Home Blog Page 5973

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே “ஒரு நாள் இரவில்”

images cinema events Oru naal iravil poster1 - 2026

இயக்குனர் விஜய்யின் திங் பிக் ஸ்டுடியோஸ் மற்றும் பால்சன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடட் இணைந்து தயாரித்து, ஆண்டனி இயக்கத்தில், சத்யராஜ், அணு மோல், யூகி சேது, வருண் (அறிமுகம்) மற்றும் பலர் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் “ஒரு நாள் இரவில்”.

“நைட் ஷோ” என்று முதலில் பெயரிடப்பட்ட இப்படத்தை பார்ந்த பிரபலங்கள், படம் ஜனரஞ்சகமான முறையில் விருவிருப்பு சற்றும் குறையாமல் எடுக்கபட்டிருப்பதால், இன்னும் ஏதுவான பெயர் படத்திற்கு வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூற, மிகுந்த யோசனைக்கு பிறகு படத்திற்கு “ஒரு நாள் இரவில்” என்று பெயர் மாற்றத்தை செய்திருக்கிறார்கள்.

இந்த பெயர் கதைக்கு ஏற்றாற் போல் சிறப்பாக அமைந்துள்ளதாக அனைவரும் பாரட்டினர்.

மலையாளத்தில் விமர்சன ரீதியாக பாராட்டப் பட்ட ”ஷட்டர்” என்னும் திரைப்படத்தின் தமிழாக்கம் தான் “ஒரு நாள் இரவில்” என்பது குறிப்படத்தக்கது.

இயக்குனர்கள் ஷங்கர், AR.முருகதாஸ், கெளதம் மேனன், விஜய், லிங்குசாமி மற்றும் கே.வி.ஆனந்த் ஆகியோருக்கு தொடர்ந்து படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ள ஆண்டனி, தற்போது “ஒரு நாள் இரவில்” படம் மூலம்  இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

படத்தை பார்த்த தணிக்கை குழு, படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ஏற்கனவே படத்தின் முன்னோட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, தற்போது “ஒரு நாள் இரவில்” திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பெற்றுள்ளது என்பது குறிப்படத்தக்கது.

நடிகர்கள்:

சத்யராஜ்
யூகி சேது
வருண் (அறிமுகம்)
அணு மோல்
R. சுந்தர்ராஜன்
கல்யாணி நட்ராஜன்
திக்ஷித்தா
 
கலைஞர்கள்:

AL.அழகப்பன்- தயாரிப்பாளர் (Think Big Studios)
சாம் பால் தயாரிப்பாளர் (Paulsons Media Pvt Ltd)
ஆண்டனி- திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்கம்
ஜாய் மேத்தியூ. கதை
M.S. பிரபு- ஒளிப்பதிவு
யூகி சேது- வசனம்
நவின் ஐயர்- இசை
நா. முத்துக்குமார்- பாடலாசிரியர்
A. ராஜேஷ். கலை இயக்குனர்
சதீஷ்- நடன இயக்குனர்
ரமணா. உடைகள்
வேணு. ஒப்பனை
R.S. ராஜா. புகைப்படம்
நிகில்-மக்கள் தொடர்பு

 {YouTube}5iH2ewpU464{/YouTube}

தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விஜய்  கொடுக்கும் அதிர்ச்சி

அஜித்தின் வேதாளம் படம் ஒருபக்கம் வெளியானாலும் தீபாவளி தினம் விஜய்யின் புதிய படமான காக்கி படத்தின் போஸ்டர் வெளியாக

இருக்கிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் அந்தப்படம் கிட்டத்தட்ட 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்திருக்கிறார்கள். படஒளிப்பதிவை  ஜார்ஜ் c.வில்லியம்ஸ் என்பதால் ஆக்‌ஷன் காட்சிகளில் ரசிகர்களை தெறிக்கவிடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என  பரவலாக கூறப்படுகிறது.

