Home Blog Page 6218

கருப்பு பணத்தைக் கட்டுப்படுத்தும் புதிய மசோதா: அமைச்சரவை ஒப்புதல்

  புது தில்லி: கருப்புப் பணத்தைக் கட்டுப் படுத்தும் வகையில் புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 300 சதவீத அபராதமும் விதிக்கும் வகையில் விரிவான சட்டம் ஒன்று கொண்டு வரப்படும் என்று சென்ற மாதம் பொது பட்ஜெட் தாக்கல் செய்த பொது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருந்தார். அதன்படி, கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்தப் புதிய மசோதா, வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைப் பதுக்குவோருக்கு கடுமையான தண்டனை அளிக்கவும், அதை வெளிக் கொண்டு வரவும் உதவும். மேலும் இந்த மசோதா வரித்துறைக்கு அதிக அதிகாரங்களை அளிக்கிறது. இந்த மசோதா, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

“சாப்பாட்டோடு சம்பந்தப்பட்டவர்களின் குணதோஷங்கள் சாப்பிடுகிறவனை பாதிக்கின்றன”

10482143_599228513527816_46027082804070919_n

“சாப்பாட்டோடு சம்பந்தப்பட்டவர்களின் குணதோஷங்கள் சாப்பிடுகிறவனை பாதிக்கின்றன” உணவு உடம்பை மட்டுமல்ல; மனசையும் பாதிக்கும் என, இன்றைய மருத்துவ ஆராய்ச்சிகள் மெய்ப்பிக்கின்றன. இப்படியான ஓர் உணவுச் சிக்கலில் சந்நியாசி ஒருவர் மாட்டிக்கொண்டு பரிதவித்த சம்பவத்தை இங்கே அழகான ஒரு கதையாகச் சொல்லி, இந்த உண்மையை நமக்கு எளிதாகப் புரியவைக்கிறார் மகா பெரியவா.
எங்கே… அவரின் வாய் வார்த்தையாலேயே அந்தக் கதையைக் கேட்போமா?
‘ராஜா ஒருத்தன் இருந்தான். அவனுக்கு ஒரு குரு. அவர் அடிக்கடி அரண்மனைக்குப் போய் உபதேசம் பண்ணிவிட்டு வருவார். அப்படி ஒருநாள் காலம்பற போனவர், நீண்டநேரம் அநேக விஷயங்களை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்ததால் மத்தியானம் வந்துவிட்டது. ”இங்கேயே பி¬க்ஷ பண்ணிவிட்டுப் போகணும். ஆசார நியமத்தோடு, தனியாகப் பண்ணிப் போட ஏற்பாடு செய்கிறேன்” என்று ராஜா ரொம்பவும் கேட்டுக்கொண்டான்.
அவனுடைய பிரார்த்தனையை மறுக்க முடியாமல் அவர் அரண்மனையிலேயே போஜனம் செய்தார். அப்போது நல்ல வெயில் வேளை! பஞ்சபக்ஷ்ய போஜனம் பண்ணினதில் அவருக்குக் களைப்பாக இருந்ததால், அங்கேயே கொஞ்ச நேரம் இளைப்பாறினார்.
அவர் சிரம பரிகாரம் பண்ணிக்கொண்ட அறையின் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு முத்துமாலை அவர் கண்ணில் பட்டது. அது ராஜாவுடையது. நல்ல வைராகியான அவருக்கு எதனாலோ அன்றைக்கு அந்த முத்தாரத்தைப் பார்த்தவுடன், அதை எடுத்து வைத்துக்கொண்டு விடவேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. பக்கத்தில் யாருமில்லாததால் சட்டென்று அதை எடுத்து, வஸ்திரத்துக்குள் ஒளித்து வைத்துக்கொண்டுவிட்டார். சாதாரண மனிதர்கள் பண்ணினாலே திருட்டு என்பது பாவம்; குற்றம். மகானாக, ராஜகுருவாக இருந்தவர் கொஞ்சங்கூட மனசை உறுத்தாமல் இப்படிப் பண்ணிவிட்டு, தாம்பாட்டுக்கு ஆஸ்ரமத்துக்குத் திரும்பிப் போய்விட்டார்.
