Home Blog Page 80

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடி திருவிழா கொடியேற்றம்..

1000838351 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு ஆண்டு தோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்ட திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கொடிப்பட்டம் மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு கருட கொடியேற்றம் நடைபெற்றது.

1000838352 - 2026

முதல் நாளான இன்று இரவு ஆண்டாள் ரெங்கமன்னார் 16 வண்டி சப்பரத்தில் 4 ரத வீதிகளில் உலா வருகின்றனர். ஜூலை 24-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனம் மற்றும் 5 கருட சேவையும், 26-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது. 28-ம் தேதி காலை 9:05 மணிக்கு முக்கிய நிகழ்வான திருஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது.

அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் சர்ரகரையம்மாள் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப் பூரத் தேர் திருவிழா  மதுரை திருவண்ணாமலை சிதம்பரம் கோயில் திருவிழா போல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

இந்த ஆண்டு இன்று காலை கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. கருடாழ்வார் உருவம் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மேளதாளங்கள் முழங்க ஆகம முறைப்படி கொடி ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது

   இந்த திருவிழா காலங்களில் பதினாறு வண்டி சப்பரம், தங்கபல்லக்கு, சிம்மவாகனம், சேஷவாகனம், ஐந்து கருடசேவை, பெரிய அன்னவாகனம், யானைவாகனம், கண்ணாடி சப்பரம், பூ பல்லக்கு, குதிரை போன்ற வாகனங்களில் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளி இரவில் திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆடிப் பூரத்தன்று 28.07.2025 திங்கட்கிழமை  நடைபெறுகிறது.
  இந்த திருவிழாவிற்காக பிரமாண்டமான பந்தல் போடப்பட்டு அலங்கார மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையில் தினமும் மதியம் 1 மணி முதல் இரவு 10 மணிவரை இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம், சொற்பொழிவு, வீணை இன்னிசை, நடனம், ஆய்வரங்கம், பஜனை, வில்லிசை, நாமசங்கீர்த்தனம், வயலினிசை ஆகியவை நடைபெறுகிறது.  விழாவை முன்னிட்டு ஏராளமான போலிஸார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

ஊழல் அறநிலையத்துறை, கோவிலை விட்டு வெளியேற வேண்டும்!

hindumunnani
hindumunnani

ஊழலில் திளைக்கும் இந்து சமய அறநிலையத்துறை, கோவிலை விட்டு வெளியேற வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை கைது செய்துள்ளது. தனியார் கோவில் வருமானப் பிரச்சினையில் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு.

அரசு அலுவலகங்களில் அதிக ஊழல், முறைகேடு மற்றும் வழக்குகளை சந்திக்கும் துறையாக இந்து சமய அறநிலையத்துறை முதலிடம் பெற்று சாதனைப் படைத்து வருகிறது.

மற்ற துறைகளில் மக்களுக்கு சாதகமாக முறைகேட்டில் ஈடுபடத் தான் லஞ்சம் வாங்குவார்கள். இந்து சமய அறநிலையத்துறையில் கோவிலுக்கு தானமாக கொடுப்பதற்கு மக்களிடம் லஞ்சம் வாங்கும் விநோதம் இங்கு தான் பார்க்க முடியும்.

லஞ்சம் வாங்கும் பலரில் இப்படி யாராவது ஒருவர் சிக்கும்போது, ஆக இது நல்ல நிர்வாகம் என ஏமாந்திட வேண்டாம். திருப்பூரில் லாட்ஜில் ரூம் போட்டு பொய் கணக்கு எழுதிக் கொண்டிருந்த அதிகாரிகளை இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கையும் களவுமாக பிடித்துக்கொடுத்த வழக்கு என்னவாயிற்று?

இதுவரை பிடிபட்ட அதிகாரிகளுக்கு, பதவி உயர்வு அளித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் தனக்கு அருகில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு கௌரவத்தை தருகிறார்.

சென்ற ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்ட சிலை கடத்தல் வழக்குகள் மற்றும் அதன் மீதான நடவடிக்கைகள் என்ன? சத்தமே இல்லாமல் அந்த வழக்குகள் சமாதி கட்டப்பட்டன.

