Home Blog Page 5996

வீடில்லாதவர்களை விஷ ஊசி போட்டுக் கொல்ல சொல்லும் பெண் கவுன்சிலர்

வீடில்லாதவர்கள் கொஞ்சம் பைத்தியமாக இருப்பதால் அவர்கள் மீது அன்பு காட்டி அவர்களுக்கு விஷ ஊசி போட்டுவிடலாம், என மெக்சிகோ நாட்டின் ப்யூப்லா மாநிலத்தில் உள்ள டெக்கமாச்சல்கோ நகர கவுன்சிலர் சமீபத்தில், தெரிவித்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இப்பகுதி கவுன்சிலரான ஒல்கா கித்தேரேஸ் மாக்கோரோ என்ற பெண்மணி, ‘வீடில்லாதவர்கள் இல்லாமலிருக்க, ‘நமக்கு தீங்கு விளைவிக்காத வீடிழந்தோருக்கு பரிவு காட்டி அவர்களை விஷ ஊசி போட்டுக் கொல்ல வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

இச்சம்பவம் தொடர்பாக இப்பகுதி நாளிதழில் செய்தி வெளியானது. இதனால் ஏற்பட்ட சர்ச்சையால், அனைத்து தரப்பில் இருந்தும் இவருக்கு எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து தனது பேச்சுக்கு ஒல்கா மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதில், கொடுமை என்னவென்றால், ஒல்கா நலிவடைந்த பிரிவினருக்கான ஆணையத்தின் தலைவராவார்.

இதுபோன்ற சாலையோரம் வசிக்கும் மக்களில் சிலர் மனநல நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டு, அதற்கான சிகிச்சை என்ற பெயரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் முக்கியச் சாலையின் நடுவில் அடிபட்டுச் சாவதற்காக விடப்படுகின்றனர் என்றும் ஒல்கா குற்றம் சாட்டியுள்ளார். பெண் கவுன்சிலர் பேச்சால் தெரிவித்த கருத்தால் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வழக்கறிஞர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தலைமை நீதிபதி முடிவு செய்யும் கூடுதல் அமர்வு விசாரிக்கும் : சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக மதுரை வக்கீல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தலைமை தாங்கிய மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் தர்மராஜ், செயலாளர் ராமசாமி மீது சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது. நீதிபதிகள் தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது,

இந்த விசாரனையின் போது மதுரை வழக்கறிஞர்கள் சார்பாக வழக்கறிஞர் பால்கனகராஜ் ஆஜரானார். அவரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகிய இருவரும் இந்த வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட கூடுதல் அமர்வு விசாரிக்கும் என்று உத்தரவிட்டார். கூடுதல் அமர்வில் பங்குபெறும் நீதிபதிகளின் பெயர்களை தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.உயர் நீதிமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

வாரியாரைப் பற்றி உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்

“”வாரியாரைப் பற்றி உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்,”

(கி.வா.ஜ-வை மடக்கிய பெரியவா)

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பழுதுபட்டிருந்த எட்டு திருமதில்களையும் திருப்பணி செய்தார் வாரியார். அதன் பிறகு, காஞ்சிப் பெரியவருக்கு வாரியார் மீது தனிப்பட்ட கருணை ஏற்பட்டது. அங்கு ராமாயண விரிவுரையும் செய்தார்.

அதன் நிறைவு விழாவன்று, சுவாமி நானூறு ரூபாய் மதிப்புள்ள சாதராவை அனுப்பி ஆசியளித்தார்.

ஒருமுறை பெரியவர் சென்னை சமஸ்கிருத கல்லூரிக்கு வந்தார். வாரியார் அவரைக் காண விரும்பினார். மயிலாப்பூர் மாதவப்பெருமாள் ராஜகோபுரத் திருப்பணிக்காக இருமுறை தொடர் விரிவுரை செய்து உதவியதால், அக்கோயிலின் அறங்காவலர் துரைசாமி ஐயங்கார், வாரியாருக்கு மிகவும் வேண்டப்பட்டவராக இருந்தார். அவரிடம் பெரியவரை எப்போது தரிசிக்க முடியும் என்று அறிந்து வருமாறு ஆள்அனுப்பினார் வாரியார். அவர் போய், மறுநாள் மாலை மூன்று மணிக்கு பெரியவரைத் தரிசிக்க நேரம் கிடைத்துள்ளதாக தகவல் கேட்டு வந்தார்.

மறுநாள் மாலை மூன்று மணிக்குச் சமஸ்கிருத கல்லூரிக்குச் சென்றார் வாரியார். அங்கிருந்த மடத்து காரியஸ்தர்,”” நீங்கள் வந்திருக்கின்றீர்களா என்று பெரியவாள், இரண்டு மூன்று முறை கேட்டுவிட்டார்கள். சீக்கிரமாகப் போங்கள்,” என்றார். வாரியார் விரைந்து சென்றார். அங்கே காஞ்சிபெரியவர் மணல் கேணி (சுவாமிகள் குளிப்பதற்கான கிணறு)அருகே அமர்ந்திருந்தார்.

