Home Blog Page 5648

பாபரும் அக்பரும் இந்தியாவை ஆக்கிரமித்தவர்கள் என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும்: யோகி ஆதித்யநாத்

அக்பரும் பாபரும் படையெடுத்து வந்து நம் நாட்டை ஆக்கிரமித்தவர்கள் என்ற உண்மையை ஏற்க வேண்டும். மகாராணா பிரதாப் போன்ற தலைவர்கள் காட்டிய வழியை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்எ ன்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

 

16ஆம் நூற்றாண்டு மேவார் மன்னர் ராணா பிரதாப்பின் 477-வது பிறந்த நாள் விழா, லக்னோவில் நடைபெற்றது.

 

இந்த விழாவில் யோகி ஆதித்யநாத் பேசியது…

 

மகாராணா பிரதாப், குரு கோவிந்த் சிங், சத்ரபதி சிவாஜி ஆகியோர் நமது முன்மாதிரி தலைவர்கள். அவர்கள் காட்டிய வழியை நாம் பின்பற்ற வேண்டும்.

 

ராணா பிரதாப்பிடம் இருந்து சுயமரியாதை, வல்லமை, நற்பண்புகள் ஆகிய பாடங்களை இளைஞர்கள் கற்க வேண்டும். அக்பர், அவுரங்கசீப், பாபர் போன்றோர் நம் நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள். நாட்டை ஆக்கிரமித்தவர்கள்்.

 

எவ்வளவு விரைவில் இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொள்கிறோமோ அவ்வளவு விரைவில் நம் நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.

நம் நாட்டின் வளமான வரலாற்றை நாம் உயர்வாக மதிக்க வேண்டும். வளமான வரலாற்றை உயர்வாக மதிக்கும் திறனில்லா சமூகத்தால் தன் நில எல்லையை ஒருபோதும் பாதுகாக்க முடியாது…” என்று பேசினார்.

எடப்பாடி அரசு தானாகவே கவிழும்; சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரும்: மைத்ரேயன் எம்.பி.,

Maitreyan MP - 2026சென்னை:

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரும் என்றும், எடப்பாடி கவிழ்ந்து நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் வா.மைத்ரேயன் எம்.பி., கூறினார்.

அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் உங்களுக்காக டிரஸ்ட் நிறுவனர் டாக்டர் சுனில் ஏற்பாடு செய்திருந்த நீர்மோர் பந்தல் திறப்பு விழா தி.நகர் பனகல்பார்க் அருகே இன்று காலை நடைபெற்றது. இதை வா.மைத்ரேயன் எம்.பி. திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கிய பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், அதிமுக., இரு அணிகளின் இணைப்பு குறித்தும் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு பதில் அளித்த மைத்ரேயன், இரு அணிகள் இணைப்பு பற்றி தவறான தகவல்களை 2 அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். அந்த லாவணி கச்சேரிக்குள் நான் போக விரும்பவில்லை. நாங்கள் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் பற்றி கவலைப்படுகிறோம். 122 கூவத்தூர் எம்.எல்.ஏ.க்கள் பற்றி கவலைப்படவில்லை… என்று குறிப்பிட்டார். மேலும், சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரும். அதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் கூறினார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசியதிலிருந்து…

அ.தி.மு.க இரு அணிகளும் இணைவது என்பது, இரு தர்ப்பு பேச்சுவார்த்தையை பொறுத்து தான் அமையும். பேச்சுவார்த்தைக்கான அடிப்படை நிபந்தனைகளை ஓ. பன்னீர்செல்வம் விதித்துள்ளார். அந்த நிபந்தனைகளை நிறைவேற்றினால் பேச்சுவார்த்தைக்கு முகாந்திரம் அமையும். ஏற்கெனவே கழகத்தின் தாற்காலிக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்தது செல்லாது என்று தேர்தல் கமி‌ஷனில் நாங்கள் மனு கொடுத்திருக்கிறோம். அது குறித்து வாதங்கள் நடைபெற்று முடிந்து விட்டது. எனவே தேர்தல் ஆணையம் முடிவை விரைவில் அறிவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

தமிழ்நாட்டில் உள்ள கழகப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் என்று அனைத்து தரப்பு கழகத்தினரும் ஓ. பன்னீர் செல்வம் மீது நம்பிக்கை வைத்து பிரமாண பத்திரங்களை தேர்தல் கமி‌ஷனில் கொடுத்துள்ளோம். இது தொடர்ந்து நடைபெறும். விரைவில் ஓ. பன்னீர்செல்வம் வசம் இரட்டை இலை சின்னம் வரும்.

