இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
தமிழகத்தின் தென் திருப்பதியான கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில் புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில் புரட்டாசி பெருந்திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டிற்கான கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில் புரட்டாசி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கோவில் பட்டாச்சாரியார் கொடியை ஏற்றி வைத்து தீபாராதனை காண்பித்தார்.
பின்னர் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் வருகின்ற 24-ம் தேதி திருக்கல்யாண உற்சவம் தொடர்ந்து 26 ஆம் தேதி திருத்தேர் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழையும் இந்த தருணத்தில், பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வோம் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, முதல் முறையாக நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்த போது படியில் தலையை வைத்து வணங்கினேன் என்று கூறினார். மேலும், இந்தியாவின் வளர்ச்சிகளுக்கு இந்த கட்டிடம் தான் அடித்தளமாக இருந்தது என்று, பழைய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.
இந்த அவையில் நகைச்சுவை, காரசாரமான விவாதங்கள், சண்டைகள் நடைபெற்றிருக்கின்றன. இந்த நாடாளுமன்றத்திற்கு பிரியா விடை கொடுப்பது மிகவும் உணர்ச்சிகரமான ஒரு தருணம். ஒரு ஏழை இந்த நாடாளுமன்றத்தில் நுழைய முடியும் என்று நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை என்று உணர்ச்சிகரமாகக் கூறினார் பிரதமர் மோடி.
இன்று தொடங்கிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். அப்போது, தேசத்தின் வளர்ச்சிப் பணியில் நாட்டு மக்கள் தொடர்ந்து வியர்வை சிந்தி வருகின்றனர். வரலாற்று சிறப்புமிக்க பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு நாம் விடை கொடுக்க உள்ளோம். புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு சென்றாலும், இந்த கட்டடமும் நாட்டின் வளர்ச்சிக்காக செயல்படும். இந்தியா முழுவதும் மாற்றத்திற்கான அலை உருவாகியுள்ளது… என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
इस सदन से विदाई लेना हम सभी के लिए एक बहुत ही भावुक पल है। हमारा मन-मस्तिष्क कई तरह की भावनाओं से भरा हुआ है। pic.twitter.com/p8otPS5BJW
மேலும், இந்திய நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால செயல்பாடுகள் குறித்து பெருமிதம் கொள்கிறேன். G20 மாநாட்டின் வெற்றி இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் சொந்தம். நாம் முன் வைத்த பிரகடனத்தை G20 நாடுகள் ஏற்றுக்கொண்டது இந்தியாவின் பலத்தை காட்டுகிறது.
சுதந்திர போராட்டத்தின் சின்னமாக பழைய நாடாளுமன்றம் திகழ்கிறது. சுதந்திர இந்தியாவின் பல்வேறு பாரம்பரியங்களின் நினைவாக பழைய நாடாளுமன்றம் உள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் வியக்கின்றன. மேலும் சுயதன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாறி வருகிறது. இந்தியாவில் நடைபெற்ற G20 மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்கது… என்று தனது உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்த உலகில் ஆண் வடிவிலும், பெண் வடிவிலும் பல தெய்வங்களை நாம் வணங்கி வருகிறோம். நம்மில் பலர், பிள்ளையாரை ஆண் தெய்வமாக தான் இதுவரை வழிபட்டு வருகிறோம். ஆனால் பிள்ளையாரை பெண் தெய்வமாக வழிபடும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது அது பற்றி பார்ப்போம்….
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் உள்ள தூணில் பெண் உருவம் கொண்ட விநாயகரை காணலாம்.
பெண் வடிவத்தில் உள்ள பிள்ளையார் விக்னேஷ்வரி, விநாயகி, கணேஷினி, கணேஷ்வரி என பல பெயர்களில் வணங்கப்படுகிறார். இக்கோவில் நாகர்கோவில்-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் நாகர் கோவிலில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தாணுமாலயன் என்ற இக்கோவிலின் பெயரே மும்மூர்த்திகளின் பெயரை உள்ளடக்கியிருக்கிறது. தாணு என்பது சிவபெருமானையும், மால என்பது பெருமாள் விஷ்ணுவையும், அயன் என்பது பிரம்மாவையும் குறிக்கிறது.