“”நீங்கள் விழுந்து வணங்கக் கூடாதாம். இது சுவாமிகளின் கட்டளை!” என்று மடத்துக் காரியஸ்தர் வாரியாரிடம் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், வாரியார் பெரியவரைக் கண்டதும், அடியற்ற மரம் போல வீழ்ந்து நமஸ்காரம் செய்தார்.

பெரியவர் வாரியாரிடம்,””நீ மார்பில் சிவலிங்கம் தரித்துக் கொண்டிருக்கிற சைவன். விழுந்து வணங்கினால் சிவலிங்கமும் கீழே விழும். அதனால், விழுந்து வணங்கக்கூடாது என்று சொல்லியிருந்தேனே? அவர்கள் சொல்லவில்லையா?” என்று கேட்டார். வாரியார் ஏதும் பேசாமல் மவுனமாக நின்றார்.

பெரியவர் வாரியாரிடம், “”உன் தம்பி திருமாமணாளன் சவுக்கியமா?” என்று கேட்டார். இதைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தார் வாரியார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் மின்னல் என்னும் ஊரில், வாரியாரின் தம்பி திருமாமணாளன், மாணவர்களுக்கு தேவாரம், திருப்புகழ் கற்பித்துக் கொண்டிருந்தார். அப்போது, பெரியவர் அந்த ஊரில் தங்கியிருந்தார்.

அவருடைய பூஜையில் திருமாமணாளன் தேவாரம், திருப்புகழ் பாடினார். அங்கிருந்தவர்கள், “”இவர் வாரியார் தம்பி திருமாமணாளன்” என்று பெரியவரிடம் அறிமுகம் செய்து வைத்தார்கள். இந்த ஒருமுறை தான் காஞ்சிப்பெரியவர்வாரியாரின் தம்பியைச் சந்திருந்தார். அதன்பிறகு சந்திக்கவே இல்லை. அவரது பெயரும் பத்திரிகையில் வரக்கூடிய அளவுக்கு பிரபலமானது அல்ல. அவரிடம் பழகியவர்கள் கூட “திரு’ என்ற சொல்லை அடைமொழி என்று எண்ணிக் கொண்டு “மாமணவாளன்’ என்று தான் சொல்வார்கள்.

ஆனால், இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் வாரியாரிடம் “”தம்பி திருமாமணாளன் சுகமா?” என்று கேட்ட பெரியவரின் நினைவாற்றலை எண்ணி வியப்படைந்தார்.

இந்த சமயத்தில், கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ. அங்கு வந்தார்.

பெரியவரிடம், “”இவர் வயலூர் முருகன் கோயிலுக்குத் திருப்பணி செய்தார்,” என்று சொல்ல ஆரம்பித்ததுமே, பெரியவர் சிரித்துக் கொண்டே, “”அதெல்லாம் சரி. உங்கள் ஊரில் செய்த திருப்பணியைச் சொல்லவில்லையே?” என்று கேட்டு அவரை மடக்கினார். அவருடைய ஊர் மோகனூர். அங்குஅருணகிரிநாதருக்கு அறச்சாலைத் திருப்பணி செய்திருந்தார் வாரியார்.

அவ்வழியாகச் சென்ற பெரியவர் ஒருமுறை அங்கு தங்கி பூஜை செய்தார். அதைத் தான் அப்படி குறிப்பிட்டு, “”வாரியாரைப் பற்றி உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்,” என்று சொல்லாமல் சொன்னார்

கிரானைட் நரபலி புகார்: பி.ஆர்.பி. நிறுவன ஊழியர்கள் 7 பேருக்கு காவல் துறை சம்மன்

 

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவுபடி சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். அவரிடம் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்த்த சேவற்கொடியோன் என்பவர் ஒரு புகார் கொடுத்தார்.

அதில் பி.ஆர்.பி. நிறுவனத்தினர் மனநலம் பாதித்தவர்களை நரபலி கொடுத்து புதைத்ததாக குறிப்பிட்டு இருந்தார். இதன்பேரில் மேலூரை அடுத்த சின்னமலம்பட்டி மணிமுத்தாறு ஓடை இடு காட்டு பகுதியில் தோண்டி பார்க்க சகாயம் உத்தர விட்டார்.

அதன்படி தோண்டப்பட்ட குழியில் இருந்து 8 எலும்புக் கூடுகள் மற்றும் மண்டை ஓடுகள் மீட்கப்பட்டன. அவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நரபலி புகாரின் அடிப்படையில் பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பழனிச்சாமி, ஊழியர்கள் அய்யப்பன், ஜோதிபாசு, பரமசிவன் ஆகியோருக்கு கீழவளவு போலீசார் சம்மன் அனுப்பினர். அவர்கள் கடந்த 15, 16 மற்றும் 17–ந்தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகினர்.

இதற்கிடையில் நரபலி புகார் கூறிய சேவற்கொடியோனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவர் 22–ந்தேதி போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அவர் கூறிய தகவலின் அடிப்படையில் பி.ஆர்.பி. நிறுவனங்களில் வேலை பார்த்த லோகேஷ், முருகேசன், ராஜா, தனபால், ஹனுமந்தன், பழனிவேல், முருகானந்தம் அகிய 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் மங்களேசுவரன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் அனுப்பியுள்ள இந்த சம்மனில் நவம்பர் 22–ந்தேதி ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர்களை திரட்டுவேன் : வைகோ

  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:–

ஐ.நா. சபையில் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றம் குறித்து கொண்டு வரப்படும் தீர்மானம், தமிழர்களுக்கு எதிரானதாகவே அமையும்.

