Home Blog Page 202

சிரத்தை என்ற சொல்லின் உள்ளார்ந்த விளக்கம் இதுதான்!

sringeri swamigal - 2026

ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

“ஸ்ரத்தை” என்கிற சப்தத்திற்கு நிஷ்க்ருஷ்டமான (தெளிவான) அர்த்தத்தை சங்கர பகவத்பாதாள் விவேகசூடாமணியில் கூறியிருக்கிறார்.

சாஸ்த்ரஸ்ய  குருவாக்யஸ்ய  ஸத்யபுத்த்யா  வதாரண  I
ஸா ச்ரத்தா  கதிதா  ஸத்பிர்யயா வஸ்தூபலப்யதே   II

அதாவது சாஸ்திரத்திலும் ஆசார்யாளுடைய வாக்கியத்திலும் மிகவும் பிராமாண்ய புத்தி (உண்மை என்கிற எண்ணம்) இருந்தால் அதற்குத்தான் “ஸ்ரத்தை” என்று பெயர்.  “சாஸ்திரத்தில் இப்படி இருக்கிறது.  அது அப்படித்தான் நடக்கும்” என்ற தீர்மானம் இருக்க வேண்டும்.  அநேகம் ஜனங்கள்,  “சாஸ்திரத்தில் கூறியபடி எல்லாவற்றையும் செய்தோம்.  ஆனால், அதில் சொல்லப்பட்ட காரியம் மட்டும் ஒன்றும் ஆகவில்லை” என்று குறை கூறுவார்கள்.  இதற்குக் காரணம் அவர்களிடம் ஸ்ரத்தை இருக்கவில்லை என்பதேயாகும். 

“சாஸ்திரத்தில் என்னவோ இருக்கின்றது.  செய்தால் என்ன ஆகுமோ தெரியாது.  செய்துதான் பார்ப்போம்” என்ற எண்ணம்தான் அநேகம் ஜனங்களுக்கு இருக்கிறது.  “சாஸ்திரத்தில் இப்படி நடக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.  ஆசார்யாளுடைய வாயிலிருந்து வந்த வார்த்தையும் அப்படியே இருக்கிறது.  ஆதலால் உண்மையில் இப்படித்தான் நடக்கும்” என்ற தீர்மானம் இருக்க வேண்டும்.

இதற்காகத்தான் “ஸத்யபுத்த்யாவதாரணா”  என்ற பதத்தை சங்கரபகவத்பாதாள் போட்டிருக்கிறார்.  இம்மாதிரி உறுதியான நம்பிக்கையுடன் காரியம் செய்தவர்களுக்கெல்லாம் உத்க்ருஷ்டமான (உயர்வான) பலன் கிடைத்து விட்டது.  இதில் சந்தேகமேயில்லை.

பகவானிடம் செய்ய வேண்டிய பிரார்த்தனை

எவ்வளவோ லெளகிகமான விஷயங்களை நாம் சிந்தித்துக்கொண்டே இருக்கிறோம்.  அதனால் அமைதியென்பதே இல்லாமல் நம் மனம் தவித்துக்கொண்டு இருக்கிறது.  அப்படி இருந்துமே திரும்பவும் நமக்கு இந்த லெளகிகமே வேண்டும் என்று சொன்னால், நம்முடைய அடர்ந்த மோஹம் தானே இதற்குக் காரணம்.  அதை விட்டுவிட்டு பகவானையே நினைக்கக்கூடிய ஒரு பவித்ரமான சந்தர்ப்பம் நமக்கு இருந்தால் அதுதான் நமது வாழ்க்கையிலே புனிதமான நாளாகும்.
“பகவானே!  எனக்கு லெளகிகமான விஷயங்களில் இருக்கும் ஆசைகள் போய் உன்னுடைய பாதத்திலேயே என் மனம் நிலைத்து நிற்க நீ எனக்கு அனுக்ரஹம் செய்”  என்கிற இந்த ஒரு பிரார்த்தனையை நாம் பகவானுடைய சன்னிதியில் செய்தோமானால் நம்முடைய ஜீவன் தன்யமாகிவிடும்;  மிகவும் பவித்ரமாகிவிடும்.

ஆசை யாருக்கும் இன்பம் சேர்க்காது

“எவ்வளவு வசதிகள் இருந்தாலும் எனக்கு அது தேவையில்லை. ஈச்வர ஸக்ஷாத்காரம் தான் வேண்டும்” என்பது அவர்களின் லட்சியமாக இருந்தது. அதேபோல் அவர்கள் பகவானின் பாதத்தை 24 மணி நேரமும் தியானித்தார்கள். நாமும் தியானம் பண்ணுகிறோம். எதன் மீது? த்யாதம் வித்தமஹர்னிசம்

24 மணி நேரமும், “பணம் எப்படிச் சேர்ப்பது? அதை எப்படி இரட்டிப்பாக்குவது?” என்று பணத்தைப் பற்றியே நாம் தியானித்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் காரணங்களால்தான் அவர்கள் பெற்ற பலனை நாம் பெறவிடாமல் தடுக்கின்றன.

