Home Blog Page 255

Lawyer-sisters on Song!

0
lawyers sister on - 2026
#image_title

By      Narasimhan Vijayaraghavan

RaGa-Ranjani-Gayathri sisters perform at the Music Academy. One can see throngs in the wee hours of Andal’s Margazhi day,

On Christmas Day, year after year, RaGa-Ranjani-Gayathri sisters perform at the Music Academy. One can see throngs in the wee hours of Andal’s Margazhi day, at 03.45 am (yes ungodly hour, you may assume) at the daily ticket counter. And even the mini-hall comes into play, for a live Video on display. This year in 2023, was no different.

Talking of mini halls, it was RaDi- Ramya-Divya sisters, disciples of RaGa, at Narada Gana Sabha today. They went ahead of their gurus, in timeline. Talent has a knack of rearing its head, shoulders and throat. In Carnatic music, it is a pity that such talents remain ‘Hidden Potential’ (in the words of Wharton Professor – Organisational Psychologist’s new book) for too long. Why?

Carnatic music platforms are tough to get to. So many sabhas you may say. Yet, competition is crowded and unless you are well ‘networked’, you may have to perform in your bathrooms or obliging local temples where you are ‘famous’.

One was comforted to see a ‘decent’ turn out, a bit beyond family/friends. Typically, experience suggests, for every one rasika coming in, three plus  leave the hall. That is tradition. Today, it was one on one. Good. End of concerts boasts more in the audience, as a mix between the leftovers of the current and the next concert. This too is tradition, you see.

When word gets around, halls may get filled in? The rasikas know that a Dec,25 slot in NGS is a prized slot. So, those that  peeped in after a piping hot coffee, stayed put to enjoy,the new kids on the block.

Well, how was I there? Law got me in. When lawyer- sisters sing, it is news. Lawyers are rarely talented in anything. Law is mostly last resort. Even in law, as my favourite Justice Antonin Scalia wrote in ‘Talking Law’. Many lawyers ‘perform’ in court, as Justice Krishna Iyer once said. Remember, lawyers are in ‘practice’, all the time. It is more than the gladwellian 10,000 hours. Musicians have to do ‘Sadhagam’. A higher echelon of ‘practice’. And today, at NGS mini hall, RaDi demonstrated that in practice.

Law and music, on the surface, seem like disparate disciplines. One wields the gavel of logic and precedent, while the other dances on the wings of emotion and melody. Yet, in the vibrant tapestry of Indian society, lawyers and musicians share a profound connection, playing out their roles in a symphony as complex and layered as the raga itself. RaDi made it sweet and simple  ie. Janaranchagam.

Like the meticulous notes of a veena  artiste (Ramya is one too) lawyers meticulously dissect cases, weaving arguments with the intricate precision of a Carnatic violinist (Divya is one too). They become instruments of justice, their voices rising and falling like the mirudangam or a ghatam or a kanjira or a morsing, building crescendos of persuasion before settling into the satisfying resolution of a verdict. In music, you do not perform to win or lose. For a client. But for yourself. Of course, the Rasika.

The courtroom drama, with its heated exchanges and impassioned pleas, mirrors the electrifying energy of a successful concert. Lawyers channel their inner maestros, commanding attention with their booming voices and sharp retorts. Their cross-examinations become duels of wit, each question a carefully placed note, probing for weaknesses and eliciting reactions like a skilled musician drawing out hidden tones from their instrument or vocal chords. Rarely, Courts would like lawyers to argue more. Always less. Today, NGS mini hall may have wanted RaDi to sing more. For, RaDi were on song!

RaDi essayed the alapanas and swaraprastharams with aplomb,  revealing years’ of practice,  beyond their ages . Their choice of kirthanais were spot on like sharp, focused submissions  of attorneys, to appeal to an indifferent court. And their musical phrases resonated beautifully.    

Sanjit Narayanan  on the Violin and B N Kasindh on the Mirudangam, gave able support. And the obliging rasikas generously applauded.

The lawyer’s burden, however, carries a discordant note. The weight of responsibility, the pressure of deadlines, and the constant emotional drain can take their toll. The courtroom, once a stage for brilliance, can become a cage of stress, the melody replaced by the grinding dissonance of mental fatigue.

RaDi were not burdened by the occasion. They were on song.They felt belonged on this stage. Welcome to the cut-throat competition of courtroom practice, sorry Carnatic music performance on stage!


