டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர் கொலை செய்ய பட்ட கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் இருவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இராஜபாளையம் உட்கோட்டம், சேத்தூர் காவல் நிலைய சரகம், கடந்த 10.11.2025ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தேவதானம் அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில் தற்காலிக பாதுகாப்பு காவல் பணியாளர்களாக பணியில் இருந்த பேச்சிமுத்து (54) மற்றும் சங்கரபாண்டியன் (69) ஆகியோர்களை கொலை செய்து மேற்படி கோவில் உண்டியலில் இருந்த பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்தனர்.
இது சம்பந்தமாக கொடுத்த புகாரின் அடிப்படையில் சேத்தூர் காவல் நிலையத்தில் ஆதாய கொலை வழக்கு பதிவு செய்து 24 மணி நேரத்தில் எதிரிகளான நாகராஜ் (26) மற்றும் முனியசாமி (40) ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் மேற்படி எதிரிகளான நாகராஜ் (26) மற்றும் முனியசாமி (40) ஆகியோர் இது போன்ற குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடாமல் இருப்பதை தடுப்பதற்காகவும், இவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டும் இவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், இன்று 29.11.2025-ம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.சுகபுத்ரா எதிரிகளான நாகராஜ் (26) மற்றும் முனியசாமி (40) ஆகியோர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.
மேற்படி உத்தரவின் பேரில் எதிரிகள் மதுரை மத்திய சிறையில் குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர். பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் நடவடிக்கையை கட்டுபடுத்தும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி.கண்ணன் தெரிவித்துள்ளார்..
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் பக்தர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். முன்னதாக மலைமீது ஏற்றப்படும் தீபத்தை தங்கள் வாழ்நாளில் முதல்முறையாக காண வேண்டும் என்பதற்காக காத்திருந்த பக்தர்கள் தங்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தினார்கள். இதனால் கோயில் முன் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாரதம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தபோது முதல் உலகப்போர் நேரத்தில் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்ட தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வானது 105 வருடங்களுக்குப் பிறகு தற்போது ஏற்றப்படும் என நீதிமன்றம் அனுமதியும் உத்தரவும் அளித்த பிறகும் கூட, வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இதை அடுத்து நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் 10 பேருடன் சென்று திருப்பரங்குன்றம் மலையில் உடன் சென்று தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனவும், சிஐஎஸ்எப் போலீசார் பாதுகாப்புக்குச் செல்ல வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மனுதாரருடன் 10 பேர் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதை அடுத்து நாளை 12 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்ய சிஆர்பிஎஃப்க்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
மதுரை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக அறநிலையத்துறை சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் 27 இடங்களில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிசிடிவி கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு ‘ முன்பு நீதியரசர் ஜி ஆர் சாமிநாதன் தீர்ப்பு வழங்கினார்.
இந்நிலையில், அறநிலை துறை சார்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் அந்த மனு உடனடி விசாரணைக்கு இன்று பட்டியலிடப்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை அல்லது மறு உத்தரவுக்காக அறநிலையத்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
இந் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மிகவும் பதட்டமான சூழ்நிலையில் திருப்பரங்குன்றம் பகுதி உள்ளதால், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேற்று இரவு முதல் திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் மலை பாதை பகுதிகளில் ஆய்வு செய்தார் .
அதனைத் தொடர்ந்து, தீபத் திருநாளான இன்று ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க காவல்துறை சார்பில் 27 இடங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் ஆர்ச், 16 கல் மண்டபம் மற்றும் பெரிய ரதவீதி மேலரத வீதி கீழ ரத வீதி திருப்பரங்குன்றம் கோவில் செல்லும் வழித்தடம், பழனி ஆண்டவர் கோவில், தர்கா பகுதி மற்றும் கோவில் பின்புறம் உள்ள படிக்கட்டு ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கண்காணிப்பு வசதிக்காக கோவில் வளாகம் கிரிவலப் பாதை பெரியதவிதி கீழ ரதவீதி மேலரத வீதி பதினாறுகள் மண்டபம் பழனி ஆண்டவர் கோவில் சிசிடி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ட்ரோன் மூலம் கண்காணிக்கவும் போலீசார் ஏற்பாடு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சிறிய வைரத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்:
மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இவ்விழாவினை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும் மாலையில் தங்கமயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், வெள்ளி ஆட்டுக்கடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை 7:30 மணியளவில் தேரோட்டம் துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றம், திருமங்கலம் கள்ளிக்குடி அதனை சுற்றியுள்ள கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மேலும் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பாதை யாத்திரையாக வந்தடைந்தனர்.
