இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு இன்று (ஜூலை 12) நிறைவடைகிறது.
இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்து உள்ளதாகவும், வரும் 16-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு
–ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில், விண்ணப்பப் பதிவு புதன்கிழமை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
தமிழக அரசு மதசார்பற்றதாக இருக்கலாம், ஆனால் அறநிலையத்துறை இந்து மத சார்பானதுதான், அது இந்து மதம் மற்றும் பண்பாட்டைப் பரப்பும் செயலைத்தான் செய்ய வேண்டும் என்று கூறினார் பாஜக., மூத்த தலைவர் ஹெச்.ராஜா.
பழனி மலைக்கோவில் பாதுகாப்புப் பேரவை சார்பில் பழனி மயில் ரவுண்டானா பகுதியில் செவ்வாய்க்கிழமை நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக., மூத்த தலைவரும் முன்னாள் தேசியச் செயலாளருமான எச்.ராஜா, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் ஹெச்.ராஜா. அப்போது அவர்…
பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதோர் நுழைவது என்பது சட்டவிரோதம். தமிழக அரசுதான் மதசார்பற்றதே தவிர, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மத சார்புடையதுதான்.
அறநிலையத்துறை என்பது இந்து மதம் மற்றும் பண்பாட்டை பரப்பக்கூடிய செயலைச் செய்யவேண்டும். அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு இந்து மதத்திற்கு எதிரான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்.
கள்ளிமந்தையம் பகுதியில் பழனி கோவிலுக்கு சொந்தமான கோசாலை பசுக்கள் பராமரிப்பின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளன. இங்குள்ள பல மாடுகள் கேரளாவுக்கு அடிமாட்டுக்கு அனுப்பப்படுகிறது. பசுக்களை இல்லாமல் செய்துவிட்டு 288 ஏக்கரில் அமைந்துள்ள கோசாலை நிலத்தை சிப்காட் நிறுவனம் அமைக்கக் கொடுக்க சேகர்பாபு முயற்சி செய்கிறார்.
இந்து சமய அறநிலையத்துறைதான் அரசுக்கு சொந்தமானது. இந்து கோவில்கள் அரசுக்குச் சொந்தமானது இல்லை. அது இந்து மக்களுக்குச் சொந்தமானது. பழனி கோவிலுக்கு அனைத்து மதத்தினரும் வரலாம் என்றால் கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் முன்பு நடந்த சம்பவம் போல வரும் காலங்களில் பழனி கோவிலில் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது பெரிய பிரச்சனையாக இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளது கேலிக்குரியது. பாமக., தொண்டர் வெட்டிக்கொலை, விசாரணை கைதி மரணம் ஆகியவை நடந்துள்ள நிலையில், முதலமைச்சருக்கு தங்களது குடும்பத்தில் எப்போது சி.பி.ஐ. நுழையுமோ என்ற அச்சம், துர்கா ஸ்டாலின் தவிர மற்ற அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி என்பதால், சிபிஐ., தமிழகத்திற்குள் நுழையக்கூடாது என்று தெரிவித்திருப்பது ஆகியவை எல்லாம் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தெளிவாக விளக்குகிறது.
திமுக., ஆட்சி இன்னும் ஓரிரு வாரத்தில் கலைக்கப்படலாம். இது, குற்றம் செய்த அமைச்சரை காப்பாற்ற முயல்கிறது, 38 நாட்களாக ஓர் அமைச்சரை மருத்துவமனையில் வைத்துள்ளது. அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. சட்டத்தை மதிக்காமல் முதலமைச்சரை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள் என்று கூறினார் ஹெச்.ராஜா.
