Home Blog Page 279

TN BJP Forms ‘Startup Cell’; Tenkasi Ananthan Ayyasamy Appointed as Convenor!

0
tenkasi anandan in bjp startup cell
#tenkasi anandan in bjp startup cell

Tamil Nadu BJP Forms ‘Startup Cell’; Former Intel Engineering Director Ananthan Ayyasamy From Tenkasi Appointed Convenor:

A statement by TN BJP President K.Annamalai as follows:

BJP Tamil Nadu’s Start-up Cell

To drive the vision of our Honourable Prime Minister Thiru Narendra Modi avl, BJP Tamil Nadu has expanded our cells dedicated to governance and community development over the past two years. These cells have significantly broadened the party’s outreach and engagement, including the Sports & Skill Development Cell, Central Welfare Scheme Cell, Data Management Cell and the Spiritual & Temple Development Cell.
The Data Management Cell has brought data-driven strategies to the forefront, facilitating evidence-based decision-making and enhancing the party’s ability to personally connect with voters.

The Spiritual & Temple Development Cell’s establishment underscores the Party’s commitment to preserving and promoting Tamil Nadu’s spirituality & rich cultural heritage.
The Sports & Skill Development Cell has nurtured talent at the grassroots level, allowing BJP Tamil Nadu to connect with the youth and help foster a skilled workforce.

The Central Welfare Scheme Cell has played a pivotal role in ensuring that the benefits of Central Government welfare programs reach the intended beneficiaries efficiently in line with our Party’s commitment to social justice and inclusive development.

These cells and our vibrant existing Wings & Cells have helped the BJP Tamil Nadu expand its reach and influence by addressing a broad spectrum of issues important to our people. By demonstrating a proactive approach, the party has reached new avenues of engagement and service, strengthening its position as a proactive political force in Tamil Nadu.

Today, BJP Tamil Nadu is taking a progressive step by launching a Start-up Cell to foster innovation and serve as a vital communication bridge for aspiring entrepreneurs. This initiative underscores the party’s commitment to promoting economic growth and creating opportunities for the talented and innovative minds in the state, ultimately contributing to our State’s development and prosperity.

Thiru Ananthan Ayyasamy, former Engineering Director at Intel & presently an active Karyakartha of BJP Tamil Nadu in Tenkasi, is appointed as the Convenor of this Start-up Cell.
Ever in Services of Nation Yours Sincerely
K. Annamalai

TET தேர்வு வெயிட்டேஜ் மதிப்பெண் வெளியீடு

Tet - 2026

TET தேர்வு வெயிட்டேஜ் மதிப்பெண் வெளியீடு.

2012 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 5.5 மதிப்பெண் போனஸ்…

2013 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 5 மதிப்பெண் போனஸ்…

2014 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 4.5 மதிப்பெண் போனஸ்…

2017 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 3 மதிப்பெண் போனஸ்…

2019 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 2 மதிப்பெண் போனஸ்…

2022 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 0.5 மதிப்பெண் போனஸ் வழங்கப்படும்

‘நீட் எதிர்ப்பு’ திமுக., அமைச்சர் எ.வ.வேலுவின் மருத்துவக் கல்லூரி உள்பட… ஐ.டி. சோதனை நீடிப்பு!

avvelu minister speech - 2026

தங்களது மருத்துவக் கல்லூரிகள் மூலம் முறையற்ற சொத்துக் குவிப்புக்கு வழி தேடிக் கொண்டிருந்த தமிழக அமைச்சர்கள் சிலர், இப்போது நீட் தேர்வு எதிர்ப்பு அரசியலை, மக்களிடம் பொய்யான வகையில் முன் வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில், திமுக அமைச்சர் எ வ வேலுவின் வீடு, மருத்துவக் கல்லூரி உள்பட பல இடங்களில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள எ. வ. வேலுவுக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் பல்வேறு இடங்களில் அவருக்கு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, கிரானைட் குவாரி, பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

திருவண்ணாமலையை அடுத்த தென்மாத்தூர் வேலு நகரில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக உள்ள அருணை கல்வி நிறுவன வளாகத்தில், அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பொறியியல் கல்லூரி, ஃபார்மஸி கல்லூரி, செவிலியர் கல்லூரி உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன.

