருபாலாருக்கும் கோட்டையூர் மெ.க. வகையாரின் சத்திரத்தில் இரவு பகல் எந்த நேரத்திலும் அறுசுவையுண்டி அளிக்கப் பெறுகிறது.
சாதுக்களுக்குக் காரைக்குடி சா.நா.சா. வகையாரின் சாதுக்கள் மடத்தில் நல்ல உண்டி உதவப் பெறுகின்றது.
நகரத்தாருக்குப் பல இடங்களில் சுவை யுணவு நல்கப் படுகிறது.
கோவிலூர் மடத்தைச் சார்ந்த ஈசானிய மடத்திலும் பிற்பல இடங்களிலும் சாப்பாடு நடை பெறுகிறது.
நகரத்தாருக்கு நடைபெறும் விருந்துகளில் ராவ்பகதூர் ஸ்ரீமான் பெ.க.அ. சித. ஜாகையில் நடை பெறும் விருந்தே முக்கிய மானதாகும்.
நகரத்தாரின் மடமாகிய ஓயா மடத்தில் ஏழாந் திருவிழா முதல் மகேசுவர பூஜை நடைபெறுகின்றது.
ஜாதி சமய பேதமின்றி வந்தவர் கட்கெல்லாம் உணவளிக்கப் படுகிறது.
நகரத்தாரின் பேருதவி பெற்று நடை பெறும் அறுபத்து மூவர் மடம், பவளக் குன்று மடம் முதலிய இடங்களிலும் உணவளிக்கப் படுகின்றது.
சமயப் பிரசாரங்கள்
இந்தத் திரு விழாவே ஜனக் கூட்டத்திலும் மற்ற வசதிகளிலும் தென்னாட்டிலே நடைபெறும் பிற உற்சவங்களை விடச் சிறப்பு டையதாக இருப்பதால், கிறிஸ்தவர்கள் மிகக் குறிப்பாக இருக்கிறார் களென்று தெரிகிறது.
இவ்வூரிலேயே டேனிஷ் மிஷன் சர்ச் இருக்கிறது. அதைச் சார்ந்த உபதேசியார்களும் இருந்து வருகின்றனர்.
இத் திருவிழாவுக் கென்றே பலவகைப் பட்ட ஆயிரக் கணக்கான பிரசுரங்களும் அச்சிட்டுப் பரப்பு கின்றனர். வீதி தோறும் வாத்தியப் பெட்டிகளுடன் கிறிஸ்தவ மத போதகர்களைக் காணலாம்.
காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தின் பிரசாரகர் நெ.சி. விசுவநாத சாஸ்திரி களும் கடைய நல்லூர் ஹரிஹர சிவமும் ஆங்காங்கே உபந் யாசங்கள் புரிந்தனர்.
மேற்படி சங்கத்துப் பிரசுரங்களும், காரைச் சிவ னடியார் திருக் கூட்டத்து ஜீவ காருண்யப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
இங்கு வசதி யாகயிருந்து உபந் யாசம் நடக்கத்தக்க இடம் சத்திவிலாச சன்மார்க்க சபைக் கட்டிடமேயாகும். இதில் பல உபந்யாசங்கள் தினந்தோறும் நடைபெறுவதுண்டு
பன்னிரண்டாம் தேதி காலையில் சுந்தரமூர்த்தி ஓதுவார் தலைமையில் சுவாமி அற்புதா நந்தாவும், சுவாமி மயில் சுந்தரமும், காவேரிப்பாக்கம் கோவிந்தராஜ முதலியாரும், ராமலிங்க சுவாமிகளின் பிரபாவத்தைப் பற்றி உபந் யாசங்கள் புரிந்தனர்.
மறுநாள் காலை காவிய கண்ட கணபதி சாஸ்திரிகள் தலைமையில் மதுரை திருப்புகழ் சாமி ஐயர் திருப்புகழைப் பற்றியும், சொ. முருகப்ப செட்டியார் ‘தமிழ் நாட்டின் நிலை’ என்பது பற்றியும் பேசினர். பதினான்காம் தேதி பிற்பகல் கோட்டையூர் கிரீச பாகவதரவர்களால் ‘வல்லாள மகாராஜா சரித்திரம்’ கதா ரூபமாக நடத்திக் காட்டப்பட்டது.
