Home Blog Page 316

இன்று… சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதீ தீர்த்த ஸ்வாமிகளின் வர்தந்தி உத்ஸவம்!

sringeri swamigal - 2026

இன்றைய தினம் தக்ஷிணாம்னாய ஶிருங்கேரி ஶாரதா பீடாதிபதி ஸன்னிதானம் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுஶேகரபாரதீ ஸ்வாமிகளின் வர்த்தந்தி (பிறந்தநாள்) மகோத்ஸவம். பவித்ரமான சிருங்கேரியில் வைத்து நடைபெறுகிறது …

May be an image of 1 person, temple and text

ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் அருளுரை:

சந்தோஷமான வாழ்க்கைக்கு திருப்தி அத்யாவசியமானது. எவ்வளவு ஐஸ்வர்யம் அல்லது க்ஷேமங்கள் வந்தாலும் திருப்தியற்ற மனிதனுக்கு சந்தோஷம் கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

இன்ப வஸ்துக்களை விரும்புபவன் அவைகளைப் பெறுவதற்கு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்: அது ஒன்றும் இன்பமயம் அல்ல. பிறகு அவைகளை தக்கவைத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டும் : அதுவும் இன்பம் தரக்கூடிய காரியம் இல்லை. ஏதேனும் ஒரு காரணத்தினால் கஷ்டப்பட்டு சேகரித்த உடைமைகள் நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டால், இருந்த கொஞ்ச நஞ்ச இன்பமும் போய், முடிவில் வேதனைதான் மிஞ்சும்.

ஆகவே உடைமைகளுக்கு ஆசைப்படுவது நல்லதில்லை. பழங்காலத்தில் வனத்தில் இருந்த ரிஷிகளுக்கென்று சொந்தம் ஏதும் கிடையாது. ஆனால் அவர்கள் சந்தோஷமாக இல்லையா என்ன? திருப்தி என்ற ஒன்றினால் தான் அவர்கள் அவ்வாறு இருந்தார்கள்.

புராணங்கள் பரம சிவபெருமானை ஒரு காளையின் மீது அமர்ந்து இருப்பவராகவும் புலித்தோலை உடுத்தி இருப்பவராகவும் மற்றும் உடலில் விபூதி பூசி இருப்பவராகவும் வர்ணிக்கின்றன. நாம் இந்த்ரியஸுகங்களிலிருந்து மனதை மறக்க வேண்டும் என்பது இதன் தாத்பரியம். நாம் எவ்வளவு செழிப்பாக வாழ்ந்தாலும் எளிய வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு இன்பம் கிடைக்கும்.

தனம் தானாகவே வந்தால் அதை நல்ல அல்லது தார்மீக காரியங்களுக்காக உபயோகப்படுத்தி வாழ்க்கையை சமநிலையில் நடத்தி வரவேண்டும். “இவ்வுலகில் யார் பணக்காரன், யார் ஏழை” என்ற கேள்விக்கு பதில் உண்டு. ஆசைகளற்றவனும் திருப்தி நிரம்பிய மனதுள்ளவனும் தான் பணக்காரன். இந்த குணம் இல்லாத மற்ற எல்லோரும் உண்மையில் ஏழைகள்.

ஆதலால் திருப்தி என்ற லக்ஷியத்தை உயர தாங்கி, இன்பத்துடன் செழிப்பாக வாழ்வது மிக்க நல்லது.


மனிதன் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும், அது நியாயத்திற்கும் சத்தியத்திற்கும் விரோதமில்லாமல் இருக்க வேண்டும். நல்ல காரியம் செய்யும் சமயத்தில் எத்தனையோ இடையூறுகள் வரும், பலர் நிந்தனை செய்ய வரலாம் அல்லது அவனுக்கு ஐஸ்வர்ய நஷ்டமும், உயிருக்கு ஆபத்தும் கூட வரலாம். ஆனால் எல்லாவற்றையும் விட நியாயமும் சத்தியமும்தான் உயர்ந்தது என்கிற பாவத்தோடு, எடுத்துக்கொண்ட காரியத்தை செய்து முடிக்க வேண்டும்.

கஷ்டங்கள் வரலாம் என்ற காரணத்திற்காக சில மனிதர்கள் எந்த நல்ல காரியத்தையும் ஆரம்பிக்ககூட மாட்டார்கள். மற்ற சிலர் எடுத்த காரியத்தில் கஷ்டங்களைப் பார்த்து நடுவில் அதை கைவிட்டு விடுவார்கள். ஆனால் உத்தமமான மனிதர்கள் எந்த கஷ்டங்கள் வந்தாலும் எடுத்துக் கொண்ட அந்த நற்பணியை முடித்துவிடுவார்கள். பகவத்பாத சங்கரர் தர்மபிரசார காரியத்தை எடுத்துக் கொண்டார். அதில் எத்தனையோ கஷ்டங்கள் வந்தன. அந்த மாதிரி சமயத்தில் மனிதனுக்கு தைரியம் மிகவும் தேவையானது.

பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா மூன்று வகைப்பட்ட தைரியத்தை பற்றி சொல்கிறார்- ஸாத்விகம், ராஜஸம், தாமஸம். காரியங்களைச் செய்யும் பொழுது ஏற்படக்கூடிய கஷ்டத்தை சகிப்பது தான் ஸாத்விகமான தைரியம். அதுதான் மிகவும் தேவையானது. இந்த தைரியத்துடன் காரியத்தை நிறைவேற்றிய மனிதன் எத்தனையோ மனிதர்களுக்கு உபகாரம் செய்தவனாவான். அவனுடைய பெயர் நீண்டகாலம் நிலைக்கும். மகாகவி பாரவி ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்

ஸாஸ்வதமற்ற விலாசத்தை கவனிக்காமல் சாஸ்வதமான கீர்த்தியில் விருப்பம் உள்ளவர்களுக்கு லௌகீகமான சம்பத் என்கிறது ஒரு விஷயமே இல்லை. என்ன கஷ்டங்களிலும் எடுத்துக்கொண்ட நல்ல காரியத்தை செய்து முடித்து, சாஸ்வதமான கீர்த்தியை சம்பாதிக்க வேண்டும்.

தக்ஷிணாம்னாய சிருங்கேரி சங்கராசார்ய ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள்

கோயில்களில் நாளை கருட பஞ்சமி விழா!

varahi vazhipadu in madurai - 2026

மதுரை: மதுரை நகரில் உள்ள பல கோயில்களில் திங்கள்கிழமை கருட பஞ்சமி விழா கொண்டாடப்
படுகிறது.

மதுரையில் உள்ள அண்ணா நகர் யானைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயம் ,மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயம் ஆகிய கோவில்களில் வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள வராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமங்களும், அதைத்தொடர்ந்து அபிஷேக அர்ச்சனை வழிபாடுகள் நடைபெறுகிறது.

மேலும், திங்கள் கிழமை கருட பஞ்சமி மற்றும் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, நரசிம்மருக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு பானகம் மற்றும் பிரசாதங்கள் படைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெறும். பக்தர்கள், நரசிம்மருக்கு துளசி மாலை அணிவித்தும், பிரசாதங்கள் படைத்து வழிபடுவர்.

மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், கருட பஞ்சமி மற்றும் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, திங்கட்கிழமை காலை 10:30 மணி அளவில் வராகி அம்மன் சன்னதியில் சிறப்பு ஹோமங்களும், இக்கோவில் அமைந்துள்ள நரசிம்மருக்கு சிறப்பு அபிஷே அர்ச்சனை வழிபாடுகளும் நடைபெற உள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் மகளிர் ஆன்மீக குழுவினர் செய்து வருகின்றனர். மதுரை அண்ணா நகர் யானைக்குழாய் முத்துமாரி ஆலயத்தில், பஞ்சமி ஒட்டி, அம்மன் வராகி அலங்காரத்தில் பக்தருக்கு காட்சி அளிப்பார்.

நெல்லையில் கலக்கும் அண்ணாமலை! எங்கு நோக்கினும் மக்கள் சமுத்திரம்!

annamalai yatra in nellai dt - 2026
#image_title

பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று நெல்லை மாவட்டத்தில் 2-வது நாளாக தனது நடைபயணத்தை வள்ளியூர் நம்பியான் விளையில் தொடங்கினார்.

அங்குள்ள பத்திரகாளி அம்மன் கோவில் முன்பு இருந்து நடைபயணத்தை தொடங்கி அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூரண கும்ப மரியாதை கொடுத்தும் வரவேற்றனர்.

ஏராளமான சிறுவர், சிறுமிகள் மோடி வேடமணிந்து அவரை வரவேற்றனர். தொடர்ந்து அப்பகுதியில் நடைபயணம் சென்ற அவருக்கு பொதுமக்களும், தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக, விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளையில் உள்ள அவரது உருவ சிலைக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

1857-ல் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்கியதாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வீரம் விளைந்த இந்த நெல்லை மண்ணில் ஏராளமானோர் இந்திய சுதந்திரத்திற்காக போராடி இருக்கிறார்கள். அதை இளைய தலைமுறை இடையே கொண்டு சேர்ப்பது நம்முடைய கடமை என்றார்.

அதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் தி.மு.க. குறித்தும், முதலமைச்சர் குறித்தும் அவதூறு பரப்பியதாக உங்கள் மீது முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் புகார் அளித்துள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டபோது அண்ணாமலை கூறியதாவது:-

அரசியலைப் பொறுத்தவரை நாங்கள் தி.மு.க.வின் பொய்யை தோலுரித்துக் காட்டுவதை அவதூறு பரப்புவதாக தி.மு.க.வினர் கூறுகிறார்கள். என்ன அவதூறு பரப்பினேன்? யார் குறித்து அவதூறு பரப்பினேன் என்பதை அவர்கள் சொல்ல வேண்டும்.

நான் பேசியது அவதூறு என்றால், ராமநாதபுரம் மாநாட்டில் பிரதமர் மோடி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது அவதூறு இல்லையா? பாராளுமன்ற திறப்பு விழாவிலே செங்கோலுக்கு பிரதமர் மோடி மரியாதை செய்தது குறித்து அவதூறு கருத்தை பதிவிட்ட அமைச்சர் மனோ தங்கராஜை முதலில் கைது செய்ய வேண்டும்.