தத்தத் கர்ம க்ருதம் யதேவ முனிபிஸ்தைஸ்தைர்பலைர் வஞ்சிதா:

நம்முடைய ஸாதனை வழிக்கும் அவர்களது ஸாதனைக்கும் எவ்வளவோ வேறுபாடு! ஆகவே, நாமும் அவர்களுடைய வழியைப் பின்பற்ற வேண்டும். மனதிலேயுள்ள ஆசைகளுக்காக பகவானை வழிபடுவது சரியில்லை. ஆசைகளைப் போக்கிக் கொண்டால்தான் உண்மையான சுகத்தை அடைய முடியும். வருகின்ற ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள முயறிசிப்பதில் நாம் வெற்றியடைய முடியாது. ஆசைகள் தீராமல் வருத்தம்தான் மிஞ்சும். ஆசை யாருக்கும் இன்பம் சேர்க்காது.

வோட்டு போட்டு எம்பி., எம்.எல்.ஏ., ஆக்கினாலும், பிரச்னைன்னு ரோட்டுக்கு வந்து சீன் போடணும்!

madurai communist campaign - 2026
#image_title

கைப்பிடி சுவரை சரி செய்ய கையெழுத்து இயக்கம் நடத்திய திமுக., கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியினரால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை தெற்கு வாசல் விமான நிலைய சாலையில் என். எம். ஆர். சுப்புராமன் பாலத்தின் சுவர் சிதலடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், விபத்து ஏற்படு முன்னரே சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை, மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் பல்வேறு முறை பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

மதுரையில் இரு வருடங்களுக்கு முன் 2022 ஜனவரியில் மாநில முதல் அமைச்சர் ஸ்டாலினால் மதுரை நகரில் திட்டப்பணிகள் காணொளிக் காட்சிகள் வாயிலாக திறந்து வைக்கப்பட்ட போது, “மதுரை தெற்குவாசல் இருப்புப்பாதை மேம்பாலம் கட்டப்பட்டு, ‘தியாகி என்.எம்.ஆர். சுப்புராமன் மேம்பாலம்’ என்று பெயர் சூட்டப்பட்டது கருணாநிதி ஆட்சியில் தான்” என்று பெருமிதமாகக் குறிப்பிட்ட பாலத்தின் கைப்பிடிச் சுவர் சிதிலமுற்று பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலையில் இருக்கிறது.

இப்படி ஆபத்தான நிலையில் இருக்கும் மதுரை தெற்கு வாசல் மேம்பால கைப்பிடி சுவரை சரிசெய்ய வலியுறுத்தி, திமுக., கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இதைக் கண்ட பொதுமக்கள், ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சு எம்பி கொடுத்தும், எம்எல்ஏக்கள் கொடுத்தும், மாமன்றத்தில் உறுப்பினர்கள் கொடுத்தும் அவங்க எல்லாம் வேலை செய்யல. இப்ப கையெழுத்து போட்டு பாலத்தை சரி செய்யச் சொல்லி நாம தான் வேலை செய்ய வேண்டியிருக்கு. பொதுமக்களுக்கு இடையூறா ரோட்டுக்கு வந்து நல்லாவே சீன் போடுறாங்க என்று முணுமுணுத்த படி சென்றார்கள்.

காந்தி கிராம மாணவிகளுக்கு விவசாய நிலத்தில் பயிற்சி!

gandhi gram students - 2026
#image_title

சோழவந்தான் அருகே காந்தி கிராம மாணவிகள் விவசாய நிலத்தில் தென்னை கன்று நடுதல் மற்றும் நெல் வயலில் நாற்றங்கால் நடவு செய்தலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் கல்லூரி மாணவிகள் சோழவந்தான் அருகே, தென்கரை கிராமத்தில் தங்கி இருந்து கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

குறிப்பாக, பயிர் சாகுபடி, உர மேலாண்மை, பூச்சி மேலாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்நுட்ப பயிற்சி அளித்து வருகின்றனர். இதன்படி, விவசாயி ரெங்கன் தோட்டத்தில் தென்னை கன்று நடவு முறைகளையும், எவ்வாறு தென்னை கன்றுகளை தேர்ந்தெடுப்பது பற்றியும் மேலும் இதன் பராமரிப்பு முறைகளில் விவரித்து விவசாயிகளிடம் எடுத்து கூறினர். விவசாயிகளும் பயிற்சி மாணவிகளும் சேர்ந்து தென்னை கன்றுகளை வாழை தோட்டத்தின் இடையில் ஊடுபயிராக நடவு செய்தனர்.