காவல்துறையில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஒன்று இருக்கிறது. அது இருக்கிற இடம் தெரியாமல் ஆக்கிய பெருமை செயல்பாபு என்று தமிழக முதல்வர் புகழும் அமைச்சர் சேகர் பாபுவிற்கே சேரும்.

மூவாயிரம் கோவில்களில் குடமுழுக்கு என மார்தட்டுகிறார் அமைச்சர் சேகர் பாபு. இந்து சமய அறநிலையத் துறைக்கு தனியான ஸ்தபதி கட்டுமான ஒப்பந்தக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாகத்தான் எந்த செயலும் செய்ய முடியும்.

இந்த செயல்பாடு தரமான நிர்வாகத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இதையே தங்களுக்கு சாதகமாக்கி ஊழல் செய்கிறார்கள் அமைச்சரும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும். அதனால் தான் கும்பாபிஷேகம் முடிந்து சில நாட்களில் அது சிதிலமடைந்து விடுகிறது.

இதுபோன்ற அவலங்களை பார்த்த பிறகும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கோவில்கள் இருப்பது எத்தகைய விபரீதம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

எவ்வளவு வருமானம் வந்தாலும் சினிமா தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்பது போல தரிசன கட்டணத்தை உயர்த்துவதிலேயே குறியாக இருக்கிறார் அமைச்சர். இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை சீரழிக்கும் வகையில் தரிசன கட்டணம் மூலம் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்தி பொருளாதார தீண்டாமையை திணிக்கிறது இந்து சமய அறநிலையத்துறை.

எனவே கோவில் நிர்வாகத்திலிருந்து இந்து சமய அறநிலையத் துறையும், அரசும் வெளியேற வேண்டும். சர்ச், மசூதிகள் இயங்குவதைப் போல தனித்து இயங்கும் சுதந்திர வாரியத்திடம் கோவில்களின் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்…

ஆடி வெள்ளிக் கிழமை கோயில்களில் சிறப்பு பூஜைகள்!

adi velli special pooja - 2026

மதுரை மாவட்ட கோயில்களில், ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி, கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது‌.

மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், ஆடி வெள்ளிக்கிழமை மை, ஒட்டி, வராஹி அம்மன், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பெண்கள், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வைத்து வழிபட்டனர்.
இதேபோல் மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கு கோயில் அர்ச்சகர் சிறப்பு அபிஷேகங்களை செய்தார்.

மதுரை வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில் ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு. பூஜைகளை அர்ச்சகர் காந்தன் செய்தார்.
நிர்வாகிகள் முத்துக்குமார், மணி மாறன் ஆகியோர்கள், பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினர்.

மதுரை ஆவின் சாத்தமங்கலம் அருள்மிகு பால விநாயகர் ஆலயத்தில், ஈஸ்வர பட்டர் சிறப்பு பூஜைகளை நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார்.
மதுரை அண்ணாநகர் யாணைக் குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்தில், பட்டர் மணி கண்டன் முத்து மாரியம்மனுக்கு, சிறப்பு பூஜைகளை நடத்தினார்.

குலசேகரன் கோட்டை மீனாட்சி அம்மன் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில்
பழமையும் பெருமையும் வாய்ந்த குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருளி அருள் பாலிக்கும் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனை செய்யப்பட்டது.

இந்த பூஜையினை, கோவில்பட்டர் கிருஷ்ணமூர்த்தி செய்தார். இதில், ஏராளமான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. இதன் ஏற்பாடுகளை, கோவில் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.

வந்தே பாரத் ரயிலுக்கு 15 நிமிடம் முன் கூட ரிசர்வ் வசதி!

chennai nellai vandebharat express - 2026

வந்தே பாரத் ரயில்கள் இடையில் நின்று செல்லும் ரயில் நிலையங்களில் 15 நிமிடங்களுக்கு முன்பு வரை பயணச்சீட்டு பதிவு செய்யும் வசதி தரப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில்கள் புறப்படும் இடத்திலிருந்து புறப்பட்டு விட்டால், இருக்கைகள் காலியாக இருந்தாலும் கூட வழியில் உள்ள ரயில் நிலையங்களில் உள்ள பயணிகள் பயண சீட்டு முன்பதிவு செய்ய முடியாது.