சென்னை திருப்பதி செல்லும் ரயில்கள் இந்த நாட்களில் ரத்து செய்யப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது…
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.50 மணி மற்றும் மாலை 4.35 மணிக்கு திருப்பதி செல்லும் ரயில்கள் (எண்கள் 06727,16203), மறுமாா்க்கமாக திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.35 மணி மற்றும் காலை 6.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில்கள் (எண்கள் 06728,16204) இன்று முதல் ஆக.10 -ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்த தேதிகளில் அரக்கோணம் – திருப்பதி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலும் (எண்கள் 06753, 06754) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
விரைவு ரயில்கள்: திருப்பதி – புதுச்சேரி விரைவு ரயில் (எண்கள் 16111/16112), ஜூலை 12 முதல் ஆக.11-ந் தேதி வரை ரேணிகுண்டாவுடன் நிறுத்தப்படும். மீண்டும் ரேணிகுண்டாவிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி சென்றடையும்.
சென்னை சென்ட்ரல் – திருப்பதி விரைவு ரயில்கள் (எண்கள் 16057/16058 மற்றும் 16054/16053) இன்று (புதன்கிழமை) முதல் ஆக.10-ந் தேதி வரை ரேணிகுண்டாவுடன் நிறுத்தப்படும். பின்னா் ரேணிகுண்டாவில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
மேலும், விழுப்புரம் – திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (எண்கள் 16854/ 16853) இன்று (புதன்கிழமை) முதல் ஆக.10-ந் தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படும். பின்னா் காட்பாடியிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்றடையும்.
ராமேசுவரம் – திருப்பதி இடையே வாரம் மூன்று முறை இயக்கப்படும் விரைவு ரயில் (எண்கள்: 16780/16779) நாளை (13-ந் தேதி) முதல் ஆக.10-ந் தேதி வரை பாகாலாவுடன் நிறுத்தப்படும். பின்னா் பாகாலாவிலிருந்து புறப்பட்டு ராமேசுவரம் சென்றடையும்.
காக்கிகூடா – மதுரை இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (எண்கள் 07191/07192) இன்று (புதன்கிழமை) முதல் ஆக.9-ந் தேதி வரை திருப்பதி, சித்தூா் வழியாக செல்வதற்கு பதிலாக மேலபாக்கம் வழியாக இயக்கப்படும்.
பெரிதும் எதிர்பாக்கப்பட்ட குரூப் – 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர், பண்டக காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப்- 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 18 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவு கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி வெளியானது.
முதலில் அறிவிக்கப்பட்ட 7,301 பணியிடங்களை தற்போது 10,178 ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தகுதி பெற்ற தேர்வர்களுக்கான ஜூலை 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
முதல் கட்டமாக கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவையாளர், பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
தேர்வர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெறும் தேதி மற்றும் விவரங்கள் அவர்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். தபால் மூலம் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் ஏற்கனவே அனுப்பி வைத்துள்ள சான்றிதழ்களின் உண்மைத்தன்மையின் அடிப்படையில் அவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணி கலந்தாய்வில் ஒதுக்கப்படும். தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில் திருப்தி இல்லை என்றால், அவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவைச் சென்றடைய முக்கியமான 10 படிநிலைகளைக் கடந்தாக வேண்டும். இந்த 10 படிநிலைகளை முக்கியமான மூன்று முக்கியப் பகுதிகளாகப் பிரிக்கலாம்.
முதல் பகுதி படிநிலை 1 – புவியை மையமாக வைத்து விண்கலம் சுழலும் காலப் பகுதி. இது மூன்று நிலைகளை உள்ளடக்கியது.
