இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய அகழாய்வுத்துறை கடந்த மாதம் 24-ம் தேதி அகழாய்வு பணியைத் தொடங்கியதும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்து, மசூதி கமிட்டியை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறியது. மசூதி கமிட்டி மனு மீது கடந்த மாதம் இரண்டு நாட்கள் விசாரணை நடைபெற்று தீர்ப்பு இன்று வழங்கப்படுவதாக ஒத்தி வைத்தது நீதிமன்றம்.
அதன்படி இன்று காலை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. இதன்மூலம் ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு பெண்கள் சிலர், ஞானவாபி மசூதிக்குள் உள்ள இந்து தெய்வங்களை வழிபட அனைத்து நாட்களும் அனுமதிக்க வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், வாராணசியில் காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதி, விஸ்வநாதர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், அந்தப் பகுதியில் ஆய்வு செய்வதற்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி தொல்லியல் துறை ஆய்வை தொடங்கியது. இதை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றம் அகழாய்வுக்கு தடைவிதித்ததுடன், இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறியது. அதன்படி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை கடந்த மாதம் 26, 27-ம் தேதிகளில் நடைபெற்றது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் ஆக.3 இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தமிழகத்தில், காவிரி ஆறு உள்ளிட்ட ஆறுகள் பாயும் கரையோரங்களிலும், புனித நீர்நிலைகளிலும், ஆடிப் பெருக்கு விழா வெகு உத்ஸாகமாக நடைபெற்று வருகிறது.
இன்று ஆடி மாதம் 18ம் நாள். இன்றைய தினம் ஆடிப் பெருக்கு என்று நீர் நிலைகளில் விழாவாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழர்களின் முக்கிய திருவிழாக்களில் ஆடி18ம் பெருக்கு விழாவும் ஒன்று. பொங்கி வரும் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், அனைவரது வாழ்விலும் காவிரி போல் மகிழ்ச்சியும் வளமும் பொங்கி வழிய வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டு, காவிரிக்கு படையிலிட்டு வழிபாடு செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் தமிழரின் தனிச் சிறப்பு மிக்க வழிபாடு!
இந்தாண்டு காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆடிபெருக்கு விழா களைகட்டியது. முக்கியமாக, திருச்சி திருவரங்கம் காவிரிக் கரை அம்மா மண்டபம் பகுதியில் பெண்கள் பலர் சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு புஷ்ப மண்டபத் துறை காவிரி ஆற்றில் புதுமணத் தம்பதிகள், மற்றும் திருமணமான பெண்கள், கன்னிப்பெண்கள் அனைவரும் வழிபாடு செய்யப்பட்ட மஞ்சள் கயிற்றை ஒருவருக்கொருவர் கழுத்தில் அணிவித்து வழிபாடு மேற்கொண்டனர். புதுமண தம்பதிகள் காவிரியில் புனித நீராடி புத்தாடை அணிந்து காவிரி ஆற்றில் மலர்களை தூவி வழிபட்டனர்.
கும்பகோணம் பக்வத் படித்துறை, பாலக்கரை, திருக்காட்டுப்பள்ளி காவிரி கரையோரங்களிலும், மயிலாடுதுறை துலாக்கட்டம் என, கல்லணை முதல் பூம்புகார் வரையிலான காவிரிப் பாசன மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் ஏராளமான பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை உத்ஸாகமாகக் கொண்டாடினர்.
ஈரோடு மாவட்டம் பவானி நகரில் உள்ள கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் பகுதியில் வழக்கம் போல் ஏராளமான பக்தர்கள் ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு குவிந்தார்கள். இங்கே, வேதநாயகி சமேத சங்கமேஸ்வரர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாளை வழிபட்டு, கோவிலுக்கு பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சந்நிதி படித்துறையில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குத் தென்படாத அமுது நதி என மூன்று நதிகள் சங்கமிக்கும் பகுதியில் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, இன்று பவானி கூடுதுறைக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தார்கள். திருமணமான புதுமண தம்பதிகள் ஏராளமானோர் கூடுதுறைக்கு அதிகாலை முதலே வந்து மூன்று நதிகள் சங்கமிக்கும் பகுதியில் புனித நீராடி தங்கள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு வழிபட்டனர். பலர் புது தாலி மாற்றிக் கொண்டனர்.
