டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் மத்திய அரசு தன்னுடைய வேலையை செவ்வனே செய்யும் போது முதலமைச்சர் இந்தியா கூட்டணி குறித்த மீட்டிங்கில் உள்ளார். நாளையா தேர்தல் நடக்கிறது- என விருதுநகரில் முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
விருதுநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருநெல்வேலி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனத்தை விருதுநகரில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,முதற்கட்டமாக மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மத்திய பகுதிக்கு சாப்பாடு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைப்பதாகவும்,அரிசி, பருப்பு,எண்ணெய்,சானிட்டரி பொருட்கள் உள்ளிட்ட 16 பொருட்கள் அடங்கிய 1000 பேக்கேஜிங் அனுப்பியுள்ளதாகவும்,நாளை முதல் 3 நாட்களுக்கு பிற பொருட்களான துணிகள் வர இருப்பதாகவும், அதையும் மக்களுக்கு வழங்க இருப்பதாகவும் தொடர்ந்து 3 நாட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நிவாரண பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அண்ணாமலை மழை தகவல் தாமதமாகத்தான் தெரிவிக்கப்பட்டது,இருந்த போதிலும் வெள்ள நிவாரணங்களை மத்திய அரசை எதிர்பார்க்காமல் அறிவித்து இருப்பதாக தமிழக முதலமைச்சர் சொன்னதற்கு பதிலளித்த அண்ணாமலை, வானிலை ஆய்வு மையத்தை வளப்படுத்த சூப்பர் கம்யூட்டருக்கு ரூ 10 கோடி என்னவாயிற்று என்றும் இங்கே மக்கள் துயரத்தில் இருக்கும் போது டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடத்துவதும்,இங்கே சேலத்தில் பாதி அமைச்சர்கள் சென்று இளைஞரணி மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்துவது என திமுக அரசு எந்த ஒரு ஐடியாவும் இல்லாமல் இருப்பதாகவும்,மூத்த அமைச்சர்கள் பலபேர் இருக்க உதயநிதியை நிவாரணத்திற்கு அனுப்பியதுடன் அவர் சினிமா இயக்குநரை உடன் வைத்துக்கொண்டு டேக் ரெடி என்பது போல் செயல்படுவதாகவும், அவருக்கு பேரிடர் மேலாண்மை பற்றி என்ன தெரியும் என கேள்வி எழுப்பினார்.
மேலும் மத்திய அரசு இல்லாமல் நிவாரணத்தில் தமிழக அரசு ஒன்னும் செய்து விட முடியாது என்றும் மத்திய அரசு 24 மணி நேரத்தில் 5 ஹெலிகாப்ட்டர்ஸ் ட்ரோனியர் விமானங்கள்,மி7 போன்ற ஹெலிகாப்ட்டர்ஸ் ,2 ஆர் களம்.என்.டி.ஆர்.எப் படைகள் 7 மற்றும் கோஸ்ட் கார்டு 6 இவையெல்லாம் மத்திய அரசு களத்தில் இறக்கி விட்டுள்ளது என்றும்,
மேலும் சூலூர் விமானப்படை தளத்தை நிவாரண தளமாக அறிவித்து அங்கிருந்து வேலை நடைபெற்று வருவதாகவும், டெல்லி தமிழ்நாடு பவனில் இருந்து கொண்டு முதலமைச்சர் பேட்டி கொடுத்தால் போதுமா? களத்தில் அல்லவா நிற்க வேண்டும் என்றார்.
வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் மத்திய அரசு தன்னுடைய வேலையை செவ்வனே செய்யும் போது முதலமைச்சர் இந்தியா கூட்டணி குறித்த மீட்டிங்கில் உள்ளார்.மீட்டிங்கை ஒரு வாரம் தள்ளி வைக்கலாம் அல்லது காணொளி காட்சி மூலம் கலந்து கொள்ளலாம் என்றார்.முக்கிய தலைவர்கள் எல்லாம் டெல்லியில் இருந்தால் இங்கே ஆளுங்கட்சி யார் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகிறது என தமிழக முதல்வர் பாஜகவுக்கு எதிராக அரசியல் பண்ணனும் என்ற முழு நேர வேலையாக முதல்வர் வைத்திருக்கிறாரே தவிர மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது என்றார்.
மேலும் பேசிய அண்ணாமலை தமிழகத்தில் சில பேர் சொல்ல சொல்லத்தான் பாஜக கட்சி வளரும் எனவும் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி மூன்று இடங்களில் நோட்டாவுக்கு கீழ் வாக்கு வாங்கியது என விமர்சனம் செய்த அண்ணா மலை நாடாளுமன்றத்தின் மையப்பகுதிக்கு வரக்கூடாது என எல்லா எம்.பிக்களும் ஒத்து கொண்டார்கள் என்றார்.
அதே போல் ராஜ்ய சபாவின் தலைவரும் துணை குடியரசு தலைவர் போல் ஒரு எம்.பி மிமிக்ரி செய்வதை ராகுல் காந்தி வீடியோ எடுத்து சிரிப்பது என்பது அரசியல் கட்சி தலைவரின் மாண்புக்கு அழகா என கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அண்ணாமலை தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 39 தொகுதிகளை வெல்லும் என்றார்.
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத் தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
விளக்கவுரை:
நான்காம் பாசுரத்தில் கண்ணன் கருணையால் மழை பொழிந்து செழிப்பு மிகும் என்று கூறிய ஆண்டாள், அவ்வாறு அவன் கருணைப் பார்வை நம் மீது விழ வேண்டுமானால், அவனைப் புகழ்ந்து பாட வேண்டாமோ என்று கூறி, கண்ணனின் தன்மைகளையும் புகழையும் தோழியர்க்குக் கூறி, அவர்களையும் கண்ணனை அடிபணிந்து உய்யுமாறு இந்தப் பாசுரம் மூலம் வேண்டுகிறார்.
