Home Blog Page 6258

பசுவதையும் திராவிட வியாபாரமும்!

மகாராஷ்டிர அரசு பசுவதையை தடை செய்து மகாத்மா காந்தி கண்ட கனவை நனவாக்கி உள்ளது. சர்வாதிகாரி ஸ்டாலினுக்காக, ஆங்கிலேயர்களுடன் கூட்டுச் சேர்ந்தவர்களுக்கும், ஆங்கிலேயர்களின் விசுவாசிகளாகவே தொடக்க காலம் முதல் இன்று வரை ’தீ’ராவிடமாக தமிழகத்தை பீடித்திருக்கும் கூட்டங்களுக்கும், காந்தி அடிகளின் இராமராஜ்ஜியம் கசக்கத்தானே செய்யும். dravidar veeramani 06.02.2015 தேதியிட்ட The New Indian Express பத்திரிக்கையில் //Eating beef was an ancient custom and part of several yagnas cited in Vedas, he said and added that it was mentioned in Valmiki’s Ramayana.// பசு மாமிசத்தை புசிப்பது வேத கால மரபு, இது இராமாயணத்திலும் சொல்லப்பட்டுள்ளது என்று திராவிட கழகத் தலைவர் வீரமணி என்ற வியாபார மணி விளக்கி உள்ளார். இதே தலைப்பில் இந்திய வரலாற்று ஆசிரியரான ஸ்ரீமாலி என்பவர் ZEE TVயில் நடத்தப்பட்ட ஆப் கீ அதலாத், ஆப்கா ஃபைஸ்லா என்ற நிகழ்ச்சியில் பேசும் போது, வேதங்களில் பல இடங்களில் பசுவை உண்டதாகக் குறிப்பு உள்ளதாகச் சொன்னார். நிகழ்ச்சியை நடத்திய ரகுவன்ஷி, பசு கொல்லப்படக் கூடாதது என்ற வேத வாக்கியங்களை மேற்கோள் காட்டி, எந்த இடத்தில் பசு கொல்லப்படவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்று வலியுறுத்திக் கேட்டபோது வேதத்தில் இல்லை, வேத இலக்கியங்களில் இருக்கிறது என்றார். இந்த இந்திய வரலாற்று ஆய்வு மைய அறிஞரின் புத்தகங்களை படித்து விட்டு கக்குபவர்கள் எப்படி நேர்மையாக இருப்பார்கள். eminent historians 400x400 imadwgfdjms6z3gs இந்த டிவி நிகழ்ச்சியை பற்றிய விவரங்கள் திரு அருண் ஷோரி அவர்களின் “Eminent Historians” என்ற புத்தகத்தில் பக்கம் 40 முதல் 44 வரை பதிவிடப்பட்டுள்ளாது. இந்த வேதகால பசு மாமிச உணவு பழக்கத்திற்கு சுவாமி விவேகானந்தரை மேற்கோள் காட்டுகிறார் வீரமணி. இதில் கூட விவேகமற்ற மோசடி வேலையைச் செய்துள்ளார் வீரமணி. யாகங்களில் இடப்படும் பசுவின் மாமிசத்தைப் புசிக்காமல் இருப்பவன் இந்துவே அல்ல என்று, விவேகானந்தர் சில யாகங்களில் பின்பற்றப்பட்ட மரபை மேற்கோள் காட்டி விட்டு, அடுத்த வரியிலேயே இந்தியர்கள் பசுமாமிசத்தை உட்கொள்ளுபவர்கள் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியும் உள்ளார். //You will be astonished if I tell you that, according to the old ceremonials, he is not a good Hindu who does not eat beef. On certain occasions he must sacrifice a bull and eat it. That is disgusting now. However they may differ from each other in India, in that they are all one – they never eat beef.// – The Complete works of Swami Vivekananda, Volume III சமீபத்தில் புதிய தலைமுறை விவாதத்தில் விவேகானந்தரை மேற்கோள் காட்டிய ‘சுகவியாபார பனியா’ என்ற சுப.வீரபாண்டியன், தெய்வத்தின் குரல் என்ற காஞ்சி பெரியவரின் புத்தகத்தில் பிராமணர்கள் பசு மாமிசம் உண்டார்கள் என்று சொல்லப்பட்டு இருக்கிறது; ஆகவே, பெளத்தத்திற்கும், சமணத்திற்கும் எதிராக பிராம்மணர்கள் எடுத்த ஆயுதம் தான் பசுவதை எதிர்ப்பு, என்று வழக்கம் போல வளைத்து வளைத்து வாய்மூடாமல் பேசினார். தெய்வத்தின் குரல் புத்தகத்தில், வாஜபேய யாகம், சக்கரவர்த்தி யாகம் ஆகியவற்றில் பசுவை பலிகொடுத்ததற்கான குறிப்பைச் சொல்லும் காஞ்சிப் பெரியவர், அதிலிருந்து ஒரு துவரம் பருப்பு அளவிற்கு சற்றே அதிகமான பகுதியையே ஹவிர் பாகத்திலிருந்து விழுங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். //பிராம்மணர்கள் செய்ய வேண்டியதில் மிகவும் உயர்ந்ததான வாஜபேயத்துக்கும், 23 பசுக்களே சொல்லப்படுகின்றன. சக்ரவர்த்திகளே செய்கிற மிகப் பெரிய அச்வமேதத்துக்குக் கூட 100 பசுக்கள்தான் சொல்லியிருக்கிறது. மாம்ஸ போஜனத்தில் இருந்த ஆசையினாலேயே பிராம்மணர்கள் “தேவப் ப்ரீதி” என்று கதை கட்டி, யாகம் பண்ணினார்கள் என்று சொல்வது ரொம்பவும் பிசகாகும். ஒரு பசுவின் இன்னின்ன