பலர் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பவானிக்கு வந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் முதலியவை செய்து, பரிகார பூஜைகள் மேற்கொண்டு முன்னோர் வழிபாட்டை நடத்தினர்.
கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே புதுமண தம்பதிகள் பலர் வந்து புனித நீராடி வருகிறார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் வந்து மகுடேஸ்வரரை வழிபட்டனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் வந்து புனித நீராடி வருகிறார்கள். ஆடிப் பெருக்கை முன்னிட்டு, ஈரோட்டில் பல பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் படையலிட்டு தங்கள் முன்னோர்களை வழிபட்டனர்.
“The Dogra dynasty was a significant force in the history of Jammu and Kashmir. They made important contributions to the development of the state.“
By Narasimhan Vijayaraghavan
As Senior Advicate Kapil Sibal began arguing on behalf of the petitioner Abdul Lone on 2nd Aug,2023, at 11.00 am, the solemnity and significance of the occasion in Indian history and constitutional march, was not lost on the constitution bench and the huge assembly of lawyers in the first court. It was a goose bump, spine tingling occasion, doubtless. And on those of us on the Virtual stage too.
Mindful of the occasion, the submissions of Sibal were slow, measured and drawn. Not hurried and emphatic as is his usual wont. He pointedly said “ I don’t want fireworks on this solemn occasion’ and clarified that his endeavour would be to keep ‘politics’ out of his submissions. Sibal did not fail to identify the historic moment and unique status of the litigation. We can get to the submissions as we move on. For now, we get back to the Dogra dynasty.
We cannot just allude to Dogra dynasty by name and let it pass. We need to know what they did and what sort of rulers they were. When they were in charge, Jammu & Kashmir-Ladakh included Pakistan Occupied Kashmir and even parts of present Himachal Pradesh, as nestled between Ravi and Sindhu rivers. It was a far bigger area the Dogras were administering. Just as an aside Jammu, Ladakh and Himachal Pradesh, never strayed from their focus and vision to be always part of India, even when Britishers were playing their divide and rule policy with an eye on Muslim dominated regions. We will get there, when it is time to go there.
The Dogra dynasty ruled Jammu and Kashmir from 1846 to 1947. They were a Hindu Rajput dynasty who traced their ancestry to the Ikshvaku (Solar) Dynasty of Northern India. The first Dogra ruler of Jammu and Kashmir was Maharaja Gulab Singh, who was granted the region by the British East India Company in the Treaty of Amritsar after the First Anglo-Sikh War.
Gulab Singh was a capable ruler who made significant contributions to the development of Jammu and Kashmir. He built roads, canals, and irrigation systems, and he also promoted education and trade. He also expanded the boundaries of the state, incorporating Ladakh, Baltistan, and Gilgit into his domain.
Gulab Singh’s successors continued to rule Jammu and Kashmir until 1947. During this time, the state experienced a period of relative peace and prosperity. However, the Dogra rulers were also criticized for their authoritarian rule and their suppression of dissent.
In 1947, when India and Pakistan gained independence from British rule, the Dogra rulers of Jammu and Kashmir were faced with a difficult choice. They could either accede to India or Pakistan, or they could declare independence. The Maharaja of Jammu and Kashmir, Hari Singh, initially chose to remain independent, but he eventually acceded to India after Pakistani forces invaded the state. And that is a story we shall not miss as ‘Sardar Patel literally bulldozed the slowness and unexpected apathy of Nehru to send forces at once to rescue Kashmir from the rampaging marauders, which saved 2/3rds of Kashmir going the 1/3rd POK route’, recalled Field Marshal Sam Manekshaw. It can wait as the hearings have just begun.
The accession of Jammu and Kashmir to India, led to the Kashmir conflict, which continues to this day. The Dogra dynasty is no longer in power, but their legacy remains a source of contention in the region.Some of the key achievements of the Dogra dynasty in Jammu and Kashmir:
A. They built roads, canals, and irrigation systems, which helped to improve the economy and living standards of the people.
B. They promoted education and trade, which helped to modernize the state.
C. They expanded the boundaries of the state, which made it a more powerful and influential entity.
They were however accused of being corrupt and of favoring their own ethnic group, the Rajputs. They were also criticized for their treatment of the Muslim minority in the state.The Dogra dynasty came to an end on 26th Oct, 1947 when the Maharaja of Jammu and Kashmir acceded to India.
The Dogra dynasty was a significant force in the history of Jammu and Kashmir. They made important contributions to the development of the state. Their contested legacy continues to be debated today. And not excluding, before the constitution bench hearings, you see.
