Home Blog Page 5647

நாங்குனேரி வானமாமலை பெருமாள் கோயில்

vanamamalai perumal thayar - 2026

நான்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலின் சிறப்புகள்:

கோவில் குறித்த வரலாறையும், பெருமைகளையும் அறியுமுன் கோவிலின் சிறப்புகளை அறியும் பட்சத்தில் அது நமக்கு கோவில் குறித்த தகவல்களை அறியும் ஆர்வம் ஏற்படும் என்பதால் முதலில் கோவிலின் சிறப்புகளைக் காண்போம்.

108 திவ்ய தேசங்களில் ஒன்று என்ற பெருமையுடையது.

ஸ்வயம் வ்யக்தேஷூ ஸர்வேஷூ தோதாத்ரி ஸ்தலம் ( சுயம்பு அதாவது மூலவர் மண்ணுக்கு அடியில் இருந்து வந்தவர்) என்ற பெருமையையும் தன்னகத்தே பெற்று பெருமையுடன் விளங்கக் கூடிய பெருமாள் கோவிலில் இதுவும் ஒன்று.
தோதாத்ரி நாதர், தனது இடது காலை மடித்துக்கொண்டும், வலதுகாலை தொங்கவிட்டு தரையில் படும்படியும் ஆதிசேஷன் குடைபிடித்த வண்ணத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கூடிய திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார். அவ்வாறு வீற்றிருக்கின்ற காரணத்தினாலேயே, இக்கோவில் பூகோள வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. ஊர்வசி, திலோத்தமா ஆகிய இருவரும் சாமரம் வீசுவது போலவும், மேலும் சூரியன், சந்திரன், ப்ருகரிஷி, மார்க்கண்டேய ரிஷி முதலானோரும் மூலவர் தோதாத்ரி நாதரின் இருபுறமும் வீற்று இருக்கிறார்கள்.
மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வது இக்கோவிலின் சிறப்புகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இக்கோவில் கிமு 1ooo -ல் தோன்றி இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது.

வைணவ ஸ்வயம் ஷேத்ரங்கள் என்ற பெருமையை இந்தியாவின் எட்டு தளங்கள் பெற்றுள்ளதை அறிந்து கொள்வோம்.

அவை ஸ்ரீரங்கம், திருப்பதி,புஷ்கரம், தோதாத்ரி (நான்குநேரி கோவில்), பத்ரிநாராயணா, நைமிசரண்யம், சாலிகிராமம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம்.

கோவில் உருவான கதையும் மூலவர் வரலாறும்:

காரி மன்னன் என்பவன் ஆழ்வார்திருநகரி என்னும் ஊரை ஆண்டு வந்தார். மக்கள் அவர் ஆட்சியில் மகிழ்ச்சியுற்றிருந்தாலும் அவருக்கு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் மட்டும் தீர்ந்தபாடில்லை. பரிகாரமாக நிறைய தான தர்மங்கள் பண்ணியும் பலன் ஏதுமில்லாமல் தம்பதிகள் தவித்து வந்தனர். அப்போது அந்தணர் ஒருவர் மன்னனைக் காண வந்தார். மன்னரிடம் அந்தணர், மன்னா… நான் தங்களுக்கு ஒரு உபாயம் சொல்லி விட்டுப் போகலாம் என்று வந்துள்ளேன் என்றார். மன்னர், சுவாமி தயை கூர்ந்து கூறுங்கள். நிச்சயம் செவி மடுப்போம் என்று சொல்ல, அந்தணர் அச்செய்தியை எடுத்துரைத்தார். அது, மன்னா… தாங்கள் திருக்குறுங்குடியில் உள்ள திருமாலை வணங்கி வாருங்கள். உங்களின் குழந்தைப் பாக்கியம் கிடைக்க நல்லதோர் வழி பிறக்கும் என்றார்.

அந்தணர் கூற்றுப் படி மன்னரும் மகாராணியும் திருக்குறுங்குடியில் உள்ள அழகிய நம்பிராயரை வழிபட்டு வந்தனர். அன்று இரவே மன்னரின் கனவில் அழகிய நம்பிராயர் தோற்றமளித்தார். காரி மன்னா… இங்கிருந்து கிழக்கு திசையில் செல்லுங்கள். அங்கு நான்கு ஏரிகள் சூழ்ந்த பகுதியில் எறும்புகள் சாரை சாரையாகச் செல்லும். அதன் நேர் மேலே கருடன் வட்டமிட்டுக் கொண்டிருப்பான். அந்த இடத்தில் தோண்டினால் எனது தம்பி வானமாமலை தோற்றமளிப்பான். அவன் உனக்கு வேண்டியதை அருளுவான்.

