ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
மதுரை திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில், மறைந்த இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் 98வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கிறிஸ்தவ மதங்களில் இருந்து இந்து மதத்தில் மீண்டும் இணைந்தவர்களுக்கு இணைப்பு விழா நடைபெற்றது.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சரவணப் பொய்கையில் கிறிஸ்தவ மதங்களில் இருந்து மதம் மாறிய இந்துக்களுக்கு மீண்டும் இந்து மதத்தில் இணையும் “தாய் மதம் தழுவும் விழா” இணைப்பு விழா நடைபெற்றது.
மதுரை இந்து முன்னணி மாவட்டத் தலைவர் அழகர்சாமி மாவட்டப் பொறுப்பாளர் அரசு பண்டி மற்றும் நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் சார்பில் தாய் மதம் தழுவும் விழா நடைபெற்றது.
அனுப்பானடி பகுதியில், வசித்து வரும் சுமார் 21 குடும்பங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவ மதத்தில் இருந்து மீண்டும் இந்து மதத்தில் இணையும் தாய் மதம் தழுவும் விழா எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கலந்து கொண்டவர்கள் சரவண பொய்கையில் நீராடி பின்னர் சரவணப் பொய்கையில் உள்ள ஆறுமுக சொன்னதில் கந்தசஷ்டி கவசம் படித்து வெற்றிவேல் வீரவேல் என முழங்கி தாய் மதத்தில் இணைந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப தூண். சிக்கந்தர் தர்கா உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்து முன்னணி சார்பில் தாய் மதம் தழுவுவிழா என நிகழ்ச்சி நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பராசக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் வைத்து பத்தாவது தேசிய ஆயுர்வேத மருத்துவ தினத்தை முன்னிட்டு ஜிக்ஞாசா தெற்கு தமிழ்நாடு சார்பில் கருத்தரங்கு மாநாடு நடைபெற்றது.
பராசக்தி கல்லுாரி விலங்கியல் துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவிற்கு கல்லுாரி முதல்வா் அமிர்தவல்லி தலைமை தாங்கினார். கோவை தி ஆரிய வைத்திய பார்மசி என்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் தேவிதாஸ்வாரியர் முன்னிலை வகித்தார். விலங்கியல் துறை தலைவர் வசந்தி அனைவரையும் வரவேற்று பேசினார். செல்வி கவிமணி இறைவணக்கம் பாடினார்.
கோவை தி ஆரிய வைத்திய பார்மசி என்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு தேவிதாஸ் வாரியர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார். விழாவில் வல்லுனர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் துறையை சார்ந்த சிறந்த ஆயுர்வேத மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் .’விவேகா ‘என்று பெயரிடப்பட்டிருந்த ‘ஆயுர் எக்ஸ்போ’என்ற கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் 200க்கும் அதிகமான மூலிகை தாவரங்கள் மற்றும் 300க்கும் அதிகமான மூலிகை கச்சா பொருட்கள் பல்வேறு விதமான சிறுதானியங்கள் அவற்றின் உபயோகக் குறிப்புகள் பாரம்பரிய அரிசி வகைகள் தானிய வகைகள் அறுவை சிகிச்சை எந்திரங்களின் மாதிரிகள் ‘ரசசாலா‘ என்று சொல்லப்படக்கூடிய பண்டைய வேதியியல் ஆய்வு உபகரணங்கள் மாதிரியாக வைக்கப்பட்டிருந்தது.
கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட மூலிகை தொடர்பான விளக்கப் படங்கள் மிகவும் நேர்த்தியாக பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
மேலும் இந்த கண்காட்சிக்கு முத்தாய்ப்பாக நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழிலும் வடமொழியிலும் வெளியிடப்பட்ட மிகவும் தொன்மையான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பல நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு ஆயுர்வேதம் தொடர்பான விளக்க செய்திகள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் சிறு சிறு நூல்களும் விநியோகிக்கப்பட்டன.
தென் தமிழகத்தைச் சார்ந்த ஆயுர்வேத மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு நிபுணர்களின், பல்வேறு ஆய்வு நூல்களில் பதிவு ஏற்றம் செய்யப்பட்டதுமான நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன .
மேலும் இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக குற்றாலம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையின் பகுதிகளில் கிடைக்க பெறும் அரிய மூலிகைகளும் அன்றாடம் நாம் பயன்படுத்தக்கூடிய பல்வேறு நோய்களுக்கான மூலிகைகளும் கச்சா பொருட்களும் மிகவும் அழகாக இடம் பெற்றிருந்தன . முக்கியப் பகுதியாக ‘விவேகா ‘என்ற ‘வெப்சைட் ‘ஒன்று பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது .
இந்த வெப்சைட்டில் பல்வேறு விதமான மூலிகைகளை பற்றிய தரவுகளும் மேலும் ஆயுர்வேத மருத்துவ நிபுணர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் நூற்றுக்கணக்கான தொன்மையான ஆயுர்வேத மருத்துவ நூல்களும், மூலிகை செடிகள் பற்றிய விளக்க பக்கங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.
முன்னதாக விழாவினை சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவங்கி வைத்தார்கள் கல்லூரியின் முதல்வரும் விலங்கியல் துறையின் துறையின் தலைவரும் ஒருங்கிணைப்பாளரும் பிற விரைவுரையாளர்களும் வல்லுநர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்த விழாவை ஒட்டி விவேகா 2025 என்ற சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவர்களும் இமானுவேல் அரசர் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்களும் மரியா ஆயுர்வேத கல்லூரி மாற்றும் மாணவர்களும் ஈரோடு நந்தா கல்லூரி மாணவர்களும் பெருந்திரளாக பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.
