Home Blog Page 37

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

kashi tamil sangamam aradhya krupa startup - 2026

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  ‘ஆராத்ய கிருபா’, நமோ காட்டில் புதுமை மற்றும் ஆன்மீகத்தின் சங்கமத்தைக் காட்டுகிறது

அர்ச்சனை பூக்களை மறுசுழற்சி செய்து 16 மாநிலங்களுக்கு ‘சனதன் சுகந்த்’தாக வினியோகம்

வாரணாசி நமோ காட்டில் உள்ள “ஸ்டால் எண் 39” காசி தமிழ் சங்கமம் 4.0 -ல்  சிறப்பு கவனத்தை ஈர்த்துள்ளது. அங்கு முகல்சராயை தளமாகக் கொண்ட காசியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான நிதேந்திர ஃப்ளவர்சைக்ளிங் பிரைவேட் லிமிடெட் (ஆராத்ய கிருபா & பெட்டல்ஸ்), அதன் புதுமையான மற்றும் ஆன்மீக ரீதியாக ஈர்க்கப்பட்ட படைப்புகளைக் காட்சிப்படுத்தியது. பிப்ரவரி 2024 -ல் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, காசியின் ஆன்மீக பாரம்பரியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நவீன வணிக மாதிரியை இணைப்பதன் மூலம் ஒரு உண்மையான மற்றும் பயனுள்ள முன்மாதிரியை அமைத்து வருகிறது.

‘ஆராத்ய கிருபா’ என்பது பண்டைய இந்திய ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது. வராகமிஹிரரின் பிருஹத் சம்ஹிதாவின் மணம் நிறைந்த அத்தியாயத்தில் இருந்தும், அகஸ்திய முனியின் 14 கூறுகளில் இருந்தும் உத்வேகம் பெறுகிறது. இந்த ஸ்டார்ட் அப், கோவில்கள் மற்றும் மலைத்தொடர்களில் தினமும் சேகரிக்கப்படும் புனித பூக்கள் மற்றும் தேங்காய்களை மறுசுழற்சி செய்து, இயற்கையான தூப மற்றும் நறுமணப் பொருட்களை உருவாக்குகிறது. இது கங்கை நதியில் கழிவுகளை குறைப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் சமூகத்தில் வேலைவாய்ப்பையும் உருவாக்குகிறது. நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் IFRA- தர தரம் மற்றும் பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்கின்றன. இது ஒரு பிரீமியம் தயாரிப்பாக இருக்கிறது.

இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தனித்துவமான பலம், எம்பிஏ வல்லுனர்கள், சட்ட வல்லுனர்கள், ரெயில்வே அதிகாரிகள் மற்றும் பிற தொழில்களைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த நபர்கள் என பல்வேறு நிபுணர்களின் ஒருங்கிணைப்பாகும். நிறுவனத்தின் இயக்குனரும், ஓய்வுபெற்ற ரெயில்வே அதிகாரியுமான ஆர்.என். திரிவேதி, சனாதன கலாச்சாரத்திற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு இந்த பன்முகத்தன்மை கொண்ட குழுவை ஒன்றிணைத்துள்ளது என்று விளக்கினார்.
ஸ்டாலைப் பார்வையிட்ட ஒரு வாடிக்கையாளர், நிறுவனத்தின் தூபக் குச்சிகளின் நறுமணத்தைப் பாராட்டி, “ஆராத்ய கிருபாவின் தூபக் குச்சிகளின் வாசனை மனதை முழுமையாக அமைதிப்படுத்துகிறது. நான் ஒரு வழக்கமான வாடிக்கையாளராக இருப்பேன்” என்று கூறினார்.

ஆராத்ய கிருபா தற்போது நேரடி-நுகர்வோர் மாதிரியில் செயல்படுகிறது, நாடு முழுவதும் 16 மாநிலங்களுக்கு அதன் தயாரிப்புகளை வழங்குகிறது மற்றும் தினமும் 500 பாக்கெட்டுகளுக்கு மேல் விற்பனை செய்கிறது. அதன் அனைத்து தயாரிப்புகளும் ஆன்லைனிலும் கிடைக்கின்றன. காசி தமிழ் சங்கமத்தில் ஒரு ஸ்டாலை அமைக்க மேடையை வழங்கியதற்காகவும், வாய்ப்பை வழங்கியதற்காகவும் பிரதமர்  நரேந்திரமோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு ரிவேதி நன்றி தெரிவித்தார்.

காசியின் பாரம்பரிய தூப தயாரிப்பு கலையை நவீன தொழில்நுட்பம் மற்றும் அழகியலுடன் இணைத்து, இந்த ஸ்டார்ட் அப் ஒரு பிரீமியம் மற்றும் முற்றிலும் இயற்கையான தூப வரிசையை அறிவித்துள்ளது. இந்த தயாரிப்புகள் வழிபாடு மற்றும் தியானத்திற்கு ஏற்றவை மட்டுமல்ல, வீட்டுச்சூழலை சுத்திகரிக்கவும் உதவுகின்றன. கூடுதலாக, வாரணாசியில் உள்ள பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார அதிகாரமளிப்பு வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இந்த முயற்சி சமூக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தூபப்பொருட்கள் மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் திறமையுடன் பெண்களால் கையால் தயாரிக்கப்படுகின்றன.

ஒட்டுமொத்தமாக, நிதேந்திரா ஃப்ளவர்சைக்ளிங் பிரைவேட் லிமிடெட்டின் இந்த முயற்சி, காசியின் பாரம்பரியம், ஆன்மீகம் மற்றும் புதுமைகளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளிப்புடன் இணைப்பதன் மூலம் “ஒரே பாரதம் உன்னத பாரதம்” உணர்வை வலுப்படுத்துகிறது. நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு உண்மையான, இயற்கை மற்றும் கலாச்சார வாசனை திரவியங்களைக் கொண்டு வருவதன் மூலம் ஆராத்ய கிருபா தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் கலாச்சார பரிமாற்றத்தின் ஒரு உயிருள்ள எடுத்துக்காட்டாக உருவாகி வருகிறது.