(Author is practicing advocate in the Madras High Court)


திருப்பாவை – பாசுரம் 9 தூமணி மாடத்து

thirupavai pasuram 9 - 2026

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

எட்டாம் பாசுரத்தில் நம் நிலை கண்டு இரங்கி அருள்புரிபவன் கண்ணன்; அவனைக் காணச் செல்ல வேண்டாமோ என்று கூறி தோழியைத் துயில் எழுப்பிய ஆண்டாள், அப்படியும் அவள் எழாதது கண்டு, நீ என்ன வாய்பேச இயலாதவளோ, காது கேட்காதவளோ, மயக்கத்தில் கிடப்பவளோ என்றெல்லாம் கடுமையாகக் கூறி துயிலெழுப்ப முயற்சி செய்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்.

பரிசுத்தமான மாணிக்கங்களால் கட்டப்பட்ட அழகிய மாளிகையில் நாலாப்புறமும் விளக்குகள் பிரகாசமாக எரிகின்றன. அகில், சந்தனம் முதலியவற்றின் வாசனைப் புகையால் அங்கே மணம் கமழ்கிறது. அத்தகைய மாளிகையில் மென்மையான படுக்கையின்மீது நித்திரையில் ஆழ்ந்திருக்கின்ற மாமன் மகளே! மாணிக்கக் கதவின் தாழ்ப்பாளைத் திறப்பாயாக! மாமியே! உள்ளே உறங்குகிற உன் மகளை எழுப்ப மாட்டீர்களா? உன் மகள் என்ன வாய் பேச இயலாதவளோ?

அல்லது, காதால் கேட்கத்தான் இயலாதவளோ? அல்லது பேருறக்கம் உடையவளாக இருக்கின்றாளோ? படுக்கையில் விழுந்து நினைவற்றவள் போலே ஆழ்ந்த மயக்கத்தில் கிடக்கின்றாளோ? அல்லது மந்திரவாதத்தால் கட்டுப்பட்டு உணர்விழந்து இருக்கின்றாளோ? அளவிடப்பட முடியாத ஆச்சரியச் செயல்களை உடையவன் அந்த மாயன். திருமகள் கேள்வனான மாதவன் அவன்.

அவனை மாயவனே, மாதவனே, திருவைகுண்டநாதனே என்றெல்லாம் பலவாறு சொல்லித் துதிக்கிறோம். இப்படி எம்பெருமானின் திருநாமங்கள் பலவற்றையும் வாயாரக் கற்றிருக்கிறோம். இனியாகிலும் உன் மகள் அதனை உணரலாகாதா? பாவையே எழுந்து வா என்று தோழியைத் துயிலெழுப்புகிறார் ஸ்ரீஆண்டாள்.

-: செங்கோட்டை ஸ்ரீராம்

ஸ்ரீ ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் திடீரென நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி

janakai narayana perumal - 2026
#image_title

சோழவந்தான் ஸ்ரீ ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் திடீரென நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனக நாராயண பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. பழமை வாய்ந்த இக்கோவிலில் இன்று காலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அதிக அளவு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில் திடீரென சுமார் பகல் 12 மணியளவில் நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் கேட்டிற்கு வெளியே காத்திருந்த பக்தர்கள் உள்ளே இருந்த கோவில் அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்களை அழைத்து கேட்டபோது எங்களுக்கு வேறு வேலை இல்லையா என்று அலட்சியமாக பதில் சொல்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர் சொர்க்கவாசல் திறப்பு நாளான இன்று பெருமாளை தரிசிக்க வந்த தங்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியதாக வருத்தத்துடன் தெரிவித்தனர்.

மேலும் திருவிழா காலங்களில் இதுபோல் குளறுபடிகள் அதிக அளவில் நடப்பதாகவும் இது குறித்து மாவட்ட இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் நேரில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் கோவில் நடை யை சாத்தி அரசுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் அவப்பெயர் ஏற்படுத்தியவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்

இனிவரும் காலங்களில் வைகுண்ட ஏகாதசி காலங்களில் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க நடை சாற்றும் முறையை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

மதுரை பிரபல மாலில் திடீர் தீ விபத்து; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவசர வெளியேற்றம்

maduraii vijay mall - 2026
#image_title

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள விஷால் டி மாலில் தீ விபத்து,1000க்கும் மேற்பட்டோர் உடனடியாக வெளியேற்றம், மதுரையில் பரபரப்பு.

