Home Blog Page 314

மதுரையில் சுற்றுலா ரெயில் பெட்டியில் தீ விபத்து-10 பலி..

313810 aug260031 - 2026
#image_title

மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரையில் சுற்றுலா ரெயில் பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததில் சமையல் செய்தபோது தீ விபத்து ஏற்பட்டதாக முதற் கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது .

இந்திய ரெயில்வே மூலம் நாடு முழுவதும் உள்ள ஆன்மிக ஸ்தலங்களுக்கு சுற்றுலா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி புண்ணிய ஸ்தலமான ராமேசுவரத்துக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா ரெயில்கள் இயக்கட்டு வருகிறது.

அதன்படி உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தமிழகத்தில் உள்ள ராமேசுவரம், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட ஆன்மிக ஸ்தலங்களுக்கு சுற்றுலா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து கடந்த 17-ந்தேதி புறப்பட்ட சுற்றுலா ரெயிலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர். வட மாநிலத்தவர்கள் ரெயிலில் பயணம் மேற்கொள்ளும்போது விதிகளை மீறி ரெயில் பெட்டியிலேயே கியாஸ் சிலிண்டர் வைத்து சமைத்து சாப்பிடுவது வழக்கம்.

kamadenu 2023 08 2237db9a 508e 4ade b1f6 a45bff9bca6e 11 - 2026
#image_title

அதன்படி இந்த சுற்றுலா ரெயிலிலும் பயணிகள் ரெயிலுக்குள் சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்தடைந்த ரெயில் நேற்று நாகர்கோவிலுக்கு சென்றடைந்தது. அங்கு சுற்றுலா பயணிகள் பத்மநாப சுவாமி கோவில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். பின்னர் இரவு ரெயில் மூலம் அவர்கள் மதுரைக்கு புறப்பட்டனர்.

இன்று அதிகாலை சுற்றுலா ரெயில் மதுரை வந்தடைந்தது. இணைப்பு ரெயில் வந்தபிறகு ராமேசுவரத்துக்கு சுற்றுலா ரெயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்குள் சுற்றுலா பயணிகள் இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இன்று காலை சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மதுரை வழியாக ரெயில்கள் வரும் என்பதால் ரெயில் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் இருந்த சில பயணிகள் ரெயிலிலேயே தூங்கினர். மற்றவர்கள் இறங்கி ரெயில் நிலையத்திற்குள் வந்து பிளாட்பாரத்தில் ஓய்வெடுத்தனர்.

இந்த நிலையில் அதிகாலை 5 மணியளவில் ரெயிலில் இருந்த சிலர் டீ தயாரிக்க அவர்கள் கொண்டு வந்திருந்த சிறிய அளவிலான கியாஸ் அடுப்புகளை பற்ற வைத்ததாக தெரிகிறது. அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் தீ ரெயில் பெட்டியில் பரவ தொடங்கியது. கரும்புகையால் ரெயிலுக்குள் இருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் சிக்கினர். இதற்கிடையில் ரெயில் பெட்டியில் தீ மளமள வென பரவ கொழுந்து விட்டு பயங்கரமாக எரிந்தது.

மேலும் அருகில் இருந்த பெட்டிக்கும் பரவியது. இதுகுறித்து தகவலறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் திடீர்நகர், தல்லா குளம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் ரெயில் பெட்டியில் பரவிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 தீயணைப்பு வாகனங்கள் வந்த நிலையில் கூடுதலாக வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி விரைவுப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் ரெயில்வே, மாநகர போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை விரைவுபடுத்தினர். மேலும் தீயணைப்பு வீரர்கள் ரெயில் பெட்டியின் அவசர வழியை உடைத்து உள்ளே சென்று சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உடல் கருகி பலியாகினார். அவர்களது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரெயில் பெட்டியில் சிக்கியிருந்தவர்களின் விபரம் உடனடியாக முழுமையாக தெரியவில்லை. தீ விபத்து நடந்தபோது 20-க்கும் மேற்பட்டோர் ரெயில் பெட்டியில் இருந்திருக்கலாம் என தெரிகிறது. இதில் 10 பேர் இறந்த நிலையில் மற்றவர்களின் கதி என்ன? என்று தெரியவில்லை.

