Home Blog Page 5994

‘புலி’ படம் வெளியாவதில் சிக்கல் நீடிப்பு : நடிகர் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பேண்டசி திரைப்படம் ‘புலி’. சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி, பிரபு, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.கே.டி.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் இன்று அக்டோபர் 1-ந் தேதி வெளியாவதாக இருந்தது. இதையொட்டி, விஜய் ரசிகர்கள் நேற்று முதலே திரையரங்குகளில் கட்-அவுட்கள் வைப்பது, தோரணங்கள் கட்டுவது என ‘புலி’ படத்தை வரவேற்க தொடங்கினர்.

அதேபோல், விஜய் படம் என்பதால், திரையரங்கு உரிமையாளர்களும் ‘புலி’ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்தனர். இன்று காலை 5 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு டிக்கெட்டுகளும் விநியோகிக்கப்பட்டன.

ஆனால், நேற்று இரவே ஒரு சில காரணங்களால் நிறைய திரையரங்குகளில் ‘புலி’ படத்தின் காலை 5 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, ரசிகர்களுக்கு டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி கொடுத்துள்ளாக கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில திரையரங்குகள் 5 மணி சிறப்பு காட்சிகளை ரத்து செய்யவில்லை.

இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் திரையரங்கில் இன்று காலை 5 மணிக்கு ‘புலி’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்போவதாக அறிந்ததும், ரசிகர்கள் பட்டாளம் அந்த திரையரங்கை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். ஆனால், அந்த திரையரங்கிலும் ‘புலி’ படத்தின் சிறப்பு காட்சி வெளியிடப்படவில்லை. இதனால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

5 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, காலை 8 மணி சிறப்பு காட்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது

எனவே, படம் வெளிவருவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு பகல் 12 மணிக்கு மேல் ‘புலி’ படம் வெளியாகும் என திரையரங்கு வட்டாரங்களில் கூறப்படுகிறது .

 

இந்திய வருமான வரி அலுவலகத்தில் குவிந்த வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கிய கருப்பு ஆடுகள்

வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள், கருப்பு பணம் பற்றிய விவரங்களை தாங்களே முன்வந்து தெரிவிப்பதற்கான 90 நாள் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த அவகாசம் நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவிததது.

கருப்பு பண விவரத்தை தெரிவிப்பதற்காக, டெல்லி வருமான வரி அலுவலக கட்டிடத்தின் 5-வது தளத்தில் பிரத்யேக மையம் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று கடைசி நாள் என்பதால், காலையில் இருந்தே கூட்டம் அலைமோதத் தொடங்கியது.

கருப்பு பணம் பதுக்கியவர்கள் சிலர் நேரில் வந்திருக்க, வேறு சிலர் சார்பில் அவர்களின் ஆடிட்டர்கள் மற்றும் பிரதிநிதிகள் வந்திருந்தனர். ஒவ்வொருவரும் படிவம்-6-ஐ பூர்த்தி செய்து, சமர்ப்பித்தனர். ஒரு நபருக்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆனது. ஆவணங்களை சரிப்படுத்தி வைக்க வருமானவரி அலுவலக ஊழியர் ஒருவர் உதவினார்.

முதலில், டெல்லியைச் சேர்ந்த தந்தை-மகன் வந்திருந்தனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. நீண்ட வரிசையில் நின்று விவரங்களை அளித்தனர். ராஜஸ்தான், கர்நாடகாவில் இருந்தும் வந்திருந்தனர். ஆனால், எவ்வளவு தொகைக்கு கணக்கு பெறப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

சில ஆடிட்டர்கள், படிவத்தில் பூர்த்தி செய்த விவரங்களை படம் எடுத்து, யார் சார்பாக வந்திருந்தார்களோ, அவர்களுக்கு ‘வாட்ஸ்அப்’பில் அனுப்பி வைத்த வினோதமும் நடந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால், நள்ளிரவு வரை மையம் செயல்படும் என்று ஓர் அதிகாரி தெரிவித்தார். நேற்று வரை கருப்பு பண விவரங்களை தெரிவித்தவர்களுக்கு ‘பெமா’ உள்ளிட்ட 5 சட்டங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது .

 

மதுரையில் 2 அரசுப் பேருந்துகளில் நாட்டு குண்டு வெடிப்பு

மதுரை:

மதுரையில் நிறுத்தப்பட்டிருந்த 2 அரசுப் பேருந்துகளில் நாட்டு குண்டு வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒரு பேருந்து சேலத்துக்கும், இன்னொரு பேருந்து ஓசூருக்கும் செல்வதற்காக நின்றிருந்தது. பேருந்தில் அப்போது பயணிகள் யாரும் ஏறியிருக்கவில்லை. இரு பேருந்துகளுமே காலியாக இருந்த நேரத்தில் அதிகாலையில் அடுத்தடுத்து வெடிச் சத்தம் கேட்டது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பேருந்துகளில் யாரும் இல்லாததால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. பேருந்துகளிலும் லேசான சேதமே ஏற்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறிய போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவ், வெடித்தது மிகவும் குறைந்த சக்தி கொண்ட நாட்டு வெடிகுண்டு வகையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இருப்பினும் விசாரணை முடிவில்தான் இதுகுறித்து தெரிய வரும் என்றார்.

இதனிடையே குண்டு வெடித்த இடத்தில் இருந்த சிலர் இது குறித்துக் கூறுகையில், மர்ம நபர்கள் சிலர் வந்து பஸ்களில் நாட்டு வெடிகுண்டுகளை வீசிச் சென்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

மதுரையில் அண்மைக் காலங்களில் ரவுடி கும்பல்களுக்கிடையே மோதல்கள் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட வரிச்சியூர் செல்வம் கும்பல் இன்னொரு பிரபல ரவுடி மீது தாக்குதல் நடத்த நாட்டு வெடிகுண்டுகளை டிபன் பாக்ஸில் போட்டு பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. மதுரையில்  ஓடும் பேருந்தில் இது போன்று டிபன் பாக்ஸ் குண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் வெடிச்சத்தம் கேட்டிருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

15 இடங்களில் வெடிகுண்டு வெடித்தில் உடல் சிதறி 6 பேர் பலி

தபால் குண்டுகள் வெடித்தில் உடல் சிதறி ஆறு பேர் சீனாவில் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

ஷாப்பிங் மால், சிறைச்சாலை, அரசு அலுவலகம், சூப்பர் மார்க்கெட், மருத்துவமனை, போக்குவரத்து நிலையம், காய்கறிச் சந்தை, நோய் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட இடங்களில், இக்குண்டுகள் வெடித்தன.

சீனாவில், 15 இடங்களுக்கு, அனுப்பப்பட்ட தபால்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறியதால், பதற்றம் நிலவியது.இதில், ஆறு பேர் சம்பவ இடங்களில், உடல் சிதறி பலியாயினர்.

மேலும், ஏராளமானோர் காயங்களுடன் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.தபால் குண்டுகள் வெடித்ததால், ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான புகைப்படங்கள், இணையதளங்களில் வெளியாகின.
குண்டுகள் வெடித்த இடங்களில், மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று மகாபரணி புண்ணியகாலம்

மகாளய பட்சத்தில் பரணி நட்சத்திரம் தோன்றும் நாள், மகா பரணி என்றழைக்கப்படும். இந்த பரணி நட்சத்திரம் யம தர்மராஜன் ஆட்சி செய்யும் நட்சத்திரம். எனவே இது சிறப்பு பெறுகிறது. இந்த நாளில் மாலையில் ஸிவ தரிசனம் செய்வது மிகவும் விசேஷம்.   

சுவாமிக்கு பயன்படாவிட்டால் என்ன! எனக்கு பயன்படுமே!

“சுவாமிக்கு பயன்படாவிட்டால் என்ன! எனக்கு பயன்படுமே!”  
 
பக்தர்கள் இவரது உயிர்மூச்சு!  பக்தர்களுக்கு இவர் உயிர்மூச்சு!
 