விழா ஏற்பாடுகளை செங்கோட்டை ஆயுர்வேத மருத்துவர் ஹரிஹரன் ஒருங்கிணைத்திருந்தார். இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பங்கேற்ற ஆய்வு கட்டுரை மற்றும் ஆய்வு விளக்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. முடிவில் நவீன் நன்றி உரையாற்றினார்.
மதுரை, உசிலம்பட்டி அருகே பெருமாள் கோவில் செல்லும் பாதையை சரி செய்வதற்கு மண் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீர்சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எருமார்பட்டி கிராமத்தின் அருகில் அமைந்துள்ள இந்து அறநிலை துறைக்கு சொந்தமான பழமையான பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இந்நிலையில் , 16 ஆண்டுகளுக்குப் பின் பால் அபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் கோவிலை சுற்றி உள்ள பகுதி குண்டும் குழியுமாக உள்ளதால் அதனை சரி செய்வதற்கு கிராம மக்கள் டிராக்டர் மூலம் அருகில் உள்ள ஓடைகளில் மண்ணை அள்ளி சரி செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வருவாய் துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, கோவில் திருப்பணிக்கு மண் அள்ளிய டிராக்டர் வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் எழுமலை- உசிலம்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் எருமார்பட்டி என்ற இடத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த எழுமலை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுபோன்ற கோவில் திருப்பணிக்கு அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் எனவும், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து வாகனம் பறிமுதல் செய்யப்படாது என கூறியதைத் தொடர்ந்து , கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.
இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அவன் இன்னும் திருந்தல மாமா என்பார்களே நம் பக்கத்தில், அதுபோலான வேலையை பார்த்து வைத்து இருக்கிறது அமெரிக்க டிரம்ப் நிர்வாகம்.
அமெரிக்கவுக்குள் உள்நுழைய இருக்கும் H1B விசாவிற்கான கட்டணம் 218 டாலர்களில் இருந்து ஜஸ்ட் ஒரு லட்சம் டாலர்கள் உயர்த்தி இருக்கிறார்கள். அத்தோடு கூடவே இந்தியா மீதான 50% வரி விதிப்பை 25% எனும் அளவிற்கு திரும்ப பெற இருப்பதாக அதிரடி காட்டி இருக்கிறார்கள். சரி அது எப்போது என்றால், உடனடியாக இல்லை நவம்பர் மாதத்தில் இருந்து தான் இந்த வரிவிலக்கு என்கிறார்கள்.
ஏன் இத்தனை தகிடுதத்தங்கள்?
எல்லாம் மூன்று கால்கள் வகையறா சமாச்சாரம் தான். அதாவது அவர் பிடித்த முயலுக்கு! சரி என்னதான் செய்ய நினைக்கிறார் டிரம்ப்? அது அவருக்கே தெரியவில்லை என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்!
ஏன்? இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நண்பர் என்றவர், தனது கூட்டாளியாக உலக அரங்கில் காட்ட நினைக்கிறார். அதற்கு நம் இந்திய தரப்பில் எந்த ஒரு எதிர்வினையும் இல்லை. இது நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே வெளிப்பட்டது. டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்ள, தலைகீழ் நின்று கேட்டு பார்த்தும் நாசூக்காக நம்மவர் மறுத்து இருக்கிறார் அன்று. இது அந்த சமயத்தில் இருந்தே நீறு பூத்த நெருப்பாக கனன்று வந்தது.
அமெரிக்க அதிபராக வெற்றி பெற்று சமயத்தில் உடனடியாக வாழ்த்துக்களை தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி நிதானமாக நடந்து கொண்டார் இவர்.
இதனையும் குறித்து கொண்டது டிரம்ப் தரப்பில். இந்த பதவி ஏற்பு விழாவிற்கு நம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தான் கலந்து கொண்டார். ஆனால் அங்கு வைத்தே ஒரு திரிசமன் வேலையை பார்த்து இருந்தனர் டிரம்ப் தரப்பில். இது அவருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. காலிஸ்தான் இயக்க தீவிரவாதி என அறியப்பட்ட குருபத்வந்த் சிங் பன்னூன் என்பவரை பகிரங்கமாக விழாவில் கலந்து கொள்ள அனுமதித்து, நம் இந்திய தரப்பில் நீண்ட நாள் கோரிக்கையான அவனை அவனது தீவிரவாத நடவடிக்கைகளின் காரணமாக இந்தியாவிடம் ஒப்படைக்க கோரியதை கிடப்பில் போட்டனர். போதாக்குறைக்கு அவனை கொல்ல முயன்றதாக இந்தியர் இருவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றங்களில் வரை சென்றது. அமெரிக்க தரப்பில் இது இந்திய ரா வின் திட்டமிடலில் நடைபெற்ற ஒன்று என்றனர்.
இத்தனைக்கும் இந்திய அமெரிக்க இடையே கைதிகள் பரிமாற்ற சட்டம் அமலில் இருக்கிறது. ஆன போதிலும் அமெரிக்க அரசின் நிர்வாகம் அவனுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது.
முதல் கோணல் முற்றும் கோணல்!
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்பு விழாவிற்கு சென்ற நம் ஜெய்சங்கருக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், அனைவரும் எழுந்து நின்று டிரம்ப்புக்கு மரியாதை செய்த சமயத்தில் இவர் மாத்திரமே அமர்ந்து இருந்தது அன்றே பெரும் பேசுபொருள் ஆனது. போதாக்குறைக்கு அவர் பார்க்க இவர் கால்மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தது டிரம்ப்பை முகம் சிவக்க வைத்தது. இன்றளவும் இவையெல்லாம் இணையத்தில் காணக் கிடைக்கிறது. ஜனவரி மாதம் 20 நடந்தது இன்றைய செப்டம்பர் மாதம் 20 வரையில் இன்னமும் வீரியம் குறையாமல் முறைத்துக் கொண்டு தான் நிற்கிறார் அவர்.