17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலானது கேரளத்தை சேர்ந்த நம்பூதிரிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. குறிப்பாக தீக்குமொன் மடம் என்ற நம்பூதிரி குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக இக்கோவிலை நிர்வகித்து வந்திருக்கின்றனர்.
இந்த கோவிலின் மூலவராக மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் இணைந்து ஒரே ரூபமாக தாணுமாலயனாக அருள்பாலிக்கின்றனர். இப்படி மும்மூர்த்திகளையும் ஒரே ரூபமாக பார்ப்பது அரிதிலும் அரிதானதாகும்.
பெண்ணுக்குரிய ஆபரணங்களோடு ஒரு காலை ஊன்றியும் மறுகாலை மடக்கியும், புடவையோடு அற்புத பெண் தெய்வமாக காட்சி தருகிறாள் கணேஷினி.
தாணுமாலயன் கோவிலில் ஒரே கல்லினால் செய்யப்பட்ட 5.5மீட்டர் உயரமுள்ள நான்கு மிகப்பெரிய இசைத்தூண்கள் இருக்கின்றன. அலங்கார மண்டபம் என்ற பகுதியில் இருக்கும் இந்த இசைத்தூண்களை தட்டினால் சப்தசுவரங்களில் இசை வெளிப்படுவது பிரம்மிப்பின் உச்சம்.
மேலும் இக்கோவிலில் தான் 22அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலையும், 13அடி உயரமும், 21அடி அகலமும் கொண்ட நந்தி சிலையும் இருக்கின்றன. இந்த நந்தி சிலை இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
மாதங்களில் நான் மார்கழி என்றார் மஹாவிஷ்ணு ஆனால் வருடத்தில் 12 மாதங்கள் இருக்க, புரட்டாசி மாதத்தில் மட்டும் பெருமாளுக்கு எதற்காக இத்தனை சிறப்பு பூஜை புனஸ்காரங்கள் பக்தர்கள் பலருக்கும் கேள்வி எழுகிறது.
இதற்கான வரலாற்று ரீதியான ஒரு கதையை இந்த நன்னாளில் நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். முன்பொரு காலத்தில் தொண்டைமான் என்ற மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் பெரிய பெருமாள் பக்தன். தன்னுடைய அரண்மனையில் தங்கத்தால் செய்த பெருமாளை வைத்து, அனுதினமும் தங்க புஷ்பத்தால், வெள்ளி புஷ்பத்தால், அன்றாடம் பூஜித்து பெருமாளை வழிபடுவது மன்னனுடைய வழக்கமாக இருந்து வந்தது.
வழக்கம்போல ஒரு நாள் காலை எழுந்து மன்னன் சுத்தபத்தமாக குளித்துவிட்டு, எப்போதும்போல் பெருமாள் சிலைக்கு முன்பு வந்து அமர்ந்து, தயாராக இருக்கும் பூக்களை எடுத்து பூஜை செய்ய தொடங்கினான். ஆனால், மன்னன் எடுத்துப் போடக் கூடிய தங்க புஷ்பங்களும், வெள்ளி புஷ்பங்களும் வாசனை மிகுந்த மலர்களும் திடீரென்று களிமண் பூக்களாக மாறின.
மன்னன் புஷ்பத்தை எடுத்து பெருமாள் பாதங்களில் முதல் முறை போடும் போது, அந்த பூ, களிமண் பூவாக மாறி பெருமாள் பாதங்களில் விழுகிறது. இரண்டாவது முறை சோதித்து பார்க்கின்றான். இரண்டாவது முறையும், தங்கம் வெள்ளி பூக்களும் களிமண் பூக்கள் ஆகவே மாறுகின்றது. இந்த மன்னனுக்கு ஒரே குழப்பம். சரி என்ன செய்வது. ஆரம்பித்த பூஜையை நிறைவு செய்ய வேண்டும் அல்லவா. பூஜையை அரைகுறை மனதோடு நிறைவு செய்கின்றான்.
காலையில் இந்த பூஜையை முடித்த மன்னனுக்கு மனதில் ஏகப்பட்ட குழப்பம். ‘தான் செய்த பூஜையில் ஏதாவது தவறு நடந்திருக்குமோ. பெருமாளுக்கு ஏதாவது குறை வைத்திருக்கின்றோமோ’ என்ற ஏகப்பட்ட கேள்விகள் மன்னனின் மனதில் எழுகின்றது. – அன்றைய நாள் முழுவதும் சரியாகவே செல்லவில்லை. மனக் குழப்பத்தோடு அரைகுறை வேலைகளை செய்து எப்படியோ நாளை கடத்தி விட்டான்.