அதன் படி அவ்விடத்தை மன்னர் வந்தடைந்தார். அந்த இடத்தை தோண்டியபோது குருதி பொத்துக் கொண்டு வந்தது. 18 மூலிகைகளைக் கொண்டு தடவிய பிறகே குருதி நின்றது. ஆகையால் தான் இக்கோவிலில் எண்ணைக்காப்பு என்ற வழிபாட்டு முறை தினந்தோறும் பின்பற்றப்பட்டு வருகிறது. கோவிலை மேற்கொண்டு கட்டும் பணியை மன்னர் மேற்கொண்டார் என்பது சொல்லப்படுகிற வரலாறு.

உற்சவர்:

இக்கோவிலின் உற்சவராக தெய்வநாயகன் காட்சி அளிக்கிறார். ஸ்ரீவரமங்கை தாயார் வட வேங்கடத்தில் வீற்றிருந்தார். வெங்கடேசப் பெருமாளுக்கு திருமண உற்சவம் செய்ய வேண்டும் என்று எண்ணிய போது, ஸ்ரீ ராமானுஜ ஜீயரின் கனவில் ஸ்ரீவரமங்கைக் காட்சி அளித்து, தான் இறைவனைக் கைபிடித்து விட்டதாகத் தெரிவித்தார். ஆகையால் தான் இங்கு வானமாமலைப் பெருமாள் தெய்வ நாயகனாக காட்சி அளித்தார். அதன் படியே இங்கு தெய்வநாயகனுக்கும் ஸ்ரீவரமங்கைக்கும் திருமண உத்சவம் நடக்கின்றது.

நான்கு ஏரிகள் சூழ்ந்த பகுதியில் அமைந்ததால் இவ்வூருக்கு நான்குநேரி என்ற பெயர் வந்தது.
கோயிலின் அமைப்பு:

கோவிலின் முகப்பில் ஏழு அடுக்குகளைக் கொண்ட கோபுரம் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவில் உள் பிரகாரம், வெளி பிரகாரம்
என இரு பிரகாரங்களை உள்ளடிக்கி உள்ளது. கோவிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் மணவாள மாமுனிகள் சன்னதி அமைந்துள்ளது. சற்று உள்ளே சென்றவுடன் கொடிமரம் உள்ளது. உள் பிரகாரத்தில் ஸ்ரீவரமங்கை தாயார், ஆண்டாள் சன்னதி, ஸ்ரீ ராமர் சன்னதி, ஆழ்வார்கள், கருடன், உடையவர், பிள்ளை யோகாச்சாரியார், வேணு கோபாலன், லக்ஷ்மி நரசிம்மர், சக்கரத்தாழ்வார், லக்ஷ்மி வராகர்,விஷ்வக் சேனர், மற்றும் சில தனி தெய்வங்கள் சன்னதி அமைந்துள்ளது.

வெளிபிரகாரத்தில் தான் எண்ணெய்க்கிணறு உள்ளது. தினந்தோறும் எண்ணெய்காப்பு (அபிஷேகம்) செய்கிற எண்ணெய்யை இக்கினற்றில்தான் சேமித்து வைப்பார்கள். இந்த எண்ணெய், சர்வரோக நிவாரணியாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்வது வழக்கம். எண்ணெய்க் கிணறு அருகில் அகத்தியர் சிலை உள்ளது.

சிறப்பு பூஜைகளும் திருவிழா நாட்களும்:

பங்குனித் திருவிழாவும் சித்திரைத் திருவிழாவும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சித்திரைத் திருவிழாவைப் பொறுத்தவரையில் பத்து நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தைச் சார்ந்தவர்களின் பங்கிற்கு மண்டகப் படி நடைபெறும். பத்தாவது நாள் தேர் வலம் வரும். மடத்தின் மூலமாக, பங்குனித் திருவிழா நடைபெறுகிறது.

