டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் டிச.28 இன்று காலை காலமானார். அவருக்கு வயது 71. முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் மூச்சு விட சிரமப் பட்டதால் அதற்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தேமுதிக தரப்பில் இருந்து அறிக்கை வெளியானது.
அண்மைக்காலமாக பல்வேறு உடல் நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது குறித்து தேமுதிக. தரப்பில் உறுதி செய்து அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனையில் அவருக்கு மூச்சு விடுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளித்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மியாட் மருத்துவமனை வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதன் பின்னர் அவரது உடல் ஆம்புலன்சில் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
விஜயகாந்த் மரணச் செய்தி கேட்டு, சென்னையில் அவரது கட்சித் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். விஜயகாந்த் வீட்டின் முன்பு தேமுதிக., தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுது அவருக்கு அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் இல்லத்தின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
விளக்கம்: பதினொன்றாவது பாசுரத்தில் சுற்றத்தாருடன் தோழியின் திருமாளிகை முற்றத்தே புகுந்து கண்ணனின் பெருமைகளைப் பாடியும் எழாது இருக்கின்றாயே என்று வினவிய ஆண்டாள், இந்தப் பாசுரத்தில், மனத்துக்கினியானான ஸ்ரீராமன் சீற்றத்தைச் சொல்லிப் பாடுகிறோம் தோழியே துயில் எழு என்கிறார்.
இளங்கன்றுகளை உடைய எருமைகள் தம் மடியில் பால்கறப்பவர் இல்லாததால் கனத்து கதறிக் கொண்டிருக்கும். அப்போது கன்றுகளின் நினைவு வர, அவற்றின் மீது இரக்கம் கொண்டு, கன்றுகளுக்குப் பாலூட்டுவதாக எண்ணி, அந்த நினைவினால் முலை வழியே இடைவிடாமல் அவை பால் சொரியும்.
அவ்வாறு பெருகிய பால், வீடு முழுவதும் நிறைந்து ஈரமாகி, சேறாகிவிடும். இத்தகைய வளமை நிறைந்த செல்வத்தை உடையவனின் தங்கையே. சீதைப் பிராட்டியை தன்னிடம் இருந்து பிரித்தானே என்ற சீற்றத்தால், தென் இலங்கை அரசன் ராவணனைக் கொன்று ஒழித்தான் அந்த ராமபிரான். எங்கள் மனத்துக்கு இனியவனான அந்த ராமபிரானை நாங்கள் பாடியபடி இருக்கின்றோம்.
மார்கழிப் பனியானது எங்கள் தலையில் விழும்படி உன் மாளிகையின் வாசல்புறத்தே வந்து நின்றபடி நாங்கள் ராமனைப் பாடுகின்றோம். ஆனால் நீயோ வாய்திறந்தும் பேசாது இருக்கின்றாய்.
எங்கள் ஆற்றாமையை அறிந்து கொண்ட பிறகாவது நீ எழுந்து வரலாகாதா? இது என்ன இப்படி ஓயாத உறக்கம்? இந்த ஊரில் உள்ள வீட்டுக்காரர்கள் அனைவருக்குமே, நாங்கள் உன் மாளிகை வாசலில் திரண்டு வந்து நிற்பது தெரிந்துள்ளது. அப்படி இருக்க நீ இன்னும் இவ்வாறு பேருறக்கம் கொள்ளலாமோ என்று வினவுகிறார் ஸ்ரீஆண்டாள்.
விளக்கம்: பத்தாவது பாசுரத்தில், ராமபிரானால் தோற்ற கும்பகர்ணன் தன் உறக்கத்தை உனக்குக் கொடுத்துவிட்டுச் சென்றானோ என்று, எவ்வளவு எழுப்பியும் துயில் கலையாத தோழியைப் பார்த்துக் கேட்ட ஆண்டாள், பதினோராவது பாசுரத்தில் கண்ணன் திருநாமங்களை உரக்கப் பாடுகிறோம்; அது காதில் கேட்டும் சலிக்காமல் உறக்கத்தில் கிடக்கிறாயே? என்று வினவுகிறார்.
கன்றுகளோடு கூடிய பசுக்களின் கணங்களைக் கொண்டிருப்பவர்கள் இந்த கோபாலர்கள். அவர்கள் பசுக்களின் பாலைக் கறப்பவர்கள், எதிரிகளின் செருக்கும் வலிமையும் அழியும்படி படையெடுத்துச் சென்று போர் புரிபவர்கள்.
குற்றம் எதுவும் இல்லாத நற்குடியில் பிறந்தவர்கள். அத்தகைய கோபாலர்களின் குடியில் பிறந்த பொன்கொடி போன்றவளே.! புற்றில் இருந்து எழுந்தாடும் பாம்பின் படம் போன்ற அல்குலையும், காட்டில் தன் இச்சைப்படி திரியும் மயிலைப் போன்ற சாயலும் கொண்டவளே. செல்வ வளம் மிக்க பெண் பிள்ளையே. நீ எழுந்து வருவாயாக. நம் சுற்றத்தினைச் சேர்ந்தவர்களும் தோழிகளும் ஆகிய அனைவரும் திரண்டு வந்து நிற்கின்றோம்.
