Home Blog Page 49

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

Kashi Tamil Sangamam 4

காசி கைவினைப் பொருட்களின் தனித்துவமான கண்காட்சி ஒரு முக்கிய ஈர்ப்பாக மாறுகிறது – ‘நமோ’ காட்!

“ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற உணர்வைத் தழுவி, காசி தமிழ் சங்கம் 4.0 தற்போது நமோ காட் அரங்கில் முழு வீச்சில் உள்ளது. இது அதன் கலாச்சார மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது. வட இந்தியாவின் பண்டைய மரபுகள் மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கும் நாட்டிற்கும் இடையிலான ஆழமான தொடர்பு இங்குதான் புத்துயிர் பெறுகிறது. “தமிழ் கற்கவும்” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட இந்த நிகழ்வு, கலாச்சார உரையாடல், அறிவு மற்றும் கலை பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் பற்றிய செய்தியைக் கொண்டுள்ளது. இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்விற்காக பல்வேறு அமைப்புகள் நமோ காட்டில் மேடைகளை அமைத்துள்ளன.

மர கைவினைப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட வாரணாசியின் புகழ்பெற்ற டி.சி. ‘ஸ்டால் எண். 29’, பார்வையாளர்களிடமிருந்து மிகுந்த கவனத்தைப் பெற்று வருகிறது. இந்த இடத்தில் காட்சிப்படுத்தப்படும் ஒவ்வொரு கலைப்படைப்பும் காசியின் ஏழு தலைமுறை மரவேலை பாரம்பரியத்திற்கு சான்றாக நிற்பது மட்டுமல்லாமல், அதன் பின்னால் இருந்த கலைஞர்களின் போராட்டம், அர்ப்பணிப்பு மற்றும் வெற்றியின் ஊக்கமளிக்கும் கதையைச் சொல்கிறது.

வாரணாசியைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் சர்மா மற்றும் நந்தலால் சர்மா ஆகியோர் இந்த தனித்துவமான மரவேலைக் கலையின் ஏழாவது தலைமுறை கலைஞர்கள். இன்று, அவர்கள் இந்தக் கலையின் ஒரே பாதுகாவலர்களாக உள்ளனர், தங்கள் திறமையான கைகள் மற்றும் பல வருட பயிற்சி மூலம் மரத்தில் குறிப்பிடத்தக்க வாழ்க்கைத் தரத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் பாரம்பரிய கைவினைஞர்கள் மட்டுமல்ல, மரவேலை ஆசிரியர்களும் கூட.

இந்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க, அவர்கள் NIPT மற்றும் ரேபரேலி உள்ளிட்ட பல மதிப்புமிக்க நிறுவனங்களில் பட்டறைகளை நடத்துகிறார்கள். ஆனால் அவர்களின் பயணம் எப்போதும் எளிதாக இருந்ததில்லை. நிதி சிக்கல்கள் மற்றும் இந்த கலைக்கான தேவை குறைந்து வருவதால் அவர்கள் மிகவும் சோர்வடைந்த ஒரு காலம் இருந்தது. பின்னர், 2014 இல், பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் அவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தைக் கொண்டு வந்தது. பிரதமர் அவர்களை தனிப்பட்ட முறையில் ஊக்குவித்தார், அவர்களின் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க ஊக்குவித்தார்.

காசி தமிழ் சங்கம் போன்ற முக்கிய தளங்கள் மூலம் அவர்களின் கலைக்கு தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்கான வாய்ப்பையும் அவர் அவர்களுக்கு வழங்கினார். பிரதமரின் ஊக்கமளிக்கும் செய்தி தனக்கு நம்பிக்கையை அளித்தது மட்டுமல்லாமல், ஒரு புதிய பார்வை மற்றும் திசையையும் அளித்ததாகவும், இன்று அவரது கலை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பாராட்டப்படுவதாகவும் நந்தலால் சர்மா கூறினார்.

இந்த மர வேலைப்பாடு இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச மன்றங்களிலும் தனது இருப்பை உணர வைத்துள்ளது. 2022 G7 உச்சிமாநாட்டின் போது, ​​”ராஜ் காதி – ராம் தர்பார்” வாரணாசியின் கலை பாரம்பரியத்திற்கு மிகுந்த பெருமை சேர்த்தது. நமோ காட்டில் உள்ள இந்த இடத்திற்கு வருகை தரும் பார்வையாளர்கள் உள்ளூர் கலையை ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்வதைக் காணலாம்.

