Home Blog Page 5995

பனை மர கள்ளை போதை பொருள் என நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு : தமிழ்நாடு கள் இயக்கம்

பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் கள்ளை போதை பொருள் என நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு அளிப்தாக தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்துள்ளது .

தமிழகத்தில் இறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கள் இயக்கம் பிரசார சார்பாக பல மாவட்டங்களில் பேரணி தொடர்ந்து நடத்த திட்டமிட்டு நடைபெற்று வருகிறது.

இந்த பேரணி கன்னியாகுமரி மாவட்டம் காந்தி மண்டபத்தில் இருந்து இன்று காலை தொடங்கியது. தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையிலான குழுவினர் வேன் மூலம் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இன்று மாலை நெல்லை வந்த அந்த பேரணியில் பங்கு பெற்ற
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல் படுத்த பல அரசியல் கட்சிகள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள், பொதுமக்கள் என பலர் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.

இந்த சமுதாயத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு முக்கியக் காரணமே மதுதான். பண்டிகை நாட்களில் இத்தனை கோடிக்கு மது வியாபாரம் நடந்ததாக அறிக்கை கொடுக்கும் அரசு, அதன் பின்னணியில் எத்தனை பெண்களின் கண்ணீர் இருக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

இந்த நிலையில் கள் ஒரு போதை பொருள் அல்ல. அது ஒரு உணவு பொருள். சுத்தமான கள்ளை போதை பொருள் என நிரூபித்தால் நாங்கள் ரூ.10 கோடி பரிசாக தருகிறோம்.

 

 

 

கேரளாவில் சுண்ணாம்பு சேர்க்காத பதனீரில் இருந்து சர்க்கரை தயாரிக்கின்றனர். பனைக்கு யாரும் பூச்சி மருந்து அடிப்பதில்லை. எனவே பனை பொருட்களில் எந்த வித நச்சும் இல்லை. அது கிலோ ரூ.400க்கு விற்பனையாகிறது. மேலும் இலங்கையில் இருந்து கள் மூலம் தயாரித்த பீர், ஒயின், விஸ்கி ஆகியவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கள் இறக்க அனுமதித்தால் அதுபோல் நாமும் தயாரித்து அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நியசெலவானி ஈட்டலாம்.

கன்னியாகுமரியில் இன்று தொடங்கிய எங்கள் பிரசார பயணம் வருகிற அக்டோபர் 2–ந் தேதி சென்னை காந்தி சிலை முன்பு நிறைவு பெறுகிறது. அப்போது காந்தி சிலைக்கு கள் படையல் செய்து வழிபடுவோம் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததார்.

கள் இயக்க பிரசாரத்தின் போது பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் கள் மூலம் வெளிநாடுகளில் தாயரிக்கப்பட்டு விற்பனையாகும் பீர், ஒயின், விஸ்கி பாட்டில்கள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது .

 

பனை மர கள்ளை போதை பொருள் என நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு : தமிழ்நாடு கள் இயக்கம்

பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் கள்ளை போதை பொருள் என நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு அளிப்தாக தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்துள்ளது .

தமிழகத்தில் இறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கள் இயக்கம் பிரசார சார்பாக பல மாவட்டங்களில் பேரணி தொடர்ந்து நடத்த திட்டமிட்டு நடைபெற்று வருகிறது.

இந்த பேரணி கன்னியாகுமரி மாவட்டம் காந்தி மண்டபத்தில் இருந்து இன்று காலை தொடங்கியது. தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையிலான குழுவினர் வேன் மூலம் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இன்று மாலை நெல்லை வந்த அந்த பேரணியில் பங்கு பெற்ற
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல் படுத்த பல அரசியல் கட்சிகள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள், பொதுமக்கள் என பலர் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.