இந்த ஆட்சியைப் பொறுத்த வரையில் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை வைத்து சொல்லவில்லை. ஆட்சியின் அலங்கோலம், அமைச்சர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டு அதன் காரணமாக பாரம் தாங்காமல், இந்த அரசு தானாகவே கவிழும்.

அமைச்சர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு ரூ. 89 கோடி பணப்பட்டுவாடா சம்பந்தமாக 3 அமைச்சர்கள், தில்லி சிறப்பு பிரதிநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறையினர் தங்கள் பணியை தொடரவிடாமல் தடுத்ததாக போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் கொடுத்திருந்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

தற்போதைய ஆட்சியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க எந்த திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. மக்கள் ஆதரவும் இந்த ஆட்சிக்கு இல்லை. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் கழக தொண்டர்களை நம்புகிறோம். தமிழக மக்களை நம்புகிறோம் அது தான் எங்களது பலம்… என்று கூறினார் மைத்ரேயன்.

மெட்ரோ ரயில் ஸ்மார்ட் அட்டை கட்டணத்தை குறைக்க ராமதாஸ் வேண்டுகோள்

மெட்ரோ ரயில் ஸ்மார்ட் அட்டை கட்டணத்தை குறைக்க ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை…
சென்னை திருமங்கலம்- நேரு பூங்கா இடையிலான சுரங்கப்பாதையில் பெருநகர தொடர்வண்டி சேவை நாளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2015-ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்டிருக்க வேண்டிய இந்தச் சேவை இரு ஆண்டுகள் தாமதமாகத் தொடங்கப்படுகிறது.
சென்னை மாநகரில் போக்குவரத்து நேரிசலைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் பெருநகர தொடர்வண்டி சேவை தொடங்கப்பட்டது. ஆனால், அந்த நோக்கம் இன்றுவரை நிறைவேற வில்லை. இதற்குக் காரணம் பெருநகர தொடர்வண்டிக் கட்டணம் சாதாரண மக்களுக்கு கட்டுப்படியாகும் அளவில் இல்லாதது தான். ஏழை மக்களின் நலன் கருதி பெருநகர தொடர்வண்டி கட்டணங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வரும் நிலையில் நவீனம் என்ற பெயரில் இன்னும் கூடுதலான கட்டணத்தை நிர்ணயித்து, பெருநகர தொடர்வண்டியில் சாதாரண மக்கள் பயணம் செய்ய முடியாத நிலையை சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம்-நேரு பூங்கா இடையிலான சுரங்கப் பாதையில் பெருநகர தொடர்வண்டியில் ஸ்மார்ட் அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் தான் பயணம் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட் அட்டையின் குறைந்தபட்ச விலை ரூ.100 என்றும், தேவைக்கேற்ப ஸ்மார்ட் அட்டையில் பணத்தை நிரப்பி (றெசர்கெ) செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அவசரத் தேவைக்காக திருமங்கலம் முதல் அண்ணா நகர் வரை பயணம் செய்வதாக இருந்தால் கூட ரூ.100 கொடுத்து ஸ்மார்ட் அட்டை வாங்கி தான் பயணிக்க வேண்டும். சுரங்கப் பாதை தொடர்வண்டி சேவைக்கான கட்டணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் ரூ.,10 முதல் அதிகபட்சம் ரூ.40 வரை நிர்ணயிக்கப்படலாம் என்றும், நாளை நடைபெறும் விழாவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதன்படி, ரூ.10 கட்டணத்தில் பயணிக்க வேண்டிய தொலைவுக்கு ரூ.100 செலுத்த கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?
சென்னையில் பெருநகர தொடர்வண்டியில் வாடிக்கையாக பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 25 விழுக்காடு கூட இருக்காது. மீதமுள்ள 75% பயணிகள் அவசரத் தேவைக்காகவும்,. பெருநகர தொடர்வண்டியில் பயணிக்கும் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை அறிவதற்காகவும் தான் பயணம் செய்கிறார்கள். வாடிக்கையாக பயணிக்கும் பயணிகளுக்கு ஸ்மார்ட் அட்டை முறை மிகவும் வசதியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ஒரே ஒருமுறை பயணம் செய்பவர்களும் ரூ.100 கொடுத்து ஸ்மார்ட் அட்டை வாங்க வேண்டும் என நிர்பந்திப்பது முறையல்ல. பெருநகர தொடர்வண்டியை சாதாரண மக்கள் பயன்படுத்துவதை இந்த அணுகுமுறை தடுத்துவிடும்.
சென்னை கோயம்பேடு – விமான நிலையம் இடையிலான பெருநகர தொடர்வண்டியில் பயணிக்க உரிய கட்டணத்தை செலுத்தினால் அதற்குரிய டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. அவற்றைக் கொண்டு தொடர்வண்டி நிலையத்திற்குள் நுழையவும், பயணிக்கவும் முடியும். அதேபோன்ற அணுகுமுறையை திருமங்கலம் & நேரு பூங்கா இடையிலான சுரங்கப்பாதை சேவையிலும் கடைபிடிக்கலாம். இல்லாவிட்டால், பயணக் கட்டணத்துடன் ஸ்மார்ட் அட்டை தயாரிப்புச் செலவையும் சேர்த்து வசூலிக்கலாம். உதாரணமாக, ஸ்மார்ட் அட்டையின் தயாரிப்பு செலவு ரூ.10 என வைத்துக் கொண்டால், திருமங்கலம் – அண்ணாநகர் இடையிலான ரூ.10 கட்டணத்துடன் தயாரிப்பு செலவையும் சேர்த்து ரூ.20 என வசூலிக்கலாம். இது மக்களுக்கு பெரிய சுமையாக இருக்காது. மாறாக ஒருமுறை பயணிப்பதற்குக் கூட ரூ.100க்கு ஸ்மார்ட் அட்டை வாங்க வேண்டும் என்பது சாதாரண மக்களின் பணத்தை பறிக்கும் செயலாகவே அமையும்.
கோயம்பேடு -விமான நிலையம் இடையிலான பெருநகர தொடர்வண்டி சேவை தொடங்கப்பட்ட போதே அதற்கான கட்டணம் மிகவும் அதிகம் என்ற முணுமுணுப்பு மக்களிடம் எழுந்தது. கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த போது, பெருநகர தொடர்வண்டி சேவை விரிவாக்கம் செய்யப்படும் போது கட்டணம் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு மாறான செயல்களில் சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனம் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. எனவே, ஸ்மார்ட் அட்டைக்கான கட்டணத்தையும், பயணிகள் கட்டணத்தையும் அடித்தட்டு மக்களுக்கும் கட்டுபடியாகும் வகையில் குறைக்க சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனம் முன்வர வேண்டும்