சிவம் சிங் என்ற பார்வையாளர், தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மரத்தாலான சாவி மோதிரங்களை வாங்கி, வாரணாசியின் பாரம்பரியத்திலிருந்து ஒரு விலைமதிப்பற்ற பரிசாகக் கருதும் இவ்வளவு நுட்பமான, அழகான மற்றும் மலிவு விலையில் கலைப்படைப்பைப் பெற்றதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த இடத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், அவர்களின் அற்புதமான பஞ்சமுகி ஹனுமான் சிலை, இது முற்றிலும் கையால், எந்த இயந்திரங்களையும் பயன்படுத்தாமல், 6 மாதங்களுக்கும் மேலான பயிற்சி காலத்தில் வடிவமைக்கப்பட்டது. தோராயமாக ரூ. 1,20,000 செலவில், இந்த கலைப்படைப்பு கலமா, கடம் மற்றும் குலார் போன்ற மரங்களின் கலவையைப் பயன்படுத்தி, சந்தன மரத்தை நினைவூட்டும் வண்ணம் மற்றும் நறுமணத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செயற்கை ஒளியின் கீழ் நுணுக்கமான விவரங்கள் சாத்தியமற்றது என்பதால், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயற்கையான சூரிய ஒளியில் மட்டுமே தங்கள் மினியேச்சர் மரவேலைப்பாடுகளை உருவாக்க முடியும் என்று கலைஞர்கள் விளக்குகிறார்கள். இந்த உண்மை அவர்களின் கலையை இன்னும் மர்மமாகவும் தனித்துவமாகவும் ஆக்குகிறது.

நமோ காட்டில் உள்ள காசி தமிழ் சங்கம் 4.0 இல் நடைபெறும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி வெறும் வர்த்தக கண்காட்சி மட்டுமல்ல, இந்திய பாரம்பரியம், கைவினைத்திறன், பொறுமை மற்றும் கலாச்சார பெருமையை வெளிப்படுத்தும் ஒரு துடிப்பான தளமாகும். கடின உழைப்பு, பாரம்பரியம் மற்றும் சரியான திசையுடன் இணைந்தால், உள்ளூர் கலை தேசிய அங்கீகாரத்தைப் பெறுவது மட்டுமல்லாமல், உலகளாவிய தளங்களிலும் பிரகாசிக்க முடியும் என்பதை ஓம் பிரகாஷ் மற்றும் நந்தலால் சர்மாவின் பயணம் நிரூபிக்கிறது.

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

1001104500 - 2026

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை காரணமாக ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்றில் தண்ணிர் வரத்து அதிகரித்ததால் கோயிலுக்கு சென்று திரும்ப முடியாத பக்தர்களை வனத்துறை ஊர்காவல்படையினர் கயிறு கட்டி மீட்டனர்.அடிக்கடி நிகழும் இப்பிரச்சனைக்கு தீர்வு காண ஆற்றில் பாலம் அமைத்து தர பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு, தேவதானம் சாஸ்தா கோயில் அருவி, உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் மற்றும் நீரோடைகள் உருவாகின்றன. இவற்றில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருப்பதால் விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. பருவமழை காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அருவிகள், காட்டாறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்து வருகிறது

வழக்கமாக விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அலைமோதும் தேவதானம் சாஸ்தா கோயில் ஆறு, அய்யனார் கோயில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் அருவி, பக்தர்கள் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் செல்ல வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சில தினங்களாக கேரளா பெரியார் புலிகள் வனச்சரணாலய மாலை பகுதியில் அவ்வப்போது மழைபெய்து வரும் நிலையில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழையால் அய்யனார் கோவில் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.இதனால் மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோயில் ஆறு, தண்ணீர் கரை புரண்டு ஓடியது.

வியாழக்கிழமை திருக்கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு ராஜபாளையம் அய்யனார் கோவில் மற்றும் அருகில் உள்ள சிவானந்தா ஆசிரமத்தில் சிறப்பு விழாக்கள் பூஜை வழிபாடுகள் அன்னதானம் நடைபெற்றது இதில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர் மேலும் வியாழக்கிழமை பௌர்ணமி என்பதால் அருகில் உள்ள சாய்பாபா கோயிலுக்கும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர் .இவர்கள் அய்யனார் கோவில் செல்லும் போது ஆற்றைக் கடந்து அய்யனார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியப திடீரென கேரளா வனப்பகுதியில் பெய்த மழையால் அய்யனார் கோவில் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகம் ஏற்பட்டது இதனால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கரைக்கு வர முடியாமல் தவித்தனர் ராஜபாளையம் ஊர் காவல் படை மற்றும் வனத்துறையினர் உடன் பார்க்குக்கு சென்று கயிறு கட்டி வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களை மீட்டனர். மேலும் நேற்று மாலைக்கு பிறகு வனப்பகுதியில் செல்ல தடையும் விதிக்கப்பட்டது

இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தேவதானம் சாஸ்தா கோயில் அணை, ராஜபாளையம் நகரின் பிரதான குடிநீர் ஆதாரமான 6-வது மைல் நீர்த்தேக்கம் ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் மலையடிவாரத்தில் உள்ள கண்மாய்களுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் விவசாயிகள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

thiruparankundram deepa thoon - 2026

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அதற்கு மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் முழு போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்த அறிக்கையை அவர் நாளை காலை மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

முன்னதாக, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை கிளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு சரிதான் என தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் ராம. ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், மலை உச்சியில் உள்ள பழமையான தீபத் தூணிலும் தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

ஆனால், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தமிழக அரசு அதனை அமல்படுத்தாததால் நேற்று மாலையே மனுதாரர், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். தொடர்ந்து தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இன்று காலை முதல் இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக நடைபெற்று வந்தது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து வாதம் செய்தது. மதப் பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் அவர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு குற்றம்சாட்டியது.

வழக்கின் விசாரணையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. “தனி நீதிபதியின் உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதாலே சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறை தனது கடமையைச் செய்யத் தவறியதால் சிஐஎஸ்எஃப் உள்ளே கொண்டுவரப்பட்டது. இதில் எந்த விதிமீறலும் இருப்பதாகத் தெரியவில்லை. நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்தியிருக்க வேண்டும்.

மாநில அரசு தனது கடமையைச் செய்யத் தவறியதால்தான் தனி நீதிபதி மீண்டும் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு எதோ உள்நோக்கத்துடன் வழக்குத் தொடர்ந்துள்ளது” என்று நீதிபதிகள் கூறி மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

judge grs gr swaminathan - 2026
#image_title

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபமேற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மாநில அரசு கடமையைச் செய்ய தவறியதாலேயே CISFஐ பாதுகாப்பிற்காக செல்ல உத்தரவிடப்பட்டது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

நீதிமன்ற உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதாலேயே மனுதாரரை ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மாநில அரசு ஏதோ ஒரு நோக்கத்துடன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளது என்று கூறினர். முன்னதாக, திருப்பரங்குன்றம் மலையில் CISFஐ பாதுகாப்புடன் தீபத்தூணில் தீபமேற்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார் என்பதால், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மனுதாரருக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை – சிஐஎஸ்எப் பாதுகாப்பை அளித்து மலை மேல் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுப்பியது சரிதான் என்று இரு நீதிபதிகள் கொண்ட அமர்வ் தீர்ப்பு அளித்துள்ளது, தமிழக அரசின் செயல்பாட்டின் மீது நீதித்துறைக்கு நம்பிக்கை இல்லை என்பதையே வெளிப்படுத்தியது. குறிப்பாக, மாநில அரசு கடமையைச் செய்யத் தவறிவிட்டது என்று குறிப்பிட்டதால், அரசு, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை, அரசின் நிர்வாகத்தில் இயங்கும் அறநிலையத்துறை ஆகியவற்றின் மீது நீதித்துறைக்கு நம்பிக்கை இல்லை என்பது வெளிப்படிக்ருக்கிறது.

மாவட்ட ஆட்சியர் காவல் துறை ஆணையர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மேற்கொண்டு தொடர்ந்து இன்று விசாரிக்கிறார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.

தமிழக அரசு சார்பில் உள்நோக்கத்துடன் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறிய நீதிமன்றம், மதுரை கிளை நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரிதான் என்று உறுதிப் படுத்தியது. எனவே மதுரை தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை தனிப்பட்ட வகையில் விமர்சித்தவர்களும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்று கூறப்ப்டுகிறது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

kadeswara subramaniam hindu munnani - 2026

சட்டத்தை மதிக்காத தமிழக அரசும், அதிகாரிகளும். இந்துக்களுக்கு எதிராக செயல்படும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள்.. இந்துக்களுக்கு எதிரான திமுகவின் போக்கு.. ஆகியவற்றை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது… என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கை:

திருப்பரங்குன்றம் மற்றும் திண்டுக்கல் பெருமாள் கோவில்பட்டி மண்டு கருப்பண்ணசாமி கோவிலிலும் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு தந்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசும், காவல்துறை அதிகாரிகளும், மதுரை கலெக்டரும் மதிக்கவில்லை.