இதே போல், தென்கரை விவசாயி கார்த்திகேயன் நிலத்தில்
ஆர். என். ஆர். ரக நெற்பயிர்களை நாற்றங்காலில் மாணவிகள் பேராஜெஸிந், இந்திராணி, கோமுகி, முத்துலட்சுமி, பபிதா ஆகியோர் நடவு செய்தனர்.

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான கொடூரத் தாக்குதல்; இந்து முன்னணி ஆக.12ல் ஆர்பாட்டம்!

kadeswara subramaniam hindu munnani - 2026

பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல் மத்திய அரசு தலையிட்டு இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்த மனிதத்தன்மை அற்ற வெறிச் செயலை கண்டித்து இந்து முன்னணி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

கிழக்கு பாகிஸ்தான் ஆக இருந்த பங்களாதேஷில் மக்களை பாகிஸ்தான் செய்த கொடுமை செய்த போது பங்களாதேஷை காப்பாற்றி தனி நாடாக சுதந்திரமாக செயல்பட இந்தியா உதவியது. மேலும் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு பலவிதங்களிலும் நமது நாடு துணை நின்று வருகிறது. எவ்வளவு உதவிகள் செய்தாலும் அடிப்படைவாத மதவெறி நன்றி விசுவாசம் பார்ப்பதில்லை என்பதற்கு தற்போது நடக்கும் சம்பவங்கள் உலகிற்கு உணர்த்துகின்றன.

பங்களாதேஷ் நாட்டில் நடப்பது இட ஒதுக்கீடு காரணமாக ஏற்பட்ட கலவரம் என முதலில் செய்திகள் தெரிவித்தாலும், அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது அதன் பின்புலம் வேறுமாதிரி இருக்கிறது.

இந்துக்கள் மீது தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்துக்களின் நிறுவனங்கள் சூறையாடப்படுகின்றன, வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாகின்றன.

இந்து கவுன்சிலர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார், முன்னாள் கிரிக்கெட் இந்து என்பதாலேயே அவர் வீட்டில் தீ வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு விதமாக இந்துக்களின் மீதும் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், இந்திய குடியுரிமை சட்ட (சிஏஏ) திருத்தத்தை எதிர்த்தவர்கள் பங்களாதேஷில் இந்துக்கள் குறி வைத்து தாக்கப்படுவதற்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்?
மதத்தின் பெயரால் வன்முறை வெறியாட்டத்தில் பாதிக்கப்படும் போது உயிர் மட்டும்மாவது மிஞ்சினால் போதும் என நாட்டை விட்டு வெளியேறி வரும்போது இந்தியா அரவணைக்கத்தானே வேண்டும்?

ஆனால் இஸ்லாமிய நாடுகளாக உருவான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து இஸ்லாமிய அடிப்படைவாதிகள் திட்டமிட்டு இந்தியாவிற்குள் ஊடுருவி வருகின்றனர். ஆனால் அவர்களையும் அகதிகளையும் ஒன்றாக பேசியவர்கள், சிஏஏ சட்டத்தை விமர்சனம் செய்த இண்டி கூட்டணி கட்சியினர் என்பதை நமது மக்கள் உணர வேண்டும்.

தற்போது பங்களாதேஷில் நடக்கும் காட்டுமிராண்டித் தனமான வன்முறையால் இந்துக்கள் வாழ்வாதாரம் கேள்விக்கு)றியாகியுள்ளது.

மீண்டும் மீண்டும் இந்துக்களுக்கு அச்சுறுத்தல் சூழல் ஏற்படுவதை தடுக்க இதில் ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) தலையிட வேண்டும். உடனடியாக இனவாத, மதவெறி கலவரத்தை ஒடுக்க சர்வதேச படைகளை அனுப்பிட வேண்டும்.

கண் எதிரே அக்கிரமம் நடக்கும் போது அமைதியாக இருந்துவிட்டு பிறகு ஆலோசனை நடத்தி வருத்தம் தெரிவிப்பதால் என்ன பலன் இருக்க போகிறது.

எனவே உடனடியாக ஐ.நா.வும் பாரத அரசும் தக்க நடவடிக்கைகளை எடுத்து பங்களாதேஷில் உள்ள இந்துக்களுக்கு மன உறுதியை தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கவும் நிரந்தரமான பாதுகாப்பு அளிக்கவும் வேண்டும்.

அதேபோல இந்த சமயத்தில் பாரத நாட்டிலும் அது போல் ஒரு மக்கள் கிளர்ச்சி நடக்க வேண்டும் என்பது போல பிரிவினைவாத, தேசவிரோத கருத்துக்களை பலர் பரப்பி வருகின்றனர்.

