Home Blog Page 347

90 மிலி., மது அறிமுகம் செய்யப்பட்டாலும், மதுக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டாலும் போராட்டம்: ராமதாஸ்!

pmk ramadoss - 2026

90 மிலி மது அறிமுகம் செய்யப்பட்டாலும், மதுக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டாலும் பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை”

தமிழ்நாட்டில் மது குடிப்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 90 மிலி மதுப்புட்டி அறிமுகம் செய்யப்படும் என்றும், காலையில் கடுமையான பணிக்கு செல்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நண்பகல் 12.00 மணிக்கு திறக்கப்படும் மதுக்கடைகளை முன்கூட்டியே திறப்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி,’’180 மி.லியை ஒருவர் வாங்கி முழுமையாக பயன்படுத்திவிட முடியாது. எனவே, அவர் அதில் பாதியளவை வாங்க வேறொருவருக்காக காத்திருக்க வேண்டியது உள்ளது. எனவே, 90 மி.லிக்கு ஒரு பாக்கெட் போட்டுவிட்டால், இந்தப் பிரச்சினை தீரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  அது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.தற்போது பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. ஆனால், காலையில் 7 மணியிலிருந்து 9 மணி வரை, கட்டிட வேலைகள் உள்ளிட்ட கடினமான பணிகளுக்குச் செல்லக்கூடியவர்கள் ஒரு சில சிரமங்களுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு என்ன ஏற்பாடு? என்பதுகுறித்து அரசு ஆழமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.  அமைச்சர் முத்துசாமியின் பேச்சைக் கேட்டால், அவர் மதுவிலக்குத் துறை அமைச்சரா, மது விற்பனைத்துறை அமைச்சரா? என்ற ஐயம் எழுகிறது?

21 May28 TASMAC - 2026
21 May28 TASMAC

மின்சாரக் கட்டண உயர்வால் அதை செலுத்த முடியாமலும்,  விலைவாசி உயர்வால்  உணவுப் பொருட்களைக் கூட வாங்க முடியாமலும் தவிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களைப் பற்றி கவலைப்படாமல், 180 மிலி மதுவை பகிர்ந்து கொள்ள ஆள்கிடைக்காமல்  காத்திருக்கும் குடிமகன்களைப் பற்றி கவலைப்படுவதா அமைச்சரின் பணி? காலையில் வேலைக்கு செல்பவர்கள் இரவே மது வாங்கி வைத்து பத்திரப்படுத்த முடியாது என்று சான்றிதழ் வழங்குவதா அமைச்சரின் பணி? மதுவிலக்குத்துறை அமைச்சராக முத்துசாமி அவர்கள் நியமிக்கப்பட்ட போது, மதுவைக் கட்டுப்படுத்துவதில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனால், அவரது அண்மைக்கால செயல்பாடுகள் அனைத்து நம்பிக்கைகளையும் சிதைத்து விட்டன.

90 மிலி மது விற்பனை செய்யப்பட்டால்,  அதன் விலை மிகவும் குறைவாக இருக்கும். அதனால், பணம் இல்லாதவர்கள் கூட, குறைந்த தொகையை எளிதாகத் திரட்டி மது வாங்கிக் குடிப்பார்கள். காகிதக் குடுவைகளினால் ஆன மது வகைகள் சிறுவர்களை கவர்ந்திழுக்கும் ஆபத்தும் உள்ளது.  அதேபோல், காலை  நேரத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால், அது கடுமையான வேலை செய்பவர்களுக்கு உதவாது. மாறாக அவர்கள் காலையிலேயே மது அருந்தி விட்டு,  வேலைக்கு செல்லாமல் முடங்கி விடுவார்கள். அதனால் அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழக்கும்.  தமிழ்நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். இந்த ஆபத்துகளையெல்லாம் உணராமல்  90 மிலி மது, காலையில் மது வணிகம் ஆகியவற்றுக்கு ஆதரவாக அமைச்சர் பேசுவது  அழகல்ல.

