Home Blog Page 338

திமுக., அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை திடீர் சோதனை ஏன்?

ponmudi - 2026
#image_title

தி.மு.க. அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த திடீர் சோதனை ஏன் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து பல்வேறு யூகங்கள் ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.

அண்மையில்தான் இரு முக்கிய வழக்குகளில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். பொன்முடி 1996-2001 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, முறைகேடாக நிலம் வாங்கியதாகக் கூறப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். கடந்த 13-5-1996 முதல் 31-3-2002 வரையிலான கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்தனர். இதிலும் போதிய ஆதாரம் இல்லாமல் விடுதலை செய்யப்பட்டார் . இந்த நிலையில் இன்று திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக உள்ளவர் பொன்முடி. அவரது மகன் பொன் கௌதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யாக உள்ளார். அமைச்சர் பொன்முடியின் வீடு சென்னை சைதாபேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ளது. இங்கு இன்று காலை 7 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு வந்தது. அக்குழு பொன்முடியின் வீட்டுக்குள் சென்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையின்போது உள்ளூர் போலீசாரை அழைத்து வராமல், தங்கள் பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்புப் படையினரை உடன் அழைத்து வந்திருந்தனர்.

இதுபோல் ஒன்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி எம்.பி. வீடு சைதாப்பேட்டையில் உள்ளது. இங்கும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டார்கள்.

விழுப்புரம் கிழக்கு சண்முகாபுரம் திருபாணாழ்வார் தெருவில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு உள்ளது. இதன் கீழ் தளத்தில் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்புப் படை வீரர்களுடன் வந்தபோது, அமைச்சர் பொன்முடி வீடு பூட்டப்பட்டிருந்தது. பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்ட எவரும் வீட்டில் இல்லை. வீடு பூட்டப் பட்டிருந்ததால் அமைச்சரின் உதவியாளரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு வீட்டைத் திறக்குமாறு கூறினார்கள். ஆனால் அமைச்சரின் உத்தரவு இல்லாமல் வீட்டை திறக்க முடியாது என அவர் கூறியதால், அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியே காத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் காலை 8 மணி அளவில் பொன்முடியின் உறவினர் அங்கு வந்து வீட்டைத் திறந்து விட்ட பிறகு, ஒவ்வொரு அறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். வீட்டின் கீழ் தளத்தில் உள்ள கட்சி அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இந்த திடீர் சோதனை ஏன் நடைபெற்று வருகிறது என்பது குறித்து பல்வேறு யூகங்கள் உலவுகின்றன.

கௌதம சிகாமணி வெளிநாடுகளில் அன்னிய செலாவணி சட்ட விதிகளை மீறி முதலீடு செய்ததாக கூறி ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கி இருந்தனர். விழுப்புரத்தில் கடந்த 2012ம் ஆண்டு செம்மண் குவாரிகளில் விதிகளுக்கு முரணாக மண் அள்ளியதில் ரூ.28 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதில் அமைச்சர் பொன்முடி, கௌதமசிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சைதாப்பேட்டை ஸ்ரீநகர் இல்லம், சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் மகன் இல்லம், விழுப்புரம் பொன்முடி இல்லம், அலுவலகம் உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.

அமலாக்கத் துறையினர் மேற்கொண்டு வரும் இந்த சோதனைகள் குறித்த தகவல் அறிந்ததும் அந்தந்த பகுதிகளில் ஏராளமான திமுக.,வினர் குவிந்தனர்.

Art. 370- It’s all about Politics Stupid!

0
article 370 - 2026

By         Narasimhan Vijaraghavan


On 11th July,2023, the constitution bench of Supreme Court, comprising Chief Justice of India Justice D Y Chandrachud, Justices Sanjay Kishan Kaul, Sanjiv Khanna, BR Gavai, and Surya Kant, the first five in seniority, fixed day-to-day hearings from 2 August,2023, on a clutch of petitions pertaining to the nullification of Article 370.

It was made clear that the proceedings will be called In Re:Art.370, and not in the name of any petitioner or group, to demonstrate a national construct.

The lawyers will take care of the law. Supreme Court is a political institution said Justice Benjamin Cardozo and Justice Antonin Scalia, on an India visit remarked, “Supreme Court of India was undoubtedly the most powerful political institution in the world’. There cannot be a more epochal political dynamite imbued issue than Art.370 vying with the 5 judges’ sitting of Ram Janmabhoomi hearing.

How many of us have cared to find out that Dr. B.R. Ambedkar, father of our Constitution, was opposed to Article 306-A (now 370)? After hearing Sheikh Abdullah (who was referred to Babasaheb by Jawaharlal Nehru for constitutional recognition of special status) patiently – Dr. B.R. Ambedkar told him: “You want that India should defend Kashmir, India should develop Kashmir and Kashmiris should have equal rights as the citizens of India but you do not want India and any citizen of India to have any rights in Kashmir. I am the Law Minister of India.  I cannot betray the interest of my country.” Ambedkar stood tall and his ground as uncompromising, in refusing to oblige Nehru, who had a soft corner for Sheikh Abdullah.

It was then Nehru approached N.Gopalasamy Ayyangar, who was then Head of the Emergency Administration in the State of Jammu Kashmir, to draft a clause providing for special status to the State. And more importantly,  requested Ayyangar to ‘somehow pacify Sardar Vallabhai Patel as Ambedkar’s sway was only over himself and law”.

To the nation’s everlasting regret, as K Santhanam, a constituent assembly member himself said, strongman Sardar yielded to Nehru’s pleas and used his ‘sway over the Constituent Assembly members’ to get the Art.306-A incorporated. Alas, when the provision was ratified by the Constituent Assembly, the father of our Constitution and then Law Minister Ambedkar staged the most ‘principled walk out in Parliamentary annals’ commented Nani Palkhivala. While 564 Princely States consented to join the Indian Union without any caveats, Kashmir was granted special status and a separate Constituent Assembly and Constitution too.

The contemporaneous exchange between N Gopalaswami Ayyangar and Sardar Patel makes poignant and profound reading.

TAMILDHINNEWSLOGO copy - 2026

New Delhi 15th October, 1949
My Dear Sardarji,

Sheikh Abdullah and two colleagues of his had a talk with me for about an hour and, as I told you this morning there was no substance at all in the objections that they put forward to our draft.  At the end of it all, I told them that I had not expected that, after having agreed to the substance of our draft both at your house and at the party meeting they would let me and Panditji down in the manner they were attempting to do.  In answer, Sheikh Abdullah said that he felt very grieved that I should think so but that in the discharge of his duty to his own people he found it impossible to accept our draft as it was.  I told him thereafter to go back and think over all that I had told them and hoped that he would come back to me in a better frame of mind in the course of the day or tomorrow. I have since thought over the matter further and dictated a draft which, without giving up the essential stands we have taken in our original draft, readjusts it in minor particulars in a way which I am hoping Sheikh Abdullah would agree to.I discussed this draft with the Drafting Committee in the evening and one or two small suggestions which they made have been incorporated in it. I enclose a copy of this redraft as also of my letter to Sheikh Abdullah for your information.  I trust that this will meet with your approval. Yours sincerely, N. Gopalaswami

The Hon’ble Sardar Vallabhbhai Patel
New Delhi 16th October, 1949

My dear Gopalaswami,
Thank you for your letter of 15 October, which I received only this afternoon on my return from the Constituent Assembly. I find there are some substantial changes over the original draft, particularly in regard to the applicability of fundamental rights and directive principles of State policy.  You can yourself realise the anomaly of the State becoming part of India and at the same time not recognising any of these provisions.

I do not at all like any change after our party has approved of the whole arrangement in the presence of Sheikh Sahib himself.  Whenever Sheikh Sahib wishes to back out, he always confronts us with his duty to the people.  Of course, he owes no duty to India or to the Indian Government, or even on a personal basis, to you and the Prime Minister whohave gone all out to accommodate him.

In these circumstances, any question of my approval does not arise.  If you feel it is the right thing to do, you can go ahead with it.
Sd. Patel

The ‘small suggestions’ and ‘interim  arrangement’  was Art.370 from which was born Art.35-A, which are now occupying centre stage. 

Sardar Patel is recorded to have said – as found in V. Shankar’s (ICS – Nehru’s Secretary at that time) Diary, ‘Jawahar Royega’ –  Jawahar will cry.


Thus was born the special status for Amir-e-Khusru Dehluvi’s Kashmir.   “Agarfirdous baroye zameen ast, hami asto, hami asto hami ast”-  If there is paradise on earth, it is here, it is here, it is here.


No matter the politics, our prayers shall have to be that Jammu & Kashmir ever remain the Paradise it was always meant to be, for We the People.


(Author of Constitution- its Making/Working Oak Bridge- is practicing advocate in the Madras High Court)


கல்வி- தகவல் சேகரிப்பு அல்ல; சிந்திக்கும் மனிதனை உருவாக்குவது!

1805545 tlr school - 2026

கட்டுரை: கமலா முரளி


கல்வி வளர்ச்சி

”கல்லா ஒருவனுக்கு அவன் சொல்லே கூற்றாகும் தனக்குப் பாழ் கற்றறிவிலா உடம்பு” – எனக் கல்வியின் சிறப்பை இடித்து உரைக்கிறது, பதினெண்கீழ்கணக்கு நூலாம், விளம்பி நாகனார் எழுதிய நான்மணிக்கடிகை.

கல்வி ஒரு முற்போக்கான சமுதாயத்தின் அடித்தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கல்வி என்பது நாட்டின் வளர்ச்சிக்கு மிக அத்தியாவசியாமான ஒன்று !

நம் பாரதத்தில் கல்வி கற்றலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, கொடுக்கப்படுகிறது, இன்னும் கொடுக்கப்பட வேண்டும். நம் நாட்டின் கல்விச்சூழல் பற்றி சில செய்திகளை, தரவுகளை கருத்துகளை உங்கள் முன் வைக்கிறேன் !

தனிமனிதனை, சமுதாயத்துக்கேற்றவனாக, நம் முன்னோர்கள் நெறிப்படுத்தி வைத்துள்ள நன்னெறிகளைக் கற்பித்து, அறிவாற்றலை அதிகரித்து, சமுதாயத்துக்கு ஏற்றவனாக ஆக்கும் சீரிய பணி இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது.