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

ind vs sa india won the series - 2026

இந்தியா – தென் ஆப்பிரிக்கா ஒரு நாள் போட்டித்தொடர்

இந்தியா தொடரை வென்றது

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது. இந்திய அணியில் ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் இடம்பெற்றிருந்தனர். பும்ரா, ஜதேஜா இடம்பெறவில்லை. இந்திய அணி முதலில் விளையாடி எட்டு விக்கட் இழப்பிற்கு 349 ரன் எடுத்தது. விராட் கோலி 135 ரன் எடுத்தார். இரண்டாவதாக ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 332 ரன் எடுத்து ஆட்டத்தில் தோல்வி அடைந்தது.

இரண்டாவது ஆட்டம் ராய்ப்பூரில் நடைபெற்றது. இந்திய அணி முதலில் விளையாடி ஐந்து விக்கட் இழப்பிற்கு 358 ரன் எடுத்தது. விராட் கோலி 102 ரன்னும் ருதுராஜ் கெய்க்வாட் 105 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 362 ரன் எடுத்து வெற்றி பெற்றது. எய்டன் மர்க்ரம் 110 ரன், ப்ரீஸ்டேக் 68 ரன், டிவால்ட் ப்ரிவிஸ் 54 ரன், பவுமா 46 ரனூம் எடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் அர்ஷதீப் சிங் 5.4 ரன்ரேட்டிலும், ஜதேஜா 5.85 ரன்ரேட்டிலும் பந்துவீசினர். மீதமுள்ள பந்துவீச்சாளர்கள் ரன்களை அள்ளிக்கொடுத்தனர்.

மூன்றாவது ஒருநாள் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 6, 2025இல் நடைபெற்றது. முதலாவதாக ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 47.5 ஓவர்களில் 270 ரன் எடுத்தது. க்விண்டன் டி காக் 106 ரன், பவுமா 48 ரன் எடுத்தனர். இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா 4/66, குல்தீப் யாதவ் 4/41 விக்கட்டுகள் எடுத்தனர். பின்னர் ஆடிய இந்திய அணியில் யசஷ்வீ ஜெய்ஸ்வால் (ஆட்டமிழக்காமல் 116 ரன்), ரோஹித் ஷர்மா (75 ரன்), விராட் கோலி (ஆட்டமிழக்காமல் 65 ரன்) எடுத்தனர். இந்திய அணி 39.5 ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 271 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா ஒருநாள் ஆட்டங்களில் 20000 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று விதமான ஆட்டங்களிலும் சதம் அடித்த ஆறாவது இந்திய வீரர் ஆனார். இவ்வாறு இந்திய அணி இந்தத் தொடரை 2-1 என்ற ஆட்டக் கணக்கில் வெற்றிபெற்றது. தொடர் நாயகனாக விராட்கோலி அறிவிக்கப்பட்டார்.

அடுத்து டி-20 தொடர் நடைபெறவுள்ளது. மொத்தம் ஐந்து டி-20 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. முதல் ஆட்டம் கட்டாக்கில் 9ஆம் தேதியும் இரண்டாவது ஆட்டம் சண்டிகரில் 11ஆம் தேதியும் மூன்றாவது ஆட்டம் 14ஆம் தேதி தர்மசலாவிலும், நான்காவது ஆட்டம் லக்னோவில் 17ஆம் தேதியும், ஐந்தாவது ஆட்டம் அகமதாபாத்தில் 19ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இந்திய அணியில் சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (அணித் தலைவர்), திலக் வர்மா, அக்சர் படேல், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.        

குமார கம்பணரின் வெற்றிச் சரிதம் ‘மதுரா விஜயம்’ காட்டும் திருப்பரங்குன்றம்!

thirupparankundram madura vijayam - 2026

— கே.எஸ். ராதாகிருஷ்ணன் —

Thiruparankundram | Veera Kambaraya | Sikandar |
Madura vijayam

According to Gangadevi’s 14th-century work The Conquest of Madura (Veera Kambaraya Charitram), the only connection Sikandar Shah of the Madurai Sultanate has with Thiruparankundram is that he was defeated and killed in this region by Kumara Kampanna of the Vijayanagara Empire.¹ The text describes Kampanna’s conquest, his purification rites after battle, and his offering of prayers at the ancient Murugan shrine carved into the granite hill. Nowhere in this work or in any other historical or archaeological record is there mention of Sikandar Shah ruling from the hill, praying on the hill, establishing any structure on it, or being buried there. His burial is consistently associated with Goripalayam, not Thiruparankundram.²

Thiruparankundram’s identity is rooted far earlier than the Sultanate period. The hill contains Pandya-era rock-cut cave temples, ancient Shaiva and Murugan iconography, and inscriptions that firmly establish it as a Tamil sacred site.³ Every major feature on the hill, including the temple architecture, the cave sanctums, the early Pandya inscriptions, and the ritual traditions, belongs to Hindu and Tamil heritage. The stone pillar at the summit, often misunderstood today, is not linked to any Islamic practice. It is a Nayak-period Deepa Sthambam with carvings typical of the 16th to 17th century and an oil cavity capable of holding several litres for ritual lamp lighting.⁴ Hilltop lampposts of this kind are a longstanding Tamil religious custom, symbolizing the lighting of jyoti on sacred elevations.

Across literary, archaeological, and cultural evidence, Thiruparankundram emerges solely as an ancient Murugan-Shiva hill, a sacred Tamil landscape that long predates and stands independent of the Madurai Sultanate. The historical record is unequivocal. The hill’s spiritual, architectural, and ritual identity has no documented connection to Islamic heritage. Sikandar Shah’s story intersects with Thiruparankundram only through the battlefield narrative preserved in The Conquest of Madura, not through religious presence, construction, or worship on the hill.⁵

Footnotes

Gangadevi, The Conquest of Madura (Veera Kambaraya Charitram), detailing Kampanna’s defeat of Sikandar Shah.