இந்த வளாகத்தில் தான் சர்வதேச நட்சத்திர விடுதிக்கு இணையாக பல்வேறு முக்கிய பிரமுகர்கள் தங்கும் விருந்தினர் மாளிகை மற்றும் எ.வ.வேலுவின் வீடும் உள்ளது.

இந்நிலையில், நேற்று காலை சுமார் 6 மணி அளவில் அமைச்சர் எ.வ.வேலு தனது வீட்டில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, 25 கார், வேன்களில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புடன், 75-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள், அவரது கல்வி நிறுவன வளாகத்தில் நுழைந்தனர்.

அவர்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் துணையுடன் தனித்தனியாக பிரிந்து, அறக்கட்டளை அலுவலகம், பன்னாட்டு பள்ளி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, வீடு மற்றும் விருந்தினர் மாளிகை என 6 இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

கணினிகளில் உள்ள தரவுகள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு, அவரது மனைவி ஜீவா வேலு, மகன் குமரன் மற்றும் இவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பல்வேறு இடங்களிலும் சோதனை நடக்கும் தகவல் அறிந்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலு வீட்டுக்கு வந்து காத்திருந்தனர். ஆனால், அங்கு சோதனை எதுவும் நடக்கவில்லை.

தமிழகத்தில் எ.வ.வேலு, அவருக்கு நெருக்கமானவர்கள், ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய 80-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் பல டிஜிட்டல் தரவுகள், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிந்த பிறகே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தெரிவிக்க முடியும் என வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எ.வ. வேலுவுக்குச் சொந்தமான இடங்களில், சோதனை மேலும் ஓரிரு நாள் நீடிக்கும் என்று தெரிகிறது.

எக்கச்சக்க சொத்துக் குவிப்பு: திமுக., அமைச்சர் எ.வ. வேலு இடங்களில் வருமான வரி சோதனை!

avvelu minister speech - 2026

ென்னை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில், தமிழக மாநில அமைச்சர் எ.வ.வேலு வீடு உட்பட 80 இடங்களில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கோவை, கரூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தமிழக மாநில அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, கல்லூரிகள், அவருக்கு நெருக்கமானவர்கள், ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்கள், கட்டுமான நிறுவனங்கள் என 80 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் கவனித்து வரும் பொதுப்பணித் துறையின் கீழ் பல்வேறு அரசு அலுவலக கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள், குடியிருப்புகள், பள்ளி வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைத் துறை சார்பில் பாலங்கள், சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டுவருகின்றன.

குறிப்பாக திமுக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு பாலங்கள், குறிப்பாக, கிராமங்களில் இருக்கும் நல்ல நிலையில் இருந்த பாலங்கள் கூட இடிக்கப்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, அல்லது மாற்று பாதையில் விடப்பட்டு, மீண்டும் கட்டப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பல்வேறு புகார்களை இது தொடர்பாக தெரிவித்து வந்தனர்.

இதற்கான ஒப்பந்தங்கள், பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், ஆதாய நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன்மூலம் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் குவித்து, வரிஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதுதொடர்பாக வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தகவல்களை திரட்டி ஆய்வு மேற்கொண்டனர். இதில், வரி ஏய்ப்பு நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவந்த நிலையில், அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்கள், கட்டிட ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

சென்னையில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

2000 ரூபாய் நோட்டை இப்போதும் மாற்ற ஒரு வழி!

Rs 2000 notes - 2026

தபால் வழியாக ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம் என்று ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது.

தபால் வழியாக ரூ.2,000 நோட்டுகளை ரிசா்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும் தங்களது வங்கி கணக்கில் பற்று வைத்துக் கொள்ளவும் அக்டோபா்- 7 வரை மத்திய அரசு அவகாசம் அளித்தது.

அதன் பின்னா் ரிசா்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளவோ அல்லது தங்களுடைய வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளவோ ரிசா்வ் வங்கி அனுமதி அளித்தது. இதற்கு எவ்வித கால அவகாசமும் தற்போது வரை விதிக்கப்படவில்லை.

இந்நிலையில் ரிசா்வ் வங்கி கிளை அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற மக்கள் கூடுவதைத் தவிா்க்கும் பொருட்டு, தபால் வழியாக ரிசா்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி, தொகையை தங்களின் வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என ஆா்பிஐ அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு மே மாதம், 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக மத்திய வங்கி அறிவித்தது. நாட்டிலுள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் முதலில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை டெபாசிட் மற்றும் நாணயத்தை மாற்றுவதற்கான வசதி இருந்தது, பின்னர் அது அக்டோபர் 7 வரை நீட்டிக்கப்பட்டது. 