இந்த சமுதாயத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு முக்கியக் காரணமே மதுதான். பண்டிகை நாட்களில் இத்தனை கோடிக்கு மது வியாபாரம் நடந்ததாக அறிக்கை கொடுக்கும் அரசு, அதன் பின்னணியில் எத்தனை பெண்களின் கண்ணீர் இருக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

இந்த நிலையில் கள் ஒரு போதை பொருள் அல்ல. அது ஒரு உணவு பொருள். சுத்தமான கள்ளை போதை பொருள் என நிரூபித்தால் நாங்கள் ரூ.10 கோடி பரிசாக தருகிறோம்.

கேரளாவில் சுண்ணாம்பு சேர்க்காத பதனீரில் இருந்து சர்க்கரை தயாரிக்கின்றனர். பனைக்கு யாரும் பூச்சி மருந்து அடிப்பதில்லை. எனவே பனை பொருட்களில் எந்த வித நச்சும் இல்லை. அது கிலோ ரூ.400க்கு விற்பனையாகிறது. மேலும் இலங்கையில் இருந்து கள் மூலம் தயாரித்த பீர், ஒயின், விஸ்கி ஆகியவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கள் இறக்க அனுமதித்தால் அதுபோல் நாமும் தயாரித்து அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நியசெலவானி ஈட்டலாம்.

கன்னியாகுமரியில் இன்று தொடங்கிய எங்கள் பிரசார பயணம் வருகிற அக்டோபர் 2–ந் தேதி சென்னை காந்தி சிலை முன்பு நிறைவு பெறுகிறது. அப்போது காந்தி சிலைக்கு கள் படையல் செய்து வழிபடுவோம் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததார்.

கள் இயக்க பிரசாரத்தின் போது பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் கள் மூலம் வெளிநாடுகளில் தாயரிக்கப்பட்டு விற்பனையாகும் பீர், ஒயின், விஸ்கி பாட்டில்கள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது .

 

 

 

தமிழகத்தில் பயன் இல்லாத அதிமுக அரசாங்க ஆட்சி : தேர்தல் நேரத்தில் மக்கள் கவனித்து செயல்படகருணாநிதி அறிவுரை

தமிழகத்தில் மக்களுக்கு பயன் இல்லாத அதிமுக அரசாங்க ஆட்சி நடைபெறுவதாக திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.

சட்ட மன்றத்தில் போலீஸ் மானியத்துறை கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா மற்ற மானியத்துறை மீதான விவாதத்தில் பங்கேற்கவில்லை.
பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவற்றிற்கு பணம் எங்கிருந்து வரும் என தெரிவிக்கப்படவில்லை.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் பல இடங்களில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் நல்லது நடக்கும் என மக்கள் தேர்தல் நேரத்தில் கவனித்து செயல்பட வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்.

பேஸ்புக் நிறுவனத்தின் இன்டர்நெட்.ஓஆர்ஜி திட்டத்துக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கும் தொடர்பில்லை

பேஸ்புக் நிறுவனத்தின் இன்டர்நெட்.ஓஆர்ஜி திட்டத்துக்கும்
டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கும் தொடர்பில்லை

 

 

 

பேஸ்புக் நிறுவனத்தின் இன்டர்நெட்.ஓஆர்ஜி திட்டத்துக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துதுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சான் ஜோஸ் நகரில் உள்ள பேஸ்புக் நிறுவன தலைமையகத்துக்குச் சென்றார். நேற்று முன்தினம் 45 நிமிஷம் அங்கிருந்த அவர் பலரது கேள்விகளுக்குப் பதில் அளித்தார். பின்னர் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் மற்றும் அவரது மனைவிக்கு நினைவுப் பரிசையும் மோடி அளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு முன்பாகவே பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்கின் பேஸ்புக் புரொபைல் படமாக இந்தியாவின் தேசியக் கொடியின் மூவர்ண பின்னணியில் நரேந்திர மோடியின் புகைப்படமும், அவருடைய படத்தையும் வைத்திருந்தார். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு ஒத்து ழைப்பு அளிக்கும் வகையில் இது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக் கப்பட்டது.

