37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம். இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம். இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சோழவந்தான்அருகே, விக்கிரமங்கலம் காமாட்சி அம்மன் கோவில் வேப்ப மரத்தில், திடீரென பால் வடிந்ததை, பொதுமக்கள் பலர், அதிசயத்துடன் வந்து பார்த்துச் சென்றார்கள்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, காமாட்சி அம்மன் கோவில் பிராகாரத்தில் உள்ள வேப்ப மரத்தில், திடீரென பால் வடிந்ததால், கிராம மக்கள், மற்றும் பக்தர்கள், ஆச்சரியத்துடன் வந்து பார்த்தார்கள். தொடர்ந்து, வேப்ப மரத்துக்கு, மஞ்சள் துணி சுற்றி, சிறப்பு வழிபாடு செய்தார்கள்.
இந்தக் கோயிலில் கடந்த பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டுதான் கும்பாபிஷேகம் நடைபெறறு, மண்டலாபிஷேகமும் நடைபெற்றது. இதனால், அம்மனின் சக்தியாக, கோயில் பிராகாரத்தில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததாகவும், எனவே, கோவிலில் தொடர்ந்து திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கோயில் பிராகாரத்தில் உள்ள வேப்பமரத்தில், திடீரென பால் வடிந்ததை, அப்பகுதி மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் சென்றார்கள்.
இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே பெங்களூருவில் பகல்நேர ஆட்டமாக நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அகமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.
நியூசிலாந்து vs பாகிஸ்தான்
நியூசிலாந்து அணியை (401/6, ரச்சின் ரவீந்த்ரா 108, கேன் வில்லியம்சன் 95, கிளன் பிலிப்ஸ் 41, மார்க் சாப்மன் 39, கான்வே 35, டேரில் மிட்சல் 29, முகம்மது வாசிம் 3/60) பாகிஸ்தான் அணி (25.3 ஓவர்களில் 200/1, ஃபகர் ஜமான் 126*, பாபர் ஆசம் 66*) 21 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த்-லூயிஸ் முறையில் வென்றது.
பூவாதலையா வென்ற பின்னர் பாகிஸ்தான் அணி பந்துவீசத் தீர்மானித்தது. இது ஒரு ஆச்சரியமான விஷயம். ஏனெனில் பெங்களூரு விக்கட் முதல் இன்னிங்க்ஸில் பேட்டர்களுக்குச் சாதகமாக இருக்கு. ஆட்டத்தின் பிற்பாதியில் மழை வருவதற்கான வாய்ப்பும் இருந்தது. அதனால் பாகிஸ்தான் அணி பந்துவீசத் தீர்மனித்தது ஆச்சரியமாக இருந்தது. அதற்கேற்றார் போல நியூசிலாந்து அணியின் டேவன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் அருமையாக ஆடினர். பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் இரண்டு லெக்ஸ்பின்னர்களும் இல்லாமல் விளையாடியது. அதுவும் ஆச்சரியமான விஷயம். கான்வே ஆட்டமிழந்த பின்னர் ஆடவந்த வில்லியம்சன் ரவீந்திராவுடன் இணைந்து ரன் குவித்தார். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 401 ரன்கள் எடுத்திருந்தது.
பாகிஸ்தான் ஆடத் தொடங்கியபோது, அவர்களும் அதிரடியாக ஆடினர். அவர்களின் இன்னிங்க்ஸ் தொடங்கும் முன்னர் மழை குறுக்கிட்டது. ஃபகர் ஜமான் ஆட்டமிழக்காமல் 126 ரன்னும் (81 பந்துகள், 11 சிக்சர், 8 ஃபோர்), பாபர் ஆசம் ஆட்டமிழக்காமல் 66 ரன்னும் அடித்தனர். மீண்டும் ஒரு முறை மழை குறுக்கிட்டது. அதனால் இலக்கு 41 ஓவர்களில் 341 எனக் குறைக்கப்பட்டது. ஆட்டம் மறுபடி தொடங்கியபோது மழை மீண்டும் வர வாய்ப்பிருக்கிறது என நன்றாகத் தெரிந்தது. எனவே பாகிஸ்தானின் ஃபகர் ஜமானும் பாபர் ஆசமும் 23ஆவது ஓவரில் 12 ரன்னும், 24ஆவது ஓவரில் 7 ரன்னும், 25ஆவது ஓவரில் 20 ரன்னும் எடுத்தனர். அப்போது மழை வந்தது. சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டம் கைவிடப்பட்டது. பாகிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த்-லூயிஸ் முறையில் வென்றது. ஆட்டநாயகனாக ஃபகர் ஜமான் அறிவிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
ஆஸ்திரேலிய அணி (49.3 ஓவர்களில் 286, லபுசேன் 71, காமரூன் கிரீன் 47, ஸ்மித் 44, ஸ்டோயினிஸ் 35, சாம்பா 29, கிரிஸ் வோக்ஸ் 5/54) இங்கிலாந்து அணியை (48.1 ஓவரில் 253, பென் ஸ்டோக்ஸ் 64, டேவிட் மலான் 50, மொயின் அலி 42, கிரிஸ் வோக்ஸ் 32, ஆடம் சாம்பா 3/21, மிட்சல் ஸ்டார்க் 2/66, ஹேசல்வுட் 2/49, பேட் கம்மின்ஸ் 2/49) 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை முதலில் மட்டையாடச் சொன்னது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (11 ரன்) மற்றும் வார்னர் (15 ரன்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஸ்மித் மற்றும் லபுசேன் இணைந்து ஆடி அணியின் ஸ்கோரை நிலைப்படுத்த முயற்சிக்கும்போது ஸ்மித் ஆடமிழந்தார். அதன் பின்னர் இங்கிலிஷும் ஆட்டமிழந்தார். லபுசேனும் கிரீனும் ஜோடி சேர்ந்து ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் ஒரு நெடிய பார்ட்னர்ஷிப் அமையாததால் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 286 ரன் எடுத்தது.