அன்று ராத்திரி முழுக்க அவருக்கு சரியாகத் தூக்கமே இல்லை. மறுநாள் முழித்துக் கொள்கிறபோதே வயிற்றில் ‘கடமுடா’ பண்ண ஆரம்பித்தது. பேதி பிடித்துக்கொண்டது. அஞ்சு தடவை, ஆறு தடவை ‘போய்’ ரொம்ப பலஹீனமாய்விட்டது.
ஆனாலும், இப்படி உடம்பு ஆயாஸப்பட்டுப் போனாலும், பேதியானதிலிருந்தே அவருடைய மனஸுக்கு ஒரு தெளிவு ஏற்படத் தொடங்கியிருந்தது. முதல்நாள் உண்டான கெட்ட எண்ணமும், ஆசைகளும் கொஞ்சங் கொஞ்சமாக விலகிக்கொண்டே வந்தன. இப்போது இனிமேலே ‘போவதற்கு’ எதுவுமே இல்லை என்கிற மாதிரி உடம்பு கிழித்த நாராக ஓய்ந்துபோன ஸ்திதியில், அவருடைய வழக்கமான உசந்த மனசே அவருக்குத் திரும்பிவிட்டது.
உடம்பு ஓய்ந்துபோன நிலையிலேயே முத்துமாலையை எடுத்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார். ராஜாகிட்டே போய், அந்த ஹாரத்தைக் கொடுத்து, ”என்ன காரணமென்றே தெரியவில்லை. நேற்றைக்கு மத்தியானத்திலிருந்து என் புத்தி கெட்டுப்போய்க் கிடந்தது. அந்தக் கெட்ட ஆவேசத்தில் நான்தான் இந்த மஹாபாவத்தைப் பண்ணினது. திருடனை எப்படித் தண்டிக்க வேண்டுமோ அப்படி எனக்கு சி¬க்ஷ பண்ணு!’ என்று ராஜாவிடம் சொன்னார்.ராஜா யோசித்தான். அப்புறம் சொன்னான்… ”நீங்களே  சொல்வதால் நீங்கள்தான் ஹாரத்தை எடுத்ததாக வைத்துக்கொள்ளப் பார்க்கிறேன். ஆனாலும், எந்தக் காரணத்துக்காக அது பண்ணப்பட்டது என்பதையும் ஆராய்ந்து, அதை ஒட்டியே ஒரே குற்றத்துக்கு வேறு வேறு சி¬க்ஷகளை நீதி சாஸ்திரம் சொல்லியிருக்கிறது. எப்படியாகப்பட்டவர், என்ன மாதிரியான சந்தர்ப்பத்தில், எந்தவிதமான நோக்கத்துக்காகக் குற்றம் செய்தார் என்று கவனித்தே தீர்ப்புச் செய்ய வேண்டும். (ஸர்க்கம் ஸ்டன்ஸ், மோட்டிவ் பார்த்தே சென்டென்ஸ் பண்ணவேண்டும் என்றுதானே இப்போதும் லா இருக்கிறது?) அதனாலே, மகானான தாங்கள் இப்படியரு கார்யம் பண்ணினீர்களென்றால், எந்தக் காரணத்தின் மேலே அப்படிப் பண்ணினீர்கள் என்று தெரிந்துகொள்ளாமல் தண்டிக்கிறதற்கில்லை’ என்றான்.
அதற்கு அந்த குருவானவர், ”நேற்று நீ பிரியத்தின் பேரில் நிர்பந்தம் செய்ததால் நான் இங்கே சாப்பிட்டேன். அதற்கப்புறந்தான் இந்தப் பாப கார்யத்தில் என் புத்தி பிரவேசித்திருக்கிறது. நேற்றுச் சாப்பிட்ட அன்னம் வயிற்றில் இருந்தவரையில் மனசு கெட்டுப் போயிருந்தது. இன்றைக்கு தெய்வ ஸங்கல்பத்தால் அதிஸாரம் உண்டாகி, அது வெளியே போகப் போகக் கெட்ட எண்ணமும் வெளியேறியிருக்கிறது என்று தோன்றுகிறது. இதிலிருந்து, சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடி ஆன தோஷத்தால்தான் குணதோஷம் ஏற்பட்டிருக்கிறது என்று அநுமானிக்கத் தோன்றுகிறது. அநுமானத்தை ஊர்ஜிதம் பண்ணிக் கொள்வதற்கு நீ வேண்டுமானால் நேற்றுஅன்னமாகப் பக்குவம் பண்ணின அரிசி முதலானதுகள் எங்கேயிருந்து வந்தன என்று விசாரணை பண்ணிப் பார்” என்றார்.
