Home Blog Page 51

நெல்லை – சென்னை இடையே 20 பெட்டிகளுடன் புதிய வந்தே பாரத் ரயில் இயக்கம்!

new vande bharat train color - 2026

திருநெல்வேலி சென்னை திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் மேலும் நான்கு பெட்டிகள் கூடுதலாக இணைப்பு.. புத்தம் புதிய ரயில் இயக்கம்…!

திருநெல்வேலி – சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டபோது எட்டு ரயில் பெட்டிகளுடன் இயங்கியது. பின்பு பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு மேலும் எட்டு பெட்டிகள் இணைக்கப்பட்டன.

இந்த வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் ஆதரவு அதிகரிப்பதால் செப்டம்பர் 24 முதல் மேலும் நான்கு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படவுள்ளது. எனவே இந்த ரயில் மொத்தம் 20 பெட்டிகளுடன் புத்தம் புதிய காவி கருப்பு வண்ணம் கொண்ட ரயிலாக மேலும் அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட ரயிலாக இயங்கும்.

இதன் மூலம் கூடுதலாக 312 பயணிகள் பயணிக்கலாம். தற்போது சாதாரண இருக்கை வசதி பெட்டிகளில் 1128 பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த இருக்கை வசதி பெட்டிகளில் செப்டம்பர் 24 முதல் 1440 பயணிகள் பயணம் செய்ய முடியும்.

செப்டம்பர் 24 முதல் இணைக்கப்படும் 20 பெட்டிகளில் இரண்டு சிறப்பு இருக்கை வசதி பெட்டிகளும் இருக்கின்றன. இந்த புதிய ரயில் கடந்த இரு நாட்களுக்கு முன் திருநெல்வேலி வந்தடைந்தது.

தற்போது இயங்கும் 16ரேக் வந்தே பாரத் ரயில் திருவனந்தபுரம் காசர்கோடு இடையே இயங்கிய பெட்டியாகும்.திருவனந்தபுரம் காசர்கோடு மங்களூர் வந்தே பாரத் ரயில் 20 பெட்டிகளுடன் புதிய ரயிலாக மாற்றப்பட்டது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள்

railway news - 2026
#image_title

சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து செங்கோட்டை, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க
தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06011) செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 03.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.15 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் (06012) நாகர்கோவிலில் இருந்து செப்டம்பர் 28, அக்டோபர் 5, 12, 19, 26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னை தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள்,
7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். ‌

நாகர்கோவில் சிறப்பு ரயில்

டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06053) அக்டோபர் 1 8 15 22 29 ஆகிய புதன்கிழமைகளில் சென்னையில் இருந்து அதிகாலை 04.15 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 08.30 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் நாகர்கோவில் – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06054) செப்டம்பர் 30, அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 09.15 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும்.

இந்த ரயில்கள் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 5 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி ஆகியவை இணைக்கப்படும். ‌

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில்கள்

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06069) சென்னையில் இருந்து செப்டம்பர் 26 அக்டோபர் 3 10 17 24 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை மதியம் 01.30 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் (06070) செப்டம்பர் 25 அக்டோபர் 2 9 16 23 ஆகிய வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து இரவு 09.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.00 மணிக்கு சென்னை சென்று சேரும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, புதுக்கோட்டை காரைக்குடி தேவகோட்டை ரோடு சிவகங்கை மானாமதுரை அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கை பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி இணைக்கப்படும்.

சென்னை – தூத்துக்குடி சிறப்பு ரயில்

தூத்துக்குடி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06018)சென்னையில் இருந்து செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 11.15
மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூர் – தூத்துக்குடி சிறப்பு ரயில் (06017)சென்னையில் இருந்து செப்டம்பர் 30 அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.15 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.

சென்னை சென்ட்ரல் – செங்கோட்டை சிறப்பு ரயில்

டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – செங்கோட்டை சிறப்பு ரயில் (06121) சென்னையில் இருந்து செப்டம்பர் 24, அக்டோபர் 1, 8, 15, 22 ஆகிய புதன்கிழமைகளில் மாலை 03.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.30 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் செங்கோட்டை – டாக்டர் எம் ஜி ஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06122) செங்கோட்டையில் இருந்து செப்டம்பர் 25, அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்று சேரும்.

இந்த ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 15 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு புதன்கிழமை (செப்டம்பர் 17) காலை 8 மணிக்கு துவங்குகிறது.

வண்டி எண் 06121/06122 சென்னை சென்ட்ரல் – செங்கோட்டை வாராந்திர சிறப்பு ரயிலுக்கு சேரன்மகாதேவி, கீழக்கடையம், பாவூர்சத்திரம் ரயில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

பண்டிகை கால பயணங்களுக்கு வசதியாக, தூத்துக்குடி – சென்னை எழும்பூர் – தூத்துக்குடி வாராந்திர சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 28, 2025 வரை இயக்கப்படும்.

இந்த ரயில், பயணிகளுக்கு ஆறுதலையும் வசதியையும் உறுதி செய்யும் வகையில், ஏசி டூ டயர், ஏசி த்ரீ டயர், ஸ்லீப்பர் கிளாஸ், ஜெனரல் செகண்ட் கிளாஸ் மற்றும் திவ்யாஞ்சன் நட்பு ரயில் பெட்டிகளைக் கொண்டதாக இயங்கும்.

முன்பதிவு 17.09.2025 அன்று காலை 08:00 மணிக்குத் தொடங்குகிறது.

‘நம்காலத்து கர்மயோகி’ நரேந்திர மோடி!

modiji speech at gangaikonda chozhapuram - 2026

(பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் 75ஆவது பிறந்தநாளை ஒட்டி, இந்தக் கட்டுரை வாழ்த்து மடல்.)

— பத்மன் —

“ஊருக்கு உழைத்திடல் யோகம், நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்” என்று உரைத்துள்ளார் மகாகவி பாரதியார். அதற்கோர் எடுத்துக்காட்டாக, நாட்டுக்கு உழைத்திடல் யோகம் என்றும், மக்களின் நலம் ஓங்குவதற்காகத் தன்னையே வருத்துதல் யாகம் என்றும் வாழ்ந்து வருகிறார் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.

தூங்குவதற்கு இவருக்கு நேரம் இருக்கிறதா என்று அனைவரும் மலைக்கின்ற வகையில், தினந்தோறும் இவர் விழிப்போடு செயலாற்றுகின்ற நேரமே அதிகம்.
தாம் செய்கின்ற பணிகளே இறைத்தொண்டு என்று வாழ்வதே கர்மயோகம். அவ்வாறு வாழ்பவர் கர்மயோகி. நிகழ்காலத்திலே நாம் காணுகின்ற கர்மயோகியாகத் திகழ்கிறார் பிரதமர் மோடி.

இவரது இறைத் தொண்டு, நாட்டின் வளமும், நாட்டு மக்களின் நலமும் என்பதாகவே இருக்கிறது.