இரவு தூங்கும்போது பெருமாளை வேண்டிக் கொள்கின்றான். என்னுடைய பூஜையில் ஏதாவது குறை இருந்தால் என் கனவிலாவது வந்து அதை தெரியப்படுத்த வேண்டும், நாராயணா! என்று கூறிவிட்டு தூங்க சென்றான் மன்னன்.
தன்னுடைய பக்தனின் வேண்டுதலுக்கிணங்க பெருமாள், மன்னனுடைய கனவில் தோன்றி ‘உன்னுடைய குழப்பத்திற்கு எல்லாம் விடை தெரிய வேண்டுமென்றால், நீ நாளை பீமாவை போய் காண வேண்டும்’. என்று கூறிவிட்டு, பெருமாள் மறைந்துவிட்டார்.
மன்னனுக்கு தூக்கமும் கலைந்துவிட்டது. இந்த பீமா யாராக இருக்கும் என்ற குழப்பமும் மன்னனின் மனதில் எழுந்தது. மறுநாள் அதிகாலை வேளையிலேயே எழுந்த மன்னன் தன்னுடைய வேலை ஆட்களை அனுப்பி, தன்னுடைய நாட்டில் பீமா யார் என்று விசாரித்து, பீமையா வாழும் இடத்தையும் கண்டுபிடித்து விட்டான் மன்னன். இந்த பீமா என்பவன் வயது முதிர்ந்த ஒரு குயவன்.. இந்த குயவனும் ஒரு பெருமாள் பக்தன் தான். ஆனால் இந்த குயவனால், வாசனை மிகுந்த பூக்களைக் கொண்டு கூட பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய முடியாது.
மனதார தினம்தோறும் பெருமாளை நினைத்து வழிபாடு செய்பவன் தான் குயவன். தூரத்தில் நின்று பார்க்கின்றார் மன்னன். அவன் பானை செய்து கொண்டு இருக்கின்றான். பானை செய்யும் போது ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற நாமத்தை உச்சரித்துக்கொண்டே வேலை செய்து கொண்டிருக்கின்றான். அந்த சமயம் பார்த்து அவனுக்கு முன்னால் பெருமாள் காட்சி தருகின்றார்.
பெருமாளைப் பார்த்து அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தன் கையிலிருந்த களிமண்ணில், பூக்களை செய்து பெருமாள் பாதங்களில் போட்டு பெருமாளை வணங்கினான். . மன்னனுக்கு ஒன்றுமே புரியவில்லை. கோவில் கட்டி, தங்க பூக்களால் வெள்ளி பூக்களால் அர்ச்சனை செய்த என்னுடைய கண்ணுக்கு பெருமாள் தரிசனம் கொடுக்க வில்லை. ஆனால், சாதாரண இவனுடைய பக்திக்கு பெருமாள் காட்சி தருகிறார் என்றால், அந்த பக்தியில் எவ்வளவு உன்னதம் இருக்க வேண்டும். என்று நினைத்து, பெருமிதம் அடைகின்றான் மன்னன். அந்த மன்னனுக்கு அப்போது தான் புரிந்தது. பக்தி என்பது நாம் இறைவனுக்கு கொடுக்கக் கூடிய பொருட்களில் அல்ல. நம்முடைய சுயநலம் இல்லாத உண்மையான மனதும், சுயநலம் இல்லாத வேண்டுதலுமே உண்மையான பக்தி கானா எடுத்துக்காட்டு என்பதை மன்னன் மனதார உணர்ந்து விட்டான்.
