Home Blog Page 5985

ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் விபச்சார தொழில் செய்த துணை நடிகை உள்ளிட்ட இருவருக்கு சிறை

 

 

சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் அதிக அளவில் உள்ள மசாஜ் சென்டர்கள், பண்ணை வீடுகள், உணவு விடுதியுடன் கூடிய ஏசி அறைகளில் பிற மாநிலப் பெண்களை அழைத்து வந்து விபச்சார தொழிலில் ஈடுபடுத்துவதாக பரவலாக பேசப்படுகிறது.

மேலும், விபச்சார தொழிலை கண்டுகொள்ளாமல் இருக்க சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு மாதம் தோறும் கணிசமான ஒரு பெரும் கப்பதொகை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு சொகுசு பங்களாவிற்க்கு சென்னை போரூர் அடுத்த மாம்பக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வரும் தூத்துக்குடியை சேர்ந்தவர் ராமஜெயம் (45). நேற்று முன்தினம் என்னை அபிஷா (24)என்ற துணை நடிகை பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க சென்றாராம்.

அப்போது சொகுசு பங்களாவில் தங்கி இருந்த சரண்ராஜ் (25) என்பவர் கால் டாக்சி டிரைவரும் அபிஷாவும் உல்லாசமாக இருந்தபோது ஆபாசமாக படம் பிடித்தாராம், அதை இணையத்தில் வெளியிடுவதாக கூறி, பணம் கேட்டு மிரட்டியதால் கால் டாக்சி டிரைவர் கானாத்தூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.

புகாரில் கால் டாக்சி டிரைவர் கூறியுள்ளதாவது :-

‘நான், கடந்த 24ம் தேதி மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து அபிஷா (24) என்ற பெண்ணை உத்தண்டிக்கு சவாரி ஏற்றி வந்தேன். அப்போது அந்த பெண்ணுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவ்வப்போது உத்தண்டியில் அவர் தங்கியிருந்த ஒரு சொகுசு பங்களாவுக்கு சென்று வருவேன்.

நேற்று முன்தினம் என்னை அபிஷா அவரது வீட்டிற்கு அழைத்தார். நான் அங்கு சென்றவுடன், சரண்ராஜ் என்னை நிர்வாணப்படுத்தி, அபிஷாவுடன் சேர்த்து ஆபாச படம் எடுத்தார். பின்னர் கத்தியை காட்டி, என்னிடம் இருந்த ரூ2000த்தை பறித்தார். மேலும், இந்த படத்தை இன்டர்நெட்டில் வெளியிடாமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும், என மிரட்டுகின்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து கானாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் அசோகன் சம்பவ இடத்திற்கு சென்று அபிஷா மற்றும் சரண்ராஜ் ஆகியோரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அபிஷா சில தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்திருப்பதும், நட்சத்திர ஓட்டல்களில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது.

மேலும் இதுபோன்று கால் டாக்சி டிரைவர்கள் மற்றும் வசதிபடைத்தவர்களிடம் பழக்கம் ஏற்படுத்தி கொண்டு அவர்களிடம் பணம் பறித்து வந்ததும் தெரிந்தது.ராமஜெயம் அடிக்கடி பணம் இல்லாமல் இங்கு வந்து செல்வது பிடிக்காததால் தனது நண்பரான சரண்ராஜுடன் சேர்ந்து அவரை வரவழைத்து ஆபாசமாக படம் பிடித்து பணம் பறித்தது தெரிய வந்தது.

புகாரின் அடிப்படையில் அபிஷா, சரண்ராஜ் மீது மிரட்டல், பணம் பறித்தல், ஆபாசமாக படம் எடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் துணை நடிகை அபிஷா மற்றும் சரண்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.அவர்கள் இருவரையும் புழல் சிறையில் காவல் துறையினர் அடைத்தனர்.

சொகுசு பங்களாவில் கால் டாக்சி டிரைவருடன் ஆபாசமாக படம் பிடித்து, அதை இணையத்தில் வெளியிடுவதாக கூறி, பணம் கேட்டு மிரட்டிய துணை நடிகையை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிட் வீசி காதலியை கொலை செய்த காதலனுக்கு ஆயுள் தண்டனை

ஆசிட் வீசி காதலியை கொலை செய்த காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தைசேர்ந்தவர் ஜெயசீலன். அவருடைய மகள் ஸ்ரீவித்யா.அப்பகுதியில் உள்ள கம்ப்யூட்டர் மையத்தில் வித்யா வேலைக்கு சேர்ந்தார்.அந்த கம்ப்யூட்டர் மையத்துக்கு, கிண்டி நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் அங்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்த நிலையில் விஜயபாஸ்கரினின் பெற்றோர், தங்கையின் திருமணம் முடிந்த பிறகு உன்னுடைய திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று கூறினர்.

விஜயபாஸ்கர், வித்யா வேலை பார்க்கும் இடத்திற்கு அடிக்கடி சென்று வெளியே வருமாறு வற்புறுத்தியுள்ளார்

இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி மதியம் விஜயபாஸ்கர் கம்ப்யூட்டர் மையத்துக்கு சென்று வித்யாவை வெளியே வருமாறு கூறியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விஜயபாஸ்கர் அங்கிருந்து கோபத்துடன் சென்றார்.

பின்னர், சிறிது நேரத்தில் கையில் ஆசிட் பாட்டிலுடன் அங்கு வந்த விஜயபாஸ்கர், எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று கூறி கையில் வைத்திருந்த ஆசிட்டை வித்யாவின் முகத்தில் வீசினார்.

