Home Blog Page 315

வரலட்சுமி விரதம், பூஜை முறை 25-08-2023 சங்கல்பம் (விக்னேஸ்வர பூஜை & ஸ்ரீலக்ஷ்மி அஷ்டோத்ர சத நாமாவளி)

varalakshmi vratham - 2026
#image_title

வரலட்சுமி விரதம், பூஜை முறை 25-08-2023 சங்கல்பத்துடன் (விக்னேஸ்வர பூஜை &
ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ர சத நாமாவளி)

வரலட்சுமி விரதம்… அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன் மனதார தியானித்து, அவளைச் சரணடைய வேண்டிய நாள்!

வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகள் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.

பூவுலகில் சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள்.

lakshmi - 2026

அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.

இப்படி சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும்.

முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் பெண்கள்! சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், ‘வரலக்ஷ்மி நமஸ்துப்யம்’ க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றி முழுமையாக பாடியிருக்கிறார்.

கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமிதேவியை பூஜித்தல் இதன் சிறப்பு. திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும்.

வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.

மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.

கொஞ்சம் விரிவாக…சாஸ்திரம் விதித்தபடி, விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.

sankarar thirumoolar vinayakar - 2026
varalaksmiviratham

பூஜைக்குத் தேவையானவை

மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.

நிவேதனப் பொருள்கள்

பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

பழ வகைகள்

ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை…

பூஜைக்கான முன்னேற்பாடுகள்

வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்).

மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.

(சில இடங்களில் வீட்டின் பூஜை அறை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.)

பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது.

எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.

விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்ய வேண்டும்.

மகாலாட்சுமியை பயபக்தியுடனும் உள்ளே அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும்.

(பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக்கொண்டு பூஜையைத் தொடங்கவும். பஞ்சாங்கம் பார்த்து, நாள், திதி, வருடம், பட்சம், மாதம் ஆகியவற்றை அறிந்து குறித்துக் கொள்ளவும்.

25.08.2023 – சோபக்ருத்  ஆவணி 08 வெள்ளி கிழமை  இன்று வரலக்ஷ்மி விரதம்… இதற்கான சங்கல்பம் …- )

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபாப்யாம்
சுபே சோபனே முஹூர்த்தே அத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே, ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே, கலி யுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, ஶோப⁴க்ருʼத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே *வருஷ ருʼதௌ ஸிம்ம மாஸே சுக்ல பக்ஷே அத்³ய நவம்யாம் சுபதிதௌ² வாஸர: ப்ருகு வாஸர யுக்தாயாம் ஜேஷ்டா நக்ஷத்திர யுக்தாயாம்ʼ வைத்ருதி நாம யோக³ ʼ பாலவ கரண யுக்தாயாம்ʼ ஏவங்கு³ண ஸகல விஶேஷண விஶிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் நவம்யாம் சுபதிதெள மம ஸக குடும்பானாம் சர்வாபிஷ்டா ஸித்யர்த்தம் கிருஹஸ்ய ஆரத்தியமான தேவதா ப்ரசாத ஸித்தியர்த்தம் நித்ய பூஜாம் அத்ய கரிஷ்யே.

மேற்கொள்ளப்படும் விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.

விக்னேஸ்வர பூஜை

உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு, ஓம் அச்சுதாய நம: / ஓம் அனந்தாய நம: / ஓம் கோவிந்தாய நம: என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும். இது ஆசமனம்.

கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்|
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே||

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே||

-என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை முன்னால் சேர்க்கவும். விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும். மணி அடிக்கவும். பின், பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும்.

அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி / ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி என்று சொல்லி, புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும்.

இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும்.

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி|

” பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
” அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
” ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
” ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்)
” ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
” வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
” உபவீதம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
” திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்)
” அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்)
” புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்)

புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும்.

ஓம் சுமுகாய நம: |
ஓம் ஏகதந்தாய நம: |
ஓம் கபிலாய நம: |
ஓம் கஜகர்ணாய நம: |
ஓம் லம்போதராய நம: |
ஓம் விகடாய நம: |
ஓம் விக்னராஜாய நம: |
ஓம் விநாயகாய நம: |
ஓம் தூமகேதவே நம: |
ஓம் கணாத்யக்ஷாய நம: |
ஓம் பாலசந்த்ராய நம: |
ஓம் கஜானனாய நம: |
ஓம் வக்ரதுண்டாய நம: |
ஓம் சூர்ப்பகர்ணாய நம: |
ஓம் ஹேரம்பாய நம: |
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: |
ஓம் ஸித்திவிநாயகாய நம: |
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:
|

அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும்.

அம்ருதோபஸ்தரணமஸி |
ஓம் ப்ராணாய ஸ்வாஹா |
ஓம் அபாநாய ஸ்வாஹா |
ஓம் வ்யாநாய ஸ்வாஹா |
ஓம் உதாநாய ஸ்வாஹா |
ஓம் ஸமாநாய ஸ்வாஹா |
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா |
மஹாகணபதயே நம:
அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி |
அம்ருத பிதாநமஸி

-என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்.

பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.

வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப|
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா||

-என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும்.

ஸ்ரீ விக்னேஸ்வரம் யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி |
சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ||

என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது சேர்த்து, மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் புறம் நகர்த்தி வைக்கவும்.

பின் கலச பூஜை செய்யவும். பஞ்சபாத்திரத்தை சந்தனம் குங்குமம் இட்டு, நீர் விட்டு, புஷ்பம் சேர்த்து, வலது கையால் மூடிக்கொண்டு,

கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி தாம்ரவர்ணீ
ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு||
என்று, புஷ்பார்ச்சனை செய்யவும்.

கங்காயை நம:|
யமுனாயை நம:|
கோதாவர்யை நம:|
ஸரஸ்வத்யை நம:|
நர்மதாயை நம:|
ஸிந்தவே நம:|
காவேர்யை நம:|
தாம்ரவர்ண்யை நம:

என்று பூஜித்து, தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும்.

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:|
குருஸ்ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:||

என்று, குருவை தியானித்த பிறகு, ப்ராணப்ரதிஷ்டை செய்யவும்.

அஸ்ய ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
ப்ரம்ம விஷ்ணு மஹேச்வரா ருஷய:
(வலது கையை தலை உச்சியில் வைக்கவும்)

ருக் யஜூஸ் ஸாம அதர்வாணிச் சந்தாம்ஸி (கையால் மூக்கு நுனியில் தொடவும்)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராணா சக்தி: பரா தேவதா (ஹ்ருதயத்தில் தொடவும்)

ஆம் பீஜம், ஹ்ரீம் சக்தி:, க்ரோம் கீலகம்||

பிறகு, அங்கந்யாச கரந்யாசங்கள் செய்து தியானித்து, புஷ்பம் அட்சதையை தீர்த்தத்துடன் பின்வரும் மந்திரம் சொல்லி, கும்பத்திலுள்ள லக்ஷ்மி பிம்பத்தில் சேர்க்கவும்.

ஆவாஹிதோ பவ|
ஸ்தாபிதோ பவ|
ஸந்நிஹிதோ பவ|
ஸந்நிருத்தோ பவ|
அவகுண்டிதோ பவ|
ஸுப்ரீதோ பவ|
ஸுப்ரஸன்னோ பவ|
ஸுமுகோ பவ|
வரதோ பவ|
ப்ரஸீத ப்ரஸீத|

தேவி ஸர்வ ஜகன்நாயிகே யாவத் பூஜாவஸானகம்|
தாவத் த்வம் ப்ரீதி பாவேன பிம்பே அஸ்மின் ஸந்நிதிம் குரு||

-இப்படி ப்ராண ப்ரதிஷ்டை செய்து, புஷ்பம் அட்சதை, தீர்த்தம் விட்டு, பால் பழம் நிவேதித்து, வரலக்ஷ்மி பூஜையைத் தொடங்கவும்.

கும்பத்தில் வரலக்ஷ்மியை தியானிக்கவும்.

பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம்|
க்ஷீர ஸாகர ஸம்பூதாம் க்ஷீரவர்ண ஸமப்ரபாம்|
க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம்|
பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹரே|
வரலக்ஷ்ம்யை நம:|

என்று சொல்லி புஷ்பத்தை சேர்க்க வேண்டும்.

பாலபானு பரதீகாசே பூர்ண சந்த்ர நிபானனே ஸூத்ரேஸ்மின் ஸுஸ்திதா பூத்வா ப்ரயச்ச பஹுலான் வரான்||
என்று, 9 முடிகள் போட்ட சரடில் பூ முடித்து, கும்பத்தில் சாற்ற வேண்டும்.

ஸர்வ மங்கல மாங்கல்யே விஷ்ணு வக்ஷ: ஸ்தலாலயே|
ஆவாஹயாமி தேவித்வாம் அபீஷ்ட பலதா பவ||
வரலக்ஷ்மீம் ஆவாஹயாமி|

என்று சொல்லி புஷ்பத்தை கும்பத்தில் சேர்த்து ஆவாஹனம் செய்யவும்.

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பாத்யம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அர்க்யம் ஸமர்ப்பயாமி (புஷ்பத்துடன் தீர்த்தம் விடவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆசமனீயம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி (தேன் கலந்த தயிர் நிவேதனம்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி (பஞ்சமிர்த நிவேதனம்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஸ்நானம் ஸமர்ப்பயாமி (தீர்த்த ப்ரோக்ஷணம்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி (வஸ்திரம் அல்லது அட்சதை)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கண்டஸூத்ரம் ஸமர்ப்பயாமி (கருகமணி/பனைஓலை அணிவிக்க)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆபரணானி ஸமர்ப்பயாமி (ஆபரணங்கள் அணிவிக்கவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கந்தம் ஸமர்ப்பயாமி (சந்தனம் இடவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அக்ஷதான் ஸமர்ப்பயாமி ( அட்சதை சேர்க்கவும்)

ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி (புஷ்பம், மாலை சேர்க்கவும்)

பிறகு அங்க பூஜை செய்யவும்.