இப்போது உங்களுக்கும் புரிகின்றதா? இறைவழிபாட்டிற்கு உண்மையான மனது தான் முக்கியம். ஜாதி மதம் இனம் பணம் காசு இவைகளைப் பார்த்து என்றுமே இறைவன் அருளாசியை கொடுப்பது கிடையாது. இந்த கதையை உணர்த்தும் வகையில், இன்றும் திருப்பதியில் மண்பாண்டங்களில் சில நைவேத்தியங்களை பிரத்தியேகமாக வைத்து பெருமாளுக்கு படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். பெருமாள் தரிசனத்தைப் பெற்ற குயவனுக்கு அன்றைய தினம் மோட்சமும் கிடைத்தது. இந்த சம்பவம் நடந்த அந்த நன்னாள் புரட்டாசி மாத சனிக்கிழமை. புரட்டாசி மாத சனிக்கிழமை அன்று யார் பெருமாளை நினைத்து கொண்டு, பெருமாள் வழிபாடு செய்து கொண்டே இருக்கிறார்களோ, அவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும். புரட்டாசி மாத சனிக்கிழமையில் கோவிந்தா கோவிந்தா நாமத்தை உச்சரிப்பவர்களுக்கு மோட்சம் கிடைப்பது உறுதி.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
கலகலப்பான குடும்ப படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் எட்டாவது தயாரிப்பான இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகி வருகிறது.
‘பிரதர்’ படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், ‘கே ஜி எஃப்’, ‘புஷ்பா’ புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
‘பிரதர்’ திரைப்படத்திற்காக ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளதால் இதன் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவை விவேகானந்த் சந்தோஷம் கையாளுகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் உடன் பல்வேறு படங்களில் பணியாற்றிய இவர், தனுஷ் நடித்த ‘மாறன்’, ஜிவி பிரகாஷ் நடித்த ‘செம’ மற்றும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
‘பிரதர்’ குறித்து பேசிய இயக்குநர் எம். ராஜேஷ், “ஆக்ஷன் ததும்பும் வித்தியாசமான திரைப்படங்களில் ஜெயம் ரவி தற்போது நடித்து முத்திரை பதித்து வந்தாலும் ‘ஜெயம்’, ‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’, மற்றும் ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ ஆகிய குடும்ப கதையம்சம் உள்ள திரைப்படங்கள் அவரது திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியமானவை. இந்த வரிசையில் ‘பிரதர்’ இணையும் என்பதில் சந்தேகம் இல்லை,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “சென்னை, ஹைதராபாத், ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கலகலப்பான குடும்ப கதைக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி மீண்டும் திரும்பும் இத்திரைப்படம் 6 முதல் 60 வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் அமையும் என்று நம்புகிறோம்,” என்று தெரிவித்தார்.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்ட நிலையில் இப்படம் குறித்த மேலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும்.
காஞ்சிபுரம் அருகே விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு
வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு
விபத்தில் சிக்கி சேதமடைந்த பைக்கை பறிமுதல் செய்தும் போலீசார் நடவடிக்கை
‘ஐயோ பாவம்’ என்று விட்டுவிடக் கூடாது
வாசன் என்ற ஒரு நபர் நேற்று மாலை தேசிய நெடுஞ்சாலையில் மிக விரைவாக தன் இரு சக்கர வாகனத்தை செலுத்தியதோடு பல்வேறு சாகசங்களை செய்வதாக எண்ணிக்கொண்டு பல்வேறு வாகனங்களுக்கு இடையூறு செய்ததோடு, பல உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அத்துமீறி நடந்து கொண்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் காயமடைந்துள்ளார் என்று ‘ஐயோ பாவம்’ என்று நின்று விடாமல், பொது மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் வகையில் வாகனத்தை செலுத்தியதற்காக அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறை அவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
— நாராயணன் திருப்பதி, செய்தித்தொடர்பாளர், பாஜக
இதற்கிடையே, யூடியூபர் டிடிஎப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.
நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டிடிஎப் வாசன் சாகசம் செய்ய முயன்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவர் காயமடைந்து மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
இந்த நாள் ஒரு இனிய நன்னாள், பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய ஒரு திருநாள். சாதூர்மாஸ்ய காலம் வேறு நடந்து கொண்டு இருப்பதும், பகவத் பாதாளின் சிலைதிறப்பு விழாவும் ஒன்று சேர்ந்தார்ப் போல் அமைவது பொருத்தமாக இருக்கிறது.