முந்திய ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு விசேஷமாகச் செய்யப் பெற்றவைகளுள் முதலாவதாக குறிப்பிடத் தகுந்தது கோவிலினுள் மின்சார விளக்குகள் போடப் பெற்றிருப் பதேயாகும்.
இதனை கோட்டையூர் அ.க. வகையார் தங்கள் செலவில் (ரூபா அறுபத்தைந் தாயிரம்) அமைத்திருக் கிறார்கள்.
தீபதரிசன சமயத்தில் இவ்விளக்குகள் ஏற்றப்பட்ட போது ஆனந்தமாக இருந்தது.
மாட்டுச் சந்தை
இப்பகுதியில் கார்த்திகை விழாவையொட்டி நடைபெறும் மாட்டுச் சந்தையே பெரிதாகத் தெரிகிறது. மலையில் பிராகாரத்தில் இரண்டாவது மைலில் இச்சந்தை கூட்டப்படுகிறது. இவ்வருஷத்தில் ரூபா 5000 முனிசி பாலிடியாரால் குத்தகை விடப்பட்டி ருக்கிறது.
மாடு ஒன்றுக்கு ரூபா ஒன்று வசூலிக்கப் பட்டதில் ரூபா 7000 வசூலாகியிருப்பதாகத் தெரிகிறது. அருமையான மாடுகள் வந்திருந்தன. எந்த மாதிரியான மாடும் இங்கு வாங்கலாம்.
சுமார் 1500 ரூபா விலையுள்ள ஜோடிகளும் வந்திருந்தன. இதைத் தவிர குதிரைகளும் எருமைகளும் வந்திருந்தன. ஆனால் குதிரைகள் கழிபட்டன வேயாகும். மயில் குஞ்சுகளும் மயில்களும் ஏராளமாக விற்கப்பட்டன.
கிரி வலம்
இங்கு வந்த பதினாயிரக்கணக்கான ஜனங்களும் மலையில் ஏற்றப்படும் தீப தரிசனத்தையே முக்கியமாகக் கருதுகின்றனர். எனினும் யாவரும் அருணகிரியைப் பிரதக்ஷணம் செய்வதிலும் பேரூக்கம் கொள்கின்றனர். இப்பிராகாரம் சுமார் எட்டு மைல் தூரமிருக்கிறது. இந்த வழி முற்றும் ஒழுங்கான ரோடு போடப்பட்டிருந்தாலும் மழை பெய்தால் சேறு படுகின்றது.
கற்பாறை யாகவுள்ள சில விடங்கள் தவிர மற்ற இடங்கள் யாவும் மழையாலும் ஜனங்களின் அளவு கடந்த போக்கு வரத்தாலும் குழம்பாகி உழவு செய்யப்பட்ட நீர் நிறைந்த வயல் போலக் காணப் படுகின்றது.
பிராகார வீதியில் இருபுறங்களிலும் ஏழை ஜனங்கள் உட்கார்ந்தி ருக்கின்றனர்.
அவயவப் பழுதுள்ள மக்கள் பலரைச் சர்வ சாதாரணமாகக் காணலாம். கையற்றதும் காலற்றதும் விழியிலாததும் மூக்கில்லா ததுமான பல பிறவிகளைக் காண்பது இங்கு தான் எளிது. இறைவன் படைப்பிலுள்ள குறைபாடுகளைக் காண்பதற்குத் திருவண்ணா மலையின் பிரதக்ஷணமே தகுந்த இடமெனத் தோன்றுதல் கூடும்.
