37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம். இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம். இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த பிரசாத ஸ்டால் அகற்றம். குத்தகைதாரர் தீக்குளிக்க முயற்சி
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு தினமும் ஏராளமான வெளியூர் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரத்தைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் மகன் ராமர் (வயது 45) என்பவர் பிரசாத ஸ்டால் அமைக்க கோவிலில் ஏலம் மூலம் குத்தகை எடுத்து நடத்தி வருகிறார்.
இவர் கோவில் கொடிமரம் அருகே பிரசாத் ஸ்டால் நடத்தி வருவதாக கோவில் நிர்வாகம் அவரிடம் தற்பொழுது இருக்கும் இடம் பக்தர்களுக்கு இடையூறாகவும் சாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் அமர்ந்து வழிபட்டுச் செல்லக்கூடிய இடமாக இருப்பதால் கோவிலுக்கு வெளியே புற காவல் நிலையத்திற்கு பக்கம் பிரசாத ஸ்டாலினை அமைத்துக் கொள்ளும் படி சில நாட்களாக கூறியுள்ளது.
ராமர் இதனை ஏற்க மறுத்து தொடர்ந்து வழக்கம் போல் கொடிமரம் அருகே பிரசாத ஸ்டாலினை வைத்து பிரசாதங்களை விற்பனை செய்து வந்தார்.
இந்த நிலையில் கோவில் செயலர் அலுவலர் முத்துராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ராமரின் பிரசாத ஸ்டாலின் தற்பொழுது நடத்துமிடத்திலிருந்து பிரசாத ஸ்டாலுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்க்கு அகற்றி போலீஸ் புற காவல் நிலையம் அருகே அமைப்பதற்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்திருந்தார்.
அதன்படி நேற்று (6ந்தேதி) காலை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஆண்டாள் கோவிலுக்கு சென்று ராமரிடம் கோவில் நிர்வாகத்தின் கோரிக்கையின்படி பிரசாத் ஸ்டாலினை நீங்களாக எடுத்து புறக்காவல் நிலையம் அருகே கொண்டு சென்று விடுங்கள் என கேட்டுள்ளனர். அதற்கு ராமர் மறுக்கவே உடனடியாக ஆண்டாள் கோவில் பணியாளர்கள் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் ராமரின் பிரசாத ஸ்டாலின் உள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்து அவருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்தனர்.
அப்பொழுது ராமர் தரப்பினருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராமர் கோவில் தரப்பினரை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்பொழுது திடீரென கைக்கலப்பு ஏற்பட்டது. இதில் கோவில் ஊழியர் கர்ணன் என்பவர் கீழே தள்ளிவிடப்பட்டு மயக்கம் அடைந்தார். இதனை தொடர்ந்து பெரும் பதற்றம் ஏற்படவே, ராமர், அவருடைய தங்கை, மற்றொரு சிறுமி ஆகிய மூன்று பேரும் கோவிலுக்கு வெளியே வந்து, தங்கள் உடலில் நெய்யை ஊற்றி, தீ வைத்துக்கொள்ள முயன்றனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை தடுத்து அவர்கள் மேலே தண்ணீர் ஊற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். தொடர்ந்து உள்ளே சென்ற ராமர் அங்கு கோரிக்கை வலியுறுத்தி கோசமிட்டார். போலீசார் அவரை பேசி வெளி அனுப்பி விட்டனர்.
இச்சம்பவம் சுமார் ஒரு மணி நேரம் கோயில் வளாகத்துக்குள்ளே நடை பெற்றது இதனால் கோயில் வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
ஹாலிவுட், பாலிவுட், படத்தின் பெயர்களுடன் சிவகாசியில் விறுவிறுப்பாக விற்பனையாகும் நவீன ரக வாணவெடிகள் …..
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, பிரபலமான ஹாலிவுட் படங்களின் பெயர்களுடனும், பாலிவுட் படங்களின் பெயர்களுடனும் நவீனரக வானவெடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
சிறிய ரக வாணவெடிகள் சுமார் 30 அடி உயரம் வரை பாய்ந்து சென்று வண்ண மயமாக வெடித்துச் சிதறும். பெரியளவிலான வாணவெடிகள் 200 அடி முதல், 300அடி உயரத்திற்குச் பறந்து சென்று வானில் வெடித்து வர்ணஜாலம் காட்டுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
வாணவெடிகளில் சிங்கிள் ஷாட், டபுள் ஷாட், விசிலிங் ஷாட், கிராக்களிங் ஷாட் என நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளில் வெடிகள் தயாராகியுள்ளன.
சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு விற்பனை கடைகளில், புதிய வரவுகளான நவீனரக வெடிகளை பட்டாசு பிரியர்கள் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்.
ரயில் பயணிகள் பட்டாசு எடுத்துக்கொண்டு, ரயிலில் பயணிக்க வேண்டாம் என்று, ரயில்வே துறை எச்சரித்துள்ளது. எளிதில் தீப்பற்றும் பொருட்கள், தீப்பெட்டி, பட்டாசு உள்ளிட்ட பொருட்களை ரயில் பயணிகள் எடுத்துச்செல்ல அனுமதியில்லை. அதை மீறி எடுத்துச்செல்பவர்களுக்கு, ரயில்வே போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நிறைய பேர் கிப்ட் பாக்ஸ், பட்டாசு பண்டல்களை வழக்கமாக எடுத்துச் செல்லும் பைகளில் எடுத்து செல்கின்றனர். இது விதிமுறைகளுக்கு முரணானது. அதனால், ரயில்வே போலீசார் ரயில்வே ஸ்டேஷன் நுழைவாயிலில், ஸ்கேனர் கருவியை நிறுவி லக்கேஜ்களை பரிசோதித்து வருகின்றனர். சோதனையில் சிக்கும் பட்டாசு ரகங்களை பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கின்றனர்.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘இது குறித்து, எச்சரிக்கை அறிவிப்புகளை ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதையும் மீறி கொண்டு செல்வதால், தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த பரிசோதனை தொடரும்’ என்றனர்.