ரூ. 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வசதியும் மே 19, 2023 முதல் ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள். அக்டோபர் 9 முதல், ரிசர்வ் வங்கி வழங்கும் அலுவலகங்கள், கவுன்டர்கள் முழுவதும் ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றுவதுடன், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து அவர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வதற்காக ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்கின்றன… என்ற அறிவிப்பின் மூலம் மக்களுக்கு கிடைத்தது.

புழக்கத்தில் இருந்த ரூ.2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, மே 19 அன்று திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டபோது ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்தது, அக்டோபர் 31, 2023 அன்று ரூ.0.10 லட்சம் கோடியாகக் குறைந்தது.

WC 2023: ஆஸி., நியூஸி.,க்கு இணையாக ஆப்கன் அணி!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
30ஆம் நாள் – நெதர்லாந்து vs ஆப்கானிஸ்தான்
லக்னோ – 03.11.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

நெதர்லாந்து அணியை (46.3 ஓவர்களில் 179, சைபிராண்ட் எங்கல்பிரக்ட் 59, மேக்ஸ் ஓ டவுட் 42, காலின் ஆக்கர்மேன் 29, முகம்மது நபி 3/28, நூர் அகமது 2/31) ஆப்கானிஸ்தான் அணி (31.3 ஓவரில் 181/3, ரஹமத் ஷா 52, ஹஷ்மத்துல்லா ஷஹீதி 56*, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் 31*, வான் பீக் 1/30, மெர்வீ 1/27, சுல்ஃபிகர் 1/21) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற நெதர்லாந்து அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. முதல் ஓவரிலேயே அந்த அணியின் தொடக்க வீரர் வெஸ்லி பரேசி 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 11ஆவது ஓவர் முடிவில் ஒரு விக்கட் இழப்பிற்கு 72 ரன் என்ற நிலையில் இருந்த நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளும் இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது .

அந்த அணியின் பேட்டர்களின் தடுமாற்றத்தையும் ஆப்கானிஸ்தான் அணியின் அருமையான ஃபீல்டிங்கையும் இந்த இன்னிங்க்ஸ் முழுவதும் காணமுடிந்தது. நாலு ரன் அவுட்டுகள் என்பது ஒரு போட்டியில் நடக்கும் விஷயமல்ல.

இரண்டாவதாக ஆடவந்த ஆப்கானிஸ்தான் அணி 180 ரன் என்ற இலக்கை பதற்றமின்றி எளிதாக அடைந்தது. ரஹமத் ஷா (52 ரன்), ஹஷ்மத்துல்லா ஷஹீதி (ஆட்டமிழக்காமல் 56 ரன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் (ஆட்டமிழக்காமல் 31 ரன்) ஆகியோரின் ஆட்டத்தினால் அந்த அணி 31.3 ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 181 ரன் எடுத்து நெதர்லாந்து அணியை 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் முகம்மது நபி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றியுடன் ஆப்கானிஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் புள்ளிக் கணக்கில் ஒன்றாக உள்ளது.

நாளை இரண்டு ஆட்டங்கள் நடக்க உள்ளன. முதலாவது ஆட்டம் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே பெங்களூருவில் பகல் நேர ஆட்டமாக நடைபெறும்.

இரண்டாவது ஆட்டம் ஆஸ்திரேலியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் அரையிறுதி ஆட்டத்திற்குச் செல்லுமா என்பதை நாளைய ஆட்டங்கள் முடிவுசெய்யும்.

Consider UGC in search Committee; case adjourned to Nov. 21

0
chennai highcourt - 2026

B. Jagannath, An Advocate & legal practitioner with 15 Years of Experience at Madras High Court, had filed a Public Interest Litigation against the Constitution of the Search Committee for appointment of Vice Chancellor for Madras University contending that leaving out the Nominee of the UGC – Search Committee had been formed by Education Department. The said matter was listed on 18.10.2023 & was adjourned for 03.11.2023.

