Home Blog Page 5960

முதலமைச்சர் ஜெயலலிதா 10 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்பி முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு

 

தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும், வட உள்மாவட்டங்களிலும், இன்று முதல் 17-ம் தேதி வரை மிக அதிக அளவு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், 10 மாவட்டங்களில் ஐ ஏஎஸ் அதிகாரிகளை அனுப்பிவைத்து முதலமைச்சர் ஜெயலலிதா புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்ததாகவும், அதனடிப்படையில், அரசு உயர் அதிகாரிகள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அதிகாரிகள், பொதுப் பணித் துறை அதிகாரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பெருமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்படும் மனித உயிரிழப்புகள், வீடுகள் சேதம் மற்றும் இதர சேதங்களுக்கான நிவாரண உதவித் தொகைகளை உயர்த்தி ஆணையிட்டதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், பெருமழையின் காரணமாக ஏற்படும் சேதங்களைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், மிக அதிக அளவு மழை பொழியும் போது அதன் காரணமாக ஏற்படும் சேதங்கள் தவிர்க்க இயலாததாகும் என குறிப்பிட்டுள்ளார்.அவ்வாறு சேதங்கள் ஏற்படும் போது துரிதமாக மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதே சிறந்த அரசின் இலக்கணமாகும்; அந்த வகையில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் தக்கவாறு நடைபெற்று வருகின்றன;

கடலூர் மாவட்டத்தில், கடந்த 9-ம் தேதி மற்றும் 10-ம் தேதி ஆகிய நாட்களில் மிக அதிக அளவிலான மழைப் பொழிவின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து, நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினை தாம் உடனடியாக அனுப்பி வைத்ததாகவும், கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் பற்றி தாம் ஏற்கெனவே கடந்த 11-ம் தேதி ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டிருந்ததாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் நேரடி பார்வையில் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகளின் காரணமாக, கடலூர் மாவட்டத்தில், 683 கிராம ஊராட்சிகளில், 635 கிராம ஊராட்சிகளுக்கு மின் விநியோகம் சீர் செய்யப்பட்டு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது; மின் விநியோகம் இல்லாத கிராமங்களில் ஜெனரேட்டர்கள் மூலம் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது; அனைத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, சாலைப் போக்குவரத்து சீரான முறையில் நடைபெற்று வருகிறது;பரவனாற்றில் வெள்ளம் ஏற்பட்ட காரணத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த வடலூர் – கும்பகோணம் நெடுஞ்சாலையும் தற்போது போக்குவரத்துக்கு உகந்ததாக சீர்செய்யப்பட்டுள்ளது;

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்த 27 நபர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வீதம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது; இன்றுவரை, 11,407 குடிசைகள் முழுமையாகவும், 53,149 குடிசைகள் பகுதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது; குடிசைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். மேலும், 40 மருத்துவ முகாம்கள் மூலம் 8,885 நபர்களுக்கு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது; 121 சிறப்பு கால்நடை முகாம்கள் நடத்தப்பட்டு 20,743கால்நடைகளுக்கு தடுப்பூசியும், 3,335 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகளுமவழங்கப்பட்டுள்ளது; 73டன்கால்நடைத்தீவனம்விலைஏதுமின்றிவிநியோகிக்கப்பட்டுள்ளது;

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், கடந்த 12-ம் தேதி இரவு முதல் மிக அதிக அளவில் கன மழை பொழிந்துள்ளது; சென்னையில், தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் மாநகராட்சி பணியாளர்களால் போர்க்கால அடிப்படையில் வெளியேற்றப்பட்டு சாலை போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது; 83,000 உணவுப் பொட்டலங்கள் மாநகராட்சி மூலமாக வழங்கப்பட்டுள்ளன; காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த பெருமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன; 26 முகாம்களில், 7,294 நபர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்;

மேலும், மீட்புப் பணிகளுக்காக 5 மிதவை படகுகளுடன் கூடிய தேசிய பேரிடர் மீட்புப் படையின் 35 நபர்கள் கொண்ட ஒரு குழு, மாநில பேரிடர் மீட்புப் படையின் 20 நபர்கள் கொண்ட ஒரு குழு, கடலோர காவல் படையினைச் சார்ந்த 21 அதிரடிப் படை வீரர்கள் கொண்ட ஒரு குழு மீட்புப் பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளனர்; மூத்த ஐஏஎஸ் அதிகாரி . க. இராஜராமன், நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்; திருவள்ளூர் மாவட்டத்தில், 20 முகாம்களில், 1,620 நபர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது;

அத்துடன் மழையால் பாதிக்கப்பட்ட 5,500 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. நிவாரணப்பணிகளை ஒருங்கிணைக்க திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி. எஸ்.கே. பிரபாகர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தற்போது, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், எதிர்வரும் 15,16 மற்றும் 17 ஆம் தேதிகளில் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களிலும், வட உள் மாவட்டங்களிலும் மிக அதிகளவு மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது; இதர கடலோர மாவட்டங்களிலும் பெருமழை பெய்யக்கூடும் – தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை பல்வேறு மாவட்டங்களுக்கு தாம் அனுப்பிட உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அதன்படி வேலூர் மாவட்டத்திற்கு . த. சபீதா, விழுப்புரம் மாவட்டத்திற்கு . த. உதயசந்திரன், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சிவ் தாஸ் மீனா, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முனைவர் ச.விஜயகுமார், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு முனைவர் கொ.சத்யகோபால், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு. சி. சமயமூர்த்தி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு குமார் ஜயந்த், திருநெல்வேலி மாவட்டத்திற்கு முனைவர் ச. செந்தில்குமார், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு . அதுல் ஆனந்த் ஆகியோர் அனுப்பப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கடலூர் மாவட்டத்தில் உள்ள ககன்தீப் சிங் பேடி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள . க. ராஜாராமன், திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள .எஸ்.கே.பிரபாகர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள . பிரதீப் யாதவ், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ள . ராஜேஷ் லக்கானி ஆகியோர் அந்தந்த மாவட்டங்களிலேயே ஒருங்கிணைப்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள தாம் உத்தரவிட்டுள்ளதாகவும், மேலும் இந்த மாவட்ட அமைச்சர்களும், தங்கள் மாவட்டங்களிலேயே இருந்து முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்கவும் தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சிக்கு முடிவுரை எழுத மக்கள் தயாராகிவிட்டார்கள் : மருத்துவர் ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :–

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சிக்கு முடிவுரை எழுத மக்கள் தயாராகிவிட்டார்கள் என்றும் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், அதிக அளவு மழை பொழியும் போது சேதங்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகும் என கூறியுள்ளாளர் .

