Home Blog Page 346

ஒரே நாளில் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய அதிமுக.,வினர்! இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்!

aiadmk in madurai sweet - 2026

அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் அளித்து தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததற்கும், தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கு கொள்ள எடப்பாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கும் சேர்த்து வைத்து அதிமுக.,வினர் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

அதிமுக.,வில் கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த போது அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி அதிமுக., பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் கூட்டப்பட்டது.

இந்தப் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக.,வில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என்று முறையிட்டார்.

ஆனால் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கட்சித் தேர்தலில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையும் பொதுக்குழு அங்கீகரித்தது. இதையடுத்து அதிமுக., பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்ட சட்ட விதிகள் திருத்தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆவணங்களை சமர்ப்பித்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் உடனே எந்த முடிவும் எடுக்காமல் அதை கிடப்பில் போட்டது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

அப்போது தேர்தல் ஆணையத்தில் அதிமுக., தொடர்பான ஆவணங்களை சமர்பித்துள்ளதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் இதில் முடிவெடுக்காமல் காலதாமதம் செய்வதால் விரைந்து முடிவெடுக்க உத்தரவு விடுமாறும் எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தொடர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் மனு மீது தேர்தல் ஆணையம் விரைந்து முடிவெடுக்க தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்து அதிமுக., பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

இந்த நிலையில் தில்லி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்த போதே அதிமுக., பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. நீதிமன்றமும் எடப்பாடி பழனிசாமியை அதிமுக., பொதுக்குழு அறிவித்தது செல்லும் என்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியது.

இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தாக்கல் செய்திருந்த ஆவணங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் இப்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதில் அதிமுக., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்றும், துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாஜக., தீவிரமாக உள்ளது. இதனால் தில்லியில் வருகிற 18ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அதிமுக., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாரதிய ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் அதிமுக.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் குமாரம் பிரிவில் ஒன்றிய கழகப் பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில், அதிமுக.,வினர் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

விடுதலை வேள்வியை கண் முன் பதிய வைத்த தேசபக்த நடிகர் எஸ்.வி. சுப்பையா!

This Content Is Only For Subscribers

Please subscribe to unlock this content. Enter your email to get access.
Your email address is 100% safe from spam!

கட்டிடத் தொழிலாளருக்காக டாஸ்மாக் நேரத்தைக் கூட்டி… டெட்ரா பாக்கெட்டில் கொடுத்து… சர்ச்சையில் அமைச்சர்!

tasmac muthusamy - 2026

தலைமைச் செயலகத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மாவட்ட நிலை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் ரத்னா, தமிழ்நாடு மாநில வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் விசாகன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்  பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி  பேசினார். அப்போது உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதாவும் உடன் இருந்தார். 

டாஸ்மாக் கடைகளுக்கும், கடையில் வசூலான பணத்தை செலுத்தும் ஊழியருக்கும் பாதுகாப்பு தேவை. வங்கி ஊழியரே கடைக்குச் சென்று பணத்தைப் பெற்றுக்கொள்ளலாமா? என்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறோம். சென்னையில் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற இடங்களிலும் அது செயல்படுத்தப்படும்.

மது விற்பனை செய்வது வருமானத்திற்கான நோக்கமல்ல. விற்பனையில் இலக்கு நிர்ணயிக்கப்படுவது, வருமானத்தை கூட்டுவதற்காக அல்ல. மது விற்பனை குறைந்தால் அதற்கு காரணம் என்ன? மது குடிப்பதை யாரும் நிறுத்தி இருக்கிறார்களா? அல்லது, மாற்றாக வேறு தவறான இடத்திற்கு செல்கிறார்களா? என்பதை கண்டறியவே இந்த இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

டாஸ்மாக் பாட்டில்களால் பல பிரச்னைகள் உள்ளன. கண்ட இடங்களிலும் அவை வீசப்பட்டு விடுகின்றன. எனவே மது பாட்டிலுக்கு பதிலாக ‘டெட்ரா பாக்கெட்’ வரவேண்டும் என்று பல தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். குறுகிய இடத்தில் அவற்றை வைக்கலாம். அவற்றை கையாள்வது எளிது. அதோடு உடைந்து நஷ்டம் ஏற்படுவது இருக்காது. எனவே அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. டெட்ரா பேக் மூலம் விற்பனை செய்து, அதை மறு சுழற்சியாக மீண்டும் பயன்படுத்தலாம்.

