உலகின் சிறந்த சுற்றுலா நகரங்கள்

Published:

 

4.bp.blogspot.com NZ97U9Giz6s VfA0B3Td0BI AAAAAAAAF6Q 8hvPQrdPnBs s640 kyoto - 2026

சுற்றுலாவிற்கென்றே உலகம் முழுவதும் ஏராளமான இடங்கள் உள்ளன. சில நகரங்களில் வெறும் சுற்றுலா மட்டும்தான் பிரதான தொழில். இப்படி உலகம் முழுவதும் நிறைந்து இருக்கும் சுற்றுலா நகரங்களை ஆய்வு செய்து அவற்றில் சிறந்த நகரங்களை ‘டிராவல் + ப்ளஷர்’ இதழ் வெளியிட்டுள்ளது. அதில் முதல் 5 இடங்களை பிடித்த நகரங்கள் இங்கே.

1. கியோட்டோ – ஜப்பான்
பத்தாயிரம் மடங்களின் நகரம் 

4.bp.blogspot.com eXId05xRwDY VfAzZRgPxoI AAAAAAAAF6I RmpVPciF DM s640 Kyoto Pic 06 - 2026

சுற்றுலாவாசிகளுக்கு மிகவும் பிடித்த நகரமாக முதலிடத்தில் இருப்பது ஜப்பானில் உள்ள கியோட்டோ தான். கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு மேலாக ஜப்பானின் தலைநகரமாக இருந்த நகரம். யுனெஸ்கோவின் பாரம்பரிய பகுதிகள் பட்டியலில் இந்த நகரமும் இடம் பிடித்துள்ளது. இங்குள்ள 17 இடங்கள் மற்றும் மடங்கள் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாயிரம் மடங்கள் கொண்ட நகரம் என்ற பெயரும் கியோட்டோவுக்கு உண்டு.

1.bp.blogspot.com CncC7Jhub8 VfA0ZHn2pMI AAAAAAAAF6Y tk8sX8clfqY s640 kyoto japan 7 - 2026

இங்கு கொண்டாடப்படும் ஒவ்வொரு திருவிழாவும் ஆயிரம் வருடங்கள் பழமையானது. பாரம்பரியம், வரலாறு, ஆன்மிகம், அமைதி, கலை போன்றவற்றால் சுற்றுலா பிரியர்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது கியோட்டோ.

2. சார்லஸ்டன் – அமெரிக்கா
நண்பேன்டா நகரம் 

 
3.bp.blogspot.com F 1mAwOKtIg VfA2l7k8duI AAAAAAAAF68 Qz6oZKiei6Q s640 charleston south carolina 14 - 2026

வட அமெரிக்காவில் உள்ள ஐந்தாவது பெரிய நகரம் சார்லஸ்டன். அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள துறைமுக நகரமான இது தென் கரோலினா மாகாணத்தில் உள்ளது. வளமையான சரித்திரம், அசர வைக்கும் கட்டடங்கள், சுவையான உணவகங்கள், பண்பான மக்கள் என்று இந்த நகருக்கு பெருமை சேர்க்கும் விஷயங்கள் எக்கச்சக்கம். அதனால்தான் சுற்றுலாவாசிகள் இதை மிக நட்பான நகரம் என்று புகழ்கிறார்கள்.

1.bp.blogspot.com l66j5FNjH8c VfA2DPTj4OI AAAAAAAAF60 ZdwZ4reZW8k s640 gibbes museum of art - 2026
அருங்காட்சியகம்

இங்குள்ள அருங்காட்சியகம்தான் அமெரிக்காவில் முதலாவதாக அமைக்கப்பட்டது. 1773-ல் நிலவிய கலாசாரம், இயற்கையின் வரலாறு இவற்றை சொல்லும் இடமாக இது அமைந்துள்ளது.