உனது திருமாளிகையின் முற்றத்தே புகுந்து காத்திருக்கின்றோம். கார்மேக வண்ணன் கண்ணனின் திருநாமங்களை உரக்கப் பாடியும், அது உன்காதில் விழுந்தபோதும் அதுகேட்டும் கேட்காததுபோல் இருக்கிறாயே. இவ்வாறு நாங்கள் பாடுவதைக் கேட்டும், நீ சலிக்காமலும் ஒன்றும் பேசாமலும் உறங்கியபடி கிடப்பதால் என்ன பலன் ஏற்படப்போகிறது என்பது எங்களுக்குத் தெரியவில்லை!
என்று கூறி செல்வ வளம் மிகு நங்கையைத் துயில் எழுப்புகிறார் ஸ்ரீஆண்டாள்.
ஆருத்திர தரிசனம் என இந்துக்கள் இந்நாளை அனுசரிக்கின்றார்கள், சைவர்களுக்கு திருவெம்பாவை நோன்பு இத்தோடு முடியும் என்பார்கள்
ஆருத்திரா என்பது வேறு ஒன்றுமல்ல , அந்த வடமொழி வார்த்தை தமிழில் திருவாதிரை என அழைக்கபடும், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாள்
அக்காலத்தில் வரம்பெற்ற முனிவர்கள் கூடி நாம் யாகம் நடத்தி சிவனாகிவிடுவோம் என தருகாவனத்தில் யாகம் நடத்தினார்களாம், கர்மம் என்பதே கடவுள். கடவுள் என ஒருவர் இல்லவே இல்லை, ஒழுங்காக கர்மம் ஆற்றும் ஒவ்வொருவனும் கடவுள் எனும் ஆன்மீக பகுத்தறிவில் அகங்காரத்தின் உச்சியில் யாகம் செய்திருக்கின்றார்கள்
இன்னும் தெளிவாக சொன்னால் வேதங்களின் யாகத்தை சரியாக செய்தால் தாங்களும் பெரும் சக்தி பெற்று கடவுளாகிவிடலாம் என அகங்காரத்தில் வேள்வியினை தொடங்கினார்கள்
யாக வேள்வியின் அவிர்பாகத்திலே இறைவன் வாழ்வதாகவும், அந்நிலையினை தாங்களும் எட்டலாம் என அவர்களாக அறியாமையில் கருதி பெர்ம் வேள்வி செய்தார்கள்
இந்த யாகத்தை அறிந்த பரம்பொருள் வழக்கமான பிச்சைகார கோலத்துடன் வந்து நிற்க, யாகத்தில் பிச்சைகாரர்களுக்கு இடமில்லை என அவர்கள் வந்த பரமசிவனை விரட்டியும் விட்டார்கள்
அந்த ஆண்டிகோலத்து சிவன் தன் திருவிளையாடலை தொடங்கினார்
அவரோ செல்லாமல் அங்கே சுற்றி சுற்றி வந்தார், ஒரு கட்டத்தில் அவரை வலுகட்டாயமாக விரட்ட ரிஷிகள் முயன்றபொழுதும் முடியவில்லை
ஆத்திரமடைந்த முனிகள் மதயானை, உடுக்கை, மான் , தீ என எல்லாவற்றையும் ஏவி ஒரு அரக்கனையும் ஏவிவிட்டனர்
சிவனோ யானையினை கொன்றார், உடுக்கையினை கையில் வாங்கினார், மான் தோலை ஏற்றார் அந்த நெருப்பையும் ஏற்றார், அந்த அரக்கனையும் கொன்று அவன் மேல் நின்று ஆடினார்
அதன்பின் உண்மை உணர்ந்த முனிகள் முக்கண்ணணே சரணம் என தங்கள் தோல்வியினை ஒப்புகொண்டு அகங்கார மனதோடு தெய்வ நிலை அடைய முடியாது என்பதை உணர்ந்து திருந்தினர்
இதுதான் ஆருத்திர தரிசனம் என்பது, அச்சம்பவம் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் நடந்தது என்கின்றது புராணம் அதை நினைவு கூறி வழிபடுகின்றார்கள்
இச்சம்பவம் கூறும் தத்துவம் என்ன?