அன்னம் என்பதில் ப்ரோட்டின், கார்போஹைட்ரேட், வைட்டமின் முதலியன மட்டும் இல்லை. அதைச் சமைத்தவர், தான்யமாகவும், பச்சைக் காய்கறியாகவும் அதை விலைக்கோ தானமாகவோ கொடுத்தவர், அதைப் பயிர் பண்ணியவர் ஆகியவர்களுடைய குணதோஷங்களும் அந்தஅன்னத்தில் சூட்சுமமாக டெபாஸிட் ஆகி, சாப்பிடுகிறவனுக்குள் போகிறது. இவர்கள் தோஷமுடையவர்களாயிருந்தால் சாப்பிடுகிறவனையும் அந்தத்தோஷம் தொற்றிக்கொள்ளும். இதுதான் அன்னதோஷம் என்பது.ராஜா உடனே உக்ராண மணியக்காரனுக்குத் தாக்கீது அனுப்பினான். முதல்நாள் குருவுக்குச் சமைத்துப் போட்ட அரிசி எங்கேயிருந்து வந்தது என்று விசாரித்துத் தெரிவிக்கும்படி உத்தரவு போட்டான்.மணியக்காரன் பூரா விவரங்களையும் விசாரணை பண்ணித் தெரிவித்தான். என்ன தெரிவித்தானென்றால்… சிலநாள் முந்தி ஒரு பெரிய கொள்ளைக்காரன், கடைத் தெருவில் ஒரு பெரிய மளிகைக் கடையிலிருந்து ரொம்ப உசந்ததான ஸன்ன சம்பா மூட்டைகளைத் திருடி, அப்புறம் ராஜ சேவகர்களிடம் பிடிபட்டான். அவனோடு அரிசி மூட்டையும் கைப்பற்றப்பட்டது. அப்புறம், அவனுக்குச் சி¬க்ஷயும் விதிக்கப்பட்டது. ஆனாலும், உடைமைக்கு (அரிசிக்கு) சொந்தக்காரன் அதை ராஜாங்கத்திலிருந்து திரும்பி வாங்கிக் கொள்வதற்கான ‘ட்யூ டேட்’ ஆகியும் எதனாலோ ஆஜராகவில்லை. அதனால், சட்டப்படி அந்த அரிசி அரண்மனைப் பண்டகசாலையில் சேர்க்கப்பட்டுவிட்டது. நேற்றுவரை பிரயோஜனப்படுத்தாத அந்த அரிசியைத்தான் முதன்முதலில் குருவுக்குச் சமைத்துப் போட்டார்களாம்.
திருட்டுச் சொத்தை ராஜ தர்மப்படி ராஜா ஸ்வீகரித்தாலும், அது மகானுடைய சாத்விக சந்நியாச தர்மத்துக்கு விரோதமானதால், அவரை ‘அஃபெக்ட்’ பண்ணிவிட்டது. ஆனாலும், அவர் மனசறிந்து குற்றம் பண்ணாததாலும், அவருடைய பூர்வ சரித்திரம் சுத்தமானதாலும், பகவானே அப்புறம் அவருக்கு அதிஸாரம் உண்டாகுமாறு பண்ணி, அவருடைய உடம்பில் அந்த அன்னஸத்து ரத்தமாய்ச் சேராமல் வெளியேறும்படி செய்து, தோஷத்தைப் போக்கிவிட்டான்.இதிலே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சாப்பாட்டோடு சம்பந்தப்பட்டவர்களின் குணதோஷங்கள் சாப்பிடுகிறவனை பாதிக்கின்றன என்பதே!சுத்தமான ஆகாரம் என்பது இரண்டு விஷயங்களைப் பொறுத்தது. ஒன்று, ஆகாரமாக ஆகிற வஸ்துக்கள்- தானியம், காய்கறி முதலான பதார்த்தங்கள் சுத்தமானவையாக இருக்க வேண்டுமென்பது; அதாவது… வெங்காயம், முள்ளங்கி மாதிரி மனசைக் கெடுக்கிறவையாக அவை இருக்கப்படாது. இரண்டாவது, அந்த ஆகாரம் நம் இலையில் வந்து விழுகிற வரையில், அதில் சம்பந்தப்பட்டவர்கள் சுத்தமாயிருக்க வேண்டும்!’

“நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்”

“நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்” (நயன தீக்ஷை-மஹான்களின் திருஷ்டி பிரபாவம்) 17-03-2015 பொதிகை டி.வி.யில் இந்த அற்புத நிகழ்ச்சி பற்றி விளக்கம் கொடுத்தார். இந்திராசௌந்தரராஜன். (முன்பே இதைப்246400_479182102136836_1433845875_n படித்திருந்தாலும் மறுபடியும் படியுங்கள்)

உத்தமமான குருவானவர், தன் சிஷ்யர்களை மட்டுமில்லை, சாமான்யமாக அவர்களுடைய திருஷ்டியில் படும், வஸ்துக்கள் அனைத்தையும் தன் பார்வையால் கடாக்ஷிப்பது. அந்த கடாக்ஷத்தை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கிறதோ இல்லையோ, அந்த கடாக்ஷமே தன் வேலையை செய்ய ஆரம்பித்து விடும். மீன், தன் குஞ்சுகளை பார்வையாலேயே ரக்ஷிப்பது போன்றது மஹான்களின் திருஷ்டி. அதனால்தான் நம்… குழந்தைகளை மஹான்களின் சன்னிதானத்திற்கு அழைத்துப் போவது. அக்குழந்தைகளுக்கு மஹான்கள் யாரென்று கூட புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறதோ இல்லையோ, அவர்களின் மேல் சூழ்ந்துள்ள தோஷங்களை நிவர்த்திக்கும் சக்தி அந்த திருஷ்டிக்கு உண்டு. காஞ்சி மகாபெரியவாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு பெண் இருந்தாள். அவளுடைய புருஷனுக்கோ, கடவுள், மஹான்கள், கோவில் என்று எதிலுமே நம்பிக்கை இல்லை. அதிலும் மஹான்கள் எல்லோருமே நம்மை போல் சாதாரண மனிதர்கள்தான்! என்ற ஒரு பேதைமை உண்டு. ஒருமுறை அந்த அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் பெரியவாளை தரிசனம் பண்ண ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் போட்ட நிபந்தனை “நா அங்க வருவேன். pant shirt தான் போட்டுப்பேன். பஞ்சகச்சம் விபூதி எதுவும் கெடையாது. அவரை நமஸ்காரம் பண்ண மாட்டேன். உனக்காக வரேன் ஆனா,அவரைப் பாக்க மாட்டேன். தள்ளிதான் நிப்பேன்”. பாவம் அந்த அம்மா ஒத்துக் கொண்டாள். போனார்கள். அவர் காலில் போட்டிருந்த ஷூவைக் கூட கழற்றவில்லை. அந்த அம்மா மானசீகமா பெரியவாளிடம் பிரார்த்தனை பண்ணினாள் கணவருக்கு நல்ல புத்தி வேண்டி. நம்ம பெரியவா சாக்ஷாத் காமாக்ஷித் தாயாரில்லையா? “நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்” என்று சொல்லுவதுபோல், மேனாவுக்குள் இருந்து லேசாக எட்டி அந்த மனுஷனைப் பார்த்தார். அவ்வளவுதான்! கொஞ்ச நாள் கழித்து கணவர் “வாயேன்…போய் மடத்ல ஸ்வாமியை பார்த்துட்டு வருவோம்”. சாதாரண வேஷ்டி, ஷர்ட், லேசான விபூதி கீற்று! கொஞ்சநாள் கழித்து, பஞ்சகச்சம், குடுமி வைத்துக் கொள்ள ஆரம்பித்து, நாட்கள் செல்ல செல்ல, அந்த அம்மாவை விட பெரியவா மேல் பித்தாகிப் போனார். வேலையை விட்டார். பெரியவா படத்தை வைத்துக் கொண்டு சதா பஜனை, தியானம் என்று பரம பக்தராக மாறிவிட்டார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால்…….பெரியவா அன்று ஒரே ஒரு தடவை அவரை கடாக்ஷித்ததுதான்! அப்புறம் ஒரு வார்த்தை பேசக் கூட இல்லை! மஹான்களின் திருஷ்டி பிரபாவம்!