மேலும் இயக்குநர் மகேந்திரன், பிரபு, கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார், நான் கடவுள் ராஜேந்திரன் என பெரிய நட்சத்திர பட்டாளமே காக்கி படத்தில் நடித்திருக்கிறார்கள். இளைய தளபதி விஜய் ரசிகர்கள் தீபாவளிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ராஜா ராணி என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த அட்லீயின் இயக்கம் என்பதால் படத்தில் கமர்ஷியல் அம்சங்கள் சரியாக இருக்கும் என்பதில் எந்தவித அச்சமும் இல்லை என சொல்லப்படுகிறது.காக்கி  படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான், ஆனால் விஜய் மேலும் ஒரு புது விதமான கெட்டப்பில் தோன்றுகிறாராம்.

அந்தபுது விதமான கெட்டப் ஸ்டைலான தாடியுடன் இருக்கும் கெட்டப்தானாம். ரசிகர்கள் அந்த கெட்டப்பை பார்த்தால்   அதிர்ச்சி அடையும் வகையில் இருக்கு மாம்.இதுவரை விஜய்யை இவ்வளவு ஸ்டைலாக பார்த்திருக்க முடியாது என கூறுகிறார்கள் படக்குழுவினர்.   தீபாவளிக்கு விஜய்யின் புது விதமான கெட்டப்பில் காக்கி படத்தின் போஸ்டர் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

 

தமிழக அரசாங்கத்திற்கும் அ.தி.மு.க கட்சியினருக்கும் பொதுமக்கள் பதிலடி கொடுக்கும் வகையில் வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவும் வீடியோ

 
தமிழகத்தில் ஆட்சி நடத்தும் அ.தி.மு.க. அரசு டாஸ்மாக் கடைகளை மூடி பூரண மதுவிலக்கை அறிவிக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர்கள், பெண்கள், என பல அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
தமிழகஅரசு காவல்துறையினரை பயன்படுத்தி போராட்டம் நடத்துபவர்கள்மீது தாக்குதல் நடத்தி அவர்கள்மீது வழக்கு போட்டு அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது என்று போராட்டம் நடத்துபவர்கள் கூறுகின்றனர்.
 
மேலும் தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் மது விற்பனைக்கு தடை விதிக்க சட்டமன்றத்தில் இன்று வரையில் பேசியது இல்லை. எனவே மது விற்பனை என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவே இல்லை. அந்த முடிவு ஒரு தலைப்பட்சமாக எடுக்கப்பட்ட முடிவு என பெரும்பாலோர் தொடர்ந்து குற்றம்சாட்டியும் வருகின்றனர் .
 
சிலர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தால் பூரண மது விலக்கை தமிழக அரசு அறிவிக்க நீதிமன்றம் உத்தரவிடும் என நினைத்து முயற்சி மேற்கொண்டனர்.
 
ஆனால் இதுவரை தமிழக அரசு பூரண மது விலக்கை அறிவிப்பதற்கான எவ்விதமான வாய்ப்பும் இல்லை எனப் பொதுமக்களால் கருதப்படுகிறது.
 
இந்த நிலையில் மது விற்பனைக்கு ஆதரவாகவும் அ.தி.மு.க அரசு செய்த நலத்திட்டங்களைக் கூறி சாதனைப் பட்டியலை அ.தி.மு.க. கட்சியை சேர்ந்த மிக முக்கியமான உறுப்பினர்கள் தொடர்ந்து அளித்து வருகின்றனர் .
 
தமிழக அரசாங்கத்திற்கும் அ.தி.மு.க. கட்சிக்கும் மற்றும் அவர்கள் கூறி வரும் சாதனைகளுக்கு பொதுமக்கள் பதிலடி கொடுக்கும் வகையில் எவராலோ வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வருகிறது.
 
பொதுமக்கள் வீடியோ வாயிலாக தெரிவிக்கும் கருத்தை கேட்க இந்த செய்தியுடன் இணைத்துள்ள வீடியோவை பார்க்கவும்.