ஆம் அன்றல்ல இன்றுவரை எல்லா மனிதனுக்கும் கடவுளாக உள்ளூர ஆசை இருக்கின்றது, தான் சார்ந்து நிற்கும் தொழிலிலும் இன்னும் பல இடங்களிலும் தானே கடவுளாக இருக்க வேண்டும் எனும் மமதையும் ஆணவமும் வருகின்றது
சில வெற்றிகள் அந்த ஆசை நெருப்பினை, ஆசை யாக நெருப்பில் நெய்யாக பெய்து ஆசை நெருப்பை பெரிதாக வளர்க்கின்றன
வெற்றிகள் கூட கூட ஆசை கொழுந்துவிட்டு எரிந்து தானே கடவுள் எனும் நிலைக்கு செல்கின்றது, அகங்காரம் அப்படி ஆசையினை பெரும் நெருப்பாக எரிய வைக்கின்றது
சிவனின் ஆருத்திரா தரிசனத்தில் அவர் மேல் ஏவபடும் விஷயங்களை பாருங்கள் மத யானை, இது பெரும் ஆசைவெறி கொண்டதும் மூர்க்கமானதுமான மனதை குறிக்கின்றது
மான் என்பது பார்வைக்கு அழகானது கண்களால் கோரபடும் ஆசைகளை குறிக்கின்றது
நெருப்பு உணர்ச்சிக்கும், உடுக்கை என்பது செவிகளால் பெறும் இன்பத்தினையும் குறிக்கின்றது
அரக்கன் என்பவன் மனதின் அகங்காரத்தை குறிக்கின்றது
ஆம் இந்த மானிடன் மனதுக்கும் உணர்ச்சிக்கும் அடிமையாக கூடியவன். அதனால் மாயை அதிகரிக்கும் அந்த ஆசையே சகல பாவங்களுக்கும் உலக துன்பங்களுக்கும் அடிப்படை
புலன்களை அடக்கு மனதினை ஒடுக்கு இறைவன் தெரிவான்
எல்லா புலன்களையும் அடக்கி, ஆசையினையும் அடக்கி இறைவனிடம் சரண்டைதலே இறைவனை அடையும் வழி, மாறாக ஆசையினை யாகம் போல் வளர்த்தால் அது வளருமே தவிர ஞானம் கிடைக்காது
சிவன் எல்லாவற்றையும் அடக்கி வைத்து அகங்கார அரக்கனை ஒடுக்கி அதன் மேல் ஆடியது போல, சகல புலன்களையும் அடக்கினால் மனிதனும் தெய்வ நிலைக்கு உயர்த்தபடுவான் என்பதே இந்நாளின் தத்துவம்
மனிதன் இறைநிலைக்கு செல்ல ஆசை ஒழித்து புலன்களை அடக்கி இறைவனை உணர்ந்து, தன் ஆத்மாவினை இறைவனோடு முழுக்க கலந்து அந்நிலையினை எட்டலாம் என்பதே இந்நாளின் தத்துவம்
சிவனை சரணடைந்தால் எல்லா அகங்கார ஆசை மாயைகளும் நீங்கி அவரோடு கலந்து இறைநிலை எய்தலாம் என்பதுதான் இந்நாளின் போதனை
சிவனின் இந்த கோலம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா விஷேஷம். இன்று அங்கு சிறப்பான நாள், தேரோட்டமும் விழாவுமாக கொண்டாடுவார்கள்
இந்துக்கள் இன்று திருவாதிரை களி என ஒன்றை சிவனுக்க்கு படைப்பார்கள், அது சேத்தன் எனும் சிவபக்தனின் உன்னத பக்தியினை நினைவு கூறும் அடையாளம்
சேத்தனார் அல்லது சேர்ந்தனார் என்றொரு பக்தன் முன்பு இருந்தான், நாயன்மாரின் சாயலின் அவனின் பக்தி இருந்தது
அவரின் இயற்பெயர் அறிவாரில்லை, சிவனை முழுக்க சேர்ந்தவர் எனும் வகையிலும், அடியார்களோடு சேர்ந்து இருப்பவர் என்பதாலும் அவர் சேர்ந்தனார் என்றானார்
அவர் பூம்புகார் பக்கம் ஒரு வியாபாரியின் தலமை கணக்காளராக இருந்தார், அந்த பணபெட்டி செல்வத்தையெல்லாம் அடியார்களுக்கு இறைக்கின்றார் எனும் குற்றசாட்டில் விரட்டபட்டார்
குடும்பத்தோடு சிதம்பரம் பக்கம் வந்து விறகுவெட்டும் தொழில் செய்தார், அந்த நிலையிலும் அடியார்களுக்கு அமுது ஊட்டிவிட்டுத்தான் தான் உண்ணும் பெரும் கடமை கொண்டிருந்தார்
இவரின் பக்தியினை சோதித்து உலகறிய செய்ய சித்தம் கொண்ட சிவன், ஒரு இரவில் ஏழை அடியாராக பனிகொடும் இரவில் இவர் வீட்டின் கதவை தட்டினார்
அடியார் வந்ததும் என்ன செய்வது என அறியாத சேர்ந்தனாரும் மனைவியும் இரவில் உணவு பெரிதாக சமைக்க வழியில்லாது இருப்பதை கொண்டு அவர் பசிபோக்க துடித்தார்கள்
வாசலில் கோலமிட வைத்திருந்த பச்சரிசி மாவில் வெல்லத்தை கலந்து களி செய்து , வீட்டின் பின்பக்கம் இருந்த செடிகளின் காய்கறிகள் ஏழு வகை கலந்து கூட்டாக செய்தும் படைத்தார்கள்
பின் அடியாரை வீட்டில் தங்க வைத்துவிட்டு குடிசை வாசலில் குடும்பத்தார் கொட்டும் குளிரில் படுத்து கொண்டார்கள், அவர்கள் வசதி அவ்வளவுதான் இருந்தது
அதே நேரம் சோழமன்னனுக்கு ஒரு கனவு வந்தது, கனவில் அவன் நைவேத்தியம் படைக்க “மன்னா நான் என் அடியான் வீட்டில் உண்ட களியால் வயிறு நிரம்பிற்று” என்ற குரல் கேட்டு கனவும் கலைந்தது
மன்னன் சிந்தித்தபடியே எழுந்து யோசிக்க , சிதம்பரம் கோவிலில் அந்த அதிசயம் நடந்தது
காலை ஆலய நடை திறந்த அர்ச்சகர்கள் சிவன் மேனியெங்கும் களியும் காய்கறியும் சிதறிகிடக்க பரபரத்தார்கள், மன்னனுக்கும் செய்தி சென்றது
மன்னன் கனவின் பொருள் அறிந்தான், சபை அறிந்தது , அர்ச்சகர் அறிந்தார்கள் ஆனால் எந்த பக்தன் சிவனுக்கு களிபடைத்தான் என்பது யாருக்கும் தெரியாது