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள விஷால் டி மாலிலில், இரவு சுமார் 9.30 மணி அளவில் வணிக வளாகத்தின் நான்காவது மாடியில் உள்ள பானிபூரி கடையில் தீப்பிடித்து வளாகம் முழுவதும் பரவியது.

இது தொடர்பாக , தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேற்படி வணிகத்தில் இருந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட நபர்களை தீயணைப்புத்துறையின் மூலம் வெளியேற்றம் செய்யப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேற்படி நிகழ்வு தொடர்பாக உயிர் சேதம் ஏதும் இல்லாத நிலையில், உடனடியாக உள்ளே இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல்துறையினர் மூலம் வெளியேற்றம் செய்யப்பட்டனர்.

மதுரையின் நகரின் முக்கிய பகுதியில் உள்ள இந்த வணிக வளாகத்திற்கு ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு அப்போதைய ஐஏஎஸ் அதிகாரி சகாயம் செயல்பட அனுமதி கொடுக்காத நிலையில், அவர் மாற்றத்திற்கு பின்பாக திறக்கப்பட்ட இந்த வணிக வளாகம் தற்போது வரை செயல்பட்டு வருகிறது.

வணிக வளாகத்தின் அருகில் பெட்ரோல் பங்க், பள்ளிகள் மற்றும் காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி உள்ள நிலையில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாத இந்த வணிக வளாகத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த பகுதி முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. காவல்துறை துணை ஆணையர், ஆர்டிஓ , வடக்கு வட்டாட்சியர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் தற்போது சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

ஜாதி வாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு; ஆர்எஸ்எஸ்., கருத்து!

sunil ambekar - 2026
#image_title

ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்து, ஆர்.எஸ்.எஸ்., அனைத்து இந்திய செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் அமைப்பின் சார்பில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,

சமுதாய நல்லிணக்கம், சமூகநீதி, அனைத்து வகைகளிலும் பாகுபாடற்ற தன்மை, சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஹிந்து சமுதாயத்தை மேம்படுத்த,
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

பல்வேறு வரலாற்றுக் காரணங்களால் நமது சமுதாயத்தில் பல பிரிவினர் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கி உள்ளனர் என்பது உண்மையே.

அவர்களை மேம்படுத்த, அவர்களுக்கு அதிகாரமளிக்க, பின்தங்கிய சமுதாய மக்கள் வளர்ச்சி பெற, பல்வேறு அரசுகள் பலவிதமான நலத்திட்டங்களையும் வசதி வாய்ப்புகளையும் காலத்திற்கேற்ற வகையில் செய்து வருகின்றன. அவற்றை ஆர்எஸ்எஸ் மனப்பூர்வமாக ஆதரிக்கிறது.

அதேசமயம், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து தற்போது மீண்டும் விவாதங்கள் எழுந்து வருகின்றன.

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் பயன் சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக உயர்த்துவதாக இருக்க வேண்டும் என்பதும், இதனை மேற்கொள்ளும் போது எக்காரணம் கொண்டும் சமுதாய நல்லிணக்கமும் ஒற்றுமையும் குலையாமல் அனைத்துத் தரப்பினரும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதும் தான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்து.

திருப்பாவை பாசுரம் 6 – புள்ளும் சிலம்பினகாண்

thiruppavai 6 - 2026

திருப்பாவை – பாசுரம் 6

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்: ஐந்தாம் பாசுரத்தில் கண்ணனின் பெருமைகளைச் சொன்ன ஆண்டாள், இத்தகு பெருமை வாய்ந்தவனை நாம் காணச் செல்ல வேண்டாமோ என்று வினவி, அதிகாலைக் கண்ணுறக்கம் கொண்ட பெண் ஒருத்தியை இந்தப் பாசுரத்தில் துயில் எழுப்புகிறார்.

