Home Blog Page 339

‘ஜனம் தமிழ்’ டிஜிட்டல் ஒளிபரப்பு தொடக்கம்!

janam tv opening - 2026

‘ஜனம் தமிழ்’ செய்தித் தொலைக்காட்சியின் ‘டிஜிட்டல்’ ஒளிபரப்பு தமிழகத்தில் நேற்று தொடங்கப்பட்டது.

‘ஜனம்’ தொலைக்காட்சி மலையாள செய்திகளுக்கான முக்கியமான சாட்டிலைட் சேனலாக உள்ளது. 2015ல் மலையாளத்தில் க்ரௌட் ஃபண்டிங் எனப்படும் ஆர்வலர்கள் பலர் சேர்ந்து முதலீடு செய்து உருவாக்கப்பட்ட சேனலாக அது உள்ளது. தொடங்கப்பட்ட சிறிது காலத்திலேயே கேரளத்தில் செய்திகளுக்கான தளத்தில் தனியிடம் பதித்தது ஜனம் டிவி.

இந்நிலையில் தமிழில் அது போல் ஒரு முயற்சி கொண்டு வரப்பட வேண்டும் என்று தேசியவாதிகள் பலரும் தெரிவித்த கருத்துகள் வடிவாக்கம் பெற்று, ஜனம் டிவி.,யே தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது தன் தமிழ் செய்திச் சேனலை ‘ஜனம் தமிழ்’ என்ற பெயரில் தொடங்கியுள்ளது. இதன் லோகோ வெளியீடு இந்த நிகழ்ச்சியில் நடைபெற்றது. ஜனம் டிவி., தமிழ் தோற்றத்துக்கான பின்னணியை அதன் நிர்வாக இயக்குனர் மற்றும் ஒரேநாடு இதழாசிரியர் நம்பி நாராயணன் ஆகியோர் எடுத்துரைத்தனர்.

சென்னையில் நேற்று மாலை நடந்த இதன் தொடக்க விழாவில் ‘ஜனம் தமிழ்’ டிஜிட்டல் ஒளிபரப்பை தமிழக பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடக்கி வைத்தார். ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அதன் யுடியூப் சேனலை தொடங்கி வைத்தார். சக்தி மசாலா அதிபர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் ஜனம் தமிழ் பேஸ்புக் பக்கத்தைத் தொடங்கி வைத்தார். மதுரை பேராசிரியர் அதன் இன்ஸ்டாக்ராம் பக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக., முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம், ஐ.ஆர்.எஸ்., அதிகாரி நந்தகுமார், பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன், அதிமுக., முன்னாள் எம்.எல்.ஏ.,வும் முன்னாள் டிஜிபி.,யுமான நட்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

விழாவில் பேசிய அண்ணாமலை, ”தமிழகத்தில், தேசியம் குறைவாக பேசப்படுகிறது. தேசிய செய்திகள் விரிவாக அலசப்படுவதில்லை. உலகின் தொன்மையான தமிழை உலகம் முழுதும் கொண்டு செல்ல வேண்டும். செய்தி தொலைக்காட்சிகளில், 80 சதவீதம் அரசியல் தான். மற்ற செய்திகளையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்காகவே ‘ஜனம் தமிழ்’ துவங்கப்பட்டுள்ளது” என்றார்.

முன்னதாக, டாக்டர் சீர்காழி சிவசிதம்பரத்தில் தமிழிசைக் கச்சேரி இடம்பெற்றது.

உலகக் கோப்பை கிரிக்கெட் (பகுதி 8): 1999 போட்டி!

world cup cricket 1999 - 2026

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள்
பகுதி 8 – 1999 போட்டி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

1999 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை, “இங்கிலாந்து ’99” என்றும் அழைக்கப்பட்டது, இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஏற்பாடு செய்த கிரிக்கெட் உலகக் கோப்பையின் ஏழாவது பதிப்பாகும். இது முதன்மையாக இங்கிலாந்தால் நடத்தப்பட்டது. சில தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டிகள் ஸ்காட்லாந்து, அயர்லாந்து, வேல்ஸ் மற்றும் நெதர்லாந்திலும் விளையாடப்பட்டன.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. வழக்கமான நான்கு வருட இடைவெளியில் இருந்து விலகி, முந்தைய கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டி நடத்தப்பட்டது.