Burial of Sikandar Shah at Goripalayam. Thiruparankundram Dargah article. https://en.wikipedia.org/wiki/Thiruparankundram_Dargah

Early Pandya rock-cut caves, Jain beds, and Tamil-Brahmi inscriptions. https://en.wikipedia.org/wiki/Thirupparankundram_Rock-cut_Cave_and_Inscription

Nayak-period Deepa Sthambam and temple chronology. https://behindeverytemple.org/hindu-temples/muruga/thiruparankundram

Documentation of temple and dargah boundaries and disputes. https://thefederal.com/category/states/south/tamil-nadu/tiruparankundram-hill-rituals-naming-dispute-201627

திருப்பரங்குன்றம் | குமார கம்பணன் | மாலிக்கபூரின் சிக்கந்தர் | மதுரா விஜயம்

குமார கம்பணன் விஜய நகரப் பேரரசின் இளவரசன் ஆவான்.கிபி. 1336-ஆம் ஆண்டில் ஹரிஹரர் மற்றும் புக்கர் எனும் சகோதரர்கள் விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்தார்கள். குமார கம்பணன் புக்கரின் மகன் ஆவார். புக்கராயர் விஜயநகர பேரரசரானதும் தமிழ் பகுதிகளைக் கைப்பற்ற இவர் நியமிக்கப்பட்டார். இவர் கிபி 1359-இல் திருவண்ணாமலையைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்ட சம்புவராய அரசர் இராஜநாராயணச் சம்புவராயனுடன் போரிட்டு வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றினார். பின்னர் மதுரை சுல்தானகம் மீது 1378-இல் படையெடுத்து அங்குச் சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். எனினும் மதுரை ஆட்சியைப் பாண்டியர்களின் நேரடி வாரிசுகளான தென்காசிப் பாண்டியர்களிடம் வழங்காமல் ஆட்சி நடத்த நாயக்க தளபதிகளை நியமித்தார். குமார கம்பண்ணன் கோயில் அறநிலையங்களினைப் பாதுகாப்பதனையும் கடமையாகக் கொண்டு போர் புரிந்து பல தலைவர்களைப் பாண்டிய நாட்டின் பொறுப்புகளில் அமர்த்தினான்.

மதுரை படையெடுப்பின் போது உடனிருந்த இவர் மனைவி கங்கதேவி மதுரை முற்றுகையையும், வெற்றிகளையும் மதுரா விஜயம் என்ற தனது சமஸ்கிருத நூலில் பதிவு செய்துள்ளார். மதுரா விஜயம் 14ம் நூற்றாண்டில் கங்கதேவியால் எழுதப்பட்ட ஒரு சமற்கிருதக் கவிதை நூல். வீர கம்பராய சரித்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. கங்கதேவியின் கணவர் விஜயநகரப் பேரரசின் இளவரசர் குமார கம்பண்ணர் தென்னகத்தில் படையெடுத்து மதுரை சுல்தானகத்தை வீழ்த்தி மதுரையைக் கைப்பற்றுவதை இந்நூல் விவரிக்கிறது

மாலிக்கபூரின் சிக்கந்தர் ஷா, கி.பி 14 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசுடனான போரில் குமார கம்பனால் திருப்பரங்குன்றத்தில் கொல்லப்பட்டார் . இவருடைய உடல் மதுரை கோரிபாளையத்தில் புதைக்க பட்டது. அங்கு அவரின் தர்கா உள்ளது . அதற்க்கு முன்பே பழமையாக குன்ற கடவுள் முருகனின் பரங்குன்றத்தில் அமைந்த இந்து தெய்வீக பூமி. பழமையான சங்க இலக்கியங்கள் சொல்கின்றன .

“பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்” என்று திருப்பரங்குன்றம் பற்றி
பரிபாடல் 8 கூறுகிறது! இது உயரம் கருதிய ஒப்பீடு இல்லை! இது உன்னதம் கருதிய பெருமிதம்!

பரிபாடற்கண் மலையும் யாறும் ஊரும் வருணிக்கப்படும் என்று இளம்பூரணர் கூறியுள்ளார்.[2] அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்கள் நான்கனுள் இன்பத்தையே பொருளாகக் கொண்டு கடவுள் வாழ்த்து, மலை விளையாட்டு, புனல் விளையாட்டு முதலியவற்றில் இப்பாடல் வருமென்று பேராசிரியர் கூறியுள்ளார்.[3] தெய்வ வாழ்த்து உட்படக் காமப்பொருள் குறித்து உலகியலே பற்றிவரும் என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.[4] பரிபாடல்
பரிபாடல்களிற் பல திருமாலையும், முருகனையும் பற்றியவை; பக்திநெறி பற்றியவை; தொல்காப்பியர் விதிக்கு மாறுபட்டவை, வையை பற்றிய பாடல்களும் முருகன் பற்றிய பாடல்களுள் சிலவுமே அகப்பொருள் பற்றியவை.

எனவே, “தொல்காப்பியர்க்குப் பிற்பட்ட காலத்தில் புறம்பற்றிய செய்திகளும் பரிபாடலில் பாடப்பெற்றன” என்பது இப்பாக்களால் தெரிகின்றது. அப்போது எங்கே சிக்கந்தர் என்ற பெயர் மற்றும் அமைப்பியல் ரீதியாக எதுவுமே இல்லை. இடைகால ஏற்பாடாக முருகன் குன்றத்தில். நுழைத்து அல்லது செருகி வைத்துவிட்டார். குன்றத்தில்” என்பதன் பேச்சு வழக்கு, இதன் பொருள் மலை மீது அல்லது மலையில் இருக்கும் என்பதாகும். இது பெரும்பாலும் பாடல்கள், இலக்கியங்கள் மற்றும் பேச்சுவழக்கில் முருகப் பெருமானைக் குறித்தும், மலை சார்ந்த இடங்களைக் குறித்தும் பயன்படுத்தப்படுகிறது. இப்படி பல தரவுகள், ஆதாரங்கள் உள்ளன .

மாலிக்கபூரால் உடைத்து சிதைக்கப்பட்ட ஸ்ரீரங்கம், மதுரை மினாட்சியம்மன் கோவில், திருவண்ணாமலை கோவில், காளஹஸ்தி மற்றும் பல கோவில்களும் விஜயநகர பேரரசின் ஆட்சிக்காலத்தில் மீண்டு புணரமைக்கப்பட்டு முன்பு இருந்ததை விட மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. மேலும் கிருஷ்ணதேவராயர் ஸ்ரீரங்கத்து ராங்கநாதர் மீதும் திருவில்லிபுத்தூர் ஆண்டால் நாச்சியார் மீதும் பெரும் பக்தி கொண்டிருந்தார் இதன் காரணமாக “ஆமுக்தமால்யதா ” என்னும் நூலை ரங்கநாருக்கு அர்பணித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் பல ஆபரணங்களை வழங்கினார்.