இரையைத் தேடுவதற்காக வெளியே வந்த பறவைகள் ஆரவாரம் செய்து நிற்கின்றன. அது உன் காதில் விழவில்லையோ? பறவைகளின் தலைவன் பெரியதிருவடி ஸ்ரீகருடாழ்வாரின் சுவாமியான பெருமாளின் சந்நிதியில் வெண் சங்கு ஒலிக்கின்றது. அனைவரையும் அழைக்கும் விதத்தில் அந்த வெண் சங்கு பேரொலி எழுப்புகின்றது. அதனை நீ கேட்கவில்லையோ?
எம்பெருமான் திருவடித் தொடர்பு குறித்த சுவை அறியாத பெண்ணே… விரைந்து எழு!

பூதனையின் முலையில் தடவிக் கிடந்த விஷத்தை, அவள் ஆவியுடன் சேர்த்து உண்டவன் கண்ணன். வஞ்சகம் கொண்டு வண்டியின் சகடச் சக்கரமாக வந்த அசுரன் மாயும்படி தன் திருவடி வித்தையைக் காட்டியவன் கண்ணன்.

திருப்பாற்கடலில் பாம்பாகிய திருஅனந்தாழ்வான் மீது கண்வளரும் வித்தகன் அவன். உலகத்தின் தோற்றத்துக்குக் காரணமானவனும் அவனே. அத்தகைய பெருமானை தமது உள்ளத்தில் இருத்தியபடி, யோகிகளும் முனிவர்களும் எப்போதும் தியானித்துக் கிடக்கிறார்கள். அவர்களின் உள்ளத்தே எம்பெருமானும் எழுந்தருள்கிறான்.

அவர்களும் மெள்ள எழுந்து, ஹரி ஹரி என்ற ஒலியாலே பேரரவம் எழுப்புகின்றனர். இந்த ஒலியானது உள்ளத்தில் புகுந்து குளிரச் செய்கின்றது. பெண்ணே… நீ இது கேட்டும் எழுந்திருக்காது இருக்கலாமோ? எழுந்திரு என்று ஒரு பெண்ணை துயில் எழுப்புகிறார் ஸ்ரீஆண்டாள்.

விளக்கவுரை: செங்கோட்டை ஸ்ரீராம்

அவையில் ஆளுநரை ‘போடா’ என்றவர்… இனி அவைக்குள்ளே நுழையவே முடியாது!

ponmudi - 2026
#image_title

தமிழக ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநர் முன்பே படித்துக் காட்டி ஆளுநரை அவையில் அவமானம் செய்தது திமுக. அப்போது தன் உதவியாளரிடம் நடந்தது குறித்த விளக்கம் கேட்டு உடனடியாக அவையை விட்டு ஆளுநர் வெளியேறிய போது, அவரை பார்த்து ஆபாசமாக கை அசைத்து போடா மயிறு என்று கத்திய பொன்முடி, இப்போது ஊழல் வழக்கில் தண்டனை பெற்று இனி சட்டசபைக்குள்ளேயே நுழைய முடியாது என்ற சூழ்நிலை!

இன்று சொத்து குவிப்பு வழக்கில் தமிழக அமைச்சர் பொன்முடிக்கு 3 வருட சிறை தண்டனை மற்றும் ரூபாய் ஐம்பது லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொன்முடி இதுவரை பேசிய பேச்சுக்கள் குறித்த பல்வேறு காணொளிகள் மற்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

பொன்முடி தற்போது தனது கர்மாவை அனுபவிக்கிறார் என்ற ரீதியில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அண்மைக்காலத்தில் அமைச்சர் பொன்முடி பேசிய தகாத வார்த்தைகள் சர்ச்சைக்கு உள்ளான பேச்சுக்கள் இவையும் இப்போது பேசு பொருளாகி இருக்கிறது.

“ஓசி பஸ்” முதல் “நீ வாய மூடு வரை”

சென்னை அம்பத்தூரில் கடந்த மாதம் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசும்போது, அரசு பஸ்களில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வது தொடர்பாக சில கருத்துக்களை பேசினார். `இப்போ பஸ்சில் எப்படி போறீங்க..இங்கிருந்து கோயம்பேடு போக வேண்டும் என்றாலும் இங்கிருந்து எங்கே போக வேண்டுமானாலும் எல்லாம் ஓசி பஸ்சில் போறீங்க’ என்று பெண்களை பார்த்து பேசி இருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை கட்டடத் திறப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேசினார். அப்போது, “பெண்களுக்கு திராவிட மாடல் முக்கியத்துவம் கொடுக்கிறது” என்று கூறிய பொன்முடி, ஒன்றியக் குழு தலைவரைப் பார்த்து, “ஏம்மா…நீ எஸ்.சி தானே…” என்று மேடையிலே சாதியை குறித்து பேசினார்.