தற்போது 8 வந்தே பாரத் ரயில்களுக்கு இருக்கைகள் காலியாக இருந்தால் வழியில் உள்ள ரயில் நிலையங்கள் உள்ள பயணிகள் ரயில் வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை பயண சீட்டு முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதி தற்போது அறிமுகியுள்ளது.

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலுக்கு இரு மார்க்கங்களிலும்

(20627/20628) மற்றும் மதுரை – பெங்களூர் வந்தே பாரத் ரயிலுக்கும் (20671)

மங்களூர் – திருவனந்தபுரம் – மங்களூர்,

கோயம்புத்தூர் – பெங்களூரு,

மங்களூர் – கோவா மட்கான்,

சென்னை சென்ட்ரல் – விஜயவாடா

வந்தே பாரத் ரயில்களுக்கும் இந்த புதிய வசதி மூலம் பயணிச்சிட்டு பதிவு செய்து கொள்ளலாம்.

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஜூலை 28ல் ஆடிப்பூரம்; நாளை தேரோட்டத் திருவிழா தொடக்கம்!

srivilliputhur therottam 2 - 2026
#image_title

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆடிப்பூரத் திருவிழா வருகிற ஜூலை 28-ஆம் தேதி ஆடி பூரம் நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

இதற்காக கடந்த ஜூன் 6-ஆம் தேதி ஆடிப்பூரப் பந்தல் அமைத்து, தேருக்கு முகூா்த்தக் கால் நட்டு, தேரை அலங்கரிக்கும் பணிகள் தொடங்கின. வருகிற ஜூலை 20-ஆம் தேதி ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 20ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜூலை 28ல் தேரோட்டம் நடக்கிறது.

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் தேரோட்ட திருவிழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநில பக்தர்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்நிலையில் இந்த ஆண்டும் ஜூலை 20 காலை 7:00 மணிக்குமேல் 8:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் ஆடிப்பூரத் திருவிழா துஷாரோகணத்துடன் துவங்குகிறது. அன்று இரவு 10:00 மணிக்கு பதினாறு வண்டி சப்பர விழா நடக்கிறது.

ஜூலை 24 காலை 10:00 மணிக்கு ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு 10:00 மணிக்கு 5 கருட சேவையும், ஜூலை 26 இரவு 7:00 மணிக்கு கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள், ரங்க மன்னார் சயனத்திருக்கோலமும், ஜூலை 28 காலை 9:10 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. ஜூலை 31 மாலை 6:00 மணிக்கு புஷ்ப யாகத்துடன் ஆடிப்பூரத் திருவிழா நிறைவடைகிறது.

விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் அறங்காவலர்கள், கோயில் பட்டர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், சதுரகிரி கோயிலில் திருவிழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் வருகிற 28ம் தேதி நடைபெற உள்ளது. ஆண்டாள் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தயாராகி வரும் தேரையும் தேர் வரும் பாதைகளான ரத வீதிகளையும் கலெக்டர் சுக புத்திரா, எஸ்பி கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவகாசி சப் கலெக்டர் பாலாஜி, இந்து அறநிலையத்துறை உட்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. ஆடி அமாவாசை 24ம் தேதி நடைபெற உள்ளது. நேற்று தாணிப்பறை அடிவாரப் பகுதி மற்றும் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் சுகபுத்ரா ஆய்வுப் பணியில் ஈடுபட்டார்.

தற்காலிக பஸ் ஸ்டாண்ட், மருத்துவ வசதி, பக்தர்களுக்கு தேவையான தங்கும் வசதி, கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட எஸ்.பி கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் தேவராஜ், வத்திராயிருப்பு தாசில்தார் ஆண்டாள், திட்ட இயக்குனர் கேசவதாசன், கோயில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், சதுரகிரி கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி சந்திரகுமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விநாயகர் சதுர்த்தியை அரசு விழாவாக அறிவிக்கக் கோரி மனு!

thiruvannamalai atheenam in madurai - 2026

விநாயகர் சதுர்த்தியை அரசு விழாவாக அறிவிக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதன் பின் வண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் செய்தியாளர்களிடம் இது குறித்துப் பேசினார்.

மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ஆதினத்தோடு இணைந்து தென்னிந்திய இஸ்லாமிய மக்கள் எழுச்சி கழக தலைவர் சுல்தான் என்பவரும் மனு அளித்த சுவாரஸ்யம்:

சிபிஐ அமைப்பை பாஜக ஆர் எஸ் எஸ் அமைப்பின் கைக்கூலிகள் என, பேசிய த.வெ.க. தலைவர் விஜய் பேசியதைக் கண்டிக்கிறோம் என்று குறிப்பிட்ட திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டதாவது…

விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் தமிழ்நாடு அரசு, மகாராஷ்டிரா மாநிலத்தை முன்மாதிரியாக கொண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என கூறி அகண்ட இந்து ராஷ்டிரா தலைவர் திருவண்ணாமலை ஆதினம் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது, மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் கருணாநிதி சுவாமிகள் ஆதினத்தோடு இணைந்து தென்னிந்திய இஸ்லாமிய மக்கள் எழுச்சி கழகத்
தலைவர் சுல்தான் என்பவரும் வருகை தந்து கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்து பேசிய கருணாநிதி சுவாமிகள் :-
மகாராஷ்டிரா மாநிலத்தை போல தமிழகத்திலும் திமுக அரசு இந்து மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு விநாயகர் சதுர்த்தியை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

மேலும், அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது சிபிஐ விசாரணை அமைப்பை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடைய கைக்கூலி போல செயல்படுவதாக பேசியது கண்டிக்கத்தக்கது அரசியல் மேடையில் விசாரணை அமைப்பு குறித்து அவதூறாக பேசுவது ஏற்கத்தக்கது அல்ல; இது தொடர்பாக, விரைவில் விஜய் மீது புகார் அளிக்க உள்ளோம் என, தெரிவித்தார் மேலும் தலைமையிடம் பேசி விஜய்க்கு எதிராக போராட்டம் குறித்தும் முடிவெடுக்க உள்ளோம் என்றார்.

இது குறித்து, பேசிய சுல்தான் மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தியை அரசு விழாவாக அறிவிக்க வேண்டுமென மனு அளிப்பதற்காக சுவாமிகளுடன் சேர்ந்து தானும் வந்துள்ளதாகவும் விநாயகர் சதுர்த்தியை வைத்து மத ரீதியாக பேசிவரும் அமைப்புகள் மத்தியில் மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் மனு அளிக்க வந்திருப்பதாக தெரிவித்தார்.

சபரிமலை நிறைபுத்தரி பூஜை நெற்கதிர் ஒப்படைக்கும் நிகழ்வுக்கு தென்காசி ஹரிஹரன் தேர்வு!

hariharan tenkasi - 2026

சபரிமலை நிறைபுத்தரிசி நெற்கதிர்கள் அச்சன்கோவிலில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாகக் கொண்டு வர அச்சன்கோவில் திரு ஆபரணப்பெட்டி தமிழக பொறுப்பாளர் ஹரிஹரன் குருசாமி பெயரில் தேவசம்போர்டு உத்தரவு வழங்கியுள்ளது.

கேரளாவில் விளைந்த நெற்கதிர்களை கோவிலில் வைத்து பூஜை செய்த பின்னரே அறுவடையை தொடங்குவார்கள். இதற்கு நிறை புத்தரிசி பூஜை என்று பெயர்.

இந்த நிறை புத்தரிசி பூஜை ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும். இந்த பூஜை நடத்துவதற்கான நாள் நேரம் ஆகியவற்றை திருவனந்தபுரம் அரண்மனையில் ஜோதிடர்கள் குறித்துச் சொல்கின்றனர். இந்த ஆண்டு வரும் ஜூலை 30ல் நாள் குறிக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இப்படி நடக்கும் நிறைபுத்தரிசி பூஜை விசேஷமானது.

இதற்காக நெற்கதிர்கள் தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு அருகில் உள்ள அச்சன்கோவிலில் இருந்து கொண்டு செல்லப்படும். இவ்வாறு நெற்கதிர்கள் கொண்டு செல்லப்படும் நிகழ்ச்சிக்கு நிறை புத்தரி கோஷ யாத்திரை என்று பெயர். செங்கோட்டைக்கு அருகில் உள்ள அச்சன்கோவிலில் இருந்து ஆண்டுதோறும் பல்வேறு கோயில்களுக்கு நெற்கதிர்கள் கொண்டு செல்லப்படும்.