கடலூர் மாவட்டத்தில் மழை நீரை ஆறுகளுக்கு கொண்டு செல்லும் கால்வாய்களில் 40 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் ஓடி ஆறுகளில் கலக்க வகை செய்யப்பட்டிருந்தாலே பெருமளவு சேதங்களைத் தடுத்திருக்கலாம்.

தமிழகத்தை தொடர்ச்சியாக ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மக்களின் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததன் விளைவு தான் இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பதை தமிழக மக்கள் அறிந்திருக்கிறார்கள்.

மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கவும், ரூ.1000 கோடி இழப்பு ஏற்படவும் காரணமான ஜெயலலிதா ஆட்சிக்கு முடிவுரை எழுத மக்கள் தயாராகிவிட்டார்கள் என்பது மட்டும் உண்மை என
மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

காவல் நிலையத்திற்குள் காவலர்களையே திட்டி, மிரட்டிய வழக்கறிஞரை கட்டுப்படுத்த முடியாத தமிழக காவல்துறை

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் துறைகளில் மிக முக்கியமானது காவல்துறை.

அவரது ஆட்சியில் மட்டுமே காவல் நிலையத்திற்குள் கரை வேட்டிகள் புகுந்து அதிகாரிகளை மிரட்டி கட்டப் பஞ்சாயத்து செய்ய முடியாது என்கிற நிலை உள்ளது.

ஆனால் பெரும்பாலான வழக்கறிஞர்கள் சட்டத்திற்கு விரோதமாக அத்துமீறி நடந்து கொண்டால் அவர்கள்மீது மட்டும் தமிழக காவல் துறையில் பணியாற்றுபவர்கள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன் எனும் கேள்வியைத்தான் பெரும்பாலோர் எழுப்புகின்றனர்.

அந்த கேள்வியை பெரும்பாலோர் எழுப்புவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று வழக்கறிஞர்கள் சங்கத்தினர் என்ற போர்வையில் காவல் துறையினரிடம்
அனுமதி பெறாமல் திடீர்.. திடீர்..என பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம், போராட்டம், என கூறிக்கொண்டு சாலை மறியலில் ஈடுபடுவது தான்.

அவசரமான பொது பிரச்னைகளுக்காக எவரேனும் அனுமதி பெறாமல் சாலை மறியல் போன்ற பலவிதமான சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டால் கூட உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கும் காவல் துறையினர் வழக்கறிஞர்களைக் கண்டால் பயந்து பதுங்குவது ஏன்? என்பதிற்கு விடை தெரியாமலே பலர் புலம்பி வருகின்றனர்.

தமிழகத்தில் திருநங்கைளைக் கண்டாலே அவர்களை ஏளனமாகப் பேசுவோர் பெரும்பாலாேனார் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து காவலருக்கும் திருநங்கை ஒருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
அப்போதுகூட சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பாலினம் என்றும் பாராமல் காவல் துறையினர் அந்த பிரச்னையில் உடனடியாக திருநங்கையை கைது செய்து நடவடிக்கை எடுத்தது அனைவரும் அறிந்ததே!

சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை காவல் நிலையத்திற்குள் நேற்று (14.11.2015) காலை சுமார் 11.00 மணிக்கு ரௌடிபோல் தோற்றம் கொண்ட வழக்கறிஞர் ஒருவர் சிலரை உடன் கூட்டிக் கொண்டு கும்பலாக சென்றாராம்.

அந்த வழக்கறிஞர் காவல் நிலையத்தில் உயர் அதிகாரிகள் இல்லாத நிலையில் பணியில் இருந்த பெண் காவலரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தாராம். மேலும் புகார் கொடுத்தவுடன் அவரிடம் உடனடியாக மனு ரசீதை வழக்கறிஞர் கேட்டதாகவும் தெரிகிறது.

புகாரை பெற்றுக் கொண்ட பெண் காவலர் புகார்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க தொலைபேசியை எடுத்தாராம்.

அதனால் ஆத்திரம் அடைந்த கும்பலுடன் சென்று புகார் கொடுத்த வழக்கறிஞர் “புகார் அளிக்க வந்த எனக்கு உடனடியாக மனு ரசீதை கொடுக்காமல் எவன்கூட கடலைபோட தொலைபேசியில் பேச எவனடி கூப்புடறே” என்று அதிகாரத் தோரணயுடன் உரத்த குரலில் பெண் காவலரை மிரட்டி தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக திட்டி அவரை பணியாற்ற விடாமல் கும்பலாக சென்ற அனைவரும் தடுத்தனராம்.

காவல் நிலையத்தில் கும்பலாக சத்தம் போடுவதைக் கேட்ட ஆயுதப்படை இளம் காவலர் ஒருவர் வழக்கறிஞரிடம் “சார் உங்களுக்கு என்ன பிரச்னை? எதுவாக இருந்தாலும் காவல் நிலைய ஆய்வாளரிடம் பேசிக் கொள்ளுங்கள். ஆய்வாளர் விரைவில் காவல் நிலையத்திற்கு வந்து விடுவார். தேவையில்லாத அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி யாரையும் பேச வேண்டாம். பொறுமையை கடைப்பிடித்து சிறிது நேரம் உக்காருங்கள்” எனக் கூறினாராம்.

அதற்கு வழக்கறிஞருடன் வந்திருந்த கூட்டம் “நீ யாருடா” என நாம் பதிவிடக் கூசும் ஒரு வார்த்தையைக் கூறி “எங்க சீனியர்கிட்ட பேச உனக்கு என்னடா தகுதி இருக்கு?” என்றும் வாய்க்கு வந்த தகாத வார்த்தைகளால் பேசி காவல் நிலையத்தில் இருந்த காவலர்களிடம் கும்பம் கடும் வாக்குவாதம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்களை மற்றொரு பெண் காவலர் அவரது கைப்பேசியில் காணொளி பதிவு செய்தாராம். அதை பார்த்துவிட்ட அந்த கூட்டம் அந்த பெண் காவலரை விரட்டிப் பிடிக்க முயல பெண் காவலர் காவல் நிலையத்திற்குள் இருந்த ஒரு அறைக்குள் ஓடிவிட்டாராம்.

