Home Blog Page 5959

வெள்ளத்தடுப்பு நடவடிக்கை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி ஆலோசனை

வெள்ளத் தடுப்பு முன்னச்செரிக்கை நடவடிக்கை
கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி பார்வையிட்டார்

கீழப்பாவூர் பகுதியில் மாதங்கோயில் ,ஆசாரி வடக்குத்தெரு அருகே நீர் வரத்து உள்ள  சிறு பாலங்கள் மற்றும் கீழப்பாவூர் குளங்ககளில் இருந்து நீர் வெளியேறும் மதகுகள் மற்றும் குளத்தின் கரைகளில் ஏதேனும் கசிவுகள் உள்ளதா  என்றும் நீர்க் கசிவு ஏற்பட்டு மண்மூட்டைகளால் சரிசெய்யப் பட்டுள்ளதையும் பார்வையிட்டு குளக்கரையின் தன்மை குறித்தும் கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு குளத்தின் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதி மற்றும் உடைந்த பாலங்களில் சரி செய்ய வேண்டியவற்றை உடனே சரி செய்வது உள்ளிட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் மேலும் அப்பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
 உடன் பொதுபணிதுறை அதிகாரிகள் ,மாவட்டகவுன்சிலர் சேர்மப்பாண்டி, கீழப்பாவூர் யூனியன் துணைச் சேர்மன் குணம்,பெத்த நாடார்பட்டி பஞ்சாயத்து தலைவர் இராதா,பேரூராட்சி நிர்வாக அதிகாரி விஜயகுமார் ,சுரேஷ் லிகோரி ,,ஜெயராமன் ,கணபதி ,சாமிநாதன் ஆகியோர் இருந்தனர்

தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து மாணவி உள்பட 3 பேர் பலி

தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில்வேலூர், அரக்கோணம், வாலாஜா பகுதிகளில் சுவர் இடிந்து விழுந்து மாணவி உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் ஆம்பூர் அருகே கானாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பெண் பரிதாபமாக இறந்தார்.

வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. கடந்த 9-ந் தேதி காலையில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே லேசானது முதல் கன மழையும் பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்றும் தொடர்ந்து மழை பெய்தது.

தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியானார்கள்.

வேலூர் அரியூர் பகவத்சிங் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 37), கூலித்தொழிலாளி. இவருடைய மகள் பிரீத்தி (15). 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஜெயக்குமார் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை தொடர் மழை காரணமாக வீட்டில் இருந்த மண்சுவர் இடிந்து மாணவி மீது விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பிரீத்தி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் மற்றும் அரியூர் போலீசார், வேலூர் தீயணைப்பு துறையினர் சென்று மாணவியின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பா¤சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வேலூர் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அரியூர் காவல்நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல அரக்கோணம் தாலுகா அமீர்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கெங்கன் (60), கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் தனது குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இரவு சுமார் 11.30 மணியளவில் பலத்த மழை பெய்தபோது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிக்கிய கெங்கன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அரக்கோணம் காவல்நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வாலாஜாவை அடுத்த புலித்தாங்கல் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி அமுதா (55), மகன்கள் சம்பத் (35), லோகநாதன் (30) மற்றும் அமுதாவின் தாயார் சாரதா (75) ஆகியோர் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் பெய்த தொடர் மழையால், நேற்று அதிகாலையில் ஓட்டு வீட்டின் முன்பக்க மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த 5 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி அமுதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாலாஜா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர் மழை காரணமாக ஆம்பூர் அருகே உள்ள காரப்பட்டு கொல்லைகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவருடைய மனைவி விஜயலட்சுமி என்ற கிளியம்மாள் (40). இவர் கணவரை பிரிந்து தனியாக அப்பகுதியில் வசித்து வந்தார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டி சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.

நேற்று முன்தினம் அவரது மகள் திருமணம் திருப்பத்தூரில் நடந்தது. அங்கும் அவர் கலந்து கொள்ளவில்லை. இதனால் உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கதவாளம் கானாற்று பகுதியில் செல்லும் வெள்ளத்தில் விஜயலட்சுமி உடல் கரை ஒதுங்கி கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற விஜயலட்சுமி கடந்த 3 நாட்களாக கானாற்றில் குறைந்த அளவு வெள்ளம் வந்ததாகவும், அதில் தவறி விஜயலட்சுமி விழுந்து தண்ணீர் அடித்து செல்லப்பட்டு இறந்திருக்கலாம் எனவும், நேற்று அதிகளவில் தண்ணீர் வந்ததால் உடல் ஒதுங்கி இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

ஏரி திறப்பால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

 

கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டதால் குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலை வெள்ளத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மூழ்கியது.