கண்ணன் – மாயச் செயல்களை உடையவன்; இறையருள் நிலையாகப் பெற்ற அந்த வடமதுரையின் தலைவன்; ஆழம் உடையதாகவும் மிகத் தூய்மையான நீரைக் கொண்டதாகவும் விளங்கும் யமுனை ஆற்றை உடையவன்; ஆயர் குலமாகிய இடையர் குலத்தில் தோன்றி அந்தக் குலத்தை மேன்மையுறச் செய்பவன்; மங்கள தீபத்தைப் போல் பிரகாசிக்கும் அணிவிளக்கு; தாயாகிய தேவகிப் பிராட்டியின் திருவயிற்றை விளங்கச் செய்வதற்காக அவதரித்தவன்…
இத்தகு பெருமை வாய்ந்த கண்ணபிரானை, அவனுக்கு அடிமை செய்கிறவர்களான நாம் முதலில் தூய்மைப் படுத்தி கொள்ள வேண்டும். பின்னர் தூய்மையான மலர்களைக் கொய்து வந்து தூவ வேண்டும். அவனை வணங்கி வாயாரப் பாட வேண்டும். நெஞ்சார தியானம் செய்ய வேண்டும்.
அதன் பின்னர், சேஷ-சேஷித்வம் எனும்படி, ஆண்டான்-அடிமை மனோபாவமும் ஞானமும் தோன்ற, நாம் முன்னர் செய்த பாவங்களும், பின்னாளில் நம்மையும் அறியாமல் நாம் செய்யப்போகும் பாவங்களும் தீயில் இட்ட பஞ்சைப் போலே எரிந்து உருமாய்ந்து போகும். எனவே அந்தப் பெருமானின் திருநாமங்களைச் சொல்வாய்! – என்று இந்தப் பாசுரம் மூலம் தோழியர்க்கு ஞானம் உண்டாகச் செய்கிறார் ஸ்ரீஆண்டாள் நாச்சியார்.
தென்மாவட்டங்களில் ஏற்பட்ட அதீத மழைப் பொழிவு மற்றும் வெள்ளப் பெருக்கின் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணிக் கரையோர மக்களின் உயிருக்கும் உடைமைக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. கால்நடைகள் உயிர்ச் சேதம், பயிர்ச் சேதம் என விவசாயிகளின் வாழ்க்கையில் பேரிடி விழுந்திருக்கிறது. இவற்றுக்கான காரணம் என்ன, ஏன் இவ்வளவு பெரும் சேதம்? வருங்காலங்களில் தவிர்ப்பது எப்படி என்ற உள்ளார்ந்த, எதிர்கால பலனை நோக்கிய அறிவியல் பூர்வமான அணுகுமுறையுடன் கூடிய ஆராய்ச்சியில் ஈடுபடுவதை விடுத்து, அரசியல் காழ்ப்பில் தற்காலிக பலன்களை உத்தேசித்து களம் இறங்கியிருக்கிறது மாநில அரசு.
ஒருபுறம், அரசியல் ரீதியாக மாநில அமைச்சர் ஒருவர், மத்திய அமைப்பின் மீது காழ்ப்புடன் கூடிய கருத்து தெரிவித்திருக்கிறார் என்றால், அவருக்கு, அதாவது ஆளும் திமுக., அரசுக்கு முட்டுக் கொடுக்கும் வேலையில் அரசின் குரலாக ஒலிக்கும் அதிகார வர்க்கமும் இறங்கியிருப்பது வெட்கக்கேடு.
வானிலை ஆய்வுமையம் துல்லியமான தகவல்களைத் தரவில்லை, அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார் மாநில அமைச்சர் மனோ தங்கராஜ். அவரது குரலை அடியொற்றி, தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க, தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனாவும் மத்திய அரசின் அமைப்பைக் கைகாட்டியிருக்கிறார். ஆனால், நடந்த உண்மைகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு சில நூறுகளை அள்ளிவீசி சமூக ஊடகங்களையும் ஊடகங்களையும் வேண்டுமானால் தங்கள் குரலில் பேச வைக்க முடியும்; ஆனால் அடிவயிற்றில் அடித்துக் கொண்டு அரற்றிய சாமானியனின் குரலை வெறும் ஒரு சில ஆயிரங்கள் பணம் கொடுத்து கொடுத்து மாற்றி விட முடியாது. காரணம் இழப்பின் வலியில் இருந்து மீண்டு வருவது அவர்களுக்கு அவ்வளவு சுலபமல்ல.
பொதுவாக, மழை பெய்யும், அல்லது வழக்கமாக அதிக மழையை எதிர்பார்க்கும், அல்லது அதீத மழைப் பொழிவுகளை அனுபவிக்கும் பூமி இது என்பதால், மக்களுக்கு மழையும் வெள்ளமும் இயல்பான ஒன்று. கன மழை பொழிந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற உடனடி செயல்பாடுகளும் தாமிரபரணிக் கரையோர மக்களுக்கு பழகிய ஒன்றுதான். ஆனால் இந்த முறை ஏற்பட்டது அதீத மழைப்பொழிவு என்பதுடன், தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்ட வெள்ள நீரால் ஏற்பட்ட திடீர்த் தாக்குதலால் உண்டான நிலைகுலைவு என்றுதான் சொல்ல வேண்டும்.
வானிலை ஆய்வு மையமும் ஒரு வாரத்துக்கு முன்பே, மழை குறித்த எச்சரிக்கையை விடுத்தது. (பார்க்க படம்) 5 நாட்களுக்கான எச்சரிக்கை – எங்கெங்கே சிகப்பு எச்சரிக்கை, ஆரஞ்சு எச்சரிக்கை என வானிலை ஆய்வு மையம் கணித்து வெளியிட்டது. வானிலை ஆய்வுமையத்தைப் பொருத்த அளவில், 21 செ.மீ.,க்கு அதிகமாக மழை இருக்கும் என்ற நிலையில் சிகப்பு எச்சரிக்கையை விடுக்கும். அதற்கு மேல் அவர்களுக்கான எச்சரிக்கைக் குறியீடு இல்லை. அதுதான் உச்சபட்ச எச்சரிக்கைக் குறியீடு. அது, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் என 15ம் தேதியே கொடுத்துவிட்டது.