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். அதற்கு மாறான  செயல்களில் தமிழக அரசு ஈடுபடக் கூடாது. 90 மிலி மது அறிமுகம் செய்யப்பட்டாலும், மதுக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டாலும் அவற்றை எதிர்த்து  பாட்டாளி மக்கள் கட்சி  கடுமையான போராட்டங்களை நடத்தும். எனவே, அத்தகைய திட்டங்களை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி, அடுத்த இரு ஆண்டுகளில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கன மழை; அவல நிலையில் மதுரை சாலைகள்!

madurai roads - 2026

மதுரை மாநகரில் சாலைகளின் அவல நிலை: மழைக்கு சாலை குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ,மதுரை அண்ணா நகர் மேலமடை வீரவாஞ்சிதெரு, காதர் மொய்தீன் தெரு ,மருது பாண்டியர் தெரு, அன்பு மலர் தெரு, கோமதிபுரம் ஜூபிலி டவுன் ,தாழை வீதி, திருக்குறள் வீதி குருநாதர் தெரு, ஆகிய தெருக்களில் குடிநீர் பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டு ,
சரிவர மூடப்படாமல் உள்ளதால், மழைக்காலங்களில் அவ் பகுதிகளில் மழை நீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கிறது. இதனால், அவ்வழியாக பாதுசாரிகளும், இருசக்கர வாகனத்தில் செல்வோர் கால் இடறி கீழே விழுகின்ற நிலை ஏற்படுகிறது.

இது குறித்து ,மதுரை மாநகராட்சி அலுவலர்களிடம் இடம் புகார் தெரிவித்தும், சாலைகளில் தோண்டப்படும் குழிகளை சரிவர மூடப்பட ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், சாலையில் தோண்டும் போது கால்வாய் கழிவு செல்லும் குழாய்களில், உடைப்பு ஏற்பட்டு அதுவும், மழை நீருடன் சங்கமிக்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்றும் ஏற்பட வாய்ப்புள்ளது .

மேலும், மதுரை மாநகராட்சி ஆனது கழிவுநீரை வைகை ஆற்றில் சென்று களப்பதையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை வீரவாஞ்சி தெருவில் மற்றும் காதர்மொய்தீன் தெருவில் பள்ளங்களில் மழைநீர் மற்றும் வெளியேறும் கழிவு நீர் தேங்கி இருப்பதால், இரவு நேரங்களில் விஷசந்துக்கள் நடமாடுவதாகவும், அது பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகவே ,மதுரை மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் ஆணையாளர் விரைந்து நடவடிக்கை எடுத்து, சாலையோர பள்ளங்களை முடியும், சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்போர் சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆளுநர் குறித்த புகார்க் கடிதம்; உள்துறைக்கு அனுப்பி வைத்தார் குடியரசுத் தலைவர்!

president draupadi murmu - 2026

ஆளுநர் ரவி மீது புகார் தெரிவித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய கடிதம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் உள்துறை அமைச்சகம் முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி மீது, தொடக்கம் முதலே தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளும் அமைச்சர்கள், திமுக.,வினர் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றனர். சட்டமன்றத்தில் சட்டவிரோத தீர்மானம் நிறைவேற்றுவது, சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் வெளியேறிய போது போய்யா என்று அநாகரிகமாக சைகை காட்டுவது என கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டு வரும் திமுக.,வினர், ஆளுநர் அரசியல் பேசுகிறார் என்று கூறி அரசியல் செய்து வருகின்றனர். இந்நிலையில், தங்கள் கட்சியின் கொள்கைக்கு முரணாக ஆளுநர் பொது மேடைகளில் பேசுகிறார் என்று, ஆளுநரையும் திமுக.,வின் உறுப்பினர் என்ற அளவுக்கு நினைத்துக் கொண்டு, ஆளுநர் மீது புகார் தெரிவித்து, ஒரு புகார்க் கடிதத்தை தமிழக முதல்வர்  ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். 

அந்தக் கடிதத்தில், அரசின் கொள்கைகளுக்கு முரணாகவும், அரசின் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும் செயல்படும் ஆளுநர் ரவி, பதவியில் இருந்து நீக்கப்படத் தகுதியானவர் என தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்ட அந்தக் கடிதத்தை குடியரசுத் தலைவர் முழுமையாக படித்துப் பார்த்ததாகவும், அதன்பின், அக்கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு,  அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. .