தி.மு.க.வின் அவதூறு வழக்குகளை கண்டு பயப்பட போவதில்லை. சில நேரங்களில் தி.மு.க.விற்கு அவர்கள் பாணியிலேயே நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டி உள்ளது .

நீட் தேர்வு விவகாரத்தில் ஒன்றுமே இல்லாத பிரச்சினையை பெரிதாக்கி அவர்களை தற்கொலைக்கு தூண்டியது தி.மு.க. தான். இந்தியாவில் வேறு எங்கும் நீட் தேர்வு தொடர்பாக தற்கொலைகள் இல்லை.

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த காலம் முதல் தற்போது வரை தமிழகத்தில் மட்டும் தான் நீட் தற்கொலைகள் நடைபெறுகின்றன. ஜார்க்கண்டிலேயே பழங்குடியின மாணவர் நீட் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள்.

ஆந்திரத்தில் பின்தங்கிய மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். நீட் தேர்வில் முதல் 10 இடங்களை பெற்றவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நீட் தேர்வு தொடர்பாக தமிழகத்தில் இனி தற்கொலை நடக்கக்கூடாது என கடவுளை வேண்டிக் கொள்கிறேன் .

நாங்குநேரி சம்பவத்திற்கு போதிய வேலை வாய்ப்பு இல்லாததே காரணம். தென் தமிழகத்தில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பொறியியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை படித்து முடித்துவிட்டு தென் தமிழகத்தில் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.

தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளித்து பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும். அப்போதுதான் ஜாதி, கந்து வட்டி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரை, அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோரை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

இது குறித்து அண்ணாமலை தமது சமூகத் தளப் பதிவுகளில் குறிப்பிட்டிருப்பதாவது…

இன்றைய காலை #EnMannEnMakkal பயணம், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் சிறப்பாக நடந்தேறியது.சந்திரயான் 3 ஏவுகணையில் பொருத்தப்படும் செமி கிரையோஜெனிக் எனும் இயந்திர சோதனை, இங்கிருக்கும் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் தான் நடைபெற்றது என்பது நம் அனைவருக்குமே பெருமை. இன்று வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடி, பல போர்களில் வெற்றி கண்ட மாவீரன் ஒண்டி வீரனின் 252 ஆவது நினைவுதினம்.

கர்மவீரர் காமராஜர் படிக்கச் சொன்னார். திமுக 24 மணி நேரமும் குடிக்கச் சொல்கிறது.

1972 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ராமநாதபுர கெசட் திருத்திய புது பதிப்பில் கச்சத் தீவு இல்லை. அந்த பதிப்பிற்கு அணிந்துரை வழங்கியவர் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி. 1974 ஆம் ஆண்டு, காங்கிரஸ் கச்சத் தீவை தாரைவார்த்த போது குறைந்தபட்ச எதிர்ப்பைக் கூடத் தெரிவிக்காமல் இருந்தவர் கருணாநிதி. கச்சத் தீவைக் கொடுத்ததை ஆதரித்தது கம்யூனிஸ்ட் கட்சி. கச்சத் தீவை தாரை வார்த்துவிட்டு, இன்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மோடியின் முகவரி : ராதாபுரம்

ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வசதி பெற்ற திருமதி சித்ரா, முத்ரா திட்டத்தின் மூலம் தொழில் முனைவோராக உருவான திரு நித்தியானந்தம்,

PM கிசான் திட்டத்தில் பயன்பெற்ற திரு அன்னப்பாண்டி, உஜ்வாலா திட்டத்தின் மூலம் இலவச சமையல் எரிவாயு பெற்றுப் பயனடைந்த திருமதி காசிலிங்கம், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் வீடு பெற்ற திருமதி செல்வி சியாமளா. இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.

தமிழக மக்களை ஜாதி ரீதியாகப் பிரித்தது கருணாநிதி என்று குற்றம் சாட்டிய அப்பாவு தான் இப்போது இங்கே நடக்கும் கனிம வளக் கொள்ளைக்கு முக்கிய காரணகர்த்தா.

அடைமிதிப்பான்குளத்தில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட கல்குவாரி வெடி விபத்திற்குப் பிறகும், தொடர்ந்து கல்குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு வருகின்றன. அனுமதி இல்லாத 32 குவாரிகளுக்கு 300 கோடி அபராதம் வசூலித்ததாகக் கூறும் ஊழல் திமுக அரசு, அதன் விவரங்களை வெளியிட முடியுமா? 30 டன் தாங்கும் கிராம சாலைகளில் 70 டன் எடைக்கு மலைகளை உடைத்து கற்களை ஏற்றிச் செல்கிறார்கள்.

நொடிந்து போன BGR நிறுவனத்தை வைத்து 4,442 கோடி ஒப்பந்தம் நிறைவேற்ற முயற்சித்தார்கள். தமிழகத்தை தங்கள் சொந்த ஆதாயத்துக்காக அடகு வைக்க முயற்சித்தார்கள். இந்த BGR முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழல் திமுக கூட்டணியை தமிழக மக்கள் மொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி மீண்டும் தொடர தமிழகமும் துணையிருக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது.