இந்த தீர்மானத்துக்கு ரஷ்யா, அமெரிக்கா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நாடுகள் ஒன்றுக்குகொன்று முரண்பாடான கொள்கைகளை கொண்டதாகும். இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இந்த நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்பட்டு வருகிறது.

இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் நீதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. நீதி குலைக்கப்பட்டு உள்ளது. இதை வெளியே கொண்டு வர தமிழர்கள் முன் வர வேண்டும்.

பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு தனது தவறுகளை மறைக்கவே இலங்கைக்கு உதவி செய்து வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியின் போது இலங்கைக்கு ஆயுத உதவிகளும், தளவாட பொருட்களும் வழங்கப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க.வும், பா.ம.க. நிறுவனர் ராமதாசும் வாய் திறக்கவில்லை. ஆனால் இப்போது மட்டும் இலங்கை பிரச்சினையில் அறிக்கை விட்டு வருகிறார்கள்.

அப்போதே தி.மு.க. உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்திருப்போம். இதனால் இலங்கை தமிழர்களுக்கு எதிரான போர் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கும்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த 10 லட்சம் இளைஞர்களை திரட்ட உள்ளேன்.

திருவாரூரில் வருகிற 5–ந் தேதி மக்கள் நலன் நாடும் கூட்டணியின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் இடம் பெறுகின்றன.

இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது என வைகோ செய்தியாளர்களிடம் கூறினார்.

 

இந்திய உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக இன்று வழக்கு விசாரணை ராட்சஷ திரை மூலம் நேரடி ஒளிபரப்பு

 

தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக மதுரை வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தலைமை தாங்கிய மதுரை வக்கீல் சங்கத்தின் தலைவர் தர்மராஜ், செயலாளர் ராமசாமி மீது சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக மதுரை வக்கீல்கள் போராட்டம் நடத்தினார்கள்.

மேலும், சென்னை உயர் நீதிமன்றதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வரும்போது, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்கள் பிரச்சினை செய்யலாம் என்று தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த முறையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கப்படும் நீதிமன்ற அறைக்குள், வழக்கு தொடர்பானவர்களை தவிர வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பொன்.கலையரசனுக்கு, நீதிபதிகள் தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் உத்தரவிட்டார்கள்.

இதையடுத்து, வழக்கு விசாரணை நடந்த நீதிமன்ற அறையை சுற்றி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வழக்கில் தொடர்பில்லாத வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களும் நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கவில்லை.

ஆனால், உளவுப்பிரிவு போலீசாரை மட்டும் நீதிமன்ற அறைக்குள், பாதுகாப்பில் நின்ற போலீசார் அனுமதித்தார்கள். இதையடுத்து கோர்ட்டு அறைக்குள் அனுமதிக்காத வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த நிலையில், வழக்கறிஞர்கள் அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் தமிழ்வாணன், செல்வம் ஆகியோர் முன்பு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.

நீதிபதிகளின் உத்தரவின் படி, இந்த முறையும் வழக்கு விசாரிக்கப்படும் நீதிமன்ற அறைக்குள், வழக்கில் தொடர்பு உள்ளவர்களை தவிர வேறு யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று உயர் நீதிமன்ற நிர்வாகம் கூறியுள்ளது. அதேநேரம், நீதிமன்ற அறைக்குள் என்ன நடக்கிறது? என்பதை வெளியில் இருந்து பார்க்க ராட்சஷ திரைகள் அமைத்து, நேரடி ஒளிப்பரப்பு செய்யவும் நீதிமன்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற1862ம் ஆண்டு கட்டப்பட்டது. இதுநாள் வரை, வழக்கு விசாரணையை ராட்சஷ திரை அமைத்து, நேரடி ஒளிபரப்பியது கிடையாது. ஐகோர்ட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக இன்று பிற்பகலில் வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மேலும், இந்த வழக்கு விசாரணையை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விதி எண் 110-ன் கீழ் 181 அறிவிப்புகள் செய்து முதல்வர் கின்னஸ் சாதனை: அவைத்தலைவர் பெருமிதம்

சென்னை:

தமிழக சட்டப் பேரவையில் விதி எண் 110 இன் படி 181 அறிவிப்புகளை வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்திருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சபாநாயகர் தனபால் பாராட்டு தெரிவித்துள்ளார்.  