இந்த தீ விபத்தில் ரெயில் பெட்டி முழுவதும் எரிந்து சேதமானது. மற்றொரு பெட்டி பாதி எரிந்து சேதமானது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்கு கொண்டு வந்தனர். அதன்பின் ரெயில் பெட்டியில் சிக்கியவர்களை காயங்களுடன் மீட்டு ரெயில்வே மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

தீ விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், மதுரை ரெயில்வே கோட்ட மேலா ளர் அனந்த் பத்மநாபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி னர். தீ விபத்தில் உத்தரபிர தேசம் லக்கிம்பூர் பகுதியைச் சேர்ந்த சப்தமன்சிங் (வயது 65), மிதிலேஸ்வரி (64) ஆகிய 2 பேரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டு உள்ளது. மற்றவர்களின் விபரம் தெரியவில்லை. இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகன் நடிக்கும் ‘படை தலைவன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜயகாந்த்!

padai thalaivan - 2026
#image_title

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும், “படை தலைவன்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோவை விஜயகாந்த் இன்று வெளியிட்டார் !!

VJ கம்பைன்ஸ் ஜெகநாதன் பரமசிவம் மற்றும் சுமீத் ஆர்ட்ஸ் சுமீத் சாய்கல் வழங்க, Directors Cinemas  தயாரிப்பில், U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படம் “படை தலைவன்”. இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோவை கேப்டன் விஜயகாந்த் தனது பிறந்தநாள் தினமான இன்று வெளியிட்டார். நிகழ்வின் போது திருமதி பிரேமலதா விஜயகாந்த், திரு விஜய பிரபாகரன், “படை தலைவன்” படத்தின் நாயகன் சண்முக பாண்டியன், இயக்குனர் U அன்பு மற்றும் படக்குழுவினர் உடனிருந்தனர்.

“படை தலைவன்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ தற்போது ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன்  “படை தலைவன்” படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. “வால்டர்”  மற்றும் “ரேக்ளா” பட இயக்குநர் U அன்பு கதையில், “நட்பே துணை”  இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை வசனத்தில்,  இதுவரை திரையில் கண்டிராத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை, இப்படத்தில் பதிவு செய்யப்படவுள்ளது.

மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர், ரிஷி ரித்விக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நடிக்கின்றனர்.

திருக்குற்றாலம் கோயிலருகே கடைகளில் தீவிபத்து: ரூ.1 கோடிக்கும் மேல் பொருள்கள் நாசம்!

fire cracks courtallam falls - 2026
#image_title

திருக்குற்றாலம் கோயிலருகே அருவிக்குச் செல்லும் வழியில் உள்ள கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் இருபதுக்கும் மேற்பட்ட கடைகள் சாம்பலாகின. 10க்கும் மேற்பட்ட கடைகள் நாசமாகின. 

தென்காசி மாவட்டம் திருக்குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை சீஸன் காலமாகும். அதன் பின்னும் பாதி சீஸன் காலம் எனப்படும் மழைக்காலம். இந்த சீசன் காலங்களில் திருக்குற்றாலநாதர் கோவிலைச் சுற்றி தற்காலிக கடைகள் அமைப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் ஏலம் விடப்படுவது வழக்கம். ஏலம் எடுத்தவர்கள் திருக்குற்றாலநாதர் கோயிலின் தெற்கு பிராகாரம், வடக்கு, கீழ்பிராகாரப் பகுதியில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்வார்கள். 

இங்கே, விதிமுறைகள் மீறி கோவிலைச் சுற்றி இடைவெளி இன்றி கடைகள் அமைக்கப்படுவதாக ஒவ்வொரு முறையும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் புகார்களைத் தெரிவிப்பதுண்டு. இந்தப் பகுதிகளில், டீ பஜ்ஜி கடை, சிப்ஸ் கடை, டிஃபன் கடைகளும், துணிக்கடைகள், பிளாஸ்டிக்  பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளும் அதிக அளவில் போடப்படுவதுண்டு. 

அண்மைக் காலமாகவே சீஸன் பிரச்னைக்கு உரியதாகவே மாறி விட்டது. இடையில் வந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக நான்கைந்து வருடங்களாக சீஸன் வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் பெரும் சோகத்தில் இருந்தனர். இந்நிலையில்,  இந்த ஆண்டும் சீசன் ஜூலை மாதம்தான் தொடங்கியது. தொடங்கிய இரு வாரங்கள் தான் மழையும் காற்றுமாக இருந்தது. ஆனால் ஜூலை பாதிக்கு மேல் வெயில் வாட்டியது. தற்போதும் குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் மட்டும் மிகக் குறைவாக தண்ணீர் விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால் வியாபாரம் இன்றி இங்கே கடை போட்டவர்கள் ஏற்கெனவே பெரும் சோகத்தில் இருந்தனர்.