#எல்லைக்கல், #சர்வேகல் என்று புதிது புதிதாக கதை சொல்பவர்களுக்கு, இந்த மாதிரி வேலைப்பாடுகளோடு மலை உச்சியில் எந்த எல்லைக்கல் இருக்கும் ? #நாயக்கர் காலத் தூணின் வேலைப்பாடுகளோடு சுமார் மூன்று லிட்டர் எண்ணெய் ஊற்றக்கூடிய குழியோடு இருப்பது இந்தத் #தீபத்தூண்.

திருப்பரங்குன்றம் மலையே சிவனுடைய சொரூபமாகக் கருதப்படுவதால், அதன் உச்சியில் இந்தத் தீபத்தூண் இருக்கிறது என்ற சாசனம் கூட உண்டு.

தமிழக அரசு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக இருப்பதாக உணர்த்த நினைக்கிறது, மற்றபடி திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கும் இஸ்லாமியர்களுக்கும் எந்த வெறுப்பும் இல்லை! வீணான முயற்சி…..

To lit deepam at the Murungan hill top, Hindus had to face
-Court to get permission
-Opposition of INDI parties
-CPIM MP threateans, Saying It will be Riot Deepam
-Betrayal of TN Govt Temple board appeal against permission

Dmk MP Kanimozhi Karunanidhi says the pillar on the hill is just a survey stone placed by the Archaeology Department, and even asks why a Deepam should be lit there.
But people of Tamil Nadu knows the truth DMK – Dravida Munnetra Kazhagam locked a tradition, not BJP Tamilnadu

Instead of respecting devotees, M. K. Stalin government unleashed police force and arrested TN BJP President Nainar Nagenthran, H. Raja, and several BJP functionaries who peacefully questioned this injustice.

Kanimozhi can call it a “survey stone,”
Stalin can misuse the police,
but the whole state knows DMK is attacking devotion, not BJP.

Tamil Nadu will answer this arrogance in the upcoming 2026 elections . Pic1-Thiruparankundram without darga in 1858

tiruparankundramissue | திருப்பரங்குன்றம்
karthigaideepam2025

ksrpost — கேஎஸ்ஆர்போஸ்ட்

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

hindumunnani protest - 2026

நீதிமன்ற தீர்பை மீறி முருக பக்தர்களை அவமதித்த தமிழக அரசைக் கண்டித்து 7.12.25 – ஞாயிறு இன்று மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று,  அறிவித்துள்ள இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், முருக பக்தர்களை திரண்டு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். இது குறித்து முன்னர் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது…
 
கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசு மக்களின் பக்தியை அவமதித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். உயர்நீதிமன்றம் 3 முறை தீர்ப்பு வழங்கியும் அவற்றை சிறிது கூட மதிக்காமல் அரசியல் சாசனத்திற்கு எதிராக காவல்துறையை செயல்பட்டு வருகிறது. காவல்துறை மீது அழுத்தம் கொடுப்பது அப்பட்ட அரசியல் நோக்கம் என்பதை மக்கள் அறிந்துள்ளனர்.
 
ஆனால் ஜனநாயகத்தின் ஒரு முக்கிய கூறான நீதிமன்றத்தினை இழிவு படுத்துவது நீதியின் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த இரண்டு நாட்களில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இந்துக்களின் நம்பிக்கைகள் மீதும் மற்றும் நீதியரசர்கள் மீதான தனிப்பட்ட அவதூறுகளைப்  பரப்புவதிலும் எல்லை மீறியுள்ளது. திருப்பரங்குன்றம் மலை தீபத்திற்கான போராட்டத்தை விமர்சனம் செய்வது தேசத்தின் விடுதலையை கொச்சை படுத்துவது போலாகும்.
 
குறிப்பாக திமுக எம்பி கனிமொழி வெளி ஆட்கள் போராடுகிறார்கள் என பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. உலக பிரசித்திபெற்ற திருப்பரங்குன்றம், முருகனின் முதல் படைவீடு. அதன் பாரம்பரியத்தை காப்பாற்ற போராடுவது ஒவ்வொரு முருக பக்தர்களின் கடமை. ஒவ்வொரு தமிழனின் தன்மானம் ஆகும். தமிழக மக்கள் அனைவருக்கும் இதற்காக போராட முழு உரிமை உள்ளது.
 
திமுகவின் இந்து விரோத நடவடிக்கைகளை திசை திருப்ப பல்வேறு தில்லுமுல்லு வேலைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
 
உயர்நீதி மன்ற தீர்ப்பை செயல்படுத்துவது தான் காவல்துறை அதிகாரியின் பணி. அந்த உத்தரவின் மீது மேல்முறையீடு செய்வது அரசின் அல்லது அரசுத் துறை நடவடிக்கை ஆகும். ஆனால் அதனை செயல்படுத்துவதற்கு முன்பே காவல்துறை நீதிமன்ற உத்தரவை அனுமதிக்காமல் முட்டுக்கட்டை போட்டு நடந்து கொண்டது கடமை தவறிய நடவடிக்கை. ஒட்டுமொத்த நீதித்துறை செயல்பாட்டை முடக்கும் சதி. மேலும் தமிழக அரசும் கூட்டணி கட்சிகளும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் முன்னுக்கு பின் முரணாக பேசி வருகின்றன.
 
கடந்த 1996- இல் உயர் நீதிமன்றம் திருப்பரங்குன்றம் மலைமீது கோவில் நிர்வாகம் தீபம் ஏற்ற  தீர்ப்பு வழங்கியது.
 
அடுத்து 2014- இல் நீதிமன்றம் மலைமீது எங்கும் தீபம் ஏற்றலாம். அதனை கோவில் நிர்வாகம் செய்யலாம் என்று கூறியது.
 
2015- இல் தர்கா நிர்வாகம் ஆட்சபணை இல்லை என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
 
கடந்த 30 ஆண்டுகளாக நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத கையாலாகாத கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையை எதிர்த்து தான் இப்போதைய வழக்கு நடந்து அதில் தீர்ப்பு கூறப்பட்டது.
 