கடந்த 2001-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி குஜராத் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், பின்னர் 2014-ஆம் ஆண்டில் நாட்டின் பிரதமராகி, தற்போது வரையிலும் மோடி அவர்கள் ஆற்றிவரும் செயல்பாடுகள், அவர் மாபெரும் கர்மயோகி என்பதை உணர்த்தும்.

2001-இல் மோடி குஜராத் பிரதமராகப் பதவியேற்றதில் இருந்து 2010-ஆம் ஆண்டு வரையான பத்தாண்டு காலகட்டத்தில், குஜராத் மாநிலத்தின் வேளாண் வளர்ச்சி சுமார் 11 சதவிகிதம் என மிக உயர்ந்தபட்ச அளவில் இருந்தது. நீர்வளம், மின்வளம் ஆகிய இரண்டிலும் இவர் காட்டிய அசாத்திய முனைப்பே இந்த வளர்ச்சிக்குக் காரணம்.

pm modi third time - 2026

2008-ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி குஜராத்தில் 5 லட்சம் நிலத்தடி நீர் சேமிப்புக் கட்டுமானங்கள் கட்டப்பட்டன. இவற்றில் சுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரம் கட்டுமானங்கள், தடுப்பு அணைகள் என்பது குறிப்பிடத் தக்கது. இதனால் தண்ணீர் தேவையின்றி வீணாவது தடுக்கப்பட்டு முறையாகப் பயன்படுத்தப்பட்டதால் பொன் விளைந்தது.

இதேபோல், மின்சார நுகர்வையும் முறைப்படுத்தினார். “ஜோதிகிராம் யோஜனா” என்ற திட்டத்தின் மூலம், குஜராத்தின் குக்கிராமங்களுக்கும் மின்விளக்குகளையும் இதர மின்சாதனங்களையும் கொண்டுபோய்ச் சேர்த்தார்.

கிராமப்புற மின்சார நுகர்வில் இருந்து விவசாய மின்சார நுகர்வு தனியாகப் பிரிக்கப்பட்டு, தனிக் கவனம் செலுத்தப்பட்டது. விவசாயப் பணிகளுக்கான மின்சாரம், முறைப்படுத்தப்பட்டு தேவைக்கேற்ப விநியோகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக, மிகக் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு மின்சாரம் கிடைத்தது. தொடக்கத்தில் இந்தத் திட்டத்தை எதிர்த்த விவசாயிகள், பின்னர் இதனால் கிடைத்த நன்மையைப் புரிந்துகொண்டு ஆதரித்தனர். இதனால் இலவசமும் இருட்டடிப்பும் ஒரேநேரத்தில் நடைபோடும் முரண்பாடு, குஜராத்தில் இல்லாமல் போனது.

குஜராத் மாநிலத்தில் பல பொருளாதாரப் பூங்காக்களும், தொழில்நுட்பப் பூங்காக்களும் மலர்ந்தன. மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட டாடா நிறுவனத்தின் நானோ சிறு கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கு, குஜராத்தில் ரத்தின கம்பள வரவேற்புக் கிடைத்தது.

modi in kanyakumari - 2026
#image_title

நாட்டின் வளர்ச்சிக்கு தனியார் நிறுவனங்களின் முறைப்படுத்தப்பட்ட பங்களிப்பு அவசியம் என்பதை உணர்ந்திருந்த மோடி, குஜராத்தில் தொழில் வளர்ச்சியையும் சாதித்தார். 2007-ஆம் ஆண்டில் நடைபெற்ற “வைப்ரண்ட் குஜராத்” மாநாட்டில், 6 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்பதே இதற்குச் சான்று.

2014-இல் பிரதமராகப் பொறுப்பேற்ற நரேந்திர மோடிக்கு, முதலமைச்சராகப் பணியாற்றி சாதித்த முன்னனுபவம் கைகொடுத்தது. நாடு முழுவதிலும் பயன்தரும் புதுப்புது திட்டங்களை அடுத்தடுத்து செயல்படுத்தத் தொடங்கினார். “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற அப்பர் பெருமானின் வாக்கிற்கிணங்க, நாட்டு நலத் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதையே தம் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் பிரதமர் மோடி. இந்தத் திட்டங்களால் கிடைத்துவரும் பயன்கள், எண்ணிக்கையில் மட்டுமல்ல, தரத்திலும் சிறப்பானவை. அவரது செயல்திட்டங்கள் அவர் ஒரு கர்மயோகி என்பதை நிரூபித்து வருகின்றன.

வங்கி என்பது வசதி படைத்தவர்களுக்கு மாத்திரமே என்ற எண்ணத்தை மாற்றியமைத்தது, இவரது கர்மயோகத்தில் குறிப்பிடத் தகுந்த தலையாய விஷயம். அதுதான் ஜன்தன் யோஜனா. அதுவரை வங்கிப் பக்கமே போயிருக்காத ஏழை, எளிய மக்கள் 42 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்கவைத்து, நேரடி மானியங்களைப் பெற வழிவகுத்தது இந்தத் திட்டம்.

எளிமையான டிஜிட்டல் பணப்பட்டுவாடா திட்டத்தை அறிமுகப்படுத்தியதும் மற்றொரு மைல்கல். பீம் செயலி போன்றவற்றின் அறிமுகத்தால் மொபைல் ஃபோன்கள் மூலமான UPI தொழில்நுட்ப வழியிலான பணப் பரிவர்த்தனையில் பாரதம் உலகுக்கே வழிகாட்டியாகத் திகழ்கிறது.

pm modi in srirangam - 2026
#image_title

சுயதொழில் நடத்துவது வசதி படைத்தவர்களுக்கு மாத்திரமே சாத்தியம் என்பதை மாற்றியமைத்தது மற்றொரு செயல்திட்டமான, முத்ரா யோஜனா. 2015-இல் அறிமுகமான இத்திட்டத்தின் மூலமாக, 2025 ஏப்ரல் மாத நிலவரப்படி, சுயதொழில் செய்யும் சிறு வணிகர்களுக்கு சுமார் 48 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, சுமார் 28 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளில் மானியங்களும், இதரப் பணப்பட்டுவாடாக்களும் வழங்கப்படுவதால் ஊழலும், கருப்புப் பண உருவாக்கமும் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளன.

ஏழை விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் மொத்தம் ஆறாயிரம் ரூபாய் வழங்கும் கிஸான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் பதினாங்கு கோடியே 50 லட்சம் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இதேபோல் “கிஸான் பென்ஷன் யோஜனா” என்ற திட்டத்தின் மூலம் பல கோடி விவசாயிகளுக்கு மாதம் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்க வழிபிறந்துள்ளது.