தன்னை உள்ளார்ந்த பக்தியோடு தரிசிக்க வரும் பக்தர்கள் மீது, காஞ்சி பெரியவர் மிகுந்த கருணை கொள்வார். உதாரணத்துக்கு இரண்டு சம்பவங்கள்…!
 
ஒருநாள் பிரதோஷம்… சென்னையில் இருந்து ஒரு பக்தர் கூடைகள் நிறைய விதவிதமான பூக்களுடன் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். அங்குள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு பெரியவர் பிரதோஷ வேளையில் பூஜை செய்வார். அந்த பூஜைக்கு இந்தப் பூக்கள் பயன்படும் என்பது பக்தரின் ஆசை. ஆனால், மடத்திற்கு வந்ததும் அந்தப் பூக்களை பூஜைக்கு பயன்படுத்த முடியாது என சொல்லி விட்டார்கள். காரணம், பூக்களை நூல் கொண்டு கட்டியிருந்தது தான். நார் கொண்டு கட்டிய பூக்களை மட்டுமே சுவாமி பூஜைக்கு பயன்படுத்துவார்கள்.

 அந்த பக்தர் மிகுந்த வருத்தமடைந்தார். இவ்வளவு சிரமப்பட்டு கொண்டு வந்தும், பூக்கள் பூஜைக்கு பயன்படாமல் போயிற்றே என்று…!

 
பூஜை முடிந்து பெரியவர் வெளியே வந்தார். பூக்கூடைகளைப் பார்த்தார். விஷயத்தை தெரிந்து கொண்டார்.
 
“எவ்வளவோ ஆசையாய் இந்த பூக்களை கொண்டு வந்திருக்கிறார். சுவாமிக்கு பயன்படாவிட்டால் என்ன! எனக்கு பயன்படுமே!”  என்றவர் அமர்ந்தார்.
 
பெரியவருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன. பக்தருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. கிட்டத்தட்ட புஷ்பாங்கி சாத்தியது போல பெரியவர் ஜொலித்தார். கூடியிருந்த எல்லா பக்தர்கள் முகத்திலும் ஆனந்த வெள்ளம்.. 
 
இப்படி ஒரு காட்சியைப் பார்க்க கொடுத்து வைக்க வேண்டுமே!

ஒருவர் மகாபெரியவரை “இவர் திருப்பதி வெங்கடாஜலபதி’ என்றார். இன்னொருவர் “திருச்செந்தூர் முருகன்’ போல் காட்சி தருகிறார் என்றார். மற்றொருவர் இல்லை.இல்லை… இவர் தான் “காஞ்சி காமாட்சி’ என்றார்.  இன்னொருவர் “தட்சிணாமூர்த்தி’ என்றார். ஒவ்வொருவர் பார்வையிலும், அவரவர் இஷ்ட தெய்வமாய் தெரிந்தார் பெரியவர்.

(செப்டம்பர் 29,2015,.தினமலர்)

 
இன்னொரு இனிய சம்பவம்.
 
மீரட்டில் இருந்து ஒரு ராணுவ அதிகாரி பெரியவரை தரிசிக்க வந்தார். சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வந்து சேர்வதற்குள், பெரியவர் பக்தர்களுக்கு காட்சியளித்து விட்டு ஓய்வெடுக்க சென்று விட்ட தகவல் கிடைத்தது. அன்றே மீரட் திரும்ப அவர் டிக்கெட் புக் செய்திருந்ததால், ரயிலின் நேரம் கருதி பெரியவரை தரிசிக்காமலேயே சென்னை வந்து ரயில் ஏறி விட்டார். ரயில் போபாலை அடைந்து விட்டது. 
 
ஒரு இடத்தில் கலவரம் என்பதால் அதற்கு மேல் ரயில் போகாது எனவும், சென்னை திரும்பப் போவதாகவும் அறிவித்து விட்டனர். 
 
அதிகாரி அந்த ரயிலிலேயே சென்னை வந்து விட்டார். காஞ்சிபுரம் சென்றார். பெரியவரின் தரிசனம் கிடைத்தது. மகிழ்ச்சியுடன் மீரட் திரும்பினார்.
 