விஷயம் பரப்பானது அதே நேரம் காலை குடிசைக்குள் நுழைந்தால் அடியார் தூக்கம் கெட்டுவிடும் அவராக திறக்கட்டும் என வெளியே காத்திருந்த சேர்ந்தனாருக்கு நேரம் செல்ல செல்ல அச்சம் அதிகரித்தது, சிவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கதவை தட்டினால் சத்தமில்லை பின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தால் அடியாரை காணவில்லை
அவன் அவரை அங்குமிங்கும் தேடியபொழுதுதான் ஊரே பரபரப்பாகி சிதம்பரம் கோவில் கருவறையில் களிசிந்தி கிடந்த செய்தி வந்தது
சேர்ந்தனுக்கு அச்சம் கூடிற்று, தன் வீட்டில் உண்ட அடியார் ஏதோ கோவிலில் படைத்திருப்பாரோ என சிந்தித்தபடியே தன் வீட்டுக்கு அடியார் வந்த கதையினை சொல்லாமல் மறைத்துவிட்டான்
ஏதும் சொன்னால் தன் மேல் பழி வரலாம் என அஞ்சினான், ஏழை சொல்லை யார் நம்புவர்கள் எனும் தயக்கமும் அவனிடம் இருந்தது
மறுநாள் மார்கழி திருவாதிரையாதலால் தேரோட்டம் நடந்தது, கூட்டத்தில் ஒரு எளியவனாக தள்ளி வந்து கொண்டிருந்தார் சேத்தனார்
அக்கால தேரோட்டத்தில் மன்னன் வடம் தொட்டு கொடுப்பதோடு முன்னால் கம்பீரமாக நடந்துவருவார், பின் மக்களும் அடியாரும் தேரை தள்ளிவருவார்கள் இது மரபு
சேந்தனார் குடிசை இருந்த பக்கம் வந்தபொழுது தேர் நின்றுவிட்டது, மக்கள் எல்லோரும் இழுத்தும் பின் காளை குதிரை இழுத்தும் தேர் அசையவில்லை
பின் யானைகளை கட்டி இழுத்தும் ஒரு அங்குலமும் அது அசையவில்லை
ஏதோ குற்றம் நடந்துவிட்டது என மன்னனும் அர்ச்சகர்களும் தவித்த நேரம் ஒரு குரல் அசரீரியாக கேட்டது “சேர்ந்தா தேர் நகர பல்லாண்டு பாடு”
சேர்ந்தா எனும் பெயரை கேட்டதும் எல்லோரும் யார் சேர்ந்தன் என தேடினார்கள், மூலையில் அஞ்சி ஒடுங்கி வேட்டி மட்டும் அணிந்து கைகளால் மேல் துண்டை பிடித்து குனிந்தபடி “நானே சேந்தன்” என ஒடுங்கி நின்றிருந்தார் சேர்ந்தன்
அவனை அழைத்து தேர்முன் நிறுத்தினார்கள், மன்னன் அவரை பாட சொன்னான்
விறகுவெட்டியான தான் பாடுவதா என அஞ்சி “சிவனே, எனக்கென்ன தெரியும்” என மருவி நின்றார் அந்த சேர்ந்தன், ஆனாலும் இறை உத்தரவு என்பதாலும் அரசனே அங்கு நின்றதாலும் கண்களை அவர் மூடி நிமிர்ந்தார்
திருபதிகம் பாட தொடங்கினார், பாடல் மழையாய் கொட்டிற்று
“மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே” என தொடங்கி
“எந்தை எந்தாய் சுற்றம் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று சிந்தை செய்யும் சிவன்சீர் அடியார் அடிநாய் செப்புறை அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந் தாண்டுகொண் டாருயிர்மேல் பந்தம் பிரியப் பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே” என பாடி முடித்தார் (இது இன்றும் சைவ திருமுறையில் 9ம் பாகமாக உண்டு)
அவர் பாடவும் தேர் யாரும் தொடாமல் தானாக நகர்ந்து நிலைக்கு வந்தது, கூட்டமே அவர் பாதம் பணிந்தது, அப்பொழுதுதான் அடியார்க்கு களி கொடுத்த கதையும் சொன்னார் சேர்ந்தனார்
விறகுவெட்டி அடியார்க்கு, மரம் வெட்டி தன் அடியார் பசிபோக்கிய அடியார்க்கு சிவன் மரத்தாலான தேரினால் அங்கீகாரம் கொடுத்த அந்நிகழ்வின் பெரும் நினைவு கூறலே இந்த திருவாதரை களி. அதிலிருந்து இந்நாளில் களி செய்யும் வழக்கம் வந்தது
இன்னொரு வகையில் கார்த்திகை பவுர்னமியில் விரதம் தொடங்கி திருவெம்பாவை படிக்கும் இந்துக்கள் இந்நாளில் விரதம் முடிப்பார்கள், அந்நாளில் விரதம் முடிக்கும் வகையாக இக்களி செய்யும் ஏற்பாடும் உண்டு
தாருகாவனத்து ரிஷிகள் செருக்கடக்கிய நாளும் இதுதான், சிவனை அடைய பெரும் வேதமோ யாகமோ வேண்டாம், பெரும் பொருளோ அறிவோ வேண்டாம், உளமார்ந்த பக்தனின் களிக்கு அவன் கட்டுபடுவான் என காட்டிய நாள் இது
அகங்காரம் கொண்டு யாகதீயில் இடபடும் உயர்ந்த அவிர்பாகத்துக்கு வருபவனல்ல சிவன், உளமார்ந்த பக்தியுடன் கொடுக்கும் அரைபிடி களிக்கு இறங்கிவந்து அணைத்து கொள்வான் சிவன், உளமார்ந்த உன்னத பக்திக்கு, முழு சரணாகதியான பக்திக்கு எதுவும் ஈடு இல்லை என்பதை சொல்லும் நாள் இது
இந்துக்களுக்கு இந்நாள் சிறப்பானது, நடராஜ பெருமான் இருக்குமிடமெல்லாம் வழிபாடு உண்டு, அந்த ஆடல் வல்லவன் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும்
இந்துக்களின் ஒவ்வொரு பண்டிகையும் ஞானமிக்கது, அது ஆன்மீகத்துடன் சமூக நல்லிணக்கத்தை, ஒருமைபாட்டையும் தேச பலத்தையும் வளர்ப்பது
அவ்வகையில் தனி தனியாக கொண்டாடுவதை விட இந்துக்கள் கூடி களிசெய்து சிவனுக்கு படைத்து பகிர்வது நன்று. அப்படியே கூடி அந்த பல்லாண்டு பதிகம் பாடி போற்றுவதும் நன்று.