கல்வி எந்த இடத்தில் கற்பிக்கப்பட்டது , யாரால் யாருக்குக் கல்வியின் கூறுகள் கிடைக்கப் பெற்றன, கல்வியின் நோக்கம் என்ன, அணுகுமுறை என்ன என்பவை காலத்துக்கேற்ப, சூழல்களுக்கு : அரசியல் மற்றும் சமூக சூழல்களுக்கு ஏற்ப, மாற்றங்கள் அடைந்து வந்துள்ளது.

உதாரணமாக, பௌத்தக்கல்வி காலத்தில், வேத கால கல்வி, இதிகாச கால கல்வி, புராண கால கல்வி, குருகுல கால கல்வி, இஸ்லாமிய கால கல்வி, கிழக்கிந்தியக் கம்பெனி கால கல்வி … போன்ற வரிசையில், பௌத்தக் கல்வி காலத்தில், புத்த பிக்குகள் தங்கி யிருக்கக் கூடிய விகாரங்கள் கல்வி கற்கும் இடமாக இருந்தன. புகழ்பெற்ற பௌத்த தலங்களில், கல்வி மிகச் சிறந்து காணப்பட்டது. நாலந்தா, தக்‌ஷசீலம் போன்ற பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. பள்ளி என்ற சொல் கூட சமண கல்வி முறையின் காலத்தில் வந்தது எனச் சொல்லுவார்கள்.

பள்ளி கொள்ளுதல், பள்ளி எழுதல் , என பள்ளி என்ற சொல் தூங்கி எழும்,படுத்து எழும் செயலுடன் தொடர்பு உடையதாகவே இருந்து வந்திருக்கிறது. சமணர்கள் குகைகளில் தங்கி, தூங்கி, எழுபவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் தங்கியிருந்த இடமே பள்ளி என அறியப்படலாயிற்று.

இன குல பேதமின்றி, சமணர்களும் பௌத்தர்களும் அனைவருக்கும் கல்வியைப் போதித்தனர். சமணர்களின் பள்ளிக்குச் சென்று அங்கேயே தங்கி, … பள்ளியிலேயே தங்கி கல்வி பயின்றனர் பிள்ளைகள்.

பள்ளிக்குச் சென்றனர் பிள்ளைகள். கல்விக்கூடம் பள்ளிக்கூடம் என வழங்கலாயிற்று. அது போல கல்வியின் நோக்கம் என்பதை எடுத்துக் கொண்டால், இறையருளைப் பெறுதல், ஆன்மீகம், தர்ம நெறி, ஒழுக்கம் போன்றவை நம் நாட்டில் முக்கிய நோக்கமாக இருந்து வந்திருக்கிறது.

இருப்பினும், தனுர் வேதம், ஆயுர் வேதம், சிற்பக் கலை மற்றும் பிற கலைகளும் கற்பிக்கப்பட்டுள்ளன என்பதையும் நாம் அறிவோம். தமிழ்நாட்டில், சங்க இலக்கியங்கள் நமது கல்வியின் சிறப்புக்குச் சான்றாக அமைகின்றன. இத்துணை நூல்கள் அக்காலத்தில் இருக்குமானால், எத்தனை சிறப்பாக தமிழகத்தின் கல்வி இருந்திருக்க வேண்டும் !

பண்டைக் காலத்தில் இருந்தே, கல்வியில் சிறந்த நாடெனினும், பெரும்பாலும் கல்வி என்பது தனி மனிதர்களுக்கான வாய்ப்பாகவோ அல்லது, சில இன குல சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்பாகவோ தான் பெரும் பாலும் இருந்து வந்திருக்கிறது.

சிறந்த நூல்களைப் படித்தல், தத்துவ விவாதங்களில் பங்கேற்றல், தானே நூற்களை எழுதுதல் என்பது அனைத்து மக்களுக்கும் சாத்தியப்பட வில்லை. நாம் கல்வி என்பதையும், எழுத்தறிவு என்பதையும் ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.

தொழில் சார்ந்த, வியாபாரம் சார்ந்த சொற்கள் , எண்கள், அளவைகள் பற்றியும், கலைகளின் நுணுக்கங்கள் பற்றியும் நம் நாட்டு மக்கள் அறிந்து இருந்தனர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை! அதனையே, வரி வடிவத்தில் எழுதத் தெரியுமா படிக்கத் தெரியுமா என்றால் விடை இருக்காது.

இது ஆங்கிலத்தில் literacy எனச் சொல்லுவார்கள். முதலில் சொன்ன தொழில் சார்ந்த அறிவு skill எனச் சொல்லலாம்.

பொது அறிவு, ஒரு துறையின் நுணுக்கங்களை அறிந்து கொள்வது, ஆய்ந்து உட்பொருளை அறிந்து கொள்வது போன்றவை தொடர்ந்த கல்விப் பயிற்சியின் பலன். இதை education எனச் சொல்லாம்.

இப்படி, இந்தியாவில் கல்வி வளர்ச்சியின் வரலாறு பற்றிச் சொல்ல , வெவ்வேறு கால கட்டங்களில் இருந்த சூழல்கள், கற்றோர்-கற்பிப்போர், கற்றலின் அணுகுமுறை, உபகரணங்கள், ஊதியம் , நோக்கம் , இன பேதங்கள்,ஆண் பெண் பேதம் என எண்ணற்ற தரவுகளைப் பற்றி முற்றிலுமாக எழுதுவது மிக நீண்ட கட்டுரையாக ஆகும்.

உலக அளவில் அச்சுப் புத்தகம், கூடன் பெர்க் கண்டுபிடித்த அச்சு இயந்திரம் வந்த பின் கல்வி கற்றல் மிக அதிகமாகப் பரவியது என்றால் மிகையாகாது.

அது போலவே, இந்தியாவில், போர்ச்சுகீசியர்கள், பிரென்ச் நாட்டவர், கிழக்கிந்தியக் கம்பெனி வருகைக்குப் பின் கல்வி கற்றல் பரவலானது என்பதை மறுக்க முடியாது. பின்னாளில், மெக்காலே அவர்கள் வகுத்து தந்த கல்வித் திட்டம் நமது நாட்டில் பல ஆண்டுகள் கோலோச்சியது.

சுதந்திர இந்தியாவில்,கல்வி மாநில மற்றும் மைய அரசு இரண்டிலும் இடம் பெற்று இருக்கக் கூடிய ஒரு துறை ! அரசும், தனியாரும் கல்விச் சேவை தரும் பணியைச் செய்கின்றனர். மைய அளவில் கேபினட் அந்தஸ்து அளவில் ஒரு அமைச்சரும், ஸ்டேட் அந்தஸ்து நிலையில் ஒரு அமைச்சரும் உள்ளனர்.

கல்வி அமைச்சகம் என்ற பெயர் மாற்றப்பட்டு, 1985 ல், திரு ராஜீவ் காந்தி அவர்கள் பிரதமராக இருந்த போது மனித வள மேம்பாட்டுத் துறை எனப் பெயர் மாற்றப்பட்டது.

தமிழகத்தில் 1957 ஆம் ஆண்டு தொழில்நுட்பக் கல்வித்துறை தொடங்கப்பட்டது. 1997 ல் உயர்கல்வித் துறை என்ற அமைச்சகம் உருவாயிற்று. பள்ளிக்கல்வித் துறை அமைச்சகமும் உள்ளது.

வல்லுநர்களின் வழிகாட்டுதலுடன் மத்திய அமைச்சரவை கல்விக் கொள்கைகள், மொழிக்கல்வி, கற்றல் மொழி, கல்வி முறைக் கட்டமைப்பு10 +2+3 போல, மாணாக்கர் தேவைகள், ஆசிரியப்பணி, உள்கட்டமைப்புத் தேவைகள் போன்றவற்றை வரையரை செய்கிறது. மாநில அரசுகள் அந்தந்த பகுதியின் சிறப்புத் தேவைகளுக்கு ஏற்ப சில மாற்றங்களைச் செய்து கல்வியை மேம்படுத்தும் பணியைச் செய்கிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் எழுத்தறிவு இல்லாது இருந்தனர். எனவே, ஒரு புறம் அனைத்து சிறார்களுக்கும் கல்வி அளிப்பதோடு, எழுத்தறிவில்லாத பெரியவர்கள் ஓய்வு நேரத்தில் கல்வி கற்க திட்டங்கள் இயற்றப்பட்டன.

எழுத்தறிவு இயக்கம் ( literacy movement ) அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் சிறப்பான களப் பணியை மேற்கொண்டனர்.

20 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு மாநிலத்திலும் எழுத்தறிவு விகிதத்தை ( literacy rate )உயர்த்த எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. சிறார்களுக்கான கல்வி முறைப்படுத்தப்பட்டது. ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு வேளை உணவு அளிக்கக் கூட இயலாத நிலையில், பிள்ளைகள் சற்று வளர்ந்தால், தங்களுக்கு உதவி புரிந்தால் , சிறிது ஊதியம் கிட்டுமே என பள்ளிக்கு கல்வி கற்க அனுப்புவதில் சுணக்கம் காட்டினர்.

அனைவரையும் பள்ளிக்கு அழைத்து வந்தது மதிய உணவு ! சுதந்திரத்துக்கு முன்னரே சென்னை மாகாணத்தில் சில பள்ளிகளில் பிள்ளைகளுக்கு இலவச உணவு கொடுக்கப்பட்டது. பிறகு அது நிறுத்தப்பட்டது.

பெருந்தலைவர் காமராஜர் நினைத்தவுடன் , ஒரு கையெழுத்தில் மதிய உணவு திட்டத்தைக் கொணர்ந்தாரா ? அவரது திட்டம் சிறப்பானது என்றாலும், சில்லரைக்கு எங்கே போவது ? நிதி ஒதுக்கீடு எப்படிச் செய்வது ? ஆயினும், அய்யா காமராஜர் பெரு முயற்சி எடுத்து, மதிய உணவுத்திட்டத்தைச் செயல்படுத்தினார்.

காமராஜரின் பரப்புரைகளால், மக்களும் உதவ முன் வந்தனர். எறும்புறக் கல்லும் கரையும் என்பதைப் போல, மத்திய அரசு முதலில் செவி சாய்க்காவிட்டாலும், மத்தியத் திட்டக்குழுவின் பரிந்துரையுடன் “மதிய உணவுத் திட்டம்” வந்தது. இன்று வையகமே போற்றும் மாண்புறு திட்டமாக ‘குழந்தைகளுக்கு சத்துணவு அவர்களின் உரிமை” எனும் கோட்பாடு நம் தமிழ்நாட்டின் தலைமகன் காமராஜர் போட்ட விதை !