( Author of Constitution & its Making/Working,OakBridge, is practicing advocate in the Madras High Court)
“a moving and insightful exploration of the themes of love, loss, and self-discovery.” – Shashi Tharoor
The Bachelor of Arts is a novel by R.K. Narayan, first published in 1937. It is the second book in a trilogy that begins with Swami and Friends and ends with The English Teacher. The novel is set in Malgudi, the fictional town that Narayan invented for his novels. It was well-received by critics when it was first published. The reviewer for The Times Literary Supplement called it “a charming and interesting novel” and “a very promising first work.” The reviewer for The New York Times Book Review said that the novel was “a quiet, sensitive study of a young man’s growth to maturity” and that it was “a work of considerable literary merit.”
The story follows the coming-of-age of Chandran, a young upper-middle-class college graduate into adulthood. Chandran falls in love with Malathi, who he desires to marry. Her parents disapprove of their connection because, according to Chandran’s horoscope, Malathi’s marriage to a non-Manglik will cause her to die young. This superstition has become recognized as the Mangala Dosha.
The rejection crushes Chandran, and he starts to doubt his own value. He drifts through life, unsure of what he wants to do with his future. He takes a job as a clerk, but he is unhappy and unfulfilled. He eventually decides to leave Malgudi and travel to the city, hoping to find a new start. In the city, Chandran meets a group of young people who are struggling to find their place in the world. He falls in with them, and they spend their days talking about philosophy, politics, and art. Chandran begins to feel a sense of purpose again, and he starts to write a novel.
However, Chandran’s newfound happiness is short-lived. His friends begin to drift away, and he finds himself alone again. He returns to Malgudi, where he reconciles with Malathi’s parents. They agree to let him marry Malathi, and the novel ends with Chandran and Malathi starting their new life together.
The Bachelor of Arts is a coming-of-age story that explores the themes of love, loss, and self-discovery. It is a beautifully written novel that captures the essence of life in India in the early 20th century.
The novel is notable for its realistic portrayal of Indian society and its characters. Narayan does not shy away from the challenges that young people face in India, such as the pressure to conform to traditional expectations. However, he also shows how young people can find their own way in the world, even if it means breaking with tradition.
The Bachelor of Arts is a masterpiece of R K Narayan. Through the vehicle of this present novel, he has put autobiographical elements and delineated his personal happenings through the character of Chandran. The novel is a perfect embodiment of simplicity and values and effectively deals with realistic issues.
The theme of tradition versus modernity is a central theme in the novel. Chandran hails from Tamil Nadu and has lived a life as per the traditions and conventions of his place and time. However, his education has kindled a desire within him to break the chains of conservatism and look for an escape into the freedom of the world.
The theme of love and heartbreak is another important theme in the novel. Despite Chandran’s hopeless love for Malathi, their crossed stars prevent them from getting married. The situation becomes apparent to his parents, and they try to surrender to his wishes. Dazed by such heartache, Chandran decides to give up control and throw caution to the wind.
The theme of identity and self-discovery is also explored in the novel. Chandran’s journey to Madras and his decision to commit to a life of asceticism and become a sage show his desire to find his true self and purpose in life.
In conclusion, The Bachelor of Arts is a novel that incorporates autobiographical elements, humor, mythology, and local elements, to sum up.
மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், கேலி வதை ஒழிப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் கேலி வதை ஒழிப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கு பெற்றனர். அகத்திர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு வரவேற்புரை ஆற்றினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கேலி வதை ஒழிப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். கூட்டத்தில், எம். எஸ். செல்லமுத்து அறக்கட்டளையின் இயக்குனர் ஜனார்த்தனன் பாபு மாணவர்களிடையே கேலி வதையின் விளைவுகளையும் மற்றும் போதை பொருள் பயன்பாட்டால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை பற்றி சிறப்புரை ஆற்றினார்.