பத்தர்கள் இன்று காலையில் தேரோட்டம் விழாவில் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனனர் இந்த சிறிய வைர தேரானது நான்கு ரத வீதிகளில் மட்டும் உலா வந்தது.
முன்னதாக, சுப்ரமணியசாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிறிய வைர தேரில் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் வடம் பிடிக்க ரத வீதிகள் வழியாக தேர் பவனி வந்தது கண்கொள்ளாக் கட்சியாக இருக்கும்.
தொடர்ந்து, இன்று மாலை 6 மணி அளவில் கோயிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக திருவண்ணாமலை பகுதியில் இருந்து வல்லுனர் குழுவினர் வந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
தொடர்ந்து இரவு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை தீர்த்த உற்சவம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
காசி தமிழ் சங்கமம் 4.0 : இன்றைய இந்தியாவுக்கு தேவைப்படும் நாகரிக கலந்துரையாடல்
எழுதியவர்: திரு. சாமு கிருஷ்ண ஷாஸ்திரி, தலைவர், பாரதீய பாஷா சமிதி
இந்தியா தனது பண்பாட்டு எழுச்சியையும், மொழி சார்ந்த கவலைகளையும் எதிர்கொண்டு வரும் இந்த தருணத்தில், காசி தமிழ் சங்கமம் (KTS) மிகச் சரியான நேரத்தில் மீண்டும் வருகை தருகிறது. 2025 டிசம்பரில் தொடங்கும் அதன் நான்காவது பதிப்பு, பிராந்திய அடையாளம், மொழிப் பெருமை, தேசிய ஒருங்கிணைப்பு போன்ற விவாதங்கள் கூர்மையாகி, சில சமயங்களில் பிரிவினை உருவாக்கும் நிலைக்கு சென்றுள்ள நேரத்தில் வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், KTS ஒரு திருவிழாவாக மட்டுமன்றி, ஒரு முக்கிய நாகரிகப் பாலமாக திகழ்கிறது. இந்தியாவின் ஒற்றுமை என்பது, நூற்றாண்டுகள் தொடர்ந்துவரும் பண்பாட்டு பாரம்பரியம் என்பதை நாம் மறக்காமல் இருப்பதை நினைவூட்டுகிறது.
பிரிவினைக் காலத்தில் எதிர்சரிவு
கடந்த சில ஆண்டுகளில், மொழிக் கேள்விகள் பொதுமக்கள் விவாதங்களில் பலத்த இடம்பிடித்துள்ளன. பணியாளர் சேர்க்கை விதிகள், போட்டித் தேர்வுகள், கற்பித்தல் மொழி, டிஜிட்டல் தளங்கள் போன்றவை குறித்து பரபரப்பான விவாதங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக சமூக ஊடகங்களில் இவை பிராந்திய மோதல்களாக பெரிதுபடுத்தப்பட்டு, வடக்கு–தெற்கு கலாச்சார முரண்பாடு என ஒரு தவறான தோற்றத்தை உருவாக்குகின்றன. இந்த உணர்ச்சிவசப்பட்ட கதைக்களம், பல நூற்றாண்டுகளாக இடம்பெற்று வந்த உரையாடல்கள், குடிபெயர்வுகள், கல்வி பரிமாற்றங்கள், கலாச்சார இணைவுகள் ஆகியவை இந்திய நாகரிகத்தை உருவாக்கியது என்ற உண்மையை மறைக்கிறது. இவ்வாறு உருவாகும் பிரிவினைக்கு எதிராக, காசி தமிழ் சங்கமம் ஒரு வலுவான எதிர்சரிவாக செயல்படுகிறது. தமிழ் மற்றும் இந்தி பேசும் பிரதேசங்கள் ஒன்றுக்கொன்று எதிர்மாறாக இல்லை; மாறாக, தொடர்ந்து நடக்கும் உரையாடலும் ஒற்றுமையும் என்பதற்கான அழியாத சான்றாக KTS திகழ்கிறது.