The said matter was taken up today for further hearing wherein, for Petitioner B. Jagannath, N. L. Rajah, Senior Advocate appearing for R.Kannan had contended that the Impugned Order passed by the First Respondent State of Tamil Nadu is against the 2018 UGC Regulations, plethora of Supreme Court Decisions including the Landmark Gambirdan Gadvi, Sreejith & Praneeth Case as laid down by the Supreme Court.

This factual position has now become Final wherein the State Government in a Search Committee ought to have the UGC Nominee. For UGC – Learned Additional Solicitor General ARL Sundaresan Sir had appeared on behalf of Rabu Manohar Standing Counsel for UGC & had filed counter. Specifically referring to Para 7, it was argued that UGC had indeed given Grant to the Madras University.

Upon receipt of Grant in Crores from the UGC the State cannot Unilaterally appoint Search Committee for post of VC in Madras University. The Learned Advocate General of State of Tamil Nadu appearing for Education Department had vehemently opposed the Writ Petition.

The Learned AG had contended that the Public Interest Litigation should be dismissed as non maintainable & that the relief asked for is in realm of Service law & a PIL cannot lie in this matter & that another matter had been filed in the Supreme Court specifically seeking to protect Federalism & curb the power of Governor which is required due to actions of the Governor.

The Learned AG further contended that the said matter was filed by a Petitioner who had earlier filed various Petitions against the State Government. Further more, the present case cannot be considered as the Madras University Rules 1923 as amended in 1967 specifically Section 11 provides for Constitution of Search Committee for appointment of Vice Chancellor & that the same has been established & followed as a well laid precedent for more than 55 years & surreptitiously all of a Sudden Petitioner seeks to Superimpose UGC regulations on the State Education Department.

The Learned First Division Bench of the Honourable Madras High Court cut short the Advocate General & pointed out that they were not concerned with any executive actions & were only on the issue of UGC nominee in search committee for appointment of VC based upon UGC Regulations.

Furthermore, the Learned Division Bench had also highlighted that the recent position of Supreme Court is now clear that the Nomination of One Member of UGC should be there in Accordance with Law & that to prevent the Quo Warranto from being filed in the future the Bench is of the Considered view that the Constitution of Search Committee should have one Member Nominated from UGC & leaving out the UGC State Government cannot appoint Search Committee.

The Learned AG had replied that the Madras University had not received any grant from UGC & this was vehemently opposed & denied & objected to by Learned ASG on behalf of UGC & had further submitted that the UGC had in-fact given grants in Crores & was ready to share them with the Bench.

Taking into consideration the Submissions of the Learned ASG – pertaining to funding for Madras University & further adjourned the matter to 21.11.2023

மதுரை பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!

governor r n ravi in madurai - 2026
#image_title

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்து பின்னர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று விட்டு, காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெறும் பட்டமளிப்பு விழாலும் பங்கேற்று, இன்று மதியம் சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்தார். ஏர் இந்தியா விமானம் மூலம், மதுரையிலிருந்து சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்த ஆளுநருக்கு வழக்கத்தைக் காட்டிலும் இந்த முறை கூடுதலாக காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மதுரை விமான நிலையத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டன.

ஆளுநர் ஆர். என் ரவி. – திருக்குறள் எனக்கு மிகவும் பிடிக்கும்!

மதுரை காமராஜ் பல்கலையின் 55வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர், விழா முடிந்த பின் பதக்கம் பெற்ற பிஎச்.டி., முதுகலை, இளங்கலை மாணவர்களிடம் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது அவர், “ஐ.பி.எஸ்., பணி, ஆளுநர் பதவி இதில் எதில் எளிது, ஆர்வம் உள்ளது என கேட்கின்றீர்கள். எந்தப் பணியைச் செய்தாலும் அதில் ஆர்வம் இருக்க வேண்டும். விரும்பிச் செய்ய வேண்டும். அப்படித்தான் என் பணிகள் எதுவாக இருந்தாலும் விரும்பிச் செய்கிறேன். நேர்மையாக நடக்கிறேன். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்து, நடந்து சென்றுதான் பள்ளிப் படிப்பை முடித்தேன். கடைசி பெஞ்ச் மாணவராக இருந்தேன். ஆர்வம் காரணமாக கல்வியைப் புரிந்து படித்தேன். தமிழ் எனக்கு அதிகம் பிடிக்கும். குறிப்பாக திருக்குறளில் உள்ள கருத்துக்கள் ஆழமானவை. அனைவரும் அதைப் படிக்க வேண்டும்.