இந்தக் கடிதத்தின் மீது, மத்திய உள்துறை அமைச்சகம்  முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.  இதனிடையே ஆளுநர் ரவி ஒரு வார கால பயணமாக தில்லியில் தங்கி இருக்கிறார். தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளையும் தமிழக அரசுக்கு தான் அனுப்பிய கடித விவரங்களையும் குடியரசுத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் ஏற்கெனவே பகிர்ந்து கொண்டுள்ளார்.  தமிழகத்தில் நிலவும் விவரங்களை அனுப்பியும் வைத்திருக்கிறார்.  இந்த நிலையில் தான் இரு தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தம் அரசு பதவி போனாலும் பரவாயில்லை இதை சொல்ல வேண்டி இருக்கிறது என்ற ரீதியில் ஒரு கருத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக., பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி; தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பு!

AIADMK - 2026

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, இன்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி என தேர்தல் ஆணைய இணையதளத்தில் இன்று(ஜூலை 11) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக தரப்பு அளித்த ஆவணங்கள் அடிப்படையில், பழனிசாமி நியமித்த நிர்வாகிளையும் அங்கீகரித்து தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

அதன்படி, தமிழ்மகன் உசேனை அவைத்தலைவராகவும், திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராகவும், துணைப் பொதுச் செயலாளர்களாக கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதனை அங்கீகரித்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

aiadmk list - 2026

அந்த முழுப் பட்டியலையும் பதிவிறக்கம் செய்ய…

https://eci.gov.in/files/file/15120-all-india-anna-dravida-munetra-khazagham/

சந்திரயான்-3; சிறப்புகள் என்ன தெரியுமா?

chandrayann3 a - 2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

சந்திரயான்-3 ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இது, நாட்டின் மூன்றாவது சந்திரப் பயணமாகும். இது சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்ததைப் போன்ற நிலவில் தரையிறங்கத் தேவையான லேண்டர், அங்கே மண், கல் போன்ற மாதிரிகளைச் சேகரிக்கத் தேவையான ரோவரைக் கொண்டிருக்கும்.

ஆனால் நிலவைச் சுற்றி வந்து ஆய்வுமேற்கொள்ளும் ஆர்பிட்டர் இருக்காது. அதன் உந்துவிசை தொகுதி ஒரு தகவல் தொடர்பு ரிலே செயற்கைக்கோள் போல செயல்படும். விண்கலம் சந்திரனைச் சுற்றுகின்ற சுற்றுப்பாதையில் 100 கிமீ தூரத்தில் இருக்கும் வரை உந்துவிசை தொகுதி, லேண்டர் மற்றும் ரோவர் கட்டமைப்பை கொண்டு செல்லும். இந்த உந்து விசைத் தொகுதி ஒரு ரிலே செயற்கைக்கோளாகப் பயன்படுத்தப்படும்.

chandrayann3 b - 2026

சந்திரயான்-2 2019ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் நாள் மதியம் 1443க்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இது அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் 20ஆம் தேதி அன்று சந்திரனைத் தனது சுற்றுவட்டப் பாதையில் சுற்றத் தொடங்கியது. இதிலிருந்த “விக்ரம்” லேண்டரும் “ப்ரக்யான்” ரொவரும் நிலவின் தென் துருவப் பகுதியில் 2019, செப்டம்பர் 6ஆம் நாள் இறங்கும்போது ஒரு மென்பொருள் சிக்கல் காரணமாய் தரையிறங்கும் முயற்சி தோல்வியடைந்தது.

இன்று விண்ணில் செலுத்தப்படும் சந்திரயான் 3 மீண்டும் வெற்றியைப் பெற ஒரு முயற்சியாகும். எல்லாச் செயல்பாடுகளும் நல்லவிதமாக நடைபெற்றால் சந்திரயான் 3 வருகின்ற ஆகஸ்டு மாதம் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கும்.

இந்த முயற்சி வெற்றிகரமாக முடிவடைந்தால் 2025ஆம் ஆண்டு ஜப்பனுடன் இணைந்து சந்திரனின் துருவப்பகுதிகளை ஆய்வுசெய்யும் முயற்சியில் இந்தியா ஈடுபடும்.

சந்திரயான் 3இல் உள்ள லேண்டரின் பெயரும் “விக்ரம்”; ரொவர் பெயரும் “பிரக்யான்” தான்.

chandrayann3 c - 2026

சந்திரயான்-3 திட்டத்திற்கு இஸ்ரோ மூன்று முக்கிய நோக்கங்களை நிர்ணயித்துள்ளது.