இந்த ஆண்டு இந்த வைபவம் வரும் 29ஆம் தேதி நடக்க உள்ளது. இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த்துடன் அச்சன்கோவில் திருஆபரண கமிட்டி தலைவர் ஏ.சி.எஸ்.ஜி.ஹரிஹரன் குருசாமி நிர்வாகிகள் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதன்படி, சபரிமலைக்கான நிறைபுத்தரி கோஷயாத்திரை அச்சன்கோவிலில் இருந்து வரும் 29ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தலைமையில் தொடங்குகிறது. அங்கிருந்து ஆரியங்காவு ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில், புனலூர் கிருஷ்ணன் கோவில், உள்ளிட்ட 21 கோவில்களுக்கு ஊர்வலமாக சென்று அந்தந்த கோவிலுக்கான நிறைபுத்தரி நெற்கதிர்களை ஒப்படைத்து விட்டு பம்பையை அடைகிறது

இந்நிலையில், சபரிமலை நிறைபுத்தரி பூஜைக்கான நெற்கதிர்கள் கோஷ யாத்திரையாக அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி கமிட்டி தமிழக பொறுப்பாளர் தென்காசி ACS ஹரிஹரன் குருசாமி மற்றும் கமிட்டியினர் தேவசம் போர்டு அதிகாரிகள் மேற்பார்வையில் சன்னிதானம் கொண்டு சென்று ஒப்படைக்கும் உத்தரவுக் கடிதத்தை தேவசம் போர்டு வழங்கியது.

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படுவது இதுவே முதல் முறை. நிறை புத்தரிசி பூஜை கேரளாவில் குறிப்பாக சபரிமலையில் அறுவடை காலம் தொட்டு நடக்கும் பூஜைகளில் மிகச் சிறப்பானது. விளைந்த நெற்கதிர்களை அறுவடைக்கு முன் சுவாமிக்கு படைப்பது இதன் தாத்பரியம்!

ஆடி மாத பூஜைக்கு சபரிமலை நடை திறப்பு..

1000831651 - 2026

ஆடி கற்கடகம் மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று புதன் கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபம் ஏற்றி வைத்தார்.

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நவக்​கிரக பிர​திஷ்டை வழி​பாட்​டுக்​காக கடந்த 11-ம் தேதி மாலை​யில் நடை திறக்​கப்​பட்​டது.தொடர்ந்​து, 12-ம் தேதி பல்​வேறு வழி​பாடு​கள் நடை​பெற்​றன. கடந்த 13-ம் தேதி நவக்​கிரக கோயில் புனர்​பிர​திஷ்டை மற்​றும் கும்​பாபிஷேகம் நடை​பெற்​று, அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்​தப்​பட்​டது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். அதன்படி ஆடி மாத பூஜைக்காக கோவில் நடை இன்று (புதன் கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டது. நடை திறப்பையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் மட்டும் நடைபெறும்.

நாளை (வியாழக்கிழமை) முதல் 21 -ந் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். மேலும் 21-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

நிறை புத்தரி பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை மீண்டும் 29-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.

பயங்கரவாதிகள் குறித்து கண்காணிப்பின்றி கோட்டை விடும் தமிழக உளவுத்துறை!

kadeswara subramaniam hindu munnani - 2026

தமிழகத்தில் இஸ்லாமிய மத பயங்கரவாதச் செயலை கண்காணிக்காமல் இருக்கும் தமிழக உளவுத்துறை மற்றும் தமிழக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

1998 ஆம் ஆண்டு அல் -உம்மா பயங்கரவாதிகளால், கோவையில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்து 58 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய, முக்கிய குற்றவாளிகளை கடந்த வாரம் முதல் தமிழக பயங்கரவாத தடுப்பு போலீசார்(ATS) கைது செய்து வருகின்றனர். பிடிபட்ட பயங்கரவாதிகளிடமிருந்து பல அதிர்ச்சி தரும் தகவல்கள் விசாரணையில் தெரிய வருகிறது .

இரண்டு நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் கைது செய்யப்பட்ட தலைமறைவு குற்றவாளிகளான அபூபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி ஆகியோர் தங்களது வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்களை தந்துள்ளனர்.