அத்துடன் பேஸ்புக் பயனா ளிகள் அனைவரும் இதுபோல் தங்களது புகைப்படத்தை புரொபைல் படமாக வைப்ப தற்கு ஏதுவாக ஒரு டூல் அளித் திருந்தது. அந்த டூல் சர்ச்சைக் குரிய பேஸ்புக்.ஓஆர்ஜி திட்டத் துக்கு ஆதரவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை யடுத்து இந்த விவகாரம் பெரிதாக விஸ்வரூபமெடுத்து. இந்நிலையில் இது தனது நிறுவனத்தின் ஒரு பொறியாளர் செய்த தவறால் ஏற்பட்டது என்று பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பேஸ்புக் பயனாளிகள் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு ஆதரவாக தங்களது புரொபைல் படம் வைப்பதற்கும், பேஸ்புக் நிறுவனத்தின் இன்டர்நெட்.ஓஆர்ஜி திட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று தெரிவித்துள்ளது.

தங்கள் நிறுவன பொறியாளர் தவறுதலாக இன்டர்நெட்.ஓஆர்ஜி புரொபைல் படம் என எழுதிவிட்டதாக அது விளக்கம் அளித்துள்ளது. அதற்குரிய சங்கேத வார்த்தையை அவர் தவறுதலாக குறிப்பிட்டுவிட்ட தாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.

புரொபைல் படம் மாற்று வதற்கும் இன்டெர்நெட்.ஓஆர்ஜி திட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றும் உரிய சங்கேத வார்த்தையை உடனடியாக மாற்றிவிட்டதாகவும் பேஸ்புக் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனம் நுகர்வோருக்கு அடிப்படையில் இணையதள வசதி இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இன்டர்நெட்.ஓஆர்ஜி திட்டத்தை 8 லட்சத் துக்கும் அதிகமானோர் பயன் படுத்துகின்றனர். ஆனால் இணையதள பயன்பாட்டாளர்கள் இன்டர்நெட்.ஓஆர்ஜி செயல் பாட்டை விமர்சனம் செய்துள்ளனர். இணைய சமநிலை என்ற நிலைப் பாட்டுக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளனர்.

இணையதள ஆர்வலர்கள் இன்டர்நெட்.ஓஆர்ஜி சேவையை கடுமையாக விமர்சித்துள்ளனர். இது சமீபத்தில் இலவச சேவை என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இணையதள நடுநிலை என்ற கொள்கைக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளனர். இணையதள பயன்பாட்டில் ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு விரைவான சேவையை குறிப்பிட்ட கட்டணம் வசூலித்து அளிப்பது என்பது இணையதள சமன்பாட்டுக்கு எதிரானது என்றும் இதுபோன்ற சேவையைத்தான் சிலதொலைத் தொடர்பு நிறுவனங்கள் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இணையதளத்தால் இணைக் கப்பட வேண்டிய பலர் உள்ள நாடுகளில் இணையதள சமநிலை குறித்து குறித்து விவாதிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று மார்க் ஜுகர்பெர்க் தெரிவித் திருந்தார். அத்துடன் நுகர்வோர் இணையதள சமநிலை சூழலை எட்டுவதற்குத் தேவையான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் நிறுவனங்கள் இணையதள இணைப்பைப் பெறுவதற்கான புதிய உத்திகளை வகுக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்ததது குறிப்பிடத்தக்கது.