இந்நிலையில் பழைய தீர்ப்பை பின்பற்றுகிறோம் என  மாநில சட்ட அமைச்சர் ரகுபதி அவர்கள் பேசுவது எத்தகைய அறிவீனமான செயல். ஒவ்வொரு பிரச்சினையிலும் பழைய தீர்ப்பை அல்லது நடைமுறையை பின்பற்றுவோம் என்று கூறினால் அறநிலையத்துறை எதற்கு நிர்வாகம் செய்ய வேண்டும்? என்பது ஒவ்வொருவரின் கேள்வியாக உள்ளது.
 
தமிழக அரசு முருக பக்தர்களை, உலகத் தமிழர்களை, இந்துக்களை, அரசியல் சாசன சட்டத்தை அவமதித்துள்ளது. மக்களின் உணர்வுகளை புண்படுத்தி வருகிறது.
 
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் செய்துள்ள மேல் முறையீட்டை சட்டரீதியாக இந்து வழக்கறிஞர்கள் சந்தித்து நீதியை நிலைநாட்ட போராடுவார்கள்.
 
உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?
 
திமுகவின் மக்கள் விரோத, சட்ட விரோத செயல்பாட்டை கண்டித்து வருகின்ற ஞாயிறு (7-12-2025) அன்று பக்தர்களை இணைத்து மாநிலம் தழுவிய மாபெரும் அறப்போராட்ட ஆர்ப்பாட்டமானது அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.
 
இந்த மக்கள் போராட்டத்தில் முருக பக்தர்கள், சிவனடியார்கள் மற்றும் அனைத்து ஆன்மீக குழுக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறோம்‌. தமிழக அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் நமது உரிமையை புரிய வைப்போம்..  
வீரவேல்.. வெற்றி வேல்..

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

students in aydhya ram janma boomni - 2026

வட இந்தியாவின் புனித நகரமான அயோத்தியில் காசி தமிழ் சங்கமம் 4.0 இன் கீழ் மாணவர் குழு இரண்டாம் நாள், கலாச்சார பரிமாற்றம் மற்றும் ஆன்மீக ஒற்றுமையின் ஒரு புதிய அத்தியாயத்தைக் கண்டது. இன்று காலை 9 மணிக்கு சிறப்பு பேருந்தில் மாணவர்கள் ராமர்கோவில் வந்தடைந்தபோது, அவர்களின் மகிழ்ச்சியும், உற்சாகமும் தெளிவாகத் தெரிந்தது. “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற கோஷங்கள் வளாகம் முழுவதும் எதிரொலித்தன. வளாகமே அதிர்ந்தது. தமிழ் பிரதிநிதிகளின் வருகையை ஒரு கொண்டாட்டமாக மாற்றியது. பகவான் ஸ்ரீ ராம் லல்லாவின் முதல் தெய்வீக தரிசனம் அனைத்து மாணவர்களையும் மூழ்கடித்தது.

தமிழ்நாட்டின் அனைத்து மூலைகளில் இருந்தும் வந்திருந்த இந்த மாணவர்கள், மிகுந்த ஒழுக்கத்துடனும் முழுமையான பக்தியுடனும் சாமி கும்பிட்டனர். இந்த தருணம் வடக்கு மற்றும் தென்னிந்தியாவின் பக்தி மரபுகளின் அற்புதமான சங்கமத்தை அடையாளப்படுத்தியது. அங்கு பிராந்திய வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைவரும் ஒரே தெய்வத்தின் மீது தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர்.

ராம் லல்லாவுக்கு வணக்கம் செலுத்திய பிறகு, பிரதிநிதிகள் குழு இந்திய கட்டிடக்கலையின் தலைசிறந்த படைப்பான அற்புதமான ராம் தர்பாரை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் சக்தி மற்றும் பக்தியின் அடையாளமான ஸ்ரீ அனுமான் கர்ஹிக்குச் சென்றனர். அனுமான் புனித பீடத்தில், மாணவர்கள் பக்தியுடன் பிரார்த்தனை செய்து, இந்த பண்டைய ஆலயத்தின் ஆழமான ஆன்மீக ஆற்றலை உணர்ந்தனர். இது அவர்களின் வருகையை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றியது.

பின்னர் குழு வரலாற்று சிறப்புமிக்க ராம் கி பைடியைப் பார்வையிட்டது. சரயு நதியின் அமைதியான மற்றும் புனிதமான கரையில், இந்த பண்டைய நிலத்தின் இயற்கை அழகை அவர்கள் பாராட்டினர். சரயு நதியின் மென்மையான அலைகள் மற்றும் அமைதியான சூழ்நிலை அனைவரையும் கவர்ந்தது.

இந்த ஆன்மீக பயணத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட மாணவர்கள், இது மிகவும் ஊக்கமளிப்பதாக தெரிவித்தனர். முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. அயோத்திக்கான தங்களது வருகை அவர்களது வாழ்நாள் முழுவதும் அவர்களது நினைவில் நீடித்த மற்றும் நேர்மறையான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக நம்புகிறார்கள்.

இந்த சிறப்பு நிகழ்வான காசி தமிழ் சங்கமம் 4.0, “ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற உணர்வை வலுவாக வளர்க்கிறது. வடக்கு மற்றும் தென்னிந்தியா இடையேயான மரபுகள் மற்றும் பரஸ்பர உறவுகளைப் பகிர்ந்து கொள்ளும் இந்த இணைப்புப் பாலம், புதிய தலைமுறையை நாட்டின் மகத்தான பாரம்பரியம் மற்றும் கலாச்சார நல்லிணக்கத்துடன் வலுவாக இணைத்து, நாடு முழுவதும் தேசிய ஒற்றுமையின் செய்தியைப் பரப்புகிறது.

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

Kashi Tamil Sangamam 4

காசி கைவினைப் பொருட்களின் தனித்துவமான கண்காட்சி ஒரு முக்கிய ஈர்ப்பாக மாறுகிறது – ‘நமோ’ காட்!

“ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற உணர்வைத் தழுவி, காசி தமிழ் சங்கம் 4.0 தற்போது நமோ காட் அரங்கில் முழு வீச்சில் உள்ளது. இது அதன் கலாச்சார மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது. வட இந்தியாவின் பண்டைய மரபுகள் மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கும் நாட்டிற்கும் இடையிலான ஆழமான தொடர்பு இங்குதான் புத்துயிர் பெறுகிறது. “தமிழ் கற்கவும்” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட இந்த நிகழ்வு, கலாச்சார உரையாடல், அறிவு மற்றும் கலை பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் பற்றிய செய்தியைக் கொண்டுள்ளது. இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்விற்காக பல்வேறு அமைப்புகள் நமோ காட்டில் மேடைகளை அமைத்துள்ளன.