பாரம்பரியத்துடன் பயணிக்கும் முன்னேற்றம்
பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் வடிவமைக்கப்பட்டதும், கல்வி அமைச்சகத்தின் தலைமையில், ஐஐடி மெட்ராஸ் மற்றும் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் (BHU) ஆகியவை அறிவியல் இணை பங்காளர்களாக அமைந்து நடத்தப்படுவதுமான காசி தமிழ் சங்கமம், ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத் என்ற எண்ணத்தோடு முழுமையாக ஒத்திசைக்கிறது. இது ஒரு குறியீட்டு நிகழ்வு மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இந்திய சிந்தனையை வடிவமைத்த தமிழ்நாடு மற்றும் காசி எனும் இரு தொன்மையான அறிவு மையங்களுக்கிடையேயான நாகரிக தொடர்பை மறுபடியும் உயிர்ப்பிக்கிறது. தென்னகம்–காசி இணைப்பு ஒரு இன்றைய உருவாக்கமன்று. அது தமிழ்க் கவிஞர்கள், சத்தியச்சிந்தனையாளர்கள், புலவர்கள் ஆகியோரின் ஆன்மிக–அறிவுத் தாயகமாக நீண்ட காலம் இருந்துள்ளது. வரணாசியில் தான் மகாகவி சுப்பிரமணிய பாரதி தமது அறிவுப் பிறப்பை உணர்ந்தார். அத்துடன், உலகப் புகழ் பெற்ற தமிழறிஞர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்துக்கு தலைமை தாங்கிய இடமும் இதுவே. இந்த உயிருடன் இருக்கும் வரலாறு, பிராந்திய தனிமை என்ற எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் பிரிவினை உருவாக்கும் கதைக்களங்களை சவாலுக்கு உட்படுத்துகிறது.
இப்போது மொழி ஏன் முக்கியம்
மொழியானது, மீண்டும் இந்தியாவின் சமூக உரையாடலில் மையப் புள்ளியாக மாறியுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான குடிபெயர்வு அதிகரித்ததும், பல்மொழி பணியிடங்கள் உருவானதும், டிஜிட்டல் வகுப்பறைகள் பெருகியதும், தேசிய மட்டத்தில் தொழில்துறை சந்தை விரிவடைந்ததும் மொழி அறிவு என்பது இப்போது விருப்பம் அல்ல, அத்தியாவசியம் என ஆகி விட்டது. மாநில அடையாள அரசியல் சில இடங்களில் மொழி வரம்புகளை கூர்மைப்படுத்தியிருக்கும் நிலையில், “தமிழ் கற்கலாம் – Learn Tamil” என்ற காசி தமிழ் சங்கமத்தின் புதிய முயற்சி மிகச் சரியான நேரத்தில் வரும் தலையீடாகும். தமிழை ஒரு பிராந்திய மொழி என்று இல்லாமல், தேசிய செல்வம் எனக் கருதுவது, இந்தியாவின் உணர்ச்சி சார்ந்த ஒருங்கிணைப்புக்கு மிகவும் அவசியமானது. இது தமிழ் மட்டும் அல்ல; இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் பொருந்தும் கொள்கை. ஒரு மொழியை கொண்டாடுவது, மற்றொரு மொழியை சிறிதாக்குவதில்லை. அதற்கு பதிலாக, முழு நாட்டின் மொழி அமைப்பையும் வளப்படுத்துகிறது.
காசி தமிழ் சங்கமம் 4.0, இந்த பரிமாற்றத்தை பண்பாட்டு ஒற்றுமையின் மையமாக வைக்கிறது. தமிழ், இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி என இந்தியாவின் அனைத்து மொழிகளையும் ஒரே பாரதிய மொழிக் குடும்பத்தில் அன்பு உறவுகளாக கருத வேண்டும் என்பதை இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரிடம் ஊக்குவிக்கிறது.
பகிர்ந்து கொண்ட அறிவு மரபை மீண்டும் கண்டுபிடித்தல்
காசி தமிழ் சங்கமத்தின் மிக முக்கியமான பங்களிப்பு, வரலாற்றை மனிதராக்கும் அதன் திறன், கலாச்சார அனுபவங்கள், கருத்தரங்குகள், கவிதை வாசிப்புகள், கோவில் தரிசனங்கள், கல்வி பரிமாற்றங்கள் போன்ற வழிகளில், பங்கேற்பாளர்கள் நமது பகிர்ந்து கொண்ட நாகரிக வேர்களை மீண்டும் உணர உதவுகிறது. சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் பல மொழிகளுக்கு இடையேயான அறிவுப் பரிமாற்றத்தின் மூலம் வளர்ந்து வந்தவை என்பதை இது நினைவூட்டுகிறது. அதைப் போலவே, தமிழ் இலக்கணத்தின் தொன்மையான வேர்கள், பாணினியின் மொழியியல் பாரம்பரியத்துடன் ஆழமான உரையாடலை மேற்கொண்டுள்ளன. மேலும், கோவில் கட்டிடக்கலை, இசை, வழிபாட்டு முறைகள், கதைக்கூறும் பண்பாட்டு மரபுகள் ஆகியவற்றில் — வடக்கும் தெற்கும் வேறுபடுவதைக் காட்டிலும் அதிகமாக ஒத்திசைக்கின்றன என்பதை KTS வலியுறுத்துகிறது.