முழுதாகச் செய்யாவிடினும், மகாலட்சுமி பிம்பத்தின் பாதம் முதல் சிரசு வரை பூஜிப்பதாக பாவனை செய்து, ஓம் ஸர்வமங்களாயை நம: ஸர்வாண் அங்காநி பூஜயாமி என்று சொல்லி புஷ்பம் அட்சதை ஸமர்ப்பிக்கவும்.

பின், நூற்றியெட்டு போற்றி அல்லது அஷ்டோத்ரசத நாமம் சொல்லி, புஷ்பம் அல்லது குங்கும அர்ச்சனை செய்யவும்.

ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திரசத நாமாவளி

ஓம் ப்ரக்ருத்யை நம:
ஓம் விக்ருத்யை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் ஸர்வபூத ஹிதப்ரதாயைநம:
ஓம் ச்ரத்தாயை நம:
ஓம் விபூத்யை நம:
ஓம் ஸுரப்யை நம:
ஓம் பரமாத்மிகாயை நம:
ஓம் வாசே நம:
ஓம் பத்மாலயாயை நம:
ஓம் பத்மாயை நம:
ஓம் சுசயே நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் ஸ்வதாயை நம:
ஓம் ஸுதாயை நம:
ஓம் தன்யாயை நம:
ஓம் ஹிரண்மய்யை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் நித்யபுஷ்டாயை நம:
ஓம் விபாவர்யை நம:
ஓம் அதித்யை நம:
ஓம் தித்யை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் வஸுதாயை நம:
ஓம் வஸுதாரிண்யை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் க்ரோதஸம்பவாயை நம:
ஓம் அனுக்ரஹப்ரதாயை நம:
ஓம் புத்தயே நம:
ஓம் அநகாயை நம:
ஓம் ஹரிவல்லபாயை நம:
ஓம் அசோகாயை நம:
ஓம் அம்ருதாயை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் லோகசோக விநாசின்யை நம:
ஓம் தர்மநிலயாயை நம:
ஓம் கருணாயை நம:
ஓம் லோகமாத்ரே நம:
ஓம் பத்மப்ரியாயை நம:
ஓம் பத்மஹஸ்தாயை நம:
ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஓம் பத்மஸுந்தர்யை நம:
ஓம் பத்மோத்பவாயை நம:
ஓம் பத்மமுக்யை நம:
ஓம் பத்மநாபப்ரியாயை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் பத்மமாலாதராயை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் பத்மின்யை நம:
ஓம் பத்மகந்தின்யை நம:
ஓம் புண்யகந்தாயை நம:
ஓம் ஸுப்ரஸன்னாயை நம:
ஓம் ப்ரஸாதாபிமுக்யை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஓம் சந்த்ரவதனாயை நம:
ஓம் சந்த்ராயை நம:
ஓம் சந்த்ரஸஹோதர்யை நம:
ஓம் சதுர்ப்புஜாயை நம:
ஓம் சந்த்ரரூபாயை நம:
ஓம் இந்திராயை நம:
ஓம் இந்துசீதளாயை நம:
ஓம் ஆஹ்லாத ஜனன்யை நம:
ஓம் புஷ்ட்யை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் சிவகர்யை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் விமலாயை நம:
ஓம் விச்வஜனன்யை நம:
ஓம் துஷ்ட்யை நம:
ஓம் தாரித்ர்ய நாசின்யை நம:
ஓம் ப்ரீதிபுஷ்கரிண்யை நம:
ஓம் சாந்தாயை நம:
ஓம் சுக்லமால்யாம்பராயை நம:
ஓம் ச்ரியை நம:
ஓம் பாஸ்கர்யை நம:
ஓம் பில்வநிலயாயை நம:
ஓம் வராரோஹாயை நம:
ஓம் யசஸ்வின்யை நம:
ஓம் வஸுந்தராயை நம:
ஓம் உதாராங்காயை நம:
ஓம் ஹரிண்யை நம:
ஓம் ஹேமமாலின்யை நம:
ஓம் தனதான்யகர்யை நம:
ஓம் ஸித்தயே நம:
ஓம் ஸ்த்ரைண ஸௌம்யாயை நம:
ஓம் சுபப்ரதாயை நம:
ஓம் ந்ருபவேச்ம கதானந்தாயை நம:
ஓம் வரலக்ஷ்ம்யை நம:
ஓம் வஸுப்ரதாயை நம:
ஓம் சுபாயை நம:
ஓம் ஹிரண்யப்ராகாராயை நம:
ஓம் ஸமுத்ரதனயாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் மங்களாதேவ்யை நம:
ஓம் விஷ்ணுவக்ஷஸ்தல ஸ்திதாயை நம:
ஓம் விஷ்ணுபத்ன்யை நம:
ஓம் ப்ரஸன்னாக்ஷ்யை நம:
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம:
ஓம் தாரித்ர்ய த்வம்ஸின்யை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் ஸர்வோபத்ரவ வாரிண்யை நம:
ஓம் நவதுர்காயை நம:
ஓம் மஹாகால்யை நம:
ஓம் ப்ரஹ்மவிஷ்ணு சிவாத்மிகாயை நம:
ஓம் த்ரிகாலஜ்ஞான ஸம்பன்னாயை நம:
ஓம் புவனேஸ்வர்யை நம:

ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி சம்பூர்ணம்

(குங்கும அர்ச்சனை மற்றும் புஷ்பங்களால் அர்ச்சிக்க, வீட்டில் லட்சுமி கடாட்சம் – மகாலட்சுமியின் பார்வை பட்டு எல்லா வளமும் பெறுவீர்களாக!)

ஆவின் பாலகங்கள் அமுல் பாலகங்களாக மாற்றப்படும்: முகவர் சங்கம் எச்சரிக்கை!

aavin milk - 2026

“பால் முகவர்களை மிரட்டுவதை கைவிடா விட்டால் ஆவின் பாலகங்கள் அமுல் பாலகங்களாக மாற்றப்படும்.” என்று, வின் நிர்வாகத்திற்கு பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை:

ஆவினில் அதிகம் விற்பனையாகும், பொதுமக்கள் அதிகளவில் விரும்பி வாங்கக் கூடிய நெய், வெண்ணெய், பனீர், பாதாம் மிக்ஸ் போன்ற பால் பொருட்களின் உற்பத்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக பால் கொள்முதல் கடும் வீழ்ச்சியடைந்த காரணத்தால் அவற்றின் உற்பத்தியும் முற்றிலுமாக முடங்கிப் போனது.

இதனால் தமிழகம் முழுவதும் ஆவின் பாலகங்கள் நடத்தும் பால் முகவர்களுக்கு தினசரி அதிகளவில் விற்பனையாகும், பொதுமக்கள் விரும்பி வாங்கக் கூடிய நெய், வெண்ணெய், பனீர், பாதாம் மிக்ஸ் உள்ளிட்ட ஆவின் பால் பொருட்களை வழங்காமல் விற்பனையே ஆகாத, ஆவினில் நேரடியாக உற்பத்தி செய்யப்படாத, ஆவின் பெயரால் தனியாரிடமிருந்து உற்பத்தி செய்து வாங்கப்படும், பால் சாராத, பொதுமக்கள் அதிகளவில் விரும்பி வாங்காத முறுக்கு, மிக்சர், நூடுல்ஸ், குக்கிஸ், பாயாசம் மிக்ஸ், கூல் காபி, சத்துமாவு போன்ற விற்பனையே ஆகாத, சில நாட்களே காலாவதி தேதி கொண்ட அவ்வகை பொருட்களை கண்டிப்பாக வாங்கியே ஆக வேண்டும் என வலுக்கட்டாயமாக நிர்பந்தம் செய்து திணித்து வருவதோடு, காலாவதியான அவ்வகை பொருட்களை திரும்பப் பெற்று மாற்றித் தரவும் மறுத்து வருவதால் பால் முகவர்கள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக 1000ம் ரூபாய் முன்பணம் செலுத்தி ஆவின் முகவரானவர்கள் (FRO) விற்பனை ஆகாத அந்த வகை பொருட்களை வாரத்திற்கு 2500ரூபாய்க்கும், 10ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி ஆவின் முகவரானவர்கள் (FRO) வாரத்திற்கு 10000ரூபாய்க்கும் கண்டிப்பாக வாங்கியே ஆக வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு வாங்காத பால் முகவர்களுக்கு ஆவின் பால் வழங்க முடியாது என அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாட்ஸ் அப் குழுக்கள் மூலமும், தனித்தனியாகவும் ஆவின் நிர்வாகம் திட்டவட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் தெரிவித்துள்ளது பால் முகவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆவின் நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகள் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை சீர்குலைத்து, தனியாரை வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு, தனியாருக்கு சாதகமாக செயல்படுவது போல் தெரிகிறது.