இரண்டாவதாக ஆடவந்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பெயர்ஸ்டோ முதல் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் ஐந்தாவது ஓவரில் அவுட் ஆனார். அதன் பின்னர் டேவிட் மலானும்பென் ஸ்டோக்ஸும் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். மலான் (50 ரன்) 23ஆவது ஓவரிலும் ஜாஸ் பட்லர் (1 ரன்) 26ஆவது ஓவரிலும் பென் ஸ்டோக்ஸ் (64 ரன் 36ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த வீரர்கள் வேகமாக ரன் அடிக்க முடியவில்லை. அதனால் 40ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 60 பந்துகளில் 100 ரன் தேவைப்பட்டது. அதனை எடுக்க முடியாமல் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 48.1 ஓவரில் 253 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. ஆடம் சாம்பா ஆட்டநாயகனாக அரிவிக்கப்பட்டார்.
இன்றைய முடிவுகளின் பின்னர் இந்தியா (14 புள்ளிகள்), தென் ஆப்பிரிக்கா (12 புள்ளிகள்) இரண்டும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டன. இந்த இரண்டு அணிகளும் இன்னமும் இரண்டும் ஆட்டங்கள் ஆடவேண்டும். ஆஸ்திரேலிய அணி 10 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது (இன்னமும் 2 ஆடங்கள் மீதமுள்ளன. நியூசிலாந்து (8 புள்ளிகள், மீதம் ஒரு ஆட்டம்), பாகிஸ்தான் (8 புள்ளிகள், மீதம் ஒரு ஆட்டம்), ஆப்கானிஸ்தான் (8 புள்ளிகள், மீதம் 2 ஆட்டங்கள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
நாளை இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகள் கொல்கத்தாவில் விளையாடுகின்றன.
மதுரை: மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கல்வியின் அரசியல் தலையீடு அதிகமாக இருக்கிறது. இந்துக்களின் நம்பிக்கையுடன் எது நடைபெற்றாலும் கலவரம் என்று முத்திரை குத்துவதை விட்டுவிட்டு தமிழகத்தில் சாதிய வன்கொடுமையை ஒழிக்க பாருங்கள். -தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி அளித்தார்.
மதுரையில், தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்சியில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
புதிய கல்விக் கொள்கை பற்றிய மாநட்டிற்காக வந்துள்ளேன். எல்லா மாநிலங்களிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கல்வி அறையில் இருந்து உலக அளவிற்கு மாணவர்களை உயர்த்துவதற்காக இந்த கொள்கை. ஆனால் அதுவும் தமிழகத்தில் அரசியல் ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பது வேதனை. நீட்டிலும் சரி, புதிய கல்விக் கொள்கையிலும் சரி மாணவர்கள் சிறப்பாக செயலாற்ற தயாராக இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கல்வியின் அரசியல் தலையீடு அதிகமாக இருக்கிறது.
இது மாற்றப்பட வேண்டும். வேண்டாதவற்றில் தலையிட்டு, வேண்டியதை விட்டு விடுகிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட்டிற்கு என்றார்கள். ஆனால் இந்த கையெழுத்து இயக்கத்தின் முதல் கையெழுத்து தான் இது என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது.