தமிழக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை அன்று நிறைவுரையாற்றிய சபாநாயகர் தனபால் பேசியது:

பதினான்காவது சட்டமன்றப் பேரவையின் பத்தாவது கூட்டத் தொடரின் முதல்கூட்டம் 17-2-2015 அன்று தொடங்கி 23-2-2015 வரையும், இரண்டாவது கூட்டம்25-3-2015 அன்று தொடங்கி 1-4-2015 வரையும், மூன்றாவது கூட்டம்24-8-2015 அன்று தொடங்கி இன்று (29-9-2015) வரையும் நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தொடர்களின்போது பேரவை நிறைவேற்றிய அலுவல்கள் பின்வருமாறு:பேரவை கூடிய மொத்த நாட்கள் – 29 (ஆளுநர் உரையாற்றிய நாள் உட்பட)அவைக் கூட்டம் நடைபெற்ற மொத்த நேரம் – 157 மணி21 நிமிடங்கள்(3-00 மணி வரை)17-2-2015 அன்று ஆளுநர் பேரவையில் உரையாற்றினார்கள்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது விவாதம் மற்றும் பதிலுரை நடைபெற்ற மொத்த நாட்கள் – 4
உரையாற்றிய உறுப்பினர்கள் – 26 பேர்
உரையாற்றிய நேரம் – 10 மணி 40 நிமிடங்கள்
அதில் ஆளுங்கட்சியினர் – 7 பேர் பேசிய நேரம் – 2 மணி 15 நிமிடங்கள்
இதர கட்சியினர் – 19 பேர் பேசிய நேரம் – 8 மணி 25 நிமிடம்
இதர கட்சியினருக்குக் கூடுதலாக 6 மணி 10 நிமிட நேரம் பேசுவதற்குவாய்ப்பு கொடுக்கப்பட்டது.
பதிலுரை நேரம் – 1 மணி 15 நிமிடம் நிதி அலுவல்கள்-2015-2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையை 25-3-2015 அன்றுநிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பேரவைக்கு அளித்தார்கள்.
வரவு-செலவுத் திட்டத்தின்மீது பொது விவாதம் மற்றும் பதிலுரை நடைபெற்ற நாட்கள் – 4
பங்கேற்ற உறுப்பினர்கள் – 25
உரையாற்றிய நேரம் – 10 மணி 12 நிமிடங்கள்
அதில் ஆளுங்கட்சியினர் – 9 பேர்பேசிய நேரம் – 1 மணி 53 நிமிடங்கள்
இதர கட்சியினர் – 16 பேர்பேசிய நேரம் – 8 மணி 19 நிமிடங்கள்
இதர கட்சியினருக்குக் கூடுதலாக 6 மணி 26 நிமிட நேரம் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலளித்த நேரம் – 1 மணி 38 நிமிடங்கள்மானியக் கோரிக்கைகள்மீது விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற்ற மொத்த நாட்கள் – 1854 மானியக் கோரிக்கைகளும் விவாதித்து நிறைவேற்றப்பட்டுள்ளன.உரையாற்றிய உறுப்பினர்கள் – 121
உரையாற்றிய நேரம் – 43 மணி 55 நிமிடங்கள்
அதில் ஆளுங்கட்சியினர் – 35 பேர்பேசிய நேரம் – 9 மணி 12 நிமிடங்கள்
இதர கட்சியினர் – 86 பேர் பேசிய நேரம் – 34 மணி 43 நிமிடங்கள் இதர கட்சியினருக்குக் கூடுதலாக 25 மணி 31 நிமிட நேரம் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

முதலமைச்சர் ஜெயலலிதா தனது பொறுப்பில் உள்ள துறைகள் சம்பந்தமாகபதிலளித்த நேரம் – 58 நிமிடங்கள்இதர அமைச்சர்கள் பதிலுரையாற்றியமொத்த நேரம் – 25 மணி 40 நிமிடம் வினாக்கள்-விடைகள்:12-8-2014 முதல் 28-9-2015 வரைஉறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்டுஆய்வு செய்யப்பட்ட மொத்த வினாக்கள் – 10386அளித்த உறுப்பினர்கள் எண்ணிக்கை – 67அனுமதிக்கப்பெற்றவை – 10386பத்தாவது கூட்டத் தொடரின்போதுஅவையில் விடையளிக்கப்பட்டவை – 335 மொத்த துணை வினாக்கள் – 640
அவையில் அதிக அளவு வினாக்களுக்கு விடையளித்த அமைச்சர்களில் முதல் ஐந்துநெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மின்சாரம், மதுவிலக்கு மற்றும்ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தங்கமணி சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் பா.வளர்மதி கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் உணவு, இந்து சமய மற்றும்அறநிலையங்கள் துறை அமைச்சர் காமராஜ்வினாக்கள்-விடைகள் எடுத்துக்கொள்ளப்பெற்றமொத்த நாட்கள் – 2வினாக்கள்-விடைகள் நேரம் நீட்டிக்கப்பட்ட நாட்கள் – 23நீட்டிக்கப்பட்ட மொத்த நேரம் – 6 மணி 24 நிமிடங்கள்