‘மதிப்புமிகு’ முதல்வர்?

edappadi palanisamy - 2026 எடப்பாடி முதல்வர். அவரை முதல்வராக நியமித்த சசிகலா சிறையில். சசிகலாவுக்கு பதில், அந்த இடத்தை நிரப்ப வந்த தினகரனும் சிறையில்.

பத்தோடு பதினொன்றாக இருந்த எடப்பாடி முதல்வர் ஆனதால், அவரோடு சக அமைச்சர்களாகவும், எம்.எல்.ஏ க்களாகவும் இருந்த யாரும், அவரை, தங்களுக்கான தலைவராக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை.

ஆகவேதான், வருமானவரி சோதனை, காவல் துறை வழக்கு, ஊழல் குற்றச்சாட்டு என இலக்கான, விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, காமராஜ், சரோஜா போன்றவர்களின் அமைச்சர் பதவிகளை பறக்க முடியாமல் திணறுகிறார் அவர்.

அமைச்சர் பதவியை பறித்தால், ஆட்சியே கவிழும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சர்களே மிரட்டுவதாக தகவல்கள் வருகின்றன. அதனால், ஒரு முதல்வராக, எடப்பாடியால் சுதந்திரமாக கூட செயல்பட முடியவில்லை என்றே சொல்லப்படுகிறது.

அமைச்சர்கள் அவருடைய பேச்சை கேட்பது இல்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும், அதிகாரிகளும் அவர் பேச்சை கேட்பது இல்லை என்பதால் அவர் மிகவும் நொந்து போய் இருக்கிறார்.

முதல்வர் உத்தரவிட்டால், தலைமை செயலாளர் கேட்பதில்லை. தலைமை செயலாளர் கூறினால், துறை செயலாளர்கள் கேட்பதில்லை. துறை செயலாளர்கள் சொன்னால் கீழ்மட்ட அதிகாரிகள் கேட்பதில்லை. இதுதான் இன்றைய தமிழக அரசின் நிலையாக உள்ளது.