இந்நிலையில், திருக்குற்றாலநாதர் கோவில் தெற்கு பிராகார பகுதியில் போட்டிருந்த ஒரு கடையில் வெள்ளிக்கிழமை இன்று பிற்பகல் 2:30 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. இதனால் கடையில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். காற்று வேகமாக வீசியதாலும் தொடர்ந்து இடைவெளி இன்றி கடைகள் இருந்ததாலும் அடுத்தடுத்த கடைகளுக்கு தீ மளமளவென பரவியது. வியாபாரிகள் பொருட்களை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடினர். சில கடைகளில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால், மேலும் பல கடைகளுக்கும், அருகில் சிற்றாற்றின் கரை பகுதியில் உள்ள மரங்களிலும் தீ பரவி பச்சை மரங்கள் எரிந்து பட்டுப் போயின.  சிலிண்டர்கள் வெடித்தது வெடிகுண்டு வெடித்ததைப் போன்ற சத்தத்தை எழுப்பியதால் வியாபாரிகளும், சுற்றுலாப் பயணிகளும் பீதி அடைந்தனர். 

தீ விபத்து குறித்து  அறிந்த தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். மழையில்லாமல் கடும் வெயில் நிலவியதால் தீ எளிதில் பரவி விட்டது. இதில், 20க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின. திருக்குற்றாலநாதர் கோவில் பகுதியே புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.  தீ விபத்தில் நாசமான பொருள்களின் மதிப்பு ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.  

இனி வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாத வகையில் கடைகள் போதுமான இடைவெளி விட்டு அமைக்கவும், விதிமுறைகளை மீறாமல் இருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

courtallam shops fired - 2026
#image_title

செய்தியை கேள்விப்பட்டவுடன் விபத்து நடந்த பகுதிக்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி நேரில் சென்று பார்வையிட்டார்.

திருக்குற்றாலநாதர் கோவிலில் மதில் சுவரில் உள்ள 21 கடைகள் பெரும் தீ விபத்தினால் எரிந்து சாம்பல் ஆயின இதனை ஆய்வு செய்ய வந்த மாவட்ட கண்காணிப்பாளர்சாம்சங்கிடம் குற்றாலநாதர் கோவிலில் நடைபெறும் சீர்கேடுகள் குறித்தும் முறையான அனுமதி வாங்காத கடைகள் குறித்தும் பாதுகாப்பு குளறுபடிகள் அன்னதானக் கூடத்தில் தங்கி இருக்கும் காவலர்கள் அசைவ உணவு உண்பதையும்  தென்காசி இந்து முன்னணி பொறுப்பாளர் இசக்கிமுத்து  எடுத்துக் கூறினார்.. உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி அளித்தார். 

சகோதரத்துவ நல்லிணக்கம் பேணும் ரக்ஷா பந்தன் விழா

sengottai rss program - 2026
#image_title

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சகோதரத்துவ நல்லிணக்க விழா என, ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது.

ஆகஸ்ட் 24 வியாழக்கிழமை மாலை 7:30 க்கு அம்மா உணவகம் முன்பு நடைபெற்ற பொது நிகழ்ச்சியில், பணி நிறைவு பெற்ற காவல்துறை ஆய்வாளர் சுப்பையா தலைமையேற்று நடத்தினார். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம் மாரியப்பன் முன்னிலை வகித்தார். ஆர்எஸ்எஸ்., மாவட்டத் தலைவர் எஸ் குருமூர்த்தி, குமரி கோட்டத் தலைவர் ஏ. காமராஜ் ஆகியோர் கலந்துகொள்ள, பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் பி தங்கராஜ் சிறப்புரையாற்றினார். 

பி.தங்கராஜ் தமது சிறப்புரையில், ரக்ஷா பந்தன் ஏன் கொண்டாடப் படுகிறது என்பதையும், சங்கத்தின் வார்தா முகாமில் காந்திஜி வந்து பார்த்துக் கூறிய கருத்தையும் பற்றிச் சொல்லி, வரலாற்றில் ரக்ஷா பந்தன் நிகழ்வுகள் எப்படி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தின, உயிர் காக்கும் பாதுகாப்பு அம்சமாக அது எவ்வாறு திகழ்ந்தது, எனவே, நம்மிடையே சகோதரத்துவம் வலுவாக வேண்டிது ஏன் என்பதன் அவசியத்தை எடுத்துக் கூறினார். 