ரஷ்யாவின் லூனா-25 திட்டம் தோல்வி; சந்திரயான்- 3 நிலவில் தரையிறங்கும் நேரம் மாற்றியமைப்பு!

chandrayaan 3 lander - 2026
#image_title

சந்திரயான்- 3 விண்கலம் வரும் 23ஆம் தேதி மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே மாலை 5.45 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாலை 6.04 மணிக்கு தரையிறங்கும் என நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய நிறுவனம் நிலவுக்கு அனுப்பிய விண்கலம் லூனா-25 தோல்வியில் முடிந்த நிலையில், நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கும் முதல் நாடு என்ற பெருமையைப் பெறும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.

முன்னதாக, நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக ரஷியா, லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10-ம் தேதி விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு போட்டியாக ரஷிய விண்கலம் அனுப்பியதாகக் கூறப்பட்டது.

குறிப்பாக, சந்திரயான்-3 விண்கலம் 23-ம் தேதி நிலவில் தரை இறங்க திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு முன்பாக 21-ம் தேதி லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க ரஷிய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு ரஷியா அனுப்பிய லூனா-25 விண்கலம் கடந்த 17-ம் தேதி வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. தொடர்ந்து லூனா-25 விண்கலனின் உயர குறைப்புகளை விஞ்ஞானிகள் செய்து வந்தனர். இந்நிலையில், திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், நிலவில் தரை இறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் விண்கலத்தை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், ரஷியாவின் லூனா 25 விண்கலம் நிலவில் மோதியதாக ரஷியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நேற்று லூனா 25 விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நிலவில் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. லூனா-25 விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த ரஷிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது.

அதிமுக., தொண்டர் வெள்ளத்தில் மதுரை மாநாடு! 32 தீர்மானங்கள் நிறைவேறம்!

admk conf in madurai - 2026
#image_title

மதுரையில் அதிமுக மாநாடு கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றினார். பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் மாநாடு என்பதால், 300 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட திடல் அமைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நேற்று முதலே மதுரையில் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மதுரை மாவட்டம் வலையங்குளம் அருகே அதிமுகவின் ‘வீர வரலாற்றின் பொன்விழா மாநாடு’ இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களும், அக்கட்சியின் நிர்வாகிகளும் வந்திருந்தனர்.

மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்ட அதிமுக கொடி மரத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று காலை 8.30 மணியளவில் கொடியேற்றினார். அப்போது ஹெலிகாப்டர் மூலமாக பூக்கள் தூவப்பட்டன. கொடி ஏற்றிய பிறகு, கழகப் பாசறை, அம்மா பேரவை மற்றும் தொண்டரணி அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

முன்னதாக, மாநாடு புறப்படுவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமிக்கு 5.5 அடி உயர வெள்ளிவேலை சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் மற்றும் தொண்டர்கள் வழங்கினர். அ.தி.மு.க. மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி தங்கியிருந்த ஓட்டலில் இருந்து மாநாட்டு திடலுக்கு நூற்றுக்கணக்கான வாகன அணிவகுப்புடன் புறப்பட்டார். 

பகல் முழுவதும் பல்வேறு தலைப்பில் கருத்தரங்குகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மாநாட்டிற்கு வருகை தந்துள்ள தொண்டர்கள் அனைவருக்கும் மூன்று வேளையும் சுடச்சுட உணவு வழங்கப்பட்டது. தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஆண், பெண் இருபாலருக்கும் தனித் தனி கழிப்பறைகளும், குடிதண்ணீர் தொட்டிகளும் போதுமான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மாலை 4 மணியளவில் மாநாட்டு பொதுக்கூட்டம் தொடங்கியது. இதில் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தம்பிதுரை, முனுசாமி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். நிறைவாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரை நிகழ்த்தினார்.

32 தீர்மானங்கள் நிறைவேற்றம்

முன்னதாக, காலை 6.00 மணிக்கே மதுரை மாவட்ட அதிமுக செயலாளர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா நிகழ்ச்சி ஏற்பாடுகளைக் கவனிக்கத் துவங்கினர். கொடி ஏற்றிய எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அதிமுக அமைச்சர்கள், இன்றைய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளால் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னர் அருகில் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டு உள்ள கண்காட்சியை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அதில் அதிமுக 50 ஆண்டு கால வரலாற்று நிகழ்வுகள் புகைப்படங்களாக வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

1972 முதல் இப்போது வரை 50 ஆண்டு கால அதிமுக வரலாற்று புகைப்படங்களும், அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டு தமிழகத்தில் நடைமுறைக்கு வந்த திட்டங்களும் plaster of Paris கொண்டு களிமண்ணால் வடிவமைக்கப்பட்டு காட்சி படுத்தப் பட்டுள்ளன.

கண்காட்சியை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி, திறந்த வேனில் மாநாட்டுத் திடலை சுற்றி வந்தார். பின் தங்கி இருக்கும் ஹோட்டலுக்குப் புறப்பட்டுச் சென்றார். மாநாட்டுத் திடலில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகள் போடப்பட்டு, தொண்டர்கள் நிறைந்து காணப்படுகிறது.
வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வேன் மூலம் அதிகாலையிலேயே வந்து சேர்ந்த நிலையில், அருகில் உள்ள மாவட்டத்தினர் மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரை மாநாட்டிற்கு வேன், கார் மற்றும் பேருந்து மூலம் வந்து கொண்டு இருக்கின்றனர்.