தை அமாவாசை அன்றுதான் ஒரு கோட்டை( 3 கொப்பரை) எண்ணெய்க் காப்பு வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவிற்குத் தான் வைணவ பக்தகோடிகளும், நான்குநேரியைச் சுற்றி உள்ள அனைத்துக் கிராம மக்களும் காண வருகிறார்கள். தை அமாவாசை அன்று கோவிலில் கூட்டம் சொல்லி மாளாத அளவிற்கு இருக்கும். அன்று இரவுதான் கருட சேவை நடைபெறும். கருட சேவை அன்று வான வேடிக்கை பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அமாவாசைக்கு அடுத்தநாளில் தெப்ப உற்சவம் நடைபெறும்.

துளசி, துளசி தீர்த்தம், தோசை, பொங்கல், பால், அதிரசம், வடை, புளியோதரை ஆகியன பிரசாதமாகக் கிடைக்கும். தை அமாவாசை அன்று ஜீராணம்(பால் சாதம்) பிரசாதமாக வழங்கப்படும்.

திருநெல்வேலியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில்தான் நான்குநேரி உள்ளது. நெல்லையில் இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி பேருந்தில் நான்குநேரி மார்க்கம் என்று செல்லும் பேருந்தில் செல்லுங்கள்.
நெல்லையில் இருந்து பத்து நிமிடத்திற்கு ஒருமுறை நாகர்கோவிலுக்கு பேருந்து வசதி உள்ளது.

சுற்றுலாப் பேருந்தில் வருபவர்கள் கோவிலின் பின்புறத்திலும் சுற்றுப் புறங்களிலும் , பேருந்தை நிறுத்தும் வசதி (நிறைய இடம்) உள்ளது.
கோவிலுக்கு இடப்பக்கத்தில் மிகப் பெரிய குளம் ஒன்று உள்ளது.
கோவிலுக்கு எதிராக இருபுறங்களிலும் வீடுகள் ஒன்றைஒன்று ஒட்டிய வண்ணம் மிகப் பெரிய வீதி உள்ளது.

ஹாஜி மஸ்தானா? யாரு அவரு? : ரஜினி பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

rajinikanth - 2026

சென்னை:
என்னது.. ஹாஜி மஸ்தானா? யாரு அவரு? என்று கேட்கும் விதமாக, ரஜினி பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ரஜினி காந்த் நடிக்கும் படம் ஹாஜி மஸ்தான் கதையல்ல என்று தெளிவாகக் கூறியுள்ளது.

நடிகர் ரஜினி காந்தை வைத்து பா.ரஞ்சித் இயக்கும் படம் மும்பை தாதா ஹாஜி மஸ்தான் கதைதான் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக ஒரு பேச்சு உலாவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் மிஸ்ரா, நடிகர் ரஜினிக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அதில், “எனது தந்தையை நிழல் உலக தாதா மற்றும் கடத்தல்காரர் போன்று சித்திரித்துப் படம் எடுக்கக் கூடாது. நீங்கள் அவரை தவறாக சித்திரித்துப் படம் எடுத்தால், தங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.

இந்நிலையில் படத்தைத் தயாரிக்கும் வுண்டர்பார் நிறுவனம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டது.

அதில், “எங்கள் நிறுவனத்தின் சார்பில் ரஜினி காந்த் நடிக்க ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தைப் பற்றியும் அதன் கதையைப் பற்றியும் பத்திரிகைகளில் பல விதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு வந்த செய்திகளில் ஒன்றாக ஹாஜி மஸ்தான் வாழ்க்கை வரலாற்றின் பின்னணி கொண்ட கதையாக இப்படம் உருவாகி வருகிறது என்று ஒரு செய்தியும் பத்திரிகைகளில் வெளியானது. நாங்கள் தயாரித்து வரும் இப்படம் மும்பை பின்னணியை கொண்ட கற்பனை கதை மட்டுமே. இப்படத்தின் கதை, யாருடைய வாழ்க்கை வரலாறையோ அல்லது அவர்களுடைய நிஜ சம்பவங்களையோ கொண்டு உருவாக்கப்பட்ட கதை கிடையாது. குறிப்பாக இப்படத்தின் கதை எந்த வகையிலும் ஹாஜி மஸ்தான் மற்றும் அவர்களுடைய குடும்ப பின்னணியை வைத்து உருவாக்கப்பட்ட கதையல்ல.