பலத்த காயமடைந்த வித்யா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் பிப்ரவரி 3 ஆம் தேதி சென்னை ஜார்ஜ் டவுன் மெட்ரோ பாலிடன் 7 ஆவது நீதிமன்ற நீதிபதியிடம் வித்யா வாக்குமூலம் அளித்தார்.

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வித்யா 20-02-2013 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து, விஜயபாஸ்கரை கைது செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி செல்வகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், ஆசிட் வீசி கொலை செய்த குற்றத்திற்காக விஜயபாஸ்கருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராத தொகை கட்ட வேண்டும் என்றும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்

 

நேபாள ஜனாதிபதியாக வித்யா தேவி பந்தாரி தேர்வு

காத்மாண்டு:

நேபாளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியான சிபிஎன்.யுஎம்.எல். கட்சியை சேர்ந்த வித்யா தேவி பந்தாரி(54) அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் கவுல் பகதுர் குருங்கை 100 வாக்குகள் வித்தியாசத்தில் தேவி பந்தாரி வீழ்த்தி வெற்றி பெற்றார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு நேபாளம் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு பதவி வகிக்கும் ராம் பரன் யாதவை தொடர்ந்து அந்நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக வித்யா தேவி பந்தாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நேபாளத்தில் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி புதிய அரசியல் சாசன சட்டம் பிரகனப்படுத்தப்பட்டதையடுத்து நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கிய ஒரு மாதத்திற்குள் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்யவேண்டி இருந்தது. அதன்படி வித்யா தேவி பந்தாரி முதல் பெண் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற சபாநாயகர் ஒன்சாரி கார்தி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பட்டாசுக்கு தடை இல்லை:உச்ச நீதிமன்றம்

புதுதில்லி :

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடு ஏதும் விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் தத்து மற்றும் அருண் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க தடை விதித்து உத்தரவிட்ட நிலையில், இது ஏற்கெனவே அமலில் உள்ளது. இந்நிலையில், தில்லியைச் சேர்ந்த மூவர், தில்லியில் காற்று மாசுபாடு அதிகரிக்காமல் தடுக்க தீபாவளியன்று பட்டாசு வெடிக்க முற்றிலுமாக தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த மனுவை அக்.28 இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்தது. பட்டாசுகள் வெடிப்பதற்கு புதிய கட்டுப்பாடோ அல்லது வழிகாட்டுதலோ விதிக்க முடியாது என தெரிவித்தது. மேலும் பட்டாசு பொருட்கள் மீது அபாய எச்சரிக்கை பொருத்த வேண்டும் என அக்டோபர் 16ம் தேதி விதித்த உத்தரவை மத்திய அரசு இன்னும் அமல்படுத்தவில்லை என கண்டித்தது.

வெடி பொருட்கள் மீது அபாய வாசகங்கள் அல்லது குறியீடுகளை அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 12 வரை வெளியிட மத்திய அரசுக்கு நெறிமுறைகளையும், வழிகாட்டுதலையும் விதிக்க வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞரை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை?

 

 

‘நுாற்றுக்கணக்கான ஆண்டுகளாக, சந்தோஷத்தை வெளிப்படுத்த பட்டாசு வெடிப்பது, இந்துக்களின் பாரம்பரியமாக உள்ளது. இதற்கு எதிராக தடை விதிப்பது, இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாகும்’ என, பட்டாசு தொழிற்சாலைகள் சங்கமும், இந்து மத அமைப்புகளும், உச்ச நீதிமன்றத்தில் நேற்று, பதில் மனு தாக்கல் செய்துள்ளன.

பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரி, மூன்று குழந்தைகள் சார்பாக, உச்ச நீதிமன்றத்தில், ‘ரிட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபடுகிறது. சுத்தமான காற்றை சுவாசிக்கும் உரிமை, அத்தியாவசியமானது. பட்டாசு புகையால், குழந்தைகள் பெரிதும் பாதிக்கின்றனர்; எனவே, பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டும்’ என, கூறப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், சிவகாசியை சேர்ந்த, தமிழ்நாடு பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தது. அதில்
கூறப்பட்டுள்ளதாவது:தீபாவளி பண்டிகையின் உள்ளார்ந்த அங்கம், பட்டாசு கள். பண்டிகையின் போது சந்தோஷத்தை வெளிப்படுத்த பட்டாசுகள் வெடிப்பது, நம் நாட்டின் பாரம்பரியமாக உள்ளது.

இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதங்களை சேர்ந்தவர்களும், தீபாவளி பண்டிகையில் ஆர்வமாக பங்கேற்கின்றனர். ஒளியும் சத்தமும், தீபாவளி பண்டிகையின் அம்சங்கள். மாறாக, இருளும் அமைதியும் துயரத்தை குறிக்கின்றன. தீபாவளி பண்டிகையின் போது, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள், நாடு முழுவதும் வெடிக்கப்படுகின்றன. இவற்றை தயாரிக்க, சிவகாசியில் மட்டும், 350 தொழிலகங்கள் உள்ளன. இவற்றின் மூலம், மூன்று லட்சம் பேருக்கு நேரடியாகவும்; 10 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.
பட்டாசுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், ஒட்டுமொத்த பட்டாசு தொழிலும் முடங்கும். லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும்.இவ்வாறு பட்டாசு தொழிற்சாலைகள் சங்கத்தின் பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.