இந்த எச்சரிக்கையை, ஒவ்வொரு நிமிடமும் வானிலை ஆய்வுமையத்தின் தரவுகளை மிகச் சாதாரண மக்களும் கூட அதன் இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அண்டை நாடுகளான இலங்கையும் வங்கதேசமும் கூட இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகளைக் கண்டு, தங்களை எச்சரிக்கையுடன் காத்துக் கொள்கின்றன.
வானிலை ஆய்வுமைய எச்சரிக்கைகளை கணித்தே, அடிக்கடி புயல்களால் பாதிக்கப்படும் தனது மாநிலத்தை, மிகச் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் காத்துக் கொள்கிறார் ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக். அவர், எந்நாளும் வானிலை ஆய்வு மையத்தைக் குறை சொன்னாரில்லை. ஒரு புயல் அறிவிப்பு வந்தால், உடனே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி தங்குமிடம் அளித்து, உணவு, தண்ணீருக்கு ஏற்பாடு செய்து உயிரிழப்புகளைத் தடுக்கிறார்.
ஒடிஸாவுக்கு அடுத்து ஆந்திரமும் இப்படி அதிகம் பாதிக்கப்படுகிறது. சென்னை, கடலூர் என வங்கக் கடலின் நகரங்களும், கேரளம், கர்நாடக, மகாராஷ்டிர, குஜராத்தின் அரபிக் கடலோர நகரங்களும் புயல்களால் பாதிக்கப் பட்டிருக்கின்றன. அங்கெல்லாம் அரசுகள் எப்படி நடந்து கொள்கின்றன என்பதை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள். தமிழகத்தில் 2021க்குப் பிறகு அமைந்த அரசு, எப்படி நடந்து கொல்கிறது என்பதையும் மாநில மக்கள் அனுபவித்து உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
2021 வரை சரியாக இருந்த வானிலை ஆய்வு மைய அறிக்கைகள், இப்போது துல்லியமாக அமையாமல் போய்விட்டது தமிழகத்துக்கு! அதனால் தான் திமுக., ஆட்சிக்கு வந்த உடனே வானிலைத் தகவல்களுக்காக சூப்பர் கம்ப்யூட்டர் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கியது போலும்! அது என்ன ஆனது என்பது இப்போதுவரை தகவல் இல்லை. ஒதுக்கியதாகச் சொன்னது பொய்யா, ஒதுக்கப்பட்டு வீணானது பொய்யா, அல்லது ஒதுக்கப்படாமலேயே ஒதுக்கப்பட்டதாகச் சொல்லி கணக்கு காட்டினார்களா என்ற கேள்வியை சாமானியன் இன்று சமூகத் தளங்களில் எழுப்புகிறானே, அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது இந்த அரசு?!
பொதுவாக, வருவாய்த் துறையினர் இது போன்ற வெள்ளக் காலங்களில் தயாராகவே இருக்க வேண்டும். இரவு பகல் பாராமல் 24 மணி நேரப் பாய்ச்சலுக்கு தயாராக இருக்க வேண்டியவர்கள் அவர்கள். மழை வருகிறது, தாமிரபரணியில் தண்ணீர் திறந்துவிட்டிருக்கிறார்கள். நம் பகுதியை வந்தடைய இன்னும் சில மணி நேரங்களே இருக்கின்றன, நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு விபரீதம் நிகழப் போகிறது என்று தூத்துக்குடி ஆட்சியர் ஒரு வருவாய்ப் பணியாளரிடம் பேசும் குரல் ஒலிப்பதிவு சமூகத் தளங்களில் வைரலானதே! அதை வெளியிட்டது யார்?! ஆட்சியரா அல்லது சம்பந்தப்பட்ட பணியாளரா?
எனில், முன்னெச்சரிக்கை தகவல்கள் இல்லாமலா அவ்வாறு ஓர் ஆட்சியர் பேசமுடியும்?! ஒருவேளை அமைச்சருக்கும் தலைமைச் செயலருக்கும் அந்த ஆடியோ சென்றடையாமல் போனதா?! அப்படி வானிலை ஆய்வு மைய எச்சரிகைகள் இல்லாமல் ஒரு ஆட்சியர் விபரீதம் நிகழ்ப் போகிறது என்று பதற்றக் குரலில் பேசுவார் என்றால், அது வதந்தியாக அன்றோ கொள்ளப்பட்டிருக்கும்?!
அணைகளின் நீர் இருப்பு, நீர் வரத்து, நீர் வெளியேற்றம் எல்லாம் மாநில அரசின் கட்டுப் பாட்டில் இருக்கிறது. அந்தப் பணியாளர்களின் தரவுகளை நிர்வாகம் சரியாகக் கணித்திருந்தால், பெய்யும் மழையைக் கணித்து, முன்கூட்டியே நீர் திறப்பை சிறிது சிறிதாக மேற்கொண்டிருக்கலாமே என்று சாமானியன் கேட்கிறானே, அதற்கு என்ன பதில்?
தாமிரபரணியின் ஆக்கிரமிப்புகளைக் குறித்து நெல்லை மக்கள் எத்தனை மாதங்களாகக் கதறிக் கொண்டிருக்கிறார்கள்? அது ஆட்சியாளர்களின் காதில் கேட்டதோ?! பாதாளச் சாக்கடைத் திட்டம் என்று கூறி நன்னீர் ஓட வேண்டிய ஆற்றில் கழிவுகளைக் கலந்து ஓடச் செய்தது யார் குற்றம்!? நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தி, தற்காலிக பலன்களை உத்தேசித்து அனுமதிகளைக் கொடுத்து ஆக்கிரமிப்புகளை வளரச் செய்தது யார் குற்றம்!?