சென்னையில் பாஜக., போராட்டம்: தமிழிசை சௌந்தரராஜன் உள்பட 200 பேர் கைது

images tamilnadu BJP protest in Chennai The arrest of 200 volunteers - 2026சென்னை:

சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக., சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதற்காக பாஜக தலைவர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மாநகராட்சி பின்வாசல் அமைந்துள்ள அல்லிக்குளம் பகுதியில் கூடி இருந்தனர். அவர்கள் மாநகராட்சியை கண்டித்து கோஷமிட்டனர்.

பின்னர் மாநகராட்சி அலுவலகம் நோக்கி முன்னேறிச் சென்ற போது அவர்களை போலீசார் தடுத்ததால் தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

பின்னர் மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றினார்கள். தமிழிசை சௌந்தரராஜன் உள்பட 200-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கைது செய்யப் பட்டனர்.

தெற்கு சூடானில் ரஷ்ய விமான விபத்து: 41 பேர் பலி

 images world russian plane crash south sudan - 2026

தெற்கு சூடானில் ரஷ்ய தயாரிப்பு விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில், அதில் இருந்த 41 பேர் உயிரிழந்தனர்.

ரஷ்ய சரக்கு விமானம் ஒன்று 20 பணியாளர்களுடன் தெற்கு சூடானின் தலைநகர் ஜூபாவில் இருந்து புறப்பட்டது. நைல் நதியின் மேல் பறந்து கொண்டு இருந்த போது விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 41 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ஒரு குழந்தை மற்றும் ஒரு விமானப் பணியாளர் உயிர் பிழைத்துள்ளதாக ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் அட்னி வீக் அட்னி கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை எகிப்து நாட்டின் சுற்றுலா நகரமான ஷரம் எல் ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 224 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம் 23 நிமிடங்களில் எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் நெகேல் என்னுமிடத்தில் நடுவானில் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 224 பேரும் பலியாயினர்.

 

 

வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் மாலத்தீவில் 30 நாட்கள் அவசரநிலை பிரகடனம்

மாலே:

சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால், மாலத்தீவில் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினா நகரங்களுக்கு சென்று ஹஜ் யாத்திரையை நிறைவேற்றிய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் தனது மனைவியுடன் கடந்த செப்டம்பர் மாதம் நாடு திரும்பியபோது படகு விபத்தில் சிக்கினார். விமானம் மூலம் தில்லி வந்து சேர்ந்த அவர், தில்லியில் இருந்து கடந்த மாதம் 28-ம் தேதி காலை அதிவேக படகின் மூலம் மாலத்தீவுக்கு சென்றபோது, அவரது படகு திடீரென்று கடலில் வெடித்து சிதறியது. இதில் அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இவ்விபத்தில் காயமடைந்த அதிபரின் மனைவி பாத்திமா இப்ராஹிம், தில்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் மற்றொரு படகின் மூலம் பத்திரமாக மாலே சென்றடைந்தார்.

அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூமை கொல்ல சதி நடந்ததாகவும், அதில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டதாகவும் அந்நாட்டு உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் ரகசியமாக விசாரித்து வந்ததில் இந்த சதியில் மாலத்தீவு துணை அதிபர் அஹமத் அடிப்புக்கும் தொடர்பு இருந்ததாக செய்தி வெளியான நிலையில், இதுபற்றி தீவிர விசாரணை நடத்திய போலீசார், துணை அதிபரை கடந்த அக்டோபர் 30-ம் தேதி கைது செய்தனர். மேலும், இந்த கொலை முயற்சி தொடர்பாக மாலத்தீவு தூதரக மூத்த அதிகாரி மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த 4 பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டனர். மலேசியாவின் தீவிரவாத தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

கடந்த சில நாட்களாக அங்கு பதட்டமான சூழல் நிலவி வந்தநிலையில், பல இடங்களில் அரசுக்கு எதிராக பேரணி நடந்தது. மேலும், அண்மையில் ஒரு லாரியிலும், தீவில் உள்ள கடற்கரை ரிசார்ட்டிலும் சக்தி வாய்ந்த வெடிபொருட்களும் கண்டெடுக்கப்பட்டள. இதையடுத்து, நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அதிபரின் செய்தி தொடர்பாளர் டுவிட்டரில், “மாலத்தீவில் 30 நாட்கள் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்படுகிறது. இது இன்று மதியம் 12 மணி முதல் அமலுக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார். இந்த பிரகடனத்தால் பாதுகாப்பு படைக்கு அதிக அதிகாரம் கிடைக்கும்.