இதனிடையே நம் இந்திய பிரதமரின் அமெரிக்க சுற்றுப் பயணத்தில் நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள அமெரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் F404 மற்றும் F414 போர் விமான இஞ்சின்களுக்கான விற்பனையை துரிதப்படுத்திய கோரிக்கை இன்னமும் அப்படியே தான் இருக்கும் படி பார்த்துக் கொண்டு வருகிறது டிரம்ப் தரப்பில்.
இத்தனைக்கும் நிர்ணயம் செய்யப்பட்ட காலக் கெடுவை தாண்டி 36 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்பதை சுட்டிக் காட்டியும் சட்டை செய்யவில்லை அவர்கள். இது தான் ஆப்ரேஷன் ஸிந்தூர் சமயத்தில் நம் இந்திய தரப்பில் வெளிப்பட்டது என உலக வல்லுநர் பலரும் அவதானிக்கிறார்கள்.
எப்படி?
முதலில் ஆப்ரேஷன் ஸிந்தூர் பின்னணியில் சுமார் 400 பொறியாளர்களின் அயராத முயற்சியினால் உண்டாக்கப்பட்ட ஒன்று. அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கிய F 16 விமானங்கள் நிலைநிறுத்தி வைத்திருக்கும் ஷெல்டர்களை குறி வைத்ததை மோப்பம் பிடித்த அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இடம் மாற்றிக் கொண்டே வந்தது. இந்திய தரப்பில் பொறுமையாக அவை அனைத்தையும் கணக்கிட்டுக்கொண்டே வந்திருக்கிறார்கள். உத்தரவு கிடைத்ததும் துல்லியமாக அடித்து இருக்கிறார்கள். ஐந்து விமானங்களும் காலி!
இவையெல்லாம் போதாதென்று அமெரிக்கா பின்வாசல் வழியாக வழங்கியிருந்த அணுஆயுத விவகாரங்களை அவர்கள் யோசனைப் படி சேமித்து வைத்திருக்கும் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மலையடிவாரத்தை அதிரடியாக தாக்கியது நம் இந்திய தரப்பில். சேமிப்பு கிடங்கில் சேதம்!
ஆடிப் போனது அமெரிக்க நிர்வாகம். உலகமும் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒருத்தரும் கண்டனமும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் அதிகாரபூர்வமாக பாகிஸ்தானிடம் அவையெல்லாம் இல்லை என்பதை நன்கு உணர்ந்து இருந்தனர் பலரும். இதுதான் மஹா சிக்கலை உண்டாக்கி இருந்தது டிரம்ப் நிர்வாகத்திற்கு.
படு சாமர்த்தியமான விஷயத்தை நம்மவர்கள் செய்திருந்தனர் அந்நாளில். போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொள்ள ஆலாய்ப் பறந்த அமெரிக்காவை ஜஸ்ட் லைக் தட் டீல் செய்தது நம் இந்திய தரப்பு.
‘அடடா. நாட்டை பாதுகாக்கின்ற பொறுப்பை இந்திய ராணுவத்திடம் கொடுத்து விட்டோமே! நீங்கள் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள் பாகிஸ்தானை‘,’ என்றனர். வரலாற்றில் இது புதிய முறை. அசட்டையாக அமெரிக்கா இதில் உள்நுழைந்து பாகிஸ்தானை விட்டுப் பேசியது. தடாலடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் தன்னால்தான் என விடாமல் அலப்பறை எல்லாம் கொடுத்துக் கொண்டே இருந்தது.
விஷயம் என்னவென்றால், போர்ப் பிரகடனம் செய்யாமல் நம் இந்தியா தனது ராணுவத்திற்கு நாட்டைப் பாதுகாக்கின்ற பொறுப்பை ஒப்படைத்தது. அவர்கள் தன்னிச்சையாக வேண்டிய விஷயங்களை கவனித்துக் கொண்டனர். அப்படித்தான் இது பார்க்கப்படும். இதில் மற்றோர் நாடு தலையிடும் பட்சத்தில் அவர்கள் தான் போர்ப் பிரகடனம் செய்ததாக ஆகும்.
இந்த நுட்பத்தில் அன்றைய இக்கட்டான சூழ்நிலையிலும் மதிநுட்பம் வாய்ந்த திட்டமிடலில் மேற்கொண்டனர் நம் இந்திய தரப்பில். மிக மிக தாமதமாக இவற்றை எல்லாம் உணர்ந்த டிரம்ப் தரப்பில் கை பிசைந்து கொண்டு நிற்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
உலகறிந்த தீவிரவாத இயக்கம் மற்றும் அதன் நிர்வாகிகள் அத்தனை பேரும் பாகிஸ்தானில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்படவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த நிகழ்விலும் சரி, பாகிஸ்தானிய அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் சீருடையில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களை அமெரிக்கா ஆதரிக்கிறது. அப்படி என்றால் அமெரிக்கா தீவிரவாதிகளுக்கு நேரடியாக ஆதரவு தருவதாக சர்வதேச அளவில் கொண்டு செல்ல முடியும் என்பதை நம் இந்திய தரப்பில் சுட்டிக் காட்டியதும் ஆடிப் போனது டிரம்ப் நிர்வாகம்.