மேலும் தமிழகம் முழுவதும் ஆவின் பாலகங்கள் நடத்தும் பால் முகவர்களுக்கு ஆவின் பால் பொருட்கள் முழுமையாக விநியோகம் செய்யப்படாத சூழலில் ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட்டுகள் நடத்தும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும், “ஆவின் அதிகாரிகளுக்கு மாதந்தோறும் சிறப்பு” செய்யும் மொத்த விநியோகஸ்தர்களுக்கும் மட்டும் அவை தாராளமாக விநியோகம் செய்யப்படுவதும், அதிலும் பால் முகவர்களுக்கு வழங்கப்படும் விலையை விட மிகக் குறைந்த விலைக்கு வழங்கப்படுவதும், ஆவினில் நேரடியாக உற்பத்தி செய்யப்படாத, அதிகளவில் விற்பனையாகாத மேற்கண்ட பொருட்களை வாங்கச் சொல்லி அவர்களை நிர்பந்தம் செய்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பால் கொள்முதலிலும், பால் உபபொருட்களின் உற்பத்தியிலும் கவனம் செலுத்தாமல் இருந்து விட்டு, வடமாநிலங்களில் இருந்து வெண்ணெய், பால் பவுடர் கொள்முதல் செய்வதிலும், ஆவினில் நேரடியாக உற்பத்தி செய்யப்படாத பொருட்களை கொள்முதல் செய்து அதனை பால் முகவர்கள் தலையில் கட்டி பண்டிகை காலங்களில் ஆவின் இனிப்புகள் கோடிகளில் விற்பனையானதாக ஆவின் நிர்வாகமும், பால்வளத்துறையும் மார்தட்டிக் கொள்வது ஏற்புடையதல்ல.

எனவே பால் முகவர்களுக்கு ஆவின் நெய், வெண்ணெய், பனீர் உள்ளிட்ட பால் உபபொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யாமல், ஆவினில் நேரடியாக உற்பத்தி செய்யப்படாத பொருட்களை வாங்கியே ஆக வேண்டும் எனவும், அவ்வாறு வாங்காத பால் முகவர்களுக்கு ஆவின் பால் விநியோகம் செய்ய முடியாது என மிரட்டல் விடுக்கும் போக்கினை ஆவின் நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும் எனவும், அவ்வாறு மிரட்டல் போக்கினை தொடர்ந்து ஆவின் நிர்வாகம் கடைபிடிக்குமானால் “ஆவின் பாலகங்கள் அனைத்தையும் அமுல் பாலகங்களாக மாற்றும் நடவடிக்கையை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மேற்கொள்ளப்படும்” அத்துடன் தமிழகத்தில் அமுல் பாலின் விற்பனையை துவக்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை ஆவின் நிர்வாகத்திற்கு எச்சரிக்கையாகவே தெரிவித்துக் கொள்கிறோம்.

‘சந்திரயான்-3’ வெற்றியை ராக்கெட் வாணவெடிகளுடன் கொண்டாடிய ‘சிவகாசி’!

sivakasi celebrats chandrayaan 3 sucess - 2026
#image_title

சிவகாசி : நிலவில் கால் பதித்த ‘சந்திரயான்’ வெற்றியை, சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வானவெடிகள் வெடித்து கொண்டாடினர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், நிலவில் சந்திரயான் விண்கலம் கால் பதித்ததை அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழ்ந்தனர். மகிழ்ச்சி கொண்டாட்டங்களுக்காகவே தயாராகும் சிவகாசி பட்டாசுகள் வானத்தில் வெடித்து சிதறின. சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள், சந்திரயான் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

சந்திரயான் வெற்றியை கொண்டாடும் வகையில், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சோனி கணேசன் தலைமையில், சங்கத்திற்கு சொந்தமான திருமண மண்டபத்தில் இன்று இரவு, கண்கவரும் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகாசியில் தயாரான பலரக வானவெடிகள் வானத்தில் வெடித்து வர்ணஜாலம் காட்டியது. சந்திரயான் வெற்றி கொண்டாட்டத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். சிவகாசியில் நடைபெற்ற ‘சந்திரயான்’ வெற்றி கொண்டாட்ட வானவேடிக்கை நிகழ்ச்சியை பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு களித்தனர்.

வெற்றிகரமாக சந்திரயானை இயக்கிய இந்திய விஞ்ஞானிகளுக்கு பொதுமக்கள் வாழ்த்துகள் கூறி ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர்.

“சந்தா மாமா ரொம்ப தூரம் அல்ல; ஒரு ‘டூர்’ தூரம் தான்” : பிரதமர் மோடியின் பெருமிதப் பேச்சு!

pm modi speech in chandrayaan success - 2026
#image_title

சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய பிறகு வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் வழங்கிய உரையின் தமிழாக்கம்.

தமிழில்: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

என் அன்பான குடும்ப உறுப்பினர்களே,

இப்படி ஒரு சரித்திரம் நம் கண் முன்னே படைக்கப்படுவதைக் காணும்போது, வாழ்க்கை பாக்கியமாகிறது. இத்தகைய வரலாற்று நிகழ்வுகள் ஒரு தேசத்தின் வாழ்வின் நித்திய நனவாகும். இந்த தருணம் மறக்க முடியாதது; இந்தத் தருணம் முன்னோடியில்லாதது; இந்தத் தருணம் வளர்ந்த இந்தியாவின் வெற்றி முழக்கம்; இந்தத் தருணம் புதிய இந்தியாவின் வெற்றி; இந்தத் தருணம் கஷ்டங்களின் கடலை கடப்பது; இந்தத் தருணம் வெற்றிப் பாதையில் நடப்பது; இந்த தருணம் 140 கோடி இதயத்துடிப்புகளின் திறனைக் கொண்டுள்ளது; இந்தத் தருணம் இந்தியாவில் புதிய ஆற்றல், புதிய நம்பிக்கை மற்றும் புதிய நனவைக் குறிக்கிறது; இந்தத் தருணம் இந்தியாவின் உயர்ந்து வருகின்ற விதியின் அழைப்பு;

‘அமிர்த கால’ விடியலில் வெற்றியின் முதல் ஒளி இந்த ஆண்டு பொழிந்துள்ளது. பூமியில் உறுதிமொழி எடுத்தோம், அதை நிலவில் நிறைவேற்றினோம். மேலும் நமது அறிவியல் சகாக்களும், “இந்தியா இப்போது நிலவில் உள்ளது” என்று கூறினார்கள். இன்று, விண்வெளியில் புதிய இந்தியாவின் புதிய பயணத்தை நாம் கண்டோம்.

நண்பர்களே,

நான் தற்போது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா வந்திருக்கிறேன். இருப்பினும், ஒவ்வொரு இந்தியக் குடிமகைனையும் போலவே, எனது இதயமும் சந்திரயான் மிஷனில் கவனம் செலுத்தியது. ஒரு புதிய வரலாறு வெளிவரும்போது, ஒவ்வொரு இந்தியனும் கொண்டாட்டத்தில் மூழ்கிவிட்டார்கள்; ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. என் இதயத்திலிருந்து, நான் எனது சக நாட்டு மக்களுடனும் எனது குடும்ப உறுப்பினர்களுடனும் ஆர்வத்துடன் இணைந்திருக்கிறேன். இந்த தருணத்திற்காக பல ஆண்டுகளாக அயராது உழைத்த சந்திரயான் குழு, இஸ்ரோ மற்றும் நாட்டின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உற்சாகம், மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த இந்த அற்புதமான தருணத்திற்காக 140 கோடி நாட்டு மக்களையும் வாழ்த்துகிறேன்!

என் குடும்ப உறுப்பினர்களே,

நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பாலும், திறமையாலும், உலகில் இதுவரை எந்த நாடும் எட்டாத நிலவின் தென் துருவத்தை இந்தியா அடைந்துள்ளது. இன்று முதல் சந்திரனுடன் தொடர்புடைய கட்டுக்கதைகள் மாறும்; கதைகள் மாறும்; புதிய தலைமுறைக்கான பழமொழிகள் கூட மாறும். இந்தியாவில், பூமியை நமது தாய் என்றும், சந்திரனை நமது ‘மாமா’ (தாய் மாமன்) என்றும் குறிப்பிடுகிறோம். “சந்தா மாமா வெகு தொலைவில் இருக்கிறார்” என்று சொல்லப்படுவது வழக்கம். “சந்தா மாமா ரொம்ப தூரம் அல்ல ஒரு ‘டூர்’ தூரம் தான்” என்று குழந்தைகள் சொல்லும் நாள் இப்போது வரும்.

நண்பர்களே,

இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், உலக மக்கள் அனைவருக்கும், ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும், பிராந்திய மக்களுக்கும் நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியாவின் வெற்றிகரமான நிலவுப் பயணம் இந்தியாவுடையது மட்டுமல்ல. இந்தியாவின் ஜி-20 தலைவர் பதவியை உலகம் காணும் ஆண்டு இது. ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்ற எங்களின் அணுகுமுறை உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த மனித மைய அணுகுமுறை உலகளவில் வரவேற்கப்படுகிறது. நமது நிலவு பணியும் அதே மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது. எனவே, இந்த வெற்றி மனிதகுலம் அனைவருக்கும் சொந்தமானது. மேலும் இது எதிர்காலத்தில் மற்ற நாடுகளின் நிலவு பயணங்களுக்கு உதவும். குளோபல் சவுத் நாடுகள் உட்பட உலகின் அனைத்து நாடுகளும் இத்தகைய சாதனைகளை அடையும் திறன் கொண்டவை என்று நான் நம்புகிறேன். நாம் அனைவரும் சந்திரனுக்கும் அதற்கு அப்பாலும் ஆசைப்படலாம்.

என் குடும்ப உறுப்பினர்களே,

சந்திரயான் மிஷனின் இந்தச் சாதனை, சந்திரனின் சுற்றுப்பாதைக்கு அப்பால் இந்தியாவின் பயணத்தை முன்னெடுத்துச் செல்லும். நமது சூரிய குடும்பத்தின் வரம்புகளை சோதித்து, மனிதகுலத்திற்கான பிரபஞ்சத்தின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை உணர, தொடர்ந்து பணியாற்றுவோம். எதிர்காலத்திற்காக பல பெரிய மற்றும் லட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளோம். விரைவில், சூரியனை ஆழமாக ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’ திட்டத்தை இஸ்ரோ தொடங்கவுள்ளது. அதைத் தொடர்ந்து இஸ்ரோவின் நிகழ்ச்சி நிரலில் வீனஸ் இடம் பெற்றுள்ளது. ககன்யான் பணியின் மூலம், நாடு தனது முதல் மனித விண்வெளிப் பயணத்திற்கு விடாமுயற்சியுடன் தயாராகி வருகிறது. வானம் எல்லையல்ல என்பதை இந்தியா மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.

