Home Blog Page 5603

எம்.ஜி.ஆர். நூற்றாண்டில் புதுப்பொலிவுடன் வருகிறது ’அடிமைப் பெண்’

mgr jeyalalitha adimaipen - 2026

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா இரட்டை வேடங்களில் இணைந்து நடித்த திரைப்படம் ‘அடிமைப்பெண்’ ஜூலை 7ம் தேதி புதுப்பொலிவுடன் வெளியாகிறது.

“எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அடிமைப்பெண்’ திரைப்படத்தை புதுப்பொலிவுடன் அதி நவீன தொழில்நுட்பத்துடன் ‘தி ரிஷிஸ் மூவீஸ்’ நிறுவனத்தின் சார்பில் சாய் நாகராஜன்.கே. ஜூலை 7ம் தேதி வெளியிடுகிறார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிப்பில் 1969 ம் ஆண்டு வெளிவந்த படம் ‘அடிமைப்பெண்’. நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவும், எம்.ஜி.ஆரும் கடைசியாக நடித்த படம் இது.

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் அசோகன், ஆர்.எஸ்.மனோகர், சோ, பண்டரிபாய், ராஜஸ்ரீ, ஜோதிலட்சுமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கே.வி. மகாதேவன் இசையமைத்திருக்கிறார். வி.ராம்மூர்த்தி ஒளிப்பதிவு. கே.சங்கர் இயக்கி உள்ளார்.

எம்.ஜி.ஆர் பிக்சர்ஸூம், இயக்குநர் கே.சங்கரும் அப்போதிருந்த தொழில்நுட்பத்தைக் கொண்டே, பிரம்மாண்டமான முறையில் படத்தை உருவாக்கிய விதம் வியப்புக்குரிய விஷயமாகும். எம்.ஜி.ஆர், அடிமைப்பெண் படத்திற்கு முன், பல படங்களில் ராஜா வேடம் ஏற்று நடித்திருந்தாலும், இந்த படத்தில் தான் முதன்முறையாக ஐரோப்பிய பாணியில் உடை அணிந்து நடித்திருக்கிறார். அவரது கட்டுமஸ்தான புஜங்களும், புடைத்த மார்புகளும், உருண்டு திரண்ட தொடைகளும் தெரியும்படியான அவரது அந்த தோற்றம், 52 வயதிலும், அவர் அனைவரும் ரசிக்கும் அழகனாக இருந்தார் என்பதைக்காட்டுகிறது.

ஜெய்ப்பூர் அரண்மனையில் படப்பிடிப்பு, பாலைவனத்தில் ஒட்டகச் சண்டை, க்ளைமாக்ஸில் சிங்கத்துடன், எம்.ஜி.ஆர் நேருக்கு நேர் மோதும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி என பல கமர்ஷியல் அம்சங்களைக் கொண்ட படம் அடிமைப்பெண். சிங்கத்துடனான சண்டைக்காட்சிக்காக, எம்.ஜி.ஆர் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டார். பாம்பே சர்க்கஸிடம் இருந்து, சிங்கத்தை விலைக்கு வாங்கி, தன்னுடைய சத்யா ஸ்டுடியோவில் பிரத்யேக பயிற்சியாளர் உதவியுடன் ஆறு மாதங்கள் பயிற்சியில் ஈடுபட்டார்.

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் மூலம் தான் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார். இசைத்திலகம் கே.வி.மகாதேவன் ஜெயலலிதாவை ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடலை பாடவைத்தார். ஜெயலலிதா பாடிய முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் டி.எம்.எஸ் பாடிய ‘தாய் இல்லாமல் நானில்லை’ என்ற பாடல் எம்.ஜி.ஆருக்கு தாய்மார்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

இப்படி சுவாரஸ்யமான அம்சங்களுடனும், திருப்புமுனைகள் நிறைந்த திரைக்கதையுடனும் உருவான இந்த படம் பிரம்மாண்டமான வெற்றிப் படமாக அமைந்து, வெள்ளி விழா கொண்டாடியது. வசூலிலும், அந்த காலத்திலேயே இரண்டு கோடியே முப்பது லட்சம் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இதன் மதிப்பு 350 கோடியை தாண்டியிருக்கும் என்பது வியப்புக்குரிய விஷயம்.