எஸ் செல்லமுத்து அறக்கட்டளையின் திரிசூல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜாங்கம், போதை பொருள் பயன்பாட்டால் ஏற்படக்கூடிய தீமைகளை பற்றி விளக்கி கூறினார். கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த, கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் கார்த்திகேயன், முதன்மையர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஜெய்சங்கர், மூத்த பேராசிரியர் முனைவர் காளியப்பன், சோழவந்தான் காவல் ஆய்வாளர் பால்ராஜ், குருகுல ஒருங்கிணைப்பாளர் முனைவர் சந்திரசேகரன், முதுநிலை மாணவர் ஒருங்கிணைப்பாளர் முனைவர் எல்லைராஜா, மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருங்கிணைப்பாளர் ரகு, முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் தர்மானந்தம், தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், கணிதத் துறை பேராசிரியர் முனைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போதை பொருள் ஒழிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்லப்பாண்டியன் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்வை, இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருங்கிணைப்பாளர் முனைவர் காமாட்சி தொகுத்து வழங்கினார்
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வரவனை கிராமம். வ. வேப்பங்குடியில் இன்று பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நரேந்திரன் கந்தசாமியின் அறிவுறுத்தலின் படியும், மு கந்தசாமி வரவணை ஊராட்சி மன்ற தலைவரின் ஆலோசனைபடியும் செம்பருத்தி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக சுயதொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக திருச்சியில் இருந்து நிர்மலாதேவி சுயதொழில் அனைத்து விதமான சிறப்பு பயிற்சி வழங்குபவரை வரவழைத்து இன்று வேப்பங்குடியில் பூண்டு ஊறுகாய், வாழைத்தண்டு ஊறுகாய் , காளான் ஊறுகாய், பெரு நெல்லி ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பெரண்டை ஊறுகாய், எலுமிச்சம் பழம் ஊறுகாய், தக்காளி ஊறுகாய் என அனைத்து விதமான ஊறுகாய் சொல்லிக் கொடுக்கப்பட்டது. இதில், செம்பருத்தி குழுவினர் மற்றும் அல்லாது ஆண்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
பெண்கள் தொழில் முனைவோர்களாக முன்னேறுவதற்கு சிறு தொழில் பயிற்சி, பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்குவதன் மூலமாக எதிர்கால சமூகத்தை வளமான வகையில் கட்டமைக்க பொருளாதாரத்தில் முன்னேற வழி வகுக்கும். இதனால் தண்ணீரைவு பெற்ற குடும்பங்கள் உருவாகி, நிலையான வருமானம் மற்றும் நீடித்த வளர்ச்சியடைந்து சமூகத்தில் மறுமலர்ச்சி உருவாகும்.
இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் இன்னும் பல விதமான பயிற்சிகளை அளிக்கிறது. பயிற்சில் கலந்து கொண்ட செம்பருத்தி குழுவினர் கீதா, மலர்விழி, பரமேஸ்வரி, ஜெயப்பிரியா, முனியம்மாள் ,பருவதம், மேகலா , முத்தமிழ் செல்வி . இவர்களுக்கு பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நரேந்திரன் கந்தசாமி வாழ்த்துக்களை தெரிவித்தார். பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்திற்கு செம்பருத்தி குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தனர்.
கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.
புன்னம் சத்திரம் அருகே செயல்படும் கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவினை கல்லூரி தலைவர் ராஜேஸ்வரி கதிர்வேல் தொடங்கி வைத்தார். கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் பிரீத்தி கவுதமன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் மு மனோ சாமுவேல் தலைமை வகித்தார்.
இவ்விழாவிற்கு கௌசல்யா அருண்குமார் (சான்றிதழ் பெற்ற தாய்பால் ஆலோசகர் மற்றும் ஆதினி தாய்ப்பால் தான நிறுவனர்) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்தும், நன்மைகள் குறித்தும் மாணவிகளிடையே கலந்துரையாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வில் 300- க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள் பகுதி 18 – விருதுகள் (தொடர்ச்சி)
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
தங்க மட்டையாளர் விருது, ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன் எடுத்த விளையாட்டு வீரருக்குத் தரப்படும் விருதாகும். இது 1975ஆம் ஆண்டிலிருந்து தரப்படுகிறது. இந்திய அணிவீரர்கள் இந்த விருதை நான்கு முறை வாங்கியிருக்கிறார்கள்.