அதுபோல கடை திறக்கும் காலநேரம் பற்றி ஆய்வு செய்தபோது, காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை கட்டட வேலை போன்ற கடுமையான உடலுழைப்பு தேவைப்படும் வேலைக்குச் செல்பவர்கள் மது கிடைக்காமல் சிரமம் அடைகிறார்கள் என்று கண்டறிந்தோம். அவர்களுக்காக என்ன ஏற்பாட்டை செய்யலாம்? என்பதில் இன்னும் முடிவெடுக்கவில்லை.

உடலுக்கு நன்மை தரும் கள்ளை விற்பனை செய்வது பற்றி கேட்டால், விவசாயிகளை மனதில் வைத்து அதை செய்யலாம் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. விவசாயிகளுக்கு நன்மை ஏற்படுகிறது என்பது மிக அருமையான விஷயம். விவசாயிகளின் நன்மை என்பதில் முதல்வருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் கள் விற்பனையில் ஈடுபட்ட மாநிலங்களில் பல பிரச்னைகள் எழுந்துள்ளன. அங்கு நடக்கும் தவறுகள் இங்கு வந்துவிடக் கூடாது என்பதையும் பார்க்க வேண்டியதுள்ளது.

இது பற்றி ஆய்வு செய்ய தனி கமிட்டியை நியமிக்க இருக்கிறோம். அதை ஒழுங்கு செய்த பிறகுதான் கள் விற்பனை பற்றி யோசிக்க முடியும். அந்த ஆய்வில், அந்த தவறுகளை கட்டுப்படுத்திவிட முடியும் என்று சொன்னால் அதுபற்றி சிந்திப்போம். முதலில் ஆய்வறிக்கை வரட்டும். 

எம்.ஆர்.பி.  விலைக்கு கூடுதலான விலைக்கு மது விற்பனை செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உயர் அதிகாரிகளுக்கு அதுபற்றி வந்த தகவல் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் மிகச்சில புகார்கள்தான் வந்தன… என்று கூறினார் அமைச்சர் முத்துசாமி. 

ஆனால், அவரது இந்தப் பேச்சு, சமூக  வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.  அரசியல் மட்டத்தில் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.  பாமக தலைவர் ராமதாஸ் உள்பட பலரும் அரசின் இந்த மது விற்பனை முயற்சிக்கு  கண்டனம் தெரிவித்ததுடன் கடும் விமர்சனங்களையும் முன் வைத்தனர். 

 சமூகத்தலங்களில் அமைச்சர் முத்துசாமியின் பேச்சுக்கு விமர்சனங்களும் கேள்விகளும் எழுந்தன. அவற்றில் சில…

This Content Is Only For Subscribers

Please subscribe to unlock this content. Enter your email to get access.
Your email address is 100% safe from spam!

ஆதாரத்தை வெளியிடுக; அல்லது ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்கவும்: வானதி சீனிவாசன்!

vanathi srinivasan - 2026

ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும், இல்லையெனில் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, பாஜக மகளிரணி தேசியத் தலைவர், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கை:

ஜூன் 9-ம் தேதி திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், “மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல், ஆத்திரம், பொறாமை ஏற்பட்டிருக்கிறது. அதனால் வாய்க்கு வந்தபடி எல்லாம் விமர்சிக்கிறார்கள்.

2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ஒரு நபருக்கு ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் திரு. நரேந்திர மோடி உறுதிமொழி தந்தார். ஆனால், ரூ. 15 கூட தரவில்லை” என, பிரதமர் மோடி பேசாத ஒன்றை, அப்பட்டமான பொய்யை கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் கூறியிருக்கிறார்.