எந்தச் சூழலிலும் பெரியவர் தன் பக்தர்களை கைவிட்டதே இல்லை. இன்றும் வாழும் தெய்வமாய் அனைவருக்கும் ஆசியளித்துக் கொண்டிருக்கிறார்.

“சுவாமிக்கு பயன்படாவிட்டால் என்ன! எனக்கு பயன்படுமே!” பக்தர்கள் இவரது உயிர்மூச்சு! பக்தர்களுக்கு இவர் உயிர்மூச்சு!

“சுவாமிக்கு பயன்படாவிட்டால் என்ன! எனக்கு பயன்படுமே!”  
 
பக்தர்கள் இவரது உயிர்மூச்சு!  பக்தர்களுக்கு இவர் உயிர்மூச்சு!
 
செப்டம்பர் 29,2015,.தினமலர்
 
தன்னை உள்ளார்ந்த பக்தியோடு தரிசிக்க வரும் பக்தர்கள் மீது, காஞ்சி பெரியவர் மிகுந்த கருணை கொள்வார். உதாரணத்துக்கு இரண்டு சம்பவங்கள்…!
 
ஒருநாள் பிரதோஷம்… சென்னையில் இருந்து ஒரு பக்தர் கூடைகள் நிறைய விதவிதமான பூக்களுடன் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். அங்குள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு பெரியவர் பிரதோஷ வேளையில் பூஜை செய்வார். அந்த பூஜைக்கு இந்தப் பூக்கள் பயன்படும் என்பது பக்தரின் ஆசை. ஆனால், மடத்திற்கு வந்ததும் அந்தப் பூக்களை பூஜைக்கு பயன்படுத்த முடியாது என சொல்லி விட்டார்கள். காரணம், பூக்களை நூல் கொண்டு கட்டியிருந்தது தான். நார் கொண்டு கட்டிய பூக்களை மட்டுமே சுவாமி பூஜைக்கு பயன்படுத்துவார்கள்.

 அந்த பக்தர் மிகுந்த வருத்தமடைந்தார். இவ்வளவு சிரமப்பட்டு கொண்டு வந்தும், பூக்கள் பூஜைக்கு பயன்படாமல் போயிற்றே என்று…!

 
பூஜை முடிந்து பெரியவர் வெளியே வந்தார். பூக்கூடைகளைப் பார்த்தார். விஷயத்தை தெரிந்து கொண்டார்.
 
“எவ்வளவோ ஆசையாய் இந்த பூக்களை கொண்டு வந்திருக்கிறார். சுவாமிக்கு பயன்படாவிட்டால் என்ன! எனக்கு பயன்படுமே!”  என்றவர் அமர்ந்தார்.
 
பெரியவருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன. பக்தருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. கிட்டத்தட்ட புஷ்பாங்கி சாத்தியது போல பெரியவர் ஜொலித்தார். கூடியிருந்த எல்லா பக்தர்கள் முகத்திலும் ஆனந்த வெள்ளம்.. 
 
இப்படி ஒரு காட்சியைப் பார்க்க கொடுத்து வைக்க வேண்டுமே!

ஒருவர் மகாபெரியவரை “இவர் திருப்பதி வெங்கடாஜலபதி’ என்றார். இன்னொருவர் “திருச்செந்தூர் முருகன்’ போல் காட்சி தருகிறார் என்றார். மற்றொருவர் இல்லை.இல்லை… இவர் தான் “காஞ்சி காமாட்சி’ என்றார்.  இன்னொருவர் “தட்சிணாமூர்த்தி’ என்றார். ஒவ்வொருவர் பார்வையிலும், அவரவர் இஷ்ட தெய்வமாய் தெரிந்தார் பெரியவர்.

……………………………………………………………………………………………

 
இன்னொரு இனிய சம்பவம்.
 
மீரட்டில் இருந்து ஒரு ராணுவ அதிகாரி பெரியவரை தரிசிக்க வந்தார். சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வந்து சேர்வதற்குள், பெரியவர் பக்தர்களுக்கு காட்சியளித்து விட்டு ஓய்வெடுக்க சென்று விட்ட தகவல் கிடைத்தது. அன்றே மீரட் திரும்ப அவர் டிக்கெட் புக் செய்திருந்ததால், ரயிலின் நேரம் கருதி பெரியவரை தரிசிக்காமலேயே சென்னை வந்து ரயில் ஏறி விட்டார். ரயில் போபாலை அடைந்து விட்டது. 
 