மாணவர்கள் ஆழமாகப் படித்தால்தான் கற்ற கல்வி மனதில் நிற்கும். வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும். வழக்கமாக இரவில் அதிகம் நேரம் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும். அதிகாலை படிப்பு தான் சிறந்தது. நான் அலைபேசியை அதிகம் பயன்படுத்துவது இல்லை. மாணவர்கள் தேவையின்றி அலைபேசியில் மூழ்கியிருக்காதீர்கள். உங்களுக்கு என ஒரு வாழ்க்கை, இலக்கு உள்ளது. அப்துல்கலாம் கூறியது போல் ஒவ்வொருவரும் தூங்கவிடாமல் செய்யும் ஒரு கனவைக் காணுங்கள். அந்தக் கனவு பெரிதாக இருக்க வேண்டும். அது உங்களைத் துரத்த வேண்டும். அப்போது தான் அதை உங்களால் அடைய முடியும். பதக்கம் பெற்ற நீங்கள் சாதாரண மாணவர்கள் இல்லை. உங்களுக்காக இலக்குகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அதை அடைய மென்மேலும் உழைக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு நேர மேலாண்மை மிக அவசியம். திட்டமிட்டு படியுங்கள். வாழ்க்கையில் சாதிக்கலாம்” என்று பேசினார்.

முன்னதாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை தமிழக உயர்வு கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், நடந்த பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த தமிழக ஆளுநர் ரவியை, மாவட்ட ஆட்சியர் சங்கீதா வரவேற்றார். ஆளுநர் பல்கலைக்கழக விடுதியில் ஓய்வெடுத்த பின் ,மதுரை காமராஜர் பல்கலை.,யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்றார். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விழாவைப் புறக்கணித்தார். அப்போது, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநருக்கு எதிராக, ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆளுநர் வரும்போது அசம்பாவிதம் நடக்கக் கூடாது என்பதற்காக மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி. சிவப்பிரசாத் ஆலோசனை பேரில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். ஆளுநர் வருகையை ஒட்டி, மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பட்டமளிப்பு விழாவை முடித்துக் கொண்டு தமிழக ஆளுநர் ரவி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிற்காக புறப்பட்டுச் சென்றார்.

மதுரைக்கு ஆளுநர் வருகையை ஒட்டி, அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கருப்புச் சட்டை அணிபவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதிக்கப் படவில்லை. திமுக கொடியுடன் வந்த ஒரு காரில் இருந்து திமுக கொடி அகற்றப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டது. மதுரை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கருப்பையா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு வழிச்சாலை நுழைவாயில் கீழக்குயில்குடி விளக்கு மற்றும் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் உடைமைகளை சோதனை செய்து பின் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதித்தனர். தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மதுரை காமராஜர் பல்கலைக்கழக 55லது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வருவதையொட்டி கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்காததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்களை கைது செய்து போலீஸார் அழைத்துச் சென்றனர்.

கடந்த காலங்களில் ஆளுநர் கார் மீது திமுக.,வின் கூட்டணிக் கட்சியினரால் கொடிக்கம்பங்கள், கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுகுறித்து தாம் புகார் அளித்தும், திமுக., அரசின் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளுநர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இன்று அதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக் கூடாது என்று போலீஸார் கவனத்துடன் செயல்பட்டார்கள்.

WC 2023: அசத்திய இந்திய அணி! 302 ரன் வித்தியாசத்தில் வெற்றி!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
29ஆம் நாள் – இந்தியா vs இலங்கை
மும்பை – 02.11.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்திய அணி (357/8, சுப்மன் கில் 92, விராட் கோலி 88, ஷ்ரேயாஸ் ஐயர் 82, ரவீந்தர் ஜதேஜா 35*, மதுஷங்கா 5/80, சமீரா 1/71) இலங்கை அணியை (19.4 ஓவரில் 55, ஆஞ்சலோ மேத்யூஸ் 12, தீக்ஷணா 12*, ரஜிதா 14, ஷமி 5/18, சிராஜ் 3/16, பும்ரா 1/8, ஜதேஜா 1/4) 302 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற இலங்கை அணி முதலில் இந்திய அணியை மட்டையாடச் சொன்னது. முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் ரோஹித் பூஜ்யம் ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் அதன் பின்னர் இந்திய அணி அற்புதமான ஆட்டம் ஆடியது.