வழக்கறிஞர் உட்பட அவருடன் வந்த கும்பலில் சிலர் ஓடிய பெண் காவலர் இருந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்து அந்த பெண் காவலரிடம் “நீ விபச்சாரிக்கு பிறந்தவளா? அதற்குத்தா்ன் நீயும் பிறந்தாயா? என்கூட வர்றியா? நான் பணம் தர்றேன்” என தாறுமாறான வார்த்தைகளால் திட்டத் தொடங்கியதாம் அந்த கும்பல். அப்போது அங்கு வந்த ஒரு வயதான உதவி ஆய்வாளர் அந்த கும்பலைத் தடுத்து நிறுத்தினாராம்.

உதவி ஆய்வாளரிடம் கும்பல் பெண் காவலர் செய்த காணொளி பதிவை நீங்க இப்போ அழிக்காவிடில் காவல் நிலையத்தின் முன் 100 வழக்கறிஞர்களை இப்போதே கூட்டி பிரச்னை செய்து விடுவோம் என மிரட்டினார்களாம்.

உடனே அந்த உதவி ஆய்வாளர் அப்பெண் காவலரிடம் அந்த கைப்பேசியை வங்கி அந்த கும்பலிடம் கொடுத்து “நீங்களே காணொளி பதிவை அழித்து விடுங்கள்” எனக் கூற அந்த கும்பல் காணொளியை அழித்து விட்டதாம்.

மேலும் அப்பகுதியினர் கூட்டமாக கூடியநிலையில் வழக்கறிஞர் கும்பலாக காவல் நிலைய நுழைவாயிலில் நின்று அந்த ஆயுதபடைக் காவலரைப் பார்த்து “உன் வேலையை ஆஷாத் நகரோட வச்சுக்கோ. இங்க வந்தா நான் 1000 இந்துக்களை இங்கேயே கூட்டவா?” என அவரது மதத்தினைக் கூறி திட்டி மிரட்டி விட்டு சென்று விட்டதாக அப்பகுதியினரால் பரவலாகப் பேசப்படுகிறது.

மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்நிலையத்தில் பணியில் இருக்கும் காவலர்களுக்ககே இந்த நிலைமை எனில் சாமானியனின் கதி என்ன? அதோகதிதானே?

நீதிமன்றத்திற்குள் மட்டுமே தொழில் செய்ய வேண்டிய வழக்கறிஞர்கள் பலர் காவல் நிலையத்திற்கு வந்து காட்டுமிராண்டித்தனமாக அநாகரிகமாக பேசி கட்டப்பஞ்சாயத்து செய்வது ஏனோ?

சில வழக்கறிஞர் காவல் நிலையத்திற்குள் கும்பலாகப் புகுந்து காவல் அறைக்குள் அத்துமீறி நுழைந்து காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, மிக துணிச்சலுடன் காவலர்களுக்கே மிரட்டல் விடுக்கிறார் என்றால் காவல் துறையில் பணியாற்றும் சில அதிகாரிகளுக்கும் சில வழக்கறிஞர்களுக்கும் என்ன உள்குத்தோ?
வழக்கறிஞர்களை கட்டப் பஞ்சாயத்து செய்யும் அளவிற்கு அனுமதிப்பது யார் குற்றம்?

காவல் நிலையத்திற்குள் கரை வேட்டிகள் புகுந்து அதிகாரிகளை மிரட்டி கட்டப் பஞ்சாயத்து செய்ய முடியாது என்கிற நிலையை உருவாக்கிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சில வழக்கறிஞர்கள் காவல் நிலையத்திற்குள் புகுந்து செய்யும் கட்டப் பஞ்சாயத்து மற்றும் அட்டகாசத்தை ஒழிக்க முடியுமா என்ன? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் இருந்தால் சிலிண்டர் மானியம் ரத்தாகும்?: வெங்கய்ய நாயுடு!

ஹைதராபாத்:
ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு மானிய விலை சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார்.

ஆந்திரா, தெலங்கானா வர்த்தகப் பேரவை சார்பில் ஹைதராபாத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியபோது,

நாடு முழுவதும் சட்டவிரோதமான முறையில் பலர் சிலிண்டர் இணைப்புகளை வாங்கி வைத்திருப்பதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தெரிவித்தார். இந்த இணைப்புகளை ரத்து செய்வதன் மூலம், கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும் என்றும் கூறியிருந்தார். இதன் காரணமாக சட்ட விரோத எரிவாயு சிலிண்டர் இணைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு மானிய விலை சிலிண்டர் விநியோகத்தை நிறுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் அளவுக்கு வருமானம் பெறும் குடும்பத்துக்கு, அரசின் மானியத் தொகை எதற்கு? அந்த் தொகையை ஏழைகளுக்கு செல்விட அரசு முடிவு எடுத்துள்ளது. வசதியானவர்கள், அமைச்சர்கள் என சுமார் 30 லட்சம் பேர் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை இதுவரை விட்டுக் கொடுத்துள்ளனர் என்று அவர் பேசினார்.

 

 

 

 

 

விஜயகாந்த் அடித்தது எனக்கு ஆசீர்வாதம்: சிவகொழுந்து எம்.எல்.ஏ.

பண்ருட்டி:

விஜயகாந்த் என்னை அடித்தது எனக்கு அவர் கொடுத்த ஆசீர்வாதம் என்று கூறியுள்ளார் எம்.எல்.ஏ., சிவக்கொழுந்து.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடலூர் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்து வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட்டார். பண்ருட்டி அருகே உள்ள பெரியகாட்டு பாளையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். பின்னர் பிரசார வேனில் ஏறினார். அவருடன் பண்ருட்டி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பி.சிவக்கொழுந்து நின்று இருந்தார்.

வேனை சுற்றி தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்றனர். விஜயகாந்த் வேன் புறப்பட முடியவில்லை. ‘‘வழி விடுங்கள்’’ என விஜயகாந்த் சைகை காட்டியும் கூட்டத்தினர் நகரவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த விஜயகாந்த் தனது அருகில் நின்று இருந்த சிவக்கொழுந்து எம்.எல்.ஏ.வை பளார்.. பளார்… என 4 முறை அடித்தார்.

எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து அடியை வாங்கி குணிந்தவாறு நின்றார். அதோடு வேன் டிரைவரை காலால் உதைத்து ‘‘சீக்கிரம் போ’’ என கடிந்து கொண்டார். பொதுமக்கள் முன்னிலையில் எம்.எல்.ஏ.வை விஜயகாந்த் அடித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து சிவக்கொழுந்து கூறியபோது, தமிழ்நாட்டில் விஜயகாந்த் மட்டுமே இயல்பான தலைவர். மக்களை பற்றி சிந்திப்பவர். மனதில் பட்டதை சொல்பவர். தவறு என்று நினைத்தால் அதை செய்தவர் யார் என்று பார்க்காமல் கண்டிப்பார். நிவாரண உதவி வழங்கிய இடத்தில் விஜயகாந்த் பிரசார வேன் முன்பு கட்சி தொண்டர்கள் முண்டியடித்து நின்றனர். இதனால் விஜயகாந்தால் மக்களை பார்க்க முடியவில்லை.

அந்த கோபத்தில் அருகில் இருந்த என்னை அழைத்து முதுகில் அறைந்தார். நான் குனிந்து கொண்டேன். மாவட்ட செயலாளரான நானே கட்சியினரை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும் என்று கண்டித்தார். அவர் சொன்ன பிறகே தவறை உணர்ந்தேன். முறையாக ஏற்பாடு செய்யாததால் அவர் தண்டனை கொடுத்தார். அவரிடம் அடி வாங்கியதற்காக வருத்தப்படவில்லை. தலைவர் கையால் அடி வாங்குவது அவர் ஆசிர்வதிப்பது மாதிரி தான். அவருடன் நெருக்கமாக இருப்பதாகவே இதை நினைக்கிறேன்…. என்று கூறினார்.

மழை பெய்தால் சேதம் தவிர்க்க முடியாததா? ஜெயலலிதாவின் பொறுப்பின்மை: ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை:
மழை பெய்தால் சேதம் தவிர்க்க முடியாதது என்று கூறுவது பொறுப்பின்மையின் அடையாளம் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,‘‘அதிக அளவு மழை பொழியும் போது சேதங்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகும்’’ என கூறியிருக்கிறார். மழை&வெள்ள பாதிப்புகளை தடுக்க சிறு துரும்பை கூட நகர்த்தாமல் தமிழகம் சந்தித்த எல்லா பாதிப்புகளுக்கும் இயற்கை மீது பழி போட்டு தப்பிக்க முயல்வது பொறுப்பற்றதனமாகும்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 9 ஆம் தேதி காலை முதல் 10 ஆம் தேதி காலை வரை நெய்வேலியில் 48 செ.மீ. பண்ருட்டியில் 35 செ.மீ. சேத்தியாத்தோப்பு மற்றும் சிதம்பரத்தில் தலா 34 செ.மீட்டரும் மழை பெய்தது உண்மை தான். ஆனால், இம்மழையால் கடலூர் மாவட்டம் இழந்தது மிக அதிகம். 48 செ.மீ. மழைக்காக 40 அப்பாவி மக்களின் உயிர் பறிபோவதும், ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுவதும் வளர்ச்சியடைந்த மாநிலம் என்று கூறப்படும் தமிழகத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஏற்பட்ட சேதங்கள் அனைத்துக்கும் தமிழக அரசின் அலட்சியம், பொறுப்பற்ற தன்மை மற்றும் ஊழல் தான் காரணமாகும்.

கடலூர் மாவட்டத்தில் மழை நீரை ஆறுகளுக்கு கொண்டு செல்லும் கால்வாய்களில் 40 விழுக்காடு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் ஓடி ஆறுகளில் கலக்க வகை செய்யப்பட்டிருந்தாலே பெருமளவு சேதங்களைத் தடுத்திருக்கலாம். ஆனால், அதிமுக அரசு அதை செய்யவில்லை. காரணம்… ஆக்கிரமித்தவர்களில் கணிசமானவர்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பது தான். அதுமட்டுமின்றி, வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப் பட்ட நிதி முற்றிலும் பதுக்கப்பட்டு விட்டதோ என எண்ணும் அளவுக்கு எந்த பணியும் நடைபெறவில்லை. இந்த பணிகள் செய்யப்பட்டிருந்தால் கடலூர் மாவட்டத்தில் 48 செ.மீ. மழை பெய்தது என்பது சாதாரண செய்தியாக இருந்திருக்குமே தவிர, மிகப்பெரிய சோகமான செய்தியாக மாறியிருக்காது என்பது உண்மை.

இப்பணிகள் எதுவும் செய்யப்படாத நிலையில், கடலூர் மாவட்டம் அருகில் காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையில், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றிருந்தால் குறைந்தபட்சம் உயிரிழப்புகளையாவது தடுத்திருக்கலாம். ஆனால், இவற்றில் எதையுமே தமிழக அரசு செய்யவில்லை.

சென்னையில் ஒருநாள் பெய்த மழைக்கே மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. சென்னை பெருநகர பகுதியின் 40% முறையான திட்டமிடல் இல்லாமல் உருவாக்கப்பட்டது தான் இதற்கு காரணம். குறிப்பாக வேளச்சேரி, முகப்பேர், அம்பத்தூர் ஆகிய பகுதிகள் நீர்நிலைகளை தூர்த்து உருவாக்கப்பட்டவை. இந்த நகரங்கள் உருவாக்கப்பட்ட பகுதிகளைத் தவிர நீர்நிலைகளின் மற்ற பகுதிகள் தூர்வாரப்பட்டு, அவற்றின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டிருந்தால் இந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதை தவிர்த்திருக்க முடியும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆனால், இவற்றையெல்லாம் தமிழக அரசு செய்யவில்லை.
சென்னையில் புதிதாக மழைநீர் வடிகால்களை உருவாக்க எல்லைக்கோட்டு வரைபடங்கள் (Contour Maps) தேவை. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தொலையுணர்வு மையம் இத்தகைய வரைபடங்களை பல ஆண்டுகளுக்கு முன்பே தயாரித்துக் கொடுத்தும், அதை முறையான வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தயாரித்த இரண்டாவது பெருந் திட்டத்தில்(Chennai Second Master Plan) நீர்நிலைகளை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்காக தயாரிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் இப்போதைய அ.தி.மு.க. அரசோ, முந்தைய தி.மு.க அரசோ ஆர்வம் காட்டவில்லை. நீர்நிலைகள் பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பாக உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பல ஆய்வுகளை நடத்தியுள்ள போதிலும், அத்திட்டங்கள் எதுவும் இன்னும் நடைமுறைப்படுத்தும் நிலைக்கு கூட வரவில்லை என்று பெருநகர திட்டமிடல் வல்லுனர் கூறியதாக நேற்றைய தி ஹிந்து ஆங்கில நாளிதழில் Rain spotlights the perils of poor planning என்ற தலைப்பில் வெளியான செய்திக்கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறது.