திருவாதிரை களி இருக்குமிடமெல்லாம், அந்த தேர் நகருமிடமெல்லாம் சேர்ந்தனார் மூலம் அருளபட்ட அந்த திருபதிகம் பாடபடட்டும். அப்படி கோவிலும் தேரும் இல்லைஎன்றால் வீட்டிலே விளக்கேற்றி களி செய்து அந்த பரம்பொருளுக்கு படைத்து பல்லாண்டு பாடுங்கள்
எல்லா நலமும் உங்களுக்கும் தேசத்துக்கும் இந்த பவுர்ணமி போல பெருகும், பெருகி நிற்கும், நிலைக்கும் அது நிச்சயம்
திமுக., பாணியில், எங்களுக்கும் தெரியும், ஆனால் இதைச் செய்ய மாட்டோம் என்று அண்ணாமலை சொல்ல, அப்படின்னா இதைச் செய்து காட்டுவோம் என்று பாஜக., தொண்டர்கள் செயல்பட, இணையத்தில் #கோ_பேக்_ஸ்டாலின் வைரலானது.
இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி, இந்தியாவின் ஒரு பகுதியான தமிழகத்துக்கு மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைக்க வரும் போது, திமுக.,வினர் கோ_பேக்_மோடி என்ற ஹேஷ் டேக் போட்டு, வைரலாக்கினர். மோடி மீதான துர்பிரசாரத்தைக் கட்டமைத்து, மோடி தமிழகத்தின் விரோதி என்ற வகையில் மக்களிடம் பிரசாரம் செய்ய வைத்தனர். இதனை ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் திருமாவளவன் தெளிவாக, வெளிப்படையாக சொன்னார். மோடி வெறுப்பு என்பது நாமாகக் கட்டமைத்தது என்றார் திருமாவளவன்.
இப்போது காலம் மாறியிருக்கிறது. தமிழகத்தின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் எந்தப் பகுதிக்குப் போனாலும், அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackStalin கோபேக்ஸ்டாலின் என எங்களாலும் சொல்ல முடியும், ஆனால் சொல்ல மாட்டோம் என்று கூறினார் பாஜக., தமிழகத் தலைவர் அண்னாமலை. ஆனால் அவர் சொன்ன ஒரு மணிநேரத்துக்குள், தொண்டர்களோ எக்ஸ் தளத்தில் #கோ_பேக்_ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கை தெறிக்க விட்டனர்.
திருச்சியில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசிய போது, திருச்சி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 2வது முனையத்தை ஜனவரி 2ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க வாய்ப்புள்ளது. இண்டியா கூட்டணி கூட்டத்தில், நிதீஷ் குமார் ஹிந்தியில் பேசியதை, தமிழ் மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புக்கு அனுமதிக்கவில்லை. மற்ற மாநிலங்களின் வளர்ச்சியையும், தமிழகத்தின் வளர்ச்சியையும் தி.மு.க., அரசு கண்ணாடியில் பார்க்க வேண்டும். 50 ஆண்டுகள் 2வது இடத்தில் இருந்த வளர்ச்சி, 3வது இடத்துக்கு சென்று விட்டது.
ஊழல் காரணமாக, பல துறைகளில் சிறந்து விளங்கும் தமிழகத்தின் வளர்ச்சி எவ்வளவு பின்னோக்கி செல்கிறது என்பதை, தி.மு.க., அரசு பார்க்க வேண்டும். மழை வெள்ள பாதிப்புக்கு, கண்டிப்பாக மத்திய அரசு உறுதியாக நிவாரணம் வழங்கி விடும்.