அமைச்சர் பொன்முடி. திருக்கோவிலூரில் கடந்த வாரம் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். அதில் பேசிய பொன்முடி, “நாங்கள் ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகின்றன. நகரங்களிலும் கிராமங்களிலும் பல பணிகள் நடைபெற்றுவருகின்றன. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மூலமாக நகர்ப்புற வளர்ச்சிக்காக பல பணிகளை முதல்வர் ஸ்டாலின் செய்துகொண்டிருக்கிறார். அது சென்னையாக இருந்தாலும்… விழுப்புரமாக இருந்தாலும்… திருக்கோவிலூராக இருந்தாலும்…” என்று பொன்முடி பேசினார்.

பொன்முடி பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒரு பெண் நிறைய குறைகள் இருப்பதாகக் கூறினார். அதனால் எரிச்சலடைந்த அமைச்சர் பொன்முடி, “என்னது குறையா… கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு இரு” என்று கோபப்பட்டார். பிறகு, “உன் வூட்டுக்காரர் வந்திருக்காரா?” என்று பொன்முடி கேட்டார். அதற்கு, “அவர் போயிட்டார் (இறந்துவிட்டார்)” என்று அந்தப் பெண் பதில் சொல்ல… “போயிட்டாரா… பாவம்… நல்லவேளை…” என்று சிரித்தார் பொன்முடி.

உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய வீடியோ காட்சி, ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக வலம் வந்தது. அதில், ‘மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பெடுத்து அடித்த காலம் மாறி, மாணவர்கள் பிரம்பெடுத்து ஆசிரியர்களை அடிக்க வரும் காலமாகி விட்டது. எல்லாம் கால மாற்றம். இதையெல்லாம் அட்ஜஸ்ட் செய்து தான் கல்வி கற்பிக்க வேண்டும்’ என, தெரிவித்துள்ளார்.இதற்கு, பேராசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது சித்தலிங்கமடம் ஊராட்சி. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொகுதியில் இந்த ஊராட்சி அடங்கியிருக்கிறது. இந்த ஊராட்சியை இரண்டாகப் பிரித்து டி.எடப்பாளையம் பெயரில் தனி வருவாய் கிராமமாக உருவாக்க வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால் அதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். வருவாய் துறையின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணிப்பு செய்தனர். மேலும் கடையடைப்பு நடத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து வருவாய்த்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை. தகவல் அறிந்து போராட்டம் செய்யும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த பொன்முடி அப்பகுதிக்கு வந்தார்.

அப்போது அமைச்சர் பொன்முடியை முற்றுகையிட்ட மக்கள், அவரிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி அவர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சலசலப்புக்கு மத்தியில் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி, ஒருவரை ஒருமையில் திட்டினார். மேலும், கிராம மக்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். உங்களை யாரோ தூண்டிவிடுகிறார்கள் என்றார் பொன்முடி. அமைச்சரின் கடுமையான வார்த்தைகளைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ட்ரெண்ட் ஆன போடாமயிரே_பொன்முடி

இன்று காலை நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததும் சமூக தளமான எக்ஸ் தளத்தில் போடாமயிரே_பொன்முடி என்ற ஹாஷ்டேக் பிரபலமானது. இதில் பொன்முடிக்கு எதிரான பல்வேறு விமர்சன கருத்துக்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆளுநரை அவமரியாதையுடன் ஆபாசமான செய்கையுடன் பேசிய பொன்மொழிக்கு கர்மபலன் கொடுத்த தண்டனை, இனி அவரால் அவைக்கு வர முடியாத படி செய்திருக்கிறது என்று கருத்துக்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

ஊழல் வழக்கு – சட்டம் சொல்வது என்ன?