கற்றாழை இலைகளைப் பரப்பி அதன்மேல் கண்மூடிப் படுத்திருக்கிற சாமியார்களும், ஆட்கள் நெருங்கி வருகிற சந்தர்ப்பங்களில் கண்மூடி மெளனியாக வீற்றிருக்கும் ஞானிகளும், ஒரு காலில் நின்று தவம் புரிபவரும், தல புராணத்தைக் கையில் வைத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்த பார்வையுடன் காசு கொடுப்பார் யாரென்ற கருத்துடன் படித்துக் கொண்டிருக்கும் சாதுக்களும், யோக தண்டங்களுடனும் நீண்ட கைவிரல் நகங்களுடனும் ஜபமணியுருட்டுவோரும் அங்கே மலிவாக இருக்கின்றனர். சில ஏழைப் பெண் மக்கள் தங்கள் பிள்ளைகளைப் படுக்கச் செய்து அதன் முகத்திலும் உடலிலும் எண்ணெயில் நனைக்கப்பட்ட காகிதங்களை ஒட்டி அதன் மேல் சிற்சில இடங்களில் குங்குமத்தையும் தடவி சலம் பிடித்த புண்ணுள்ள தேகமெனக் காண்போர் நினைக்குமாறு செய்திருப்பதையும் ஆங்காங்கே காணலாம்.
வலம் வரும் பாதை
இந்தப் பிராகாரத்தில் பலவிதமான குளங்களும், குட்டைகளும் மண்டபங்களும் இருக்கின்றன. சில சிறு கோவில்களு முண்டு. விநாயகர் ஆலயங்களும் எந்தை முருகன் திருக் கோயில்களும் காணப்படுகின்றன. சிற்சில இடங்களில் நந்தி மட்டும் இருப்பதையும் காணலாம்.
வழியில் ஓரிடத்தில் கற்கள் குவிக்கப் பட்டிருக்கின்றன. அங்கு ஒருவன் இருந்து, ‘அடுப்புக் கூட்டுங்கள், பிள்ளை பிறக்கும்’ என்று கூறுகிறான்.
வருகிறவரில் பெரும்பாலாரும் மூன்று கற்களை யெடுத்து அடுப்புப் போல வைத்து அதன்மேல் மற்றொரு கல்லை வைத்து விட்டு காலணா வரி கொடுத்து அப்பாற் செல்கின்றனர். இந்த வேடிக்கைகளின் முதற் பகுதியைச் சுமார் நாலரை மைல் தூரம் வரை கண்டு களித்த பின்னர் அணி யண்ணாமலை கோவில் வருகின்றது.
தினை மா
அணியண்ணாமலைக் கோவில் மிக அழகாக இருக்கின்றது. இவ்வழகிய திருக்கோவிலின் கோபுரம் தெரிகிற இடம் முதல் கடைகளும் கடைத் தெருவும் தோன்றுகின்றன. தேங்காய் பழம் முதலிய ஆராதனைப் பொருள்களை வழங்கும் கடைகளே பெரும் பாலனவாகும்.
ஆனால் நாட்டுப்புறத்து ஜனங்கள் தினையை இடித்துத் தெள்ளிய மாவைப் பெட்டி பெட்டியாக வைத்து விற்கிற காட்சியானது கானவர் குலக் கொடியான வள்ளி நாயகியாரை நினைப்பூட்டுகிறது. தெள்ளிய தினை மாவும் வெள்ளிய அரிசி மாவும் அணியண்ணாமலைக் கோவில் வாயில் வரை விற்கப்படுகின்றன.
அத்தினைமாவைக் கண்டவுடன் மாவிளக்கு வைக்கும் நினைப்பு யாரையும் விடாது. தினைமா, சர்க்கரை, தேங்காய் நெய், தாமரை நூல் திரி ஆகிய யாவும் அந்த இடத்திலேயே கிடைக்கின்றன. இவற்றை யாவும் வாங்கி ஒரு இலையில் வெகு எளிதாக மாவிளக்கு வைக்கிறார்கள்.
