இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
மதுரையில் இருந்து விருதுநகர் ராஜபாளையம் செங்கோட்டை வழியாக 27.08.23 முதல் குருவாயூர்-மதுரை-குருவாயூர் இன்டர் சிட்டி விரைவு வண்டி இயக்கப்படும்.என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
வண்டி எண்: 16327 (மதுரை-குருவாயூர்) 27.08.23 முதல் இயங்கும். மதுரை புறப்பாடு- 11:20 ராஜபாளையம் வருகை- 13:20 செங்கோட்டை வருகை 3.20 குருவாயூர்க்கு இரவு- 02:10க்கு சென்றடையும்.
வண்டி எண்: 16328 (குருவாயூர்-மதுரை) 28.08.23 முதல்.. குருவாயூர் புறப்பாடு- 05:50 செங்கோட்டை வருகை 15.40 ராஜபாளையம் வருகை- 16:58 மதுரை வருகை- 19:15
கொல்லம் வழித்தடத்தில் முதல்முறையாக புத்தம்புது எல்ஹெச் வகை பெட்டிகளோடு, முன்பதிவில்லா பெட்டிகள்: 11 ஸ்லீப்பர் பெட்டிகள்: 2 மூன்றடுக்கு ஏ/சி: 1 மொத்தம்: 14 பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். முன்பதிவு விரைவில் துவங்கும்.என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் பயணிகள் பொதுமக்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் மதுரையில் இருந்து ராஜபாளையம் -செங்கோட்டைவழியாக குருவாயூருக்கு நிரந்தர ரயில் விரைவில் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.மேலும் செங்கோட்டை வழியாக இயங்கும் வேளாங்கண்ணி -எர்ணாகுளம் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி -எர்ணாகுளம் சிறப்பு ரயில் வாரம் இருமுறை விரைவுவண்டி யாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
#image_title
புனலூர் குருவாயூர் இடையே இயங்கும் தினசரி இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை ராஜபாளையம் வழி மதுரை வரை நீடித்து இயக்க கேரளா எம்.பி பிரேமசந்திரன் கோடிக்குன்னில் சுரேஷ் மற்றும் செங்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி உட்பட பல்வேறு ரயில் பயணிகள் சங்கங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர் .தற்போது மதுரை-செங்கோட்டை, செங்கோட்டை-கொல்லம், புனலூர்-குருவாயூர் ஆகிய மூன்று ரயில்களையும் ஒன்றாக இணைத்து ஒரே இரயிலாக குருவாயூர்-மதுரை விரைவு வண்டி இயக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.இயக்க தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாரமிருமுறை விரைவு ரயிலில் வண்டி எண் 16361/16362 என்ற எண் நிரந்தர சேவையாக வாரந்தோறும் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும் வேளாங்கண்ணியில் இருந்து வாரந்தோறும் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இயக்கிட ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
#image_title
நிரந்தர சேவைகள் இயக்க தேதி விரைவில் அறிவிக்கப்படும் . எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாரமிருமுறை சேவையுடன் பாலக்காடு கோவை ஈரோடு சேலம் காட்பாடி சித்தூர் வழியாக கொல்லம் – திருப்பதி வாரமிருமுறை மற்றும் பாலருவி விரைவு ரயிலில் தூத்துக்குடி நீட்டிப்புக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.திருவனந்தபுரம் மதுரை அமிர்தா ரயில் ராமேஸ்வரம் வரை நீடித்தது இயக்கவும் ரயில்வே வாரியம் ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும் மயிலாடுதுறை – திருச்சி & திருச்சி – கரூர் & கரூர் – சேலம் ஆகிய மூன்று ரயில்களை இணைத்து ஒரே ரயிலாக மயிலாடுதுறை – சேலம் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது..
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இந்தியாவின் முதல் 3டி பிரிண்டிங் மூலமாகக் கட்டப்பட்ட தபால் நிலையத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார்.
3டி பிரிண்டிங் மூலமாகக் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் தபால் நிலையம் பெங்களூருவில் கேம்பிரிட்ஜ் லே அவுட் பகுதியில் அமைக்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று திறந்து வைத்தார்.
The spirit of Aatmanirbhar Bharat! 🇮🇳India’s first 3D printed Post Office.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பிரதமர் மோடியின் தலைமையில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாடு பல புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. அதுபோன்று 3டி தொழில்நுட்பத்தில் அச்சிடப்பட்ட கட்டடத்தை கட்டுவது ஒரு சிறந்த முயற்சி’ என்று கூறினார்.
Every Indian would be proud to see India's first 3D printed Post Office at Cambridge Layout, Bengaluru. A testament to our nation's innovation and progress, it also embodies the spirit of a self-reliant India. Compliments to those who have worked hard in ensuring the Post… pic.twitter.com/Y4TrW4nEhZ
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, ‘பெங்களூரு கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் இந்தியாவின் முதல் 3டி பிரிண்டிங் மூலமாகக் கட்டப்பட்ட தபால் நிலையத்தைப் பார்ப்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுவார்கள். நமது தேசத்தின் கண்டுபிடிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு ஒரு சான்றாக, இது விளங்குகிறது. இதற்காக உழைத்தவர்களுக்கு பாராட்டுகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சோழவந்தானில் காட்டுப் பன்றிகளால் தென்னை வாழை நெல் பயிர்கள் சேதம்.