அவையாவன:- (அ) விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கு முந்தைய தயாரிப்புப்பணிகள். (ஆ) 2023 ஜூலை 14ஆம் நாள் விண்கலத்தை விண்ணில் ஏவுதல் (இ) விண்கலத்தை அது புவியை சுற்றிவரும் பாதையில் செலுத்துதல் பகுதி 2,படிநிலை 2 – விண்கலத்தை நிலவைச் சுற்றும் சுற்றுவட்டப் பாதைக்கு மாற்றுதல் பகுதி 3 – நிலவை மையமாக வைத்து விண்கலம் சுழலும் காலப் பகுதி. இதனைப் பின்வரும் படிநிலைகளாகப் பகுக்கலாம். i. நிலவைச் சுற்றவேண்டிய சுற்றுவட்டப்பாதையில் விண்கலத்தைச் செலுத்துதல். ii. நிலவை நோக்கிய விண்கலத்தின் பயணம் iii. நிலவில் இறங்கவேண்டிய பகுதி விண்கலத்தில் இருந்து பிரிதல் iv. விண்கலத்தின் வேகத்தைக் குறைத்தல் v. நிலவில் விண்கலம் இறங்குவதற்கு முந்தைய காலப் பகுதி. vi. நிலவில் விண்கலம் இறங்கும் நேரம் vii. லேண்டரும் ரோவரும் இயங்கும் நேரம் viii. விண்கலத்தின் உந்துவிசைப் பகுதி நிலவிலிருந்து 100 கிமீ தூரத்தில் நிலவைச் சுற்றி வருதல்
எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் ஆர் பி உதயகுமார் தலைமையில் அதிமுக.,வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அவர் அளித்த நிர்வாகிகள் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி தேர்தல் ஆணைய இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ததை வரவேற்று, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சிக்கு, அதிமுக வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் கொரியர் கணேசன் முன்னிலை வகித்தார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
இதில் ,செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம். வி .பி. ராஜா, வாடிப்பட்டி யூனியன் தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்டக் கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் எம் .கே. முருகேசன், பேரூராட்சி அவைத் தலைவர் முனியாண்டி மற்றும் ராமலிங்கம் வார்டு கவுன்சிலர்கள் ரேஸ் ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, வசந்தி கணேசன், சரண்யா, கண்ணன், டீக்கடை கணேசன் மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள், சோழவந்தான் பேரூர் இளைஞரணி செயலாளர் கேபிள் மணி ,பேரூர் துணைச் செயலாளர் தியாகு, மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா , ஒன்றியக் கவுன்சிலர் தங்கப்பாண்டி மற்றும் நிர்வாகிகள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் வார்டு செயலாளர்கள் மணி மற்றும் மணிகண்டன் இளைஞர் அணி ஒன்றியச் செயலாளர் தண்டபாணி , குருவித்துறை பாபு , முள்ளி பள்ளம் பாண்டியம்மாள், ராமநாதன், பேட்டை மாரி சுரேஷ் ராஜா மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் கழக வார்டு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவியை மருத்துவமனை கொண்டு வரும் வழியில் ரயில்வே கேட் மூடப் பட்டிருந்ததால், காத்திருந்த நேரத்தில் உயிர் பிரிந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
மதுரை திருமங்கலம் அருகே தற்கொலைக்கு முயன்ற மாணவி மயங்கிய நிலையில் உறவினர்கள் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் அழைத்து வந்த போது ரயில்வே கேட் மூடப்பட்டதால் கேட் திறப்பதற்குள் மாணவியின் உயிர் பிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள விருசங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி – ஈஸ்வரி தம்பதியினர் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், வெள்ளைச்சாமி இளைய மகள் மகள் பிரபாவதி 17 கப்பலூர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், திடீரென கல்லூரி மாணவி வீட்டில் கதவைப் பூட்டிக் கொண்டு வீட்டிலிருந்த கயிறால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைக்கண்ட குடும்பத்தினர் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து கயிறை அறுத்து மாணவியை காப்பாற்ற நிலையில், மாணவி பிரபாவதி மயங்கி நிலையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, உறவினர்கள் இருசக்கர வாகனத்தில் மாணவியை அமர வைத்து, திருமங்கலம் அரசு மருத்துவமனை நோக்கி காலை ஏழு முப்பது மணி அளவில் வந்த போது, திருமங்கலம் ரயில் நிலையம் அருகே இருந்த ரயில்வே கேட் ரயில் வருகைக்காக மூடப்பட்டது. மாணவி நிலை குறித்து கேட் கீப்பர் இடம் தெரிவிக்கப்பட்டும், ரயில் அருகில் வந்ததால் கேட்டை திறக்க முடியாது என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் கேட்டின் மறுபக்கம் நிற்க மாணவி பிரபாவதியை தூக்கிகொண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதைக் கேட்ட குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து மாணவி தற்கொலை குறித்து திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே, திருமங்கலம் ரயில்வே கேட்டால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வரும் நிலையில் இன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டுவரப்பட்ட கல்லூரி மாணவி ரயில்வே கேட் மூடப்பட்டதால், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கு மாற்று வழி கண்டறிய வேண்டுமென பொதுமக்கள் கூறினர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒன்பது ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு, அரசின் சாதனைகளைக் கொண்டு செல்லும் அதே நேரம், தமிழக பாஜக., தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தமிழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் பல வெளிநாட்டு நிறுவனங்கள், தமிழகம் உட்பட நம் நாட்டில், பல மாநிலங்களில் தொழில் தொடக்கி வருகின்றன.