நண்பர்களே,

அறிவியலும் தொழில்நுட்பமும் நமது தேசத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான அடித்தளம். எனவே, இந்த நாளை நாடு என்றென்றும் நினைவில் வைத்திருக்கும். இந்த நாள் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல நம் அனைவரையும் ஊக்குவிக்கும். இந்த நாள் நமது தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான பாதையை நமக்கு காட்டும். தோல்வியிலிருந்து பாடம் கற்பதன் மூலம் வெற்றி எவ்வாறு அடையப்படுகிறது என்பதை இந்த நாள் குறிக்கிறது. மீண்டும் ஒருமுறை, நாட்டின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் எதிர்கால பணிகளுக்கு வாழ்த்துக்கள்! மிக்க நன்றி.

வெற்றி வெற்றி!நிலவின் தென் துருவத்தில் ’முதல் நாடாக’ தடம் பதித்தது இந்தியா! சாதித்த சந்திரயான் 3… !

chandrayaan3 in moon - 2026
#image_title

சந்திரயான் 3 – வெற்றிகரமாக நிலவில் இறங்கி சாதித்துள்ளது. சாஃப்ட் லேண்டிங் எனப்படும், மெதுவாக தரையிறங்கும் பணியில் திட்டமிட்டபடி துல்லியமாக, அதே நேரத்தில் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது சந்திரயான் -3. இதற்காக அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக தென்னாப்பிரிக்காவில் இருந்து பேசினார்.

‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. ரூ.615 கோடி செலவில் 40 நாள் பயண திட்டத்துடன் அனுப்பப்பட்ட ‘சந்திரயான்-3’ விண்கலம், முதலில் புவிவட்டப் பாதையைச் சுற்றி வந்தது. பிறகு நிலவுவட்டப் பாதைக்கு மாற்றப்பட்டு, படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உந்து கலனில் இருந்து ‘விக்ரம் லேண்டர்’ கருவி பிரிக்கப்பட்டது.

இந்த ‘லேண்டர்’ புதன்கிழமை இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தானியங்கி கட்டளைகள் மூலம், இறுதிக்கட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இது பெரும் சவால் நிறைந்த பணி என்பதால், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ‘சந்திரயான்-3’ குழுவினர், விஞ்ஞானிகள் பொறியாளர்கள் உன்னிப்பாக கவனித்து வந்தனர்.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் அனுப்பப் பட்ட ‘சந்திரயான்-2′ விண்கலத்தின்’ஆர்பிட்டர்’ கருவி, தற்போதைய ‘லேண்டர்’ கருவியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது, சாதகமான சூழ்நிலையாக கருதப்பட்டது. அந்த வகையில், சந்திரயான் 3-ஐ முதலில் அங்கே வரவேறது சந்திரயான் -2ன் ஆர்பிட்டரே. இரண்டும் தங்களுக்கு இடையே தகவல்களை பரிமாறிக் கொண்டன. இதனால், ‘லேண்டர்’ நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்குவதற்கான வாய்ப்பு அதிகரித்தது.

இன்று நிலவுக்கு மேலே 30 கி.மீ. உயரத்தில் ‘லேண்டர்’ இருந்தபோது, அதை நிலவில் தரையிறக்குவதற்கான முயற்சிகள் தொடங்கின. நிலவின் தரையை நோக்கி வினாடிக்கு 1.68 கி.மீ. வேகத்தில் ‘லேண்டர்’ சென்றது. நிலவின் ஈர்ப்புவிசையைப் பொறுத்து, ‘லேண்டரின்’ வேகத்தை கண்காணித்து கட்டுப்படுத்துவதில் விஞ்ஞானிகள் அதிக கவனம் செலுத்தினர்.

நிலவை நெருங்கும் ‘லேண்டரின்’ கடைசி ஏழு நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை என்று கருதப் பட்டதால், நொடிக்கு நொடி கண்காணிக்கப் பட்டு, செயல்படுத்தப் பட்டது.

இந்த ‘கிளைமாக்ஸ்’ நிகழ்வுக்கு திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் தயார் என இஸ்ரோ அறிவித்திருந்தது. நிலவில் லேண்டர் கருவி தரையிறங்கும் காட்சியை காண உலகமே ஆவலோடு காத்திருந்தது. மாலை 5.20 மணி முதல் இந்த நிகழ்வு இஸ்ரோவினால் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இஸ்ரோவின் யுடியூப் சேனலில் இந்த நிகழ்வை லைவ் கவரேஜில் 60 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து மகிழ்ந்தார்கள். சரியாக லேண்டர் தரையிறங்கியதும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி பொங்க ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இஸ்ரோவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து பெருமித உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.

முன்னதாக, இஸ்ரோவின் இந்த முயற்சி வெற்றியடைய வேண்டும் என்று நாடெங்கும் மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டு பிரார்த்தனைகளைச் செய்தனர்.

இந்திய இறையாண்மை, தேசியக் கொடி அவமதிப்புகளை அரசு கடுமையாகக் கையாள வேண்டும்!

kadeswara subramaniam hindu munnani - 2026

இந்திய இறையாண்மையை, தேசியக் கொடியை அவமதித்தவனை கடுமையான சட்ட நடவடிக்கைகள் மூலம் தண்டிக்க வேண்டும் – வெளிநாட்டில் வசித்தால் கடவுச் சீட்டை ரத்து செய்து திரும்ப அழைத்து வரச் செய்து தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கவேண்டும் என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

சார்ஜாவில் வசிக்கும் கோவையை சேர்ந்தவனாகக் கருதப்படும்Mhm அப்துல்லா என்பவன் தனது முகநூல் பக்க ப்ரோபைல் படமாக தேசிய கொடியை தலைகீழாக வைத்து நடுவில் அசோக சக்கரத்திற்கு பதிலாக பிறையையும் நட்சத்திரத்தையும் சேர்த்து வடிவமைத்து உள்ளான். பாரதத்தை நேசிக்கும் யாரும் இது போன்ற இறையாண்மைக்கு எதிரான செயல்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இது போன்ற செயல்களுக்கு கண்டனம் தெரிவிப்பதை தாண்டி இவன் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குபதிவு செய்யவேண்டும்.

தேசியக்கொடி என்பது ஒவ்வொரு குடிமகனும் போற்றி வணங்கவேண்டிய ஒன்று.பல தியாகிகளும், தேசபக்தர்களும் தங்கள் உடல், பொருள் , ஆவியை வழங்கி பெற்றுத் தந்த சுதந்திரத்தின் அடையாளம். அத்தகைய மாண்பு பொருந்திய தேசியக் கொடியை மதவெறிக்கு பலியாக்கும் வண்ணம் மாற்றி முகநூலில் பதிவு செய்வது என்பது தேசவிரோதத்தின் உச்சம்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இது போன்ற செயல்களை வேடிக்கை பார்க்க முடியாது. தொடர்ந்து பல முஸ்லீம் அமைப்புகளின் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த நாட்டை 2047 க்குள் இஸ்லாமிய நாடாக்குவோம் என்ற கோசம் தடைசெய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இண்டியா அமைப்பால் பரப்ப்பட்டது.இதன் பல கட்ட தலைவர்கள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக்குவோம் எனப் பேசிய வீடியோக்கள் சமூக ஒற்றுமையை கேள்விக் குறியாக்கியுள்ளது.

கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இண்டியாவின் கேரள மகளிரணி தலைவி ரபாயா ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் ஆர்.எஸ்.எஸ்.மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் கேரளாவை முஸ்லீம் நாடாக மாற்றியிருப்போம் என வெளிப்படையாக பேசினார். கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் நடைபெற்ற ஊர்வலத்தில் முஸ்லீம்கள் சிலர் பாகிஸ்தான் கொடியை பறக்கவிட்டனர். இது போன்ற செயல்கள் அவர்களின் மதவெறியை பச்சையாய் காட்டுகிறது.

முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகளில் உள்ள நபர்கள் நமது தேசியக் கொடிக்கு பதிலாக முஸ்லீம் பிறைகொடியை தனது சமூக வலைத்தளங்களில் இன்றளவும் பயன்படுத்தி வருகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுர மாவட்டம் தொண்டியில் ஐ.எஸ்.ஐ.எஸ் எனும் வார்த்தைகள் அச்சிடப்பட்ட பனியன்களை இருபதுக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் அணிந்திருந்ததை யாரும் மறுக்க இயலாது. ஓராண்டுக்கு முன்னதாக பழநிக்கு அருகில் உள்ள ஆயக்குடியில் இருசக்கர வாகனத்தில் பாகிஸ்தான் கொடியோடு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோசமிட்டவாறே நூறுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வலம் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியாக இங்கேயே வாழ்ந்து கொண்டு உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் விதமாக இவர்களது மதவெறி தேசிய கொடியை மாற்றும் அளவிற்கு மாறியுள்ளது.

போலி மதசார்பின்மை பேசும் அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பாடம். சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக முஸ்லீம் ஆதரவு நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்து வருவதால் தேசத்திற்கே ஆபத்தான சூழ்நிலை உருவாகி விட்டது.