இப்படி பல சிறப்பம்சங்களுக்கும் உரிய ‘அடிமைப்பெண்’ திரைப்படத்தை 48 வருடங்களுக்குப் பிறகு வாங்கி அதிநவீன டிஜிட்டலில் மாற்றி வெளியிடுவதில் மகிழ்ச்சி என்கிறார் சாய் நாகராஜன்.கே. இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட, அடிமைப்பெண் திரைப்படம், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மட்டுமல்லாது இன்றைய சினிமா ரசிகர்களையும், சினிமாத்துறையினரையும் தியேட்டருக்கு வரவைக்கும் என்பது நிச்சயம்.

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=tKUUnkm5Ebo” width=”720″ autoplay=”yes”]

எடப்பாடி மவுனச்சாமி ஆகக் கூடாது: அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் விமர்சனம்

will dispose all who speaks against sasikala says MLA - 2026

சென்னை:

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் போல் மவுனச் சாமி ஆகக் கூடாது என்று அதிமுக., எம்.எல்.ஏ., வெற்றிவேல் விமர்சனம் செய்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அதிமுக., கட்சியானது இரு அணிகளாகப் பிரிந்து தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இது போதாதென்று, சசிகலாவுக்கு ஆதரவாக டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக., எம்.எல்.ஏ.க்கள் சிலர் தனியாக கருத்து தெரிவித்து மூன்றாவது அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

இம்மூன்று அணிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள் என அதிமுக.,வினர், கட்சியினரைக் குழப்பும் விதத்தில், தனித்தனியே வெவ்வேறு விதமான கருத்துக்களை ஊடகங்களில் பேசி வருகின்றனர்.

இதனிடையே ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த அரக்கோணம் எம்.பி., கோ.அரி ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, டிடிவி தினகரன் கட்சியிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்றார். மேலும், அமைச்சர்கள் முதல் அடிப்படை உறுப்பினர்கள் வரை அனைவருமே, டிடிவி தினகரன் கட்சியிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அதிமுக எம்.எல்.ஏ வெற்றிவேல் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கட்சி சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதமர் மோடி, தம்பிதுரை மூலம் சசிகலாவிடம் ஆதரவு கேட்டார். இது உண்மை. நன்றியை மறந்துவிட்டு யாரும் பேசக்கூடாது. கோ.அரி போன்று தவறு செய்பவர்களை கிள்ளி எறியவும் தெரியும். டிடிவி தினகரன் தொடர்பான விமர்சனங்களுக்கு, முதலமைச்சர் பழனிச்சாமி இனியும், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் போல் மவுனம் காக்கக் கூடாது.. என்று விமர்சித்தார்.

மரத்தில் கார் மோதி விபத்து: டி.எஸ்.பி. மரணம்

thirusuzhi dsp - 2026

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மரத்தில் கார் மோதி நிகழ்ந்த சாலை விபத்தில், திருச்சுழி டி.எஸ்.பி வெற்றிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டம் உப்பிலிகுண்டு கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர், 6 மாதம் முன்புதான் திருச்சுழியில் டிஎஸ்.பி.யாகப் பணியில் சேர்ந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் டி.எஸ்.பி.யாகப் பணியாற்றுபவர் வெற்றிவேல். இவர் தனது நண்பரின் கார் ஒன்றை எடுத்துக் கொண்டு, விருதுநகரில் இருந்து திருச்சுழி நோக்கிச் சென்றார். தனியாக பயணித்துக் கொண்டிருந்த அவர், அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் என்ற இடத்தில் வளைவு ஒன்றைக் கடந்தபோது காரின் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் கார், வலதுபுறத்தில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் முன்புற கண்ணாடி மீது வெற்றிவேலின் தலை பலமாக மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

டி.எஸ்.பி. வெற்றி வேல், காரில் சென்ற போது, சீட் பெல்ட் அணியாமல் சென்றார் எனத் தெரிகிறது. அதுவே அவரது உயிரிழப்புக்குக் காரணம் என கூறப்படுகிறது.