ஏனெனில் இவையெல்லாம் அமெரிக்க செனட் சபையில் அமெரிக்க நீதிமன்றங்களில் தடைசெய்யப்பட்ட தண்டனைக்குரிய குற்றமாகும். வழக்கு என ஒன்று தொடர்ந்தால் டிரம்ப் ஜெயிலுக்கு போவதை யாராலும் தடுக்க முடியாது போகலாம் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்! இவையெல்லாம் வெள்ளை மாளிகையை கதி கலங்க வைத்திருக்கிறது.
இது போல் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் சுமார் 17 நிரூபிக்க முடிந்த குற்றச்சாட்டுகள் அவர் மீது இருக்கிறது. கட்சியைத் தடை செய்யும் விவகாரமான சில குற்றச்சாட்டுகளும் இதில் அடங்கும் என்கிறார்கள். இவையெல்லாம் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யும் அளவில் பூர்ணமாக நிறைய ஆதாரங்களுடன் பிரபல இந்திய வம்சாவளியினர் நான்கு வழக்கறிஞர்கள் தயார் நிலையில் இருப்பதாக விஷயம் அறிந்த வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். இனி அமெரிக்க பூச்சாண்டி எடுபடாது என்கிறார்கள் அவர்கள்.
இவற்றை எல்லாம் உணர்ந்த டிரம்ப் நிர்வாகம் உலகின் இஸ்லாமிய நாடுகளில் உள்ள ஒரேயொரு அணு ஆயுத நாடான பாகிஸ்தானை சவுதி அரேபியாவின் கைகளில் பிணைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.
பாகிஸ்தான் வசம் உள்ள அணு ஆயுதங்கள் மீது ஒரு கண் வைத்து இருக்கும் துருக்கி அதிபர் ரெசிப் தையுப் எர்துவான் (எர்டோகன்) கைகளுக்கு போகாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் மற்றும் நிர்பந்தமும் அமெரிக்காவுக்கு உண்டு.
இடியாப்பம் சிக்கலில் சிக்கி சின்னா பின்னம் ஆகும் நிலையில் அமெரிக்க அரசு நிர்வாகம் திண்டாடிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையிலும் இந்தியாவிடம் இறங்கி விடக் கூடாது என்பதற்காக ஈரானிய சபஹார் துறைமுகத்தில் இந்திய முதலீட்டு திட்டங்களுக்கு தடுக்கும் விதத்தில் சில தகிடுதத்தங்களைச் செய்து சீனாவை குஷிப் படுத்திப் பார்க்க, கண்டுகொள்ளவில்லை ட்ராகன் இம்முறை.
இருண்டு கிடக்கிறார் டிரம்ப். போகப் போக படு பாதாளத்தில் அவர் சரிவதை நம் கண்கூடாகப் பார்க்க இருக்கிறோம். இங்கு உள்ளவர்கள் பலருக்கும் இது புரியாமல் அமெரிக்க வர்த்தகம் நரேந்திர மோடியால் போயிற்று என கதை விட ஆரம்பித்து இருக்கிறார்கள்.
ஒன்று மட்டும் நிச்சயம்! அமெரிக்காவை தாங்கிப் பிடிக்க இன்னும் எத்தனை கென்னடி வந்தாலும் இனி அது அத்தனை சுலபமாக இருக்கப் போவதில்லை! அதுபோலவே அமெரிக்க வரலாற்றில் மிக மிக தூற்றப்படும் அதிபராக டொனால்ட் டிரம்ப் மாற இருக்கிறார். அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது போகலாம்.
நம் இந்திய ராஜதந்திர நடவடிக்கைகள் அத்தனை நேர்த்தியான ஒன்று. இனி எந்த நாளும் இந்தியா இறங்கிப் போகாது. அமெரிக்கா இறங்கி வருவதைத் தவிர வேறு மார்க்கமே அவர்களுக்கும் இல்லை என அடித்துச் சொல்லலாம்.
மதுரை விமான நிலையத்திலிருந்து புதிதாக புனே,டெல்லி, மும்பைக்கு கூடுதல் விமான சேவை ஏற்படுத்த திட்டம் தயார் – என்று, மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.
மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவை தயார் நிலையில் உள்ளது. மேலும், இரவு நேரத்தில் விமான நிலையத்தில் பணியாளர்கள் உள்ளனர். ஆகையால், விரைவில் வெளிநாட்டு சேவைகள் வர வாய்ப்புகள் அதிகம்__ முத்துக்குமார் மதுரை விமான நிலைய இயக்குனர்
மதுரை விமான நிலையத்தில் இன்று விமான பயணிகள் சேவை தினம் கொண்டாடப்பட்டது. அதில், விமான பயணிகளை திலகமிட்டு வரவேற்றனர். மேலும், பரதநாட்டியம், மரக்கன்று நடுவிழா, ரத்ததான முகாம், கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் கூறுகையில்,
பயணிகள் சேவை தினம் (யாத்திரி சேவா திவஸ்) மதுரை விமான நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி மூலமாக மதுரை விமான நிலையத்தில் பயன்களை காண வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து, அக்டோபர் 26ஆம் தேதி முதல் குளிர்கால அட்டவணை துவங்குகிறது. அதில் புதிதாக சேவைகள் தொடங்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து புனேக்கு புதிதாக சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல, இரவு நேரங்களில் நியூ டெல்லிக்கு விமான சேவைக்கான திட்டமும், நேவி மும்பைக்கும் கூடுதலாக விமான சேவை இயக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
சர்வதேச விமான சேவைக்கு தற்போது அழைப்பு இல்லை. ஆனாலும், மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவைக்கு தயார் நிலையில் உள்ளது இரவு நேர சேவையில் பணியாளர்கள் உள்ளனர். ஆகையால், விரைவில் வெளிநாட்டு விமானங்களின் சேவைகள் வர வாய்புகள் உள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் குறித்த கேள்விக்கு? பல்வேறு விமான நிறுவனங்களிடம் பேசி எல்லோரும் அவர்கள் அனுமதி கிடைத்தால் சேவையில் தொடர வாய்ப்புகள் அதிகம்.