இவர்களுடைய நோக்கம் நமது நாடு முன்னேறக்கூடாது, நமது நாட்டின் மக்கள் அமைதியாக வாழக் கூடாது, சண்டை சச்சரவு மிகுந்து, நாடு ஒரு அமைதியின்மையை அடைந்தால் அதன் மூலம் தங்களுக்கு அரசியல் லாபம் கிடைக்கும் என்ற கேவலமான நோக்குடன் செயல்படுகிறார்கள்.

இத்தகைய தீய எண்ணம் கொண்டவர்களை அடையாளங்கண்டு உடனடியாக தேசப் பாதுகாப்பு சட்டங்களின் அடிப்படையில் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்விவகாரத்தில் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இந்த மனிதத்தன்மை அற்ற வெறிச் செயல்களை கண்டித்தும், வங்கத்தில் உள்ள இந்துக்களுக்கு நீதி கோரியும் இந்து முன்னணி வருகிற திங்கட்கிழமை 12. 8. 24 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து மக்களும் கலந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டுகிறேன்.

பார்வை மிருகங்கள்

fire and fogs distrub madurai roads - 2026

-கவிஞர் கண்ணன் திருமலை ஐயங்கார்-

அந்நாட்டு கலவரமும் வன்முறையும் சீர்க்குலைவும்
இந்நாட்டில் நடக்கலாம் என்கின்றார் I என்னதிமிர் ?

ஏனிந்த வயிரெரிச்சல் ? எதற்க்கிந்த காழ்ப்புணர்ச்சி??
தான்பதவி அதிகாரம் அற்றதனால் வெறுப்புணர்ச்சி !

துர்மதியின் வெளிப்பாடு , துவேஷத்தின். நிலைப்பாடு.
அர்ப்பமன குறைபாடு ; அவர் நரகல் தனக்கீடு!

உள்ளேயும் பகையுணர்ச்சி; வெளியேயும் பகை நாட்டார்;
கள்ளேபோல் சுண்ணாம்பு பாரதத்தின் சிதைவளர்ச்சி?

பொறுக்காத விரோதியர்கள் பணமளித்து உசுப்பிடுவார்
குறுக்குவழி ௭றிகுண்டு துப்பாக்கி குவித்திடுவார்;

வழிபாட்டு தலத்துதுள்ளே வன்முறைக்கு அஸ்திரங்கள்
வழிநடத்தும் போராட்டம் வெடிக்கவைக்கும் களேபரங்கள் ;

இப்படியோர் காட்சியிங்கு அரங்கேற வாய்ப்புள்ளது
அப்படித்தான் சிலர்மனதில் வெள்ளோட்டம் நடக்கிறது ;

பாரதமே ஆழநினை ; பகைவர்கிளை வீழ்த்தமுனை,
நேரத்தின் முந்திமுனை; நினைவிருத்தி வெற்றிபுனை.

ரிஷிமுனிவர் ஆசி பெற்ற நெடிய புகழ் திகழும்நிலம்
நசிவுஅற்று மேலும் மின்னும் i இருந்தாலும் விழிப்பிலிரு ! I

