Home Blog Page 6058

நிலநடுக்க நெரிசலில் சிக்கி 2 பேர் பலி

வாராணசியில் நில நடுக்கத்தால் ஏற்பட்ட பீதியில், நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகினர். வாராணசியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வால் ஏற்பட்ட அச்சத்தில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். தெருக்களில் திரண்ட மக்கள் அதிக அளவில் திரண்டதால், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகினர்.

தருமபுரியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை தேவை: அன்புமணி கடிதம்

சென்னை: தருமபுரியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தின் விவரம் பெறுநர்: திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், மாண்புமிகு தமிழக முதலமைச்சர், தலைமைச்செயலகம், சென்னை -09 அன்புள்ள முதலமைச்சர் அவர்களுக்கு… வணக்கம்! பொருள் : மத்திய அரசு நிதி உதவியுடன் தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் மற்றும் மருத்துவமனையை தருமபுரியில் அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோருதல் – தொடர்பாக. இந்தியாவில் தரமான மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவச் சேவையை பரவலாக்க வேண்டும் என்ற நோக்குடன் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் செங்கிப்பட்டி, பெருந்துறை ஆகிய ஐந்து இடங்களில் ஏதேனும் ஒன்றில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை அமைக்கலாம் என மாநில அரசு பரிந்துரைத்ததன் அடிப்படையில் அந்த இடங்களை மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. தருமபுரியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் அமைப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருப்பதால் அங்கு இந்த மருத்துவக் கழகத்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரியில் சென்னை & பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசுக்கு சொந்தமாக 400 ஏக்கருக்கு அதிகமான நிலம் உள்ளது. இதன் மூலம் தமிழகத்திலுள்ள அனைத்து முக்கிய நகரங்களையும் எளிதிலும் விரைவாகவும் அணுக முடியும். குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளும் இங்கு உள்ளன. தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட தருமபுரியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை திட்டமிட்டு மேம்படுத்த முடியும். இதற்கெல்லாம் மேலாக தருமபுரியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை அமைப்பதற்கான தேவைகள் அதிக அளவில் உள்ளன. தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து மனித வாழ்நிலைக் குறியீடுகளிலும் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் தருமபுரி 32 ஆவது மாவட்டமாக உள்ளது. இங்கு அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் அமைக்கப்பட்டால் இந்த மாவட்டத்தின் மீதான தோற்றம் மேம்படும். மருத்துவச் சுற்றுலாவுக்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், மருத்துவக் கல்வி பயில்வதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு வருவார்கள். அதுமட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கும். இதனால் தருமபுரி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படும். பல வகையான தொழில்கள் தொடங்கப்படுவதுடன் அதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். இது தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெருமளவில் உதவியாக இருக்கும். தருமபுரியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் அமைக்கப்பட்டால் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் பயனடைவார்கள். தருமபுரிக்கு அருகில் பெங்களூர் விமான நிலையம் இருப்பதால் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மருத்துவ வல்லுனர்கள் வந்து செல்வதற்கும் வசதியாக இருக்கும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் மற்றும் மருத்துவமனை அமைப்பதற்காக ஆய்வு செய்யப்படும் இடங்களின் பட்டியலில் ஆறாவதாக தருமபுரியையும் சேர்க்க வேண்டும். மத்திய அரசுக் குழுவினர் தமிழகத்தில் தங்கி இருப்பதால் மத்திய அரசுடன் பேசி தருமபுரியில் ஆய்வு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அதனடிப்படையில் தருமபுரியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் மற்றும் மருத்துவமனை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதலமைச்சராகிய தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நேபாளத்தின் பாரம்பரிய ஸ்தூபி இடிந்து சேதம்

nepal-bhimsen-towerநேபாளத்தில் மிகவும் பாரம்பரியாமான ஸ்தூபி ஒன்று நிலநடுக்கத்தால் முற்றிலும் சேதமுற்று சரிந்தது. நேபாளத்தில் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 9 அடுக்கு ஸ்தூபியான பீம்சேன் டவர் தாராஹாரா முற்றிலும் இடிந்துவிழுந்து சேதமுற்றது. இந்தியாவின் பாரம்பரிய குதுப் மினார் ஸ்தூபியைப் போல் இது அங்கே புகழ் பெற்றிருந்தது. இன்று முற்பகல் நேபாளத்தில் 7.9 ரிக்டர் அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நேபாளத்தில் இரண்டாவது நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று முற்பகல் 11.56க்கு 7.9 ஆகப் பதிவான நிலநடுக்கத்தை அடுத்து இரண்டாவது முறையாக 7.0 என்ற அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.  

நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

earh-quake-delhi புது தில்லி: இன்று முற்பகல் 11.56 மணி அளவில் நேபாளத் தலைநகர் காட்மாண்டுவை நிலநடுக்கம் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. நேபாளத்திலும், தில்லியிலும் நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தை ஒட்டி, உடனடியாக மீட்புக் குழுக்கள் உதவிக்கு இறங்கின. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நாட்டின் வடமாநிலங்கள், தமிழகம் ஆகியவற்றைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. கடைகளில் பொருட்கள் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அவர்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நேபாளம், இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லாகூர் உள்ளிட்ட பல இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்துக் கூறிய அமெரிக்க நில ஆய்வு மையம், உள்ளூர் நேரப்படி 11.56க்கு ஏற்பட்ட இது 7.5 இல் இருந்து 7.9 ஆகப் பதிவாகியிருப்பதாகவும், தரையில் இருந்து 11 கி.மீ. தொலைவில் இது ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பீதியைக் கிளப்பிய நிலநடுக்கம்: 7.9 என்கிறது அமெரிக்க நில ஆய்வு மையம்