இன்றையதினம், வினாக்கள்-விடைகள் நேரத்தின்போது உறுப்பினர் .கொ.எ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் துணை வினா கேட்கையில், நீண்ட உரையாற்றியபோது,துணைக் கேள்வியை சுருக்கமாகக் கேட்க வேண்டுமென்று நான் அறிவுறுத்தினேன். உடனே முதலமைச்சர் ஜெயலலிதா “உறுப்பினர் ஒரு பேச்சாளர், அவருக்குசுருக்கமாகப் பேச வராது” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்கள். ஒவ்வொருஉறுப்பினரின் நடவடிக்கையையும் அம்மா கூர்ந்து கவனித்துவருவதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு. சிறப்புக் கவன ஈர்ப்பு-அவசரத் தன்மை வாய்ந்த மிக முக்கியமானபொருட்கள் குறித்த சிறப்புக் கவன ஈர்ப்பு என்ற வகையில் அவையில் எடுத்துக்கொள்ளப்பெற்றவை – 3 உரையாற்றிய உறுப்பினர்கள் – 12(அனைவரும் எதிர்க்கட்சியினர் சிறப்புக் கவன ஈர்ப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு மொத்த நேரம் – 1 மணி 24 நிமிடங்கள்தகவல் கோரல்-தகவல் கோரல் என்ற முறையில் அவ்வப்போதுமுக்கியப் பிரச்சினைகள் அவையில் எழுப்பஅனுமதிக்கப்பட்ட நேர்வுகள் – உரையாற்றிய உறுப்பினர்கள் – 13(அனைவரும் எதிர்க்கட்சியினர்)எடுத்துக்கொள்ளப்பட்ட மொத்த நேரம் – 34 நிமிடங்கள்கவன ஈர்ப்புகள்- உறுப்பினர்களிடமிருந்து வரப்பெற்றவை – 940கவன ஈர்ப்பாக அனுமதிக்கப்பெற்றவை – 499அவையில் விளக்கம் அளிக்கப்பெற்றவை – 15சிறப்பு கவன ஈர்ப்பாக எடுத்துக்கொள்ளப்பெற்ற்வை – உரிமை மீறல் குறித்த பிரச்சினைகள்-அவையில் எழுப்பப்பெற்றவை – உரிமைக் குழுவிற்கு அனுப்பப்பெற்றவை – 2குழு அவைக்கு அளித்துள்ள அறிக்கை – 1

அரசினர் சட்டமுன்வடிவுகள்-வரப்பெற்றவை – 22 நிறைவேற்றப்பெற்றவை – 22அரசினர் தனித் தீர்மானம்-வரப்பெற்றவை – 3நிறைவேற்றப்பெற்றவை – கர்நாடக அரசு மேகதாதுவில் இரண்டு புதிய அணைகள் கட்ட முயற்சிப்பதுதொடர்பாக 5-12-2014 அன்று பேரவை ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின்மீதுமத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளாததற்கும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு திட்டஅறிக்கை தயாரிக்க 25 கோடி ரூபாயை கர்நாடக அரசு ஒதுக்கியுள்ளதற்கும் பேரவைவருத்தத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்வதோடு, தமிழ்நாடுமுதலமைச்சர் ஜெயலலிதா பிரதமரை சந்தித்தும், கடிதம் அனுப்பியும்,உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தும் தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல்காவேரியில் எந்தத் திட்டத்தையும் கர்நாடக அரசு செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக எடுத்து வரும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தும், மேகதாதுவில்அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பதை தடுத்து நிறுத்தவும், அதனைசெயல்படுத்துவதற்கான திட்டங்களை கர்நாடக அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது என்றுமத்திய அரசு அறிவிப்பை வழங்கவேண்டும் எனவும், காவேரி மேலாண்மை வாரியம் மற்றும்காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்கவேண்டுமெனவும் மீண்டும் வலியுறுத்தும் தீர்மானம் 27-3-2015 அன்று பேரவையில்ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றபோது போர்க் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை நடத்தியவர்கள் அனைவர்மீதும் சர்வதேச விசாரணை நடத்தும் வகையிலானவலுவான தீர்மானத்தினை இந்தியாவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுமுன்பு அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளுடன் இணைந்து கொண்டுவர வேண்டுமென்றும்,அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்தால் அதனை மாற்ற ராஜதந்திரரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இந்தியப் பேரரசை கேட்டுக்கொள்ளும்தீர்மானம் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் தீர்மானம் வழங்கி 16-9-2015 அன்று முன்மொழியப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.சென்னையில் இம்மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் உலகமேவியக்கும்வண்ணம் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டினை நடத்தி, சாதனை புரிந்து, ஒருஇலட்சம் கோடி ரூபாய் இலக்கையும் மிஞ்சி தமிழகத்திற்கு 2 இலட்சத்து 42 ஆயிரத்து 160கோடி ரூபாய் முதலீட்டினை ஈர்த்து, 4 இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்து, தமிழகத்தில் தொழிற்புரட்சிமூலம்தமிழர்களின் வாழ்விலும், இந்தியப் பொருளாதாரத்திலும் மிகப் பெரிய மாற்றத்தை,மறுமலர்ச்சியை, ஏற்றத்தை ஏற்படுத்த வழிவகுத்த முதலமைச்சருக்கு பேரவை நன்றியையும்பாராட்டினையும் தெரிவித்து, இது போன்ற சாதனைகள் தொடர வேண்டும் என்று மனதாரவாழ்த்துகின்ற தனித் தீர்மானம் 23-9-2015 அன்று நிறைவேற்றப்பட்டது.