ஆம் ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாளின் சிலான்யாசம் ஜகத்குருவிற்கு குருவாய் விளங்கி, அத்வைத சித்தாந்த தத்துவத்தை உபதேசம் செய்வித்த ஸ்ரீ கோவிந்த பகவத் பாதர் ஸ்ரீ ஆதிசங்கரரை தனது சிஷ்யரான ஏற்றுக்கொண்ட நர்மதா நதி தீரத்தில் அமைந்துள்ள ஓம்காரேஷ்வர் என்ற புண்ய ஷேத்ரத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. மேலும் விநாயக சதுர்த்தி தினமும் கூட சேர்ந்து கொண்டது.
“முதாகராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் கலா தராவ தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் |” என்ற கணேஷ பஞ்சரத்னம் படைத்த பகவத் பாதாள் பாதங்களுக்கு பணிவான வணக்கங்கள்…..
குருகடாக்ஷம் பரிபூர்ணம் – ஜகத்குருவின் குரு (ஸ்ரீ கோவிந்த பகவத்பாதாள்) – ஒரு பார்வை
கல்வியறிவும், ஞானமும், அநுபூதியும் பெற்றவர்களில் சிலபேர் நன்றாக எழுதிவைப்பார்கள். சிலபேருக்கு எழுத வராது.
ஆனாலும் தங்களுடைய அநுபவ சக்தியால் அதே அநுபவத்தைப் பெறக் கூடிய உத்தம சிஷ்யர்களை உருவாக்கி, அவர்கள் மூலம் அத்வைத ஸித்தாந்தத்தை பிரச்சாரப்படுத்துவதில் இவர்களுக்கு விசேஷத் திறமை இருக்கலாம். அந்த வகையில் கோவிந்த பகவத்பாதாளை இந்த கோஷ்டியில் சொல்லலாம்.
உயர்ந்த சிஷ்யர்களை ரூபம் பண்ணும் திறமை கோவிந்த பகவத்பாதருக்கு விசேஷமாக இருந்திருக்கிறது.
அதனால்தான் அவருடைய மஹா பெரிய சிறப்பாக நம் ஆசார்யாளே அவரைத் தான் குருவாக வரித்து அவரிடமே சிஷ்யராகி உபதேசம் பெற வேண்டும் என்று இருந்திருக்கிறது.
ஜகத்குரு என்று ஜகத்தே கொண்டாடும் ஆசார்யாள் சிஷ்ய பாவத்தோடு இருந்துகொண்டு குரு பரம்பரையை விநயமாக ஸ்தோத்ரிப்பது வழக்கம்.
குரு மஹிமையைத் தெரிவிப்பதற்கே ‘குர்வாஷ்டகம்’ என்று ஸ்தோத்ரம் செய்திருக்கிறார். (இதை தனிப் பதிவாக கொடுக்கிறேன்).
கோவிந்த பகவத்பாதர் பத்ரிகாச்ரமத்தில் இருக்கும் போது வ்யாஸாசார்யாளின் தரிசனம் அவருக்குக் கிடைத்தது.
அவதாரமாக வரப்போகிறவருக்கு கோவிந்த பகவத்பாதாள் தான் குருவாயிருக்க வேண்டுமென்ற திவ்ய ஸங்கல்பத்தை அவருக்குத் தெரிவிக்க இது நல்ல ஸமயமாயிற்று.
வருங்காலத்துக்கெல்லாம் ப்ரஹ்ம வித்யையை கற்பதற்கு இது ஒரு அங்குரார்ப்பணமான விஷயத்தைப் பற்றிய அறிவிப்பு அல்லவா?
அதற்காகத் தான் சுகாசார்யாளும் மற்றும் கெளடபாதாசார்யாளும் அங்கே கூடியிருந்தார்கள்.
வ்யாஸர் கோவிந்த பகவத்பாதருக்கு ஈச்வர நிர்மித்தமாக ஏற்பட்டிருந்த பெரிய கார்யத்தைக் கொடுத்தார்.
லோக ஸம்ப்ரதாயத்தையொட்டி அந்த அவதார புருஷருக்கு ஒருத்தர் ஆச்ரமம் கொடுத்து உபதேசம் பண்ணவேண்டும். இந்தப் பெரிய கார்யம் உனக்கு ஸங்கல்பிக்கப்பட்டிருக்கிறது.”