எத்தனை கிராமச் சாலைகளில் இப்போது பராமரிப்பு, மறு கட்டுமானம் என்று சொல்லி நீர்செல்லும் கால்வாய்களை அடைத்து ‘ஒப்பந்ததாரர்களின்’ தயவுடன் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று பட்டியல் வெளியிடுவார்களா!?
அவசர கால சூழல் என்றால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன மேற்கொள்வது, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சி இல்லாமலா ஆளும் தரப்பு இருக்கிறது?! எத்தனை எத்தனை சீர்கேடுகளை, கையாலாகத் தனத்தை, ஓட்டைகளை தன்னிடம் வைத்துக் கொண்டு, ஒரு மாநில அமைச்சரும் தலைமைச் செயலரும், வானிலை ஆய்வு மையம் துல்லியமான தகவல் தரவில்லை என்றும், வெளிநாட்டு நிறுவனங்கள் சரியாக உள்ளன என்றும் அரசியல் காழ்ப்பில் குறை சொல்வார்கள்!? இந்த மடை மாற்றும் அரசியல் பேச்சைக் கேட்டு, ஏற்கெனவே சூப்பர் கம்ப்யூட்டருக்கு ரூ.20 கோடி, இனி வெளிநாட்டு நிறுவனத்திடம் தகவல் பெறுவோம் என சில ஆயிரம் கோடிகளை ஆட்டையப் போறப் போறாங்களே என சாமானியன் சமூகத் தளத்தில் கேலி செய்கிறானே!
தென் மாவட்டங்களில் மழை பாதிப்பு குறித்து தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனாவின் செய்தியாளர் சந்திப்புத் தகவல்கள் இவை…
“காயல்பட்டினத்தில் 36 மணி நேரத்தில் 116 செ.மீ., மழையும், திருச்செந்தூரில் 92 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது. வரலாற்றில் இல்லாத அளவு மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோரம் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.
தற்போது தென் மாவட்டங்களில் மழை குறைந்துள்ளது. 1350க்கும் மேற்பட்டவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதில் 250 பேர் மாநில பேரிடர் மீட்பு படையினர். ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் படகில் கூட செல்ல முடியவில்லை. சுற்றுப்பகுதிகளில் உள்ள சாலைகள் சேதம் அடைந்துள்ளன.
நெல்லையில் 65,900 லிட்டர் பால் மற்றும் தூத்துக்குடியில் 30 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. 9 ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி நடக்கிறது. 13,500 கிலோ உணவு விநியோகம் செய்யப்பட்டது. 160 நிவாரண முகாம்களில் 16,680 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
தென்காசி, குமரி மாவட்டங்களில் 100 சதவீதம் மின் விநியோகம் வழங்கப்பட்டு உள்ளது. நெல்லை, தூத்துக்குடியில் 18 சதவீத மின் விநியோகம் வழங்கப்பட்டது. இங்கு, மின்மாற்றிகள், மின்கம்பிகள் சேதம் அடைந்ததால் உடனடியாக மின்சாரம் வழங்க முடியவில்லை. உடனடியாக வழங்கினால் வெள்ளத்தால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
விமானப்படை, கடற்படை மூலம் மீட்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது. ராமநாதபுரத்தில் இருந்து 323 படகுகள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடக்கிறது. அமைச்சர்களுடன் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தென் மாவட்டங்களில் மழை பாதிப்பு காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். 27 எருமை மாடுகள், 297 ஆடுகள், ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்துள்ளன.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறாக உள்ளது. வானிலை மையத்தின் கணிப்பு சரியாக இருந்தால், முன்னெச்சரிக்கை நன்றாக இருக்கும். சென்னை மற்றும் தென் மாவட்டகளில் ஏற்பட்ட பாதிப்புகளை ஒப்பிட்டு பார்க்க முடியாது. வெள்ளம் வடிந்த பின் சேதம் கணக்கிடப்பட்டு நிவாரணம் அறிவிக்கப்படும்…”
வெள்ளத்துக்குப் பிறகான இந்தத் தகவல்கள் எல்லாம் மிகத் துல்லியமானவை என்று மாநில அமைச்சர் ’சர்ட்டிபிகேட்’ கொடுப்பாரா?! ஏரலில் நிகழ்ந்த கால்நடை இழப்பு கோரங்களின் வீடியோ இன்று பலரின் மனத்தை ரணமாக்கியுள்ளது. இன்னும் இழப்புகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நெல்லை ஜங்ஷன் பகுதி வர்த்தக நிறுவனங்கள், கடைகளின் பொருள் இழப்புகளும் சேர்ந்து ஒவ்வொருவரும் சொல்வார்களே! அதற்கு வெறும் சில ஆயிர இழப்பீடுகள் கொடுத்து தற்காலிக அரசியல் செய்து விட்டால் போதுமா!? யானைப்பசிக்கு சோளப்பொரி என்பதாக!
மாநில ஆளுநர் அதிரடியாக கூட்டத்தை நடத்தி, மத்திய மாநில அரசுத் துறைகளின் ஒருங்கிணைப்பை மேற்கொண்டிருக்கிறார். இதில் மாநில அரசின் சார்பில் எவருமே கலந்து கொள்ளவில்லை. மாநில அரசின் அரசியல் காழ்ப்பில் மக்களின் நலன் அன்றோ பாதிக்கப்பட்டிருக்கிறது?! மாநில அரசு செயல் அற்ற அரசாகப் போனால்தான், இப்படி மத்திய அரசின் உடனடி களம் இறங்கல் நடவடிக்கை இருக்கும். அதனை மாநில அரசு ஒப்புக் கொள்கிறதா?! இல்லாவிட்டால், மாநில அரசின் பிரதிநிதிகளை அனுப்பி, நாங்களும் களத்தில் இருக்கிறோம் என்று காட்டிக் கொண்டிருக்குமே!
மொத்தத்தில் – இந்த அரசு, நம்பி வாக்களித்த மக்களைப் பாதுகாப்பதற்கு வழியற்ற, செயலற்ற அரசாகவே வரலாற்றில் நிலை பெற்றுவிட்டது!