‘முறையான ஆய்வுக்குப் பின், தகர ஷீட் போடப்பட்ட கடைகளிலும் பட்டாசு விற்க அனுமதி அளிக்கப்படுகிறது’ என, தீயணைப்பு துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை ஒட்டி, தற்காலிகமாக பட்டாசு கடைகள் வைக்க, மாநிலம் முழுதும் இருந்து, 5,800 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி, பட்டாசு கடைகள் வைக்க பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளோம்.
விண்ணப்பங்களை ஆய்வு செய்கிறோம். கடைகள் அமைய உள்ள இடங்களுக்கு சென்று, தீ தடுப்பு சாதனங்கள் உள்ளனவா, பட்டாசு கடைகள் வைக்க அந்த இடம் உகந்ததா என்று பார்க்கிறோம்.
பல்வேறு அம்சங்கள் குறித்து, கடை உரிமையாளர்களுடன் ஆலோசித்து, ஏதேனும் குறைகள் இருந்தால், அவற்றை சரி செய்த பின், தடையில்லா சான்று வழங்கி வருகிறோம்.
கான்கிரீட் மேற்கூரை உள்ள கட்டடத்தில் தான் பட்டாசு கடைகள் வைக்க வேண்டும் என, ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளோம். பெரும்பாலான கடைகள், ‘தகர ஷீட்’ போடப்பட்ட இடங்களில் தான் உள்ளன. அந்த இடங்களையும் ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதி செய்த பின், தகர ஷீட் போடப்பட்ட கடைகளிலும், பட்டாசு விற்க அனுமதி அளித்து, தடையில்லா சான்று அளித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
குறைந்த விலையில் பட்டாசு தருவதாக கூறி ஆன்லைனில் புதிய மோசடி நடைபெறுவதாக சைபர் க்ரைம் காவல்துறை எச்சரித்துள்ளது.
தீபாவளி பண்டிகை, நவம்பா் 12-ஆம் தேதி கொண்டாடபடுவதையொட்டி, பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறு விறுப்பு அடைந்துள்ளது. இதற்காக தற்காலிக பட்டாசுக் கடைகளும் ஆங்காங்கு திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குறைந்த விலையில் பட்டாசு தருவதாக கூறி ஆன்லைனில் புதிய மோசடி நடைபெறுவதாக சைபர் க்ரைம் காவல்துறை எச்சரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 வழக்குகள் பதிவாகியுள்ளன.
மேலும் மோசடி குறித்த புகாரினை www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என சென்னை சைபர் க்ரைம் காவல்துறை தெரிவித்துள்ளது.
காணாமல் போனதாக தேடப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி குவாஜா ஷாஹித் சடலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஆத்முகம் செக்டாரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. அவர் நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். மேலும் ஒரு அடையாளம் தெரியாத பயங்கரவாதியின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, அதிர்ச்சியில் மற்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி க்வாஜா ஷாஹீத் அலியாஸ் மியான் முஜாஹித்தின் தலை துண்டிக்கப்பட்ட உடல் மட்டும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பாக். ஆக்கிரமிப்பு ஜம்மு & காஷ்மீர் அத்முக்காம் பகுதியில் கிடந்தது.
அத்துடன் வேறு ஒரு அடையாளம் தெரி யாத நபரின் உடலும் கிடந்தது. இரண்டு பிணங்களும் பாக். ராணுவ முகாமில் தற்போது உள்ளது.
2018 இல் நமது சுஞ்சுவன் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியதின் முக்கிய நபர் க்வாஜா ஷாஹீத் அலியாஸ் மியான் முஜாஹித் என்பது குறிப்பிடத்தக்கது.
இது சினிமாக்காரர்கள் செயற்கையாக உருவாக்கிய ‘கனவு சீன்’ சூட்டிங் ஸ்பாட் அல்ல., மதுரை மாநகராட்சி உருவாக்கியுள்ள சூட்டிங் ஸ்பாட் .
மதுரை மாவட்டம், அவனியாபுரம் , வெள்ளக்கல் கண்மாய் மறுகால் பாயும் நீரில், வெண்மையான நுரை பொங்கி காற்றில் மிதப்பதால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் பயணம் செய்கிறார்கள். இந்த வெண் நுரை காரணமாக, நான்கு இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த வெண்மை நுரையால், மிகப் பெரும் விபத்து ஏற்படும் முன்னரே, காற்றில் பரவும் பகுதியில், தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மதுரையில் கடந்த சில நாட்களாக, மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது.
இதனால், அவனியாபுரம் அயன் பாப்பாகுடி, வெள்ளக்கல் கண்மாய்கள் நிறைந்து, மறுகால் பாய்ந்து வருகிறது. இந்த நிலையில், தொடர் மழையால், வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், இப்பகுதிகளில் இருந்து சாயப்பட்டறைக் கழிவுநீரும், மழை நீரோடு கலந்து, அயன்பாப்பாக்குடி கண்மாயில், பாசன கால்வாயில் திறந்து விடப்படுகிறது.