கர்ம வீரர் காமராஜ் அவர்களை கல்விக்கண் திறந்த அண்ணல் என்று சொல்லுவர். அவரது ஆட்சிக்காலத்தில், மதிய உணவு திட்டம் மட்டும் அல்ல, பள்ளிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்தது.

நம் பாரதத்தில்,6 முதல் 14 வயதிலான குழந்தைகளுக்கான இலவசக் கல்வி என்பது பல ஆண்டுகளாக அரசின் மைய மற்றும் மாநிலங்களின் கொள்கையாக இருந்தாலும், 2000 ஆம் ஆண்டில் திரு.வாஜ்பாய் அவர்கள் தலைமையிலான அரசு கொணர்ந்த அனைவருக்கும் கல்வி – சர்வ சிக்‌ஷா அபியான் என்ற திட்டம் , மிக அதிக அளவிலான நிதி ஒதுக்கீட்டுடன் கொண்டுவரப்பட்டது.

6- 14 வரையிலான குழந்தைகள், கல்வி எனும் குடைக்குள் கட்டாயமாக வருவதை இத்திட்டம் உறுதி செய்தது. முதலில், தொடக்கக் கல்வி எஸ்.எஸ்.ஏ, பின்னர் இடைநிலைக் கல்வி வரை ( ஆர்.எம்.எஸ்.ஏ )இத்திட்டம் உயர்த்தப்பட்டது.

இதற்கு முன்னரே, தமிழ்நாட்டில், சத்துணவுத் திட்டம், இலவசச் சீருடை, பாடபுத்தகம் போன்ற திட்டங்கள் அமலில் இருந்தன. என்றாலும், எஸ்.எஸ்.ஏ மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ நிதி ஒதுக்கிடு மாணாக்கர்களுக்கு வரப்பிரசாதமாகும்.

மாணாக்கர்கள் பள்ளிக்கு வந்து கல்வி கற்பதில் எந்த இடையூறும் இல்லா வண்ணம், இடை நிற்றல் குறையவும் வழி வகை செய்யப்பட்டன. வல்லுநர்களால், ஆராய்ந்து பரிந்துரைக்கப்பட்ட கொள்கைகள் , கற்றலில் செயல்பாட்டு முறை, கலைகள் உடற்பயிற்சி, விளையாட்டு கல்வி , புது பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அனைவரையும் உள்ளடக்கிய கல்வி : இன்க்ளுசிவ் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி கல்வி கற்க, பெண்களுக்கான கல்வி மற்றும் உயர் கல்வி, திறன் கல்வி, சமுகத்தின் பின்தங்கியோருக்கான சிறப்பு சலுகைகள் என நம் நாட்டின் கல்வி வளர்ச்சிக்கான கட்டமைப்புகள் வலுப்படுத்தப் பட்டுள்ளன.

உயர்கல்வித் துறையிலும் நிறைய மாற்றங்களும் முன்னேற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. ஆராய்ச்சி நிறுவனங்கள், அதிக அளவிலான கல்லூரிகள், மருத்துவக் கல்வி, பொறியியல், தொழில்நுட்ப மேற்படிப்புகள் எல்லா மாநிலங்களிலும் அமைக்கப்பட்டன.

2015 ஆம் ஆண்டு, இந்தியாவில், முதன் முதலாக திறன் வளர்ப்புத் துறை எனும் அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமப்புற, ஊரக, நகர்ப்புற என அனைத்துப் பகுதிகளிலும், தற்போதைய உலகாளவிய தரத்துக்கு, கணினி அறிவுடன் இளைஞர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள , திறன் கல்வி மற்றும் தொடர் திறன்வளர் பயிற்சிகள் தர திட்டங்கள் திட்டப்பட்டு ஸ்கில் இந்தியா செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், 2015 ஆம் ஆண்டில் ஐஐஐடி ( ஐஐடி அல்ல) எனப்படும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் நாடு முழுவதும் 25 நிறுவனங்கள் தொடங்கி (மத்திய அரசு 50% ,மாநில அரசு 35% தனியார் 15% முதலீடு ) மாணவர்களுக்குத் தரமான உயர்கல்வி அளிக்கப்படுகிறது.

நம் மாநில மாணாக்கர்கள் அத்தகைய சிறப்புத் திட்டங்களைப் பற்றி அறிந்து கொண்டு பயன் பெற வேண்டும். இன்றைய காலம் கணினி காலம் ! கணினியின் ஆதிக்கம் எல்லாத் துறைகளிலும் !

கல்வித்துறையில் கணினி ஒரு துணை உபகரணமாக உள்ளே நுழைந்தது. அலுவலகக் கருவியாக உருமாறி இன்றோ அத்தியாவசியக் கருவியாக மாறிவிட்டது. இன்று வலைப்பின்னல் இல்லா வாழ்க்கை இல்லை ! இதற்கான மாற்றங்களுக்குத் தயாராக வேண்டாமா ?

தனியார் பள்ளிகளில் இந்த மாற்றங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பே மெல்லத் தொடங்கிவிட்டது. 2008 ஆம் ஆண்டு முதல் நான் பணியாற்றிய கேந்திரிய வித்யாலயாவில் பல கணினி பயிற்சி பட்டறைகளில் நான் பங்கேற்றிருக்கிறேன்.

இன்று தமிழ்நாடு கல்வித் துறை இணையப் பக்கத்தில் பார்த்தால், டி.என்.தீக்‌ஷா : பாட புத்தகங்கள் க்யு.ஆர் கோடுடன் தரப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான கணிணி பயிற்சி, அவர்களுக்கான உதவித் தளம் டி.என்.டி.பி. தமிழ்நாடு டீச்சர்ச் பிலாட்ஃபார்ம் கல்வித் தொலைக்காட்சி, வகுப்பறைகளை கண்காணிக்கும் ( அப்சர்வேஷன் ) வகுப்பறைநோக்கின் என்ற அமைப்பு ஏராளமான தொடர்புச் செய்திகள், காணொளிகள்… இது போன்ற கணிணி துணையுடன் கல்வி என்பது மத்திய கல்வித்துறையால் அரசியல் கலப்பின்றி இரு தசாப்தங்களாக வரைமுறைப்படுத்தப் பட்டு வந்துள்ளது. மத்திய அரசு கல்வி நிறுவனங்களில், மாற்றங்கள் மெல்ல மெல்ல வரத் தொடங்கியது.

தற்போது, தமிழ்நாட்டிலும், ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் இந்த கற்றல் முறைக்குத் தங்களை வகைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இன்றைய கல்விச் சூழலின் சவால்கள் என்ன ? அனைவரிடமுன் கணினி அல்லது திறன் பேசி இருக்குமா ? அனைவரிடமும் இணையவழி இணைப்பு இருக்குமா? பிள்ளைகள் பாடங்களை முழுமையாகக் கவனித்து, புரிந்து கொள்வார்களா?

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கல்வியின் உயரிய நோக்கமான ஒழுக்கம், அறநெறி , சிறந்த குண நலப்பண்புகள் சற்றே பின்தள்ளிப் போய்விடுமோ ?

இந்த கேள்விகளுக்கு வல்லுநர்கள் விடை தேடிக் கொண்டு இருக்கின்றனர். கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பது அல்ல ! அது, சிந்திப்பதற்காக மனிதனைப் பயிற்றுவிப்பது என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டின். பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் வாழும் இந்த உலகமானது தொடர்ச்சியான மாற்றங்களையும், வளர்ச்சியையும் கண்டு வருகிறது.

  • எனவே சவால்களை எதிர்கொள்ளுவோம் !
  • திறன் வளர்ப்போம் !
  • மனிதனை மேம்படுத்தும் செயலில் கல்வி எனும் ஆயுதத்தை சரிவரப் பயன்படுத்துவோம் !
  • கல்வி வளர்ச்சி இன்று மட்டுமல்ல , என்றென்றும் தொடரட்டும்.

இன்று அரச மரத்தை வலம் வந்தால்… எவ்ளோ பலன் தெரியுமா?!

arasa mara vazhipdu - 2026

அரச மர (அஸ்வத்த) ப்ரதக்ஷிணம்: வம்ச விருத்தி, நோய் நொடி இல்லாமல் வாழ்க்கை, மனநிம்மதி நிச்சயம் கிடைக்கும்.

அதுவும் அமாவாஸ்யையும் திங்கட்கிழமையும் சேர்ந்த நாள் அன்று (அமாசோம அஸ்வத்த ப்ரதக்ஷிணம்) மிக உசத்தியாக சொல்லியுள்ளது. இந்த சுப நாளன்று 108 பிரதக்ஷிணம் செய்வார்கள்.

காலங்காலமாக ஸ்த்ரீகள் அரச மர பிரக்ஷிணம் செய்வது என்பது நமது சம்ப்ராதாயத்தில் எடுக்கப்பட்டுள்ள ஒரு மகத்தான அனுஷ்டானம் ஆகும். காலை வேளையில் தான் பிரதக்ஷிணம்.

ஒவ்வொரு பிரதக்ஷிண முடிவில் ஒரு பழம் அல்லது பக்ஷணம் அல்லது வெறு ஏதாவது ஒரு விசேஷமான பொருளை சமர்ப்பிப்பதும் வழக்கத்தில் உள்ளது.

பிரதக்ஷிணம் செய்யும் போது மனதில் இந்த ஸ்லோகத்தை சொல்லுவதும் சம்ப்ரதாயம்:

மூலதோ பிரம்ஹ ரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத: சிவ ரூபாய
விருக்ஷ ராஜயதே நம:

மும்மூர்த்திகள் ஸ்வரூபம் அரச மரம். பிரஹ்மா விஷ்ணு சிவன் அரச மரத்தில் சாந்நித்யம் கொண்டுள்ளார்கள்.

விசேஷமாக ஸ்த்ரீகளுக்கு எடுத்துள்ள அனுஷ்டானமாக இருந்தாலும் ஆண்களும் குழந்தைகளும் கூட பிரதக்ஷிணம் செய்யலாம். மடி அவசியம்.

குறிப்பாக ஆரோக்யகரத்தை தரும் இந்த அனுஷ்டானம் நமது முன்னோர்களால் மிக ச்ரத்தையாக யதாவிதியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளது.