கார்கோ (சரக்கு) சேவைகள் குறித்த கேள்விக்கு, தற்போது ஸ்ரீலங்கா அபுதாபி துபாய் ஒன்றை நகரங்களுக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து கார்கோ சேவைகள் செயல்பட்டு வருகிறது. மேலும், வெளிநாட்டு சேவைகள் வரும்போது கார்கோ சேவைகள் விரிவுபடுத்தப்படும் என மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் கூறினார் .
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் பக்தி பூர்வமாக வழிபாடுகள் பிரதான பூஜை சடங்குகள் தந்திரி மேல்சாந்தி தேவஸம்போர்டு இணைந்து நடத்தினாலும் சபரிமலை மீண்டும் ஒரு அரசியல் போர்க்களமாக மாறுகிறது என்றே தோன்றுகிறது.
கேரள உயர்நீதிமன்றம் உலகளாவிய ஐயப்ப சங்கமத்திற்கு செப்20 ல் நடத்த ஒப்புதல் அளித்தது, தேர்தலுக்கு முன்னதாக சபரிமலை தொடர்பான அரசியல் பதட்டங்களைத் தூண்டியது செப்டம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் உலகளாவிய ஐயப்ப சங்கமம் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை ஈர்த்துள்ளது.
கேரள உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருக்கலாம், ஆனால் செப்டம்பர் 20 ஆம் தேதி பம்பாவில் நடைபெறும் திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் (TDB) உலகளாவிய ஐயப்ப சங்கமத்தின் தலைவிதி இன்னும் ஒரு நூலில் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு புதிய சவாலை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் தலையிட்டதால், ஒரு பிரமாண்டமான பக்தி மாநாடு என்று கூறப்பட்டது கேரளாவின் பரபரப்பான அரசியல் வெடிப்புப் புள்ளியாக வேகமாக மாறி வருகிறது.
காகிதத்தில், சங்கமம் என்பது சபரிமலையை ‘உலகளாவிய யாத்திரை மையமாக’க் காட்டும் ஒரு பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டமாகும், இதில் உலகம் முழுவதிலுமிருந்து 3,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று இடங்களில் நடைபெறும் இந்த மாநாடு, சபரிமலை மாஸ்டர் பிளான், ஆன்மீக சுற்றுலா சுற்றுகள் மற்றும் கூட்ட மேலாண்மை குறித்து விவாதங்களை நடத்துவதாக உறுதியளிக்கிறது. ஆனால் சடங்குகளுக்கு அப்பால், இந்த நிகழ்வு கேரகடுமையான அரசியல் போர்க்களங்களில் ஒன்றான சபரிமலை குறித்த சர்ச்சையை மீண்டும் தூண்டியுள்ளது.
நேரம் குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சித் தேர்தல்கள் நெருங்கி வருவதாலும், சட்டமன்றத் தேர்தல்கள் வெகு தொலைவில் இல்லாததாலும், அரசியல் கோணத்தில் சந்தேகம் தவிர்க்க முடியாதது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [CPI(M)] தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசாங்கத்தை பாசாங்குத்தனமாக குற்றம் சாட்டியுள்ளது, மேலும் 2018 ஆம் ஆண்டு பெண்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு எதிரான போராட்டங்களின் போது பக்தர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை இன்னும் திரும்பப் பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. சங்க பரிவார், அதன் பங்கிற்கு, சங்கமத்தை கோயிலை அரசியல்மயமாக்கும் முயற்சியாகக் கண்டித்துள்ளது, பெருநிறுவன நிதியுதவி மற்றும் நன்கொடையாளர்களுக்கான ‘சலுகை அட்டைகள்’ குறித்து எச்சரிக்கை எழுப்பியுள்ளது.
சங்கத்தின் இணையான உச்சி மாநாடு ஆனால், 2018 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தின் பெண்கள் நுழைவு குறித்த தீர்ப்பு பெரும் எதிர்ப்பைத் தூண்டியதைப் போலல்லாமல், சங்க பரிவார் அந்த சீற்ற அலையை மீண்டும் உருவாக்க போராடியது. அதற்கு பதிலாக, ஐயப்ப புராணத்தின் மையமான பந்தளத்தில் ஒரு இணையான உச்சிமாநாட்டை அறிவித்துள்ளது. அந்த எதிர் நிகழ்வு அளவைப் பொருத்த முடியுமா அல்லது தேசிய கவனத்தை ஈர்க்குமா என்பது இன்னும் தெரியவில்லை.
மாநில அரசு, நிகழ்வின் ஒரு ஒருங்கிணைப்பாளர் மட்டுமே என்று வலியுறுத்துகிறது. இருப்பினும், முதலமைச்சர் பினராயி விஜயன் சங்கமத்தைத் தொடங்கி வைக்கும் முடிவு அந்த நடுநிலைமை கூற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. விமர்சகர்களுக்கு, இந்த நடவடிக்கை பாரம்பரியமாக பாஜகவுக்கு ஆறுதல் மண்டலமாக இருக்கும் இந்து வாக்குத் தளத்தை ஆக்கிரமிப்பதற்கான திட்டமிட்ட முயற்சியைக் குறிக்கிறது.