இந்த கழிவுநீர் எல்லாம், கண்மாயில் கலப்பதால், அயன்பாப்பாக்குடி கண்மாயிலிருந்து, மறுகால் பாயும் இடத்தில் நீரின் வேகம் அதிகமாக உள்ளது. மறுகால் பாயும் பாலத்தின் அருகே, ஆகாயத்தாமரைகள் படர்ந்துள்ளதால், நீரின் வேகத்தை அவை கட்டுப்படுத்தி வருகின்றன. இதனால், மறுகால் பாயும் இடத்தில், பஞ்சு போன்ற வெண்மை நுரை பொங்கி வருகிறது.
இது, மலை போல் பெருகி, காற்றில் பறந்து, அருகில் மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் பறப்பதால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, விபத்தும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, ஆகாயத் தாமரைகளை அகற்றி, தண்ணீர் செல்வதற்கு வழி செய்தால், வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும், பொதுப்பணித்துறை நிர்வாகமும், மதுரை மாநகராட்சியும், தடுப்பு வேலி அமைத்து, விபத்து ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹாத்திகும்பா கல்வெட்டு (Hathigumpha inscription) பற்றி முன்னரே பார்த்தோம். இது அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். பண்டைய பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட பதினேழு வரிகள் கொண்ட ஹாதிகும்பா கல்வெட்டு உதயகிரியின் தென்புறத்தில் உள்ள ஒரு குகையில் குடைந்த சமணக் குடைவரைக் கோவிலில் உள்ளது. இது ஆறு மைல்கள் தள்ளித் தௌலியில் உள்ள அசோக மாமன்னரின் கல்வெட்டுகளுக்கு நேர் எதிரில் உள்ளது.
இந்தக் கல்வெட்டு பிராகிருத மொழியில் மிகவும் பழைமையான கலிங்க பிராமி எழுத்துகளில் இருப்பதும் அதன் தொன்மையைக் கி.மு. 150க்கு நெருங்கிய காலம் என்று கணிக்கத் துணைபுரிகிறது. இந்தக் கல்வெட்டின் காலம் மௌரிய மன்னர்களின் ஆட்சி தொடங்கிய 165ஆம் ஆண்டு என்றும், காரவேலன் மன்னரின் 13ஆம் ஆட்சியாண்டு என்றும் கணிப்பதால், சந்திரகுப்த மௌரிய மன்னர் முடி சூட்டிக் கொண்ட ஆண்டாகக் கருதப்படும் கி.மு. 321ஐக் கணக்கில் எடுத்துக் கொண்டால், காரவேலர் அரியணை ஏறிய காலத்தைக் கி.மு. 170 என்றும், யவன மன்னர் திமெத்ரியசுவுடன் நடந்த போரைக் கி.மு. 162 என்றும் கணிக்க முடிகிறது.
ஹாதிக்கும்பா கல்வெட்டுகள் தான் கலிங்க மன்னர் காரவேலன் பற்றிய செய்திகளைத் தருகிறது. வேறு எங்கும் இந்த மன்னரைப் பற்றியும் அவரது வரலாறு பற்றியும் ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. தொன்மைப் பிராமி எழுத்தில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பதினேழு வரிகள் கொண்ட இந்தக் கல்வெட்டின் ஒரு பகுதி குடைவரைக்கோவிலின் முகப்பிலும், எஞ்சியது அதன் கற்கூரையிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டைக் கண்டுபிடித்தபோதே பல பகுதிகள் மங்கிச் சிதைந்து போயிருந்ததால் இதைப் படிப்பது கடினமாகி வீணான பல சச்சரவுகளுக்கு வழிவகுத்தது. என்றாலும், இது ஒரு நிறைவான வரலாற்று ஆவணம் என்றும், நிகழ்ச்சிகளை மிகைப்படுத்தாமல் நேரடியாகத் தெளிவாகவும், நடந்ததை நடந்தபடியான காலவரிசையிலும் இதில் சொல்லியிருப்பது போல அதன் சம காலத்தில் இந்தியாவில் வேறு எந்தக் கல்வெட்டிலும் சொல்லியதில்லை என்கிறார் சசிகாந்து என்ற வரலாற்றாசிரியர்.
இந்தக் கல்வெட்டை ஸ்டர்லிங் 1825இல் முதன்முதல் பார்த்துப் பதிவு செய்தார். பின்னர் கிட்டோ கண்ணால் பார்த்து எழுதியதை ஜேம்ஸ் பிரின்செப் 1837இல் பதிப்பித்தார். பிரின்செப் இந்தக் கல்வெட்டை ஐரா என்ற மன்னனுடையது என்று தவறாக எழுதினார். பின்னர் 1871இல் எச். லாக் என்பவர் எடுத்த இந்தக் கல்வெட்டின் மாக்கட்டுப் படியை (plaster-cast) இன்றும் கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வருகின்றனர். 1877இல் அலெக்சாண்டர் கன்னிங்காம் இந்தக் கல்வெட்டின் எழுத்துப்படியை (tracing) Corpus Inscriptionum Indicarum Vol. I என்ற நூலில் பதிப்பித்தார். அதைத் தொடர்ந்து 1880இல் ராஜா ராஜேந்திர லாலா மித்ரா இதன் திருத்திய வடிவத்தைப் பதிப்பித்தார் (Antiquities of Orissa, Vol. II.).
இந்தக் கல்வெட்டை ஆழமாக ஆராய்ந்து பொருத்தமான வடிவத்தை வெளியிட்ட பெருமை வரலாற்றாளர் பகவன்லால் இந்திராஜி என்பவரையே சேரும். இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் அரசன் காரவேலர் என்பதை முதன்முதலில் அவர்தான் 1885இல் ஆறாவது பன்னாட்டுக் கீழைநாட்டாய்வாளர்கள் மாநாட்டில் (Sixth International Congress of Orientalists) அறிவித்தார். மேலும் பல ஆய்வுப்பதிப்புகளுக்குப் பிறகு 1930இல் ஓரளவுக்கு நிறைவான பதிப்பை ஜெயசுவாலும் பானர்ஜியும் வெளியிட்டனர்.