பொய் சொல்லி ஆட்சிக்கு வந்து தற்போது, நீட்டை பற்றி தெரியாதவர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் லட்சியத்தோடு படிக்க ஆரம்பித்து விட்டார்கள் லட்சக்கணக்கில் கையெழுத்து வாங்கினாலும் பிரச்சனை இல்லை. மதுரை எய்ம்ஸ் நிர்வாக ரீதியாக தற்போது நடைபெற்று வருகிறது.
தம்பி உதயநிதியிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், நீங்கள் முட்டையை தூக்கி காண்பித்தீர்கள், ஈரோட்டில் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த 1200 முட்டைகள் அழுகி இருந்ததாம்.
அதனால், அன்று குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியவில்லை. இதை முதலில் அதை பாருங்கள் இது உச்ச நீதிமன்ற தீர்ப்பு, தேசிய அளவில் உள்ள கொள்கை. தென் பகுதியில் பட்டியல் இன மக்களுக்கு ஏற்பட்ட கொடுமை மன வருத்தமாக இருக்கிறது.
வட மாநிலத்தில் நடைபெற்றிருந்தால் பொங்கி எழுந்திருப்பார்கள். கண்டதேவி கோவில் தேரோட்டத்திற்கு பட்டிமன்றம் கடுமையாக சொல்லி இருக்கிறார்கள் துணை ராணுவத்தை வைத்து நாங்கள் நடத்தவா என்று கேட்கிறார்கள். இந்துக்களின் நம்பிக்கையுடன் எது நடைபெற்றாலும் கலவரம் என்று முத்திரை குத்துவதை விட்டுவிட்டு தமிழகத்தில் சாதிய வன்கொடுமையை ஒழிக்க பாருங்கள்.
13 மொழிகளில் பேசுவதெல்லாம் இருக்கட்டும் முதலில் மக்களுக்கான மொழியில் பேசி பட்டியல மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.
வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் துப்பாக்கி சூட்டை விட தமிழகத்தில் குறைவாக தான் நடைபெறுகிறது என்ற கேள்விக்கு:
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு நீதிமன்றம் உத்தரவு கொடுத்தும் நடத்த ஏன் அனுமதி மறுக்கிறார்கள். உங்களால் சட்ட ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லையா. தமிழ் தான் எங்களுக்கு மற்ற மொழிகள் வேண்டாம் என்று கூறிவிட்டு இன்று எனது பேட்டி 13 மொழிகளில் ஒளிபரப்பாகிறது என்று முதல்வர் கூறுகிறார்.
வயிற்று பிழைப்புக்காக மற்ற மொழிகளை கற்றுக் கொள்ளக்கூடாது ஆனால் அரசியல் பிழைப்புக்காக மற்றும் மொழிகளை கற்றுக் கொள்ளலாம். மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதால் தமிழ் மொழி பின்னடைய போவதில்லை.
தமிழக அரசு ஆளுநருக்குமான விரிசல் காரணத்தால் மக்களுக்கான நலத்திட்டங்கள் பாதிக்கப்படுகிறது என்ற கேள்விக்கு:
ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேச வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தில் 167 வது பிரிவின்படி மாநிலத்தில் தேவைப்படும்போது எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஆளுநரிடம் சென்று விவாதிக்க வேண்டும். நட்புறவுடன் கூடிய அணுகுமுறையை தமிழக அரசு மேற்கொள்கிறதா என்றால் இல்லை. விருந்திற்கு அழைத்தால் கூட ஏன் புறக்கணிக்க வேண்டும், இதுபோன்ற நேரங்களில் தான் பேச முடியும். புதுச்சேரியில் கூட காங்கிரஸ், திமுக வரமாட்டோம் என்று சொல்வது நல்ல பழக்கம் இல்லை. தமிழகத்தில் இந்த பிரச்சனை காரணமாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் கூட செய்தியாகுகிறது.
இந்தியா கூட்டணி நிர்வாகிகளின் தொலைபேசி ஒட்டு கேட்பு குறித்த கேள்விக்கு:
அதெல்லாம் அவர்கள் சொல்லிகொண்டே இருப்பார்கள்.
தமிழக மீனவர்கள் மட்டுமே தாக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு: இன்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை சென்றுள்ளார், மத்திய அமைச்சர் ஜெயசங்கர் பலமுறை இலங்கை சென்று வந்தார்.
நாங்கள் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டதற்கு பாரதத்திலிருந்து வந்த உதவிதான் காரணம் இலங்கை பிரதமர் சொல்லி இருக்கிறார். தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று என்னிடமே அமைச்சர் ஜெய்சங்கர் சொல்லியுள்ளார். ஆனால் , இவர்களின் ஆட்சியின் போது தான் அங்கு படுகொலைகள் நடைபெற்றது. மத்தியில் இருந்து எத்தனை அமைச்சர்கள் அங்கு சென்றார்கள்.