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

திருப்பரங்குன்றத்தில் அமைதியாக தங்கள் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தி பிரார்த்தனை செய்த மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்த தடுப்பு வேலி அமைத்து, பதட்டத்தை ஏற்படுத்தினர் மதுரை மாவட்ட அதிகாரிகள்.

திட்டமிட்டு செயல்பட்டு. வழிபாட்டை தடுத்துள்ளனர். வழிபாட்டை தடுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற ஆணையை புறந்தள்ளி, திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றியதாக பொய்யான செய்தியை ஊடகங்களில் பரப்பி மக்களின் முதுகில் குத்தி, முருக பக்தர்களை வெறுப்படைய செய்தது ஆளும் திமுக.

வேற்று மதத்தினர் இந்து நம்பிக்கைக்கு எதிராக இருப்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்துக்களுக்கு எதிராக, இந்து சமய நம்பிக்கைகளுக்கு எதிராக, இந்து சமய அறநிலையத்துறையே நீதிமன்றத்தில் அப்பீல் செய்கிறது என்றால், இந்து சமய அறநிலையத்துறை என்பதே கோவிலை அழிக்கும் அறங் கெட்ட துறையாக செயல்பட்டு வருகிறது என்பதற்கு இதுவே ஆதாரமாகும்.

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்து இரண்டு நாட்கள் அமைதியாக இருந்தது ஆளும் திமுக. மறுநாள் அப்பீல் போகிறார்கள் என்று கூறி நீதிமன்ற தீர்ப்பை காவல்துறை அவமதித்தது. தீபம் ஏற்றுவதை தடுத்த அதிகாரிகள் அனைவர் மீதும் மத்திய உள்துறை அமைச்சகம் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டுக்கல் பெருமாள் கோவில்பட்டி திருக்கோவில் வளாகத்தில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு இரண்டு நபர் அமர்வில் அப்பீல் செய்த மனுவை அப்போதே நீதியரசர்கள் அரசை கடுமையாக எச்சரித்தனர். உங்களால் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியவில்லை என்றால் நாங்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படையை அனுப்புகிறோம் 144 தடை உத்தரவை வாபஸ் வாங்குங்கள் என நீதிபதிகள் தெரிவித்த பிறகும் அதிகாரிகள் 144 தடை உத்தரவு போட்டு சர்வாதிகாரமாக நடந்து கொண்டது ஜனநாயக விரோதம் ஆகும்.

திண்டுக்கலை சுற்றியுள்ள பத்திற்கும் அதிகமான கிராமங்களில் இந்துக்கள் சிறுபான்மையாகவும் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாகவும் உள்ளனர். இந்துக்கள் சிறுபான்மையாக உள்ள கிராமங்களில் படிப்படியாக இந்துக்களை அச்சுறுத்தி மதமாற்றம் செய்ய கிறிஸ்தவ மிஷனரிகள் சதிசெய்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் N பஞ்சம் பட்டியில் கோவில் திருவிழாவில் அன்னதானம் வழங்குவதற்கு கூட அரசு தடை விதித்தது. சர்வதேச கிறிஸ்தவ மிஷனரிகளோடு கைகோர்த்து தமிழக அரசு நிர்வாகம் செயல்படுகிறது. கிறிஸ்தவ மிஷனரிகளின் கைக்கூலியாக மாறி அரசியல் சாசனம் வழங்கியுள்ள வழிபாட்டு உரிமையை தமிழக அரசு பறிக்கிறது. இதன் மூலம் இந்துக்களே இல்லாத 100% கிறிஸ்தவர்கள் மட்டுமே வாழும் கிராமங்களை உருவாக்க மிகப்பெரிய சதி நடக்கிறது. இதன் ஒரு படி தான் பெருமாள் கோவில் பட்டியில் திருக்கோவிலில் தீபம் ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்ட நிகழ்வு அரங்கேறி இருக்கிறது.

கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நீதியரசர்களை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சனம் செய்து நீதித்துறையின் மாண்பை சீர்குலைத்ததுடன், மக்களுக்கு தவறான தகவல் தருவதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

வன்முறையை தூண்டவும், மதக்கலவரத்தை ஏற்படுத்தவும் சமூக ஊடகத்தில் சிலர் பதிவிட்டு பரப்புவதை தமிழக உளவு துறை வேடிக்கை பார்ப்பதும் அரசின் கையாலாகாத செயலாகவே கருத வேண்டும்..

ஆளும் திமுகவின் அழுத்தம் காரணமாக காவல்துறை மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது என்பது வேதனையான உண்மை.