தமிழகத்தை தொடர்ச்சியாக ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மக்களின் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததன் விளைவு தான் இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பதை தமிழக மக்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதும், அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரில் கால் நனைப்பதும் தமது உடல் நலத்திற்கு கேடு என்று அஞ்சும் முதலமைச்சர் ஜெயலலிதா, மழை&வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் லட்சக்கணக்கான மக்களை சிறுமைப்படுத்தும் வகையில், மழை பெய்தால் சேதம் ஏற்படுவது தவிர்க்க முடியாது என கூறியிருக்கிறார். ‘‘போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்’’ என்று கூறி இலங்கைப் போரில் தமிழர்கள் படுகொலை செய்ததை நியாயப்படுத்திய ஜெயலலிதாவிடமிருந்து இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கமுடியாது.

மழை& வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தமிழகம் முழுவதும் 60&க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கவும், ரூ.1000 கோடி இழப்பு ஏற்படவும் காரணமான ஜெயலலிதாவின் ஆட்சிக்கு முடிவுரை எழுத மக்கள் தயாராகி விட்டார்கள் என்பது மட்டும் உண்மை.

இறக்கும் இந்திய குழந்தைகள்

2.bp.blogspot.com - 2026

 
இந்தியாவுக்கு இளமையான நாடு என்று பெயர் இருக்கிறது. மக்கள் தொகையை பொருத்தவரை இந்தியா சாதகமான நிலையில் உள்ளது. 8 முதல் 24 வயதுக்குள் இருக்கும் மக்களின் எண்ணிக்கை பார்க்கும் போது சீனாவை விட இந்தியா இளமையாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்த இளமை இந்தியாவின் குழந்தைகள் நிலை மெச்சிக்கொள்ளும் அளவில் இல்லை. 
 
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 4 லட்சம் குழந்தைகள், பிறந்த 24 மணி நேரத்துக்குள் இறந்து போவதாக சர்வதேச அமைப்பான ‘சேவ் த சில்ரன்’ கூறுகிறது. இந்த மோசமான நிலை இந்தியாவில் மட்டுமே உள்ளது. வங்காள தேசம் மற்றும் நம்மை விட மோசமான வறுமையில் இருக்கும் சில ஆப்பிரிக்க நாடுகளை விட குழந்தைகள் மரணம் அடையும் விகிதம் இந்தியாவில் மிக அதிகம்.
 
ஒவ்வோர் ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2 லட்சம் பேர் இந்தியாவில் மரணம் அடைகிறார்கள். அதாவது ஒரு மணி நேரத்துக்கு 45.6 குழந்தைகள் பிறந்தவுடன் இறக்கிறார்கள். 5 வயதுக்குட்பட்ட 3.8 குழந்தைகள் ஒவ்வொரு நிமிடமும் இறக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே காரணம் சரியான உணவு இல்லாததுதான். 

 
1.bp.blogspot.com - 2026
 
உண்மையான பாதிப்பை அறிந்துகொள்ள வளர்ந்த நாடுகளுடன் நமது குழந்தைகள் மரண விகிதத்தை ஒப்பிட வேண்டும். ஜப்பானில் குழந்தைகள் மரண விகிதம் 3.2 ஆக உள்ளது. சிங்கப்பூரில் 3 ஆக உள்ளது. இந்தியாவில் நகர்ப்புறங்களில் இது 36 ஆகவும், கிராமப்புறங்களில் 58 ஆகவும் உள்ளது. இது மிக அதிக அளவு. 
 
ஐ.நா.வின் கணக்கீடுகள் படி தற்போதைய உலக குழந்தைகள் இறப்பு விகிதம் 49.4. பெருமளவில் போலியோ தடுப்பு மருந்துகள் தரப்பட்டாலும் போலியோவால் பாதிக்கப்படுபவர்களில் 33 சதவீதத்தினர் இந்தியாவில்தான் உள்ளனர். இது மோசமான சுகாதாரம் மற்றும் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் ஏற்படுகிறது. 
 
2008 தகவலின்படி இந்தியாவில் 800 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் போலியோ சுத்தமாக ஒழிக்கப்பட்டு விட்டது. குழந்தைகளுக்கான நிதி குறைந்த அளவில் ஒதுக்கபடுவதாலும், பொறுப்புணர்வு குறைந்த அரசுமே இதற்கு காரணம் என்கிறது ‘சேவ் த சில்ரன்’அமைப்பு. 

 
3.bp.blogspot.com - 2026
 
இந்தியாவில் 45 கோடி பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள். ஒட்டுமொத்த மக்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள். அப்படி இருந்தும் கூட மொத்த பட்ஜெட்டில் குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது.
 
இதனால் குழந்தைகளை மரணத்தின் பிடியில் இருந்து இந்தியாவால் காப்பாற்ற முடியவில்லை. இதனால் இளமையான மக்கள் தொகை இந்தியாவுக்கு சாதமாக இருந்தும் கூட அதை பயன்படுத்த முடியாத நிலையில் இந்தியா உள்ளது.
 

