Home Blog Page 5980

தமிழகத்தில் போராடுவோர் மீது அ.தி.மு.க. அரசு அடக்குமுறையை ஏவிவிடுகிறது : மு.க.ஸ்டாலின்

 
தமிழகத்தில் போராடுவோர் மீது அ.தி.மு.க. அரசு அடக்குமுறையை ஏவிவிடுகிறது என தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முகநூலில் தெரிவித்துள்ளார்.
 
முகநூலில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
 
டாஸ்மாக் கடையை நீக்கக்கோரி போராடிய சசிபெருமாள் மரணத்திற்கு வித்திட்ட இந்த அ.தி.மு.க. அரசு, மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தி அவர்களை சிறையில் அடைத்தது.
 
இப்போது கோவனை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்கிறது. மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று போராடுவோர் மீது அ.தி.மு.க. அரசு இப்படி அடுத்தடுத்து அடக்குமுறையை ஏவிவிடுகிறது.
 
அ.தி.மு.க. படை போல் காவல்துறை செயல்படுவதும், மனித உரிமைகள் இப்படி கொடுங்கரத்தால் நசுக்கப்படுவதையும் பார்த்தால் ஏதோ நெருக்கடி நிலைமை தமிழகத்தில் அமலில் இருக்கிறதோ என்று அஞ்சத்தோன்றுகிறது. கோவனின் கைதிற்கும், மதுவிலக்கு போராட்டங்களை அடக்கும் அ.தி.மு.க. அரசுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அ.தி.மு.க. அரசின் அதிகாரதுஷ்பிரயோகத்தின் முன்பு சட்டத்தின் ஆட்சியும், கருத்து சுதந்திரம் அளித்துள்ள அரசியல் சட்டமும் தலைகுனிந்து நிற்கின்றனவே என்று வேதனைப்படுகிறேன் என மு.க.ஸ்டாலின் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

 

சிருஷ்டி தோஷம்

அடேய் பிரம்ம தேவா…
எந்த நேரத்திலடா
எம்மை இங்கு அனுப்பி வைத்தாய்?
உன் படைப்புகளின்
ஜனனக் குறிப்பு கண்டு
ஒருவன் சொல்கிறான்…
கர்ப்ப தோஷம்…
ஒருவன் சொல்கிறான்…
சர்ப்ப தோஷம்!
இன்னும்…
எத்தனை எத்தனை தோஷங்கள்?
செவ்வாய் தோஷமாம்..
நாக தோஷமாம்!
மாங்கல்ய தோஷமாம்!
மங்கள தோஷமாம்!
சயன தோஷமாம்
சங்கட தோஷமாம்!
பிதுர் தோஷமாம்…
புத்ர தோஷமாம்!
அட…
இன்னும் சிலரின்
உருவத்தை உருக்குலைத்து
குற்றுயிராய்க் கிடத்துகிறாய்…
தோஷங்கள் இல்லையென்று
சிரித்துச் சொன்ன சோசியன்
பொடிவைத்துச் சொல்கிறான்…
உங்களுக்கு
திருஷ்டி தோஷம்!
அடேய்..
இது திருஷ்டி தோஷம் இல்லையடா..
உன் பார்வைக் குறைபாடு!
உன் படைப்புத் திறனின் குறைபாடு…
எங்கள் பணியில் குறைபாடு இருந்தால்
பணியிடை நீக்கம் செய்து
பழியை விலக்கிக் கொள்ளும்
மேலதிகாரிகள் சிலர் உண்டு!
ஆனால்…
உன் அதிகாரிகளும்
உதவாக்கரையாய்ப்
போய்விட்டார்களோ!?
அடேய் பிரம்ம தேவா..
திருஷ்டி தோஷம்
எமக்கு இல்லையடா..
உமக்கே..!
அது உம்
சிருஷ்டி தோஷம்!
- 2026

அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது : கருணாநிதி கண்டனம்

 
அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்று பாடகர் கோவன் கைது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
 
அ.தி.மு.க. ஆட்சியின் சட்ட விரோதச் செயல்களையும் மதுவினால் ஏற்படும் தீமைகளையும், சமூக அவலங்களையும், கண்டித்து ஊருக்கு ஊர் பாடல்கள் மூலமாக பிரச்சாரம் செய்த மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவனை திருச்சியில் இன்று (நேற்று) அதிகாலை 2.30 மணியளவில் காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
 
அவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124-ஏ (தேச துரோகம்), 153-ஏ (சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல்) என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கோவனை எங்கே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படவில்லை. அவரைச் சந்திக்கவும் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
 
ஜனநாயகத்தின் குரல்வளை எப்படியெல்லாம் நெரிக்கப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை. அ.தி.மு.க. அரசின் இந்த ஜனநாயக விரோதச் செயலை தி.மு.க. சார்பில் வன்மையாகக் கண்டிப்பதோடு, கைது செய்யப்பட்ட பாடகர் கோவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு கருணாநிதி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