அங்கத்திலிருந்து மட்டுமே, இத்தனை அளவுதான் மாம்ஸம் எடுக்கலாம்; அதில் இடாவதரணம் என்பதாக ரித்விக்குகள் இவ்வளவு தான் புஜிக்க வேண்டும் என்பதற்கெல்லாம் சட்டம் உண்டு. அது துவரம் பருப்பளவுக்குக் கொஞ்சம் அதிகம் தானிருக்கும். இதிலும் உப்போ, புளிப்போ, காரமோ, தித்திப்போ சேர்க்காமல், ருசி பார்க்காமல் அப்படியே முழுங்கத்தான் வேண்டும். ஆகையால், வேறு என்ன காரணம் சொல்லி யஞ்யத்தைக் கண்டித்தாலும் சரி, ‘பிராம்மணர்கள் இஷ்டப்படி மாம்ஸம் தின்னுவதற்கு யக்ஞம் என்று பெரிய பெயர் கொடுத்து ஏமாற்றினார்கள்’ என்றால் கொஞ்சங்கூட சரியில்லை.// – தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம். இந்த யாகம் செய்பவர்கள் இதைச் செய்யாவிட்டால் பாவம் என்பதின் அடிப்படையில், சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்ட, மாமிசத்தை உண்ணாதவர்கள் இந்துக்கள் அல்ல என்ற குறிப்பைப் புரிந்து கொள்ள வேண்டும். சமணத்திற்கும் பெளத்ததிற்கும் எதிராக, பசுவதை இந்துக்களால் ஆயுதம் ஆக்கப்பட்டது என்பதையும், தெய்வத்தின் குரலில் காஞ்சி பெரியவர் மறுத்துள்ளார். //கூட்டம் கூட்டமாகப் பசுக்களைப் பலிகொடுத்து, பிராம்மணர்கள் ஏகமாக மாம்ஸம் சாப்பிட்டார்கள். புத்தர் கூட இப்படி யாகத்துக்காக ஓட்டிக்கொண்டு போகப்பட்ட மந்தைகளை ரக்ஷித்தார்’ என்றெல்லாம் இப்போது புஸ்தகங்களில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இம் மாதிரி ஏகப்பட்ட பசுக்களை பலி கொடுப்பதாக, வாஸ்தவத்தில் எந்த யாகமும் இல்லை.// – தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம். பிராமணர்களின் சுயநலத்திற்காக பசுவை திண்பார்களாம்; ஆனால் பசிக்காக ஒரு தலித் பசுவை தின்பது இவர்களுக்குப் பொறுக்காது என்று இதற்கு ஒரு சாதீய கண்ணோட்டத்தையும் சுகவியாபார பணியா அருளியுள்ளார். காஞ்சிப் பெரியவரின் புத்தகத்தில் குறிப்பிடப்படும் யாகங்கள், சத்ரிய மன்னனுக்காகவும், அந்த தேசத்தில் வாழும் அனைத்து வர்ணத்தினரின் நலனுக்காகவும் செய்யப்பட்டன. மேலும், இந்த யாகங்கள் நம் நாட்டில் மிக அரிதாகத்தான் நடத்தப்பட்டும் உள்ளன. பொது நலத்திற்காக சில செயல்களை செய்வது பாவமல்ல என்ற கருத்தை, பசுவை யாகங்களில் பலியிடுவதற்கு ஒப்பாக்கி சொல்கிறார் காஞ்சி மாமுனிவர். //தர்மத்துக்காகச் செய்யவேண்டியது, எப்படியிருந்தாலும் பண்ணவேண்டும்; ஹிம்ஸையென்றும் பார்க்கக் கூடாது. யுத்தத்தில் சத்ருவதம் பண்ணுவதை ஸகல ராஜ நீதிப் புஸ்தகங்களும் ஒப்புக்கொள்ளவில்லையா? கொலைகாரனுக்குத் தூக்குத்தண்டனையை சட்ட புஸ்தகமே விதிக்கிறதல்லவா? அப்படி, லோகத்தில் பல பேருக்குப் பெரிய க்ஷேமத்தை தேவர்கள் செய்யவேண்டுமென்ற உசந்த நோக்கத்தில் அவர்களுக்குப் பசு ஹோமம் பண்ணுவதிலும் தப்பேயில்லை.// – தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம். இப்படி இருக்க பிராம்ணர்களின் சுயநலம் என்றும், பரவலாக பசுமாடு கொல்லப்பட்டுள்ளது என்றும், விவேகானந்தரையும், காஞ்சி பெரியவரையும் மேற்கோள் காட்டிப் பேசுவது வழக்கமான ’தீ’ராவிட பிரச்சாரம். ramasita இராமயணத்தில் இராமபிரான் பசுமாமிசத்தை நெய்யில் வறுத்து சாப்பிட்டார் என்று வால்மீகியை வம்புக்கு இழுத்தார் சுகவியாபார பனியா. இவர் மேற்கோள் காட்டிய சுட்டுத் தின்ற நிகழ்வு இடம் பெற்றது ஆரண்ய காண்டத்தில் அல்ல, அயோத்தியா காண்டத்தில் (அயோத்தியா காண்டம் 2-96-1,2). இந்தப் பாடலிலும் கூட, மாமிசத்தைப் புனிதமான, சுவையான, சுட்ட இறைச்சி என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, மாட்டிறைச்சி என்று குறிப்பிடப்படவில்லை. இந்த வேத இதிகாச மோசடிக் கும்பல், சங்க இலக்கியங்கள் மாட்டிறைச்சியை தமிழரின் உணவாகச் சொல்லியிருக்கிறது என்று சொன்னதுடன் நிறுத்தாமல், தலித்துகளின் வயற்றில் அடிப்பதற்கு பாஜக இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது என்று கூவி வருகின்றனர். ஆதி திராவிடர் (தலித்) சமுதாயத்தில் தோன்றிய வள்ளுவ பெருமான், புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தையே படைத்துள்ளார். thiruvalluvar  

”கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றவை யவை”.

– திருக்குறள் என்ற குறளில், மாடு என்ற சொல் செல்வத்தை குறிக்கிறது. அப்படி என்றால், வள்ளுவப் பெருமானாரின் காலத்தில் செல்வத்திற்கு மாடு என்ற பொருள் வரவேண்டுமென்றால், பசுவைப் புசிக்கும் உணவாக அல்லாமல், செல்வமாக கருதி வந்தனர் என்பது தெளிவாகிறது. ஒரு நாட்டின் மன்னன் அந்நாட்டின் உயிர்களை காப்பாற்றாமல் முறை தவறி ஆட்சி செய்வதை எந்தக் காரணியின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று வள்ளுவர் சொல்கிறார் தெரியுமா? எந்த ஒரு நாட்டில் பசுவின் பால் வளம் குறைகிறதோ, அந்தணர்கள் வேதம் ஓதவில்லையோ, ஆறு தொழில்களான ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் போன்ற தொழில்களைச் செய்யவில்லையோ அப்போது அந்த நாட்டின் மன்னன் முறை தவறி ஆட்சி செய்பவனாகத்தான் இருப்பான் என்கிறது கொடுங்கோண்மை அதிகாரத்தில் வரும் 10வது குறள் ”ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.”

  • திருக்குறள்

இந்த திருக்குறளில் முதல் காரணியாகவே ஆநிரை செல்வத்தை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் என்றால் தமிழர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களாகவா இருக்க முடியுமா? தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர்கள், ஆதிதிராவிடர் சமுதாயத்தில் தோன்றிய திருவள்ளுவரை ’ஆரிய அடிமை திருவள்ளுவர்’ என்று பொதுக்கூட்டம் போட்டுத் திட்டினாலும் திட்டுவார்கள். ஏற்கனவே திருக்குறளைத் தங்கத் தட்டில் வைத்த மலம் என்று சொன்னவர் தானே இவர்கள் தந்தை ஈ.வே.ரா.! திருவள்ளுவர் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த வழக்கங்களையும் சொற்களையும் வைத்து தானே திருக்குறளை எழுதியிருப்பார்? அரசியலுக்காக அல்லாமல் அறிவுக்காக தமிழ் படித்தவர்களுக்கு, ஆநிரை கவர்தல் என்ற மரபைப் பற்றித் தெரிந்து இருக்கும். பசுவைச் செல்வமாகக் கருதிய காரணத்தினால், அதைக் கவர்ந்து போரைத் தொடங்குவது தமிழ்நாட்டின் மரபு. சங்க இலக்கியங்களில் மாட்டிறைச்சியைத் தின்ற செய்தி காணப்பட்டாலும், இதை மாபாதகமாகக் கருதியது புறநானூறு. நன்றி கொல்லும் கொடுமையை விளக்கும் புறநானூற்றுப் பாடல், பசுவதை, சிசுக்கொலை, பிரம்மஹத்தி போன்ற குற்றங்களுக்குக் கூட கழுவாய் உண்டு, ஆனால் நன்று கொல்லும் குற்றத்திற்கு உய்வில்லை என்கிறது. ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும் மாண் இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் பார்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கின் கழுவாயும் உள’ என நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்’ என – புறநானூறு 34 வரி 1 – 6dravidar veeramani கங்கைக் கரையில் பசுவைக் கொன்ற குற்றத்திற்காக, மகாபாரதத்தில் தண்டனை கொடுக்கப்பட்ட செய்தி பதிவாகியுள்ளது. ஆக மொத்ததில், வேதங்களிலோ, இதிஹாசங்களிலோ, இந்த வியாபாரிகளால் மேற்கோள் காட்டப்படும் விவேகானந்தர், காஞ்சி பெரியவர் ஆகியோரின் எழுத்துகளிலோ மாட்டிறைச்சி தின்பது வழக்கம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை; மாறாக விலக்கப்பட்டதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. தலித்துகளின் உணவு, தமிழர்களின் உணவு என்று கொக்கரிப்பவர்களும், வள்ளுவத்தின் வாழ்வியலைக் கடைபிடிக்கிறோம் என்று வள்ளுவ வியாபாரம் செய்பவர்களும், திருக்குறளில் விலக்கப்பட்டதும், புறநானூற்றில் மாபாதகமாகக் கருதப்படும் பசுவதையை ,தமிழர் மரபு என்று சொல்லி யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள்? தமிழ் மரபுக்கு எதிரான மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தை விரைவில் தொடங்கப்போகிறோம் என்று SDPI அமைப்பின் தெகலான் பஹாவியுடன் அறைகூவல் விடும் வியாபார மணி, சிலரால் உணவாக உட்கொள்ளப்படும் பன்றிக் கறி தின்னும் போராட்டத்தை பஹாவி தலைமையில் மசூதிக்குள் நடத்துவாரா?  