கிரிக்கட் ஒருநாள் உலகக் கோப்பை 1992இல், 1987 உலகக் கோப்பைக்குப் பிறகு 4 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்களுக்குப் பிறகு நடைபெற்றது. உலகக் கோப்பை 1987 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றது.

அதன்படி, அடுத்த உலகக் கோப்பை 1991 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் திட்டமிடப்பட்டது, ஆனால் குழப்பம் காரணமாக (1991 இல் நடத்தப்பட்டிருந்தால் அது 3 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் கழித்து நடக்கின்ற உலகக் கோப்பையாக இருக்கும்) 1992 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற்றது.

ஐசிசி 1996 இல் அடுத்த உலகக் கோப்பைக்கு 4 ஆண்டு விதிப்படி நடத்த முடிவு செய்தது, 1992இல் தவறான வரிசை, எனவே 1999 உலகக் கோப்பை 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்டது, 2000இல் அல்ல.

இதில் 12 அணிகள் பங்கேற்று மொத்தம் 42 போட்டிகளில் விளையாடின. குழு கட்டத்தில், அணிகள் ஆறு பேர் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டன; ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள மற்ற அனைவரையும் ஒரு முறை விளையாடியது.

ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் மூன்று அணிகள் சூப்பர் சிக்ஸுக்கு முன்னேறின, இது 1999 உலகக் கோப்பைக்கான புதிய கருத்தாகும்; ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவிலிருந்து மற்ற தகுதிக்கு எதிரான ஆட்டங்களில் இருந்து புள்ளிகளை முன்னோக்கி கொண்டு சென்று பின்னர் மற்ற குழுவிலிருந்து வந்த அணிகளோடு விளையாடியது. (வேறுவிதமாகக் கூறினால், குழு A யிலிருந்து ஒவ்வொரு தகுதிப் போட்டியும் குழு B யிலிருந்து ஒவ்வொரு தகுதிப் போட்டியிலும் மற்றும் நேர்மாறாகவும்). சூப்பர் சிக்ஸரில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

1999 உலகக் கோப்பை 12 அணிகளைக் கொண்டிருந்தது எனப் பார்த்தோம். போட்டியை நடத்தும் இங்கிலாந்தும் மற்ற எட்டு டெஸ்ட் நாடுகளும் உலகக் கோப்பைக்குத் தானாக தகுதி பெற்றன. மீதமுள்ள மூன்று இடங்களுக்கான அணிகள் மலேசியாவில் 1997 ஐசிசி டிராபியில் முடிவு செய்யப்பட்டன.

1997 ஐசிசி டிராபியில் 22 நாடுகள் போட்டியிட்டன. இரண்டு குழு நிலைகளை கடந்து, அரையிறுதியில் கென்யா மற்றும் வங்காளதேசம் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றன. ஸ்காட்லாந்து மூன்றாவது இடத்திற்கான பிளேஆஃப் போட்டியில் அயர்லாந்தை தோற்கடித்ததன் மூலம் தகுதி பெறும் மூன்றாவது நாடாகும்.

குரூப் A பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஜிம்பாபே அணிகள் அடுத்த சுற்றான “சூப்பர் சிக்ஸ்” சுற்றுக்குத் தகுதி பெற்றன. இங்கிலாந்து, இலங்கை, கென்யா ஆகிய அணிகள் தகுதிபெறவில்லை. குரூப் B பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன. மேற்கு இந்தியத் தீவுகள், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகள் தகுதி பெறவில்லை.

குரூப் A பிரிவில் இருந்த அணிகள் தங்களுக்குள் ஏற்கனவே விளையாடிவிட்டதால், அந்த ஆட்டங்களில் பெற்ற புள்ளிகளேடு தற்போது குரூப் B பிரிவில் தேர்வான அணிகளோடு மட்டு விளையாடின. இவ்வாறு முதல் நான்கு அணிகள், அதாவது பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்குத் தேர்வாயின.

அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வென்றது; ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்க அணியை ஒரு தொழில்நுட்ப விதியின்படி வென்றது. இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை எளிதில் வென்று கோப்பையை வென்றது.

இந்த உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர் ராகுல் ட்ராவிட் ஆவார், இவர் 461 ரன் அடித்தார். சௌரவ் கங்குலி 379 ரன் அடித்து அதிக ரன் அடித்தவர்கள் வரிசையில் மூன்றாம் இடம் பிடித்தார். அவர் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 183 ரன்கள் அடித்தார்.

சூப்பர் சிக்ஸ் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எளிதில் வென்றது. ராகுல் திராவிட் (145 ரன் & 104* ), டெண்டுல்கல் (140*), அஜய் ஜதேஜா (100*) ஆகியோரும் சதம் அடித்தனர்.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த லான்ஸ் க்ளுஸ்னர் மிகச் சிறப்பாக ஆடினார். பேட்டிங்கில் அவரது சராசர் 140.5 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 122.2 ஆகவும் இருந்தது. அவர் 17 விக்கட்டுகளும் எடுத்தார்.

சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவிலில் ஆனி சனி மகாபிரதோஷ விழா!

sani pradosham in pralayanathar temple - 2026

சோழவந்தான் பிரளய நாத சிவன் கோவிலில் ஆனி மாத சனி மகா பிரதோஷ விழா

மதுரை மாவட்டம்சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் ஆனி மாத சனி மகாபிரதோஷ விழா நடந்தது.பிரசித்தி பெற்ற சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ளபிரளயநாத(சிவன்)கோவிலில்ரன ஆனி மாத சனி மகாபிரதோஷ விழா நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 11அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர்.சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

எம்விஎம் குழுமத்தலைவர் மணிமுத்தையா,கவுன்சிலர்கள் வள்ளிமயில், டாக்டர் மருதுபாண்டியன்,தக்கார் இளமதி மற்றும் கோவில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர் சிவ பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் சனிபிரதோஷ விழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி,அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர்.பூஜைகள் நடந்தது

மாத்தூர் தொட்டிப்பாலமும் காமராஜரும்!

mathur thottipalam - 2026

மாத்தூரில் தொட்டிப்பாலம் அமைத்த பாரதரத்னா காமராஜர்!

ஆற்றைக் கடக்க பாலம் கட்டுவார்கள். ஆனால் ஒரு நீர்நிலையை கடக்க இன்னொரு பாலம் கட்டுவார்கள் என்றால்… அதாவது ஒரு நீர் நிலையை இன்னொரு கால்வாய் கடக்கிறது என்றால் ஆச்சரியம்தானே.

கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்பட்டணம், கருங்கல்,, புதுக்கடை ஆகியவை பூவியியல் அடிப்படையில் மேடான பகுதி. இங்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. காமராஜர் தமிழக முதல்வராக இருந்தபோது இது அவரது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதைச் சரிசெய்ய ஒரு திட்டம் தீட்டப்பட்டது.

அதன்படி சிற்றாறு அணையில் உள்ள தண்ணீரை கால்வாய் மூலமாக இந்தப் பகுதிகளுக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டது. குறுக்கிட்டது பரளியாறு. மலைப் பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையும், கூட்டுவாவுப்பாறை என்ற மலையையும் இணைத்து இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ளது தான் இந்த மாத்தூர் தொட்டிப்பாலம்.

இரண்டு மலைகளையும் இணைக்கும் இந்த இந்தப் பாலம் 1240 அடி நீளம், தரை மட்டத்திலிருந்து 104 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 28 தூண்கள் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு தூணும் 16 சதுர அடி சுற்றளவு கொண்டவை. தண்ணீர் கொண்டு செல்லும் சிலாப்புகள் தொட்டி வடிவில் உள்ளதால் தொட்டிப்பாலம் என பெயராம்.