மாறிவரும் இந்தியாவின் தேவைகளை நிறைவேற்றுதல்
இன்று இந்தியா, இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு இயங்கும் மற்றும் இடம்பெயரும் சமூகமாக மாறியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தில்லி, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உயர்கல்வி பெறுகின்றனர். அதே சமயம் இந்தி பேசும் மாணவர்கள் கோயம்புத்தூர், சென்னை, மதுரை போன்ற நகரங்களில் தொழில்நுட்பம், மருத்துவம், கலை போன்ற துறைகளில் கல்வி கற்க வருகின்றனர். நாட்டின் பொருளாதாரம் பல்மொழித் திறன்களை அதிகமாக தேடும் நிலையில், பண்பாட்டு பரிவு வளர்ப்பது இன்று தேசிய மட்டத்தில் அத்தியாவசிய தேவையாகி உள்ளது. அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது.
புரிதலின் மூலம் ஒற்றுமைக்கான வழிக்காட்டி
ஒற்றுமைக்கு ஒற்றுமை தேவை என்றும், புரிதல் மூலம் ஒற்றுமை தேவை என்றும் கூறும் தவறான அனுமானத்தை சங்கமம் சவால் செய்கிறது. KTS இன் ஒவ்வொரு பதிப்பும் உண்மையான உரையாடல் அவநம்பிக்கையைக் குறைக்கிறது, ஒரே மாதிரியான கருத்துக்களை அகற்றுகிறது மற்றும் உணர்ச்சிப் பாலங்களை உருவாக்குகிறது என்பதை நிரூபிக்கிறது. KTS 4.0 தொடங்கவிருக்கும் நிலையில், தமிழைக் கொண்டாடுவது இந்தியா முழுவதையும் வளப்படுத்துகிறது, மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது ஒருவரின் சொந்த அடையாளத்தை வலுப்படுத்துகிறது மற்றும் நமது மொழிகள் போட்டியிடும் குரல்கள் அல்ல, மாறாக இந்திய சிம்பொனியில் குறிப்புகளை ஒத்திசைக்கின்றன என்ற முக்கிய செய்திகளை இது வீட்டிற்கு எடுத்துச் செல்கிறது.
திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை; கோவிலுக்குள் புகுந்த மழை நீரால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்!
மேலும், திருப்பரங்குன்றம் கோயில் வாயிலில் பக்தர்கள் செருப்புகள் திடீர் மழையில் அடித்து செல்லபட்டது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை ஏழு மணி அளவில் சுப்பிரமணியசாமிக்கு நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட கிரீடத்தை கையில் ஏந்தி புனித நீரால் பட்டாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில், பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களிலேயே திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மலை வெளுத்து வாங்கியது. கடந்த இரு தினங்களாக மதுரையில் வானம் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் திருப்பரங்குன்றம் முருகனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களிலேயே மழை வெளுத்து வாங்கியது பக்தர்களை பரவசத்துக்குள்ளாக்கியது.
மேலும், அரை மணி நேரத்திற்கு மேல் விடாமல் கன மழை பெய்ததால் கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது, அதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மழை நீரில் நடந்து சென்ற வாரே சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக கழட்டி விட்டு சென்ற சிறப்புகள் திடீர் மலையில் அடித்துச் செல்லப்பட்டது மழை விட்டதும் வந்த பக்தர்கள் செருப்பை காணாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை, மேல்முறையீடு சென்று விட்டாலே அதை காண்பித்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள், அறவழியில், நீதியின் வழியில் தொடர்ந்து போராடி இந்து முன்னணியும், பாஜகவும் மீட்டுக் கொடுக்கும் என்ற வாக்குறுதியை கொடுத்து கொள்கிறேன்., – 2024 தேர்தலில் பாரத பிரதமரை ஏற்று எங்களது கூட்டணியில் பயணித்தவர் தான் ஒபிஎஸ்., டெல்லி சென்றுள்ளவர் நல்ல முடிவு எடுப்பார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. பாஜக மாநில இளைஞரணி தலைவர் சூர்யா பேட்டி அளித்தார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் மதுரை பெருங்கோட்ட பாஜக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜீ.சூர்யா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு வந்த மாநிலத் தலைவர் சூர்யாவிற்கு மதுரை மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பிரகாஷ் சார்பில் சார்பில் கிரைன் மூலம் மாலை, செண்ட மேளம், போய் கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலைகளுடன் வழிநெடுகிழும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின், முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜீ.சூர்யா:
சிவகங்கையில் பேருந்து விபத்து ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்., உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம் என முதல்வர் அறிவித்து இருக்கிறார். கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் அறிவித்த அதே முதல்வர்தான் அரசு பேருந்தில் சென்று விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வெறும் 3 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் இது போன்ற கோர விபத்துகளுக்கு ஒரே மாதிரியான நிவாரண தொகை வழங்க வேண்டும் என அறிவித்து இருந்தது., அதை மீறி இவர்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல நிவாரண தொகை வழங்கி வருவதை பாஜக வன்மையாக கண்டிகிறது.