இந்த கூட்டணியில் பலனடைவோம் என்று சொல்கிறார்கள் ஆனால் , காவேரி நீரை கூட நட்புணர்ச்சியோடு பெற்றுத்தர முடியவில்லை. இந்த கூட்டணி வண்டு மத்தியில் இருந்த போது தான் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இவர்கள் எத்தனை முறை டெல்லி சென்று தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்துங்கள் என்று சொன்னார்கள் ஆட்சிக்கு வந்தபோது எதையும் செய்யவில்லை ஆனால் , முன்பு எல்லாத்தையும் செய்வோம் என்று சொல்லிக் கொண்டிருந்தது தான் என் கருத்து தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
திண்டுக்கல்லில் இருந்து மதுரை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டைக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பயணிகள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான கோரிக்கைகளுடன் பல்வேறு தரப்பினருக்கும் மின்னஞ்சல் செய்துள்ளனர். இது குறித்து செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தின் செயலாளர் K.H. கிருஷ்ணன் தெரிவித்த போது…
வண்டி எண் 06609 /06610 திண்டுக்கல் மதுரை திண்டுக்கல் இடையே இயக்கப்படுகின்ற பயணிகள் சிறப்பு ரயில் திண்டுக்கலில் இருந்து தினசரி காலை 8;00 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு காலை 9:16 மணிக்கு வருகின்ற ரயில் மாலை 6:00மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல்லுக்கு இரவு 7:45மணிக்கு செல்கிறது !
தினசரி காலை 9:16 மணிக்கு மதுரைக்கு வரக்கூடிய இந்த ரயிலை திருப்பரங்குன்றம், திருமங்கலம் , விருதுநகர் , திருத்தங்கல், சிவகாசி , ஸ்ரீவில்லிபுத்தூர் , இராஜபாளையம் , சங்கரன்கோவில் , பாம்புக்கோவில்சந்தை , கடையநல்லூர், தென்காசி , செங்கோட்டை வரை உள்ள மக்கள் பயன்படுத்தும் வகையில் நீட்டிப்பது மிக பயனுள்ளதாகவும் எளிதானதாகவும் இருக்கும்
ஏற்கனவே பல ரயில்கள் நீட்டிப்பு காரணமாக மதுரை செல்லும் மக்களின் நெரிசலை குறைக்கும் வகையில் இந்த திண்டுக்கல் மதுரை திண்டுக்கல் பயணிகள் சிறப்பு ரயிலை சிவகாசி வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பது நன்று
திராவிட மாடல் ஆட்சியின் சமூகநீதி , சமய நல்லிணக்கம் இதுதானா? என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி திருக்கோவில் தேரோட்டம் தொடர்ந்து சமூக பிரச்சினையாக இருப்பதற்கு திராவிட அரசியல் தான் காரணம் என்பதில் சந்தேகமில்லை. கடந்த இரண்டாண்டுகளாக பிரச்சினை இன்னமும் அதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
இரு சமூகங்களிடையே பிரச்சினை எனக்கூறி அதிகாரிகளை கொண்டு கோவில்களை இழுத்து மூடுவதான் தீர்வா..?
பள்ளிகளில் தான் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தெரியாமல் பழக வேண்டும் என்பதற்காகத்தான் பள்ளிகளில் மாணவர்கள் சீருடை அணியும் திட்டம் உள்ளது . ஆனால் அங்கேயும் மத அடையாளமான ஹிஜாப் சலுகை தந்து அதனையும் சீர்குலைத்தது திராவிட மாடல் ஆட்சி.
அதைவிட கொடுமை மனித மலத்தை குடிநீர் தொட்டியில் கலப்பது, பள்ளிக்கூட சுவர்களில்மற்றும் பூட்டில் கூட மலத்தை பூசுவது தொடர்கதையாக இருக்கிறது. இது எவ்வளவு அநாகரிகமான செயல்? மக்கள் பிரச்சினையை திசைதிருப்ப நடத்தும் நாடகம் இது என்றே மக்கள் பேசுகின்றனர்.
அரசு எல்லோருக்குமானது என்ற நிலையில் செயல்பட வேண்டும். சமுதாய மக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட அதிகாரிகளை செயல்பட வைக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் சமூக அக்கறையுடன் அனைத்து சமூகத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு பதிலாக கோவிலை இழுத்து மூடுவதில் தான் அதிகாரத்தை காண்பிக்கிறார்கள்.