நள்ளிரவு 12 மணியானாலும் பதிலளிப்பார்: சுஷ்மா சுவராஜ்க்கு மோடி பாராட்டு

Modi in usa - 2026

சுஷ்மா சுவராஜ் உட்பட தனது அமைச்சரவையில் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை சிறந்த
நிர்வாகத்துக்கு எப்படி பயன்படுத்துவது என்பதற்கு சிறந்த உதாரணமாக இருப்பதாக
பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி விர்ஜினியாவில்
இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“சமூக வலைதளங்கள் தற்போது மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறிவிட்டது. நானும்,
அதில் இணைந்து இருக்கிறேன். ஆனால், வெளியுறவுத்துறை அமைச்சகமும் துறை அமைச்சர்
சுஷ்மா சுவராஜும், சமூக வலைதளங்களை பயன்படுத்தி தங்கள் துறையில் எவ்வாறு
சிறந்த சேவையை செய்வது என்பதில் மிகச்சிறந்த முன்னுதாரணத்தை
உருவாக்கியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

மேலும், சிக்கலில் உள்ள இந்தியர்கள் உலகின் எந்த முனையில் இருந்து டுவிட்
செய்தாலும் உடனடியாக பதில் அளிக்கும் பழக்கத்தை சுஷ்மா சுவராஜ்
கொண்டிருப்பதாகவும் மோடி வெகுவாக பாராட்டினார்.

இது குறித்து மோடி கூறும் போது, “ உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும்
துயரத்தில் இருக்கும் இந்தியர்கள் டுவிட் செய்தால், நள்ளிரவு 2 மணியாக
இருந்தாலும் சுஷ்மா சுவராஜ் 15 நிமிடங்களில் பதிலளிப்பார். அரசு உடனடி
நடவடிக்கை எடுத்து பலனை கொடுக்கும். இதுதான் மிகச்சிறந்த நிர்வாகம்”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

300 ரன்: உலக சாதனை படைத்தது இந்திய அணி

icc test ranking india number one - 2026

ஒருநாள் போட்டிகளில், அதிக முறை 300 ரன்களைக் கடந்ததில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி முதலிடம் பிடித்தது.

இந்திய அணி, (மேற்கு இந்தியத் தீவுகள் , இந்திய அணிக்கு இடையிலான ஜூன் 26, 2017 தேதி வரை) 96 போட்டிகளில் 300 ரன்களைக் கடந்துள்ளது.
அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணி 95 முறையும், தென்னாப்பிரிக்கா 77 முறையும், பாகிஸ்தான் 69 முறையும், இலங்கை 63 முறையும், இங்கி8லாந்து 57 முறையும், நியூஸிலாந்து 51 முறையும் 300 ரன்களைக் கடந்துள்ளன.

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இடையிலான நேற்றைய இரண்டாவது ஒருநாள் போட்டியில், 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன் எடுத்தது. மழையினால் 43 ஓவர்களுக்கு போட்டி குறைக்கப்பட்டது. இந்தப் போட்டியில் ரஹானே 103 ரன் எடுத்தார்.

டிவி., விவாத அநாகரிகம்: வெகுண்ட எஸ்.வி.சேகர்

சென்னை:

செய்தி சேனல்களில் நிகழ்த்தப் படும் விவாதங்கள், அலசல்கள் குறித்து பல விதங்களில் அதிருப்தி நிலவுகின்றன. இந்நிலையில், அண்மையில் நியூஸ் 7 என்ற செய்தி சேனலில் நிகழ்த்தப் பட்ட யோகா குறித்த விவாதம் பெரும் புயலைக் கிளப்பியது.

அதில் பங்கேற்ற தி.க.வைச் சேர்ந்த எழுத்தாளர் மதிமாறன், யோகா 3 சதவீதம் உள்ள பார்ப்பனர்களின் திணிப்பு என்று கூறி, சாதிப் பெயர் சொல்லி அவதூறு கிளப்பினார். இதனைக் கண்டித்த பாஜக.,வைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி, சாதிப் பிரச்னையை கிளப்பும் ஒருவரை ஓர் ஊடக நெறியாளர் கண்டிக்காமல் அதை மேலும் மேலும் அனுமதிப்பது, குறிப்பிட்ட சாதி, மதத்தினரை அவமதிப்பது போலானது என்றார். இந்த வாக்குவாதம் வெகு நேரம் நீண்டதால், விவாதம் பாதியிலேயே முடித்து வைக்கப் பட்டது.