சோழவந்தான்: சோழவந்தான் வடகரை கண்மாய் தென்பகுதி பேட்டை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 1000 ஏக்கரில் வாழை தென்னை நெல் விவசாயம் செய்து வருகின்றனர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வடகரை கண்மாய் பகுதிகளில் பதுங்கி இருக்கும் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக விவசாயப் பகுதியில் புகுந்து வாழை தண்டுகளை முட்டித்தள்ளி வாழை மரத்தில் உள்ள குருத்துகளை கடித்து தின்று விடுகின்றன
இதனால் வாழைகள் பெருத்த சேதம் அடைந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் இதே போல் தென்னங்கன்றுகளை காட்டுப்பன்றிகள் பிடுங்கி எரிந்து தேங்காயில் உள்ள பருப்புகளை தின்று விடுவதாகவும் நெற்கதிர்கள் விளைந்துள்ள பகுதியில் நெற்கதிர்களை சேதம் படுத்தி வருவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றன
இதுகுறித்து வாழை விவசாயி மோகன்ராஜ் கூறியதாவது
சோழவந்தான் வடகரை தென்பகுதியான பேட்டை கிராமத்தில் சுமார் ஆறு ஏக்கரில் வாழை விவசாயம் சுமார் 6 லட்சம் செலவில் செய்து வருகிறேன் இரண்டு ஆண்டுகளாக காட்டுப்பன்றிகள் விவசாய பகுதிக்குள் நுழைந்து வாழைகளை சேதப்படுத்தி குருத்துகளை தின்றுவிட்டு செல்கின்றன இதில் சில வாழைகளை திருப்பி நட்டு வைக்கிறோம் அதையும் காட்டு பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன
இதுபோக வாழையில் ஊடு பயிராக தென்னங்கன்றுகளை நட்டு வைத்துள்ளேன் அதையும் தென்னகன்றில் உள்ளகுருத்தையும் காட்டுப்பன்றிகள் தின்று சேதப்படுத்தி விடுகின்றன இதுபோக இரவு நேரங்களில் இங்கு வருவதற்கு பயமாக உள்ளது அதிகாலையில் இரண்டு விவசாயிகளை காட்டுப்பன்றி கடித்திருக்கிறது இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வருவதால் நாங்கள் இப்பகுதிக்கு வருவதற்கு பயமாக உள்ளது இது குறித்து வேளாண்மை துறை வனத்துறையிடம் பலமுறை எடுத்துக் கூறியும் காட்டுப்பன்றியை தடுத்து நிறுத்த முடியவில்லை
இதனால் தொடர்ந்து இப்பகுதி உள்ள வாழை தென்னை கன்று நெற்கதிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை இந்த காற்றுப் பன்றிகள் செய்து வருகின்றன இனியாவது வனத்துறை காற்றுப்பன்றிகளை பிடித்து மலைப்பகுதியில் விட வேண்டுமென விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்
இதே போல் வடகரை கண்மாய் கீழ்பகுதியில் நெல் மற்றும் வாழை விவசாயம் செய்து வரும் சரவணன் கூறியதாவது
என் வயலுக்கு வரும் காட்டுப் பன்றிகள் ஆண்டியப்ப மேடு வரை சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு மேலாக சென்று நெல் வாழை தென்னங்கன்றுகளை சேதப்படுத்தி வருகிறது இதற்காக என் வயல் அருகே கட்டுக் கம்பியால் தற்பாதுகாப்பு செய்து வருகிறேன் இருந்தாலும் இந்த கம்பியையும் காட்டுப் பன்றிகள் முட்டித் தள்ளி விடுகின்றன இதுகுறித்து வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து காட்டுப்பன்றிகளை பிடித்துச் செல்ல வேண்டும் என்று கூறினார்
நரிக்குடி பேருந்து நிலையத்தில் தங்கச்செயினை பறிகொடுத்த தமிழாசிரியர்.
பத்திரமாக மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி சிறுமிகள்.
குழந்தைகளின் நேர்மையை வெகுவாக பாராட்டிய நரிக்குடி காவல் துறையினர்.
விருதுநகர் அருகே, நரிக்குடி பேருந்து நிலையத்தில், உலக்குடி செல்ல வேண்டி பேருந்திற்காக காத்திருந்த உலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சசிகலா அவசரமாக, பஸ் ஏறி பள்ளிக்கு சென்றதன் காரணமாக, தனது இரண்டரை பவுன் தங்கசெயினை நரிக்குடி பேருந்து நிலையத்தில் பறிகொடுத்தார்.
இதனையடுத்து, செயின் காணாமல் போனது குறித்து பள்ளி ஆசிரியர் சசிகலா நரிக்குடி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதற்கிடையில், பள்ளிக்கு வந்த நரிக்குடி தொடக்கப்பள்ளி 5 ஆம் வகுப்பு மாணவிகளான நரிக்குடியை சேர்ந்த சரவண சாஸ்தா மகள் மோகனாஸ்ரீ, பள்ளப்பட்டியை சேர்ந்த விஜயன் மகள் சபர்ணா, மானூர் இந்திரா காலனியை சேர்ந்த சரவணக்குமார் மகள் தேவிகா ஆகியோர் அதனை பத்திரமாக மீட்டு தலைமையாசிரியர் மூலமாக நரிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, போலீசார் கொடுத்த தகவலின் பேரில், காவல் நிலையம் வந்த பள்ளி தமிழாசிரியர் சசிகலா காணாமல் போன செயின் குறித்த அடையாளங்களை தெரிவித்த நிலையில் நரிக்குடி காவல்துறையினர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சோணைமுத்து ஆகியோரின் முன்னிலையில் செயின் கிடைக்க காரணமாக இருந்த மூன்று மாணவிகளின் கைகளினாலயே தமிழாசிரியர் ஆசிரியர் சசிகலா தனது செயினை பெற்றுக்கொண்டார்.