சுயதொழிலில் ஈடுபட விரும்பும் இளைய தலைமுறையினருக்கு “ஸ்டார்ட் அப் இந்தியா” திட்டம் கைகொடுக்கிறது. “மேட் இன் இந்தியா” என்ற மற்றொரு திட்டமோ, 25 பெரிய தொழில் துறைகளுக்குத் தேவையான பொருள்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கும், வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கும் வழிசெய்துள்ளது.

ஆணுக்குப் பெண் சரிசமம் என்பதை உறுதிசெய்ய, பெண் சிசுக்கொலையைத் தடுக்கவும், பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்கும் “பேட்டி பசாவ், பேட்டி படாவ்” திட்டம் உறுதுணை புரிகிறது. நதிகளின் தூய்மையைப் பாதுகாக்க “நமாமி கங்கே” திட்டத்தையும், நாட்டின் தூய்மையைக் காப்பாற்ற “ஸ்வச் பாரத்” திட்டத்தையும் செவ்வனே செயல்படுத்தி வருகிறார் பிரதமர் மோடி. இப்படிப் பல திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

modi sengol turn - 2026
#image_title

ஒரு கர்மயோகியின் குணநலன் என்பது, இதுபோன்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதோடு அடங்கிவிடுவதல்ல. போற்றுவோர் போற்றினாலும் தூற்றுவோறும் தூற்றினாலும் அவற்றுக்கெல்லாம் மயங்கிவிடாமல், தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து, துணிவாகவும், நிலைபிறழாமலும் செயலாற்றுவதே கர்மயோகியின் பண்பு. அந்த வகையில் பல அருஞ்செயல்களை பிரதமர் மோடி ஆற்றிவருகிறார்.

நாடு முழுவதற்கும் ஒரே சீரான வரி விதிப்பு என்பது வெறும் கனவாகவே இருந்த நிலையை மாற்றி, ஜிஎஸ்டி திட்டத்தின் மூலம் அதனை நனவாக்கியுள்ளார். நாட்டுக்கு நன்மை பயக்கும் வேளாண் சீர்திருத்தத் திட்டங்களை, தூண்டிவிடப்பட்ட கடும் எதிர்ப்புகளையும் மீறி செயல்படுத்த முனைந்தார். பெண்ணடிமைத் தனத்தைப் போக்க, முத்தலாக் விவாகரத்து முறைக்கு முடிவு கட்டினார்.

kumarimunai modi thavam - 2026
#image_title

காஷ்மீர் என்றுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை, அதனை யூனியன் பிரதேசமாக மாற்றியமைத்ததன் மூலம் நிலைநாட்டினார். அகதிகள் என்ற போர்வையில் நாட்டின் எதிரிகள் ஊடுருவுவதைத் தடுக்கவும், வெளிநாடுகளில் அல்லப்படும் நமது சொந்தங்களை அரவணைக்கவும் சி.ஏ.ஏ. சட்டத்தைக் கொண்டுவந்துள்ளார். பிரிட்டிஷ் காலத்தில் இருந்து வெறும் சுமையாக மட்டுமே இருக்கும் நூற்றுக்கணக்கான தேவையற்ற சட்டங்களை அடியோடு அகற்றினார்.

நாட்டின் வளர்ச்சிக்கு தனியார் துறையின் பங்களிப்பும் அவசியம் என்பதை உணர்ந்து அவற்றுக்குத் தைரியமாக ஆதரவளிக்கிறார். ஒரு கர்மயோகியின் தலைமையில், நாட்டின் பாதுகாப்பில் எவ்வித சமரசத்துக்கும் இடமிருக்காது என்பதை பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல்களும், டோக்லாம் விவகாரத்தில் அண்டை நாட்டின் பிடிவாதத்தை முறியடித்த சாதுர்யமும் பறைசாற்றுகின்றன. தேசமே பிரதானம் என்ற இந்தக் கர்மயோகியின் தொடர் வெளிநாட்டுப் பயணங்கள், பாரதத்தை உலகின் மைய அரங்குக்குக் கொண்டு வந்துள்ளன. எதிரியாக நினைத்த பல நாடுகள் தற்போது நெருங்கி வந்துள்ளன, இன்னமும் எதிரியாகக் கருதும் சில நாடுகள் எதிராகச் செயல்பட அஞ்சுகின்றன.

pm modi at mahakaleswar2 - 2026

இவரது கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைகள், தேச விரோத சக்திகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் முதுகெலும்பை முறித்துள்ளன.

கொரோனா தொற்றுநோய் உலகை அச்சுறுத்தத் தொடங்கிய காலகட்டத்தில் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் 21 நாள் தடையை வெற்றிகரமாக அமல்படுத்திய நாடு என்ற பெருமையை இவரது கர்மயோகத்தால் இந்தியா பெற்றது. அதனால்தான் குறைந்த மக்கள்தொகை கொண்ட வளர்ந்த நாடுகள் கூட, இத் தொற்றுநோயால் பீடிக்கப்பட்டு தள்ளாடிய நிலையில், மிகுந்த மக்கள்தொகை கொண்ட இந்தியாவினால் சமாளித்து நிற்க முடிந்தது. இரண்டாவது கொரோனா அலை எழுந்தபோதிலும் அதனை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டது. கடுமையான நெருக்கடிகளையும் விமர்சனங்களையும் சமாளித்து உள்நாட்டிலேயே கொரோனா தடுப்பு மருந்துகளைத் தயாரிக்க முடிந்தது.

அது மட்டுமல்ல, “ஊருக்குத்தான் உபதேசம்” என்றில்லாமல் பிறருக்குத் தனது செயல்கள் மூலமும் இந்த கர்மயோகி வழிகாட்டினார். சந்தேகத்துடன் பார்க்கப்பட்ட உள்நாட்டுத் தடுப்பூசியை முதலில் தனக்கே செலுத்திக்கொண்டு, நாட்டு மக்களை சரியான திசையில் வழிநடத்தினார். கொரோனா தடுப்பூசியால் கொடூர லாபம் சம்பாதிக்க மேலைநாடுகள் முயன்ற நிலையில் நமது சுதேசி தடுப்பூசி மருந்துகளை ஏழை நாடுகளுக்கு ஏன் எதிரி நாடுகளுக்கும் இலவசமாக வழங்கினார் பிரதமர் மோடி.

950915 pmmodiji33 - 2026

2025 ஏப்ரலில் காஷ்மீருக்குச் சுற்றுலா வந்தவர்களில் ஹிந்துக்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து 25 பேரைக் கொன்று குவித்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் அவர்களை இயக்கும் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் அரசுக்கும் மே மாதத்தில் கோடை இடியாக “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கை மூலம் பாடம் புகட்டினார். பாகிஸ்தானின் லாஞ்ச் பேடுகள் பஞ்சுப் பொதிகளாய் எரிந்து சாம்பலாகின. பதிலடிக்குப் பாய்ந்து வந்த பாகிஸ்தானின் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் வானத்திலேயே பஸ்மமாகின. இறுதியில் எதிரி சமாதானம் என சரணடைய நேர்ந்தது.

