Home Blog Page 318

Exploring the World of Mr. Sampath: A Masterpiece by R.K. Narayan

0
rk narayans mr sampath - 2026
#image_title

By Janaki Balasubramanian

R.K. Narayan, one of India’s most renowned authors. He has gifted the literary world with captivating tales that bring to life the charm and quirks of Indian society. Among his numerous works, Mr. Sampath stands as a timeless masterpiece. It showcases his exceptional storytelling skills and insightful exploration of human nature.

The novel is set in the fictional town of Malgudi. It follows the life of Mr. Sampath, a printer who dreams of becoming a big-time publisher. He starts out as a small-time printer, but he is ambitious and always looking for the next big opportunity. Mr. Sampath meets Srinivas, a young man who is trying to start a political journal. Mr. Sampath’s printing abilities impress Srinivas. He asks him to print The Banner, his journal. Mr. Sampath agrees, and the two men become partners.

ALSO READ: Malgudi days: offers a glimpse into the lives of ordinary people!

The Banner is a success, and Mr. Sampath’s printing business begins to grow. He also gets involved in other ventures, such as film production and advertising. However, Mr. Sampath’s success is not without its challenges. He is often reckless and impulsive, and he sometimes makes bad decisions.

One of the biggest challenges that Mr. Sampath faces is his relationship with a woman named Miss Malti. She is an actress in a film that he is producing. Mr. Sampath is quickly drawn to her. However, Miss Malti is also manipulative and self-serving. She uses Mr. Sampath to further her own career.

Mr. Sampath’s relationship with Miss Malti eventually leads to his downfall. He loses his printing business, his partnership with Srinivas, and his reputation. However, even in his darkest moments, Mr. Sampath never gives up on his dreams. He eventually finds a new printing business, and he begins to rebuild his life. 

R.K. Narayan’s genius lies in his ability to create multi-dimensional characters. It resonates with readers. Mr. Sampath appears as a dreamer with a desire anxious to escape the constraints of his humble upbringing.  His initial exuberance and passion for journalism are infectious. It endeared him to readers from the start. 

ALSO READ: The Bachelor of Arts by R.K. Narayan

As the narrative unfolds, however, we witness a transformation. Mr. Sampath from an ambitious young man to someone consumed by his own success, losing touch with his roots and values. The narrator, on the other hand, stands as a contrast to Sampath’s impulsive nature. He serves as a calm and pragmatic anchor, offering a nuanced perspective on the events that unfold in the novel. The novel explores various themes, the few are:- 

Aspiration and Ambition: Mr. Sampath delves into the theme of ambition and the pursuit of success. Sampath’s relentless desire to make his mark in the world of journalism reflects his aspirations. This quality engraves in many young people striving to achieve greatness.

The Power of the Press: The novel also sheds light on the role of media and journalism in society. As “The Banner” gains popularity, it becomes a potent tool to shape public opinion. It influences the masses, highlighting the responsibility that comes with wielding such power.

Friendship and Loyalty: The camaraderie between Mr. Sampath and the narrator serves as a strong undercurrent throughout the story. Their loyalty and support for each other highlight the significance of true friendship in times of adversity.

Mr. Sampath exemplifies R.K. Narayan’s exceptional storytelling prowess. His ability to capture the essence of human aspirations and struggles. Through this engaging tale of ambition, friendship, and social commentary, Narayan leaves readers with a sense of introspection and empathy toward the characters and the society they inhabit.

Mr. Sampath serves as an enduring reminder of the intricacies of human nature. The intricate balance between ambition and ethical choices that define our journey through life.

பிரிந்து சென்ற டாக்டர்; வெறும் நீர் மட்டுமே அருந்தி… வறுமையால் வாடிய குடும்பத்தினர் தற்கொலை!

madurai dr house suicide - 2026
#image_title

மதுரையில் முன்னாள் சுகாதாரத்துறை அதிகாரியின் குடும்பத்தினர் வறுமை காரணமாக தற்கொலை – சில வாரங்களாக குடிநீர் மட்டுமே குடித்து வாழ்ந்த பரிதாபம்: மருத்துவர் பாண்டியனை அழைத்து வர போலீசார் விரைவு

மதுரை மாநகர் தாசில்தார்நகர் அன்பு நகர் ராஜராஜன் தெருவை சேர்ந்த பாண்டியன் என்ற மருத்துவர் சுகாதாரத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது மருத்துவர் பாண்டியன் தனது மனைவி வாசுகி மற்றும் மகள் உமாதேவி (45) மகன் கோதண்டபாணி (42) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக மருத்துவர் பாண்டியன் மனைவியுடனான கருத்துவேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு வெளியேறிய நிலையில் பாண்டியனின் மனைவி வாசுகி மற்றும் திருமணமாகாத நிலையில் மகள் உமாதேவி (45) மகன் கோதண்டபாணி (42) ஆகிய மூவரும் தனியாக வசித்துவந்துள்ளனர்.