செங்கோட்டை நகரின் இந்து சமுதாய ஒருங்கிணைப்புக் குழு மற்றும் சமுதாய நல்லிணக்கப் பேரவை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில் அனைவருக்கும் ராக்கி கயிறு வழங்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்கள் அருகில் இருந்தவர்களுக்கு ராக்கி கட்டி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினார்கள்.

அனைத்து சமுதாயத் தலைவர்களையும் மேடையேற்றி, அவர்களுக்கு ஆர்எஸ்எஸ்., பொறுப்பாளர்கள் கௌரவம் செய்தார்கள். குழுப்பாடல் உடன் தொடங்கிய நிகழ்ச்சி, சங்க  பிரார்த்தனாவுடன் நிறைவு பெற்றது. 

நிகழ்ச்சி நிறைவுற்ற பிறகு, தென்காசி  மாவட்ட சமுதாய நல்லிணக்கப் பேரவை அமைப்பாளர் ஜி.வரதராஜன் ஒருங்கிணைக்க, அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களையும் அமர வைத்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், சகோதரத்துவ சிந்தனை குறித்தும் பேசினார்கள். 

செங்கோட்டை ஆர்.எஸ்.எஸ்., நகரச் செயலாளர் அயோத்யா முருகேசன்  நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கோட்டை ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் முன்னின்று செய்திருந்தனர். நிகழ்ச்சியில் நூற்றுகும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும்..

1937858 paneerselvam - 2026
#image_title

அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும்: பழனிசாமிக்கு ஆதரவாக இன்று தீர்ப்பு கூறப்பட்டது.அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி மேல்முறையீட்டு மனு ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடியானது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடந்தது. அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கும் தீர்மானமும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் அ.தி.மு.க. முழுமையாக எடப்பாடி பழனிசாமி கைக்கு வந்தது. இது ஓ. பன்னீர் செல்வத்துக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்தது. இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், இடைக்கால பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரியும், தங்களை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரியும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களான பி.எச். மனோஜ் பாண்டியன், ஆர். வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பு அளித்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து விசாரிக்க சென்னை ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

அதன்படி ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் கடந்த ஜூன் மாதம் 28-ந்தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். இந்த நிலையில் நீதிபதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும். எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை கோர்ட்டு ஏற்றுக் கொள்கிறது. பொதுக்குழு தீர்மானங்களை ஏற்பதாக சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அறிவித்துள்ளது. எனவே அதற்கு தடைவிதித்து அறிவிக்க முடியாது. இப்போது தடைவிதித்தால் கட்சி செயல்பாடுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பாக எந்த தடையும் விதிக்க முடியாது. ஆகையால் ஓ.பன்னீர் செல்வமும், மற்றவர்களும் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு ஐகோர்ட்டு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர். இந்த தீர்ப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி வரலட்சுமி பூஜை வழிபாடு..

IMG 20230825 WA0164 - 2026
#image_title

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு ஸ்ரீவிலி அருகே வத்திராயிருப்பில் கன்னிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி பெண்களால் திருவிழா கொண்டாடப்பட்டது.

இங்குள்ள பலகுடி கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி நோன்பு திருவிழா பெண்களால் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதில் கன்னிப் பெண்களுக்கும் குழந்தை பேரு இல்லாதவர்களுக்கும் வளைகாப்பு நடத்தி பூஜை செய்யப்படும். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருவிழா நேற்று கோயிலில் விமர்சையாக நடந்தது காலையில் அம்மனுக்கு 11 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது பின்னர் வளையல் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு நவதானியங்கள் சாத்தப்பட்டு பூஜைகள் நடந்தது பூஜையில் குழந்தை இல்லாத பெண்கள் திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் அம்மன் முன்பாக அமர வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது பின்னர் அவர்கள் அனைவரும் கோயிலுக்கு முன்பாக அமர வைக்கப்பட்டு மூத்த பெண்களால் வளைகாப்பு நடத்தப்பட்டது. கடந்த வருடம் அம்மனுக்கு சாத்தப்பட்ட வளையல்கள் பெண்களுக்கு அனுபவிக்கப்பட்டது பின்னர் அம்மனுக்கு சாத்தப்பட்ட நவதானியங்கள் அவர்களுக்கு மருந்தாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மற்ற பெண்களுக்கும் திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் வளையல்கள் அன்னதானம் பிரசாதமாக வழங்கப்பட்டது கோயில் திருவிழா கமிட்டி பெண்கள் குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இன்று வரலட்சுமி நோன்பு கொண்டாட்டம் கோலாகலம்..