மேலும், மாணவிகளின் நேர்மையான செயலை கண்ட நரிக்குடி காவல் துறையினர், தமிழாசிரியர் சசிகலா மற்றும் தலைமையாசிரியர் சோணைமுத்து ஆகியோர் மாணவிகளை வெகுவாக பாராட்டினர்.
செயினை மீட்டு கொடுத்த நரிக்குடி போலீசாருக்கு தமிழாசிரியர் சசிகலா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மேலக்கால் ஊராட்சியில் பேவர் பிளாக் அமைத்ததில் குளறுபடி இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.!
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலக்கால் ஊராட்சியில், காளியம்மன் கோவில் அருகில் 2020 21 ஆம் ஆண்டு 15 ஆவது நிதி குழு மானியத்தில் பேவர் பிளாக் அமைத்ததில் குளறுபடி உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்: பொதுவாக ஊராட்சிகளில் நடைபெறும் வேலை முடிந்த பிறகு அதற்கான திட்ட மதிப்பீடு தொகை எந்த இடத்தில் இருந்து எந்த இடம் வரை உள்ளிட்டவைகளின் பெயர் பலகை வைப்பது வழக்கம்.
அந்த வகையில், மேலக்கால் ஊராட்சியில், காளியம்மன் கோவில் அருகில் பேவர் பிளாக் அமைத்து பெயர் பலகை வைத்ததில் 2020 21 ஆம் ஆண்டு 15 வது நிதி குழு மானியத்தில் எதிலிருந்து எதுவரை என்ற விவரம் தெரிவிக்கப் படவில்லை.
மதிப்பீடு எழுதி இருப்பதில் குளறுபடி உள்ளது. பொது மக்களுக்கு தெளிவாக தெரியும்படி எழுதப்படவில்லை. மேலும் முறையாக மழை நீர் வடிகால் அமைப்பதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்து வரக்கூடிய மழை காலங்களில் காளியம்மன் கோவில் முன்பு மழை நீர் தேங்கி அருகில் உள்ள வீடுகளுக்குள் செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
முறையாக கழிவுநீர் கால்வாய் பணிகள் செய்யாததால் மழை காலங்களில் குடிநீருடன் கழிவுநீரும் கலக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி முதல் நாடக மேடை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை காலங்களில் கழிவு நீர் குடிநீரில் கழக்காதவாறு பணிகளை செய்ய வேண்டும்.
மேலும் பேவர் பிளாக் அமைத்த பணிகளில் முறையாக பெயர்ப் பலகையை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்
மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை விமர்சிக்கும் தகுதி திரு முக ஸ்டாலின் அவர்களுக்கு இல்லை என்பதை தமிழக பாஜக சார்பாக மிகப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்… என்று குறிப்பிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கையை ஒன்றினை வெளியிட்டுள்ளார் அவர் வெளியிட்ட அறிக்கை:
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை விமர்சிக்கும் தகுதி முக ஸ்டாலினுக்கு இல்லை
திமுகவின் குடும்ப ஆட்சி பயிற்சிப் பாசறையில், வழக்கம்போல, யாரோ எழுதிக் கொடுத்த துண்டுச் சீட்டைப் பார்த்து, அதில் என்ன எழுதியிருக்கிறது என்றே தெரியாமல் கடகடவென்று ஒப்பித்துவிட்டுப் போயிருக்கிறார் தமிழக முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள்.
1964 ஆம் ஆண்டு புயலில் சீர்குலைந்த தனுஷ்கோடி நகரைச் சீரமைக்க, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள்தான் முதன்முதலாக முயற்சி எடுக்கிறார் என்பதைத் தெளிவாக ஒப்புக் கொள்கிறார் முதலமைச்சர் திரு ஸ்டாலின். 1964க்குப் பிறகு பல முறை மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, மருமகனுக்கும், பேரனுக்கும், மகளுக்கும் மத்திய அமைச்சர் பதவியும், எம்பி பதவியும் வாங்கிக் கொடுப்பதில் மட்டுமே குறியாக இருந்ததால், தமிழக மக்களின் பிரச்சினை குறித்துப் பேசவோ செயல்படவோ நேரமில்லை என்பதை வெளிப்படையாகக் கூறியதற்கு நன்றி முதலமைச்சர் அவர்களே.
துண்டுச் சீட்டில் எழுதியிருப்பது என்னவென்று மேடைக்குப் பேச வந்தால், இப்படித்தான் வாக்குமூலங்கள் கொடுக்க வேண்டியிருக்கும். பல தெரியாமல் ஒப்புதல்
தமிழக மீனவ சகோதரர்கள் மீது அக்கறை உள்ளது போன்ற முதலமைச்சரின் நடிப்பு, அவரது மகன் அமைச்சர் திரு உதயநிதி நடிப்பை விஞ்சிவிட்டது. 2004 2014 பத்து ஆண்டுகளில், காங்கிரஸ் கூட்டணியில் நாள்தோறும் பசையான துறைகளை வாங்கிக் கொண்டு, எம் மீனவ சகோதரர்கள் தாக்கப்பட்டபோதும், கொல்லப்பட்டபோதும், அன்றைய வருமானக் கணக்கில் மட்டுமே முழு கவனத்தையும் வைத்திருந்த உங்கள் நீலிக் கண்ணீரை எல்லாம் மக்கள் நம்பிய காலம் முடிந்து போய்விட்டது.