‘தங்கப் பந்து விருது’ உலகக் கோப்பை போட்டிகளில் அதிக விக்கட் எடுத்த பந்துவீச்சாளருக்குத் தரப்படுகிறது. சில சமயங்களில் சமமாக அதிக விக்கட் எடுத்த இரண்டு வீரர்களுக்கு விருது அளிக்கப்பட்டிருக்கிறது. 1975 – ஆஸ்திரேலியாவின் கேரி கில்மோர் மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளின் பெர்னார்ட் ஜூலியன் – தலா 11 விக்கட்டுகள். 1979 – இங்கிலாந்தைச் சேர்ந்த மைக் ஹென்றிக்ஸ் – 10 விக்கட்டுகள் 1983 – ரோஜர் பின்னி – 18 விக்கட்டுகள். 1987 – ஆஸ்திரேலியாவின் கிரெய்க் மெக்டெர்மாட் – 18 விக்கட்டுகள். 1992 – பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் – 18 விக்கட்டுகள். 1996 – அனில் கும்ப்ளே – 15 விக்கட்டுகள். 1999 – நியூசிலாந்தின் ஜெஃப் அல்லாட் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் – தலா 20 விக்கட்டுகள். 2003 – இலங்கையின் சமிந்தா வாஸ் – 23 விக்கட்டுகள். 2007 – ஆஸ்திரேலியாவின் கிளன் மெக்ராத் – 26 விக்கட்டுகள். 2011 – ஜாகிர் கான் மற்றும் பாகிஸ்தானின் ஷாஹித் அஃப்ரிதி – தலா 21 விக்கட்டுகள். 2015 – ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் மற்றும் நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் – தலா 22 விக்கட்டுகள். 2019 – ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் – 27 விக்கட்டுகள்.
கடந்த வாரம், தமிழகத்தில் அண்ணாமலை மேற்கொண்ட பாதயாத்திரையைத் தொடங்கி வைக்க தமிழகம் வந்தார் அமித்ஷா. அப்போது அவர் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கும் சென்று ராமநாத சுவாமியை தரிசனம் செய்தார். அவருக்கு அங்கே பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளும் தரப்புக்கு மிக நெருக்கமான இணை ஆணையரும், செயல் அலுவலருமான மாரியப்பன் நிர்வாகத்தில் இருக்கும் கோயிலில் மாலை மரியாதையுடன் அமித் ஷா, அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது, ஆளும் தரப்பை கோபப் படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று அவர் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராமகுமார், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில், இணை ஆணையரும், செயல் அலுவலருமான செ.மாரியப்பன் நிர்வாக நலன் கருதியும், துறையின் நிர்வாக நலன் கருதியும், திருவரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, ராமேஸ்வரம் திருக்கோயிலில் ஆகம விதிகளை மீறி மாரியப்பன் செயல்பட்டதாகவும் பக்தர்களை மதிக்காமல் செயல்பட்டதாகவும், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். மேலும், கடந்த ஐந்து மாதங்களாக போராட்டமும் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று அவர் ராமேஸ்வரத்தில் இருந்து ஸ்ரீரங்கத்துக்கு பணியிடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.
குறிப்பாக, அரசியல் கட்சியினர், இந்து இயக்கங்கள் தொடர்ந்து ஏழு மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த போதும் பணியிட மாற்றம் செய்யப் படாத நிலையில் கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மற்றும் அண்ணாமலைக்கு கோயில் மரியாதை செய்யப்பட்டவுடன், இடமாற்றம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரம், கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி தான் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையராக சிவராமகுமார் பொறுப்பேற்றார். அவர் தற்போது ராமேஸ்வரத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீரங்கம் இணை ஆணையருக்கு ஆளுங்கட்சி பிரமுகரால் பல்வேறு தொந்தரவுகள் கொடுக்கப்பட்டதாகவும், அவர் குறித்து துறை அமைச்சரிடம் நேரடியாகவே பணியிட மாற்றம் கேட்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையிலேயே இவ்வளவு விரைவாக அவர் ராமேஸ்வரம் கோயிலுக்கு பணி மாற்றப் பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் இன்று விவாதங்கள் எழுந்தன. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சேது அரவிந்த் என்பவர் தெரிவித்த கருத்து…
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலின் செயல் அலுவலர்/இணை ஆணையராக சமீபத்தில் பணிஉயர்வு பெற்று வந்த திரு. சிவராம்குமார் ராமேஸ்வரம் ஸ்ரீராமநாத ஸ்வாமி திருக்கோவிலுக்கு மாற்றம்….
ராமேஸ்வரத்தில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு ஏற்கனவே திருவானைக்கோவிலில் அர்ச்சகர்கள், பர்ஜாரகர்கள், பணியாளர்களை பாறாங்கல் தூக்க வைத்த, ராமேஸ்வரம் பக்தர்கள் போராடிய பெருமைகளை கொண்ட பொதுவுடமை வாதி திரு.மாரியப்பன் வருகிறார்..