ரஷ்ய விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் : ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

சினாயில் ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு மெட்ரோஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான ஓஎக-9268 என்ற அ-321 ஏர்பஸ் ரக பயணிகள் விமானம்விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் குழந்தைகள் உள்பட 224 பேரும் உயிரிழந்ததாக எகிப்து அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 100-க்கும் மேற்பட்ட உடல்களை மீட்டுள்ளதாக எகிப்து மீட்பு படை தெரிவித்துள்ளது. விமானம் விபத்திற்குள்ளானதை எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில் உறுதி செய்துள்ளார்.

எகிப்தில் விழுந்து நொறுங்கிய ரஷ்ய விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என ஐ.எஸ்தீவிரவாத அமைப்பு கூறியுள்ளது .

ரஷ்ய விமானத்தில் பயணம் செய்த 224 பேரும் உயிரிழப்பு ; 100 உடல்கள் மீட்பு : எகிப்து அதிகாரிகள் தகவல்

 
சினாயில் ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் குழந்தைகள் உள்பட 224 பேரும் உயிரிழந்ததாக எகிப்து அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன
 
எகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு மெட்ரோஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான ஓஎக-9268 என்ற அ-321 ஏர்பஸ் ரக பயணிகள் விமானம் 217 பயணிகள், 7 விமானிகள் உள்பட 224 பேருடன் புறப்பட்டது.
 
விமானம் புறப்பட்ட 23 நிமிடங்களில் சினாய் தீபகற்ப பகுதியில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ரேடார் தொடர்பை இழந்தது.
 
இதையடுத்து, விமானம் மாயமானது குறித்து நடத்தப்பட்டு வரும் முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதாக தகவல் வெளியானது.
 
இதையடுத்து எகிப்து ராணுவ மீட்பு படை விமானங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அதில், அந்த விமானம் சினாய் மலைப்பகுதியில் தெற்கு எல்-அரிஷ் ஹசானாவில் விழுந்து நொறுங்கி கிடந்தது அடையாளம் காணப்பட்டது.
 
உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு 45-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் அனுப்பப்பட்டன.
 
இந்நிலையில், விமானத்தில் பயணம் செய்த 17 பேர் குழந்தைகள் உள்பட 224 பேரும் உயிரிழந்ததை எகிப்து அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ரஷ்யர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுவரை 100-க்கும் மேற்பட்ட உடல்களை மீட்டுள்ளதாக எகிப்து மீட்பு படை தெரிவித்துள்ளது. விமானம் விபத்திற்குள்ளானதை எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில் உறுதி செய்துள்ளார்.

குப்பை அள்ளி வளர்த்த தாய்: தெருவில் விழுந்து வணங்கிய தாய்லாந்து அழகி

பாங்காக்:

தாய்லாந்தில் நடந்த அழகிப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற 17 வயது இளம் பெண், குப்பைகளை அள்ளி அதன் மூலம் வரும் வருமானத்தில் தன்னை வளர்த்துப் படிக்க வைத்த தாயின் காலில் விழுந்து தனது நன்றியை செலுத்தியுள்ளார்.

பின்னணியில் குப்பைத் தொட்டிகள் இருக்க, அதனை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தாயின் காலில் தான் பெற்ற அழகிப் பட்டத்துடன் விழுந்து வணங்கி நன்றி கூறினார் கனித்தா மின்ட் பசேங். இந்த புகைப்படம் சமூக தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

செப்டம்பர் 2015ல் நடைபெற்ற மிஸ் அன்சென்ஸார்ட் நியூஸ் தாய்லாந்து பட்டத்தை வென்ற கனித்தா, பட்டம் வென்றுவிட்ட பிறகும் கூட, தனது சொந்த கிராமத்தில், தாய்கு குப்பைகளை சேகரிப்பதில் உதவி செய்து வருகிறார்.

நாங்கள் இந்த வேலையை செய்வதற்காக பெருமைப்படுகிறோம். இது நேர்மையான பணிதான். நான் வளரும் போது தேவைப்படும் உணவை இந்த பணிதான் எனக்கு வழங்கியது. நான் உயர்கல்வி படித்து முடிக்க இந்த வேலை மூலமாகத்தான் பணம் கிடைத்தது. எனவே, எனது தாய்க்கு நான் இப்போதும் உதவியாக உள்ளேன் என்று கூறுகிறார் கனித்தா.