IMG 20230825 WA0163 - 2026
#image_title

இன்று ஸ்ரீவரலட்சுமி நோன்பு சுபதினமாகும்.இந்த சுபதினத்தில் தீர்க்க சுமங்கலி யாக இருக்கவும் இழந்த பதவி திரும்ப கிடைக்கவும் நோய் நீங்க மற்றும் பல்வேறு நலன் கருதி பலரும் விரதம் கடைப்பிடித்து வருகின்றனர்.

வரலட்சுமி விரத புராண கதையை படிப்பவர்கள் கேட்பவர்களும் வரலஷ்மியின் அருளால் தனதான்ய சம்பத்துடன் சௌக்கியமாக வாழ்வார்கள் என தேவர்கள் வாழ்த்துகின்றனர். பார்வதி தேவி வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து சண்முகனைப்பெற்றாள். விக்கிரமாதித்தன் இந்த விரதத்தை அனுஷ்டித்து இழந்த ராஜ்ஜியத்தை திரும்ப பெற்றதாக புராண கதை கூறுகிறது.

வரலட்சுமி விரதம் இன்று ஆக 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. கேட்ட வரங்கள் மட்டும் கேட்காத வரங்களையும் கொடுப்பாள் அன்னை வரலட்சுமி. இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு, கல்வி உள்ளிட்ட அனைத்து வளங்களும் வந்து சேரும். வரலட்சுமி விரதம் இருந்தால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

சித்ரநேமி என்ற கணதேவதை வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து தன்னுடைய குஷ்ட ரோகம் நீங்கப் பெற்றாள். வரலட்சுமி விரதம் எப்படி தோன்றியது இந்த விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என புராண கதையே உள்ளது.

மகத நாட்டில் குஞ்சினாபுரம் என்ற ஊரில் வாழ்ந்த பெண் சாருமதி. இவள் தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள் போல் கருதாமல் இறைவனாகவே கருதி அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவளின் அன்பான மனதைக் கண்டு, மகாலட்சுமி தேவி மகிழ்ச்சியடைந்தாள்.

ஒரு நாள் சாருமதியின் கனவில் தோன்றிய லட்சுமிதேவி, என்னைத் துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்க ளின் இல்லத்தில் நான் வசிப்பேன் என்று கூறியதுடன், அந்த விரதத்தை கடைப் பிடிக்கும் வழிமுறைகளையும் சாருமதிக்கு எடுத்துரைத்தார். அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் சிறப்பு மிகுந்த பணியையும் அவளிடம் லட்சுமிதேவி ஒப்படைத்தாள்.

சாருமதியும், தேவியின் எண்ணப்படியே அனைத்தையும் செய்து முடித்தாள். சாருமதி வரலட்சுமி விரதம் இருந்து பல நன்மைகளைப் பெற்றாள். அதைக் கண்ட மற்ற பெண்களும் அந்த விரதத்தை கடைப் பிடிக்கத் தொடங்கினர். அதன் காரணமாக அந்த நாடே சுபீட்சம் அடைந்தது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

முன்னொரு காலத்தில் சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடும் பொழுது யார் ஜெயித்தார்கள் என்று சண்டை வந்தது. அப்போது அங்கிருந்த சித்ர நேமி என்ற கணதேவதை நியாயம் கேட்டார்கள். அவன் ஒரு தலைப் பட்சமாக சிவன் ஜெயித்ததாக கூறினான். பார்வதி கோபம் கொண்டு அவனை குஷ்ட ரோகியாக ஒளியிழந்து தவிப்பாயாக என்று சபித்து விட்டாள்.

பின்னர் சிவபெருமான் அவனுக்கு சாப விமோசனம் தருமாறு பார்வதியிடம் கேட்க பார்வதியும் எப்பொழுது அழகிய தடாக தீர்த்தத்தில் தேவகன்னிகைகள் புண்ணியமான விரதத்தை அனுஷ்டிப்பார்களோ அப்பொழுது உன் சாபம் நீங்கும் என்று கூறினாள். அதன் பிறகு சித்ர நேமி ஒரு தடாக கரையில் குஷ்ட ரோகியாக வசித்து வந்தான்.