கண்டதேவி தேரோட்டம் பிரச்சினை ஏற்பட்டபோது இது குறித்து கவலை தெரிவித்து தீர்வுக்கு அரசுடன் இந்து முன்னணி துணை நிற்கும் என்று இந்து முன்னனி நிறுவனர் வீரத்துறவி ஐயா இராம கோபாலன் அவர்கள் தெரிவித்தார்.
இந்து சமுதாயத்தில் ஒற்றுமை ஒருமைப்பாடு ஏற்பட இந்து முன்னணி தொடர்ந்து பாடுபடும் என உறுதியளிக்கிறோம்.
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை கண்டதேவி தேரோட்டம் பற்றி கடுமையான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறது.
மாநில அரசால் நடத்த முடியவில்லை என்றால் துணை ராணுவப்படையை வைத்து நடத்திக் காட்டவா என்று நீதிபதி கூறியிருப்பதற்கு திராவிட மாடல் வெட்கித் தலைகுனிய வேண்டும்.. .
ஆனால் திராவிட மாடல் தமிழக அரசு நீதிமன்றத்தின் கருத்துக்களை சிறிதும் மதிப்பதில்லை. உதாரணமாக ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதியளித்து உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவை மதிக்காமல் உச்ச நீதிமன்றம் சென்று உள்ளது.
இந்த வழக்கில் வாதாட ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கோடிக்கணக்கில் பணம் வாங்கும் வழக்கறிஞர் கபில்சிபில் அவர்களை வைத்து வாதாடுகிறது. அந்தளவு சிக்கலான வழக்கா இது? இதுபோல் நீதிமன்றத்தின் கருத்தை தமிழக அரசு அலட்சியம் செய்து வருவது விரும்பத்தகாத செயல்.
தேரோட்டம் என்பது சமுதாய நல்லிணக்கம் ஏற்படுத்தும் பெருவிழா என்பதை எல்லோரும் உணர வேண்டும். திருத்தேரினை அனைத்து சமுதாயமும் ஒற்றுமையாக சேர்ந்து வடம் பிடித்து இழுத்திடும் போது , மக்களின் ஒற்றுமையின் சக்தியைக் கண்டு இறைவன் மகிழ்ந்து அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம். எனவே ஒவ்வொரு ஊரிலும் தேரோட்டம் நடைபெற வேண்டும். அதனால் வெவ்வேறு சமுதாய மக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட்டு ஒற்றுமையின் சக்தி வெளிப்பட வேண்டும்.
இதனை கருத்தில் கொண்டு கண்டதேவி தேரோட்டமானது நடைபெற அரசும் மக்களும் ஒத்துழைத்து இறைவனின் அருளை பெற இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
மதுரை: மதுரை நகரில் பல்வேறு இடங்களில் தெருக்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு இருப்பதால், கழிவுநீர் செல்ல வழி இல்லாமல், மழை நீருடன் சேர்ந்து ஆறு போல தோற்றமளிக்கிறது. மதுரை என்றாலே ஞாபகத்துக்கு வருவது ,வைகை ஆறு மற்றும் மீனாட்சி அம்மன் கோவில், மல்லிகை பூ தான். ஆனால், தற்பொழுது மதுரை நகரில் புதிய ஆறு தெருக்களில் உருவெடுத்துள்ளது. மதுரை மாநகராட்சி சார்பில், மதுரை நகரில் குழாயில் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அவ்வாறு குழாயில் பதிக்கும் போது, ஒப்பந்ததாரர்கள் தண்ணீர் குடிநீர் குழாயில் உடைத்தும், கழிவு நீர் குழாய்களை சேதப்படுத்தியும் விடுவதால், மழைக் காலங்களில் ஆங்காங்கே தெருக்களில் கழிவுநீரும் மழை நீரும் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது . இதனால் சாலைகளில் இருசக்கர வாகனம் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லும் போது பல்வேறு இடையூறுகள் ஏற்படுவது உடன், பள்ளங்களின் தவறி விழுகின்ற நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து , மதுரை மாநகராட்சி மேயர் ,ஆணையாளர், வார்டு கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர்கள் கவனத்திற்கு பொது மக்கள் கொண்டு சென்றும், சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை சரிவர மூட நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரை மேலமடை 36-வது வார்டு மருதுபாண்டி தெருவில், பலத்த மழையால் கழிவு நீரும் மழை நீரும் சேர்ந்து ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதை பார்த்த பொதுமக்கள் மதுரையில் புதிய ஆறு உருவெடுத்துகிறது என கூறியதை கேட்க முடிந்தது. மதுரை மாநகரில் ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்களை, மதுரை மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சீர் செய்தும், உடைந்த கழிவுநீர் குடிநீர் குழாய்களை சரிப்படுத்தியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் முத்துராமன் கூறியது: “மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர், கோமதிபுரம், ஜூபிலி டவுன் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலையில் தோன்றிய பள்ளங்கள் சரிவர மூடப்படாததால், மலைக் காலங்களில் கழிவு நீரும் மழை நீரும் தெருக்களி குளம் போல தேங்கியுள்ளது. மதுரை தாசிலா நகர் மருதுபாண்டியர் தெரு ,காதர் மைதீன் தெரு, அன்பு மலர் தெரு, வீரவாஞ்சி தெரு, அல்லிலி வீதி, திருக்குறள் வீதி ஆகிய பகுதிகளில் சாலையில் ஆறு போல மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது இதை தடுக்க மதுரை மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியருகே மின்மாற்றியில் பற்றிய தீவிபத்த 4 மாணவிகள் மயக்கம் நள்ளிரவில் மாணவிகள் விடுதியை விட்டு ஒட்டம் பிடித்ததால் பரபரப்பு:
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் மதுரையில் மாலை முதல் கனமழை பெய்து வந்தது.