இந்நிலையில், யோகா – ஒரு மதத் திணிப்பு; ஹிந்தி – ஒரு மொழித் திணிப்பு என்றெல்லாம் கூறி நாட்டில் பிரிவினையை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும் திராவிடக் கட்சிகள், திக.,போன்றவர்களுக்கு நடுநிலையாளர்களும் பொதுமக்களும் தங்கள் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பரவலாக இந்த விஷயம் பேசப் பட்டது. தமிழ்ப் பாட நூல்களில் இனவெறியுடன் பேசிய ஈ.வே.ராமசாமி நாயக்கரை, தமிழர்களையும் தமிழையும் இந்திய இறையாண்மையையும் இழித்தும் பழித்தும் பேசியதை எல்லாம் மறைத்து அவரை பெரியார் என்ற அளவில் பள்ளிப் பிள்ளைகளிடம் திணிப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தங்கள் கட்சிக்காக, தங்கள் சொத்துக் குவிப்புகளுக்காக அரசியலில் ஈடுபட்டு ஆட்சிக்கு வந்தவர்களை பொதுவான போராளிகள் போன்று சித்திரித்து, இவர்களை விட்டால் தமிழகத்தில் ஆளே இல்லை என்னும் அளவுக்கு பாட நூல்களில் திணித்து, அதை பெரும்பான்மை மக்களும் படிக்க வேண்டும் என்பது என்ன நியாயம் என்று கேள்வி எழுந்துள்ளது. யாரோ ஒரு சிலர் தங்கள் இயக்கங்களுக்குள் வைத்துக் கொள்ள வேண்டிய கடவுள் மறுப்புக் கொள்கைகளை பொதுவில் திணிக்கும் ஊடகங்களின் போக்கு மட்டும் திணிப்பில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழக காட்சி ஊடகங்களின் ஆபத்தான போக்கு என முகநூல் பதிவுகளில் வலம் வரும் கருத்து…

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் யோகா தின ” கேள்வி நேரம் ” நிகழ்ச்சியில் தலைப்பை புறந்தள்ளி , புளுகு மூட்டை குப்பைகளை கிளறினர்.நிகழ்ச்சி இடையிலேயே நிறுத்தப்பட்டது. ஆம்,ஒரு கட்டத்தில்…. ..Narayanan Thirupathy (BJP) விவாதத்தில் தொடர்ந்து எச்சரித்தும் கேட்காததால், தட்டிக்கேட்டு நிகழ்ச்சி தொடரமுடியாமல் இடையிலேயே நிறுத்தப்பட்டது.

யோகா குறித்த விவாத நிகழ்ச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டவரை அழைத்து பேசவைத்து, ஜாதிகளின் பேரால் திட்டமிட்ட வகையில் , இந்து ஒற்றுமை வேள்விக்கு குந்தகம் விளைவிக்க இருந்த , வீணர்களின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது.
தேசிய சிந்தனை கருத்தாளர்கள் ,விழிப்புடன் இருந்து பிரிவினை சக்திகளின் நச்சுரைகளுக்கு இனி கிஞ்சித்தும் இடந்தரலாகாது.

தமிழகம் வன்முறையாளர்களிடமும், நக்சலைட்டுகளிடமும் ,சிக்கி சீரழிய அனுமதிக்கக் கூடாது. துணிந்து நின்று எதிர்த்து செல்லவேண்டும். வில்லினை எடு வீரா……!

இந்நிலையில், தனது பேஸ்புக் பதிவுகளில் நாராயணன் திருப்பதி முன்வைத்துள்ள கருத்து…
வருந்துகிறேன்.
ஒரு சில ஊடகங்களில் பணியாற்றும் நெறியாளர்கள் (?) தங்களது முகநூல் பக்கத்தில் பாஜகவையும், பிரதமரையும் படு கேவலமாக விமர்சித்து பதிவிடுகிறார்கள் அல்லது அரசின் திட்டங்களுக்கு எதிரானவர்களாக, பாஜக வுக்கு எதிரானவர்களாக தங்களை அடையாளப்படுத்தி கொள்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களின் நெறியாள்கையில் பாஜகவினர் விவாதம் செய்யும் போது அவர்களுக்கும் உரிய பதிலை கொடுக்க தான் வேண்டியிருக்கிறது. அவர்களின் என்ன ஓட்டங்கள் தான் முகநூலில் வெளி வருகிறது. அவர்களை நடுநிலையாளர்களாக ஏற்க முடியாது போகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஊடக தர்மம் என்பதையும், கருத்து சுதந்திரத்தையும் ஒரு சேர அனுபவிக்க முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும். தங்களின் கடமையா? தங்களின் கொள்கையா? எது முக்கியம் என்பதை பகுத்தறிந்து செயல்படும் பல ஊடகவியலாளர்கள் இருக்க தான் செய்கிறார்கள், என் முக நூல் நட்பிலும்.