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோயில் சனி பெயர்ச்சி விழா லட்சார்ச்சனையுடன் துவங்கியது திரளான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோயில் சனி பெயர்ச்சியையொட்டி இன்று காலை மங்கள இசை உடன் விக்னேஸ்வர பூஜை முதலாம் கால யாக பூஜைதொடங்கியது. தொடர்ந்து சனி ப்ரீத்தி ஹோமம் பூர்ணாஹூதி உள்ளிட்டவற்றை சிவாச்சாரியார்கள் செய்தனர்.
தொடர்ந்து மதியம் இரண்டாம் கால யாக பூஜை தொடங்கி ப்ரீத்தி ஹோமங்கள் நவக்கிரக ஹோமங்கள் மற்றும் பரிகார ராசிகளான மேஷம் ,ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், தனுசு மற்றும் 27 நட்சத்திரங்களுக்கும் நடைபெற்றது.
தொடர்ந்து பூர்ணாஹூதி நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டு கடங்கள் புறப்பாடாகி புனித நீர் ஊற்றப்பட்டு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெறுகிறார்.
மதுரை, தேனி, திண்டுக்கல் சிவகங்கை இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் இளமதி, கணக்கர் சி. பூபதி, எழுத்தர் வசந்த், மற்றும் திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
2500 மோசடி கடன் செயலிகள் நீக்கப்பட்டிருப்பதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் கடன் வழங்கும் செயலிகள் – லோன் ஆப்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது:
லோன் ஆப்கள் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள், மக்களை மோசடி செய்து வருவதாக நாடு முழுவதும் புகார்கள் வருகின்றன. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகளுடன் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தன.
கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 4 ஆயிரம் கடன் ஆப்களை கூகுள் ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில், 2500க்கும் மேற்பட்ட மோசடி கடன் ஆப்களை தனது ‘பிளே ஸ்டோரில்’ இருந்து நீக்கியும், முடக்கியும் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, வங்கிகள் ஆகியவை நடவடிக்கை எடுத்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை விருதுநகர் செங்கோட்டை வழித்தடம் முழுவதும் மின்மயமாக்கப்பட்ட நிலையில் இந்த வழித்தடத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் தென்காசி செங்கோட்டை கொல்லம் இடையே இருந்த மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி முடிந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது விருதுநகர் – செங்கோட்டை வழித்தடம் முழுவதும் மின்மயமாக்கல் முடிந்து மின்சார எஞ்சின் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த வழித்தடத்தில் மிகப்பெரிய நகரங்களாக செங்கோட்டை தென்காசி ராஜபாளையம் சங்கரன் கோவில் கடையநல்லூர் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் மற்றும் மிகப்பெரிய சுற்றுலா மையமான குற்றாலமும் தென்காசி அருகில் உள்ளது .
இதனால் இந்த வழித்தடத்தில் ரயிலில் பயணிப் போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .
மேலும் சபரிமலை சீசன் காலத்தில் இந்த வழித்தடத்தில் அதிக அளவில் பக்தர்கள் சென்னை எழும்பூர் கொல்லம் ரயில் மற்றும் பொதிகை ரயில் மூலம் செங்கோட்டை , அல்லது புனலூர் வந்து சபரிமலைக்கு சென்று திரும்புகின்றனர். இதனால் இந்த ரயில் வழித்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது.
ஆனால் பயணிகளின் நலன் கருதி போதிய ரயில்களில் இயக்க தென்னக ரயில்வே முன் வருவதில்லை.மீட்டர் கேஜ் பாதையில் இந்த வழித்தடத்தில் கொல்லம் செங்கோட்டை விருதுநகர் மதுரை கோயமுத்தூர் இடையே இயங்கிய ரயில் தற்போது இயக்கப்படவில்லை. இந்த ரயிலை மீண்டும் இயக்க கேரளா எம்பிக்கள் வலியுறுத்தி வந்தும் இதுவரை இயக்குவதற்கான சூழல் இல்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி போத்தனூர் ரயில் வழித்தடம் அகல ரயில் பாதை பணிகள் முடிந்ததும் கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி பழனி மதுரை வழியாக விருதுநகர் ராஜபாளையம் செங்கோட்டை வழித்தடத்தில் கொல்லத்திற்கு மீண்டும் ரயில் இயக்கப்படும் என கூறப்பட்டது ஆனால் தற்போது வரை இந்த ரயில் இயக்கப்படவில்லை.
மேலும் மதுரை செங்கோட்டை வழிதடத்தில் 16 முதல் 18 பெட்டிகளுடன் இயங்கிய பயணிகள் ரயில் தற்போது மயிலாடுதுறை செங்கோட்டை இடையே 11 பெட்டிகளாக குறைக்கப்பட்டு இயங்குகிறது. மற்றொரு ரயில் மதுரை செங்கோட்டை குருவாயூர் உடைய 14 பெட்டிகளுடன் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் சாதாரண பயணிகளின் நலன் கருதி மதுரை செங்கோட்டை இடையே மின்சார ரயில் இயக்கவும் திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் விருதுநகர் மதுரை வழியாக மேட்டுப்பாளையத்திற்கு தற்போது இயக்கப்படும் வாரம் ஒருமுறை ரயிலை தினசரி ரயிலாக இயக்கவும், ஏற்கனவே திருநெல்வேலியில் இருந்து தென்காசி விருதுநகர் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட வாரம் ஒரு முறை ரயிலை தினசரி ரயிலாக இயக்கவும் இராமேஸ்வரத்தில் இருந்து விருதுநகர் செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கவும் ரயில்வே பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர் .