இந்நிலையில் இரவிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இயங்கி வரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் பெய்த மழையின் போது பல்கலைக்கழக பெண்கள் விடுதி அருகே இருந்த மின் மாற்றியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் தீயானது கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது மின்மாற்றி அருகே பெண்கள் விடுதி மாணவிகள் அதிர்ச்சி குள்ளாகி அங்கிருந்த பல்கலைகழக நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சில விடுதி மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே தீயணைப்புத் துறையினருக்கும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த மதுரை பெரியார் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரண்டு தீயணைப்பு நிலையங்களில் இருந்து இரண்டு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் விரைந்து வந்தனர். மழை என்பதால் தீ தானாகவே அணைந்தது
இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவிகள் விடுதி வளாகம் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது இதில் நான்கு மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அருகில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மழையினால் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவி விடுதி அருகே இருந்த மின் கம்பத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவி விடுதி வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் காணப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிகள் விடுதியை விட்டு நள்ளிரவில் ஒட்டம் பிடித்ததால் பரபரப்பானது..
தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருவாரூர், தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, நாகைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் 03-11-2023 காலை 0830 மணி முதல் 04-11-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோவை) 13; கமுதி (இராமநாதபுரம்), சிவகிரி (தென்காசி), மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை) தலா 12;
மண்டலம் 03 புழல் சென்னை மாநகராட்சி, புழல் ARG (திருவள்ளூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) தலா 11; அதிராமப்பட்டினம் AWS (தஞ்சாவூர்), சிங்கம்புணரி (சிவகங்கை) தலா 10;
மண்டலம் 12 மீனம்பாக்கம், சென்னை விமான நிலையம், ஆலந்தூர் (சென்னை) தலா 9;
Src குடிதாங்கி (கடலூர்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), மதுரை நகரம் (மதுரை), ஆயின்குடி, காரையூர் (புதுக்கோட்டை) தலா 8;
மண்டலம் 13 U39 அடையாறு, மண்டலம் 14 பெருங்குடி, மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), நத்தம், திண்டுக்கல் (திண்டுக்கல்), நகுடி, கிளானிலை, ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), தீர்த்தண்டதானம், பரமக்குடி (இராமநாதபுரம்), அழகரை தலா 7;
“இன்னார்க்கு இதுதான்னு சொல்றது ஆரியம். எல்லாருக்கும் எதுவும் உண்டுன்னு சொல்றது திராவிடம்” என்று சமீபத்தில் பேசி இருக்கிறார் மு. க. ஸ்டாலின். அவர் பேசிய வீடியோ இன்டர்நெட்டில் இருக்கிறது.
அவ்வப்போது மக்களை, அதுவும் குறிப்பிட்ட ஒரு வகுப்பு மக்களை, நேரடியாகவும் மறைமுகமாகவும் இகழ்ந்தும் பேதப் படுத்தியும் பேசுவது திமுக தலைவர்களின் வாடிக்கை – பிழைப்பும் கூட.
தமிழக முதல்வர் ஆனபின் தனது ஆட்சிக்கு “திராவிட மாடல் ஆட்சி” என்று பளபளவென்ற பெயரைச் சூட்டி மகிழ்ந்தார் ஸ்டாலின். அதில் உள்ள ‘திராவிடம்’, ‘திராவிட மாடல்’ என்ற சொற்களுக்கு அர்த்தம் சொல்ல முற்பட்டு தாராளமாக உளறுவது அவர் வழக்கம். அதற்கு ஒரு உதாரணம் அவர் இப்போது பேசியது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்களைக் கேட்கும்போது, அவர்மீது உங்களுக்குப் பரிதாபம் ஏற்படுகிறதா? அதே உணர்வு ஸ்டாலின் பேசும்போதும் அவரிடம் உங்களுக்கு ஏற்படுகிறதா? அப்படித்தான் இருக்க வேண்டும். காரணம்: அவர்கள் இருவரும் பொதுவெளியில் பொலபொலவென்று பிதற்றுவது, தங்களின் பிதற்றல்களைத் தத்துவக் கருத்துக்களாக பாவிப்பது என்பதுதான்.