2014 மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, “வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டால், ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ. 15 லட்சம் கொடுக்கும் அளவுக்கு இருக்கும்” என்றார். ஊழல் அரசியல்வாதிகளும், அவர்களின் பினாமி தொழிலதிபர்களும் பதுக்கிய பணத்தின் அளவை, மக்களுக்கு புரிய வைப்பதற்காக அவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஆனால், இந்த உண்மையை திட்டமிட்டு மறைத்து விட்டு, இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் வழங்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார் என, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஊழலில் திளைத்த, திளைக்கும் கட்சிகள் மக்களிடம் பொய்யை பரப்பி வருகின்றனர். 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பும், இந்த கட்டுக்கதையை பரப்பி மக்களை ஏமாற்ற நினைத்தார்கள். ஆனால், மக்களிடம் அது எடுபடவில்லை. 2014-ல் 282 தொகுதிகளில் வென்ற பாஜக, 2019-ல் 303 தொகுதிகளில் வென்றது.

ரூ. 15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி வாக்களித்தார் என, முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர்கள், திமுக தலைவர்களும் தொடர்ந்து கட்டுக்கதையை பரப்பி வருகின்றனர். முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான உதயநிதியும் இந்த புரட்டை திரும்ப திரும்ப கூறி வருகிறார். முதலமைச்சர், அமைச்சர் போன்ற முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் வெளியிட வேண்டும். இல்லையெனில் தாங்கள் பேசியதற்கு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

கணபதி ஹோமம்: ஆதிமுதலான யாகத்தின் தனிச்சிறப்பு!

ganapathy homam - 2026

ஸ்ரீ விநாயகர் – கணபதி ஹோமம்!


கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர், கலைமகள்


சுதர்சன ஹோமம் பற்றி சிறப்பாக எழுதி உள்ளீர்கள். மகிழ்ச்சி. ஹோமங்கள் பற்றி நீங்கள் எழுதும் முதல் கட்டுரை இது! ஹோமத்தைப் பற்றி எழுத வேண்டுமானால் விநாயகப் பெருமானிடமிருந்து அல்லவா ஆரம்பிக்க வேண்டும் என்று என்னுடைய நண்பர் ஒருவர் அன்பாகத் தொலைபேசியில் வேண்டுதல் வைத்தார்.

அதன் விளைவு இந்தக் கட்டுரை! என்னிடம் உள்ள புத்தகக் (3000 புத்தகங்கள்) குவியலில் இருந்து சில புத்தகங்களைத் தேடி கண்டுபிடித்து ஆறு மணி நேரத்தில் கீழ்க்கண்ட கட்டுரையை எழுதி உள்ளேன்.

கணபதி ஹோமம் புதிய தொழில்களைத் துவக்கும் போது நடத்துவார்கள். உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கும். மற்ற ஹோமங்களைத் துவக்குவதற்கு முன்பு கணபதி ஹோமம் செய்ய வேண்டும் என்கிற பொதுவான விதியும் உள்ளது.

மஹாகணபதி ஹோம மந்திரங்களை உருவாக்கியவர் கனகரிஷி. ஹோமமாகச் செய்தவர் காஷ்யப மகரிஷி. அருகம்புல்லின் மகத்துவத்தை எல்லோரும் அறியச் செய்தவர் காஷ்யப்பர்.

சிவபெருமான் ஆனாலும் அவரும் முதலில் கணபதியை வழிபட்டுத் தான் எந்தக் காரியத்தையும் தொடங்க வேண்டும். இதற்கு ஒரு ஸ்தல புராணக் கதை வழங்கப்படுகிறது.