வரும் பிப்ரவரி மாதம் வரலாற்று சிறப்புமிக்க பாம்பன் பாலத்தை திறந்து வைக்க வருகை தரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த வழித்தடத்தில் புதிய ரயில்களை துவக்கி வைப்பாரா என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆளுநர் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் மாநில அரசின் எந்தவொரு பிரதிநிதியும் பங்கேற்கவில்லை என்று, ஆளுநர் மாளிகை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அரசுத்துறைகள் மற்றும் பாதுகாப்புப்படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நிவாரண பணிகள் குறித்து சென்னை, ஆளுநர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை (என்.டி.ஆர்.எப்), ரயில்வே, பிஎஸ்என்எல், இந்திய வானிலை மையம் (ஐஎம்டி), இந்திய விமான போக்குவரத்துத்துறை ஆணையம் (ஏஏஐ) மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்பட்டபோதும் மாநில அரசின் எந்தவொரு பிரதிநிதியும் வரவில்லை.
மழை பாதிப்பால் குறிப்பாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நிலைமை மோசமாக உள்ளது. மத்திய அரசுத்துறைகள், அவற்றின் வளங்களை மாநில அரசு அழைத்தவுடன் பணியாற்றும் வகையில் தயாராக வைத்துள்ளன.
மேலும் மாநில அரசால் கோரப்படும்போது அவை பணியில் ஈடுபட்டு வருகின்றன. மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் உத்தரவின்படியும் தேவைக்கேற்ப இயன்ற வகையில் சொந்தமாகவும் அவை மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுகின்றன.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற சில அமைப்புகள், போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை போதிய வகையில் மதிப்பிடாதது போன்ற காரணங்களால் எத்தனை வளங்கள் சரியாக தேவை மற்றும் எங்கெல்லாம் படையினரை அனுப்ப முன்னுரிமை தர வேண்டும்.
தற்போதுள்ள மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு கூடுதல் வளங்களை கையிருப்பில் வைத்திருக்குமாறு அவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக் கொண்டார்.
ஆழி மழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல் ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப் பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில் ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
விளக்கவுரை: மூன்றாம் பாசுரத்தில் நோன்பு நோற்பதால் கிடைக்கும் பலனைச் சொன்னார் ஆண்டாள். மும்மாரி பெய்து பசுக்கள் பாலால் இல்லம் நிறைத்து செல்வம் பெருகும் என்றவர், இந்தப் பாசுரத்தில் தாம் சொன்ன சுபிட்சத்துக்காக கண்ணனே கருணை மழையாகப் பொழிய வேண்டும் என்று வேண்டுகிறார்.
மழை மண்டலத்துக்குத் தலைவனாக விளங்கும் கண்ணனே! உன் கொடையில் எதையும் நீ ஒளிக்காமல் அருள வேண்டும். நீ செய்ய வேண்டிய பணி ஒன்றும் உண்டு. அது, நீ கடலினுள் புகுந்து, அங்கிருந்து நீரினை முகந்து கொண்டு பேரொலி எழுப்பி கர்ஜனை செய்து, ஆகாயத்தின் மேல் ஏறி, ஊழி காலம் முதலான அனைத்துக்கும் காரணனாக விளங்கும் எம்பெருமானின் திருமேனியைப் போலே கறுத்து, பெருமை பொருந்திய சுந்தரத் தோளுடையானும், நாபியிலே கமல மலர் கொண்டு திகழும் பெருமானின் வலக்கையிலே திகழும் சக்கரத்தாழ்வானாகிய திருவாழியைப் போலே ஒளிர்ந்து, இடது கரத்தில் திகழும் பாஞ்சஜன்யப் பெரும் சங்கினைப் போலே நிலை நின்று முழக்கி, உன் சார்ங்கம் ஆகிற வில்லில் இருந்து விரைந்து புறப்படும் அம்புகளைப் போலே, இந்த உலகத்தார் அனைவரும் வாழும்படியாகவும், கண்ணன் எம்மானுடன் கலந்து மகிழ நோன்பு நோற்கும் நாங்களும் உளம் மகிழ மார்கழி நீராட்டம் செய்யும்படி, தாமதம் ஏதுமின்றி மழை பொழிய வைத்திடுவாய்…- என்று கண்ணனை வேண்டுகிறார் ஆண்டாள்.
மழை எப்படிப் பொழிகிறது என்ற அறிவியல் நுட்பத்தைத் தம் பாசுரத்தில் புகுத்தி, அதற்குக் காரணன் கண்ணனே என்று கூறி, அனைவரும் அவனைப் பிரார்த்தனை செய்யப் பணிக்கிறார் ஸ்ரீஆண்டாள் நாச்சியார்!
Press release by TAMIL NADU Raj bhavan show, GOVERNOR OF TAMIL NADU CHAIRED THE REVIEW MEETING ON THE FLOOD SITUATION IN TENKASI, TIRUNELVELI, THOOTHUKUDI, KANNIYAKUMARI AND NEIGHBOURING DISTRICTS IN TAMIL NADU AT RAJ BHAVAN, CHENNAI ON 19.12.2023 (TODAY).
Hon’ble Governor Thiru. R. N. Ravi reviewed the rescue and relief operations undertaken by Central Agencies and Defence Forces in the rain and flood-affected southern districts of Tamil Nadu today in a meeting held in Raj Bhavan, Chennai, today (19.12.2023). Senior officials of the Armed Forces, Coast Guard, National Disaster Response Force (NDRF), Southern Railways, Airports Authority of India (AAI), Bharat Sanchar Nigam Limited (BSNL), Indian Meteorological Department (IMD) and Indian Red Cross Society (IRCS) attended the meeting.
The meeting was held to review the present situation and on-going rescue and relief operations, to bring about better coordination, and to mobilize additional resources for the rescue and relief efforts in the flood-affected areas in the southern districts of Tamil Nadu.
The officers shared the grim situation, especially in Thoothukudi and Tirunelveli. Central Government agencies updated that they have placed their resources at the State Government’s disposal and are doing so as and when requisitioned by the State. They are providing rescue and relief as directed by State and District authorities and also wherever possible on their own. Indian Army has deployed 2 columns.