ஆங்கிலேயர் ஆளுகையில் மதுரை பாளையங்களின் வருமானம்

மதுரை ஜில்லா இங்கிலீஷ்காரர் வசமாகி மிஸ்டர் வின்ச் ( Mr. Wynch ) காலத்தில் ( 1795 நவம்பர் ) மதுரையைச் சார்ந்த 24 பாளையப்பட்டுகளின் விவரம் வருமாறு :
( சக்கரம் = கிட்டத்தட்ட இரண்டு ரூபாய் மதிப்புள்ள நாணயம் – 1795-இல்)
( 1 ) கோம்பை : 3000 சக்கரம் வருமான முள்ளது . 1500 சர்க்கார் கிஸ்தி . அப்பாஜி கவுண்டர் பாளையக்காரர் ; கம்பளிய ஜாதி ; அவருக்கு 100 சேவகருண்டு .
( 2 ) எச்சக்க நாய்க்கனூர் : -500 சக்கரம் வருமானம் ; பாளையக்காரர் ; கம்பளிய ஜாதி ; வாலிபர் .
( 3 ) தேவாரம் – 357 சக்கர வருமானம் . 110 சக்கிரம் சர்க்கார் கிஸ்தி . பாளையக்காரர் கம்பளத்தார் ஜாதி . போடிநாயக்கனூர் மாப்பிள்ளை .
( 4 ) போடி நாயக்கனூர் :-7000 சக்கர முள்ள பெரிய பாளையப்பட்டு. திருமலபோடி நாய்க்கர் என்பவர் பாளையக்காரர் . கம்பளத்தார் . இது 5000 சக்கரம் கிஸ்தி தரக்கூடுமாம்.
( 5 ) கண்டப்ப நாயக்கனூர் : பெரிதும் உபயோக மற்ற நிலமுள்ளது . 4500 சக்கரம் வருமானம் . 1900 சக்கரம் சர்க்கார் கிஸ்தியுள்ளது .
(6 ) தேவதானப்பட்டி : 4000 சக்கரம் வருமானம் . 3100 சர்க்கார் கிஸ்தி . நல்லதாச நாயக்கர் என்னும் பாளையக்காரர். கம்பளத்தார் .
( 7 ) தொட்டியன் கோட்டை : 1600 சக்கரம் வருமானம் . சுல்தான் காலத்தில் 850 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . தொட்டப்ப நாய்க்கரென்னும் பாளையக்காரர் , கம்பளத்தார் .
( 8 ) நிலக்கோட்டை : 9000 சக்கர வருமானம் . 7000 சக்கரம் கிஸ்தி . கோலப்ப நாயக்கரென்கிற பாளயக்காரர். கம்பளத்தார் .
( 9 ) அம்மய நாயக்கனூர் : அநேக மலைநாடுகளுடன் சேர்ந்த பெரிய பாளையப்பட்டு . 11,000 சக்கரம் வருமானம் . 3,600 சக்காம் சர்க்கார் கிஸ்தி . கத்திரப்ப நாயக்க என்கிற பாளையக்காரர் கம்பளத்தார்
( 10 ) அப்பலத்தாரு : — 2000 சக்கரம் வருமானம் . 1500 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . மகாபல நாயக்கரென்னும் பாளையக்காரர் , கம்பளத்தார் .
( 11 ) தவசுமேடை : -65 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . சோட்ல நாயக்கரென்னும் பாளையக்காரர் , கம்பளத்தார் .
( 12 ) எமகாலபுரம் : -550 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . பாளையக்காரர் , கம்பளத்தார் .
( 13 ) மறவநாடு : – கம்பளஜாதி . சின்ன அளகிரி நாயக்கர் பாளையக்காரர்; 600 சக்கரம் சர்க்கார் கிஸ்தி .
( 14 ) சொக்கம்பட்டி : – பழனிமுத்து நாயக்கர் பாளையக்காரர் .
( 15 ) எரியோடு : -12 கிராமங்களும் , 39 சிறு கிராமங்களுமுள்ள பெரிய பாளையப்பட்டு . 9000 சக்கரம் வருமானம் . 6700 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . பாளையக்காரராகிய முத்துக்குமாரவேலு பெல்லகொண்டம நாயக்கர் , வடுகர் .
( 16 ) பள்ளியப்ப நாயக்கனூர் : -2000 சக்கரம் வருமானம் . 1000 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . பழனியப்ப நாயக்கரென்னும் பாளையக்காரர் , கம்பளத்தார் .
( 17 ) இடையகோட்டை : – நல்ல பாளையப்பட்டு , சர்க்கார் கிஸ்தி 2337 சக்கரம் . பாளையக்காரர் கம்பளத்தார் .
( 18 ) மாம்பறை : – 400 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . சாகரம் தொம்மநாயக்கர், கம்பளத்தார் .
( 19 ) பழனி : – பெரிய பாளையப்பட்டு , இது பழனி, இட்டம்பாடி , ஆயக்குடி என்று மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டிருக்கின்றது . இந்தப் பாளையப்பட்டு முன் 80,000 ரூபாய் கிஸ்தி கட்டிக்கொண்டுவந்து , பிறகு 16,000 சக்கரமாகக் கட்டியது . 25,000 சக்கரம் கட்டக்கூடிய ஸ்திதியிலிருக்கிறது . இதன் முன் பாளையக்காரராகிய வேலாயுத நாயக்கர் , வேடஜாதியார் .
( 20 ) ஆயக்குடி : — 8000 சக்கரம் வருமான முடையது . 4000 சக்கரம் சர்க்கார் கிஸ்தி. பாளையக்காரராகிய ஓபிளி கொண்டம நாயகர் , வேடஜாதி
( 21 ) விருபாக்ஷி : – மலைநாடாகிய இது பெரிய பாளையப்பட்டு . 12,000 சக்காம் வருமானம் . 6000 சர்க்கார் கிஸ்தி . பாளையக்காரர் குப்பண்ண நாயக்கர் , கம்பளத்தார் .
( 22 ) கண்ணியவாடி : – இது 14 பெரிய கிராமங்களும் , 48 சிறு கிராமங்களு முள்ள பெரிய பாளையப்பட்டு , 21,000 சக்கரம் வருமானம் . 12300 சர்க்கார் கிஸ்தி .
( 23 ) மாதூர் : – பெரிய பாளையப்பட்டு , கடனில் மூழ்கி விட்டபடியால் , கவர்ன்மென்டார் மானேஜ்மென்டில் இருக்கிறது . பாளையக்காரர் வேங்கடசாமி நாயடு .
இனி வடகரை , எட்டயாபுரம் , இராமநாதபுரம் , சிவ கங்கை , புதுக்கோட்டை முதலான சில பெரிய பாளையப் பட்டு ஜமீன்களின் சங்கதிகளைச் சங்கிரகமாக இதனடியிற் காணலாம் .
வடகரை ஜமீன்தாரரின் விவரம் .
வடகரை ஜமீன்தாரரவர்களுடைய ஆதி தந்தையாகிய ஸ்ரீராமபத்திர நாயடுகாரு மதுரையில் முதலில் ஆண்டு வந்த இராஜா கோட்டய நாகம நாயடுகாருடைய சேனைத் தலைவராக இருந்தவர் . இந்த நாகம நாயடுகாருக்குப் புத்திக சந்தானமில்லாக் குறைவால் காசிக்ஷேத்திரத்திற்கு யாத்திரை போனபோது , அவருடைய சமஸ்தானத்தை இந்த ஸ்ரீராமபத்திர நாயடுகாரு அவருக்குப் பிரதிநிதியாக இருந்து இராஜ்ஜியத்தை யாண்டுவந்ததன்றியில் ; நாகம் நாயடுகாரு சோழராஜாவின் மேல் படையெடுத்துப் போன போதும் , பிறகு ஸ்ரீ விசுவநாத நாயுடுகாரு மதுரையைப் பிடிக்க வந்தபோதும் , தக்க உதவி செய்து வந்ததன்றியில் ; கம்பம் கோட்டையை முற்றுகை போட்டதில் விசேஷ உதவி செய்ததனால் , அவரைப் பழனிக்கருகிலும் , வைகை நதிக்கு வடகரையிலு மிருக்கும் வடகரை பாளையப்பட்டுக்கு பாளையக்காரராக ஆக்கினார் . இந்த வடகரை பாளையக் காரரும் , சொக்கம்பட்டி ஊற்றுமலை பாளையக்காரர்களும் இராமநாதபுரம் சேதுபதி யவர்களுக்கு மற்றப் பாளையக்காரர்களைப்போல எவ்விதமான வணக்கமும் செய்வதில்லையாம் . 1795 இதன் வருமானம் 6500 சக்கரமாம்.
(பகடால நரசிம்மலு நாயுடு 1919-ஆம் வருடம் எழுதிய தஷண இந்திய சரித்திரத்திலிருந்து)