பெண் பொறியாளர் பலாத்காரக் கொலையில் தூக்கு தண்டனையைக் கேட்டு கதறி அழுத குற்றவாளி

மும்பை:

மும்பையில் மென்பொருள் நிறுவன ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மும்பையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த எஸ்தர் அனுசுயா (23), கடந்த ஜனவரி மாதம் அவரது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்குச் சென்றுவிட்டு ரயிலில் மும்பை குர்லா ரயில் நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து அவர் அந்தேரி செல்ல வேண்டும்.

அப்போது அங்கு காரில் வந்த சந்திரபன் சனாப் ரூ.300 அளித்தால் அந்தேரியில் இறக்கிவிடுவதாகக் கூறினார். எஸ்தர் அனுசுயா அந்தக் காரில் ஏறிச் சென்றுள்ளார். ஆனால், பந்தூப் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அனுசுயாவை பலாத்காரம் செய்த சந்திரபன் அவரை கொலை செய்து முட்புதரில் வீசினார்.

இந்த வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த செவ்வாய்க் கிழமையன்று வழக்கை விசாரித்த நீதிபதி, சந்திரபன் சனாப் குற்றவாளி என தீர்ப்பளித்தார். அதனைத் தொடர்ந்து இன்று தண்டனை விவரம் வெளியிடப்பட்டது. இந்த வழக்கு அரிதினும் அரிதானது என்பதால் குற்றவாளியை சாகும் வரை தூக்கிலிடுமாறு உத்தரவிடுவதாக நீதிபதி விருஷாலி ஜோஷி கூறினார்.

இந்தத் தீர்ப்பு வெளியானதும் நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுத சந்திரபன், என் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் எந்த குற்றமும் செய்யவில்லை. நான் செய்யாத குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டிருக்கிறேன். என் மகளை நான் பார்க்க வேண்டும். இனி நான் என்ன செய்யப் போகிறேன் என்றார்.

பீகாரில் மீண்டும் காட்டாட்சி மலர வேண்டுமா?: மோடி கேள்வி

கோபால்கஞ்ச்:

பீகாரில் மீண்டும் காட்டாட்சி மலர வேண்டும் என முதல்வர் நிதிஷ் குமார் விரும்புகிறாரா?’’ என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 4ஆம் கட்ட பிரசாரத்தில் அனல் பறக்கிறது.

மெகா கூட்டணிக்கும், தேசிய ஜனதா கூட்டணிக்கும் இடையே வார்த்தைப் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. பீகாரில் பாஜ தோற்றால், பாகிஸ்தானில் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள் என பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா நேற்று முன் தினம் கூறியதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதை கடுமையாக விமர்சனம் செய்த கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ் கரத், ‘‘பாகிஸ்தானில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடுவார்கள்’’, என்று பாஜவை கடுப்பேற்றி உள்ளார்.

இந்நிலையில், லாலுவின் சொந்தத் தொகுதியான கோபால்கஞ்ச் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: பீகாரில் மீண்டும் பழைய நிலை திரும்பும் என்று நிதிஷ் கூறுகிறார். பழைய நிலை என்று நிதிஷ் எதை குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. கடத்தலும், கொள்ளையும், பெண்கள் இழிவு படுத்தப்படுவதும், ரயில் நிலையங்களில் ஓயாத துப்பாக்கி சப்தமும் நீடித்து வந்த லாலுவின் காட்டு ராஜ்ஜிய ஆட்சியைத்தான் நிதிஷ் மீண்டும் விரும்புகிறாரா?

இந்த மண்டலம் குட்டி சம்பல் பள்ளத்தாக்காக இருந்ததே அதை விரும்புகிறாரா? கடந்த 2005ம் ஆண்டு முஸ்லிம்கள் இடஒதுக்கீடு பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய நிதிஷ் குமார், அதை நிறைவேற்றினாரா? குற்றம் நிரூபிக்கப்பட்ட ஊழல்வாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து பள்ளி தொடங்குவோம் என்று கூறும் நிதிஷ், ஊழலுக்காக தண்டனை விதிக்கப்பட்ட லாலுவின் வீட்டை ஏன் பறிமுதல் செய்யாமல் அவருடன் கூட்டு வைத்துள்ளார்? மாநிலத்தை கூறுபோட்டு விற்க, இருவரும் முடிவு செய்துவிட்டனர். இதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது. காசு கொடுத்தால் பீகார் மக்களை யார் வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம்.

அது அவர்கள் ரத்தத்தில் ஊறியது என்று நிதிஷ் கூறுகிறார். தனது மக்களின் மரபணு பற்றி நிதிஷ் இப்படிப் பேசுவது முறையற்றது. தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். ஆனால் தோல்வி பயத்தில், வாய்க்கு வந்தபடி நிதிஷ் பேசக்கூடாது. காட்டு ராஜ்ஜியம் வேண்டும் என்று நிதிஷ் வேண்டுமானால் கருதலாம். ஆனால் பீகார் மக்கள் அதை விரும்பவில்லை. பாஜ ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு நிலை நாட்டப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கு உறுதியளிக்கிறோம். மாநிலத்தை 60 ஆண்டுகளாக கொள்ளையடித்த சின்னதம்பி, பெரியதம்பி ஆகிய இருவருக்கும் இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். என்று மெகா கூட்டணியை தாக்கிப் பேசினார்.