சுதந்திர நாட்டில் வழிபாட்டு உரிமைக்காக போராடுவதும், நீதிமன்ற கதவுகளைத் தட்டி சட்டத்தின்படி நீதி பெற்றாலும் அரசும், காவல்துறையும், ஆட்சித் தலைவரும் அதனை மதிக்காத நிலையில் மக்கள் சட்டத்தை கையில் எடுத்துவிடும் அபாயத்தை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

ஆட்சி, அதிகாரம் நிலையானது இல்லை. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பது தர்மத்தின் வாக்கு. எவரெல்லாம் தங்களை சர்வாதிகாரியாக நினைத்து ஆடிய ஆட்டத்தை, இறைவன் அடக்கி காட்டிய வரலாறை மறக்க வேண்டாம். நீதியின் மீதும் தெய்வத்தின் மீதும் இந்துக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

ஆயிரம் தடைகள் வந்தாலும் நீதி வென்றே தீரும். முருகனின் அருளால் இறை சக்தியால் இந்துக்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுத்தே தீருவார்கள். திருப்பரங்குன்றத்திலும், திண்டுக்கல் பெருமாள் கோவில்பட்டி – மண்டு கருப்பண்ணசாமி கோவிலிலும் தீபம் ஏற்றப்படும் வெற்றித் திருநாளை நாம் கண்ணால் காண்போம்.

எனவே, ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நீதித்துறையை அவமதிப்பதை கடுமையாக இந்து முன்னணி கண்டிக்கிறது. மேலும் உயர்நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த தமிழக அரசு அதிகாரிகள் அனைவர் மீதும் நீதிமன்றம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் சட்டரீதியிலான நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

devadanam temple security killed case - 2026
1001102800 - 2026

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர் கொலை செய்ய பட்ட கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் இருவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது.

1001102799 - 2026

இராஜபாளையம் உட்கோட்டம், சேத்தூர் காவல் நிலைய சரகம், கடந்த 10.11.2025ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தேவதானம் அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில்
தற்காலிக பாதுகாப்பு காவல் பணியாளர்களாக பணியில் இருந்த பேச்சிமுத்து (54) மற்றும் சங்கரபாண்டியன் (69) ஆகியோர்களை கொலை செய்து மேற்படி கோவில் உண்டியலில் இருந்த பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்தனர்.

இது சம்பந்தமாக கொடுத்த புகாரின் அடிப்படையில் சேத்தூர் காவல் நிலையத்தில் ஆதாய கொலை வழக்கு பதிவு செய்து 24 மணி நேரத்தில் எதிரிகளான நாகராஜ் (26) மற்றும் முனியசாமி (40) ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் மேற்படி எதிரிகளான நாகராஜ் (26) மற்றும் முனியசாமி (40)
ஆகியோர் இது போன்ற குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடாமல் இருப்பதை
தடுப்பதற்காகவும், இவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டும் இவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், இன்று 29.11.2025-ம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.சுகபுத்ரா
எதிரிகளான நாகராஜ் (26) மற்றும் முனியசாமி (40) ஆகியோர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.

மேற்படி உத்தரவின் பேரில் எதிரிகள் மதுரை மத்திய சிறையில் குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர். பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் நடவடிக்கையை கட்டுபடுத்தும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி.கண்ணன் தெரிவித்துள்ளார்..

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

thiruparankundram deepam 1 - 2026

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் பக்தர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். முன்னதாக மலைமீது ஏற்றப்படும் தீபத்தை தங்கள் வாழ்நாளில் முதல்முறையாக காண வேண்டும் என்பதற்காக காத்திருந்த பக்தர்கள் தங்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தினார்கள். இதனால் கோயில் முன் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாரதம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தபோது முதல் உலகப்போர் நேரத்தில் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்ட தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வானது 105 வருடங்களுக்குப் பிறகு தற்போது ஏற்றப்படும் என நீதிமன்றம் அனுமதியும் உத்தரவும் அளித்த பிறகும் கூட, வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. 

இதை அடுத்து நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் 10 பேருடன் சென்று திருப்பரங்குன்றம் மலையில் உடன் சென்று தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனவும், சிஐஎஸ்எப் போலீசார் பாதுகாப்புக்குச் செல்ல வேண்டும் எனவும் நீதிமன்றம்  உத்தரவிட்டது.

மனுதாரருடன் 10 பேர் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதை அடுத்து நாளை 12 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்ய சிஆர்பிஎஃப்க்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

திரும்பிய பக்கமெல்லாம் திமுக., அரசின் போலீஸ்; திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு!

thirupparankundram police - 2026

மதுரை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக அறநிலையத்துறை சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் 27 இடங்களில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிசிடிவி கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு ‘ முன்பு நீதியரசர் ஜி ஆர் சாமிநாதன் தீர்ப்பு வழங்கினார்.