(1) நிலவின் மேற்பரப்பில் லேண்டரை பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கம் பெறுதல்.
(2) சந்திரனில் ரோவரின் அலைந்து திரியும் திறன்களைக் கவனித்து நிரூபித்தல்
(3) நிலவின் மண், கல் போன்ற பொருட்களின் கலவையை நன்கு புரிந்துகொள்ளவும் பயிற்சி செய்தல்.

உந்துவிசை தொகுதி

சந்திரனில் இருந்து 100 கிமீ தூரத்தில் உள்ள சந்திர சுற்றுப்பாதை வரை உந்துவிசை தொகுதி லேண்டர் மற்றும் ரோவர் கட்டமைப்பை கொண்டு செல்லும். இதில் ஒரு பெரிய சோலார் பேனல் ஒரு பக்கத்தில் பொருத்தப்பட்ட ஒரு பெட்டி போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. மேலே ஒரு பெரிய சிலிண்டர் (இன்டர்மோடுலர் அடாப்டர் கோன்) லேண்டருக்கு ஏற்ற அமைப்பாக செயல்படுகிறது. லேண்டரைத் தவிர, நிலவின் சுற்றுப்பாதையில் இருந்து பூமியின் நிறமாலை மற்றும் துருவ அளவீடுகளை ஆய்வு செய்ய ஸ்பெக்ட்ரோ-போலரிமெட்ரி ஆஃப் ஹாபிடபிள் பிளானட் எர்த் (SHAPE) எனப்படும் பேலோடை இந்த தொகுதி சுமந்து செல்கிறது.

லேண்டர்

நிலவில் மெதுவாக தரையிறங்குவதற்கு லேண்டர் உதவி செய்யும். நான்கு தரையிறங்கும் கால்கள் மற்றும் தலா 800 நியூட்டன்கள் கொண்ட நான்கு தரையிறங்கும் உந்துதல்கள் கொண்ட இது பெட்டி வடிவத்திலும் உள்ளது. இது ரோவர் மற்றும் பல்வேறு அறிவியல் கருவிகளை தன்னுள் வைத்திருக்கிறது.

ரோவர் என்பது ஒரு நடமாடும் ஆய்வகமாகும். இது நிலவின் மேற்பரப்பில் பயணித்து, மாதிரிகளை சேகரித்து, நிலவின் புவியியல் மற்றும் வேதியியல் கலவையை பகுப்பாய்வு செய்யும். இது ஆறு சக்கர ராக்கர்-போகி வீல் டிரைவ் அசெம்பிளியில் பொருத்தப்பட்ட ஒரு செவ்வக சேஸ் ஆகும்.

சந்திரயான்-3க்கான தரையிறக்கத்தில் நான்கு த்ரோட்டில்-திறன் இயந்திரங்கள் மட்டுமே இருக்கும், சந்திரயான்-2 இல் உள்ள விக்ரம் போலல்லாமல், ஐந்து 800 நியூட்டன் என்ஜின்களை இது கொண்டிருக்கிறது, ஐந்தாவது உந்து விசை அமைப்பு ஒரு நிலையான உந்துதலுடன் மையத்தில் பொருத்தப்பட்டுள்ளது. சந்திரயான்-2 மற்றும் அதிகரித்த கருவி பணிநீக்கத்துடன் ஒப்பிடும்போது இதன் கால்கள் வலிமையானவை.

மேலதிக தகவல்களுக்கு : https://www.isro.gov.in/Chandrayaan3_Details.html

உரிமைக்குப் போராடி… விடுதலை உணர்வுக்கு உயிர் தந்த ‘வீரன் அழகுமுத்து கோன்’!

azhagumuthukkon - 2026

ஆங்கில ஆட்சிக்கு எதிரான முதல் சுதந்திர போராளி “மாவீரன் அழகுமுத்துக் கோன்” கொடூரன் “மருதநாயகம்” என்ற யூசுப்கானால் கொடூரமாக கொல்லபட்ட நாள் இன்று…

அழகுமுத்துகோன் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் பிறந்தார். தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன்(அழகுமுத்து என்பது இவர்களது குடும்பப்பெயர் பல தலைமுறைக்கு முன்பிருந்து தற்போதுவரை இப்பெயர் உள்ளது) தாய் அழகுமுத்தம்மாள். அவர் எட்டயபுரம் பாளையத்தில் படைத்தளபதியாக பணியாற்றினார்..1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார்.

1728-ம் ஆண்டு நமது விடுதலை வீரர் வீர அழகுமுத்துக்கோன் பிறந்தார்.