பரத நாட்டியக் கலைஞர் உடுப்பி லட்சுமி நாராயணன் மறைவு

பிரபல பரத நாட்டியக் கலைஞர் உடுப்பி லட்சுமி நாராயணன் (90) உடல் நலக் குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். திடீர் மூச்சுத்திணறல் காரணமாக, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடுப்பி லட்சுமி நாராயணன் செவ்வாய்க்கிழமை இறந்தார். லட்சுமி நாராயணனுக்கு லீலாவதி என்ற மனைவியும், 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.udipi_lakshmi_narayanan கர்நாடக மாநிலம், உடுப்பி பகுதியை பூர்வீகமாககக் கொண்ட லட்சுமி நாராயணன், காஞ்சிபுரம் எல்லப்ப முதலியாரை குருவாகக் கொண்டு பரத நாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்றார். 1962-ஆம் ஆண்டு சென்னை வடபழனியில் “நாட்டிய மஞ்சரி’ என்ற நடனப் பள்ளியைத் தொடங்கி ஏராளமான பரத நாட்டியக் கலைஞர்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார் லட்சுமி நாராயணன். இந்த நடனப் பள்ளி இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேடை நாடகங்களுக்கு நடனம் அமைத்து வந்த லட்சுமி நாராயணன் நடிகர் சிவாஜி கணேசனின் நாடக மன்றத்தில் நடனக் கலை ஆசிரியராகப் பணியாற்றினார்.  “சுமதி என் சுந்தரி’, “சரஸ்வதி சபதம்’, “உழைக்கும் கரங்கள்’, “மீனாட்சி திருவிளையாடல்’, “காதலன்’, “சங்கமம்’ உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். மேலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் சேர்த்து 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். நடன இயக்குநர்கள் ராஜு சுந்தரம், பிரபுதேவா, நடனக் கலைஞர்கள் ஜெயந்தி ராமானுஜம், திவ்யா கஸ்தூரி ஆகியோருக்கு பரத நாட்டிய கலை ஆசிரியராக திகழ்ந்த அவர், 2003-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமனி விருதையும், கர்நாடக அரசின் கலாஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். விருகம்பாக்கம் மயானத்தில் புதன்கிழமை (மார்ச் 18) காலை 8 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

நெல்லையில் கடத்தப்பட்ட மாணவி மீட்பு: ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கடத்தப்பட்ட பள்ளி மாணவி மீட்கப்பட்டார். அவரைக் கடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி, பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே உள்ள மெட்ரிக் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் மாலையில் ரஹ்மத்நகரில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தமக்கு பழக்கமான மாணவருடன் தனியே பேசிக் கொண்டிருந்தாராம். இருவரும் தனியாக இருப்பதைப் பார்த்த சிலர் மாணவியை கடத்திச் சென்றுள்ளனர். மாணவி கடத்தப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உதவி ஆணையர் மாதவன் தலைமையிலான மாணவியைத் தேடி வந்தனர். இதனிடையே கடத்தப்பட்ட மாணவியை இன்று இரவில் மீட்டனர். கடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாரதி மோகன் இயக்கத்தில் “எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது“