வளர்ச்சி முன்னணியில், சங்கமம் பெரிய வாக்குறுதிகளை அளிக்கிறது, ஆனால் அவை களத்தில் யதார்த்தமாக மாறுமா என்பது வேறு விஷயம். சபரிமலை மாஸ்டர் பிளானை உச்ச நீதிமன்றம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் ஏற்கனவே பரிசீலனை செய்துள்ள நிலையில், இந்த மாநாடு வரைபடத்தை மீண்டும் எழுதுவதற்கு அதிக வாய்ப்பில்லை. இருப்பினும், இந்த நிகழ்வு சாதிக்கக்கூடியது சமூக சமன்பாடுகளின் மறுசீரமைப்பு மட்டுமே.
NSS, SNDP இன் பதில் நாயர் சர்வீஸ் சொசைட்டியின் (NSS) நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பெண்கள் நுழைவு எதிர்ப்புப் போராட்டத்தில் ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த NSS, அதன் தொனியை மென்மையாக்கியுள்ளது, நிகழ்வு அரசியல்மயமாக்கப்படாமலும், மலைக்கோயிலின் வழக்கம் தொடப்படாமலும் இருக்கும் வரை ஒரு பிரதிநிதியை அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளது. CPI(M)-ஐப் பொறுத்தவரை, இந்த அளவிடப்பட்ட பதில், NSS தலைமையுடனான உறவுகளை சரிசெய்ய பல ஆண்டுகளாக திரைக்குப் பின்னால் இருந்து எடுக்கப்பட்ட முயற்சியை பிரதிபலிக்கிறது.
தமிழ்நாடு வாரியம், அதன் பங்கிற்கு, இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டது, தமிழ்நாடு முதலமைச்சர் M.K. ஸ்டாலினை அவர் விலகிய பிறகு அழைக்கும் யோசனையைக் கூட ஒதுக்கி வைத்துவிட்டு, அதன் மூலம் களத்தைத் திறந்து வைத்தது.
ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன (SNDP) யோகம் மிகவும் உற்சாகமாக உள்ளது. அதன் பொதுச் செயலாளர் வெள்ளப்பள்ளி நடேசன் சபரிமலையை சர்வதேச யாத்திரை மையமாக மாற்றும் சங்கமத்தின் தொலைநோக்குப் பார்வையை பகிரங்கமாக ஆதரித்துள்ளார். LDF-க்கு அவர் நீண்டகாலமாக அருகாமையில் இருப்பதும், சிறுபான்மையினர் குறித்த அவரது கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியபோதும் அரசாங்கத்தின் ஆதரவும் காரணமாக அவரது ஆதரவு ஆச்சரியமல்ல.ஒரு மௌனம் இருப்பினும், உண்மையான சஸ்பென்ஸ் பந்தளத்தில் உள்ளது. ஐயப்பனின் புராணக்கதையுடன் அதன் வரலாற்றுத் தொடர்பைக் கொண்ட அரச குடும்பம் வேலியில் உள்ளது. அவர்களின் மௌனம் மூலோபாயமானது மற்றும் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. 2018 ஆம் ஆண்டில், பெண்கள் நுழைவை அவர்கள் கடுமையாக எதிர்த்தது பந்தளத்தில் சங்கத்தின் எழுச்சியைத் தூண்டியது, பாஜகவுக்கு உள்ளூர் பெரும்பான்மையையும் கூட வழங்கியது. இந்த முறை, அவர்களின் தயக்கம் சங்கத்தை கவலையடையச் செய்துள்ளது, இடதுசாரிகள் அமைதியாக நம்பிக்கையுடன் உள்ளனர்.
கேரளாவில், ஐயப்பனின் சன்னதியைப் போல சில தளங்கள் குறியீட்டு மற்றும் தேர்தல் பலத்தை வழங்குகின்றன. சங்கமம், அதன் இறுதி அளவு எதுவாக இருந்தாலும், மாநிலத்தின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் களமாக சபரிமலையின் நீடித்த பங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ், சசிகலா, டிடிவியை அதிமுகவில் சேர்க்கும் அமித்ஷா மேற்கொண்ட சமரச முயற்சி தோல்வியடைந்ததாகவே அரசியல் வட்டாரத்தில் அலசப்படும் தலைப்பு செய்தியாக இன்று உள்ளது.அமித்ஷா-எடப்பாடி சந்திப்பில் நடந்தது என்ன?பரபரப்பு தகவல்கள்! பலவும் வெளியாகி வருகின்றன
அதிமுகவில் இருந்து பிரிந்த தலைவர்களை சேர்க்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் விவகாரத்தை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை டெல்லி சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இரவு சந்தித்து பேசினார்.
அப்போது, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரை அதிமுகவில் மீண்டும் சேர்த்து கட்சிய பலப்படுத்த அமித்ஷா எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தி பேசியதாகவும் இதற்கு எடப்பாடி இவர்களை சேர்க்க முடியாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக எடப்பாடி கூறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பேச்சு தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல்வேறு அணிகளாக உடைந்து கிடக்கிறது. ஆனாலும், அதிமுகவை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி கடந்த 9 ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் என 10 தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்துள்ளார்.
இதனால் பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் இணைத்து அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். ஆனாலும், எடப்பாடி இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
தமிழகத்தில், 2021ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அதிமுக பாஜ கூட்டணி தோல்வியை சந்தித்தது.இதையடுத்து 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக – பாஜ கூட்டணி உடைந்தது.
அதிமுக தனித்து போட்டியிட்டு தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. சில தொகுதிகளில் 3 அல்லது 4வது இடத்துக்கு அதிமுக தள்ளப்பட்டது.
இருந்தபோதும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வரும் ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோர் பாஜ கூட்டணியில் இணைந்து, சுயேச்சையாக ராமநாதபுரம் மற்றும் தேனியில் போட்டியிட்டனர்.அந்த தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி, இரண்டாம் இடமும் பிடித்தனர். இதனால் அவர்கள் மீதான கோபம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகரித்தது.
இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்று பாஜ திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதன் பலனாக அதிமுக – பாஜ கூட்டணி உருவாகியுள்ளது.அந்த கூட்டணியை வலுப்படுத்த பாஜ தலைமை தீவிரமாக செயல்பட்ட நிலையில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்க முடியாது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்தார்.
தொடர்ந்து கூட்டணியும் உறுதி செய்யப்பட்ட நிலையில், தங்களை புறக்கணிப்பதாக கூறி ஓபிஎஸ், டிடிவி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினர். அவர்கள் மீண்டும் வரவேண்டும் என பாஜ வலியுறுத்தி வருகிறது.இது ஒருபுறம் இருக்க, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் வலியுறுத்தினார். எடப்பாடிக்கு 10 நாள் கெடுவும் விதித்தார்.
இதனால் எடப்பாடி பழனிசாமி கோபம் அடைந்து, செங்கோட்டையனின் மாவட்ட செயலாளர் பதவி உள்ளிட்ட கட்சி பதவிகளை பறித்தார். அவரது ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டது.இதை தொடர்ந்து செங்கோட்டையன் கடந்த வாரம் திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார்.டெல்லியில் பாஜ மூத்த தலைவரும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
அப்போது, தமிழக அரசியல் நிலவரம், அதிமுக உட்கட்சி பிரச்னை, அதிமுக – பாஜ கூட்டணியால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.டெல்லியில் இருந்து திரும்பிய செங்கோட்டையன், விரைவில் நல்லது நடக்கும் என்று கூறினார். செங்கோட்டையன் விதித்த கெடுவும் நேற்று முன்தினத்துடன் முடிந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் திங்கட்கிழமை இரவு சென்னையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.அப்போது, “ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிலர் கட்சியை கவலைக்கிடமாக்கி, ஆட்சியை கவிழ்க்க பார்த்தார்கள். அதை காப்பாற்றி கொடுத்தவர்கள் மத்தியில் இருப்பவர்கள். நன்றி மறப்பது நன்றன்று. எனவே நன்றியோடு நாங்கள் இருக்கிறோம். ஆட்சி அதிகாரத்தைவிட தன்மானமே முக்கியம். இம்மியளவுகூட விட்டு கொடுக்க மாட்டேன். சில பேரை கைக்கூலியாக (ஓபிஎஸ், டிடிவி.தினகரன், செங்கோட்டையன்) வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டு கொண்டு இருக்கிறீர்கள்.
அந்த கைக்கூலிகள் யார் என்று அடையாளம் காட்டி விட்டோம். அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும். சிலர் அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஓட்டு போட்டார்கள்.
ஆனால் அவர்களை மன்னித்து, துணை முதல்வர் பதவி கொடுத்தோம். மீண்டும் அவர்கள் திருந்தியபாடில்லை. அதிமுகவின் கோயிலான கட்சி அலுவலகத்தை அடித்து, உடைத்தார்கள். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டுமா?இன்னொருவர் அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்கு 18 எம்எல்ஏக்களை கடத்திக் கொண்டு போனார். அவர்களையும் கட்சியில் சேர்க்க வேண்டுமா? அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் நடுரோட்டில் தான் நிற்பார்கள்” என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியது குறிப்பிடத்தக்கது.
இப்படி பேசிவிட்டுத்தான் சில மணி நேரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு, நேற்று திடீரென டெல்லிக்கு சென்றார்.அமித்ஷாவின் அவசர அழைப்பை ஏற்றுதான் எடப்பாடி டெல்லி சென்றதாக கூறப்படுகிறது.
செவ்வாய் அதிகாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி, அங்கு தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுத்த பின் நேற்று பகல் 12 மணிக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமியும் ராதாகிருஷ்ணனும் ஒன்றாக மதிய உணவு அருந்தினர். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்பிக்கள் சி.வி.சண்முகம், இன்பதுரை ஆகியோர் உடனிருந்தனர்.
இதை தொடர்ந்து நேற்று இரவு 8 மணிக்கு டெல்லியில் பாஜ மூத்த தலைவரும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி இன்னோவா காரில் சென்றார்.பின்னர் அமித்ஷாவை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினார். ஆரம்பத்தில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை, சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமி மட்டும் தனியாக 20 நிமிடம் ஆலோசனை நடத்தினர்.இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம், அதிமுக – பாஜ கூட்டணியில் இடம் பெற வேண்டிய கட்சிகள், எவ்வளவு சீட்களில் போட்டியிடலாம். கூட்டணி அமைச்சரவை, பிரிந்து சென்ற தலைவர்களை இணைப்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது, அமித்ஷாவின் கோரிக்கையை எடப்பாடி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. தனது நிலைப்பாட்டை அமித்ஷாவிடம் திட்டவட்டமாக எடப்பாடி நேற்று கூறி விட்டதாகவும் தெரிகிறது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி திட்டவட்டமாக கூறியதாகவும், ஆனால் அமித்ஷா எடப்பாடியை எச்சரிக்கும்விதமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அமித்ஷா வீட்டில் இருந்து வெளியில் வந்த எடப்பாடி பழனிசாமி, நிருபர்களை சந்திக்காமல் பென்ஸ் காரில் முகத்தை மறைத்துக் கொண்டு தமிழ்நாடு இல்லத்துக்கு சென்று தங்கினார். இன்று தமிழகம் திரும்புகிறார்.ஆனால் இருவர் சந்திப்பின்போது நடந்த தகவல்கள், ரகசியம் காக்கப்படுவதால், அதிமுக-பாஜவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.ஓபிஎஸ், சசிகலா, டிடிவியை அதிமுகவில் சேர்க்கும் அமித்ஷா மேற்கொண்ட சமரச முயற்சி தோல்வியடைந்ததாகவே அரசியல் வட்டாரத்தில் அலசப்படும் தலைப்பு செய்தியாக இன்று உள்ளது.அமித்ஷா-எடப்பாடி சந்திப்பில் நடந்தது என்ன?பரபரப்பு தகவல்கள்! பலவும் வெளியாகி வருகின்றன
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் கணவன் மனைவி உள்ளிட்ட 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தூர் அருகே கங்கர் செவல்பட்டி கிராமத்தில் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான மினி நாக்பூர் உரிமம் பெற்ற திவ்யா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 30 மேற்பட்ட அறைகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு உற்பத்தி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது பேன்சிரக பட்டாசு தயாரிக்க தேவையான ரசாயன மூலப் பொருட்களை கலவை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு அறைகள் தரைமட்டமானது.