இந்நிலையில், அறநிலை துறை சார்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் அந்த மனு உடனடி விசாரணைக்கு இன்று பட்டியலிடப்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை அல்லது மறு உத்தரவுக்காக அறநிலையத்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

இந் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மிகவும் பதட்டமான சூழ்நிலையில் திருப்பரங்குன்றம் பகுதி உள்ளதால், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேற்று இரவு முதல் திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் மலை பாதை பகுதிகளில் ஆய்வு செய்தார் .

அதனைத் தொடர்ந்து, தீபத் திருநாளான இன்று ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க காவல்துறை சார்பில் 27 இடங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் ஆர்ச், 16 கல் மண்டபம் மற்றும் பெரிய ரதவீதி மேலரத வீதி கீழ ரத வீதி திருப்பரங்குன்றம் கோவில் செல்லும் வழித்தடம், பழனி ஆண்டவர் கோவில், தர்கா பகுதி மற்றும் கோவில் பின்புறம் உள்ள படிக்கட்டு ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கண்காணிப்பு வசதிக்காக கோவில் வளாகம் கிரிவலப் பாதை பெரியதவிதி கீழ ரதவீதி மேலரத வீதி பதினாறுகள் மண்டபம் பழனி ஆண்டவர் கோவில் சிசிடி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ட்ரோன் மூலம் கண்காணிக்கவும் போலீசார் ஏற்பாடு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம்: வைரத் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

thirupparankundram ther - 2026

மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சிறிய வைரத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்:

மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவினை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும் மாலையில் தங்கமயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், வெள்ளி ஆட்டுக்கடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை 7:30 மணியளவில் தேரோட்டம் துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றம், திருமங்கலம் கள்ளிக்குடி அதனை சுற்றியுள்ள கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மேலும் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பாதை யாத்திரையாக வந்தடைந்தனர்.

பத்தர்கள் இன்று காலையில் தேரோட்டம் விழாவில் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனனர் இந்த சிறிய வைர தேரானது நான்கு ரத வீதிகளில் மட்டும் உலா வந்தது.

முன்னதாக, சுப்ரமணியசாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிறிய வைர தேரில் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் வடம் பிடிக்க ரத வீதிகள் வழியாக தேர் பவனி வந்தது கண்கொள்ளாக் கட்சியாக இருக்கும்.

தொடர்ந்து, இன்று மாலை 6 மணி அளவில் கோயிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக திருவண்ணாமலை பகுதியில் இருந்து வல்லுனர் குழுவினர் வந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

தொடர்ந்து இரவு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை தீர்த்த உற்சவம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

இன்றைய இந்தியாவுக்கு தேவைப்படும் நாகரிக கலந்துரையாடல்!

jaya jaya kasi - 2026

காசி தமிழ் சங்கமம் 4.0 : இன்றைய இந்தியாவுக்கு தேவைப்படும் நாகரிக கலந்துரையாடல்

எழுதியவர்: திரு. சாமு கிருஷ்ண ஷாஸ்திரி, 
தலைவர், பாரதீய பாஷா சமிதி

இந்தியா தனது பண்பாட்டு எழுச்சியையும், மொழி சார்ந்த கவலைகளையும் எதிர்கொண்டு வரும் இந்த தருணத்தில், காசி தமிழ் சங்கமம் (KTS) மிகச் சரியான நேரத்தில் மீண்டும் வருகை தருகிறது. 2025 டிசம்பரில் தொடங்கும் அதன் நான்காவது பதிப்பு, பிராந்திய அடையாளம், மொழிப் பெருமை, தேசிய ஒருங்கிணைப்பு போன்ற விவாதங்கள் கூர்மையாகி, சில சமயங்களில் பிரிவினை உருவாக்கும் நிலைக்கு சென்றுள்ள நேரத்தில் வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், KTS ஒரு திருவிழாவாக மட்டுமன்றி, ஒரு முக்கிய நாகரிகப் பாலமாக திகழ்கிறது. இந்தியாவின் ஒற்றுமை என்பது, நூற்றாண்டுகள் தொடர்ந்துவரும் பண்பாட்டு பாரம்பரியம் என்பதை நாம் மறக்காமல் இருப்பதை நினைவூட்டுகிறது.