3.bp.blogspot.com hER2iZOsUHc VeUGolL8oXI AAAAAAAAFwI oJdWTRWWslk s640 india children 006 - 2026

 
 

 
தொடர்புடைய பதிவுகள்

உலகின் சிறந்த சுற்றுலா நகரங்கள்

 

4.bp.blogspot.com NZ97U9Giz6s VfA0B3Td0BI AAAAAAAAF6Q 8hvPQrdPnBs s640 kyoto - 2026

சுற்றுலாவிற்கென்றே உலகம் முழுவதும் ஏராளமான இடங்கள் உள்ளன. சில நகரங்களில் வெறும் சுற்றுலா மட்டும்தான் பிரதான தொழில். இப்படி உலகம் முழுவதும் நிறைந்து இருக்கும் சுற்றுலா நகரங்களை ஆய்வு செய்து அவற்றில் சிறந்த நகரங்களை ‘டிராவல் + ப்ளஷர்’ இதழ் வெளியிட்டுள்ளது. அதில் முதல் 5 இடங்களை பிடித்த நகரங்கள் இங்கே.

1. கியோட்டோ – ஜப்பான்
பத்தாயிரம் மடங்களின் நகரம் 

4.bp.blogspot.com eXId05xRwDY VfAzZRgPxoI AAAAAAAAF6I RmpVPciF DM s640 Kyoto Pic 06 - 2026

சுற்றுலாவாசிகளுக்கு மிகவும் பிடித்த நகரமாக முதலிடத்தில் இருப்பது ஜப்பானில் உள்ள கியோட்டோ தான். கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு மேலாக ஜப்பானின் தலைநகரமாக இருந்த நகரம். யுனெஸ்கோவின் பாரம்பரிய பகுதிகள் பட்டியலில் இந்த நகரமும் இடம் பிடித்துள்ளது. இங்குள்ள 17 இடங்கள் மற்றும் மடங்கள் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாயிரம் மடங்கள் கொண்ட நகரம் என்ற பெயரும் கியோட்டோவுக்கு உண்டு.

1.bp.blogspot.com CncC7Jhub8 VfA0ZHn2pMI AAAAAAAAF6Y tk8sX8clfqY s640 kyoto japan 7 - 2026

இங்கு கொண்டாடப்படும் ஒவ்வொரு திருவிழாவும் ஆயிரம் வருடங்கள் பழமையானது. பாரம்பரியம், வரலாறு, ஆன்மிகம், அமைதி, கலை போன்றவற்றால் சுற்றுலா பிரியர்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது கியோட்டோ.

2. சார்லஸ்டன் – அமெரிக்கா
நண்பேன்டா நகரம் 

 
3.bp.blogspot.com F 1mAwOKtIg VfA2l7k8duI AAAAAAAAF68 Qz6oZKiei6Q s640 charleston south carolina 14 - 2026

வட அமெரிக்காவில் உள்ள ஐந்தாவது பெரிய நகரம் சார்லஸ்டன். அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள துறைமுக நகரமான இது தென் கரோலினா மாகாணத்தில் உள்ளது. வளமையான சரித்திரம், அசர வைக்கும் கட்டடங்கள், சுவையான உணவகங்கள், பண்பான மக்கள் என்று இந்த நகருக்கு பெருமை சேர்க்கும் விஷயங்கள் எக்கச்சக்கம். அதனால்தான் சுற்றுலாவாசிகள் இதை மிக நட்பான நகரம் என்று புகழ்கிறார்கள்.

1.bp.blogspot.com l66j5FNjH8c VfA2DPTj4OI AAAAAAAAF60 ZdwZ4reZW8k s640 gibbes museum of art - 2026
அருங்காட்சியகம்

இங்குள்ள அருங்காட்சியகம்தான் அமெரிக்காவில் முதலாவதாக அமைக்கப்பட்டது. 1773-ல் நிலவிய கலாசாரம், இயற்கையின் வரலாறு இவற்றை சொல்லும் இடமாக இது அமைந்துள்ளது.

3.  ஃப்ளோரன்ஸ் – இத்தாலி
கலைப்பொக்கிஷங்களின் நகரம்

3.bp.blogspot.com Uyg3EWpoqLQ VfA4WfzfUgI AAAAAAAAF7I 9pUcdU2ZV2M s640 florence italy 13 - 2026

திரும்பிய பக்கமெல்லாம் அருங்காட்சியகங்கள், அரண்மனைகள், தேவாலயங்கள் என்று இருந்தால் எப்படி இருக்கும். அதிலும் எல்லாம் பழமை மாற்றாத பாரம்பரியத்திற்கு சொந்தம் என்றால் உற்சாகத்துக்கு கேட்கவா வேண்டும். உலகிலேயே கலைப்பொக்கிஷங்களை அதிகமாக கொண்டுள்ள நகரம் இதுதான்.

4.bp.blogspot.com hNq8kjLKbTE VfA4n5HTXhI AAAAAAAAF7Q EY3RzWymCE4 s640 firenze1 - 2026

சரித்திர காலத்திலும் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்திலும் சிறந்த நகரம். 1982-ல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் ஃப்ளோரன்ஸ் நகரை சேர்த்தது. பழமை மட்டுமல்லாது உலகிற்கு ஃபேஷனை அறிமுகப்படுத்துவதிலும் இந்த நகரம்தான் முதன்மையாக உள்ளது.

4. சியம் ரீப் – கம்போடியா 
பாரம்பரியத்தின் உறைவிடம்

3.bp.blogspot.com oKmmR8SBcxg VfA5dElsviI AAAAAAAAF7Y wZmFZmKKDI s640 973761 cambodia angkor road - 2026

கம்போடிய நாட்டின் மிக முக்கிய நகரம் சியம் ரீப். இந்த நகரை பாரம்பரியத்தின் உறைவிடம் என்று கொண்டாடுகிறார்கள் சுற்றுலாவாசிகள். இங்குள்ள அங்கோர்வாட் கோயில் இரண்டாம் சூரியவர்மனால் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

3.bp.blogspot.com CWhlc2PxKT8 VfA 9WfJsLI AAAAAAAAF7o wp8L5anJWPE s640 Angkorwatt01 - 2026

இதுதான் உலகின் மிகப் பெரிய வழிபாட்டுத்தலமாக இருக்கிறது. 1992-ல் இது யுனெஸ்கோவின் பட்டியலில் இடம்பெற்றது. சியம் ரீப் வளர்ந்து வரும் ஒரு நவீன நகரமாகும். இங்கு பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.