இதில் ரசாயன மூலப் பொருட்களை அளவை செய்து கொண்டிருந்த கண்டியாபுரம் இலங்கை மறுவாழ்வு முகாமை சேர்ந்த கௌரி (50)என்ற பெண் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தார்.மேலும் காயம் காளிமுத்து 45, குமரேசன் 30, மாரியம்மாள் 40, மேகலை 21 சிவரஞ்சனி 39 ஜெயலட்சுமி 55 ஆகிய 6 தொழிலாளர்கள் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 100 சதவீத தீக்காயமடைந்த காளிமுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இச் சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மூலமாக தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். வெடி விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிலை கடத்தல் வழக்கின் 41 கோப்புகள் காணவில்லை? – இந்து கோயில் விஷயங்களில் மட்டும் அரசு மெத்தனப் போக்கை கடைபிடிப்பது கண்டிக்கத்தக்கது என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் பல கோடி மதிப்புள்ள சாமி விக்கிரகங்கள் பல நபர்களால் கடத்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நேர்மையான அதிகாரி பொன் மாணிக்கவேல் அவர்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் திறம்பட செயல்பட்டு பல வழக்குகளை பதிவு செய்தார். பல சுவாமி விக்கிரகங்களை கண்டுபிடித்து தமிழகத்திற்கு கொண்டு வந்தார். அதற்கு பின்பு அவர் கூறிய அறிக்கை தமிழகத்தையே திருப்பி போட்டது.
அதாவது சுவாமி விக்ரகங்கள் கடத்தப்பட்டால் முறையாக புகார் கொடுக்காமல் போலியான விக்கிரகங்களை வைத்து திருட்டே நடக்கவில்லை என்பது போல இந்து சமய அறநிலைத்துறை நாடகமாடியது தெரியவந்தது. இதுபோன்று மறைக்கப்பட்ட சம்பவங்களை விசாரணை செய்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
அதன் பிறகு சரியான முறையில் அந்த வழக்குகள் எடுத்துச் செல்லப்படவில்லை என்று இந்து முன்னணியும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளும் தொடர்ந்து கூறி வந்தனர்.
தற்போது உச்சநீதிமன்றம் தமிழக அரசின் தலையில் ஓங்கி குட்டியுள்ளது.
தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கின் 41 கோப்புகள் காணாமல் போனது எப்படி? ஒரே நேரத்தில் 38 காவல் நிலையத்தில் ஆவணங்கள் தீப்பிடித்து எரிந்ததா? முறையாக வழக்குப்பதியப்பட்டதா? சரியான சாட்சியங்கள் சேர்க்கப்பட்டதா? விசாரிக்கப்பட்டதா? என்று அடுக்கடுக்காக தமிழக அரசிடம் கேள்வி கேட்டுள்ளது.
இதுபோன்று சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்ற ஆட்சிக்கு அவமானமாகும். திருட்டை கண்காணிக்க கூடிய காவல்துறையே தவறு செய்யும் பட்சத்தில் நீதியையும் நேர்மையையும் பொதுமக்கள் எதிர்பார்க்க முடியாது. பெரும்பான்மை மக்களின் ஆணி வேராக திகழக்கூடிய சாமி மூலவர் மற்றும் உற்சவர் விக்கிரகங்கள் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட சம்பவங்களுக்கு இது போன்ற நடவடிக்கை இன்மை இருந்தால் சாமி கும்பிடும் இந்துக்கள் மக்கள் அதிருப்தி ஆகி விடுவார்கள். இது குறிப்பிட்ட சமுதாயத்தை அழிப்பதற்கும் அல்லது அவர்களுக்கு எதிரான செயல்பாடாகவும் கருதப்பட வேண்டி உள்ளது.
பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைக்கும் திமுக அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
சிலை கடத்தல் சம்பந்தமாக வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும். உச்சநீதிமன்றமும் தானாக முன்வந்து விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும். இல்லையென்றால் இது போன்று ஆவணங்கள் மறைக்கப்பட்டு வழக்குகள் தன்மை மாறுபாடாகிவிடும். இதனால் தவறு செய்தவர்கள் நிம்மதியாக வெளியே உலாவ கூடிய சூழ்நிலை வரும்.
கடினமாக உழைத்து சிலை கடத்தலை கண்டுபிடித்து வழக்குகள் பதிவு செய்த அதிகாரிகளின் உழைப்பும் நேர்மையும் வீணாகிவிடும்.
இது போன்ற ஆவணங்களை மறைத்து குற்றவாளிகளை தப்ப வைக்கும் நிகழ்வுக்கு காவல்துறை அதிகாரிகளும் தமிழக அரசும் துணை போனால் இந்து முன்னணி சட்டப் போராட்டம் நடத்தி நீதியை நிலைநாட்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..