பிரிவினைக் காலத்தில் எதிர்சரிவு

கடந்த சில ஆண்டுகளில், மொழிக் கேள்விகள் பொதுமக்கள் விவாதங்களில் பலத்த இடம்பிடித்துள்ளன. பணியாளர் சேர்க்கை விதிகள், போட்டித் தேர்வுகள், கற்பித்தல் மொழி, டிஜிட்டல் தளங்கள் போன்றவை குறித்து பரபரப்பான விவாதங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக சமூக ஊடகங்களில் இவை பிராந்திய மோதல்களாக பெரிதுபடுத்தப்பட்டு, வடக்கு–தெற்கு கலாச்சார முரண்பாடு என ஒரு தவறான தோற்றத்தை உருவாக்குகின்றன. இந்த உணர்ச்சிவசப்பட்ட கதைக்களம், பல நூற்றாண்டுகளாக இடம்பெற்று வந்த உரையாடல்கள், குடிபெயர்வுகள், கல்வி பரிமாற்றங்கள், கலாச்சார இணைவுகள் ஆகியவை இந்திய நாகரிகத்தை உருவாக்கியது என்ற உண்மையை மறைக்கிறது. இவ்வாறு உருவாகும் பிரிவினைக்கு எதிராக, காசி தமிழ் சங்கமம் ஒரு வலுவான எதிர்சரிவாக செயல்படுகிறது. தமிழ் மற்றும் இந்தி பேசும் பிரதேசங்கள் ஒன்றுக்கொன்று எதிர்மாறாக இல்லை; மாறாக, தொடர்ந்து நடக்கும் உரையாடலும் ஒற்றுமையும் என்பதற்கான அழியாத சான்றாக KTS திகழ்கிறது.

பாரம்பரியத்துடன் பயணிக்கும் முன்னேற்றம்

பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் வடிவமைக்கப்பட்டதும், கல்வி அமைச்சகத்தின் தலைமையில், ஐஐடி மெட்ராஸ் மற்றும் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் (BHU) ஆகியவை அறிவியல் இணை பங்காளர்களாக அமைந்து நடத்தப்படுவதுமான காசி தமிழ் சங்கமம், ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத் என்ற எண்ணத்தோடு முழுமையாக ஒத்திசைக்கிறது. இது ஒரு குறியீட்டு நிகழ்வு மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இந்திய சிந்தனையை வடிவமைத்த தமிழ்நாடு மற்றும் காசி எனும் இரு தொன்மையான அறிவு மையங்களுக்கிடையேயான நாகரிக தொடர்பை மறுபடியும் உயிர்ப்பிக்கிறது. தென்னகம்–காசி இணைப்பு ஒரு இன்றைய உருவாக்கமன்று. அது தமிழ்க் கவிஞர்கள், சத்தியச்சிந்தனையாளர்கள், புலவர்கள் ஆகியோரின் ஆன்மிக–அறிவுத் தாயகமாக நீண்ட காலம் இருந்துள்ளது. வரணாசியில் தான் மகாகவி சுப்பிரமணிய பாரதி தமது அறிவுப் பிறப்பை உணர்ந்தார். அத்துடன், உலகப் புகழ் பெற்ற தமிழறிஞர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்துக்கு தலைமை தாங்கிய இடமும் இதுவே. இந்த உயிருடன் இருக்கும் வரலாறு, பிராந்திய தனிமை என்ற எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் பிரிவினை உருவாக்கும் கதைக்களங்களை சவாலுக்கு உட்படுத்துகிறது.

இப்போது மொழி ஏன் முக்கியம்

மொழியானது, மீண்டும் இந்தியாவின் சமூக உரையாடலில் மையப் புள்ளியாக மாறியுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான குடிபெயர்வு அதிகரித்ததும், பல்மொழி பணியிடங்கள் உருவானதும், டிஜிட்டல் வகுப்பறைகள் பெருகியதும், தேசிய மட்டத்தில் தொழில்துறை சந்தை விரிவடைந்ததும் மொழி அறிவு என்பது இப்போது விருப்பம் அல்ல, அத்தியாவசியம் என ஆகி விட்டது. மாநில அடையாள அரசியல் சில இடங்களில் மொழி வரம்புகளை கூர்மைப்படுத்தியிருக்கும் நிலையில், “தமிழ் கற்கலாம் – Learn Tamil” என்ற காசி தமிழ் சங்கமத்தின் புதிய முயற்சி மிகச் சரியான நேரத்தில் வரும் தலையீடாகும். தமிழை ஒரு பிராந்திய மொழி என்று இல்லாமல், தேசிய செல்வம் எனக் கருதுவது, இந்தியாவின் உணர்ச்சி சார்ந்த ஒருங்கிணைப்புக்கு மிகவும் அவசியமானது. இது தமிழ் மட்டும் அல்ல; இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் பொருந்தும் கொள்கை. ஒரு மொழியை கொண்டாடுவது, மற்றொரு மொழியை சிறிதாக்குவதில்லை. அதற்கு பதிலாக, முழு நாட்டின் மொழி அமைப்பையும் வளப்படுத்துகிறது.

