Home Blog Page 5640

தமிழக அரசின் ஆலோசகர் பதவியில் இருந்த பவன் ரெய்னா ராஜினாமா ஏற்பு

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

சென்னை:

தமிழக அரசின் ஆலோசகர் பதவியை பவன் ரெய்னா கடந்த 12ஆம் தேதி கடிதம் வாயிலாக ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமாவை இன்று அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இரட்டை இலை சின்னத்தை மீட்பது தொடர்பான விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து பவன் ரெய்னா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தமிழக அரசின் ஆலோசகராக பவன் ரெய்னா தில்லியில் பணிபுரிந்து வந்தார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பவன் ரெய்னா தமிழக அரசின் ஆலோசகராக செயல்பட்டார். இவர் தமிழகம் மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான பாலமாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் இரட்டை இலை முடக்கப்பட்ட பின்னர், அதனை மீட்க எடுத்த முறைகேடான நடவடிக்கைகளில் அவருக்கு தொடர்பாக இருந்தார் புகார் எழுந்தது. இதையடுத்து தில்லி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் பவன் ரெய்னா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை கடந்த 12ஆம் தேதியே அனுப்பி வைத்தார். அந்தக் கடிதத்தின் அடிப்படையில் தமிழக அரசு அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளதாக இன்று அறிவித்தது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: விருதுநகர் மாவட்டம் முதலிடம்!

- 2026

சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில், விருதுநகர் மாவட்டம் 98.55 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றது.

கடந்த மார்ச் மாதம் நடந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழகம் முழுவதும் 9 லட்சத்து 94,167 மாணவ, மாணவியர்கள் தேர்வுகளை எழுதினர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் போலவே, பத்தாம் வகுப்பு தேர்விலும், மாநில, மாவட்ட அளவிலான முதல் 3 இடங்கள் அறிவிக்கப்படாமல், கிரேடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது,.

இதில் 481 மதிப்பெண்களுக்கு மேலாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு ஏ கிரேடு கிடைத்துள்ளது.

451 முதல் 480 வரை 1,22,757 மாணவர்களுக்கு பி கிரேடு கிடைத்துள்ளது.

426 முதல் 450 வரை 1,13,8311 மவர்களுக்கு சி கிரேடு கிடைத்துள்ளது.

401 முதல் 425 வரை 1,11,266 டி கிரேடு கிடைத்துள்ளது.

301 முதல் 400 வரை மதிப்பெண் பெற்ற 3,66,948 மாணவர்களுக்கு இ கிரேடு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 94.4% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 92.5% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 96.2% மாணவர்களை விட மாணவிகளை இந்த ஆண்டும் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 0.8% கூடுதல் ஆகும். 5059 பள்ளிகள் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். 5059 பள்ளிகளில் 1557 அரசு பள்ளிகள் அடங்கும்.

விருதுநகர் மாவட்டம் முதலிடம்

98.55% தேர்ச்சி பெற்று தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.59 ஆக உள்ளது. மேலும் கடலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடம் பிடித்துள்ளது.

* தமிழ்நாட்டில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 97.85 சதவீதம்
பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.
* கன்னியாகுமரி மாவட்டம் 2-வது இடம்- 98.17% தேர்ச்சி
* ராமநாதபுரம் மாவட்டம் 3-வது இடம்- 98.16% தேர்ச்சி
* ஈரோடு மாவட்டம் 4-வது இடம்- 97.97% தேர்ச்சி
* தூத்துக்குடி மாவட்டம் 5-வது இடம்- 97.16% தேர்ச்சி

பாட வாரியாக 100க்கு 100

* தமிழ் பாடத்தில் 69 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
* கணக்கு பாடத்தில் 13759 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
* அறிவியல் பாடத்தில் 17481 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்
* சமூக அறிவியல் பாடத்தில் 61,115 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றனர்.
* ஆங்கிலப் பாடத்தில் யாரும் முழு மதிப்பெண் எடுக்கவில்லை.

தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

10 லட்சம் மாணவ, மாணவியருக்கு உடனடியாக அவர்களின் செல்போனுக்கு முடிவு அனுப்பி வைக்கப்பட உள்ளன. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் தேர்வு முடிவு தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். அவர்கள் குறிப்பிட்டு கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவு உடனே அனுப்பி வைக்கப்படும். தனித் தேர்வர்களும் செல்போனில் தெரிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றுகளை 25ம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அந்தந்த தேர்வு மையங்களிலும் பதிவிறக்கம் செய்யலாம்.