முதல் 10 ஓவர்களில் இந்திய அணி ரோஹித் ஷர்மா விக்கட்டை இழந்து 60 ரன் எடுத்தது. அடுத்த 11 முதல் 20 ஓவர்களில் விக்கட் இழக்காமல் மேலும் 60 ரன்கள். 21 முதல் 30 ஓவர்களில் ஷுப்மன் கில் (92 ரன், 92 பந்துகள், 11 ஃபோர், 2 சிக்சர்) விக்கட்டை இழந்து 73 ரன், 31 முதல் 40 ஓவர்களில் விராட் கோலி (88 ரன், 94 பந்துகள், 11 ஃபோர்), கே.எல். ராகுல் (19 பந்துகளில் 21 ரன்) ஆகியோரின் விக்கட்டுகளுடன் 71 ரன். 41 முதல் 50 ஓவர்களில் சூர்யகுமார் யாதவ் (9 பந்துகளில் 12 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (56 பந்துகளில் 82, 3 ஃபோர், 6 சிக்சர்), ஷமி (2 ரன்), ஜதேஜா (24 பந்தில் 35 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோரின் விக்கட்டுகளுடன் 93 ரன்.

50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கட் இழப்பிற்கு 357 ரன் எடுத்திருந்தது. இதில் கடைசி ஓவரில் இரண்டு விக்கட்டுகள்.

கடினமான இலக்கை அடைய இலங்கை ஆடவந்தபோது பும்ரா வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பதுன் நிசாங்கா ஆட்டமிழந்தார். இரண்டாவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் முதல் பந்தில் திமுத் கருணரத்னே ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் ஐந்தாவது பந்தில் சதீர சமரவிக்ரமா ஆட்டமிழந்தார். இரண்டாவது ஓவர் முடிவில் இலங்கை அணி மூன்று விக்கட்டுகள் இழந்து 2 ரன்; அந்த இரண்டு ரன்னும் பும்ரா வீசிய வைட் பந்துகள்.

நாலாவது ஓவர் முதல் பந்தில் சிராஜ் வீசிய முதல் பந்தில் குசல் மெண்டிஸ் ஆட்டமிழந்தார். பத்தாவது ஓவரை வீச ஷமி வந்தார். அவரது ஓவரின் மூன்றாவது பந்தில் சரித் அசலங்கா ஆட்டமிழந்தார்; அடுத்த பந்தில் துஷான் ஹேமந்தா ஆட்டமிழந்தார். பத்து ஓவர் முடிவில் இலங்கை அணி 6 விக்கட் இழப்பிற்கு 14 ரன் எடுத்தது.

தோல்வி அந்த அணியின் கண் முன்னே தாண்டவம் ஆடியது. அதன் பின்னர் ஆஞ்சலோ மேத்யூஸ் 12 ரன், தீக்ஷணா ஆட்டமிழக்காமல் 12 ரன், ரஜிதா 14 ரன் எடுத்தனர். 19.4 ஓவரில் இலங்கை அணி 55 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஒரு மோசமான தோல்வியைப் பெற்றது. இந்திய அணியின் முகம்மது ஷமி 5/18, முகம்மது சிராஜ் 3/16, ஜஸ்பிரீத் பும்ரா 1/8, ரவீந்தர் ஜதேஜா ¼ ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர்.

ஐந்து விக்கட் எடுத்ததற்காக முகம்மது ஷமி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்திய அணி இந்த வேற்றியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.

இலங்கை அணி ஏறத்தாழ இனி அரையிறுதிக்கு தகுதி பெறமுடியாது. நாளை ஆஃப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகள் லக்னோவில் விளையாட இருக்கின்றன. இந்தியாவின் அடுத்த ஆட்டம் தென் ஆப்பிரிக்க அணியுடன் கொல்கொத்தாவில் நவம்பர் ஐந்தாம் தேதி நடைபெறும்.