அமெரிக்க அரசின் மிரட்டல்களுக்கு அடிபணியாமல் துணிச்சலாக தனித்துவம் வாய்ந்த ராஜபாட்டையில் பாரதத்தை நரேந்திர மோடி நடைபோடச் செய்கிறார்.
பாரதத்தை, உலகின் மிகுந்த பொருளாதார பலம் கொண்ட நாடாகவும் விஸ்வகுருவாகவும் உயர்த்த இந்தக் கர்மயோகி திட்டமிட்டு அயராது செயல்பட்டு வருகிறார்.

உடலையும், உள்ளத்தையும், ஆன்மாவையும் நலமாக வைத்திருக்க உதவும் பாரதத்தின் பழம்பெரும் ஆன்மீக அறிவியலான யோகக் கலையை, சர்வதேச யோகாசன தினத்தின் மூலம் உலகமே கொண்டாடும் வகையில் செய்த பெருமை இந்தக் கர்மயோகியையே சாரும்.

narendra modi and rajendra chozha - 2026

யோகாசன தின நிகழ்ச்சி ஒன்றின்போது, “யோகா கர்மாஸு கௌஷல்யம்” என்று எடுத்துரைத்தார் பிரதமர் மோடி. திறமையான செயல்பாடே யோகம் என்று இதற்குப் பொருள். இதற்கேற்ப தனது திறமையான செயல்பாடுகளின் மூலம் சிறந்த கர்மயோகியாகத் திகழ்கிறார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.

யோகம் என்பதற்கு ஒன்றிணைத்தல் என்றும் ஒரு பொருள் உண்டு. நாட்டை வளப்படுத்தி, பலப்படுத்தி, அதன் பயன்களை கடைநிலையில் உள்ளவரும் அனுபவிக்க வழிசெய்யும் வகையில் அயராது செயலாற்றி வரும் கர்ம யோகியான பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளில் நாமும் முழுமனதோடு ஒன்றிணைவோம்!

இதுவே அவருக்கு நமது சார்பிலான சிறந்த பிறந்த நாள் பரிசு!

ஜெய் ஹிந்த்! பாரத அன்னை வெல்க! 

(கட்டுரையாளர் – மூத்த பத்திரிகையாளர்)

நவயுக பாரதத்தின் பரகாலனுக்கு பவள விழா இன்று!

modiji 75th birthday wishes - 2026

நவயுக பாரதத்தின் பரகாலனுக்கு பவள விழா இன்று.

இந்த மண்ணிற்கு என தனித்த பெருமை இல்லை, மண்ணில் தோண்றிய ” மக்களாலயே ” அந்த மண்ணிற்கு பெருமை.

அப்படி பல புண்ணியசீலர்களையும்… பல தவச்சீலர்களையும் பெற்று அதன் சுகந்தங்களையும், உன்னதங்களையும் பரப்பி பெருமை கொண்டது நமது பாரத தேசம்.

நூறு இளைஞர்களை கொடுங்கள் நான் இந்தியாவை மாற்றிக்காட்டுகிறேன் என பேசிய ஓர் நரேந்திரன் வாழ்ந்த ( விவேகாநந்தர் ) காலத்தில் நாம் இல்லாது போனோமே என்ற ஏக்கம் நம்மில் பலருக்கு உண்டு.

அது….
இந்த நரேந்திரர் வாழும் காலத்தில்., நாமும் வாழும் பெரும் பாக்கியம் பெற்றோமே என்று தாராளமாக சிலாகித்து கொள்ளலாம்….

பாரதத்தின் பிரதமராய் திரு நரேந்திர தமோதரதாஸ் மோடி அவர் தம் பதவி காலத்தில் அதிக நாட்கள் இப்பதவியை வகித்து வரும் இரண்டாவது பிரதமராக அவரது இந்த 75 வது வயதில் பூர்த்தி செய்கிறார்.

முதல் இடத்தில் பாரதத்தின் முதல் பிரதமர் வருகிறார். வரும் காலங்களில் இவர் அந்த இடத்திற்கு முன்னேற கூடும். அது ஒன்றும் இவருக்கு பெருமை அல்ல…

ஆனால்……
அவரது இந்த ஆட்சி காலத்தில் நாடு பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது என்பதே பெரும் சாதனை. உலக அளவில் வளர்ந்து வரும் இளம் பொருளாதார வளர்ச்சி என்பதும்…… படுவேகமாக, சீராக வளர்ச்சி விகிதம் கொண்டு இருக்கும் நாடாக….. உலகின் நான்காவது இடத்தில் உள்ள நாடாக வளர்ச்சி கண்டு வருகிறது நம் இந்திய தேசம்.

இவையெல்லாம் ஒரே நாளில், ஒற்றை அதிகார சாளரத்தின் கீழ் வந்துவிட வில்லை….. மாறாக இவரது நிர்வாகத்தின் கீழ் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது இவரது நிர்வாகத்திற்கு ஓர் உன்னத சான்று‌.

என்ன வித்தியாசம்…!!?!?!

உதாரணத்திற்கு சீனாவில் கம்யூனிச சித்தாந்தத்தின் கீழ் மாவோ கொண்டு வந்ததை சற்றேறக்குறைய ஐம்பது ஆண்டுகள் கழித்து வந்த ஷி ஜிங் பிங் கிட்டத்தட்ட ராணுவ கட்டுப்பாட்டோடு கடந்த இருபது ஆண்டுகளாக வழி நடத்தப்பட்டு …, இன்று உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக அசூர வளர்ச்சி கண்டு நிற்கிறார்கள்.

இன்னமும் சரியாக சொல்வதென்றால்…..
கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு உலக பொருளாதார பங்களிப்பில் சீனாவின் பங்கு சுமார் 26.75% ஆகும். இன்று அது மீண்டும் 17.56% எனும் அளவுக்கு முன்னேற்றம் கண்டு நிற்கிறது.

அதே காலகட்டத்தில் நம் இந்திய தேச பங்களிப்பு என்பது சுமார் 22.84% ஆகும்.

ஆனால் இன்று வெறும் ஒற்றை இலக்க எண்ணாக சுமார் நான்கு சதவீதம் மட்டுமே உள்ளது. இதுவே சுதந்திர இந்தியாவின் உச்சம் கண்ட வளர்ச்சி தற்சமயம் மட்டுமே என்கிறது ஓர் புள்ளி விபர அட்டவணை.

ஒருவேளை இரட்டை இலக்க எண்ணை கடந்தால்……?!?!!

அதற்கு உண்டான அத்தனை சாத்தியக்கூறுகளும் இவரது நிர்வாகத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பது தான் தற்போதைய பாரதத்தின் நம் பிரதமரின் பகீரத பிரயத்தன முயற்சி.

இது அத்தனையும் உலகின் மிகப்பெரிய பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் ராணுவ அதிகாரத்துடன் கூடிய அடக்குமுறை கீழ் ஏற்படுத்தப்படவில்லை என்பதே பெரும் சவாலான சமாச்சாரம் தான்.