அண்மையில், தமிழக பாஜக., மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் நகருக்குச் சென்றிருந்த போது பல்வேறு முன்னணி நிறுவனங்களில் உயர்பொறுப்புகளில் இருப்பவர்களையும் சந்தித்துப் பேசினார். அப்போது பேசப்பட்ட விஷயங்களின் படி உதித்த எண்ணம்தான் அடுத்து செயல்வடிவாக்கம் பெறவுள்ளதாம்.
தமிழகத்தில் இன்ஜினியரிங் உட்பட பல லட்சம் பட்டதாரிகள் சரியான வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். அப்படிப்பட்ட இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக., களம் இறங்கியுள்ளது. அதன்படி, வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைக்க, மோட்டார் வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட தனியார் துறையில் முன்னணியில் உள்ள பல நிறுவனங்களுடன் இணைந்து, மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் அளித்து தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததற்கும், தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கு கொள்ள எடப்பாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கும் சேர்த்து வைத்து அதிமுக.,வினர் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
அதிமுக.,வில் கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த போது அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி அதிமுக., பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் கூட்டப்பட்டது.
இந்தப் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக.,வில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என்று முறையிட்டார்.
ஆனால் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கட்சித் தேர்தலில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையும் பொதுக்குழு அங்கீகரித்தது. இதையடுத்து அதிமுக., பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்ட சட்ட விதிகள் திருத்தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆவணங்களை சமர்ப்பித்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் உடனே எந்த முடிவும் எடுக்காமல் அதை கிடப்பில் போட்டது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
அப்போது தேர்தல் ஆணையத்தில் அதிமுக., தொடர்பான ஆவணங்களை சமர்பித்துள்ளதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் இதில் முடிவெடுக்காமல் காலதாமதம் செய்வதால் விரைந்து முடிவெடுக்க உத்தரவு விடுமாறும் எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தொடர்ந்தனர்.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் மனு மீது தேர்தல் ஆணையம் விரைந்து முடிவெடுக்க தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்து அதிமுக., பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில் தில்லி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்த போதே அதிமுக., பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. நீதிமன்றமும் எடப்பாடி பழனிசாமியை அதிமுக., பொதுக்குழு அறிவித்தது செல்லும் என்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியது.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தாக்கல் செய்திருந்த ஆவணங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் இப்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதில் அதிமுக., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்றும், துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாஜக., தீவிரமாக உள்ளது. இதனால் தில்லியில் வருகிற 18ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அதிமுக., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாரதிய ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் அதிமுக.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் குமாரம் பிரிவில் ஒன்றிய கழகப் பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில், அதிமுக.,வினர் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
Please subscribe to unlock this content. Enter your email to get access.