கனமழை காரணமாகவும், ஸ்ரீபெரும்புதூர், நேமம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரின் வரத்தாலும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடி. ஏரியில் நேற்று காலையில் நீர்மட்டம் 21 அடியை எட்டியது.

இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி, மொத்தம் உள்ள 5 மதகுகளில் 3-வது மற்றும் 4-வது மதகுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்தனர். வினாடிக்கு சுமார் ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. என்றாலும் நீர் வரத்து அதிகரித்ததால் சிறிது நேரத்தில் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்டியது. இதனால் மேலும் 3 மதகுகள் திறக்கப்பட்டன. இதன்மூலம், ஏரியில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் ஏரிக்கு வந்து மதகுகளின் வழியாக வெளியே சென்ற நீரின் அளவை பார்வையிட்டார். அத்துடன், ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.

குன்றத்தூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் சிறுகளத்தூர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த இடத்தில் சாலை மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனால் குன்றத்தூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கும் மற்றும் நந்தம்பாக்கம், பெரியார் நகர், சோமங்கலம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊர்களுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியே எங்கும் செல்ல முடியாமல் முடங்கி கிடக்கின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட தகவல் அறிந்தவுடன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை ஆர்வமுடன் பார்த்தனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஏரி நிரம்பி இருப்பதை பார்க்க ஏராளமான பேர் வருவதால் ஏரிக்கரையின் மீது தற்காலிகமாக கடைகள் முளைத்து உள்ளன.

குன்றத்தூரில் இருந்து சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்பவர்கள் செம்பரம்பாக்கம் ஏரிக்கரையின் மதகுகள் வழியாக செல்ல தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகவும், 3 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் இருப்பு இருப்பதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது இந்த ஏரியில் 1,150 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. 881 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 443 மில்லியன் கன அடி உள்ளது. மழையின் காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது பெய்து வரும் மழையில் நீர் வரத்து அதிகமாக உள்ளது.

ஆவடியை அடுத்த மிட்டனமல்லி, கோவில்பதாகை ஏரிகளில் நீர் நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள பாலவேடு ஏரியில் நேற்று காலை 8.30 மணிக்கு உடைப்பு ஏற்பட்டது. மேற்கண்ட ஏரிகளில் இருந்து வெளியேறிய வெள்ளம் சுற்றியுள்ள மிட்டனமல்லி, கோவில்பதாகை, பிருந்தாவன் நகர், ராஜீவ்காந்தி நகர், உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள சுமார் 200 வீடுகளுக்குள் புகுந்தது.

இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பால்வாடியிலும், தேவாலயத்திலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு உணவும் தமிழக அரசால் வழங்கப்பட்டுகிறது.

கிழங்குடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த விவசாயிகள்

மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மரவல்லிக் கிழங்குடன் மனு கொடுக்க வந்தால் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது .

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கணேசன் தலமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு கந்தர்வகோட்டை பகுதி விவசாயிகள் மரவல்லி கிழங்குகளுடன் வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் விவசாயிகள் கூறியுள்ளதாவது :-

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் மரவல்லிக் கிழங்கு அதிகமா எப்போதும் விவசாயம் செய்யப்படுகிறது. 2 ஆயிரம் ஏக்கரில் இந்த ஆண்டு சுமார் விவசாயம் செய்யப்பட்டு அறுவடைக்கு மரவல்லிக் கிழங்கு தயாராக உள்ளது.

கடந்த ஆண்டு ஒரு விலை வைத்திருந்தார்கள். ஆனால் இந்த ஆண்டும் மிகவும் குறைவாக வாங்க வருகிறார்கள். அதனால் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படும். சேலத்தில் இது போன்ற பிரச்சணை எழுந்த போது அங்கு செல்வராசு என்ற அதிகாரி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தில் ஓரளவு கட்டுபடியான விலை நிர்ணயம் செய்துள்ளார். ஆனால் அந்த விலை கூட புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைக்கவில்லை.

இந்த நிலையில்கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மிகவும் விலை குறைவாக கொள்முதல் செய்யப்படுவதால் கிழங்குகள் அறுவடை செய்யாமல் பருவ மழைக்கு அழுகும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளால் கூறப்படுகிறது.

அதனால் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்என்று அந்த மனுவில் விவசாயிகள் கூறியுள்ளனர்.

ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது :-

ராகுல் காந்தி பிரிட்டன் நாட்டு குடிமகன் என்றும் அவரது இந்திய நாட்டு குடியுரிமையையும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

பிரிட்டனில் ராகுல்காந்தி பங்குதாரராக உள்ள லண்டனில் இயங்கி வரும் பேக் காப்ஸ் என்ற கம்பெனி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் ராகுல்காந்தி பிரிட்டன் குடிமகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சட்டப்படி இந்திய குடிமகனாக உள்ள ஒருவர் வேறு எந்த நாட்டின் குடிமகனாகவும் இருக்க முடியாது என்றும், அதனால் ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த 12 ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளதாகவும், ராகுல்காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருப்பதாகவும் பிரதமர் இன்று இந்தியா திரும்பியதும் அது குறித்து ஆலோசிப்பார் என்று நம்புவதாக சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஒரே பாடலில் பணக்காரனாவது எப்படி? வெங்கட் பிரபுவின் காமெடி ஆல்பம்!