ஏற்கனவே கேரளாவில் முஸ்லீம் மக்கள் தொகை பெருகிவிட்ட மாவட்டங்கள் பாகிஸ்தான் போல் காட்சியளிக்கிறது. ஆந்திரா போன்ற மாநிலங்களில் சில முஸ்லீம்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் தனிநாடு கோசம் வலுக்கிறது.இதையெல்லாம் மனதில் கொண்டு நடுநிலை பேசுபவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.இந்துத்துவத்தை எதிர்க்கிறோம் என்ற பேரில் இந்தியாவையே எதிர்க்கும் பலரை அடையாளம் கண்டு கொள்ள வேண்டிய நேரமிது.

தைரியமாக சமூக வலைத்தளங்களில் தேசிய கொடியை மாற்றி வைக்கும் தேச துரோகிகளை இந்துமுன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மத்திய அரசும், தமிழக அரசும், காவல்துறையும் இவர்களை போன்றவர்களை கண்காணித்து கடுமையான சட்டங்கள் மூலம் தண்டிக்க வேண்டும்

மணிப்பூர் போன்று விரைவில் கோவா, தமிழகத்தில் கலவரம் வெடிக்கும்: எச்சரிக்கும் பால கெளதமன்!

gowdam speech at shree tv vsrc function - 2026
#image_title

— டி.எஸ். வேங்கடேசன் —

மணிப்பூர் போன்று விரைவில் கோவா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கலவரம், வன்முறை சம்பவங்கள் அரங்கேறும் வாய்ப்புள்ளதாக வேத விஞ்ஞான ஆய்வு மைத்தின் நிறுவனரும், பத்திரிகையாளருமான பால கெளதமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் மறைந்த பத்திரிகையாளர் ஹரன் நினைவு பரிசு வழங்கும் விழா சென்னை தி.நகரில் கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இந்தாண்டுக்கான பரிசு புலனாய்வு பத்திரிகையாளர் வி அபிநவ் விநாயக்கு வழங்கப்பட்டது. (சென்ற ஆண்டு ஹரன் விருது, கட்டுரையாளருக்கு – டி.எஸ்.வேங்கடேசன் – க்கு வழங்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.)

நிகழ்ச்சியில் பேசிய. பால கெளதமன். “ இந்தாண்டு மணிப்பூரில் கலவரம் வெடிக்கும் என காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தி கடந்தாண்டே ஆரூடமாக கூறினார். நாடாளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக மே மாத சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி, நாடாளுமன்றத்தை முடக்கி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ளவை அமலியில் ஈடுபட்டன.  சமீபத்தில் கோவா மாநிலத்தில் பாதிரியார்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் விரைவில் கோவாவிலும் மத கலவரம் நடைபெறும் என்றும் அது தொடர்பான ஆலோசனைகள், எப்படி அதை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆவி மெஷினரிகள் பஞ்சாபையும் விட்டு வைக்கவில்லை. அங்கு 1 சதவீதமாக இருந்த அவர்களின் எண்ணிக்கை 15 சதவீதமாக உயர்ந்துள்ளதாக எனக்கு முன்பு பேசிய பஞ்சாப் , ஹரியானா உயர்நீதின்ற வழக்கறிஞர் ஜஸ்மித் சிங் பேடி கூறியதை சுட்டிக்காட்டினார்.

ஹரியானா மாநிலத்தில் நூவு பகுதியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த மவுலானா சம்சுதீன் குவாஸ்மி பேசிய வீடியோவை சுட்டிக் காட்டி பேசினார். மத வெறுப்பு அரசியலுக்கு பெயர் பெற்ற இவர் தரூல் உலும் தியோபந்த் மதராசாவில் கடந்த ஓராண்டுக்கு மேலாக தற்காப்பு பயிற்சி என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டு வந்ததாக கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு உங்கள் கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு வந்தது. அதில். அவர்  பேசிய சுருக்கத்தை காண்போம்.:” இது ஹரியானா கலவரம் இல்லை. மேவாத் கலவரம். இது பள்ளதாக்கு, மலைப்பகுதி என பலவாறனாது. மேவாத்தில் இஸ்லமாமியர்கள் அதிகம். நாடு விடுதலைக்கு முன்பாக இங்கு இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் குடிப்பது, திருடுவது கொள்ளை அடிப்பதை தொழிலாக கொண்டவர்கள். இவர்களின் வீடுகளுக்கு கதவுகள் கூட கிடையாது. விரும்பதோலில் இவர்களுக்கு ஈடு இணை கிடையாது. இவர்களை நல்வழிப்படுத்த தப்ளிக் ஜமாத் இயக்கம் தொடங்கப்பட்டது. சுன்னி பிரிவைச் சேர்ந்த இவர்களுக்கான இந்த அமைப்பை மவுலானா முகமது இலியாஷ் கடந்த 1926ம் ஆண்டு தொடங்கினார்.  இது பல நாடுகளுக்கு பரவிய ஆல் போல் தழைத்து உள்ளது. பல உயர் பதவிகளில் அவர்கள் உள்ளனர். தப்ளிக் ஜமாத் என்றால் மதநம்பிக்கையை பரப்பும் சமுதாய அமைப்பு என்பது பொருளாகும். தியோ பந்த் கொள்கைகள் டெல்லிக்கு அருகே தியோ பந்த என்ற இடத்தில்தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் இஸ்லாமியர்கள் இறை நம்பிக்கை கொண்டவர்கள் இருக்க வேண்டும் என்பதுதான்”.

“  நாடு விடுதலையான போது மேவாத் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது. முஸ்லீம்கள் 99 சதவீதம் உள்ளதால் எங்களை பிரிக்க இந்தசூழ்ச்சி. நாங்கள் ஒற்றுமையாக இருந்தால் அது அரசியல் தலைவர்களுக்கு பிடிக்காது. பல கொடுமைகள் அப்போது செய்ய தொடங்கினர். இந்திய பகுதியான மேவாத்தில்,  பஞ்சாபின் ஒரு பகுதி, ஹரியானாவின் ஒரு பகுதி. ராஜஸ்தானின் ஒருபகுதி என மூன்றாக பிரித்தனர்.  இவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  எருமை மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிகன்றனர். இப்புகுதியில் கழிப்பறைகள் கிடையாது. பள்ளிவாசலில் உள்ள இரண்டை ஊர்மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  உலக நாடுகளில் பள்ளிவாசல்களை கட்ட லட்சக்கணக்கில் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

“ கடந்தாண்டு டெல்லியை கலக்கிய விவசாயிகள் போராட்டத்தின்போது, எல்லை அருகே கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தங்களின் விளைப்பொருட்களை பயன்படுத்தி உணவு சமைத்து கொடுத்து உதவினர்.

ஆர்எஸ்எஸ் காரன்கள், பஜ்ரங்தளத்தினர் முஸ்லீம்களை குறி வைத்து தாக்கி கொன்று வருகின்றனர்.  2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக மத கலவரங்களை தொடங்க அவர்கள் முயன்று வருகின்றனர். குறிப்பாக மேவாத், நூவு தான் அவர்கள் குறி. இதை எதிர்கொண்டு, பள்ளிவாசலில் கடந்தாண்டு முதல் அனைவருக்கும் தற்காப்பு கலை பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. நவீன ஆயுதங்களை பயன்படுத்துவதும் இதில் அடங்கும்.  விஹெச்பி, பஜ்ரங்தளம் ஊர்வலமாக வந்தனர். முஸ்லீமகளை எளிதாக தாக்கிவிடலாம். அவர்கள் கோழைகள். என்ன தெரியும் என நினைத்தனர். ஆனால் எங்கள் ஆட்கள் அவர்களை ஓட ஓட விரட்டி அடித்தனர். நூற்றுக்கணக்கானவர்களை வெட்டிக் கொன்றனர். இது ஊடகங்களில் வராது. காஃபீர்களை கொன்று அவர்களை நரகத்துக்கு அநுப்பிய பிறகே சொர்க்கத்துக்கு முஸ்லீம்கள் செல்ல வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். கட்டளை. இதை யாரும் மீற முடியாது. காஃபீர்களை கொல்ல வேண்டும். அப்போதுதான் அல்லா உள்ள சொர்க்கத்திற்கு செல்ல முடியும். தற்காப்பு பயிற்சிகளை தரூல் இஸ்லாம் மதரஸா முதல்வர் மவுலானா அறிக்கை மூலமாக தகவல் தெரிவித்து ஆயுத தற்காப்பு பயிற்சியை அளித்து வருகிறார்.

பழனி பாபாவை இளைஞர்கள் முன்மாதிரயாக கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ( நாச வேலைகள், குண்டு வெடிப்பு, ஹிந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலானின் மீதாக தாகுதல்களில் ஈடுபட்டவர்)  அல்லாவின் வழியை பின்பற்றினால்தான் ஷாதாத் நிலை கிடைக்கும்”

மேற்கூறிய அவரது வீடியோ பேச்சில் இருந்து வன்முறை தூண்டும் வகையில் பேசியுள்ளார். பல்வேறு நாடுகளில் இருந்து கொரோனா நோயை பரப்பும்  நோக்கத்துடன் நாடு முழுவதும் குழுவாக சென்று பள்ளிவாசல்களில் தங்கி பரப்பியதை நாம் மறக்க முடியாது என பால கெளதமன் குறிப்பிட்டார்.

“ நீதிபதி ஒருவர் வெளிநாட்டு தப்ளிக் ஜமாத் குழுவினர்களை  விருந்தினர்கள். பாவித்து உரிய மரியாதை தர வேண்டும் என கூறி அவர்களை நாடு திரும்ப அனுப்ப உத்தரவிட்டார். இப்போது அவர் இதை திரும்ப பெறுவரா? பொறுப்பேற்பாரா?