விதி 110-ன்கீழ் முதலமைச்சரின் அறிக்கைகள்-விதி 110-ன்கீழ் தமிழக மக்கள் அனைவரின் வாழ்க்கையைத் தொடும் அனைத்துஅம்சங்கள் குறித்தும் முதலமைச்சர் அம்மா கடந்த நான்குஆண்டுகளாக பேரவை நடக்கும்போதெல்லாம் தினந்தோறும் பல்வேறு வரலாற்றுச்சிறப்புமிக்க அறிவிப்புகளை செய்து வந்துள்ளதோடு அதற்கான நிதியையும் உடனுக்குடன்ஒதுக்கி திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்துள்ளார்கள். அவ்வகையில் கடந்த ஆண்டு வரை அனைத்து அரசுத் துறைகள் சம்பந்தமாககீர்த்திவாய்ந்த 150 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்தஆண்டு மீண்டும் அந்த சரித்திரச் சாதனையை தொடரும் வண்ணம் இக்கூட்டத்தொடரில்மேலும் 31 அறிவிப்புகளை செய்துள்ளார்கள். ஆக, வரலாற்றிலேயே இல்லாதஅளவிற்கு இந்த பதினான்காவது பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா மாநில மக்களின் நலன் பேμம் திட்டங்கள் பற்றியும், அவற்றிற்கான நிதி ஒதுக்கீடு பற்றியுமபேரவை விதி 110-ன்கீழ் மொத்தம் 181 அறிக்கைகளை அளித்து கின்னஸ் சாதனைபடைத்துள்ளார்கள் என்பதை மெத்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.உறுப்பினர்கள் வருகை-

17-2-2015 முதல் 29-9-2015 வரை பேரவைக் கூட்டம்நடைபெற்ற அனைத்து நாட்களும் பேரவைக்கு வருகை புரிந்தஉறுப்பினர்கள் பட்டியல்-எம்.கே. அசோக்ஆ.க. அரங்கநாதன்க. அழகுவேலு. கே.பி. அன்பழகன். வி.சி. ஆறுக்குட்டி. கடம்பூர் ராஜு. வி.பி. கலைராஜன். என்.வி. காமராஜ் உள்ளிட்ட 87 உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். பார்வையாளர்களாக16 ஆயிரத்து 526 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடலுறவு சாதனைக்காக ஆண்களைத் தேடும் இளம் பெண்

 

https%3A 3.bp.blogspot.com SbYOf6i1Z1A VYW6qg76a9I AAAAAAAAEoE by88Gp LxL8 s640 nikki lee - 2026

நிக்கி லீ

து ஒரு ‘அல்ஸ் ஒன்லி’ பதிவுதான். அதை முதலிலே சொல்லிவிடுகிறேன்.  இப்படி ஒரு பதிவு தேவையா என்றுகூட பலர் நினைக்கலாம். ஆனால், நான் அடிக்கடி சொல்வதுதான், நாம் வாழும் உலகில் நம்மோடு சேர்ந்தே ஒரு வித்தியாசமான உலகம் இயங்கி வருகிறது. அதை பலருக்கும் தெரிவிப்பதுதான் இதன் நோக்கம். செக்ஸ் என்பதற்காக அதை ஒதுக்கிவிட முடியாது. இந்தக் கட்டுரையை நான் 2010-ல் எழுதினேன். இப்போது இந்த எண்ணிக்கை மாறியிருக்காலாம்…!

 

இனி சாதனைப் பெண் பற்றி..

 

சாதிப்பது என்று முடிவு செய்துவிட்டால், அது எப்படிப் பட்ட சாதனையாக இருந்தாலும் பரவாயில்லை! என்று சிலர் துணிந்து விடுகிறார்கள். இப்படிதான் 25 வயதான ஒரு இளம் பெண் சாதனைக் களத்தில் குதித்திருக்கிறார். இவர் சாதிக்கப் போவது உடலுறவில்…!

 

அழகுக் கலை நிபுணர், மாடல் என்று இரண்டு விதமான தொழிலை செய்யும் இந்த இங்கிலாந்து பெண்ணுக்கு தனது 16-வது வயதில் முதல் அனுபவம் ஏற்பட்டது. இல்லை, திணிக்கப் பட்டது. ஆம், அந்த வயதில் அவள் ஒரு ஆணால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள்.

 

பொதுவாக கொடூரமான சம்பவங்கள் நடக்கும் போது அதை மறக்கவே முயற்சிப்பார்கள். அதை ஒரு கசப்பான உணர்வாக வெறுத்து ஒதுக்குவார்கள். 

 

ஆனால், நிக்கி லீ வித்தியாசமானவள். தனக்கு ஏற்பட்டது பலாத்காரம் என்றாலும் கூட ‘அது’ அவளுக்கு பிடித்துவிட்டது. கற்பழிப்பில் கூட இப்படி ஓர் இனிமையா என்று அவள் மனம் மீண்டும் மீண்டும் அதையே நினைத்தது. திரும்பத் திரும்ப ‘அது’ நடக்க வேண்டும் உள்ளுணர்வு பரபரத்தது.

 

https%3A 1.bp.blogspot.com Pkk6lX3GzTg VYW6q3l7hHI AAAAAAAAEoM fdVRVG3CaZw s400 Nikki - 2026

மாடலாக நிக்கி லீ

அதற்காக அவள் ஆண்களை தேட ஆரம்பித்தாள். ஆண்களை கவர்வது அவளுக்கொன்றும் சிரமமாக இல்லை. அவளிடம் அழகு நிறைந்திருந்தது. எடுப்பான இளமை இருந்தது. வாளிப்பான உடல் இருந்தது. இது எல்லாமே ஒரு ஆணை, பெண்ணிடம் மயக்கங்கொள்ள வைக்க போதுமானது.