‘எல்லாருக்கும் எதுவும் உண்டு’ என்பது திராவிடம் என்று ஸ்டாலின் சொன்னதற்கு அர்த்தம் அவருக்கே தெரியாது. ஏதாவது இருந்தால்தானே அவருக்கும் தெரிவதற்கு?
ஓட்டப் பந்தயத்தில் ஓடும் எல்லா வீரர்களுக்கும் பரிசு கிடைக்கிறதா? முதல் மூன்று வீரர்களுக்குத் தானே, அதிலும் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்ற வரிசையில் தானே, பரிசுகள் தரப் படுகின்றன?
தலைக்குமேல் கூரை இல்லாதவர்கள், வேலையும் வருமானமும் இல்லாத இளைஞர்கள், தமிழ்நாட்டிலும் உண்டே?
எந்த அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்தினாலும், விண்ணப்பிக்கிற எல்லா மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காதே?
எல்லாக் குடும்பத் தலைவிகளுக்கும் ஸ்டாலின் அரசு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் அளிக்கிறதா? ‘தகுதியுள்ளவர்களுக்கு’ என்று பாகுபடுத்தித்தானே அவர் அரசு வழங்குகிறது?
கலைஞர் மகனாகப் பிறக்காவிட்டால் ஸ்டாலின் திமுக தலைவர் பதவியை, முதல் அமைச்சர் நாற்காலியை, கனவிலும் நினைக்க முடியுமா? ஸ்டாலின் மகனாக இல்லாவிட்டால் உதயநிதிதான் எளிதாக எம்.எல்.ஏ, அமைச்சர் என்றாகிக் கட்சியில் அனைவரும் சலாம் வைக்கும் இளவரசராக ஜொலிக்க முடியுமா?
ஒரு எளிய உண்மை: மனிதர்கள் சம அளவிலான புத்திசாலித்தனம், சாமர்த்தியம், படிப்பறிவு, திறமைகள், அதிர்ஷ்டம் உடையவர்கள் அல்ல. ஒரு குடும்பத்தில் பிள்ளைகளாகப் பிறந்து சமமாக வளர்க்கப் படுகிறவர்கள் இடையேயும் இயற்கையான குணாதிசய வேறுபாடு காணப்படும். அதற்கு ஏற்றபடிதான் மக்களின் வாய்ப்புகள், வருமானம், வாழ்க்கை வசதிகள் அமையும்.
பொதுமக்களுக்கு சம வாய்ப்புகள் அளிப்பதைத் தான் ஒரு அரசாங்கம் தன் பங்கிற்குச் செய்ய முடியும் – அதுவும் அவர்கள் அரசாங்கத்தை அணுகும்போது, அரசாங்கப் பலன்களை நாடும்போது. அப்போதும் கூட, மனிதர்களிடம் இயற்கையாக உள்ள திறமையைப் பொது நன்மை கருதி அரசாங்கம் பெரிதாகப் புறக்கணிக்கக் கூடாது.
உலகெங்கும் இதுதானே நடக்கக் கூடியது? இதன் விளைவாக ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்று கிடைக்காது. ‘இன்னார்க்கு இதுதான்’ என்றுதான் ஆகும். ‘எனக்கு அது வேண்டும், இது வேண்டும், இன்னும் வேண்டும்’ என்று ஒருவர் ஆசைப்பட்டால் அதற்கான போட்டியில் அவர் ஈடுபட வேண்டும். அவரது திறமை, அனுபவம், பொருளாதாரப் பின்னணி, முனைப்பு மற்றும் அதிர்ஷ்டம் எல்லாம் சேர்ந்து அவருக்கு வெற்றியைத் தரலாம், தராமலும் போகலாம்.
ஒருவரிடம் எல்லாம் குறைவாக இருந்தாலும், அபரிதமான அதிர்ஷ்டத்தால் மட்டுமே அவருக்கு அரிய வாய்ப்புகளும் வெற்றியும் வந்து சேரலாம். இதுதான் உலகம். இதைப் புரிந்துகொண்டு, ஆனால் இதைப் பற்றிப் பேசாமல், அனைத்து மக்களுக்கும் பொது வசதிகள் மற்றும் வாய்ப்புகளை அதிகப்படுத்த உழைக்கும் திறமையான தலைவர் ஒரு நாட்டிற்குத் தேவை. அவர்தான் தேசத்தை உயர்த்தி மக்கள் நெஞ்சில் இடம் பெறும் ஒரு தலைவராக உயர முடியும்.