டாஸ்மாக் வருவாய் குறைந்ததை அடுத்து, மாநகராட்சி எல்லையில் உள்ள நெடுஞ்சாலைகளை, மாநகராட்சி சாலைகளாக மாற்றுவதற்கான கோப்பு ஒன்றை, முதல்வரை எடப்பாடி கடந்த பிப்ரவரி மாதம் தலைமை செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தலைமை செயலாளர் அந்த கோப்பை நெடுஞ்சாலைத்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ளார். ஆனால் மூன்றுமாதமாக அந்த கோப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இப்படித்தான், ஒவ்வொரு துறையிலும் முதல்வரின் பேச்சை அமைச்சர்களும், அதிகாரிகளும் கேட்பதில்லை என்று கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

எனவே, முதல்வர் பதவியில், மக்கள் தலைவர்கள் அமரும்போதுதான் அந்த பதவியின் மவுசும், அதிகாரமும் கூடுகிறது. நியமனங்கள் என்றாலே, அதற்கு மதிப்பில்லாமல் போய்விடுகிறது.

துல்லிய தாக்குதலில் தேறிய தேஜாஸ்!

புது தில்லி:

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான இலகு ரக ‘தேஜாஸ்’ சோதனையில் தேர்ச்சி அடைந்துள்ளது. கண்காணாத இடத்தில் இருக்கும் இலக்கை துல்லியமாக விண்ணில் பாயும் ஏவுகணை மூலம் வீழ்த்துயுள்ளது. ஒடிசாவின் சந்திப்பூர் சோதனை பகுதியில் இந்தச் சோதனை நடைபெற்றது.

விமானத்தில் உள்ள ஏவுகணை தாக்குவதற்கு தயாராகும் திறன், கண்காணாத இலக்கை தாக்கும் திறன் போன்றவற்றின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் தேஜாஸின் தாக்குதல் வேகம், தயாராகுதல் மற்றும் தடுப்புத்திறன் ஆகியவற்றை ஒருங்கிணைந்து கணக்கிட முடிந்ததாக பாதுகாப்பு துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு சின்னக்குறைகூட இல்லாத அளவில் இந்தத் தாக்குதலை தேஜாஸ் செய்து முடித்துள்ளதாகவும், மிக மிக திருப்திகரமாக கொடுக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாவதும் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சோதனையின் மூலம், தேஜாஸின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது. கண்காணாத இலக்கை தாக்கும் திறன் பெற்றதன் மூலம், இலகு ரக தாக்குதல் விமானத்துக்கான இறுதி செயல்பாட்டு அனுமதி கிடைத்துவிடும் என்றும் தன் அறிக்கையில் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. சோதனை செய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்ட சென்சாரில் தாக்குதல் இலக்கையும் அதை தாக்கிய ஏவுகணையின் வேகமும் துல்லியமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதேபோல விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தாக்குவதற்கு எத்தனிக்க முன்பே அதனை இனம் கண்டு தாக்கும் திறனும் தேஜாஸில் இருக்கிறது.

ஒரு தேஜாஸ் விமானத்தின் சர்வதேச மதிப்பு 600 கோடி ரூபாய்களாகும். இந்தியாவிடம் தற்போது 20 தேஜாஸ் விமானங்கள் தயார்நிலையில் உள்ளன.

ப்ளஸ் 2 : விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு கட்டண விவரங்கள்

 

மேல்நிலை அரசுப்பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் செலுத்த வேண்டிய கட்டண விவரத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: பகுதி-1 மொழி ரூ.550,
பகுதி-2 மொழி (ஆங்கிலம்)- ரூ.550,
ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்)- ரூ.275.

மறுகூட்டல் கட்டணம்:
பகுதி- 1 மொழி,
பகுதி- 2 மொழி (ஆங்கிலம்)
மற்றும் உயிரியல் ஒவ்வொன்றுக்கும் (இருதாள்களும் சேர்த்து)- ரூ.305,
ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்)- ரூ.205.

பணம் செலுத்தும் முறை: விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்தலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்ட விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும். விடைத்தாள் மற்றும் மறுகூட்டலுக்கு மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் மே 12-ஆம் தேதி முதல் மே 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவுக்கு புதிய விதிகளின்படி மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி

madras high court - 2026

சென்னை:

அங்கீகரிக்கப்படாத மனைகள் பதிவு விவகாரத்தில், தமிழக அரசின் புதிய விதிமுறைகளின்படி பத்திரப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, சட்ட விரோதமாக வீட்டு மனைகளாக மாற்றப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை ஏற்று கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளைப் பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர். அத்துடன் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி தமிழக அரசு, தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டம், பிரிவு 22(ஏ)-ல் திருத்தம் கொண்டு வந்து, அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில், ‘அங்கீகாரம் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது. இருப்பினும், 2016-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறுவிற்பனை செய்ய பத்திரப்பதிவு செய்யலாம்’ என்று கூறியிருந்தது.