 

கிறங்க வைக்கும் அம்சங்களைக் கொண்ட நிக்கி லீ, ஆணுடன் கூடுவதற்கு தனியான அறையையோ, வீட்டையோ தேர்ந்தெடுக்கவில்லை. பால்கனி, கடற்கரை, தெருவோரம், கிளப், சினிமா தியேட்டர், டிஸ்கோ ஆடும் இடங்கள் போன்றவைதான் அவள் ஆண்களுடன் கூடும் இடங்கள். தினமும் புதிது புதிதாக ஆண்களுடன் உறவு கொள்ளவில்லை என்றால் நிக்கி லீ கண்களில் உறக்கம் வராது. 

 

நிக்கி லீ தான் உறவு கொள்ளும் ஆண்களின் விவரங்களை தனியாக ஒரு டைரியில் எழுதி வந்தாள். ஒவ்வொரு ஆணுக்கும் அவன் கொடுத்த சுகத்துக்கு இத்தனை மார்க் என்று மதிப்பெண்கள் வேறு கொடுத்திருக்கிறாள். முழு திருப்தி அளித்த ஆணுக்கு ஸ்பெஷல் மதிப்பெண்களும் உண்டு.

 

இப்படியே இந்த பட்டியல் நீண்டு கொண்டே போனது. தனது 18-வது வயதில் 800 ஆண்களை உறவு கொண்டிருந்தாள். அப்போதுதான் இதையே சாதனையாக்கினால் என்ன என்று தோன்றியது. 

 

அதற்காக திட்டம் போட்டாள். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்கள் என்று கணக்கு வைத்துக் கொண்டாள். ஒரே இரவில் நான்கு ஆண்கள் என்ற சாதனை அளவும் நிக்கி லீயிடம் உண்டு. 

 

தனது 21-வது வயதில் 2,289 ஆண்களுடன் உறவு கொண்டிருந்தாள். இதில் ஒரே ஆண் மீண்டும் வராமல் பார்த்துக்கொண்டாள். தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரே ஆணிடம் இரண்டு முறை உறவு கொண்டதை ‘துன்ப நிகழ்வு’ என்று வேதனையோடு தெரிவிக்கிறாள். தனது 25-வது வயதில் 5,000 ஆண்களை நிறைவு செய்திருந்தாள். கிட்டத்தட்ட 9 வருடங்களில் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறாள். 

 

சரி, நிக்கி லீயால் இப்படியே சென்று உலக சாதனை செய்துவிட முடியுமா.. ? என்றால் முடியாது என்பதுதான் உண்மை. ஏனென்றால், நிக்கி லீயை விட முன்னோடியான பெண்கள் ஏற்கனவே இந்த சாதனைப்  பட்டியலில் இருக்கிறார்கள். 

 

பேரரசர் அகஸ்டஸின் மகள் ஜூலியா தான் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள பெண். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இவரின் சாதனையை எந்த பெண்ணாலும் நெருங்கக்கூட முடியவில்லை. கி.மு.14-ல் வாழ்ந்த இவருக்கு அழகு, அறிவு, படிப்பு என்று எல்லாமே அளவுக்கு மீறி இருந்தது. இது எல்லாவற்றையும் விட ஆணாசையும் மிக மிக அதிகமாக இருந்தது.

 

https%3A 1.bp.blogspot.com - 2026

ஜூலியோ அகஸ்டஸ்

வயதுக்கு வருவதற்கு முன்பிருந்தே ஆண்களை அனுபவிக்க தொடங்கிவிட்டார். ஒன்று இரண்டாக ஆரம்பித்த ஆண்களின் எண்ணிக்கை கொஞ்ச நாட்களிலேயே ஆயிரத்தை தொட்டுவிட்டது. ஒரு கட்டத்தில் இளவரசியோடு இரவைக் கழிக்காத இளைஞனே ரோம் நகரில் இல்லை என்ற நிலை வந்தது. 

 

பின் தன் தோழிகளோடு வெளிநாட்டு வியாபாரிகள் கூடும் இடங்களுக்கு சென்றார். உடலை அப்பட்டமாக வெளியே காட்டும் மெல்லிய உடைகளைப் போட்டுக் கொண்டு வீதியில் அலைந்தார். 

 

எதாவது ஒரு புது ஆண் கண்ணில் பட்டுவிட்டால் போதும் அவனை இழுத்துக் கொண்டு ஆளில்லாத இடத்தில் ஒதுங்கி விடுவார். இவர் அப்படி உறவு கொண்ட ஆண்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கும் மேல். 

 

இளவரசியின் இந்த ஆண்கள் வேட்டை செயலை தாங்க முடியாத மன்னர், மானம் போகிறது என்று ஆள் நடமாட்டமே இல்லாத பான்டதீரியா தீவுக்கு அவரை நாடு கடத்தி விட்டார். இல்லாவிட்டால் கணக்கு லட்சத்தை கடந்திருக்கும். 