இது தொடர்பாக படத்தின் இயக்குநர் ரஞ்சித், தன்னைத் தொடர்பு கொண்ட பத்திரிகையாளர்களிடம் இது “ஹாஜி மஸ்தானின் கதையல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார்.

இது ‘ஹாஜி மஸ்தானின் கதை’ என்ற செய்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் எங்களின் இந்த விளக்க அறிக்கையை அளிக்கிறோம்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

RSS ideology will make India a prosperous nation: Nitin Gadkari

0

nitin gadkari2 - 2026

Mumbai:

“Communism, Socialism and Capitalism have all failed. The only model for socio-economic progress which can show the way is Antyodaya,” said Union Minister for Surface Transport and Shipping Shri Nitin Gadkari while releasing a book Vishwa Ka Advitiya Sanghatan Rashtriya Swayamsevak Sangh. The book, published by Lotus Publications in four languages, has been written by Shri Ramesh Mehta. Uttar Pradesh Governor Shri Ram Naik, Essel Group Chairman Dr Subhash Chandra, RSS Konkan Prant Sanghachalak Shri Satish Mod and Anirudhha Upasana Kendra Dean Shri Samirsinh Dattopadhye were also present. Spiritual Guru Anirudhha Bapu also blessed the event. A message sent by RSS Sarkaryavah Shri Bhayyaji Joshi was read out by Shri Satish Mod.

Stating that RSS ideology has the capacity to provide socio-economic thought for not only nation-building but for global economy also, Shri Nitin Gadkari said building the men of character results in a developed society, which can lead to a developed nation. He said despite all misconceptions and criticism by its detractors, the RSS is growing and that its  ideology would make India a prosperous nation.

Shri Ram Naik said Shri Ramesh Mehta has penned the journey of RSS till 1996 and that he should take up the task of completing it by writing about the history between 1996 and 2017 too, which has witnessed India go from coalition governments to one with an absolute majority.

Dr Subhash Chandra said he has been an RSS swayamsevak right from the age of 12 years. He said despite the fact that many unsavoury things were told about the RSS in the last 90 years, the organisation has had a culture of not going for clarification.

Art and literature are the easiest way to understand any culture: Mohan Bhagwat

0

Mohan bhagwat - 2026

New Delhi:

“Art and literature are the easiest way to understand any culture. This is a fact that no society can ensure progress disconnecting from its culture,” said RSS Sarsanghachalak Shri Mohan Bhagwat while addressing a group of artists at a three-day Kala Yatra Mahotsava organised at the Kamani Auditorium on May 1. “Only those who are closely connected with their roots touch new heights of progress, while those who are disconnected from their roots are washed away. Therefore, we must not be disconnected from our roots in any circumstances. Naturally, there may temporarily be problems at some steps, but if we are determined the victory is certain,” the Sarsanghachalak added.

Noted dancer Sonal Mansingh said music has special significance in the art. She appealed to the parents to associate their children with the traditional music and dance. Kala Yatra Mahotsava was organised to commemorate 40 years of the Centre for India Classical Dances, an organisation formed by Sonal Mansingh. A souvenir was also released on  the occasion.

பேச்சுவார்த்தை தோல்வி: போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம்; நாளை பஸ்கள் ஓடுமா?

TNSTC buses indefinite strike - 2026
பேச்சுவார்த்தை தோல்வி: போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம்

சென்னை:

அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென போக்குவரத்து தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.

போக்குவரத்து பணியாளர்கள் ஏழு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தன. இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை இன்று பல்லவன் இல்லத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.1,250 கோடி தர அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒப்புதல் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஆலோசனையில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், தாங்கள் தனியாக ஆலோசனை நடத்தினர். அப்போது, அமைச்சருடனான பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்கப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக இல்லை எனவும், உடன்பாடு எட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் தொடங்கும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஓய்வூதியம், நிலுவைத்தொகை உள்ளிட்ட பண பலன்கள் ரூ.7,000 கோடிவரை தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. நிலுவைத் தொகையாக ரூ.750 கோடி தரப்படுவது என்பது மிகவும் குறைவானது என்று கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது குறித்த தகவல் பரவியதை அடுத்து, வேலூர், நீலகிரி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் வேலை நிறுத்தம் உடனே தொடங்கிவிட்டது. அரசுப் பேருந்துகளை பணிமனைகளில் நிறுத்திவிட்டு, பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், தஞ்சையில் தற்போதே 50 சதவீத பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.