 

 

எட்டே நாட்களில் எடுக்கப்பட்டுள்ள க்ரைம் திரில்லர் படம் ‘கிரிங் கிரிங்’.

செய்யாத கொலைக் குற்றத்தில் சிக்கிக் கொள்கிற நாயகன் அதிலிருந்து மீளப்போராடுகிறான். அதிலிருந்து வெளியே வர அவன் தவிக்கிற தவிப்பும் பதைபதைக்கிற பதற்றமும். போராட்டமும்தான் கதை.

இது ஒரு முழுநீள க்ரைம் த்ரில்லர். இது ஒரே இரவில் நடக்கும் கதை.

நாயகனாக ரோஹன் நடித்திருக்கிறார் இவர் ஏற்கெனவே சிலபடங்களில் தோன்றியவர். நாயகியாக காவ்யா நடித்துள்ளார்.

படத்தை எழுதி இயக்கித் தயாரித்துள்ளார் ராகுல். இவர் வின்சென்ட் செல்வாவின் மாணவர்.

படத்தில் நடித்துள்ள நாயகன் ரோஹன் உள்பட பெரும்பாலான நடிகர்கள் கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள். படத்தின் பரபரப்புக்கு வேகத்தடையாக இருக்குமென்று பாடல்கள் படத்தில் இடம் பெறவில்லை.

சென்னை, தூத்துக்குடி போன்ற இடங்களில் எண்ணி எட்டே நாட்களில் படப்பிடிப்பை முடித்து வந்திருக்கிறார் இயக்குநர் ராகுல்.

படத்துக்கு ஒளிப்பதிவு துவாரகேஷ், இசை ஜூடு, படத்தொகுப்பு சிவதர்மா.

நிறைய குற்றங்களில் துப்பு துலங்கி குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க உதவியாக இருப்பது மொபைல் போன்தான். படத்தில் மொபைல் போனின் ‘கிரிங் கிரிங்’ ஒலி பெரிய திருப்பங்களுக்கு வழிவகுப்பதால் படத்துக்கு இப்பெயர் வைக்கப் பட்டுள்ளது.

எட்டே நாளில் ஒரு படமா? அவசரக் கோலமாக இருந்து விடாதா என்று இயக்குநர் ராகுலிடம் கேட்டபோது “நன்றாகத் திட்டமிட்டால் எதையும் செய்ய முடியும். இது ஒரே இரவில் நடக்கும் கதை. அதனால் எட்டே நாட்களில் எடுத்து முடித்தோம். இதன் பின்னால் சரியான திட்ட மிடலும் பலரது உழைப்பும் இருந்தது. இது அவசரமாக எடுக்கப்பட்ட படமல்ல. விறுவிறுப்பான திரைக்கதை. இருக்கும். எனவே பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.

இன்று 2 கோடி 10 கோடி பணம் இல்லாமல் படம் எடுக்க முடியாது என்று பேசுகிறார்கள்.. ஆனால் படத்தின் தயாரிப்புச் செலவைக் காட்டி வியாபாரம் செய்ய முடியாது. படத்தில் புதுமை, இருக்க வேண்டும். கதை சொல்லும் விதத்தில் வித்தியாசம் காட்ட வேண்டும். அப்படி எடுக்கப் படுகிற படத்துக்கு வியாபாரிகள் வருவார்கள். வியாபாரம் நடக்கும்.” என்கிற இயக்குநர், தனக்கு இயக்கத்துடன் தயாரிப்புத் திறமையும் இருப்பதால் ‘ஆர்பி எம் சினிமாஸ்’ சார்பில் படத்தைத் துணிந்து தயாரித்ததாகக் கூறுகிறார். இப்படம் வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