பல காலத்திற்கு பிறகு அங்கு தேவ கன்னிகைகள் வந்து தேவி பூஜையில் ஈடுபடுவதை கண்டு தன்னைப்பற்றி கூறி தாங்கள் அனுஷ்டிக்கும் விரதம் பற்றி கூறுமாறு கேட்டான். அவன் மேல் பரிதாபம் கொண்ட கன்னிகைகள் தாங்கள் அனுஷ்டிப்பது வரலஷ்மி விரதம். சூரியன் கடகத்தில் இருக்கும் போது கங்கையும் யமுனையும் சேரும் காலத்தில் துங்கபத்திரா நதிக்கரையில் சிராவண மாத சுக்லபக்ஷத்தில் வெள்ளிக்கிழமையன்று மஹாலஷ்மியைப் பற்றிய இந்த விரதத்தைத் தொடங்க வேண்டும். என்று விரதம் பற்றி கூறினார்கள். அவர்கள் செய்த பூஜையை கண்ட சித்ரநேமிக்கு குஷ்டம் நீங்கி மீண்டும் கைலாயம் சென்றான்.

varalakshmi vratham - 2026
#image_title

பார்வதி தேவியும் இந்த விரதத்தை அனுஷ்டித்து ஷண்முகரை பெற்றாள்.விக்ரமாதித்தன் இவ்விரதம் கடைபிடித்து நந்தனிடமிருந்து ராஜ்யம் பெற்றான். நந்தனின் மனைவி அனுஷ்டித்து பிள்ளைப்பேறு பெற்றாள். குண்டினம் என்ற நகரத்தில் வசித்த சாருமதி என்ற பெண் இவ்விரதமிருந்து சகல சௌபாக்கியமும் பெற்றாள்.

வரலட்சுமி விரத நாளில் புண்ணிய நதிகளில் நீராடலாம். இது ஓராண்டு லட்சுமி வழிபாட்டுக்குரிய பலன்களை நமக்குத் தரும். வரலட்சுமி பூஜை தினத்தன்று சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வணங்கினால் நல்லது. வரலட்சுமியை எந்த அளவுக்கு தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு புண்ணியம் சேரும்.

மகாலட்சுமிக்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதிகம். லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது. லட்சுமி, வழிபாட்டின் போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.

வரலட்சுமி தினத்தன்று அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும். வரலட்சுமி பூஜைக்கு கொழுக்கட்டை நைவேத்தியமே பிரதானமானது. வரலட்சுமி பூஜையின் போது அருகம்புல்லை தூவி வழி பட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் கும்பத்தை பிறகு பத்திரப்படுத்தி, சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம். வேறு பூஜைகள் நடத்தும் போது அதை பயன்படுத்தலாம்.

வரலட்சுமி பூஜையின் போது சந்தனத்தில் லட்சுமி செய்து வழி படலாம். ஆனால் மறுநாள் அதை நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும். வரலட்சுமி தினத்தன்று புண்ணிய நதிகளில் நீராடலாம். இது ஓராண்டு லட்சுமி வழிபாட்டுக்குரிய பலன்களை நமக்குத் தரும்.

வரலட்சுமி பூஜை தினத்தன்று சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வணங்கினால் நல்லது. வரலட்சுமியை எந்த அளவுக்கு தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு புண்ணியம் சேரும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

அன்னை மகாலஷ்மியை மகிழ்விக்கும் இந்த விரதமிருக்கும் பெண்மணி இவ்வுலகில் சகல போகங்களையும் பெற்று அனுபவித்தபின் வைகுந்தம் சேருவாள். எல்லா சுக்லபட்ச வெள்ளிக்கிழமைகளில் மஹாலஷ்மியை முறைப்படி பூஜிப்பவர்கள் வாழ்நாள் முழுதும் செல்வ செழிப்புடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.

அவர்கள் குடும்பம் தழைக்கும். வரலட்சுமி விரதக்கதை யை படிப்பவர்கள் கேட்பவர்களும் வரலஷ்மியின் அருளால் தனதான்ய சம்பத்துடன் சௌக்கியமாக வாழ்வார்கள் என தேவர்கள் வாழ்த்துகின்றனர்.

வரலட்சுமி விரதம் மாலையில் பூஜை செய்யும் போது அக்கம் பக்கத்தில் இருக்கும் கன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்களை அந்த விரத பூஜையில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்க வேண்டும். வரலட்சுமி நோன்பு விரதத்தை நடத்துபவருக்கு எவ்வளவு சிறப்புகள் கிடைக்குமோ, அப்படி கலந்து கொள்வவர்களுக்கும் சிறப்பு வந்து சேரும்.

இந்த விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது அனுஷ்டித்து வந்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும் என்பது ஐதீகாகும்.