engalukku-veru-kilaigal-illai ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் ராமாபுரம் ராஜேஷ் வழங்கும் “ எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது “ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தில் விக்ரம்சிவா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ரக்ஷன் நடிக்கிறார். கதாநாயகியாக சாரா தேவா நடிக்கிறார். மற்றும் நிழல்கள்ரவி, சிங்கம்புலி, மனோபாலா, இமான் அண்ணாச்சி, போஸ்வெங்கட், டி.பி.கஜேந்திரன், டெல்லிகணேஷ், அப்புக்குட்டி,பிளாரன்ட் பெராரா, ஓசூர் மாதேஷ், சுடர்மதி, ரேகா, மதுமிதா, தேவதர்ஷினி, மதுரை புலி, காளிச்சரண், ஸ்டன்ட் சர்வியானந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – லால்பாபு இசை – தாஜ்நூர் பாடல்கள் – நா.முத்துகுமார், யுகபாரதி கலை – ராம் ஸ்டன்ட் – ஜாக்குவார் தங்கம் எடிட்டிங் – ராஜ்கீர்த்தி தயாரிப்பு நிர்வாகம் – சாமிநாதன், காளீஸ்வரன் தயாரிப்பு – ராமாபுரம் ராஜேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பாரதிமோகன். இயக்குனரிடம் படம் பற்றி கேட்டோம்.. படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்திற்காக அமைச்சர் காத்துவாயனாக நடிக்கும் மனோபாலா ஏழை திருமணங்களை நடத்தி வைகிறார். மனோபாலா நடத்தி வைக்கும் திருமண ஜோடிகளில் அப்புகுட்டி – வர்ஷா ஜோடியும் ஒன்று. அமைச்சர் தடபுடலாகத் திருமணத்தை நடத்தி வைக்கிறார். அப்புகுட்டி – வர்ஷா கழுத்தில் தாலிகட்ட அதை பார்த்த சிங்கம்புலி அதிர்ச்சி அடைகிறார். ஏன்? எதற்கு என்பதற்கான விளக்கம் திரையில் என்றார் இயக்குனர் பாரதிமோகன். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை திருச்சி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றார்.

சிருஷ்டி டாங்கே நடிக்கும் “ஒரு நொடியில்”!

shrushti-tangeநல்லூர் சுரேஷ் வழங்க ஆக்கார் பட நிறுவனம் சார்பாக கே.கோடீஸ்வரராவ் தயாரிக்கும் படத்திற்கு “ ஒரு நொடியில் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே, தபஸ்ரீ ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ஆனந்தராஜ், சிசர்மனோகர், பிரித்வி, விஜயன், அபூர்வா சிவா, கீர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – மகிசரலா இசை – சாய்பர்வேஷ் பாடல்கள் – சூர்யா கலை – P.ஆனந்த் BFA நடனம் – ராஜு, நவீன், பிரகாஷ் ஸ்டன்ட் – சுப்புனு எடிட்டிங் – செல்வன் தயாரிப்பு – கே.கோடீஸ்வரராவ் எழுதி இயக்குபவர் M.A.சௌத்ரி. இயக்குனர் சௌத்திரியிடம் படம் பற்றி கேட்டோம். ஒரு கிராமத்தில் வெளி ஆட்களோ, போலீஸோ நுழைய முடியாது. மீறி நுழைபவர்கள் இறந்து போகிறார்கள். அதற்கு காரணமாக சொல்லப்பட்டது தான் விசித்திரமாக இருந்தது. 500 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் ஆவி இன்னமும் இந்த ஊரில் பலரை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது என்று எல்லோரும் பயந்து கொண்டிருந்தார்கள். அது உண்மையா இல்லையா? என்பது கதை! படத்தில் ஏறக்குறைய 80 நிமிடத்திற்கு மேல் கிராபிக்ஸ் காட்சிகள் உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது. திகில் மற்றும் ஹாரர் படமாக “ ஒரு நொடியில் “ உருவாகி உள்ளது.