ஒரு இடத்தில் கலவரம் என்பதால் அதற்கு மேல் ரயில் போகாது எனவும், சென்னை திரும்பப் போவதாகவும் அறிவித்து விட்டனர். 
 
அதிகாரி அந்த ரயிலிலேயே சென்னை வந்து விட்டார். காஞ்சிபுரம் சென்றார். பெரியவரின் தரிசனம் கிடைத்தது. மகிழ்ச்சியுடன் மீரட் திரும்பினார்.
 
எந்தச் சூழலிலும் பெரியவர் தன் பக்தர்களை கைவிட்டதே இல்லை. இன்றும் வாழும் தெய்வமாய் அனைவருக்கும் ஆசியளித்துக் கொண்டிருக்கிறார்.

கார்களின் நிறம் ஏற்படுத்தும் விபத்துக்கள்

 

https%3A 2.bp.blogspot.com OijFMDgkQNI VW ce6jC1bI AAAAAAAAEdw MnXqGogOLEc s400 2392945556 be4b7d19a4 z - 2026

இந்த காரை எந்த நிறத்தில் சேர்ப்பது

கார்களின் நிறத்துக்கும் விபத்துக்கும் சம்பந்தம் உண்டா..? என்றால் உண்டு..!  என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதற்காக 20 வருடங்களாக 8,50,000 விபத்துக்களை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். அதன் முடிவில்தான் இப்படி ஒரு தீர்வை தந்திருக்கிறார்கள். இது விஞ்ஞான முறையில் நிரூபிக்க படாவிட்டாலும் 20 வருட ஆய்வு ரீதியாக உண்மை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

https%3A 4.bp.blogspot.com s3Z6O0T0DNw VW ddIHVQJI AAAAAAAAEd0 uo2V9MlbmII s640 f98ac867bc101fa065fd0273237282554126422520 1354522464 50bc5f60 - 2026

 

 

நமது ஊரில் டிராவல்ஸ் கார்கள் எல்லாமே வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று வெண்மை நிறம் சூரிய ஒளியை கிரகித்துக்கொள்ளாது. திருப்பி அனுப்பிவிடும். இதனால் வெயிலின் தாக்கம் காருக்குள் குறைவாக இருக்கும். ஏ.சி.யின் குளுமை நன்றாக இருக்கும். இதனால் எரிபொருள் செலவு குறையும்.

 

மற்றொன்று நமது சாலைகள் எல்லாமே கருப்பு. அதில் வெள்ளை நிறத்தில் வரும் கார் ‘பளிச்’சென்று எதிரே வரும் வாகன ஓட்டுனருக்கு தெரியும். இதனால் வெண்மைக் கார்கள் பாதுகாப்பானவை. விபத்துக்கள் நடைபெற வாய்ப்பு குறைவு என்கிறது அந்த ஆய்வு. இந்த காரணங்களினால் தான் வாடகைக் கார்கள் பெரும்பாலும் வெள்ளை நிறமாகவே இருக்கிறது.

 

கருப்பு நிறம் உலகம் முழுவதும் விரும்பப்படும் ஒரு வண்ணம். கார்களில்தான் மனிதர்களில் அல்ல. இளைஞர்கள் எப்போதும் கருப்பு நிறக் காரையே விரும்புகிறார்கள். ஆனால், கருப்பு விபத்தை ஏற்படுத்தும் நிறம் என்கிறது ஆய்வு. அவர்கள் ஆராய்ந்த 8 லட்சத்து 50 ஆயிரம் விபத்துக்களில் 47% கருப்பு நிறக் கார்கள். அதனால் இந்த நிறத்தை ‘பாதுகாப்பற்ற நிறம்’ என்கிறார்கள்.