திரைப்படம் என்பது பலபேரின் கூட்டு உழைப்பு. அதில் கதாநாயன் முதல் ட்ராலி தள்ளும் சிறுவன் வரை அனைவரின் உழைப்பும் சரியாக ஒருங்கிணைக்கப்பட்டு தக்க சமயத்தில் திரைப்படம் திரையை தொட்டால்தான் அது முழு வெற்றியடையும். ஆனால் வெற்றி பெறும்போது அது நாயகன், நாயகி, இயக்குனர், இசையமைப்பாளர் என்று வெகு சிலரோடு மட்டும் இணைத்து பேசப்படும். அடுத்த கட்ட குணசித்திர நடிகர்களில் தொடங்கி அடிமட்டம் வரை ஒரு கேடயத்தோடு நின்று போகும். இது நடைமுறை.
ஆனால் அந்த குணச்சித்திர நடிகர்கள் இல்லாமல் படம் செய்ய முடியாது. இதை அனைவரும் உணர்ந்திருந்தாலும் இதையே வாழக்கையாக ஏற்றுக்கொண்டு இறுதி மூச்சு பயணித்தவர்கள் ஏராளம்.
அவ்வகையில் கடுமையான உழைப்பைக் கொடுத்தவர் என்றால் எஸ்.வி.சுப்பையாவைச் சொல்லலாம்
அந்நாளைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும், பின்னாளில் திருநெல்வேலி மாவடத்திலும், தற்போது தென்காசி மாவட்டத்திலும் இருக்கும் செங்கோட்டை என்ற ஊர்தான் இவரது சொந்த ஊர். ஏற்கெனவே செங்கோட்டை ஊருக்குப் புகழ் சேர்த்தவராக ராஜபார்ட் நாடக நடிகர் எஸ்.ஜி. கிட்டப்பா புகழ் பெற்றிருந்தார். அந்த வழியில், அந்தக் காலத்து நாடக நடிகர் போலவே இவரும் செங்கோட்டை பாய்ஸ் நாடகக் குழுவில் இணைந்து பணியாற்றி பின்னர் பால ஷண்முகானந்த சபா என்ற நாடகக் குழுவின் கவியின் கனவு என்ற நாடகத்தில் கவிஞராக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி தன் திறமையை வெளிக்காட்டினார். அதன் பின் தான் இவருக்கு திரையில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தது.
1946இல் விஜயலட்சுமி என்ற படம். பிறகு அபிமன்யு படத்தில் சகுனி வேடம். இவர் நடிக்கும் படங்களில் இவருடைய கதாபாத்திரம் கதைக்கு வலுசேர்க்கும் வண்ணம் இவருடைய நடிப்பு இருக்கும். நேர்மறை மட்டும் அல்ல எதிர்மறையிலும் இவரது நடிப்பு பிரகாசிக்கும்.
அருமையான உடல் மொழி அதற்கு பல படங்களை உதாரணம் சொல்லலாம்.
ஆதிபராசக்தி என்ற படத்தில் அபிராமி பட்டர் வேடம். இவர் ஒருமுறை மன்னரிடம் பணிபுரியும்போது அமாவாசை நாளை பௌர்ணமி என்று சொல்லி விடுவார். உண்மையில் அன்று அமாவசை ( ஏதோ ஞாபக மறதியில் ) இவரோடு விளையாட நினைத்த மன்னன் நாளை வானில் நிலவு தோன்ற வேண்டும் இல்லயேல் உன் தலை தரையில் உருளும் என்பார். இவர் அம்மனை வேண்டுவார். அம்மன் உண்மையான பக்தனான இவரின் முன் தோன்றி ஒரு அமாவாசை தினத்தை பௌர்ணமியாக்க தனது காதில் உள்ள அணிகலனை கழற்றி வானில் வீச அது நிலவாகத் தோன்றியது என்று கதை
அதில் வெறிபிடித்த பக்தனாக இவர் நடித்த நடிப்பு அத்தகையதொரு ஈடுபாடுள்ள உடல்மொழி தமிழ் திரையுலகம் இதுவரை காணாதது. பிரமாதப் படுத்தி இருப்பார்.
கப்பலோட்டிய தமிழன் என்ற படத்தில் பாரதியாராக வருவார். பாரதியைப் பற்றிப் படித்த நமக்கு கண் முன் ஒரு உருவம் தோன்றுமே அதற்கு ஒரு துளிக்கூட பிசகாமல் இவர் பொருந்துவர்.