அதை மக்களுக்கு கொடுத்து விட்டோம், என்று தி.மு.க., சந்தோஷப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஏற்கனவே, வளர்ச்சி பின்தங்கியிருந்த நிலையில், மழை வெள்ளம் காரணமாக, 4 மாவட்டங்களில் உற்பத்தி திறன் மேலும் பின் தங்கிப் போகிறது. தூத்துக்குடியின் உற்பத்தி திறனை மீண்டும் கொண்டு வர இன்னும் 2 ஆண்டுகளாகும்.
ஒரு பக்கம் மழை வெள்ள பாதிப்பு, இன்னொரு புறம் உற்பத்தி திறனை இழந்து வருவதால், தமிழகத்தின் வளர்ச்சியை மேலும், 6 மாதங்களுக்கு பின்னோக்கி கொண்டு செல்கிறது.
தமிழக அரசு, மத்திய அரசுக்கு தெரியப்படுத்துவதற்கு முன்னதாகவே, மழை வெள்ள பாதிப்பு பற்றி தெரிந்தவுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளார். தமிழகத்தில், வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிடவும் வருகிறார். ஆனால், மத்திய அரசு மீது வீண் பழி சுமத்தி, தி.மு.க.,வினர் வம்பு சண்டை செய்கின்றனர்.
மத்திய அரசை குறை சொல்ல தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. பிரதமரை, ‘கோ பேக் மோடி’ என்று தி.மு.க.,வின் தொழில் நுட்பப் பிரிவினர் பதிவு செய்வதை போல், தமிழகத்தில் முதல்வர் எங்கு சென்றாலும், கோ பேக் ஸ்டாலின் என்று கோஷம் போட முடியும். ஆனால், முதல்வர் என்ற பொறுப்புக்கு மரியாதை கொடுக்கிறோம்.. என்றார் அண்ணாமலை.
ஆனால், அவர் பேசிய அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் எக்ஸ் தளத்தில் GoBackStalin #கோபேக்_ஸ்டாலின் #GoBack_Stalin வைரலானது.
பெற்ற வரியை விட இருமடங்கு நிவாரணம் தமிழகத்துக்கு…
இந்நிலையில், தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…
பிரதமர் மோடி, எப்போதும் தமிழக மக்களின் நலன்களையே மனதில் கொண்டுள்ளார். இதற்கு, கடந்த ஒன்பது ஆண்டுகளில் அவர் எடுத்த நடவடிக்கைகளே எடுத்துக்காட்டு.
கனமழை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும், தமிழக அரசு அதை எதிர்கொள்ள தயாராகவில்லை. இதனால், மக்களின் கோபத்தை திசை திருப்ப, முதல்வர் ஸ்டாலின் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து வருகிறார்.
‘யாஸ்’ புயலின் போது, ஒடிசா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு, 1,000 கோடி ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டதையும் குறிப்பிடவில்லை. இவை, பா.ஜ., ஆளும் மாநிலங்களா?
மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ், 101 மருத்துவக் கல்லுாரிகளின் ஒரு பகுதியாக, குஜராத் ஐந்து மருத்துவக் கல்லுாரிகளையும்; தமிழகம், 11 கல்லுாரிகளையும் பெற்று உள்ளது.
கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த ஒரு முறை மானியமாக, மத்திய அரசிடம் இருந்து தமிழகம், 868 கோடி ரூபாயும்; குஜராத், 304 கோடி ரூபாயும் பெற்றன. இவை, சில உதாரணங்கள் மட்டுமே.
கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 10.76 லட்சம் கோடி ரூபாயை அதிகார பகிர்வு, மானியங்கள், மத்திய அரசின் திட்டங்கள் என, பல்வேறு திட்டங்களுக்காக வழங்கியுள்ளது.
இது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் ஒன்பது ஆண்டுகளில் தமிழகம் பெற்றதை விட, மூன்று மடங்கு அதிகம்.
மேலும், கடந்த ஒன்பது ஆண்டுகளில், தமிழகம் அளித்த வரி தொகையை விட, இரு மடங்கு அதிகம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
சீனாவுக்கு ஆதரவாகவும், நம் நாட்டுக்கு எதிராகவும் பணம் பெற்றுக்கொண்டு செய்திகளை வலியத் திணித்து பிரசார நோக்கில் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில், ‘நியூஸ் கிளிக்’ இணைய செய்தி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர் ‘அப்ரூவர்’ ஆக மாறத் தயாராக உள்ளதாக மனு கொடுத்திருக்கிறார்.
புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ‘நியூஸ் கிளிக்’ இணைய செய்தி நிறுவனம், நம் அண்டை நாடான சீனாவுக்கு ஆதரவாக தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது. சீன ஆதரவு மட்டுமல்லாது, நம் நாட்டுக்கு எதிராகவும் செய்திகள் வலியக் கட்டமைத்து வெளியிடப் பட்டன. இந்தச் செயல்களின் பின்னணியில், இதற்காக வெளிநாட்டில் இருந்து பெருந்தொகை பெறப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக புது தில்லி போலீசின் சிறப்புப் பிரிவு விசாரித்து வந்தது. இதன் பின் கடந்த அக்.3ல் இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் உட்பட, 88 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையில், 300க்கும் மேற்பட்ட மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதுவரை, 46 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில், நியூஸ் கிளிக் நிறுவனத்தின் நிறுவனரும், முதன்மை ஆசிரியருமான பிரபிர் புர்கயஸ்தா, மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர் அமித் சக்கரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது கடுமையான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் அப்ரூவர் ஆகத் தயாராக உள்ளதாகக் கூறி, அதற்கு அனுமதி கேட்டு அமித் சக்கரவர்த்தி, புது தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதை அடுத்து, அவரது தரப்பிலான வாதத்தை, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பதிவு செய்யுமாறு, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவிலில் மார்கழி திருப்பாவை பஜனை ஊர்வலம்.