வாக்கு வங்கி அரசியலை முன்னெடுத்து வரும் தற்போதைய நம் சமகால உலக அரசியல் தளத்தில்…. இவரது முத்தாய்ப்பான சில முன்னெடுப்புகள் பலரை கதிகலங்க செய்திருக்கிறது.
பலரும் யோசனையில் கூட தொடத்தயங்கும் மதம் சார்ந்த அரசியலை… நாட்டின் நலன் சார்ந்த, பணம் சார்ந்த விஷயங்களை அநாயாசமாக கையாண்டு வருகிறார் இவர்.

இந்த இடத்தில் தான் இவர் மற்றவர்களிடம் இருந்து மாறுபடுகிறார்.

இது போருக்கான யுகம் கிடையாது என பிரகடனம் செய்தவர்… பொருளாதார உலக வணிக, வர்த்தக கட்டமைப்பை #ஹலால் என்கிற பெயரில் கண்ணுக்கு புலப்படாத மடைமாற்றம் செய்யப்பட்டு வந்ததை ஜஸ்ட் லைக் தட் கையாண்டது உலக பொருளாதார வல்லுனர்களையே பதைபதைக்க செய்தது. இது குறித்து நம்மில் பலருக்குமே மிகப் பெரிய அவதானிப்பு எல்லாம் இல்லை…. என்ன செய்ய….?!!!

இன்றைய உலகின் அமெரிக்க வல்லாதிக்க பணப்பரிமாற்ற வர்த்தகத்தை டாலரில் நடக்க இரண்டு விஷயங்கள் பிரதான பங்கு வகிக்கிறது. ஒன்று உலக போரின் போதான தங்கத்தின் மீதான அமெரிக்க ஆதிக்கம் .
அடுத்ததாக அறுபதுகளில் அவற்றை அப்படியே திரவ தங்கத்தின் மீது கொண்டு வந்து நிலை நிறுத்தியது.

இந்த இடத்தில் தான் அரபு உலக தேசம்….. அல்லது அவர்கள் பெயரில் மதம் சார்ந்து அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக ஹலால் முறையில் வர்த்தக மடைமாற்றம் செய்ய…… ஒரு பெரும் சுழற்சியில் உலக வணிக நிதி ஆதாரங்கள் சிக்க நேர்ந்தது. இதன் ஊற்றுக்கண்ணாக நம் இந்திய தேசம் நிறம் மாற ஆரம்பித்த வேளையில் ஆபத்பாந்தவனாக இவரது தலைமையின் கீழ் ஆட்சி மலர்ந்தது.

இது இன்று டாலரையே பதம் பார்க்க ஆரம்பித்திருக்கிறது.

நாளைய உலக வர்த்தகத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்திருக்கும் ஆகச் சிறந்த நடவடிக்கை இது. இவற்றை சத்தமில்லாமல் சாத்தியப்படுத்தியதே இவரது சாமர்த்தியம். நாளைய நம் சாம்ராஜ்யத்தின் முதல் கட்டுமான நடவடிக்கை இது.

இதனை அவர் டிமானட்டைஷேசன் மூலம் கொண்டு வந்த சமயத்தில்…. இன்றும் கூட பலருக்கும் அது புரியாத புதிர் தான். முள்ளை முள்ளால் எடுத்து இருக்கிறார்.
இந்தியாவில் இப்படி செய்த முதல் நபர் இவரல்ல… பிரதமராக இந்திரா காந்தி இருந்த சமயத்தில் அவரும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது அறிவித்தது நடந்தது… அமெரிக்க டாலருக்கு நிகரான நம் இந்திய ரூபாயின் மதிப்பை குறைக்கும் நடவடிக்கையாக அது அமைந்தது. ஆனால் இவரது நடவடிக்கை அதற்கு நேர் மாறானது.

இந்திய பொருளாதார வர்த்தக கட்டுமானத்தை ஓர் வரன்முறை கீழ் கொண்டு வந்து ஸ்திரத்தன்மை படுத்தினார். அதாவது அது அத்தனையும் கணக்கில் கொண்டு வந்து இருக்கிறார். இன்றைய தேதியில் அமெரிக்காவில் கூட இது சாத்தியமே இல்லை. எவ்விதம் எனில் அமெரிக்க டாலர் எனும் அச்சிடப்பட்ட தாளுக்கு நிகர மதிப்பு என்று ஏதும் கிடையாது என அமெரிக்க அரசாங்கமே வெளிப்படையாக அறிவித்துவிட்டது. அந்த அளவுக்கு சகட்டு மேனிக்கு அமெரிக்க டாலர்களை அச்சடித்து வெளியிட்டு இருக்கிறார்கள். போதாக்குறைக்கு நாற்பது ட்ரில்லியன் டாலர்களை கடனாக கொண்டுள்ள நாடு தான் இன்றைய அமெரிக்கா.

வல்லரசு பட்டம் வெறும் காலி பெருங்காய டப்பா மாத்திரமே அது.

250 ஆண்டு கால பெருமை முடிவுக்கு வர இருக்கிறது.

இது டிரம்ப் கொண்டு வந்த நிதி சீர்திருத்த நடவடிக்கைகளால் அல்ல…. அது போலவே அவரது வரிவிதிப்பு நடவடிக்கைகள் அவர்களின் நீதிமன்றகளால் பகடி செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு இறுதிக்குள் பலவும் ரத்து செய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஃது பெரும் நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும் என்கிறார்கள் உலக வர்த்தக வல்லுனர்கள்.

மறு மார்க்கத்தில் நம் இந்திய தேசம் சீரான வர்த்தக வளர்ச்சியை கொண்டு இருக்கிறது.

அப்படி என்றால்……..

இந்த இடத்தில் நாளைய உலகின் போக்கை அவதானிக்க முடிந்தவர்கள் பாக்கியவான்களே…..

இப்படியும் சொல்லலாம்…,
நம் பாரம்பரிய ஜோதிட சாஸ்திரத்தை கொண்டு…. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தவறான காலத்தில் அவர் அப்பதவிக்கு வந்திருப்பதாக கணித்து வைத்திருந்தார்கள். சிம்ம ராசியில் வரும் அவருக்கு இது போதாத காலம் அஷ்டம சனி…. போதாக்குறைக்கு பன்னிரெண்டில் உச்ச குரு வர இருக்கிறது. அடுத்ததாக ஜென்ம குரு. இரண்டரை ஆண்டுகள் “”வச்சி செய்ய இருக்கிறது “……

நம் பிரதமருக்கு விருச்சிக அனுஷம்
அதாவது அவருடைய நட்சத்திர பிறந்த நாள் பத்து நாட்கள் கழித்து தான்.இன்று தேதி பிரகாரம்.

நம் தேசத்தை காக்கும் கோமகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வாழ்வாங்கு வாழிய நீர் எம்மான்…….