திரிபுரம் எரிக்க சிவபெருமான் செல்லும் பொழுது தேர் அச்சு முறிந்தது. இதற்கு கணபதியிடம் விடை பெறாததே காரணம் என்று கணபதிக்கு ஆசி வழங்கிய ஸ்தலம் தமிழகத்தில் உள்ள அச்சிறுபாக்கம் என்னும் கிராமம். அச்சு + இறு + பாக்கம் – அச்சிறுபாக்கம் என்பது மருவி அச்சரப்பாக்கம் என தற்போழுது வழங்கப் பெறுகிறது.

சுக்லாம்பரதரம் என்ற மந்திரத்தை முழுவதுமாகச் சொல்லி பின்னர்தான் வேள்விகளையும் ஹோமங்களையும் ஆரம்பிப்பார்கள்.

வெண்ணிற ஆடை அணிந்தவரும் (சுக்லாம்பரதரம்), உலகத்தைக் காப்பவரும் (பகவான்), வெண்மை நிறத்தவரும் (சசி வர்ணம்), நான்கு கரங்களை உடையவரும் (சதுர்புஜம்) , மலர்ந்த (பிரசன்ன வதனம்) முகத்தை உடையவரும், அனைத்து தடைகளையும் (சர்வ விக்ன) நீக்குபவரும், ஆனவரை அமைதிப்படுத்தி உள்ளத்தில் இருத்துகிறேன் . இதில் விநாயகர் பெயர் இல்லையே என்று எண்ணலாம். மூல முதல்வனின் பெயர், எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒருவனின் பெயர் இடம் பெற வேண்டும் என்பது நியதி அல்ல. அது மறைமுகமாக சொல்லப் பட்டுள்ளது என்கின்றனர் சமஸ்கிருத ஆய்வாளர்கள்.

ஆதிசங்கரரின் சமஸ்கிருத மொழியில் உள்ள கணேச பஞ்சரத்னம் தமிழில் அவ்வை அருளிய விநாயகர் அகவல் ஆகியவற்றில் அனைத்து தத்துவங்களும் விநாயகரின் பெருமையும் கூறப்பட்டுள்ளது. வெள் எருக்கினால் செய்த விநாயகரைப் பூஜித்தல் மிகவும் சிறந்தது என்றும் சொல்வார்கள்.

கொழுக்கட்டை, அவல், பொரி, ஸத்துமா, கரும்புத்துண்டு, தேங்காய்க் கீற்று, எள், வாழைப்பழம் (அறுகம்புல்லாலும் ஹோமம் செய்ய வேண்டும்) ஆகியவை கணபதி ஹோம திரவியங்கள் ஆகும். எல்லா ஹோமங்களையும் செய்வது போல் அக்னி வளர்த்து அதில் நெய் ஊற்றி மேலே உள்ள பொருட்களை பூர்ணாஹூதியின் போது கொடுக்க வேண்டும்.

திண்டிவனத்துக்கு அருகில் உள்ள ஆல கிராமத்தில் பிள்ளையார் சிலை ஒன்று கிடைத்துள்ளது. 75 சென்டி மீட்டர் உயரமும், 40 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டிருக்கும் அழகிய விநாயகர் சிலை தமிழகத்திலேயே மிகவும் பழைமையான விநாயகர் சிலையாகக் கருதப்படுகிறது. அதனால்,அவரை ‘மூத்த விநாயகர்’ என அழைக்கிறார்கள்.

பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் சிலை, கி.பி. 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

ஆலகிராமத்தில் உள்ள யம தண்டீஸ்வரர் கோவிலில் உள்ளஇந்த விநாயகர் சிற்பத்தில் காணப்படும் தமிழ் வட்டெழுத்துகள், கி.பி. 4-ம் நூற்றாண்டிற்கும் கி.பி. 6-ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது. எனவே இந்தச் சிற்பமே பிள்ளையார்பட்டிச் சிலையை விடப் பழைமையானது என்பது கல்வெட்டின் மூலம் உறுதியாகிறது. இந்தச் சிற்பத்தில் ‘பிரமிறை பன்னூற – சேவிக- மகன் -கிழார் – கோன்-கொடுவித்து’ எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வாசகம் கல்வெட்டை செதுக்கிய சிற்பியை குறிக்கிறது” என்றும் தெரிய வருகிறது.