காலையில் இசை நிகழ்ச்சி, கவியரங்கம் மற்றும் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இசைக் கலைஞர் செந்தில் & ராஜலட்சுமி குழுவினர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.

திடலில் அமர நாற்காலி கிடைக்காதவர்கள் மாநாட்டு நிகழ்ச்சிகளை கண்டு களிக்க மாநாட்டுத் திடலுக்கு அருகேயே மிக நீண்ட அஸ்பெஸ்டாஸ் கூடாரங்கள் அமைக்கப்பட்டு LED திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன. உணவுக் கூடாரங்கள் மூன்றில் காலை 9.30 மணி முதல் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே குடிநீர் சின்டெக்ஸ் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. மொபைல் டாய்லெட் மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மாலை 4.00 மணி முதலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பேசிய பிறகு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, இறுதியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் தொண்டர்களின் பலத்த கரகோஷம் மூலம் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கும், அதிமுக தொண்டாகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம்.
  2. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு வரும் எடப்பாடியார்க்கு வாழ்த்தும் நன்றியும் இதயப்பூர்வமான பாராட்டுகளும்.*
  3. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக எடப்பாடியார் திகழ்கிறார். அம்மா அவர்களின் அரசியல் வாரிசு என நல்லாட்சியைத் தந்தவர். நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் அங்கீகரித்த பொதுச் செயலாளர்.
  4. அதிமுவிற்கு இரண்டு கோடிகளுக்கு மேல் உறுப்பினர் சேர்க்கைக்காக அதிமுகவின் மாவட்ட / மாநில / பிற மாநில நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் பாராட்டும் நன்றியும்.*

5 இந்திய திருநாட்டிலேயே 2 கோடிக்கும் மேல் உறுப்பினர் எண்ணிக்கை கொண்ட ஒரே இயக்கம் அதிமுக.

6 திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்தல்.

  1. தமிழக அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ் வழிக் கல்விக்காக மத்திய அரசை வலியுறுத்தல்.
  2. தமிழை அரசியல் அமைப்புச் சட்டம் மூலம் ஆட்சி மொழியாக்க மத்திய அரசை வலியுறுத்தல்.
  3. புதுச்சேரியை மாநிலமாக அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்தல்
  4. மின்கட்டண உயர்வுக்கு தமிழக அரசுக்கு கண்டனம்.
  5. மகளிர் உரிமைத் தொகை வழங்க கட்டுப்பாடுகள் பல விதித்த தமிழக அரசுக்கு கண்டனம்.
  6. வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசுக்கு கண்டனம். இந்தியாவிலேயே தமிழகத்தை அதிக கடன் வாங்கிய மாநிலமாக மாற்றிய விடியா அரசுக்கு கண்டனம்.
  7. விவசாயிகளுக்கு எதிரான போக்கை கடைபிடிக்க தமிழக அரசுக்கு கண்டனம்.
  8. மேகதாது அணை கட்டும், அவர்களது கூட்டணி கட்சி காங்கிரஸ் கர்நாடக அரசை கண்டிக்கத் தவறும் தமிழக அரசை கண்டித்து.
  9. கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தராத தமிழக அரசை கண்டித்து.
  10. நினைத்ததை முடிப்பவன் நான் புரட்சித் தலைவர் பாடினார். அதன்படி நினைத்ததை முடித்தவர் எடப்பாடி பழனிச்சாமி.
  11. தமிழகத்தில்தொழில் வளத்தை அகல பாதாளத்திற்கு கொண்டு தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.
  12. நெசவாளர்களுக்கு எதிரான விரோதப் போக்கை கடைபிடிக்கும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.
  13. உள்ளாட்சி அமைப்புகளின் நிதியை அரசே எடுத்து, வேறு பல திட்டங்களுக்கு செலவழிக்கும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.
  14. காவிரி குண்டாறு நதிகளின் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ள தமிழக அரசைக் கண்டித்து தீர்மானம்.
  15. கோதாவரி காவிரி இணைப்புத் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
  16. பட்டியலின மக்களுக்கான நிதியை வேறு பல திட்டங்களுக்குப் பயன்படுத்தும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.
  17. கடலில் பேனா சின்னம் அமைக்கத் துடிக்கும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.
  18. மணிப்பூர் மாநில அரசையும் மத்திய அரசையும் அங்கு அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தல்
  19. கழக நிர்வாகிகள் மீது போடும் பொய் வழக்குகளை எதிர்கொண்டு வெல்வோம் என சூளுரைத்து தீர்மானம்
  20. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முடக்காமல் செயல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.
  21. இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.
  22. அம்மா ஜெயலலிதாவிற்கு சட்ட சபையில் இழைத்த (சேலையைப் பிடித்து இழுத்த) அநீதியை மறைக்கும் மு.க. ஸ்டாலினை கண்டித்து தீர்மானம்.
  23. கட்சியிலிருந்து துரோகிகளை களை எடுத்த பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச் சாமிக்கு பாராட்டு.
  24. மக்கள் விரோத ஊழல் ஆட்சி நடத்தும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.
  25. 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், எடப்பாடி பழனிச்சாமி வகுத்து தரும் திட்டங்களின் படி, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய சூளுரை.
  26. அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியாரை தமிழக முதல்வராக்க சபதம் ஏற்போம் என தீர்மானம்.