கட்டுரை: பால.கௌதமன்

Convenor: Vedic Science Research Center  source: https://vsrc.in/

உலகக் கோப்பை: இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

west-indies-indiaபெர்த்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 28 வது லீக் சுற்றில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் இந்திய அணியும் மோதிய போட்டி பெர்த் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்து களம் இறங்கியது. முதலில் ஆடிய அந்த அணி 44.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 182 ரன் எடுத்தது. இந்தியாவுக்கு 183 ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பேட்டிங் செய்யக் களம் இறங்கிய மேற்கு இந்தியத் தீவு வீரர்கள் துவக்கம் முதலே திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியின் வேகப் பந்து வீச்சை எதிர்கொள்வதில் அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மென் ஸ்மித்தும், கெய்லும் திணறினர். ஸ்மித் 20 பந்துகளில் 6 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். கெயில் 21 ரன் எடுத்தார். சாமுவல்ஸ் 2, ராம்தின் 0, கார்ட்டர் 21, சிம்மன்ஸ் 9 என முன்னணி பேட்ஸ்மென்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். சமி 26 ரன் எடுத்தார். அவர் ஆட்டம் இழந்த ஒரு கட்டத்தில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 85 ரன் எடுத்திருந்தது. ஆனால் பின்னர் வந்த ஹோல்டரும் டெய்லரும் ஓரளவு நின்று விளையாடினர். ஹோல்டர் 57 ரன் எடுத்தார். டெய்லர் 11 ரன் எடுத்தார். இதனால் 44.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 182 ரன் எடுத்தது. இதை அடுத்து, இந்திய அணிக்கு 183 ரன் என்ற இலக்கை அந்த அணி நிர்ணயித்தது. இதை அடுத்து, 182 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய இந்திய அணி, துவக்கம் முதலே மிக நிதானமாக ஆடியது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்தனர். ரோஹித் 7 ரன்னிலும், தவான் 9 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஆனால் நடுவரிசையில் ஆக்ரோஷம் காட்டிய கோலி 36 பந்துகளில் 33 ரன் எடுத்தார். ரஹானே 14 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா, 25 பந்துகளில் 22 ரன்களுக்கு நடையைக் கட்டினார். இதை அடுத்து, களம் இறங்கிய கேப்டன் தோனி, மிக நிதானமாக நிலையை உணர்ந்து ஆடினார். ஆனால் ஜடேஜா 13 ரன்களில் ஆட்டம் இழந்ததும், 134 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்த நிலையில் இருந்தது இந்திய அணி. அப்போது களம் இறங்கிய அஷ்வின், தோனியுடன் ஜோடி சேர்ந்து மேலும் விக்கெட் விழாமல் பொறுமையாக ஆடினார். ஒன்றும் இரண்டுமாக சேர்த்தார் அஷ்வின். அவர் 32 பந்துகளில் 16 ரன் சேர்த்தார். தோனி, 56 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 45 ரன் சேர்த்தார். இருவரும் ஆட்டம் இழக்காமல் வெற்றிக்குத் தேவையான ரன்களை சேர்த்தனர். இந்திய அணி 39.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன் சேர்த்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகளை அணியை வெற்றி கொண்டது.  3 விக்கெட் எடுத்த இந்திய அணியின் முகமது ஷமி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