பாண்டியன் பிரிந்துசென்ற விரக்தியில் இருந்த குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளயே முடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக வீட்டிற்குள்ளயே இருந்த காரணமாக உரிய வருமானமின்றி வீட்டில் பணத்தை செலவு செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகை மற்றும் பொருட்களை விற்று அந்த பணத்தில் இருந்து சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உணவிற்கு வழியின்றி வறுமை ஏற்பட்டுள்ளது இதனால் மின் கட்டணம் செலுத்தாத நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இருட்டிலயே வசித்து வந்துள்ளனர். மேலும் வீட்டில் மோட்டார் பயன்படுத்த முடியாத நிலையில் தண்ணீர் இன்றி இயற்கை உபாதைகளுக்கு கூட செல்ல முடியாத நிலையில் வசித்து வந்ததோடு அவ்வபோது வாரத்திற்கு ஒரு முறை மட்டும் குடிநீரை வாங்கி அதனை குடித்தே வாழ்ந்துவந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக குடிநீரும் வாங்காத நிலையில் வீடு பூட்டியே கிடந்துள்ளது.

இதனையடுத்து இன்று காலை வீட்டை சுற்றிலும் கடுமையான துர்நாற்றம் வீசிய நிலையில் அருகில் இருந்த பொதுமக்கள் அண்ணாநகர் காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை திறந்து பார்த்தபோது கோதண்டபாணி தூக்கில் தொங்கிய நிலையிலும், வாசுகி மற்றும் உமாதேவி ஆகிய இருவரும் விஷம் அருந்தி உயிரிழந்த நிலையில் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.

இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குறித்து தடயவியல் கைரேகை நிபுணர்கள் ஆதாரங்களை எடுத்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆணையர் சினேகபிரியா தலைமையிலான் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அழுகிய நிலையில் இருந்த மூன்று சடலங்களையும் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மருத்துவர் பாண்டியன் உடன் பணிபுரிந்த செவிலியர் ஒருவருடன் பழனியில் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. இதை எடுத்து அவரிடம் விசாரணை செய்ய முடிவு செய்தனர். அவரை போனில் தொடர்பு கொள்ள முடியாததால் பாண்டியனை அழைத்து வர பழனிக்கு சென்றுள்ளனர்.
மருத்துவர் பாண்டியன் வந்த பின்பு தான் முழு விவரமும் தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர்.

எடப்பாடி படத்துக்கு சாணி அடிப்பு; செல்லூர் ராஜூ வீட்டின் முன் ஆர்ப்பாட்டம்!

madurai admk edappadi pic - 2026
#image_title

மதுரையில், எடப்பாடி பழனிச்சாமி உருவப் படத்தை சாணியால் அடித்து, எதிர்ப்பு தெரிவித்து செல்லூர் ராஜூ வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீர்மரபினர் நலச்சங்கத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் வருகின்ற 20- ஆம் தேதி அதிமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மாவட்டங்கள் தோறும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது. கடுமையான எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை மதுரைக்கு அழைத்து வரும் மதுரையின் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ க்கு எதிர்ப்பு தெரிவித்து செல்லூர் பகுதியில் செல்லூர் ராஜு வீட்டின் எதிரே சீர்மரபினர் திடீர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை சாணியால் அடித்து எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஈடுபட்டனர்.
குறிப்பாக , எடப்பாடி பழனிச்சாமி 10.5சதவிதம் இட ஒதுக்கீட்டில் சீர்மரபினருக்கு துரோகம் செய்துவிட்டதால், மதுரை மாநாட்டிற்கு வருவதால் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட்ட சீர்மரபினர் ஊர்வலமாக சென்று செல்லூர் ராஜு வீட்டை முற்றுகையிட முயன்றனர் .
அங்கு வந்த செல்லூர் காவல்துறையினர் அவர்களிடம் கலைந்து போக சொல்லி கேட்டுக் கொண்டதால், பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