மர கைவினைப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட வாரணாசியின் புகழ்பெற்ற டி.சி. ‘ஸ்டால் எண். 29’, பார்வையாளர்களிடமிருந்து மிகுந்த கவனத்தைப் பெற்று வருகிறது. இந்த இடத்தில் காட்சிப்படுத்தப்படும் ஒவ்வொரு கலைப்படைப்பும் காசியின் ஏழு தலைமுறை மரவேலை பாரம்பரியத்திற்கு சான்றாக நிற்பது மட்டுமல்லாமல், அதன் பின்னால் இருந்த கலைஞர்களின் போராட்டம், அர்ப்பணிப்பு மற்றும் வெற்றியின் ஊக்கமளிக்கும் கதையைச் சொல்கிறது.

வாரணாசியைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் சர்மா மற்றும் நந்தலால் சர்மா ஆகியோர் இந்த தனித்துவமான மரவேலைக் கலையின் ஏழாவது தலைமுறை கலைஞர்கள். இன்று, அவர்கள் இந்தக் கலையின் ஒரே பாதுகாவலர்களாக உள்ளனர், தங்கள் திறமையான கைகள் மற்றும் பல வருட பயிற்சி மூலம் மரத்தில் குறிப்பிடத்தக்க வாழ்க்கைத் தரத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் பாரம்பரிய கைவினைஞர்கள் மட்டுமல்ல, மரவேலை ஆசிரியர்களும் கூட.

இந்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க, அவர்கள் NIPT மற்றும் ரேபரேலி உள்ளிட்ட பல மதிப்புமிக்க நிறுவனங்களில் பட்டறைகளை நடத்துகிறார்கள். ஆனால் அவர்களின் பயணம் எப்போதும் எளிதாக இருந்ததில்லை. நிதி சிக்கல்கள் மற்றும் இந்த கலைக்கான தேவை குறைந்து வருவதால் அவர்கள் மிகவும் சோர்வடைந்த ஒரு காலம் இருந்தது. பின்னர், 2014 இல், பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் அவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தைக் கொண்டு வந்தது. பிரதமர் அவர்களை தனிப்பட்ட முறையில் ஊக்குவித்தார், அவர்களின் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க ஊக்குவித்தார்.

காசி தமிழ் சங்கம் போன்ற முக்கிய தளங்கள் மூலம் அவர்களின் கலைக்கு தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்கான வாய்ப்பையும் அவர் அவர்களுக்கு வழங்கினார். பிரதமரின் ஊக்கமளிக்கும் செய்தி தனக்கு நம்பிக்கையை அளித்தது மட்டுமல்லாமல், ஒரு புதிய பார்வை மற்றும் திசையையும் அளித்ததாகவும், இன்று அவரது கலை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பாராட்டப்படுவதாகவும் நந்தலால் சர்மா கூறினார்.

இந்த மர வேலைப்பாடு இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச மன்றங்களிலும் தனது இருப்பை உணர வைத்துள்ளது. 2022 G7 உச்சிமாநாட்டின் போது, ​​”ராஜ் காதி – ராம் தர்பார்” வாரணாசியின் கலை பாரம்பரியத்திற்கு மிகுந்த பெருமை சேர்த்தது. நமோ காட்டில் உள்ள இந்த இடத்திற்கு வருகை தரும் பார்வையாளர்கள் உள்ளூர் கலையை ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்வதைக் காணலாம்.

சிவம் சிங் என்ற பார்வையாளர், தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மரத்தாலான சாவி மோதிரங்களை வாங்கி, வாரணாசியின் பாரம்பரியத்திலிருந்து ஒரு விலைமதிப்பற்ற பரிசாகக் கருதும் இவ்வளவு நுட்பமான, அழகான மற்றும் மலிவு விலையில் கலைப்படைப்பைப் பெற்றதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த இடத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், அவர்களின் அற்புதமான பஞ்சமுகி ஹனுமான் சிலை, இது முற்றிலும் கையால், எந்த இயந்திரங்களையும் பயன்படுத்தாமல், 6 மாதங்களுக்கும் மேலான பயிற்சி காலத்தில் வடிவமைக்கப்பட்டது. தோராயமாக ரூ. 1,20,000 செலவில், இந்த கலைப்படைப்பு கலமா, கடம் மற்றும் குலார் போன்ற மரங்களின் கலவையைப் பயன்படுத்தி, சந்தன மரத்தை நினைவூட்டும் வண்ணம் மற்றும் நறுமணத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செயற்கை ஒளியின் கீழ் நுணுக்கமான விவரங்கள் சாத்தியமற்றது என்பதால், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயற்கையான சூரிய ஒளியில் மட்டுமே தங்கள் மினியேச்சர் மரவேலைப்பாடுகளை உருவாக்க முடியும் என்று கலைஞர்கள் விளக்குகிறார்கள். இந்த உண்மை அவர்களின் கலையை இன்னும் மர்மமாகவும் தனித்துவமாகவும் ஆக்குகிறது.

நமோ காட்டில் உள்ள காசி தமிழ் சங்கம் 4.0 இல் நடைபெறும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி வெறும் வர்த்தக கண்காட்சி மட்டுமல்ல, இந்திய பாரம்பரியம், கைவினைத்திறன், பொறுமை மற்றும் கலாச்சார பெருமையை வெளிப்படுத்தும் ஒரு துடிப்பான தளமாகும். கடின உழைப்பு, பாரம்பரியம் மற்றும் சரியான திசையுடன் இணைந்தால், உள்ளூர் கலை தேசிய அங்கீகாரத்தைப் பெறுவது மட்டுமல்லாமல், உலகளாவிய தளங்களிலும் பிரகாசிக்க முடியும் என்பதை ஓம் பிரகாஷ் மற்றும் நந்தலால் சர்மாவின் பயணம் நிரூபிக்கிறது.