சிவகாசியை சேர்ந்த, அருள்மிகு ஸ்ரீ அய்யப்பன் சங்கம் தலைமையிலான, இந்து அமைப்புகள் தாக்கல் செய்த பதில் மனு விவரம்:

உலகம் முழுவதும், பண்டிகைகளின் போது சந்தோஷத்தை வெளிப்படுத்த, மக்கள் பட்டாசுகளை வெடிக்கின்றனர். இதற்கு தடை விதிப்பது, இந்து மக்களின் கலாசார, பாரம்பரிய உரிமைகளை பாதிக்கும்.

தீபாவளி, சுதந்திர தினம், புத்தாண்டு, கிறிஸ்துமஸ், விளையாட்டுகள் மற்றும் தேர்தலில் வெற்றி, திருமணம் ஆகிய நிகழ்வுகளின் போது பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இந்த கொண்டாட்டங்களை, முறைகேடான தடை உத்தரவால் சீரழிக்கக் கூடாது. இந்து மத நம்பிக்கையின் படி, பூமியில் வாழும் மக்கள், தம் சந்தோஷத்தை, விண்ணில் உள்ள கடவுளர்களுக்கு வெளிப்படுத்த பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன.

எனவே, இதற்கு தடை விதிப்பது, இந்து மத நம்பிக்கைக்கு எதிரானது.இவ்வாறு, இந்து மத அமைப்புகள் சார்பில் தாக்கலான மனுவில் கூறப்பட்டது. மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த மனு விவரம்:தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பதால் மட்டுமே காற்று மாசடைவதில்லை; காற்று மாசடைவதற்கு பல காரணங்கள் உள்ளன. தொழிற்சாலைகள், ரயில்வே, கப்பல், விமானப் போக்குவரத்து, கட்டுமானம், புவி – தட்பவெப்ப நிலை, பயிர்களை எரித்தல், வாகனப் புகை, வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாதல் உள்ளிட்ட பல காரணங்கள், காற்று மாசடைதலுக்கான காரணமாக உள்ளன. நடவடிக்கைகள்காற்று மாசடைவதை, பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் பன்னடுக்கு ஒழுங்கு முறை நடவடிக்கை மற்றும் கூட்டு முயற்சியால் தடுக்கலாம். மத்திய அரசு, இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டது. இவ்வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு, இன்று விசாரிக்கிறது.

காதல் ஜோடிகளான ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம்

சில தினங்களுக்கு முன் ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடைபெற்று அமெரிக்காவில் தேனிலவு கொண்டாடியதாக கூறி அவர்களது திருமண வீடியோ மற்றும் புகைப்படம் வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவிவருகிறது .

அத்துடன் கீழ் சொல்லபடும் தகவலும் கூறப்படுகிறது.

பிராமின சமூகத்தை சார்ந்த இளைஞர்கள் சந்தீப் மற்றும் கார்ததிக் ஆகிய இருவரும் காதல் ஜோடிகளாம். அவர்கள் இருவருக்கும் இரு வீட்டரின் சம்மத்ததுடன் திருமணம் கோலாகலமாக நடத்தப்பட்டதாம்.

அவர்களது பெற்றோர் திருமணவர்களுக்கு அமெரிக்காவில் “தேனிலவை” கொண்டாட ஏற்பாடு செய்ததின் அடிப்படையில்
“தேனிலவை” கொண்டாடினார்களாம்.

இந்து மத வேதங்களில் ஓரிண சேர்கை அனுமதி உள்ளதாகவும், வேதங்களில் இதனை அனேக புனிதர்கள் ஓரின சேர்க்கையை ஆதரித்துள்ளதால், இது புனிதமாகும் எனவும் தேனிலவை” கொண்டாடிய ஆண் காதல் ஜோடி பேட்டி அளித்து

அவர்களது திருமணம் மற்றும் தேனிலவு கைப்படங்களையும் வெளியிட்டு உள்ளதாக வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவிவரும் தகவலில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களது #RECEPTION மற்றும் #திருமண புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது! என்றும் #என்னடா_நடக்குது_இந்த_நாட்டுல.. என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

கோபிகா கீதம்.

ஸ்ரீகோபிகா கீதம்

(ஸ்ரீபாகவதம் 10வது ஸ்காந்தத்தில் கூறப்படுவது)

வரிகளும்-அர்த்தvமும்+ஆடியோ ஹரிதாஸ் கிரி..

3. ஜயதிதே அதிகம் கிருஷ்ண ஜன்மனாவ்ரஜ:
ஸ்ரயத இந்திரா கிருஷ்ண ஸஸ்வதத்ர ஹி
தயித த்ருஸ்யதாம் கிருஷ்ண திக்ஷீதாவகா
த்வயித்ருதாஸவ: கிருஷ்ணத்வாம விசின்வதே

பொருள்: ஓ கிருஷ்ணா! தாங்கள் இங்கு பிறந்ததால் ஸ்ரீ மகாலட்சுமி எங்களுடைய இந்த இடைச்சேரியில் நித்யவாசம் செய்கிறாள். இந்த கோகுலம் வைகுண்டத்தைவிட அதிகமாக ஜொலிக்கிறது. உம்மிடம் உயிரை வைத்து நானா திசைகளிலும் தேடிக் கொண்டிருக்கும் எங்களைப் பார்க்க வேண்டும்.