நம்ம நாட்டு சுற்றுலா: கந்தகிரி குகைகள்

odisha khandagiri caves - 2026
#image_title

4. கந்தகிரி குகைகள்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          புவனேஸ்வரில் இருந்து இந்தப் பகுதிக்குள் நுழையும் போது கந்தகிரி மலைகள் உங்கள் இடது பக்கத்தில் வருகின்றன. கந்தகிரியில் 15 குகைகள் உள்ளன. இந்த குகைகள் சோமவம்சி வம்சத்தின் உத்யோதகேஷரியின் ஆட்சியின் போது புதுப்பிக்கப்பட்டது.

1. தோதா கும்பா

          நுழைவாயில் வளைவின் மேலே கிளிகள் செதுக்கப்பட்டுள்ளன, எனவே இது தோதா கும்பா என்று அழைக்கப்படுகிறது. இதில் இரண்டு துவாரபாலகர் உருவங்களும் உள்ளன.

2. தடோவா கும்பா

          குகையானது நாயகிகள், கந்தர்வர்கள், பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகள், சைத்திய வளைவு, பைலஸ்டர் வடிவமைப்பு, ராஃப்டர்கள் மற்றும் வால்ட் கூரை போன்ற சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

3. அனந்த கும்பா

          குகையில் பெண்கள், யானைகள், வாத்துகள் போன்ற சிற்பங்கள் உள்ளன.

4. டெண்டுலி கும்பா

          இது ஒரு தூண் கொண்ட ஒரு சிறிய பாறை வெட்டப்பட்ட அறை.

5. கந்தகிரி கும்பா

          இது தோராயமாக வெட்டப்பட்ட அறை மற்றும் இரட்டை அடுக்குகளைக் கொண்டுள்ளது.

6. தியான கும்பா

          இது தோராயமாக வெட்டப்பட்ட அறையைக் கொண்டது.

7. நவமுனி கும்பா

          நவமுனி கும்பா என்பது ஒன்பது சமண தீர்த்தங்கரர்கள் மற்றும் சாசன தேவிகளின் சிற்பங்களைக் கொண்ட தோராயமாக வெட்டப்பட்ட கலமாகும். இந்த சிற்பங்கள் 11 ஆம் நூற்றாண்டில் சோமவம்சி வம்சத்தால் குகைகளில் சேர்க்கப்பட்டன.

8. பரபுஜி கும்பா

          மூன்று பக்கங்களிலும் உள்ள அறையின் சுவர்களில் மொத்தம் இருபத்தைந்து தீர்த்தங்கரர்களின் உருவங்கள் உள்ளன, பார்ஸ்வநாதரை இரண்டு முறை திரும்பத் திரும்பக் கூறுகின்றனர். தீர்த்தங்கரரின் அடியில் அந்தந்த சசனாதேவிகள் காணப்படுகின்றனர். சக்கரேஸ்வரி 12 கரங்களுடன் காட்சியளிப்பதால், குகைக்கு பரபுஜி என்று பெயர். அந்த உருவம் இப்போது பிராமண தெய்வமாக வழிபடப்படுகிறது. இந்த சிற்பங்கள் 11ஆம் நூற்றாண்டில் சோமவம்சி வம்சத்தால் குகைகளில் சேர்க்கப்பட்டன.

9. ட்ருசுலா கும்பா

          கயோத்சர்கா தோரணையில் காணப்படும் ரிஷப தேவரின் மூன்று சிற்பங்கள் உள்ளன. இந்தச் சிற்பங்கள் தவிர, தோராயமாகத் தோற்றமளிக்கும் 24 சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும் உள்ளன.

10. அம்பிகா கும்பா

          மூன்று புடைப்பு சிற்பங்கள் உள்ளன, இரண்டு ரிஷபநாதர் மற்றும் ஒரு அம்ரா நேமிநாதரின் சாசன-தேவி.

11. லலடெண்டு கேசரி கம்பா

          அறை ஒன்றில், ரிஷபந்தனின் 2 உருவங்களும், பார்ஷ்வநாதரின் 3 படங்களும், அறை இரண்டில், 2 பார்ஷ்வநாதரின் மற்றும் 1 ரிஷபந்தரின் உருவங்களும் உள்ளன. இந்த சிற்பங்கள் 11 ஆம் நூற்றாண்டில் சோமவம்சி வம்சத்தால் குகைகளில் சேர்க்கப்பட்டன.

          குகைகள் 12, 13 மற்றும் 15 பெயரிடப்படவில்லை. குகை 14 மிகவும் எளிமையானது மற்றும் ஏகாதசி கும்பா என்று அழைக்கப்படுகிறது.