1750 -ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். அதே ஆண்டு தன்னுடைய 22 வயதில் மன்னராக முடிசூடிக்கொண்டார்.!

எட்டையபுரத்திலும் அதனை சுற்றியுள்ள பாளையங்களில் வரி வசூலிக்க, ஆங்கிலேயத் தளபதி அலெக்சாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் (கான்சாகிப்) வந்தனர். இதை கேள்விப்பட்ட எட்டையபுரம் மன்னர் உடனே ஆலோசனை கூட்டத்தை கூட்டினார்..!

ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டக்கூடாது; வியாபாரம் செய்ய வந்த கும்பினியர்களுக்கு வரி வசூலிக்க ஏது உரிமை?’ என கேள்வி கேட்டு கான்சாகிப்பிற்கு கடிதம் எழுதினார் மன்னர். கடிதத்தைக் கண்ட கான்சாகிப் தன் படையுடன், பீரங்கி படையையும் சேர்த்து கொண்டு எட்டையபுரத்தை தாக்க தொடங்கினான்…

கப்பம் கட்டுவதற்கு உயிர்விடுவதே மேல் என பீரங்கி குண்டுகளை நெஞ்சில் வாங்கி தாய் நாட்டிற்காக இன்னுயிரை தந்த மாவீரன் அழகுமுத்துக்கோன். #1stWarAgainstBritishin1757 #veerazhagumuthukone

வீர அழகுமுத்துக்கோனுக்கும் முகம்மது யூசுப் கானுக்கும் பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. போரில் வீர அழகுமுத்துகோனின் வலது கால் சுடப்பட்டது.

இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது.

அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள்.

பஞ்சம் பிழைக்க வெளியே இருந்து வந்த ஆங்கில காலனி ஆதிக்க வர்கத்தையும், உள்ளே இருந்த துரோகம் செய்த யூசப் கான் போன்ற ஓநாய்களையும் எதிர்த்து வீர மரணம் அடைந்தான் அழகுமுத்துக்கோன்.

எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம்’ என்றால் பீரங்கிகள் முழங்கும். வீரன் அழகு முத்துக்கோனும் அவனது வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள்..

“மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் உயிர் மிஞ்சும்”என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், “தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார் ” பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்த மற்ற எவரையும் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்ற வீரன் அழகுமுத்துக் கோனின் கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது. ஆத்திரம் கொண்டது.

அவரின் இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள்.

பசுக்களை தெய்வமாக வணங்கும் கிருஷ்ணனின் வழி வந்தவரும்,அதை வெட்டும் பொழுது கொதித்து எழுந்து தன் உயிரை இழந்தான் வீரன் அழகுமுத்துக்கோன்.

பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை.இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன்..

கி.பி. 1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய இந்த விடுதலை போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற முதல் விடுதலைப் போராகும்.

சுடப்பட்டு சிதறிய அழகுமுத்துக்கோன் உடல் துண்டுகள் ஒரு நார் பெட்டியில் வைக்கப்பெற்று, எட்டையபுரம் அருகில் உள்ள சோழாபுரம் கண்மாய் கரையில் எரியூட்டப்பட்டது.

அங்கு வீர மரணம் அடைந்தவர்களுக்கு அக்கால வழக்கப்படி, ஒரு நடுகல் நடப்பட்டு, ஆண்டு தோறும் கட்டாளங்குளம் மக்கள், அழகுமுத்துக்கோனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..

அங்கு தமிழக அரசு அவருக்கு மணிமண்டபம் கட்டியும், ஆண்டு தோறும் அரசு விழா எடுத்தும், மத்திய மோடிஜீ அரசு இவருக்கு தபால் தலை வெளியிட்டும் பெருமைபடுத்தியுள்ளது..!!

இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் முதல் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன்.

தாய்மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சுதந்திர முழக்கமிட்ட வீரனைத் தந்து, தமிழ் சமூகம் பெருமை தேடிக் கொண்டது.,!!

  • புகழ் மச்சேந்திரன், திருச்சி

Due to the treachery of Marudhanayakam (Khan Sahib), who was the General of the English army, in 1757 Azhagumuthu Kon was captured and shot dead at Nedukattoor. Along with him, 248 warriors and 6 Generals were also killed.