“தக்ஷிணத்தின் கோடியில் கேரள தேசத்தில் அவதாரம் ஏற்படப் போகிறது. அந்த அவதாரம் செய்பவர் தனது பால்ய வயதிலேயே உபதேசம் வேண்டி அங்கிருந்து புறப்பட்டு வருவார். நாமெல்லாம் இங்கே வட கோடியில் ஹிமாலயத்தில் இருக்கிறோம்.
இத்தனை தூரம் அவர் நடந்து வரும்படி செய்து விடக்கூடாது. (காரணம்:) அவதாரம் என்பது ஒன்று; குழந்தை என்பது இன்னொன்று; அதோடு கூட சிஷ்யன் குருவைத் தேடிப் போகிற மாதிரியே குருவும் சிஷ்யனைத் தேடிப் போகவேண்டும்.
அதனால் பாதி தூரம் அவர் வருவதாகவும் பாதி தூரம் நீ போவதாகவும் இருக்கட்டும். இங்கே இருந்து மத்திய தேசத்துற்குப் போ.”
“நர்மதா தீரம் உனக்கு ஏற்கெனவே பழக்கப்பட்ட இடம். அங்கே போய், நீ மஹாபாஷ்ய உபதேசம் பெற்றுக் கொண்ட அதே அரச மரத்தடியிலேயே காத்துக் கொண்டிருக்கவும், அங்கே உள்ள குஹையில் ஆத்மாநுஸந்தானம் பண்ணிக்கொண்டு உட்கார்ந்திரு. உரிய காலத்தில் அவர் வந்து சேரும்போது ஆச்ரமம் கொடுத்து உபதேசம் பண்ணு” என்று கோவிந்த பகவத் பாதாளிடம் வ்யாஸர் சொன்னார்.
“ரவுன்ட் டேபிள் கான்ஃபரன்ஸ்’என்று உலகத் தலைவர்கள் கூடி ரிஸொல்யூஷன் பாஸ் பண்ணுகிற மாதிரி (தீர்மானம் நிறைவேற்றுவது போல்) வ்யாஸர், சுகர், கௌடபாதர், கோவிந்த பகவத்பாதர் ஆகிய நாலு பெரிய மஹான்கள் கூடிய அந்த மகாநாட்டில் ரிஸொல்யூஷன் பாஸ் ஆயிற்று!” (நன்றி – தெய்வத்தின் குரல்)
இந்த ஆதிசேஷ ஸ்வரூபம்தான் ஸ்ரீ கோவிந்த பகவத்பாதாளின் ஆதி ரூபம். ஆதி ரூபத்திற்கும் இந்த (கோவிந்த) ரூபத்திற்கும் நடுவே இன்னும் சில அவதார ரூபங்களும் அவருக்கு உண்டு. என்னென்ன? – ஒரு பார்வை
ஸெளமித்ரி, பலாத்ரிபுத்ர — ஸெளமித்ரி, பல, அத்ரி புத்ர – ஸெளமித்ரி என்றால் ஸுமித்ரா புத்ரனான லக்ஷ்மணர். விஷ்ணு ராமராக வந்தபோது ஆதிசேஷன் லக்ஷ்மணராகக் கூட வந்தார்.
அரச மரத்தின் மேலே நாள் கணக்காக ஆஹாரமில்லாமல், தூக்கமில்லாமல் சந்த்ர சர்மா பாடம் கற்றுக்கொண்டாரே, அது எப்படி முடிந்தது என்பதற்கு இங்கே பதில் கிடைக்கிறது.
லக்ஷ்மணராக இருந்தபோது இதை விட பஹுகாலம் — பதினான்கு வருஷம் — வனவாஸத்தின் போது அவர் ஆஹாரமும் நித்திரையும் இல்லாமல் அண்ணாவுக்குப் பணிவிடை பண்ணிக்கொண்டு, காவல் காத்துக் கொண்டு இருந்திருக்கிறார்? அந்த எக்ஸ்பீரியன்ஸ் தான் இப்பவும் கைகொடுத்திருக்கிறது! இப்படிப் பண்ணவே, அப்போது ‘ட்ரெய்னிங்’ நடந்திருக்கிறது!
ஸெளமித்ரியாக வந்தவரே அப்புறம் பலராமராக க்ருஷ்ணாவதாரத்தில் வந்தார்.
தம்பியாக இருந்தவர் அண்ணாவாக வந்து அண்ணாவின் பெயரையும் வைத்துக் கொண்டார், பலராமர் என்று. பலபத்ரர் என்றும் சொல்வதுண்டு.