தண்ணீர் செல்லும் தொட்டிகள் 8 அடி உயரம் கொண்டவை. 5 அடி உயரத்தில் தண்ணீர் சென்று கொண்டிருக்கும். 104 அடிக்கு கீழே பரளியாறு ஓடிக் கொண்டிருக்கும். தொட்டிப் பாலத்தின் இன்னொரு பகுதி நடைபாதையாக பயன் படுகிறது.

இந்தப் பாலம் ஆசியாவிலேயே மிகப் பெரிய தொட்டிப் பாலம். இந்தப் பாலம் சர்வதேச அளவில் அனைவரின் பார்வையைக் கவர்ந்து இபபோதும் அற்புதமாகக் காட்சி அளிக்கிறது. இந்தத் தொட்டிப் பாலத்தின் மூலம் குமரி மாவட்டத்தின் ஒரு பகுதியினர் விவசாயமும், குடிநீர் தேவையும் பூர்த்தியாகிறது.

காமராஜரின் தொலைநோக்குப் பார்வை காரணமாகவே இந்த பாலம் இங்கு அமைந்து இன்று கன்னியாகுமரி மாவட்டத்தை செழிப்புடன் வைத்திருக்கிறது.

காலம் உள்ளவரை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் காமராஜரை மறக்க மாட்டார்கள்! ஓங்குக அவரது புகழ்!

அபிஷேக்

ஆடி அமாவாசை பிதுர் தர்ப்பணம்; ஜூலை 17ல்!

amavasai pitru tharpanam - 2026

ஆடி அமாவாசை பிதுர் தர்ப்பணத்துக்கான ஏற்பாடுகள் மதுரை பகுதிகளில் நடந்து வருகிறது. ஆடி மாதம் வரும் ஜூலை 17 திங்கள் கிழமை பிறக்கிறது. ஆடி முதல் நாளே அமாவாசையும் வருகிறது. மேலும் ஆடி மாத இறுதியிலும் ஓர் அமாவாசை திதி வருகிறது. எனவே எந்த நாளில் அமாவாசை முன்னோர் வழிபாடு செய்வது என்பதில் பலருக்கும் ஒரு குழப்பம் இருந்தது.

காஞ்சி சங்கர மடத்தை சேர்ந்த சாஸ்திர பண்டிதர் சுந்தரராம வாஜ்பாய் கூறியதாவது: இந்தாண்டு ஆடி மாதம் இரண்டு அமாவாசை வருகிறது. இதில் முதலில் வரும் ஆஷாட அமாவாசையை கடைபிடித்தால் விசேஷம். ஆடி இறுதியில் வரும் அமாவாசையையும் கடைபிடிக்கலாம். இரண்டு அமாவாசையையும் கடைபிடிப்பதும் நல்லது என்றார்.

எனவே, இம்மாதம் 17ஆம் தேதி திங்கட்கிழமை ஆடி மாத பிறப்பு மற்றும் ஆடி அமாவாசை ஒட்டி மதுரை நகரில் உள்ள கோயில்களில், தீர்த்தங்களில் அமாவாசை சிறப்பு தர்ப்பணம் நடைபெறுகிறது. முன்னோர்களுக்கு அமாவாசை மற்றும் மாதப் பிறப்பு என்று தர்ப்பணம் செய்வது வழக்கமாக உள்ளது.

குறிப்பாக ஆடி அமாவாசை, புரட்டாசி மாகாளய அமாவாசை, தை அமாவாசை நாட்களில் பிதுர்களுக்கு (முன்னோர்களுக்கு) தர்ப்பணம் செய்வது உகந்தது என்று நமது முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. அமாவாசை தினத்தில், வாரிசுகள் தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியமான செயலாகும். இதைத் தொடர்ந்து மதுரை நகரில் பல்வேறு இடங்களில் கோயில்களில் தீர்த்தங்களில் அமாவாசை தர்ப்பணம் நடைபெறுகிறது.