தேர்வு முடிவுகளை
https://www.tnresults.nic.in,
https://www.dge1.tn.nic.in,
https://www.dge2.tn.nic.in இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு தில்லி உயர்நீதிமன்றம் சம்மன்

maran brothers - 2026
புதுதில்லி:

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், மாறன் சகோதரர்களுக்கு தில்லி உயர் நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

கடந்த 2004 முதல் 2007 வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அப்போது தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி, அவரது ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாக தயாநிதி மாறன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கு பிரதிபலனாக, தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் டைரக்ட் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் சட்டவிரோதமாக முதலீடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த 2011-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. மேலும், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை யும் வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கினை, 2ஜி ஊழல் வழக்கை விசாரித்து வரும் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

இதனிடையே, இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி மாறன் சகோதரர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி, இவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவித்து கடந்த பிப்ரவரி 2-ம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், “ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இதில் மாறன் சகோதரர்களுக்கும் தொடர்பு உள்ளது. இதற்கு ஆதாரங்கள் சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மாறன் சகோதரர்களை வழக்கிலிருந்து விடுவித்துள்ளது. எனவே மாறன் சகோதரர்களை இந்த வழக்கில் சேர்க்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த மறு சீராய்வு மனுவை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், மாறன் சகோதரர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்: ரஜினிகாந்த்

rajinikanth3 - 2026

சென்னை:

சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து வரும் ரசிகர்களை அவர் சந்தித்து புகைப்படம் எடுத்து வந்தார்.

இதனிடையே ரசிகர்களுடனான சந்திப்பின் போது அவர் பேசியது பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. குறிப்பாக தனது ரசிகர்களிடம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அரசியலுக்கு வரக்கூடாது என அவர் கோரிக்கை வைத்தார்.

நான் கர்நாடகத்தில் 23 வருடங்கள் வாழ்ந்தேன். ஆனால் தமிழகத்தில் 43 வருடங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நான் கர்நாடகத்தில் இருந்து வந்திருந்தாலும் நீங்கள் என்னை வரவேற்று ஏற்றுக் கொண்டீர்கள். என்னை உண்மையான தமிழனாக ஆக்கியிருக்கிறீர்கள். எனக்கு என்று சில கடமைகள், பணிகள் இருக்கின்றன. அதுபோல் உங்களுக்கும் நிறைய கடமைகள், வேலைகள் இருக்கும். முதலில் அதை சரியாகப் பார்ப்போம். ஆனால், எப்போது போர் வருமோ அப்போது பார்த்துக் கொள்வோம்… என்று குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.

ஓ.பன்னீர்செல்வம் தில்லி பயணம்: பிரதமருடன் சந்திப்பு?

modi pannerselvam - 2026
கோப்பு புகைப்படம்: பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம்

புது தில்லி:

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு திடீரென தில்லிக்கு பயணம் மேற்கொண்டார். இன்று மாலை பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே தில்லியில் உள்ள மைத்ரேயன் எம்.பி., யின் இல்லத்தில் இன்று முற்பகல் 12.15க்கு செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அதற்கு முன்னதாக தேர்தல் ஆணையர் அலுவலகத்துக்குச் சென்று சில கோப்புகளை அதிமுக புரட்சித் தலைவி அம்மா பிரிவினர் வழங்க உள்ளனர் என்று தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், இதுவரை அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், மாலை 4 மணிக்கு பிரதமரைச் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக மைத்ரேயன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க இரண்டாக பிளவடைந்ததையடுத்து அக்கட்சியின் புரட்சித்தலைவி அம்மா அணியின் பொருளாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தற்போது, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்களது அணிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

பிரதமர் மோடியை சந்திக்க பயணம் மேற்கொண்டுள்ள ஓ.பன்னீர் செல்வம் உடன் மசூதனன், மைத்ரேயன் ஆகியோரும் செல்கின்றனர். பிரதமர் உடனான சந்திப்பின் போது, குடியரசுத் தலைவர் தேர்தலின் போது, தங்கள் அணி மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் என்றும், தமிழக அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்தும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இன்னொரு அணியான எடப்பாடி அணியினரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக.,வுக்கு ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஓபிஎஸ் அணி, முந்திக்கொண்டு பிரதமரைச் சந்திக்கவுள்ளது என்று தில்லி வட்டாரத்தில்  பரபரப்பாகப் பேசப்படுகிறது.

பேஸ்புக் நிறுவனத்துக்கு 122 மில்லியன் யூரோ அபராதம்

WhatsApp To Merge With Facebook Messenger - 2026

லண்டன்:

பேஸ்புக் நிறுவனத்துக்கு 122 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியை கைப்பற்றியது தொடர்பான விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனத்திற்கு 122 மில்லியன் அபராதம் விதித்தது ஐரோப்பிய யூனியன். இது, இந்திய மதிப்பில் ரூ.773 கோடி ஆகும்.

பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியை பேஸ்புக் நிறுவனம் கைப்பற்றும் போது தவறான தகவல்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதாக பேஸ்புக் மீது கடந்த 2014 ஆம் ஆண்டு புகார் எழுந்தது.

இதுதொடர்பான புகாரை விசாரித்து வந்த ஐரோப்பிய யூனியன், பேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது. நிறுவனங்கள் கைப்பற்றப்படும் போது ஏற்படும் போட்டிகள் குறித்து விரிவான தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறையே வழங்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்துள்ள பேஸ்புக் நிறுவனம், கடந்த 2014 ஆம் ஆண்டு நாங்கள் பதிவு செய்த தகவல்களில் சில தவறுகள் தெரியாமல் நடந்துவிட்டன எனக் கூறியுள்ளது.