‘இன்னார்க்கு இதுதான்’ என்பது வாழ்வின் உண்மையாக இருக்கிறது – சிலவற்றில் நியாயமாக, சிலவற்றில் நியாயம் இல்லாமல், இன்னும் சிலவற்றில் போட்டியாளர்கள் எவருக்கு வெற்றி கிடைத்தாலும் அது அநியாயம் என்பதாக. இந்த உண்மையை ஸ்டாலினே ஏற்கும் ஒரு உதாரணத்துடன் எடுத்துச் சொன்னால் அவருக்கு விளங்க வேண்டும்.
கருணாநிதிக்கு மு. க. அழகிரியும் மகன், மு. க. ஸ்டாலினும் மகன். இருவரும் அப்பா காலம் முதல் பல வருடங்கள் அரசியலில் ஈடுபட்டவர்கள். இருவரும் அப்பாவுக்கு அடுத்ததாகக் கட்சியில் உச்சம் தொட முனைந்தவர்கள். இன்று நிலைமை என்ன? அழகிரி ஒதுக்கப்பட்டு அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. மு. க. ஸ்டாலின் திமுக தலைவராக, முதல் அமைச்சராக, அதிகாரம் மிக்கவராக வளர்ந்திருக்கிறார்.
‘இன்னார்க்கு இதுதான்’ என்பது அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் நேரடி அனுபவமாக இருக்கிறது. இது வாழ்வின் சாதாரண உண்மை. இதில் ஆரியம், திராவிடம் என்ற கப்ஸாக்களுக்கு இடமில்லை. ஸ்டாலின் பிதற்றுவதை நிறுத்தட்டும்!
Author: R. Veera Raghavan, Advocate, Chennai
https://rvr-india.blogspot.com
சென்னை திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம், அந்நிறுவன அதிகாரிகளான திருவல்லிக்கேணி அமுதசேகரன், பட்டினப்பாக்கம் தினகரன் வீடுகள், தியாகராய நகரில் அப்பாசாமி ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரவி அப்பாசாமி வீடு, அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரெசிடென்சி டவர் நட்சத்திர ஓட்டல், ரெசிடென்சி ஒட்டல், கோட்டூர்புரம் அப்பாசாமி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் உள்ளிட்ட தொழிலதிபர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்ட்து.
சென்னை அண்ணா நகர் மேற்கில் கட்டுமான தொழிலதிபர் கமலாகர் ரெட்டி வீடு, ஷெனாய் நகரில் வசிக்கும் திருவண்ணாமலை மாவட்ட தொழிலதிபர் செவ்வேல், புரசைவாக்கத்தில் டிவிஎச் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒப்பந்ததாரர் அமித், வேப்பேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஃபைனான்சியர் கமல் ஜெயின் வீடுகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
திருவண்ணாமலையில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் துரைவெங்கட் வீடு, அலுவலகம், தண்டராம்பட்டு அடுத்த வரகூரில் கிரானைட் நிறுவனம், விழுப்புரம் கிழக்கு சண்முகாபுரம் காலனியில் கிரானைட் தொழிலதிபர் பிரேம்நாத் வீடு, அவரது சொகுசு விடுதி, வழுதரெட்டியில் உள்ள கிரானைட் கடை, கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள மோட்டார் விற்பனை நிலையத்திலும் சோதனை நடந்தது.
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரத்தில் பார்சன் குடியிருப்பு வளாகத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயக்குமார், அவரது மகன் ஸ்ரீராம் வீடுகளிலும் சோதனை நடந்தது. ஜெயக்குமாரின் மனைவி மீனா, திமுக.,கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவில் மாநில துணை செயலாளராக உள்ளார்.
சிங்காநல்லூர் பகுதி திமுக., செயலாளர் எஸ்.எம்.சாமி வீடு, சௌரிபாளையத்தில் உள்ள கட்டுமான நிறுவனம், கரூரில் திமுக., அமைச்சர் எ.வ.வேலு உதவியாளர் சுரேஷ் வீடு, காந்திபுரத்தில் உள்ள அவரது நிதி நிறுவனம், கரூர் பெரியார் நகரில் முன்னாள் எம்எல்ஏ., வாசுகியின் சகோதரி பத்மா வீடு, தோட்டக்குறிச்சி முன்னாள் பேரூராட்சி தலைவர் சக்திவேல் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.