தமிழ் திரைப்படங்களில் குப்பை பொறுக்கும் ஒருவன் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆவதுப் போன்றக் காட்சிகள் வந்ததுண்டு. சிலப் படங்களில் நாயகன் ஒரே பாடலில் மிக பெரிய பணக்காரனாக உயர்வது போன்றக் காட்சிகள் இடம் பெறுவது உண்டு.

இது சாத்தியமா என்பதை மக்கள் யோசிக்க கூட முடியாத அளவுக்கு பெரும்பாலும் இந்த பாடலில் நடிப்பவர்கள் மக்களின் அபிமானம் பெற்ற நாயகர்களாகவே இருப்பார்கள். சமீப காலமாக ரசிகர்களும் இத்தகைய பாடல்களை ஒரு வித நகைச்சுவை உணர்வோடுதான் ரசிக்க ஆரம்பிக்கின்றனர்.

யூடியூப் மூலம் நமது நாட்டின் பெரும்பாலும் ரசிகர்களை கவர்ந்து உள்ள “Culture Machine” நிறுவனத்தின் பிரதான அங்கமான புட் சட்னி நிறுவனம், ஒரே பாடலில் பணக்காரனாவது எப்படி என்கிற விஷயத்தை நகைசுவையுடன் ஒரு ஆல்பமாக வழங்கி உள்ளனர். பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இந்தப் பாடலில் நடித்து உள்ளார்.

ரசிகர்களை சிரிக்க வைக்கும் இந்த வீடியோவை தொடர்ந்து இத்தகைய பல வீடியோக்களை ‘புட் சட்னி’ நிறுவனம் வெளியிட உள்ளது.

தமிழக பொது மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம், நான் துணை நிற்கிறேன் : முதலமைச்சர் ஜெயலலிதா

தமிழகத்தில் மழை, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்; உங்களுடன் நான் துணை நிற்கிறேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா ஆறுதல் கூறியுள்ளார்.

சென்னையில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று பிற்பகலில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் அவர் பொதுமக்களிடம் பேசுகையில், வடகிழக்குப் பருவ மழை துவங்கும் முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினேன். அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

எனினும், 3 மாத காலமாக பெய்ய வேண்டிய வடகிழக்குப் பருவ மழை ஒரு வார காலத்தில் பெய்திருப்பதால் இந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், மழை நீர் தேங்குவது, சாலைகள் பாதிக்கப்பட்டது போன்ற பாதிப்புகளை தடுத்திருக்க முடியாது.

இருந்தாலும், பாதிப்பை சரி செய்யும் பணியில் தமிழக அரசு உடனடியாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பல இடங்களில் நிவாரணப் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். என்றும் உங்களுடன் நான் துணை நிற்கிறேன், தமிழக அரசு உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று கூறியுள்ளார்.

வியாபரிக்கு கொலை மிரட்டல்

கீழப்பாவூரில் வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் மீது வழக்கு பதிவு
 கீழப்பாவூரில் கடன் வாங்கிய  பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதுடன், கடன் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு  தலைமறைவான அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
  பாவூர்சத்திரம், மேலப்பாவூர் சாலையில் வசித்து வருபவர் த.முருகன். இவர் ஆலங்குளம் வட்டார டாஸ்மாக் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார். பணி நிமித்தமாக கீழப்பாவூர் டாஸ்மாக் கடைக்கு அடிக்கடி வரும்போது, டாஸ்மாக் கடையின் அருகே பெட்டிக்கடை வைத்துள்ள ஆ.செல்வராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 இதனைத்தொடர்ந்து கடந்த 15.2.2015 அன்று செல்வராஜிடம் தனது வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சி ஒன்றிற்காக 2 மாதத்தில் திருப்பித் தருவதாகக் கூறி ரூ.2.40 லட்சம் முருகன் கடன் வாங்கினாராம். ஆனால் பல மாதங்கள் ஆகியும் கடனை முருகன் திருப்பி கொடுக்க வில்லையாம்.
 இந்நிலையில், கடந்த புதன்கிழமை முருகனின் வீட்டுக்கு சென்ற செல்வராஜ்  கடனை திருப்பிக் கேட்டுள்ளார். அப்போது பணத்தை திருப்பித் தர மறுத்ததுடன் செல்வராஜை கொலை செய்து விடுவதாக முருகன் மிரட்டினாராம்.
  இதுகுறித்து செல்வராஜ் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் மைனர்ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த டாஸ்மாக் மேற்பார்வையாளரைத் தேடி வருகிறார்.