3000 வருட புராதன நிம்ருட் நகரைக் கொள்ளை அடித்து தரைமட்டமாக்கிய ஐஎஸ் பயங்கரவாதிகள்

ISISபாக்தாத்: ஈராக் நாட்டில் மிகப் பழைமையான அசிரியன் நகரான நிம்ருட்டை ஐஎஸ் பயங்கரவாதிகள் தகர்த்தனர். உலகின் மிகப் பழைமையான புராதனச் சின்னங்களைத் தகர்க்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சமீபத்திய செயல் இது என இதனை ஈராக் அரசு தெரிவித்தது. அருகில் உள்ள மோசுல் நகரைச் சேர்ந்த பழங்குடியினர் இது குறித்து செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர். சன்னி பிரிவு இஸ்லாமியப் பிரிவைச் சேர்ந்த அடிப்படைவாதிகள், ஈராக்கின் இஸ்லாமிய மயமாக்கத்துக்கு முந்தைய பழமை வாய்ந்த சிலைகள், புராதனச் சின்னங்களை தகர்க்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த டைக்ரிஸ் ஆற்றின் கரையில் உள்ள உலகின் ஒரு மிகப் பெரும் சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த புராதன நகரை அவர்கள் தரை மட்டமாக்கினராம். இது குறித்து ஐஎஸ் பயங்கரவாதிகள் ஒரு வீடியோ காட்சியையும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், மோசுல் நகரின் பழைமை வாய்ந்த அருங்காட்சியகங்களை சிதைப்பதைக் காட்டியுள்ளனர்.  

நெல்லை அருகே சிறுத்தை புலி நடமாட்டம்: மக்கள் பீதி

நெல்லை மாவட்டம் கடையம் மற்றும் பாபநாசம் அகஸ்தியர் அருவி பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். தென்காசி அடுத்த கடையம் அருகே உள்ள பெற்றான்பிள்ளைகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராசு. விவசாயி. இவர் வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். இன்று வெள்ளிக் கிழமை அதிகாலை ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலி திடீரென ராசுவின் மாட்டு தொழுவத்திற்குள் புகுந்து, அங்கிருந்த 6மாத கன்றுக்குட்டியை அடித்து கொன்று இழுத்து சென்று விட்டது.இதை அறிந்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.  பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நேற்று வியாழன் காலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க சென்றனர். அப்போது அருவி அருகே உள்ள சோதனைசாவடி வனப்பகுதியில் சுற்றி திரிந்த மிளாவை சிறுத்தைப்புலி ஒன்று கடித்துக் கொன்றுதூக்கி சென்றது. இதனைப்பார்த்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள்

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகரை சேர்ந்தவர் ரவி (வயது 45) தொழிலாளி. இவரது மனைவி லதா (42). கடந்த 2013ம் ஆண்டு மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு ரவி அவரை கத்தியால் குத்திகொலை செய்துள்ளார். தடயத்தை மறைப்பதற்காக தீ வைத்து எரித்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. ரவி மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் மனைவியை கொன்ற ரவிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி நஷீர் அகமது தீர்ப்பு கூறினார்.

தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோர் மரணம்

Kishore2சென்னை: எடிட்டிங் பணியின்போது திடீர் மயக்கம் அடைந்த எடிட்டர் கிஷோர் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று மதியம் 2.30 மணி அளவில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்ததாக தகவல் வெளியானது. ஆடுகளம் படத்துக்காக தேசிய விருது பெற்றவர் எடிட்டர் கிஷோர். ‘ஈரம்’, ‘ஆடுகளம்’, ‘பயணம்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘காஞ்சனா’, ‘பரதேசி’, ‘மதயானைக் கூட்டம்’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்தவர் கிஷோர். திருமணம் செய்துகொள்ளாத 32 வயது இளம் திரைப்பட தொழில்நுட்பக் கலைஞர். தமிழ்த் திரையுலகில் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்படுவர். இவர், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விசாரணை’ படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்து வந்தபோது மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் ஓர் இடத்தில் ரத்தம் கட்டியிருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி செய்திருக்கிறார்கள். அப்போது 24 மணி நேரத்தில் நினைவு திரும்பிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் நினைவு திரும்பவில்லை. கோமா நிலையிலேயே மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல், அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் தங்கள் இரங்கலையும் அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.