 

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்க 424 பேராசிரியர்கள் முடிவு

anna university chennai - 2026

சென்னை :

அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்க 424 பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். துணை வேந்தர் நியமிக்கப்படாமல் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு பேராசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்கக்கோரி மேல் முறையீடு செய்வோம் என்று பேராசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

முன்னதாக, துணை வேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழாவை நடத்தக்கூடாது என்று கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நடிகை வனிதா விஜயகுமார் மீது குழந்தை கடத்தல் புகா

vanitha vijayakumar - 2026

சென்னை:

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார், தனது குழந்தையை தானே கடத்திவிட்டதாக அவரது முன்னாள் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் ஆனந்த்ராஜ் நேற்று ஆந்திர மாநில காவல்துறையில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், எனக்கும் வனிதாவுக்கும் கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் 2012-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக இருவரும் விவகாரத்து பெற்றோம். எங்களது குழந்தை ஜெய்நிதா, என் வசம் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் அவ்வப்போது வந்து குழந்தையைப் பார்த்துச் செல்லும் வனிதா ஏப்ரல் முதல் வாரத்தில் குழந்தை ஜெய்நிதாவை என் அனுமதி பெற்று அழைத்துச் சென்றார். ஆனால் குறித்த காலத்திற்குள் மீண்டும் குழந்தையை கொண்டு வந்து என்னிடம் சேர்க்கவில்லை. தொலைபேசியில் அழைத்தாலும் பதிலில்லை. எனவே வனிதா மீது குழந்தையைக் கடத்திய பிரிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்… என்று தெரிவித்தார்.

 

இன்று வெளியாகிறது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

exam hall - 2026

சென்னை:
தமிழகம், புதுவையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இத்தேர்வை 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். ஏற்கெனவே அறிவித்தபடி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வு துறை இயக்குனர் தண்.வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்படும். அரசின் இணைய தளங்களில் வெளியிடுவதோடு மாணவ-மாணவிகளின் செல்போன்கள் வழியாகவும் தெரிவிக்கப்படும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். தேர்விற்காக பள்ளிகள் மூலமாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு முடிவு தெரிவிக்கப்படும். மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
tamil-nadu-sslc-results-announced-today

இருதய சிகிச்சை இலவசமாக அளிக்கும் சத்ய சாய் மருத்துவமனை

satyasai heart hospital rajkot - 2026

ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை, ராஜ்கோட் “பணமே இல்லாமல் இருதய சிகிச்சை” என்று பிரபலமாக உள்ளது, பணம் செலுத்தும் இடம் என்பதே இந்த மருத்துவமனையில் இல்லை.

ஒரு இருதய அறுவை சிகிச்சைக்கு, மூன்றிலிருந்து நான்கு இலட்சங்களுக்கிடையே செலவு ஆகும் என்று, நாம் அனைவரும் அறிவோம் ,

ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனை, ராஜ்கோட், கடந்த 17 ஆண்டுகளாக இலவசமாக எல்லா இருதய நோய்களையும் குணப்படுத்தி வருகிறது.

80 படுக்கைகள் கொண்ட, இந்த மருத்துவமனையில் ஏற்கனவே பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சோதனை செய்து உள்ளனர், மற்றும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விலை உயர்ந்த இருதய அறுவை சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டு உள்ளது

தன்னலமற்ற அதே சேவை தீர்மானத்தோடு ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை இப்பொழுது கஷின்ரா,, அகமதாபாத்தில் , விரைவில் துவங்க போகிறது

இந்த புதிய மருத்துவமனையில், இருதய பிரச்சினைகளை கொண்ட 3 முதல் 18 வயது, குழந்தைகளுக்கு, இலவச அறுவை சிகிச்சையில் முன்னுரிமை வழங்கப்படும்

இந்த மருத்துவமனையில் சமீபத்திய மற்றும் நவீன இயந்திரங்கள், அனைத்து வசதிகள் மற்றும் உபகரணங்கள் உள்ளன .

310 படுக்கைகள் வசதியுடன், வருடத்திற்கு சுமார் 3000 இருதய அறுவை சிகிச்சைகளை இலவசமாக செய்ய போகிறார்கள் .

இந்த மருத்துவமனையின் சேவை தேவைப்படும் இருதய நோயாளிகளுக்கு வழிகாட்டுவதன் மூலம், நீங்களும் இந்த தன்னலமற்ற சேவையில் பங்கு பெற முடியும்

முகவரி :

ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை

ஸ்ரீ சத்ய சாய் மார்க், களவாட சாலை, ராஜ்கோட் – 360005.

ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை
கஷின்ரா கிராமம், தாலுகா: தாசிசிரோய் , தோள்க சாலை,
மாவட்டம்: அகமதாபாத் – 382210
தொலைபேசி: 94260 58897/ 99250 34534
மின்னஞ்சல்: saihospital@gmail.com