  • சர்மா சாஸ்திரிகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைகள் துவங்கியது ..

IMG 20230717 092640 - 2026

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 16ஆம் தேதி மாலை திறக்கப்பட்டு இன்று முதல் ஐயப்பனுக்கு ஆடி மாத நெய் அபிஷேகம் பூஜை வழிபாடு துவங்கியது.இன்று முதல் நாளிலேயே ஐயனை தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகளவில் வந்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

IMG 20230717 092705 - 2026

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆண்டுதோறும் மாதப்பிறப்பன்று 5 நாட்கள் பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். ஆனி மாத பூஜைக்காக கடந்த ஜூன் 15ஆம் மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. ஆனி மாத பூஜையை முடிந்து 20ஆம் தேதி சகஸ்ரகலச பூஜையும், அதைத்தொடர்ந்து நடைபெற்ற வழக்கமான பூஜைகளுக்கு பின் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்பட்டது.

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று 16ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. இன்று 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.

சபரிமலை திருநடை இன்று அதிகாலை 5 மணிக்கு கர்க்கிடக மாச பூஜைகளுக்காக திறக்கப்பட்டது.கோயில் தந்திரி கண்டரர் ராஜீவரர் தலைமை வகித்தார்.கோயில் மேல்சாந்தி கே.ஜெயராமன் நம்பூதிரி தலைமை வகித்து கோவில் கருவறை திறந்து தீபம் ஏற்றினார். ராஜீவரரின் மகன் கந்தர் பிரம்மதத்தனும் தந்தையுடன் இருந்தார். தொடர்ந்து மேல்சாந்தி, கணபதி, நாகர் கோவிலை திறந்து, தீபம் ஏற்றிய பின், 18ம் படி முன் உள்ள தீக்குண்டத்தில் தீ மூட்டி, ஐயப்ப பக்தர்களுக்கு, தந்திரி கண்டரர் ராஜீவர், கண்டரர் பிரம்மதத்தர், மேல்சாந்தி ஆகியோர் விபூதி பிரசாதம் வழங்கினர்.

வழக்கம் போல் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும். வரும் ஆக 10இல் இந்த வழிபாடு நடைபெறுகிறது.

இதனையடுத்து ஆவணி மாத பிறப்பு பூஜைக்காக ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 21ஆம் தேதி வரையிலும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பூஜை நடைபெறும். திருவோணம் திருவிழாவிற்காக ஆகஸ்ட் 27 முதல் 31ஆம் தேதி வரையிலும் கோவில் நடை திறந்திருந்திருக்கும். ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று திருவோணம் பண்டிகை கேரளாவில் கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

IMG 20230717 092623 - 2026

இந்த ஆண்டு மண்டல பூஜைக்காலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 27ஆம் தேதியன்று மண்டல பூஜை நடைபெறும். அதன் பின்னர் அடைக்கப்படும் நடை டிசம்பர் 30ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் திறக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் இதற்காக திட்டமிட்டு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கேரளா வனத்தில் பெய்த மழையால் பம்பை நதியில் தண்ணீர் அதிகம் வருகிறது.ஐயனை தரிசிக்க பாஜக வானதி சீனிவாசன் எம்எல்ஏ நேற்று சபரிமலை வந்து இன்று ஐயப்பனுகு நெய் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார்.

ஆடிப் பண்டிகை: பெண்களின் மாதம்! அம்மனின் மகத்துவம்!

ambal dev - 2026

-கிருஷ்ணா ராமலிங்கம்

அனைவருக்கும் இனிய ஆடிப்பண்டிகை நல்வாழ்த்துக்கள், வணக்கங்கள்

.ஆடிமாதம் பெண்களின் மாதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளில் ஒரு அழகான பாடல் –

மொய் குழலில் மலர் சூட்டி
மான் விழியில் மை தீட்டி
பொன் முகத்தில் பொட்டு வைத்து
பூவையர்கள் நலம் காக்க

நெய் வழியும் கை விளக்கை
நீரோடு மிதக்க விட்டோம்
நாயகனின் உயிர் காக்க
தாயிடத்தில் தூது விட்டோம்
ஆ,ஆ..ஆ..ஆ..ஆஆ..ஆ.

வள்ளுவனின் வாசுகி போல்
வசிஷ்டனுக்கு அருந்ததி போல்
தொல்லுலகில் புகழ் விளங்க
தோகையர்க்கு துணை புரிக

பின்னுறங்கி முன் விழித்து
பிள்ளை நலம் தனைக் காத்து
கொண்டவனின் மனமறிந்து
தொண்டு செய்யும் மனம் தருக

ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி வாடியம்மா எங்களூக்கு வழித்துணையாக எம்மை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக – வாலியின் வைர வரிகள் (படம் – ராதா)

பக்தி மணம் கமழும் அற்புத ஆடி!

பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆடி மாதம் இந்த ஆண்டு திங்கள்கிழமையன்று பிறக்கிறது.

சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிப்பார் – சித்திரை மேஷம்,
வைகாசி – ரிஷபம், ஆனி – மிதுனம்,
ஆடி – கடகம், இதில் ஒரு விஷேசம் என்ன என்றால் கடக ராசிக்குரிய கிரகம் சந்திர பகவான், அதாவது சூரியன் சந்திர ராசியில் வரும் மாதம். மேலும் ஆடிமாதம் பிறப்பன்று தான் ஆரம்பமாகிறது தக்ஷிணாயன புண்யகாலம்.

ஜோதிட சாஸ்திரத்தில் இதை ‘கர்க்கடக மாதம்’ என்பார்கள்.

சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத பிரவேசம்.

தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது.

அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது.

இந்த மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள்.

அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி விடும்.

அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும்.

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை.

‘ஆடி செவ்வாய் தேடிக் குளி’ என்பது பழமொழி.

அதாவது விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம்.

ஆடி வெள்ளி வழிபாடு செய்வது சகல பாக்யங்களையும் அள்ளித் தரும். திருமண பாக்யம் கைகூடிவரும்.

புதுமண தம்பதியருக்கும் நீண்ட காலமாக குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்போருக்கும் நல்ல அறிவாற்றல், புத்தி சாதுர்யத்துடன் கூடிய குழந்தை பாக்யம் உண்டாகும்.

ஆடி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளையும் நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் நாளாக கருதப்படுகிறது.

அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் பக்தி மார்க்கத்தில் மூழ்கித் திளைப்பார்கள்.

ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு என்று பலப்பல விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன.

இதில் ஆடி அமாவாசை முக்கியமானது. அன்றைய தினம் கடல், நதிகள் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்க்கு திதி கொடுப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

“மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றா போது
காதல் மடப்பிடியோடும் களிறு வருவனக் கண்டேன்
கண்டேன் அவர் பாதம் கண்டறியாதனக் கண்டேன்”. (அப்பர் தேவாரம்)

அப்பர் கயிலை தரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற போது நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளையிட்டார். மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார் குளம் என்றும் சமுத்திர தீர்த்தம் என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்.

இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர்.
(அப்பர் பிரான் கண்ட கயிலாயக் காட்சியினை இப்பதிகத்தில் முழுமையாகக் கூறுகிறார்)

அவரவர் குடும்ப வழக்கப்படி வீட்டில் படையல் இட்டு வழிபட்டு முன்னோர் நினைவாக இல்லாதோர், இயலாதோர், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம், உடை, போர்வை போன்றவற்றை வழங்குவது பல்வேறு பாவங்களை நீக்கி புண்ணிய பலன்களை சேர்க்கும்.

ஆடி மாதத்தின் 18-வது நாள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிவார்கள்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடி தபசு பிரசித்தி பெற்றது.

கோமதி அம்மனின் தவத்துக்கு இரங்கிய சிவபெருமான், புன்னை வனத்தில் சங்கர நாராயணராக ஆடி பவுர்ணமியன்று காட்சியளித்தார்.

ஆடிப்பூரம் ஆண்டாள் அவதாரம் செய்த திருநட்சத்திரம். கன்னிப் பெண்களும் திருமண பாக்யம் கைகூடாமல் இருக்கும் பெண்களும் இந்த நாளில் விரதம் இருந்து பக்தியுடன் ஆண்டாள் அருளிச் செய்த ‘வாரணமாயிரம்’ என்று தொடங்கும் பாசுரத்தை பாடி வர திருமண பிராப்தம் கூடிவரும்.

இத்தனை சிறப்புகள் மிக்க ஆடி மாதத்தில் நல்ல காரியங்களை ஆரம்பிக்க கூடாது, செய்யக் கூடாது என்ற கருத்து நிலவுகிறதே. எதனால்?

இந்த மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும்.

ஆன்மீகத்திலும் இறை வழிபாட்டிலும் மனப்பூர்வமாக ஈடுபட வேண்டியிருப்பதாலும் மற்ற காரியங்களில், விசேஷங்களில் கவனம் செலுத்துவது சிரமம்.

இறைவனை துதிப்பதற்கும், அவன் சிந்தனையாகவே ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கும் இடையூறாக மற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்துவிட கூடாது என்பதற்காகவே மற்ற சுப விசேஷங்கள் இந்த மாதத்தில் தவிர்க்கப்படுகிறது.

அமாவாசை / மாசப் பிறப்பு – பித்ரு தர்ப்பணம் – மந்திரங்கள் மற்றும் செய்முறை!

amavasai pitru tharpanam - 2026

சோபக்ருத் – ஆடி மாச பிறப்பு தர்ப்பணம் 

ஆடி 1, திங்கட்கிழமை, 17.07.2023

காலையில் தீர்த்தமாடி, நித்ய-கர்மானுஷ்டானங்களைச் செய்யவும். கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு, ஆசமனம் செய்யவும்.  அத்துடன் 3 தர்ப்பங்களை இடுக்கிக் கொள்ளவும். 3 தர்ப்பங்களை ஆஸநமாகப் (காலின் கீழ்) போட்டுக் கொள்ளவும்.