இந்தப் பதிப்பின் கருத்துகளை ஏற்றுக் கொள்ளாத பேரா. பருவா தனது ஆய்வை 1938இல் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பேரா. சர்க்கார் தனது ஆய்வைப் பதிப்பித்தார். பதினேழே வரிகள் கொண்ட இந்தக் கல்வெட்டு இதற்குப் பின்னரும் பல ஆய்வாளர்களை ஈர்த்திருக்கிறது. முந்தைய ஆய்வுகள் பலவற்றின் முடிவுகளைக் கேள்விக்குள்ளாக்கி முற்றிலும் புதிய பார்வையில் தனது ஆய்வுக் கருத்துகளை வெளியிட்டுள்ளார் சசிகாந்து.
செங்கோட்டை தாயின் மடியில் அறக்கட்டளை சார்பில் 150 ஏழை,எளிய முதியோர்களுக்கு இலவச வேஷ்டி,சேலை வழங்கல்.
செங்கோட்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து தாயின் மடியில் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழை,எளிய, ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வேஷ்டி,சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பெருந்தொற்று காலம் துவங்கி இன்று வரையில் தாயின் மடியில் சமூக அறக்கட்டளை சார்பில் ஏழை,எளிய, ஆதரவற்ற முதியோர் மாற்றுதிறனாளிகளுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்று உணவு அளித்து வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது இந்தாண்டு நடந்த விழாவிற்கு வழக்கறிஞா் தலவனார்கணேசபாண்டியன் தலைமைதாங்கினார்.
சமூக ஆர்வலா்கள் வர்மாதங்கராஜ், அருணாசலம், ஹரிஹரகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலைவகித்தனா். தாயின் மடியில் சமூக அறக்கட்டளை நிறவனா் கோமதிநாயகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குற்றாலம் ஐந்தருவி சுவாமி விவேகானந்தா ஆசிரம அகிலானந்தமகராஜ், சாரதா ஆசிரம யதிஸ்வரிஅம்பாள், ஆகியோர் ஆசியுரை வழங்கினா். பள்ளி தாளாளா் ராம்மோகன், பள்ளி முதல்வா் ராணிராம்மோகன், மூத்த பத்திரிக்கை ஆசிரியா் செங்கோட்டைஸ்ரீராம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா்.
பின்னா் பொதுமக்களுக்கு இலவச வேஷ்டி, சேலையை அகிலானந்தமகராஜ் பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர் சசிகலாபிரேம்குமார், ரோட்டரி கிளப் ஆப் சக்தி தலைவா் அனிதாஆனந்த்,செயலாளா் கல்யாணி, சாரதா, தென்காசி நகர்மன்ற உறுப்பினா் ஜெயலட்சுமி, சுப்பிரமணி உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் ராஜஅபிராமன் நன்றி கூறினார்.
பயங்கரவாத நிதியுதவியில் ஈடுபட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் செயல்பாட்டாளரான குலாம் முகமது பட், உதம்பூர் காவல்நிலையத்தில் உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் எங்கு செல்கிறார் மற்றும் எங்கு இருக்கிறார் என்பதை அறிய SIA வால் tracker anklet வைக்கப்பட்ட முதல் பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்டவன் ஆவான்.
ஜாமீனில் வெளியே வரும் தீவிரவாதிகளை கண்காணிப்பதற்காக அவர்களின் கணுக்காலில் ‘ஜிபிஎஸ் டிராக்கர்’ கருவியை பொருத்தும் முறையை ஜம்மு காஷ்மீர் போலீஸ் நடைமுறை படுத்தி உள்ளனர்.
ஜம்மு – காஷ்மீர் காவல்துறை கடுங் குற்றவாளிகள், தீவிரவாதிகளை கைது செய்கிறது. பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வருகின்றனர். மீண்டும் அவர்கள் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுகின்றனர். அதனால் அவர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக நாட்டிலேயே முதல்முறையாக ‘ஜிபிஎஸ் டிராக்கர் (ஆங்க்லெட்)’ என்ற கருவியை சம்பந்தப்பட்ட நபரின் கணுக்காலில் பொருத்தி விடுகின்றனர். இவ்வாறு சம்பந்தப்பட்ட நபரின் காலில் பொறுத்துவதால், அவரின் செயல்பாடுகளை போலீசாரால் கண்காணிக்க முடியும்
அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் கடுங்குற்றவாளிகள் ஜாமீன் அல்லது பரோலில் செல்லும் போது, அவர்களின் கணுக்காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும். அதேபோல் வீட்டுக்காவலில் உள்ள குற்றவாளிகளையும் இவ்வாறாக கண்காணிப்பார்கள்.