உங்கள் கட்சிக் கூட்டத்தில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். பொதுமக்கள் மத்தியில் அதே துண்டுச் சீட்டு இனியும் எடுபடாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
புயலில் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியில்தான் சூரிய ஒளி சக்தி மூலம் மின்சார வசதி வந்தது என்பதை மறந்து விடக் கூடாது. ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு சாலை வசதி ஏற்படுத்தியதும் பாரதப் பிரதமர் மோடி அவர்கள்தான்.
1967 ஆம் ஆண்டிலிருந்து ஆறு முறை தமிழகத்தில் ஆட்சியிலிருந்தும், மத்திய அரசில் பல முறை அமைச்சர் பதவி வகித்தும், உங்களால் தனுஷ்கோடிக்கு அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து கொடுக்க முடியவில்லை என்பது உங்களுக்கே வெட்கமாக இல்லையா ஸ்டாலின் அவர்களே? மத்திய அரசில், தொழில் துறை, கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரவை எல்லாம் கேட்டுப் பெறத் தெரிந்த உங்களுக்கு, 1964ல், புயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி ஞாபகம் வராதது அதிசயமே.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், மீனவ சகோதரர்களுக்காக, தனி துறையை அமைத்து பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். கிஸான் திட்டம், காப்பீடு திட்டங்கள், தமிழக மீனவர் நலன் காக்க 32820 கோடிக்கும் அதிகமான நிதி, மீன்வளத் துறைக்கு செலவிடப்பட்டுள்ளது.
ஆனால் நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினீர்களா? மீனவ மக்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுப்போம், மீன்வளக் கல்லூரி அமைப்போம், குளிர்பதனக் கிடங்கு வசதி அமைப்போம், வழங்குவோம் என் நிறைவேற்றினீர்களா? தடைக்கால உங்கள் நிவாரணம் 8000 ரூபாய் வாக்குறுதிகளில் ஒன்றையாவது
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும், உங்கள் கூட்டணியைப் போன்ற மக்கள் விரோத சக்திகளைத் தாண்டி, முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ராமேஸ்வரமும் காசியைப் போல விரைவில், உலகப் புகழ்பெற்ற தலம் ஆகும். வாக்குறுதி கொடுத்து விட்டு மக்களை ஏமாற்ற அவர் திமுககாரர் அல்ல. அவரை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும்.
மண்டபத்தில் யாரோ என்னவோ எழுதிக் கொடுத்ததை அப்படியே படித்து விட்டுச் செல்வது அந்தத் தகுதி அல்ல, நீங்கள் வகிக்கும் பதவிக்கு அது அழகும் அல்ல. அடுத்த முறையாவது, துண்டுச் சீட்டை அப்படியே ஒப்பிக்கும் முன்பாக, அதில் இருப்பது திமுகவுக்கு எதிரான ஒப்புதல் வாக்குமூலமா என்பதைச் சரிபார்க்கவும்.
திருநெல்வேலி வரை இயக்கப்பட்டு வந்த பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து ரயில்வே வாரிய செய்திகள் தெரிவிப்பதாவது…
எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாரமிருமுறை விரைவு ரயில் வண்டி எண் 16361/16362 என்ற ண்னுடன் நிரந்தர சேவையாக வாரந்தோறும் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும் வேளாங்கண்ணியில் இருந்து வாரந்தோறும் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் இயக்கிட ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. நிரந்தர சேவைகள் இயக்க தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாரமிருமுறை சேவையுடன் பாலக்காடு கோவை ஈரோடு சேலம் காட்பாடி சித்தூர் வழியாக கொல்லம் – திருப்பதி வாரமிருமுறை மற்றும் பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி நீட்டிப்பு ஆகியவற்றிக்கும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
திருவனந்தபுரம் மதுரை அமிர்தா ரயில் ராமேஸ்வரம் வரை நீடித்தது இயக்கவும் ரயில்வே வாரியம் ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியுள்ளது.
#image_title
ஆனால் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் குருவாயூர் புனலூர் விரைவு ரயில் மதுரை வரை நீடித்தது இயக்க ரயில்வே வாரியம் இதுவரை ஒப்புதல் வழங்காதது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும் இதுகுறித்து ரயில்வே வாரிய அதிகாரிகள் தெரிவித்த போது புனலூர் செங்கோட்டை இடையிலான ரயில் பாதை மின் மயமாக்கல் பணிகள் நிறைவடைந்த உடன் இந்த ரயில் மதுரை வரை நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.
அதுபோல் எர்ணாகுளம் வேளாங்கண்ணி வார விடுமுறை விரைவு ரயிலுக்கு கேரளத்தில் கொல்லம் புனலூர் பின் செங்கோட்டை நிறுத்தங்களை அடுத்து ராஜபாளையம் நிறுத்தமே வழங்கப்பட்டுள்ளது தென்காசி ரயில் பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தென்காசி சங்கரன்கோவில் ஆகிய இரு தயிர் நிறுத்தங்களிலும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மீண்டும் தமிழர்களுக்கு, தமிழகத்திற்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் கட்சி என்று, ஓசூர் பொம்மசந்திர மெட்ரோ ரயில் திட்டம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார் பாஜக., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி. இது குறித்து அவர் கூறியதாவது…
தென்னிந்தியாவின், முதல் மாநிலங்களுக்கிடையிலான மெட்ரோவிற்கான (பொம்மசந்திரா – ஓசூர்) ஆய்வு நடத்துவதற்கு மத்திய பாஜக அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சாத்தியக்கூறு ஆய்வைத் தயாரிப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (சிஎம்ஆர்எல்) டெண்டரை வெளியிட்டது. 20.5 கி.மீ. நீளமுள்ள இந்த தடத்தில், 11.7 கி.மீ. கர்நாகவிலும், 8.8 கி.மீ நீளம் தமிழகத்திலும் உள்ளது.