ப்ராணாயாமம் செய்யவும். (கையைக் கூப்பிக் கொண்டு)

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஸாந்தயே||
யஸ்யத்விரத வக்ராத்யா: பாரிஷத்யா: பரச்சதம் 
விக்னம் நிக்னந்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாச்ரயே ||

ஸங்கல்பம்

(வலது முழங்கால் மீது, இடது உள்ளங்கை மேல் வலது உள்ளங்கையை சேர்த்துக் கொண்டு) – {ப்ராசீனாவீதம்) – யக்ஞோபவீதத்தை – பூணூலை இடதுபுறம் போட்டுக் கொள்ளவும்

ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த 
அஸ்ய ஸ்ரீபகவத: மஹாபுருஷஸ்யா விஷ்ணோராஜ்(க்)ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய பிரம்மண: த்விதீய பராத்தே ஸ்ரீ ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வதரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரத கண்டே சகாப்தே மேரோ: தக்ஷிணே பார்ச்வே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம், மத்யே


ஸோபக்ருத் நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே, க்ரீஷ்ம ருதௌ, மிதுன மாஸே, க்ருஷ்ண பக்ஷே, அமாவாச்யாம் -புண்யதிதௌ, வாஸர: வாஸரஸ்து இந்து வாஸரயுக்தாயாம். – புனர்வசு நக்ஷத்ரயுக்தாயாம் –


ஸ்ரீவிஷ்ணுயோக ஸ்ரீவிஷ்ணுகரண சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயம் அமாவாச்யாம் புண்யதிதௌ – ஸ்ரீபகவதாஜ்ஞா பகவத் கைங்கர்யம் -.

(பித்ரு வர்க்கம்) ……………………. கோத்ராணாம் ……………… ஸர்மாணாம் – அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் | மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம்

(மாதாமஹ வர்க்கம்) …………….. கோத்ராணாம் ……………….. ஸர்மாணாம் – அஸ்மத் மாது: பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் | மாதாமஹீ மாது:-பிதாமஹீ மாது:- ப்ரபிதாமஹீனாம் உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்யர்த்தம்

கடக ஸங்க்ரமண புண்யகாலே கடக ஸங்க்ரமண ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே/

(இடுக்குப் புல்லை தென்புறம் போட்டு விடவும்)

** பித்ருவர்க்க ஆவாஹனம்

(3 தர்ப்பங்களாலான ஒரு புக்னத்தை கிழக்கு பக்கம் தெற்கு நுனியாக சேர்த்து)

ஆயாத பிதர: ஸோம்யா கம்பிரை: பதிபி: பூர்வை  ப்ரஜாமஸ்மப்யம் தததோரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச
அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி

– என்று எள்ளை எடுத்துக் கொண்டு மேற்படி புக்னத்தில் முதலில் பித்ரு வர்க்கத்தை ஆவாஹனம் செய்யவும்.

பிறகு புக்னம் ஒன்றை எடுத்துக் கொண்டு,

ஸக்ருதாச்சிந்நம் பர்ஹிரூர்ணம் ம்ருதுஸ்யோநம்-  பித்ருப்யஸ்த்வா பராம்யஹம்-அஸ்மிந்ஸீதந்து மே பிதர ஸோம்யா-பிதாமஹா: ப்ரபிதாமஹாச்ச அநுகைஸ் ஸஹ ……………………. கோத்ராந் ………………….  சர்மண:
(3 பெயர்களை சொல்லி)

அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் 

— என்று ஆவாஹனம் செய்த புக்னத்தோடு வைக்கவும்,

அதன் மேல் இதம் அர்ச்சனம் என்று எள்ளைச் சேர்க்கவும். 

எள்ளுடன் கூடிய ஜலத்தை எடுத்துக் கொண்டு, 

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ரூந் 

– – என்று வலது பக்கம் சாய்ந்து கட்டை விரல் ஆள்காட்டி விரல் மத்யத்தால் (பித்ரு தீர்த்தத்தால்) புக்னங்களின் மேல் விடவும்)

** மாதாமஹவர்க்க ஆவாஹனம்

(3 தர்ப்பங்களாலான ஒரு புக்னத்தை மேற்கே பக்கம் தெற்கு நுனியாக சேர்த்து) 

ஆயாத மாது: பிதர: ஸோம்யா கம்பிரை: பதிபி: பூர்வை ப்ரஜாமஸ்மப்யம் தததோரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச

………….. கோத்ராந்  …………………………  சர்மண: (3 பெயர்களை சொல்லி)

அஸ்மத் மாதாமஹ: மாதுபிதாமஹ: மாது: ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி

–  என்று எள்ளை எடுத்துக் கொண்டு மேற்படி புக்னத்தில் முதலில் மாத்ரு வர்க்கத்தை ஆவாஹனம் செய்யவும்.

பிறகு புக்னம் ஒன்றை எடுத்துக் கொண்டு

ஸக்ருதாச்சிந்நம் பர்ஹிரூர்ணா ம்ருதுஸ்யோநம்-பித்ருப்யஸ்த்வா பராம்யஹம்- அஸ்மிந்ஸீதந்து மே பிதர ஸோம்யா-பிதாமஹா: ப்ரபிதாமஹாச்ச அனுகைஸ் ஸஹ 

இதமாஸனம் – என்று ஆவாஹனம் செய்த புக்னத்தோடு வைக்கவும், 

அதன் மேல் ’ இதம் அர்ச்சனம்’ என்று எள்ளைச் சேர்க்கவும். 

எள்ளுடன் கூடிய ஜலத்தை எடுத்துக் கொண்டு.

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே அஸ்மத் மாது:பித்ருந்

– என்று வலது பக்கம் சாய்ந்து கட்டை விரல் ஆள்காட்டி விரல் மத்யத்தால் (பித்ரு தீர்த்தத்தால்) புக்னங்களின் மேல் விடவும்

தர்ப்பணம்

பித்ருவர்க்கம் 

(கிழக்கிலுள்ள புக்னங்கள்) கீழுள்ள மந்திரங்களை சொல்லி தர்ப்பயாமி என்றவுடன் எள்ளும் ஜலமும் கட்டை விரல் ஆள்காட்டி விரல் மத்யத்தால் (பித்ரு தீர்த்தத்தால்) புக்னங்களின் மேல் விடவும்).

பித்ரு (தகப்பனார்)

1. உதீரதாம் அவர உத்பராஸ: உந்மத்யமா:பிதர ஸோம்யாஸ: அஸூம்ய ஈயூ: அவ்ருகா ருதஜ்ஞா தேநோ அவந்து பிதரோஹூவேஷூ

……………..கோத்ராந் ………………….. சர்மண:

அஸ்மத் பித்ருன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

2. அங்கிரஸோ ந பிதரோ நவக்வா. அதர்வாணோ ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் ஸூமதௌ யஜ்ஞியாநாம் அபிபத்ரே ஸௌமநஸேஸ்யாம

………………….. கோத்ராந் ……………….. சர்மண:

அஸ்மத் பித்ருன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

3. ஆயந்து ந: பிதர: மநோஜவஸ: அக்நிஷ்வாத்தா: பதிபிர் தேவயானை: அப்மின் யக்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ருவந்து-தே அவந்த்-வாப்மாந்

………………..கோத்ராந் …………………………….. சர்மண:

அஸ்மத் பித்ருன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

பிதாமஹான் (பாட்டனார்)

1. ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பய கீலாலம் பரிஸ்ருதம்  ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ருந் 

………………………….கோத்ராந்  ……………….. சர்மண: 

அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

2. பித்ருப்பம ஸ்வதாவிப்ய ஸ்வதா நம: பிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: அக்ஷந்பிதர:

……………………. கோத்ராந் …………….. சர்மண:

அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

3. யே சே ஹ பிதர: யே ச நே யாகும்ச்ச வித்மயாகும் உச ந ப்ரவித்ம, அக்னே தாந் வேத்த யதி தே ஜாதவேத: தயா ப்ரதத்தகும் ஸ்வதயாமதந்து 

……………………….. கோத்ராந் ……………….. சர்மண:

அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

ப்ரபிதாமஹான் (பாட்டனாருக்கு தகப்பனார்)

1. மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் ந ஸந்த்வோஷதீ:

………………………கோத்ராந் ………………………. சர்மண: 

அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

2. மதுநக்ன முதோசஸி மதுமக் பார்த்திவகும் ரஜ: மதுத்யை அஸ்து ந: பிதா

………………கோத்ராந் ………………………. சர்மண:

அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

3. மதுமாந் நோ வனஸ்பதிர் மதுமாஹும் அஸ்து ஸூர்ய:  மாத்வீர்காவோ பவந்து ந: 

…………….. …கோத்ராந் …………………சர்மண:

அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி 

பித்ருவர்க்கம் (ஸ்திரீகள்)

1. மாத்ரு (தாயார்)

……………………… கோத்ராயா: ……………. நாம்நீ 

அஸ்மத் மாத்ரு: ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி 

(3 தடவை எள்ளும் ஜலமும் சேர்க்கவும்

2. பிதாமஹீ (தகப்பனாரின் தாயார்

…………………………. கோத்ராயா: ………………… .நாம்நீ:

அஸ்மத் பிதாமஹீ: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி 

(3 தடவை எள்ளும் ஜலமும் சேர்க்கவும்)

3. ப்ரபிதாமஹீ (தகப்பனாருக்கு பாட்டி)

……………………….கோத்ராயா: …………………….நாம்நீ: 

அஸ்மன் ப்ரபிதாமஹீ: ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி 

(3 தடவை எள்ளும் ஜலமும் சேர்க்கவும்)

ஜ்ஞாதா ஜ்ஞாத பித்ரூந் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி 

(3 தடவை எள்ளும் ஜலமும் சேர்க்கவும்)

ஜ்ஞாதா ஜ்ஞாத பித்ரு பத்னீ : ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி 

(3 தடவை எள்ளும் ஜலமும் சேர்க்கவும்) 

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த – தர்ப்பயத மே பித்ரூந் 

(3 தடவை எள்ளும் ஜலமும் விட்டு) – 

திருப்யத திருப்யத திருப்யத –  என்று சொல்லவும்

மாதாமஹ வர்க்கம்

மேற்குப் புறம் புக்னங்களில் பித்ரு வர்க்கத்தில் செய்தது போல் தர்ப்பணம் செய்யவும்.