3.  ஃப்ளோரன்ஸ் – இத்தாலி
கலைப்பொக்கிஷங்களின் நகரம்

3.bp.blogspot.com Uyg3EWpoqLQ VfA4WfzfUgI AAAAAAAAF7I 9pUcdU2ZV2M s640 florence italy 13 - 2026

திரும்பிய பக்கமெல்லாம் அருங்காட்சியகங்கள், அரண்மனைகள், தேவாலயங்கள் என்று இருந்தால் எப்படி இருக்கும். அதிலும் எல்லாம் பழமை மாற்றாத பாரம்பரியத்திற்கு சொந்தம் என்றால் உற்சாகத்துக்கு கேட்கவா வேண்டும். உலகிலேயே கலைப்பொக்கிஷங்களை அதிகமாக கொண்டுள்ள நகரம் இதுதான்.

4.bp.blogspot.com hNq8kjLKbTE VfA4n5HTXhI AAAAAAAAF7Q EY3RzWymCE4 s640 firenze1 - 2026

சரித்திர காலத்திலும் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்திலும் சிறந்த நகரம். 1982-ல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் ஃப்ளோரன்ஸ் நகரை சேர்த்தது. பழமை மட்டுமல்லாது உலகிற்கு ஃபேஷனை அறிமுகப்படுத்துவதிலும் இந்த நகரம்தான் முதன்மையாக உள்ளது.

4. சியம் ரீப் – கம்போடியா 
பாரம்பரியத்தின் உறைவிடம்

3.bp.blogspot.com oKmmR8SBcxg VfA5dElsviI AAAAAAAAF7Y wZmFZmKKDI s640 973761 cambodia angkor road - 2026

கம்போடிய நாட்டின் மிக முக்கிய நகரம் சியம் ரீப். இந்த நகரை பாரம்பரியத்தின் உறைவிடம் என்று கொண்டாடுகிறார்கள் சுற்றுலாவாசிகள். இங்குள்ள அங்கோர்வாட் கோயில் இரண்டாம் சூரியவர்மனால் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

3.bp.blogspot.com CWhlc2PxKT8 VfA 9WfJsLI AAAAAAAAF7o wp8L5anJWPE s640 Angkorwatt01 - 2026

இதுதான் உலகின் மிகப் பெரிய வழிபாட்டுத்தலமாக இருக்கிறது. 1992-ல் இது யுனெஸ்கோவின் பட்டியலில் இடம்பெற்றது. சியம் ரீப் வளர்ந்து வரும் ஒரு நவீன நகரமாகும். இங்கு பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.

5. இஸ்தான்புல் – துருக்கி
வேகமாக வளரும் வரலாற்று நகரம் 

3.bp.blogspot.com 7P - 2026

ஐரோப்பாவில் மாஸ்கோவிற்கு அடுத்தபடியாக அதிக மக்களைக் கொண்ட நகரம் இஸ்தான்புல். மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் இதுவும் ஒன்று. சுற்றுலா செல்பவர்கள் அதிகம் வருகைதரும் நகரங்களில் இஸ்தான்புல் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த நகரில் பழமை மிக்க 17 மாளிகைகள், 64 பள்ளிவாசல்கள், 49 தேவாலயங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் உள்ளன.

2.bp.blogspot.com TmRZDsJkex4 VfBAlhflLCI AAAAAAAAF74 bu8qf1FziAw s640 Istanbul Blue Mosque Pedro Szekely - 2026

மேலே குறிப்பிட்ட இந்த நகரங்களைத் தவிர, 6-வது இடத்தில் ரோம், 7-வது இடத்தில் ஸ்வில், 8-வது இடத்தில் பார்ஸிலோனா, 9-வது இடத்தில் மெக்ஸிகோ, 10-வது இடத்தில் நியூ ஆர்லியன்ஸ் போன்ற நகரங்கள் உள்ளன. இதில் சியம் ரீப், ஸ்வில், மெக்ஸிகோ, நியூ ஆர்லியன்ஸ் ஆகிய நகரங்கள் முதன் முதலாக இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

3.bp.blogspot.com TJOedFmaLdU VfBBb7XC71I AAAAAAAAF8A Vm6bjULpg8w s640 30 - 2026

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img