நெல்லை பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்துகள், பணிமனைக்கு ஓட்டிச் செல்லப்பட்டன.

தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் திருச்சியில் ஒரு நாள் முன்னதாக இன்றே தொடங்கிவிட்டது. அரசு டவுன் பஸ்கள் மதியத்துக்கு பிறகு ஓடவில்லை. புறநகர் பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன.

இன்று நள்ளிரவே பஸ்கள் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப் படுவதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். பேருந்து நிறுத்த போராட்டத்தால் கடும் பாதிப்பை தமிழகம் சந்திக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது

கோடை விடுமுறை என்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்நிலையில், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க பணிமனை ஊழியர்களை கொண்டு அரசு பேருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

சுரங்க ரயில் சேவை சென்னையில் தொடக்கம்

சென்னையில் இன்று காலை சுரங்க ரயில் சேவை துவங்கப் பட்டது.

சுரங்க ரயில் சேவை துவக்க விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி பேசுகையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசு கேபிளுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

 

சென்னையில் மக்கள் தொகை பெருகியுள்ளதால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலானது இந்த மெட்ரோ ரயில் திட்டம் மூலம் வெகுவாகக்குறையும்.

 

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர் ஜெயலலிதா … பல்வேறு சிறப்பம்சங்களுடன் மெட்ரோ ரயில் சேவை தொடங்குகிறது. வெங்கையா நாயுடுவுடன் இணைந்து திட்டத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி..இந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மூலதன பங்களிப்பை பெற உதவியாக இருந்தார் வெங்கையா நாயுடு என்று முதல்வர் கூறினார்.

அதை தொடர்ந்து அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கினார் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு.

மேலும் அவர் பேசுகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை இந்த தருணத்தில் நினைவு கூர்கிறேன். இந்த விழாவில் ஜெயலலிதா இல்லாதது வருத்தம் அளிக்கிறது. கட்சிக்கு அப்பாற்பட்டு நான் மிகவும் மதிக்கும் ஆற்றல் மிக்க தலைவர் ஜெயலலிதா. அவரது கோரிக்கையின் பேரில் மெட்ரோ திட்டம் விரிவு படுத்தப்பட்டது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை என்ற ஜெயலலிதாவின் கனவு நனவாகியுள்ளது. சுரங்க ரயில் பாதையில் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் உள்ளன. பொதுமக்களின் போக்குவரத்தில் மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கும். போக்குவரத்து சேவையை மேம்படுத்த மத்திய அரசு முனைப்புடன் உள்ளது என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி உதயகுமார், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சிந்தனைக்கோட்டம்

எனக்கு நேரடியாகப் பரிச்சியம் இல்லாதவர், என் முகநூல் நண்பரும் அல்லர். அவர் தான் திரு .கே.எஸ்.ராதாகிருஷ்ணன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் முக்கிய பொறுப்புகள் வகித்தவர். ஆனால், சமூக வலைத் தளங்களில் மிகவும் பொதுப்படையாக அரசியல் வரலாற்றுப் பதிவுகளும், இடையிடையே இலக்கியப் பதிவுகளும் இட்டு வருபவர். அவர் பதிவுகள் பல என்னைக் கவர்ந்தவை.
இன்று ஓர் ஆங்கிலக் கவிதையை நினைவூட்டி அவர் இட்டிருந்த பதிவு என்னை ஈர்த்தது.

“The boast of heraldry, the pomp of power,
And all that beauty, all that wealth e’er gave,
Awaits alike the inevitable hour.
The paths of glory lead but to the grave.”

By Thomas Gray, Elegy Written in a Country Churchyard.

மேற்சொன்ன வரிகள் இடம்பெற்ற அந்த அமர கவிதையை, ஏறக்குறைய நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, என் தந்தை விஸ்வம் படித்துக் காட்டி விளக்க; சுகி.சிவம், சு. ரவி, கண்ணன், கிரேஸி மோகன், பாபு, நான் உள்ளிட்ட சிந்தனைக் கோட்டத்தின் உறுப்பினர்களாகிய சுமார் பத்துப் பன்னிரண்டு பள்ளி மாணவர்கள் சுற்றி அமர்ந்து கேட்ட அம்பத்தூர் வித்யா சாகர் பள்ளித் தலத்தின் வெளிப்புற மர நிழல் இன்னும் என் நினைவில் பசுமையாக நிழலாடுகிறது. அன்றிரவே, அந்தப் பள்ளியின் மொட்டை மாடியில் சிறு விளக்கு வெளிச்சத்தில் முருகு சுந்தரம் கவிதைகளை நான் என் சக நண்பர்களுக்குப் படித்துக் காட்டியதும் நினைவுக்கு வருகிறது. ஓ அந்த இனிய நாட்கள் !