4. சரதுதாஸயே கிருஷ்ண ஸாதுஜாதஸத்
ஸரஸிஜோதா க்ருஷ்ண ஸ்ரீமுஷா த்ருஸா:
ஸுரதநாத தே கிருஷ்ண அஸுல்க தாஸிகா
வரத நிக்நதோ க்ருஷ்ண கே ஹகிம்வத:

பொருள்: சம்போக பதியான ஸ்ரீகிருஷ்ணா, சரத்காலத்து ஓடையில் தாமரைப் பூக்கள் அழகாக மலர்ந்துள்ளன. அந்த மலரின் நடுவிலுள்ள ஸ்ரீயை (லட்சுமியை) திருட்டுத்தனமாக நோக்குகிறாய். அதே கண்களினால் சம்பளமில்லாத வேலைக்காரிகளான எங்களைக் கொல்வதானது வதமல்லவா கிருஷ்ணா? (சுல்கம்-சம்பளம், அசுல்கம்-சம்பளமில்லாத)

5. விஷஜலாப்யயாத் கிருஷ்ணவ்யாள ராக்ஷஸாத
வர்ஷமாருதாத் க்ருஷ்ண வைத்யு தானலாத்
வ்ருஷமயாத் மஜாத் க்ருஷ்ண விஸ்வதோ பயாத்
ருஷப தே லயம் க்ருஷ்ண ரக்ஷிதா முஹு

பொருள்: சிரேஷ்டரான ஹே கிருஷ்ணா! காளிங்கன் என்ற கொடுமையான விஷப் பாம்பினால் மரணமடையாமல் எங்களைக் காத்தாய். மழை, காற்று, இடி ஆகியவற்றிலிருந்தும் காப்பாற்றினாய். அகாசுரன், அரிஷ்டாசுரன், மயன், வ்யோமாசுரன் ஆகியோரிடத்திலிருந்தும், எல்லாவிதமான பயத்திலிருந்தும் எங்களை அடிக்கடி காப்பாற்றிய நீ எங்களைக் கைவிட்டு விடாதே என்று பிரார்த்திக்கிறோம்.

6. நகலு கோபிகா க்ருஷ்ண நந்தனோ பவான்
அகில தேஹினாம் க்ருஷ்ண அந்தராத்மத்ருக்
விகள ஸார்த்திதோ க்ருஷ்ண விஸ்வகுப்தயே
ஸக உதேயிவான் க்ருஷ்ண ஸாத்வதாம் குலே

பொருள்: ஹே கிருஷ்ணா! நீர் இடைச்சாதியான யசோதையின் பிள்ளை அல்ல! (தேவரஹஸ்யம் சாதாரண பக்தைகளின் பரப்ரம்ம மனதுக்குத் தோன்றியிருக்கிறது.) எல்லா ஜீவன்களுக்கும் உள்ளிருக்கும் அந்தர்யாமி நீங்கள். பிரும்மாவினால் பிரார்த்திக்கப்பட்டு உலகைக் காத்து ரட்சிப்பதற்காக யதுகுலத்தில் வந்த ஏ தோழனே ! நீர் அவதரித்ததே எங்களுக்காகத்தான்.

7. விரசிதாபயம் க்ருஷ்ண வ்ருஷ்ணிதுர்ய தே
சரணமீயுஷாம் க்ருஷ்ண ஸம்ஸ்ருதேர் பயாத்
கரஸரோருஹம் க்ருஷ்ண காந்த காமதம்
ஸிரஸி தேஹி ந க்ருஷ்ண ஸ்ரீகரக்ரஹம்

பொருள்: ஹே கிருஷ்ணா, ஹே காந்தா! உமது கரங்கள் சாதாரணமானவையல்ல. உம்முடைய பாதத்தில் சம்சார பயத்தால் சரணமடைந்துவிட்டவர்களுக்கு அபயமளிப்பவை அவை. அவர்கள் கோரியதை வரமாக அளிப்பவையும் அவையே. ஸ்ரீமகாலட்சுமியின் கரங்களைப் பிடிப்பவையான அந்தத் தாமரை போன்ற கையை என்னுடைய சிரசில் வைக்க வேண்டும்.

8. வ்ரஜ ஜனார்திஹன் க்ருஷ்ண வீரயோஷிதாம்
நிஜஜனஸ்மய க்ருஷ்ண த்வம் ஸநஸ்மித
பஜஸகேபவத் க்ருஷ்ண கிங்கரி: ஸ்மநோ
ஜலருஹானனம் க்ருஷ்ண சாரு தர்சய

பொருள்: கோகுலவாசிகளின் அனைத்து மனக்கவலைகளையும் போக்கும் வீரனும் நீயே, தோழனும் நீயே! சொந்த ஜனங்களுக்குள் எவருக்கேனும் தங்களைப் பற்றி கொஞ்சம் கர்வம் தோன்றினால்கூட, உன் புன்முறுவலைக் கண்டால் அந்த கர்வம் அழிந்துவிடும். உமது வேலைக்காரிகளான எங்களிடம் நீ வரவேண்டும். பத்மம் போன்ற அழகிய முகத்தை பெண்களான எங்களுக்கே முதலில் காண்பிக்க வேண்டும்.