என மொத்தம் 32 தீர்மானங்கள் அதிமுக எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளன

அரசு வேலை வாங்கித் தருவதாக பணமோசடி; வணிக வரித் துறை பெண் ஊழியர் இடைநீக்கம்!

crime scene - 2026

சிவகாசியில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட, வணிகவரித்துறை பெண் ஊழியர் பணியிடை நீக்கம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிதேவி (36). இவருக்கும், சிவகாசி வணிகவரித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் சித்ராதேவி (35) என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பாண்டிதேவியுடன் நட்புடன் பழகிய சித்ராதேவி, தங்களது அலுவலகத்தில் ஒரு பணியிடம் காலியாக இருப்பதாகவும் அதில் நீங்கள் சேர்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.

வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் அப்போது தான் பணி நியமன ஆணையை தருவார்கள் என்று சித்ராதேவி கூறியுள்ளார். இதனை நம்பிய பாண்டிதேவி, பல தவணைகளாக 4 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாயை சித்ராதேவியிடம் கொடுத்துள்ளார்.

பணம் பெற்ற சித்ராதேவி, பணி நியமன ஆணை என ஒரு கடிதத்தை பாண்டிதேவியிடம் கொடுத்துள்ளார். அதனை பெற்றுக் கொண்ட அவர், சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வேலைக்கு சென்ற போது தான், சித்ராதேவி கொடுத்தது போலியான பணி நியமன ஆணை என்று தெரிந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாண்டிதேவி, சித்ராதேவியிடம் பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். ஆனால் பணத்தை திருப்பித் தராமல் அவர் ஏமாற்றி வந்தார். இது குறித்து பாண்டிதேவி, சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட சித்ராதேவி மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இது குறித்து வணிகவரித்துறை அதிகாரிகள் சித்ராதேவி மீது பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சாத்தூர் அருகே அகழாய்வில் தங்க ஆபரணம் கண்டெடுப்பு!

sathur archeo gold found - 2026
#image_title

சாத்தூர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் – வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம், மேட்டுக்காடு பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது வரை தங்க அணிகலன், ஆண் உருவ சுடுமண் பொம்மை, யானை தந்த பகடைக்காய், சுடுமண் அகல்விளக்கு, சுடுமண் வணிக முத்திரை, சுடுமண்ணால் ஆன வட்ட வடிவ தட்டு, சுடுமண் அணிகலன், பச்சை மற்றும் வெள்ளை நிற பாசி மணிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது 3 கிராம் எடையளவுள்ள தங்க நகை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் வடிவம் தாலி போன்று இருப்பதாகவும், இதில் 40 சதவிகிதம் தங்கம் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நுண்ணிய வேலைப்பாடுகளுடன் ஆபரணங்கள் தயாரிக்கப் பட்ட தொழில் நுட்பம் அறிந்தவர்களாக நமது முன்னோர்கள் இருந்ததற்கான சான்றுகள் இங்கு கண்டெடுக்கப்படும் பொருட்களின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது என்று தொல்லியல் ஆய்வாளர்கள், தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

அதிமுக., மாநாடு: போக்குவரத்து மாற்றம்! மொத்தத்துல… யாரும் மதுரப் பக்கம் வந்துராதீங்க..!

madurai junction - 2026

மதுரையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!

வருகின்ற 20.08.2022-ம் தேதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், மதுரை மாவட்டம், பெருங்குடி காவல் நிலைய சரகம், வலையங்குளம் கருப்புச்சாமி கோவில் அருகில் மாநாடு நடைபெறவுள்ளது. போக்குவரத்தை சீர்செய்யும் வகையில், பிற மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் கீழ்காணும் மாற்று பாதை வழியாக பயணம் செய்யும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

1) கனரக சரக்கு வாகனங்கள் :

1. தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகரிலிருந்து வரும் வாகனங்கள் திருச்சி மற்றும் சென்னை செல்வதற்கு திருமங்கலம், கப்பலூர், வாடிப்பட்டி, திண்டுக்கல் மார்க்கமாக திருச்சி செல்ல வேண்டும்.

2. தூத்துக்குடியிலிருந்து வரும் வாகனங்கள் திருச்சி மற்றும் சென்னை செல்வதற்கு எட்டயபுரம் வழியாக கோவில்பட்டி சென்று விருதுநகர், திருமங்கலம், கப்பலூர், வாடிப்பட்டி, திண்டுக்கல் மார்க்கமாக திருச்சி மற்றும் சென்னை செல்ல வேண்டும்.

3. சென்னை மற்றும் திருச்சியிலிருந்து மதுரை மார்க்கமாக விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்லும் வாகனங்கள் கொட்டாம்பட்டியில் இருந்து நத்தம், திண்டுக்கல், வாடிப்பட்டி, திருமங்கலம் வழியாக செல்ல வேண்டும்.

4. சென்னை மற்றும் திருச்சியிலிருந்து மதுரை மார்க்கமாக தூத்துகுடி செல்லும் வாகனங்கள், மேலூரிலிருந்து திருவாதவூர், பூவந்தி, திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை சாலை வழியாக செல்ல வேண்டும்.