இளைய தலைமுறையை, அனுபவமில்லாதவர்களை வழிநடத்தவேண்டிய அவசியமும், அவசரமும் அவர்களுக்கு இருக்கிறது . வழி நடத்துவார்களா?
(குறிப்பு : அவதூறான, அர்த்தமற்ற, ஆபாசமான விமர்சனங்களை தவிர்க்கவும். என் முகநூல் நட்பில் இருக்கும் ஒரு சிலருக்கான பொதுவான கோரிக்கை இது)

“கொஞ்ச காலமாகவே தொலைக் காட்சிகளில் பங்கேற்கும் பா.ஜ.க.வினர் – அதிலும் பார்ப்பனர்களின் பேச்சுத் தொனி அத்துமீறித்தான் சென்று கொண் டிருக்கிறது. நேயர்களும் இதனைக் கவனித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்” : விடுதலை நாளிதழில்.
ரொம்ப காலமாகவே தொலைக் காட்சிகளில் பங்கேற்கிற முற்போக்குகள், தி க வினர் அதிலும் இடது சாரியினரின் பேச்சு தொனி அத்துமீறித்தான் சென்று கொண்டிருந்தது. நேயர்களுக்கு இதனைக் கவனித்து கொண்டுதானிருந்தார்கள்.

சரக்கு இல்லாத வெறுமையான நிலை யில், சத்தம் கொடுக்கிறார்கள் – அடுத்த வர்களைப் பேசவிடாமல் காட்டுக் கூச்சல் போடுவது என்பதெல்லாம் கடைந்தெடுத்த கோழைத்தனம்தானே! : விடுதலை நாளிதழில்.
எது கோழைத்தனம்? வயதான முதியவரின் பூணூலை அறுத்து அவரை காயப்படுத்துவது வீரமா? அல்லது சொந்த மனைவியை தாசி என்று சொல்லி அவர் பின்னால் காலிகளை அனுப்பியது கோழைத்தனமா?
கோழை கூத்தாடிகள் கோழைத்தனத்தை பற்றி பேசுவதா?

ஹிந்து கலாச்சாரத்தை கெடுத்தே தீருவோம் என்று கச்சைக்கட்டி அலையும் சிலர், இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளாக இருந்தாலும் சரி, அல்லது, ஹிந்து மத எதிர்பாளர்களாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும்.

கம்யூனிச (நக்சலைட்) தீவிரவாத, பிரிவினைவாத தாலிபான்களுக்கு விலைபோன தமிழக எதிர்க்கட்சிகள்- சான்று இதோ …
அன்புடையீர் வணக்கம்,
பா.ஜா.க ஊடக பங்கேற்பாளர் திரு. நாராயணன் அவர்களின் அத்துமீறல்களை கண்டித்து அனைத்து கட்சி ஊடகபங்கேற்பாளர்களின் கூட்டம் இன்று மாலை23 | 06/17 மாலை3.15 மணிக்கு கீழ்கண்ட முகவரியில் நடைபெற உள்ளது தாங்கள் அவசியம் கலந்து கொண்டு உங்கள் கண்டனத்தை பதிவு செய்ய அழைக்கிறோம்

இந்நிலையில், இது குறித்து நடிகரும் பாஜக.,வைச் சேர்ந்தவருமான எஸ்.வி. சேகர், தாம் இந்த நிகழ்ச்சியை அடுத்து என்ன நடவடிக்கை எடுத்தேன் என்று வாட்ஸ் அப் வாயிலாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.

அதில், நாராயணன் பேசிய பேச்சை அடுத்து, கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் கூட்டம் போட்டு, நாராயணன் விவாதங்களில் கலந்து கொண்டால் தங்கள் தரப்பில் இருந்து யாரும் கலந்து கொள்ள மாட்டோம் என்று மிரட்டுவதையும், அதில் திமுக.,வைச் சேர்ந்தவர் பங்கேற்பதும், பிராமண எதிர்ப்பை திமுக., கைக்கொண்டிருப்பது, திமுக.,வின் கொள்கையா என்றும் மு.க.ஸ்டாலினிடம் பேசியதும், அதற்கு உடனே ஸ்டாலின் நடவடிக்கை எடுத்ததையும் பாராட்டியுள்ளார். மேலும், நியூஸ் 7 சேனல் உரிமையாளர் வைகுண்டராஜனிடம் பேசி, தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளார். அவருக்கும் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ வித்யா மந்திரம் கேட்டு வந்த வாலிபனுக்கு ‘ஸ்ரீ’யே (பெரியவா) ‘வித்யை’ (வித்தை) காட்டி விட்டாள்

kanchi periyava - 2026

“ஸ்ரீ வித்யா மந்திரம் கேட்டு வந்த வாலிபனுக்கு ‘ஸ்ரீ’யே (பெரியவா) ‘வித்யை’ (வித்தை) காட்டி விட்டாள்”