பீடியை சிறு குழந்தைக்கு கொடுத்து புகைக்க வைத்த கொடுமை ! : தமிழகத்தில் புகையிலை விற்பனைக்கு எதிராக போராட்டமா ?

தமிழகத்தில் சிறு குழந்தைக்கு ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து பீடியை கொடுத்து புகைக்க வைத்து கைப்பேசி மூலம் காணொளியாக பதிவு செய்து வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சிறு குழந்தைக்கு சிலர் மதுவை கொடுத்து குடிக்க வைத்தனர். மேலும் குழந்தை மது குடித்ததை கைப்பேசி மூலம் காணொளியாக பதிவு செய்து வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டு மிகுந்த சந்தோஷம் அடைந்தனர். மேலும் அந்த காணொளி வாட்ஸ் ஆப்பிலும், ஊடகங்களிலும் வைரலாகப் பரவியது.

இதனால் ஏற்கெனவே மது விற்பனைக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டங்கள் தீவிரம் அடைந்து தமிழக அரசுக்கு சொந்தமான மதுக்கடைகள் எரிப்பு போன்ற அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறின.

மது விற்பனைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்ததால் தமிழக அரசுக்கு மிகுந்த தலைவலியும், குடைச்சலும் ஏற்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழக அரசு சிறு குழந்தைக்கு மதுவை கொடுத்து குடிக்க வைத்தவர்கள்மீது காவல் துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் அடிப்படையில்
பலர் கைதும் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து சிறு குழந்தைக்கு பீடியை கொடுத்து புகைக்க வைத்து கைப்பேசி மூலம் காணொளியாக பதிவு செய்து வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டு மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளார். அந்த காணொளி தற்போது வாட்ஸ் ஆப்பில் வைரலாகப் பரவி வருகிறது.

பீடியை குழந்தைக்கு கொடுத்து புகைக்க வைத்தவர்களை கண்டுபிடித்து காவல் துறையினர்மூலம் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிடவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஏதாவது ஒரு பிரச்னையை கையில் எடுத்து அரசியல் கட்சிகள் போராட்டங்கைள தீவிரம் அடையச் செய்வது வாடிக்கையான ஒன்றுதான்!

சிறு குழந்தைக்கு மதுவைக் கொடுத்து குடிக்க வைத்தமைக்கு போராட்டங்களை நடத்திய அரசியல் கட்சியினர் பீடியை குழந்தைக்கு கொடுத்து புகைக்க வைத்தமைக்கு எதிராக போராட்டங்களை நடத்தாமல் இருக்கவா போகிறார்கள்?

சிறு குழந்தைக்கு பீடியை கொடுத்து புகைக்க வைத்து கைப்பேசி மூலம் காணொளியாக பதிவு செய்து வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வரும் காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இந்தியாவை சேர்ந்த 19 பேர் இணைந்ததாக தகவல் : மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்துகிறது

இந்தியாவை சேர்ந்த இருந்து 19 பேர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்ததாக தகவல் இந்திய உளவு ஏஜென்ஸிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்டவர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஐ.எஸ். தீவிரவாத பிரச்சாரங்களை தொடர்ந்து பின்தொடர்ந்து வருவதாகவும், அவர்களை இந்திய உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கொடூர தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தியுள்ள நிலையில்,பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இந்திய உளவு ஏஜென்ஸிகள் தெரிவித்துள்ள தகவலில், இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக சென்ற பலர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்திருப்பதாகவும், இந்தியாவில் லஷ்கர்-.இ-தொய்பா தீவிரவாத இயக்கம் தொடர்ந்து அபாயகரமான எதிரியாக இருந்து வரும் நிலையில், தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதமும் இந்தியாவில் பரவி வருவது கவலையளிக்கும் ஒன்றாக மாறியிருப்பதாக கூறியுள்ளது. எனினும், ஐரோப்பாவில் இருக்கும் அளவிற்கு இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் வலுப்பெறவில்லை, இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதம் குறித்த பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை தொடர்ந்து உளவு ஏஜென்ஸிகள் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இந்த தீவிரவாத இயக்கம் எந்த அளவுக்கு வேகமாக வளர்ச்சியடைகிறதோ அதை பொறுத்தே இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதத்தின் நடவடிக்கைகள் இருக்கும் என உளவு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. முன்னதாக, கவுகாத்தியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசுகையில், சில இந்திய இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தால் மூளைச்சலவை செய்யப்பட்டு அதில் இணைந்துவிடுகிறார்கள். அதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டுவிட முடியாது. இதை ஒரு சவாலாகவே இந்தியா கருதுகிறது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.