மாதாமஹர் (தாயாரின் தகப்பனார்)

1. உதீரதாம் அவர உத்பராஸ உந்மத்யமா: பிதர: ஸோம்யாஸூ அஸூம்ய ஈயூ: அவ்ருகா ருதஜ்ஞா; தேநோ அவந்து பிதரோஹவேஷூ 

…………………… கோத்ரான் ………………………… .சர்மண:

அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

2. அங்கிரஸோ ந பிதரோ நவக்வா, அதர்வாணோ ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் ஸூமதௌ யஜ்ஞியாநாம் அபிபத்ரே ஸௌமநஸேஸ்யாம ………………….. கோத்ரான் ………………………. சர்மண:

அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

3. ஆயந்து ந: பிதர: மநோஜவஸ: அக்நிஷ்வாத்தா பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்து அதிப்குவந்துதே அவந்த வஸ்மாத்

………………………..கோத்ரான் …………………….. சர்மண:

அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ்  தர்ப்பயாமி

மாது: பிதாமஹான் (தாயாரின் பாட்டனார்)

1. ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே மாது; பித்ருந்

……………………. ..கோத்ரான் ………………………. சர்மண: 

அஸ்மத் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

2. பித்ருப்ய: ஸ்வதாவிப்ய:  ஸ்வதா நம: பிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: எஸ்வதா நம:  ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: அக்ஷந்பிதர.

………………….  கோத்ரான் ………………… .சர்மண:

அஸ்மத் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

3. யே சே ஹ பிதர: யே ச நேஹ யாகும்ச்ச வித்மயாகும் உச ந ப்ரவித்ம, அக்னே தாந் வேத்த யதி தே ஜாதவேத: தயா ப்ரதத்தகும் ஸ்வதயாமதந்து …………………………. கோத்ரான் ………………….. சர்மண: 

அஸ்மத் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

மாது: ப்ரபிதாமஹான் (தாயாரின் தகப்பனாருக்கு பாட்டனார்)

1. மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் ந ஸந்த்வோஷதி: 

……………………….. கோத்ரான் …………………. சர்மண:

அஸ்மத் மாது:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

2. மதுநக்ந முதோஷஸி மதுமத் பார்த்திவகும்ரஜ: மதுத்யௌ அஸ்து ந: பிதா

……………………. கோத்ரான் ……………………… சர்மண:

அஸ்மத் மாது:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி 

3. மதுமாந் நோ வனஸ்பதி: மதுமாகும் அஸ்து ஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந: 

…………………………….கோத்ரான் ……………………… .சர்மண:

அஸ்மத் மாது:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

மாத்ரு வர்க்கம் (ஸ்திரீகள்)

1. தாயாரின் தாயார்

…………………………… கோத்ராயா……………………. ..நாம்நீ: 

அஸ்மன் மாதாமஹீ: ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி 

(3 தடவை எள்ளும் ஜலமும் சேர்க்கவும்

2. மாது: பிதாமஹீ (தாயாரின் பாட்டி)

……………………………..கோத்ராயா: ………………….. நாம்நீ:

அஸ்மன் மாது: பிதாமஹீ: ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி 

(3 தடவை எள்ளும் ஜலமும் சேர்க்கவும்)

3. மாது: ப்ரபிதாமஹீ (தாயாரின் தகப்பனாருக்கு பாட்டி)

……………………………. .கோத்ராயா: ………………. ..நாம்நீ: 

அஸ்மன் மாது: ப்ரபிதாமஹீ: ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி 

(3 தடவை எள்ளும் ஜலமும் சேர்க்கவும்)

ஜ்ஞாதா ஜ்ஞாத மாது: பித்ரூன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி 

(3 தடவை எள்ளும் ஜலமும் சேர்க்கவும்) 

ஜ்ஞாதா ஜ்ஞாத மாது:பித்ரூ பத்னீ: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி 

(3 தடவை எள்ளும் ஜலமும் சேர்க்கவும்)

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த – தர்ப்பயத மே மாது: பித்ருந் – 

(3 தடவை எள்ளும் ஜலமும் விட்டு) 

திருப்யத திருப்யத திருப்யத –  -என்று சொல்லவும்.

உபஸ்தானம்

எழுந்திருந்து கைகூப்பிக் கொண்டு

நமோ வ பிதரோ ரஸாய, 
நமோவ பிதர: சுஷ்மாய
நமோ வ பிதரோ ஜீவாய,
நமோ வ பிதரோ மன்யவே. 
நமோ வ பிதரோ கோராய.
நமோவ பிதர. ஸ்வதாயை, 
பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின் 
லோகேஸ்த யுஷ்மாகுஸ் தே 
யே அஸ்மிந் லோகே மாம் தேநு || 
ஏதாஸ்மின் லோகேஸ்த பூயம் தேஷாம் 
வஸிஸ்டோ பூயாஸ்த 
யே அஸ்மின் லோகே 
அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்

— என்று சொல்லி உபவீதம் செய்து கொண்டு

3 தடவை புக்னங்களை ப்ரதக்ஷிணம் செய்யும் பொழுது

வாஜே வாஜே அவத வாஜிநோ: நோதநேஷு 
விப்ரா அம்ருதா ருதக்ஞா: 
அஸ்ய மத்ய பிபத மாதயத்வம்
த்ருப்யாத பிதிபிர் தேவயாநை; 
தேவதாப்ய: பித்ருப்யச்ச
மஹாயோகிப்ய ஏவச
நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை
நித்யமேவ நமோ நம:

– என்று சொல்லி, பிறகு ஸேவித்து அபிவாதனம் செய்ய வேண்டும் 

பூணூலை ப்ராசீனாவீதம் செய்து கொண்டு, எள்ளைக் கையில் எடுத்துக் கொண்டு…. 

ஆயாத பிதர:ஸோம்யா கம்பீரை:பதிபி: பூர்வ்யை: ப்ரஜாமஸ்மப்யம் தததோரமிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச 
அஸ்மாத் கூர்ச்சாத் ………………………..கோத்ராந் …………………………சர்மண: 

(3 பெயர்களை சொல்லி) 

அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் யதா ஸூகம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி 

—என்று சொல்லி பித்ரு வர்க்க (கிழக்கு) புக்னங்களில் எள்ளை சேர்க்கவும்.

மீண்டும் எள்ளை எடுத்துக் கொண்டு

ஆயாத மாது: பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாமஸ்மப்யம் தததோரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச 

அஸ்மாத் கூர்ச்சாத்  …………………. ..கோத்ராந் ………………..சர்மண: 

(3 பெயர்களை சொல்லி) 

அஸ்மத் மாதாமஹ: மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதாமஹாநாம் யதா ஸூகம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி 

– என்று சொல்லி மாத்ரு வர்க்க (மேற்கு) புக்னங்களில் எள்ளை சேர்க்கவும்.

புக்னங்கள் எல்லாவற்றையும் அவிழ்த்து எள்ளுடன் வலது உள்ளங்கையில் வைத்துக் கொண்டு. 

யேஷாம் ந பிதா ந ப்ராதா ந பந்துர் நான்ய கோத்ரிண: 
தே த்ருப்தி மகிலாயாந்து மயா த்யக்தை: குசைஸ்திலை: 

— என்று தீர்த்தத்துடன் விடவும்.

உபவீதம் செய்து கொள்ளவும்.

பவித்ரத்தை காதில் வைத்துக் கொண்டு ஆசமனம் செய்து பவித்ரத்தை அவிழ்த்து விடவும். –

காயேனவாசா மனஸேந்த்ரியைர்வா
புத்யாத்மனாவா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
ஸ்ரீமந் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி||


குறிப்பு : வரும் திங்கள், 17-07-2023 அன்று ஆடி மாச பிறப்பு தர்ப்பணம் மட்டுமே அனுஷ்டிக்க வேண்டியது. ஆடி அமாவாசை தர்ப்பணம் இந்த நாளில் கிடையாது.

இருப்பினும், அவரவர்கள் குடும்பப் பெரியோர்களிடமோ, குடும்ப வாத்யார் ஸ்வாமிகளிடமோ கேட்டு அதன்படி அனுஷ்டிக்கவும்.

// ஆடி அமாவாசை தர்ப்பணம் – ஆகஸ்ட் 16, 2023 //


தர்ப்பணம் தொகுப்பு: ப.வேங்கடகிருஷ்ணன், திருவல்லிக்கேணி


காபி எதற்காக..?

sirgazhi sivachidambaram coffee - 2026

டாக்டர் சீர்காழி ஜி. சிவசிதம்பரம் எம்.டி

எங்கிருந்தோ ஜென்மம் எடுத்து வந்திருந்தாலும், தென் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழத்திற்கே உரித்தான தனி முத்திரை காபி! உபசரிப்பிற்கும், உபகாரத்திற்கும், உள்ளன்பிற்குமான மந்திரச்சொல் காபி! பானங்களில் பாடம் படிக்காமலேயே டிகிரி வாங்கிய பட்டதாரி காபியே!

விவரம் தெரிந்த நாள் முதல் காபியே குடிக்காதவன் அடியேன். இப்போது நல்ல காப்பிக்கு அடிமை என ஆனது தனிக்கதை!

பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய “காபி எதற்காக” என்ற பாடலின்படி காபி – டீயை தவிர்த்தே எனது பால பருவம் அமைந்தது. ஏதோ ஒருவித வெறுப்பு இருந்தது. பழுப்பு நிற திரவம், அதை ஆவி பறக்க கஷ்டப்பட்டு விழுங்கி சுவைக்க ஆலாய்ப் பறக்கும் ஒரு கூட்டம், இதில் “ஸ்ட்ராங் பத்தலை” என்று சொல்லி கூடுதல் டிகாஷன் வாங்கி அதிக பழுப்பேற்றி, ஒரு காப்பியை இரண்டாக ஆக்கிப் பகிரும் கூட்டம், காலையில் பல் கூட விளக்காமல் சூடாக ‘பெட் காபி’ கையில் உடனே கிடைத்தால் போதும் என நினைக்கும் கூட்டம், என பல தினுசாக பலதரப்பட்ட காபி ரசிகர்களை, குறிப்பாக எனது வட்டத்தில் நான் அதிகம் கண்ட சங்கீதக்காரர்கள், மருத்துவத்துறையில் கண்ட செவிலியர்களைப் பார்த்தாலே பாவமாக இருக்கும்.