மதுரையில், பல இடங்களில், முக்குலத்தோர் அமைப்பின் சார்பாக, எடப்பாடியை எதிர்த்து கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

நகர பேருந்து இயக்கத்தை அதிகரிக்க… பிரதமரின் இ-பஸ் சேவை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ebus seva - 2026
#image_title

நகரப் பேருந்து இயக்கத்தை அதிகரிக்க “பிரதமரின்-மின்சார பேருந்து சேவை”க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், போதிய பேருந்து சேவை இல்லாத நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 10,000 மின்சாரப் பேருந்துகள் மூலம் நகரப் பேருந்துகளின் இயக்கத்தை மேம்படுத்தும் “பிரதமரின்-மின்சார பேருந்து சேவை” என்ற பேருந்துத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு ரூ.57,613 கோடி செலவாகும். இதில் ரூ.20,000 கோடி நிதியை மத்திய அரசு வழங்கும். இத்திட்டம் 10 ஆண்டுகளுக்கு பேருந்து இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு பிராந்தியம் மற்றும் மலைப் பிரதேச மாநிலங்கள் உள்ளிட்ட 3 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களை இத்திட்டம் உள்ளடக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் போதிய பேருந்து சேவை இல்லாத நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கம்…

நகரப் பேருந்து சேவையில் சுமார் 10,000 பேருந்துகளை ஈடுபடுத்துவதன் மூலம் 45,000 முதல் 55,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

    இந்தத் திட்டத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன:

    பிரிவு ஏ-நகரப் பேருந்து சேவைகளை அதிகரித்தல்: (169 நகரங்கள்)

    அங்கீகரிக்கப்பட்ட பேருந்து திட்டம் பொது மற்றும் தனியார் கூட்டாண்மை மாதிரியில் 10,000 மின்சார பேருந்துகளுடன் நகரப் பேருந்து நடவடிக்கைகளை அதிகரிக்கும்.

    தொடர்புடைய உள்கட்டமைப்பு பேருந்து பணிமனை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஆதரவை வழங்கும்; மற்றும் மின்சாரப் பேருந்துகளுக்கான மின்கட்டமைப்பை (துணை மின் நிலையம் போன்றவை) உருவாக்கும்.

    பிரிவு பி-பசுமை நகர்ப்புற இயக்கம் முன்முயற்சிகள்: (181 நகரங்கள்)

    பேருந்துக்கான முன்னுரிமை, உள்கட்டமைப்பு, பன்முனை வசதிகள், மின்னேற்றி நிலையங்கள் உள்கட்டமைப்பு போன்ற பசுமை முன்முயற்சிகளை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இந்து சமுதாய பெரியோர் கொடையை இழிவுபடுத்தி, அவதூறு: நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது!

    hindumunnani - 2026

    ஜாதி வேறுபாட்டை உருவாக்க புதிய திட்டமா? பள்ளிகளில் ஜாதிப் பெயரை நீக்கக் கோரி வழக்கு – இந்து சமுதாய பெரியோர்களின் கொடையை இழிவு படுத்தி, அவதூறு பரப்பி விளம்பரம் தேடுவதை மாண்புமிகு நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை….

    அட்வகேட் லாரன்ஸ் என்பவர் சாதியின் பெயரால் செயல்படும் கல்வி நிறுவனங்களில் உள்ள சாதி பெயரை நீக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது அவதூறு பரப்பும் உள்நோக்கம் கொண்டது.

    பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் ஆக்கிரமிப்பில் நமது நாடு இருந்த காலகட்டத்தில், மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வியை நமது மக்களும் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், அன்று வாழ்ந்த அனைத்து சமுதாயப் பெரியவர்களும் தங்களது செல்வங்களை, நிலங்களை வாரி வழங்கி கல்வி நிறுவனங்களை தொடங்கினார்கள். காரணம் ஆங்கிலேய வழிக் கல்வியை கிறித்துவ மிஷனரி நிறுவனங்கள் மதமாற்றத்திற்கு பயன்படுத்தியது மட்டுமல்ல இந்த நாட்டின் கலாச்சாரம் பண்பாட்டிற்கு எதிராக மாணவர்கள் மனதில் நஞ்சை விதைத்தார்கள் என்ற காரணம்தான்.