Indian Navy updated thattheir personnel deployed in INS Kattabomman (Tirunelveli) and INS Parundu (Ramanathapuram) are reaching out to the people. Indian Air Force is carrying out flying operations for rescue and relief through aircraft deployed in Sulur Air Base and Thiruvananthapuram.
Indian Coast Guard with its rescue team, ALH, Dornier aircraft and Kayaks are carrying out the rescue operations in Thoothukudi. NDRF has deployed 10 teams to the affected areas from its 4th Battalion based in Arakkonam.
Some agencies raised concerns about the absence of coordination in the deployment of personnel and a lack of appreciation of the overall situation in the affected districts, due to which they have no clear idea about the exact resource requirements and priorities in their deployment.
Hon’ble Governor asked them to mobilize additional standby resources in view of the grave situation and ensured that he will facilitate additional resources from central agencies.
No official from the State Government attended the meeting, though a request was sent to the Chief Secretary, Government of Tamil Nadu, to send a representative to the meeting.
Governor reviewed the rescue and relief operations undertaken by Central Agencies and Defence Forces in the rain and flood-affected southern districts of Tamil Nadu today in a meeting held in Raj Bhavan, Chennai.
நாங்கள் காரில்தான் பயணித்தோம் என்றாலும் காலை 0630 மணியிலிருந்து பல்வேறு இடங்களுக்குப் போய்க் கொண்டிருந்தோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து லிங்கராஜா கோயில். கோயிலில் ஒரு மணி நேரம் செலவு செய்தோம். பின்னர் தொஹிலி செல்ல ஒரு 20 நிமிடம். அங்கு 0945 வரை சாந்தி ஸ்தூபி மற்றும் அசோகரின் கல்வெட்டுகளைப் பார்வையிட்டோம்.
பின்னர் காலைச் சிற்றுண்டி அருந்திய பின்னர் கொனார்க் நோக்கிப் புறப்பட்டோம். கொனார்க் வந்தடையும்போது சுமார் பன்னிரண்டரை மணி ஆகிவிட்டது. அந்த நேரத்திலும் கொனார்க் கோயிலைப் பார்த்துவிட்டு, ஆளுக்கு ஒரு இளநீர் பருகிய பின்னர் பூரி நோக்கிப் பயணமானோம். பூரி வரும்போது மூன்று மணி ஆகிவிட்டது. நேரடியாக ஜெகன்னாதர் கோவிலுக்குச் சென்றுவிட்டு பின்னர் கடற்கரைக்குச் சென்றோம்.
பூரி ஜெகன்னாதர் கோயிலுக்குச் செல்லுபோது நாங்கள் மிகவும் சோர்வாக இருந்தோம். கோயிலுக்குச் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் நாங்கள் வந்த கார் நின்றுவிட்டது. அங்கிருந்து கோயிலுக்கு நடந்து செல்ல வேண்டும் என்று சொன்னார்கள். நடக்க முடியாதவர்கள் செல்ல கோயிலுக்குச் சொந்தமான ஒரு பேட்டரி கார் இருந்தது. அந்த நேரத்தில் கூட்டம் குறைவாக இருந்ததால் விரைவாகப் பார்த்துவிட்டு வந்துவிட்டோம்.
ஜெகன்னாதர் கோயில் என்பது விஷ்ணுவின் வடிவமான ஜகன்னாதர்-ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முக்கியமான இந்துக் கோயில். அவந்தியின் மன்னன் இந்திரத்யும்னன் பூரியில் ஜெகநாதரின் பிரதான கோயிலைக் கட்டினான். தற்போதைய கோயில் பத்தாம் நூற்றாண்டில் மீண்டும் கட்டப்பட்டது. கிழக்கு கங்க வம்சத்தின் முதல் அரசரான அனந்தவர்மன் சோடகங்காவால் கோயில் கட்டுமானம் தொடங்கப்பட்டது. கோயிலைப் பற்றி பல வதந்திகள் பரப்பப்படுகின்றன ஆனால் அதற்கு உறுதியான ஆதாரம் இல்லை. இக்கோயில் வைஷ்ணவ பாரம்பரியத்தின் 108 திவ்ய க்ஷேத்திரங்களில் ஒன்றாகும்.
பூரி கோயில் அதன் வருடாந்திர ரத யாத்திரை அல்லது தேர் திருவிழாவிற்கு பிரபலமானது, இதில் மூன்று முக்கிய தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்ட கோயில் ரதங்களில் இழுக்கப்படுகின்றன. பில் சவர் பழங்குடி பூசாரிகள் மற்றும் ஜகந்நாதத்தில் உள்ள பிற சமூகங்களின் பூசாரிகளால் வழிபாடு செய்யப்படுகிறது. கோவில். பெரும்பாலான இந்துக் கோயில்களில் காணப்படும் கல் மற்றும் உலோகச் சிலைகளைப் போலல்லாமல், ஜகன்னாதரின் சிலை மரத்தால் ஆனது மற்றும் ஒவ்வொரு பன்னிரெண்டு அல்லது 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது மீண்டும் செய்யப்படுகிறது.
இந்த கோவில் அனைத்து இந்துக்களுக்கும் குறிப்பாக வைணவ மரபுகளில் புனிதமானது. இராமானுஜாச்சாரியார், மத்வாச்சாரியார், நிம்பர்காச்சாரியார், வல்லபாச்சாரியார் மற்றும் இராமானந்தா போன்ற பல பெரிய வைஷ்ணவத் துறவிகள் கோயிலுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். இராமானுஜர் கோயிலுக்கு அருகில் எமர் மடத்தையும், ஆதி சங்கராச்சாரியார் நான்கு சங்கர மடங்களில் ஒன்றான கோவர்தன் மடத்தையும் நிறுவினார்.