பீகார் மாநிலத்திற்கு வந்த வெளியாள் என்று தன்னை விமர்சனம் செய்த நிதிஷ்குமாருக்கு மோடி காட்டமாக பதிலடி கொடுத்தார். இது பற்றி அவர் கூறுகையில், ‘‘ நான் என்ன பாகிஸ்தான், இலங்கை அல்லது வங்க தேசத்தின் பிரதமரா? இந்நாட்டு மக்கள் என்னை இந்தியப் பிரதமராக தேர்வு செய்துள்ளனர். பீகாரும் இந்தியாவின் ஒரு அங்கம்தான். நான் எப்படி வெளியாள் ஆக முடியும்? என்னை வெளியாள் என்று கூறும் நிதிஷ்குமார், பீகாரில் பிறக்காத சோனியா காந்தியை என்னவென்று கூறுவார்?’’ என்றார்.

பா.ஜ.க., வின் தேர்தல் விளம்பரத்துக்கு தடை: ராஷ்ட்ரீய ஜனதா தளம் வரவேற்பு

பீகாரில் பா.ஜ.க. சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.

பீகாரில் புதிய அரசை அமைப்பதற்கான தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்காளர்களைக் கவரும் விதமாக பா.ஜ.க. இரண்டு விளம்பரங்களை வெளியிட்டது.

ஆனால் பா.ஜ.க. வின் இந்த விளம்பரம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது என்று பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து இரண்டு விளம்பரங்களுக்கு தடை விதிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் பா.ஜ.க.வின் விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்திருப்பது மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று ராஷ்ட்ரீய ஜனதா தள் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜூகா கூறுகையில், “பா.ஜ.க.வின் விளம்பரம் குறித்து நேற்று தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தோம். எங்களது புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து விளம்பரத்தை தடை செய்திருப்பது பீகார் மக்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றி தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான வெற்றி” – என்று அவர் தெரிவித்தார்.

மகஇக., கோவன் கைது: தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

கோவனின் கைதுக்கும், மதுவிலக்கு போராட்டங்களை அடக்கும் அதிமுக அரசுக்கும் திமுக பொருளாளர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு:

”தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் உள்ள மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு மூடு டாஸ்மாக்கை என்ற போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது.

மக்கள் அதிகாரம் அமைப்பினர் ” மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு” எனும் பாடலை வெளியிட்டு அதை கலை வடிவத்தில், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீதிநாடகமாக நடத்தி வந்தார்கள்.

இந்நிலையில், இந்தப் பாடலை இயற்றி பாடிய திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த கோவனை, இன்று அதிகாலை 2.30 மணிக்கு திருச்சி குழுமணி அருகில் உள்ள அரவனூரில் போலீஸார் திடீர் கைது செய்து செய்தனர். அவரை மிக மோசமாக நடத்தியதாகவும், அவரை போலீஸார் எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பதைக் கூறாமல் மறுத்தும் அலைக்கழித்துள்ளனர்.

இறுதியில் இப்போது கோவனை தேசத்துரோகம் உள்ளிட்ட கடுமையான இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்து அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்திற்கு செய்தி சொல்லப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடையை நீக்கக் கோரி போராடிய சசிபெருமாள் மரணத்திற்கு வித்திட்ட இந்த அதிமுக அரசு, மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கண்மூடித் தனமாக தடியடி நடத்தி அவர்களை சிறையில் அடைத்தது. இப்போது கோவனை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்கிறது.

மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று போராடுவோர் மீது அதிமுக அரசு இப்படி அடுத்தடுத்து அடக்குமுறையை ஏவி விடுகிறது. அதிமுக படை போல் காவல்துறை செயல்படுவதும், மனித உரிமைகள் இப்படி கொடுங்கரத்தால் நசுக்கப்படுவதையும் பார்த்தால் ஏதோ நெருக்கடி நிலைமை தமிழகத்தில் அமலில் இருக்கிறதோ என்று அஞ்சத் தோன்றுகிறது.

கோவனின் கைதுக்கும், மதுவிலக்கு போராட்டங்களை அடக்கும் அதிமுக அரசுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தின் முன்பு சட்டத்தின் ஆட்சியும், கருத்து சுதந்திரம் அளித்துள்ள அரசியல் சட்டமும் தலைகுனிந்து நிற்கின்றனவே என்று வேதனைப்படுகிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.