பின்னரும் முன் குறிப்பிட்டிருக்கிற எளிய ஜனங்களை வழியின் இருமருங்கினுங் காணலாம். வழி நடக்கும் ஜனங்கள் தேங்காய், பழம், காசு, பொரி அவல் கடலை முதலி யவற்றை ஏழை ஜனங்கட்கு வழங்கிக் கொண்டே செல்கின்றனர்.
வசந்த உற்சவ காலத்திலும் கார்த்திகையின் மறுநாளும் சுவாமி கிரிப் பிரதக்ஷ¢ணம் வரும் போது தங்குவதற்காக ஒரு பெரிய மண்டப மிருக்கிறது. ஆனால் வேறு மண்டபங்கள் விசேஷமாக இப்பகுதியில் இல்லை.
எம வாதைக் கதவு
ஊரை நெருங்கி வருகிறபோது வேடிக்கையான நிகழ்ச்சிக்கு ஒரு இடமிருக்கிறது. அதுதான் ‘எமவாதைக் கதவு’. இது வெள்ளைக் கற்களால் பழைய காலத்தில் கட்டப்பட்டது. இதற்கு வெளியில் ஒரு சிறு நந்தி யிருக்கிறது. இதற்கு நேரே ஒரு கோவில் இருந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.
கோவிலுக்கு முன்னாலுள்ள நந்தியின் முகம் தெரியும் பொருட்டு துவாரம் விட்டுக் கட்டப்பட்டிருக்கிற ஒரு மிகச் சிறிய மண்டபமே இப்போது எமவாதைக் கதவாகிவிட்டது.
கொஞ்சம் முன் பின்னாக ஒரு அடி அகலமுள்ளதான அந்த வழியில் மனிதர் நுழைய முயல்வது வேடிக்கையாகவே இருக்கிறது. இந்த வழியானது நாலைந்தடி நீளமிருப்பதால் கை கால்களின் உதவியின்றியே உடலால் நகர வேண்டியிருக்கிறதுவிசேஷமாக ஆண் மக்களே நுழைகின்றனர். பெண் மக்கள் அவ்வளவாக நுழையவில்லை.
ஜனக் கூட்டத்தினிடையே பெண் மக்கள் நுழைய முடியாது. இந்த எம வாதையில் நுழைவோர் காலணா வரி செலுத்த வேண்டும். இதனைத் தேவஸ்தானத்தார் பதினாறு ரூபா குத்தகைக்கு விட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
பெரிய மலையைச் சுற்றி நாற் புறத்திலும் சிறுசிறு மலைகள் பல காணப்படுகின்றன காடும், வெளியான நிலப்பரப்பும், பசுமை நிறம் பொருந்திய குன்றுகளும், கண்ணுக்கு விருந்து செய்கின்றன.
பெரிய மலையின் அடிப்பாகத்தில் செழுமை பொருந்திய செடிகளும் சிறு மரங்களும் அடர்ந்து பச்சிலை நிறைந்து விளங்குந்தோற்றம் இன்பம் பயக்கின்றது.
பாதையில் இருமருங்கிலும் மரங்கள் வரிசையாக வளர்க்கப் பெற்றிருப்பதாலும், அதனிடையே ஆற்றில் பெருகி ஒரு வழிப்பட்டுச் செல்கிற நீரின் ஒழுங்கைப் போல் ஜனங்கள் நிறைந்து செல்வதாலும் காண்போர் உள்ளம் களிப்புறுகின்றது.
நெய்க் குடங்கள்
மலையில் ஏற்றப்படும் தீபத்திற்கு தேவஸ்தானத்திலிருந்து நெய் சிறிதே அனுப்பப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு தரும ஸ்தாபனங் களிலிருந்தும் நெய்க் குடங்கள் அனுப்பப் படுகின்றன.
பிரார்த்தனை செய்து கொள்பவர் அனுப்பும் குடங்களே எண்ண முடியாதனவாகும். தீபத்தன்று காலை முதல் மாலை வரையும் நெய்க் குடங்கள் சென்ற வண்ணமாக இருக்கின்றன. இக்குடங்கள் யாவும் மலையில் வாசஞ் செய்கின்ற வேடர்களே கொண்டு செல்கின்றனர். மலையின் உச்சியில் இருக்கிற செப்புக் கொப்பராவில் இந்நெய் கொட்டப்பட்டு தீபம் போடப்படுகிறது.