    இதனை மகாகவி பாரதியார் தனது சுயசரிதையில் தெளிவாக குறிப்பிடுகிறார். இத்தகைய சூழ்நிலையில் ஆரிய செட்டியார், ஆரிய வைஸ்ய, க்ஷத்திரிய வன்னியர், இந்து நாடார் பரிபாலன சங்கம், செங்குந்தர் சங்க கல்வி நிறுவனங்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகம் என இன்னும் பல சமூஇஅத்தினர் எந்தெந்தப் பகுதியில் யார் செல்வாக்காக இருந்தார்களோ அவர்கள் தங்களது பங்களிப்பாக கல்வி நிலையங்கள் நிறுவுவதற்கு வாரி கொடுத்து வள்ளல்களாக வாழ்ந்தார்கள்.

    தனி மனிதர்களும் அதுபோல இந்து சமுதாய கல்வி மேம்பாட்டிற்கு தங்களது சொத்துக்களை எந்த எதிர்பார்ப்பும் இன்றி கொடுத்த வள்ளல்களாக போற்றப்பட்டனர். உதாரணமாக ராவ் பகதூர் கலவலகண்ணன் செட்டியார், வள்ளல் செங்கல்வரிய நாயக்கர், வள்ளல் தியாகராஜ செட்டியார், வள்ளல் பச்சையப்ப முதலியார், அவினாசிலிங்கம், பொள்ளாச்சி மகாலிங்கம் என நூற்றுக்கணக்கானவர்களை பட்டியலிட முடியும்.

    உதாரணமாக வள்ளல் பச்சையப்ப முதலியார் உயிலில் இந்து சமுதாய மாணவர்கள் சம்ஸ்கிருத, தமிழ் கல்வியோடு இன்றைய ஆங்கில கல்வி பயில்வதற்கும் என்று தான் கூறிப்பிட்டுள்ளார். ஆங்கிலேய கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் சர்ச்களுக்கு இந்துக்களிடமிருந்து நிலங்களை பிடுங்கி கொடுத்தபோது, இந்துக்களுக்காக கல்வி நிறுவனத்திற்கும் தர வேண்டும் என போராடி பச்சையப்ப முதலியார் பெற்றதே தற்போது பச்சையப்பன் கல்லூரி உள்ள இடம்.

    இன்றும் இயங்கி வரும் அந்தக் கல்வி நிறுவனங்கள்
    சமூகம் நடத்துவதோ, இந்து தனி நபர் நடத்தப்படுவதோ, அனைத்து கல்வி நிறுவனங்களும் மத்திய மாநில அரசுகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் நடத்தப்படுகிறது. எந்தவித பாகுபாடும், எள்ளளவும் இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும். இட ஒதுக்கீட்டு கொள்கை, எல்லோருக்கும் கல்வி, ஏழைகளுக்கு கல்வி உரிமை என அனைத்தும் பின்பற்றப்படுகின்றன.

    ஆனால் சிஎஸ்ஐ, புரோடஸ்டன், செவன்துடே அட்வென்டிஸ்ட், பாப்டிஸ்ட், டான் போஸ்கோ, சிரியன் என பலவகையான கிறித்துவ பிரிவுகள் நடத்தும் கல்வி நிறுவனங்களிலும், முஸ்லிம்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மத கல்வி திணிக்கப்படுகிறது. அவை மதங்களின் பெயராலேயே இயங்குகின்றன. இவற்றின் பெயரில் உள்ளது கிறித்துவ சாதிய பிரிவுகளில் ஒரு பகுதி. அங்கு அந்த பிரிவினர்களுக்கு முன்னுரிமை தருவதோடு மற்றவர்களின் பழக்க வழக்கங்கள் கேவலப்படுத்தி மாணவர்கள் மனதளவில் புண்படுத்தப் படுகிறார்கள்.

    மேலும் அவர்கள் பள்ளியின் கையேட்டில் இவான்சுலின் நம்பிக்கையை திணிப்பதை சேவையாக பள்ளிகளில் செய்வதாக, அதில் ஆங்கிலத்தில் குறிப்பிட்டு அதில் மாணவர் பெற்றோர் கையொப்பம் பெறப்படுகிறது.

    சாதி கல்வி நிறுவனங்கள் பற்றி அக்கறை உடன் வழக்கு போட்டவர் லாரன்ஸ் என்ற கிறித்துவர். குறிப்பாக திருநெல்வேலி நாங்குநேரியில் சில மாணவர்களுக்கும் ஏற்பட்ட சச்சரவை சாதிய வன்முறை என திசைதிருப்பி பேசப்படும் நிகழ்வும் ஒரு கிறித்துவ பள்ளியில் தான் நடைபெற்றது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

    அப்படி வழக்கை நீதிமன்றம் எடுத்து விசாரிக்குமானால் அதன் பார்வையை விசாலமாக்கி கிறித்துவ மிஷனரிகள் குறிப்பாக மதுரை இறையியல் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரியில் இந்து சாதிய காழ்ப்புணர்ச்சியை தூண்டுகின்ற செயல்பாடு குறித்தும் மரியாதைக்குரிய நீதிபதி விசாரணை செய்ய வேண்டும் என்பது நமது தாழ்மையான கோரிக்கை.