இங்கே “ஸெளமித்ரி பலாத்ரிபுத்ர” என்னுமிடத்தில் ‘பல’என்பது பலராமரைத்தான். அவரும் சேஷாவதாரம்.
அப்புறம் ‘அத்ரி புத்ரர்’. அதுதான் ஆத்ரேயர் என்னும் பதஞ்ஜலி.
ஹரியின் படுக்கையாக, ஹரனின் பாதரஸமாக, பூமியை தரிப்பவராக, லக்ஷ்மணராக, பலராமராக, பதஞ்ஜலியாக வந்தவர்தான் சந்த்ர சர்மாவாகப் பிறந்து கோவிந்த முனியானவர்.
இப்போது அவர் நர்மதா தீரவாஸியாக ஆனார். அதைத்தான் “உபரேவம் ஆத்ததாமா” என்று சொல்லியிருக்கிறது. ‘தாமா’ என்றால் இருப்பிடம். ரேவா என்பது நர்மதைக்கு இன்னொரு பெயர். ‘உபரேவம்’ என்றால் ‘ரேவாவுக்குப் பக்கத்தில்’, அதாவது நர்மதா தீரத்தில்.
நர்மதா தீரத்தில் வாஸ ஸ்தானத்தை உடையவர்தான் ‘உபரேவமாத்த தாமா’. இத்தகைய பல ரூபங்களைக் கொண்டவர் விஜயம் பண்ணட்டும் — “ஜயதாத்” — அவருடைய பேரும் கீர்த்தியும் எப்போதும் வெற்றிகரமாக விளங்கிக் கொண்டு இருக்கும் ஸ்ரீ கோவிந்த பகவத்பாதாள் நர்மதை நதிக்கரைக்கு வந்து சேர்ந்தார்.
பூர்வாச்ரமத்தில் எந்த மரத்துக்கு மேலே சிஷ்யராக இருந்துகொண்டு வ்யாகரண உபதேசம் கேட்டாரோ, அதே மரத்தின் அடியில் ஒரு குகையில், தாம் ப்ரஹ்ம வித்யோபதேசம் செய்வதற்கான சிஷ்யரை எதிர்பார்த்து உட்கார்ந்து கொண்டு அப்படியே நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார்.
ஜகத்குரு ஆதிசங்கரர், காலடியை நீங்கி, நர்மதை ஆற்றை அடைந்த போது, கோவிந்த பகவத் பாதாள், நர்மதை ஆற்றாங்கரையில் சமாதி நிலையில் இருந்தார்.
அந்நேரத்தில், நர்மதை ஆற்றில் எதிர்பாராது பெருக்கெடுத்த வெள்ளத்தை தடுக்க, தன் கமண்டலத்தைக் கொண்டு தடுத்து, சமாதி நிலையில் இருந்த கோவிந்த பகவத் பாதாளின் உயிரைக் காத்தார்.
ஆதிசங்கரரை நோக்கி நீ யார் எனக் கேட்டார். அதற்கு சங்கரர் அத்வைத தத்துவத்தில் செய்யுள் நடையில் சில சுலோகங்களில் நான் யார் என்பதை விளக்கியதை கேட்ட கோவிந்த பகவத் பாதர், சங்கரரை தன் சீடராக ஏற்றுக் கொண்டார்.
கோவிந்த பகவத் பாதரின் ஆணைப்படி, சங்கரர், உபநிடதம், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகிய இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்களுக்கு பாஷ்யம் எழுதி, அத்வைத வேதாந்தத்தை இந்தியா முழுவதும் தானும், தனது சீடர்கள் மூலமும் பரப்பினார்.
கோவிந்த பகவத்பாதளின் நினைவைப் போற்றும் வகையில், ஆதிசங்கரர் தான் எழுதிய பஜ கோவிந்தம் எனும் நூலிலும் குரு தோத்திரத்திலும் (குர்வாஷ்டகம்) பகவத்பாதளின் பெருமைகளை விளக்கியுள்ளார்.
கரூரில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ விஸ்வகர்மா, காயத்ரி தேவி, சித்தி விநாயகர் சுவாமிகள் திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது
விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலை முதல் கரூரில் உள்ள ஸ்ரீ விஸ்வகர்மா, ஸ்ரீ காயத்ரி தேவி, சித்தி விநாயகர் ஆகிய உற்சவ சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.