கீழிலிருந்து நெய்க் குடங்களை அனுப்புபவர்கள் சூடத்தினை வாங்கிப் பொடியாக்கி நெய்க் குடத்தினுள் கொட்டி நன்றாகக் கலந்து விடுகின்றனர். விளக்கேற்றுவதற்காகத் துணி வாங்கி அதனைத் துண்டு துண்டாகக் கிழித்து அதனையும் நெய்க் குடத்தினுள் போட்டு விடுகின்றனர்.
நெய்யாவது துணியாவது திருட்டுப் போகாதிருப் பதற்காகவே இப்படிச் செய்யப்படுகிறது.
மதுரை ரயில்வே கோட்டத்தில் மொபைல் போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் மாதத்திற்கு 26,978 பயணிகள் மொபைல் போன் பயணிச் சீட்டுகள் மூலம் பயணம் செய்தனர். தற்போது மதுரை மண்டல அதிகாரிகளின் தீவிர பிரச்சாரம் காரணமாக இந்த எண்ணிக்கை கடந்த ஜூலை மாதம் 68,631 ஆக உயர்ந்துள்ளது.
மொபைல் போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்றும், கடந்த ஆண்டில் மாதத்திற்கு 26,978 பயணிகள் மொபைல் போன் பயணிச் சீட்டுகள் மூலம் பயணம் செய்தனர். தீவிர பிரச்சாரம் காரணமாக இந்த எண்ணிக்கை கடந்த ஜூலை மாதம் 68,631 ஆக உயர்ந்துள்ளது என்றும் தென்னக ரயில்வே மதுரை மண்டலம் தெரிவித்துள்ளது.
#image_title
திருநெல்வேலி – செங்கோட்டை வழித்தட செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து!
13.08.24 அன்று செங்கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் ரயில்கள் தென்காசி-செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது.
வ.எண்:06685 திருநெல்வேலி – செங்கோட்டை வண்டி (காலை 7 மணி திருநெல்வேலி புறப்பாடு) தென்காசி வரை மட்டுமே செல்லும்.
வ.எண்:06684 செங்கோட்டை- திருநெல்வேலி வண்டி (காலை 10 மணி செங்கோட்டை புறப்பாடு) தென்காசியிலிருந்து கிளம்பும்.
வ.எண்:06681 திருநெல்வேலி – செங்கோட்டை (காலை 9:45 மணிக்கு திருநெல்வேலி புறப்பாடு) வண்டி தென்காசி வரை செல்லும்.
பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம்
18ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் கோல் (அணித்தலைவர் மார்க் மிரேலஸ்)
30ஆவது மற்றும் 33ஆவது நிமிடத்தில் இந்தியா கோல் (இரண்டும் இந்திய அணித்தலைவர் ஹர்மன்பிரீத் சிங்)
ஸ்பெயினை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை இந்திய ஆடவர் ஹாக்கி அணி வென்றது. இன்று தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடிய மூத்த கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷுக்கு இந்தப் பதக்கத்தைக் காணிக்கையாக்குவதாக இந்திய அணித் தலைவர் ஹர்மன்பிரீத் சிங் கூறினார். யுவ்ஸ்-டியு- மோனிர் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றியின் மூலம், இந்தியா ஒலிம்பிக்கில் ஹாக்கியில் 13-வது பதக்கத்தையும், தொடர்ச்சியான பதிப்புகளில் இரண்டாவது வெண்கலத்தையும் வென்று சாதனை படைத்தது. முனிச் 1972 ஒலிம்பிக்கிற்குப் பிறகு முதல் முறையாக ஹாக்கியில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை வென்றிருக்கிறது.