பழைய தமிழ் இலக்கியங்களும் பிள்ளையாரைப் பற்றிப் பேசுகின்றன. “மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை” என்னும் இந்த நூல் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று மும்மணிக்கோவை.

இதன் ஆசிரியர் அதிராவடிகள் (அதிரா அடிகள்); காலம் எட்டாம் நூற்றாண்டு அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் மூவகைப் பாடல்கள் மாறி மாறித் தொடர்ந்துவரும் 30 பாடல்கள் கொண்ட நூல் இது. 24 முதல் 30 வரை இருந்த பாடல்கள் இப்போது கிடைக்கவில்லை.

அகரம் உயிரென்றும், உகாரம் இறையென்றும், மகாரம் மலமென்றும் கூறுவதால் அகரமாகிய உயிர் உகாரமாகிய இறைவனோடு இயைந்து ஒன்றியிருக்கும் நிலையை விளக்குவதே பிள்ளையார் சுழியாயிற்று( ” உ ” )என்கிற கருத்தும் ஆன்மீக அன்பர்களிடம் நிலவுகிறது!

கணபதி ஹோம மந்திரங்களைத் தனியாக நூல்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். கணபதி ஹோமம் எந்த ஒரு காரியத்தைத் துவங்குவதாக இருந்தாலும் முதலில் செய்ய வேண்டிய ஹோமம் ஆகும்! மஹா கணபதியே நமஹ|

உலகக் கோப்பை கிரிக்கெட் (5): 1987

world cup cricket 1987 - 2026

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள்
பகுதி 5 – 1987 போட்டி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்


1987 கிரிக்கெட் உலகக் கோப்பை, ஸ்பான்சர்ஷிப் காரணங்களுக்காக அதிகாரப்பூர்வமாக “ரிலையன்ஸ் கோப்பை 1987” என அழைக்கப்பட்ட நான்காவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகும்.

இது இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் 1987 அக்டோபர் 8 முதல் நவம்பர் 8 வரை நடைபெற்றது – இது இங்கிலாந்துக்கு வெளியே நடத்தப்பட்ட முதல் போட்டியாகும். 1983ஆம் ஆண்டு எட்டு அணிகள் பங்கேற்ற போட்டியில் இருந்து ஒரு நாள் வடிவம் மாறாமல் இருந்தது, ஆனால் ஒரு அணி விளையாடும் ஓவர்களின் எண்ணிக்கையை 60லிருந்து 50 ஆகக் குறைக்கப்பட்டது. அனைத்து ODI போட்டிகளுக்கும் தற்போதைய தரநிலை.

போட்டியின் வடிவம் நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக ஒவ்வொரு அணியும் 50 ஓவர் போட்டிகளில் தலா இரண்டு முறை விளையாடும் வகையில் இருந்தது. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், அதில் வெற்றி பெறும் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

அனைத்து போட்டிகளும் பகலில் விளையாடப்பட்டன மற்றும் போட்டியின் வரலாற்றில் இறுதி முறையாக அணிகள் பாரம்பரிய வெள்ளை உடையில் தோன்றி, டெஸ்ட்/முதல் வகுப்பு போட்டிகளில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய சிவப்பு பந்துகளைப் பயன்படுத்தின.

டெஸ்ட் அந்தஸ்தை வைத்திருக்கும் ஏழு (தகுதியுள்ள) நாடுகளும் தானாகவே போட்டிக்குத் தகுதி பெற்றன. இரண்டாவது முறையாக ஜிம்பாப்வே, எட்டாவது அணியாக இடம் பெற்றது.

குரூப் A பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜிம்பாபே அணிகள் இடம்பெற்றன. குரூப் B பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் இடம்பெற்றன. லீக் போட்டிகள் முடிவில் குரூப் A பிரிவிலிருந்து இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அரையிறுதிக்கு முன்னேறின.