காசி தமிழ் சங்கமம் 4.0, இந்த பரிமாற்றத்தை பண்பாட்டு ஒற்றுமையின் மையமாக வைக்கிறது. தமிழ்,  இந்தி,  சமஸ்கிருதம்,  தெலுங்கு,  மலையாளம்,  கன்னடம்,  மராத்தி,  பெங்காலி என இந்தியாவின் அனைத்து மொழிகளையும் ஒரே பாரதிய மொழிக் குடும்பத்தில் அன்பு உறவுகளாக கருத வேண்டும் என்பதை இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரிடம் ஊக்குவிக்கிறது.

பகிர்ந்து கொண்ட அறிவு மரபை மீண்டும் கண்டுபிடித்தல்

காசி தமிழ் சங்கமத்தின் மிக முக்கியமான பங்களிப்பு, வரலாற்றை மனிதராக்கும் அதன் திறன், கலாச்சார அனுபவங்கள், கருத்தரங்குகள், கவிதை வாசிப்புகள், கோவில் தரிசனங்கள், கல்வி பரிமாற்றங்கள் போன்ற வழிகளில், பங்கேற்பாளர்கள் நமது பகிர்ந்து கொண்ட நாகரிக வேர்களை மீண்டும் உணர உதவுகிறது. சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் பல மொழிகளுக்கு இடையேயான அறிவுப் பரிமாற்றத்தின் மூலம் வளர்ந்து வந்தவை என்பதை இது நினைவூட்டுகிறது. அதைப் போலவே, தமிழ் இலக்கணத்தின் தொன்மையான வேர்கள், பாணினியின் மொழியியல் பாரம்பரியத்துடன் ஆழமான உரையாடலை மேற்கொண்டுள்ளன. மேலும், கோவில் கட்டிடக்கலை, இசை, வழிபாட்டு முறைகள், கதைக்கூறும் பண்பாட்டு மரபுகள் ஆகியவற்றில் — வடக்கும் தெற்கும் வேறுபடுவதைக் காட்டிலும் அதிகமாக ஒத்திசைக்கின்றன என்பதை KTS வலியுறுத்துகிறது.

மாறிவரும் இந்தியாவின் தேவைகளை நிறைவேற்றுதல்

இன்று இந்தியா, இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு இயங்கும் மற்றும் இடம்பெயரும் சமூகமாக மாறியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தில்லி, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உயர்கல்வி பெறுகின்றனர். அதே சமயம் இந்தி பேசும் மாணவர்கள் கோயம்புத்தூர், சென்னை, மதுரை போன்ற நகரங்களில் தொழில்நுட்பம், மருத்துவம், கலை போன்ற துறைகளில் கல்வி கற்க வருகின்றனர். நாட்டின் பொருளாதாரம் பல்மொழித் திறன்களை அதிகமாக தேடும் நிலையில், பண்பாட்டு பரிவு வளர்ப்பது இன்று தேசிய மட்டத்தில் அத்தியாவசிய தேவையாகி உள்ளது. அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது.

புரிதலின் மூலம் ஒற்றுமைக்கான வழிக்காட்டி

ஒற்றுமைக்கு ஒற்றுமை தேவை என்றும், புரிதல் மூலம் ஒற்றுமை தேவை என்றும் கூறும் தவறான அனுமானத்தை சங்கமம் சவால் செய்கிறது. KTS இன் ஒவ்வொரு பதிப்பும் உண்மையான உரையாடல் அவநம்பிக்கையைக் குறைக்கிறது, ஒரே மாதிரியான கருத்துக்களை அகற்றுகிறது மற்றும் உணர்ச்சிப் பாலங்களை உருவாக்குகிறது என்பதை நிரூபிக்கிறது. KTS 4.0 தொடங்கவிருக்கும் நிலையில், தமிழைக் கொண்டாடுவது இந்தியா முழுவதையும் வளப்படுத்துகிறது, மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது ஒருவரின் சொந்த அடையாளத்தை வலுப்படுத்துகிறது மற்றும் நமது மொழிகள் போட்டியிடும் குரல்கள் அல்ல, மாறாக இந்திய சிம்பொனியில் குறிப்புகளை ஒத்திசைக்கின்றன என்ற முக்கிய செய்திகளை இது வீட்டிற்கு எடுத்துச் செல்கிறது.