தீர்ப்பு விவரம்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அதிரடி தீர்ப்பு வழங்கினார். இதன்மூலம் உடனடியாக பொன்முடி, எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழக்கிறார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)-ன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும். மேலும், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ், தண்டனை விதிக்கப்படாமல் ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும்கூட தகுதி இழப்பு செய்யப்படுவார்கள். அதுபோல, சிறை தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டாலும், அதன்பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

தற்போது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் பொன்முடி குற்றவாளி என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதால், தனது எம்எல்ஏ, அமைச்சர் பதவியை உடனடியாக பொன்முடி இழந்து விட்டார்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு மக்கள் பிரதிநிதி குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே, தகுதியை இழக்கிறார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு தடை பெற்றால் மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக தொடரமுடியும்.

ஆலயங்களில் சனிப் பெயர்ச்சி வழிபாடு!

sanipeyarchi in natham - 2026
#image_title

நத்தத்தில் சனிப்பெயர்ச்சி விழா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கைலாசநாதர் சமேத செண்பகவல்லி கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. இதையட்டி அங்கு யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து சனிபகவானுக்கு பால் இளநீர் சந்தனம் ஜவ்வாது மஞ்சள் தேன் போன்ற 21 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மல்லிகை, ரோஜா, முல்லை, அரளி, செம்பருத்தி, செவ்வரளி, தாமரை, கனகாம்பரம், சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ,தாழம்பூ, வாடாமல்லி, ஜாதிமல்லி, மலர்கள் கொண்ட சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.

சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் மூலவர் கைலாசநாதர் செண்பகவள்ளி அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடந்தது.

இதை போலவே மாரியம்மன் கோவில் அருகில் லட்சுமி விநாயகர் கோவிலில் உள்ள நவகிரக சன்னதியில் சனிபகவானுக்கு பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில் சனி பெயர்ச்சி விழா!

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு பிரளய நாத சுவாமி விசாக நட்சத்திர ஆலயத்தில், சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.

சனி பகவான், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரதேசத்தை முன்னிட்டு, இத்திரு கோவில் அமைந்துள்ள சனீஸ் லிங்கம் மற்றும் சனி பகவானுக்கு சிறப்பு ஹோமங்களும் அதைத் தொடர்ந்து, சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றது.

இக்கோவிலானது, சனி, ராகு, குரு, ஆகிய கிரகங்கள் இணைந்த புனிதமான திருக்கோயில் ஆகும். திருக்கோயில் விசாக நட்சத்திரத்துக்குரிய ஆலயமாக விளங்குகிறது. மேலும், இக் கோயிலில், சனி பகவான் லிங்க வடிவில் வன்னி மரத்துக்கு அடியில் அருள்பாளித்துக் கொண்டிருக்கிறார். சனிப்பெயர்ச்சி முன்னிட்டு, இக்கோயிலில் சனி பிரீதி ஹோமங்களும், நவகிரகோமங்களும் வேத விற்பனர்களால் நடத்தப்பட்டது.

திருக்கோவில் செயல் அலுவலர் இளமதி முன்னிலையில், தொழில் அதிபர் எம்.வி. எம் . மணி ,பள்ளித் தாளாளரும், கவுன்சிலுருமான டாக்டர் மருது பாண்டியன் ஆகியோர்கள் ஏற்பாட்டில், சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ,பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து சிறப்பு ஹோமத்தில் பங்கேற்றனர்.

இதை அடுத்து, பக்தர்களுக்கு கோயில் சார்பில் அன்னதானங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, தொழில் அதிபர் எம்.வி.எம். மணி, கோயில் செயல் அலுவலர் இளமதி, கணக்கர் பூபதி மற்றும் ஆலயம் பணியாளர்கள் செய்திருந்தனர்.

முன்னதாக, இக் கோயிலில் காலபைரவர் சன்னதி அருகே அமைந்துள்ள சனீஸ்வர லிங்கத்துக்கு, சிறப்பு அபிஷேகங்களும், அர்ச்சனைகள் நடைபெற்றது.

ஸ்ரீ சனைஸ்வர பகவான் ஸ்துதி, அஷ்டோத்திரம்!

kuchanoor sanishwara bhagvan - 2026

சனிப் பெயர்ச்சி என்பதாக, சனி பகவான் வக்ரகதி மாறியிருக்கும் நிலையில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் படுகின்றன. நாம் வீட்டில் இருந்து சொல்வதற்காக இந்த ஸ்துதி, மற்றும் அஷ்டோத்திரம்.

ஸ்ரீ சனைச்வர பகவான் ஸ்துதி

நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவி புத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஶநீஶ்வரம்

ஸ்ரீ சனைஸ்வர பகவான் அஷ்டோத்திரம்.