இந்த அரசாணையை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் எவ்வாறு வரையறை செய்யப்படும் என்பது குறித்து விதிமுறைகளை உருவாக்கி, அதுதொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுத்து, அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை வரையறை செய்தும் தமிழக அரசு விதிமுறைகளை உருவாக்கி, 2 அரசாணைகளை கடந்த 5-ந் தேதி வெளியிட்டது. இந்த அரசாணைகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு வெள்ளிக்கிழமை நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த அரசாணைகளை நீதிமன்றம் ஏற்கக்கூடாது என்று மனுதாரர் வாதிட்டார். அரசு தரப்பில், கூடுதல் தலைமை வழக்குரைஞர் அய்யாதுரை உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர்.

வாதங்களைக் கேட்ட பின்னர் நீதிபதிகள் ஓர் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர். அதில்,

தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டம் 1908-ல் தமிழக அரசு கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வந்த திருத்தத்தின் அடிப்படையில், தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டம் பிரிவு 22ஏ-ன் கீழ், கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில், அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை (பத்திரப்பதிவு) செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அரசாணை பிறப்பிக்கப்படும்போது, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்யும் விதிமுறைகளை தமிழக அரசு உருவாக்கவில்லை. அப்படிப்பட்ட விதிமுறைகள் நடைமுறையிலும் இல்லை. அதே நேரம், குழந்தைகளின் கல்விக்காகவும், திருமணத்துக்காகவும் வாங்கிய அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்ய முடியாமல் பலர் தவிக்கின்றனர் என்று எங்களது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

மேலும், “தமிழ்நாடு அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் ஒழுங்குமுறை விதிகள் 2017” என்ற புதிய விதியை தற்போது அரசு உருவாக்கி உள்ளது. இந்த விதியில், 2016-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட அனைத்து வகையான அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்ய விதிவிலக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இது, தமிழ்நாடு நகரமைப்பு சட்டத்துக்கு எதிரானது ஆகும். எனவே, இந்த விதிவிலக்கு செல்லாது.

தற்போது அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்ய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள, வரையறை கட்டணம், மேம்பாட்டு கட்டணம் உள்ளிட்டவைகளை செலுத்தி, அனைத்து அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளையும் வரையறை செய்த பின்னரே, அதை பத்திரப்பதிவு செய்ய வேண்டும். அதாவது, புதிய விதிமுறைகளை பின்பற்றித்தான் பத்திரப்பதிவுகளை செய்யவேண்டும். தற்போது வழங்கியுள்ள இந்த அனுமதி கூட, இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்பதையும் தெளிவு படுத்திக் கொள்கிறோம்.

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு, 2016-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி முதல் 2017-ம் ஆண்டு மார்ச் 28-ந் தேதி வரை அமலில் இருந்தது. இந்தக் காலகட்டத்தில், செய்யப்பட்ட பத்திரப்பதிவு சட்டப்படி செல்லாதது. இந்தக் காலகட்டத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைகளை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பத்திரப்பதிவு செய்யக்கூடாது. இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூன் 14-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம்.

– என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Chennai Metro Rail Thirumangalam to Nehru park will be inagurated may 14

New Delhi, 12th May, 2017: On 14th May, the Chennai Metro Rail Project (Phase I), underground section from Thirumangalam to Nehru Park, will be inaugurated, demonstrating the Government of Japan’s active support for “Smart City” initiatives in Chennai. The flag-off ceremony will be attended by Shri Edappadi K. Palaniswami, Hon’ble Chief Minister of Tamil Nadu, and Shri Venkaiah Naidu, Hon’ble Union Minister for Urban Development.

 

The newly-constructed underground stretch covers a distance of 7.4 kms. between Thirumangalam and Nehru Park, and comprises of five important stations, namely, 1) Anna Nagar Tower, 2) Anna Nagar East, 3) Shenoy Nagar, 4) Pachayappa’s College, and 5) Kilpauk Medical College.