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

1001104500 - 2026

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை காரணமாக ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்றில் தண்ணிர் வரத்து அதிகரித்ததால் கோயிலுக்கு சென்று திரும்ப முடியாத பக்தர்களை வனத்துறை ஊர்காவல்படையினர் கயிறு கட்டி மீட்டனர்.அடிக்கடி நிகழும் இப்பிரச்சனைக்கு தீர்வு காண ஆற்றில் பாலம் அமைத்து தர பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு, தேவதானம் சாஸ்தா கோயில் அருவி, உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் மற்றும் நீரோடைகள் உருவாகின்றன. இவற்றில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருப்பதால் விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. பருவமழை காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அருவிகள், காட்டாறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்து வருகிறது

வழக்கமாக விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அலைமோதும் தேவதானம் சாஸ்தா கோயில் ஆறு, அய்யனார் கோயில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் அருவி, பக்தர்கள் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் செல்ல வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சில தினங்களாக கேரளா பெரியார் புலிகள் வனச்சரணாலய மாலை பகுதியில் அவ்வப்போது மழைபெய்து வரும் நிலையில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழையால் அய்யனார் கோவில் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.இதனால் மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோயில் ஆறு, தண்ணீர் கரை புரண்டு ஓடியது.

வியாழக்கிழமை திருக்கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு ராஜபாளையம் அய்யனார் கோவில் மற்றும் அருகில் உள்ள சிவானந்தா ஆசிரமத்தில் சிறப்பு விழாக்கள் பூஜை வழிபாடுகள் அன்னதானம் நடைபெற்றது இதில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர் மேலும் வியாழக்கிழமை பௌர்ணமி என்பதால் அருகில் உள்ள சாய்பாபா கோயிலுக்கும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர் .இவர்கள் அய்யனார் கோவில் செல்லும் போது ஆற்றைக் கடந்து அய்யனார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியப திடீரென கேரளா வனப்பகுதியில் பெய்த மழையால் அய்யனார் கோவில் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகம் ஏற்பட்டது இதனால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கரைக்கு வர முடியாமல் தவித்தனர் ராஜபாளையம் ஊர் காவல் படை மற்றும் வனத்துறையினர் உடன் பார்க்குக்கு சென்று கயிறு கட்டி வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களை மீட்டனர். மேலும் நேற்று மாலைக்கு பிறகு வனப்பகுதியில் செல்ல தடையும் விதிக்கப்பட்டது

இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தேவதானம் சாஸ்தா கோயில் அணை, ராஜபாளையம் நகரின் பிரதான குடிநீர் ஆதாரமான 6-வது மைல் நீர்த்தேக்கம் ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் மலையடிவாரத்தில் உள்ள கண்மாய்களுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் விவசாயிகள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

thiruparankundram deepa thoon - 2026

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அதற்கு மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் முழு போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்த அறிக்கையை அவர் நாளை காலை மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

முன்னதாக, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை கிளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு சரிதான் என தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் ராம. ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், மலை உச்சியில் உள்ள பழமையான தீபத் தூணிலும் தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

ஆனால், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தமிழக அரசு அதனை அமல்படுத்தாததால் நேற்று மாலையே மனுதாரர், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். தொடர்ந்து தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இன்று காலை முதல் இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக நடைபெற்று வந்தது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து வாதம் செய்தது. மதப் பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் அவர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு குற்றம்சாட்டியது.

வழக்கின் விசாரணையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. “தனி நீதிபதியின் உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதாலே சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறை தனது கடமையைச் செய்யத் தவறியதால் சிஐஎஸ்எஃப் உள்ளே கொண்டுவரப்பட்டது. இதில் எந்த விதிமீறலும் இருப்பதாகத் தெரியவில்லை. நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்தியிருக்க வேண்டும்.

மாநில அரசு தனது கடமையைச் செய்யத் தவறியதால்தான் தனி நீதிபதி மீண்டும் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு எதோ உள்நோக்கத்துடன் வழக்குத் தொடர்ந்துள்ளது” என்று நீதிபதிகள் கூறி மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

judge grs gr swaminathan - 2026
#image_title

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபமேற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மாநில அரசு கடமையைச் செய்ய தவறியதாலேயே CISFஐ பாதுகாப்பிற்காக செல்ல உத்தரவிடப்பட்டது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

நீதிமன்ற உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதாலேயே மனுதாரரை ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மாநில அரசு ஏதோ ஒரு நோக்கத்துடன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளது என்று கூறினர். முன்னதாக, திருப்பரங்குன்றம் மலையில் CISFஐ பாதுகாப்புடன் தீபத்தூணில் தீபமேற்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார் என்பதால், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மனுதாரருக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை – சிஐஎஸ்எப் பாதுகாப்பை அளித்து மலை மேல் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுப்பியது சரிதான் என்று இரு நீதிபதிகள் கொண்ட அமர்வ் தீர்ப்பு அளித்துள்ளது, தமிழக அரசின் செயல்பாட்டின் மீது நீதித்துறைக்கு நம்பிக்கை இல்லை என்பதையே வெளிப்படுத்தியது. குறிப்பாக, மாநில அரசு கடமையைச் செய்யத் தவறிவிட்டது என்று குறிப்பிட்டதால், அரசு, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை, அரசின் நிர்வாகத்தில் இயங்கும் அறநிலையத்துறை ஆகியவற்றின் மீது நீதித்துறைக்கு நம்பிக்கை இல்லை என்பது வெளிப்படிக்ருக்கிறது.

மாவட்ட ஆட்சியர் காவல் துறை ஆணையர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மேற்கொண்டு தொடர்ந்து இன்று விசாரிக்கிறார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.

தமிழக அரசு சார்பில் உள்நோக்கத்துடன் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறிய நீதிமன்றம், மதுரை கிளை நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரிதான் என்று உறுதிப் படுத்தியது. எனவே மதுரை தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை தனிப்பட்ட வகையில் விமர்சித்தவர்களும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்று கூறப்ப்டுகிறது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

kadeswara subramaniam hindu munnani - 2026

சட்டத்தை மதிக்காத தமிழக அரசும், அதிகாரிகளும். இந்துக்களுக்கு எதிராக செயல்படும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள்.. இந்துக்களுக்கு எதிரான திமுகவின் போக்கு.. ஆகியவற்றை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது… என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கை:

திருப்பரங்குன்றம் மற்றும் திண்டுக்கல் பெருமாள் கோவில்பட்டி மண்டு கருப்பண்ணசாமி கோவிலிலும் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு தந்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசும், காவல்துறை அதிகாரிகளும், மதுரை கலெக்டரும் மதிக்கவில்லை.