இதுகுறித்து ஜம்மு – காஷ்மீர் காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின்படி, உபா போன்ற சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கு ஜிபிஎஸ் டிராக்கர் பொருத்தப்படுகிறது. தீவிரவாதி ஒருவர் இடைக்கால ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகினார். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கினாலும் கூட, அவரை தொடர்ந்து கண்காணிக்க ஜிபிஎஸ் டிராக்கரை அவருக்கு பொருத்துமாறு உத்தரவிட்டது’ என்றனர்
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி 32ஆம் நாள் – இந்தியா vs தென் ஆப்பிரிக்கா கொல்கொத்தா – 05.11.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய அணி (326/5, விராட் கோலி 101*, ஷ்ரேயாஸ் ஐயர் 77, ரோஹித் ஷர்மா 40, ரவீந்தர் ஜதேஜா 29*, ஷுப்மன் கில் 23, சூர்யகுமார் யாதவ் 22, இங்க்டி 1/63, ஜேன்சன் 1/94, ரபாடா 1/48,) தென் ஆப்பிரிக்கா அணியை (27.1 ஓவர்களில் 83, ஜதேஜா 5/33, குல்தீப் 2/7, ஷமி 2/18, சிராஜ் 1/11) 244 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற இந்திய அணியின் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா முதலில் மட்டையாடத் தீர்மானித்தார். இரண்டாவதாக விளையாடும்போது தென் ஆப்பிரிக்க அணி தடுமாறுவது வழக்கம் என்பதால் இந்த முடிவு எடுத்திருக்க வேண்டும். ரோஹித் ஷர்மா அதிரடியாக ஆடினார்.
24 பந்துகளில் 32 நிமிடம் ஆடி 2 சிக்சர்கள் 6 பவுண்டரிகளுடன் 40 ரன் எடுத்தார். அவர் 6ஆவது ஓவரில் ஆட்டமிழக்க கில் 23 ரன்னில் 11ஆவது ஓவரில் அவுட் ஆனார். 10 ஓவர்களில் 91 ரன் எடுத்திருந்தது.
அடுத்த 10 ஓவர்களில் இந்திய அணி 33 ரன்கள் மட்டுமே எடுத்தது. கோலி 38 பந்துகளில் 37 ரன்னும் ஷ்ரேயாஸ் 34 பந்துகளில் 11 ரன்னும் எடுத்திருந்தனர். 21 முதல் 30 ஓவர் வரை இந்திய அணி 123/2 என்ற ஸ்கோரில் இருந்து 179/2 என்ற ஸ்கோருக்கு முன்னேறினர்.
அதன் பின்னர் ரன்ரேட் குறையாமல் இந்திய பேட்டர்கள் பார்த்துக்கொண்டனர். 50 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு இந்திய அணி 326 ரன்கள் எடுத்திருந்தது.
விராட் கோலிக்கு இன்று பிறந்தநாள். அவர் இன்று ஒருநாள் போட்டிகளில் தனது 49ஆவது சதத்தை அடித்தார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். டெண்டுல்கர் கோலியின் 49ஆவது சதத்திற்குப் பாராட்டு தெரிவித்தார். விரைவில் 50ஆவது சதத்தையும் அடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இரண்டாவது இன்னிங்க்ஸ் விளையாட வந்த தென் ஆப்பிரிக்க அணி சொதப்பியது. க்விண்டன் டி காக் (5 ரன்) இரண்டாவது ஓவரிலும், பவுமா (11 ரன்) 9ஆவது ஓவரிலும், மர்க்ரம் (9 ரன்) 10ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். 10 ஓவர் பவர்ப்ளே முடிவில் அந்த அணி 3 விக்கட் இழப்பிற்கு 35 ரன் கள் எடுத்தது. இச்சமயத்தில் இந்திய அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 91 ரன் கள் எடுத்தது நினைவிருக்கலாம்.
தொடர்ந்து கிளாசன் (1 ரன்), டுஸ்ஸன் (13 ரன்), மில்லர் (11 ரன்), கேசவ மகராஜ் (7 ரன்) என வரிசையாக பேட்டர்கள் ஆட்டமிழந்ததில் 20 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்க அணி 69 எடுத்திருந்த்தது. அடுத்த 7.1 ஓவர்களில் 14 ரன் கள் சேர்த்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்து மொத்தம் 83 ரன் எடுத்து இந்திய அணியிடம் படுதோல்வியைப் பெற்றுக்கொண்டது.
விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்திய அணி தான் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற்று 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நாளை வங்கதேசம், இலங்கை அணிகள் டெல்லியில் விளையாடுகின்றன.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்
ஜனநாயகத்தில் தேர்தல் முக்கியமான நிகழ்வு. மிகப் பெரிய ஜனநாயக நாடான பாரத தேசத்தில் தேர்தல் நடக்கும் விதம் திருப்தியாக உள்ளதா? என்று கேட்டால் அறிஞர்கள் ஏமாற்றத்தையே வெளிப்படுத்துகிறார்கள்.
பெரும்பாலான மக்களுக்கு தேர்தல் குறித்த புரிதலே இல்லை. படித்தவர்களில் பெரும்பாலோர் ஓட்டு போடுவதற்கு செல்வதில்லை. தேர்தல் நடக்கும் நாளை விடுமுறையாக எண்ணி ஏதேதோ வேறு பொழுது போக்குகளில் ஈடுபடுகிறார்கள். தேர்தல் முடிவுகளை கிரிக்கெட் நிகழ்ச்சியை பார்ப்பது போல் பார்க்கிறார்கள். தேர்தலில் பணத்திற்கோ இலவசத்திற்கு மதுவுக்கோ பேராசைப்பட்டு விவேகமின்றி அருகதையில்லாதவருக்கு வாக்களிப்பவர்களே அதிகம். நோட்டுக்கு ஓட்டு போடும் தேசத்தில் வாழும் குடிமக்கள், அரசாட்சியில் நியாயத்தையும் நீதியையும் எதிர்பார்ப்பதே தவறு.
போகட்டும். பொறுப்போடு வாக்களிக்கச் சென்றால் வாக்காளர் பெயரே இருக்காது. அல்லது அந்த பெயரில் வேறு யாரோ அதற்கு முன்பே வாக்களித்திருப்பார்கள். பொதுமக்கள் தம் வாக்குரிமையை பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலைமையை தலைவர்களே உருவாக்குகிறார்கள். சில இடங்களில் கள்ள ஓட்டு, வாக்காளர் பட்டியல் காணாமல் போவது போன்ற செய்திகளைக் கேட்டாலும் எதுவும் செய்ய இயலாத நிலையில் உள்ளோம்.