பாரிஸ் 2024 இல் வருவதற்கு முன்னர் இந்தியா எட்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களுடன் ஒலிம்பிக் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ஹாக்கி அணியாக இருந்தது. டோக்கியோ 2020இல், வரலாற்று சிறப்புமிக்க வெண்கலத்தை கைப்பற்றியதன் மூலம் 41 ஆண்டுகால பதக்க வறட்சியை அந்த அணி முறியடித்தது.
காலிறுதியில் நடப்பு சாம்பியனான பெல்ஜியத்தை வீழ்த்திய உலகின் 8-வது இடத்தில் உள்ள ஸ்பெயினுக்கு எதிராக, ஹாக்கி தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள இந்திய அணி, ஜாக்கிரதையாகத் தொடங்கியது, ஆனால் நேரம் செல்லச் செல்ல மெதுவாக ஆட்டத்தில் வேகம் கூட்டியது.
தொடக்க காற்பகுதியின் நடுப்பகுதியில் இருந்து, இந்திய ஹாக்கி அணி ஸ்பானிய அணியின் மீது தனது தாக்குதலைத் தொடங்கத் தொடங்கியது, ஆனால் தெளிவான வாய்ப்புகளை உருவாக்கத் தவறியது. இதற்கிடையில், ஸ்பெயினால் இந்தியாவின் ஒன்பது ஊடுருவல்களுடன் ஒப்பிடும்போது தொடக்க காற்பகுதியில் இரண்டு வட்ட ஊடுருவல்களை மட்டுமே செய்ய முடிந்தது.
இரண்டாவது காற்பகுதியில், 18ஆவது நிமிடத்தில் கேப்டன் மார்க் மிரல்லெஸ் (18’) மூலம் ஸ்பெயின் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது காலிறுதி தொடங்கிய சில நிமிடங்களில், பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் ஸ்பெயின் இந்த முன்னிலையைப் பெற்றது. வட்டத்திற்குள் மன்பிரீத் சிங் வட்டத்தினுள் விதி மீறி நுழைந்ததை நடுவர் கண்டார்; அதனால் பெனால்டி ஸ்ட்ரோக் தரப்பட்டது. மார்க் மிராலெஸ் இந்தியாவின் கோல்கீப்பர் PR ஸ்ரீஜேஷைக் கடந்து செல்லப் பந்தினை மேல் மூலையில் தட்டி கோலடித்தார்.
2008 பெய்ஜிங்கில் வெள்ளிப் பதக்கத்திற்குப் பிறகு முதல் ஒலிம்பிக் பதக்கத்தைத் தேடும் ஸ்பெயின் ஆண்கள் ஹாக்கி அணி, தொடக்க கோல் அடித்த சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு இரண்டு பெனால்டி கார்னர்கள் வழங்கப்பட்டதால், தங்களின் நன்மையை இரட்டிப்பாக்க வாய்ப்பு கிடைத்தது.
எவ்வாறாயினும், அமித் ரோஹிதாஸின் சில் அற்புதமான தடுப்புகள் ஸ்பெயினின் கோல் வாய்ப்பினைத் தடுத்து நிறுத்தியது. ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதியில் அமித் ரோஹிதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
போட்டியில் ஸ்ரீஜேஷ் இரண்டாவது முறையாக ஏமாற்றப்பட்டார் என்று போர்ஜா லாகாலே நினைத்தார், ஆனால் அவரது ஷாட் கம்பத்தில் பட்டு வெளியே வந்தது, இந்திய கோல்கீப்பர் அதன் விளைவாக கிடைத்த பெனால்டி கார்னர் கோலாகாமல் பார்த்துக் கொண்டார்.
முதல் பாதி முடிவடைய இன்னும் 15 வினாடிகள் எஞ்சியிருந்த நிலையில், ஹர்மன்ப்ரீத் சிங் பெனால்டி கார்னரை வெற்றிகரமாக மாற்றியதால், பாரிஸ் 2024 இல் தனது ஒன்பதாவது கோலைப் பதிவு செய்து, போட்டியில் அதிக கோல் அடித்த வீரராக தனது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டார்.