அதே போன்று அண்டை மாநிலங்களில் உள்ளது போல அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் நடைமுறையால் இன்சூரன்ஸ் நிறுவனம் விபத்து ஏற்பட்டால் அதற்கான பாதிப்பு தொகையை வழங்கி வருகிறது., தமிழகம் சிறந்த மாநிலம் என்று சொல்லிக் கொள்ளும் நாம் இது போன்ற எந்த இன்சூரன்ஸ் திட்டமும் இல்லாமல் மக்களை அரசு பேருந்துகளில் பயணிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்.
சமீபத்தில் நடந்த ஆய்வின் படி தமிழகத்தில் இயங்கி கொண்டிருக்கும் பேருந்துகளில் 65% பேருந்துகள் காலாவதியான பேருந்துகள் என்றும் அதை புதுப்பிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது. இது போன்ற அடிப்படை விஷயங்களில் கவணம் செலுத்தாமல் தமிழக மக்களின் உயிர்களில் ஏழை மக்களின் உயிர்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் விளையாடி கொண்டே வருபதை தமிழக பாஜக வன்மையாக கண்டித்து கொண்டே இருக்கிறது., உடனடியாக பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், அதே போல் இன்சூரன்ஸ் அமைத்து கொடுத்து, அதன் மூலம் உரிய நிவாரணம் கிடைக்க எந்த பாரபட்சமும் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
சென்னை முழுவதும் ஒவ்வொரு மழையிலும் கஷ்டப்படுவதற்கு காரணம், அடிப்படை தேவைகளில் இந்த அரசு கவணம் செலுத்தாதது தான் காரணம்., மழைநீர் வடிகால் பணிகள் 95% முடிந்து விடுவதாக கூறுகிறார்கள், ஆனால் நீரை சேமித்து வைக்கும் ஏரிகளில் கவணம் செலுத்துவது இல்லை என்பது குற்றச்சாட்டு., வேளச்சேரி ஏரியில் 15 ஆண்டுகளாக தூர்வாரும் பணி நடைபெறவில்லை., கடந்த 2023 ல் மோசமாக பாதிக்கப்பட்ட பின்னும் கூட கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளச்சேரி ஏரி தூர்வாரப்படவில்லை., 70% வேளச்சேரி ஏரியில் படர்தாமரை பூத்து அங்கு இருக்கும் நீரை தேக்க விடாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
இது போன்ற அடிப்படை கட்டமைப்புகளை செய்யாமல் மழை வரும் காலங்களில் இரண்டு மூன்று செயல்களை செய்துவிட்டு நாங்கள் மிக சிறப்பான முன்னேற்பாடுகளை செய்துவிட்டோம் என திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என்பது எங்களது குற்றச்சாட்டு. மிக நிச்சயமாக வரும் தேர்தலில் சென்னை மக்களே திமுகவிற்கு பாடத்தை புகட்ட தயாராக இருக்கிறார்கள்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 15 செண்டி மீட்டர் மழை பெய்தாலும் எந்த பாதிப்பும் வராது என்று ஆனால் இன்று 6 செண்டிமீட்டர் மழைக்கே சென்னையே மூழ்கி இருக்கிறது, திமுக அரசு சொல்வதில் எதிலும் உண்மை இல்லை என்பது நிரூபணம் ஆகிறது.
1980 களிலேயே நீதிமன்றங்கள் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம் என உத்தரவு வழங்கியுள்ளது. 80 க்கு பின் இரண்டு ஆண்டுகளில் தான் தீபம் ஏற்றப்பட்டுள்ளது., அதற்கு இந்து அறநிலைத்துறை மறுப்பு தெரிவித்து வருகிறது., சிறுபான்மையினர் கொடுக்கின்ற அழுத்தம் தான் காரணம் என்பது நேரடி குற்றச்சாட்டு.
நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய பின்னரும் அதை செயல்படுத்தாமல் மேல்முறையீடு செய்வோம் என்பது இந்துக்களை முட்டாள் ஆக்கும் செயல்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சு.வெங்கடேசன், கார்த்திகை தீபத்தை களவர தீபம் என்று சொல்லி இருப்பது வன்மையாக கண்டிக்கிறோம்., இதை சொல்வதற்கு சு.வெங்கடேசனுக்கு எந்த உரிமையும், தகுதியும் கிடையாது., இந்துக்கள் புனிதமாக கருதும் கார்த்திகை தீபத்தை களவர தீபம் என்று சொன்னதற்கு உடனடியாக இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இது போன்ற செயல்களால் உரங்கி கொண்டிருக்கும் இந்துக்களை விழிப்படைய செய்து பாஜக கால் ஊன்ற சிறப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்., திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை, மேல்முறையோடு சென்று விட்டாலே அதை காண்பித்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள், அறவழியில், நீதியின் வழியில் தொடர்ந்து போராடி இந்து முன்னணியும், பாஜகவும் மீட்டுக் கொடுக்கும் என்ற வாக்குறுதியை இந்துக்களுக்கு கொடுத்து கொள்கிறேன்.
கூட்டணி வழு பெறும், திமுக அரசை வீழ்த்துவதற்கு திமுகவின் எதிர் நிலையில் இருக்கிற கட்சிகள் ஒன்று சேருவார்கள், தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலம் உள்ளது, திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள அனைத்து கட்சிகளும் அதை செய்து காட்ட கூடிய வலிமை இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
2024 தேர்தலில் பாரத பிரதமரை ஏற்று எங்களது கூட்டணியில் பயணித்தவர் தான் ஒபிஎஸ்., நல்ல முடிவு எடுப்பார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது., அது குறித்து அவர் கூறுகின்ற வரை எந்த கருத்தும் இல்லை., செங்கோட்டையன் எடுத்தது தனிப்பட்ட முடிவு, அவர் எங்கு சென்றாலும் நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறோம்., என பேட்டியளித்தார்.
கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நபர்கள், பட்டியல் சாதியினருக்கு (SC) வழங்கப்படும் சலுகைகளைத் தொடர்ந்து பெறாததை உறுதி செய்யுமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேசத்தின் முழு நிர்வாக இயந்திரத்துக்கும் ஒரு விரிவான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மதமாற்றத்திற்குப் பிறகு SC அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வது “அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான மோசடி” என்பதைக் கவனித்த நீதிமன்றம், அத்தகைய நிகழ்வுகளைக் கண்டறிந்து தடுக்க சட்டத்தின்படி செயல்பட மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நான்கு மாத காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.
இந்து தெய்வங்களை கேலி செய்ததாகவும், பகைமையை ஊக்குவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்திர சஹானி என்பவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பிரவீன் குமார் கிரி தலைமையிலான அமர்வு, இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தது.
ஐபிசி பிரிவுகள் 153-A மற்றும் 295-A இன் கீழ் சஹானிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை மற்றும் விசாரணை உத்தரவை ரத்து செய்வது தொடர்பாக சஹானி தாக்கல் செய்த மனுவை பெஞ்ச் விசாரித்தது.
Prayagraj High court
சஹானி தனது சொந்த நிலத்தில் “இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள்” என்பதை பிரசாரம் செய்ய அனுமதி கோரியதாகவும், அவர் மீது பொய்யாக குற்றம் சாட்டப்பட்டதாகவும் மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால், அரசு தரப்பில் அவரது மதம் குறித்த கடுமையான முரண்பாட்டைக் குறிப்பிட்டனர். சஹானி தனது விண்ணப்பம் தொடர்பாக தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது மதத்தை ‘இந்து’ என்று குறிப்பிட்டிருந்தாலும், காவல்துறை விசாரணையில் இதற்கு நேர்மாறான காட்சி வெளிப்பட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
பிரிவு 161 குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு சாட்சியின் அறிக்கையை, கூடுதல் அரசு வழக்கறிஞர், நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அவர், முதலில் கேவட் சமூகத்தைச் சேர்ந்த சஹானி, கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, ‘பத்ரி’ (பூசாரி) ஆக செயல்பட்டு வந்தார் என்று சாட்சியமளித்தார்.
ஏழை மக்களை கவர்ந்திழுக்கும் வகையில், அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களை கிறிஸ்தவர்களாக மாற்ற விரும்புகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இதை தீவிரமாகக் கவனித்த உயர் நீதிமன்றம், கிராமவாசிகளைத் திரட்டி, மதமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக இந்து தெய்வங்களைப் பற்றி இழிவான, அவதூறான மற்றும் அபத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக சஹானி மீது குற்றம் சாட்டப்பட்ட சாட்சிகளின் அறிக்கையை கவனத்தில் கொண்டார்.