கர்நாடக அரசு (பாஜக அரசு) 2022ல் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறை வளர்ச்சி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி, தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அதிக சிரமமின்றி ஓசூர் மற்றும் பெங்களூரு இடையே பயணிக்க உதவும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள, தமிழக அரசு, சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திற்கு 75 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. இந்த திட்டத்தினால் ஓசூர் நகரம் வளர்ச்சியடைவதோடு, தொழில் முன்னேற்றம், வேலை வாய்ப்புகள், பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
இந்நிலையில், இந்த திட்டத்தை தற்போதைய கர்நாடக காங்கிரஸ் அரசு கைவிட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஓசூர் நகரம் வளர்ந்து விடும் என்றும் இந்த திட்டம் பெங்களூரு நகருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்றும், மெட்ரோ இணைப்பினால் ஓசூர் நகரத்தில் தொழில் முன்னேற்றம் அதிகரிப்பதோடு, பெங்களூரு நகர தொழிலதிபர்கள் பலர் தங்கள் தொழிற்சாலைகளை ஓசூருக்கு மாற்றி கொண்டு சென்று விட வாய்ப்புள்ளது என்றும் கட்டமைப்பு திட்டங்களை விட தங்கள் மாநில நலனே முக்கியம் என்று கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் மகனுமான பிரியாங்க் கார்கே அவர்கள் கூறியிருப்பது காங்கிரஸ் கட்சியின் தமிழகத்திற்கு எதிரான மனநிலையை வெளிக்காட்டுகிறது.
மத்திய அரசு அனுமதித்த இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டவேண்டும். காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை குற்றம் சொல்ல, விமர்சிக்க அஞ்சும் தி மு க, இந்த விவகாரத்தில் மௌனம் சாதித்தால் அது தமிழர்களுக்கு தி மு க இழைக்கும் மாபெரும் துரோகமே ஆகும்.
கூட்டணி கட்சி ஆட்சி என்பதால் நீர் ஆதாரத்தில் சமரசம் செய்யும் தி மு க தற்போது தொழில் முன்னேற்றத்தில், வேலை வாய்ப்பில், வளர்ச்சியில் சுணக்கம் காட்டாமல் கர்நாடக காங்கிரஸ் அரசு மீது கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.
இந்த திட்டத்தை கர்நாடக அரசு எதிர்த்தால், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் கூட்டணியை முறித்து கொள்வோம் என்று சொல்ல தயாரா? தி மு கவிற்கு தமிழர் விரோத காங்கிரஸ் கூட்டணி அரசியல் ஆதாயம் முக்கியமா? தமிழக நலன் முக்கியமா என்று முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மௌனமோ, எதிர்ப்போ உணர்த்தும்.
நாட்டின் 77வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில் பாஜக., தலைவர் அண்ணாமலை கன்யாகுமரி மாவட்டத்தில் தன் ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார். ஆக.15 சுதந்திர தினத்தன்று கொடியேற்றி தேசிய எழுச்சியை கன்யாகுமரி மாவட்டத்தில் மீண்டும் உணர வைத்தார். நீட் தேர்வு குறித்து திமுக., செய்து வரும் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், நீட் தேர்வு இல்லாமல் எவ்வகையில் திமுக.,வினர் பணம் கொள்ளை அடித்தார்கள் என்பதை ஆற்காடு வீராசாமியின் ஒரு பேட்டியை மக்களிடம் போட்டுக் காண்பித்து பிரசாரம் செய்கிறார். மதுவிலக்கு குறித்து திமுக.,வின் பொய்யான பிம்பத்தை தோலுரிக்கிறார். மத்திய அரசின் திட்டங்கள், குறிப்பாக பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட விஸ்வகர்ம நிதியுதவித் திட்டம் ஆகியவற்றையும் எடுத்துச் சொல்லி மக்களை ஈர்க்கிறார்.
தனது கன்யாகுமரி மாவட்ட பாத யாத்திரை அனுபவங்களைக் குறித்து அண்ணாமலை தெரிவித்திருப்பதாவது…
இன்றைய #EnMannEnMakkal பயணம், தேசியமும் ஆன்மீகமும் நிறைந்த குமரி மாவட்டம் விளவங்கோட்டில், பெருந்திரளெனக் கூடிய மக்கள் நடுவே சிறப்புற அமைந்தது.
அய்யா வைகுண்டர் அவதரித்த மண்; வேலுதம்பி தளவாய், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தாணுலிங்க நாடார், மார்ஷல் நேசமணி என சிறந்த மனிதர்கள் பிறந்த, வாழ்ந்த மண். விவேகானந்தருக்கு ஞானம் கொடுத்த மண். கர்மவீரர் காமராஜருக்கு கைகொடுத்த மண். எல்லாவற்றுக்கும் மேலாக, தேசியவாதிகள் நிறைந்திருப்பதால், திமுக தலைவர் கருணாநிதியை, குமரி எங்கள் தொல்லை என்று புலம்ப வைத்த மண்.