நெல்லையில் தொலைக்காட்சி செய்தியாளரைத் தாக்கிய இன்ஸ்பெக்டரால் பரபரப்பு

sudalaikumarதிருநெல்வேலி: சென்னையில் இருந்து இயங்கும் செய்தி சேனல் ஒன்றின் செய்தியாளரைத் தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை பத்திரிகையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னையில் இருந்து இயங்கும் தமிழ் செய்தி சேனல் ஒன்றின் நெல்லைப் பகுதி செய்தியாளர் சுடலைக்குமார். இவரது கேமரா லென்ஸ் தொலைந்து விட்டது. இது தொடர்பாக புகார் கொடுக்க பாளை. குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனுக்கு அவர் சென்றார். அங்கே இன்ஸ்பெக்டர் கலையரசன் புகாரை பதிவு செய்ய மறுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் செதியாளரை, இன்ஸ்பெக்டர் அவதூறாகப் பேசியுள்ளார். தொடர்ந்து அவரது முகத்தில் ஒரு குத்து விட்டுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த செய்தியாளர் சுடலைக்குமார் நிலைகுலைந்து விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் சக செய்தியாள நண்பர்களுக்கு தகவல் அளித்தான் அதன்படி அங்கே விரைந்த சக நண்பர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல் துணை ஆணையர் சுரேஷ்குமாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஒருவர் செய்தியாளரைத் தாக்கிய சம்பவம், நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் குறித்து உலகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: இங்கிலாந்து

வாஷிங்டன்: பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இங்கிலாந்தின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர் லியம்பாக்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் … பாகிஸ்தான் வசம் தற்போது 120க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 24 அணு ஆயுதங்கள் தயாரிக்கும் திறன் கொண்ட அணு உலைகள் அங்கே செயல்படத் துவங்கியுள்ளது. ஆனால் தற்போது ஈரான் நாட்டு அணு ஆற்றல் திட்டம் குறித்து மட்டுமே உலகம் பேசி வருகிறது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் எதிரி நாடுகளிடம் அரசியல் ரீதியாகவே தொடர்பு கொண்டுள்ளன. ஆனால் பாகிஸ்தானைப் பொறுத்தவரை, நிர்வாகத்துக்குப் பொறுப்பானவர்கள் அரசியல்வாதிகளா, ராணுவமா, உளவுத்துறையா என்பது தெரியாமல் அனைவரிடமும் தொடர்பு கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. அரசியல் நிலைத்தன்மை இல்லாத பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் கைகளில் போய்விடும் அச்சம் காணப்படுகிறது… என்று பேசினார்.