தாமஸ் க்ரேயின் அமர வரிகளைத் தமிழில் அமர்த்த முயற்சி செய்துள்ளேன்:
……
ஆடம்பர அணிகலன்கள்
அதிகார மமதை
அத்தனை அழகும் செல்வத்தால் பெற்றனவும்
காத்திருப்பதெல்லாம் தவிர்க்க முடியாத ஒரு கணத்துக்கே
பொலிவுமிக்க பாதையெல்லாம் போயடையும் கல்லறைக்கே
(தாமஸ் க்ரே)

கட்டுரை: வழக்கறிஞர் ரவி

தந்தை மகளுக்குச் சொன்ன கதை

தந்தையும் மகளும் கோயிலுக்கு செல்கின்றனர்.
திடீரென மகள் அங்கே தூணில் உள்ள சிங்கத்தின் சிற்பத்தை பார்த்து ” அப்பா ஓடுங்கள் இல்லையென்றால் அந்த சிங்கம் நம்மை தின்று விடும்” என்றாள் …
அதற்கு அப்பா மகளிடம் “அது சிற்பம்தான். ஒன்றும் செய்யாது” என்றார் …
மகள் அப்பாவிடம் “சிங்கத்தின் சிற்பம் நம்மை ஒன்றும் செய்யாது என்றால் கடவுளின் சிற்பம் மட்டும் நமக்கு என்ன செய்யும்” என்றாள்…
தந்தை சொன்னார்… சிங்கத்தின் சிற்பத்தைப் பார்த்ததும் உனக்கு அது தின்றுவிடும் என்று பயம் வந்தது. ஆனால் கடவுளின் சிற்பத்தைப் பார்க்கும் போது நமக்கு அடுத்தவரைக் காப்பாற்றும் கருணையும் அன்பும் ஏற்படும்… நீ சாலையில் போகும்போது பார்த்திருக்கிறாய் அல்லவா… ஊருக்கு ஊர் பஸ் ஸ்டாண்ட்களில் கறுப்பாக கண்ணாடிபோட்டு தாடி வைத்த சிலைகளையும், கையில் புத்தகம் வைத்துக் கொண்டு ஊரில் சுடுகாடு எங்கே இருக்கும் என்று ஒற்றை விரல் காட்டி வழி சொல்லும் சிலைகளையும். அதைப் பார்க்கும் போது நமக்கு எப்படி அருவருப்பாக இருக்கிறது. அதுமாதிரி… எந்த எந்த உருவத்தை பார்க்கும் போது நம் மனதில் என்ன எண்ணங்கள் ஏற்படுகிறதோ அதற்காகத்தான் அதை வைத்திருக்கிறார்கள். எல்லாம் கல்தான். ஆனால் அது இருக்கும் இடத்தைப் பொறுத்து நமக்கு உணர்வை கிளறச் செய்கிறது என்றார்…
தந்தையின் விளக்கத்தில் மகள் நல்லறிவு பெற்றுத் தெளிந்தாள்…

சைலன்ட் மோடில் காணாமல் போன மொபைலை ரிங் செய்ய வைப்பது எப்படி.?

woman with cell phone - 2026

சைலன்ட் மோடில் காணாமல் போன உங்களது மொபைல் போனை ரிங் செய்ய வைப்பது எப்படி.? என்பது குறித்து ஒரு சிறிய விளக்கம் இது.

உங்கள் மொபைல் போனை காணவில்லை என்றால் உடனே பதற்றம் அடைய வேண்டாம். அது கைத் தவறுதலாக எங்காவது வைக்கப் பட்டிருந்தால், வேறு ஒரு போனில் இருந்து ரிங் அடித்து, அது எழுப்பும் ஒலியைக் கொண்டு அது எங்கிருக்கிறது என்று நீங்கள் கண்டுபிடித்துவிடலாம்.  ஒரு வேளை அது உங்கள் மிக அருகிலேயே கூட இருந்து, சைலன்ட் மோடில் வைக்கப் பட்டிருந்தால், அதை எப்படிக்  கண்டுபிடிப்பீர்கள்? அதனை எப்படித் தேடுவது என்பதைத்தான் இங்கே பார்க்கிறீர்கள்!