அவன் மகாகவியாக உருவெடுக்கும் முன் அவனை பித்தனாக சித்தரிப்பது உண்டு. அந்த பித்தனின் உடல் மொழியை இவர் வாங்கி அதகளம் பண்ணியிருப்பார். இதை பின்பற்றித்தான் பிற்காலத்தில் பாரதி வேடம் ஏற்ற சிவாஜி, கமல் ஆகியோர் நடித்தனர் என்று கூறுவதுண்டு.
சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற பாலச்சந்தர் படத்தில் இவருக்கு மூன்று பெண்கள். இவர் ஒரு அலுவலக பணியில் இருந்து ஒய்வு பெற்று இருப்பார். வசதி இல்லாத நிலை. பெண்களை கரையேற்ற வேண்டும். ஆனால் வெகுளித்தனம் கொண்ட குணாதிசயத்தில் பல வாய்ப்புகள் தட்டி போகும் . இவரை பேசக்கூடாது என்று சொல்லி கட்டுப்படுத்தி வைத்திருப்பார்கள். ஒரு பெண்பார்க்கும் படலத்தில்..மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை சீர் செனத்தி என்று ஏகப்பட்ட கண்டிசன் போட்டுக் கொண்டு இருப்பார்கள். அவர்களை வழிக்குக் கொண்டு வர குடும்பமே கெஞ்சிக் கொண்டு இருக்கும். இவர் ஒரு மூன்று வார்த்தை பேசுகிறேன் பேசுகிறேன் என கெஞ்சிக் கொண்டு இருப்பார். சரி பேசுங்கள் என்று அனுமதி கொடுத்ததும் “வெளிய போங்கடா முண்டங்களா” என்று பேசி ஆட்டத்தை கலைப்பார் பாருங்கள்… இவர் நடிப்பு அந்தக் காட்சியில் அற்புதமான வெளிப்பாடு.
இதுபோல சிவாஜியோடு பல படங்கள் செய்து இருந்தார். மூன்று தெய்வங்கள் படத்தில் திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேருமடா என்ற பாடல் இடம் பெற்ற படம். எல்லாமே சிறப்பு.
சிவாஜி இவர் நடிப்பை பார்த்து இவர் மீது பெருமதிப்ப்பு வைத்து இருந்தார். இவர் தயாரித்த ஒரு படத்தில் நடிக்க ஒரு பைசா வாங்காமல் செய்து கொடுத்தார். எவ்வளவோ வற்புறுத்தியும் வாங்காததால் இவர் உணர்ச்சி வசப்பட்டு அடுத்த ஜென்மம் என்று இருந்தால் உங்கள் வீட்டு நாயாகப் பிறப்பேன் என்று கூறினாராம் அப்படியொரு நட்பு.
இவர் பெரிய பக்திமான். இப்படித்தான் வாழ வேண்டும் என மிகச்சிறந்த கொள்கைகளை கொண்டிருந்தவர். இரவு ஒன்பது மணிக்கு மேல் நடிக்க மாட்டார். வாசிப்பு பழக்கம் அதிகம் கொண்டிருத்த இவர் ஜெயகாந்தன் ரசிகர்.
சொந்தமாக விவசாயம் செய்து வந்தார். செங்குன்றம் என்ற இடத்தில இவரது வயல் இருந்தது . இவரது பொழுதுபோக்கு (படப்பிடிப்பு இல்லாத காலங்களில் ) விவசாயம். நடிப்புக் கல்லூரியில் உடல்மொழி பற்றி பாடம் எடுக்க இவர் நடிப்பை உதாரணம் காட்டலாம். அந்தளவு பெர்பெக்க்ஷன்.
அதேபோல குணச்சித்திர நடிப்பிற்கு ஒரு விருது ஏற்படுத்தி இவர் பெயரில் அளித்தால் நன்றாக இருக்கும். இதுதான் அவருக்கு செய்யும் பெரிய மரியாதையாகவும் இருக்கும்.