ஜோதிடத்தில் ஸ்தானபலம் என்று ஒன்று உண்டு…. அவரது ஜனன கால ஜாதகம் வேறு என்பவர்களும் உண்டு.
ஆன போதிலும் நம் நாட்டை ஆள்பவர் நீண்ட ஆயுளோடு தேக ஆரோக்கியத்தோடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துவதும் பிரார்த்திப்பது நமது கடமை.

தற்சமயம் அவர் தம் உச்ச காலத்தில் வாழ்வதாக அவரது ஜாதக அமைப்பு சொல்வதாக பலரும் கணித்து வைத்திருந்தார்கள்….. அது போலவே நம் இந்திய தேசமும் உலக அளவில் மிகப்பெரிய இடத்திற்கு நகரக் கூடிய காலக்கட்டத்தில் இருப்பதாகவே பலரும் அவதானித்து இருக்கிறார்கள்
இன்னல்களை எதிர்கொண்டு மிகப்பெரிய உச்சத்தை அவர் அடையக்கூடும் என்பது காலக் கணக்கு. அதற்குண்டான வீர்யம் நம் வாழ்த்தொலிகளால்……. பிரார்த்தனைகளால் ……. நிரம்பிடட்டும்.

விஸ்வ குரு எனக்கொண்டாடப்படும் அவரை …. அவரது ஜனன கால ஜாதகத்தில் உச்சம் பெற்ற குரு பார்க்க இருக்கிறது. குரு பார்க்க கோடி நன்மை என்பது ஜோதிட கணக்கு…… அந்த வகையிலும் பல ஏற்றங்களை சந்தித்து இந்த புண்ணிய பூமியில் சிரஞ்சீவியாய் என்றென்றும் நிலைத்து நிற்க.. வாழ்வாங்கு வாழ அந்த ரகு குல வம்சம்….. இஷ்வாகு குல தனம் ஸ்ரீரங்கத்து எம்பெருமான் கடாக்ஷித்து அருள் புரியட்டும்.

💗 ‘ஜெய் ஹிந்த்’ ஸ்ரீராம்

பாரத பிரதமர் மோடிக்கு யுஎஸ் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து!

Modi and Trump
#image_title

பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி வாயிலாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இது குறித்து தனது சமூகத் தளப் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி.

1950ம் வருடம் செப்டம்பர் 17ம் தேதி பிறந்த நரேந்திர மோடி, இன்று தமது 75வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை அடுத்து பாரதப் பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வரிசையில்  அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து தெரிவித்து குறித்து தெரிவித்த பிரதமர் மோடி, இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் 

எனக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர் டிரம்ப்பிற்கு நன்றி ‘இந்தியா-அமெரிக்க நட்புறவை உலகளவிற்கு எடுத்துச் செல்வோம்.. என்று தெரிவித்துள்ளார். . 

வரி விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக இந்தியா அமெரிக்கா இடையே பதற்றமான சூழலும் உறவில் விரிசல் ஏற்படும் வகையிலான கருத்துக்களும் எழுந்தன. டிரம்ப் ஒரு படி மேலே போய், இந்தியாவை வீழும் பொருளாதாரம் என்று குறிப்பிட்டார். பின்னர் ரஷ்யா சீனாவுடன் கை கோத்து இந்தியா செல்லக் கூடாது என்று குறிப்பிட்டார். 

இந்நிலையில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேச்யில் பேசுவதற்கு மூன்று முறை முயற்சி செய்ததாகவும் ஆனால் பிரதமர் அலுவலகம் அதை தவிர்த்து விட்டதாகவும் ஜெர்மனி இதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. 

பின் திடீரென ‘நான் எப்போதுமே மோடியுடன் நண்பராக இருப்பேன்’ எனக் கூறினார் டிரம்ப். இதற்கு, டிரம்பின் உணர்வுகளை பாராட்டுவ தாக பிரதமர் மோடி பதில் அளித்தார். இந்தச் சூழ்நிலையில், பிரதமர் மோடிக்கு முதல் நபராக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் டிரம்ப் . அவருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்து பதில் அளித்துள்ளார் பிரதமர் மோடி.

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு!

sabarimala nata thirappu - 2026

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (16ம் தேதி) மாலை திறக்கப்பட்டது. புதன்கிழமை முதல் சுவாமி ஐயப்பனுக்கு புரட்டாசி மாத பூஜைகள் துவங்கி வருமா 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
பம்பையில் 20ம் தேதி சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாத பூஜைகள் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து வைத்தார். வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாமல் இரவு பத்து மணிக்கு ஹரிவராசன பூஜை நடத்தி இரவு நடை அடைக்கப்பட்டது.

17ம் தேதி முதல் 21ம் தேதி வரை தினமும் கணபதிஹோமம், உஷபூஜை, நெய்யபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகளும், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு புரட்டாசி மாத பூஜைகள் நிறைவடையும்.

வரும் 20ம் தேதி பம்பையில் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் முதல் மாநாடு இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இலங்கை, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்கின்றனர். தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஆண்டாள் மாரியம்மனுக்கு புதிதாக வெள்ளிக் கவசம்!

andal mariamman velli kavasam - 2026

அவனியாபுரம் ஆண்டாள் மாரியம்மனுக்கு வெள்ளிக் கவசம் சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.

மதுரை அவனியாபுரம் முக்கிய சாலையில் அமைந்துள்ளது ஆண்டாள் மாரியம்மன் திருக்கோவில் சுமார் 300 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலில் உள்ள ஆண்டாள் மாரியம்மனுக்கு சுமார் 16 லட்சம் மதிப்புள்ள வெள்ளி கவசங்கள் சாற்றப்பட்டது.

அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி சாலையில் அமைந்துள்ள ஆண்டாள் மாரியம்மன் கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோவிலில் அவனியாபுரம் சங்கம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது கோவிலுக்கு பிச்சைக்கனி நாடார் குடும்பத்தினர் சார்பாக சுமார் 15 கிலோ எடையுள்ள ரூபாய் 16 லட்சம் மதிப்பு உள்ள வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது.

முன்னதாக, கோவில் நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கணபதி ஹோமம் பூஜைகள் நடைபெற்ற பின் வெள்ளிக்கவசம் அயன் பாப்பாக்குடி அய்யனார் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆண்டாள் மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு பக்தர்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வாங்கப்பட்டது.

நீரேத்தான் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா!

neereththan navaneetha krishnan temple - 2026

நீரேத்தான் நவநீத பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜயந்தி விழாவில், பக்தி சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நீரேத் தான் மந்தை திடலில் உள்ள பழமையும் பெருமையும் வாய்ந்த குலசேகர பாண்டிய மன்னரால் வழிபாடு செய்யப்பட்ட நவநீத பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா 2 நாட்கள் நடந்தது.