தேடிக் கண்டடையாமல், கடைசி வாய்ப்பாக உங்கள் மொபைல் போன் காணாமல் போயிருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள்… இப்படி இந்த இரண்டு நிகழ்வுகளில் எதுவாக இருப்பினும் சரி, உங்களின் மொபைல் சைலன்ட் மோடில் இருந்தாலும் சரி அதை ரிங் செய்ய வைத்து அதன் இருப்பிடத்தை கண்டறிய ஒரு மிக எளிமையான வழி இருக்கிறது.

அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

படி #01: கணினியில் ப்ரவுஸரை ஓபன் செய்து ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் பக்கத்திற்கு செல்லுங்கள்…

படி #02: அடுத்து ஆண்ட்ராய்டு மொபைல் போனில் எந்த ஜிமெயில் அக்கவுன்ட் கொண்டு லாக்-இன் செய்திருந்தீர்களோ, அதைக் கொண்டு இப்போது லாக் இன் செய்யுங்கள் …

படி#03:  படி ஒன்றின் மூலமே, அக்கவுன்டில் இணைக்கப்பட்டிருக்கும் கருவிகளை உங்களால் திரையில் பார்க்க முடியும்.

படி #04: அடுத்து திரையில் ரிங், லாக் அன்டு இரேஸ் என்ற ஆப்ஷன்கள் இருக்கும். அதை கவனியுங்கள்.

படி #05: ரிங் பட்டனை க்ளிக் செய்யுங்கள். அவ்வாறு செய்தவுடன் உங்களது போன் சைலன்ட் மோடில் இருந்தாலும் ரிங் ஆகும். இப்போது, உங்கள் மொபைல்  போன் அருகில் இருந்தால், அதனை உடனே நீங்கள் கண்டு எடுத்துக் கொள்ளலாம் இல்லையா?

பின்குறிப்பு : 1. ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட மொபைல் என்றால், இந்தக் குறிப்பு உங்களுக்கு பயன் தராது.

செயல்திறன்மிக்க மொபைல் டேட்டா அல்லது வைஃபை இணைப்பு இல்லாத ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த கூகுள் டிவைஸ் மேனேஜர் செயல்படாது.

பாபரும் அக்பரும் இந்தியாவை ஆக்கிரமித்தவர்கள் என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும்: யோகி ஆதித்யநாத்

அக்பரும் பாபரும் படையெடுத்து வந்து நம் நாட்டை ஆக்கிரமித்தவர்கள் என்ற உண்மையை ஏற்க வேண்டும். மகாராணா பிரதாப் போன்ற தலைவர்கள் காட்டிய வழியை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்எ ன்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

 

16ஆம் நூற்றாண்டு மேவார் மன்னர் ராணா பிரதாப்பின் 477-வது பிறந்த நாள் விழா, லக்னோவில் நடைபெற்றது.

 

இந்த விழாவில் யோகி ஆதித்யநாத் பேசியது…

 

மகாராணா பிரதாப், குரு கோவிந்த் சிங், சத்ரபதி சிவாஜி ஆகியோர் நமது முன்மாதிரி தலைவர்கள். அவர்கள் காட்டிய வழியை நாம் பின்பற்ற வேண்டும்.

 

ராணா பிரதாப்பிடம் இருந்து சுயமரியாதை, வல்லமை, நற்பண்புகள் ஆகிய பாடங்களை இளைஞர்கள் கற்க வேண்டும். அக்பர், அவுரங்கசீப், பாபர் போன்றோர் நம் நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள். நாட்டை ஆக்கிரமித்தவர்கள்்.

 

எவ்வளவு விரைவில் இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொள்கிறோமோ அவ்வளவு விரைவில் நம் நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.

நம் நாட்டின் வளமான வரலாற்றை நாம் உயர்வாக மதிக்க வேண்டும். வளமான வரலாற்றை உயர்வாக மதிக்கும் திறனில்லா சமூகத்தால் தன் நில எல்லையை ஒருபோதும் பாதுகாக்க முடியாது…” என்று பேசினார்.