கிருஷ்ணரைத்தவிர மற்றவர்கள் யாவரும் பெண்களே என்பது கோபியர் எண்ணம். ஸ்ரீ கிருஷ்ணனே புருசோஷத்தமன்
.
9. ப்ரணததேஹினாம் க்ருஷ்ண பாபகர்சனம்
த்ருணசாரனுகம் க்ருஷ்ண ஸ்ரீநிகேதனம்
பணிபணார்பிதம் க்ருஷ்ண தேபதாம்புஜம்
க்ருணுகுசேஷு ந: க்ருஷ்ண க்ருந்திஹ்ருச்சயம்

பொருள்: உன்னுடைய பாதங்கள் சாதாரணமானவையா என்ன? அதைப் பிடித்து நமஸ்காரம் செய்பவர் எந்த குலத்தவாரக இருந்தாலும் சரி, அவனை மன்னித்து ஏற்றுக் கொள்வாய். அது பசுக்களுடன் துணைபோகும் மகாலட்சுமியின் இருப்பிடம். காளீயனின் சிரசின் மேல் நின்றவை உங்கள் பாதங்கள் எங்கள் மனத்தை ஆக்ரமித்துக் கொள்ள வேண்டும்.

10. மதுரயா கிரா க்ருஷ்ண வல்குவாக்யயா
புதமனோக்ஞ்யா க்ருஷ்ண புஷ்கரேக்ஷண
விதிகரீரிமா: க்ருஷ்ண வீரமுஹ்யதீ :
அதரசீதுனா க்ருஷ்ண ப்யாயஸ்வந:

பொருள்: செந்தாமரைக்கண்ணா! ஹே வீரா! உம்முடைய இனிமையான வார்த்தைகள், அமுத மொழிகளினால் வித்வான்களே தங்கள் மனத்தை இழந்து உம்பால் ஈர்க்கப்படுகின்றனர். அதேபோல் உமது வார்த்தைகளினால் வேலைக்காரிகளான நாங்களும் தன் வயமிழந்து தவிக்கின்றோம். எங்களையும் திருப்தி செய்வீர்களா?

11. தவகதாம்ருதம் க்ருஷ்ண தப்தஜீவனம்
கவிபிரீடிதம் கிருஷ்ண கல்மஷாபஹம்
ஸ்ரவண மங்களம் கிருஷ்ண ஸ்ரீமதாததம்
புவிக்ருணந்தி தே க்ருஷ்ண பூரிதா ஜனா:

பொருள்: ஹே கிருஷ்ணா, உம்முடைய பிரிவால் நாங்கள் இறந்ருப்போம். ஆனால் மகான்கள் உன் கதாம்ருதத்தைக் கூறி எங்களைப் பிழைக்க வைத்துவிட்டார்கள். தாபத்ரயம் அடைந்தவர்களை உயிர்ப்பிப்பதும்; வியாசர், சுகர் போன்றவர்களால் கொண்டாடப்பட்டதும், ஆசையால் ஏற்படக்கூடிய அல்லல்களைப் போக்கடிக்கக்கூடியதும், கேட்பதாலேயே <உடனே மங்களத்தை அளிக்கக்கூடியதும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் கொடுக்கக்கூடியதுமான உமது கதையாகிய அமிர்தத்தை எவர் சொல்கிறார்களோ அல்லது கேட்கிறார்களோ அவர்கள் பலப்பல பிறவிகளில் வெகுவாக தானங்கள் செய்திருக்க வேண்டும்.

12. ப்ரஹஸிதம் ப்ரிய க்ருஷ்ண ப்ரேம வீக்ஷணம்
விஹரணம் சதே க்ருஷ்ண த்யான மங்களம்
ரஹஸிஸம் விதோ க்ருஷ்ணயா ஹ்ருத்ஸ்ப்ருஙஹா
குஹக கோமள க்ருஷ்ண ÷க்ஷஸயந்திஹா

பொருள்: ஹே கிருஷ்ணா! உம்முடைய புன்முறுவலையும் அன்பும் கருணையும் நிரம்பிய பார்வையையும் சிந்தித்தால் அது மங்களத்தைத் தரும். அந்த விளையாட்டையும், ரஹஸ்ய சமிக்ஞை நிறைந்த பார்வையையும் நினைப்பதாலேயே எங்கள் உள்ளத்தையெல்லாம் வற்றச் செய்து விடுகிறாயே!

13. சலஸியத் வ்ரஜாத் க்ருஷ்ண சாரயன் பசூன்
நளின சுந்தரம் க்ருஷ்ண நாத தே பதம்
சிலத்ருணாங்குரை: க்ருஷ்ண ஸுதத்திந:
கலிலதாம் மன: க்ருஷ்ண காந்த கச்ச தீ

பொருள்: ஹே நாதா! எப்பொழுது கோகுலத்திலிருந்து பசுக்களை ஓட்டிக் கொண்டு நீங்கள் புறப்படுகிறீர்களோ, அப்போதே தாமரை போன்ற தங்களது அழகிய பாதம் சிறுகற்களாலும் புற்களின் சிறுநுனிகளாலும் குத்தப்படுமேயென்று எங்கள் மனம் கலங்கத் தொடங்கிவிடுகிறது.