முதல் நாள் காலை 7.00 மணிக்கு சுப்ரபாதம் விஸ்வரூபமும் 9.00 மணி முதல் 12.30 மணி வரை சுவாமிக்கு திருமஞ்சனம் பெரியாழ்வார் திருமொழி கச்சை கட்டி எதிராசர் காக்கூர் கண்ணன் கோஷ்டியினரின் சேவா காலமும் மாலை 4.00 மணிக்கு சகஸ்ர நாம பூஜை சுவாமி வீதி உலாவும் நடந்தது.

5.00 மணி முதல் 6.00 மணி வரை கண்ணா சிலம்பாட்ட பள்ளி மாணவ மாணவிகளின் சிலம்பாட்டம் நிகழ்ச்சியும், 6 மணி முதல் 7.00 மணி வரை கண்ணனின் சந்நிதியில் என்ற தலைப்பில் முனைவர் நல்லசிவம் பக்தி சொற்பொழிவு நிகழ்த்தினார்.

7.00 மணி முதல் 8.00 மணி வரை ராமச்சந்திரா கலை பண்பாட்டு மையம் சார்பாக முத்துமலா கோபி குமாரின் நாட்டிய நாடகமும் நடந்தது.

இரண்டாம் நாள் காலை 7.00 மணிக்கு ஆச்சாரியார் வரவேற்பு 9.15 மணி முதல் 12. 50 மணி வரை கோபூஜை, அஸ்வ பூஜை, சந்தான கோபாலகிருஷ்ணா மூல மந்திர யாகம், மாலை 4 மணி முதல் 5 மணி வரை கிருஷ்ணர் சரிதை புலவர் அழகர்சாமி ஆன்மீக சொற்பொழிவும் 5 மணி முதல் 6 மணி வரை கிருஷ்ணர் தொட்டில் வைபவமும்,திவ்ய பிரபந்த தாலாட்டு பாட்டு பாடப்பட்டது.

6.00 மணி முதல் 7.00 மணி வரை கலா சாதனா மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், 7.00மணி முதல் 8.00மணி வரை சப்த நிருத்யாலயா பள்ளி மாணவிகள் பாரம்பரிய பரதநாட்டியம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதன் ஏற்பாடுகளை, பரம்பரை டிரஸ்டி அர்ச்சகர்கள் பாகவ தோத்தமார்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப் படுவார்கள்: பிரதமர் மோடி உறுதி!

pm modi in bihar - 2026

ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று பிரதமர் மோடி தனது உறுதியான குரலை நேற்றைய இரு இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி அஸாம் மாநிலக் கூட்டத்தில் பேசியவை…

நண்பர்களே, காங்கிரசுக்குத் தன்னுடைய வாக்குவங்கி அரசியல் தான் முக்கியமானது.  காங்கிரஸ் தேசத்தின் நலன் பற்றிக் கவலைப்படுவதில்லை.   இன்று காங்கிரஸ், தேச விரோதிகளுடைய, ஊடுறுவல்காரர்களுடைய பாதுகாவலனாக ஆகி விட்டது.   காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, ஊடுறுவல்காரர்களுக்கு ஊக்கமளித்தது.   மேலும் இந்த காங்கிரஸ் என்ன விரும்புகிறது என்றால், இந்த ஊடுறுவல்காரர்கள், நிரந்தரமாக பாரதத்தில் வசிக்க வேண்டும், பாரதத்தின் எதிர்காலத்தை இந்த ஊடுறுவல்காரர்கள் தீர்மானிக்க வேண்டும். 

ஒரு காலத்திலே, மங்கல்தோய் அசாமின் அடையாளத்தைக் காப்பாற்ற, சட்டவிரோத ஊடுறுவல்காரர்களுக்கு எதிரான பெரும் போராட்ட களமானது.  ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசுகள் இதற்கும் கூட உங்களுக்கு தண்டனையை அளித்தார்கள்.  நீங்கள் இதற்குப் பழி வாங்கினீர்கள்.   இங்கே நிலத்தின் மீது சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்ய காங்கிரஸ் உதவியது. 

நம்முடைய நம்பிக்கைசார் இடங்களின் மீது, நம்முடைய விவசாயிகள் பழங்குடிகளின் உரிமை நிலங்களை ஆக்கிரமித்தார்கள்.   பிஜேபி எண்டியே அரசாங்கம் அமைந்த பிறகு, அந்த நிலை மாறிக் கொண்டு வருகிறது.  இங்கே இருக்கும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. 

ஹேமந்த் அவர்களின் தலைமையிலே, அசாமிலே, இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள், ஊடுறுவல்காரர்களிடமிருந்து மீட்டெடுக்கப்பட்டாகி விட்டது.  Darrang மாவட்டத்திலும் கூட, மிகப்பெரிய நிலப்பரப்பிலிருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.   அதே போல கோருகுட்டி பகுதியிலும் கூட, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஊடுறுவல்காரர்கள் ஆக்கிரமித்திருந்தார்கள்.  

இன்று அந்த நிலங்கள் எல்லாம் மீட்டெடுக்கப்பட்டாகி விட்டன.  இப்போது அங்கே, விவசாயிகளுக்கு, கோருகுட்டி விவசாயத் திட்டம் அரங்கேறி வருகிறது.  அங்கேயிருக்கும் இளைஞர்கள் இப்போது, விவசாயப் படை ஒன்றை ஏற்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்கள்.  கடுகு சோளம் உளுந்து பூசணி……  அனைத்தையும், அவர்கள் பயிர் செய்கிறார்கள். 

அதாவது முன்னர் எந்த நிலம், ஊடுறுவல்காரர்களின் பிடியில் இருந்ததோ, இன்று அதே நிலம், அசாமின் விவசாய வளர்ச்சியின் புதிய மையமாக ஆகி இருக்கிறது.   நண்பர்களே பாஜகவின் அரசாங்கம், ஊடுறுவல்காரர்களை தேசத்தின், ஆதாரங்கள் வளங்களை, கைப்பற்ற கண்டிப்பாக அனுமதிக்காது.  பாரதத்தின் விவசாயிகளே, பாரதத்தின் இளைஞர்களே, நம்முடைய பழங்குடிகளின் உரிமையை, யாரும் அபகரிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.  இந்த ஊடுறுவல்காரர்கள், நமது தாய்மார்கள் சகோதரிகள் பெண்களுக்கு கொடுமை புரிகிறார்கள்.  இதை நாங்கள் நடக்கவிட மாட்டோம். 

ஊடுறுவல்காரர்கள் வாயிலாக, எல்லையோரப் பகுதிகளிலே, மக்கள் தொகையியலை மாற்றும் சூழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.  இது தேசப் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அபாயமாகும். 