கலைடாஸ்கோப் பல்துறை சார் மாணவர்களுக்கான ‘வேலை வாய்ப்புகள்’ நிகழ்ச்சி!

vivekananda college - 2026
#image_title

திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில் கலைடாஸ்கோப் (Kaleidoscope) பல்துறை சார்ந்த மாணவர்களுக்கான ‘வேலை வாய்ப்புகள்’ நிகழ்ச்சி:

மதுரை: மதுரை மாவட்டம், திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில், கலைடாஸ்கோப் (Kaleidoscope) பல்துறை சார்ந்த மாணவர்களுக்கான ‘வேலை வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் கல்லூரி ஆசிரியர்களின் வழிகாட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
கல்லூரிச் செயலர் ஸ்ரீமத் வேதானந்த, கல்லூரி குலபதி ஸ்ரீமத் அத்யாத்மானந்த ஆகியோர் ஆசியுரை வழங்கினர். இந்நிகழ்வில், சு.முத்தையா (உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை) ‘தமிழ்த்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் க.அசோக்குமார் (உதவிப்பேராசிரியர், பொருளாதரத்துறை) ‘பொருளாதரத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், வீ.முருகன் (உதவிப்பேராசிரியர், வரலாற்றுத்துறை) ‘வரலாற்றுத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் க.செல்லப்
பாண்டியன் (உதவிப்பேராசிரியர், வணிகவியல்துறை) ‘வணிகவியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், சி.வேல்முருகன் (உதவிப்பேராசிரியர், கணிதத்துறை) ‘கணிதத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் சு.கணேசன் (உதவிப்பேராசிரியர், இயற்பியல்துறை) ‘இயற்பியல் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் க.இராஜ்குமார் (உதவிப்பேராசிரியர், வேதியியல்துறை) ‘வேதியியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் த.செல்லத்துரை (உதவிப்பேராசிரியர், தாவரவியல்துறை) ‘தாவரவியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் ம.பவுன்ராஜ் (உதவிப்பேராசிரியர், விலங்கியல்துறை)  ‘விலங்கியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், 
ச.இரஞ்சித்குமார் (உதவிப்பேராசிரியர், கணினிஅறிவியல்துறை) ‘கணினிஅறிவியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு அந்தந்தத் துறைசார்ந்து காணப்படக்கூடிய வேலைவாய்ப்புகள் பற்றியும், அதற்கு எவ்வாறு தங்களை தற்பொழுதிருந்தே தயார்படுத்த வேண்டிய வழிமுறைகள் குறித்தும் உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்விற்கு அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதிஷ்பாபு வரவேற்புரையும், ஆங்கிலத்துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் சரவணகுமார் நன்றியுரையும், சமஸ்கிருதத்துறையின் தலைவர் முனைவர் ஸ்ரீதர்சுவாமிநாதன் தொகுப்புரையும் வழங்கினர்.

இந்நிகழ்விற்கு ஆலோசகராக  முனைவர் க.கார்த்திகேயன் (கல்லூரி துணைமுதல்வர்) மற்றும் முனைவர் ஜெயசங்கர் (புலமுதன்மையர் மற்றும் தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர்) ஆகியோர்  செயல்பட்டனர்.

ஊட்டியில் ஆளுநரின் குடும்ப நிகழ்ச்சி: செலவு எல்லாம் சொந்தக் காசில்தான்!

500x300 1872089 tngovernor - 2026
#image_title

ஆளுநர் ஆர்.என்.ரவி, ஊட்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் அவருடைய மகளுக்கு எந்த அடிப்படையில் திருமணம் நடத்தினார்? தமிழ்நாடு அரசின் பணத்தில் திருமணம் நடத்த அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் அளிப்பாரா? – என்று, அரசின் பணத்தில் வெகுகாலம் இறுதி சிகிச்சை எடுத்துக் கொண்ட முரசொலி மாறன் மகனும், மத்திய அமைச்சராக இருந்த போது அரசின் பிஎஸ்என்எல் உயர் தர கண்ணாடி இழை தொடர்புகளை தன் சகோதரனின் சன் டிவிக்கு முறைகேடாக இலவசமாக பயன்படுத்திக் கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு விருந்தினர்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம், வாகனங்களின் வாடகைக் கட்டணம், டீ மற்றும் காபி உட்பட உணவு, விளக்குகள், மலர்கள் மற்றும் மலர் அலங்காரங்கள், பணியாளர்கள் உட்பட நிகழ்வுக்கான முழு செலவும் ஆளுநரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆளுநர் குறித்து தயாநிதி மாறன் அவதூறாக பேசியது கண்டிக்கத்தக்கது என்று- ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

ராஜ் பவன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாண்புமிகு ஆளுநர் அவர்களின் குடும்ப விழாவில் அரசு பணம் பயன்படுத்தப்பட்டதாக திரு. தயாநிதி மாறன், மக்களவை உறுப்பினர் பொதுவெளியில் குற்றம்சாட்டியதாக மேற்கோள்காட்டி ஆகஸ்ட் 24, 2023 அன்று சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த தகவல்கள் தவறானவை என்பதுடன், விபரீதமான மற்றும் இழிவான நோக்கம் கொண்டவை என்பதால், நடந்தவை பொது வெளியில் அறியப்பட வேண்டும்.