5. இராமநாதபுரம் மற்றும் சிவகங்கையிலிருந்து தூத்துக்குடி மற்றும் விருதுநகர் செல்லும் வாகனங்கள் திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை சாலை வழியாக செல்ல வேண்டும்.

6. சென்னை மற்றும் திருச்சியிலிருந்து மதுரை மார்க்கமாக இராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் மேலூரிலிருந்து சிவகங்கை வழியாக செல்ல வேண்டும்.

7. தேனியிலிருந்து மதுரை மார்க்கமாக திருச்சி செல்லும் வாகனங்கள், நாகமலை
புதுக்கோட்டையிலிருந்து வாடிப்பட்டி, திண்டுக்கல் மார்க்கமாக திருச்சி மற்றும் சென்னை செல்ல வேண்டும்.

8. தேனியிலிருந்து மதுரை மார்க்கமாக சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் செல்லும் வாகனங்கள், நாகமலை புதுக்கோட்டையிலிருந்து துவரிமான், நகரி, தனிச்சியம், அலங்காநல்லூர், சத்திரப்பட்டி, அழகர்கோவில், மேலூர் மார்க்கமாக சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் செல்ல வேண்டும்.

9. திண்டுக்கல்லிலிருந்து மதுரை மார்க்கமாக சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் நத்தம், கொட்டாம்பட்டி, திருப்பத்தூர் வழியாக சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் செல்ல வேண்டும்.

10. இராமநாதபுரம் மற்றும் சிவகங்கையிலிருந்து தேனி செல்லும் வாகனங்கள் சிவகங்கையிலிருந்து மேலூர், அழகர்கோவில், சத்திரப்பட்டி, அலங்கா நல்லூர், தனிச்சியம், நகரி, துவரிமான், நாகமலை புதுக்கோட்டை வழியாக தேனி செல்ல வேண்டும்.

11.மதுரை நகர்ப் பகுதியில் இருந்து விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் மதுரையில் இருந்து காளவாசல், துவரிமான், கப்பலூர், திருமங்கலம் வழியாக செல்ல வேண்டும்.

2) கட்சியினர் வாகனங்கள் :

மாநாட்டிற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு மதுரை மாநகருக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும்.

திருச்சி, மேலூர் மார்க்கமாக மாநாட்டிற்கு வரக்கூடிய கட்சியினர் வாகனங்கள் மதுரை மாநகருக்குள் செல்லாமல் நான்குவழிச் சாலையில் சென்று மண்டேலா நகர் வழியாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும்.
திண்டுக்கல், வாடிப்பட்டி மார்க்கமாக மாநாட்டிற்கு வரக்கூடிய கட்சியினர் வாகனங்கள் தனிச்சியம், துவரிமான் வழியாக கப்பலூர் சென்று மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

தேனி, உசிலம்பட்டி மார்க்கமாக மாநாட்டிற்கு வரக்கூடிய கட்சியினர் வாகனங்கள் நாகமலை புதுக்கோட்டையிலிருந்து தோப்பூர், கப்பலூர் வழியாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

3. தனியார் இலகு ரக வாகனங்கள் :

திருச்சியிலிருந்து சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி செல்லும் இலகுரக வாகனங்கள் ராம்நாடு சுற்றுச்சாலை, இராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை, திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை வழியாக செல்ல வேண்டும்.
திருச்சியிலிருந்து விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி செல்லும் இலகுரக வாகனங்கள் ராம்நாடு சுற்றுச்சாலை, மதுரை மாநகர் தெப்பக்குளம் வழியாக திருப்பரங்குன்றம், திருநகர் சென்று கப்பலூர் வழியாக செல்ல வேண்டும்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில் திருச்சியிலிருந்து விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி செல்லும் இலகுரக வாகனங்கள் மேலூரிலிருந்து திருவாதவூர், பூவந்தி, திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை வழியாக செல்ல வேண்டும்.

மேற்சொன்ன வழித்தடங்களில் அதிகமான போக்குவரத்து நெறிசல் ஏற்படும் சூழ்நிலையில், கனரக சரக்கு வாகனங்கள் செல்ல குறிப்பிடப் பட்டுள்ள மாற்று வழித்தடங்கள் வழியாக தனியார் இலகு ரக வாகனங்கள் அனுப்பப்படும்.

1.விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரியிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் கப்பலூர், தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் வழியாக விமான நிலையம் செல்ல வேண்டும்.

தூத்துக்குடியிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் எட்டையபுரம், கோவில்பட்டி, விருதுநகர், திருமங்கலம், கப்பலூர், தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் வழியாக விமான நிலையம் செல்ல வேண்டும்.

திருச்சி மார்க்கமாக மதுரை விமான நிலையத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் ஒத்தக்கடை, மதுரை மாநகர், மாட்டுத்தாவணி வழியாக தெற்குவாசல், அவனியாபுரம் சென்று விமான நிலையம் செல்ல வேண்டும்.