 

https%3A 1.bp.blogspot.com 1mZKwaoDb7M VW e5 5JGJI AAAAAAAAEeA 8oqRKzoFhbU s400 black maserati - 2026

‘பாதுகாப்பற்ற நிறம்’

கருப்பு நிறக் காரில் பயணிக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக  பயணிக்க வேண்டும். சாலையின் நிறமும் கருப்பு என்பதால் எதிரில் வரும் வாகன ஓட்டுனர்களுக்கு தெரியாது. அதிலும் மாலை நேரங்களில் கேட்கவே வேண்டாம். இந்த நேரங்களில்தான் அதிகமாக விபத்துக்கள் ஏற்படுகின்றன என்று ஆய்வு கூறுகிறது. அதனால் கருப்பு, கிரே போன்ற அடர் வண்ணங்களில் கார் வைத்திருப்பவர்கள். லேசாக இருட்டியதுமே ‘பார்க் லாம்ப்’ போட்டுக் கொள்வது பாதுகாப்பு.

 

இந்த ஆய்வு பாதுகாப்பான நிறம் என்று மூன்று வண்ணங்களை சொல்கிறது. வெள்ளை, பொன்னிறம், மஞ்சள் என்பதுதான் அது. இந்த நிறக் கார்கள் வெறும் 3 % தான் விபத்தில் சிக்கியுள்ளதாம். ஆக, புதிதாக கார் வாங்கப் போகும் நண்பர்கள் இதை கவனத்தில் கொள்ளவது நல்லது.

 

மேலும் அந்த ஆய்வு சிவப்பு நிறக் கார்களை விட நீல நிறக் கார்கள் அதிகம் விபத்துக்கு உள்ளாவதாக தெரிவிக்கிறது. அடர் பச்சை நிறத்தில் இருக்கும் கார்களுக்கு இன்னொரு பிரச்னை இருக்கிறது. மேலே பறக்கும் பறவைகள் இவற்றை மரம் என்று நினைத்து வந்து அமர்கின்றன. எச்சம் இடுகின்றன. பறவைகள் அதிகமாக எச்சம் இடுவது இந்த நிறக் காரில்தான்.

 

https%3A 1.bp.blogspot.com 2MNcF13VHQI VW ftAZ1AII AAAAAAAAEeI YfxaakTs3 k s640 yellow porshe carrera colour size 15720 27901 medium - 2026

 

மஞ்சள் நிறத்தில் கார் வைத்திருப்பவர்கள் எப்போதும் கார் கண்ணாடிகளை இறக்கிவிடக் கூடாது என்கிறார்கள். பூந்தோட்டம் என்று நினைத்து தேனீக்களும் வண்டுகளும் பட்டாம்பூச்சிகளும் இந்த கார்களை சூழ்ந்து கொள்கின்றனவாம். கண்ணாடி திறந்திருந்தால் உள்ளே புகுந்து கொட்டிவிடும் என்கிறார்கள்.

 

https%3A 2.bp.blogspot.com 3zLh7yc9SO8 VW glbHLn9I AAAAAAAAEeQ Wxgw4C9N9AM s400 Citroen C3 Car - 2026

 

வெளிர்நீல நிறத்தில் கார்கள் வைத்திருப்பவர்களுக்கு இன்னொரு பிரச்னை உண்டு. பறவையின் கண்களுக்கு இந்த கார் சிறிய நீர்த்தேக்கம் போல் தெரியுமாம். அதனால் பறவைகள் இந்த காரை தேடி வந்து மோதி அடிபட வாய்ப்பு உண்டு.

 

ஆபத்தான நிறம் என்று சொல்லப் படும் கருப்பு நிறக் கார்கள் கூட சில நாடுகளில் பாதுகாப்பானவையாக இருக்கின்றன. எப்போதும் பனி சூழ்ந்து காணப்படும் குளிர் நாடுகளில் கருப்பு நிறம்தான் பாதுகாப்பானது. வெண்மை நிற பனியில் கறுப்புக் கார் பளிச்சென்று தெரியும்.