நடந்த உண்மைகள்:

மாண்புமிகு ஆளுநர் அவர்கள் பிப்ரவரி 21 – 23, 2022 அன்று ஊட்டியில் குடும்ப நிகழ்ச்சியை நடத்தினார்.

மாண்புமிகு ஆளுநரின் விருந்தினர்கள் அனைவரும் தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். ராஜ் பவனில் யாரும் தங்கவில்லை.

  • விருந்தினர்கள் மட்டுமன்றி மாண்புமிகு ஆளுநரின் குடும்ப உறுப்பினர்களின் பயன்பாட்டுக்கும் கூட தனியார் வாகனங்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டன. அரசு வாகனம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. •தனியார் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது, மேலும் ராஜ் பவன் சமையலறை, விருந்தினர்களுக்கு தேநீர் அல்லது காஃபி வழங்குவதற்கு கூட பயன்படுத்தப்படவில்லை.

முழு நிகழ்வுக்கான விளக்கொளி வசதிகள் ராஜ் பவனில் இல்லாமல் ஒரு தனியார் மூலம் செய்யப்பட்டன.

மலர் அலங்காரத்துக்கான பூக்கள் கூட சந்தையில் இருந்து தனிப்பட்ட முறையில் வாங்கப்பட்டன.

முழு நிகழ்வுக்கான பணியாளர்கள் தனிப்பட்ட முறையில் பெறப்பட்டனர்.

ராஜ் பவன் ஊழியர்கள் எவரும் பயன்படுத்தப்படவில்லை.

  • விருந்தினர்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம், வாகனங்களின் வாடகை கட்டணம், தேநீர் மற்றும் காஃபி உட்பட உணவு வழங்குதல் விளக்குகள், மலர்கள் மற்றும் மலர் அலங்காரங்கள், சேவை பணியாளர்கள் உட்பட நிகழ்வுக்கான முழு செலவையும் மாண்புமிகு ஆளுநரே தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டார்.

மாண்புமிகு ஆளுநர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கான உணவுக்கு கூட ஒவ்வொரு மாதமும் கட்டண ரசீது வழங்கப்படுகிறது. அதை ராஜ் பவன் செலுத்த உரிமையிருந்தாலும் அந்த செலவினத்தையும் மாண்புமிகு ஆளுநரே ஏற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மாண்புமிகு ஆளுநர் மீது அவதூறு கற்பிக்கும் விதமாக மக்களவை உறுப்பினரை மேற்கோள்காட்டி வெளியான பொறுப்பற்ற மற்றும் விபரீத தகவல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

மேலப்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சந்திரயான் வெற்றிக் கொண்டாட்டம்!

melappavur govt school celebrate chandrayaan - 2026
#image_title

மேலப்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று 24.08.2023 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் அனுப்பப்பட்ட சந்திராயன் 3 ராக்கெட் நிலவில் நிலைநிறுத்த பட்ட இந்த நிகழ்ச்சியை மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் கொண்டாடினார்கள்.

இந்திய ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாக இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த சந்திராயன் 3 விண்ணில் செலுத்தப்பட்ட நிகழ்வு உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர காரணமாக இருக்கிறது என்று மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த நல்ல நிகழ்வை கொண்டாடும் விதமாக பள்ளியில் காலை பிரார்த்தனை கூடத்தில்.. பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக மாணவ மாணவியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

சந்திராயன் 3 நிலவில் கால் பதித்த இந்தத் திட்டத்தில் மேலப்பாவூர் அரசு மேல் நிலையில் படித்த திருச்சிற்றம்பலத்தைச் சார்ந்த மாணவர் திரு சண்முகவேல் அவரும் பங்காற்றி உள்ளார் என்ற செய்தியை மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து கரகோஷம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு பாக்கியநாதன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

பழைய மாணவர் சங்க பொறுப்பாளர் திரு பாலகிருஷ்ணன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.