நெய்யாறு தூர்வாரப்படாமல் 19 ஆண்டுகளாக, கால்வாயில் நீர்வரத்து இல்லாமல், இந்தப் பகுதியில் 39,000 ஏக்கர் நிலம், பாசன வசதி இல்லாமல் பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்துக்கு வர வேண்டிய நீரை எல்லாம், கேரள அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் விட்டுக் கொடுத்து தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது திமுக. நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். திமுகவோ, டாஸ்மாக்கில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறது. இவர்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சி, 1978 ஆம் ஆண்டு, வெள்ளிகோடு பகுதியில், இந்திரா காந்தி கைது செய்யப்பட்டதால் ,ஒன்பது உயிர்களை பேருந்தில் வைத்து எரித்துக் கொன்றது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியில், குமரி கிராம்பும், மார்த்தாண்டம் தேனும், மட்டி வாழைப் பழமும் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. மத்திய அமைச்சராக இருந்து அண்ணன் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஏராளமான நலத்திட்டங்களைக் குமரிக்குக் கொண்டு வந்தார். ஆனால் இப்போது காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த், தொகுதிக்கு வருவதே இல்லை.
மோடியின் முகவரி : விளவங்கோடு
விவசாய உற்பத்தியாளர்கள் திட்டம் மூலம் பயன்பெற்ற திருமதி பிந்து, தோட்டக்கலை மானியம் பெற்ற திரு கமலாசனன், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் மூலம் வீடு பெற்ற திருமதி அனிதா, செல்வமகள் திட்டம் மூலம் பலனடைந்த திருமதி ராதிகா திரு சசிகுமார் தம்பதியினர், தூய்மை இந்தியா திட்டம் மூலம் கழிப்பறை வசதி பெற்ற திரு ரமேஷ் இவர்கள்தான் மோடியின் முகவரி.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிப்போம். குமரி மண் என்றும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பக்கம்தான் என்பதை நிரூபிப்போம்.
இன்றைய மாலை #EnMannEnMakkal பயணம், பாண்டிய மன்னர்களின் அரசவைப் புலவராகவும், அகத்திய மாமுனிவரின் முதன்மைச் சீடராகவும் விளங்கிய அதங்கோட்டாசான் பிறந்த புண்ணிய பூமியான குமரி மாவட்டத்தில், கிள்ளியூர் பகுதியில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மீது பேரன்பு கொண்ட மக்கள் சூழ சிறப்பாக நடந்தேறியது.
கர்மவீரர் காமராஜரும், மக்கள் பணிக்கு தன் வாழ்வை அர்ப்பணித்த ஐயா பொன்னப்ப நாடாரும் அரசியல் செய்த மண் இன்று, மக்கள் பணி என்றால் என்னவென்றே தெரியாத காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்களால் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
செண்பகவல்லி அணை, முல்லைப் பெரியாறு அணை, நெய்யாறு அணை என்று தமிழக உரிமை அனைத்தையும் அடகு வைத்துள்ளது திமுக அரசு. காமராஜர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட நெய்யாறு இடதுகரை கால்வாய், இன்று நீர்வரத்து இல்லாமல் இருக்கிறது. சட்டசபையில் திமுகவிடம் இதை பற்றி கேள்வி எழுப்பினால், தண்ணீர் வராத கால்வாயை சுத்தம் செய்தால் என்ன என்று பேசியுள்ளார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். டாஸ்மாக் போதும் என்றிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். 1971 ஆம் ஆண்டு, மதுவிலக்குக்காகப் போராடிய 33,000 பேரைக் கைது செய்த கருணாநிதியின் மகன் தானே. வேறு எப்படி இருப்பார்?
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியில், குமரி கிராம்பும், மார்த்தாண்டம் தேனும், மட்டி வாழைப் பழமும் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைபொருட்கள் உலகத்தில் அனைத்து இடத்திற்கும் செல்லவேண்டும் என்பதே நமது பாரத பிரதமரின் ஆசை.
மோடியின் முகவரி : கிள்ளியூர்
மத்திய அரசின் Startup India திட்டத்தின் மூலம் தொழில் முனைவோரான திருமதி சுசீலா, பிரதமரின் இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் பலனடைந்த திரு. பால்மணி, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு பெற்ற திருமதி. சாந்தினி, இளைஞர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நேரு யுவ கேந்திரா சங்கதன் திட்டத்தின் மூலம் பலனடைந்த திரு ராஜேஷ், உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலம் பலனடைந்த திரு. மணிகண்டன். இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் முகவரி.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பெயரை உச்சரிக்க கூட தகுதி இல்லாத மனிதர் இந்த மலை முழுங்கி மனோ தங்கராஜ் .மத்திய அரசு தமிழகத்தின் மீனவர்களின் நலனுக்காக வழங்கும் நிதி எங்கே செல்கிறது? கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தினமும் 600 லாரியில் குமரி மாவட்டத்தின் வளங்கள் சூறையாடப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் தேங்காப்பட்டினம் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு பணிகளுக்கு போதிய கல் அனுப்பாமல் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த துறைமுகத்தின் முகத்துவாரத்தில் கடல் அலையால் ஏற்படும் மணல் திட்டுகளில் சிக்கி இதுவரை 50 க்கும் மேற்பட்ட படகுகள் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் எத்தனை உயிர் போகும் வரை இந்த ஊழல் திமுக அரசு காத்திருக்கும். மீனவர்களில் நலனில் துளி கூட இல்லாத அரசு இந்த ஊழல் திமுக அரசு.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், சந்தர்ப்பவாத, ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடித்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்க, குமரி மண்ணும் நிச்சயம் துணை நிற்கும்.