திமுக., தலைமைப் பொறுப்புக்கு தகுதியானவர் ஸ்டாலின்: கருணாநிதி

சென்னை:

திமுகவின் தலைமைப் பொறுப்புக்கு தகுதியானவர் மு.க.ஸ்டாலின் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நமக்கு நாமே திட்டம் என்ற பெயரில் மு.க. ஸ்டாலின் மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டு வருகிறார். இந்நிலையில், கழகத்தின் தலைமைப் பொறுப்புக்குத் தகுதி மிக்கவராக ஸ்டாலின் விளங்குகிறார் என்பது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த உண்மை என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி.

 

காதல் ஜோடிக்கு அடி உதை: மும்பை போலீஸார் வெறிச்செயல்

மும்பை:
மும்பை காவல் நிலையத்தில் கால் சென்டரில் பணிபுரியும் இளம் காதல் ஜோடியை காவல்துறையினர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் இளம் காதலர்களை காவல்துறையினர் தாக்குகின்றனர். வலி தாங்காமல் அந்த இளம் பெண் கதறி அழுகிறார். எங்களை விட்டுவிடுங்கள் என்று அந்த காதல் ஜோடி கெஞ்சிக் கேட்கிறது. ஆனாலும் , மும்பை போலீஸார் அவர்களை அடித்து உதைத்து மிருகனத்தனமாக நடந்துகொள்கின்றனர்.

மும்பையில் உள்ள மகேந்திரா கால் சென்டரில் வேலை பார்க்கும் இந்த இளம் காதல் ஜோடியை,விசாரணை என்ற பெயரில் மும்பையில் உள்ள அந்தேரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீஸார், விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்பதால் இளம் ஜோடியை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் இளம் பெண்ணை பலமுறை கன்னத்தில் அடிக்கிறார் பெண் போலீஸ். அப்போது அவரது வாயில் இருந்து இரத்தம் கொட்டியதாம். பின்னர் இளைஞரை போலீஸார் தாக்க, அவருடன் வந்த இளம் பெண் அவரை அடிக்க வேண்டாம் என கதறி அழுதுக்க் கேட்டும் போலீஸார் தாக்குகின்றனர். இந்த வீடியோ இப்போது வைரலாக இணையதளத்தில்பரவி வருகிறது.

தமிழக காவல்துறை பெண் ஆய்வாளர் மீது நடிகை ஹேமலதா காவல் ஆணையரிடம் புகார்

 சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் வசிப்பவர் நடிகை ஹேமலதா. நடிகையான இவர் புல்லுக்கட்டு முத்தம்மா என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். சினிமா தயாரிப்பாளராகவும் உள்ளார். இவர் கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், தன்னை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய கணவர் இளையராஜா மீதும் 2–வது திருமணம் செய்து வைக்க முயற்சி செய்யும் அவரது தந்தை ராஜா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் மனு கொடுத்தார்.
 
இந்த மனு சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.இதை தொடர்ந்து மகளிர் போலீசாரும் நடிகை ஹேமலதாவையும் அவரது கணவர் இளைய ராஜாவையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதில் இருவரும் சேர்ந்து வாழ்வது தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது .
 
இந்த நிலையில் நடிகை ஹேமலதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மீண்டும் புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம்கூறியதாவது:–
 
புகார் குறித்து திருமங்கலம் மகளிர் போலீஸ் காவல் ஆய்வாளர் ஐமுனா ராணி விசாரணை நடத்தினார். மகளிர் போலீசார் எனது கணவருக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். பாதிக்கப்பட்ட என்னை எனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வில்லை.
 
மேலும் அவதூறான வார்த்தைகளாலும் மகளிர் காவல் ஆய்வாளர் உட்ப்பட போலீசார் திட்டினர். எனவே எனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என காவல் ஆணையரிடம் அவர் கொடுத் புகாரில் தெரிவித்ததாக நடிகை ஹேமலதா செய்தியாளர்களிடம் கூறினார்.