14. தினபரிக்ஷயே க்ருஷ்ண நீலகுந்தலை:
வனருஹானனம் க்ருஷ்ண பிப்ரதாவ்ருதம்
கனரஜஸ்வலம் க்ருஷ்ண தர்சயன்முஹீ
மனஸிந: ஸ்மரம் க்ருஷ்ண வீர யச்சஸி

பொருள்: மாலை வேலைகளில் கருத்த கேசத்தின் முன் நெற்றிக்குழல்கள் சூழ நீவிர் வரும்போது, உமது முகத்தில் பாலாடைக் கட்டிகளின் தூள்கள் மறைந்து மறைந்து காணப்படுகின்றன. (ஏற்கெனவே பால் போன்ற முகத்தில் பாலாடைக்கட்டிகளின் துகள்கள் ஒட்டிக் கொண்டிருப்பதால் முகம் மேலும் பிரகாசமடைகிறது. அதன் பின்னணியில் முன்நெற்றிக் கருங்குழல்கள் மேலும் ஒளியை உமிழ்கின்றன.) அந்த மிருதுவான தாமரை முகத்தை எங்களுக்கு அடிக்கடி காட்டுவதன் மூலம் எங்கள் உள்ளத்தில் கிளர்ச்சியைத் தூண்டுகிறீர்கள்.

15. ப்ரணத காமதம் க்ருஷ்ண பத்மஜார்ச்சிதம்
தரணி மண்டனம் க்ருஷ்ண த்யேயமாபத்
சரண பங்கஜம் கிருஷ்ண சந்த
ரமண ந: ஸ்தனேஷு க்ருஷ்ண அர்ப்பயாதீஹன்

பொருள்: மனோவியாதியைப் போக்கும் ரமணா! பிரம்மனால் பூஜிக்கப்பட்டதும், ஆபத்துக்காலத்தில் அவசியம் தியானம் செய்ய வேண்டியதும், நினைத்த மாத்திரத்திலேயே ஆபத்தைப் போக்கக்கூடியதும், கேட்டவுடன் கிடைக்க அருள்பாலிப்பதுமான உமது பாத சரணங்களை எங்கள் மார்பில் (நெஞ்சில்) வைக்க வேண்டும்.

16. ஸுரத வர்த்தனம் க்ருஷ்ண ஸோக நாசனம்
ஸ்வரித வேணுனா க்ருஷ்ண ஸுஷ்ட்டு சும்பிதம்
இதாராகவி க்ருஷ்ண ஸ்மரணம் ந்ருணாம்
விதாவீரந: க்ருஷ்ண தே அதராம்ருதம்

பொருள்: ஹே வீரா! காமத்தை விருத்தி செய்வதும், சோகத்தை அழிப்பதும், இசைக்கும் குழலால் நன்கு முத்தமிடப்படுவதும், மனிதர்களின் பிற ஆசைகளை அறவே செய்வதுமான உமது இதழ்ச் சுவையை அளித்திட வேண்டும்.

17. அடதி யத் பவான் க்ருஷ்ண அன்ஹி கானனம்
த்ருடிர்யுகாயதே க்ருஷ்ண த்வாம பஸ்யதாம்
குடிலகுந்தலம் க்ருஷ்ண ஸ்ரீமுகம் ச தே
ஜட உதீக்ஷதாம் க்ருஷ்ண பக்ஷ்மக்ருத் த்ருஸாம்

பொருள்: எப்பொழுது நீர் பிருந்தாவனம் குறித்துக் கிளம்புகிறீர்களோ, அப்பொழுதே உம்மைப் பார்க்காத பிராணிகளுக்கு அரை விநாடி கூட ஒரு யுகமாக நகர்கிறது. பிறகு மாலைவேளைகளில் கண்டபடி கலைக்கப்பட்ட நெற்றி மயிர்களுடன் கூடியிருக்கும் உமது திருமுகத்தைப் பார்க்கும்போது அதைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அப்போது உம்மைப் பார்க்கத் தடையாக இருக்கும் இமைகளைப் படைத்த பிரும்மனே ஒரு ஜடமாக உணர்ச்சியற்ற மரமாகத் தென்படுகிறார். (கண்ணைக் காக்கும் இமை கூட அநாவசியமாகிவிடுகிறது).

18. பதிஸுதான்வய க்ருஷ்ண ப்ராத்ரு பாந்தவான்
அதிவிலங்க்ய தே க்ருஷ்ண அந்த்யச்யுதா கதா
கதிவிதஸ்தவோத் க்ருஷ்ணகீத மோஹிதா:
கிதவ யோக்ஷித: க்ருஷ்ண கஸ்த்ய ஜேந்நிஸி

பொருள்: ஹே அச்சுதா! கணவன், குழந்தை, வம்சம், உடன்பிறப்புகள், உறவினர்கள் என்று அனைவரையும் மீறி, நற்கதி உன்னிடம்தான் கிடைக்குமென்று ஓடி வந்துவிட்டோம். உமது வேணுகானத்தால் வசீகரிக்கப்பட்டு மோகத்தால் வாடும் பெண்களை இரவில் எவன் கைவிடுவான்.

19. ரஹஸி ஸம்விதம் க்ருஷ்ண ஹ்ருச்சயோதயம்
ப்ரஹஸிதானனம் க்ருஷ்ண ப்ரேம வீக்ஷணம்
ப்ருஹது: ஸ்ரியோ க்ருஷ்ண வீக்ஷ்யதாம தே
முஹுரதிஸ்ப்ருஹா க்ருஷ்ண முஹ்யதே மன:

பொருள்: ஏகாந்தத்தில் உமது சங்கேத வார்த்தைகள் காமத்தைக் கிளரும். உமது முறுவல் பூத்த முகம், பிரியமான பார்வை, மகாலட்சுமிக்கு இருப்பிடமான உமது பரந்த மார்பு-இதையெல்லாம் நினைத்து நினைத்து எங்கள் மனமானது அதிக ஆசை கொண்டு அடிக்கடி மோகமடைகிறது.