 

The newly-inaugurated underground segment, which is 7.4 kms. long, would greatly help in mitigating the impact of mounting traffic in Chennai, along with the associated problems of increased traffic congestion, air pollution, road accidents and journey time.

 

Chennai Metro Rail Ltd. will organize the inaugural ceremony, which is scheduled to be attended by Mr. Kenko SONE, Minister (Economic & Development), Embassy of Japan, and Mr. Seiji BABA, Consul-General of Japan in Chennai.

 

Once completed, the Chennai Metro project is expected to have over 800 trains running daily in either direction, transporting an estimated 7 lakh people each day, by the year 2021. The Chennai Metro is integrated with other forms of public and private transport, including buses and suburban trains, to facilitate seamless travel by commuters.

 

Japan has extended 150,274 million Japanese Yen (approximately INR 9,000 crore) in concessional ODA loans over 4 tranches since 2008, for the development of around 45 kms. of Metro Rail system in Chennai. After adding Japan’s loan for Phase V, the cumulative Japanese ODA loan amount for Chennai Metro Project totals up to 183,595 million Japanese Yen (approximately INR 11,000 crores).

 

Through effective and timely project implementation, Japanese consulting firms and manufacturers, such as Yachiyo Engineering Co., Ltd., and Nippon Signal Co., Ltd.,  have been collaborating for the success of the project, by introducing cutting-edge methodologies such as project management, safety management, advanced automatic fare collection system, etc., so that the people of Chennai can enjoy safe, timely and comfortable journeys with highly reliable services, which are the typical characteristics of “quality infrastructure”.

 

For further information, please contact:

Embassy of Japan

Shintaro Hori

+91 11 46104610

தென்மேற்கு பருவ மழை விரைவில்: வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுதில்லி:

தென் மேற்கு பருவ மழை முன் கூட்டியே தொடங்குவதற்கான அறிகுறி காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே- 17ல் அந்தமான் கடல் பகுதியில் தென் மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான சூழ்நிலை உள்ளதாகவும், அதன் பிறகு அரபிக் கடல் கேரளா பகுதியை 2 வாரத்தில் சென்றடைந்து மழை தீவிரம் அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

தமிழ்நாட்டில் முக்கிய பாசன அணையான மேட்டூர் அணைக்கு தென் மேற்கு பருவ மழையின் போதுதான் நீர் வரத்து அதிகம் இருக்கும். கர்நாடகா, கேரளாவில் மழை தீவிரம் அடைந்தால் அணை நிரம்பி விடும். இல்லையெனில் வட கிழக்கு பருவ மழையைத்தான் நம்பி இருக்க வேண்டும்.

இந்நிலையில் வானிலை மைய தகவல்கள் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது

ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி

images - 2026

ஹெரால்டு வழக்கு விவகாரத்தில்சோனியா, ராகுலிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல் நிறுவனத்தின் பங்குகளை சோனியா, ராகுலுக்கு சொந்தமான யங் இந்தியன் நிறுவனம் முறைகேடான வழியில் அபகரித்ததாக, சுப்பிரமணிய சுவாமி thilli niithimanRaththil vazakku தொடர்ந்தார்.

கடந்த, 1938ம் ஆண்டில், சுதந்திர போராட்டத்தின் போது, ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது, நேஷனல் ஹெரால்டு பத்திரிகை.’அசோசியேட் ஜர்னல் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் கீழ், நேஷனல் ஹெரால்டு என்ற ஆங்கில பத்திரிகையும், குவாமி ஆவாஸ் என்ற உருது பத்திரிகையும், நவ்ஜீவன் என்ற ஹிந்தி பத்திரிகையும் வெளி வந்தன.

கடும் நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால், 2008 ஏப்ரல்,1ம் தேதி, இந்த பத்திரிகைகள் வெளியிடுவது நிறுத்தப்பட்டது.

 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியிடம் வாங்கிய, 90 கோடி ரூபாய் கடன் உள்ளிட்டவற்றால் திணறிய, அசோசியேட் ஜர்னல் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள், யங் இந்தியன் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

அசோசியேட் ஜர்னல் நிறுவனத்துக்கு சொந்தமாக நாடு முழுவதும் உள்ள, 5,000 கோடிரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிக்கும் வகையிலேயே இந்த நிறுவன பங்குகள் கைமாற்றப்பட்டது’ என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தொடர்ந்தார்.

இந்த வழக்கை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரிக்க டில்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவிட்டது.

 

இதனை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட்,இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த அனுமதி வழங்கியது.

இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக சோனியா, ராகுலிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.