பள்ளிவாசல்களில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது?.  மணிப்பூர் கலவரத்தின் போது அதிகமாக துடித்து ஆதரவு தெரிவித்தது தமிழ்நாடு மட்டுமே. ஏன் இங்குள்ள கிறிஸ்தவர்களால் இயக்கப்படும் திராவிட மாடல் அரசு அனைத்துஉதவிகளையும் செய்ய முன்வந்தது. விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க முன்வந்தது. ( உதயநிதியின் மகன் இன்ப நிதி மணிப்பூர் மாநில கால்பந்தாட்ட குழுவில் இடம் பெற்றுள்ளார். சர்வதேச போட்டிகளுக்கு தமிழக வீரர்களை அனுப்ப கோட்டை விட்ட தமிழக உதயநிதியின் பொறுப்பில் உள்ள விளையாட்டுத்துறை மணிப்பூர் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறதாம்!).

தமிழகத்தில் கோயில்களுக்கு சீல் வைக்கப்படுவதற்கான காரணம்ஜாதி மோதல்களே இதன் பின்னணியில்  விடுதலை சிறுத்தைகள் உள்ளனர். இவர்களுக்கு சனாதன அழிப்பு என்ற பெயரில் இந்து மதத்தை வேரறுக்க வேண்டும். இதற்கு கோயில்களை மூடவதுதான் முதல் வழி. சர்ச்களில் சாதி பிரச்னை இல்லையா ? இவர்கள் கண்களுக்கு அது தெரியாது. தமிழகம் அபாய கட்டத்தில் உள்ளது. காஷ்மீர், மேற்கு வங்கம், மணிப்பூரை போன்று இங்கும் கலவரம் உருவாகலாம் ஊஷராக இருக்க வேண்டும். மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்” என அவர் பேசினார்.

வேத விஞ்ஞான ஆய்வு மையம் கூறியதை மத்திய விசாரணை முகமை ஏற்றுக் கொண்டுள்ளது. தீவிரவாத தாக்குதலின் போது,. தீ விரைவாக பிடிக்க பரவ காரணம் ஒரு வித ரசாயன கலப்புதான். இதுபோல தமிழகத்தில் நடைபெற்ற இந்து மத தலைவர்கள் மீதான கொலைகளில், அனைவருக்கும் கழுத்தில் வெட்டு. விரல் நகம் துண்டிப்பு, கை , கால் வெட்டப்படுவது என ஒரே மாதிரியாக உள்ளது. இதையும் என்ஐஏ திருபுபவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் கூறியுள்ளது. இது ஜிகாத முறை கொலை.  இது எங்கள் மைத்தின் வெற்றியாகும் என்றார்.

முன்னதாக பேசிய பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜஸ்மித் சிங் பஞ்சாபில் பிரிவினைவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம், சர்வதேச சதி, போதை பொருட்கள் உள்ளன. இதை தவிர பஞ்சாபில் 65,000 மிஷினர்கள் உள்ளனர். கொரோனாவின் போது இவர்கள் ஏழை, மற்றும் அப்பாவிகளை மூளைச் சலவை செய்து நோய்களை தீர்ப்போம். பிரச்னைகளுக்கு முடிவுரை எ[ழுதுவோம். பணம் கிடைக்கும், வேவை கிடைக்கும். சமுக அந்தஸ்து கிடைக்கும். சாதி பிரச்னைகள் இருக்காது என பொய் வாக்குறுதிகளை கூறி மயக்கிமதமாற்றம் செய்தனர்.  அவர்களுக்கு உணவு, உடை, மருந்துகளை கொடுத்தும் உள்ளனர். மதம் மாறிய பிறகுதான் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்தனர்.  தமிழ்நாடு, தெலங்கானா இது போன்று இருந்தது.  பஞ்சாபின் எல்லைப்பகுதிகளில் மதமாற்றம் அதிகமாக உள்ளது என தெரிவித்தார்.

ஸ்ரீடிவியின் இயக்குநர் ராம வெங்கடாத்திரி, யூ டிப் ஊடகவியாலாளர் ஓமாம்புலியூர் ஜெயராமன் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சியை ரங்கநாதன் தொகுத்து வழங்கினார்.

நேரலையில் நிகழ்ச்சியின் தொகுப்பு

திமுக-வின் நீட் எதிர்ப்பு உண்ணாவிரதம்: வெட்கம் கெட்டதற்கு வெளிச்சமா?

dmk udhayanidhi neet fasting - 2026
#image_title

— ஆர். வி. ஆர்

ஒருவர் வெட்கம் கெட்டவர் என்றால் என்ன அர்த்தம்? ‘தனது அசட்டுத்தனத்தை, அபத்தத்தை, அபாண்டத்தைப் பார்த்து விவரம் தெரிந்தவர்கள் சிரிப்பார்களே’ என்ற கவலை இல்லாமல் அதைச் செய்கிறவர் என்று அர்த்தம். அதை ஒரு சாதனையாக, ஊர் ஊராக மேடை போட்டு செய்தால் அது திமுக என்று அர்த்தம்.

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான ‘நீட்’-இல் இருந்து தமிழ்நாட்டிற்குச் சட்ட ரீதியான விலக்குத் தர வேண்டும் என்று கோரி வருகிறது திமுக. அதை வலியறுத்த தமிழக மாவட்டங்கள் தோறும் சமீபத்தில் மேடை போட்டு, அந்தக் கட்சியின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் ஒரு-வேளைக்கான கடும் உண்ணாவிரதத்தைக் கடைப் பிடித்தார்கள். அதோடு அபத்தமாகவும் பேசினார்கள்.

‘பன்னிரெண்டாம் வகுப்பு மார்க்குகளின் அடிப்படையில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடத்தினால் போதும். தமிழக மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வையும் நடத்தி அதன் அடிப்படையில் மருத்துவ சேர்க்கைகளைத் தமிழகத்தில் நடத்த வேண்டாம்’ என்பதுதான் திமுக-வின் நீட் விலக்குக் கோரிக்கை.

திமுக ஏன் ‘நீட் வேண்டாம்’ என்று சொல்கிறது? பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் நீட் நுழைவுத் தேர்வை விடத் தரமானவை, மாணவர்கள் அந்த வகுப்பில் எடுக்கும் மார்க்குகளின் அடிப்படையில் மட்டுமே தமிழ்நாட்டில் மருத்துவ சேர்க்கைகள் நடத்தினால் சிறப்பான மருத்துவர்களை உருவாக்கலாம் என்று திமுக நினைக்கிறதா? இல்லை – அப்படி நினைப்பதும் பேசுவதும் மிகப் பெரிய ஜோக் என்று திமுக-வுக்கே தெரியும்.

உண்மை நிலை எல்லா அரசியல்வாதிகளுக்கும் தெரியும், விவரமான எல்லா மக்களுக்கும் புரியும், மருத்துவ ஆசை கொண்ட எல்லா மாணவர்களும் உணர்ந்ததுதான். அதாவது: நீட் தேர்வை விடப் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் எளிதானவை, பல மாநிலங்களில் சுமாராகப் படிக்கும் பணக்கார மாணவர்கள் அந்த வகுப்புத் தேர்வுகளில் அலட்டாமல் அப்பா ஆதரவுடன் பாஸாகலாம், அதிக மார்க்குகளும் வாங்கலாம், அந்த மார்க்குகளை வைத்து மருத்துவச் சேர்க்கைகள் நடத்தினால் ஏனோதானோ பாஸ், எப்படியோ பாஸ், என்று பாஸான மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகக் கோட்டாவில் ரகசிய பேச்சுக்கள் மூலம் அட்மிஷன் வாங்க முடியும். அதில் நிகழும் பணப் பறிமாற்றம், சப்புக் கொட்டி நிற்கும் அரசியல்வாதிகளின் பங்குக்கு மரியாதையாக வந்து சேரும்.

நீட் நுழைவுத் தேர்வின் கதை வேறு. அதில் தேறாமல் ஒரு மாணவர் எந்த மருத்துவக் கல்லூரியிலும் சேர முடியாது. அந்தத் தேர்வு மத்திய அரசு ஏற்படுத்திய ‘நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி’ என்ற தனி அமைப்பால் இப்போது கறாராக நடத்தப் படுகிறது. அதில் மாநில அரசுகளின் தலையீடோ அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கைவேலையோ கிடையாது. திரைமறைவு வேலைகளால் அதில் மார்க் வாங்க முடியாது. ஒழுங்காகப் படித்து நீட்-டில் பாஸாகிறவர்களில் பணக்காரர்கள் சொற்பம் என்பதால், நீட்-டுக்கு முன்பு தமிழகத்தின் தனியார் கல்லூரிகளுக்கு கிடைத்த மலைப்பான நிர்வாகக் கோட்டா சம்பாத்தியம் இப்போது பெரிய அடி வாங்குகிறது. அந்த அடி, அரசு நடத்தும் அரசியல்வாதிகளுக்கும் வெளியில் சொல்ல முடியாத வலியைத் தருகிறது.

வலி தாங்காத தமிழக அரசியல்வாதிகள் பொங்குகிறார்கள். அவர்கள் மாநிலம் முழுவதும் மேடை போட்டுத் தங்கள் சுய நல ஆதாயத்திற்காக நீட் எதிர்ப்பு என்ற பேரில் ஒரு-வேளை உண்ணாவிரமும் நடத்துகிறார்கள். வெளிப் பேச்சுக்கு, ஏழை மாணவர்கள் மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலனுக்காகத் தாங்கள் போராடுகிறோம் என்று அபத்தமான காரணத்தைச் சொல்லி ஒரு நாடகத்தை வெட்கமில்லாமல் நடத்துகிறார்கள்.