  1. ஓம் ஶனைஶ்சராய நமஹ
  2. ஓம் ஶாந்தாய நமஹ
  3. ஓம் ஸர்வா-பீஷ்ட-ப்ரதாயினே நமஹ
  4. ஓம் ஶரண்யாய நமஹ
  5. ஓம் வரேண்யாய நமஹ
  6. ஓம் ஸர்வேஶாய நமஹ
  7. ஓம் ஸௌம்யாய நமஹ
  8. ஓம் ஸுர வந்த்யாய நமஹ
  9. ஓம் ஸுரலோக விஹாரிணே நமஹ
  10. ஓம் ஸுகாஸனோ பவிஷ்டாய நமஹ
  11. ஓம் ஸுந்தராய நமஹ
  12. ஓம் கனாய நமஹ
  13. ஓம் கன ரூபாய நமஹ
  14. ஓம் கனா-பரண தாரிணே நமஹ
  15. ஓம் கன-ஸார விலேபாய நமஹ
  16. ஓம் கத்யோதாய நமஹ
  17. ஓம் மந்தாய நமஹ
  18. ஓம் மந்த-சேஷ்டாய நமஹ
  19. ஓம் மஹநீய குணாத்மனே நமஹ
  20. ஓம் மர்த்ய பாவன பதாய நமஹ
  21. ஓம் மஹேஷாய நமஹ
  22. ஓம் சாயா புத்ராய நமஹ
  23. ஓம் ஶர்வாய நமஹ
  24. ஓம் ஶத தூணீர தாரிணே நமஹ
  25. ஓம் சர-ஸ்திர ஸ்வபாவாய நமஹ
  26. ஓம் அ-சஞ்சலாய நமஹ
  27. ஓம் நீல வர்ணாய நமஹ
  28. ஓம் நித்யாய நமஹ
  29. ஓம் நீலாஞ்ஜன நிபாய நமஹ
  30. ஓம் நீலாம்பர விபூஶணாய நமஹ
  31. ஓம் நிஶ்சலாய நமஹ
  32. ஓம் வேத்யாய நமஹ
  33. ஓம் விதி ரூபாய நமஹ
  34. ஓம் விரோதா தார பூமயே நமஹ
  35. ஓம் பேதா ஸ்பத ஸ்வபாவாய நமஹ
  36. ஓம் வஜ்ர தேஹாய நமஹ
  37. ஓம் வைராக்ய தாய நமஹ
  38. ஓம் வீராய நமஹ
  39. ஓம் வீத ரோக பயாய நமஹ
  40. ஓம் விபத்-பரம்பரேஷாய நமஹ
  41. ஓம் விஶ்வ வந்த்யாய நமஹ
  42. ஓம் க்றித்ன வாஹாய நமஹ
  43. ஓம் கூடாய நமஹ
  44. ஓம் கூர்மாங்காய நமஹ
  45. ஓம் கு-ரூபிணே நமஹ
  46. ஓம் குத்ஸிதாய நமஹ
  47. ஓம் குணாட்யாய நமஹ
  48. ஓம் கோசராய நமஹ
  49. ஓம் அவித்யா மூல நாஶாய நமஹ
  50. ஓம் வித்யா வித்யா ஸ்வரூபிணே நமஹ
  51. ஓம் ஆயுஷ்ய காரணாய நமஹ
  52. ஓம் ஆபது-த்தர்த்றே நமஹ
  53. ஓம் விஷ்ணு பக்தாய நமஹ
  54. ஓம் வஷினே நமஹ
  55. ஓம் விவிதாகம வேதிநே நமஹ
  56. ஓம் விதி ஸ்துத்யாய நமஹ
  57. ஓம் வந்த்யாய நமஹ
  58. ஓம் விரூபாக்ஷாய நமஹ
  59. ஓம் வரிஷ்டாய நமஹ
  60. ஓம் கரிஷ்டாய நமஹ
  61. ஓம் வஜ்ராங்குஷ தராய நமஹ
  62. ஓம் வரதாபய ஹஸ்தாய நமஹ
  63. ஓம் வாமனாய நமஹ
  64. ஓம் ஜ்யேஷ்ட-பத்னீ ஸமேதாய நமஹ
  65. ஓம் ஶ்ரேஷ்டாய நமஹ
  66. ஓம் மிதபாஷிணே நமஹ
  67. ஓம் கஷ்டௌக நாஷ-கர்த்றே நமஹ
  68. ஓம் புஷ்டிதாய நமஹ
  69. ஓம் ஸ்துத்யாய நமஹ
  70. ஓம் ஸ்தோத்ர கம்யாய நமஹ
  71. ஓம் பக்தி வஶ்யாய நமஹ
  72. ஓம் பானவே நமஹ
  73. ஓம் பானு புத்ராய நமஹ
  74. ஓம் பவ்யாய நமஹ
  75. ஓம் பாவனாய நமஹ
  76. ஓம் தநுர்மண்டல சம்ஸ்தாய நமஹ
  77. ஓம் தநதாய நமஹ
  78. ஓம் தநுஷ்மதே நமஹ
  79. ஓம் தநுப்ரகாஷ தேஹாய நமஹ
  80. ஓம் தாமஸாய நமஹ
  81. ஓம் அஶேஷஜன வந்த்யாய நமஹ
  82. ஓம் விஶேஷ பல-தாயினே நமஹ
  83. ஓம் வஶீக்ருத ஜனேஷாய நமஹ
  84. ஓம் பஶூநாம் பதயே நமஹ
  85. ஓம் கேசராய நமஹ
  86. ஓம் ககேஷாய நமஹ
  87. ஓம் கன நீலாம்பராய நமஹ
  88. ஓம் காடிந்ய மானஸாய நமஹ
  89. ஓம் ஆர்யகண ஸ்துத்யாய நமஹ
  90. ஓம் நீலச்சத்ராய நமஹ
  91. ஓம் நித்யாய நமஹ
  92. ஓம் நிர்குணாய நமஹ
  93. ஓம் குணாத்மனே நமஹ
  94. ஓம் நிராமயாய நமஹ
  95. ஓம் நின்தியாய நமஹ
  96. ஓம் வந்தநீயாய நமஹ
  97. ஓம் தீராய நமஹ
  98. ஓம் திவ்ய தேஹாய நமஹ
  99. ஓம் தீநார்தி ஹரணாய நமஹ
  100. ஓம் தைந்ய நாஶகராய நமஹ
  101. ஓம் ஆர்ய ஜன கண்யாய நமஹ
  102. ஓம் க்ரூராய நமஹ
  103. ஓம் க்ரூர சேஷ்டாய நமஹ
  104. ஓம் காம-க்ரோத கராய நமஹ
  105. ஓம் கலத்ர-புத்ர ஶத்ருத்வ காரணாய நமஹ
  106. ஓம் பரிபோஷித பக்தாய நமஹ
  107. ஓம் பர-பீதி ஹராய நமஹ
  108. ஓம் பக்த ஸங்க மனோபீஷ்ட பலதாய நமஹ