மூன்றாம் பாதியில் ஆரம்பத்திலேயே ஹர்மன்ப்ரீத் தனது இரண்டாவது கோலை அடித்ததால் அரை நேர இடைவேளைக்குப்பின் இந்திய ஹாக்கி அணிக்கு முதல்முறையாக முன்னிலை பெற்றுத் தந்தார். இந்திய அணித்தலைவர் மீண்டும் ஒரு பெனால்டி கார்னரில் இருந்து, ஹாட்ரிக் கோல் அடிக்க முயற்சித்தார். ஆனால் இந்த முறை, ஸ்பெயின் கோல்கீப்பர் லூயிஸ் கால்சாடோவால் அது முறியடிக்கப்பட்டது.
மூன்றாவது காலிறுதிக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னர் ஸ்பெயின் இந்திய வலையில் பந்தை பெற முடிந்தது. ஜோஸ் பாஸ்டெராவின் பெனால்டி கார்னர் முயற்சியைத் தடுக்க, ஸ்ரீஜேஷின் அற்புதமான சேவ்களைத் தொடர்ந்து ஒரு தளர்வான பந்தைத் துரத்திய ஜோக்வின் மெனினி அதைத் தடுத்ததால், கோல் தவிர்க்கப்பட்டது.
மறுமுனையில், ஸ்பெயினின் கோல்கீப்பர் கால்சாடோ மற்றொரு பெனால்டி கார்னரில் இருந்து கோல் அடிப்பதில் இருந்து இந்தியாவையும் ஹர்மன்ப்ரீத்தையும் தடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசத்தை அப்படியே இருக்க வைத்தார்.
நான்காவது காற்பகுதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சித்ததால் ஆட்டம் ஒரு பரபரப்பான ஆட்டமாக மாறியது. ஸ்பெயின் அனைத்து முக்கியமான சமநிலையை கோலைத் தேடி முன்னேறியது, இந்திய பின்வரிசை வெற்றியை பார்க்க நீண்ட அழுத்தத்தில் திளைக்க வேண்டியிருந்தது. இறுதியில் இந்திய அணி 2-1 என்ற கொல் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.
ஆட்டத்திற்குப் பின் இந்திய ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில், “நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். “நாங்கள் மீண்டும் வரலாற்றைப் படைத்திருக்கிறோம், தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் பொட்டிகளில் வெண்கலப் பதக்கங்கள் பெற்றிருக்கிறோம். இது இந்தியாவுக்கு ஒரு பெரிய நாள் மற்றும் ஹாக்கிக்கு ஒரு பெரிய நாள்.
“இன்றைய ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. நாங்கள் ஒரு அணியாக விளையாடினோம். அனைவரும் பங்களிப்பை வழங்கினர், குறிப்பாக நமது லெஜண்ட் ஸ்ரீஜேஷ். இது அவரது கடைசி ஆட்டம். இது அவருக்கு மறக்க முடியாத விளையாட்டு, மேலும் ஒரு அணியாக பெரிய சாதனை.” பி.ஆர்.ஸ்ரீஜேஷ் தனது சர்வதேச ஹாக்கி வாழ்க்கையின் கடைசி இரண்டு நிமிடங்களில் இரண்டு துணிச்சலான சேவ்கள் மூலம் வெற்றிக்கு பங்களித்தார்.
இன்றைய ஆட்டத்தோடு கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஹாக்கியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் உண்டாவதற்கு குரு மற்றும் ஈச்வரனுடைய கிருபை தேவை. அந்த கிருபை இல்லாவிட்டால், மற்றவர்களை அடிக்க வேண்டும், அவர்கள் துன்புறுவதைக் கண்டு மகிழ வேண்டும் என்னும் அசுர எண்ணங்கள்தான் நம் மனதில் எழும். குரு மற்றும் ஈச்வரனுடைய அருளைச் சம்பாதிக்க நாம் அவர்களுக்கு சேவை புரிய வேண்டும். அவர்களுக்குச் சேவை புரிந்தால் மனதின் மலம் நீங்கி புனிதம் ஏற்படுகிறது. தூய மனதில் நல்ல எண்ணங்கள் ஏற்பட்டு அதன் மூலம் நம் வாழ்வு அர்த்தமுள்ளதாகிறது. ஆகையால், ஈச்வரனையும் குருவையும் அடைக்கலமாக அடைய நமக்கு உள்ள தூண்டுகோல் இந்த பரோபகாரம்தான்.