பள்ளிகளில் கஞ்சா புழக்கம்; திமுக., அரசு வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது: அன்புமணி

பள்ளிகளில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம்: தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது ஆபத்தானது! : பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எச்சரிக்கை!
இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
சென்னையை அடுத்த பழவந்தாங்கல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் வகுப்பு நேரத்தில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வும், அதைத் தொடர்ந்து அந்த மாணவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ள தகவல்களும் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்தியாவின் எதிர்காலத் தூண்களான மாணவர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி எவ்வாறு திசை மாறிப் போகின்றனர் என்பதை நினைக்கவே அச்சமாகவும், கவலையாகவும் உள்ளது.
பழவந்தாங்கல் அரசு பள்ளியில் கஞ்சா புகைத்ததாக பிடிபட்ட மாணவர், நீண்டகாலமாகவே அப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதும், அவரிடம் பல கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பள்ளிக்கு மிக அருகிலேயே, பழவந்தாங்கல் தொடர்வண்டி நிலையம் அருகில் கஞ்சா விற்கப்படுவதாகவும், அங்கிருந்து தான் மாணவர் கஞ்சா வாங்கியதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மாணவருக்கு கஞ்சா விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பல ஆண்டுகளாக தொடரும் போதிலும் கஞ்சா வணிகத்தைத் தடுக்க அரசோ, காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருவது குறித்தும், அதைத் தடுக்க வேண்டியதன் தேவை குறித்தும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இது தொடர்பாக இரு முறை நேரில் சந்தித்து போதைப் பொருட்கள் நடமாட்டத்தைத் தடுக்கும்படி வலியுறுத்தினேன். ஆனால், எந்த பயனும் இல்லை.
தமிழ்நாட்டில் கஞ்சா வணிகத்தை ஒடுக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி வரும் தமிழக அரசும், காவல்துறையும் அவ்வப்போது கஞ்சா 1.0, கஞ்சா 2.0, கஞ்சா 3.0, கஞ்சா 4.0 என்ற பெயரில் சோதனை நடத்துவதாகவும், ஒவ்வொரு முறையும் டன் கணக்கில் கஞ்சா பிடிபடுவதாகவும், பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்படுவதாகவும் பெருமைப்பட்டுக் கொள்கின்றன. ஆனால், அதனால் என்ன பயன்? பள்ளிக்கு அருகிலேயே , மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதும் தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது.
பழவந்தாங்கல் பள்ளிக்கு அருகில் மட்டும் தான் இந்த நிலைமை என்று கூற முடியாது. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான பள்ளிகளில் இதே நிலை தான். அப்படியானால், ஒவ்வொரு முறையும் கஞ்சா வேட்டை பெயரளவுக்குத் தான் நடக்கிறது, காவல்துறை ஒத்துழைப்புடனேயே கஞ்சா வணிகம் நடக்கிறது என்று தான் கருத வேண்டியுள்ளது. இதை தமிழக அரசும், காவல்துறையும் வேடிக்கைப் பார்ப்பது மிகவும் ஆபத்தானது. கஞ்சா போதைக்கு பள்ளி மாணவர்களும் அடிமையாகாமல் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் கஞ்சா புழக்கத்தை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாரீஸ் ஒலிம்பிக் 2024: 12ம் நாளில் இந்தியக் குழுவின் நிலை!