(திருக்கோவிலை நாசமாக்கிடும் நால்வர் கூட்டணி வலையில் விழுந்தால் நல்ல வரும்பிடியுடன், அல்வா ஜெயராமன் போல கேள்வி கேட்பாரற்று எட்டு,பத்து ஆண்டுகள் இருக்கலாம். மனசாட்சிப்படி சுயமாக சிந்தித்து நால்வர் கூட்டணி பக்கம் சாயாமல் இருந்தால் இரண்டு மாதங்களில் மாறுதல் பெற்று செல்லலாம். #திராவிட_மாடல்
பொய்த்துப் போன ஆவினில் விடியல் பிறக்கும் என்கிற நம்பிக்கை.
– பால் முகவர்கள் சங்கம் கவலை.
தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி சா.மு.நாசர் அவர்கள் கடந்த மே மாதம் மாற்றப்பட்டு புதிய பால்வளத்துறை அமைச்சராக திரு. மனோ தங்கராஜ் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட போது, திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் சீரழிந்து போயிருந்த பால்வளத்துறையிலும், ஆவினிலும் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நிகழும், முறைகேடுகள் தடுக்கப்பட்டு, ஊழல் அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள், ஆவின் நிறுவனம் வளர்ச்சியை நோக்கி வீறுநடை போடும் என மிகுந்த நம்பிக்கை கொண்டோம்.
அது போலவே மே-11ம் தேதி திரு. மனோ தங்கராஜ் அவர்கள் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அன்றைய தினம் இரவு 7.30மணியளவில் அரசு இல்லத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து, பால்வளத்துறையிலும், ஆவினிலும் நடைபெற்று கொண்டிருக்கும் முறைகேடுகள் குறித்து எடுத்துரைத்து, சீரழிந்து, சிதிலமடைந்து, நலிவடைந்து கொண்டிருக்கும் ஆவினை உடனடியாக மீட்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன் வைத்த போது “அதற்கான தரவுகளை நாளைக்கே கொடுங்கள், தவறு செய்தவர்கள் இனிமேல் ஒருவரும் தப்பிக்க முடியாது, தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுப்பேன், இனி ஆவினில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை நீங்களே பார்ப்பீர்கள்” என அவர் அளித்த வாக்குறுதி எங்களுக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்தது.
அதனடிப்படையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆவினில் இருந்த வெண்ணெய் மற்றும் பால் பவுடரை கையிருப்பே இல்லாத வகையில் திட்டமிட்டு குறைந்த விலைக்கு ஒட்டுமொத்தமாக விற்பனை செய்து விட்டு, ஆவினிற்கான பால் கொள்முதலை அதிகரிக்காமல் மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தரம் குறைந்த வெண்ணெய் மற்றும் பால் பவுடரை அதிக விலை கொடுத்து வாங்கி அதன் மூலம் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும், ஆவினில் உள்ள ஊழல் அதிகாரிகள் சுமார் 16பேர் கொண்ட முதற்கட்ட பட்டியலையும், ஆவினையே சுரண்டிக் கொண்டிருக்கும் மொத்த விநியோகஸ்தர்கள் (WSD) குறித்தும் அடுத்தடுத்து நாட்களில் அமைச்சரை நேரில் சந்தித்து அதற்கான தரவுகளை, ஆவணங்களை ஒப்படைத்தோம்.