The pages of our history speak of the massive war waged in 1857 as the First War of Independence. However, exactly a century prior to this, from the southern most part of Bharat, stood Azhagu Muthu Kon stoking the sacrificial fire of freedom. #1stWarAgainstBritishin1757 #veerazhagumuthukone

வட இந்தியாவில் கனமழை, வெள்ளம் ஏன்?

why heavy rain in north states - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இரண்டு வானிலை நிகழ்வுகளின் தொடர்பு காரணமாக ஒரு அரிய நிகழ்வு, 2013ல் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட ‘இமயமலை சுனாமி’ போன்ற காட்சிகளுடன், வட இந்தியாவின் பல பகுதிகளில் இடைவிடாத கனமழைக்கு வழிவகுத்திருக்கிறது.

தற்போது நாம் காண்கின்ற செயற்கைக்கோள் படங்கள், கேதார்நாத்தில் திடீர் வெள்ளத்தைத் தூண்டிய 2013 ‘இமயமலை சுனாமி’யின் போது காணப்பட்ட சூழ்நிலைக்கு ஒப்பான படங்களாக உள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான பேர் இறந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் பெரும் சொத்து இழப்பு ஏற்பட்டது.

சமீபத்திய நிகழ்வாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை 24 மணி நேரத்தில் 153 மிமீ மழை பதிவாகியுள்ளது, இது 1982ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக பதிவாகியுள்ள மழை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் ஏற்கனவே கனமழை எச்சரிக்கை மற்றும் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரிய வானிலை நிகழ்வு

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது. தென் மேற்குப் பருவமழை காரணமாக இமாச்சலப் பிரதேசத்திற்கு மேலே ஒரு காற்றுச் சுழற்சி உருவாகியிருந்தது. வடகிழக்கு இராஜஸ்தான் மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்றும் உருவாகியிருந்தது.

why heavy rain in north states1 - 2026

வெஸ்டர்ன் டிஸ்டர்பன்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மேற்கத்திய இடையூறு மற்றும் பருவக்காற்று இடையேயான இந்த இடைவினை 24 முதல் 36 மணி நேரம் வரை நீடித்தது. இது வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கனமழைக்கு வழிவகுத்தது.

இத்தகைய சூழ்நிலை தென் மேற்குப் பருவமழையின் ஒரு பகுதியாக நிகழக்கூடும் என்றாலும், இந்தத் தொடர்பு அரிதாகவே கருதப்படுகிறது. “மேற்கத்திய இடையூறுகளுடன் பருவக்காற்றுகளின் தொடர்பு காரணமாக, மழையின் தீவிரம் மற்றும் விநியோகம் மேம்பட்டுள்ளது” என்று இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சிம்லா அலுவலக இயக்குனர் சுரேந்தர் பால் கூறியிருக்கிறார்.

மேற்கத்திய இடையூறுகள் மற்றும் பருவக்காற்றுகள் என்றால் என்ன?

மேற்கத்திய இடையூறு என்பது மத்தியதரைக் கடல் பகுதியில் உருவாகும் புயல் அல்லது குறைந்த காற்றாழுத்தப் பகுதியாகும். மேலும் அவை மத்தியதரைக் கடல் பகுதி, ஈரான், மத்திய கிழக்கு நாடுகள் வழியே பயணித்து, அவை இந்திய துணைக்கண்டத்திற்கு வானிலை மாற்றங்களை கொண்டு வருகின்றன.

மேற்கத்திய தொந்தரவு வட இந்தியாவில் வானிலையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த இடையூறுகள் நெருங்கும்போது, அவை நாட்டின் வடமேற்குப் பகுதிகளில் மேக மூட்டம், மழைப்பொழிவு மற்றும் சில சமயங்களில் இமயமலைப் பகுதியின் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவை ஏற்படுத்துகின்றன. இவை பெரும்பாலும் டிசம்பர் முதல் மே முதல் வாரம் வரையே ஏற்படுகின்றன. தென் மேற்குப் பருவமழைக்காலத்தில் பொதுவாக ஏற்படுவதில்லை.

தென்மேற்குப் பருவக்காற்று இந்தியப் பெருங்கடலில், நிலநடுக்கோட்டிற்குத் தெற்கே உருவாகி இந்தியா முழுவதும் படர்ந்து இந்தியத் துணைக்கண்டத்தில் நல்ல மழையைத் தருகிறது.

2013 இமயமலை சுனாமியின் போது என்ன நடந்தது?