மஹான்களே வழிகாட்டிகள்
உலகத்திலே மனிதனாக பிறப்பது மிகவும் துர்லபம்.. அப்பேற்பட்ட துர்லபமான பிறவி நமக்குக் கிடைத்துள்ளது.. இதில் ஆஸ்திகம் இல்லை தர்மாசரணங்கள் இல்லை என்று சொன்னால் அப்போது இந்த மனிதப் பிறவிக்கு அர்த்தமேயில்லை..
ஆனால், பவித்ரமான இந்த பாரதத்திலே இந்த மாதிரியான பவித்ரமான ஜென்மத்தை எடுத்துள்ளோமென்று சொன்னால் நாம் இதை ஸார்த்தகமாக்கிக்கொள்ள வேண்டும்..
மனிதனுடைய ஸ்வபாவம் என்னவென்றால் தான் யாருடைய சகவாஸத்திலே இருப்பானோ, அவர்களுடைய ஸ்வபாவமே இவனுக்கும் வரும்.. தான் துஷ்டர்களுடைய சகவாஸத்திலே இருந்தால் அந்த துஷ்டர்களுடைய ஸ்வபாவமே இவனுக்கும் வரும்..
அதானலே, “நான் எப்பொழுதும் ஸத்புருஷர்களோடுதான் இருக்க வேண்டும் என்கிற ஒரு பாவனையை வைத்துக்கொள்ள வேண்டும்.. இப்படி இருந்தால் நீ செளக்கியமாக இருக்கலாம்” என்று பகவத்பாதாள் நமக்கு உபதேசித்தார்..
இப்பேற்பட்ட தர்ம மார்க்கத்திலே நாம் இருந்தால்தான் இந்த பவித்ரமான பாரதத்தில் ஜென்மம் அடைந்ததற்கு, இந்த ஸநாதன தர்ம பரம்பரையில் பிறந்ததற்கு அர்த்தம் வரும்.. இல்லாவிட்டால், நான் அப்போது சொன்ன மாதிரி பிராணிகளுக்கு சமானம் ஆகிவிடும்.. அப்படி ஆகக் கூடாது.. இந்த ஜென்மம் ஸார்த்தகமாக வேண்டும்..
இந்த தர்மத்தை ஆசாரணம் பண்ணுகிற விஷயத்திலே யார் மஹான்களோ அவர்களைத்தான் நாம் எப்பொழுதும் ஆதர்சமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆத்ம ஞானமே குறிக்கோள்
ஞான அக்னியானது கர்மாக்களின் பலன்களை எரிக்கவல்லது. பிறப்பும் இறப்பும் இருக்கும் வரை கஷ்டங்களும் துக்கங்களும் ஒருவனுக்கு இருந்துகொண்டேயிருக்கும். அவை இருக்கும் வரை முக்தி என்பதுமில்லை.
எனவே, ஆத்மஞானமே முக்திக்கு வழி ஆதலால் அந்த ஞானம் மனிதனால் அடையப்பட வேண்டியதாகும். அப்பொழுதுதான் நமது வாழ்க்கை பூரணமடையும்.
அப்படிப்பட்ட ஞானம் அடைந்தவன் பிறப்பு-இறப்புக்களால் பாதிக்கப்படுவது இல்லை. அவன் முக்தனாகிறான். அப்படிப்பட்ட ஞானத்தை அடையாதவன் பந்தத்தில் சிக்கிக் கொள்கிறான். எனவே ஆத்ம ஞானம் அடைவதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.