நீலப்புரவி வீரன் – 5

நீலப்புரவி வீரன் – 5 டாக்டர் எல். கைலாசம் ஹல்டிகாடி யுத்தம் மீனாள் சத்திரிய வம்சத்தில் பிறந்தவள். அவளிடம் மன உறுதி இருந்தது. யுத்தத்துக்குச் செல்லும் முன்பு விக்கிரமன் நெற்றியில் குங்குமிட்டு அனுப்பினாள். ஹல்டிகாடி யுத்தம் இந்திய வரலாற்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. நானுற்றி நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற அந்த யுத்தத்துக்குச் சென்றவர்களும் உணர்ந்திருந்தார்கள். அதில் தாங்கள் ஆற்றப்போகும் பங்கைப் பற்றி பெருமையும் கொண்டிருந்தார்கள். இன்றைய ராஜஸ்தானில் உள்ள ஹால்டிகாடி  நோக்கி படை சென்றது. மகாராணா பிரதாப்சிங்கின் வீரர்கள் யுத்தத்தில் பல சாகசங்களைச் செய்தார்கள். எதிர் அணியில் தனது சகோதரர் சக்திசிங் இருப்பதைப் பார்த்து  மனம் வெறுத்துப் போனார் ராணா. அதுமட்டுமல்ல மொகலாயப்படைத் தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. டோமர்களும் பர்குர்ஜர்களும், பில் வீரர்களும் இறந்துபோனதை பார்த்த மகாராணா பிரதாப்சிங் மனமுடைந்து போனார். அதுமட்டுமல்ல மொகலாயப்படையை தலைமை தாங்கி வந்தது ராஜபுத்திர ரத்தமான மான்சிங்  என்று அறிந்ததும் அவரின் உள்ளம் துடித்துப் போனது. ராஜபுத்திர வழக்கப்படி மகாராணா பிரதாப்சிங், மான்சிங்கை தனியாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் வந்தது. தனது சேடக் புரவியில் மகாராணா பிரதாப்சிங், மான்சிங் இருந்த யானையின் அருகே வந்தார். சேடக் தனது காலை யானையின் மீது வைத்தது. மகாராணா பிரதாப்சிங் தனது ஈட்டியை மான்சிங் மீது குறிபார்த்து எறிந்தார். மான்சிங் தனது தலையைக் குனிந்து கொண்டார். கூர்மையான ஈட்டி பட்டு பாகன் இறந்தார். இந்தச் சமயத்தில் பீரங்கி வெடிக்கும் சப்தம் கேட்க, சேடக் தடுமாறி ஓடியது. பீரங்கி சப்தம்  மீண்டும் கேட்க மகாராணா பிரதாப்சிங் தயங்கிய சமயத்தில் புரவி சற்றுத் தடுமாறி ஓடியது. மொகலாயாரை எதிர்க்க மகாராணா பிரதாப்சிங் கட்டாயம் வேண்டும் என்று சேடக் நினைத்தது போலும். அந்த சமயம் மகாராணா பிரதாப்சிங் போன்று உடை அணிந்து சர்தார்சிங், சேடக் போன்று இருந்த வேறு வெள்ளை புரவியில் தோண்றினார். மான்சிங்கின் ஈட்டி சர்தார்சிங்கின் நெஞ்சைத் தாக்க அவர் அங்கேயே இறந்து போனார். மகாராணா பிரதாப்சிங் சேடக்கின் மீது விரைந்து சென்றார். அப்பொழுது தனது காலில் ஈரம் படுவதை உணர்ந்தார். மகாராணா பிரதாப்சிங் குனிந்து பார்க்க, ஆகா! சேடக் கால்களில் இருந்தல்லவா இரத்தம் வருகிறது என்று எண்ணியவர். உடனே புரவியை நிறுத்தி கீழே இறங்கினார். சிற்றோடை ஒன்று அருகில் இருந்தது. அதன் அருகே சென்று தனது துணியை நனைத்து சேடக் அருகே வந்தார். அதற்குள் காரியம் முடிந்து போயிருந்தது. சேடக் தனது உயிரைக் கொடுத்து மகாராணா பிரதாப்சிங்கைக் காப்பாறியிருந்தது. அவருக்குப் புரிய அவரது கண்களில் இருந்து நீர் வடிந்தது. மகாராணா பிரதாப்சிங் மனம் சோர்ந்து சேடக் அருகிலேயே அமர்ந்தார். எங்கிருந்தோ பீம்சிங்கின் பிரார்த்தனைக் குரல் கேட்டது. அதுமட்டுமல்ல. இரண்டு புரவிகள் வரும் ஒலியும் கேட்டது. அநேகமாக மொகலாயப்படை வீரர்களாகத்தான் இருக்கும். மகாராணா பிரதாப்சிங், சேடக் இறந்த கவலையில் ஆழ்ந்து சேடக் அருகிலேயே இருக்க, வந்த துருக்கிய வீரர்கள் மிகவும் ஆக்ரோசமாக இருந்தார்கள். மகாராணா பிரதாப்சிங்கை அழித்துவிடுவது என்ற எண்ணத்தில் அவர்கள் இருந்தனர். சேடக் இறந்த வருத்தத்தில் இருந்த மகாராணா பிரதாப்சிங்கின் மனம் வேறு எதிலும் பதியவில்லை. ஓடையின் அருகே இருந்த அவரைக் கொடுமையான வாட்களைக் கொண்டு தாக்க ஓடிவந்தனர். அந்த ஒரு விநாடி நேரத்தில் ராணாவின் உயிரும் போயிருக்கும். மேவாரின் சரித்திரம் மாறியிருக்கும். ஆனால் லிங்கேசுவரன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டல்லவா இருக்கிறான். அவன் விடுவானா என்ன? மீண்டும் வேகமாக வரும் புரவியின் சப்தம் கேட்டது. வந்தவன் சக்திசிங். போர்க்களத்தில் மகாராணா