அதில் அவன், அல்-உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா தங்கள் ஊரான நாகப்பட்டினத்திற்கு வந்து ரகசிய கூட்டங்கள் நடத்தி போலீஸாரிடம் சிக்காமல் தப்பிப்பது எப்படி என்ற வித்தைகளை கற்றுக் கொடுத்தார் எனக் கூறி இருப்பதும்,

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தபோதும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடிக்கு வெடி மருந்துகள் வாங்க இரண்டு முறை வந்ததாகவும் தெரிவித்து இருப்பது, தமிழ் உளவுத்துறை செயலிழந்து இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தேடப்படும் பயங்கரவாதிகளான இவர்கள் தமிழகத்தில் சுதந்திரமாக வந்து வெடி பொருட்களுக்கான மருந்துகள் வாங்கிய போது தமிழக உளவுத்துறை உறக்கத்தில் இருந்துள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.

இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? இவர்கள் வெடி மருந்துகள் வாங்கி மீண்டும் ஒரு சதித் திட்டத்தை அரங்கேற்ற முயற்சி செய்தார்களா? என்பதை பற்றி தமிழக காவல்துறை, இவர்கள் பிடிபடும் வரை கண்டுகொள்ளவில்லையா? என்பதும் பல சந்தேகங்களை எழுப்புகிறது .

பாகிஸ்தானில் வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி பெற்ற இவர்கள் தமிழகத்தில் நாச வேலைக்கு சதி செய்துள்ளனர். அது மட்டுமல்லாது இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன், பாஜக நிர்வாகி அரவிந்த ரெட்டி ஆகியோரை படுகொலை செய்த போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய மூவரும் அபூபக்கரிடம் பயிற்சி பெற்றவர்களாக அவன் சொன்ன வேலையை செய்து முடித்துள்ளனர். பல படுகொலைகளுக்கு இவன் மூளையாக செயல்பட்டுள்ளான்.

இந்து முன்னணி வெள்ளையப்பன், பாடி சுரேஷ், பாஜகவின் அரவிந்த் ரெட்டி ஆகியோர் ஜிகாதிகளால் கொலை செய்யப்பட்ட பொழுதே இதற்குப் பின்னணியில் மிகப்பெரிய பயங்கரவாத சதி இருக்கிறது என்று இந்து முன்னணி தெரிவித்தது.

உடனடியாக தலைமறைவான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் இந்து முன்னணி வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டது.

ஆனால் அதனை அலட்சியப்படுத்திய காவல்துறை உயர் அதிகாரி ராமானுஜம் அவர்கள், ஒவ்வொரு கொலைக்கும் வேறு வேறு பொய்யான காரணங்களைச் சொல்லி அறிக்கையாக வெளியிட்டார்.

காவல்துறையின் அலட்சியப் போக்கால் துணிச்சல் பெற்ற இஸ்லாமிய பயங்கரவாதிகள் தொடர் கொலைகளில் ஈடுபட்டனர்.

பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அதில் கிடைத்த பணத்தை கொண்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யும் பண முதலைகளாக மாறி உள்ளதைக் கூட அறியாதவர்களாக உளவுத்துறை இருந்திருக்கிறது.

தற்போது பிடிபட்டிருக்கும் அபூபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோருக்கு பயிற்சி தந்த கொடூரன் பாஷா இறந்தபோது பல்வேறு அரசியல் கட்சியினர் அந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பயங்கரவாதி பாஷாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அரசியல்வாதிகள், இந்த பயங்கரவாதிகளுக்கு பின்னணியில் இருக்கிறார்களா என்று கேள்வி எழுகிறது.

குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பயங்கரவாதி பாஷாவை அப்பா என்று கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

தற்போது அபூபக்கர் சித்திக்கின் தூண்டுதலால் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்த போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் போன்ற கொடிய பயங்கரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என சீமான் குரல் கொடுக்கிறார்.

அப்படி என்றால் பயங்கரவாதிகளுக்கும் சீமானுக்கும் தொடர்புள்ளதா? என்ற கோணத்திலும் தீர விசாரிக்க வேண்டும்.

மத்திய அரசின் மூலம் தகவல் பெற்று பயங்கரவாத தடுப்பு போலீஸார் இவர்களை பிடித்துள்ளனர். ஏ. டி .எஸ் உருவாக்கப்படுவதற்கு முன்பு தமிழக உளவுத்துறையும், காவல்துறையும், பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை அறியாமல் இருந்ததே பல படுகொலைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

இவர்கள் எங்கிருந்து, எதற்காக வெடி மருந்துகள் வாங்கினார்கள், இன்னும் என்னென்ன சதி செயலுக்கு திட்டம் தீட்டி இருந்தார்கள் என்பது பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும்.