 

மதுவிலக்கை ஏன் அமல்படுத்த கூடாது?: இஸ்லாமிய அமைப்பு திடீர் போர்க்கொடி

 

மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என இத்தேஹாத் இ மில்லத் என்ற இஸ்லாமிய அமைப்பு கூறியுள்ளது. இதுதொடர்பாக, பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த இந்த அமைப்பின் தலைவர் மவுலானா தவுக்கீர் ரஸா கான் கூறியதாவது:-

 

இந்து மற்றும் முஸ்லிம் மதங்களில் மதுவின் தீமையைப் பற்றி விளக்கி கூறப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் இவ்விரு மதத்தவர்களுக்கும் புன்னிய பூமியாக விளங்குகின்றது. குறிப்பாக, பரேலி பகுதி, சன்னி இனத்தவர்களுக்கும் தியோபந்தி மக்களுக்கும் பக்திக்கான மையத்தலமாக உள்ளது.

 

ராமர், கிருஷ்ணர் போன்ற கடவுளின் அவதாரங்கள் பிறந்த உத்தரப்பிரதேசத்தில் மது விற்பனை செய்வதை, யாத்திரை ஸ்தலத்தில் மது விற்பதாகவே கருத வேண்டும். சிறுவர்களுக்குகூட கிடைக்கும் வகையில் இங்கு மது விற்பனை மிகவும் தாராளமாக நடந்து வருகின்றது. பழச்சாறு விற்கும் பல கடைகளில் நின்று சிறுவர்கள் மது குடிப்பதை நானே பார்த்திருக்கிறேன்.

 

எனவே, இங்கு மதுவை தடை செய்ய வேண்டும் என மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ்விடம் நான் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளேன். உத்தரப்பிரதேசத்தில் மதுவுக்கு தடை விதித்தால் இந்து, முஸ்லிம் இருதரப்பு மக்களும் இந்த முடிவை வரவேற்று ஆதரவு தெரிவிப்பார்கள்.

 

மதுவிலக்கை கொண்டுவந்தால் மாநில அரசின் வருவாயில் பற்றாக்குறை ஏற்படும் என கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வருவாய் இழப்பை வேறுபல வகைகளில் ஈடுசெய்து கொள்ளலாம். ஆனால், மதரீதியான இழப்பை வேறு எதனாலும் ஈடுகட்ட முடியாது.

 

உதாரணத்துக்கு குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனால், அங்கு அரசின் வருவாயில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளபோது, ராமர், கிருஷ்ணர் பிறந்த உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மதுவிலக்கை ஏன் அமல்படுத்த கூடாது?

 

அனைத்து தீமைகளுக்கும் மதுவே காரணம் என இஸ்லாம் மதம் வலியுறுத்துகின்றது. மதுவிலக்கை கொண்டுவருவதன் மூலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமூகக் குற்றங்கள் வெகுவாக குறையும். எனவே, விரைவில் எங்கள் இயக்கத்தின் சார்பில் மதுவுக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என  மவுலானா தவுக்கீர் ரஸா கான்   கூறினார்.

வோக்ஸ்வேகன் கார் நிறுவன முறைகேட்டை அம்பலப்படுத்திய தமிழ் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி : வோக்ஸ்வேகன் தலைமை நிர்வாகி ராஜினாமா

அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா பல்கலைகழக்கத்தில் பேராசிரியராக உள்ள சென்னையை சேர்ந்த டாக்டர் அரவிந்த் திருவேங்கடம், விஞ்ஞானி அம்பலப்படுத்தியுள்ளார்.

ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனம், தனது டீசல் கார்களில் காற்று மாசுபாட்டு வீதத்தை, பிரத்யேக சாப்ட்வேரின் மூலம் குறைந்த அளவில் காட்டி பெருமளவிலான முறைகேட்டில் ஈடுபட்டது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சி செய்து வரும் அரவிந்த், தனது சக பேராசிரியர் மார்க் பெஸ்க் உடன் இணைந்து வோக்ஸ்வேகன் காரை டெஸ்ட் ட்ரைவ் செய்துள்ளார். அப்போதே, அந்த சாப்ட்வேரின் குளறுபடியை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வோக்ஸ்வேகன் காரில் இருந்து வெளியாகும் மாசுபாட்டின் அளவு, ஐரோப்பிய தர நிர்ணயத்தை விட 20 மடங்கு அதிகம் என்பதை, அரவிந்த் வெளிப்படுத்தியுள்ளார்.