இன்றைய #EnMannEnMakkal பயணம், தேசியச் சிந்தனை மிக்க குமரி மண்ணின் பத்மநாபபுரத்தில், பெரும் மக்கள் திரள் சூழ சிறப்புற நடந்தேறியது.
குமரி மாவட்டத்தைத் தமிழகத்துடன் இணைக்கப் போராடி, சிறை சென்று, பின்னர் இதே தொகுதியில் 1962 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐயா குஞ்சன் நாடார், 1984 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகச் சிறப்புறப் பணியாற்றிய ஐயா பாலச்சந்திரன் ஆகியோரை தேர்ந்தெடுத்த தொகுதி இன்று, கனிம வளங்களைக் கொள்ளையடிக்கத் துணை போகும் மலைமுழுங்கி மனோ தங்கராஜால் தன் சிறப்பை இழந்து நிற்கிறது.
மீனவ மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்போம், மீன்வளக் கல்லூரி அமைப்போம், குமரியில் ரப்பர் பூங்கா அமைப்போம், தொழில் நுட்பப் பூங்கா அமைப்போம், வாழைப்பழம், நெல், கரும்பு என குறைந்தபட்ச ஆதார விலை கொண்டு வருவோம் என்று தேர்தல் வாக்குறுதியளித்த திமுக, குமரி மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
குமரி கிராம்புக்கும், மார்த்தாண்டம் தேனுக்கும், மட்டிப் பழத்துக்கும் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் அரசு. மனோதங்கராஜ் உறவினரோ 24 மணி நேர பார் நடத்திக் கொண்டிருக்கிறார்.
மோடியின் முகவரி : பத்மநாபபுரம்
விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு திட்டத்தில் பலனடைந்த நாஞ்சில் நாடு உற்பத்தி நிறுவனம் திரு செல்லத்துரை, விவசாயத்திற்கான நுண்ணீர் பாசனத் திட்டம் மூலம் பலனடைந்த திரு உண்ணிகிருஷ்ணன், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பலனடைந்த திரு.கணேசன், தேசிய தோட்டக்கலை மானியத் திட்டத்தில் பலனடைந்த காய்கறி வியாபாரம் செய்யும் திரு நாராயணப் பெருமாள் மற்றும் திரு. திரவியம். இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பவாத திமுக காங்கிரஸ் ஏமாற்றுக் கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியைத் தொடரச் செய்வோம்.
இன்றைய #EnMannEnMakkal பயணம், மண்டைக்காடு அம்மன் அருள்பாலிக்கும் குமரி மண்ணின் குளச்சலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மீது பேரன்பு கொண்ட பொதுமக்களால் சிறப்புற்றது.
குளச்சல் மக்கள் போராட்ட உணர்வு, 1741 ஆம் ஆண்டு டச்சுப் படைகளுக்கு எதிரான போரிலேயே வரலாற்றில் இடம்பெற்றது. 1936 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வரும் மண்டைக்காடு கோவில் மாசிக் கொடையை, மக்களை மத ரீதியாகப் பிரிப்பதற்காக, இந்த ஆண்டு தடை செய்ய முயற்சித்த திமுக அரசு, அதே குளச்சல் மக்கள் போராட்ட உணர்வுக்குப் பணிந்திருக்கிறது.
கர்மவீரர் காமராஜர் அமைச்சரவையில் இடம்பெற்ற தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர், உள்துறை அமைச்சராக இருந்த திருமதி லூர்தம்மாள் சைமன், குளச்சலைச் சேர்ந்தவர்.
அப்படிப்பட்ட குளச்சல் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், அவரது மகன்கள் எல்லாம் அடாவடி செய்கிறார்களே தவிர மக்களுக்கான பணிகள் எதையும் செய்வதில்லை.
குமரியின் விவசாயப் பொருள்களுக்கு புவிசார் குறியீடு கொடுத்தது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் அரசு.
மோடியின் முகவரி : குளச்சல்
மத்திய அரசின் விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு நிதி மூலம் பலனடைந்த கப்பியரை கூட்டுப் பண்ணை உழவர் உற்பத்தி நிறுவனத்தின் இயக்குனர் திரு ஜான்சன், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் தொழில் முனைவராகியிருக்கும் திரு அன்பழகன், நமது பாரதப் பிரதமரின்
One Rank One Pension என்ற முன்னெடுப்பினால் பலனடைந்த திரு கோபி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் மருத்துவக் காப்பீடு பெற்று பயனடைந்த திரு ராமையன், செல்வமகள் திட்டத்தின் மூலம் பலனடைந்த திருமதி வித்யா. இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.
குமரி மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு, படித்த இளைஞர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளான ரப்பர் பூங்கா ,தொழில் நுட்பப் பூங்கா என திமுக ஒன்றையாவது நிறைவேற்றியிருக்கிறார்களா? திமுகவினர் நடத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள் சம்பாதிக்க மத்திய அரசின் கல்வித் திட்டங்களை எதிர்க்கிறார்கள். குமரியின் கனிம வளங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கிறார்கள். இதற்கு அமைச்சர் மலைமுழுங்கி மனோ தங்கராஜ் முக்கியக் காரணம். உரிமம் இல்லாமல் குவாரிகள் இயங்குவது அமைச்சருக்குத் தெரியாதா.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், இந்த மக்கள் விரோத திமுக காங்கிரஸ் கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக, பெருந்தலைவர் காமராஜர் காலத்திலிருந்தே தேசியத்தின் பக்கம் நிற்கும் குமரி மண் முழு ஆதரவு அளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தலைமுறை தலைமுறைகளாக மாற்றங்களை எதிர்நோக்கி, வெறும் ஏமாற்றங்களை மட்டும் சந்தித்து வந்த மக்கள், கடந்த 9 ஆண்டுகளாக, பிரதமர் மோடியும், பா.ஜ.,வும் மேற்கொண்ட அரும்பணிகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கண்களை மூடிக் கொண்டு கண்ட சின்னங்களில் குத்தாமல், கட்சியின் வேட்பாளரின் எண்ணங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். மது என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த, தமிழகத்தின் ஒரு நல்ல தலைமுறையை கொடிய மதுவிற்கு அடிமையாக்கி, மதுவலையில் வீழ்த்தி, தமிழகத்தைச் சிதைத்த மாபெரும் பாவம் தி.மு.க.,வையும், கருணாநிதியின் குடும்பத்தையும் சாரும்.