 

நம்மூரை பொறுத்தவரை வெள்ளை நிற கார்களே பாதுகாப்பானவை. அடர் நிற கார்களைவிட வெள்ளை நிற கார்களில் அழுக்கு குறைவாகவே தெரியும். கீறல் விழுந்தால் கூட பளிச்சென்று தெரியாது. அதனால் நமக்கு ஏற்ற வண்ணம் வெண்மைதான்.

 

 

‘கத்துக்குட்டி’: சீமான் மனம் திறந்த பாராட்டு

நரேன் – சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் வெளிவரும் ‘கத்துக்குட்டி’ படத்தின் பிரத்யேகக் காட்சியை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர் மனைவி கயல்விழி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பார்த்தார். படம் முடிந்ததும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சீமான், ”நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் வயிறு குலுங்க சிரித்த படம் கத்துக்குட்டிதான். மிக ஆழமான சிந்தனையை சிரிக்கச் சிரிக்கச் சொல்லி புதுமையான திரைக்கதையில் விளையாடி இருக்கிறார்கள். குறிப்பாக தம்பி சூரி வரும் ஒவ்வொரு காட்சியும் வயிறு புண்ணாகி விடுகிறது. மிக வித்தியாசமான உடல் மொழியில் விளையாடித் தீர்த்திருக்கிறார் சூரி. படத்தின் பெயர்தான் ‘கத்துக்குட்டி’யே தவிர, எல்லோருக்கும் கத்துக் கொடுக்கும் குட்டியாக தம்பி இரா.சரவணன் படத்தை உருவாக்கி இருக்கிறார். விவசாயப் பின்னணியில் தஞ்சை மாவட்டத்தின் வாழ்வியலை படம் அருமையாகப் பிரதிபலிக்கிறது. படத்தின் ஒவ்வொரு வசனமும் முத்து முத்தாக நெஞ்சை ஈர்க்கிறது. நல்ல கருத்தை சொல்லும் விதமாகச் சொன்னால், கடைக்கோடி ரசிகனுக்கும் அதைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதை இந்தக் கத்துக்குட்டி நிரூபித்திருக்கிறது. ஒவ்வொரு தமிழனும் தனக்கான படமாகப் பெருமிதத்தோடு இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். இந்தப் படத்தின் வெற்றி நமக்காகப் பாடுபடும் ஒவ்வொரு விவசாயிக்குமான வெற்றியாக இருக்கும். எனவே, தமிழர்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாகத் திரண்டு போய் பார்த்து கத்துக்குட்டி படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்!” என்றார். சீமானின் மனைவி கயல்விழி காளிமுத்து, ”படம் பார்த்து நிறைய இடங்களில் சிரித்தேன்; நிறைய இடங்களில் அழுதேன். வழக்கமான படங்களில் ஒன்றாக இல்லாமல் ஒரு கிராமத்து வாழ்வியல் எப்படி இருக்கும் என்பதை அச்சு அசலாகப் படத்தில் கொண்டு வந்திருப்பது பாராட்டத்தக்கது. குறிப்பாக படத்தில் வரும் ஒரு பாட்டி பாத்திரம் மனதைக் கொண்டாட வைத்துவிட்டது. மண் சார்ந்த பதிவை இவ்வளவு நகைச்சுவையாகவும் சுவாரசியமான திருப்பங்களுடனும் சொல்லி இருப்பது சிறப்பு. இறுதிக்கட்ட காட்சியில் என்னையும் மறந்து எழுந்து நின்று கைத்தட்டினேன். இந்த மண்ணுக்காக ஆத்மார்த்தமாக உழைக்கும் அத்தனை உழைப்பாளர்களுக்கும் ராஜ‌மரியாதை செய்திருக்கிறது ‘கத்துக்குட்டி’ படம்.” என்றார் சிலிர்ப்பு குறையாமல்.

பஸ் மீது நாட்டு வெடிகுண்டுவீச்சு

மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சேலம், ஒசூர் செல்லும் பஸ்கள் மீது மர்ம நபர்கள் நாட்டுவெடிகுண்டுகளை வீசிவிட்டு சென்றனர்.

இதில் இரண்டு பஸ்களும் சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்தில் போலீஸ் மதுரை மாநகர கமிஷனர் உள்ளிட்ட காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.