மதுரை பகுதியில் ஆடி அமாவாசை தர்ப்பணம் நடைபெறும் சில இடங்கள்…

மதுரை, அண்ணாநகர், யானைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில், 17.07.23..திங்கள்கிழமை காலை 6.15…7..மணி வரையிலும், காலை 7.15..மணி முதல் 8.15..மணி வரை மதுரை அண்ணாநகர் வைகை காலனி, வைகை விநாயகர் ஆலயத்திலும், காலை 8.30..மணி முதல் 9.20..மணி வரை , மதுரை மேலமடை மருதுபாண்டியர் தெரு அருகே வி.ஏ.ஒ. அலுவலகம் முன்புறம் உள்ள அருள்மிகு சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், ஆடி அமாவாசை தர்பணம் செய்து வைக்கப்படும்.

தர்ப்பணத்துக்கு வருபவர்கள், கறுப்பு எள், வாழைப்பழம், பூக்கள், விளக்குகள் கொண்டு வரவேண்டும். கோயில் வாசலிலும் கிடைக்கும். தர்ப்பணம் செய்ய தாம்பாளம், டம்ளர் கொண்டு வரவேண்டும்.
பெண்கள், காய்கறிகள், அரிசி தானம் அளிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, 9942840069, 8760919188 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்

மதுரை பகுதியில்… காமராஜர் பிறந்த நாள் விழா!

kamarajar birthday in madurai palamedu - 2026

கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா மதுரை பகுதியில் பல்வேறு இடங்களிலும் கொண்டாடப்பட்டது.

மதுரை மாவட்டம், சோழவந்தான், ஐயப்பாநாயக்கன் பட்டி, மேலக்கால், தேனூர் உட்பட இப்பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் 121-வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் 121வது பிறந்த தின விழா சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம், இந்து நாடார் உறவின்முறை சார்பாக காமராஜர் திருவுருவ படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் வையாபுரி முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜபாண்டியன், செயலாளர் சௌந்தரபாண்டியன்,நிர்வாகி மனோகரன் என்ற நாகராஜ் ஆகியோர் பொதுமக்களுக்கு கேசரி வழங்கினார்கள். மாணவ, மாணவிகளுக்கு டிக்ஷனரி வழங்கினார்கள்.

சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டி கிராம கமிட்டி செயலாளர் வி. பி .கந்தசாமி தலைமையில் கிராம மக்கள், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள்.

சோழவந்தான் இந்துநாடார் உறவின்முறை பரிபாலன சங்கத் தலைவர் தங்கபாண்டியன் தலைமையில், செயலாளர் ராஜகுரு, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். இதில், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அ.ம.மு. க நகரச் செயலாளர் திரவியம்,வாடிப்பட்டி நகரச் செயலாளர் மதன் ஆகியோர் முன்னிலையில் ஒன்றியச் செயலாளர் விரும்பராஜன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். மாவட்ட துணைச் செயலாளர் வீரமாரிபாண்டி, இனிப்பு வழங்கினார்.

நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்டச் செயலாளர் இருளாண்டி தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் சங்கர்,முத்தீஸ்வரர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் சக்கரபாணி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். தலைவர் சங்கிலிமுருகன் இனிப்பு வழங்கினார்.

பேரூராட்சி சேர்மன் ஜெயராமன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். துணைத் தலைவர் லதாகண்ணன் இனிப்புவழங்கினார். பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின் வார்டு கவுன்சிலர்கள் வக்கீல் சத்யபிரகாஷ், குருசாமி,முத்துச்செல்விசதீஷ்குமார் உள்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பாக ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மாவட்டக் கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பேரவை செயலாளர் ராஜபாண்டி, கூட்டுறவு சங்க தலைவர் மலைச்சாமி கேபிள் மணி உள்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

காங்கிரஸ் கட்சி சார்பாக சங்கர பாண்டி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலக்கல் கிராமத்தில், நாடார் இளைஞர் பேரவை சார்பாக காமராஜர் திருவுருவப் படத்தை வைத்து மாலை அணிவித்தனர். இதில், இனியா மொபைல் உரிமையாளர் மணி தலைவர் ராஜா,செயலாளர் பிரகாஷ் மற்றும் நாடார் இளைஞர் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

kamarajar birthday event in madurai melakkal - 2026

பாலமேட்டில், காமராஜர் பிறந்த நாளையொட்டி சிலைக்கு நாடார் சங்கம் சார்பாக பால் அபிஷேகம்!

கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் 121வது பிறந்த நாளையொட்டி, மதுரை மாவட்டம் பாலமேடு பத்ரகாளியம்மன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இந்து நாடார் உறவின்முறை சங்கம் சார்பாக பால், தீர்த்தம் அபிஷேகம் செய்யப்பட்டு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கணேசன் செயலாளர் சுரேஷ், பொருளாளர் ரமேஷ், பள்ளியின் தலைவர் கரிகாலன், துணைத் தலைவர் சிவாஜி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சிவகுமார், பொருளாளர் திருஞானம், பாலமேடு பேரூராட்சித் தலைவி சுமதி பாண்டியராஜன், கவுன்சிலர் செல்வி விஜயராஜன், பால் பண்ணைத் தலைவர் பன்னீர்செல்வம், மற்றும் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

செங்கோட்டை வாஞ்சிநாதன் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா!

0
kamaraj birthday in sengotai vanchi school - 2026

செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப் பள்ளியில் காமராஜர் 121வது பிற்நதநாள் விழா.

செங்கோட்டை சுதந்திர போராட்ட வீரர்வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து செங்கோட்டை ரோட்டரி கிளப் சார்பில் கர்மவீரர்காமராஜா் 121வது பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு செங்கோட்டை ரோட்டரி கிளப் தலைவா் பால்ராஜ் தலைமைதாங்கினார். செயலாளா் சீதாராமன், பொருளாளா் இராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலைவகித்தனா்.

பள்ளி தலைமைஆசிரியா் சேவியா்அலெக்சாண்டிரியா அனைவரையும் வரவேற்று பேசினார். அதனை தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட காமராஜா் திருவுருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்யப்பட்டது.

பின்னா் பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரோட்டரி கிளப் உதவி ஆளுநர் சித்தன்ரமேஷ் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.

மாணவர்களுக்கு நிர்வாகிகள் கல்வி உபகரணங்கள், நோட்புக் இனிப்புகள் வழங்கினா். நிகழ்ச்சியில் சங்க உறுப்பினா்கள் வீடி.குமார், சதீஷ்(எ)லெட்சுமணன் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் பள்ளி ஆசிரியா் நன்றி கூறினார்.

WI Vs IND: முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி: அஸ்வின், ஜெய்ஸ்வால் சாதனை!

west indeis india cricket test copy - 2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

மேற்குஇந்தியத் தீவுகளில் டோமினிக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று இருக்கிறது. தமிழக வீரர் அஸ்வின் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது அஸ்வின் தன்னுடைய மாயாஜால சுழற்பந்துவீச்சால் அந்த அணியின் முக்கிய வீரர்கள் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் அந்த அணி 64.3 ஓவரில் 150 ரன்களில் ஆட்டமிழக்க, அதில் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் முதல் நாளிலேயே இந்திய அணிக்கு 23 ஓவர்கள் ஆடவேண்டி வந்தது.

முதல் நாளில் முதல் இன்னிங்க்சை ஆடிய இந்திய அணியின் அணித்தலைவர் ரோஹித் ஷர்மாவும் டெஸ்ட் போட்டியில் முதன் முறையாக ஆடும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் சிறப்பான தொடக்கம் தந்தனர். அன்றைய நாளின் முடிவில் ரோஹித 30 ரன்னோடும் ஜெய்ஷ்வால் 40 ரன்னோடும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இரண்டாம் நாளில் அணியின் ஸ்கோர் 229 என இருக்கும் நிலையில் ரோஹித் 75.4ஆவது ஓவரில் 103 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஆடவந்த சுப்மன் கில் 6 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கட் இழப்பிற்கு 312 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 143 ரன்னுடனும் விராட் கோலி 36 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மூன்றாம் நாள் விராட் கோலியுடன் இணைந்து ஆடிய ஜெய்ஷ்வால் 126ஆவது ஓவர் முடிவில் 171 ரன்னுக்கு விக்கட் இழந்து இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார். அவரைத்தொடர்ந்து அஜிங்க்யா ரஹானே சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, ஜதேஜாவும் கோலியும் அணியின் ஸ்கோரை 405 ரன்னுக்கு உயர்த்தினர். அச்சமயத்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார். அணித்தலைவர் ரோஹித ஷர்மா 152.2ஆவது ஓவரில் அணியின் ஸ்கோர் 421/5 ஆக இருக்கும்போது ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.