பிரதாப்சிங்கிக்கு தனது உயிரைக் கொடுத்த வீரரின் செயல் ராணாவின் சகோதரர் சக்திசிங் மனதை மாற்றியிருந்தது. மகாராணா பிரதாப்சிங்கை அவர்கள் அழிக்கப் போகிறார்கள் என்று புரிந்து அவர்களைத் தொடர்ந்து வந்தார். மகாராணா பிரதாப்சிங்கின் சகோதரரான சக்திசிங் மொகலாயர் பக்கம் சேர்ந்து இருந்தாலும் சகோதரபாசம், மகாராணா பிரதாப்சிங்கைப் பார்த்ததும் அவருக்கு பீரிட்டது. மகாராணா பிரதாப்சிங்கை நோக்கி துருக்கிய வீரர்கள் வாட்களை தூக்கிய நேரத்தில் சக்திசிங் அங்கு வந்தார். அவர்களை நோக்கி “முதலில் என்வாளுக்குப் பதில் சொல்லுங்கள்” என்றார். தனது வாளினால் அந்த துருக்கிய வீரர்களை எதிர்கொண்ட சக்திசிங், சற்று நேரத்தில் அவர்கள் இருவரையும் லிங்கேசுவரனிடம் அனுப்பினார். மனமுடைந்து இதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மகாராணா பிரதாப்சிங், தனது தம்பியை கட்டித்தழுவினார். சக்திசிங் கதறி அழுதார். தான் எதிரிபக்கம் சேர்ந்ததற்கு மன்னிப்பு கோரினார். யார் கேட்டாலும் அதை கொடுக்கும் மகாராணா பிரதாப்சிங், அவன் கேட்டதையும் கொடுத்தார். சக்திசிங் தனது புரவியைக் கொடுத்தார். ராணா ஆரவல்லி மலைத் தொடருக்கு பின்னால் அவன் கொடுத்த புரவியில் விரைந்து சென்றார். நாம், மகாராஜா ராணாவை சற்று நேரம் தனிமையில் விட்டுவிட்டு, நமது கதாநாயகன் விக்கிரமனைத் தொடர்வோம். ஹல்டிகாடி யுத்தத்தில் அவன் ஆற்றிய பங்கைப் பார்த்தோம். தான் பிறந்த மேவாருக்கும், மகாராஜாவுக்கும் பெருமை தேடித்தரும் விதமாக அவன் செய்கைகள் அமைந்ததையும் பார்த்தோம். ராஜபுத்திரர்களின் யுத்தம் நேருக்கு நேராக இருக்கும் அது தவிர யுத்தநியாயாங்களை அவர்கள் என்றும் விட்டுக் கொடுத்ததில்லை. ஆனால் விக்கிரமனை எதிர்த்த துருக்கியவீரன் ஒருவன் அவனைப் பின்புறமாக வாளால் தாக்கினான். இதைச் சற்றும் எதிர் பார்க்காத விக்கிரமன் அப்படியே விழுந்தான். அவன்மேல் மற்ற ஒரு ராஜபுத்திரவீரனும் விழ, யுத்தத்தின் வேகத்தில் யாருக்கும் எதையும் கவனிக்க நேரமில்லை. மகாராணா பிரதாப்சிங் புரவியில் மறைந்ததும், யுத்தவேகம் குறைந்தது. மொகாலாயப்படையை தலைமை ஏற்று வந்த மான்சிங், மகாராணா பிரதாப்சிங் இறந்ததாக நினைத்து, தான் வெற்றி பெற்றதாக அறிவித்தான். பிறகுதான் மகாராணா பிரதாப்சிங்கின் வேடத்தில் இருந்தது சர்தார்சிங் என்றும் புரிந்தது. மகாராணா பிரதாப்சிங் தப்பியதையும் ஆரவல்லி குன்றுகளுக்குள் அவர் மறைந்து கொண்டதையும் அறிந்து கொண்டான். மகாராணா பிரதாப்சிங்கை கண்டுபிடிப்பது கடினம் என்றும் புரிந்து கொண்டான். மொகாலயா வீரர்கள் அதிகளவில் மடிந்தது அவனுக்கு வேதனையைக் கொடுத்தது. அவன் மகிழ்வுவெல்லாம் வடிந்தது. வேறு வழியில்லாமல் தில்லி திரும்ப உத்தரவிட்டான். எஞ்சிய மொகலாயப் படை திரும்பியது.

சுட்டெரிக்கும் வெயில்: கோடைக்காலத்தில் தமிழ்நாட்டில் இன்னும் மோசமாகும்!

சென்னை: தமிழகத்தில் தற்போது வெயிற் காலம் என்பதால், வெயில் சுட்டெரிக்கத் துவங்கியுள்ளது. தமிழகத்தில் பங்குனி, சித்திரை மாதங்களில் வழக்கம்போல் வெப்பம் அனல் கக்கும். ஆனால் தற்போது, பிப்ரவரி மாத இறுதியிலேயே கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கியது. குறிப்பாக நெல்லை மாவட்டம் குற்றாலம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நீர் இன்றி மலைப் பகுதியில் வறண்டு கிடக்கிறது. மேலும், சென்னை, வேலூர், திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. காற்றில் ஈரப்பதம் குறைந்து வருவதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாம். தற்போது தமிழகத்தில் பரவலாக 95 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது . நெல்லை, மதுரை, திருச்சி, தர்மபுரி, திருவண்ணாமலை, சென்னை என அனல் அதிகமாக இருக்கும் என்றும், கடந்த காலத்தை விட இந்த முறை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றும் 112 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகின்றனர்.