Home Blog Page 5665

நீதிபதியை கைது செய்ய உத்தரவு

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சி எஸ் கர்ணனை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 
இதுபோன்ற சம்பவம் முன்எப்போதும் இல்லாத வகையில் இருப்பதால், நீதிபதிகள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
நீதிபதிகளை குற்றவாளிகள் என விமர்சித்திருந்தார் கர்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில், வாரண்ட் பிறப்பித்த உச்சநீதிமன்றத்துக்கு எதிராக ஆணை பிறப்பிப்பேன் என்று நீதிபதி கர்ணன் கூறியுள்ளார்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 49 கன அடியிலிருந்து 14 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 30.2 அடி மட்டுமே உள்ளது. அணையிலிருந்து 500 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது

கவுதமாலா காப்பகத்தில் கலவரம்: 22 சிறுமிகள் உடல் கருகி பலி

அரசு குழந்தைகள் காப்பகத்தில் கிரிமினல் வழக்கில் ஈடுபட்ட சில இளைஞர்களும் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கு திடீர் கலவரத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள், மெத்தைகளுக்குத் தீ வைத்தனர். தீ மளமளவெனப் பரவியதில் 22 சிறுமிகள் தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆர்.கே.நகரில் தமிழிசை போட்டி ?

;text-indent:0px;text-transform:none;white-space:pre-wrap;word-spacing:0px;background-color:rgb(255,255,255);text-decoration-style:initial;text-decoration-color:initial;display:inline;float:none”>

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ., சார்பில், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: ஆர்.கே.நகர் தொகுதியில், குறுகிய காலத்திற்குள், மூன்றாவது முறை தேர்தல் நடக்கிறது. இம்முறை, அ.தி.மு.க., மூன்று பிரிவுகளாக சிதறியுள்ளது. மேலும், இரட்டை இலை யாருக்கு என்பது, இன்னும் முடிவாகவில்லை. அதனால், சுயேச்சை சின்னங்களில், அவர்கள் போட்டியிட வாய்ப்பு உள்ளது. அத்துடன், ஓட்டு வித்தியாசமும் குறையும். அது, பா.ஜ.,விற்கு சாதகமாக இருக்கும். இதுதவிர, அங்கு கணிசமான அளவில் நாடார் சமுதாய மக்கள் வசிப்பதால், தமிழிசை போட்டியிவார் என, தெரிகிறது. 

இருப்பினும், கடந்த முறை போட்டியிட்ட எம்.என்.ராஜா, ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஜமீலா ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்படலாம். ஓரிரு நாளில், கட்சி உயர்மட்ட குழு கூடி, இதுபற்றி அறிவிக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.