2013ஆம் ஆண்டு உத்தரகாண்டில் ஏற்பட்ட ‘இமயமலை சுனாமி’ கனமழை உள்ளிட்ட பல காரணிகளால் தூண்டப்பட்டது. இதற்கான உடனடி காரணம் ஒரு பனிப்பாறை ஏரியைத் தடுத்து நிறுத்தும் ஒரு இயற்கை அணை உடைந்ததே ஆகும். இது இந்த உடனடி நிகழ்வால் மட்டும் ஏற்படவில்லை, மாறாக ஆழமான அடிப்படைக் காரணத்தைக் கொண்டிருந்தது. பேரழிவிற்கு வழிவகுத்த மிகவும் சிக்கலான தொடர் நிகழ்வுகளை விஞ்ஞானிகள் பட்டிலிட்டுள்ளனர்.

கன மழை, வளிமண்டலத்தின் நிலையற்ற தன்மை, பனிப்பொழிவு மற்றும் காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட பனிப்பாறை உடைப்பு ஆகியவற்றின் கலவையால் அந்தப் பேரழிவு நிகழ்வு நிகழ்ந்தது.

10.07.2023 காலை 0830 மணி அளவில் பதிவான மழை அளவுகளின்படி பஞ்சாபில் – ரோபர் 35, ராஜ்புரா 26, பல்லோவால் 20; ஹரியாணாவில் இஸ்மாயில்பாத் 24, தேஜேவால 22, மண்ட்கோலா 22, பிராதப்னகர் 20; ஹிமாச்சல் பிரதேஷில் பச்சாட் 22, நைனாதேவி 20, சௌரி 19 எனப் பரவலாக அதி கன மழை பெய்துள்ளது.

இப்பகுதிகளில் நாளை முதல் மழை குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும் தற்போது இரான் பகுதிகள் மேலே மற்றொரு மேற்கத்திய தொந்தரவு நிலவி வருகிறது. இது இந்தியாவை நோக்கி இன்னும் இரு நாட்களில் நகர்க் கூடும். அப்போது மீண்டும் ஒரு முறை கன மழைக்கான வாய்ப்பிருக்கிறது.

தங்கமே தங்கம் தங்கமே தங்கம் தக்காளிப் பழமே! சுவையான பாடலும் இன்றைய சூழலும்!

thangame thangam song - 2026

தக்காளிக்கு மவுசு கூடிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் காய்கறிகள், கீரை மற்றும் கிழங்கு வகைளின் மகத்துவத்தை நகைச்சுவையாகக் கூறி பட்டியலிடும் பாடல் இது.

“ஆஹா தங்கமே தங்கம் தங்கமே தங்கம் தக்காளிப் பழமே”. திரைப்படம்: அன்புவழி (1968); பாடலாசிரியர்: தெள்ளுர் தருமராஜன் (இவர் வேறு ஏதாவது திரைப்படப் பாடல்களை எழுதினாரா என்று தெரியவில்லை). இசையமைப்பு: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

தக்காளி, வெங்காயம், அரைக்கீரை, சிறுக்கீரை, அகத்திக்கீரை, சுக்காங்கீரை, புளிக்கீரை புதினாக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முள்ளங்கி, பூசணி, புடலங்காய், வெண்டைக்காய், கொத்தமல்லி, இஞ்சி, சேப்பங்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, கோவைப்பழம், கருணைக்கிழங்கு என்று வரிசையாக அடுக்கி அசல் காய்கறி விற்பனைக்காரராகவே மாறி கூவிக்கொண்டு பாடும் இசையரசர் டி.எம்.சௌந்தரராஜனின் பின்னணிக்கு குரலுக்கு தள்ளுவண்டியிலே இத்தனையையும் வைத்து விற்பனை செய்ய வந்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் எல்.விஜயட்சுமி மற்றும் அவர்களின் தோழிகளை கேலி செய்துகொண்டு துள்ளாட்டத்துடன் பாடும் காட்சியை பார்த்து கேட்டு மகிழலாம்.

டாக்டர் ராகவன், மதுரை

முதல்வர் ஸ்டாலினை பாஜக., குழு சந்திக்க நேரம் கேட்டுள்ள அண்ணாமலை!