5. இஸ்தான்புல் – துருக்கி
வேகமாக வளரும் வரலாற்று நகரம் 

3.bp.blogspot.com 7P - 2026

ஐரோப்பாவில் மாஸ்கோவிற்கு அடுத்தபடியாக அதிக மக்களைக் கொண்ட நகரம் இஸ்தான்புல். மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் இதுவும் ஒன்று. சுற்றுலா செல்பவர்கள் அதிகம் வருகைதரும் நகரங்களில் இஸ்தான்புல் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த நகரில் பழமை மிக்க 17 மாளிகைகள், 64 பள்ளிவாசல்கள், 49 தேவாலயங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் உள்ளன.

2.bp.blogspot.com TmRZDsJkex4 VfBAlhflLCI AAAAAAAAF74 bu8qf1FziAw s640 Istanbul Blue Mosque Pedro Szekely - 2026

மேலே குறிப்பிட்ட இந்த நகரங்களைத் தவிர, 6-வது இடத்தில் ரோம், 7-வது இடத்தில் ஸ்வில், 8-வது இடத்தில் பார்ஸிலோனா, 9-வது இடத்தில் மெக்ஸிகோ, 10-வது இடத்தில் நியூ ஆர்லியன்ஸ் போன்ற நகரங்கள் உள்ளன. இதில் சியம் ரீப், ஸ்வில், மெக்ஸிகோ, நியூ ஆர்லியன்ஸ் ஆகிய நகரங்கள் முதன் முதலாக இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

3.bp.blogspot.com TJOedFmaLdU VfBBb7XC71I AAAAAAAAF8A Vm6bjULpg8w s640 30 - 2026

 

பாரதியார் அப்படி நடந்திருப்பாரா..?!

அது நாகர்கோயிலில் நடைபெற்ற இலக்கிய கூட்டம். என் நண்பர் ஒருவர் என்னையும் அழைத்திருந்தார். எனக்கு பேசத்தெரியாததால் வழக்கம்போல் பார்வையாளனாக கலந்துக் கொண்டேன். அங்கு பல விவாதங்கள் நடந்தன. இலக்கிய சொற்பொழிவுகள் அரங்கேறின. அப்போது ஒரு எழுத்தாளர் சொன்ன தகவல் இன்னும் என் மனதை வாட்டிக் கொண்டிருக்கிறது. அது பாரதியார் பற்றிய தகவல். நாம் இத்தனை காலம் உண்மை என்று ஆணித்தரமாக நம்பிக் கொண்டிருந்த ஒரு நம்பிக்கையின் மீது வீழ்ந்த அடி. 

3.bp.blogspot.com ylf3 9ubgEk VfMfeYBjHqI AAAAAAAAF84 CI91WdqXqVQ s400 0bb3d9ac170d0bcdbb12826513314329 large - 2026
 
எழுத்தாளரும் கவிஞருமான அவர் சிங்கப்பூர் தமிழர்கள் நடத்திய ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருக்கிறார். அவர் தங்கியிருந்த ஓட்டலில் இவரைப் போலவே விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த மற்றொருவரை சந்தித்திருக்கிறார். அவரிடம் நமது எழுத்தாளர் கொஞ்சம் தமிழும் கொஞ்சம் ஆங்கிலமும் கலந்து பேசியிருக்கிறார். அதற்கு அந்த பெரியவர், “எனக்கும் தமிழ் தெரியும். உங்களுக்கும் தமிழ் தெரியும். அப்படிருந்தும் ஏன் இடையிடையே ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள். ஆங்கில சொற்கள் கலக்காமல் பேசுங்களேன். நன்றாக இருக்கும்.” என்று கூறியிருக்கிறார். இதனால் இயல்பாகவே அவர் மீது நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கிறது. தினமும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். 
 
மூன்று நாட்கள் அந்த ஓட்டலில் இருந்ததில் அவரிடம் மிக நெருங்கிப் பழகிவிட்டார் நமது எழுத்தாளர். அந்த நெருக்கத்திற்கு மற்றொரு முக்கிய காரணமும் உண்டு. அந்த நபர் சுப்ரமணிய பாரதியின் தம்பி மகன். பாரதியைப் பற்றி பல அறியப்படாத தகவல்களை அவர் சொல்லியிருக்கிறார். அதில் ஒன்றுதான் மேலே நான் சொல்லப் போவதாக  சொன்ன தகவலும். 
 
1.bp.blogspot.com aqyP94G 50I VfMfuCLigQI AAAAAAAAF9A NrL5TXEXS3A s400 hqdefault - 2026
 
பாரதியார் கண்ணம்மா என்ற பெயரில் கண்ணனை பற்றி பாடியதாகத்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கண்ணம்மா என்ற பெயரில் ஒரு பெண் இருந்ததாகவும். அந்தப் பெண்ணைத்தான் பாரதியார் பாடியதாகவும், அந்தப் பெண் ஒரு விதவை என்றும் அவர் கூறியிருக்கிறார். 
 
பாரதியின் வீட்டுக்கு எதிரேதான் அந்தப் பெண் இருந்திருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு ஐந்து அண்ணன்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் பாரதியாரை மிரட்டியிருக்கிறார்கள். கண்ணம்மா என்ற பெயரில் பாடல் எழுதக்கூடாது என்று கட்டளை இட்டிருக்கிறார்கள். பாரதிதான் அஞ்சாநெஞ்சனாயிற்றே இந்த மிரட்டலை எல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கண்ணம்மா பெயரில் பாடல்கள் எழுதியிருக்கிறார். 
 
பொறுமையின் எல்லையை கடந்த சகோதரர்கள் ஒரு கட்டத்தில்  பாரதியாரை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்  இதற்கு முதல் நாள்தான் கோயில் யானை வேறு பாரதியாரை கீழே தள்ளிவிட்டிருக்கிறது. பாரதிக்கு பலத்த காயம்தான், யானை தள்ளியதால் அல்ல, சகோதரர்கள் அடித்ததால். ஒருசில நாட்களில் பாரதியார் இறந்து விடுகிறார். அவர் மரணத்துக்கு காரணம் யானை அல்ல. என்று மீண்டும் அழுத்தமாக அவர் கூறியதாக எழுத்தாளர் கூறினார். இதற்கு ஆதாரம் எதுவும் உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் பாரதி சார்ந்த குடும்பத்தினரே கூறும் போது அதை நம்பாமலும் இருக்கமுடியவில்லை. 
 
அப்போதிருந்த எனக்கு இதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. வரலாற்று ஆய்வாளர்கள் இதை விளக்கினால் நன்றாக இருக்கும். விளக்குவார்களா..!!!