மேலும் சஹானி இந்து நம்பிக்கைகளை கேலி செய்த வண்ணம், கிராமவாசிகளிடம் இவ்வாறு கூறியுள்ளார்: “நீங்கள் பல நூற்றாண்டுகளாக இந்து மதத்தைப் பின்பற்றி வருகிறீர்கள்… அதற்கு ஆயிரக்கணக்கான கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் உள்ளன; ஒருவருக்கு எட்டு கைகள் உள்ளன, ஒருவருக்கு நான்கு கைகள் உள்ளன, ஒருவருக்கு முகத்தில் ஒரு தும்பிக்கை உள்ளது… ஒருவர் எலி சவாரி செய்கிறார், ஒருவர் மயில் சவாரி செய்கிறார்… ஒருவர் பாங் குடிக்கிறார், ஒருவர் கஞ்சா புகைக்கிறார்”.
சாதி படிநிலைகள் காரணமாக இந்து நம்பிக்கைக்கு மரியாதை வழங்கப்படவில்லை என்றும், கிறிஸ்தவத்தைத் தழுவினால் ‘மிஷனரி’யிடமிருந்து வேலைகள், வணிக வளர்ச்சி மற்றும் நிதி நன்மைகளுக்கு அது வழிவகுக்கும் என்றும் கூறி, சஹானி இந்து நம்பிக்கைகளைக் கேலி செய்ததாகவும் அந்த சாட்சி குற்றம் சாட்டினார்.
அரசியலமைப்பு (பட்டியல் சாதி) உத்தரவு, 1950 இன் படி மதம் மாறியவர்களின் சட்டப்பூர்வ நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்ட நீதிபதி கிரி, தனது உத்தரவில், இந்து மதம், சீக்கியம் அல்லது பௌத்தத்திலிருந்து வேறுபட்ட மதத்தைச் சேர்ந்த எவரையும், ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்தவராகக் கருத முடியாது என்று குறிப்பிட்டார்.
சி. செல்வராணி எதிர் மாவட்ட ஆட்சியர் 2024 வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பை நீதிமன்றம் பெரிதும் நம்பியிருந்தது. அதில், ‘கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்போது, ஒரு தனிநபர், தனது அசல் சாதியைச் சேர்ந்தவர் ஆகமாட்டார்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்த வழக்கில், சலுகைகளைப் பெறுவதற்காக மட்டுமே மத மாற்றம் செய்வது, அரசியலமைப்பின் மீதான மோசடியாகவும், இடஒதுக்கீட்டுக் கொள்கைகளின் நெறிமுறைகளுக்கு முரணாகவும் பார்க்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியது. மேலும், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் 2025 ஆம் ஆண்டு அக்கலா ராமி ரெட்டி எதிர் ஆந்திர மாநிலம் வழக்கில் தீர்ப்பளித்ததையும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது.
அதில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, அதையே தீவிரமாகப் பின்பற்றி, கடைப்பிடிக்கும் ஒரு நபர், பட்டியல் சாதி சமூகத்தில் உறுப்பினராகத் தொடர முடியாது என்றும், அதன் விளைவாக பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் விதிகளைப் பயன்படுத்துவதில் இருந்து தடைசெய்யப்படுகிறார் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
எனவே, சட்டம் அதன் ‘உண்மையான அர்த்தத்தில்’ செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, நீதிபதி கிரி, உயர் அதிகார மட்டத்துக்கு விரிவான உத்தரவுகளை பிறப்பித்தார். அட்டவணை சாதியினர் மற்றும் சட்ட விதிகள் குறித்து ஆராயுமாறு அமைச்சரவை செயலாளர் (இந்திய அரசு) மற்றும் தலைமைச் செயலாளர் (உ.பி. அரசு) ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், சிறுபான்மையினர் நலத்துறையின் முதன்மைச் செயலாளர், சிறுபான்மை அந்தஸ்து மற்றும் அட்டவணை சாதி அந்தஸ்து ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
முக்கியமாக, உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் நான்கு மாதங்களுக்குள் சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டபடி, “அரசியலமைப்பு மோசடி” அவர்களின் பகுதிகளில் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, அவர்களின் நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளரிடம் தெரிவிக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், விண்ணப்பதாரரை (சஹானி) பொறுத்தவரை, அவரது தவறான பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றம் தீவிரமாகக் கவனித்து, மூன்று மாதங்களுக்குள் அவரது மதம் குறித்து விசாரிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
கிறிஸ்தவ பாதிரியாராக இருந்துகொண்டு, நீதிமன்ற ஆவணங்களில் இந்து என்று கூறி சஹானி மோசடி செய்ததாக நிரூபிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரமாணப் பத்திரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதைத் தடுக்க அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டதுடன், சஹானியின் விண்ணப்பத்தையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் திருக்கோயிலில் .கைசிக ஏகாதசியை முன்னிட்டு இன்றைய தினம் 02.12.25 செவ்வாய் க்கிழமை கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியை முனன்னிட்டு ஶ்ரீ ஆண்டாள் ஶ்ரீ ரெங்கமன்னார் கருடாழ்வார் மற்றும் ஶ்ரீ பெரிய பெருமாள் வடபத்திர சாயி ஶ்ரீதேவி,பூமாதேவி தாயார் மற்றும் ஆழ்வார்கள் வடபத்திர சாயி பெருமாள் சன்னதியில் உள்ள பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு திவ்ய காட்சி தந்தருளினர்.