ஆகையால் இப்போது தேசத்திலே, ஒரு பெரிய மக்கள் தொகையியல் இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது.  பாஜகவின் இலட்சியம் என்னவென்றால், ஊடுறுவல்காரர்களிடமிருந்து தேசத்தைப் பாதுகாப்பது.  ஊடுறுவல்காரர்களிடமிருந்து தேசத்திற்கு விடுதலை அளிப்பது…. – என்று குறிப்பிட்டார்.

 ”பீஹாரில் உள்ள ஊடுருவல்காரர்கள் நாட்டை விட்டு நிச்சயமாக வெளியேற்றப்படுவர். இதில் எந்த சமரசமும் இல்லை. முடிந்தால் இதை தடுத்து பாருங்கள்,” என்று, காங்கிரஸ் – ராஷ்ட்ரீய ஜனதா தளம் அமைந்துள்ள இண்டி கூட்டணிக்கு பிரதமர் நரேந்திர மோடி சவால் விடுத்தார்.

பீஹாரில் மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு அக்., நவம்பரில் தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், பீஹாரின் பூர்ணியா மாவட்டத்தில் பிரதமர் மோடி, 36,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். பின்னர், பொதுக்கூட்டத்தில் அவர் பேசியபோது,

புரிந்து கொள்ளுங்கள்.    நண்பர்களே காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியால் பிஹாரின் சுயமரியாதைக்கு மட்டும் கேடு இல்லை, பிஹாரின் அடையாளத்துக்குமே கூட தீமை இருக்கிறது.   இன்று சீமாஞ்சல் மற்றும் கிழக்கு பாரதத்திலே, ஊடுறுவல்காரர்கள் காரணமாக, மக்கள் தொகையியலில் பெரிய சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. 

பிஹார் பங்கால் அசாம், என பல மாநில மக்கள், தங்கள் பெண்கள் மகள்கள் பாதுகாப்பு பற்றிய கவலையில் இருக்கிறார்கள்.  ஆகையால் தான் நான் செங்கோட்டையிலிருந்து பேசினேன், மக்கள் தொகையியல் மிஷன் பற்றி அறிவித்தேன்.  ஆனால் வாக்கு வங்கியின் சுயநலத்தைப் பாருங்கள்!! 

காங்கிரஸ் ஆர்ஜேடி மற்றும் அவர்கள் சூழலமைப்பைச் சேர்ந்தவர்கள், ஊடுறுவல்காரர்களுக்கு வக்காலத்து வாங்கி வருகிறார்கள்.  அவர்களைக் காப்பாற்றுவதில் ஈடுபடுகிறார்கள்.  கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல், அந்நியநாடுகளிலிருந்து வந்த ஊடுறுவல்காரர்களோடு சேர்ந்து கொண்டு, கோஷங்கள் எழுப்புகிறார்கள், யாத்திரைகள் மேற்கொள்கிறார்கள். 

இவர்களெல்லாம், பிஹார் மற்றும் தேசத்தின் ஆதாரங்களை, மற்றும் பாதுகாப்பினை, இரண்டையுமே ஆபத்துக்கு உள்ளாக்க விரும்புகிறார்கள்.  ஆனால் இன்று, பூர்ணியாவின் மண்ணிலிருந்து, நான் இவர்களுக்கு ஒரு விஷயத்தை, நன்கு விளங்க வைக்க விரும்புகிறேன். 

இந்த ஆர்ஜேடி காங்கிரஸ்காரர்களின் எசப்பாட்டு, நன்கு காதுகளைத் திறந்து வைத்துக் கேட்டுக் கொள்ளுங்கள்.  ஊடுறுவல்காரர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் வெளியேறியே ஆக வேண்டும்.   ஊடுறுவலைத் தடுத்து நிறுத்துவது, என் டி ஏவின் முழுமையான கடமையாகும்.  .. என்று பேசினார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் – 2025: செய்தி என்ன?

asia cup cricket 2025 - 2026

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஆசிய கோப்பை ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி 1984ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் இது ஒரு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான கோப்பையாக இருந்தது.

பின்னர் 2016ஆம் ஆண்டு முதல் ஒரு முறை டி20 போட்டியாகவும் அடுத்தமுறை ஒருநாள் போட்டியாகவும் நடத்தப்பட்டு வருகிறது. 2014 வரை நடந்த ஆசிய கோப்பை ஒருநாள் போட்டிகளில் இந்தியா ஐந்து முறை கோப்பையை வென்றிருக்கிறது. இலங்கை அணி ஐந்து முறையும் பாகிஸ்தான் அணி இரண்டு முறையும் கோப்பையை வென்றிருக்கின்றன.

2016க்குப் பிறகு டி20 கோப்பையை இந்தியா ஒரு முறையும் இலங்கை ஒருமுறையும் வென்றிருக்கின்றன. 2016க்குப் பிறகு ஒருநாள் போட்டிக்கான கோப்பையை இந்தியா இரண்டு முறை வென்றிருக்கிறது.

டி20 தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திலும் இலங்கை அணி ஏழாவது இடத்திலும் பாகிஸ்தான் எட்டாவது இடத்திலும் ஆஃப்கானிஸ்தான் ஒன்பதாவது இடத்திலும் வங்கதேசம் பத்தாவது இடத்திலும் உள்ளன.

எனவே கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு மிகவும் பிரகாசமாக உள்ளது. இந்த நிலையில் இந்திய அணி ஒரு ஆட்டத்தை வென்றது என்பது செய்தியே அல்ல. தோற்றால்தான் செய்தி.

செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கிய இந்த வருட ஆசியகோப்பை போட்டி ஒரு டி20 போட்டி. முதல் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி (188/6) ஹாங்காங் அணியை (94/9) 94 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி (4.3 ஓவர்களில் 60/1) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை (57) 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவது ஆட்டத்தில் வங்கதேச அணி (144/3) ஹாங்காங் அணியை (143/7) ஏழு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

நான்காவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி (160/7) ஓமன் அணியை (67) 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஐந்தாவது ஆட்டத்தில் இலங்கை அணி (140/4) வங்கதேச அணியை (139/5) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. நேற்று (14.09.2025) நடந்த ஆறாவது ஆட்டத்தில் இந்திய அணி (15.5 ஓவர்களில் 131/3) பாகிஸ்தான் அணியை (127/9) ஏழு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியாவிற்கு ஓமான் அணியுடனான ஒரு ஆட்டம் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிக்காக அணிகள் குருப் ஏ மற்றும் குருப் பி என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. குருப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஒமான் மற்றுன் ஐக்கிய அரபு எமிரேட்டு அணிகள் உள்ளன. குருப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கனிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் உள்ளன.

அரையிறுதிக்கு குருப் ஏ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தேர்வாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குருப் பி பிரிவிலிருந்து இலங்கை வங்கதேசம் ஆகிய அணிகள் தேர்வாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

அரையிறுதி ஆட்டங்கள் செப்டம்பர் 21ஆம் தேதியும் இறுதிப் போட்டி செப்டம்பர் 24ஆம் தேதியும் நடைபெறும்.