அமுக்குவான் பேய் இருப்பது உண்மையா..?

அமுக்குவான் பேய் இருப்பது உண்மையா..?

 
(தினம் ஒரு தகவலில் அமுக்குவான் பேய்ப் பற்றி வெளிவந்தபோது வானொலி இணையதளம் பத்திரிக்கை என்று மீண்டும் மீண்டும் பகிரப்பட்ட தகவல்களில் இதுவும் ஒன்று. அது இப்போது உங்களிடம்..)
 
3.bp.blogspot.com reM84JblJAo VfzAlOad8XI AAAAAAAAF w iGMod7orPIg s400 A1 - 2026
 
எல்லோரும் எப்போதாவது ஒருமுறை இப்படியொரு அனுபவத்தை பெற்றிருப்பார்கள். அதாவது இரவில் நாம் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ நம் மீது பெரிய பாறாங்கல்லை ஏற்றி வைத்து அமுக்குவது போல் தெரியும். நம்மால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் முடியாது.  குரல் கூட  வெளியே வராது. உடலை அசைக்கக் கூட முடியாது. கொஞ்ச நேரம் கழித்துதான் எதையுமே செய்ய முடியும். நாம் எழுந்து பார்த்தால் நம் அருகில் யாரும் இருக்க மாட்டார்கள். ஏன், அந்த அறையில் கூட யாரும் இருக்க மாட்டார்கள். யார் இதை செய்தார்கள் என்று குழம்பி போய் இருப்போம். மறுநாள் விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டால் அது அமுக்குவான் பேயின் வேலை என்பார்கள். நீங்கள் உயிரோடு பிழைத்தது பூர்வஜென்ம புண்ணியம் என்பார்கள். அந்த இடத்தில் படுக்காமல் வேறு இடத்தில் படுத்து தூங்குங்கள் என்று அறிவுரை மேல் அறிவுரையாக சொல்வார்கள். 
 
1.bp.blogspot.com VcVJU5qPBHM VfzA7G7ABRI AAAAAAAAF 4 8tkD8eWKcDc s400 17381 - 2026
 
நகரங்களை விட கிராமங்களில் இந்த அமுக்குவான் பேய் மிக பிரசித்தம். உண்மையில் அமுக்குவான் பேய் இருக்கிறதா? அது உயிரை எடுக்கும் அளவுக்கு கொடூரமான பேயா? என்று ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டால், அப்படி எந்த பேயும் உலகில் இல்லை. அது ஒரு உடலின் சமநிலை பிறழ்வு என்கிறார்கள். 
 
பொதுவாக நாம் தூங்கும் போது உடலும் மூளையும் ஒரே நேரத்தில் ஓய்வெடுக்கும். இப்படி இரண்டும் ஒரே சமயத்தில் நடக்கும் போது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அபூர்வமாக சில நேரங்களில் நாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது மூளை மட்டும் விழித்துக் கொள்ளும். நம் உடலோ தூங்கிக் கொண்டே இருக்கும். அப்போது நம்மால் எழுந்திருக்கவோ, பேசவோ, ஏன் கண்களை திறக்கக் கூட முடியாது. சிறிது நேரத்தில் நமது உடலும் விழித்துக் கொள்ளும் போது தான் நம்மால் எழுந்திருக்க முடியும். இந்த கோளாறை மருத்துவத்தில் ‘தூக்க பக்கவாதம்’ என்கிறார்கள். 
 
இது எப்போவாவது ஒரு முறை ஏற்படுவது அனைவருக்குமே இயல்பான ஒன்று. ஆனால், ஒருவருக்கு திரும்ப திரும்ப ஏற்பட்டாலோ, ஒருசில நாட்களுக்கு ஒருமுறை ஏற்பட்டாலோ அது மருத்துவரை சந்திக்க வேண்டிய கோளாறு. இது சிலருக்கு பிறவியில் இருந்தே தொடர்கிறது என்றும் கூறுகிறார்கள். 
 
இதை ‘துயில் மயக்க நோய்’ என்றும் கூறுகிறார்கள். இது பெரும்பாலும் ஒற்றைத் தலைவலி, தூக்கத்தில் மூச்சு திணறல் நோய் உள்ளவர்களுக்கு அதிகம் ஏற்படும் என்கிறார்கள். காதல் தோல்வி போன்றவற்றால் உருவாகும் ஏக்க நோய்களும் இது உருவாக காரணமாக இருக்கிறது. 
 
தூக்க பக்கவாத நோயை இரண்டு விதமாக பிரிக்கிறார்கள். ஒன்று தனிமைத் தூக்க பக்கவாதம், மற்றொன்று தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம். இதில் தனிமைத் தூக்க பக்கவாதம் என்பது ஒரு மனிதரின் வாழ்வில் எப்போதாவது ஒரு சில நிமிடங்கள் தோன்றி மறையக் கூடியது. இந்த அனுபவத்தைதான் எல்லோரும் வாழ்வில் ஒருமுறையாவது பெற்றிருப்பார்கள். இதனால் பிரச்சனை இல்லை.    
 
தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் அப்படியல்ல. அது பிரச்சனை தரக்கூடியது. இது ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக இருக்கும். இவர்கள் அடிக்கடி அமுக்குவான் பேய் தங்களை தாக்குவதாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இது ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று நீடிக்கும். சில நேரங்களில் அந்தரத்தில் பறப்பதுபோல் தோன்றும். இது எல்லாமே இந்த நோயின் பாதிப்பால் உருவாவதுதான். இவர்கள் தான் மந்திரவாதிகளையும் சாமியார்களையும் தேடி போகிறார்கள். இது மருத்துவ கோளாறுதான். இதற்கு மருத்துவர்களைத் தான் நாட வேண்டும். 
 
துயில் மயக்க நோய் ஏற்பட உடல்நலக் குறைவுதான் காரணம். ஏவல், பில்லி, சூன்யம், அமுக்குவான் பேய் என்ற எதுவும் காரணமில்லை. அதனால் இதை மருத்துவமனைய்லே சிகிச்சை எடுத்து சரி செய்யலாம். அதைவிடுத்து மாந்திரீகம் என்று நினைத்து மந்திரவாதிகளை நாடுவது நோயின் தன்மையை மேலும் அதிகப்படுத்தவே செய்யும்.