(ஆணவமாக வந்த வாலிபன்,பாலகனாக மனமகிழ்ச்சியுடன் சென்ற நிகழ்ச்சி)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-122 தட்டச்சு-வரகூரான் நாராயணன்

புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

இளம் வயதுப் பையன். பழத்தட்டுடன் வந்து பவ்யமா நமஸ்காரம் செய்தான்.பெரியவாளுக்கு.

“நீங்கதான் என்னோட குரு” என்றான்.

ரொம்பப் பேர், அப்படி சொல்லிண்டிருக்கா!” உதடு பிரியாத புன்னகையுடன் பெரியவா.

“நான் அப்படியில்லே. உங்களைக் குருவாக வரித்து விட்டேன். எனக்கு ஸ்ரீ வித்யா ஷோடசி மந்த்ரம் உபதேசம் பண்ணணும். என்னைப் பரம சாக்தனாக ஆக்கணும். ஜான் வுட்ராஃபின் தந்திர நூல்களையெல்லாம் படிச்சு முடிச்சுட்டேன். Serpent Power எனக்கு நெட்டுருவே ஆயிடுத்து…”

பெரியவாள், நிதானமாகக் கேட்டார்கள்.;
“நீ இப்போ என்ன சாதனை பண்ணிண்டிருக்கே?”

“லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், சௌந்தர்யலஹரி, மூக பஞ்சசதி,ஆனந்த ஸாகர ஸ்தவம்,சியாமளா தண்டகம்…”

“இதுபோறும்.அம்பாளைத் தியானம் செய்…”-பெரியவா

பையனுக்கு எரிச்சலாக வந்தது. சாக்தத்தில், தான் இவ்வளவு ஊறியிருந்தும் பெரியவா, மந்திரோபதேசம் செய்ய ஏன் மறுக்கிறார்? என்பது  புரியவில்லை. தன்னைப்போன்று,தகுதி வாய்ந்த அபூர்வமான பாத்திரம் வெகு அருமையாகத்தானே கிடைக்கும்.

“பெரியவா எனக்குக் கட்டாயமா மந்திரோபதேசம் செய்யணும். அதற்காகவே நாள் பார்த்துக்கொண்டு இன்றைக்கு வந்திருக்கேன் உபதேசம் பெறாமல் போக மாட்டேன்” என்றான் கடுமையான குரலில்.

பெரியவாள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள்.

“உனக்குப் பசிக்கிறதா?”–பெரியவா

“இல்லே..”–பையன்

“பசி எடுத்தா என்னென்ன சாப்பிடுவே?”

“சாதம்,குழம்பு, கூட்டு,கறி, அவியல், அப்பளம்,ரசம்,மோர்..”

“உங்கம்மா, நீ பிறந்த அன்றைக்கே சாதம் போட்டாளா?”

“இல்லை. பால்தான் கொடுத்தா…”

“அப்புறம்,கொஞ்சம் கொஞ்சமா சாதத்தையும் பருப்பையும் வெழுமூணா பிசைஞ்சு ஊட்டினாள். அப்புறமா இட்லி, தோசை. சாம்பார்,வெண்டைக்காய் கறி,புடலங்காய்க் கூட்டு..
இப்படித்தானே?”–பெரியவா.

“ஆமாம்..”–பையன்.

“ஏன், அப்படிச் செய்தா? பொறந்த உடனேயே சாதம் ஊட்டியிருக்கலாமே?”–பெரியவா

“ஜீரணம் ஆகாது; குழந்தைகளுக்கு ஒத்துக்காது; கெடுதல் பண்ணும்…”–பையன்.

இடையில்,யார் யாருக்கோ பிரசாதம் கொடுத்தார்கள்; குறைகளைக் கேட்டு ஆறுதல் கூறினார்கள்; ஸ்ரீ மடம்அ லுவல்களை உத்தரவிட்டார்கள். பின்னர், பையனைப் பார்த்தார்கள்.