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

திருப்பரங்குன்றத்தில் அமைதியாக தங்கள் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தி பிரார்த்தனை செய்த மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்த தடுப்பு வேலி அமைத்து, பதட்டத்தை ஏற்படுத்தினர் மதுரை மாவட்ட அதிகாரிகள்.

திட்டமிட்டு செயல்பட்டு. வழிபாட்டை தடுத்துள்ளனர். வழிபாட்டை தடுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற ஆணையை புறந்தள்ளி, திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றியதாக பொய்யான செய்தியை ஊடகங்களில் பரப்பி மக்களின் முதுகில் குத்தி, முருக பக்தர்களை வெறுப்படைய செய்தது ஆளும் திமுக.

வேற்று மதத்தினர் இந்து நம்பிக்கைக்கு எதிராக இருப்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்துக்களுக்கு எதிராக, இந்து சமய நம்பிக்கைகளுக்கு எதிராக, இந்து சமய அறநிலையத்துறையே நீதிமன்றத்தில் அப்பீல் செய்கிறது என்றால், இந்து சமய அறநிலையத்துறை என்பதே கோவிலை அழிக்கும் அறங் கெட்ட துறையாக செயல்பட்டு வருகிறது என்பதற்கு இதுவே ஆதாரமாகும்.

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்து இரண்டு நாட்கள் அமைதியாக இருந்தது ஆளும் திமுக. மறுநாள் அப்பீல் போகிறார்கள் என்று கூறி நீதிமன்ற தீர்ப்பை காவல்துறை அவமதித்தது. தீபம் ஏற்றுவதை தடுத்த அதிகாரிகள் அனைவர் மீதும் மத்திய உள்துறை அமைச்சகம் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டுக்கல் பெருமாள் கோவில்பட்டி திருக்கோவில் வளாகத்தில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு இரண்டு நபர் அமர்வில் அப்பீல் செய்த மனுவை அப்போதே நீதியரசர்கள் அரசை கடுமையாக எச்சரித்தனர். உங்களால் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியவில்லை என்றால் நாங்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படையை அனுப்புகிறோம் 144 தடை உத்தரவை வாபஸ் வாங்குங்கள் என நீதிபதிகள் தெரிவித்த பிறகும் அதிகாரிகள் 144 தடை உத்தரவு போட்டு சர்வாதிகாரமாக நடந்து கொண்டது ஜனநாயக விரோதம் ஆகும்.

திண்டுக்கலை சுற்றியுள்ள பத்திற்கும் அதிகமான கிராமங்களில் இந்துக்கள் சிறுபான்மையாகவும் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாகவும் உள்ளனர். இந்துக்கள் சிறுபான்மையாக உள்ள கிராமங்களில் படிப்படியாக இந்துக்களை அச்சுறுத்தி மதமாற்றம் செய்ய கிறிஸ்தவ மிஷனரிகள் சதிசெய்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் N பஞ்சம் பட்டியில் கோவில் திருவிழாவில் அன்னதானம் வழங்குவதற்கு கூட அரசு தடை விதித்தது. சர்வதேச கிறிஸ்தவ மிஷனரிகளோடு கைகோர்த்து தமிழக அரசு நிர்வாகம் செயல்படுகிறது. கிறிஸ்தவ மிஷனரிகளின் கைக்கூலியாக மாறி அரசியல் சாசனம் வழங்கியுள்ள வழிபாட்டு உரிமையை தமிழக அரசு பறிக்கிறது. இதன் மூலம் இந்துக்களே இல்லாத 100% கிறிஸ்தவர்கள் மட்டுமே வாழும் கிராமங்களை உருவாக்க மிகப்பெரிய சதி நடக்கிறது. இதன் ஒரு படி தான் பெருமாள் கோவில் பட்டியில் திருக்கோவிலில் தீபம் ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்ட நிகழ்வு அரங்கேறி இருக்கிறது.

கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நீதியரசர்களை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சனம் செய்து நீதித்துறையின் மாண்பை சீர்குலைத்ததுடன், மக்களுக்கு தவறான தகவல் தருவதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

வன்முறையை தூண்டவும், மதக்கலவரத்தை ஏற்படுத்தவும் சமூக ஊடகத்தில் சிலர் பதிவிட்டு பரப்புவதை தமிழக உளவு துறை வேடிக்கை பார்ப்பதும் அரசின் கையாலாகாத செயலாகவே கருத வேண்டும்..

ஆளும் திமுகவின் அழுத்தம் காரணமாக காவல்துறை மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது என்பது வேதனையான உண்மை.

சுதந்திர நாட்டில் வழிபாட்டு உரிமைக்காக போராடுவதும், நீதிமன்ற கதவுகளைத் தட்டி சட்டத்தின்படி நீதி பெற்றாலும் அரசும், காவல்துறையும், ஆட்சித் தலைவரும் அதனை மதிக்காத நிலையில் மக்கள் சட்டத்தை கையில் எடுத்துவிடும் அபாயத்தை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

ஆட்சி, அதிகாரம் நிலையானது இல்லை. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பது தர்மத்தின் வாக்கு. எவரெல்லாம் தங்களை சர்வாதிகாரியாக நினைத்து ஆடிய ஆட்டத்தை, இறைவன் அடக்கி காட்டிய வரலாறை மறக்க வேண்டாம். நீதியின் மீதும் தெய்வத்தின் மீதும் இந்துக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

ஆயிரம் தடைகள் வந்தாலும் நீதி வென்றே தீரும். முருகனின் அருளால் இறை சக்தியால் இந்துக்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுத்தே தீருவார்கள். திருப்பரங்குன்றத்திலும், திண்டுக்கல் பெருமாள் கோவில்பட்டி – மண்டு கருப்பண்ணசாமி கோவிலிலும் தீபம் ஏற்றப்படும் வெற்றித் திருநாளை நாம் கண்ணால் காண்போம்.

எனவே, ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நீதித்துறையை அவமதிப்பதை கடுமையாக இந்து முன்னணி கண்டிக்கிறது. மேலும் உயர்நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த தமிழக அரசு அதிகாரிகள் அனைவர் மீதும் நீதிமன்றம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் சட்டரீதியிலான நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.