குரூப் B பிரிவிலிருந்து பாகிஸ்தானும் இங்கிலாந்தும் அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. அரையிறுதியில் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணியைத் தோற்கடிக்க, இங்கிலாந்து இந்திய அணியைத் தோற்கடித்தது. இந்திய அணியின் அணித்தலைவர் கபில்தேவ் ஒரு தேவையில்லாத ஷாட் ஆடி எல்லைக் கோட்டருகே மைக் கேட்டிங்-இடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் டேவிட் பூன் (75 ரன், 125 பந்துகள், 7 பவுண்டரி) அதிகபட்சமாக ரன் குவித்தார். ஆஸ்திரேலியா 253 (5 விக்கெட், 50 ஓவர்கள்) எடுத்தது. மைக் வெலெட்டா (31 பந்துகளில் 45 ரன், 6 பவுண்டரிகள்) இன்னிங்ஸின் பிற்பகுதியில் சிறப்பாக ஆடி, ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியா அவர்களின் இன்னிங்ஸின் கடைசி ஆறு ஓவர்களில் 65 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து ஆடியபோது தொடக்க ஆட்டக்காரர் டிம் ராபின்சன் முதல் பந்தில் டக் அவுட்டாக எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.

பில் அத்தே (58 ரன், 103 பந்துகள், 2 பவுண்டரிகள்) அதிகபட்ச ரன் அடிக்க, இங்கிலாந்து அணி கிட்டத்தட்ட இலக்கை எட்டியது, கேப்டன் மைக் கேட்டிங் (45 பந்துகளில் 41, 3 பவுண்டரி, 1 சிக்சர்) தனது விக்கெட்டை ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முனைந்து இழந்தார். கடைசி ஓவரில் இங்கிலாந்து கடைசி 17 ரன்களை எடுக்கத் தவறியதால், கோப்பை ஆஸ்திரேலியாவுக்கு சென்றது.

இந்திய அணியின் ஏழு ஆட்டங்களில் கவாஸ்கர் 300 ரன்னும், சித்து 276 ரன்னும், ஸ்ரீகாந்த் 248 ரன்னும் எடுத்தனர். பந்து வீச்சாளர்களில் மனீந்தர் சிங் 14 விக்கட்டுகள் எடுத்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சேத்தன் ஷர்மா ஒரு ஹாட்ரிக் எடுத்தார். அந்த ஆட்டத்தில் கவாஸ்கர் சதமடித்தார். ஒருநாள் போட்டிகளில் அவர அடித்த ஒரே சதம் அது. இந்த ஆட்டம் தொடங்கும் முன் இந்திய அணி 5.25 என்ற ரன் ரேட்டில் வென்றால் அரையிறுதிக்குச் செல்லும் என்பது நிலைமை.

நியுசிலாந்து முதலில் ஆடி 221 ரன்கள் எடுத்திருந்தது. அதனை 42.2 ஓவரில் இந்திய அணி எடுக்க வேண்டும். இந்திய அணி 32 ஓவர்களில் இலக்கை எட்டி, அரையிறுதிக்குச் சென்றது.

சிவகாசி அருகே அகழ்வாராய்ச்சி- தலை அலங்கார ஆண் உருவ சுடுமண் பொம்மை..

IMG 20230711 WA0082 - 2026

சிவகாசி அருகே வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் தலை அலங்காரத்துடன் கூடிய ஆண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது.இது வரலாற்றுக் காலத்தைச் சார்ந்ததாக கருதப்படுகிறது.

சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 2ம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க அணிகலன், தங்க பட்டை, சுடு மண்ணால் ஆன பொம்மை, சுடுமண் அகல்விளக்கு, காதணி, எடைக்கல், பதக்கம், கண்ணாடி மணிகள், வணிக முத்திரை, சங்கு வளையல்கள், யானை தந்ததால் ஆன பகடை, தக்களி, செங்கல், சில்லு வட்டம் உள்ளிட்ட ஏராளமான தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

IMG 20230711 WA0080 - 2026

இந்நிலையில் ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கருப்பு நிறத்துடன் வனையப்பட்டுள்ள இப்பொம்மை தலை அலங்காரமும் உதட்டுச் சிரிப்பும் மெருகூட்டுகிறது. கயல் வடிவில் கண்களும் அவற்றின் புருவங்களும் கீறல் வடிவில் வரையப்பட்டுள்ளன. வாய், மூக்கு, காதுகள் தடிமனாக உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வுருவம் 2.28 செ.மீ உயரமும் 2.15செ.மீ அகலமும் 1.79 செ.மீ தடிமனும் கொண்டுள்ளது. அகழாய்வுக்குழியில் 40 செ. மீட்டர் ஆழத்தில் கிடைக்கப்பெற்ற இந்த ஆண் உருவ சுடுமண் பொம்மை வரலாற்றுக் காலத்தைச் சார்ந்ததாக கருதப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஆடிப்பூர திருவிழா நாளை தொடங்குகிறது..

FB IMG 1689064016081 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில் திருஆடிப்பூர திருவிழா
முதல் நாள் நாளை தொடங்குகிறது
12.07.2023 ஆனி மாதம் 27ம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மேல்10.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் அங்கூரம். தேங்காய் தொட்டுநியமனம் பெறும்

மாலை 5.30 மணிக்கு மேல் 6,30 மணிக்குள் தனுசு லக்னத்தில் மிருத்ஸங்கிரஹணம்- திருப்பூரநந்தவனம் நடைபெறும்.

கொடியேற்றம் (துவஜாரோஹணம்)
14.07.2023 ஆனி மாதம் 29 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடைபெறும்.

ஆண்டாள் கோயில் தேரோட்டம் நடைபெறும் நிலையில் தேருக்கு நாள்செய்து ஆடிப்பூரத் திருப்பணிகள் தேர் அலங்கார பணிகள் கோயில் முன்பு அலங்கார பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்ட விழா இந்த மாதம் நடக்கிறது. இதனை முன்னிட்டு‌தேர் அலங்கார பணிகள் நடந்து வருகின்றன.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் பூரம் நட்சத்திர தினத்தன்று தேரோட்டத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு அதற்காக நாள்செய்யும் பணிகள் இரண்டு மாதத்திற்கு முன்பு தொடங்கப்படும். அதன்படி இந்த ஆண்டும் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழாவை சிறப்பாக நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டு ஆண்டாள் கோயில் தேரோட்டம் ஜூலை 14-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 22-ம் தேதி காலையில் நடைபெறும்

திருவிழா அறிவிப்பை முன்னிட்டு தேருக்கு நாள்செய்யும் நிகழ்ச்சி மே மாதம் நடைபெற்றது. அதன்படி, சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் தேரின் மேல் அலங்காரம் செய்வதற்கான மரத்தூண்கள் நடப்பட்டன. அதைத் தொடர்ந்து, பதினாறு சக்கர வண்டிச் சப்பரத்திற்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. இதனையடுத்து தேரை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

செந்தில் பாலாஜி விவகாரம்: ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்?: நீதிமன்றம் கேள்வி!

chennai highcourt - 2026

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் போது, ‘நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளபோது ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்?’ என மூன்றாவது நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இதை அடுத்து, வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை இன்று இந்த வழக்கு சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அவர், செந்தில் பாலாஜி குற்றம் செய்ததால் கிடைத்த பணத்தை வைத்திருப்பதாகவோ, மறைத்திருப்பதாகவோ ஆதாரம் இல்லை. குற்றம் செய்திருக்கிறார் என்பதற்கு ஆதாரம் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறை கைது செய்ய முடியும். ஆதாரங்கள் முழுமையாக இல்லாதபோது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கைது செய்ய முடியாது. அதே போல், கைதான 24 மணி நேரத்தில் ஆஜர்படுத்தி, ஆதாரங்களை, சீல்வைத்த கவரில் நீதிமன்றத்தில் தர வேண்டும் என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளபோது ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்?’ எனக் கேட்டார்.