பல நேரங்களில் எங்கள் ஊர் பக்கம் சிறு குழந்தைகளுக்குக் கூட பால் பாட்டிலில் காபியை ஊற்றிக் கொடுப்பதை பார்த்து வியந்திருக்கிறேன். எனது தந்தை வழி பாட்டி திருமதி அவயாம்பாள் சிவசிதம்பரம் ‘ஆத்தா’ அவர்கள் வயதான காலத்திலும் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து சமையல் அறையில் காபி பில்டர் பாத்திரத்தை உருட்டிக் கொண்டிருப்பதையும், சொந்த பந்தங்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்கென ‘பெரிய வட்டா டம்பளரில் ஒரு சேரு காபி’ என்பதை ஒரு கெளரவத்தின் அடையாளமாக கொண்டு, சற்றே சிறிய டம்ளராக இருந்துவிட்டால் கனிவும் கடுமையும் கலந்த பாவனையுடன் ‘நயன பாஷையில்’ என் அன்புத் தாயார் சுலோசனா கோவிந்தராஜன் அவர்களை கண்டிப்பதைக் கண்டு சிறுவனாக சிரித்து இருக்கிறேன்.

இப்படி உறவுகள் மேம்படவும் காபி குடும்பத்தோடு ஒன்றி விட்டது. அப்பா இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் இசையில் தன் பாட்டுத் திறத்தால் உலகளாவிய ரசிகர்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும், அம்மா கையால் மணக்கும் அதிகாலை டிகிரி பில்டர் காபிக்கு பரமார்த்த ரசிகர். அதிகாலை நேரத்தில் எங்கள் உறக்கத்தைக் கலைப்பது, காதில் விழும் எம்.எஸ் அம்மாவின் சுப்ரபாதமும், மூக்கில் படும் பில்டர் காபி மணமும் தான்.

அதுவரை பால்மணம் மாறாத பாலகனாய் காபியை அறியாமல் இருந்த நான், பயிற்சி மருத்துவனாக மருத்துவப் பணியில் நுழைந்த காலத்தில் இரவு நேரப் பணியில் உற்சாக பானமாக தெளிவூட்டி விழித்திருக்க என் வாழ்வில் நுழைந்தது காபி. முன்னிரவு நேரங்களில் சுறுசுறுப்பை ஊட்டவும், வேலை குறைவான தருணங்களில் எங்களின் அரட்டைக் கச்சேரிக்கும் சுவை சேர்த்தது.

பல நேரங்களில் மருத்துவர்களுக்குள் நோய் தீர்க்கும் முறைகள் குறித்து போட்டியிட்டு பந்தயம் வைக்கும்போது, பரிசாக வைக்கப்பட்டதும் காபியே! சூடான காபி ஒரு நட்புப் பாலம்!செவிலித் தாயான எங்கள் இளம் நர்சுகள் சிரிக்கப் பேசி தங்கள் அன்புக் கரத்தால் கொடுக்கும் காபியை எப்படி மறுக்க தோன்றும்? இது உண்மையா என்று என் மூத்த வகுப்பு மருத்துவரான எனது அக்கா டாக்டர் ஞானவல்லி பிரதாபன், பக்கத்து வார்டில் இருந்து நேரில் வந்து புலன் விசாரித்து, வீட்டில் போட்டுக்கொடுப்பதும் நடக்கும்.

sirgazhi sivachidambaram - 2026

எனக்கென தனி பிளாஸ்க் குடுவையில் தனியாக பால் வாங்க அனுப்பி பணியாளர்களை அனாவசியமாக சிரமப்படுத்தக் கூடாது என்ற எண்ணமே காபி தடைக்கு விடை கொடுத்துவிட்டது. எப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்… என்று, ‘எதனால் நமக்கு சிறு வயதில் காபி பழக்கத்தை பெற்றோர் வற்புறுத்தவில்லை’ என்ற கேள்வியை பின்னர் எழுப்பி எனக்குள் சிந்தித்தபோது, – ‘உற்சாகத்தைத் தந்து உள்ளே இழுத்து, தினசரி ஒருவிதமான காபி நேர தலைவலி கொடுத்து, அதற்குத் தானே மருந்தாகி நிவாரணமும் தந்து, வசப்படுத்தி, வேலை நேரத்தையும் காபி நேரமாக்கி, சில நேரங்களில் அடிமைப்படுத்தி, வெலவெலக்க வைத்து, ‘காபியில்லாமல் நானில்லை’ என்று பாடக்கூட வைத்துவிடும் உண்மை புரிந்தது’.

ஆனாலும், புத்துணர்ச்சி வேண்டுகிற சமயங்களில், அது கச்சேரி பாடுகிற மேடையாக இருந்தாலும், முக்கிய பணியிடங்களாக இருந்தாலும், மறுமலர்ச்சியை முகமலர்ச்சியோடு ஏற்படுத்தித் தருவதில் காபிக்கு நிகர் காபியேதான்! ‘அதனால் நான் காபிக்கு மாறிட்டேன்’!

காபியின் சுவையை வர்ணிப்பது அழகை விமர்சிப்பதைப் போன்றது. ஒருவர் கண்ணுக்கு அழகாக இருப்பது, அடுத்தவன் கண்ணுக்கு அழகாய் இருக்காது.

மாமி கையால் கொழ கொழவென குழைவான சுண்டக் காய்ச்சிய நுரை பொங்கும் பாலில், இதோ நான் வலுவாக இருக்கிறேன் என்று கட்டியம் கூறும் மேல் பக்கக் கூடுதல் டிகாஷன் சொட்டுக் கோலத்துடன், புத்தம் புதிய பில்டர் பொடி மணக்க வரும் வலிமையான காபி நம்மைப் படுத்தும் பாடும், காவிரிக்கரைப் பகுதிகளில் சற்று நீரோட்டம் அதிகம் இருந்தாலும், வீட்டுக்கு வீடு அன்போடு தருகின்ற காபி, மிகச்சூடாக தொண்டையில் இதமாக இறங்கி, காபி மணம் மாறாமல் நீண்ட நேரம் நம் நாக்கிலும் நெஞ்சிலும் நிற்பதும், நகர வாழ்க்கையில் ஆரூடம் சொல்பவர்களும், கணக்கு பார்க்கும் ஆடிட்டர்களும் மிகச் ‘சிறிய மினியேச்சர் டம்ளர்களில்’ இன்ஸ்டண்ட் வகை காபிகளால் தங்கள் புத்தியை தீட்டி கூர்படுத்தவும் வந்தாரை உபசரிக்கவும்,
ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் காபி மெஷின்களிலும் வகைவகையாக எக்ஸ்பிரசோ, டபுள், கபே லாட்டே, கப்புசினோ என கசமுசாவென பெயர்களுடன், இது போதாதென்று நுரையில் வரைந்த மிதக்கும் டிசைன்களுடன் என வரிசை கட்டி நிற்பதும், ‘பேஷ் பேஷ்’ நரசுஸ் காபி, வாசன் காபி, லியோகாபி, கிருஷ்ணா காபி, கும்பகோணம் டிகிரி காபி, நாங்கள் விரும்பி பயன்படுத்தும் மயிலை அப்பு தெரு புவனேஸ்வரி காபி, திருவாரூர் பிரபாவின் பாரத் காபி, காலங்காலமாய் முத்திரை பதித்துக்கொண்டிருக்கும் மதுரை நியூ காலேஜ் ஹவுஸ் காபி என காபி பொடியின் ஆதி மூலத்தை, ரகசியங்களை பாமரனும் ஆராய வைப்பது என்பதும், தமிழகத்தில் காபிக்கே உண்டான தனிச் சிறப்பு! காபி சுவைஞர்களுக்குள் பட்டி மண்டபமே நடக்கும்!

காஞ்சிப் பெரியவர் மகான் ஶ்ரீ மஹாஸ்வாமிகள் வேடிக்கையாக ‘சுக்லாம்பரதரம் விஷ்ணும்’ ஸ்லோகத்தை காபியோடு ஒப்பிட்டதையும், வைஷ்ணவார்த்த அறிஞர் ஶ்ரீ சீனி வேங்கடாச்சாரியார் அதே ஸ்லோகத்தை கழுதையோடு உபமானமாக ஒப்பிட்டதையும் அம்மொழி அறிஞர்கள் சொல்வார்கள்! அதுவும் காபியின் புகழுக்குக் கிடைத்த சிறப்புத்தானே!

பொதுவாக பெரியவர்களுள் காபி கொடுத்து உபசரிப்பவர்களைப் போலவே, இருதய படபடப்பை ஏற்படுத்தும் காபியைக் குடிக்கக்கூடாது என்று அறிவுரைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகைய எண்ணத்தில் தான் பாவேந்தர் பாரதிதாசன் காபியை தவிர்த்துவிட்டு சுக்கு மல்லியை அதற்கு பதிலாக சாப்பிடச் சொன்னார்.

sirgazhi sivachidambaram coffee2 - 2026

Caffeine – கபீன் எனும் வேதியப் பொருள் காபியின் விஷமப் பலன்களுக்கும், அதே நேரத்தில் வீரியத்திற்கும் ஆதாரமாகிறது. மறுபக்கம், Coffee மணத்தில் செய்யப்பட்ட Toffee மிட்டாய்களும் கிடைக்கிறது.

காபி பித்தத்தால் நரை முடியை தலையில் இளமையிலேயே கூட்டுகிறது, ஆனால் மூளையை சுறுசுறுப்பாக்குகிறது என்றும் சொல்லப்படுகிறது. இப்படி பிரபலங்களை போலவே, முரண்பாடுகளைக் கொண்ட கொண்ட பிரபலம் காபி!

கல்யாணப்பரிசு படத்தில் ஏ.எம்.ராஜா அவர்கள் இசையில், எனதருமைத் தந்தையார் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் ‘டீ.. டீ.. டீ..’ என்று தேநீர் பற்றி ஒரு நகைச்சுவைப் பாடலை டணால் தங்கவேலு அவர்களுக்காக பாடியிருப்பார். மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய அந்த பாடலில் டீ பலருக்கு உணவாகவும் உணர்ச்சியாகவும் உள்ளதாக எழுதியிருப்பார். அது கச்சிதமாக காபிக்கும் பொருந்தும்.

அந்த வகையில் காபி அனுபவத்தை கலக்கலாய் சிறக்க வைக்கும் தாய்க்குலங்கள் நிறைந்த எங்கள் வீடு, கொடுத்து வைத்ததே! பிரேசிலில் ஜாய்ன் வில்லியில் என் மகள் வைஷ்ணவி ஶ்ரீதுர்காபிரசாத் தரும் பிரேசில் கட்டாங்காபியும், அமெரிக்காவில் என் சகோதரி ஞானவல்லி Sale-ல் வகை வகையான காபிகளை வாங்கி basement – பாதாள அறையில் பூஜை அறையுடன் சேகரித்து வைத்துவிட்டு குடிப்பதையும் சொல்ல மறந்து விட்டேனே!! அதுவும் சிறப்புத்தான்!