கோவில்களில் இருந்து கைப்பிடி மண்; தடுக்கும் தமிழக அரசு: இந்து முன்னணி கண்டனம்!

kadeswara subramaniam hindu munnani - 2026

தமிழக திருக்கோவில்களில் இருந்து கைப்பிடி மண்–தடுக்கும் தமிழக அரசு- இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்படுவது கண்டிக்கத் தக்கது என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

இந்திய அரசு நிர்மாணித்துள்ள புதிய நாடாளுமன்ற வளாகத்தில் “அம்ருத்” என்ற பெயரில் அழகிய பூங்கா அமைக்கப்பட உள்ளது. என் மண் என் தேசம் என்ற இயக்கத்தின் கீழ் விடுதலைக்காக போராடிய மாவீரர்களின் நினைவைப் போற்றும் வகையில், இந்திய ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நாட்டின் அனைத்து புனித இடங்களின் மண், மற்றும் புனித நீர் வைக்கப்பட இருப்பது எல்லோரும் அறிந்ததே. அதற்காக தமிழக திருக்கோவில்கள் உட்பட 350 இடங்களில் இருந்து கைப்பிடி மண் எடுத்து அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்வு தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

ஆனால் இதனை கருத்தில் கொள்ளாமல் கோவிலில் கைப்பிடி மண் எடுப்பதை தடுத்து, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அநாகரிகமாக செயல்பட்டு உள்ளனர். கைப்பிடி மண் எடுப்பதை கனிமவளம் என பேசியுள்ளனர். இது எத்தகைய கீழ்த்தரமான மனோபாவம். தாய் மண் எடுத்து ஒரு புனிதமான காரியத்தைச் செய்வது தொன்றுதொட்டு தமிழ் பண்பாட்டில் உள்ள சிறப்பான நிகழ்வு. இதனை தெரியாமலோ, புரியாமலோ இருக்கும் இவர்கள் வாதம் அற்பத்தனமானது.

அதே சமயம் சென்னை அயனாவரம் அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலய திருக்குளத்தில் முறைகேடாக, சட்ட விரோதமாக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மணல் கொள்ளையை கையும் களவுமாக இந்து முன்னணி பிடித்துகொடுத்தது. மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்க வைத்தது. ஆனால் அதுகுறித்து புகார் கொடுக்கக் கூட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்வரவில்லை. அந்த வழக்கை கிடப்பில் போட்டது.

இந்நிலையில் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பெருமை சேர்க்கும் கைப்பிடி மணல் எடுக்க வீம்பு பேசிய அதிகாரிகள் அவர்கள் சார்ந்துள்ள துறைக்கு தகுதியற்றவர்கள்.

தமிழக அரசு சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் அநாகரிகமாக நடந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலில் வழிபாடு செய்யவும் பா.ஜ.க. மாநில பொறுப்பாளர் வினோஜ் வி. செல்வம் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய போக்கு காவல்துறையின் அத்துமீறல். இந்துக்களின் வழிபாட்டு உரிமையை தடுத்துள்ளது சட்டவிரோத நடவடிக்கை என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

தி.மு.க. அரசின் இந்து விரோத போக்கு தமிழக மக்களை வெறுப்படை செய்கிறது. மக்களின் ஆதரவை பெற திமுக தலைவர் தேர்தல் நேரத்தில் என்னவெல்லாம் பேசினார்?

இந்துக்களின் உணர்வுகளை மதிப்போம். எல்லோருக்கும் பொதுவாக நடப்போம். எங்கள் கட்சியில் பெரும்பான்மை இந்துக்கள் தான் உள்ளனர். இப்படி பேசி இந்துக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தபின் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை மக்கள் பார்த்துதான் வருகிறார்கள். இதனை தமிழக முதல்வர் திருத்திக்கொள்ள வேண்டும்.

இந்து விரோத, தேச ஒருமைப்பாட்டிற்கு விரோதமாக செயல்பட்ட தமிழக அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

ஆக.27 முதல் மதுரை-குருவாயூர்-மதுரை-இன்டர்சிட்டி விரைவு ரயில் இயக்கம்!

thenmalai train track - 2026
#image_title

மதுரையில் இருந்து விருதுநகர் ராஜபாளையம் செங்கோட்டை வழியாக 27.08.23 முதல் குருவாயூர்-மதுரை-குருவாயூர் இன்டர் சிட்டி விரைவு வண்டி இயக்கப்படும்.என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

வண்டி எண்: 16327 (மதுரை-குருவாயூர்) 27.08.23 முதல் இயங்கும்.
மதுரை புறப்பாடு- 11:20
ராஜபாளையம் வருகை- 13:20
செங்கோட்டை வருகை 3.20
குருவாயூர்க்கு இரவு- 02:10க்கு சென்றடையும்.

வண்டி எண்: 16328 (குருவாயூர்-மதுரை) 28.08.23 முதல்..
குருவாயூர் புறப்பாடு- 05:50
செங்கோட்டை வருகை 15.40
ராஜபாளையம் வருகை- 16:58
மதுரை வருகை- 19:15

கொல்லம் வழித்தடத்தில் முதல்முறையாக புத்தம் புது எல்ஹெச் வகை பெட்டிகளோடு, முன்பதிவில்லா பெட்டிகள் 11, ஸ்லீப்பர் பெட்டிகள் 2, மூன்றடுக்கு ஏ/சி 1 என, மொத்தம் 14 பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். முன்பதிவு விரைவில் துவங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.