கடந்த 2016ல் சட்டசபை தேர்தலின்போது, ‘தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில், மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்ற, அக்கட்சியின் தேர்தல் அறிக்கை, ஸ்டாலினால் செய்தியாளர்கள் முன்னிலையில் படிக்கப்பட்டது.
கடந்த 1948ல் இருந்து 23 ஆண்டுகளாக, தமிழகத்தில் அமலில் இருந்த முழு மதுவிலக்கை, 1971ல் ரத்து செய்த கருணாநிதியின் அறிக்கையை படிக்கும்போது, அதன் ஒவ்வொரு வரியும் பாவ மன்னிப்பு கோருபவரின் மனதிலிருந்து எழும் வார்த்தைகளாகவே, மக்கள் நம்பினர்; ஆனால், ஏமாந்தனர்.
கடந்த 2010 ஆக., 24ல், செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதியிடம், மதுவிலக்கு பற்றி கேட்டபோது, ‘மதுவிலக்கு குறித்து பரிசீலித்து வருவதாகத் தானே சொன்னேன்; இத்தனை நாட்களில் கொண்டு வருகிறேன் என்றா கூறினேன்?’ என, எதிர்கேள்வி கேட்டு நழுவினார்.
காமராஜர் முதல்வராக இருந்தபோது, 12 ஆயிரம் புதிய பள்ளிகளை திறந்து, அனைத்து மாணவர்களையும் படிக்க வைத்தார். ஆனால், அவருக்குப் பின் மதுக் கடைகளை திறந்து, மக்களை குடிக்க வைத்தது யார்?
பள்ளி மாணவர்கள், மாணவியர் கூட, மது குடிக்கும் அவல நிலை ஏற்பட்டதற்கு காரணம் யார்?
கடந்த 1971ல் ராஜாஜி, கொட்டும் மழையில் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று, ‘மதுக் கடைகளை திறக்க வேண்டாம்’ என்று மன்றாடியபோதும், அதை பொருட்படுத்தாமல், மதுவிலக்கை ரத்து செய்தவர் யார்?
‘மது கூடவே கூடாது’ என்று ஈ.வெ.ரா., சொன்னார். ‘மது வாயிலாக கிடைக்கும் வருவாய் என்பது, புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெய் போன்றது’ என்று அண்ணாதுரை கூறினார். ஆனால், சாராய வருமானம் தான் முக்கியம் என, மதுக் கடைகளை திறந்தவர் யார்?
‘புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளிப்பதில்லை’ என, 30 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த விதியை தளர்த்தி, தி.மு.க.,வைச் சேர்ந்த இரு முன்னாள் மத்திய அமைச்சர்கள் மற்றும் திரைப்படம் எடுக்க உதவியவர், வேண்டியவர் என்று, ஐந்து பேருக்கு, புதிய மது ஆலைகளுக்கு அனுமதி வழங்கியது யார்?
படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என, 2008, டிச., 22ல் அறிவித்தது யார்; அதன்பின், 30 மாதங்கள் ஆட்சியில் இருந்தும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தாதது யார்?
கடந்த 1996ல் பிரசாரத்தின்போது, ‘தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கு செயல்படுத்தப்படும்’ என்று வாக்குறுதி அளித்து, அதன் பின்னர், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், அதை நிறைவேற்றாதது யார்?
‘மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று, 2008 டிச., 27ல் நடந்த தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது யார்?
கடந்த 2016 தேர்தல் அறிக்கையில், ‘மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும்’ என்றும், ‘மது விற்பனை வாயிலாக வரும் வருவாயை ஈடுகட்ட, புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்’ என்றும் கூறி, அதை செய்யாமல் மழுப்புவது யார்?
கடந்த 2021ல் தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ‘படிப்படியாக மதுவிலக்கை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என குறிப்பிடப்பட்டது யார்?
இத்தனை கேள்விகளுக்கும் ஒற்றை பதில், தி.மு.க., கருணாநிதி, -ஸ்டாலின். இவர்களிடம் 50 ஆண்டுகளாக ஏமாந்த மக்கள், இனியும் நம்பி ஏமாற மாட்டார்கள்.
இந்த வருவாயை மேலும் அதிகரிக்கும் வகையில், மதுபானங்களின் விலையை அரசு உயர்த்தி இருக்கிறது. வரும் ஆண்டில், ‘டாஸ்மாக்’ வருவாய், 50 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டக்கூடும்.
இளைஞர்கள் போதையில் மூழ்க, மக்கள் அனைவரும் கடனில் மூழ்க, மின்சாரம் இன்றி தமிழகம் இருளில் மூழ்க… இது தான் விடியல் மக்களே.