ஒரு ஓட்டுக்கு லட்சங்களைக் கொடுக்கும் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பதவிக்கு வந்தால் எத்தனை கோடிகளை சம்பாதிப்பார்கள் என்பதை யூகிக்கலாம். தேசம் எப்படிப் போனால் என்ன? துண்டுதுண்டானாலும் பரவாயில்லை. தேசம் வளர்ச்சி அடையாவிட்டாலும் நஷ்டமில்லை. தம்முடைய மதமே தேசத்தை ஆள வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒன்று கூடியுள்ள மதவாதிகளை திருப்திபடுத்த தலைவர்கள் தேச விரோத செயல்களைச் செய்வதற்கும் பின்வாங்குவதில்லை என்பதைப் பார்க்கிறோம்.
தீவிரவாதிகளையும் பயங்கரவாதிகளையும் அரவணைக்கும் துஷ்ட தலைவர்களின் நடவடிக்கைகளையும் கவனித்து வருகிறோம். அவர்களைத் தோளில் சுமக்கும் ஊடகங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த மத வெறியர்களின் ஆதரவோடு அக்கிரமமாக குடியேறிய போலி வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பதும் தெரிந்த செய்தியே.
ஆட்சியில் இருக்கும் தலைவர்கள் அதிகாரிகளையும் பாதுகாப்பு துறையையும் தமக்கு அனுகூலமாக்கிக் கொண்டு தம் அக்கிரமங்களை எளிதாகத் தொடர்வதும் குண்டர்களும் ரௌடிகளும் களத்தில் இறங்குவதும் தேர்தல் நேரத்தில் அதிகமாகத் தென்படும் காட்சிகள்.
தேர்தல் ஆணையம் நிர்ணயித்தபடி பிரச்சாரம், செலவு போன்றவை நடப்பதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. நியமப்படி நடப்பவர்கள் தேர்தலில் வெல்வதில்லை. பல இடங்களில் நாற்பதிலிருந்து அறுபது சதவிகிதம் மட்டுமே வாக்கெடுப்பு நடக்கிறது. அதிலும் பல ஊழல்கள்.
முழுமையான தேச முன்னேற்றம். தேசத்தின் கௌரவம், ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து குடிமக்களின் நலம், அனைவருக்கும் தேவையான சாலை வசதி, அடிப்படை சௌகர்யங்கள் போன்றவை பற்றி சிறிதும் கவலைப்படாத குடிமக்களும் தலைவர்களும் இருக்கும் தேசத்தில் ஜனநாயகத்தின் பலன்களை எவ்வாறு ஆசைப்படுவது?
வியப்பு என்னவென்றால், தேர்தலில் அநீதியும் அட்டூழியமும் நடக்கின்றன என்று சாதாரண மக்களுக்கே தெரியும்போது, தேர்தல் கமிஷனுக்கும் நீதிமன்றத்துக்கும் தெரியாதா? ஆனால் அவர்களும் தகுந்த விதத்தில் நடவடிக்கை எடுக்காமலும், எடுக்க இயலாமலும் அலட்சியத்தோடு நடந்து கொள்கிறார்கள்.
காவல்துறை சோதனையிடல், வாகனங்களை நிறுத்தி தணிக்கை செய்வது போன்ற நாடகங்கள் நடந்தாலும் சட்டவிரோத பணம் சேர வேண்டிய இடத்திற்கு சேர்ந்து கொண்டுதான் இருக்கிகிறது. பதவி மோகத்தில் ஆழந்தவர்கள் அட்டூழியம் செய்வதற்குத் தயங்குவதுமில்லை.
தொழில்நுட்ப வளர்ச்சி இருப்பதால் சரியான முறையில் தேர்தல் நடக்கும் என்று பார்த்தால், அவற்றைத் தவறாக பயன்படுத்தும் அநீதியாளர்களுக்கு குறைவே இல்லை.
இந்தப் பின்னணியில் இந்த பிரசாரங்களின் ஆர்ப்பாட்டமும் ஊர்வலங்களும் வெறும் பொழுதுபோக்கே தவிர வேறு எதற்குப் பயன்படும்? இத்தகைய போலி தேர்தல்களின் வழிமுறையை மாற்ற இயலாத அளவுக்கு அனைத்துத் துறைகளும் பாழடைந்து விட்டன.
நம் தேசத்தில் இளைய தலைமுறை மக்கள்தொகை மிக அதிகம் என்று பெருமை பேசிக் கொள்கிறோம். ஆனால் இளைஞர்களில் அதிகம் பேர் போதையிலும் பொழுதுபோக்கிலும் நேரம் கழிக்கிறார்களே தவிர தேசத்தின் வளர்ச்சி பற்றிய பொறுப்போ புரிதலோ இல்லாதவர்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிறந்த ஜனநாயக தேசமாக முன்னேறப் போகிறோமா? நல்ல ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்ளப் போகிறோமா?
யாரும் எதுவும் செய்ய முடியாத தருணத்தில் கடவுள் மேல் பாரத்தைப் போடுவது மக்களுக்கு பழகி விட்டது..
மர்கட: – குரங்கு, மதிராபானம் – கள் குடிப்பது, ஆதி – முதலான. வ்ருச்சிக வானர – தேள் கொட்டிய குரங்கு.