பொன்முடி, அவர் மனைவிக்கு 3 ஆண்டு சிறை, ரூ.50 லட்சம் அபராதம்!

ponmudi - 2026
#image_title

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சியை குற்றவாளிகள் என உறுதி செய்துள்ளதால், அவர்களுக்கான தண்டனை என்ன என்பதை, இன்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று தண்டனை குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்ய வசதியாக ஒரு மாதத்துக்கு தண்டனைக்காலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 – 11ஆம் ஆண்டு திமுக., ஆட்சியின் போது, உயர் கல்வி மற்றும் கனிமவள அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். 2011ல் அதிமுக., ஆட்சி வந்ததும், பொன்முடிக்கு எதிராக, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை 2011 செப்டம்பரில் வழக்கு தொடர்ந்தது. பொன்முடி மனைவி விசாலாட்சியும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கில் கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்து 2016 ஏப்ரலில் தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து 2017ல் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்தது. எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். அதில், ‘அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. தண்டனை குறித்து பதில் அளிக்க, இருவரும் 21ஆம் தேதி காலை 10:30க்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’ என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று காலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் ஆஜராகினர். அப்போது, நீதிபதி அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து தெரிவித்தார்.

அதில், மூன்று வருட சிறை தண்டனையும் ரூபாய் 50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ஒரு மாத காலத்திற்கு தண்டனை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது அவர்கள் மேல்முறையீடு செய்ய வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.