தமிழகத்தின் மற்றொரு பெரிய கட்சியான அதிமுக-வும் நீட் நுழைவுத் தேர்வை எதிர்க்கிறது – திமுக எதிர்க்கும் அதே மறைமுகப் பயன்களுக்காக. இந்த விஷயத்தில் அதிமுக-விற்கும் திமுக-வைப் போல் ஆசை இருக்கிறது, ஆனால் திமுக-வைப் போல் அதிமுக பகிரங்கமாக வெட்கத்தை விடத் தயங்குகிறது. திமுக-தான் இப்போது ஆளும் கட்சி என்பதால், நீட்-டால் திமுக-விற்குத்தான் இப்போது கடுமையாக வலிக்கும், அவர்கள்தான் இப்போது அதிகம் துடிப்பார்கள்.

திமுக ஏன் இந்த அளவிற்கு வெட்கம் கெட்டு நிற்கிறது? அதை வெளிச்சம் போட்டும் காட்டுகிறது? அதற்கான காரணம், பெருவாரியான தமிழக வாக்காளர்களின் ஏழ்மையும் அதோடு சேர்ந்த அறியாமையும் – அதைத் திமுக-வின் தலைமை தனது சுய லாபத்திற்காகப் பயன்படுத்த விரும்புகிறது.

வாழ்க்கையும் முன்னேற்றமும் பெரும் சவாலாக இருக்கும் சாதாரணத் தமிழ் மக்களுக்கு, மருத்துவக் கல்லூரிகளில் யார் சேருகிறார்கள், எந்தத் தகுதியில் அவர்களின் மருத்துவச் சேர்க்கை நடக்கிறது என்பதெல்லாம் ஒரு பொருட்டில்லை. அந்த மனிதர்களின் குடும்பத்தில் ஒரு மாணவருக்கு மருத்துவ ஆசையும் அதற்கான முனைப்பும் இருந்தால், அவர் வசதிப்படி அதற்கு முனைவார் – நீட் வழியாகவும் கூட. ஆனால் அப்படியான மாணவர்கள் அந்த மக்களில் மிகச் சிறிய எண்ணிக்கையினர். ஆகையால்தான், திமுக தனது சுய லாபத்திற்காக ஒரு அப்பட்டமான அபத்தக் கோரிக்கையை முன்வைத்துப் போராடினாலும், அதனால் சாதாரண மக்களிடம் அந்தக் கட்சிக்குப் பெரிதாக ஓட்டிழப்பு ஏற்படாது என்று அதன் தலைமை கணிக்கிறது – அது சரியாகவும் இருக்கும்.

திமுக-விற்கு ஓட்டளிக்க வேண்டாம் என்றிருக்கும் வாக்காளர்களிடம் அக்கட்சியின் பெயர் இன்னும் கெட்டால்தான் என்ன? அது பற்றித் திமுக கவலைப் படாது. சிறுபான்மை மதத் தலைவர்களைத் தாஜா செய்துகொண்டு, மதிப்பிழந்த காங்கிரஸ் கட்சி, ஆதாயங்கள் தேடும் சில சிறிய கட்சிகள் ஆகியவற்றோடு கூட்டணி வைத்து சட்டசபைத் தேர்தலில் ஜெயித்துவிட்டால், எல்லாவற்றையும் எப்படியோ ஈடு கட்டி விடலாம் என்று திமுக நினைப்பதாகத் தெரிகிறது. பிறகு எதற்கு வெட்கம்?

2021 மாநிலத் தேர்தல் பிரசாரத்தின் போது, “தமிழ்நாட்டிற்கு நீட்-டில் இருந்து விலக்குப் பெறும் ரகசியம் எங்களுக்கு மட்டும் தெரியும்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார். அது என்ன ரகசியம் என்பதை உண்ணாவிரத மேடையில் பேசும்போது அவராகவே சொன்னார். அந்தப் பேச்சிலும் வெட்கம் இல்லை, அர்த்தமும் இல்லை. நேற்று அவர் பேசிய வார்த்தைகள் இவை:

முதல்வர் மு. க ஸ்டாலினை மனதில் வைத்து உதயநிதி முதலில் இப்படிச் சொன்னார்: “நம்முடைய தலைவர் அவர்கள் கண்டிப்பாக நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கித் தருவார்கள்”. ஆனால் தனது பேச்சை முடிக்கையில் அவர் வேறு திசையில் தாவி, தான் முன்னர் குறிப்பிட்ட நீட் விலக்கு ரகசியம் இதுதான் என்றும் உதயநிதி தெளிவு படுத்தினார்:

“எல்லாரும் சொல்றாங்கல்ல, நீட் ரகசியத்தை உதயநிதி சொல்வாரா, சொல்வாரான்னு? இப்ப சொல்றேன் அந்த ரகசியத்தை. வருகின்ற நாடாளுமன்றத் தேரதல்ல பாஜக-வை ஓட ஓட விரட்டுங்க. கீழ இறக்கி காங்கிரஸ் ஆட்சியை, நம்முடைய கூட்டணி ஆட்சியை, உக்கார வச்சீங்கன்னா, கண்டிப்பாக தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு ரத்தாகும். அருமை சகோதரர் ராகுல் காந்தியும் அந்த வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார். எனவே அதை நோக்கி நாம் பயணிப்போம்.”

உதயநிதி தனது ரகசிய பார்முலாவை விளக்கியதின் அர்த்தம் இதுதான்: “தமிழ் மக்களே, நான் சொன்ன ரகசியம் ஒர்க் ஆகுறது உங்க கைலதான் இருக்கு! என்னன்னா, 2024 லோக் சபா தேர்தல்ல பாஜக கூட்டணி தோத்துப் போகணும் – திமுக, காங்கிரஸ் கட்சிகள் இருக்கற கூட்டணி நாடு பூரா மெஜாரிட்டி தொகுதிகள்ள ஜெயிச்சு மத்தில ஆட்சி அமைக்கணும். இதுல பாருங்க, தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் நீட் விலக்கு கேட்டு திமுக போராடுது. ஆனா அது நடக்கணும்னா, நாடு பூரா இருக்கற லோக் சபா தொகுதிகள்ள எங்க கூட்டணி மெஜாரிட்டியா ஜெயிக்கணுமே! அதுனாலதான் சொல்றேன், தமிழ்நாட்டு மக்கள் நீங்கதான் 2024-ம் வருஷ தேரதல்ல எப்படியாவது அகில இந்திய அளவுல எங்க கூட்டணிக்கு மெஜாரிட்டி வாங்கிக் குடுத்து எங்களை ஒன்றிய ஆட்சில உக்கார வைக்கணும்! உங்க ஊர்ல இருந்துக்கிட்டே நீங்க அதை எப்படி செய்வீங்கன்ற ரகசியம் உங்களுக்குத்தான் தெரியும்! நீங்க அதை மட்டும் செய்யுங்க, போதும். அதுக்கப்பறம் ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வுலேர்ந்து விலக்கு கிடைக்கற வழியக் கண்டுபிடிச்சு செயல் படுத்திருவாரு!”

இவ்வாறு வெட்கம் இல்லாமல், விவஸ்தை இல்லாமல் பிதற்றி இருக்கிறார் உதயநிதி. பாவம், நீட் தேர்வினால் அவர்களுக்கு விழுந்த அடியின் வலி அவர்களுக்குத்தான் தெரியும். முனகல் வரத்தான் செய்யும்.


Author:R. Veera Raghavan, Advocate, Chennai


தென்மாவட்ட ஜாதிக் கலவரங்களுக்கு திமுக.,தான் காரணம்: நாங்குநேரியில் முழங்கிய அண்ணாமலை!

annamalai in nanguneri - 2026
#image_title

தென்மாவட்ட ஜாதிக் கலவரங்களுக்கு திமுக.,வே காரணம் என்று முழங்கினார் கே.அண்ணாமலை. தனது பாத யாத்திரையில் ராதாபுரம், வள்ளியூர் ஊர்களை அடுத்து இன்று நாங்குநேரிக்கு வந்தார் அண்ணாமலை. அப்போது அவர் இவ்வாறு பேசினார். இது குறித்து தனது சமூகத் தளப் பக்கத்தில் அவர் பகிர்ந்திருப்பதாவது…

வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நாங்குநேரியில் #EnMannEnMakkal பயணம், மிகச் சிறப்பாக நடந்தேறியது. நாங்குநேரி மக்களின் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பதற்காக, நாங்குநேரி ஜீயர் அவர்கள், சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) அமைக்க 2,000 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கிடைத்தும், இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் வைத்திருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், நாட்டிலுள்ள பின் தங்கிய பகுதிகளை முன்னேற்ற அறிவித்திருக்கும் Aspirational Blocks திட்டத்தில் நாங்குநேரியும் தேர்வாகியுள்ளது. சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, உட்கட்டமைப்பு என அனைத்து துறைகளிலும் நாங்குநேரியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்

மோடியின் முகவரி: நாங்குநேரி

முத்ரா கடனுதவியின் மூலம் தொழிலதிபரான திரு ஜானகிராமன், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு பெற்ற திருமதி இசக்கியம்மாள், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற்ற ஆட்டோ ஓட்டுநர் திரு முத்துப்பட்டு, பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பலனடைந்த விவசாயி திரு குப்புசாமி, பிரதமரின் சிறுகுறு உணவு பதப்படுத்துதல் திட்டத்தின் கீழ் மாவு இயந்திரம் பெற்று தொழில் செய்யும் திரு ராமர், செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பலனடைந்த திருமதி சந்தனமாரி. இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.

பட்டியல் சமூக மக்களை வஞ்சிப்பது திமுகவுக்குப் புதிதல்ல. திமுகவில் அமைச்சராக இருந்த சத்தியவாணி முத்து அவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களை கருணாநிதி வஞ்சிக்கிறார் என்று கூறி, திமுகவில் இருந்தே வெளியேறினார். மத்திய அரசு பட்டியல் சமூக மக்களுக்காக வழங்கும் SCSP நிதியில், 10,466 கோடி செலவிடாமல் வீணடித்தது திமுக.