குரங்கு சஞ்சலமான குணத்திற்கு குறியீடு. அமைதியாக ஒரு இடத்தில் உட்காராது. ஒரு கிளையில் இருந்து இன்னொரு கிளைக்கு தாவிக்கொண்டே இருக்கும். அதற்குத் தேவையில்லாத பொருள் என்று எதுவுமில்லை. பிருந்தாவனம் சென்றவர்களுக்குத் தெரியும். மூக்குக் கண்ணாடியைப் பறித்துவிடும். சற்று ஏமாந்தால் நம்மை சூறையாடிவிடும். அவை தின்னக் கூடிய பழமோ வேறு ஏதாவதோ கொடுத்தால் அப்போது கருணையோடு நம் கண்ணாடியை, நம் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து முழுவதாகவோ இரண்டு துண்டுகளாகவோ நம்மிடம் தூக்கிப் போடும். இது அதிகம் ஆபத்து இல்லாத விளையாட்டு.
ஆனால் குரங்கை கள் குடிக்கச் செய்தாலோ, தேள் கொட்டச் செய்தாலோ, பைத்தியம் பிடிக்க வைத்தாலோ என்ன ஆகும்? எந்த ஆபத்து வேண்டுமானால் நேரலாம் என்கிறது இந்த சமஸ்கிருத ஸ்லோகம்.
மனித புத்தியையும் அவனுடைய சிந்தனையையும் குரங்கோடு ஒப்பிடுவர். சிந்தனையால் ஆபத்து நேரலாம். நேராமலும் போகலாம் ஆனால், வெளியிலிருந்து சில விஷங்கள் ஏற்றப்பட்டால் ‘யத்வா தத்வா பவிஷ்யதி’. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
விஷங்கள் பலவகைப்படும். அதனால்தான் கீதாசாரியன் ஒரு எச்சரிக்கை விடுக்கிறான்.
பொருள் – காமம், குரோதம், பேராசை மூன்றும் நரகத்தின் மூன்று வாயில்கள். இவை மனிதனை அழித்து விடும். அதனால் இம்மூன்றையும் கைவிட வேண்டும்.
குரங்கு தானாகச் சென்று கள்ளை குடிக்காது. அல்லவா? சுயநலவாதிகள் யாராவது வேண்டுமென்றே குடிக்க வைத்து அதனை துரத்துவார்கள். அந்த விஷத்தை யாரோ உள்ளே செலுத்துகிறார்கள். அதனால் அனர்த்தம் நேர்கிறது.
இதுவே இந்த ‘மர்கட மதிராபானாதி’ அல்லது ‘வ்ருச்சிக வானர நியாயம்’ கூறும் கருத்து. வானரத்தை அரக்கனாக மாற்றும் செயல்.
*கைகேயிக்கு ராமன் மீது பிரியம் அதிகம். ராமனுக்கு பட்டாபிஷேகம் என்றவுடன் மிகவும் மகிழ்ந்தாள். ஆனால் மந்தரை கைகேயிக்கு விஷத்தைப் புகட்டினாள். ஆத்திரமூட்டினாள். ‘கௌசல்யா மகாராணியாகிவிடுவாள். நீ அவளுக்கு ஊழியம் செய்ய வேண்டும்’ என்று சொற்களால் விஷத்தை செலுத்தினாள்.
அதே போல் அதிக வட்டி கிடைக்கும் என்ற பேராசையை புத்தியில் ஏற்றிக் கொண்டு ஏமாந்து பணத்தை இழந்து அழிந்தவர்கள் எத்தனையோ பேர்.
*ராமாயணம் ஆரண்ய காண்டத்தில் சூர்ப்பனகையின் பாத்திரத்தை ஆராய்ந்தால், லக்ஷ்மணனோடும் சீதா தேவியோடும் வசித்த ஸ்ரீ ராமனைப் பார்த்தவுடனே, காமம், குரோதம், லோபம் என்ற மூன்றுக்கும் வசமாகி, அந்த விஷங்களை யாருக்கு எந்த அளவு பகிர வேண்டுமோ அந்த அளவுக்குப் பகிர்கிறாள். கரனிடம் குரோதத்தை வளர்க்கிறாள். அதன் மூலம் பதினான்காயிரம் அரக்கர்களின் மரணத்திற்குக் காரணமாகிறாள். சகோதரனான ராவணனிடம். சீதையின் அழகைப் புகழ்ந்து காமத்தைத் தூண்டுகிறாள்.
பொருள் – நல்ல நடத்தையும் புகழத் தக்க அவயவங்களும் பூவுலகில் ஒப்பற்ற அழகும் கொண்ட அவள் உனக்கு மனைவியாகத் தகுந்தவள். நீயே அவளுக்கு ஏற்ற கணவன்.
அயோக்கியனே ஆனாலும் ராவணன் சிறந்த சிவ பக்தன். வேத பண்டிதன். ராவணனுக்கு இருந்த பிறன்மனை நாடல் என்னும் ஒழுக்கக்கேட்டை சூற்பனகை தூண்டுகிறாள், குரங்கிற்கு கள்ளை ஊற்றிக் கொடுத்ததது போல. என்ன நடந்தது? ‘யத்வா தத்வா பவிஷ்யதி’ போல ஆனது.
*முதல் சுதந்திரப் போரில் (1857) கிடைத்த வெற்றிக்குப் பிறகு பிரிட்டிஷார் பாரத சமுதாயத்தை வேறுபடுத்தி, பிரித்தாளும் ‘டிவைட் அண்ட் ரூல்’ போர் முறையின் தந்திரத் திட்டத்தை அமல்படுத்தி இரு பிரிவுகளிடையே சண்டை மூட்டத் தொடங்கினர்.