“மந்திரங்களுக்கு ஜீவசக்தி உண்டு; கண்ணுக்குத் தெரியாத தெய்விக அலையாக தேகம் முழுவதும் பரவும். அதை, குழந்தைகளாலே தாங்கிக்க முடியாது.பால் குடிக்கிற அதே குழந்தை, தக்க வளர்ச்சி ஏற்பட்டதும் சாதம், சாம்பார் சாப்பிடும்.”–பெரியவா

“உனக்கு இப்போது பால பருவம்; பால் பருவம்; காத்திண்டிரு. சாதப் பருவம் வரும்.அப்போது உனக்குச் சாதம் ஊட்டுவதற்கு, ஒருவர் வந்து சேருவார்.”–பெரியவா.

ஸ்ரீ வித்யா மந்திரம் கேட்டு வந்த வாலிபனுக்கு ‘ஸ்ரீ’யே (பெரியவா) ‘வித்யை’ (வித்தை) காட்டி விட்டாள்.

ஆணவமாக வந்த வாலிபன்,பாலகனாக மனமகிழ்ச்சியுடன் சென்றன்.

பொன்னுசாமி ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்கிறார் கே.டி.ராஜேந்திர பாலாஜி

IMG 20170625 WA0026 - 2026

பொன்னுசாமி ஒரு “டுபாக்கூருங்க” என ன்பேசினார் கேடி.ராஜேந்திர பாலாஜி.

தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி
ஒரு டுபாகூருங்க. அவர் பால் முகவரே அல்ல. அவரது சங்கம் ஒரு டூப்ளிகேட் சங்கம்
என ‘தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கொந்தளிப்புடன்
கூறியுள்ளார் .

‘தனியார் பாலில் ரசாயனக் கலப்படம் இல்லை என்று நிரூபித்தால், அமைச்சர்
பதவியிலிருந்து விலகவும், தூக்கில் தொங்கவும் தயார்’ என அதிரடியாக வீராப்புடன்
பேசிய ‘தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி, தனது அமைச்சர்
பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்’ எனத் தமிழ்நாடு பால் முகவர்கள்,
தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தொடர்ந்து வலியுறுத்தி
வருகிறார்

இந்த நிலையில் இது குறித்து சிவகாசியில் கேடி .ராஜேந்திர பாலாஜி
செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

என்னை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமாச் செய்யச் சொல்லும் பால் முகவர்கள்
சங்கத் தலைவர் பொன்னுச்சாமி என்பவர் பால் முகவரே அல்ல. அவரது சங்கம் ஒரு
டூப்ளிகேட் சங்கம். அவரு டுபாகூருங்க. தனியார் பால் நிறுவனங்கள் அவரைப்
பணத்தால் விலைக்கு வாங்கி பேச வைக்கின்றன.

தனியார் பால் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட புனே, கிண்டி ஆய்வகங்களுக்குச் சென்று
பால் கலப்படச் சோதனையை தடுத்து நிறுத்துவதாக பல முயற்சிகளில் சில நிறுவனங்கள்
ஈடுபட்டு வருகின்றன. அதையெல்லாம் முறியடித்து காலப் போக்கில் தவறு உறுதி
படுத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் பாலில் ரசாயனக் கலப்படம் விவகாரத்தில் என்னை தார்மீகப் பொறுப்பேற்று
தனியார் தொலைக்காட்சியில் தோன்றி பதவி விலகச் சொல்லும் முன்னாள் அமைச்சர்
வைகைச் செல்வன், தன் மேல் உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியில் அவ்வாறு
பேசிவருகிறார்
வைகைச் செல்வன் ஐநூறு ரூபாய் பணத்திற்குப் பேசும் கூலிப் பேச்சாளர் என்று
கேடி.. ராஜேந்திர பாலாஜி கூறினார்

ஜிஎஸ்டி., வரிவிதிப்பால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன் உறுதி