ஸ்ரீ வில்லிபுத்தூர் 108 வைணவ திருத்தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று நம்பாடுவான் என்ற பக்தனுக்கு பெருமாள் அருள் செய்ததை முன்னிட்டும், குளிர் காலம் வருவதால் அதனை பக்தர்களுக்கு அறிவிக்கும் வண்ணமும், இங்கு கோவில் கொண்டு அருள் பாலிக்கும் சுவாமிகளுக்கு 108 போர்வைகள் சாற்றப்படும் வைபவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டு இவ்வைபவம் இன்று 15.12.2021 அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. இந்த வைபவத்தின் போது இன்று ஒரு நாள் மட்டுமே கருடாழ்வார் சன்னதியிலிருந்து புறப்பட்டு பகல் பத்து மண்டபம் எழுந்தருளுவார். அங்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீ தேவி, பூமிதேவி, ஆழ்வார்கள், ஆச்சாரியர்களுக்கு 108 போர்வை சாற்றும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு திங்கட்கிழமை இரவு முதல் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் பெரிய பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று இன்று அதிகாலையில் 108போர்வை அணிவித்து பூஜைகள் நடத்தி புராணம் வாசிக்கப்பட்டது. அதிகாலை வேளையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சோழவந்தான் வைத்தியநாதபுரம் அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன் ஸ்ரீ நொண்டி கருப்பணசாமி ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகே வைத்தியநாதபுரம் காட்டுநாயக்கன் சிவகங்கை ராமன் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி, ஸ்ரீ வெள்ளையம்மாள் சுவாமி, ஸ்ரீ பொம்மி அம்மாள் , சுவாமி ஸ்ரீ நொண்டி கருப்பு சுவாமிகளின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பிரசாத் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை பூஜையினை நடத்தினர். தொடர்ந்து காலை கடம் புறப்பாடாகி திருக்கோவிலை சுற்றி வலம் வந்து கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது . அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது.
தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி திரவ பொடி இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு அன்னதானம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சிவகங்கை ராமன் வகையறாக்கள் காட்டுநாயக்கன் சமூகத்தினர் செய்திருந்தனர்.
சோழவந்தான் அருகே நெடுங்குளத்தில்…
சோழவந்தான் அருகே நெடுங்குளம் அருள்மிகு வெங்கலநாதமுடைய அய்யனார் கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பூர்ணகலாதேவி புஷ்ப கலாதேவி சமேத வெங்கலநாதமுடைய அய்யனார் திருக்கோவில் மூன்றாவது வருடாந்திர அபிஷேக விழா நடைபெற்றது. திருக்கோவில் அர்ச்சகர் முருகன் புனித தீர்த்தங்களை கொண்டு வந்து சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து தொடர்ந்து பால் தயிர் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் பிச்சைமணி மற்றும் நெடுங்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
பாலமேட்டில் …
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஸ்ரீ செல்வ விநாயகர் சோனியா சுவாமி வீரகாளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், பாலமேட்டில் ஸ்ரீ செல்வ விநாயகர் சோணையாசாமி கோவில்கும்பாபிஷேக மூன்றுகால யாக பூஜையுடன் ,அழகர் கோவில் |ராமேஸ்வரம், கரந்தமலை காசி உட்பட புண்ணிய தீர்த்தங்கல் கொண்டு வரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடகி திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த விழாவில், பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சோழவந்தான் எம். எல். ஏ. வெங்கடேசன் பாலசுப்பிரமணியம் ஒன்றியச் செயலாளர் தன்ராஜ் பரந்தாமன் முத்தையன் அருண்குமார் . சுற்று வரலாறு கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர் , பாதுகாப்பு ஏற்பாடுகளை, பாலமேடு போலீசார் செய்திருந்தனர்.