எனதருமைத் தாயார் சுலோச்சனாம்மா அவர்களின் காபியை கவிவேந்தர் வாலி முதல் கடம் வித்வான் பெரியவர் ஆலங்குடி ராமச்சந்தின் போன்ற பல பெரியவர்கள் ‘சீர்காழி பாட்டைப்போல சுருதி சுத்தம்’ என்று சொல்வதும், எங்கள் வீட்டிற்குள் நுழையும்போதே “அண்ணி, எனக்கு சூடாகக் காபி வேணும்” என்று உரிமையுடன் குரல் கொடுப்பதும் வழக்கம்.

இன்றும் என் மனைவி சாந்தி மீனாட்சி காலை வேளைகளில் போடுகிற காபிக்கு, மெரினா பீச்சில் என்னோடு வாக்கிங் நடை மற்றும் யோகா பயிற்சி செய்யும் நண்பர்கள் ரசிகர்களாகவே மாறிவிட்டார்கள். எனக்கும் இந்த மாலை 4.30 மணிக்கு காபி வராவிட்டால் ஏதோ ஒன்று குறைந்தது போன்ற உணர்வு ஏற்படும்.

அதை எங்கள் வீட்டு மருமகளாக வந்த நாள் முதல் உணர்ந்து கொண்ட என் இனிய பட்டதாரி மருமகள் நிவேதா சந்தோஷ்முருகன் தரும் சூடான டிகிரி காபி, ஒரு பட்டம் வாங்கிவிட்ட திருப்தியை தரும்.

எனது இளைய மருமகள் ஐஸ்வர்யா வருண்கோவிந்த் அவர்கள் வீட்டிற்கு பெண் பார்க்க சென்ற அன்று கொடுத்த சூடான காபியிலேயே வெற்றி பெற்றுவிட்டார். உணவுக்கு நிகரான காபிக்குப் பஞ்சமில்லை!

இன்றைய காலப்போக்கில் சற்று சிந்தித்தால், மனிதன் டாஸ்மாக் சரக்கு இல்லாமல் கூட இருப்பான். பழகிய காபி இல்லாமல் இருக்கவே முடியாது!!


(டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் சமூக வலைத்தளப் பதிவில் இருந்து…)


கோட்டைமாடன் கோயிலில் சாமகொடை பூஜை!

sengottai temple function - 2026

செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் கச்சேரி காம்பவுண்ட் வளாகத்தில் மருத்துவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீகோட்டைமாடன், ஸ்ரீ கோட்டை மாடத்தி மற்றும் ஸ்ரீ கோட்டை முத்துமாரியம்மன் கோயில் உள்ளது.

இந்த கோவிலில் 22 வது ஆண்டு கொடைவிழா கடந்த 7 ஆம் தேதி திருக்கால்நாட்டு வைபவத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமமும், இதனை தொடர்ந்து பால்குடம் ஊர்வலமும், நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும்,அலங்கார தீபாராதனையும் நடந்தது.

பின்னர் கோயில் வளாகத்தில் மதியம் அன்னதானமும், மாலையில் பொங்கலிடுதல் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து பூத்தட்டு ஊர்வலமும் நடந்தது.

sengottai temple function1 - 2026

பின்னர் இரவு 12 மணிக்கு சாமகொடை பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா மாரியப்பன் தலைமையில், தலைவர் கருப்பையா, செயலாளர் செல்வா, பொருளாளர் கருப்பசாமி மற்றும் விழாக்கமிட்டியினா். சிறப்பாக செய்திருந்தனர்.

பரத் – வாணி போஜன் நடித்த த்ரில்லர் – ‘லவ்’ பட இசை, டிரெய்லர் வெளியீடு!

love film trainlor - 2026

“லவ்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

RP Films சார்பில் RP பாலா தயாரித்து இயக்க, நடிகர்கள் பரத் – வாணி போஜன் நடிப்பில், காதல், த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள படம் “லவ்”. ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

மூத்த பத்திரிக்கையாளர்கள் இணைந்து “லவ்” படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்.

பாடலாசிரியர் AA PA ராஜா பேசியதாவது…
முதலில் பிஜி முத்தையா சார் தான் இந்த படத்திற்காக என்னை கூப்பிட்டார். இயக்குநர் யாரெனக் கேட்டபோது RP பாலா என்றார். அவரே பல படங்களுக்கு பாடல்கள் எழுதியவர், மிகச்சிறந்த பாடலாசிரியர். அவர் என்னை ஏன் கூப்பிடுகிறார் என்று தோன்றியது. பாடல் எழுதத் தெரிந்த இயக்குநரிடம் பணிபுரிவது மிகக் கடினம். ஆனால் அவர் நான் பிஸியாக இருக்கிறேன், நீங்கள் எழுதுங்கள் என்றார். வைரல் வரிகள் இல்லாமல் முழுக்க தமிழில் பாட்டுக் கேட்ட முதல் இயக்குநர் இவர் தான். அதுவே மிக மகிழ்ச்சியாக இருந்தது. படத்தின் பாடல் அற்புதமாக வந்துள்ளது, பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர்  ரோனி ரஃபேல் பேசியதாவது…
தமிழில் இது எனது முதல் படம். கேரளாவில் நிறைய படங்களுக்கு இசையமைத்துள்ளேன். மலையாளப் படம் மூலம் தான் பரத் சார் அறிமுகம், பாலாவும் அறிமுகம். தமிழில் வேலை செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. பரத் சாரின் 50வது படத்தில் வேலை பார்ப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குனர் RP பாலாவுக்கு நன்றி. பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளன. படமும் நன்றாக வந்துள்ளது, படம் பார்த்து ஆதரவளியுங்கள் நன்றி.

எடிட்டர் அஜய் மனோஜ் பேசியதாவது,
படம் பார்த்தேன், நன்றாக உள்ளது. பரத் மற்றும் கதாநாயகியின் கடைசி 20 நிமிட காட்சிகள் அருமையாக வந்துள்ளது. பரத் சாரின் 50வது படத்தில் பணிபுரிவது மகிழ்ச்சியாக உள்ளது. வாய்ப்பளித்த இயக்குநர் RP பாலா சாருக்கு நன்றி.

ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா பேசியதாவது…
ஒரு டீமோட பெரிய சக்ஸஸ் என்பது அந்த டீம் வெற்றி பெற்று மீண்டும் அதே டீம் சேர்ந்து வேலை பார்ப்பது தான். அது போல் “லவ்” படம் வெற்றி பெற்று இதே டீம் மீண்டும் வேலை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் அனைவருக்கும் நன்றி.

நடிகை சுயம் சித்தா பேசியதாவது…
எனக்குத் தமிழ் கொஞ்சமாகத்தான் தெரியும். கோவிடுக்கு பிறகு வந்த முதல் படம் இது. எனக்கு மிகவும் நெருக்கமான படம், பட வாய்ப்பு தந்த RP பாலா சாருக்கு நன்றி, படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

டேனியல்  பேசியதாவது….
இப்போதெல்லாம் யாரும் கதை சொல்வதில்லை, போன் செய்து,  என்ன லுக்?  ஃப்ரியா?  என கேட்டுவிட்டு, ஷூட்டிங் கூப்பிட்டு விடுகிறார்கள். டெய்லி பேட்டா போல் வேலை வருகிறது. இப்போதைய சினிமா அந்த மாதிரி மாறிவிட்டது.  லவ் படம் நன்றாக வந்துள்ளது இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகை வாணி போஜன் பேசியதாவது,
நான் நிறையப் படங்கள் நடித்திருக்கிறேன். ஆனால் சில படங்களே மனதிற்கு முழு திருப்தியை கொடுக்கும். இந்தப்படத்தில் நான் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது. இந்தப் படத்தில் நானும் பரத்தும் நிறைய சண்டைகள் போட்டுள்ளோம், அடிகளும் பட்டது. ஆனால் அது படத்திற்காக மட்டும் தான், படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது உங்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் RP பாலா பேசியதாவது..
படம் ஜூலை 28 ஆம் தேதி வருகிறது. இப்போது படத்தை எடுப்பதை விட படத்தை ரிலீஸ் செய்வது கடினமாக இருக்கிறது. இப்படத்தின் டீம் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். பரத் படம் முழுவதும் பெரும் உறுதுணையாக இருந்தார். முத்தையா சார் இன்று வரை இப்படத்திற்கு வேலை செய்கிறார். அவர் படம் போல் பார்த்துக் கொள்கிறார். அவருக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். இசையமைப்பாளர் மரைக்காயர் படத்தில் வேலை செய்த போது, இந்தப்படம் பற்றிச் சொன்னேன். எனக்காக இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். டேனியல் மிகச் சிறந்த நண்பர். பரத் என்னை நம்பி 50வது படம் தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது, உங்களுக்குப் பிடிக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் பரத் பேசியதாவது..
இங்கு எனது 50 வது படத்தில் உங்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியது மகிழ்ச்சி. என் திரை வரலாற்றில் மோசமான படங்கள் செய்த போதும், நீ நல்லா பண்ணியிருக்க, நல்லா பண்ணு, நல்லா வருவ என எனக்குத் தொடர்ந்து ஊக்கம் தந்து வரும் உங்களுக்கு நன்றி. இந்தப் பயணம் மிகப்பெரியது. ஷங்கர் சார், ஏ எம் ரத்னம் சாருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் செய்யும் போது மிக உற்சாகத்துடன் வேலை பார்க்கிறோம். ஆனால் படம் ரிலீஸ் என வரும் போது பெரும் பிரச்சனைகள் வந்து நிற்கிறது, மன உளைச்சல்கள் தருகிறது. சினிமா இரண்டாகப் பிரிந்து போயிருக்கிறது. ஆனால் நான் எப்போதும் என் வேலையை சிறப்பாக செய்து வருகிறேன், அது தான் முக்கியம். இந்தப் படம் எங்கேயும் உங்களுக்கு போரடிக்காது, ஒரு சிறப்பான படம் பார்க்கும் அனுபவம் தரும். என் இயக்குநர் தயாரிப்பாளர் RP பாலா சாருக்கு நன்றி. படக்குழுவினருக்கு நன்றி.

Love Trailer –