ஆனால் பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதற்கான தரவுகளுடன் கூடிய பட்டியலை அளித்து இரண்டு மாதங்கள் கடந்து போன நிலையில் ஊழல் அதிகாரிகள் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதோடு, 16பேர் கொண்ட முதற்கட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்த ஊழல் அதிகாரிகள் ராஜமரியாதையோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதையும், பால் கொள்முதலை அதிகரிக்காமல் தற்போதைய மார்க்கெட் விலையை விட மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து அதிக விலை கொடுத்து வெண்ணெய் மற்றும் பால் பவுடர் இதுவரை சுமார் 10ஆயிரம் டன் கொள்முதல் செய்து அதன் மூலம் தங்களின் கஜானாவை நிரப்பிக் கொள்வதிலும் அதிகாரிகள் மும்முரமாக இருப்பதையும் பால்வளத்துறை அமைச்சரான திரு. மனோ தங்கராஜ் அவர்கள் கண்டும் காணாமல் இருப்பது அதிர்ச்சியளிப்பதோடு, பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
குறிப்பாக ஆவடி சா.மு.நாசர் அவர்கள் பால்வளத்துறை அமைச்சராக இருந்த போது அவரது அலுவலகத்துக்கு துறை ரீதியான குறிப்புகளை பெற்று உதவிட என்று கூறி ஓ.டி முறையில் அனுப்பப்பட்ட கூட்டுறவு சார் பதிவாளர், தான் அமைச்சரின் நேர்முக உதவியாளர் என்று கூறிக்கொண்டு, பால் கொள்முதல் நிலையங்களில் தொடங்கி பல்வேறு நிலைகளிலும் அமைச்சரின் பெயரால் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வசூல் செய்து வசூல் மன்னனாக திகழ்ந்தவரும், நாங்கள் தற்போதைய பால்வளத்துறை அமைச்சரான திரு. மனோ தங்கராஜ் அவர்களிடம் அளித்த 16 பேர் கொண்ட முதற்கட்ட முறைகேடு அதிகாரிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்த கூட்டுறவு சார் பதிவாளரான திரு. சந்தீப் என்பவரை கடந்த மே மாதம் 14ம் தேதி வாக்கில் சென்னையில் இருந்து மதுரைக்கு அப்போதைய நிர்வாக இயக்குனரான திரு டாக்டர் சுப்பையன் ஐஏஎஸ் அவர்கள் நிர்வாக காரணங்களுக்காக எனக் கூறி பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டும் அது தொடர்பான ஆணையை வெளியிடாமல் ரகசியம் காத்து வந்த நிலையில் அவர் இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் மதுரையில் பணியில் சேராமல் காலம் கடத்தி வந்த சந்தீப் குறித்து நாங்கள் அமைச்சரிடம் அளித்த புகார் மீதோ அல்லது பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் அங்கே பணியில் சேராமல் இருந்ததற்காகவோ திரு. சந்தீப் அவர்கள் மீது எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவரை கடந்த 27.07.2023அன்று மதுரையில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு விருப்ப மாறுதல் அடிப்படையில் துணைப் பதிவாளராக (பால்வளம்) பணியிட மாற்றம் செய்து கூடுதல் பால் ஆணையரான திரு. ராஜராஜன் அவர்கள் உத்தரவிட்டிருப்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது.
ஏனெனில் சென்னையில் இருந்து மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய இடத்தில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பணியில் சேராத திரு. சந்தீப் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும், அதுமட்டுமின்றி பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஓராண்டு கழிந்த பிறகே விருப்ப மாறுதலில் பணியிட மாற்றம் செய்யப்பட முடியும் என்கிற நிலையில் இதை கவனத்தில் கொள்ளாமலும், கடந்த மே மாதம் சந்தீப் அவர்களை பணியிட மாற்றம் செய்து டாக்டர் சுப்பையன் ஐஏஎஸ் அவர்கள் பிறப்பித்த பணி மாறுதல் உத்தரவு விவரங்கள், தற்போதைய பணி மாறுதல் குறித்த உத்தரவு கடிதத்தில் பார்வையில் காட்டப்படாமல் அதை மறைத்து விருப்ப மாறுதல் கோரிய சந்தீப் அவர்களின் மனு உடனடியாக அனுப்பப்பட்டு குறுகிய காலத்தில் பணி மாறுதல் ஆணை வழங்கி துணைப்பால் ஆணையர் ராஜராஜன் அவர்களால் உத்தரவிடப்படுகிறது என்றால் அதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