nepal-park-horison
நிலநடுக்கத்தால் கடுமையாக சேதமுற்ற பார்க் ஹொரைஸன் அபார்ட்மெண்ட், நேபாளம்
புது தில்லி: இன்று காலை தில்லி மற்றும் நாட்டின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக நேபாளத்தில், கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சாலைகள் பெரும் சேதம் அடைந்தன. அடுக்கு மாடிக் குடியிருப்புகள் பல விரிசல் கண்டன. உடனடியாக குடியிருப்புவாசிகள் வெளியில் வந்து, சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நேபாள் காட்மாண்டுவில் உள்ள பார்க் ஹொரைஸன் அபார்ட்மெண்ட் கடும் சேதமுற்றது. இந்த நிலநடுக்கம் பூமி – தரையின் மிக அருகில், அதாவது 2 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதால், பெரும் பாதிப்புக்கு இடம் இருப்பதாக அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 மேக்னிட்டூடாக பதிவானது என்று அது தெரிவித்துள்ளது. தில்லி உள்ளிட்ட இந்தியப் பகுதிகள், நேபாளம் மட்டுமல்லாமல் பாகிஸ்தானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.earh-quake-delhi-nepal

தில்லி நிலநடுக்கம்: மெட்ரோ ரயில் நிறுத்தம்

புதுதில்லி: நாட்டில் தில்லி உள்ளிட்ட பல இடங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. தில்லியில் நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து, அங்கே மெட்ரோ ரயில் சேவை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று காலைதான், பிரதமர் நரேந்திர மோடி, தில்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, அதன் சேவையைப் புகழ்ந்தும், தில்லி மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் ஸ்ரீதரனைப் பாராட்டியும் டிவிட்டர் பதிவிட்டார்.

நாமக்கல் மணிக்கூண்டு அருகே போக்குவரத்தை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

கருர்: நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள மணிகூண்டு அருகே போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இதற்கு அப்பகுதியில் நான்கு சாலைகள் சந்திப்பதும் எந்த சாலையும் ஒருவழி சாலையாக மாற்றப்படாமல் இருவழி சாலையாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், அதை மாற்றி அமைப்பதால் ஓரளவுக்கு நெரிசல் தவைக்கப்படும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் காவல்துறையினர் வைத்துள்ள பாரிகார்ட் சாலையில் செல்வோருக்கு பெரும் இடைஞ்சலாக இருப்பதால் அவர்கள் சாலையிலேயே நடந்து செல்கின்றனர். ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் நடை மேம்பாலத்தை யாரும் பயன்படுத்த மறுப்பதாலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மேலும் மணிக்கூண்டு அருகே உள்ள கடை உரிமையாளர்கள் சாலையிலேயே தங்களது வாகனனகளை நிறுத்துவதாலும் நெரிசல் ஏற்படுகிறது. இவற்றை சரிசெய்து உடனடியாக வேகத்தடை மற்றும் சாலை விஸ்தரிப்பு செய்யவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கிழிந்த ரூபாய் நோட்டுகளை இன்று மாற்றலாம்: ரிசர்வ் வங்கி

சென்னை சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள வங்கிகளில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து, சனிக்கிழமை இன்று புதிய நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில், பழைய, கிழிந்த, சிதைந்த, அழுக்கான குறிப்பாக சிறிய மதிப்பிலக்க 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து அகற்றி அவற்றுக்குப் பதிலாக புதிய நோட்டுகள், நாணயங்கள் வழங்கப்படவுள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவிதாங்கூர், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, அலாகாபாத் வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, கனரா வங்கி, விஜயா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, சிண்டிகேட் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கரூர் வைஸியா வங்கி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, லஷ்மி விலாஸ் வங்கி, இந்தஸ் இந்த் வங்கி, ஃபெடரல் வங்கி, கோடக் மஹேந்திரா வங்கி, டி.என்.எஸ்.சி. வங்கி, கதோலிக் சிரியன் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய வங்கிகளின் முக்கியக் கிளைகளில் இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

ரஜினிக்கு பத்ம பூஷண் விருது: மத்திய அரசு மறுப்பு

rajini35 புது தில்லி: நடிகர் ரஜினி காந்துக்கு பத்ம விபூஷண் விருது மத்திய அரசால் நிராகரிக்கப் பட்டுள்ளது இப்போது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் இருந்து பத்ம பூஷண் விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த், தொழிலதிபர் ஷிவ் நாடார் ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்தும், அவற்றை மத்திய அரசு நிராகரித்துள்ளது இப்போது தெரியவந்துள்ளது. இந்த முறை 1,897 பேரின் பெயர்கள் பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாபா ராம்தேவ், மாதா அமிர்தானந்தமயி, ரஜினிகாந்த், ராஜ்குமார், ஹிரானி, ரோஹித் ஷெட்டி, ஜிவிகே ரெட்டி, ஷிவ் நாடார், வாய்ப்பாட்டு கலைஞர் கிரிஜா தேவி என பிரபலங்கள் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டும், ஜன.25 அன்று வெளியான பட்டியலில் இல்லாமல் போனது. குறிப்பாக, ரஜினி காந்த் ஏற்கெனவே பத்ம பூஷண் விருது பெற்றுள்ளார் என்றாலும், அவரது பெயரை பத்ம விபூஷண் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. தமிழகத்தில் அரசியல் பின்னணியில் பல்வேறு விதமான காய் நகர்த்தல்கள் நிகழும் நிலையில், ரஜினிக்கு பத்ம விபூஷண் நிராகரிக்கப்பட்டது பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ளது.