அதற்கு பதிலளித்த கபில் சிப, ‘இது குறித்து பின்னர் முழுமையான வாதங்கள் முன் வைக்கப்படும். போலீஸ் அதிகாரிகள் போல் அமலாக்கத்துறை அதிகாரிகள் செயல்பட முடியாது’ என்றார்.

நீதிபதி கார்த்திகேயன் கூறுகையில், ‘கைதுக்கான ஆவணங்களை அமாலக்கத்துறை வழங்கியபோது அதனை பெற செந்தில் பாலாஜி ஏன் மறுத்தார்? கைது நடவடிக்கை சட்டத்தை மீறி இருந்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளை கூண்டில் ஏற்றி அதற்கான இழப்பீட்டை பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார்.

கனல் கண்ணன் கைது- கருத்துச் சுதந்திரத்தை நசுக்கி பிதுக்கும் செயல்!

hindumunnani - 2026

கனல் கண்ணன் கைது – கருத்து சுதந்திரத்தை நசுக்கி பிதுக்கும் செயல் என்று இந்துமுன்னணி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில், இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:

இந்து முன்னணி கலை இலக்கிய பிரிவு மாநிலத் தலைவர் திரு. கனல்கண்ணன் அவர்களை நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் . இது கடும் கண்டனத்திற்குரியதாகும் .

கனல் கண்ணன் அவர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பல ஆயிரம் நபர்களால் பதிவிடப்பட்டு வந்த ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ காட்சி எதனையும் அவர் உருவாக்கவில்லை, எடிட் செய்யவும் இல்லை . அவரது பதிவில் எந்த மதத்தையும் குறிப்பிட்டு எந்த வாசகமும் தெரிவிக்கவில்லை. அவரது செயல் எந்த விதத்திலும் சட்டப்படியான குற்றச்செயல் அல்ல.
திமுக பொறுப்பாளரின் புகாரின் பேரில் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இருந்தபோதிலும் விசாரணை அழைப்பாணையை ஏற்று மருத்துவமனையில் போய் பயந்து படுத்துக்கொள்ளாமல் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் நியாயம் தன்னிடம் உள்ளது என்ற நம்பிக்கையோடும் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நல்ல எண்ணத்தோடு நாகர்கோவில் சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு நேற்று காலை 10:30 மணிக்கு சென்றுள்ளார். மதியம் 2 மணி வரை அவரிடம் ஐந்து நிமிடம் மட்டுமே விசாரணை நடத்தி விட்டு வேண்டுமென்றே பல மணி நேரம் தேவையில்லாமல் அவரை காக்க வைத்துள்ளனர். மதியம் இரண்டு மணிக்கு ஆகியும் உணவருந்தக்கூட விடாமல் அவரை தடுத்து நிறுத்தி உள்ளே அனுப்பி உள்ளனர். மயக்க நிலைக்குப் போன பிறகு 4 மணிக்கு தான் அவருக்கு உணவளித்துள்ளனர். உரிய நேரத்தில் உணவே வழங்காமல் இரவு 8 மணி வரை சித்தரவதை செய்துள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் .

தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை, இந்து விரோத போக்கை யார் யாரெல்லாம் சுட்டிக்காட்டுகிறார்களோ அவர்களை எல்லாம் காவல்துறையை வைத்து மிரட்டி வழக்கு பதிவு செய்து கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. தமிழக அரசின் இச்செயல் கருத்துச் சுதந்திரத்தை பறித்து, ஜனநாயகத்தின் குரல்வலையை பிதுக்கும் செயலாகும் .

கனல் கண்ணன் மீது புகார் கொடுத்த ஆஸ்டின் என்பவர் மீது அதே சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இரண்டு புகார்கள் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க திராணியற்ற காவல்துறை அரசியல் பழிவாங்கும் நோக்கோடு திரு.கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது.

இத்தகைய பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும் தமிழக அரசின் ஜனநாயக விரோத செயலை இந்துமுன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.