20. வ்ரஜவநௌகஸாம் க்ருஷ்ண வ்யங்தி ரங்கதே
வ்ருஜினஹந்த்ரயவம் க்ருஷ்ண விஸ்வமங்களம்
த்யஜ மனாக்ச ந: கிருஷ்ண த்வத் ஸ்ப்ருஹாத்மனாம்
ஸ்வஜனஹ்ருத்ருஜாம் க்ருஷ்ண யந்நிஷீதனம்

பொருள்: ஹே அங்கா, உன் உருவத்தைப் பார்த்த உடனேயே கோகுலத்தில் உள்ள பிராணிகளின் அனைத்து பாவங்களும் நசித்துப் போகின்றன. உலகுக்கே மங்களம் பெருக்கெடுக்கின்றன. எங்களுடைய ஹ்ருதய ரோகங்களுக்கு நிவிருத்தியைத் தருகின்றது எதுவோ, அதைக் கொஞ்சம் தருவீராக. (அதிக பிரேமையினால் அழுதுகொண்டே சொல்கின்றனர்)

21. யத்தே ஸுஜாத சரணாம்புருஹம் ஸ்தனேஷு
பீதா சனை: ப்ரிய ததீமஹி கர்கசேஷு
தேனாடவீமடஸி தத்வ்யத்ததே ந கிம்ஸ்வித்
கூர்பாதிபிர் ப்ரமதி தீர்பவதாயுஷாம்

பொருள்: எங்கள் நெஞ்சில் உன்பாதம் பட்டால் நோகுமென்று நாங்கள் பயப்படுகிறோம். அத்தகைய கால்கள் காட்டில் சுற்றினால் சின்ன கற்களினால் அந்தச் சரணம் நோகாதோ என்று எங்கள் புத்தியே பேதலிக்கிறது.

உத்தர ஸ்லோகம்

22. இதிகோப்ய: ப்ரகாயந்த்ய ப்ரலபந்த்யஸ்ச சித்ரதா
ருருது ஸுஸ்வரம் ராஜன் க்ருஷ்ண தர்ஸன லாலஸா

பொருள்: ஓ ராஜன் என்று பரீட்சித்து மகாராஜனை அழைத்த சுக பிரும்மரிஷி மேலும் சொன்னார். இம்மாதிரி கோபாலனைக் காணவேண்டுமென்ற ஆவலுடன் உரத்த குரலில் விசித்திரமாக புலம்பி அழுதனர்.

23. தாஸாமவிர்பூச்சௌரி ஸ்மயமான முகாம்புஜ:
பீதாம்பரதா ச்ரக்வி ஸாக்ஷõன் மன்மத மன்மத:

பொருள்: மன்மதனே ஆசைப்படும் மாறனான கோபாலன் பீதாம்பரம் தரித்து, புஷ்ப மாலைகள் மார்பில் தவழ, அந்த கோபிகைகளின் முன் ஆவிர்பவித்தார்.

24. தம்விலோக்யாகதம் பிரேஷ்டம் ப்ரீத்யுத்புல்ல த்ரு ஸோ அபலா உத்தஸ்த்துர்யுகபத் ஸர்வாஸ்தன்வ: ப்ராணமிவாகத்

பொருள்: அமர்ந்துகொண்டே கானம் செய்த கோபிகைளை ஆவிர்பவித்த அந்த கோபாலனைக் கண்டவுடன் மீள உயிர்பெற்றவர்கள் போல துள்ளி எழுந்தார்கள் கோபியர். அவர்களுக்கு யாதொரு பிணியும் வராது என்றும் சகல செல்வமும் சேரும் என்றும் ஆசியளித்தார் ஆனந்த கிருஷ்ணன்

ரூ.31 லட்சம் கடத்தல் தங்கம் வழிப்பறி செய்த மர்ம கும்பல்

ஓசூர்:

ஓசூர் வழியாக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ. 31 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை மர்ம கும்பல் வழிப்பறி செய்து தப்பிச் சென்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, வட்டக்காடு தம்பிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(38). சிங்கப்பூரில் வேலை செய்து வரும் இவர், கடந்த மாதம், 9ம் தேதி, தன் நண்பர் சியோஜியுடன் வாடகை காரில், சென்னையில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்றார். அங்கு நித்யா என்ற பெண்ணிடம் இருந்து, 2.5 கிலோ தங்கத்தை வாங்கிக் கொண்டு மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டார்.

கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, ஓசூர் அடுத்த மூக்கண்டப்பள்ளி அருகே வரும் போது, பின்னால் காரில் வந்த, எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல், மாரியப்பன் சென்ற காரை வழிமறித்தது. காரில் இருந்து இறங்கிய மாரியப்பன் மற்றும் சியோஜியை கத்தியை காட்டி மிரட்டி, பாஸ்போர்ட், மொபைல்போன் மற்றும் காரில் இருந்த, 31 லட்சம் மதிப்புள்ள, 2.5 கிலோ தங்கத்தை மர்ம கும்பல், வழிப்பறி செய்து தப்பிச் சென்றது.

பாஸ்போர்ட் மற்றும் மொபைல்போன் மட்டுமே முதலில் திருட்டு போனதாக, கடந்த மாதம், 10ம் தேதி சிப்காட் போலீசில் புகார் செய்த மாரியப்பன், நேற்று முன்தினம் மீண்டும், ஒரு புகார் மனுவை கொடுத்தார்.