paris olympics 2024 - 2026
#image_title

பாரீஸ் ஒலிம்பிக் 2024 – பனிரெண்டாம் நாள் – 07.08.2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

தடகளம்

          கலப்பு மராத்தான் நடை ஓட்டம்: பிரியங்கா கோஸ்வாமி மற்றும் சூரஜ் பன்வார் இருவரும் நடக்கும்போது கால் வளைந்திருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

ஆண்கள் உயரம் தாண்டுதல் (தகுதிச் சுற்று)

          சர்வேஷ் குஷாரே தனது குழுவில் 13ஆக வந்ததால் போட்டியிலிருந்து வெளியேறினார்.

பெண்களுக்கான ஈட்டி எறிதல் (தகுதிச் சுற்று)

          அன்னு ராணி தனது குழுவில் 15ஆவதாக வந்ததால் பொட்டியில் இருந்து வெளியேறினார்.

பெண்களுக்கான 100 மீ தடை ஓட்டம் (முதல் சுற்று)

          ஜோதி யர்ராஜி தனது குழுவில் எட்டாவதாக வந்ததால் போட்டியில் இருந்து வெளியேறினார்.

ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் (தகுதிச் சுற்று)

          பிரவீன் சித்திரவேல் மற்றும் அப்துல்லா அபூபக்கர் நாரங்கொலிந்தேவிட இருவரும் இரண்டு முறை டிரிபிள் ஜம்ப் செய்திருக்கிறார்கள். பிரவீன் 16.25 மீட்டர் மற்றும் அப்துல்லா 16.19 மீட்டர் தாண்டியிருக்கிறார்கள். தகுதி பெற 17.10 மீட்டர் தாண்டவேண்டும்.

ஆண்களுக்கான 3,000மீ ஸ்டீபிள்சேஸ் இறுதிச் சுற்று

          அவினாஷ் சேபிள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டி  நாளை அதிகாலை 1.13 மணிக்கு நடைபெறும்.

கோல்ஃப் மகளிர் தனிநபர் (இறுதிப் போட்டி)

          அதிதி அசோக் மற்றும் திக்ஷா தாகர் கலந்துகொள்ளும் போட்டி அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறும்.

டேபிள் டென்னிஸ் மகளிர் அணி (கால்-இறுதி)

          இந்தியா (ஸ்ரீஜா அகுலா, மனிகா பத்ரா மற்றும் அர்ச்சனா கிரிஷ் காமத்) எதிராக ஜெர்மனி 1-3 என்ற புள்ளிக்கணக்கில் தொல்வியுற்றது.

மல்யுத்த பெண்கள் ஃப்ரீஸ்டைல் ​​53 கிலோ (1/8 இறுதிப் போட்டி)

ஆன்டிம் பங்கல் vs சைனெப் யெட்கில் ஆண்டிம் பங்கள் 0-10 என்ற புள்ளிக் கணக்கில் தொல்வியடைந்தார்..

பளு தூக்குதல் பெண்கள் 49 கிலோ (பதக்கம் சுற்று)

          சாய்கோம் மீராபாய் சானு போட்டி நடந்துகொண்டிருக்கிறது.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா!

jenagai mariamman adipuram - 2026
#image_title

மதுரை, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில், ஆடிப் பூரம் விழா சிறப்பாக நடந்தது .

இவ்விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு பால்,தயிர்,இளநீர் உட்பட 21 அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. வளையல்,ஜாக்கெட் துணி மற்றும் சீர்வரிசை வைத்து , ஆடிப்பூர நிகழ்ச்சியை நடத்தினர் சண்முகவேல்
பூசாரி பூஜைகள் செய்தார்.

இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிகமாக வருகை புரிந்து அம்மனை தரிசித்தனர். திருக்கோவில் சார்பாக வழங்கப்பட்ட வளையல், ஜாக்கெட்துணி மற்றும் பொங்கல் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.செயல்அலுவலர் இளமதி, கோவில் பணியாளர்கள் அர்ச்சகர் சண்முகவேல் பூபதி,கவிதா, வசந்த் மற்றும் பக்தர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதேபோல், தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் கோவிலை சுற்றி வந்தது. இதைத்
தொடர்ந்து, அம்மன் சன்னதியில் ஆடிப்புரம் படி ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அர்ச்சகர் செந்தில் ஆடிப்பூர நிகழ்ச்சிகளை நடத்தி பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். செயல் அலுவலர் கார்த்திகை செல்வி, கோவில் பணியாளர்கள் மற்றும் கிராமமக்கள், அகிலாண்டஈஸ்வரிஅம்மன் மகளிர்குழு ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

இரவு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி நான்கு வீதிகளும் உலா வந்தது. உச்சி மகாகாளியம்மன் கோவிலில் அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாவித்தார். சோழவந்தான் திரௌபதி அம்மன்
கோவில், பத்ரகாளியம்மன் கோவில் காடுபட்டி,
திரௌபதி அம்மன்கோவில் மேலக்கால் காளியம்மன் கோவில்உள்பட இப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிபூரம் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்து பக்தர்களுக்கு வளையல் வழங்கப்பட்டது.

சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு இங்குள்ள ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இரவு கேடயத்தில் ஆண்டாள் அலங்காரமாகி வீதி உலா நடந்தது. அர்ச்சகர் பார்த்தசாரதி பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். செயல் அலுவலர் சுதா,கோவில் பணியாளர் முரளிதரன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சோழவந்தான் மற்றும் காடுபட்டி
போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வினேஷ் போகத் தகுதி நீக்கம்!

paris olympics 2024 - 2026
#image_title

ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம்

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-

          ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் என்ற செய்தி இன்று பல இந்தியர்களுக்கு இதயத் துடிப்பை சில விநாடிகள் நிறுத்தியிருக்கலாம். தனது தங்கப் பதக்கப் போட்டி நடைபெறவிருக்கின்ற இன்றைய தினத்தின் காலையில் பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் அதிக எடையுடன் இருந்ததற்காக பாரீஸ் 2024 ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

          ஒவ்வொரு எடைப் பிரிவும் இரண்டு போட்டி நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிற்கும் மருத்துவக் கட்டுப்பாடு மற்றும் எடையை முதல் போட்டி நாளின் காலையில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி நாளில், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற மல்யுத்த வீரர்கள் மீண்டும் எடைபோடப்படுகிறார்கள்.

          “50 கிலோ மகளிர் மல்யுத்தப் பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தியை இந்திய அணி வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது” என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “இரவு முழுவதும் குழுவின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், அவர் இன்று காலை 50 கிலோவுக்கு மேல் சில கிராம் (100 கிராம்) எடையுடன் இருந்தார்.

          “இந்த நேரத்தில் குழுவால் மேலும் கருத்துகள் எதுவும் தெரிவிக்கப்படாது. வினேஷின் தனியுரிமையை மதிக்குமாறு இந்திய அணி கேட்டுக்கொள்கிறது. கையில் இருக்கும் போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புகிறது.

          மல்யுத்த விதிகளின்படி, ஒரு மல்யுத்த வீரர் போட்டியின் இரண்டு நாளிலும் (முதற்கட்ட போட்டிகள், மற்றும் மறுபரிசீலனை மற்றும் இறுதிச் சுற்றுகள்) எடையிடுவதில் தோல்வியுற்றால், அவர்கள் நிகழ்விலிருந்து வெளியேற்றப்படுவார்கள். தரவரிசையில் இடம் பெறாத வினேஷ், செவ்வாயன்று நடந்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.

          மூன்று முறை காமன்வெல்த் கேம்ஸ் சாம்பியனான இவர், முதல் சுற்றில் முதல் நிலை வீரரும் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான ஜப்பானின் யுய் சுசாகியை தோற்கடித்தார். காலிறுதிப் போட்டியில், முன்னாள் ஐரோப்பிய சாம்பியனான உக்ரைனின் ஒக்ஸானா லிவாச்சை வீழ்த்தி அரையிறுதியில் பான் அமெரிக்கன் கேம்ஸ் சாம்பியனான கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மானை வீழ்த்தினார்.

          வினேஷ் போகட் இறுதிப் போட்டியில் ஆறாம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் சாரா ஹில்டெப்ராண்டை எதிர்கொள்ள இருந்தார். ஹில்டெப்ராண்ட் இப்போது தங்கப் பதக்கத்திற்காக யுஸ்னிலிஸ் குஸ்மானுடன் போராடுவார், அதே நேரத்தில் யுய் சுசாகி மற்றும் ஒக்ஸானா லிவாச் வெண்கலத்திற்காக போட்டியிடுவார்கள்.