இந்த ஆண்டு அந்த நிதியொல் 1,600 கோடியை, மற்ற திட்டங்களுக்கு மடைமாற்றியுள்ளது. திமுகவின் சமூக நீதி, சமத்துவம் எல்லாம் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்காகத்தான். தென்மாவட்டங்களில் ஜாதிக் கலவரங்களுக்கு திமுகதான் காரணம். இன்றைய சபாநாயகர் அப்பாவுவே, ஜாதியை வளர்த்து, ஜாதிக் கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கியதே கருணாநிதிதான் என்று கூறியிருக்கிறார். தமிழகத்தில் நடக்கும் ஜாதிப் பிரச்சினைகளுக்கு திமுக தான் காரணம்.

தேர்தலில் வெற்றி பெற 505 பொய் வாக்குறுதிகள் கொடுத்த திமுக, அவற்றில் 5 வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. எப்படி ஊழல் செய்வது என்பதில்தான் திமுகவின் முழுக் கவனமும் இருக்கிறது.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழலின் மொத்த வடிவமான, மக்களை ஜாதியின் பெயரால் பிரித்து அரசியல் செய்யும் திமுக கூட்டணியை முழுமையாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியைத் தொடரச் செய்வோம்.

கூசாமல் பொய் சொல்லும் திமுக.,!கச்சத் தீவை தாரை வார்க்க கருணாநிதியே காரணம்!

annamalai yatra in nellai dt - 2026
#image_title

பாதயாத்திரையாக 21 நாட்களை வெற்றிகரமாக முடித்து 22ம் நாளில் சென்று கொண்டிருக்கும் பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தமது அனுபவங்களை கூட்டத்தில் பேசிய போது குறிப்பிட்டதாவது…

பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதிகளுக்கு சென்றேன். மாநாட்டிற்கு இணையாக திரண்ட மக்கள் கூட்டத்தின் அன்பு பெருக்கிலே, முற்றிலுமாக கரைந்து போனேன். வீரத்தின் விளை நிலமாம், நெல்லை மண்ணுக்கு, எப்போது வந்தாலும் உற்சாகம் உடைப்பெடுக்கும்.

கடந்தாண்டு ஜூன் 5ல், நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தில், பிரதமர் மோடியின், 8ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசியதை மறக்க முடியாது. சுதந்திர போராட்டத்தின் போது, திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஆங்கிலேயரை சுட்டுக் கொன்று, தன்னுயிரையும் மாய்த்த மாவீரன் வாஞ்சிநாதன் பிறந்த மண் செங்கோட்டை.

தாமிரபரணி நீர் மாசு குறித்த ஆய்வில், அனுமதித்ததை விட ஆறு மடங்கு மாசு அதிகம் உள்ளது தெரிய வந்துள்ளது. குடிக்கவோ-, குளிக்கவோ பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசடைந்துள்ளது. இது பற்றி தமிழக முதல்வருக்கு கவலை இல்லை; மது விற்பனையில் எப்படி வருவாயை பெருக்கலாம் என்பதே, அவரின் ஒரே சிந்தனை.

‘தமிழகத்தின் நீர்நிலைகளை பாதுகாக்க, அரசுத் துறை செயலர்கள் அடங்கிய நிரந்தர கமிட்டி அமைக்க உத்தரவிட்டும், ஏன் இன்னும் அமைக்கவில்லை’ என கேள்வி எழுப்பி, தலைமை செயலருக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கடிதம் எழுதியுள்ளது. இதுகூட, இப்போது நாம் சொல்லி தான் ஆட்சியாளர்களுக்கு தெரியும்.

எங்கும் ஊழல் எதிலும் ஊழல்!

  • பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி., மைதானத்தில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 14 கோடி ரூபாயில் கட்டப்பட்ட மேற்கூரை, அரை மணி நேர மழைக்கு தாங்காமல், எட்டு மாதத்தில் இடிந்து விழுந்துள்ளது
  • மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் ஊழல் செய்து, பணம் சம்பாதிப்பதை மட்டுமே, தி.மு.க., குறிக்கோளாக வைத்துள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு தர, தி.மு.க., கவுன்சிலர், 2,000 ரூபாய் கேட்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர். யாராவது பணம் கேட்டால், பா.ஜ., தொண்டனை கூப்பிடுங்கள்; போதும்.

நம்மிடையே அன்று, தொழில் ரீதியான வேறுபாடுகள் இருந்ததே தவிர, ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை, இந்தியாவிற்கே விவரிக்கும் ஊராக அம்பாசமுத்திரம் உள்ளது.

ஊதிய உயர்வு கோரி, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள், 1999 ஜூலை 22ல், திருநெல்வேலியில் நடத்திய பேரணியின் போது, போலீசார் நடத்திய தடியடியில், 17 பேர் உயிரிழந்தனர். அப்போது, தி.மு.க., ஆட்சி நடந்தது.

தமிழகம் இன்று இந்தியாவின் நம்பர் ஒன்; அதாவது, ஊழல் செய்வதில், கடன் வாங்குவதில், ‘டாஸ்மாக்’ வருமானத்தில், அதிகப்படியான ‘லாக்- அப்’ மரணங்களில், கனிமவள கொள்ளையில் என, பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

கச்சத் தீவு தாரை வார்க்க கருணாநிதியே காரணம்!

கனிம வளங்களை கேரளாவுக்கு தாரை வார்ப்பது, காவிரி நீரின் உரிமையை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது போன்ற சாதனைகளை படைத்த தி.மு.க., இலங்கைக்கு எப்படி கச்சத்தீவை தாரை வார்த்தது என்பதை ஆதாரங்களுடன் விளக்குவோம். தி.மு.க., இனிமேல் தப்பிக்கவே முடியாது.

‘கச்சத்தீவை மீட்பதே மீனவர்களுக்கு நல்லது’ என்று துண்டு சீட்டில் எழுதிக் கொடுத்ததை, ஸ்டாலின் படித்துள்ளார். ‘இது தெரிந்தும், ஏன் தாரை வார்த்தீங்க’ என்று கேட்டால், ‘கச்சத்தீவை நாங்கள் தாரை வார்க்கவில்லை’ என்று கூசாமல் பொய் கூறுகின்றனர். தமிழர்களின் உரிமையான கச்சத்தீவு பறிபோனதற்கு கருணாநிதியே காரணம்.

கடந்த 1972, ஜூலை 15ல், ராமநாதபுரம், ‘கெஜட்’ திருத்திய புது பதிப்பை வெளியிடுகிறது. அதன் முதல் பக்கத்தில் உள்ள இந்திய வரைபடத்தில் கச்சத்தீவு இல்லை. முதல்வராக இருந்த கருணாநிதி, புதிய பதிப்பிற்கு அணிந்துரை வழங்கி கையெழுத்திட்டார்.

இதன் பின் தான், 1974ல் கச்சத்தீவை காங்., அரசு, இலங்கைக்கு தாரை வார்த்தது. ‘சீனா அல்லது அமெரிக்காவுடன் நாங்கள் நட்புறவு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால், கச்சத்தீவை கொடுங்கள்’ என்று, இந்திராவிடம், சிரிமாவோ பண்டாரநாயகா பேரம் நடத்தினார். பார்லிமென்ட் அனுமதி பெறாமல், இந்திரா கச்சத்தீவை கொடுத்தார்.

அப்போது, குறைந்தபட்ச எதிர்ப்பை கூட தெரிவிக்காமல், மாநில உரிமைகளை மறந்து, கண்டும் காணாமல் இருந்தவர் கருணாநிதி. கச்சத்தீவை தாரை வார்க்க ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட்களுக்கு, அது பற்றி பேச கடுகளவும் உரிமை கிடையாது.

பின் இந்திரா, 1976ல், ‘கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது’ என்ற, இன்னொரு ஒப்பந்தமும் போட்டார். அப்போது, ஒரு சம்பிரதாயமான கண்டனம் மட்டும் தெரிவித்து விட்டு, தி.மு.க., அமைதி காத்தது.

அன்றைக்கு, ‘கச்சத்தீவு சிங்களவருக்குத் தான்’ என்று சொன்ன இந்திராவை, ‘நேருவின் மகளே வருக… நிலையான ஆட்சி தருக’ என்று அழைத்தார் கருணாநிதி. அதன்பின், பல முறை தி.மு.க., — காங்., கூட்டணி ஆட்சி நடத்தியது. அப்போதும், கச்சத்தீவு தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க., மாநில உரிமைகள் பற்றி பேசுவது வேடிக்கை.

இதேபோன்ற ஒரு சம்பவம், மேற்கு வங்கத்தில் நடந்தது. தற்போதைய மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியான பேருபரியை, அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு தானமாக வழங்க நேரு முடிவெடுத்தார். அப்போது, காங்., சார்பில் மாநில முதல்வராக இருந்த டாக்டர் பி.சி.ராய், பிரதமரின் முடிவை ஆட்சேபித்தார்; உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

‘பார்லிமென்ட் தீர்மானம் இல்லாமல், நாட்டின் ஒரு பகுதியை, வேறொரு நாட்டுக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது’ என, நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. சொந்தக் கட்சியைச் சேர்ந்த பிரதமரையே எதிர்த்தார் பி.சி.ராய்.

அவர் வாழ்ந்த நாட்டில் தான், கருணாநிதி போன்றவர்களும் வாழ்ந்துள்ளனர். கச்சத்தீவுக்காக, தி.மு.க., விட்ட முதலை கண்ணீரையும், ஓநாய் அழுகையையும், மக்களுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கிறேன்.