Nirmala Sitharaman - 2026
Central Minister Nirmala Sitharaman

சென்னை:
ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலைவாசி உயராது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக, சென்னை வணிகர்களின் கருத்துக்களை அறிய, சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சரக்கு சேவை வரி குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி-யில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் பிரதமர் மோடியால் திணிக்கப்படவில்லை. நாடு முழுவதும் வரும் ஒன்றாம் தேதி முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வர உள்ளது. ஜிஎஸ்டி குறித்து தமிழகத்தில் உள்ள வணிகர்கள் உட்பட அனைவரின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்து வருகிறோம். வரி செலுத்தும் முறையில் குறைபட்டுக் கொண்டு ஜிஎஸ்டியை குறை சொல்ல வேண்டாம். ஜிஎஸ்டி வரிவிதிப்பால் நிச்சயமாக விலை வாசி உயராது. ஆட்களை வைத்து பதிவு செய்த வரி விகித முறை கணினி மூலம் பதிவேற்றப்படும் என்று கூறினார்.

கூட்டங்கள் நடத்தி வணிகர்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். ஜி.எஸ்.டி வரி குறித்த சந்தேகங்களுக்கு இணையதளத்தில் தெளிவான விளக்கங்கள் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். மேலும் பிராண்ட் பெயர் இல்லாமல் விற்பனை செய்யும் பொருட்களுக்கு வரி கிடையாது என்றும், சிறந்த ஒத்துழைப்பை நல்கி வரும் தமிழக அரசுக்கு நன்றியும் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜிகாதி தாக்குதல் !

IMG 20170625 WA0019 - 2026

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்தில் உள்ளது மார்த்தால் !

ஹிந்துக்கள் மட்டுமே வசிக்கும் தெருவில் ஜூன் 24 மாலை 4 மணி அளவில் வேகமாக
இரு சக்கர வாகனம் ஓட்டி ஆரவாரம் செய்த திட்டுவிளை முஸ்லிம் இளைஞர்களை
அப்பகுதிப் பெண்கள் கண்டித்தனர் !

தேவையில்லாமல் ஏன் எங்கள் பகுதிக்குள் நுழைந்து போக்குவரத்துக்கும்,
நடப்பவர்களுக்கும் இடைஞ்சல் செய்கிரீர்கள் என்று மாலை 7.30 மணிக்கு மீண்டும்
அதே பகுதிக்குள் புகுந்த முஸ்லீம் இளைஞர்களைக் கண்டித்தனர் ஹிந்து இளைஞர்கள் !

இரவு 10 மணிக்கு அறிவாள் , கம்பி , கட்டையுடன் 40 முஸ்லிம் இளைஞர்கள்
மார்த்தால் ஹிந்துத் தெருவில் புகுந்து கொலைவெறித் தாக்குதல் !

தகவல் கொடுத்தும் தாமதமாக வந்தது போலீஸ் !

கண்ணன் , விஜயன் , சங்கர் என்ற 3 ஹிந்து இளைஞர்கள் ஆசாரிபள்ளம் அரசு
ஆஸ்பத்திரியில் அனுமதி !

வழக்கம்போல , பாதிக்கப்பட்ட ஹிந்துக்கள் மீது போலீஸ் வழக்குப் பதிவு !

ஜூன் 1 கம்பத்தில் ஹிந்துக்கள் மற்றும் போலீசார் மீது தாக்குதல் !

ஜுன் 6 சென்னை சூளைமேட்டில் வாசுதேவன் என்ற மனநிலை பாதிக்கப்பட்டவர்
ஐ.எஸ்.ஐ.எஸ் பாணியில் கல்லெரிந்து கொலை !

ஜுன் 19 சென்னை ஆவடியில் ஸ்னேகா என்ற ஹிந்துப் பெண் சாதிக் பாட்சா என்பவரைத்
திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் கத்தி முனையில் கடத்தல் !

ஜுன் 22 , இராமநாதபுரத்தில் சட்டவிரோத மசூதியை அப்புறப்படுத்த புகார் கொடுத்த
அஷ்வின் மீது கொலை வெறித் தாக்குதல் !

ரம்ஜான் மாதத்தில் கைது செய்யக் கூடாது என்ற நீதிபதிக்கு , ரம்ஜான் மாதத்தில்
தொடரும் கலவரங்களுக்கும் இஸ்லாம் காரணம் என்று சொல்லும் துணிவு உண்டா ?

ரம்ஜான் மாதமும் , அதைத் தொடரும் மாதமும் கலவரங்களுக்கு லைசன்ஸ் கொடுக்கப்பட்ட
மாதங்களாக மாறி வருகிறது !

தமிழகம் ஐ.எஸ்.ஐ.எஸ் நாடாக மாறி வருகிறது !