    எனவே இந்து கல்வி நிறுவனங்கள் மீது அவதூறு பரப்புவும், தற்போது சாதிய எதிர்ப்பு உணர்வை நசுக்குவதாக விளம்பரம் தேடவும் இதுபோன்ற வழக்கை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் எனவும் கல்விக்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி கொடை வழங்கிய பெரியோர்களின் பெயரில் அவதூறு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

    பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்: தொழில் தொடங்க ரூ.1 லட்சம் கடனுதவி!

    pm modi in 17th coperative meet - 2026

    பிரதமரின் விஸ்வகர்மா என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் வாயிலாக அதிகபட்சமாக 5 சதவீத வட்டியுடன் ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி பெறலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவின் பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலார்களை ஆதரிக்கும் திட்டமாகும். இத்திட்டத்திற்கு ரூ. 13,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; முதலில் 18 பாரம்பரிய தொழில்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2023-24 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் புதிய திட்டமான “பிரதமரின் விஸ்வகர்மா” திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்கள் தங்கள் கைகள் மற்றும் கருவிகளுடன் பணிபுரியும் பாரம்பரிய திறன்களின் குரு-சிஷ்ய பரம்பரை அல்லது குடும்ப அடிப்படையிலான பயிற்சியை வலுப்படுத்துவதும், வளர்ப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும், விஸ்வகர்மாக்கள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய மதிப்புத் தொடர்களுடன் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்வதும் இந்தத் திட்டத்தின் இதர நோக்கங்களாகும்.

    பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை, ரூ.1 லட்சம் (முதல் தவணை) வரை வட்டியில்லாக் கடன் உதவி மற்றும் ரூ.2 லட்சம் (இரண்டாம் தவணை) 5% சலுகை வட்டி விகிதத்துடன் கடன் வழங்கப்படும். மேலும் இத்திட்டம் திறன் மேம்பாடு, கருவிகளுக்கு ஊக்கத்தொகை, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவையும் வழங்கும்.

    இந்த திட்டம் இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு ஆதரவை வழங்கும். முதலில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பின்வரும் பதினெட்டு பாரம்பரிய தொழில்கள் முதலில் இடம்பெறும்.

    (i) தச்சர் (சுதார்); (ii) படகு தயாரிப்பாளர்; (iii) கவசம் தயாரிப்பவர்; (iv) கொல்லர் (லோஹர்); (v) சுத்தியல் மற்றும் கருவிகள் தயாரிப்பவர்; (vi) பூட்டு தயாரிப்பவர்; (vii) பொற்கொல்லர் (சோனார்); (viii) குயவர் (கும்ஹார்); (9) சிற்பி (மூர்த்திகர், கல் தச்சர்), கல் உடைப்பவர்; (x) காலணி தைப்பவர் (சார்மர்)/ காலணி தொழிலாளி/ காலணிக் கைவினைஞர்; (xi) கொத்தனார் (ராஜமிஸ்திரி); (xii) கூடை / பாய் / துடைப்பம் தயாரிப்பவர் / கயிறு நெசவாளர்; (xiii) பொம்மை தயாரிப்பவர் (பாரம்பரியம்); (xiv) முடி திருத்தும் தொழிலாளர் (நயி); (xv) பூமாலை தொடுப்பவர் (பூக்காரர்); (xvi) சலவைத் தொழிலாளி (டோபி); (xvii) தையல்காரர் (டார்ஸி); மற்றும் (xviii) மீன்பிடி வலை தயாரிப்பவர்.

    வெற்றிகரமாகப் பிரிந்த லேண்டர்; நிலவை நெருங்கும் சந்திரயான்-3

    chandrayaan 3 lander - 2026
    #image_title

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவுக்கு ஆய்வு செய்ய அனுப்பிய சந்திரயான் 3ன் லேண்டர் இன்று வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டது. இது இந்தத் திட்டத்தின் முக்கியமான மைல்கல்.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்விஎம்3 எம்4 ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ஆம் தேதி நிலவின் தென் துருவ ஆய்வுப்பணிக்காக இஸ்ரோ வெற்றிகரமாக ஏவியது. இந்த விண்கலம் புவி சுற்று வட்டப்பாதையை கடந்து, நிலவு சுற்று வட்டப்பாதையின் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.

    படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டு, கடந்த 1-ம் தேதி நிலவு வட்ட சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஆக.5-ம் தேதி நிலவு சுற்றுவட்டப்பாதையில் இயங்கத் தொடங்கி, படிப்படியாக, சுற்றுவட்டப்பாதையின் உயரம் குறைக்கப்பட்டு, நிலவை நோக்கி நெருங்கியது. தற்போது குறைந்தபட்சம் 153 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சம் 163 கி.மீ. என்ற அளவிலும் அது நிலவைச் சுற்றி வருகிறது.

    தற்போது ‘சந்திரயான்-3’ 100 கிமீ., தொலைவிலான நிலவு அடுக்குக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி ஆக.23-ம் தேதி மாலை 5.47க்கு நிலவின் தென் துருவத்தில் ‘சந்திரயான்-3’ விண்கலம் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் ஒரு பகுதியாக, சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்துவிசை தொகுதியில் இருந்து தரையிறங்கும் லேண்டரை (புராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் மாட்யூல்) தனியாகப் பிரிக்கும் நடவடிக்கையில் விஞ்ஞானிகள் இன்று ஈடுபட்டனர். அதன்படி, நிலவை நெருங்கிய நிலையில் ‘சந்திரயான்-3’ விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இனி இவை இரண்டும் தனித்தனி பயணங்களைத் தொடங்கும்.

    விக்ரம் லேண்டர் தொடர்ந்து படிப்படியாக நிலவின் தரைப் பரப்பை நெருக்க உள்ளது. லேண்டர் பாதை குறைப்பு பணிகள் நாளை மாலை 4 மணியளவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்பிறகு லேண்டர் நிலவில் எங்கு தரையிறங்குவது என்று முடிவு செய்யப்படும். இதற்காக நிலவில் தரை இறங்குவதற்கான இடங்களை புகைப்படம் எடுத்து உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் மலையாள புத்தாண்டு கொண்டாட்டம்!

    sabarimala new year eve - 2026
    #image_title

    உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் ஆவணி மாதம் மலையாள புத்தாண்டு பூஜை வழிபாட்டிற்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டு இன்று முதல் பூஜை வழிபாடுகள் சபரிமலை ஐயப்பனுக்கு துவங்கியது புதிதாக பொறுப்பேற்ற தாந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு சபரிமலை ஐயப்பனுக்கு பூஜை வழிபாடுகளை துவக்கி வைத்தார்.

    கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று ஆக 16-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு பதவிக்காலம் முடிந்ததால் புதிய தந்தரியாக கண்டரரு மகேஷ் மோகனரு நேற்று சபரிமலைக்கு வருகை தந்து ஐயப்பன் சன்னிதானம் முன்பு தந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார் அவருக்கு திருவாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் சபரிமலை பூசாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    இன்று அதிகாலை தந்துரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோவில் நடையை திறந்தார்.

    இன்று முதல் வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) வரை தினமும் கணபதி ஜோமம், உஷ பூஜை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். அது மட்டுமின்றி படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.

    மேலும் இந்த 5 நாட்களும் நெய் அபிஷேகமும் நடைபெறும். கோவில் நடை திறந்திருக்கும் 5 நாட்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி ஆன்லைன் முன்பதிவு மையங்களும் நிறுவப்படுகின்றன.

    இன்று ஆவணி மாதம் முதல் நாள் மலையாள வருடத்தின் சிம்மம் முதல் நாளாகும். இதனால் இன்றைய தினம் சபரிமலையில் லட்சார்ச்சனை நடைபெறுகிறது . மலையாள புத்தாண்டில் ஐயனை தரிசிக்க சபரிமலையில் மலையாளிகள் கூட்டம் மிக அதிக அளவில் இருந்தது அதிகாலை கோவில் நடை திறந்ததும் இவர்கள் 18 படி ஏறி பகவானுக்கு இருமுடி செலுத்தி மைய அபிஷேகம் செய்தனர் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை குறைந்து விட்டதால் பம்பை நதியில் மிகக் குறைவான அளவில் தண்ணீர் வந்தது.