‘வோக்ஸ்வேகன்’, அதன் டீசல் கார்களில் செய்த, மாசு கட்டுப்பாட்டு முறைகேடுகளைப் பற்றிய தகவல் கடந்த வாரம், அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையான இ.பி.ஏ., மூலம் வெளிவந்தது.

இதில், வோக்ஸ்வேகன் நிறுவனம் உலக அளவில் விற்பனை செய்த ஒரு கோடியே பத்து லட்சம் டீசல் கார்களில், மாசு கட்டுப்பாட்டு அளவை மென்பொருள் மூலமாக குறைத்துக் காட்டி முறைகேடு செய்துள்ளது என, இ.பி.ஏ., குற்றஞ்சாட்டியுள்ளது.

கார் வெளியிடும் புகையில், காரியத்தின் அளவை குறைத்துக் காட்டுவதற்கென, தனி மென்பொருளை வோக்ஸ்வேகன் தமது கார்களில் பொருத்தியுள்ளது. இதனால், மாசு கட்டுப்பாடு சோதனையில், வோக்ஸ்வேகன் கார்கள், வெற்றிகரமாக தேறி, அதற்கான சான்றிதழுடன், விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன.

இந்த டீசல் கார்கள் வெளியிடும் புகையில் ‘கார்சினோஜீனிக், நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் டையாக்ஸைடு’ போன்ற நச்சு வாயுக்கள் உள்ளன. இவை, சிறிய அளவில் காற்றில் கலந்தாலே உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என தற்போது தெரியவந்துள்ளது.

வோக்ஸ்வேகனின் கமர்ஷியல் கார்கள் உட்பட, ஆடி, ஸ்கோடா மற்றும் சீயட் போன்ற கார்களுக்கும் வோக்ஸ்வேகனின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், எந்தெந்த நாடுகளில் எவ்வளவு கார்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன என்கிற விவரம் இன்னும் வெளிவரவில்லை.

இந்நிலையில், வோக்ஸ்வேகன் நிறுவனம் தமது டீசல் கார்களில் செய்த மோசடியால், பாதிக்கப்பட்ட ஒரு கோடியே பத்து லட்சம் கார்களைக் கண்டறிந்து அவற்றின் எஞ்சின்களை மாற்றித் தருவதாக அறிவித்துள்ளது. அந்த கார்களின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு எஞ்சின்கள் சரிசெய்து கொடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

பாதிக்கப்பட்ட கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் மாசுக்கட்டுப்பாட்டு மென்பொருளோ அல்லது சில பாகங்களோ மாற்றி கொடுக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்ட்டின் வின்டர்கான், மாசுக்கட்டுப்பாடு தொடர்பான மென்பொருளில் மோசடி அம்பலம் ஆனதை அடுத்து ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடந்த சில நாட்களாக நடந்துவரும் நிகழ்வுகளால் அதிர்ச்சியடைந்துள்ளேன். எல்லாவற்றுக்கும் மேலாக, இது போன்ற மிகப்பெரிய மோசடி வோக்ஸ்வேகன் குரூப் நிறுனத்தில் சாத்தியமா என்பதை நினைத்து திகைத்துப்போனேன். வோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ஒரு புதிய துவக்கம் தேவை. என்னுடைய ராஜினாமா அந்த புதிய தொடக்கத்திற்கு வழி வகுக்கும்” என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

மாணவியை தற்கொலைக்கு தூண்டிய கல்லூரி பேராசிரியை தலைமறைவு: கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை

கோவை மாவட்டம் செல்வபுரம் கல்லாமேடு பகுதியை சேர்ந்த சிவகுமார் மகள் கலைவாணி (வயது 17). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார்.இவர் நேற்று வீட்டில் விஷ மாத்திரை தின்று மயங்கிக் கிடந்தார். குடும்பத்தினர் கலைவாணியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.