இதில், கடந்த மாதம் நடந்த வழிப்பறியில் தன், 2.5 கிலோ தங்கம் வழிப்பறி செய்யப்பட்டதாககுறிப்பிட்டிருந்தார். இதனால், வழிப்பறி செய்யப்பட்ட, தங்கம் கடத்தல் தங்கமாக இருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் நித்யா என்பவர், பல்வேறு சோதனைகளை தாண்டி, தங்கம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. பெங்களூரு விமான நிலையத்திலும், தற்போது சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய சிலரை, கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக, போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள பவனில் சோதனை எல்லாம் இல்லை: காவல் ஆணையர் விளக்கம்

புது தில்லி:
கேரள பவனில் மாட்டிறைச்சி பரிமாறப் பட்டதாகவும், அதனால் போலீஸார் சோதனை நடத்தியதாகவும் வந்த செய்திகளை காவல்துறை ஆணையர் மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தில்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பாஸி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “உணவகத்தில் போலீஸார் சோதனை நடத்தவில்லை. எங்களுக்கு புகார் வந்தவுடன் இது தொடர்பாக அங்கு ஏதேனும் போராட்டம் நடந்தால் பாதுகாப்பு அளிக்கவே அங்கு சென்றோம். அங்கு பணியாற்றும் ஊழியர்கள், தனியார் பாதுகாவலர்களை விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை செய் தோம். பாதுகாப்பு கருதி அங்கு போலீஸார் சிலமணி நேரம் இருந்தனர்” என்றார்.

கேரள இல்லத்தில் மாட்டிறைச்சி: தில்லி போலீஸார் சோதனைக்கு உம்மன் சாண்டி கண்டனம்

புது தில்லி:

தில்லியில் உள்ள கேரள இல்லத்தின் உணவகத்தில் பசுமாட்டு இறைச்சி பரிமாறப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, அங்கு தில்லி போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதற்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கேரள அரசின் விருந்தினர் இல்லமான கேரள இல்லம் உள்ளது. இங்குள்ள உணவகத்தில் வெளி ஆட்களும் சாப்பிட அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இந்த உணவகத்தில் பசு இறைச்சி பரிமாறப்படுவதாக தில்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாலை புகார் வந்தது. இந்துசேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் இந்தப் புகாரை அளித்தார்.

தில்லியில் பசு இறைச்சி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 20 போலீஸார் உடனே கேரள இல்லம் சென்று அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில் உணவகத்தில் பசு இறைச்சி பரிமாறப்பட்டதாக வெளியான தகவலை கேரள அரசு நேற்று திட்டவட்டமாக மறுத்தது.

கோழிக்கோட்டில் உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, “கேரள இல்லம் தனியார் ஹோட்டல் அல்ல. லாப நோக்கத்துடன் நடத்தும் நிறுவன மும் அல்ல. இது மாநில அரசின் விருந்தினர் இல்லம். இங்கு போலீஸ் நடவடிக்கை துரதிர்ஷ்டவசமானது. சோதனை நடத்தும் முன்பு தில்லி போலீஸார் சற்று நிதானத்தை கையாண்டிருக்கலாம். உள் துறை அமைச்சகத்திடம் தகவல்களை பெற்ற பின்னரே சோதனை நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். மாட்டிறைச்சி தடை தொடர்பாக சிலர் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்” என்றார்.

இதுதொடர்பாக கேரள தலைமைச் செயலாளர் ஜிஜி தாமஸ் நேற்று தில்லி யில் கூறும்போது, “கேரள இல்லத்தின் உணவகத்தில் பசு இறைச்சி பரிமாறப்படவில்லை. எருமை இறைச்சியே பரிமாறப்பட்டது. இதுவே மெனு அட்டையில் மாட்டிறைச்சி என்று கூறப்பட்டுள்ளது.

கேரள இல்லத்தில் உள்துறை ஆணையரின் அனுமதியில்லாமல் சில அமைப்பினர் உள்ளே நுழைந்துள்ளனர். இதுபற்றி தில்லி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். தில்லி போலீஸார் அனுமதி பெற்று உள்ளே நுழைந்திருக்கலாம். என்றாலும் நடந்த சம்பவங்களை கருத்தில்கொண்டு உணவக மெனுவில் இருந்து மாட்டிறைச்சி தற்காலிகமாக நீக்கப்படுகிறது” என்றார்.

பிரதமருக்கு கடிதம்:

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், “கேரள இல்லத்தின் உணவகத்தில் தில்லி போலீஸார் சோதனை நடத்தியது மிகவும் ஆட்சேபனைக்குரியது. அவர்கள் அதிகார வரம்பு மீறி செயல்பட்டுள்ளனர். தவறான தகவலின் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் அனுமதி பெறாமல், அல்லது முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கேஜ்ரிவால் கண்டனம்:

சோதனை நடவடிக்கைக்கு தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “கேரள இல்லத்தில் தில்லி போலீஸார் சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது. கேரள இல்லம் ஓர் அரசுக்குச் சொந்தமானது. தில்லி போலீஸ் கேரள இல்லத்துக்குள் நுழையவேண்டிய தேவையே கிடையாது. இது இந்திய கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல் ஆகும். பாஜக தொண்டர்களைப் போல தில்லி போலீஸ் நடந்துகொள்கிறது” என்றார்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி, மார்க்சிஸ்ட் தலைவர் பினரயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் தில்லி காவல்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.