 

இரண்டாவது இடத்தில் வருபவர் பிரெஞ்ச் நடிகை மெல்லி துபோஸ். இவரும் தான் உறவு கொண்ட எல்லா ஆண்களின் விவரங்களையும் டைரியில் எழுதி வைத்துள்ளார். இவர் சந்தித்த ஆண்கள் 16,527. இந்த இரண்டாவது இடத்தை வேண்டுமானால் நிக்கி லீ அடைய முடியும். முதலிடத்திற்கு இன்னும் நிறைய தூரம் போக வேண்டும். 

 

“நிக்கி லீ ஒரு செக்ஸ் அடிமை. அவள் தன்னையே பாழாக்கிக் கொள்கிறாள்.” என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். இதை நிக்கி லீ ஏற்கவில்லை. “எனது நடவடிக்கையால் நான் யாரையும் புண்படுத்தவில்லை. நான் செக்ஸியான பெண். அதனால் தான் என்னால் இந்த சாதனையை படைக்க முடிகிறது. ஆணுறை இல்லாத உறவை நான் அனுமதிப்பதில்லை. கருத்தடை மாத்திரையும் நான் எடுத்துக் கொள்கிறேன். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை அருகில் உள்ள மருத்துவமனையில் சென்று பரிசோதித்துக் கொள்கிறேன். இந்த உடலுறவால் எனக்கு பாதிப்பில்லை. பதிலாக நான் சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு அது தேவையாக இருக்கிறது.” ஆனாலும் அளவுக்கு மீறினால் எல்லாமே கெடுதல்தான்.

 

இது பெண்களுக்கான காலம். இன்னும் பெண்கள் எதிலெதில் சாதிக்கப் போகிறார்களோ..! தெரியவில்லை..!    

மும்பை ரயில் குண்டுவெடிப்பு: 5 பேருக்கு மரண தண்டனை

மும்பை:

கடந்த  2006ஆம் ஆண்டு, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிகழ்ந்த ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
கடந்த 2006ம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட இந்தத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என 12 பேர் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டனர். அவர்களில் முக்கியக் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிண்டே இன்று இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

கமல் அன்சாரி, பைசல் ஷேக், எஹ்தே ஷாம் சித்திக்கி, நவீது கான், ஆசிப் பஷீர் கான் ஆகிய ஐவருக்கும் கொலை செய்த குற்றத்துக்காக இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழும், தீவிரவாத தாக்குதல் நடத்தியதற்காக யு.ஏ.பி.ஏ சட்டப்பிரிவு 16-ன் கீழும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கமல் அகமது அன்சாரி (37), தன்வீர் அகமது அன்சாரி (37), முகமது பைசல் ஷேக் (36), எஹ்தே ஷாம் சித்திகி (30), முகமது மஜித் ஷபி (32), ஷேக் ஆலம் ஷேக் (41), முகமது சாஜித் அன்சாரி (34), முஸம்மில் ஷேக் (27), சொஹைல் மெஹ்மூத் ஷேக் (43), ஜமீர் அகமது ஷேக் (36), நவீத் ஹுசைன் கான் (30), ஆசிப் கான் (38) ஆகிய 12 பேரும் முன்னர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருந்தது.  குற்றவாளிகள் அனைவரும் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தினருடன் (இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்) தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, மும்பையில் 2006ஆம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி புறநகர் ரயில்களில் ஆர்டிஎக்ஸ் ரக குண்டுகள் வெடித்ததில் 188 பேர் உயிரிழந்தனர்; 829 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. இந்த வழக்கில், விசாரணை நிறைவடைந்து வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் 12 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி யதின் டி. ஷிண்டே அறிவித்தார்.

இந்நிலையில், அவர்களுக்கு விதிக்கப்படவுள்ள தண்டனை மீதான வாதம் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. நீதிபதி முன் தனித்தனியே ஆஜரான குற்றவாளிகள், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். தங்களது குடும்பச் சூழ்நிலைகளையும், ஏற்கெனவே சிறையில் கழித்த காலங்களையும் கருத்தில் கொண்டு, தண்டனையைக் குறைத்து வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, குற்றவாளிகளின் வழக்குரைஞர்கள் தரப்பு வாதங்களும், அரசுத் தரப்பு வாதங்களும் அதற்கு அடுத்தடுத்த நாள்களில் நடைபெற்றன. குற்றவாளிகளில் 8 பேருக்கு மரண தண்டனையும், மீதமுள்ளவர்களுக்கு ஆயுள் சிறையும் விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், தண்டனை மீதான உத்தரவை செப்.30-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி ஷிண்டே கடந்த வாரம் தெரிவித்தார். அதன்படிதண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.

நெல்லை அருகே கார் கவிழ்ந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு

நெல்லை:

நெல்லை அருகே நான்கு வழிச் சாலையில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் இருவர் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.

நெல்லை நாங்குநேரி வாகைகுளம் புதுகாலனி நான்குவழிச் சாலையில் நாகர்கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், ஒரு வளைவில் திரும்பிய போது திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த பெண்கள் 2 பேர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  குழந்தைகள் இருவர் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வழியில் ஒருவர் உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த நாங்குநேரி டிஎஸ்பி பொன்னுசாமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.