அது மட்டுமன்றி இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களையும், பண உதவி செய்தவர்களையும், இந்த பயங்கரவாதிகளின் உறவினர்களையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்!

நல்லதங்காள் கோயிலில் அறநிலையத்துறை பாலாலயம் செய்ய எதிர்ப்பு; மக்கள் தீக்குளிக்க முயற்சி!

nallathangal temple issue - 2026

வத்திராயிருப்பு அருகே நல்லதங்காள் கோயிலில் அறநிலையத்துறை பாலாலயம் நடத்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்; பக்தர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம்  வத்திராயிருப்பு அருகே  அர்ச்சுனாபுரத்தில் அமைந்துள்ளது நல்லதங்காள் கோயில்.   தமிழக பெண்களின் கலாச்சாரத்திற்கும்,  அண்ணன் தங்கை உறவிற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய நல்லதங்காள்,  அவர் வாழ்ந்த 15-ம் நூற்றாண்டில் நாட்டில் நிலவிய கடும் பஞ்சம் காரணமாக பசியால் துடித்த தனது ஏழு பிள்ளைகளையும் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தானும் அந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.   

அவர் தற்கொலை செய்து கொண்ட கிணறு அவர் தங்கிய  இடம் ஆகியவை நினைவுச் சின்னமாகவும் கோயிலாகவும் எழுப்பப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வருகிறது. 

 அக்கோயிலில் நல்லதங்காள் பத்திரகாளியம்மன் வடிவில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். தமிழகம் முழுவதிலும் இருந்தும் குழந்தை வரம் வேண்டி ஏராளமானோர் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இக்கோயில் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி    கோயில்  கதவுகள் உடைக்கப்பட்டு நல்லதங்காள் சிலை உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

அர்ச்சுனாபுரம் கிராம மக்கள் புதிய சிலை வைப்பதற்காக அக்கோயிலில் பாலாலயம் செய்தனர். அதற்கான பணிகளை செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இந்து சமய அறநிலைத்துறை சார்பாக பாலாலயம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு அதிகாரிகள் அங்கு வருவதாக இருந்தது. இதை அறிந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயிலுக்குள் பொதுமக்கள் செல்லாமல் போலீசார் தடுத்ததால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளும் முள்ளும் ஏற்பட்டது. கிராம மக்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் பாட்டில்களை அப்புறப்படுத்தினர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏ டி எஸ் பி அசோகன், ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தைக் கண்டித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு போராட்டம் நடத்தும் என்று அறிவித்தது. அந்த அமைப்பின் சார்பில் பா.சரவண கார்த்திக் வெளியிட்ட கண்டன அறிக்கையில், “ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள புகழ் பெற்ற நல்லதங்காள் கோவிலை ஊர் மக்களிடம் இருந்து கைப்பற்ற அறநிலையத்துறை காவல்துறையை வைத்து பொதுமக்களை மிரட்டுவது, கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது. பொதுமக்களை திரட்டி மிக பெரிய அளவில் காவல்துறை மற்றும்
அறநிலையத்துறையை கண்டித்து விசுவ ஹிந்து பரிஷத் திருக்கோவில் அர்ச்சக்
புரோகித் பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும். பொதுமக்கள் இத்தனை ஆண்டுகளாக தங்கள் சொந்த பணத்தில் பராமரித்த ஒரு கோவிலை அறநிலையத்துறை கைப்பற்ற நினைப்பது வெட்கக்கேடானது. ஹிந்துக்களிடமிருந்து கோவிலை அபகரிக்கும் செயலை விட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள புகழ் பெற்ற நல்லதங்காள் கோவிலை ஊர் மக்களிடம் இருந்து கைப்பற்ற அறநிலைய துறை காவல்துறையை வைத்து மக்களை மிரட்டுவது கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது. பொது மக்களை திரட்டி மிக பெரிய அளவில் காவல்துறை மற்றும் அறநிலைய துறையை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்..” என்று, விருதுநகர் மாவட்ட பாஜக., சார்பில் ஸ்ரீவி ராஜா குறிப்பிட்டுள்ளார்.