கலைவாணி வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், பேராசிரியை பானு பிரியா வகுப்பறையில் சக மாணவிகள் மத்தியில் வைத்து என்னை அவமானப்படுத்தியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும், எனது சாவுக்கு காரணமான பேராசிரியைக்கு தண்டனை வாங்கி கொடுங்கள் எனவும் கூறியிருந்தார்.துகுறித்து புகாரின் பேரில் பேராசிரியை பானு பிரியா மீது இந்திய தண்டனை சட்டம் 306–வது (தற்கொலைக்கு தூண்டுதல்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே, மாணவியின் தற்கொலைக்கு காரணமான பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை அரசு ஆஸ்பத்திரியில் கலைவாணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேராசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததைத்தொடர்ந்து மாணவியின் உடலைப் பெற்றுக் கொண்டு கலைந்து சென்றனர். மாணவி கலைவாணி தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்ததும் பேராசிரியை பானுபிரியா தலைமறைவாகி விட்டார்.இப்பிரச்சினையில் பேராசிரியை மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.போலீசார் அவரை தேடி வருகின்றனர். மாணவி தற்கொலை செய்து கொண்டதால் கல்லூரிக்கும் 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

காருக்குள் புகைப்பிடிப்பவருக்கு அபராதம் : புதிய சட்டம் நாளை முதல் அமல்

சிகரெட்டை புகைப்பதால், அதை உபயோகிப்பவர் மட்டுமின்றி அப்புகையை சுவாசிப்பவரது உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்தக் காரணத்தினாலேயே பெற்றோரின் புகைப்பழக்கம் குழந்தைகளை பாதிக்கிறது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக இங்கிலாந்தில், காரில் குழந்தை இருக்கும்போது, புகைப்பிடிக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு பிடிபடும் இடத்திலேயே ஐம்பது பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் சுமார் ஐந்தாயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றால் சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு பவுண்ட் (சுமார் இரண்டரை லட்சம் ரூபாய்) வரை அபராதம் கொடுக்க வேண்டிவரும் எனவும் தெரியவந்துள்ளது. நாளை (வியாழக்கிழமை) முதல் இந்தப் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது.

எனினும், இந்தப் பிரச்சனை குற்றமாக கருதப்படாமல் சுற்றுச்சூழலுக்கும், குழந்தைக்கும் பெரியவர்களின் புகைப்பழக்கத்தால் உண்டாகும் பாதிப்பு தொடர்பாக அபராதம் விதிக்கப்படுவதற்கு முன்னர், அறிவுறுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஓட்டுனரல்லாத பயணி இதுபோல குழந்தை இருக்கும்போது புகைப்பிடித்தாலும், அதுவும் சட்டவிரோதமானது என்றும், இதனை அனுமதிக்கும் ஓட்டுனருக்கும் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

 

தமிழக காவல்துறை என்னை சுட்டுக்கொல்ல சதி: தேடப்படும் குற்றவாளி சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு எழுதிய பரபரப்பு கடிதம்

சேலம் மாவட்டம் ஓமலூர் என்ஜினீயரிங் வாலிபர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவர்கள் பலரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் யுவராஜ் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வருமாறு அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்மன் சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள யுவராஜ் குடும்பத்தினரிடம் தரப்பட்டது.