1719347 mk stalin - 2026

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

மது இல்லா தமிழகத்தை உருவாக்குவது குறித்து பாஜக ஒரு திட்டம் வகுத்துள்ளது. இந்த திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக பாஜக., துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு தங்களை சந்திக்க நேரம் ஒதுக்கி தரவேண்டும். இம்மாதத்தில் ஒருநாள் சந்திக்க நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அண்ணாமலை கூறி உள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதம்….

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு !

பொருள் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தங்களை நேரில் சந்திக்க நேரம் ஓதுக்கி தருமாறு கோருதல்

மது இவ்லாத தமிழகம் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கனவு மட்டுமல்ல, தமிழக பொது மக்களின் விருப்பமும் அதனை நிறைவேற்றிட, தமிழக பாரதிய ஜனதர கட்சியானது தகுந்த ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வகுத்துள்ளது. இது குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

இது தொடர்பாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநில துணை தலைவர் திரு. கருநாகராஜன் அவர்கள் தலைமையிலான ஐவர் குழுவானது தங்களை சந்தித்து, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்தினை தங்களிடம் சமர்ப்பிக்குமாறு அறியுறுத்தியுள்ளேன்.

ஆகவே தாங்கள் வருகின்ற ஜூலை 11ந் தேதி முதல் 13த் தேதி அல்லது இம்மாதத்தில் ஏதாவது ஒரு தினத்தில், தங்களது பொன்னான நேரத்தை இந்த சந்திப்பிற்கு ஒதுக்கி தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தங்களது மேலான பதியினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

-என்று எழுதியுள்ளார் அண்ணாமலை.

மழை-நெல்லை தென்காசி அணைகளில் நீர் மட்டம் உயர்வு..

IMG 20230710 WA0125 - 2026

மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் நெல்லை தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 60 அடியைத் தாண்டியது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் திங்கள்கிழமை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் வறண்ட நிலையில் இருந்த அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து அணைகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்ருகிறது. நிகழாண்டு கோடையில் நீர்மட்டம் 20 அடி வரை சென்ற பாபநாசம் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை 60 அடியைக் தாண்டியது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி 143 அடி நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 64.70 அடியாகவும் நீர்வரத்து 3141.20 கன அடியாகவும் நீர் வெளியேற்றம்: 454.75 கன அடியாகவும் இருந்தது.

156 அடி நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 96.75 அடியாக இருந்தது.

118 அடி நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 45.20 அடியாகவும் நீர்வரத்து 133.00 கன அடியாகவும் வெளியேற்றம் 50.00 கன அடியாகவும் இருந்தது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 85 அடி நீர் மட்டம் கொண்ட கடனாநதி அணையில் நீர்மட்டம் 54 அடியாகவும் நீர்வரத்து 219 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது. 84 அடி நீர்மட்டம் ராமநதி அணையில் நீர்மட்டம் 58 அடியாகவும் நீர்வரத்து 98 கன அடியாகவும் வெளியேற்றம் 3 கனஅடியாகவும் இருந்தது. 72.10 அடி நீர் மட்டம் கொண்ட கருப்பாநதி அணையில் நீர்மட்டம் 34.12 அடியாகவும் நீர்வரத்து 19 கனஅடியாகவும் நீர் வெளியேற்றம் 3 கனஅடியாகவும் இருந்தது. 36.10 அடி நீர்மட்டம் கொண்ட குண்டாறு அணையில் நீர்மட்டம் 36.10 அடியாகவும் நீர்வரத்து மற்றும் நீர்வெளியேற்றம் 67 கனஅடியாகவும் இருந்தது. 132 அடி நீர் மட்டம் கொண்ட கருப்பாநதி அணையில் நீர்மட்டம் 77 அடியாகவும் நீர்வரத்து 104 கனஅடியாகவும் இருந்தது. நீர் வெளியேற்றம் இல்லை .

மழையளவு (மி.மீட்டரில்)
திருநெல்வேலி மாவட்டம் : பாபநாசம் அணை 4, சேர்வலாறு அணை 7, பாளையங்கோட்டை 2, திருநெல்வேலி 1.4, சேரன்மகாதேவி 6, மாஞ்சோலை 6, காக்காச்சி 10, நாலுமுக்கு 18, ஊத்து 21.

தென்காசி மாவட்டம்:

தென்காசி 4, செங்கோட்டை 4.8, கடனாநதி அணை 10, ராமநதி அணை 7.2, கருப்பாநதி 2, குண்டாறு 19.4, அடவிநயினார் கோயில் அணை 40.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கிய நிலையில் அணைகளிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.