    ஆவணி மாதாந்திர பூஜை முடிவடைந்து வருகிற 21-ந்தேி இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் திறக்கப்படுகிறது

    தென்னகத்தின் செங்கோட்டையில் சுதந்திர தின விழா!

    sengottai independance day - 2026
    #image_title

    செங்கோட்டையில் 77வது சுதந்திர தின விழாவில் நீதிபதி சுனில்ராஜா தேசியக்கொடி ஏற்றினார்.

    செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வைத்து மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நீதிபதி எம்.சுனில்ராஜா தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவியா்கள், வழக்கறிஞா்கள், நீதிமன்ற பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி சுதந்திர தின உரையாற்றினார்.

    விழாவில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, வழக்கறிஞர் சங்க இணை செயலாளர் கார்த்திகைராஜன், மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.இராமலிங்கம், வீரபாண்டியன், வழக்கறிஞர் ஆ.சிவசுந்தரவேலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    விழாவில் மூத்த வழக்கறிஞர்கள் பழனிக்குமார், நல்லையா, இசக்கி இந்திரா, பால்ராஜ், நித்யானந்தம், கலிலா, அபுஅன்னாவி, நீதிமன்ற பணியாளர்கள், அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக பணியாளர் ஜெயராமசுப்பிரமணியன் நன்றி கூறினர்.

    செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் வைத்து நடந்த சுதந்திர தினவிழாவிற்கு நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமைதாங்கினார். பொறியாளா் முகைதீன்அபுபக்கர், மேலாளா் ரத்தினம், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலைவகித்தனா். கணக்கர் கண்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். பின்னார் நகர்மன்ற தலைவா் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினா்கள் பேபி ரெசவு பாத்திமா, முருகையா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள் ஞானராஜ், செந்தில்ஆறுமுகம் குத்தாலிங்கம் சுகாதார மேற்பார்வையாளா்கள், நகராட்சி பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    செங்கோட்டை காவல் நிலைய வளாகத்தில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலா் டாக்டர் ராஜேஷ்கண்ணன் தேசியக்கொடியை ஏற்றினார். வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மண்டல துணை தாசில்தார் குமார் தேசியக்கொடியை ஏற்றினார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலக வளாகத்தில் சிறப்பு நிலைய அலுவலர்கள் செல்வம், மாரியப்பன் ஆகியோர் தலைமையில் மீட்பு பணி வீரர்கள் தேசியக்கொடியை ஏற்றினா்.

    அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தலைமைஆசிரியா் சுந்திரக்குமார் தேசியக்கொடியை ஏற்றினார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமைஆசிரியா் தமிழ்வாணி தேசியக்கொடியை ஏற்றினார்.

    செங்கோட்டை சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் நகர்மன்ற உறுப்பினா் சுடர்ஒளிராமதாஸ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவியா்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் அன்னை தெரசா மேல்நிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் செங்கோட்டை ரோட்டரி கிளப் தலைவா் பால்ராஜ் தலைமைதாங்கினார். செயலாளா் சீதாராமன் உறுப்பினா் தேன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பள்ளி தாளாளா் விசுவாச ஆரோக்கியராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    அதனை தொடா்ந்து ரோட்டரி கிளப் தலைவா் பால்ராஜ் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மாணவ, மாணவியா்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னா் மாணவ, மாணவியா்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அதில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

    செங்கோட்டை ரோட்டரி கிளப் கேலக்ஸி மற்றும் செங்கோட்டை ஆவாரம்பாளையம் சர்வோதய சங்க காதிபவன் சார்பில் சுதந்திர தின கொடியேற்று விழா நடந்தது. செங்கோட்டை ரோட்டரி கிளப் ஆப் கேலக்ஸி தலைவா் சுந்தர் தலைமை தாங்கினார். ஜனநாயக மக்கள் உரிமை கழக மண்டலச்செயலாளா் முருகையா புருஷோத்தம ராஜா, ரோட்டரி கிளப் ஆப் கேலக்ஸி செயலாளா் வழக்கறிஞா் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