இயல்பாக இருக்கும் குரங்கு குணத்தைத் தூண்டுவது போல வெளிநாட்டு சக்திகள் முயற்சித்தனர் என்பது இதன் பொருள். இங்கு வானரம் என்பது சமுதாயம். குரங்காட்டி அதற்கு கள் கொடுத்து குடிக்க வைத்தான். காலைச் சுட்டான். தேளைக் கொண்டு கொட்டச் செய்தான்… பசுவைக் கொன்று கோவிலில் போட்டனர். பன்றியை துண்டு துண்டாக்கி மசூதியில் வீசினர். இரு பிரிவுகளிடையே பகையைத் தூண்டி வளர்த்து போஷித்தனர். ரத்த ஆறு ஓடச் செய்தனர் பிரிட்டிஷார்.
நேருவுக்கும் ஜின்னாவுக்கும் இருந்த பலவீனங்களை அடையாளம் கண்டு காமம், பேராசை போன்றவற்றைத் தூண்டி தாய் போன்ற தேசத்தைத் துண்டாடி, டைரெக்ட் ஆக்ட் என்ற பெயரில் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் கொன்று குவிக்கும்படி தூண்டினர். அசாதரணமான வழியில் வன்முறையை நடத்தி லட்சக்கணக்கானோரின் மரணத்திற்கு காரணமானது பிரிட்டிஷ் அரசாங்கம்.
அதனால்தான் மனிதனின் புத்தியும் சிந்தனையும் குரங்கோடு ஒப்பிடப்படுகின்றன. மனிதனின் யோசனைகளை ஆபத்தானவையாக மாற்றுவதற்கு வெளியிலிருந்து விஷங்களை ஏற்றிய உதாரணங்கள் பல உள்ளன.
*உலகில் வாழும் பல்வேறு மனிதர்களை அவர்களின் மதத்திலிருந்து பிரித்து, தம் மதத்தில் சேர்க்க வேண்டும் என்ற பெரிய சூழ்ச்சியை நடத்திய கிறிஸ்தவ மத அமைப்பு இதே கொள்கையை கடைப்பிடித்தது. யூதர்களை கூட்டமாகக் கொன்றது. முன்னாள் போப் ஹாட்ரியன் -3 (884-885) உயர் குடும்பப் பெண்களை நிர்வாணமாக தெருவில் இழுத்துச் சென்று சாட்டையால் அடிக்கச் செய்து மகிழ்வது வழக்கம். (மூல சூத்திரங்கள் பக் -44).
அண்மையில் மணிப்பூரில் நடந்த சம்பவம், அவற்றின் மூல காரணம் ஆகியவற்றை பரிசீலித்து பார்த்தால் குரங்குகள் யார்? அவற்றுக்கு கள் கொடுத்து குடிக்கச் செய்தது யார் என்பது விளங்கும். அமைதியை சீர்குலைக்கும் சக்திகள் நேரத்தையும் சந்தர்பத்தையும் பார்த்து குரங்குகளுக்கு கள்ளைக் கொடுத்து குடிக்கச் செய்த உதாரணங்கள் கொஞ்சமல்ல. இரு பிரிவுகளிடையே பற்றவைத்து தீயைத் தூண்டி எரியவிட்டு திருப்தி அடைவது இந்த நியாயத்திற்கு உதாரணம்.
அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டார்கள் என்று புகார் கிளப்புவார்கள். (அல்லது அவர்களே போட வைப்பார்கள்). அவ்வளவுதான். நெருப்பை மிதித்த குரங்கைப் போல சமுதாயம் பொங்கி எழும். இரு வர்க்கங்களும் அடித்துக் கொள்வதே அவர்களுக்கு வேண்டியது. Mob என்னும் குரங்குக் கூட்டத்திற்கு கள்ளைக் குடிக்கச் செய்து இரு மாநிலங்களின் இடையில் நதி நீர் பங்கீட்டின் பெயரிலோ, மொழி பிரச்சினையின் பெயரிலோ தகராறு ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு தேசதுரோகக் கூட்டம் சிந்தித்து அமல்படுத்தும் சதியை இந்த நியாயத்திற்கு உதாரணமாக கூறாலாம்.
இளைஞர்கள் ஆணும் பெண்ணும் குழுவாகச் சேர்ந்து பொழுதுபோக்காக பேசிக் கொள்ளலாம். விளையாட்டாக சிரித்து காலம் கழிக்கலாம். ஆனால் அவர்கள் மது அருந்தினால் சூழல் மாறிவிடும். அதுவரை அமைதியாக இருந்தவர்களிடையே காமம், குரோதம் பேராசை பிரவேசித்து எது வேண்டுமானாலும் நடக்கலாம். ‘யத்வா தத்வா பவிஷ்யதி’ க்கு இது போன்ற செய்திகள் உதாரணம்.
குரங்கு போன்ற மனதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற கேள்விக்கு கீதாசாரியன் பதில் கூறுகிறான்.
பொருள் – நீ கூறிய சொற்கள் உண்மைதான். மனம் நிலையற்றது. கட்டுப்பாடற்றது. ஆனால் அர்ஜுனா, யோகாப்பியாசத்தாலும் வைராக்கியத்தாலும் மனதை அடக்க முடியும்.
மனக் குரங்கை மராமத்து செய்யவதற்கு வழிகள் – பயிற்சியும் வைராக்கியமும். குரங்கை தன் விருப்பம் போல் ஆட்டி வைப்பவரிடம் கவனமாக இருக்க வேண்டும்.
தெலுங்கில் புகழ்பெற்ற சுமதி சதகம் எழுதிய கவிஞர் நமக்கு ஒரு உபாயம் கூறுகிறார். இனிப்பாக யாராவது பேசினால் உடனே செயலில் இறங்காதே. விசாரி. யோசித்துப் பார் என்கிறார்.