இரண்டாவது இன்னிங்சிலும் அஸ்வின் விக்கெட் வேட்டை தொடர்ந்தது. ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக மாற வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் எதிர் கொள்ள முடியாமல் தடுமாறி வந்தனர். கேப்டன் பிராத்வெயிட், பிளாக்வுட், எதனாஸ், அல்சாரி ஜோசப், ரஹீம் கார்ன்வால், கீமர் ரோச், வாரிகண் ஆகியோரை அஸ்வின் வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிங்சில் 21.3 ஓவர்களை வீசி 71 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த அஸ்வின் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஒரே ஆட்டத்தில் 12 விக்கெட்டுகளை அஸ்வின் சாய்த்தார். இதனையடுத்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 482 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதேபோன்று ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இறுதியில் இந்திய அணி ஒரு இன்னிங்க்ஸ் 141 ரன் கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத்தீவுகள் அணியை முதல் டெஸ்டில் வென்றது. ஆட்ட நாயகனாக யஷஸ்வீ ஜெய்ஸ்வால் அறிவிக்கப்பட்டார்.

‘சாரே ஜஹான் சே அச்சா’: பிரான்ஸில் மோடி அடித்த சல்யூட்!

modiji in france - 2026

பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி இன்று பாரிசில் உள்ள அதிபர் மாளிகையில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார். அப்போது அவர்கள் முன்னிலையில் இரு தரப்பு பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

பிரதமர் மோடி பேசும்போது, “எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்த அதிபர் மெக்ரானுக்கு எனது நன்றி. சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவத்தின் மதிப்பினை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்கின்றன. இந்தியாவின் இயற்கையான நட்புறவு நாடு பிரான்ஸ். இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவோம். யு.பி.ஐ முறையை அமல்படுத்திட பிரான்ஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.

“இந்தியா-பிரான்ஸ் இடையிலான ஆழமான உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள ஒத்துழைப்புகள் குறித்து விளக்கினார். “இந்தியா-பிரான்ஸ் உறவுகளின் முக்கிய தூண்களில் ஒன்று பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகும்! பாதுகாப்பு உறவுகள் எப்போதும் நமது உறவுகளின் அடித்தளமாக இருக்கிறது. இது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆழமான நம்பிக்கையின் சின்ன.

“மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பர் பாரத் ஆகியவற்றில் பிரான்ஸ் ஒரு முக்கிய பங்குதாரராக உள்ளது. நீர்மூழ்கிக் கப்பல்களாக இருந்தாலும் சரி, இந்திய கடற்படைக் கப்பல்களாக இருந்தாலும் சரி, நாம் இணைந்து நமது தேவைகளை மட்டுமல்ல, மற்ற நட்பு நாடுகளின் தேவைகளையும் நிறைவேற்ற விரும்புகிறோம்.

“இரு நாடுகளின் கூட்டாண்மையின் 25 ஆண்டுகளை நாம் கொண்டாடுகிறோம். முந்தைய 25 ஆண்டுகளின் வலுவான அடித்தளத்தின் அடிப்படையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை உருவாக்குகிறோம்.

”“நம்மை வளர்ந்த நாடாக மாற்ற இந்திய மக்கள் உறுதி எடுத்துள்ளனர். இந்தப் பயணத்தில் பிரான்சை இயற்கையான கூட்டாளியாக பார்க்கிறோம். பிரான்சின் தேசிய தினம் உலகிற்கு ‘சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்’ ஆகியவற்றின் அடையாளமாகும்.