    சர்வோதய சங்க கிளை மேலாளா் மாரியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னாள் கேப்டன் முத்துக்கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து கொடி வணக்கம் செய்தார். சமூக ஆர்வலா்கள் சக்திவேல், குற்றாலிங்கம், பொன்னுத்துரை, இசக்கிமுத்து, ஆகியோர் சிறப்புரையாற்றினா். நிகழ்ச்சியில் அருணாசலம், வேல்ச்சாமி, இசக்கிபாண்டியன், சண்முகநாதன், மாரியப்பன், வெங்கடாசலமூர்த்தி, செந்தில்குமார், ராமசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    பின்னா் செங்கோட்டை மேலபஜார் வாகைமரத்திடலில் அமைந்துள்ள மகாத்மா காந்தி முழுஉருவ சிலை, பேரூந்துநிலையம் அருகில் உள்ள வீரவாஞ்நாதன் முழுஉருவ சிலை, நகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மாகாந்தி திருவுருவ சிலை, முத்துசாமி பூங்காவில் உள்ள மகாத்மாகாந்தி திருவுரு சிலை, வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் உள்ள வாஞ்சிநாதன் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    செங்கோட்டை நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் மேலபஜார் வாகைமரத்திடலில் உள்ள மகாத்மா காந்தி சிலைமுன்பு வைத்து சுதந்திர தினவிழா மற்று கட்சி கொடியேற்றும் விழா நடந்தது. விழாவிற்கு நகர காங்கிரஸ் கட்சி தலைவா் ராமர் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினா் எம்எஸ்.முத்துசாமி, முன்னிலைவகித்தார் நகர இலக்கிய அணி தலைவா் ராஜீவ்காந்தி அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து நிகழச்சிக்கு சிறப்பு விருந்தினராக தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பழனிநாடார் கலந்து கொண்டு மகாத்மாகாந்தியின் முழுஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    பின்னர் கட்சி கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பு செயலாளா் ஜோதிலிங்கம்.மாவட்ட செயற்குழு உறுப்பினா் செண்பகம் நகரத்துணைத்தலைவா் முருகையா, நகர ஐஎன்டியுசி தலைவா் செல்வகணபதி, நகர பொதுச்செயலாளா்கள் சுடலைமுத்து, இசக்கியப்பன், நகர பொருளாளா் சங்கரலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த இராணுவ வீரர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியின் போது தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் சந்திரசேகர் உடல் அரசு மரியாதை செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்து கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் மாலை அணிவித்து மெளன அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் முன்னாள் மாவட்ட கல்வி அதிகாரி நல்லாசிரியர் முனைவர். சுடலை, முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ஆதிமூலம், முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஜவஹர்லால் நேரு, நன்நூலகர் ராமசாமி, ஆசிரியர் சுதாகர், அரசமரம் மன்சூர், பழனிச்சாமி, வழக்கறிஞர் அபுஅண்ணாவி, காதர் மைதீன், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக மூத்த தொழில்நுட்ப பணியாளர் முத்தரசு, சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி மெளன அஞ்சலி செலுத்தினர்.

    வாட்ஸ்அப் அப்டேட்: ஏஐ ஸ்டிக்கரை உருவாக்கிப் பகிரும் புதிய அம்சம்!

    whatsapp ai - 2026
    #image_title

    வாட்ஸ்அப் பயனர்கள் ஏஐ துணையுடன் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஸ்டிக்கரை ஜெனரேட் செய்து, அதை பகிரும் புதிய அம்சத்தை மெட்டா கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தற்போது வாட்ஸ்அப் ‘பீட்டா’ வெர்சன் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம்.

    பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம்.

    அந்த வகையில் ஏஐ மூலம் ஸ்டிக்கர் ஜெனரேட் செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த அம்சத்தை கொண்டுள்ள வாட்ஸ்அப் வெர்ஷனை பீட்டா டெஸ்டர்கள் தங்கள் போன்களில் நிறுவி, சோதனை செய்து பார்த்துள்ளனர்.

    பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் கீபோர்டில் ஸ்டிக்கர் டேபில் ‘கிரியேட்’ எனும் டேபை கிளிக் செய்து, தங்களுக்கு என்ன மாதிரியான ஸ்டிக்கர் வேண்டுமென விவரித்து, அதை உருவாக்க முடியுமாம். முற்றிலும் பாதுகாப்பான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த ஏஐ ஸ்டிக்கர் உருவாக்கப்படுகிறதாம்.

    இது பயனர்களின் உரையாடலை மேலும் சுவாரஸ்யமான வகையில் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனித்துவ மற்றும் உரையாடலுக்கு ஏற்ப இந்த ஏஐ ஸ்டிக்கர்களை உருவாக்கலாம். இதன் வாட்ஸ்அப் சார்ந்த மேம்பாடுகளை கண்காணித்து வரும் WABetaInfo தெரிவித்துள்ளது.