இந்த நிலையில் யுவராஜ் வாக்குமூலம் என்ற பெயரில் 15 பக்க கடிதத்தை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி, மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரெண்டு நாகஜோதி ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த கடிதத்தில் யுவராஜ் கூறி இருப்பதாவது:–

என் மீதும் எனது பேரவையின் ஆட்கள் மற்றும் ஏகப்பட்ட நபர்கள் மீதும் பல்வேறு காவல்நிலையங்களில் பொய்யான வழக்குகளை பதிவு செய்துள்ளனர். பல வழக்குகள் திருச்செங்கோடு, நகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த சட்ட விரோத தொடர் டார்ச்சர்களினாலேயே திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா அவர்கள் மனம் உடைந்து போனார். நேர்மையாக பணியாற்ற வந்த அவர் இவர்கள் செய்த தவறுகளால் பலிகடாவாக மாறி அவமானப்பட போகிறோம் என்ற நிலையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டுவிட்டார். எனவே, அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

கடந்த 23.6.2015 அன்று திருச்செங்கோடு மலைப்பகுதிக்கு சென்றோம். அங்கு ஒரு பெண்ணும், 23 வயது மதிக்கத்தக்க பையனும் சண்டையிட்டபடி இருந்தனர்.

நான் அந்த பையனையும், பெண்ணையும் என் அருகே வருமாறு சைகையை காட்ட இருவரும் எனது அருகே வந்தனர். அப்போது அந்த பெண் தனது பெயரை சுவாதி என்றும், அந்த வாலிபர் கல்லூரியில் படித்த தோழன் என்றும், நட்பாக பழகி வந்த என்னை இன்று கல்லூரியில் உள்ள பழைய பெண்கள், ஆண்கள் இன்று திருச்செங்கோடு மலைக்கு வருகின்றனர். நீ, வா மீண்டும் நாம் ஒன்றாக நண்பர்கள் அனைவரும் சந்திப்பது அரிது எனக்கூறவும் நான் வந்தேன். ஆனால், இங்கு யாரையும் காணோம்,

இவன் என்னை காதலிப்பதாக கூறுகிறான். நண்பர்கள் முன் வந்து காதலை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நிர்பந்தப்படுத்துகிறான் என்று கூறினாள்.

அதற்கு நான், உனது தந்தைக்கு போன் செய்து தெரிவிக்க வேண்டியது தானே என்றேன். பிறகு அந்த பெண்ணிற்கு அறிவுரை கூறி உனது வீட்டுக்கு போகலாம் என்று பேசிக்கொண்டிருந்த வேளையில், எனது சைடில் நின்றுக்கொண்டிருந்த பையன் ஓடி மறைந்து விட்டான்.

பிறகு அந்த பெண்ணை வீட்டில் விட அழைத்தேன். அதற்கு அந்தப்பெண் வீட்டில் ஒருவரும் இல்லை என்றார்.

பிறகு மலையில் வேறு நண்பர்களுடன் பேசிக்கொண்டு உள்ளே இருந்தேன். எனக்கு தெரிந்தது இவ்வளவுதான்.

மறுதினம் சக்கரபாணி ஆய்வாளர் கேட்கும்போது இந்த தகவலை தெரிவித்தேன். பிறகு மதியம் 2.45 மணியளவில் திருச்செங்கோடு காவல் ஆய்வாளர் என்னை மொபைலில் அழைத்து எங்கே இருக்கிறீர்கள் என கேட்க, நான் அலுவலகத்தில் சங்ககிரியில் இருப்பதாக கூறினேன்.

கோகுல்ராஜ் எங்கே என்றார். யார் அது என நான் கேட்க… அந்த சுவாதி பெண்ணிடம் இருந்து எதற்காக போனை பெற்று சென்றீர்கள் என கேட்டார்.

அதற்கு நான் பெற்று சென்றது தவறுதான். ஆனால், அதனை கொடுத்துவிட்டு வரச்சொல்லி அவர்களது வீட்டிற்கு அனுப்பிவிட்டேன் என கூறினேன்.

இல்லை நீங்கள் பிடுங்கி செனறுவிட்டதாக அந்த பெண் கூறுகிறார் என கூறவும். அதிர்த்த நான் உடனே உங்கள் காவல் நிலையத்திற்கு நேரில் வருகிறேன் என்றதும் சரி வாருங்கள் எனக்கூறி இணைப்பை துண்டித்தார்.