இதனை தொடர்ந்து மாலையில் அமராவதி நதிக்கரையின் ஸ்ரீவிஸ்வ பிராமண சபையோகார் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி முன்னிட்டு திருவீதி உலா நடைபெற்றது.
தொழில் கடவுளான ஸ்ரீ விராட் விஸ்வகர்மா, காயத்ரி தேவி, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆகிய உற்சவ சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரம்ம தீர்த்தம் சாலையிலிருந்து பேருந்து நிலையம் ரவுண்டானா, ஜவகர் பஜார், லைட் ஹோஸ் கார்னர், அகிய முக்கிய வீதிகள் வழியாக வாண வேடிக்கையுடன் எடுத்துச் சென்ற சுவாமியை வழிநெடுங்கிளும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீ விஸ்வ பிராமண சபையோர்கள் கைலாய வாகன மண்டப படி மக்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்டு 17 முதல் செப்டம்பர் 17 வரை நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.
இன்று கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் இலங்கை பூவா தலையா வென்று முதலில் மட்டையாட முடிவுசெய்தது. ஆனால் 15.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து இலங்கை அணி 50 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.
இது இலங்கை அணியின் மிகக் குறைவான மொத்த ரன்களில் இரண்டாமிடத்தைப் பிடிக்கிறது. இதற்கு முன்னர் 2012ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் 43 ரன்கள் எடுத்தது முதலிடம் வகிக்கும் குறைவான மொத்த ஸ்கோராகும்.
இந்திய அணியில் ஷுப்மன் கில், இஷான் கிஷன் இருவரும் சேர்ந்து 6.1 ஓவரில் 51 ரன் அடித்து எளிதில் வெற்றியைப் பெற்றுத் தந்தனர். முகம்மது சிராஜ் 7 ஓவர் வீசி 21 ரன் கொடுத்து 6 விக்கட் வீழ்த்தினார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அந்தத் தொகையை (சுமார் 4.15 லட்சம்) மழை நேரத்தில் விளையாட்டு மைதானத்தை நன்றாகப் பராமரித்த மைதான ஊழியர்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.
முன்னதாக இப்போட்டியில் பங்குபெற்ற அணிகள் இரண்டு குரூப்புகளாகப் பிரிக்கப்பட்டன. குரூப் Aஇல் பாகிஸ்தான், இந்தியா, நேபால் ஆகிய அணிகள் இடம்பெற்றன. இந்தப்பிரிவில் இருந்து பாகிஸ்தானும் இந்தியாவும் அடுத்தசுற்றிற்குத் தகுதிபெற்றன.
இந்தச் சுற்றில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான ஆட்டம் மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.
குரூப் B பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன. இப்பிரிவில் இருந்து இலங்கை அணியும், வங்கதேச அணியும் அடுத்த சுற்றுக்குத் தேர்வாயின.
அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றில் இந்தியா இலங்கை, பாகிஸ்தான் அணிகளை வென்று, வங்கதேச அணியிடம் தோற்றது. இலங்கை அணி பாகிஸ்தான், வங்கதேச அணிகளை வென்று, இந்திய அணியிடம் தோற்றது. பாகிஸ்தான் வங்கதேச அணியை வென்றது. இதனால் இந்திய அணியும் இலங்கை அணியும் இறுதிப் போட்டிக்குத் தேர்வாயின.
இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 6 ஆட்டங்கள் ஆடி 302 ரன் அடித்து இப்போட்டியின் அதிக ரன் அடித்த வீரர் ஆனார். சிராஜ், இலங்கையின் பதிரனா இருவரும் தலா 11 விக்கட்டுகள் எடுத்து அதிக விக்கட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்கள் ஆயினர்.
இந்தப் போட்டியில் விளையாடியதன் மூலம் (1) ரோஹித் ஷர்மா 250 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரரானார். மேலும் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன் அடித்த வீரர்களில் ஒருவரானார் (2) ஜதேஜா தனது 200ஆவது விக்கட்டை இப்போட்டியில் வீழ்த்தினார். (3) விராட் கோலி 267 ஒருநாள் போட்டிகளில் 13,000 ரன் அடித்தவீரரானார்.