ஜகன்னாதர், பலதேவர் மற்றும் சுபத்ரா ஆகிய மூன்று தெய்வங்களும் கோயிலில் வழிபடப்படுகின்றன. கோயிலின் உள் கருவறையில் சுதர்சன சக்ரா, மதன்மோகன், ஸ்ரீதேவி மற்றும் விஸ்வதாத்ரி ஆகிய தெய்வங்களுடன், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் இந்தத் தெய்வங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. புனிதமான வேம்பு மரக்கட்டைகளால் செதுக்கப்பட்ட இத்தெய்வங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
கட்டமைப்பு
பிரமாண்டமான கோயில் வளாகம் 4,00,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும் இது உயரமான கோட்டைச் சுவரால் சூழப்பட்டுள்ளது. இந்த 20 அடி உயரமுள்ள சுவர் மேகநாதா பச்சேரி என்று அழைக்கப்படுகிறது. குர்ம பேதா என்று அழைக்கப்படும் மற்றொரு மதில் பிரதான கோயிலைச் சுற்றி உள்ளது. இது குறைந்தது 120 கோவில்களைக் கொண்டுள்ளது. கோயிலில் நான்கு தனித்தனி பிரிவு கட்டமைப்புகள் உள்ளன, அவையாவன: (1) தேயுலா, விமானம் அல்லது கர்ப க்ரஹம். ரத்னபீடத்தில் (முத்து சிம்மாசனம்) வீற்றிருக்கின்ற மூன்று தெய்வங்கள். (2) முகஷாலா எனப்படும் முன் தாழ்வாரம், (3) நாத மந்திர் எனப்படும் நாதமண்டபம், (4) போக மண்டபம் எனப்படும் பிரசாத மண்டபம்.
பூரி ஜெகநாதர் கோவில் அதிசயங்கள்
ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு அதிசயம் மற்றும் மர்மங்கள் அடங்கி இருக்கும். அந்த வகையில் பூரி ஆலயத்தில் ஒரு தனி சிறப்பு இருக்கிறது.
கருவறை விக்ரக மர்மம்
உலகிலேயே மூலவரின் சிலை மரத்தாலான ஒரே கோயில் இதுதான் இந்த ஆலயத்தில் ஜெகநாதர் (Jagannath), பலதேவர், சுபத்திரா தேவி (கிருஷ்ணர், பலராமர் மற்றும் சுபத்திரை) ஆகியோர் ஒரே கருவறையில் இருந்து அருள் பாலிக்கின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூலவரின் சிலை உரிய சடங்குகளுடன் அதே மரத்தினால் மறு உருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
முழுமையடையா கடவுள் சிலைகள்
இக்கோவிலின் மூலவர் சிலைகள் முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் முழுமையடையாமல் இருக்கின்றன.
எதிராக பறக்கும் கொடி
இந்தக் கோவில் கோபுரத்தில் அமைந்துள்ள சுதர்சன சக்கரம் நகரின் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் நம்மை பார்ப்பது போலவே காட்சியளிக்கும். அதேபோல் அந்த சக்கரத்தின் மேலே ஒரு கொடி பறந்து கொண்டு இருக்கும் இது சாதாரண கொடி அல்ல ஏனென்றால் இந்த கொடியானது காற்றில் எந்த பக்கம் வீசுகிறதோ அதற்கு எதிர் திசையில் பறக்கும்
பொதுவாக காலையில் இருந்து மாலை வரையிலான நேரங்களில் காற்று கடலிலிருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிரே நடக்கும்
கோபுரத்தின் நிழல்
இந்த கோவில் கோபுரத்தின் நிழல் ஒருபோதும் கீழே விழுவதில்லை சூரியன் சுட்டெரித்தாலும் கோபுரத்தின் நிழலை பார்க்க முடியாது. இந்த கோவிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகள் பறப்பதில்லை.
சமைக்கும் உணவின் அதிசயம்
இந்த கோவிலில் சமைக்கப்படும் பிரசாதத்தின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாக இருக்கும் ஆனால் பக்தர்களின் எண்ணிக்கை கூடினாலும் குறைந்தாலும் தயாராகும் பிரசாதம் ஒருபோதும் பக்தர்களுக்கு பற்றாமல் போனதில்லை அதுபோல மீதாமும் ஆவதில்லை.
மடப்பள்ளியில் இன்றுவரை விரகு அடுப்பு வைத்து மண்பானைகளை கொண்டுதான் சமைக்கிறார்கள் இந்த மண் பானைகளை ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு அடுக்குகள் வைத்து சமையல் செய்யப்படுகிறது. அப்படி சமைக்கும் போது அடியில்லுள்ள பானையின் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்துவிடும் அதிசயம் நடக்கிறது .
கடற்கரை ஒட்டி ஜெகன்நாதர் இருந்தாலும் சிங்க வாசலின் முதல் படியில் கோவிலின் உட்புறமாக காலெடுத்துவைத்து உள்நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது. ஆனால் அதே சிங்கத்துவாராவின் முதல் படியில் கோவிலின் வெளிப் புறமாக நுழையும் பொழுது கடலிலிருந்து வரும் சப்தம் நமக்கு கேட்கும் இதையும் மாலை நேரங்களில் தெளிவாக உணரமுடியும்.
அவசரப்படாமல் கோவிலைச் சுற்றிப் பார்க்க குறைந்தது மூன்று மணி நேரமாவது ஆகும். ஆயினும் மக்கள் கூட்டம், பாதுகாவலர் கெடுபிடி, நமக்குள்ள நேரம் ஆகியவற்றால் நம்மால் மூல்வர்களை மட்டுமே பார்க்க இயலும்.
கோயிலைச் சுற்றிப் பார்த்த பின்னர், நாங்கள் பூரியின் கடற்கரைக்குச் சென்றோம். மெரினா கடற்கரையைப் பார்த்தவர்களுக்கு எந்த ஒரு கடற்கரையும் அழகாகத் தெரியாது. பின்னர் ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினோம். இரவும் நல்ல உணவு சாப்பிட்டோம். அடுத்த நாள் சில்கா ஏரிக்குப் போவதாக திட்டமிட்டோம்.