சிறிதுநேரத்தில் எனது நண்பர்கள் சங்ககிரியில் உங்களது வீட்டில் திருச்செங்கோடு ஆய்வாளர் சக்கரபாணி தலைமையில் போலீசார் விசாரிப்பதாகவும், என்னை தேடுவதாகவும் எனது தாய், தந்தை, மாமியார், தம்பி, பேரவை ஆட்கள் என சிக்கிய அனைவரையும் பிடித்து செல்வதாகவும் கூறினார்கள்.

ஒரு செல்போனுக்கு ஏன் இவ்வளவு பிரச்சினை செய்கிறார்கள் என சந்தேகம் அடைந்த நான் விசாரிக்கும்போது, அந்த மாணவன் ரெயில்வே ரோட்டில் இறந்து கிடப்பது தெரியவந்தது.

எனது குடும்பத்தாரிடம், நான் கொன்று விட்டதாக கூறவும், பேரதிர்ச்சியடைந்த நான், எங்கோ தவறு நடக்கிறது. என்ன உண்மை என அறிய முயன்றபோது, இந்த இறப்பை வைத்து எனக்கு எதிராக அரசியல் காய் நகர்த்த சிலர் திட்டமிடுவதை அறிந்து, நான் உடனடியாக எனது செல்போனை அணைத்து விட்டு தோட்டத்திற்கு திரும்பி விட்டேன்.

அனைவரையும் பிடித்து சென்று விட்டதால், போனை ஆன் செய்யாமல் தோட்டத்தில் இருந்தேன்.

பின்னர் என்னை முதல் குற்றவாளியாகவும், எனக்கு கீழே அருண்குமார், சதீஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், ஜோதிமணி, சந்திரசேகரன் ஆகிய 9 பேர் மீது அந்த இளைஞனை கடத்தி கொன்றதாகவும், தீண்டாமை வன்கொடுமை சட்டத்திலும் வழக்குப் பதிந்து வழக்கு ஆவணப்படி 6 பேரை 1.7.2015 அன்று கைது செய்தபோது நான் கொலைச்செய்ததாக வாக்குமூலம் அளித்தாகவும் ஆவணங்களில் உள்ளது.

இந்த பொய்யான, போலியான ஆவணங்களையும், மற்ற விவரங்களையும் நேர்மையான அதிகாரியான டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவை பெயரளவுக்கு மட்டும் விசாரணை அதிகாரியாக வைத்து மற்ற அதிகாரிகள் விசாரித்தனர்.

இந்த சட்டவிரோத செயல்பாடுகளே விஷ்ணுபிரியா தற்கொலை செய்ய காரணம் என்பதையும் என்னால் நிரூபிக்க முடியும்.

நான் குற்றவாளி இல்லை என்பதையும் என்னால் நிரூபிக்க இயலும். இதன் உண்மை தன்மையும் புலன் விசாரணை செய்தாலே நான் குற்றவாளி இல்லை என்பதும், டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொள்ள அவரது தலைமையை பயன்படுத்தி போலியாக ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கே எனவும், ஆதாரபூர்வமாக அறிய முடியும்.

என் மீது தொடர்ச்சியாக எண்ணிடலங்காத பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. என்னை சுட்டுக் கொன்றுவிட்டு ஏதோ ஒரு கதையை கட்டமாட்டார்கள் என்பதற்கும், அப்படி எண்ணாமல் இருப்பதற்கு யாரேனும் உத்தரவாதம் தர இயலும் சூழ்நிலை உள்ளதா? நீங்களே எண்ணிப் பாருங்கள்.

காவல்துறை மூலமாக எனக்கு தடை ஏற்படுத்த உள்ள சூழ்நிலையை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு எங்களது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நான் குறிப்பிட்டுள்ளேன் என அந்த கடிதத்தில் யுவராஜ் கூறி உள்ளார்.

முளைப்பாரி ஊர்வலம்

கீழப்பாவூர் ஸ்ரீ முப்பிடாதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்றனர்