மேலும் நாங்கள் கடந்த ஜூன் 11ம் தேதி பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்களிடம் அளித்த 16 பேர் கொண்ட முதற்கட்ட ஊழல் அதிகாரிகள் பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருந்த, அம்பத்தூர் ஆவின் பால் பொருட்கள் பண்ணையில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தியது, கடந்த அதிமுக ஆட்சியில் 236 பணியாளர்களை முறைகேடாக நியமனம் செய்ததில் (திருப்பூர்) தொடர்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் தொடர்புடைய திரு. ராஜசேகர் என்பவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், அவரது விருப்பத்தின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட ஒன்றியத்திற்கு பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்திருப்பது அதிர்ச்சியின் உச்சமாக இருக்கிறது. அதிலும் உதவி பொது மேலாளர் நிலையில் உள்ளவர்களை பொது மேலாளர் பணிகளில் இருந்து விடுவிக்கும் கொள்கை முடிவெடுத்து எட்டு மாவட்ட ஒன்றியங்களில் இருந்தவர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில் திரு ராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்காமல், பெரும் பொறுப்பு வழங்கியுள்ளது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் கடந்த ஜூன் 22ம் தேதி அமைச்சரை நேரில் சந்தித்து ஆவினை சுரண்டிக் கொண்டிருக்கும் மொத்த விநியோகஸ்தர்கள் குறித்த பட்டியலை அளித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவர்கள் மீதும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க மொத்த விநியோகஸ்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாகர்கோவிலுக்கு நேரில் சென்று அமைச்சரின் மகனை நேரில் சந்தித்து தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது, புதிய மொத்த விநியோகஸ்தர்கள் நியமனம் செய்யக்கூடாது, ஆவின் பால் விநியோகத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்யக் கூடாது என கூறி மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை கப்பம் கட்டுவதாக வாக்குறுதி அளித்திருப்பதாகவும், அதற்கு அமைச்சர் தரப்பில் இருந்து பச்சைக் கொடி காட்டப்பட்டதாகவும் தெரிய வரும் செய்திகள் அதிர்ச்சிக்கெல்லாம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
கடந்த மே மாதம் நடைபெற்ற பால்வளத்துறை அமைச்சர் மாற்றம் எவ்வளவு நம்பிக்கையை கொடுத்ததோ தற்போது அதை விட அதிகளவில் அவநம்பிக்கையும், ஏமாற்றமுமே கிடைத்திருப்பது வேதனைக்குரிய விசயமாகும்.
தங்களின் கடுமையான உழைப்பை கொடுத்து நாள்தோறும் பால் உற்பத்தி செய்யும் ஏழை, எளிய விவசாய பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கையான பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்க கோருதல் நிறைவேற்றாதது மற்றும் ஆவின் பாலை வாங்கிப் பருகும் நுகர்வோருக்கு வெளிமாநில வெண்ணெய், பவுடர் கலக்காத தரமான பாலை வழங்கிட முயற்சிக்காதது, அதே போன்று நுகர்வோருக்கு ஆவின் பாலினை கொண்டு போய் சேர்க்கும் பணியினை இரவு பகல் பார்க்காது கடும் வெயில், குளிர் மற்றும் மழைக் காலங்களில் கண்துஞ்சாது பாடுபடும் பால் முகவர்களுக்கு உரிய கமிசன் தொகை உயர்த்தி வழங்காதது, மொத்த விநியோகஸ்தர்கள் (WSD) எனப்படும் இடைத்தரகர்கள் மூலம் ஆவினில் வரும் தொகை விரயமாக்கப்படும் நிலைக்கு முற்றுப்புள்ளி எப்போது..? என்கிற கேள்விகளே அடிமனதில் அழுத்தமாக எழுவதோடு, ஆவினிற்கு விடியல் பிறக்கும் என்கிற நம்பிக்கையை முற்றிலுமாக இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பால்வளத்துறை மற்றும் ஆவின் விவகாரத்தில் தமிழக முதல்வர் அவர்கள் நேரடியாக தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.
மேலும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் நீண்ட காலமாக தொடர்ந்து கோரி வருவது போன்று மதுரையில் பொது மேலாளராக இருந்த டாக்டர் பாலசுப்ரமணியன் அவர்கள் அறிமுகப்படுத்திய நேரடி பால் முகவர்கள் விற்பனை முறை, கேஷ் அண்ட் கேரி சிஸ்டம் கண்டு பக்கத்து மாநிலங்கள் நடைமுறைப்படுத்திய நிலையில் மொத்த விநியோகஸ்தர்கள் என்கிற இடைத்தரகர்கள் முறை ரத்து செய்ய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனிக்கவனம் செலுத்தி பால் முகவர்களுக்கு நேரடி வர்த்தக தொடர்புகளைப் நடைமுறைப்படுத்திட மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
*பின் குறிப்பு :-* 11.06.2023 அன்று பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்களிடம் நேரில் வழங்கிய ஊழல் ஆவின் மற்றும் பால்வளத்துறை அதிகாரிகளின் முதற்கட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அந்த அதிகாரிகளின் பெயர் பட்டியலை பொதுவெளியில் வெளியிடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
— சு.ஆ.பொன்னுசாமி நிறுவனத் தலைவர், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.