செங்கோட்டை ஆரியநல்லுார் தெருவில் யாதவர் (கரையாளா்) சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமுப்புடாதி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் யாதவ சமுதாய சார்பில் மார்கழி மாத திருப்பாவை நோன்பு மற்றும் பஜனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம்
இந்தாண்டு திருப்பாவை நோன்பு பஜனை நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 17ஆம் தேதி துவங்கப்பட்டு நாள்தோறும் காலை திருப்பாவை பாராயணம் பஜனை ஊர்வலம் நடந்தது.
பஜனை ஊர்வலத்தில் பாளை வேதநாராயணன் பஜனை மண்டல குழு மற்றும் பக்தர்கள் சிறுவர் சிறுமியர் கோலாட்டத்துடன் கோவில் முன்பிலிருந்து துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது.
விழாவில் முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. .
நிகழ்ச்சியில் பஜனக்குழு தலைவா் மருதப்பன்கரையாளா், நிர்வாகிகள் பால்ராஜ், கல்யாணி,முருகேசன், மாரியப்பன், ஹரிஹரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை சமுதாய பெரியோர்கள், நிர்வாகிகள் விழாக்கமிட்டியினா் சிறப்பாக செய்திருந்தனா்.
ஆவுடையார்கோயில்: ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை தேரோட்டம் நடந்தது.
ஆவுடையார்கோயிலில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது இக்கோயில் பாண்டிய மன்னரிடம் முதலமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட திருவாசகம் பிறந்த கோயிலாகும். இக்கோயிலில் திருவாவடுதுறை 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிகபரமாச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி மார்கழி திருவிழா நடந்து வருகிறது.
9ம் நாள் விழாவை முன்னிட்டு அதிகாலையில் மாணிக்கவாசகர் தேரில் எழுந்தருளிய நிலையில் அதனை தொடர்ந்து தேருக்கு உரியபூஜைகள் செய்து திருவாவடுதுறை ஆதீன கட்டளை வேலப்பதம்பிரான் சுவாமிகள் ஈரோடு தேர்திருப்பணிகுழு,நெற்குப்பம் ஏகாம்பரம் சேர்வை, தாரணி வீரப்பன் சேர்வை குடும்பத்தினர்கள் மண்டகப்படிதாரர்கள் வடம் தொட தேரோட்டம் நடந்தது.
விழாவில் முன்னாள் எம்எல்ஏ ரத்தினசபாபதி, ராஜநாயகம், முன்னாள் சேர்மன் நரேந்திரஜோதி,கவுன்சிலர் செந்தில்குமரன், ஊராட்சி தலைவர் சந்திரா தேர் திருப்பணிக் குழு செயலாளர் மணிவாசகம் பொருளாளர் மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை தென்மண்டலமேலாளர் ராமச்சந்திரன் மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன் கண்காணிப்பாளர் சுப்ரமணியன்,மணியம் ராமன் ஆகியோர் செய்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை அறந்தாங்கி டிஎஸ்பி சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் செய்தனர்.விழாவைமுன்னிட்டு நகரில் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
அபிஷேக அர்ச்சனைகளை ஆத்மநாதருக்கு நம்பியார்களும் மாணிக்கவாசகருக்கு சிவாச்சாரியார்களும் செய்தனர். ஒதுவார் குழுவினர் பக்கவாத்தியத்துடன் திருவெம்பாவை பாராயணம் செய்தனர். சிவனடியார்களும் சிவன் பாடல் பாடினர்.விழாவை முன்னிட்டு நகரின் பல இடங்களில் அன்னதானம் நடந்தது.
சிவனடியார்கள் சிவன் வேடம் அணிந்து நடனமாடினர் சிவ தொண்டர்கள் தேரின் பின்பக்கம் திருவாசகம் திருமுறை படித்த வண்ணம் வழிபாடு செய்தனர்.
மார்கழி திருவாதிரை திருவிழா ஆவுடையார்கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து சிவ பக்தர்கள் ஆத்மநாதர் யோகாம்பிகா குதிரைச்சாமி உள்ளிட்ட தெய்வங்களை வழிபட்டு தேரில் காட்சி கொடுத்த மாணிக்கவாசகரையும் வழிபட்டனர்.
மதுரை: திருப்பரங்குன்றம் பா.ஜ.க சார்பாக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 99 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஓ பி சி அணி மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
திருப்பரங்குன்றம் பா.ஜ.க சார்பாக முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 99 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 16 கால் மண்டபத்தில் அருகே அவருடைய உருவப்படத்திற்கு பாஜக ஓ. பி. சி. அணி மாவட்டத் தலைவர் வேல்முருகன், இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் முருகன், மாவட்ட செயலாளர் கோபாலன், திருப்பரங்குன்றம் பொறுப்பாளர் ராமதாஸ், இணை பொறுப்பாளர் ராகப்பன், மண்டல பொதுச் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், பா.ஜ.க சார்பில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்டத்தால் வடிவெடுத்தவர். காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை ஆதரவை பெற்றவராக வல்லபாய் பட்டேல் இருந்தபோதிலும், நேருவை பிரதமராக்கினார் மகாத்மா காந்தி. அடுத்த பதினைந்து ஆண்டுகளில் நேரு தனது நாடாளுமன்ற செயல்பாடுகளால் தன்னை நல்ல நாடாளுமன்ற வாதியாக, வெகுஜன தலைவராக நிறுவிக் கொண்டார். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் குடும்ப கட்சியானது.
நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் மூலம் உருவான தலைவர்களுக்கும் குடும்ப அரசியல் தலைமைக்கும் பெருத்த வேறுபாடு வெளிப்படையாக தெரிகிறது. குடும்ப அரசியல் மூலம் வந்தவர்கள் பண்புள்ளவர்களை, திறமையானவர்களை மதிப்பதில்லை. ஜனநாயக தலைமை பண்புகளையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் முழுமையாக வெளிப்படுத்தியதில்லை.
இதற்கு மாறாக ஜனநாயக அரசியலின் துருவ நட்சத்திரமாக விளங்கியவர் அடல் பிகாரி வாஜ்பாய். அவர் பிறந்து தொன்னூற்றிஓன்பது ஆண்டுகள் ஆகின்றன. காலமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இளைஞராக அரசியல் களத்துக்கு வந்தார். கடுமையான, கொதிப்பு மிக்க காலகட்டத்தின் ஊடாக நாடாளுமன்ற ஜனநாயக அரசியலின் மேலெழுந்து ராஜ தந்திரியாக, ராஜரிஷியாக ஆனவர். ஜனநாயக அரசியலின் சிறந்த உதாரணம் அவர்.
ஆர் எஸ் எஸ் ஸின் இந்துத்துவ கருத்தியலால் உத்வேகம் பெற்று, பயிற்சி பெற்று, முப்பத்தி மூன்றாவது வயதில் 1957 இல் நாடாளுமன்றத்தில் நுழைந்தார். அவரது அபார பேச்சாற்றலாலும் கருத்தியல் உறுதியாலும் நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்தின் விரைவில் புகழ்பெற்றார்.
தேச விடுதலைக்கு பிறகான முப்பதாண்டு ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியின்போது அதற்கு சரியான கருத்தியல் மாற்றாக வாஜ்பாய் வடிவெடுத்தார். ஜன சங்கம்/ பாஜகவை வளர்த்தெடுத்தார். கடுமையான விமர்சனங்களை முன்வைத்த போதும் நனித்தக்க நாகரிகத்துடன் இருந்தன அவரது வார்த்தைகளும் வாதங்களும். பிரதமராக இருந்த நேருவே அவரை பல அயல் நாட்டுத் தலைவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் இருந்தன. பின்னொரு காலத்தில் இவர் பிரதமராவார் என்று நேரு சொன்னதாக ஒரு பேச்சு வழக்கு உண்டு.
அப்படி, அவர் பிரதமரானபோது தேசம் அது வரை கண்டிராததொரு தலைமை பண்பை வெளிப்படுத்தினர். மென்மையாக பேசும் உறுதியான தேசியவாதி என்பதை நாடு மட்டுமல்ல உலகமும் புரிந்து கொண்டது. மூன்று முறை பிரதமராக ஆறாண்டு காலம் ஆட்சி புரிந்தார். 23 கட்சி கூட்டணியை அரவணைத்து நடை போட்டார். மாநில கட்சி தலைவியால் ஆட்சி இழந்த போதும் யார் மீதும் எதிர்ப்பு உணவு இல்லாமல் இருந்த பண்பாளர்.
1998 அணு வெடிப்பு சோதனை வாஜ்பாயின் உறுதியான முகத்தை உலகிற்கு காட்டியது. “பாரதம் இப்பொழுது அணு ஆயுத நாடு. இது மறுக்க முடியாத உண்மை” என்று நாடாளுமன்றத்தில் அவர் தைரியமாக அறிவித்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘தடைகள் வரும் என்று தெரியும். தெரிந்துதான் செயல்பட்டோம். தடைகளை எதிர்கொள்வோம்’, என்றார். தடை விதித்த அமெரிக்காவிலிருந்து பாரதியர்கள் ஏராளமான நிதியை பாரத அரசுக்கு கொடுத்து தடையை தகர்க்க துணை நின்றார்கள். இதுபோன்ற நிகழ்வு பாரத வரலாற்றில் முதல் முறை. அதை நடத்திக் காட்டியவர் அடல் ஜி.
அவர் பிரதமராக மட்டுமல்ல எடுத்துக்காட்டான எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். இன்றைய எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பார்க்க அவரது மேன்மையும் இவர்களது கீழ்மையும் தெளிவாகத் தெரிகிறது. வங்கதேச விடுதலைப் போரின் போது அவர் பாரத அரசுக்கு ஆதரவு அளித்தார். நரசிம்ம அரசின் போது ஐநா மன்றத்தில் பாகிஸ்தானின் வாதங்களை முறியடிக்க எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாயை தான் தேர்ந்தெடுத்து அனுப்பியது அன்றைய காங்கிரஸ் அரசு.
பண்டித நேருவின் வாரிசுகள் எனக் கூறிக் கொள்பவர்கள் இவர் வாழ்க்கையில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். பிறப்பால் வருவதில்லை தலைமை பண்புகள். 🪷