ஸ்ரீவைகுண்டம் பாஸ்கரன் கொலையில் கைதான சுரேஷ் வீட்டில் இருந்து துப்பாக்கி பறிமுதல்

rivalvor-sureshதூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில்,புதிய தமிழகம் பிரமுகர் பாஸ்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பிச்சனார் தோப்பைச் சேர்ந்த பாஸ்கர் (28) புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளராக இருந்தார். இவர், பிப்.23ல் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பக்குள தெருவை சேர்ந்த கணேசன் (வயது 23), விக்னேஷ்(22), பாதாளம் (23), இசக்கி ஆனந்த் (20), சிவா (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், புதிய தமிழகம் பிரமுகர் பாஸ்கர் கொலை தொடர்பாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் சுரேஷ் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் தூத்துக்குடி ஜேஎம் 2 நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை 24ஆம் தேதிக்கு மாஜிஸ்ட்ரேட் சங்கர் ஒத்தி வைத்தார். பின்னர் சுரேஷ் பாளையங்கோட்டை மத்தியச் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். சுரேஷ் ஆஜர் படுத்தப் படுவதையறிந்த அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு குவிந்தனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஸ்ரீவைகுண்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீசார் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர். சுரேஷ் வீட்டில் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது குறித்து போலீசார் தெரிவிக்கையில், மார்ச்.17 இன்று சுரேஷ் என்பவர் பெரம்பத்தூரில் உள்ள அவரது வீட்டின் முன்னர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டை சோதனையிட்டதில், ஒரு ரிவால்வர், ஆறு 0.38 தோட்டாக்கள், 7 அரிவாள்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதை அடுத்து சுரேஷ் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார் என்று கூறினர்

ரனில் விக்ரம சிங்கேவுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

சென்னை:மீனவர்களை சுட அதிகாரம் இருப்பதாக கூறுவதா?: ரனில் விக்ரம சிங்கேவுக்கு ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:மத்திய அரசு இலங்கை அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும். நேற்றைய தினம் இலங்கைப் பிரதமர் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் எல்லைத்தாண்டி வருபவர்களை சுட்டுக் கொள்வதற்கு இலங்கை கடற்படையினருக்கு அதிகாரம் இருப்பதாக தான் ஏற்கனவே கூறியிருந்ததில் எந்த மாற்றமும் இல்லை என மீண்டும் உறுதிபடக் கூறியிருக்கிறார். இது அவரது அதிகாரவர்க்கத்தைக் காட்டுகிறது. இது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழக மீனவர்கள் தங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிட்டும் என்று ஆவலோடு எதிர்பார்த்த இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் கேள்விக்குறியதாக அமைந்திருக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசிடம், மீனவர்களை இலங்கை கடற்படை துன்புறுத்தவோ, கைது செய்யவோ கூடாது என்பதை உறுதிபடக் கூற வேண்டும். இந்தியப் பிரதமர் இனியும் காலம் தாழ்த்தாமல் இலங்கை அரசை கடுமையாக கண்டிப்பதோடு, தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதிக்காமல் இருக்க, இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலை நிறுத்த, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தங்கள் மீன்பிடித் தொழிலை பிரச்சினைகளின் தொடர மத்திய அரசு வழி வகுத்து தர வேண்டும்.என ஜி.கே.வாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ராமஜென்ம பூமி பகுதியைப் பேண ரூ.12 கோடி செலவு

புதுதில்லி: ராமஜென்ம பூமி அமைந்த பகுதியை பேணிக் காக்க கடந்த 20 வருடங்களில் மொத்தம் ரூ.12 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று கூறியுள்ளது. கடந்த 1994-95 ஆண்டு முதல் 2014-15 ஆண்டு வரை அயோத்தியில் உள்ள கைப்பற்றப்பட்ட சொத்துகளை பேணிப் பாதுகாக்க ரூ.12 கோடி செலவிடப்பட்டுள்ளதாக, மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜு கூறினார். அரசியலமைப்பின் 7வது பிரிவின்படி, போலீசார் மேற்கொள்ளும் நடவடிக்கை மாநில விவகாரங்கள் என்றும், கைப்பற்றபட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது, பாதுகாப்பை ஏற்படுத்துவது உத்தரப் பிரதேச அரசின் கையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.