“இந்தியாவில் தேசிய அருங்காட்சியகத்தின் வளர்ச்சியில் பிரான்ஸ் அரசு பங்குதாரராக இணைகிறது. இந்தியாவின் யுபிஐ பணப்பரிவர்த்தனை சேவையை பிரான்சில் அறிமுகப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளோம்” என்றார்.

இமானுவெல் மெக்ரான் செய்தியாளர்களிடம் பேசிய போது, பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் பஞ்சாப் ரிஜிமெண்ட் வீரர்கள் பங்கேற்றதில் மகிழ்ச்சி. உலகப் போர்களின் போது இந்திய ராணுவத்தினர், பிரெஞ்சு ராணுவத்தினருடன் இணைந்து போரிட்டனர். இரு நாடுகளும் பல்வேறு துறைகளி்ல் இணைந்து பணியாற்றுவோம்“.” என்றார்.

முன்னதாக, அதிபர் இமானுவெல் மெக்ரான் அழைப்பின் பேரில் பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு தேசிய தினத்தையொட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து ஜூலை 14 நேற்று, அதிபர் மாளிகையான எல்சி பேலஸ் சென்றடைந்த பிரதமர் மோடியை அதிபர் இமானுவெல் மெக்ரான் வரவேற்றார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு ,ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

பாரீஸில், தேசிய தினத்தை முன்னிட்டு அணிவகுப்பு நடந்தது. அணிவகுப்பைப் பார்வையிட குவிந்த மக்களை நோக்கி கையசைத்தபடி அதிபர் மேக்ரான் வாகனத்தில் சென்றார். தொடர்ந்து நடக்கும் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். விழா மேடையில் இருந்த தலைவர்களுடன் மோடி கலந்துரையாடினார்.

modi in france salute - 2026

அணிவகுப்பின் போது இந்தியப் படைகளின் அணிவகுப்பும் இருந்தது. சாரே ஜஹான் சே அச்சா பாடல் இசைத்த போது, மோடி எழுந்து நின்று, சல்யூட் அடித்தபடி, ராணுவ வீரர்களுக்கும் மரியாதை அளித்தார்.

செல்போனில் சிறுமிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர் கைது!

child abuse - 2026

அருப்புக்கோட்டை அருகே, மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் தனபாலன் (57). காரியாபட்டி அருகே, நாகனேந்தல் அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த 2008 முதல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் மாணவ, மாணவியர் 40 பேர் படித்து வருகின்றனர். தனபாலன் மற்றும் ஒரு ஆசிரியை மட்டும் பள்ளியில் உள்ளனர்.

கடந்த 10ம் தேதி மதியம் ஆசிரியர் தனபாலன், 3ம் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 3 பேரை சைக்கிள் நிறுத்தும் இடத்திற்கு அழைத்து சென்று, தனது செல்போனில் ஆபாச படங்களை காண்பித்துள்ளார். பின் 3 பேருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வகுப்பறையில் மாணவர்கள் கூச்சலிட்டதால், ஆசிரியரிடம் தகவல் தெரிவிக்க 5ம் வகுப்பு மாணவி ஒருவர் தனபாலனிடம் வந்தார். அப்போது அவர், மாணவிகளிடம் ஆபாச படம் காண்பித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக செல்போனை பறித்துள்ளார்.இதில் செல்போன் கீழே விழுந்து சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய 3 மாணவிகளும், தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். உடனே மாணவிகளின் பெற்றோர், ஊர்மக்கள் திரண்டு நேற்று பள்ளிக்கு சென்று ஆசிரியர் தனபாலனிடம் கேட்டுள்ளனர். அப்போது, ‘தெரியாமல் செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்’ என்று கெஞ்சியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். எஸ்ஐ ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து தனபாலனை நேற்று கைது செய்தார். பின்னர் அவரை திருவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.

இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) மூர்த்தியிடம் கேட்டபோது, ‘ஆசிரியர் தனபாலன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

மாணவிகளுக்கு ஆசிரியரே செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்தது அருப்புக்கோட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.